Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. சா சப்பென்றாகி விட்டது. இவ்வளவு கூட்டும் சேர்ந்து என்ன செய்தார்கள்?? ஐயகோ அந்த பாடகியை அவுசில் இருந்து கூப்பிட்டு வைச்சு செய்துட்டாங்கள். முனைவர் பட்டம் எடுத்த பாடகி என்பது தமிழ் திரையுலகின் உச்சக்கட்டம்.
  2. படங்காட்டலுக்கு எந்த குறைச்சலும் இல்லை. போராட்டத்தில் கலந்த போராளிகள் பிச்சை எடுக்கிறார்கள். மனிதம் என்பது ?????
  3. விலை இல்லா மாளிகையில் – உன்னை மீட்டவும் விரல் இல்லையோ?? நான் யார் உன்னை மீட்ட – வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட சொர்க்கமும் நரகமும் நம் வசமே – நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே
  4. ரகுமானின் இசைக்கும் சாருலதாவின் பாடலுக்காகவும் (டீயும் சின்மயியும் உட்பட) பார்க்க விரும்புகிறேன்.
  5. பணயகைதிகள் இருவர் பிணமாக கான் ஜுனிஸ் பகுதியில் இருந்து இஸ்ரேலிய இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டன.
  6. ஜோதிடத்தில் முனைவர் (Ph.D.) பட்டம் பெறுவது ஒரு கடினமான ஆனால் சாத்தியமான செயல்முறை ஆகும். இதற்கு ஆழமான ஆராய்ச்சி, அகாடமிக் திறன்கள் மற்றும் பொறுமை தேவைப்படுகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஜோதிடத்தில் Ph.D. வழங்குகின்றன. ஜோதிடத்தில் Ph.D. பெறுவதற்கான படிகள்:1. தகுதிகள்:அடிப்படை தகுதி: ஜோதிடம் அல்லது தொடர்புடைய பாடத்தில் முதுகலை (M.A. / M.Sc.) பட்டம். குறைந்தபட்ச மதிப்பெண்: பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் 55% (அல்லது CGPA 6.0) தேவைப்படுகிறது. ஆராய்ச்சி திறன்: UGC-NET/JRF தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் முன்னுரிமை கிடைக்கும் (இந்தியாவில்). 2. ஆராய்ச்சி தலைப்பு தேர்வு:ஜோதிடத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை (எ.கா., கிரகங்களின் மனோதத்துவ தாக்கம், வர்த்தக ஜோதிடம், மருத்துவ ஜோதிடம்) தேர்ந்தெடுக்க வேண்டும். ஆராய்ச்சி தலைப்பு புதுமையானதாகவும், ஏற்கனவே உள்ள ஆய்வுகளுக்கு கூடுதல் மதிப்பைச் சேர்ப்பதாகவும் இருக்க வேண்டும். 3. பல்கலைக்கழகம்/வழிகாட்டி தேர்வு:பல்கலைக்கழகம்: இந்தியாவில், பீகார் ராஷ்டிரிய பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU), ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் போன்றவை ஜோதிடத்தில் Ph.D. வழங்குகின்றன. வெளிநாடுகளில்: சில அமெரிக்க/ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் "மதம் மற்றும் கலாச்சார ஆய்வுகள்" (Religion & Cultural Studies) பிரிவில் ஜோதிடம் தொடர்பான ஆராய்ச்சியை அனுமதிக்கின்றன. வழிகாட்டி: ஜோதிடத்தில் நிபுணத்துவம் உள்ள பேராசிரியரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 4. சேர்க்கை செயல்முறை:எழுத்துத் தேர்வு & நேர்காணல்: பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் Ph.D. நுழைவுத் தேர்வு நடத்துகின்றன. ஆராய்ச்சி முன்மொழிவு (Research Proposal) சமர்ப்பித்தல்: உங்கள் ஆராய்ச்சி திட்டத்தை விளக்கும் ஒரு முன்மொழிவை சமர்ப்பிக்க வேண்டும். 5. பாடப்பிரிவு & ஆராய்ச்சி:பாடப்பிரிவு வேலை: சில பல்கலைக்கழகங்கள் 6-12 மாத கோர்ஸ் வேர்க் (Course Work) தேவைப்படுத்துகின்றன. ஆராய்ச்சி & தரவு சேகரிப்பு: ஜோதிட நூல்கள், குறிப்புகள், நேரடி ஆய்வுகள் (ஜாதக பகுப்பாய்வு) மூலம் தரவுகளை சேகரிக்க வேண்டும். 6. ஆய்வறிக்கை & ஆய்வு:ஆய்வறிக்கை (Thesis): 3-5 ஆண்டுகளில் ஆராய்ச்சியை முடித்து, ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். வாய்மொழி தேர்வு (Viva Voce): ஒரு குழு முன்பு உங்கள் ஆராய்ச்சியை பாதுகாக்க வேண்டும். 7. Ph.D. வெளியீடு:ஆய்வறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், பல்கலைக்கழகம் உங்களுக்கு முனைவர் பட்டம் வழங்கும். நன்றி:ஆழமான தேடல்
  7. போட்டியில் வெற்றியீட்டிய முதல் மூவர்களான நந்தன், ரசோதரன், புலவருக்கு வாழ்த்துக்கள். போட்டியை இனிதுற நடாத்திய கிருபனுக்கு மிக்க நன்றி. போட்டியை சுவாரசியமாக்க கருத்துக்களை வழங்கியவர்களுக்கும், மற்றும் பங்கு பற்றியவர்களுக்கும் நன்றி. மீண்டுமொரு போட்டியில் சந்திக்கலாம்.
  8. இப்படி காணொளிகள், தொலைக்காட்சிகளில் பலரை பார்த்துள்ளேன். இதனால் தான் கேள்வியும் வந்தது.
  9. இவரை கருதவில்லை. பொதுவாக சொன்னேன். தொலைக்காட்சியில் சிலரை பார்த்துள்ளேன். இணையத்திலும் பார்த்துள்ளேன்.
  10. சோதிடர்கள் சோதிடத்தில் Phd எடுத்துள்ளார்கள். இவர்கள் எதை நிறுவி Phd எடுத்தார்கள்??
  11. கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற ஐபில் இறுதி போட்டியில் பங்கு பற்றிய ஏதாவது ஒரு குழுவில் ஸெரியாஸ் ஐயர் விளையாடி உள்ளாராம்.
  12. அதை நேர்மையாக நான் படத்துக்கு போகிறேன் என சொல்லி மற்றையவரை காக்காமல் பண்ணியிருக்கலாம். 🙂
  13. ஆதரவாளரை சந்திப்புக்கு அழைத்து விட்டு படம் பார்க்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர்! http://seithy.com/siteadmin/upload/suthan-020625-seithy.jpg தேசிய மக்கள் சக்தியும் ஏனைய கட்சிகளை போன்றுதான் செயற்படுவதை காணக் கூடியதாக உள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் பொன்.சுதன் தெரிவித்துள்ளார். நேற்று சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி அவற் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “இது தொடர்பாக நான் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள் பலருடன்,அமைச்சர் சந்திரசேகரனுடன் கலந்துரையாடினேன். நேற்று முன்தினம் பிற்பகல் 02.00 அமைச்சர் தன்னை சந்திப்பதற்கான அனுமதியை எனக்கு வழங்கியிருந்தார். தேசிய மக்கள் சக்தியின் யாழ் அலுவலகத்திற்கு வாருங்கள்,அங்கு நாம் மேற்கொண்டு கலந்துரையாடி மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார். பிற்பகல் 02.00 மணிக்கு தேசிய மக்கள் சக்தியின் யாழ் அலுவலகத்திற்கு சென்ற நான் மாலை 06.00 கடந்தும் அமைச்சரை சந்திப்பதற்காக அங்கேயே காத்திருந்தேன் 02.00 மணிக்கு வருமாறு கூறிய அமைச்சர் அலுவலகத்தில் இல்லாததால் அவரது உதவியாளர்களிடம் பல முறை தெரிவித்தும் சந்திப்பதற்கு தான் வருவதாக கடசிவரை அவர் கூறவில்லை. பின்பு அவர் இன்னொரு கலந்துரையாடலுக்கு சென்றுவிட்டதாக அழைப்பு வந்தது. ஆனால் அமைச்சர் எங்கு சென்றார் என்பதனை தேடி அறிந்த போது யாழ் தியேட்டர் ஒன்றில் அந்த நேரத்தில் அமைச்சர் படம் பார்த்துக் கொண்டிருந்தார்” என குறிப்பிட்டுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=334084&category=TamilNews&language=tamil
  14. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணையில் திருப்தியில்லை! 00] http://seithy.com/siteadmin/upload/easter-attack-111124-seithy.jpg ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து திருப்தி தெரிவித்த தேசிய கத்தோலிக்க திருச்சபை தகவல் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிருஷாந்த, பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து திருச்சபை மகிழ்ச்சியடையவில்லை என்று தெரிவித்தார். "நாங்கள் அரசாங்கத்தை விமர்சிக்க விரும்பவில்லை, ஆனால் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கொண்டுவருவது, மற்றவர்கள் மீது வழக்குத் தொடரப்படுவதைப் போலவே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை நினைவூட்ட விரும்புகிறோம்," என்று அவர் கூறினார். http://seithy.com/breifNews.php?newsID=334090&category=TamilNews&language=tamil
  15. 00]சங்கு - சைக்கிள் சந்திப்பு! http://seithy.com/siteadmin/upload/DTNA-020625-seithy.jpeg தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தில் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் இணைத் தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். http://seithy.com/breifNews.php?newsID=334091&category=TamilNews&language=tamil
  16. கேரளா ராப் பாடகர் வேடன் தன்னை தலித்தாக அடையாளம் செய்து கொண்ட போதும், எங்கேயும் சாதியை பெருமையாக வெளிப்படுத்தியது இல்லை. அப்படி இருக்கும் போது அவர் புகழ் பெற்ற பிறகு, அவரை சாதியாக கொண்டாட செய்வது நாகரிகம் அல்ல. சாதிய, மத, இன,நிற பாகுப்பாடிற்கு எதிராக அவர் பாடும் பாடல்கள் கேரளா இளைய தலைமுறையை கொண்டாட வைக்கிறது. வாழ்த்துக்கள் வேடன். கந்தமங்கலம் மா.அறிவழகன்.விசிக மயிலாடுதுறை மாவட்டம் ·
  17. Veluppillai Thangavelu உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் கைது செய்து சிறையில் அடைப்பதா! அநுரவிடம் மனோ கேள்வி வெளிநாடு சென்ற தமிழர்களை நீங்கள்தானே திரும்பி வரச் சொல்கிறீர்கள்? உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் அவர்களைக் கைது செய்வதா? அவர்களைப் பிணையில் வெளியே விடாமல் எதற்காகச் சிறையில் அடைக்கிறீர்கள்?" என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசை நோக்கி, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். ஊழல் கோப்புகள் இது தொடர்பில் மனோ எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, "ஊழல் பேர்வழிகளைக் கைது செய்து சிறையில் அடையுங்கள். அதைச் செய்யத்தான் வேண்டும். இன்னமும் நானூற்றுக்கணக்கான ஊழல் கோப்புகள் இருப்பதாகச் சொன்னீர்கள். அனைவரையும் கைது செய்து, விசாரித்து, ஆவண செய்யுங்கள். சட்டத்தில் இடமிருந்தால் ஊழல் பேர்வழிகளுக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்குங்கள். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், எதற்காகத் தமிழக முகாமில் முப்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து, வயோதிபம் அடைந்து, உங்களை நம்பி, நாடு திரும்பிய, 75 வயதான சின்னையா சிவலோகநாதனை விமான நிலையத்தில் கைது செய்தீர்கள்? அவரை இன்று பிணையில் வெளியே விடாமல் எதற்காகச் சிறையில் அடைக்கிறீர்கள்? அகதிகள் வெளிநாடு சென்ற தமிழர்களைத் திரும்பி “வாங்கோ, வாங்கோ” என நீங்கள் தானே வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறீர்கள்? உங்களை நம்பி, திரும்பி வந்தால் விமான நிலையத்தில் கைது செய்வதா? சிவலோகநாதனுக்கு நாடு திரும்ப சென்னை இலங்கைத் துணைத் தூதரகம்தான் கடவுச்சீட்டு வழங்கி உள்ளது என்பது அரசுக்குத் தெரியாதா?வெளிநாட்டு அமைச்சுக்குத் தெரியாதா? தமிழக அரசின் பொலிஸ், பாரத மத்திய அரசின் குடிவரவு, குடியகல்வு வாரியம் என்பன ஒப்புதல் அளித்துள்ளன. ஐ.நா. அகதிகள் ஆணைக்குழு, சிவலோகநாதனுக்குப் பயண சீட்டு வாங்கிக் கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து, விமானமேற்றி அனுப்பி வைத்துள்ளது. இவை உங்களுக்குத் தெரியாதா? வெளிநாடு சென்ற தமிழர்களை நீங்கள்தானே திரும்பி வரச் சொல்கிறீர்கள்? உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் அவர்களைக் கைது செய்வதா? "என்று பதிவிட்டுள்ளார்.
  18. யாழில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது புலம்பெயர் வாழ் இலங்கையர்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, சில தீய சக்திகளால் பரப்படும் கதைகளை அவர்கள் நம்பமாட்டார்கள் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ் மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்குத் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் உறுதியுரையேற்பு நிகழ்வு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (31) நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு, “இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய அகதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து இந்தியாவில் இருந்து வருபவர்களை அநுர அரசாங்கம் கைது செய்கின்றது என சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அவரை அரசாங்கம் கைது செய்யவில்லை. இது விடயத்தில் உடனடியாக தலையிடப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த நபருக்கு பிணை வழங்கப்பட வேண்டும் எனவும், பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்ககூடாது எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சிகாலத்தில் இந்நாடு கட்டியெழுப்படாவிட்டால் இலங்கைக்கு விமோசனம் கிடையாது என்பதே புலம்பெயர் தமிழர்களின் கருத்தாக உள்ளது. தீய குணம் படைத்த – தீய நோக்கத்துடன் செயற்படும் அரசியல் சக்திகள் உள்ளன. அந்த தீய சக்திகளை சுத்தப்படுத்த வேண்டும். அதனை நாம் செய்ய வேண்டும். உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் சிறப்பாக செயற்பட வேண்டும். யாழ்.மாவட்டத்தில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும். அதேவேளை, மேலும் சில சபைகளில் எதிர்க்கட்சி தலைவராகக்கூட சிறப்பாக செயற்பட முடியும்.”- என்றார். யாழில் சில சபைகளில் தேசிய மக்கள்...யாழில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும்தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது புலம்பெயர் வாழ் இலங்கையர்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, சில தீய சக்திகளால் பரப்படும் கதைகளை அவர்கள் நம்பமாட்டார்கள் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்...
  19. இது எங்களுக்கு ரொம்ப முக்கியமானது. எப்படி அடி வாங்கினீர்களென மக்கள் அறியவுள்ளார்கள்.
  20. எழுத்தாளர் கருணாரன் 'NPP புரியாத புதிர் புரிந்தும் புரியாத பதில்' என்றொரு முகநூற் பதிவிட்டிருக்கின்றார். அதில் பின்வரும் கேள்விகளைக் கேட்டிருக்கின்றார். 1. NPP மீது தமிழ்க் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. சிங்களக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. முஸ்லிம், மலையகக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. இப்படி எல்லாத் தரப்புகளும் கடுப்பாக இருக்கும் அளவுக்கு உண்மையிலேயே NPP தீய சக்தியா? 2. அப்படித் தீய சக்தியான NPP யை மக்கள் எப்படி – எதற்காக ஆதரித்தனர்? 3. NPP யின் ஆதரவாளர்கள் இதைக்குறித்தெல்லாம் இன்னும் பேசாதிருப்பது ஏன்? 4. இதுவரையில் இனவாதம் பேசியவர்களை விடவும் இதுவரையில் இனவாதத்தை முன்னெடுத்த கட்சிகளை விடவும் NPP யினரிடம் இனவாதம் மேலோங்கி உள்ளதா? 5. NPP ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் மக்களுக்கு ஆதரவானவை அதிகமா? எதிரானவை அதிகமா? 6. NPP செய்யத் தவறிய, தாமதித்த விடயங்கள் இருக்கலாம். ஆனால், அது செய்த (மேற்கொண்ட) விடயங்களில் பாரதூரமான எதிர்விளைவுகள் எவை? 7. ஊழல் குற்றச்சாட்டுகளோடு தொடர்புபட்டதாகச் சொல்லப்படும் முக்கிய அமைச்சர்கள், அரசியல்வாதிகளில் 10 பேர் வரையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்த மக்கள் அபிப்பிராயம் என்ன? அரசியற் தரப்புகளின் நிலைப்பாடு என்ன? 8. “NPP தமிழ் மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக அளவுக்கு அதிகமாக தமிழ் மக்களின் பக்கமாகச் சாய்கிறது” என்ற சிங்களக் கட்சிகளின் எதிர்ப்பிரச்சாரத்தை எப்படி நோக்கலாம்? “தமிழ்க் கட்சிகளுக்குப் பயந்து பல விட்டுக் கொடுப்புகளை ஜனாதிபதியும் (அநுரகுமார திசநாயக்கவும்) NPP யும் செய்வதை அனுமதிக்க முடியாது” என்று சொல்லும் சரத் பொன்சேகா, விமல் வீரவன்ச, சரத் வீரசேகரா போன்றோர் சொல்கிறார்கள். 9. ஏனைய சிங்களக் கட்சிகளைப்போல, ஏனைய இனவாதிகளைப்போலவே NPP யும் உள்ளது. NPP யினரும் செயற்படுகிறார்கள்‘ என்று தமிழ்த்தேசியத் தரப்பினர் சொல்கின்றனர். அப்படியென்றால் எது உண்மை? இறுதியில் 'ஆனால், எவையும் NPP யோடு உறவில்லை. இது எதைக் காட்டுகிறது? (நாளைய கட்டுரையில்)' என்று குறிப்பிட்டிருக்கின்றார். இவையெல்லாம் மிக முக்கியமான கேள்விகள்.இவரது பதில்களைப் பார்க்க முன்னர் இவற்றுக்கான என் பதில்கள் இவை 1. 'NPP மீது தமிழ்க் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. சிங்களக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. முஸ்லிம், மலையகக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. இப்படி எல்லாத் தரப்புகளும் கடுப்பாக இருக்கும் அளவுக்கு உண்மையிலேயே NPP தீய சக்தியா? இதற்கு முக்கிய காரணம். மேற்படி கட்சிகள் எல்லாம் ஆதிக்கம் செலுத்திய அரசியற் களத்தில் தேசிய மக்கள் சக்தி மிகவும் பலத்துடன் ஆதிக்கம் செலுத்தத்தொடங்கியுள்ளது. வடகிழக்கில், மலையகத்தில் எல்லாம் இவ்வித தென்னிலங்கைக் கட்சியொன்று இதுவரை ஆதிக்கம் செலுத்தவில்லை. மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கவில்லை. இதுவரை காலமும் இப்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த அரசியல் கட்சிகளால் தம் கைப்பிடிகளிலிருந்து அதிகாரம் இன்னொரு சக்தியிடம் செல்வதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதுதான் பிரதான காரணம். தேசிய மக்கள் சகதி ஒரு புரட்சிகர அமைப்பிலிருந்து உருவான கட்சி. வர்க்கரீதியாகச் சமூக, பொருளாதார, அரசியல் அடக்குமுறைகளுக்குள்ளாக்கப்பட்டிருக்கும் மக்களின் வர்க்க விடுதலையை மையமாக வைத்து , இளைஞர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பிலிருந்து உதித்து முதலாளித்துவ அரசியலுக்குள் குதித்த கட்சி. தத்துவார்த்தரீதியாக வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி. இதுவரை காலமும் அவர்கள் அவர்களது அரசியல் தத்துவத்துக்கேற்ப எடுத்த முடிவுகளுக்கெல்லாம் தமிழ்க்கட்சிகள் இனவாதம் பூசின. அதே சமயம் இனவாதக் கூறுகளும் அக்கட்சியின் கடந்த கால அரசியலில் ஆதிக்கம் செலுத்தியதும் தவிர்க்கப்படாத உண்மை. எவ்விதம் வர்க்கவிடுதலைக்காகப் போராடிய மார்க்சியவாதிகளைத் தமிழ்த்தேசிய அரசியல் உருமாற்றியதோ, அது போலவே ஜேவிபியையும், ஏனைய தென்னிலங்கை மார்க்சியக் கட்சிகளையும் சிங்களத்தேசியவாத அரசியல் உருமாற்றியது. அதே சமயம் ஈர் இனங்களிலும் உருமாறாத இடதுசாரிகள் தொடர்ந்தும் இருந்து வந்திருந்தாலும், அவர்கள் பலமற்றவர்களாகவே இருந்து வந்தார்கள். இந்நிலையில் கடந்த காலங்களிலிருந்து படிப்பினைகள் பெற்று , தம்மை வளர்த்தெடுத்து, நாட்டு மக்களின் பேராதரவைப்பெற்றுத் தேசிய மக்கள் சக்தி ஆட்சியை,அறுதிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியிருக்கின்றது. இனவாதமிருக்கும் வரையில் நாட்டைப் பொருளாதாரரீதியாக முன்னேற்ற முடியாது என்பதைத்தேசிய மக்கள் சக்தி உணர்ந்திருப்பதையே அதன் தலைவரும் , ஜனாதிபதியுமான அநுர குமார திசநாயக்கவிம் இனவாதத்துக்கெதிரான உரைகளும், செய்ற்பாடுகளும் புலப்படுத்துகின்றன. உண்மையில் இது , தென்னிலங்கை அரசியலைப் பொறுத்தவரையில், கத்தியில் நடப்பதைப் போன்றது. அவர் அவ்விதமே நடக்கின்றார். ஒவ்விரு அடியையும் நிதானமாகவே எடுத்து வைக்கின்றார். தென்னிலங்கையில் ஆட்சியை இழந்தவர்கள், ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தம்மைப்பாதுகாக்கும் பொருட்டு இனவாதத்தைக்கிளப்புவார்கள். உதாரணத்துக்கு மாவீரர் நினைவு கூரலின்போது தமிழ், சிங்கள் அரசியலில் இன்வாதம் கிளப்பப்பட்டது. இனவாதிகளால் பொய்யான தகவல்கள் சமூக, ஊடகங்களில் பரப்பப்பட்டன. ஈரினத்திலிருந்தும் பயங்கரவாததடைச்சட்டத்தின் மீது கைதுகள் இடம் பெற்றன. இதனையொட்டி பாராளுமன்றத்தில் சிங்கள அரசியல்வாதியொருவரால் இனவாதம் கிளப்பப்பட்டது. அப்போது தேசிய மக்கள் சக்தி அமைச்சர் ஒருவர் அவரை இனவாதி என்றார். அதை நீக்கும்படி இனவாதம் கிளப்பியவர் கேட்டபோதும் அவர் கிளப்பியது இனவாதமே. நீக்கமுடியாது என்று தேசிய மக்கள் சக்தி அரசு மறுத்து விட்டது. அண்மையில் கூட யுத்த முடிவினை நினைவூகூரும் நிகழ்வுகளில் அவரது உரையினையொட்டி இனவாதம் கிளப்பப்பட்டது. ஆனால் அதனை வெற்றிகரமாக முறியடித்ததாகவே உணர்கின்றேன். தமிழ்ப் போராளிகளின் , மக்களின் நினைவு கூரல்களையும் அவர்கள் நியாயப்படுத்தி உரையாற்றினார்கள். வரவேற்கத்தக்க விடயம். ஆனால் நம் அரசியல்வாதிகள் எவரும் அதனை உணர்ந்ததாகவோ , வரவேற்றதாகவோ தெரியவில்லை. இதுபோல் தென்னிலங்கை அரசியல்வாதிகளால் தேசிய மக்கள் சக்தி அரசின் மீது சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போதெல்லாம் இனவாதம் கிளப்பப்பட்டு வருகின்றது. இதனை அமைதியாக, ஆனால் உறுதியாக எதிர்த்துச் செயற்பட்டு வருகின்றது தேசிய மக்கள் சக்தி அரசு. இந்த உறுதி நிலைத்து நிற்குமா அல்லது தேசிய மக்கள் சகதியும் நிர்ப்பநதங்களுக்குப் பணிந்து விடுமா என்பதைக் காலம் வெளிப்படுத்தும். பணிந்து விடாமல், உறுதியுடன் செயற்பட்டால், அதற்குரிய பல்லின மக்களின் ஆதரவும் நிலைத்து நிற்கும். மேலும் வளரும். இல்லாவிட்டால் இனவாத அரசியல் மீண்டும் வெல்லும். அதைத் தடுக்கும் வகையில் உறுதியுடன் செயற்படுவதன் மூலம் இலங்கை அரசியல் வரலாற்றில் நீண்ட காலம் தேசிய அரசியல் சக்தி நிலைத்து நிற்கும் சாத்தியமுண்டு. இவ்விதமாகத் தேசிய மக்கள் சக்தி இனவாதத்துக்கெதிராகச் செயற்படுகையிலேல்லாம் தார்மிக ஆதரவை வழங்க வேண்டியது அவசியமென்பதை உணர்ந்து ஏனைய இன அரசியல் கட்சிகள் செயற்படுவதாகத்தெரியவில்லை. அவர்களது நோக்கமெல்லாம் இழந்த அரசியல் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதுதான்.அதற்கு ஒரே வழி இனவாத அரசியல்தான். வடக்கைப் பொறுத்தவரையில் தமிழ் அரசியலுக்கு அது ஒருவகையில் உதவியிருக்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை. நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் அதற்கு நல்லதோர் உதாரணம். ஆனால் அது ஆரோக்கிய்மான அரசியலா? 2. 'உண்மையிலேயே NPP தீய சக்தியா? 2. அப்படித் தீய சக்தியான NPP யை மக்கள் எப்படி – எதற்காக ஆதரித்தனர்? ' என்றும் கருணாகரன் கேள்வியினை எழுப்பியிருக்கின்றார். மக்கள் தேசிய மக்கள் சக்தியைத் தீய சக்தியாகக் கருதவில்லை. அநுர குமார திசநாயக்கா தம் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒருவராகக் கருதுகின்றார்கள். தற்போது தேசிய மக்கள் சக்தியின் பலமே அநுர குமார திசநாயக்காதான். அவரது குடும்பப்பின்னணி, எளிமை, தர்க்கரீதியாகப் பேசும் ஆற்றல், உணர்வு பூர்வமாக மக்களின் பிரச்னைகளை உணர்ந்து உரையாற்றும் தன்மை எல்லாம் மக்களைக் கவர்ந்திருக்கின்றன என்பதுதான் உண்மை. இதுதான் பல்லின மக்களையும் அவர் கவரக் காரணம். 3. 'ஊழல் குற்றச்சாட்டுகளோடு தொடர்புபட்டதாகச் சொல்லப்படும் முக்கிய அமைச்சர்கள், அரசியல்வாதிகளில் 10 பேர் வரையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்த மக்கள் அபிப்பிராயம் என்ன? அரசியற் தரப்புகளின் நிலைப்பாடு என்ன?' இந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தி நிதானமாகச் செயற்படுவதாகத் தெரிகின்றது. சின்ன மீன்களைப் பிடித்துப்போட்டுப் பெரிய மீன்களைப்பிடிக்கும் தந்திரத்தைக் கையாளவ்துபோல் தெரிகின்றது. ஆரம்பத்திலேயெ பெரிய மீன்களின் மீது கை வைத்தால், அவர்களுக்கிருக்கும் மக்கள் ஆதரவால் நிலைமை கட்டு மீறி விடலாம். ஆனால் சின்ன மீன்களைப் படிப்படியாகப் பிடித்து ,மக்களைத் தயார் படுத்திய பின், பெரிய மீன்கள் மீது கை வைக்கையில் ,மக்கள் அதனை ஏற்கனவே எதிர்பார்க்கும் மனநிலையில் இருப்பார்கள். எனவே கிளர்ச்சிகளுக்குப் பதில் ஆதரவளிப்பார்கள். இவ்விதமே எனக்குத் தோன்றுகின்றது. இத்தந்திரத்தையே அவர்கள் கையாள்கின்றார்கள் என்று கருதுகின்றேன். 4. 'ஏனைய சிங்களக் கட்சிகளைப்போல, ஏனைய இனவாதிகளைப்போலவே NPP யும் உள்ளது. NPP யினரும் செயற்படுகிறார்கள்‘ என்று தமிழ்த்தேசியத் தரப்பினர் சொல்கின்றனர். அப்படியென்றால் எது உண்மை? ' தமிழ்க்கட்சிகள் தம் அதிகாரத்தைக்காப்பாற்ற இப்படித்தான் கூறுவாரகள். வேறு வழியில்லை. இல்லாவிட்டால் , புகலிடத்தமிழர்களின் பணத்தில் தங்கியிருக்கும் பெரும்பாலான ஊடகங்கள் அவர்களைக் காறித்துப்பிவிடும். இதுவரை சுமந்திரனுக்கு நடந்தது அதுதான். ஆனால் அதை மீறி அவர் தன்னை உறுதியாக்கி விட்டார். இனிக் காறித்துப்பிய ஊடகங்களும், புகலிடச் சக்திகளும் அவரை அரவணைத்துச் செல்லும் நிலைதான் யதார்த்தம். அநுர அரசு பதவிக்கு வந்ததிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. இது ஆரோக்கியமான செயற்பாடு. இத்னைப் புகலிட வானொலியொன்றில் நேயர் சுட்டிக்காட்டியபோது,இனவாதத்தைத்தொடர்ந்து கக்கி வரும் அறிவிப்பாளர் கூறுகின்றார் 'எங்கள் காணிகளை அவர்கள் விடுவிக்கின்றார்கள். அதிலென்ன இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் நாம் மயங்கக்கூடாது.' இதுவரை காலமும் ஆட்சிக்கட்டிலிருந்த அரசுகளால் விடுவிக்கப்படாமலிருந்த காணிகள் விடுவிக்கப்பட்டிருகின்றன. அதனை வரவேற்கும் மனநிலை அந்த ஊடகவியலாளருக்கில்லை. நம் அரசியல்வாதிகளுக்கும் இல்லை. இவை கருணாகரனின் கேள்விகளுக்கான் என் பொதுவான பதில்கள். தேசிய மக்கள் சக்தி அரசு இனவாதத்துக்கெதிராக உறுதியுடன் செய்ற்பட்டால், இனவாதிகளின் அரசியல் நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்து விடாமல் உறுதியுடன் இருந்தால், ஊழல்களுக்கு எதிராக உறுதியாக செயற்பட்டால், சிறுபான்ம இனங்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயற்பட்டால், நாட்டைப் பொருளாதாரரீதியில் முன்னேற்றும் செயற்பாடுகளை இன, மத,மொழி வேறுபாடற்ற்று முன்னெடுத்தால், இலங்கை அரசியலில் நிலைத்து நிற்கும், நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கும். செய்யுமென்று எதிர்பார்ப்போம். யாருமே எதிர்பாராத வகையில் ஆட்சியைப் பிடித்துச் சாதித்திருக்கின்றார்கள். இதையும் சாதிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம். நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பது ஒன்றுதான் நம்மிடமுள்ள ஒரேயொரு வழி. https://www.facebook.com/search/top/?q=NPP%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.