Everything posted by nunavilan
-
அதிசயக்குதிரை
கவிதை எழுதிய ஆட்கள் நிறைய பேர் இருப்பீர்கள் என்பதால் (பெண்களுக்கு)😂
-
சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House
ஆபத்துமிக்க அணு உலைக் கழிவுகள்: அதிர்ச்சியளிக்கும் கிரீன்பீஸ் ரிப்போர்ட் அணு மின் நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நச்சுத்தன்மையுடன் இருக்கக்கூடிய எரிபொருள்களை வெளியேற்ற முடியாமல் பல நாடுகளும் விழித்துவரும் நிலையில் அணுசக்திக் கழிவின் பெருக்கம் உலகம் முழுவதும் பெருகிவருவதாக கிரீன்பீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் தொடங்கப்பட்ட கிரீன்பீஸ் அமைப்பு தற்போது நெதர்லாந்திலிருந்து இந்தியா உள்ளிட்ட உலகின் பல பெரிய நாடுகளிலும் ஒரு முக்கியமான அரசு சாரா சுற்றுச்சூழல் அமைப்பாக இயங்கி வருகிறது. கிரீன்பீஸ் அமைப்பு நேற்று ஒரு விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டு சுற்றுச்சூழல் சார்ந்த ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன் விவரம் வருமாறு: ஏழு நாடுகளில் மட்டும்தான் அணுசக்தி நிலையத்தின் அருகிலேயே மக்களுக்கு கெடுதல் நேராத வகையில் முறையான கழிவு சேமிப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்த ஆலைகளில் முழுமையடையாத பல தேவைகளால் தீ ஆபத்து, கதிரியக்க வாயுக்கள் வெடிப்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு, கொள்கலன்களின் தோல்வி, பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் அதிகரிக்கும் செலவுகள் என பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளன. "இந்த அணு சக்தி மின் நிலையங்கள் உள்நாட்டுப் பயன்பாடுகளுக்கென்றே தொடங்கி 65 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகியுள்ளது. இதன் கடும் ஆபத்து விளைவுகளை ஏற்படுத்தும் இதன் கதிரியக்க கழிவுகளை அப்புறப்படுத்துவதை நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களுக்கு ஏதோ ஒரு நாட்டை மட்டும் குற்றம் சாட்ட முடியாது'' என்கிறார் கிரீன்பீஸ் ஜெர்மனியைச் சேர்ந்த அணுசக்தி நிபுணர் ஷாவுன் புர்ணி குறிப்பாக, அணு சக்தி மின் உலைகளிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருள்கள் பூமிக்கடியில் சேகரிக்கப்படுகின்றன. நீண்ட கால சேமிப்பு தொழில்நுட்பம் போன்றவை தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி அதில் பல பிரச்சினைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, கிட்டத்தட்ட 14 நாடுகளிலிருந்து விநியோகிக்கப்பட்ட உயர்தர கதிரியக்கச் செலவுக்கான எரிபொருள் சுமார் 2,50,000 டன்கள் உலகளாவிய அளவில் கையிருப்பு உள்ளது. இந்த எரிபொருள் சேகரிக்கப்படும் பெரும்பாலான உறைவிப்பான் தளங்கள் குளிரூட்டும் குளங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இப்படி இரண்டாவது முறை சேகரிப்பதில் உள்ள குறைபாடுகளால் குளிர் இழக்கும் ஒரு பெரும்பாதிப்பைப் பெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அணுசக்தியை மீண்டும் மீண்டும் சேமித்து வைப்பதினால் ஏற்படும் சிக்கல்கள் இவை. ஜப்பான் நாட்டின் புகுஷிமா அணு சக்தி ஆலை 2011-ல் ஏற்பட்ட சுனாமியில் பகுதியளவு பெரும் சேதத்துக்குள்ளானது. எனினும் இதில் இருந்த எரிபொருள் குளங்களின் அதிக வெப்பம் அபாயகரமானதாக இல்லை என்று தெளிவுபடுத்தியது. அணு சக்தி வல்லுநர்கள் குழுவால் தொகுக்கப்பட்ட 100 பக்க ஆய்வறிக்கை, பிரான்சில் மிகப்பெரிய ஏற்படும் கழிவுப்பொருட்களை நிர்வகிப்பதில் உள்ள குறைபாடுகள் அகற்றப்பட்டு விட்டன. பிரான்ஸ் அணுமின் நிலையம் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உள்ள இரண்டாவது மிகப்பெரிய அணுசக்தி மின்நிலையம் ஆகும். அதேநேரம் "பிரான்ஸில் அணுசக்திக் கழிவுகளை நீண்டகாலப் பாதுகாப்பாக அகற்றுவதற்கான நம்பகமான தீர்வு எதுவுமில்லை" என்று அறிக்கை கூறியுள்ளது. பிரெஞ்சு மேற்பார்வை அதிகாரிகள் குழு ஒன்று லா ஹேக் தளத்தில் நார்மண்டியில் ஆய்வு செய்தது. அங்குள்ள பெரிய குளிரூட்டும் குளங்களின் தன்மையைப் பற்றிய கவலையை அக்குழு தெரிவித்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, "லா ஹேக்கில் உள்ள குளங்கள் 2030 ஆம் ஆண்டு வரை எந்தவித ஆபத்தும் இல்லை" என்று தளத்தை நிர்வகிக்கும் எரிசக்தி நிறுவனமான ஓரானா, ஓர் அறிக்கையில் தெரிவித்தது. அமெரிக்காவில், ''பில்லியன் கணக்கான டாலர்கள் மற்றும் பத்தாண்டு கால திட்டமிடல்கள் புவியியல் கழிவுகள் அகற்றும் தளத்தை பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும் இதில் கூறப்பட்டது. அமெரிக்காவில் உள்ள யூக்கா மலையின் பூமிக்கடியிலான அணுசக்தி கழிவு சேமிக்கும் வசதியைக் கட்டமைக்கும் பணி பல பத்தாண்டுகளாக நடந்தது. ஆனால் கடைசியில் 2010-ல் ஒபாமா நிர்வாகத்தில் அது ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் 70 சதவீதம் செலவிடப்பட்ட எரிபொருளானது பலவீனமான குளிர்ந்த குளங்களில்தான் உள்ளது. இதற்கு முதன்முதலாக இருந்த நோக்கம் பின்னர் பல மடங்கு அதிகரித்தது. யுரேனியம் சுரங்கத்திலிருந்து உருவாகும் அணு சக்திக் கழிவு என்பது ஒரு முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சினை ஆகும். உலக அளவிலான யுரேனியம் ஆலைச் சரக்குகள், சேமித்து வைக்கப்பட்ட பகுதிகளிலிருந்து கசியும் மணல் கழிவுப் பொருட்கள் மட்டுமே 2011 வரை இரண்டு பில்லியன் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் உள்ளடங்கிய மற்ற நாடுகள் பெல்ஜியம், ஜப்பான், ஸ்வீடன், பின்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகியவை ஆகும். https://www.hindutamil.in/news/world/153089-.html
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்.
ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
Mayank Dagar சுமாராக வீசுகிறார். நல்ல எதிர்காலம் உண்டு.
- நடனங்கள்.
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
சுனில் நரேன், வெங்கடேஸ் ஐயரின் எதிரணியின் மைதானத்தில் அற்புதமான விளையாட்டால் கே கே ஆர் இலகுவாக ரோயல் சலஞ்சரை வென்று விட்டார்கள்.
-
பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன
ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
-
அல்பிரட் துரையப்பா முதல் அற்புதன் வரை.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம் கோர முயற்சி
எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின் B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
அவரின் பிள்ளைகள் வீட்டில் தமிழ் கற்கிறார்கள் என்று கூறி உள்ளார். ஆகவே தமிழ் படிக்கவில்லை என்ற கூற்று அடிபட்டு போகிறது. ஏனைய மொழிகளை விருப்பின் அடிப்படையில் கற்கலாம்.- சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம் கோர முயற்சி
நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?- காசாவை நோக்கி பரசூட்கள் மூலம் உணவுப்பொதிகளை வீசியது அமெரிக்கா
- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.- மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
ஆழ்ந்த அனுதாபங்கள்.- ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
French journalist Anne Nivat does not hide her delight at the “success of the Ukrainians at Crocus”: But it should still be ... ◾French journalist Anne Nivat does not hide her delight at the “success of the Ukrainians at Crocus”: But it should still be said that if it is the Ukrainians, then this is a masterstroke. I'm not saying that it's them, but if it's Ukrainians, then that's phenomenal! https://t.me/European_dissident- 'மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டியில் சவூதி அரேபியா முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக பங்கேற்கிறது.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
இம்முறை அதிக இடங்களுக்கு செல்லவில்லை. பெற்றோரை கவனிக்க தான் குடும்பமாக சென்றிருந்தேன். பாசிக்குடாவுக்கும், திருக்கோணேஸ்வரத்துக்கும் போயிருந்தோம். அடுத்த முறை தனிய போகும் போது பல இடங்களை பார்க்கலாம் என இருக்கிறேன். நண்பர்கள், உறவினர்கள் தங்களை சந்திக்கவில்லை என்ற பெரிய குறை. அடுத்த முறை பார்க்கலாம் என கூறியுள்ளேன்.- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வங்கத்து முற்போக்கு அரசியல் சாதியற்றதா?
உயர் ஜாதியைச் சேர்ந்தவர் எனக் கூறும் மம்தா பானர்ஜி; ஜாதி அரசியல் செய்கிறார்: ஒவைசி கண்டனம் கொல்கத்தா மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தன்னை உயர் ஜாதியைச் சேர்ந்தவர் என்று கூறியிருப்பதன் மூலம் அவரும் ஜாதி அரசியல் செய்வது உறுதியாகி விட்டது, பிரதமர் மோடி, பாஜகவுக்கும் இவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் முதல்கட்டத் தேர்தல் 27-ம்தேதி நடைபெற்றது. 30 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 7 கட்டத் தேர்தல் நடைபெற வேண்டும். 2-ம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி 30 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் ஒன்றாகும். இங்கு முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், அமைச்சராகவும் இருந்த சுவேந்து அதிகாரி பின்னர் பாஜகவில் இணைந்து அக்கட்சி சார்பில் களமிறங்கியுள்ளார். நந்திகிராம் தொகுதியில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. 3-ம் கட்டத் தேர்தல் நடைபெறும் அவர் இன்று பிரச்சாரம் செய்து வருகிறார். மம்தா பானர்ஜி பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் ‘‘மேற்குவங்கத்தில் எப்படியாவது ஆட்சியை கைபற்றி விட வேண்டும் என்ற வெறி கொண்டு பாஜக செயல்படுகிறது.ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள மேற்குவங்க மக்கள் பாஜகவை ஒரு போதும் ஆதரிக்க மாட்டர்கள். எனக்கு ஜாதி, மதத்தில் நம்பிக்கையில்லை. கடந்த 2-ம் கட்ட பிரச்சாரத்தின்போது நான் ஒரு கோயிலில் சென்று வழிபாடு நடத்தினேன். அப்போது வழிபாடு செய்வதற்காக அர்ச்சகர் எனது கோத்திரம் என எனக் கேட்டார். நான் ஒரு தாய், பெண், மனுஷி அவ்வளவு தான் எனக் கூறினேன். திரிபுராவில் உள்ள திரிபுரேஷ்வரி கோயிலில் சென்று வழிபாடு நடத்தினேன். அங்கும் எனது கோத்திரத்தை கேட்டபோது அவ்வாறே கூறினேன். ஆனால் உண்மையில் நான் சாண்டில்ய பிராமண கோத்திரத்தை சேர்ந்தவர்’’ எனக் கூறினார். இந்த விவகாரம் தேர்தல் சமயத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘மம்தா பானர்ஜியின் இந்த கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். தான் ஒரு உயர் ஜாதியைச் சேர்ந்தவர் என்று ஒரு முதல்வர் கூறலாமா. இவரும் வர்ணாஸ்சிரம தர்மத்தை பின்பற்றுவது தெரிந்து விட்டது. பிரதமர் மோடி, பாஜகவுக்கும் இவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இருவருமே ஜாதி- மத அரசியல் செய்துகிறார்கள். இருவருமே சமமானவர்கள் தான்’’ எனக் கூறினார். https://www.hindutamil.in/news/india/653282-asaduddin-owaisi-aimim.html 31 Mar, 2021 07:37 PM- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- 'மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டியில் சவூதி அரேபியா முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக பங்கேற்கிறது.
கிளிநொச்சி அழகி போட்டி அழகும் அதன் அரசியலும் – கிளிநொச்சி அழகிப் போட்டி கருத்தியல் நோக்கு:- கருப்புதான் எமக்கு பிடிக்கும் கலரா? நாம் வாழ்கின்ற இந்த உலகில் அரசியல் பற்றி மனிதர்கள் அக்கறையில்லாமல் இருப்பதென்னவோ உண்மைதான். உண்ணும் உணவு, உடுத்துகின்ற உடை, சுவாசிக்கும் காற்று எல்லாவற்றிலும் அரசியல் உண்டு. அரசியலுக்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை. அழகும் அழகுப் போட்டிகளும் கூட அதற்கு விதிவிலக்கு அல்ல. 2022ஆம் ஆண்டு டிசம்பர் நடுப்பகுதியில் கிளிநொச்சியில் நடந்த அழகுப்போட்டி அது அழகிப் போட்டியா அல்லது அழகிகளை உருவாக்குபவர்களுக்கான போட்டியா என்பது ஒரு பிரச்சினையே இல்லை. இதன் பின்னுள்ள கருத்தியல் தொடர்பானதே இப்பதிவு. கிரேக்க பெண் தெய்வங்களுக்கு இடையே அழகுப்போட்டிகள் இடம்பெற்றதாகவும் அந்தப் போட்டிகளில் வெற்றிபெற அத்தெய்வங்கள் லஞ்சம் கொடுத்ததாகவும் புராண இதிகாச கதைகள் குறிப்பிடுகின்றன. ஆனால் உண்மையான அழகுப்போட்டி ஆண்டு தோறும் நடைபெறும் எதென்ஸ் விழாவில் ஆண்களுக்குத்தான் நடந்துள்ளது. ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் இங்கிலாந்தில் ஆங்கிலேய மே தினக் கொண்டாட்டங்களில் அரசியைத் தெரிவு செய்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அமெரிக்க மே தினக் கொண்டாட்டங்களில் இளம் பெண் அழகி ஒருத்தி போட்டியில் தெரிவு செய்யப்பட்டு சமூகப் பிரதிநிதியாக்கப்படுவது நடைமுறையாக இருந்து வந்துள்ளது. 1789இல் இளம்பெண்கள் வரிசையாக நின்று அமெரிக்க ஜனாதிபதியை வரவேற்கும் முறை உருவானது. இந்த அழகுப் போட்டி தொடர்பாக குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து பெரும்பாலும் ஆண்களினால் மோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்விமர்சனங்கள் பெரும்பாலும் ஆக்கபூர்வமானவையாக இல்லாமல் அப்போட்டியில் கலந்துகொண்ட பெண்கள் மீதான விமர்சனங்களாகவே அமைந்தன. இந்த விமர்சனங்களில் ஒன்று தங்களை அழகாக்கி இப்பெண்கள், ஆண்களை ஏமாற்ற முயல்கின்றனர் என்பது. இது தான் 2022இன் மிகப்பெரிய நகைச்சுவையாக அமையும் என்றால் மிகையல்ல. புலம்பெயர்ந்த ஆண்கள் தங்களுடைய அழகை மட்டுமல்ல, வயது, கல்வி, தொழில், தங்களிடம் உள்ள சொத்துக்கள் என்று பலதிலும் ஏமாற்றி தங்கள் மணப்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்வது என்பது ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சமாகவே அன்று இருந்தது. இப்போது இவர்கள் சொல்லும் பெண்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது கொஞ்சம் ஓவர்தான். இந்த புலம்பெயர்ந்த ஆண்களின் விமர்சனங்களுக்கு பதிலளித்த போட்டியில் கலந்துகொண்ட பெண்கள் இதற்கு பதிலளிக்கின்ற போது ஒட்டுமொத்தமாக புலம்பெயர்ந்தவர்கள் மீது காட்டமான விமர்சனங்களை வைத்துள்ளனர். விமர்சனங்களை முன்வைத்த ஆண்களுக்கு பதிலளித்ததோடு அவர்கள் நிறுத்திக்கொண்டிருப்பது ஆரோக்கியமானதாக இருந்திருக்கும். 1971இல் கதிர்காமத்தைச் சேர்ந்த அழகுராணிப் போட்டியில் வெற்றிபெற்ற பிரேமாவதி மன்னம்பேரி படுகொலைசெய்யப்பட்டார். ஜேவிபி உறுப்பினராக இருந்த அவர் ஜேவிபி கிளர்ச்சியின் போது இலங்கை பாதுகாப்புப் படையால் நிர்வாணமாக்கப்பட்டு தெருக்களில் கொண்டு திரியப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டார். சென் லுயிஸில் 1905இல் பெண் அழகிகளுக்கான போட்டி பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டமை தற்போதுள்ள அழகிப் போட்டிகளுக்கு வித்திட்டது. அப்போது 40,000 பேர் இவ்வழகிப் போட்டிக்கு தங்கள் புகைப்படங்களை அனுப்பி வைத்திருந்தனர். 1921ஆம் ஆண்டு செப்ரம்பரில் அமெரிக்க அழகி அட்லான்டிக் நகரில் தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் நீராடும் அழகிப் போட்டி இடம்பெற்றது. 1951 முதல் உலக அழகிப் போட்டி இடம்பெற்று வருகின்றது. கிளிநொச்சியில் நடைபெற்ற அழகிப் போட்டி அல்லது அழகு கலைஞர்களுக்கிடையேயான போட்டியும் இந்த உலக அழகுப் போட்டியும் அடிப்படையில் ஒன்றே. இதன் கருத்தியல் தளத்தில் தான் நாம் கவனம் செலுத்தவேண்டுமே அல்லாமல் போர் தின்ற கிளிநொச்சியில் அழகுராணிப் போட்டி அவசியமா இல்லையா என்பதல்ல பிரச்சினை. வெறும் அடைமொழிகளை வீசி அவ்விளம் பெண்களை குற்றவாளியாக்குவது நியாயமற்ற செயல். ஆணாக இருந்தாலென்ன பெண்ணாக இருந்தாலென்ன அழகு என்பது முக்கியமான அம்சம். ஒவ்வொருவரும் தன்னளவில் தாங்கள் அழகானவர்கள் என்பதை ஏற்றுக்கொள்வது அவர்களுடைய தனித்துவத்திற்கும் ஆளுமைக்கும் மிகவும் அவசியமானது. அதனால் அவரவர் தங்களை அழகுபடுத்தி வெளிப்படுத்துவது ஆரோக்கியமான விடயமே. அதில் எவ்வித தவறும் கிடையாது. ஆண்களுக்கு அழகு அவசியம் இல்லை என்றால் சிகை அலங்கார நிலையங்கள் எதற்கு? ஆனால் இந்த அழகும் அதற்கான போட்டி என்பதும் சிக்கலான ஒன்று. ஆணழகன் போட்டிகள் இருந்தாலும் அவை பெரிதாகப் பேசப்படுவதில்லை. ஏனெனில் அது ஆண்களின் அம்சமாகப் பார்க்கப்படுவதில்லை. ஆனால் மிஸ்வேர்ல்ட், மிஸ் கிளிநொச்சி என்பது பலரது கவனத்தையும் ஈர்த்துவிடுகின்றது. அதற்குக் காரணம் சந்தைப் பொருளாதாரமும் அது ஏற்படுத்திய நுகர்வுக் கலாச்சாரமுமே. பெண்ணியம் சார்ந்த பெண் விடுதலைக்கான அமைப்புகள் இதற்கு எதிரான போராட்டங்களை மேற்கொண்டனர் 1970இல் லண்டன் அல்பேர் ஹோலில் இடம்பெற்ற மிஸ் வேர்ல்ட் போட்டிக்குள் நுழைந்த பெண்ணியவாதிகள் அங்கு சலசலப்பை ஏற்படுத்தி உலகின் கவனத்தை ஈர்த்தனர். 2018 இல் இடம்பெற்ற உலக அழகிப் போட்டியை வழங்கிக்கொண்டிருந்த பொப் ஹோப் “இன்றைய இரவைப் பார்க்க இதுவொரு கன்றுகளின் சந்தையாகத் தெரிகின்றது” எனக் குறிப்பிட்டிருந்தார். பிரித்தானியாவில் கன்றுகள் காட்சிப்படுத்தப்பட்டு ஏல விற்பனை செய்யப்படும் முறையிருப்பதன் பின்னணியில் அவர் இக்கருத்தை வெளிப்படுத்தி இருந்தார். இவ்வாறு இந்த உலக அழகிப் போட்டிகளுக்கு எதிரான பல போராட்டங்கள் காலத்துக்குக் காலம் இடம்பெற்று வருகின்றது. 2002 இல் நைஜீரியாவின் அபுஜாவில் நடக்கவிருந்த மிஸ் வேர்லட் போட்டி அதுதொடர்பான சர்ச்சையால் அங்கு நடைபெறவில்லை. முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் கணிசமான அளவில் வாழ்கின்ற நைஜீரியவில் மிஸ் வேர்ல்ட் ஏற்பாடு செய்யப்பட்டதுமே வாதப் பிரதிவாதங்கள் இரு மதத்தரிப்பினரிடையேயும் உருவானது. அது ஏற்கனவே முரண்பாடுகளோடு இருந்தோரிடையே மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்பின்னணியில் “முகம்மது நபிகள் இன்று இருந்தால் இந்த உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் ஒருவரையே திருமணம் செய்ய விரும்பி இருப்பார்” என்று கிறிஸ்தவ பெண் ஊடகவியலாளர் ஒரு கட்டுரையை எழுதினார். அதனைத் தொடர்ந்து சில நாட்களின் பின் வெடித்த கலவரத்தில் 215 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கட்டுரையாளருக்கு மரண தண்டனை – அறிவிக்கப்பட அவர் தற்போது மேற்கு நாடு ஒன்றில் தற்போதும் தலைமறைவாக வாழ்கின்றார். மீண்டும் நாங்கள் உலக அழகிப் போட்டிக்கு வருவோம், விளையாட்டுப் போட்டிகளை நாங்கள் பார்த்து மகிழ்கின்றோம், குத்துச் சண்டைகளில் யார் வெல்வார்கள் என்று பந்தயம் கட்டுகின்றோம், காளையை அடக்கும் பாட்டிகளை பார்த்து ரசிக்கின்றோம், போட்டிப் பரீட்சைகளில் போட்டி போட்டு கலந்துகொள்கின்றோம் ஆனால் அழகிப் போட்டி மட்டும் ஏன் வேறு கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றது? என்ற கேள்வி நியாயமானதே. ஏனைய போட்டிகளுக்கும் அழகுப் போட்டிக்கும் உள்ள பிரதான வேறுபாடு தான் இதற்குக் காரணம். ஏனைய போட்டிகளில் ஒருவரின் பலம், திறமை: எழுத்தாற்றல், பேச்சாற்றல், வரையும் ஆற்றல், ஓடும் ஆற்றல் போன்ற பல்வகைப்பட்ட ஆற்றல்கள், சிந்திக்கும் ஆற்றல் என்ற அளவீடு செய்யக்கூடிய சுட்டிகள் போட்டியின் போது மதிப்பீடு செய்யப்படுகின்றது. இது புறநிலையானது பொருள்வகைப்பட்டது. அதற்கு நீங்கள் பரிவர்த்தனை மதிப்பை ஏற்படுத்த முடியும். அதாவது விலை நிர்ணயம் செய்ய முடியும். உதாரணத்திற்கு சீதனச் சந்தையில் ஓஎல் பெயில் விட்டவருக்கும் பட்டதாரிக்கு இடையே உள்ள சந்தைவிலை – சீதனம் ஒன்றல்ல. இதற்கு முற்றிலும் மாறாக அழகு என்பது உணர்வு சம்பந்தப்பட்டது. அகநிலையானது. அதனை அளவீடு செய்ய முற்படுவதே அடிப்படையில் தவறான அணுகுமுறை. நாங்கள் விரும்புகின்றவர் எங்களுக்கு பேரழகனாகவோ பேரழகியாகவோ தோன்றலாம். ஆனால் எங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு அவ்வாறே தோண்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. கறுப்புப் பற்றி வரலாற்றினூடு எங்களுக்கு திணிக்கப்பட்ட தகவல்களால், கறுப்புப் பற்றிய தவறான புரிதலை எங்களை அறியாமலேயே எங்களுக்குள் கொண்டுள்ளோம். அகத்தில் உள்ள இந்தச் சிக்கலை மறைக்க நாங்கள் முகத்தையும் தோலையும் ப்பிளீச் பண்ணி கொஞ்சம் கூடுதலாக வெள்ளையாக்க விரும்புகின்றோம். ஆபிரிக்க பெண்கள் கூட இதனையே செய்ய ஊக்கப்படுத்தப்படுகின்றனர். அழகு என்ற பெயரில். 1500களில் இருந்து ஐரோப்பியர்களின் காலனி ஆதிக்கத்திலிருந்தும் அதன் பின் நவகாலனித்துவ ஆதிக்கத்தினாலும் வெள்ளைத்தோல் அழகு, பண்பு, அறிவு ஆகியவற்றோடு தொடர்புபடுத்தப்பட்டு பார்க்கப்படலாயிற்று. ஐரோப்பிய வெள்ளையினத்தவர்கள் எம்மை ஆண்டதால் வெள்ளை மீது அல்லது கறுமை குறைந்தவர்கள் மீது எமக்கு காதலுருவாவது ஒன்றும் வியப்பில்லை. மேலும் கறுப்பாடு, கறுப்புப் பணம், கறுப்புச் சந்தை என்ற சொல்லாடல்கள் எல்லாம் கறுப்புப் பற்றிய கீழ்நிலைக் கருத்துருவாக்கத்தை எம்மத்தியில் மிக ஆழமாக பதிவு செய்துள்ளது. வெள்ளை தான் அழகு என்ற உணர்வை இவை ஏற்படுத்தி உள்ளது. மிஸ் வேர்ல்ட் போட்டியும் இதனையே பிரதிபலிக்கின்றது. வெள்ளையினத்தினரைக் கொண்ட நாடுகளும் அவர்களை ஒத்தவர்களுமே பெரும்பாலும் இப்போட்டிகளில் வெற்றிபெறுவது இதனையே உறுதி செய்கின்றது. ஆய்வுகளும் அதனை உறுதிப்படுத்துகின்றன. இவற்றுக்கு அப்பால் இப்போது வெள்ளையினத்வரல்லாதவர்களும் இந்த அழகுப் போட்டியில் வெற்றிபெற வாய்ப்பு ஏற்பட்டு இருப்பது ஒன்றும் வெள்ளையரல்லாதோரை அல்லது கறுப்பை அழகாகக் கருதுவதால் அல்ல. தங்கள் ப்பிளீச் பவுடரையும் தாங்கள் அழகென்று கருதுவதை சந்தைப்படுத்தி தங்கள் சந்தையை விரிவாக்கம் செய்யவே. அதனால் தான் இலகுவில் விலைபோகக்கூடிய உலகின் இரண்டாவது பெரிய சந்தையுடைய இந்தியா மிஸ் வேர்ல்ட் போட்டிகளில் ஆறு தடவைகள் வெற்றி பெற்றதன் ரகசியம். உலகின் மிகப்பெரிய சந்தையையுடைய சீனா தன் சந்தையை சர்வதேசத்துக்கு திறந்துவிடாததால் சீனா 2007 இல் ஒரு தடவை மட்டுமே மிஸ்வேர்ல்ட் போட்டியில் வெற்றிபெற்றது. உயிருள்ள உணர்வுள்ள ஜீவன்களான பெண்கள் சந்தைப் பொருளாதாரத்தின் விற்பனைப் பண்டமாக மாற்றப்படும் தன்மைதான் இந்த அழகுப் போட்டிகளில் வெளிப்படுத்தப்படுகின்றது. அழகில்லாத ஆணோ அழகில்லாத பெண்ணோ கிடையாது. படைக்கப்படவும் முடியாது. அழகை அவரவர் தமக்கேற்ப மெருகூட்டுவது அவரவர் உரிமை. ஆனால் அதற்கு போட்டி வைத்து தெரிவு செய்கின்ற போது அது தீவிரமான அரசியலாக மாற்றப்படுவது தவிர்க்க முடியாதது. ஒரு பெண்ணின் அழகை அளவீடு செய்வதும் அதன் மூலம் அவளை மதிப்பீடு செய்வதும் இந்த நூற்றாண்டின் கருத்தியல் அவலம் என்றே கருதுகிறேன். அவளின் அழகிற்கு அவள் மட்டுமே நிகர். இதற்கு ஒருபடி மேலே சென்று இப்போது க்கீயூட் பேபி கொன்ரெஸ்ட் வேறு நடத்த ஆரம்பித்துவிட்டது பேஸ்புக். லாபமீட்டலாம் என்றால் என்னவும் செய்யலாம் என்பது பல்தேசிய நிறுவனங்களின் கொள்கை. அதற்கு அவர்கள் பார்பி டோலின் இடுப்பை சிறிதாக்கி அதனையும் செக்ஸியாக்கி விற்பனை செய்கிறார்கள். இப்படி எத்தனை போட்டிகளுக்கு எம் எதிர்கால சந்ததியினர் முகம்கொடுக்க வேண்டி வரும் என்பது பல்தேசிய நிறுவனங்களுக்குத் தான் வெளிச்சம். இதில் கிளிநொச்சி இளம்பெண்கள் என்ன பாவம் செய்தார்கள், நீங்கள் சொல்லம்புகளால் அவர்களைத் தைக்க? https://www.thesamnet.co.uk/?tag=கிளிநொச்சி-அழகி-போட்டி
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.