Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. ஆட்சிக்கு வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாற்றுவேன் - சீமான் ‘திராவிடநல் திருநாடு’ என்றிருப்பதை அகற்றும் வகையில், புதிய தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை நான் ஆட்சிக்கு வந்ததும் மாற்றுவேன் என நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். நாமக்கல்லில் நேற்று (21) செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது, 2016-இல் நான் அரசியலுக்கு வந்த போது புத்தகம் ஒன்றை வெளியிட்டேன். அதில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாற்றுவேன் என தெரிவித்திருந்தேன். தமிழ்நாட்டை திராவிடா் நாடு எனக் கூறுவதை ஏற்க முடியாது. நான் ஆட்சிக்கு வந்தால் பாரதிதாசன், தேவநேயப் பாவாணா் போன்ற தமிழறிஞா்களின் பாடலில் ஒன்றை வாழ்த்துப் பாடலாக மாற்றுவேன். புதுச்சேரி வாழ்த்துப் பாடல் தமிழ் சாா்ந்ததாகத் தான் உள்ளது. தமிழ் எனது மொழி, திராவிடா் என்பது எங்கிருந்து வந்தது. திராவிடம் குறித்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி என்னிடம் நேருக்கு நோ் விவாதிக்கத் தயாரா? தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்தே திருவள்ளுவா் உள்பட பல கவிஞா்களும் பாடல்களை உருவாக்கியுள்ளனா். மனோன்மணீயம் சுந்தரனாா் பாடலை நீண்ட நாள் பாடியாயிற்று, நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் திராவிடநல் திருநாடு என்பது அகற்றப்படும், புதிய தமிழ்த்தாய் பாடல் ஒலிக்கும். தமிழா் கழகம் என பெரியாா் வைத்த பெயரை, திராவிடா் கழகம் என மாற்றியது யாா் என்பது இந்த உலகுக்கு தெரியும். 2026 சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். புதியவா்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும். 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தோ்தல் பணியானது நடைபெற்று வருகிறது. இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் வேளையில், உள் இட ஒதுக்கீடு கோரி போராடுவதை நாங்கள் கடுமையாக எதிா்க்கிறோம். ‘திராவிடநல் திருநாடு’ என்றிருப்பதை அகற்றும் வகையில், புதிய தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை நான் ஆட்சிக்கு வந்ததும் மாற்றுவேன் என நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: 2016-இல் நான் அரசியலுக்கு வந்த போது புத்தகம் ஒன்றை வெளியிட்டேன். அதில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாற்றுவேன் என தெரிவித்திருந்தேன். தமிழ்நாட்டை திராவிடா் நாடு எனக் கூறுவதை ஏற்க முடியாது. நான் ஆட்சிக்கு வந்தால் பாரதிதாசன், தேவநேயப் பாவாணா் போன்ற தமிழறிஞா்களின் பாடலில் ஒன்றை வாழ்த்துப் பாடலாக மாற்றுவேன். புதுச்சேரி வாழ்த்துப் பாடல் தமிழ் சாா்ந்ததாகத் தான் உள்ளது. தமிழ் எனது மொழி, திராவிடா் என்பது எங்கிருந்து வந்தது. திராவிடம் குறித்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி என்னிடம் நேருக்கு நோ் விவாதிக்கத் தயாரா? தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்தே திருவள்ளுவா் உள்பட பல கவிஞா்களும் பாடல்களை உருவாக்கியுள்ளனா். மனோன்மணீயம் சுந்தரனாா் பாடலை நீண்ட நாள் பாடியாயிற்று, நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் திராவிடநல் திருநாடு என்பது அகற்றப்படும், புதிய தமிழ்த்தாய் பாடல் ஒலிக்கும். தமிழா் கழகம் என பெரியாா் வைத்த பெயரை, திராவிடா் கழகம் என மாற்றியது யாா் என்பது இந்த உலகுக்கு தெரியும். 2026 சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். புதியவா்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும். 10இற்கும் மேற்பட்ட தொகுதிகளில் தோ்தல் பணியானது நடைபெற்று வருகிறது. இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் வேளையில், உள் இட ஒதுக்கீடு கோரி போராடுவதை நாங்கள் கடுமையாக எதிா்க்கிறோம். https://akkinikkunchu.com/?p=296186
  2. தலைக்கு ஐயாயிரம் ரூபா இலஞ்சம் கொடுத்த தமிழரசு வேட்பாளர்...! Vhg அக்டோபர் 21, 2024 மட்டக்களப்பில் ஓட்டோ சாரதிகளுக்கு தலா ஐயாயிரம் வீதம் இலஞ்சம் கொடுத்து, தமிழரசுக் கட்சியின் சர்ச்சைக்குரிய வேட்பாளர் ஒருவர் வாக்கு கோருவதாக அறியமுடிகிறது. நேற்று முன்தினம் (18-10-2024) இரவு 635 முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு தலா ஐயாயிரம் ரூபா இலஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்தவகையில் 31 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா இவ்வாறு இலஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சில தொகுதிகளுக்கு இலஞ்சம் கொடுத்த நிலையில், நேற்றைய தினம் மட்டக்களப்பு தொகுதி மற்றும் கல்குடா தொகுதி என்பவற்றில் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு இவ்வாறு இலஞ்சம் வழங்கவுள்ளதாக அறியமுடிகிறது. இந்த வேட்பாளர் தினமும் இரவு வேளைகளில் இளைஞர்களை அழைத்து அவர்களுக்கு மதுபானம் வழங்கிவிட்டு, தமக்கு சார்பாக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கூறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.battinatham.com/2024/10/blog-post_718.html
  3. ஈஸ்டர் அறிக்கை விவகாரம்;ஜனாதிபதி அதிரடி ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கடந்த 5 வருடங்களாக சுயநினைவின்றி கோமா நிலையில் இருந்தவர்கள் தற்போது ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்று (20) தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து அரசாங்கம் முறையான விசாரணையை ஆரம்பித்த பின்னர் சிலர் குழப்பமடைந்துள்ளதாகவும் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கைகள் இரகசியமானவை அல்ல எனவும் அவர் கூறினார். கட்டுநாயக்கவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டு அறிக்கைகளும் சட்டமா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், பொது பாதுகாப்பு அமைச்சு செயலாளர், கொழும்பு பேராயரின் செயலாளர் ஆகியோரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் தமக்கு அறிவித்ததாகத் ஜனாதிபதி தெரிவித்தார். எனவே அவை இரகசிய அறிக்கைகள் அல்ல என அவர் வலியுறுத்தினார். எனினும் அந்தக் குழுக்கள் விசாரணைக் குழுக்கள் அல்ல என்று கூறிய ஜனாதிபதி, விசாரணைகளை நசுக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சில குழுக்களை அமைத்தார் என்றும் கூறினார். ”இந்த இரண்டு குழுக்களும் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைக்கப்பட்டவை. இவை விசாரணைக் குழுக்கள் அல்ல. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சனல்-4 காணொளியின் அறிக்கையை ஆராய ஒரு குழுவும், பாதுகாப்புப் படையினருக்கு தொடர்பு உள்ளதா என ஆராய இரண்டாவது குழுவும் அமைக்கப்பட்டது. இந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய விசாரணைகளை நசுக்க ரணில் விக்கிரமசிங்க இவ்வாறான சில குழுக்களை அமைத்தார்” என்றார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் புதிய விசாரணைகளை ஆரம்பிக்குமாறு புதிய அரசாங்கம் பொலிஸ் மா அதிபருக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கும் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்ட நபர் ஒருவர் கோமா நிலையில் இருந்து எழுந்து ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பில் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். “அரசு முறையான விசாரணையை ஆரம்பித்ததும் கோமா நிலையில் இருந்தவர்கள் விழித்துக்கொண்டனர். முறையான விசாரணைக்கு பயப்படுகிறார்கள். இதை நாசப்படுத்த நினைக்கிறார்கள். அறிக்கைகளைப் பற்றிப் பேசுபவர் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க விரும்பவில்லை. உண்மையான குற்றவாளிகளை மறைப்பதே அவரின் உண்மையான நோக்கமாகும் அவரும் அவர்களின் ஒப்பந்தத்தில் உள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு நாங்கள் அகப்பட மாட்டோம். நாம் முறையான விசாரணையை நடாத்தி உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்துவோம். அந்த நபர் இவ் விசாரணைகள் நடைபெறுவதை தடுக்கவே முயல்கிறார். மறைக்க அல்லது பாதுகாக்க எங்களிடம் யாரும் இல்லை" என்று ஜனாதிபதி கூறினார். https://www.tamilmirror.lk/செய்திகள்/ஈஸடர-அறகக-வவகரம-ஜனதபத-அதரட/175-345773
  4. இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல் adminOctober 21, 2024 யாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுஸ்டிக்கப்பட்டது. கடந்த 1987 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம், 22ம், திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்து மீறி உள் நுழைந்த இந்திய அமைதிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அத்தாக்குதல் சம்பவத்தில் வைத்தியசாலையில் கடமையில் இருந்த மூன்று மருத்துவர்கள், இரண்டு தாதியர்கள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 மருத்துவ சேவையாளர்கள் மற்றும், சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்கள் என 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர். https://globaltamilnews.net/2024/207708/
  5. இலங்கை தேர்தல் பற்றி நம்பிக்கையான கருத்துக்கணிப்புகள் இல்லை. எனவே இந்தப் போட்டியில் ஊகித்துத்தான் பதில்களை போடவுள்ளேன். 😁
  6. மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி Vhg அக்டோபர் 20, 2024 தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் நேற்று (19-10-2024) மாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை சீராகி வருவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாவை சேனாதிராஜாவை அரசியல்வாதிகள் சிலர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். தமிழ் தேசிய ஒற்றுமை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தகர் பிருந்தாவன் மற்றும் சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், பிரதேச சபை உப தவிசாளர் செ.மயூரன் ஆகியோரே இவ்வாறு சென்று நலம் விசாரித்துள்ளனர். இதன்போது மாவை சேனாதிராஜாவின் உடல்நலம் தொடர்பாக விசாரித்ததோடு அவருக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் தொடர்பாக கேட்டறிந்துள்ளனர். இவர் தொடர்ச்சியாக நலமோடு தமிழ் தேசிய ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.battinatham.com/2024/10/blog-post_958.html
  7. ரணிலின் கோரிக்கையை மறுத்தார் அநுர முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 16 சமையல்காரர்கள், 163 பாதுகாப்புப் பணியாளர்கள், 30 குடைகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடங்கிய விரிவான சலுகைகள் கோரியதை தாம் நிராகரித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்க விதிமுறைகளுக்கு இணங்க விக்ரமசிங்கவிற்கு மூன்று வாகனங்கள் மாத்திரமே வழங்கப்படும் என ஜனாதிபதி பொது பேரணியில் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பொது நிதி மூலம் ஆதரவளிக்கப்படுவதை தடுக்க அரசாங்கம் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் என மேலும் கூறினார். மேலும், விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் இல்லங்களில் முன்னர் வைக்கப்பட்டிருந்த இரண்டு நோயாளர் காவு வண்டிகளை மீளப்பெற்றுக்கொண்ட திஸாநாயக்க, இந்த வசதிகளை தனிப்பட்ட சொத்தாகக் கருதக் கூடாது எனவும் வலியுறுத்தினார். https://akkinikkunchu.com/?p=296063
  8. தமிழருக்கு தேசிய மக்கள் சக்தி காட்டும் திசை தெளிவாக இருக்க வேண்டும் October 19, 2024 — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 21.09.2024 அன்று நடைபெற்று முடிந்த இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசநாயக்காவைத் தெரிவு செய்ததன் மூலம் இந்நாட்டு அரசியலில் ஒரு முறைமை மாற்ற-பண்பு மாற்ற எதிர்பார்ப்பைக் குறிப்பாக ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகமற்ற-சட்டம் ஒழுங்கைப் பாரபட்சமின்றி முறையாகப் பேணக் கூடிய-வாரிசு அரசியலற்ற ஓர் அரசாங்கம் அமைய வேண்டுமென்ற அவாவை தென்னிலங்கைச் சிங்களப் பெரும்பான்மைச் சமூகம் வெளிப்படுத்தியுள்ளது. அதேவேளை வடக்குகிழக்கு மாகாணத் தமிழர்களைப் பொறுத்தவரை கடந்த ஜனாதிபதித் தேர்தல்களைவிடவும் இம்முறை நடந்துள்ள தேர்தலில் குறிப்பிட்ட தொகையினர் அனுரகுமார திசநாயக்காவுக்கு வாக்களித்தமைக்குப் பிரதான காரணங்களாவன. தமிழ்த் தேசியக் கட்சிகள் என நாமம் சூட்டப்பட்ட கட்சிகளின் தேர்தல்மைய-ஏமாற்று-கதிரைக் கனவு அரசியலின் மீது ஏற்பட்ட வெறுப்பும் விரக்தியும் அடிப்படைக் காரணம். மற்றக் காரணம், கடந்த காலங்களில் வலதுசாரிக் கட்சிகள் நிறுத்திய வேட்பாளர்களுக்கு வாக்களித்ததன் மூலம் எந்த நன்மைகளையும் அடையமுடியவில்லை. அதனால் மாற்றம் வேண்டி ஒரு இடதுசாரித் தலைவருக்கு வாக்களித்துள்ளனர். இதன் எதிர்பார்ப்பு இனவாதச் செயற்பாடுகளற்றதோர் அரசாங்கமே தவிர இனப்பிரச்சனைக்கான திருப்தியான அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையல்ல. இன்னொரு காரணம், முழு நாட்டிலும் ஏற்படும் முறைமை மாற்றத்தினால் அதாவது அம் முறைமை மாற்றத்தின் அம்சங்களான ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகமற்ற அரச நிர்வாகம்-சட்டம், ஒழுங்குகள் பாரபட்சமின்றி முறையாகப் பேணப்படும் காவல்துறை மற்றும் நீதித்துறைக் கட்டமைப்பு-பொருளாதாரச் சீர்திருத்தங்களினால் அடையக்கூடிய வாழ்வாதார நன்மைகள் என்பன ‘நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்குமாங்கே பொசிவது போல்’ வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களுக்கும் இலங்கையர் என்ற ரீதியில் சுவறும் என்கின்ற எதிர்பார்ப்பு. உண்மையில், வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களில் குறிப்பிட்ட தொகையினர் வாக்களித்தது ‘தேசிய மக்கள் சக்தி’ என்ற அரசியல் கட்சிக்கு அல்ல; அதன் தலைவர் அனுரகுமார திசநாயக்கா என்ற ஆளுமை மீது ஏற்பட்ட அரசியல் வசீகரமும் நம்பிக்கையுமே அவர்களைத் ‘திசை காட்டி’ச் சின்னத்துக்கு வாக்களிப்பதற்கான அகத்தூண்டலை ஏற்படுத்தியதே தவிர மாறாகக் கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகளைக் கற்றுணர்ந்தனாலோ மேலும் கட்சி உறுப்பினர்களின் தேர்தல் பரப்புரையினாலோ அல்ல. மட்டுமல்லாமல், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஆரம்பத்தில் தானாகவே முன்வந்து 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் செய்யப் போவதாக அரசியல் கட்சிகளைக் கூட்டி அறிவிப்புச் செய்தவேளை அதற்குத் தான் ஆதரவு என அனுரகுமார திசநாயக்கா அறிவித்திருந்தமையும்-ஜனாதிபதித் தேர்தலின்போது தனது ஆட்சியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமென்றும் அதுவரைக்கும் தற்போதைய அரசியலமைப்பின் அங்கமாகவுள்ள 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படுமென்றும் உறுதியளித்திருந்தமையும் அனுரகுமார திசநாயக்கவுக்கு வாக்களிப்பதற்கான அகத்தூண்டலை ஏற்படுத்தியிருக்கக்கூடும். ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகங்களற்ற நாடு ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் தேவைதான். அதில் எந்தக் கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. ஆனாலும், வடக்குக் கிழக்குத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் இந்நாட்டுத் தேசிய இனங்களிலொன்று என்ற அடிப்படையில் குறைந்தபட்சம் தமது அடையாளத்தையும் இருப்பையும் இழந்துவிடாமல் ஐக்கிய இலங்கை எனும் சட்டகத்துக்குள் பேணிப் பாதுகாத்து வளர்த்தெடுக்கக்கூடிய நிரந்தரமான அதிகாரப் பகிர்வு பொறிமுறையை அரசியலமைப்பு ரீதியாக அவாவி நிற்கிறார்கள் என்பதும் நிதர்சனமே. இலங்கைத் தேசியத்தின் இணைந்த கூறாக தமிழ்த் தேசியம் இருக்கலாமே தவிர தமிழ்த் தேசியம் இலங்கைத் தேசியம் என்ற பெயரில் பௌத்த சிங்களப் பேரினவாத மேலாதிக்கக் கருத்தியலுக்குள் கரைந்து போவதற்கு அனுமதிக்க முடியாது. இத்தகைய தெளிவான எண்ணப்பாட்டின் அடிப்படையில்தான், ரணில் விக்கிரமசிங்க வெல்லக்கூடும் என்று அவருக்கு வாக்களித்தவர்களுள்-சஜித் பிரேமதாச வெல்லக்கூடுமென்று எண்ணியும் தமிழரசுக் கட்சி கேட்டுக் கொண்டதனாலும் அவருக்கு வாக்களித்தவர்களுள்- ‘போலி’த் தமிழ்த் தேசியவாதிகள் தமது வார்த்தை ஜாலங்களால் ஊட்டிய உணர்ச்சியிலும் உசுப்பேற்றலிலும் எடுபட்டுத் தமிழ்ப் பொது வேட்பாளரின் ‘சங்கு’ச் சின்னத்துக்கும் வாக்களித்தவர்களுள் கணிசமான தொகையினர் தேர்தலில் அனுரகுமார திசநாயக்கா வெற்றி பெற்றதைக் கண்டு அவருக்கு வாக்களித்திருந்திருக்கலாமே என்று ஆதங்கப்பட்டவர்களும் உண்டு. ஏனெனில், இடதுசாரித்துவம் எப்போதுமே தேசிய இனமொன்றின் தனித்துவமான (சுய நிர்ணய உரிமை உள்ளடங்கலான) அரசியல் அபிலாசைகளை அங்கீகரித்தே வந்துள்ளது. தற்போது அனுரகுமார திசநாயக்க தலைமை தாங்கும் தேசிய மக்கள் சக்தியின் தாய்க் கட்சியான ஜே வி பி (ஜனதா விமுக்திப் பெரமுன- மக்கள் விடுதலை முன்னணி) யை அதன் ஆரம்ப காலகட்டத்தில் (1965-1989) ரோகண விஜேவீர தலைமை தாங்கிய காலத்திலும் சரி அதற்குப் பின்னர் 1990 இலிருந்து 2014 வரை தலைமை தாங்கிய சோமவன்ச அமரசிங்க காலத்திலும் சரி இறுதியாக 2014 இலிருந்து 2024 ஜனாதிபதி தேர்தல் வரை அனுரகுமார திசநாயக்க தலைமை தாங்கியபோதிலும் சரி ஜே வி பி ஐத் தமிழ் மக்கள் அதன் கடந்த காலத்துத் தமிழர் விரோத செயற்பாடுகளின் காரணமாக எதிரியாகவே நோக்கி வந்தனர். அதில் உண்மையும் உண்டு. ஆனால் ஜே வி பி யானது அனுரகுமார திசநாயக்க தலைமையில் தேசிய மக்கள் சக்தி (என் பி பி) யாக பரிணாமம் பெற்ற போது அதனைத் திருந்திய-இனவாதமற்ற ஜே வி பி யாக நோக்கத் தலைப்பட்டதின் விளைவுதான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திசநாயக்காவுக்கு விழுந்த வடக்கு கிழக்குத் தமிழர்களின் வாக்குகளாகும். இந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கா தலைமையிலான இடதுசாரி அரசாங்கத்தை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலினூடாக மேலும் பலப்படுத்த வேண்டுமென்ற எண்ணமும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமிழர் அரசியலிலும் மாற்றத்தை வேண்டி நின்றவர்களிடையே தலை தூக்கியிருந்தது. இதற்குக் காரணம் தமிழ்த் தேசியம் பேசிய அரசியற் கட்சிகளிடையேயும் கட்சிகளுக்குள்ளேயும் ‘கதிரை’களுக்காக ஏற்பட்ட குத்து வெட்டுக்களும்-அபிவிருத்தி பற்றிப் பேசிய இணக்க அரசியல் கட்சிகளிடம் நிலவிய ஊழல் பலவீனங்களும் இவ்விரு தரப்பினர் மீதும் மக்களுக்கு அசூசையை ஏற்படுத்தியிருந்ததால் அனுரகுமாரதிசநாயக்காவின் தலைமையிலான ஆட்சியைத் தேர்தலின் ஊடாக மேலும் வலுப்படுத்த வேண்டுமென எழுந்த எண்ணமும் ‘அனுர அலை’ மேலெழக் காரணமாயிற்று. ஆனால், வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரை இந்தச் சாதகமான அலையை தேசிய மக்கள் சக்தியின் நிர்வாகம் அரசியல் மதிநுட்பத்துடன் பயன்படுத்தத் தவறவிட்டதுபோல்தான் படுகிறது. அல்லது வடக்குக் கிழக்குத் தமிழர்களை ஏனோ தானோ என்ற மனப்போக்கில் கையாள முற்படுகிறதா என்ற கேள்வி மேலெழும்புகிறது. ஏனெனில், வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள யாழ்ப்பாணம்- கிளிநொச்சி, வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல (அம்பாறை) ஆகிய ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் திருகோணமலை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்குரிய தேசிய மக்கள் சக்தியின் வேட்பு மனுக்களில் இடம்பெற்றுள்ள தமிழ் வேட்பாளர்களை நோக்கும்போது அவர்கள் வாக்காளர்களை வசீகரிப்பவர்களாக-மக்களிடையே பிரபல்யம் பெற்றவர்களாக-ஏற்கெனவே அரசியல் மற்றும் சமூக சேவைகளில் ஈடுபட்டவர்களாக-சமூக அமைப்புகளைப் பின்புலமாகக் கொண்டவர்களாக இல்லையென்பதே பரவலான அபிப்பிராயம். மொத்தத்தில் அவர்களை ‘முகம் தெரியாதவர்கள்’ என்றே மக்கள் அழைக்கிறார்கள். இந்த விடயத்தில் வடக்கு கிழக்குத் தமிழர்களின் மனங்களை தேசிய மக்கள் சக்தி வெல்லத் தவறிட்டது. மக்கள் கட்சிக்காக மட்டுமே வாக்களிக்கமாட்டார்கள். கட்சிக்காக வாக்களிப்பவர்கள் சிறு தொகையினரே. பெருந்தொகையினர் வேட்பாளர்களின் தகுதி தராதரங்கள்-அவர்களின் மக்களுடனான ஊடாட்டம்-குண நலன்கள் மற்றும் நம்பகத்தன்மை என்பவற்றைக் கணக்கிலெடுத்துத்தான் வாக்களிப்பார்கள். அதுவே வெற்றி வாய்ப்பைத் தரும். இவைகளுக்கு மத்தியில் ஜே வி பி யின் பொதுச் செயலாளர் ரில்வின்சில்வா தமிழ் மக்களுக்கு 13 ஆவது திருத்தமும் அதிகாரப் பகிர்வும் அவசியமில்லை எனும் சாரப்பட ஊடக அறிவிப்புச் செய்துள்ளமை ‘தேசிய மக்கள் சக்தி’குறித்த எதிர்மறையான எண்ணங்களுக்கு வடக்கு கிழக்குத் தமிழர்களை இட்டுச் சென்றுள்ளது. இந்த எதிர்மறைத் தாக்கங்களை ஈடுசெய்ய தேசிய மக்கள் சக்தி தேர்தலுக்கு முன்பும் தேர்தலுக்குப் பின்னும் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகமற்ற-பொருளாதார மீட்சிபெற்ற இலங்கையை மட்டுமல்ல தமது அடையாளத்தையும் இருப்பையும் பேணிப் பாதுகாத்து வளர்த்தெடுக்கக்கூடிய இனவாதமற்றதோர் இலங்கையையும்தான் இலங்கைத் தமிழ்த் தேசிய இனம் காணத் துடிக்கின்றது. இதற்குத் தேசிய மக்கள் சக்தி காட்டும் திசை தெளிவானதாகவிருந்தால்தான் வடக்கு கிழக்குத் தமிழர்கள் எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க முன் வருவார்கள். https://arangamnews.com/?p=11345
  9. தமிழர்களின் யதார்த்தமான கோரிக்கைகளை NPP மதிக்க வேண்டும் October 20, 2024 — கருணாகரன் — யாராலும் கையாள முடியாத – எவருடைய கட்டுப்பாட்டுக்குள்ளும் நிற்காத ஒரு நிலையை எட்டியுள்ளது தமிழ் அரசியல். அரசியலில் தமிழ் அரசியல் – சிங்கள அரசியல் – முஸ்லிம் அரசியல் எல்லாம் உண்டா என்று அரசியல் அறிஞர்கள் கேட்கலாம். உண்மையான அர்த்தத்தில் அப்படிச் சொல்ல முடியாதுதான். என்றாலும் பிரயோக நிலையில் அப்படிக் குறித்த சமூகங்கள் தங்களுடைய அரசியலை வரையறுத்து வந்திருப்பதால் இலங்கையின் அரசியலில் இத்தகைய அடையாளம் உருவாகி விட்டது. தமிழ்நாட்டில் திராவிட அரசியல், தலித் அரசியல், இந்தியத் தேசிய அரசியல் அல்லது காங்கிரஸ் அரசியல், காவி அரசியல் எனப்படும் பா.ஜ.க அரசியல் போன்றவற்றின் அடையாளத்தைப்போல. எப்படியோ நடைமுறை அர்த்தத்தில் இருப்பதன்படி தமிழ் அரசியலானது, தமிழ்த்தேசிய அரசியலாக அடையாளம் காட்டப்படுகிறது அல்லது உணரப்படுகிறது. அந்தத் தமிழ்த்தேசிய அரசியல் இதுவரையிலும் அரச எதிர்ப்பை அல்லது சிங்கள வெறுப்புவாதத்தை முன்னிறுத்தியே மேற்கொள்ளக் கூடியதாக இருந்தது. இதற்கான வாய்ப்பையும் அடிப்படைக் காரணத்தையும் அளித்தது, சிங்களத் தேசியவாதமும் அதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசும். ஆனால், தற்போது இந்த நிலை மாறியுள்ளது. மாறியுள்ளது என்றால், சிங்களத் தேசியவாதமும் அரச ஒடுக்குமுறையையும் மாறி விட்டன என்று அர்த்தமில்லை. அவற்றின் கட்டமைப்பில் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. ஆயினும் உணர்நிலையில் சற்று நெகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த நெகிழ்ச்சியானது மாற்றத்தை நோக்கிக் கொண்டு செல்லுமா இல்லையா என்பதை எதிர்வரும் ஆட்சியும் அதை உள்ளடக்கும் காலமும்தான் நிர்ணம் செய்யும். அல்லது தற்காலிகமான ஒரு பதுங்கல்தானா என்பதையும் அதுவே தீர்மானிக்கவுள்ளது. ஆனாலும் தற்போது ஆட்சிப் பீடமேறியுள்ள புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை நாட்டு மக்கள் அனைவரும் இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளைக் கடந்து தங்களுடைய தலைவராக உணர்கிறார்கள். சுதந்திர இலங்கையின் வரலாற்றில் இப்படி உணரப்படும் ஒரு தலைவரை நாடு இப்பொழுதுதான் சந்திக்கிறது. ஆனால், இதனை மேலும் உறுதிப்படுத்துவதற்கு அல்லது இது உண்மையான ஏற்புத்தானா என்பதை அறிவதற்கு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் வாய்ப்பாகும். அல்லது அனுரகுமார திசநாயக்கவும் NPP யும் அதை நிரூபித்துக் காட்ட வேண்டும். நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் அதிகப்படியான ஆசனங்களை NPP எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்களப் பகுதி வாக்குகள் மட்டுமல்லாமல், தமிழ்பேசும் மக்களின் பிரதேசங்களிலும் NPP க்கான ஆதரவு அலை காணப்படுகிறது. குறிப்பாக வடக்குக் கிழக்கு மாகாணங்களில் NPP யின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்தக் கூடிய வல்லமையை தமிழ் – முஸ்லிம் தரப்புகளிடம் காண முடியவில்லை. இது வழமைக்கு மாறான ஒன்றாகும். வழமையாக வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ்ப் பகுதிகளில் தமிழ் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் தமிழ்த்தேசியவாதக் கட்சிகளும் முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம் கட்சிகளுமே செல்வாக்கைப் பெறுவதுண்டு. இது ஒரு பாரம்பரியமாகவே தொடர்ந்து வந்துள்ளது. இந்த நம்பிக்கையில்தான் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் தத்தமது தேசியவாத அரசியலை எந்தச் சிரமமுமில்லாமல் மேற்கொண்டு வந்தனர். இதில் அவர்களுக்குச் சற்றுத் திமிரும் இருந்தது. இதனால்தான் “நாம் ஒரு தும்புத்தடியை நிறுத்தினாலும் எமது மக்கள் அதற்கு வாக்களிப்பார்கள்“ என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா. சம்மந்தன் துணிந்து கூறக்கூடியதாக இருந்தது. சம்மந்தனுக்குப் பின் வந்தோரும் சம்மந்தனை மறுத்துரைத்தோரும் கூட இந்த எண்ணத்திலிருந்தும் வேறுபடவில்லை. ஒவ்வொருவருக்குமிடையில் போட்டியிருந்ததே தவிர, மாற்றங்களோ யதார்த்தத்தை உணரக் கூடிய திறனோ, மக்கள் மீதான கரிசனையோ இருக்கவில்லை. இத்தகைய பலவீனங்களிருந்தாலும் தமிழ் மக்கள் தங்களுடைய அடையாளமாகவும் அரசியலாகவும் தமிழ்த்தேசியவாதச் சக்திகளையே ஆதரித்து வந்தனர். இதில் எந்தச் சக்தியையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும் வேறு வழி இல்லை என்பதால், திரும்பத்திரும்ப இந்தச் சக்திகளையே ஆதரித்தனர். விலக்காக திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் சிங்களக் குடிப் பரம்பலுக்கு ஏற்ப சிங்கள உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இந்தத் தடவை இது மாற்றமடையப்போகிறது. வடக்குக் கிழக்கில் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டாலும் அவர்கள் NPP யின் பிரதிநிதிகளாகவே இருக்கப்போகிறார்கள். முன்னரும் ஆட்சியிலிருந்த தரப்பைப் பிரநிதித்துவம் செய்யும் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதுண்டு. அது மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. அல்லது அதனுடைய எல்லை மட்டுப்பட்டிருந்தது. இந்தத் தடவை அது சற்று விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குக் காரணம், ஏற்கனவே சுட்டியுள்ளதைப்போல அனுர மற்றும் NPP மீதான நம்பிக்கையாகும். அதாவது மாற்றம் வேண்டும். மாற்றம் நிகழ்த்தப்படும். அதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற மனநிலை மக்களிடத்தில் மேலோங்கியுள்ளது. இரண்டாவது, சிங்களத் தரப்பிலும் அரசிடமும் காணப்படுகின்ற நேரடியான இனவாதமற்ற நெகிழ்ச்சி நிலை. இது தமிழ், முஸ்லிம் தேசியவாத அரசியற் தரப்பினருக்கு நெருக்கடியைக் கொடுக்கக் கூடிய ஒன்று. சிங்களத் தேசியவாதம் தீவிர நிலையில் இருந்தால்தான் தமிழ்த்தேசியமும் முஸ்லிம் தேசியமும் எழுச்சியடையும். பொதுவாகவே தேசியவாதத்தின் கூர்முனை அப்படித்தான் அமைவதுண்டு. எதிர்த்தேசியமே மறு தேசியத்தை கூராக்குவது. இங்கே சிங்களத் தேசியவாதம் தணிவு நிலைக்கு உள்ளாகியிருப்பதால், அதை முன்னிறுத்தித் தமிழ்த்தேசியத்தையும் முஸ்லிம் தேசியத்தையும் செயற்படுத்த முடியாதுள்ளது. இந்தத் தணிவு பதுங்குதலா அல்லது மாற்றத்துக்கான தொடக்க நிலையா என்பதில்தான் குழப்பங்களும் கேள்விகளும் நிறைகின்றன. மெய்யாகவே மாற்றத்தை நோக்கியதாக இந்தத் தணிவு நிலை ஏற்படுமாக இருந்தால் அதை வரவேற்க வேண்டும். அப்படி நடந்தால் NPP யும் அனுரவும் வரலாற்றில் கொண்டாடப்படும் சக்திகளாகக் காணப்படும் சூழல் உருவாகும். இலங்கைத் தீவும் புதியதொரு நிலையை எட்டும். இலங்கையின் அரசியல் பண்பாடும் போக்கும் சிறக்கும். அது இந்தப் பிராந்தியத்தில் புதியதொரு அரசியற் பண்பாட்டுக்கு வித்திடுவதாகவும் அமையும். எனினும் எதையும் உத்தரவாதப்படுத்திக் கொள்ள முடியாத ஒரு நிலையும் காணப்படுகிறது. இந்தத் தளம்பல் பல தரப்பிலும் உண்டு. 1. எதிர்கால அரசியலை எப்படி மேற்கொள்வது என்ற கேள்வி NPP யிடம் இருப்பதை உணரலாம். ஏற்கனவே அதனிடம் காணப்பட்ட வேகமும் தீவிரத் தன்மையும் ஆட்சி பீடமேறிய பின்னர் காணப்படவில்லை. அதிரடி அறிவிப்புகளைச் செய்த NPP தற்போது அவற்றை நடைமுறைப்படுத்துவதில் சற்று மெதுவான – தணிவான போக்கையே கடைப்பிடிக்கிறது. இதற்கான காரணத்தையும் நாம் புரிந்து கொள்ள முடியும். NPP ஒரு முற்று முழுதான புரட்சிகரச் சக்தி அல்ல. புரட்சிகர எண்ணங்களைக் கொண்ட அரசியல் சக்தியெனலாம். அதாவது ஆயுதப்போராட்ட அமைப்பிலிருந்து பரிணாமமடைந்த தேர்தல் வழியான ஜனநாயக அரசியற் சக்தியாகும். புரட்சிகரச் சக்தி ஒன்று ஆயுதப் புரட்சி மூலமோ அல்லது மக்கள் புரட்சியின் மூலமோ அதிகாரத்தைக் கைப்பற்றுவது ஒரு வகை. அப்படிக் கைப்பற்றப்படும் அதிகாரமானது, ஏற்கனவே இருக்கின்ற கட்டமைப்பை உடைத்து (Breaking the structure) அரங்கேறுவது. அல்லது மீறுவதாகும். அங்கே ஏற்கனவே இருந்த விதிமுறைகளும் நடைமுறைகளும் பின்பற்ப்பட வேண்டும் என்ற கட்டாயத்துக்கு இடமில்லை. அது முழு அதிகாரத்தின் சுயாதீனத்தைக் கொண்ட எழுச்சியும் ஆட்சியுமாக இருக்கும். இங்கே நிகழ்ந்திருப்பது அதுவல்ல. இது ஜனநாயக வழிமுறை மூலமான தேர்தலுக்கூடாக அதிகாரத்தைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கப்பட்டதாகும். ஆகவே இந்த மாற்றமும் மாற்றுத் தலைமையும் இன்னொரு வகையானது. இதில் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்ட அல்லது அவற்றை அனுசரித்த ஒரு ஆட்சியே நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதைத்தான் செய்ய முடியும். அதற்கமையவே மாற்றங்களும் அதற்கான கால அட்டவணையும் இருக்கும். எதையும் அதிரடியாகச் செய்ய முடியாது. சட்டம், விதிமுறை என்பவற்றுக்குட்பட்டே செயற்படுத்த வேண்டியதாக இருக்கும். அதற்கு அப்பால் மாற்றங்களை நிகழ்த்த வேண்டுமானால் அதற்கு அரசியலமைப்பை (அரசமைப்பை) மாற்ற வேண்டும். அதன்பின்பே மாற்றங்களை முழுமையான அளவில் அல்லது திருப்தியான முறையில் எதிர்பார்க்கலாம். இது NPP யின் நிலை என்றால் – 2. தமிழ், முஸ்லிம் தரப்புகள் தம்மை நிலைப்படுத்துவது எப்படி? தமது அரசிலையத் தொடர்வது எவ்வாறு என்ற குழப்பத்திற்குள்ளாகியுள்ளன. ஏற்கனவே சொல்லப்பட்டதைப் போல ஒரு Formula அரசியலையே தமிழ் – முஸ்லிம் தரப்புகள் செய்து வந்தன. அதற்குத் தோதாக தெற்கிலும் சு.க அல்லது ஐ.தே.க அல்லது பொதுஜன பெரமுன இருந்தது. இதனால் பழகிய வடிவத்தில் அதிக சிரமம் இல்லாமல் தமது அரசியலை இவை தொடரக் கூடியதாக இருந்தது. இதை இந்தத் தடவை NPP உடைத்து விட்டது. அது தேசிய அளவில் தன்னை விஸ்தரித்ததால், பிராந்தியத்தில் செல்வாக்கைக் கொண்ட தரப்புகளும் அடிபடும் நிலைக்குள்ளாகி விட்டன. குறிப்பாகத் தமிழ்த்தரப்பு மிகப் பலவீனப்பட்டுள்ளது. போதாக்குறைக்குத் தமிழ் வாக்குகளைப் பிரிக்கக்கூடிய வகையில் அவற்றுக்கிடையிலான போட்டிகள் நிலவுகின்றன. கூடவே சுயேச்சைக் குழுக்களும். உண்மையில் இந்தச் சூழலில்தான் இதை எப்படிக் கையாள்வது அல்லது இந்த நிலை ஏற்படாமல் தடுப்பது என்பதைக் குறித்துச் சிந்திக்கக் கூடிய தரப்புகள் வேலை செய்திருக்க வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச் சபையும் தமிழ்த்தேசியப் பொதுக்கட்டமைப்பும் பாராளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்தே செயற்பட்டிருக்க வேண்டும். உண்மையில் அவற்றுக்கு இப்பொழுதான் வேலை. அதாவது பாராளுமன்றத் தேர்தலில்தான் வேலை. ஆனால், கை முந்திச் செயற்பட்டதால் தலைக்கு நாசம் என்ற மாதிரி அவற்றின் வலுக்குன்றி விட்டது. உண்மையில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபையும் தமிழ்த்தேசியக் கட்டமைப்பும் தலையிட்டிருக்கவே கூடாது. அதில் தலையிட்டதனால்தான் பாராளுமன்றத் தேர்தலில் அவற்றுக்கான இடமில்லாமற்போனது. ஆனால், பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் வாக்குகள் சிதறக் கூடாது. தமிழ்த்தேசியமும் தமிழ்ப்பலமும் பலவீனப்படக் கூடாது. தமிழ் மக்கள் தேசமாகத் திரள வேண்டும் என்றுதான் பொதுச் சபையும் பொதுக்கட்டமைப்பும் உருவாக்கப்பட்டன. செயற்பட்டன. விளைவாக நடந்திருப்பது என்ன? எதிர்மாறுதானே! ஆகவே தமிழ் மக்கள் சிதறிப் போகும் நிலையை பொதுச் சபையும் பொதுக்கட்டமைப்பும் உருவாக்கியுள்ளன. இதனுடைய விளைவே பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ள அளவுக்கதிகமான போட்டியாளர்களும் தேர்தலில் சிதையப்போகும் வாக்குகளுமாகும். இந்த நிலைக்கு பொதுச் சபையும் பொதுக்கட்டமைப்பும் பொறுப்பேற்க வேண்டும். இதனையே – இவ்வாறான ஒரு நிலைமையே உருவாகும் என இந்தப் பத்தியாளர் உட்பட கூர்மையாக அரசியலை நோக்குவோர் பலரும் மிகத் தெளிவாக அப்போது தெரிவித்திருந்தனர். ஆனாலும் அதைப் பொதுச் சபையினரும் பொதுக்கட்டமைப்பும் நிராகரித்தனர். மட்டுமல்ல, இது எதிர்த்தரப்புக்கு – சிங்கள அதிகார வர்க்கத்துக்கு வாய்ப்பை அளிக்கும் எனவும் கூறப்பட்டது. அது யதார்த்தமாகியுள்ளது. எல்லாவற்றுக்கும் அப்பால் இன்று உருவாகியிருக்கும் புதிய அரசியற் சூழலானது இலங்கையின் எதிர்கால அரசியலில் புதியதொரு படிப்பினையை நிச்சயமாக அனைத்துத் தரப்புக்கும் தரப்போகிறது. படிப்பினைக்கு அப்பால் நல்லதொரு சூழலை, நல் வாய்ப்புகளைத் தருமாக இருந்தால் அதுவே சிறப்பாகும். நெகிழ்ந்திருக்கும் சிங்களத் தேசியவாதம் தமிழ்த் தேசியவாதத்தின் கூர்முனையை மழுங்கடிக்கும் விதமாகச் செயற்பட்டால் மகிழ்ச்சி. எதிரெதிர்த் தேசியவாதங்களின் உராய்வு முடிவுறுத்தப்படுவதற்கான காலம் கனிந்துள்ளது. புதிய யுகம் ஒன்று பிறக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால், அது ஒன்றை ஒன்று மறைப்பதாக இல்லாமல் ஒன்றை ஒன்று மதிப்பதாகவும் எல்லாவற்றையும் சமநிலைப்படுத்துவதாகவும் சமநிலை கொள்வதாகவும் இருக்க வேண்டும். தமிழ்த்தேசிய அரசியல் பலவீனப்பட்டுள்ளது. முஸ்லிம் அரசியல் சரிவுக்குள்ளாகியள்ளது என வரலாற்றுக் கணக்குப் பார்க்க முற்பட்டால், அதனுடைய விளைவுகள் வரலாற்றுத் தவறுகளாக மட்டுமல்ல, நாட்டின் தவறாகவும் ஆகி விடும். நாட்டின் தவறு என்பது ஆட்சியின் தவறுதான். https://arangamnews.com/?p=11350
  10. அரசியலில் இதெல்லாம் சகஜமில்லை – நிலாந்தன். adminOctober 20, 2024 வியட்நாமின் தந்தை என்று அழைக்கப்படும் கோசிமினின் வாக்கியம் ஒன்று உண்டு”மக்களிடம் செல்லுங்கள். மக்களுக்கு உண்மையைச் சொல்லுங்கள். மக்கள் உங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தருவார்கள்” என்று. மக்களுக்கு உண்மையைச் சொல்வதற்கு தமிழ் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் தயார்? கடந்த பல தசாப்தங்களில் தமிழ்கட்சிகளும் கட்சிகளின் தலைவர்களும் தமிழ்மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன?தமிழ்த்தேசியக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்ட விடயங்களில் எத்தனை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன? அவை ஏன் நிறைவேற்றப்படவில்லை? எல்லாப் பழியையும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் மீது சுமத்திவிட்டு தமிழ் தலைவர்கள் தங்கள் தோல்விகளுக்குப் பொறுப்புக்கூறாமல் தப்பி வந்திருக்கிறார்களா? தங்களால் முடியாமல்போன விடயங்களுக்காக யாராவது தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்களா? கடந்த பல தசாப்த காலமாக தமிழ் அரசியலில் பொறுப்பு கூறாமை என்பது ஒரு பண்பாடாக வளர்ந்து விட்டது. தலைமைத்துவம் என்பது வெற்றிக்கும் தோல்விக்கும் பொறுப்புக்கூறுவது. நல்லதுக்கும் கெட்டதுக்கும் பொறுப்புக் கூறுவது.வரவுக்கும் செலவுக்கும் பொறுப்புக் கூறுவது. ஆனால் தமிழ் அரசியலில் எத்தனை பேர் அவ்வாறு பொறுப்பு கூறியிருக்கிறார்கள்? தமது தேர்தல் அறிக்கைகளுக்கு எத்தனை பேர் பொறுப்புக் கூறியிருக்கிறார்கள்? இந்த விடயத்தில் ஆயுதப் போராட்டத்தை தனியாக ஆராய வேண்டும். ஆனால் ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரும் பின்னருமான மிதவாத அரசியலை தொகுத்துப் பார்த்தால் எத்தனை தலைவர்கள் தமது தோல்விகளுக்கு பொறுப்பு கூறியிருக்கிறார்கள்? உள்ளதில் பெரியதும் மூத்ததும் ஆகிய கட்சி தமிழரசுக் கட்சி. அதற்கு ஆங்கிலத்தில் பெடரல் பார்ட்டி என்றும் பெயர் உண்டு. கடந்த 74 ஆண்டுகளாக, தனது பெயரில் உள்ள பெடரலை அதாவது சமஸ்டியை ஏன் அடைய முடியவில்லை என்பதற்கு அந்தக் கட்சி தன் மக்களுக்கு எப்போதாவது பொறுப்புக் கூறியிருக்கிறதா? தன் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத செல்வநாயகம், அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்காமல், மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னாரா? 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றியது தமிழர் விடுதலைக் கூட்டணி. சில ஆண்டுகளிலேயே, 81ஆம்ஆண்டு மாவட்ட அபிவிருத்திசபைத் தேர்தல்களை நோக்கிச் சரணடைந்தது. அதற்கு அவர்கள் பொறுப்புக் கூறினார்களா? மன்னிப்பு கேட்டார்களா? நவீன தமிழ் அரசியல் வரலாற்றில் தமிழ்மக்கள் ஆகக்கூடிய நாடாளுமன்ற ஆசனங்களை பெற்றிருந்த காலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தேர்தல் கேட்ட காலகட்டம் தான். 22 ஆசனங்கள் கிடைத்தன. ஆனால் இலங்கைத்தீவின் அரசியல் வரலாற்றில் தமிழ் பிரதிநிதித்துவம் உச்சமாக இருந்த அக்காலகட்டத்தில்தான், 2009ஆம் ஆண்டின் முற்பகுதியில், மிகக்குறுகிய காலகட்டத்திற்குள் அதிக தொகை மக்கள் இனஅழிப்பு செய்யப்பட்டார்கள். அதாவது ஆகக்கூடுதலான ஆசனங்களை தமிழர்கள் பெற்றிருந்த ஒரு காலகட்டத்தில்தான், அதிக தொகை தமிழ்மக்கள் இனஅழிப்பு செய்யப்பட்டார்கள். 22 ஆசனங்களினாலும் அந்த இனஅழிப்பை தடுக்க முடியவில்லை. அது கூட்டமைப்பின் தோல்வியும்தான். அதற்கு கூட்டமைப்பு பொறுப்புக் கூறியதா? 2009க்குப்பின் கடந்த 15ஆண்டுகளிலும் தமிழ் கட்சிகள் தமது தேர்தல் அறிக்கைகளில் வெவ்வேறு வகைப்பட்ட வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றன. இவற்றில் இத்தனை நிறைவேற்றப்பட்டன? நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளுக்கு எந்தக் கட்சியாவது பொறுப்புக்கூறியதா? அவற்றை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டதா? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது, தேசத்தைக் கட்டியெழுப்பும் வழியில் எதுவரை முன்னேறியுள்ளது? பரிகார நீதியை நோக்கி எதுவரை முன்னேறியுள்ளது?என்று தமிழ் மக்களுக்கு விளக்கம் கொடுக்குமா? இன அழிப்புக்கு எதிராக இலங்கை அரசைப் பொறுப்புக்கூற வைக்கும் விடயத்தில் ஏனைய கட்சிகளைவிட தான் நேர்மையாகவும் துணிச்சலாகவும் உண்மையாகவும் நடப்பதாகக் கூறும் முன்னணி, அந்த விடயத்தில் கடந்த 15 ஆண்டுகளில் எதுவரை முன்னேறியிருக்கிறது என்பதனை தமிழ் மக்களுக்கு எடுத்து கூறுமா? தன்னுடைய சமரசத்துக்கு இடமற்ற வெளியுறவுக் கொள்கை காரணமாக கடந்த 15 ஆண்டுகளில் தான் பெற்றுக்கொண்ட வெற்றிகளைக் குறித்து அக்கட்சி தமிழ் மக்களுக்கு உண்மை நிலவரத்தை எடுத்துக் கூறுமா? எல்லாருமே தமிழ் மக்களின் மறதியின் மீதே தமது தேர்தல் வெற்றிகளை முதலீடு செய்கிறார்களா? ஆம் கடந்த 15 ஆண்டுகளாக மட்டுமல்ல, அதற்கு முன்னரும் பொறுப்புக்கு கூறாமை என்பது தமிழ் அரசியலில் ஒரு பண்பாடாகவே வளர்ந்துவிட்டது. தமிழ்க்கட்சித் தலைவர்களில் பலர் தமது தவறுகளுக்கும் தோல்விகளுக்கும் இயலாமைகளுக்கும் மன்னிப்புக் கேட்டதில்லை. அதாவது பொறுப்பு கூறியதில்லை. ஆனால் கடந்த வாரம் தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் ஊடகங்கள் முன்னிலையில் மக்களுக்கு உண்மையை கூறினார்கள்; பொறுப்புக் கூறினார்கள். தமிழ்மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பு ஏப்ரல் மாத கடைசியில் உருவாகியது. அது பின்னர் கட்சிகளோடு இணைந்து ஒரு பொதுக்கூட்டமைப்பை உருவாக்கியது. அப்பொது கட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை முன் நிறுத்தியது. பொது வேட்பாளர் தமிழரசியலில் ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்ற ஒருவராக மேலெழுந்தார். அரசற்ற சிறிய இனம் ஒன்று அரசாங்கம் அறிவிக்கும் ஒரு தேர்தலை எப்படி வித்தியாசமாக படைப்புத் திறனோடு, விவேகமாக,கையாள முடியும் என்பதற்கு பொது வேட்பாளர் ஒரு முன்னுதாரணம். அரசற்ற மக்கள், அரசாங்கம் அறிவிக்கும் ஒரு தேர்தலை எப்படி வெற்றிகரமாகக் கையாண்டு தமது கூட்டு விருப்பத்தை வெளிப்படுத்தலாம் என்பதற்கும் அது ஒரு முன்னுதாரணம். ஆனால் அந்த வெற்றியைக் கொண்டாட முடியாத அளவுக்கு சில நாட்களிலேயே நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழ்மக்கள் பொதுச்சபை தேர்தலில் பங்குபற்றுவதில்லை என்று முடிவெடுத்தது. அதனால் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகித்த இரண்டு கட்சிகள் கட்டமைப்பிலிருந்து விலகின. விளைவாக பொதுக் கட்டமைப்பு செயலிழந்தது. தமிழ்மக்கள் பொதுச்சபையானது தொடர்ந்து பொதுக் கட்டமைப்பாக தேர்தலை எதிர்கொண்டிருக்க வேண்டும் என்ற விருப்பம் சங்குக்கு வாக்களித்த மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகின்றது. ஒரு வெற்றியை காட்டிய பொதுகட்டமைப்பு அடுத்த தேர்தலில் தங்களுக்கு வழிகாட்டத் தவறிவிட்டது என்று அவர்கள் குற்றம் சாட்டினார்கள். தமிழ்மக்கள் பொதுச்சபைக்குள்ளும் இது தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. நாடாளுமன்றத் தேர்தலைக் கையாள வேண்டும் என்று ஒரு தரப்புக் கூறியது.ஆனால் தேர்தல்களை தொடர்ச்சியாக கையாள்வது ஒரு மக்கள் அமைப்பின் வேலை அல்ல என்று மற்றொரு தரப்புக் கூறியது.ஜனாதிபதித் தேர்தலை தேசத்தை திரட்டுவதற்கான ஒரு களமாக பயன்படுத்துவதே தமிழ் மக்கள் பொதுச் சபையின் இலக்காக இருந்தது.அதில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியும் பெற்றது.ஜனாதிபதித் தேர்தலுக்கான களநிலவரம் அத்தகையது.ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் அத்தகையது அல்ல. அங்கே கட்சிகளும் சுயேச்சைகளும் விருப்பு வாக்குகளும் வாக்காளர்களை சிதறடிக்கும்.அதாவது தேசத்தைச் சிதறடிக்கும். எனவே தேசத்தைச் சிதறடிக்கும் ஒரு தேர்தல் களத்தில் தாமும் இறங்கி மக்களைச் சிதறடிக்க முடியாது என்று பொதுச் சபைக்குள் ஒரு பிரிவு வாதிட்டது. மக்கள் அமைப்பில் காணப்படும் கடற் தொழிலாளர் சங்கங்களும் விவசாய அமைப்புகளும் பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்புகளும் நாடாளுமன்றத் தேர்தலைக் கையாள வேண்டும் என்று கேட்டன.பொதுச்சபை குறைந்தபட்சம் சுயேச்சையாகவாவது இறங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.ஆனால் தேசத்தைக் கட்டி எழுப்புவது என்பது தேர்தல்களால் மட்டும் செய்யக்கூடிய ஒன்று அல்ல.ஆகக்கூடிய பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில்தான் ஆகப்பெரிய இனஅழிப்பு இடம்பெற்றது.எனவே தேசத்தைக் கட்டியெழுப்புவது என்பது தேர்தல்களுக்கும் அப்பால் பரந்தகன்ற தளத்தில் பல்வேறு கட்டமைப்புகளுக்கூடாக செய்யப்பட வேண்டும் என்று பொதுச் சபைக்குள் ஒரு பிரிவு வாதிட்டது. முடிவில் பொதுச்சபை தேர்தலில் பங்கெடுக்கவில்லை.அதனால் பொதுக் கட்டமைப்பும் செயலிழந்து போனது.பொதுச்சபை தேரைக் கொண்டுவந்து தெருவில் விட்டுவிட்டது என்று குற்றம் சாட்டப்பட்டது. அது தவறு. ஜனாதிபதித் தேர்தல் என்ற தேரை இழுத்த தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பு அந்த தேரை தேர் முட்டிக்குள்தான் கொண்டு வந்து நிறுத்தியது. எனவே தேர் தெருவில் நிற்கிறது என்ற வாதம் சரியல்ல.மாறாக தொடர்ந்து தேர்தல் திருவிழாக்களை எதிர்கொள்ள தமிழ்மக்கள் பொதுச்சபை தயாரில்லை என்பதுதான் உரிய விளக்கம் ஆகும். இதுதொடர்பான இருதரப்பு விவாதங்களிலும் ஆழமான ஓர் உண்மை உண்டு. ஜனாதிபதி தேர்தலை தமிழ்மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பு ஒரு தேர்தலாக அணுகவில்லை.அதற்குரிய அரசறிவியல் விளக்கத்தை அது கொண்டிருந்தது. ஆனால் அந்த விளக்கம் வாக்களித்த மக்களை முழுமையாக சென்றடையவில்லை. தமிழ்த் தேசிய வாக்காளர்கள் ஜனாதிபதி தேர்தலை ஒரு தேர்தலாகத்தான் பார்த்தார்கள்.பெரும்பாலானவர்கள் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கும் பொழுது தமிழ் வாக்கு தமிழருக்கு என்றுதான் சிந்தித்தார்கள். மாறாக தேர்தலை ஒரு தேர்தலாக கையாளாத களம் அது என்பது பெரும்பாலான வாக்காளர்களுக்கு விளங்கியிருக்கவில்லை.50 நாட்களுக்குள் அந்த விளக்கத்தைக் கொடுக்கக்கூடிய சக்தி தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் பொதுக் கட்டமைப்புக்கும் இருக்கவில்லை.எனவே வாக்காளர் மனோநிலை என்பது தொடர்ந்து தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டும்;கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு காணப்பட்டது. அதற்குக் காரணம் கட்சிகள்தான்.மக்கள் ஒரு தலைமைத்துவ வெற்றிடத்தை உணர்கிறார்கள்.ஏதாவது ஒரு கூட்டு அல்லது யாராவது தலைவர்கள் வந்து தங்களுக்கு ஒரு புதிய வழியைக் காட்ட மாட்டார்களா என்று ஏக்கத்தோடு எதிர்பார்த்திருக்கிறார்கள்.அதனால்தான் கலகக்காரனாக மேலெழுந்த ஒரு மருத்துவரை ஒருபகுதி மக்கள் ஆர்வத்தோடு பார்த்தார்கள்.அதனால்தான் ஜேவிபியின் எழுச்சியை ஒருபகுதி மக்கள் ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். அதனால்தான் தமிழ்த்தேசியப் பொதுக்கட்டமைப்பும் தமிழ்மக்கள் பொதுச்சபையும் தொடர்ந்து தேர்தல்களில் ஈடுபட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களுடைய அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் போனமைக்கு மக்கள் அமைப்பு மன்னிப்பு கேட்டது.அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு ஊடகச் சந்திப்பில் மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் அது தொடர்பாக விளக்கம் அளித்தார்கள். இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டதுபோல அவர்கள் மக்களுக்கு உண்மையைக் கூறினார்கள்.பொது வாழ்வில் மக்களுக்கு உண்மையை கூறுவது மகிமையானது. அதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அதற்கு ஒரு வாழ்க்கை முறை வேண்டும். பொது வாழ்வில் ஈடுபடும் பெரும்பாலான பிரமுகர்கள் மக்களுக்குப் பொறுப்பு கூறுவதில்லை.தனது செயல்களுக்குப் பொறுப்புக்கூறும் துணிச்சல் மக்கள் அமைப்பிடம் உண்டு என்பதனால் அது நாடாளுமன்றத் தேர்தலைக் கையாளாமல் விட்டதற்கு மன்னிப்புக் கேட்டது. தேர்தலைக் கையாளாமல் விட்டதற்கு அரசறிவியல் விளக்கம் உண்டு.அதே சமயம் சங்குக்கு வாக்களித்த மக்களின் கூட்டுணர்வு வேறாக உள்ளது. மக்கள் மீண்டும் மீண்டும் கட்சிகளை ஒருங்கிணைத்து வாக்குகள் சிதறுவதைத் தடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.அந்த எதிர்பார்ப்பை தொடர்ச்சியாக நிறைவேற்ற முடியாமைக்கு மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மன்னிப்பு கேட்டார்கள். மக்களைச் சிதறடித்தது கட்சிகள்தான்.அதற்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியதும் கட்சிகள்தான்.மக்களை ஆகக்குறைந்தபட்சம் ஒன்றுதிரட்டிய மக்கள்அமைப்பு அதைத்தொடர்ந்து எல்லாத் தேர்தல்களிலும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் வாக்காளர்களின் கூட்டுஉணர்வை மதித்து பொறுப்பு கூறியது. அதை கட்சிகள் பின்பற்றுமா? சுயேட்சைகள் பின்பற்றுமா? கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமது மக்களுக்கு உண்மையை கூறாதவர்கள், பொய்யான வாக்குறுதிகளை வழங்கியவர்கள்,தாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியவர்கள் அனைவரும் தமிழ்மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும். பிரதான அரசியல்வாதிகளின் அணிகலன்களாக காணப்படும் இரண்டாம் மூன்றாம் நிலை அரசியல்வாதிகள் அநேகர் மீது ஊருக்குள் குற்றச்சாட்டுகள் உண்டு.பாலியல் குற்றச்சாட்டுக்கள்,ரகசிய டீல்கள் போன்ற பல குற்றச்சாட்டுக்கள் உண்டு.தமது அணிகலன்களாக காணப்படும் இரண்டாம் மூன்றாம் நிலை முக்கியஸ்தர்கள் தொடர்பிலும் தமிழ் அரசியல்வாதிகள் மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டும்.”அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” என்பது தமிழ் படத்தில் வரும் கொமெடி வாக்கியமாக இருக்கலாம். ஆனால் தேசத்தை நிர்மாணிக்கும் அரசியலில் அது பகிடி அல்ல.பொறுப்புக்கூற வேண்டிய விடயம்.தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புக் கூறுவார்களா? https://www.nillanthan.com/6939/
  11. அலைகளின் நடுவே sudumanal இலங்கை அரசியல் ஜீன் சீக்லர் (Jean Ziegler) அவர்கள் சுவிஸ் இல் ஓர் அறியப்பட்ட இடதுசாரியாவார். பிடல் கஸ்ரோ மரணித்தபோது சுவிஸ் வானொலி அவருடன் ஒரு நேர்காணல் நடத்தியது. அதில் “பிடல் இறந்துவிட்டார். இந்த உலகின் கடைசி புரட்சியாளர் பிடல் என சொல்லலாமா” என கேட்கப்பட்டது. “புரட்சியாளர்கள் ஒவ்வொரு 5 வருடத்துக்கும் பிறப்பதில்லை. பல ஆண்டுகள், சிலவேளை நூற்றாண்டுகள் கூட ஆகலாம்” என்றார். பிடல் கடைசி புரட்சியாளராக இருக்க முடியாது என்றார். அவர் சொன்ன அந்த 5 வருடம் என்பது தேர்தலில் புரட்சியாளர்கள் பிறப்பதில்லை என்பதை சுட்டிக் காட்டவே ஆகும். 2019 இல் 3 வீத வாக்குகளை பெற்ற ஜேவிபியின் தலைவர் அநுர 2024 இல் 42 வீத வாக்குளை எடுத்து ஜனாதிபதியாக வருகிறார். இந்த 5 வருடத்தில் அரசியலில் ஜேவிபியோ அநுரவோ அப்படி என்னத்தைத்தான் புரட்டிப் போட்டார்கள், இந்த அலையை உருவாக்க என்றால் பதில் ஏதுமில்லை. 2022 இல் நடந்த அரகலய போராட்டத்தின் காலப்புரட்சியை ஒரு அமைப்பு வடிவம் பெற்றிருந்த ஜேவிபி தன்வசமாக்கியததான் நடந்தது. இந்த அரகலய போராட்டத்தை முன்னின்று நடத்திய சமவுரிமைக் கட்சியும் வெவ்வேறான இடதுசாரிய சிந்தனைக் குழுக்களும் உதிரிகளும் இந்த அமைப்பு வடிவத்தை கொண்டிராததால் அரகலயவில் பங்குபற்றிய ஜேவிபி இந்த தன்வயமாக்கலை நடத்தியது. அதன் வெற்றிதான் அநுரவின் வெற்றி. எனவே அநுர வென்றார் என்பதைவிட, அநுரவை அரகலய ஒரு முன்பாய்ச்சலான வரலாற்றுக் கட்டத்தில் தலைவராக நிறுத்தியிருக்கிறது என்பதே பொருத்தமாக இருக்கும். அரகலய எதிர்த்துப் போராடிய ஊழல் அமைப்புமுறைக்கும் இனவாதத்துக்கும் இடமளிக்க அனுமதிக்கப்படாத வரலாற்றுக் கட்டம்தான் அது. இந்த வரலாற்று நிலைமையை உருவாக்கியது நாட்டை திவாலாக்கிய பொருளாதார நெருக்கடிதான். இந்தக் காரணிகளின் ஒட்டுமொத்தக் குரலாக “முறைமை மாற்றம்” system change என்பதை அரகலய தனது முழக்கமாக முன்வைத்தது. என்பிபி யின் தேர்தல் பிரச்சாரம் இவற்றை மையங்கொண்டிருந்தது, இருக்கிறது, இருக்கிறது. இதே ஊழல் அரசாங்கத்தில் பாராளுமன்றத்திலும் குறுகியகால அமைச்சர் பதவியிலும் பங்குகொண்டவர்கள் ஜேவிபியினர். போரில் பங்குகொண்டவர்கள் அல்லது போரை ஆதரித்தவர்கள். நாட்டுக்குள் இனவழிப்பைச் செய்து வெற்றிகொண்ட போரை பாற்சோறு காய்ச்சி கொண்டாடியவர்களில் இவர்களும் அடக்கம். இந்தப் போர் அதிகாரவர்க்கம் கட்டற்ற ஊழலை செய்யவும் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யவும் பொருளாதார வீழ்ச்சியை துரிதமாக்கவும் இனவாத சிந்தனையை கூர்மைப்படுத்தவும் செய்தது. இவையெல்லாம் நாட்டை பேரழிவுக்குத் தள்ளியது என இப்போ சொல்ல முடிகிற நிலையை அவர்கள் (JVP) அன்று எதிர்த்து நின்று காட்டியவர்கள் அல்ல. அதை அரகலயதான் காட்டியது. எனவேதான் இந்த அரசாங்கத்தை அரகலய ஒரு வரலாற்றுக் கட்டத்தில் நிறுத்தியிருக்கிறது என்கிறேன். இன்று அவர்கள் சொல்லுகிற மாற்றம் என்பதை நிகழ்த்த பாராளுமன்றத்திலும் பெரும்பான்மை ஆசனங்களை அவர்கள் பெற வேண்டும் என்பது தர்க்க நியாயமான ஒன்று. அவர்கள் பெறுவார்கள் என்பது என் கணிப்பு. சிறுபான்மை இனங்கள் 2019 இல் ஜேவிபி க்கு அளித்த வாக்குகளை விட பலமடங்கு அதிகமாக அநுராவுக்கு கொடுத்தார்கள் என்பது புள்ளிவிபரம் காட்டும் விடயம். அதை அநுரவே சொல்லியுமிருக்கிறார். எந்த மாகாணங்களில் எந்தக் கட்சி கூடுதலான வாக்குகளைப் பெற்றது என்ற பருமட்டான வர்ண அடையாளமிட்ட வரைபடத்தை வைத்துக் கொண்டு சிங்கள மக்கள் மாற்றத்துக்குத் தயாராகிவிட்டனர். சிறுபான்மை இனங்கள் மாற்றத்தை விரும்பவில்லை என முடிவுக்கு வருவது பருண்மையானது. தவறானது. மாற்றத்தை விரும்பாத சாமான்ய அல்லது விளிம்புநிலை மனிதரை எங்காவது காண முடியுமா என்ன. மாற்றத்துக்காக அரகலயவை நடத்தியவர்களில் குமார் குணரட்ணம் தலைமை தாங்கும் சமவுரிமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜேவிபியிலிருந்து தள்ளி நிற்பதையும் இன்னொரு பகுதியினர் நுவான் போகபே அவர்களை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தி வாக்களித்தார்கள் என்பதையும்கூட வசதியாக மறந்து அல்லது மறைத்து எழுதும் ஆய்வுக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும். அவர்களும் மாற்றத்தை விரும்பாதவர்களா என்ன. அதிகாரத்தை சுகிப்பவர்களும் ஊழலில் திளைப்பவர்களும் என வாழ்க்கை நடத்தும் அதிகார சக்திகள் -அவர்கள் எந்த இன, மத, மொழியைச் சேர்ந்தவர்களாயினும்- மட்டுமே மாற்றத்தை விரும்பாதவர்களாக, அதை எதிர்ப்பவர்களாக இருப்பர் என்ற வர்க்க குணாம்சத்தைக்கூட புரியாமல் ஆய்பவர்களுக்கு வரப்போகும் பாராளுமன்றத் தேர்தல் முகத்திலறைந்து ஒரு செய்தியைச் சொல்லத்தான் போகிறது. சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பெற சிறுபான்மையின கட்சிகளே நாங்கள் அநுரவின் “மாற்றம்” க்கு ஆதரவாக இருப்போம் என வாக்குக் கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது சிறுபான்மையின மக்களின் வாக்குகள் என்பிபி க்கு திரும்பத் தொடங்கியிருக்கிறதின் அறிகுறி. அப்படி அவர்கள் பெரும்பான்மையாக என்பிபி க்கு வாக்களிக்கிற நிலை வருகிறபோது, ‘திருந்திவிட்டார்கள்’ என்ற ஒற்றைச் சுட்டலானது -சாத்தியப்பாடுகளை முன்வைத்து எழுதவேண்டிய ஆய்வுகளுக்கு ஈடாக- எந்த அரசியல் அர்த்தத்தையும் வழங்காது. மாற்றம் என்பது மாறிவிடலை மட்டும் குறிப்பதில்லை. மாற்றத்தை நோக்கிய வளர்ச்சியையும் குறிப்பது. சிறுபான்மை இனங்கள் மத்தியில் ஜேவிபி க்கான அந்த வாக்கு வளர்ச்சியை புறக்கணித்து மாற்றத்தை விரும்பாதவர்கள் என முத்திரை குத்துவது ஒருவகை அறிவுச் சோம்பேறித்தனம் மிக்கது. தமிழ் மக்களின் வரலாறு குறிப்பாக 30 வருட போர் என்பது அழிவுகளின் வரலாறு. அது ஏற்படுத்திய தாக்கத்தை, தனித்த தேசியக் கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மீதான தயக்கத்தை புறக்கணித்து, ஆதரவு-எதிர்ப்பு என்ற இருமை சிந்தனையோடு அணுக முடியாது. இந்த தயக்கத்தினதும் தாக்கத்தினதும் உளவியல் எல்லா தமிழ்க் கட்சிகளினதும் வாக்குவங்கியை வங்குரோத்தாக விடாமல் வைத்திருக்கிறது. உருப்படியாக எதையுமே செய்யாமல் தமிழ்த் தேசியம் என்ற மந்திரத்தை ஓதி ஓதியே அரசியல் நடத்த அது வசதியாகவும் போய்விட்டது. அது தனியான ஒரு விடயதானம். இப்போ அதிக பெரும்பான்மையை என்.பி.பி எடுக்கிற பட்சத்தில், அது மாற்றத்தை நிகழ்த்துகிற படிமுறைகளில் முன்னேற வேண்டும். ஏனெனில் மக்கள் ஆணை வாக்குகளினால் கொடுக்கப்பட்டுவிடும். அதை அவர்கள் நிகழ்த்துவதில் அரச (state) வடிவக் கட்டமைப்பு எந்தத் தூரம் வரை அரசாங்கத்துடன் (government) பயணிக்கும் என்ற கேள்வி புறக்கணிக்க முடியாதது. 340 கோடி ஊழல் செய்த அர்ஜுன் அலோசியஸ் க்கு (மென்டிஸ் நிறுவனம்) வரி ஏய்ப்புக்காக அரச(state) கட்டுமானத்திற்கள் இயங்கும்- நீதிமன்றம் ஆறே ஆறு மாத கால சிறைத்தண்டனையை வழங்கியிருக்கிறது. இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பதுபோல் புதிய அரசாங்கத்தைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது. ஊழல் செய்வதற்கு எதிரான மனநிலையை அல்லது அச்சத்தை வழங்குவதற்குப் பதிலாக ஊழல் செய்வதற்கு தயங்காத ஒரு மனநிலையை இந்தத் தீர்ப்பு வழங்கக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது. பௌத்த மேலாதிக்க பெரும்பான்மைவாதத்தை அடித்தளமாகக் கொண்ட அரச கட்டமைப்பின் கருத்தியல் அகற்றப்படும் வரை “முறைமை மாற்றம்” என்பது ஒரு ஏமாற்று. சமத்துவம் என்பது ஒரு ஏமாற்று. எனவே அரசாங்கம் ஒரு சமூகநல அரசு என்ற வடிவத்தை நிர்மாணிப்பது முடியுமானதாகலாம். நிர்வாகத்துள் மாற்றம், செயற்திறன், ஊழலின்மை போன்றவற்றை அது சாதிக்கலாம். ஓர் அதிகாரப் பரவலாக்கல் முறைமையை பரீட்சிக்கலாம். முக்கியமாக பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை செயற்படுத்துவதில் அதிக கரிசனம் செலுத்தலாம். நடைமுறையில் வீரியமாக செயற்படலாம். முறைமை மாற்றம் என்பது அரகலயவின் முழக்கம். அதைச் சொல்லியே பாராளுமன்றத் தேர்தலிலும் வென்றபின், எல்லா புழுதிகளும் அடங்கியபின், வரலாறு என்பிபி யை கொணர்ந்து விட்டிருக்கிற இடத்திலிருந்து முன்னோக்கி பயணித்தாலே இந்த முழக்கத்தை தம்மோடு வைத்திருக்க முடியும். இது நடவாதபோது அல்லது முடியாதபோது அந்த தேக்கத்தை வரலாறு உடைக்கவே செய்யும். அந்த முழக்கம் திரும்பவும் மக்களிடமே வந்து சேரும். அரசு கட்டமைப்பையும் அதன் வன்முறை இயந்திரமான இராணுவத்தையும் திருப்திசெய்ய வேண்டிய நிலையின் அறிகுறி ஏற்கனவே தென்பட்ட ஒன்று. போர்க்குற்றத்தை உள்ளக விசாரணை செய்து உண்மையை கண்டறியலாம். ஆனால் சம்பந்தப்பட்ட இராணுவத்தினரை தண்டிக்க மாட்டோம் என்பதை அநுர தெளிவாகவே சொல்லிவிட்டார். ஈஸ்ரர் படுகொலையின் சூத்திரதாரிகள் அரசியல்வாதிகள் என்பதைத் தாண்டி இராணுவ உளவுப்படையினரும் சம்பந்தப்பட்டதாகவோ அல்லது வெளிச் சதியாகவோ சிக்கல் அவிழுமாக இருந்தால் என்ன நடக்கும். இயலாமைகள் அல்லது மாற்றத்திற்குக் குறுக்கே எழும் தடைகளை தாண்ட முடியாத நிலையில் என்ன நிகழும். அதிகாரம் பண்புமாற்றத்தை என்பிபி அரசாங்கத்திடம் ஏற்படுத்திவிடக் கூடுமா, இன்னொரு அரகலய மேலெழும்புமா? அப்படி ஏற்படும் பட்சத்தில் அதை அரச அதிகார நிலையில் நின்று என்பிபி எப்படி கையாளும் என பல கேள்விகளுக்கான விடையை எதிர்காலம்தான் வைத்திருக்கிறது. இந்த 70 வருடகால அரசியல் பாரம்பரியத்துக்கு வெளியே, அரகலய மக்கள் போராட்டம் முன்வைத்த மாற்றம் என்ற புதிய எழுச்சி ஏற்படுத்திய புது நம்பிக்கையை என்பிபி சுமந்து நிற்கிறது. இதில் ஏமாற்றம் நிகழுமாயின் அதன் தாக்கம் மக்களின் உளவியலில் பலமானதாகவே இருக்கும். என்பிபி இதில் வெற்றிபெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது. நமதும்! பிரதமர் ஹரிணி அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்குவது என்பதைவிட அது அவர்களின் உரிமை என்று சொல்வதே சரியானது என்று தெளிவாக சொன்ன சொற்கள் முளைவிட்டு நிமிர்வதற்குமுன், என்பிபி யின் பொதுச்செயலாளர் சில்வா அவர்கள் “வடக்குக்கு 13ம் சட்டத் திருத்தமும் தேவையில்லை. அதிகாரப் பகிர்வும் தேவையில்லை. பொருளாதார வளர்ச்சியே தேவை” என சொன்னதாக செய்திகள் வந்திருக்கின்றன. அதிகாரப் பகிர்வு என்பது ஜனநாயக முறைமையின் ஒரு செழுமையான அம்சம் என்பதற்கு சுவிற்சர்லாந்து ஓர் அசல் உதாரணம். அது ஒருபுறம் இருக்க, எல்லா முரண்பாடுகளையும் பொருளாதார பிரச்சினைக்குள் உட்படுத்துவதை மார்க்சிய வழித்தோன்றல்களாக தம்மை காட்டிக் கொண்ட ஜேவிபி கூறுவதை ஏற்க முடியவில்லை. இலங்கையை இந்த நிலைமைக்குள் தள்ளிய இனப் பிரச்சினையின் தனித்தன்மையை மற்றைய பிரச்சினைகளுடன் ஒரே சிமிளினுள் அடைத்து முன்பு வர்க்கப் பிரச்சினை மட்டும்தான் என்றார்கள். இப்போ பொருளாதாரப் பிரச்சினை மட்டும்தான் என்கிறார்கள். பொருளாதார நெருக்கடி முதன்மை முரண்பாடாக தோன்றி இனவாதத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளியிருக்கிறதே யொழிய நீண்ட வரலாறும், செயற்பாடும், பொது உளவியலும் கொண்ட இனவாதத்தை ஒரு தேர்தலால் அடித்து வீழ்த்த முடியும் என்பது 5 வருடங்களுக்கு ஒருமுறை புரட்சியாளர் தோன்றுவர் என எதிர்பார்ப்பதற்கு ஒப்பானது. * 19102024 ravindran pa https://sudumanal.com/2024/10/19/அலைகளின்-நடுவே/#more-6566
  12. இராஜபக்சக்களின் பின்வாங்கலும் ரில்வின் சில்வாவின் நேர்காணலும் ஐ.நாவின் அபிவிருத்திக்குழுவின் வருகையோடு தேர்தல் திருவிழா சூடு பிடித்துள்ளது. இந்த ஜனநாயகச் சடங்கில் வசைபாடலும், குழிபறித்தலும், அணி சேர்தலும், கோட்பாட்டு மோதலும் முதன்மை பெறுவதைக் காண்கிறோம். தமிழ்த் தேசியத்தை காப்பாற்ற வேண்டுமென்கிற முழக்கம் சகல மேடைகளிலும் எதிரொலிக்கிறது. ஒட்டாத குழுக்கள் அனைத்தும் தேச விடுதலை பற்றி பேசாமல். தேர்தலில் எத்தனை ஆசனங்களை கைப்பற்றுவது என்கின்ற இலட்சியத்தோடு இயங்குகின்றன. தற்போதைய சூழலில் தேர்தல் வெற்றிக் கணக்குகள், விருப்புவாக்கு தெரிவுகள் குறித்தே பரவலாக ஆராயப்படுகிறது. தமிழர் தாயக கணிப்புகள் பல, வன்னி மாவட்டத்தில் செல்வமும் ,காதர் மஸ்தானும் வெற்றி பெறுவார்கள் என கட்டியம் கூறுகின்றன. ஏனைய மாவட்டங்களில் எவரையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாதென்கிறார்கள். மலையகத்தில் அனுஷா சந்திரசேகரன் , வடிவேல் சுரேஷ் , ஜீவன் தொண்டைமான் மற்றும் திகாம்பரம் ஆகியோர் முன்னிலையில் இருப்பதாகத் தெரியவருகிறது. வடக்கு -கிழக்கு தமிழர் தாயகத்தைப் பொறுத்தவரை திருக்கோணமலையிலும் அம்பாறையிலும் 'மோதல் தவிர்ப்பு' உடன்பாடு காணப்பட்டு தமிழரசுக் கட்சி போட்டியிடுகிறது. சங்கின் உறுப்பினர்களும் திருக்கோணமலை வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திராவும் திசைகாட்டிச் சின்னத்தில் இறங்குவதால் போட்டி பலமான இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரண்டு உணர்திறன் மிக்க இடங்களின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற முன்னிற்கும் தமிழ்த் தேசியவாதிகள், ஏனைய மாவட்டங்களில் ஏன் ஒன்றிணையவில்லை என்கிற ஆதங்கம் மக்களிடம் உண்டு. இனி தமிழர் தாயக அரசியலுக்கும் தென்னிலங்கை அரசியலுக்குமான மோதல்கள் ,முரண்பாடுகள் குறித்து பார்ப்போம். இளையோர் பார்வையானது அநுராவின் ' தேசிய மக்கள் சக்தியின் மீது குவிவதை தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் எச்சரிக்கை உணர்வோடு அவதானிக்கின்றன. இதன் எதிர்வினை அரசியலாக, 'வடக்கு கிழக்கு ஊழல் அரசியல்வாதிகளை அநுராவால் அம்பலப்படுத்த முடியுமா?' என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ' 'மதுபானசாலை அனுமதிப்பத்திர பட்டியலை (பார் லைஸென்ஸ்) அநுர வெளியிடுவாரா ? ' என்று சுமந்திரனும் கூறத் தொடங்கியுள்ளனர். உண்மையிலேயே சகல மட்ட ஊழல்களையும் அநுர அரசு அம்பலப்படுத்த வேண்டுமென்பதே மக்களின் பெருவிருப்பாகும். 2015 இல் உருவாக்கப்பட்ட 'நல்லாட்சி' அரசின் மத்திய வங்கி கடன் முறி ஊழல் பற்றிய விசாரணைகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெறுமதி சேர் வரி (வாட் வரி)3.5 பில்லியன் ரூபாவை செலுத்தாத மூவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். 'நுணலும் தன் வாயால் கெடும்' என்பதைப் போல, அநுர அரசிற்கு சவால் விடுத்த உதய கம்மன்பிலவிடமே , அதற்கான ஆதாரங்களை வெளியிடச் சொல்லி விஜித ஹெரத் எச்சரித்துள்ளார். திங்களன்று வருமென்கிறார் கம்மன்பில. பார்ப்போம் . இராஜபக்சக்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்தாலும், அக்குழுவின் இணை அனுசரணையாளர்களான கம்மன்பிலவும், விமல் வீரவன்சவும் தமது அரசியல் கருத்துக்களை உதிர்த்தவண்ணமுள்ளனர். இருப்பினும் இராஜபக்சக்களின் 'ஈரடி பின்னால்' நகர்வில் ஒரு அரசியல் தந்திரம் மறைந்திருப்பதாக ஊடக நண்பர் ஒருவர் தனது ஆய்வு நிகழ்வொன்றில் குறிப்பிட்டிருந்தார் . சனாதிபதி தேர்தலில் அநுர தரப்பினரால் கட்டமைக்கப்பட்ட ' இராஜபக்ச எதிர்ப்பு' பிம்பத்தை நாடாளுமன்றத் தேர்தலில் வலுவிழக்கச் செய்ய, இராஜபக்சக்கள் போட்டியிடவில்லை என்பதே நண்பரின் வாதம். குறைக்கப்படும் வாக்குகள் சஜித் பக்கம் கணிசமான அளவில் திரும்பும் என நண்பர் எதிர்பார்க்கின்றார். இது அநுராவின் வாக்குகளை உடைக்கும் மஹிந்தரின் தந்திரமாக இருக்கலாம். ஆனாலும் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகளை தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வருவதன் ஊடாக, கடந்த ஆட்சியாளர்களை அரசியல் ஊடக வெளியில் முக்கிய பேசுபொருளாக வைத்திருக்கிறது தேசிய மக்கள் சக்தி. ஆகவே இராஜபக்சக்கள் தற்காலிகமாக ஒதுங்கினாலும் அநுராவின் கிடுக்கிப்பிடி, தேர்தலின் பின்னரும் தொடரும் வாய்ப்புகள் அதிகம் போல் தெரிகிறது . அடுத்ததாக ஜே. வி .பி இன் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா அவர்கள் வழங்கிய நேர்காணலொன்று, தமிழ் ஊடகப் பரப்பில் பலத்த விவாதமொன்றினை ஏற்படுத்தியுள்ளது . அதுபற்றி பேசாமல் கடந்து செல்ல முடியாது. ' அடித்தட்டு தமிழ் மக்களின் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினையே' என்று கூறும் சில்வா , ' அம்மக்களுக்கு 13 அல்லது அதிகார பகிர்வு என்ற பிரச்சினை இல்லை ' என்கிறார். ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வீழ்ச்சி வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களையும் பாதிக்குமென்பது உண்மை. தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினையை அவர் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார் என்பதை அந் நேர்காணலே எடுத்தியம்புகிறது. ஆனாலும் இடதுசாரி கருத்தியலை வரித்துக்கொண்ட தோழர் டில்வின் சில்வா அவர்கள், ஒரு தேசிய இனத்தின் அரசியல் உரிமையினை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார் ?. அரசியல் உரிமை மட்டுமல்ல.... பொருளாதாரத்தை பங்கிடும் இறைமையுடன் கூடிய உரிமையும் மக்களின் பிரச்சினைதான். இவர்களுக்கும் நம்மவர்களுக்கும், இந்த இரண்டையும் இணைத்து முன்னெடுக்கும் அரசியல் புரிய வேண்டும். இனப்படுகொலையை எதிர்கொண்ட தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை அரசியல் உரிமையைப் புறந்தள்ளி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. வல்லரசுக் கழுகுகள் வட்டமிடுகின்றன. அவதானம் தேவை. மக்களோடு பேசுங்கள். அவர்களே தமக்கான அரசியல் தீர்வு எதுவென்று சொல்வார்கள். இதயச்சந்திரன் https://oruvan.com/sri-lanka/2024/10/19/the-retreat-of-the-rajapaksas-and-an-interview-with-rilvin-silva
  13. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தமிழ் மக்களுக்கான தீர்வாக ஆக்குவதற்கு முயற்சி : யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு October 19, 2024 தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கும் அரசியற் பண்பாட்டிற்கும் முற்றிலும் எதிரான அரசியலை முன்னெடுத்த தமிழ்த் தேசியப் போலிகளை இந்த மண்ணிலிருந்து துடைத்தெறிந்து புதிய தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டை தோற்றுவிப்பதே உண்மையான மாற்றமாகும். மாறாக ஊழல் எதிர்ப்பு கவர்ச்சி அரசியலினால் தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் என யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் ஒன்றிய பிரதிநிதிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது, சிங்கள – பௌத்த பேரினவாதம் முழுவீச்சில் செயற்படுவதற்கான வாய்ப்புக்களைப் பொருளாதார நெருக்கடி தற்காலிகமாக மட்டுப்படுத்தியுள்ள நிலையில் சிங்கள மக்கள் மாற்றமொன்றினை எதிர்பார்த்து வாக்களித்துள்ளனர். எனினும் சிங்கள மக்களின் வாக்களிப்பு முறைக்கு நேர்மாறாக வாக்களித்ததன் மூலம் எம்மிடையே நிலவுவது பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல என்பதை தமிழ் மக்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். 15 ஆண்டுகளாக தலைமைத்துவ வெற்றிடம் நிலவும் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தெற்கில் ஏற்பட்டுள்ள ஊழலற்ற ஆட்சி, இளையோர்களின் அரசியற் பங்கேற்பு உள்ளிட்டவைகளின் தாக்கம் உணரப்படாமலுமில்லை. தமிழ்த் தேசிய சித்தாந்தத்தை சமூக, பொருண்மிய, பண்பாட்டுத் தளங்களில் மக்களுக்கானதாகக் கொண்டு போய்ச் சேர்ப்பதில் எந்த முனைப்பையும் காட்டாத தமிழ்த் தேசிய முலாம் பூசிய அரசியல்வாதிகள், அரசியற் கட்சிகள் மீதான பெரும் அதிருப்தி வெகுவாக மக்கள் மத்தியில் உணரப்பட்டு வருகின்றது. தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் ஏற்பட்ட அலையில் தமிழ் மக்களிடையே குறிப்பாக இளையோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த கரிசனை தமிழ்த் தேசிய அரசியற்பரப்பில் தவிர்த்துப் புறமொதுக்க முடியாதவொன்றாகும். தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கும், அரசியற் பண்பாட்டிற்கும் முற்றிலும் எதிரான அரசியலை முன்னெடுத்த தமிழ்த் தேசியப் போலிகளை இந்த மண்ணிலிருந்து துடைத்தெறிந்து புதிய தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டை தோற்றுவிப்பதே உண்மையான மாற்றமாகும். மாறாக ஊழல் எதிர்ப்பு, கவர்ச்சி அரசியலினால் தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர். மேலும், மாற்றம், ஊழல் இளையோர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும் எனும் தென்னிலங்கையின் கவர்ச்சி அரசியலினால் வடக்கு – கிழக்கில் நடைபெறும் தொடர் ஆக்கிரமிப்புக்களை மழுங்கடிக்கப்படுவதும் அதன் மூலம் தென்னிலங்கைத் தரப்புக்களிற்கும், அரசியல் வேலைத்திட்டங்கள் ஏதுமின்றிய சுயேட்சைகளிற்கு வாக்களிப்பதும் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான பயணத்தை சீர்குலைக்கும் ஒன்றாகும். திம்புக் கோட்பாடுகளைப் புறமொதுக்கி தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களிற்கு முற்றிலும் முரணான “இமயமலைப் பிரடகணம்” எனும் பெயரில் தமிழ் மக்களை அரசியல் சூழ்ச்சியொன்றினுள் தள்ளும் முயற்சியென்றும் இடம்பெறுகின்றதென்றும், அது சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தமிழ் மக்களுக்கான தீர்வாக ஆக்குவதற்கு முயற்சிப்பதோடு, தமிழ் மக்களின் இறைமை அரசியலை தனியே அடையாள அரசியலினுள் சுருக்குவதற்கான கபட முயற்சியென்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கண்டனம் தெரிவித்தனர். https://www.ilakku.org/13ஆவது-அரசியலமைப்புத்-திர/
  14. சிறீதரன் வெற்றி பெற்றால் ”ஒழுக்காற்று விசாரணை” வெற்றிக்கு வேட்டு வைக்கும் - ப.கஜதீபன் இலங்கை தமிழரசுக்கட்சியில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் சிறீதரன் வெற்றி பெற்றால் பதவி பறிக்கப்படலாம் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளர் ப.கஜதீபன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், தமிழரசுக் கட்சியில் சிறீதரன், மாவை சேனாதிராஜா, ஸ்ரீநேசன் உள்ளிட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளுக்காக கட்சியால் கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. அதை எங்களால் உறுதி செய்ய முடியும். நீங்கள் தமிழரசுக் கட்சியின் கொள்கை முடிவுகளை மீறி இருக்கின்றீர்கள். அப்படி செய்ய முடியாது என்பது தொடர்பாக அவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கட்சியின் பொதுச் செயலாளர் சத்தியலிங்கம் விளக்கம் கோரியிருக்கிறார். இதனால் தமிழரசுக் கட்சியில் இருக்கின்ற பிரச்சினைகள் உலகறிந்தது. இதில் நீதிமன்ற வழக்குகள் பிரசித்தமானது, தொடர்ச்சியாக வழக்குகள் போடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன . அதனால் தேர்தலுக்குப் பின்னர் நடக்கக்கூடிய சம்பவங்கள் மிக வேடிக்கையாக இருக்கும் என்று நாங்கள் கருதுகின்றோம். இந்த ஒழுக்காற்று விசாரணையின் ஊடாக அனேகமாக பலர் ஓரங்கட்டப்பட்டிருக்கின்ற நிலையில் சிறீதரன் மாத்திரம் உள்வாங்கப்பட்டிருக்கிறார்.சில வேளைகளில் சிறீதரன் தங்களுடைய வேட்பாளர்கள் அத்தனை பேரையும் விட வாக்குகளை கவரக்கூடியவராக இருப்பார் என அவர்கள் நினைத்திருக்கக்கூடும். அதன் அடிப்படையில் அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கின்றார் என நாங்கள் நம்புகின்றோம். எனவே சிறீதரன் வெற்றிபெற்றாலும் தேர்தலுக்குப் பிறகு அநேகமாக நான் நம்புகின்ற ஒரு விடயம் ஒழுக்காற்று விசாரணை மூலமாக அதைக் கிடைக்காமல் செய்யக்கூடும் என்பதுதான் என்றார் https://akkinikkunchu.com/?p=295898
  15. இந்தியாவை எதிர்த்து விட்டு எதனையும் செய்ய முடியாது: செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை ”அதிகாரப்பகிர்வையும், 13ஆவது திருத்தச்சட்டத்தையும் வடக்கின் அரசியல்வாதிகள் கோரவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது நீண்டகாலமாக எமது மக்களின் கோரிக்கையும், அபிலாசையுமாகும். அரசியலமைப்பின் அங்கமாக உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறே நாம் கோருகிறோம்.” - இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ”இந்தியாவை புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் செயல்பட பார்க்கிறது. ஆனால், இந்தியாவுடன் அனுசரித்து செல்வதே அவர்களுக்கு நல்லதாக இருக்கும் எனவும் செல்வம் அடைக்கலநாதன், எச்சரிக்கை விடுத்தார். அதிகாரப்பகிர்வு மற்றும் 13ஆவது திருத்தச்சட்டங்களை வடக்கின் அரசியல்வாதிகளே கோருகின்றன. மாறாக மக்கள் அல்ல என அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, தெரிவித்திருந்தார். இது தொடர்பில் 'ஒருவன்' பத்திரிகைக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியதுடன், மேலும் அவர் வலியுறுத்தியதாவது, ”அபிவிருத்தி என்பது மக்களுக்கு முக்கியம். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயத்தை இல்லையெனக் கூற முடியாது. 13ஆவது திருத்தச்சட்டம் மாகாண சபை முறைமைகளுக்காக அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பொன்றின் ஊடாக மாகாண சபை முறையை இல்லாதொழிக்க முடியும். ஆனால், இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எமது மக்கள் இனப்பிரச்சினையாலும் போராளும் பாதிக்கப்பட்ட மக்கள். அவர்கள் வெறும் அபிவிருத்தியை மாத்திரம் எதிர்பார்ப்பதாக ரில்வின் சில்வா கருத கூடாது. வடக்கின் அரசியல்வாதிகள்தான் அதிகாரப்பகிர்வை கோருவதாக கூறுவது பிழையான கருத்தாகும். அரசியலமைப்பில் உள்ள விடயத்தைதான் நாம் கோருகிறோம். இதில் அரசியல்வாதிகளை தொடர்புப்படுத்துவது தவறு. இது எமது உரிமையாகும். 13ஆவது திருத்தச்சட்டம் என்பது இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாகதான் அரசியலமைப்புக்குள் உள்வாங்கப்பட்டது. இதனை இல்லாதொழிக்க முற்படுவது இந்தியாவுக்கு எதிரான ஒரு முயற்சியாகவே பார்க்கப்படும். புதிய அரசாங்கத்துக்கு இந்தியாவை அனுசரித்து போக வேண்டிய தேவை உள்ளது. அண்டைய நாடாக உள்ள இந்தியாவை எதிர்த்துவிட்டு எதனையும் செய்ய முடியாது. இவர்களுடைய கருத்துகள் 13ஆவது திருத்தச்சட்டத்தை புதிய அரசியலமைப்பில் இருந்து இல்லாதொழிக்கும் வகையில் உள்ளது. ஆனால், இந்தியாவை பகைத்துத்கொண்டு இவர்களால் நகர முடியாது.” என்றார். https://oruvan.com/sri-lanka/2024/10/19/nothing-can-be-done-against-india-selvam-adhikalanathan-warns
  16. இறுதி தீர்வு சர்வஜன வாக்கெடுப்பினூடாகவே தீர்மானிக்கப்படவேண்டும்: தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்து http://www.samakalam.com/wp-content/uploads/2024/10/TMK-Manifesto.jpg இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச ரீதியான ஒரு சர்வஜன வாக்கெடுப்பை வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடத்த வேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணி 2024 ஆம் ஆண்டுக்கான தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் தலைமையில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது. இலங்கையில் எத்தகைய ஒரு தீர்வு தமக்கு வேண்டும் என்பதை தமிழ் மக்கள் தீர்மானிக்கும் வகையில் சர்வதேச சமூகம் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்த விஞ்ஞாபனம் அத்தகைய ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றபோது இருக்கக்கூடிய பல தெரிவுகளில் தமிழ் மக்கள் கூட்டணி வலியுறுத்திவரும் ‘கூட்டு சமஷ்டி’ அடிப்படையிலான தீர்வும் ஒரு ஒரு தெரிவாக இருக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது. இறுதி தீர்வு சர்வதேச ரீதியான சர்வஜன வாக்கெடுப்பொன்றின் ஊடாக தீர்மானிக்கப்படவேண்டும் என்றும் கூட்டு சமஷ்டி அடிப்படையிலான தெரிவின் அடிப்படையிலேயே தீர்வு அமையவேண்டும் என்பதும் தமிழ் மக்கள் கூட்டணியின் நிலைப்பாடு என்றும் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் குறிப்பிடப்பட்டிருந்தமை கவனிக்கத்தக்கது. கட்சியின் இந்த நிலைப்பாட்டினை கட்சியின் தலைவர் நீதியரசர் சி. வி விக்னேஸ்வரன் கடந்த 4 வருடங்களாக பாராளுமன்றத்திலும் சர்வதேசமாட்டங்களிலும் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதேவளை, இம்முறை தேர்தலில் யாழ் மாவட்டத்தில் மட்டும் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணி, அரசியல் அனுபவம் மிக்க இளையோர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் ஆளுமையுள்ள பெண்களை கொண்ட அணி ஒன்றை வேட்பாளர்களாக முன்னிறுத்தியுள்ளமை பலரதும் வரவேற்பை பெற்றுள்ளது. http://www.samakalam.com/இறுதி-தீர்வு-சர்வஜன-வாக்/
  17. தமிழ் மக்களை சீரழித்த தமிழ்த்தேசியக் கட்சிகள் October 18, 2024 — கருணாகரன் — பாராளுமன்றத் தேர்தல் தமிழ்பேசும் சமூகங்களைத் தடுமாற வைத்துள்ளது. எதிர்பார்க்கப்பட்டதையும் விட தேசிய மக்கள் சக்திக்கான (NPP அல்லது AKD) ஆதரவு அலை அதிகமாகக் காணப்படுகிறது. யாரைப் பார்த்தாலும் தேசிய மக்கள் சக்தி (NPP அல்லது AKD) யைப் பற்றியே பேசுகிறார்கள். “மாற்றத்துக்கு ஒரு வாய்ப்பளித்தால் என்ன?“ என்று கேட்கிறார்கள். இது தமிழ்த்தேசியவாதச் சக்திகள் சற்றும் எதிர்பார்த்திருக்காத நிலையாகும். இப்படியொரு பேரலை வந்து தம்மைத் தாக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை. இந்த அதிர்ச்சி இரண்டு வகைப்பட்டது. ஒன்று, தேசிய மக்கள் சக்தி என்பது இடதுசாரித்தனமுடையது என்பதால், அதை ஏற்றுக் கொள்வதில் உள்ள தயக்கம். ஏனென்றால் தமிழ்ப் பெருந்திரளுக்கு இடதுசாரிகள், மாக்ஸிஸ்டுகள் என்றால் எப்போதுமே சற்றுக் கசப்பும் இளக்காரமுமுண்டு. அதனால் இடதுசாரிகளைத் தள்ளித் தூரத்தில் வைத்துக்கொள்வார்கள். அதை மீறித் தேசிய மக்கள் சக்தியின் பக்கமாக மக்கள் திரும்புவதை எப்படி ஏற்றுக் கொள்வது, அனுமதிப்பது என்ற சிக்கல். இரண்டாவது, தேசமாகத் திரள்வோம், தமிழ்த்தேசியத்தை வலுப்படுத்துவோம், தமிழ்த் தேசியக் கூட்டுணர்வை திரட்டுவோம் என்பதற்கு மாறாக – அதை விட்டு விலகி, தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரள்வது. இதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் – எதிர்ப் பரப்புரையைச் செய்ய முடியாமல் தடுமாறுகின்றன தமிழ்த்தேசியத் தரப்புகள். இப்போதுள்ள நிலையில் வடக்குக்கிழக்கில் தேசிய மக்கள் சக்திக்கும் தமிழ்த்தரப்புகளுக்குமிடையில்தான் போட்டி. அதிலும் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தியே வெற்றி வாய்ப்பை அதிகமாகக் கொண்டுள்ளது. மட்டக்களப்பு, வன்னி, யாழ்ப்பாணம் ஆகிய தேர்தல் மாவட்டங்களில்தான் தேசிய மக்கள் சக்தி – ஐக்கிய மக்கள் சக்தி – தமிழ்த்தேசியத் தரப்புகள் ஆகியவற்றுக்கிடையிலான முத்தரப்புப் போட்டியுண்டு. இந்தப் போட்டிக் களத்தைச் சமாளித்து வெற்றியடைவதற்கு தமிழ்த்தேசியவாதச் சக்திகளிடத்தில் எந்தக் கைப்பொருளுமில்லை. மெய்ப்பொருளும் கிடையாது. இதேவேளை தேசிய மக்கள் சக்தியும் எதிர்பார்த்திராத ஒரு ஆதரவு நிலையை வடக்குக் கிழக்கில் பெற்றுள்ளது. அது வடக்குக் கிழக்கில் தன்னுடைய செல்வாக்குப் பரப்பைச் சரியாக விரிக்காமலே, தன்னுடைய வேலைத்திட்டங்களையும் ஆட்களையும் உருவாக்காமலே பெறுகின்ற ஆதரவாகவும் வெற்றியாகவும் இருக்கப்போகிறது. இதற்குக் காரணம், கேள்விக்கிடமில்லாத வகையில் தமிழ்த்தேசியவாதச் சக்திகள் நடத்திய பொய் (மாயை) அரசியலின் விளைவேயாகும். தமிழ்த்தேசியவாத சக்திகளின் பலவீனம் தேசிய மக்கள் சக்திக்கான வாய்ப்பை அளித்துள்ளது. இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால், அதை தமிழ்த்தேசியவாத சக்திகள் வேறுவிதமாக உணர்ந்திருந்தன. தேசிய மக்கள் சக்தியை விட அரச ஆதரவுத் தரப்புகளான ஐ.தே.க அல்லது பொதுஜன பெரமுன அல்லது சு.க போன்றவைதான் தமக்குச் சவாலாக இருக்கும் என. அல்லது, அவற்றின் ஏஜென்டுகளாகத் தொழிற்படும் தமிழ்ச் சக்திகளே தமிழ்த்தேசிவாத சக்திகளுக்குப் போட்டியாக இருக்கும் என. என்பதால்தான் அவை முன்னேற்பாடாக ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்த முற்பட்டதாகும். இப்பொழுது நிலைமை முற்றிலும் வேறாகி விட்டது. அது யாராலும் கட்டுப்படுத்த முடியாத, கையாளவே முடியாத கட்டத்துக்குச் சென்று விட்டது. இனி நடப்பதைக் காண வேண்டியதுதான் என்ற கட்டத்துக்கு வந்திருக்கிறது. இந்த நிலைக்குக் காரணம், 2009 க்குப் பிறகு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் (தமிழரசுக் கட்சி) அதிலிருந்து பிரிந்து சென்ற பிற தரப்பினரும் மக்களுக்கான அரசியலைச் செய்யவே இல்லை. இவை செய்ததெல்லாம் அரச எதிர்ப்பை மையப்படுத்திய வெறும் வாய்ச்சவாடல் அரசியல்தான். அடுத்தது, தமக்கிடையிலான உள்மோதல். வாய்ச்சவாடல் அரசியலை தேர்தற் பரப்புரை தொடக்கம் பாராளுமன்றம், மாகாணசபை, உள்ளுராட்சி மன்றம் வலையில் தொடர்ந்தனர். போதாக்குறைக்கு ஊடக அறிக்கைகளிலும் ஊடகச் சந்திப்புகளிலும் அவற்றை நிகழ்த்தினர். அதற்கு அப்பால் மக்களுடைய பிரச்சினைகளுக்கான போராட்டங்களில் இவற்றின் பங்கேற்பு குறைவு. அல்லது இல்லை எனலாம். தொடக்கத்தில் சில போராட்டங்களில் தலையைக் காட்டினார்கள். காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுடைய போராட்டம், மீள்குடியேறும் மக்களுடைய போராட்டம் (வலி வடக்கு – கேப்பாப்பிலவு) நில அளவீட்டுக்கு எதிரான போராட்டம், அரசியற் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம், நில அபகரிப்பு – பௌத்த மயமாக்கலுக்கு எதிரான போராட்டம் போன்றவற்றில். இது கூட சம்பிரதாயமான எதிர்ப்பாக – பங்குபற்றுதலாக – இருந்ததே தவிர, இவற்றைத் தீவிரப்படுத்தி, மக்கள் போராட்டமாக எந்தச் சக்தியும் முன்னெடுக்கவில்லை. அதற்கான உழைப்போ, அர்ப்பணிப்போ எந்தத் தரப்பிடமும் இருக்கவில்லை. எந்த அரசியல்வாதியும் போராட்டங்களின் அடையாளமாக முகிழ்க்கவில்லை. இதனால் இவர்கள் தேர்தற் காலங்களில் முன்மொழிந்த எந்தப் பிரச்சினைக்கும் தீர்வைக்காண முடியாமற்போய் விட்டது. பதிலாகப் புதிய பிரச்சினைகள் உற்பத்தியாகின. ஆக எதிர்ப்பு அரசியல் என்பது சனங்களுக்கு நெருக்கடியைத் தரும் ஒன்றாக மாறியதே தவிர, அரசுக்கு அது எந்த நெருக்கடியையும் நிர்ப்பந்தத்தையும் வழங்கவில்லை. மட்டுமல்ல, இந்தத் தரப்புகள் சொன்னதைப்போல பிராந்திய சக்தியாகிய இந்தியாவையோ சர்வதேச சக்திகளான சீனா மற்றும் மேற்குலகத்தையோ வென்றெடுக்கவும் இல்லை. சீனாவுடன் தமிழ்த்தேசியத் தரப்புகள் நேரடியாகவே மோதிக்கொண்டன. எனவே எதிர்ப்பு அரசியலில் மக்கள் ஏமாற்றமே அடைந்தனர். அதாவது தமிழ்த்தேசிய அரசியலில் சலித்தனர். யாரை நம்புவது? யாரை ஏற்றுக் கொள்வது? என்று பகிரங்கமாகவே பலரும் சொல்வதைக் கேட்கலாம். மாற்றுத் தெரிவுகள் இல்லை என்ற நிலையில்தான் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழரசுக் கட்சியையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியையும் மக்கள் தெரிவு செய்தனர் – ஏற்றனர். இனியும் அதைச் செய்ய முடியாது என்பதே மக்களின் இன்றைய நிலைப்பாடாகும். ஆனால், இதைக் கவனத்திற் கொள்ளத் தயாரற்ற தமிழ்த்தேசியவாதச் சக்திகள், இன்னொரு நிலையில் இதை – இந்தப் பலவீனத்தை – மறைத்துக் கொள்வதற்கும் தமக்கிடையில் அதிகாரத்தை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்கும் தமக்குள் மோதிக் கொண்டன. இதற்காக அவர்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர். ஒரு கட்டத்தில் இது வளர்ச்சியடைந்து இரண்டு அணிகளாகத் தோற்றம் கொண்டது. ஒரு அணி அரச சார்பு அல்லது மென்னிலை அரச எதிர்ப்பு அணியாகவும் மறு அணி அரச எதிர்ப்பு – தீவிர அணியாகவும் மாறியது. அதற்குள்ளும் உப அணிகள் உண்டு. ஆனாலும் இரண்டு வகையான போக்குகளே பெரிதாக அடையாளமாகின. சம்மந்தன், சுமந்திரன் போன்றோர் அரச ஆதரவாளர்களாக – துரோகிகளாகச் சித்திரிக்கப்பட்டனர். மறு தரப்பினர் தம்மைத் தியாகிகளாகக் காட்ட முற்பட்டனர். ஜனாதிபதித் தேர்தல் வரையிலும் இந்தக் காட்சிப்படுத்தல்தான் நடந்தது. ஏன் இப்போதும் அப்படியான ஒரு தோற்றப்பாட்டை முன்வைத்தே தமிழ்த்தேசியவாத அரசியல் முன்னெடுக்கப்படுகிறது. ஆக எப்போதும் கதாநாயகன் – வில்லன் என்ற வகையிலான அரசியலையே தமிழ்த்தரப்பு முன்னெடுத்தது. 1. தமிழ்த்தேசியவாதத் தரப்பு எதிர் அரசு மற்றும் சிங்களத் தேசியவாதம். 2. அரச ஆதரவுத் தமிழ்த்தேசியம் அல்லது மென்னிலைத் தமிழ்த்தேசியம் எதிர் தீவிர நிலைத் தமிழ்த்தேசியம். இதைச் சூடேற்றும் அரசியல் எனலாம். அதாவது எப்போதும் ஊடகங்களிலும் பொதுவெளியிலும் தம்மை – தமது குரலைப் பேசுபொருளாக (விவாதப் பொருளாக) வைத்துக் கொள்வதே இதனுடைய உத்தியாகும். இதனால் என்ன பயன் விளைகிறது என்பதையிட்டு இவர்களுக்கு எந்தக் கவலையும் இருக்கவில்லை. எத்தகைய அக்கறைகளும் இருந்தது கிடையாது. இதனால் இதற்கு அரசியற் பெறுமானங்கள் எதுவும் இல்லை. என்பதால்தான் மக்கள் இவற்றை – இவர்களை நிராகரிக்க முற்பட்டுள்ளனர். இதேவேளை இந்த அரசியலை முன்னெடுத்தவர்கள் கண்முன்னே பிரமுகர்களாகி வளர்ச்சியடைந்தனர். சொத்துகளைச் சேர்த்தனர். உலகச் சுற்றுப்பயணங்களைச் செய்தனர். இறுதியில் சாராயக்கடைகளை அரசிடம் சலுகையாகப் பெற்று அதை விற்பனை செய்வது வரையில் சென்றனர். பதிலாக இனவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளும் மக்களும் வரவரப் பலவீனப்பட்டனர். ஒருசாரார் இது சரிப்படாது என உணர்ந்து நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்தனர் – புலம்பெயர்ந்து கொண்டுள்ளனர். இவையெல்லாம் மக்களுக்குக் கடுமையான ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தின. இதனால் இந்தச் சக்திகளின் மீது சனங்கள் வெறுப்படைந்துள்ளனர். இந்த வெறுப்பை தேசிய மக்கள் சக்தி அறுவடை செய்கிறது. இன்னொரு நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த ஆதரவைப் பெறும் நிலை உண்டு. ஐக்கிய மக்கள் சக்தியைப் பொறுத்தவரையில் அது மட்டும்தான் தமிழ் பேசும் சமூகங்களை வெளிப்படையாக ஆதரித்தும் அரவணைத்தும் செல்லும் தரப்பாக தற்போதுள்ளது. அதனால், அதற்கும் ஒரு ஆதரவுத் தளம் காணப்படுகிறது. சற்றுச் சிந்திக்கக் கூடியவர்கள், தேசிய மக்கள் சக்திக்கு முழுமையான ஆதரவை அளிப்பது அதனைக் கேள்விக்கிடமில்லாத வகையில் பலப்படுத்தி, அதிகாரத்தின் உச்சத்துக்குக் கொண்டு போய் விடும். அதற்குப் பிறகு, அதனைக் கட்டுப்படுத்தக் கூடிய பலமோ வல்லமையோ நாட்டு மக்களுக்கு இல்லாமற் போய் விடும். ஆகவே அதைச் சமனிலைப்படுத்தக் கூடிய அளவுக்கு ஒரு பலமான எதிர்க்கட்சி (கீரைக்கடைக்கும் ஒரு எதிர்க்கடை) வேண்டும் என்று கருதுகிறார்கள். இது ஏற்றுக் கொள்ளக் கூடியதேயாகும். ஏனெனில், வரலாற்றில் எப்போதும் கேள்விக்கிடமில்லாத அதிகாரம் விளைக்கின்ற அநீதி எளிதாக இருப்பதில்லை. அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னே முற்போக்கு – ஜனநாயக சக்திகளாகத் தம்மைக் காட்டிக் கொண்ட தரப்புகள், அதிகாரக் கட்டிலில் ஏறிய பின்னர் நடந்து கொண்ட கசப்பான வரலாற்று அனுபவங்கள் ஏராளமுண்டு. என்பதால் சமனிலைப்படுத்தக் கூடிய ஒரு தேர்வை மக்கள் செய்ய வேண்டும். அதற்கு தமிழ்த்தேசியவாதச் சக்திகள் மட்டுமல்ல, முஸ்லிம் தேசியவாதக்கட்சிகளிடத்திலும் பலவீனமான நிலையே உண்டு. ஆகவே இதையெல்லாம் கடந்து ஒரு வலுச் சமநிலையைக் காணக்கூடிய அரசியற் தெரிவை மக்கள் செய்வதற்கு யார் வழிகாட்டுவது? அது நாட்டுக்குச் செய்யும் பெருந்தொண்டாகும். அதுவே தமிழ் மக்களுடைய – அவர்களுடைய தேசிய இருப்புக்கும் உதவும். https://arangamnews.com/?p=11339
  18. எண்ணிக்கையில் முன்னணியில் நிற்பவர்களை கடைசி நிமிடத்தில் வெல்வேன், சும் ஸ்டைல்😂🤣
  19. வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு! எதிர்வரும் பொதுத்தேர்தலில் வீடு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் அரசுக் கட்சியினால் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் 15க்கு குறையாமல் ஆசனங்களை வென்றெடுக்க முடியும் என அக்கட்சியின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அதேவேளை, சங்கு சின்னத்தில் போட்டியிடும் தமது கூட்டணி இவ்விரு மாகாணங்களிலும் மொத்தமாக 6 - 8 ஆசனங்களை வெல்லும் என எதிர்பார்ப்பதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளதாகவும், இம்முறை தேர்தலில் தமது கட்சி 10க்கு குறையாத ஆசனங்களைப் பெறவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். பொதுத்தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் மற்றும் வேட்புமனுத்தாக்கல் என்பன கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் நாடளாவிய ரீதியில் தமது தேர்தல் பிரசாரப்பணிகளை முன்னெடுத்துவருகின்றன. அந்த வகையில், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் அவர்களது தேர்தல் பிரசார நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்துவருகின்றனர். இவ்வாறானதொரு பின்னணியில் வடக்கு மற்று கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களில் இருந்தும் நாடாளுமன்றத்துக்குப் பிரதிநிதிகளை அனுப்பக்கூடிய கட்சியாக தமிழ் அரசுக் கட்சி இருப்பதாகவும், எதிர்வரும் பொதுத்தேர்தலில் தம்மால் 15க்கு மேற்பட்ட ஆசனங்களைக் கைப்பற்றமுடியும் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உள்ளடங்கலாக ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள் தமது பிரசாரங்களின்போது பெரும்பாலும் 'ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி சங்கு சின்னத்தைக் களவெடுத்துவிட்டது' என்ற விடயத்தையே கூறிவருவதாகவும், இது அக்கட்சிகள் சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களைக் கண்டு அச்சமடைந்திருப்பதையே காண்பிப்பதாகவும் சங்கு சின்னத்தில் போட்டியிடும் தர்மலிங்கம் சித்தார்த்தன் சுட்டிக்காட்டியுள்ளார். (ச) https://newuthayan.com/article/வடக்கு_-_கிழக்கில்_15ஆசனங்கள்_உறுதி-_சுமந்திரன்_தெரிவிப்பு!
  20. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு? adminOctober 18, 2024 சர்ச்சைக்குரிய வாகன மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் உள்ளகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுக்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக செயல்பட்டு வந்தாலும் அவர் தொடர்பில் எந்தவொரு தகவலும் இதுவரையில் கிடைக்கவில்லை. சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தங்கியிருந்த வீடு மற்றும் அவர் தங்கியிருக்கும் ஏனைய இடங்கள் அனைத்திலும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என காவற்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வாகன உதிரி பாகங்களை இரகசியமாக இறக்குமதி செய்து அவற்றை பயன்படுத்தி பி. எம்.டபிள்யூ. கார் ஒன்றை தயாரித்துப் பயன்படுத்தியதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த கார் பதிவு செய்யப்படவில்லை என்றும், அது போலி எண் மூலம் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த கார் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வாகன தரிப்பிடத்தில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இரகசிய காவற்துறையினர் மூலம் கைப்பற்றப்பட்டது. ‘டாக்சி அபே’ எனப்படும் காமினி அபேரத்ன ஹில்டன் ஹோட்டலுக்கு முன்பாக, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட காரை கைவிட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காரில் இருந்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமான ஆவணங்களும் காவற்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/207625/
  21. போட்டியை நடத்தும் கந்தப்புவுக்கு நன்றி பல🙏🏽 தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி உள்ள அறிவும், தரவும் இலங்கை அரசியலைப் பற்றி இல்லை! அதிலும் குறிப்பாக மக்களின் நாடிப்பிடிப்பை உணர்த்தும் நம்பகமான கருத்துக்கணிப்பு இல்லை. ஆனாலும் போட்டியில் கட்டாயம் கலந்துகொள்வேன்😀 யாழ் களப் போட்டியில் நான் வெல்வது சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் வெல்வது மாதிரித்தான் இருக்கும்😆
  22. விசேட உரையில் ரணில் என்ன கூறினார்? இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைச் செலுத்தத் தொடங்கும் 2027ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச வருமானத்தை 15% ஆக்கும் சவாலை புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று (17) தெரிவித்துள்ளார். கொழும்பு, மால் வீதியிலுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த இலக்கை எட்டுவதற்கு ஒவ்வொரு வருடமும் ஒரு வீத பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, பொறுப்புகளில் இருந்து தட்டிக்கழிக்காத அனுபவமிக்க அணியே அடுத்த பாராளுமன்றத்திற்கு தேவை எனவும் வலியுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டை மீட்டெடுக்க தன்னுடன் இணைந்து செயற்பட்ட குழுவினர் சிலிண்டர் சின்னத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, நிதி அதிகாரத்தை வைத்திருக்கும் பாராளுமன்றம் வலுவாக இருக்க அந்த குழு வெற்றி பெற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, “கடனைச் செலுத்த முடியாமல் திவாலாகிவிட்டதாக அறிவித்தபோது நான் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றேன். அந்த நேரத்தில் எனது முதன்மை நோக்கம் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதும் திவால்நிலையைத் தவிர்ப்பதும் ஆகும். அதற்காக எமக்கு கடன் வழங்கிய பதினெட்டு நாடுகளும், தனியார் பிணை முறியாளர்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த இரண்டு வருடங்களில் உடன்படிக்கைக்கு வந்தோம். அதன்படி, நமது கடன் செலுத்தும் காலத்தை நீடித்து பின்னர் நமது நாட்டை திவால் நிலையில் இருந்து மீட்பது குறித்தும் ஒரு உடன்பாட்டை எட்டினோம். இந்த நடைமுறைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தனியார் பிணை முறியாளர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. நாம் ஏற்படுத்திய அமைப்பு காரணமாக, இப்போது வெளிநாட்டு வங்கிகளுடன் கொடுக்கல் வாங்கல்களை செய்ய முடியும். வெளிநாட்டு உதவியும் கிடைக்கும். எங்கள் கடன் நிலைத்தன்மையின் காரணமாக திவால்நிலை இப்போது முடிந்துவிட்டது. நாடு திவாலானதால் பிணை எடுப்புப் பங்கிற்கு கடந்த நாடாளுமன்றத்துடன் இணைந்து பணியாற்றினேன். நாட்டை வங்குரோத்திலிருந்து மீட்கும் பணிகளுக்காக நான் கடந்த பாராளுமன்றத்துடன் இணைந்து செயற்பட்டேன். எனக்கு உதவிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நான்றியை தெரிவித்துக்கொள்கிறேன் அந்த பாராளுமன்றத்துடன் இணைந்து பணியாற்றிய எனது அதிகாரிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது நாம் அந்த நிலைத்தன்மை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இது தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி திருத்தங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், திருத்தப்பட்ட உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த நாட்டில் நிதி அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவது புதிய பாராளுமன்றத்தின் பொறுப்பு. நிலைத்தன்மையை செயல்படுத்துவதற்கும் அதை அடைவதற்கும் எங்களிடம் பல இலக்குகள் உள்ளன. முதலில் 2028ஆம் ஆண்டிலிருந்து கடனை அடைக்க வேண்டும். 2027-க்குள் நமது அரசின் வருவாய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதமாக இருக்க வேண்டும். இப்போது அந்த எண்ணிக்கை 12 சதவீதமாக உள்ளது. அந்த இலக்கை அடைய, ஒவ்வொரு ஆண்டும் ஒரு சதவீத வளர்ச்சியை எட்ட வேண்டும். அடிப்படையில், இந்த ஆண்டு இறுதிக்குள், 2019ன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மீண்டும் பெற முடியும். அதே சமயம் அன்னியச் செலாவணி கையிருப்பையும் அதிகரிக்க வேண்டும். அந்த அந்நியச் செலாவணி கையிருப்பு 10-14 பில்லியன் டொலர் வரம்பில் இருக்க வேண்டும். இந்த இலக்குகளை அடைந்த பிறகு, கடனை அடைக்க வேண்டும். இந்தக் காலத்திற்குள் நாம் மேற்கூறிய இலக்குகளை அடைய வேண்டும். அதற்கு விரைவான வளர்ச்சியை உருவாக்க வேண்டும். இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் பலவற்றை செயல்படுத்துவதாகும். இந்த அனைத்து விடயங்களுக்கும் பாராளுமன்றமே பொறுப்பு. ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின்படி, நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. எப்படியாவது புதிய பாராளுமன்றத்தின் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டுமானால் கடந்த பாராளுமன்றத்தில் பெற்ற அனுபவத்தை நிறுத்த வேண்டும். அதாவது கடந்த பாராளுமன்றத்தில் இந்தப் பொறுப்புகளை ஏற்க எவரும் முன்வரவில்லை. நான் வந்து மொட்டு கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை கூட்டி வந்து இந்த அரசாங்கத்தை அமைக்க உழைத்தேன். அடுத்த நாடாளுமன்றத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க அனுமதிக்கக் கூடாது. இந்த நாடாளுமன்றத்தில் மூன்று முக்கிய குழுக்கள் உள்ளன. அந்த மூன்று குழுக்களில் ஒரு குழுவை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். நான் சிலிண்டர் சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டேன். மொட்டு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, புதிய கூட்டணி என அனைத்துக் குழுக்களும் ஒன்றிணைந்து எனக்கு ஆதரவளித்தன. இவர்கள் எனது தலைமையின் கீழ் பணியாற்றினர். இப்போது அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். அந்த எம்.பி.க்களில் ஒரு பகுதியினரும் என்னுடன் பணியாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பகுதியினரும் இணைந்து இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்கள் புதிய ஜனநாயகக் கட்சியின் மூலம் தங்களை முன்வைக்கின்றனர். எனது தலைமையில் இந்த தேர்தல் பணியை செய்ய உள்ளனர். இவர்களுக்கெல்லாம் அந்த அனுபவம் உண்டு. இந்தப் பணியைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக என்னுடன் பணியாற்றியவர்கள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்ட அனுபவம் உள்ளவர்கள் எனவே அவர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றத்தில் இருந்தாலும் சரி, இந்த அனுபவம் இல்லாமல் நாடாளுமன்றத்தை நடத்த முடியாது. பின்னர் அவர்கள் இலக்குகளை அடைவதில் தோல்வியடைகிறார்கள். எனவே மொட்டு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எமக்கு ஆதரவளித்த ஐக்கிய தேசியக் கட்சியில் செயற்பட்டவர்கள், புதிய கூட்டணியின் ஏனைய கட்சிகள் என அனைவரும் எமது வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றனர். மேலும், முன்னதாக வாக்களிக்காதவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன். நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து முன்னோக்கிச் செல்வதற்கு இந்த அனுபவம் வாய்ந்தவர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். உங்கள் எதிர்காலத்தை புதிய பாராளுமன்றம் தீர்மானிக்கும். இந்தப் பணியை வெற்றிகரமாகச் செய்தால் நாடாக மீண்டு வரலாம். தவறினால் நாடு மீண்டும் அழியும். மீண்டும் வரிசையில் நிற்கும் காலத்திற்கு நகரும். எனவே, சிலிண்டருக்காக அனைவரும் தங்களது பெறுமதியான வாக்குகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/விசேட-உரையில்-ரணில்-என்ன/
  23. தேர்தலுக்கு பிறகு தமிழரசுக் கட்சி புத்துணர்வுடன் புதுப்பொலிவு பெறும் பெயருக்கு நடிப்புக்கு நாடகத்துக்கு எங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவையில்லை. சேவை செய்யக்கூடியவராகயிருக்க வேண்டும், உறுதியானவராகயிருக்கவேண்டும், அடுத்த கட்டத்திற்கு தமிழ் தேசியத்தினை வழிநடத்தக்கூடியவராகயிருக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசனை வெற்றி பெறச்செய்வதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய பணிகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று(15) மாலை வவுணதீவில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மண்முனை மேற்கு கிளையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு கிளையின் தலைவர் பி.கோபாலபிள்ளை தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன் உட்பட கிளை உறுப்பினர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், இலங்கை தமிழரசுக் கட்சி நீண்டகாலத்திற்கு பின்னர் தனித்துவமாக இந்த தேர்தலில் போட்டியிடும் நிலைமை இருக்கின்றது. தேர்தலில் நிச்சயமாக இலங்கை தமிழரசுக் கட்சி மூன்று ஆசனங்களை பெறுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு இருக்கின்றது. அந்த மூன்று ஆசனங்களை பெறுவதுதான் நோக்கம் அல்ல. ஆசனங்களை பெறுவதில் அந்த ஆசனத்தில் வரக்கூடியவர்கள் யார் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும். இலங்கை தமிழரசுக் கட்சியின் இன்று பல்வேறுபட்ட இன்னல்கள், பிளவுகள் சட்டங்கள் வழக்குகள் என்று போடப்பட்டிருக்கின்றது. நேற்று ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.இந்த காரணங்களை நாங்கள் பார்க்கின்ற போது அதிலே நேர்மையானவர்கள், உண்மையானவர்கள், உறுதியானவர்கள் பற்றாளர்கள் அந்த கட்சியிலே இல்லாததன் காரணமாக இவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்றது. அதை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் இலங்கை தமிழரசுக் கட்சி மாத்திரம் வெற்றி பெறக் கூடாது . இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து செல்கின்ற உறுப்பினர்கள் உறுதியானவர்களாக உண்மையானவர்களாக நேர்மையானவர்களை நாங்கள் இனங்காணவேண்டும். நான்கு உறுப்பினர்கள் இந்த மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டது 2004 ஆம் ஆண்டு மாத்திரம் தான் இருந்தது. அதில் தான் நான்கு பேர் நாங்கள் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டோம். அடுத்தது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒருவர் ஐந்து பேர் நாங்கள் பாராளுமன்ற உறுப்பினராக சென்ற வரலாறு இருக்கின்றது. அதற்குப் பிறகு மூன்று கட்சி, இரண்டு கட்சியிலிருந்து கடந்த தேர்தலில் நான்கு கட்சியிலிருந்து வந்திருக்கின்றோம். வழிநடத்தக் கூடியவர்கள் ஒரு கட்சியில் இருந்தால் மாத்திரம் தான் அந்த கட்சி சிறப்பாக அமையும்.மூத்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றம் செல்வது அவசியமாகும். அதன்காரணமாகவே சிறிநேசன் அவர்களை வெற்றிசெய்யவேண்டும் என்று உழைக்கின்றோம். பெயருக்கு நடிப்புக்கு நாடகத்துக்கு எங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவையில்லை. சேவை செய்யக்கூடியவராகயிருக்கவேண்டும், உறுதியானவராகயிருக்கவேண்டும், அத்தகட்டத்துக்கு தமிழ் தேசியத்தினை வழிநடத்தக்கூடியவராகயிருக்கவேண்டும். நான் இலங்கை தமிழரசுக் கட்சியில் ஆயுட்கால உறுப்பினர். நான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்தேன். உங்களுக்கு தெரியும் நான் கொள்கை ரீதியாக நான் கட்சி ரீதியாக நான் எப்பொழுதும் சொல்கின்ற விடயம் என்னவென்றால் கட்சியில் நிலைப்பாட்டில் எனக்கு ஒரு கொள்கை இருக்கிறது. அந்த அடிப்படையில் தான் பலரின் வேண்டுகோளை நான் சேர்ந்து தமிழ் தேசியத்தின் கொள்கையின் அடிப்படையில் தான் நான் இங்கு சென்றிருந்தேன். ஆனால் இப்பொழுது எனக்கு விளக்கம் கோரப்பட்டிருக்கின்றது. விளக்கம் கோரப்பட்டாலும் நான் இலங்கை தமிழரசுக் கட்சியிலே நான் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கின்றேன். இலங்கை தமிழரசுக் கட்சிக்காக நான் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றேன். விளக்கங்களை பற்றி நான் சிந்திப்பவன் அல்ல.ஆனால் இலங்கை தமிழரசுக்கட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவேண்டுமானால் கட்சியினை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லக் கூடிய,தலைமைப் பொறுப்பினை ஏற்ககூடியவர்கள் வரவேண்டும். இன்னும் பல்வேறுபட்ட விடயங்கள் எங்கள் கட்சிக்குள் இருந்து கொண்டிருக்கின்றது. அவ்வாறு இருந்தாலும் கூட நாங்கள் இலங்கை தமிழரசுக் கட்சியை காப்பாற்ற வேண்டிய நிலையில் நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம். இந்த தேர்தலுக்கு பிறகு நிச்சயமாக இலங்கை தமிழரசுக் கட்சி ஒரு புத்துணர்வுடன் ஒரு புது பொலிவுடன் அங்கே செல்ல இருக்கின்றது. அதிலே பல மாற்றங்களை இலங்கை தமிழர் கட்சியில் காண இருக்கின்றது. அபிவிருத்தி என்பது மிக முக்கியமாகயிருக்கின்றது.நல்லாட்சியில் அதிகளவான கோடி பணங்களை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டுவந்தவர் சிறிநேசன் தான். மட்டக்களப்புக்கு அவர் கொண்டு வந்தாலும் கூட மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்று பாருங்கள். நிதிகளுக்காக மக்கள் வாக்களிப்பதில்லை என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றது.தமிழ் தேசிய அரசியலை நன்றிக்கடனுக்காக பாவிக்கவேண்டாம். யார் வந்தாலும் நிதி வரும். அதை பெறுகின்ற தைரியம் அந்த அந்த இடத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்காக கிடைக்கும் அது எங்களுக்கு வந்து சேரும். அவர் செய்கின்றார், இவர் செய்கின்றார் அபிவிருத்தி தான் எங்கள் நோக்கமாக இருந்தால் எங்கள் அபிலாசைகள் அடிபட்டு போய்விடும். நாங்கள் பல்லாயிரக்கணக்கான மாவீரர்களை ஆகுதியாக்கிய மண் இந்த மண். அவர்களின் தியாகங்களுக்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம். அவர்கள் தியாகங்கள் எழ வேண்டும் என்பதற்காகத்தான் நான் ஜனாதிபதி தேர்தலில் கூட நான் ஒரு தமிழ் பொது வேட்பாளராக போட்டியிட்டு இரண்டு லட்சத்து 26 ஆயிரம் வாக்குகளை எடுத்து நான் உலகத்துக்கு காட்டி இருக்கின்றேன் என்றால் அந்த தமிழ் தேசியம் இந்த மண்ணிலே வடகிழக்கிலே தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றது என்று அதற்கு பிறகு வந்த இந்த தேர்தலிலும் நாங்கள் அதனை வெளிப்படுத்தவேண்டியுள்ளோம். மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை எடுக்க வேண்டும். நாங்கள் நான்கு பாராளுமன்ற உறுப்பினரை எடுப்பது என்பது நல்ல விஷயம். 2004 ஆம் ஆண்டு போன்று இரவு பகலாக நாங்கள் உழைத்து ஒரே கட்சிக்கு நாங்கள் வாக்களிப்போமாகயிருந்தால் இருந்தால் நான்கு பேரை நாங்கள் எடுக்கலாம். நான்கு பேரை நாங்கள் இலக்கு வைத்தாலும் நிச்சயமாக மூன்று பேரை நாங்கள் பெறாவிட்டால் எங்கள் முயற்சி என்பது அடிபட்டு போய்விடும். இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கின வரலாற்றிலே இரண்டு பாராளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்புக்கு தந்த ஒரு அவல நிலை கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்டது. 2004 இல் நாங்கள் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர் நான்கு பேர் தெரிவுசெய்யப்பட்டு தேசியப் பட்டியலில் யோசப் பரராஜசிங்கம் ஐயா தெரிவு செய்யப்பட்டதன் மூலம் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர் சென்றோம். 2010ஆம் ஆண்டு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள்,2015ஆம் ஆண்டு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்றோம்.2020ஆம் ஆண்டு மட்டும் ஏன் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் வந்தார்கள் என்பதை அனைவரும் சிந்திக்கவேண்டும். 2020ஆம் ஆண்டு அனைத்து கட்டமைப்புகளும் இருந்தன.பிரதேச சபைகள்,மாநகரசபைகள் இருந்தன. அனைத்து பகுதிகளிலும் வேலை செய்த போதிலும் நல்லாட்சி அரசாங்கத்திலே நாங்கள் செய்த சில நடவடிக்கைகளில் அதிருப்திகளினால் பழிவாங்கப்பட்டது. ஆகவே இந்த விடயங்களை நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஆளுங்கட்சியிலே பலமானவர்கள் ஆளுங் கட்சியிலே போட்டியிடக்கூடிய சூழ்நிலை இருந்தாலும் கூட அவர்கள் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பில்லை. ஏனென்றால் இப்பொழுது இருக்கின்ற ஜனாதிபதி மாற்றம் என்பது எல்லோரையும் அழைத்து பதவி கொடுக்கின்ற ஜனாதிபதியாக அவரை நாங்கள் பார்க்க முடியாது.யார் வென்றாலும் அவர்கள் எதிர்க்கட்சியில் வரக்கூடிய நிலைமையே உள்ளது எனவும் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=295547
  24. சம்பந்தமில்லாத பதிலளித்த வைத்தியர் அருச்சுனா! யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் , ஊடகவியலாளர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் வழங்காது, சம்பந்தமில்லாத பதில்களை வைத்தியர் அருச்சுனா வழங்கி இருந்தார். சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அருச்சுனாவின் சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுகம் யாழில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கடந்த 05 மாதங்களுக்கு முன்னர் சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல்கள் , இலஞ்சம் வாங்குதல் , துஸ்பிரயோகம் , மோசடிகள் என பலவற்றை சமூக ஊடங்கள் ஊடாக வெளிப்படுத்தி இருந்தீர்கள். அது தொடர்பில் நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன ? என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார் அதற்கு, "தற்போது இதற்கு பதில் வழங்க முடியாது. சில காலத்தில் பதில் சொல்லுவோம் நீங்கள் மறந்தாலும் உங்கள் வீடு தேடி வந்து சொல்லுவேன்" என பதில் கூறினார். இதுவரையில் நீங்கள் முன் வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றங்களில் ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. அதேவேளை ஆதாரங்களை வைத்துக்கொண்டு , முறைப்பாடுகளை மேற்கொள்ளவோ , மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காது இருக்க காரணம் என்ன ? என கேட்ட போதும், அதற்கு பதில் கூறாது, நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம். இனிவரும் காலங்களில் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் என கூறினார். (ப) https://newuthayan.com/article/சம்பந்தமில்லாத_பதிலழித்த_வைத்தியர்_அருச்சுனா!
  25. மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் 2ம் இடம் adminOctober 15, 2024 கல்வி அமைச்சினால் நடாத்தப் பட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 8/9 மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி நயோலின் அபிறியானா அன்ரோனியோ குபேரக்குமார் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார். இவர் யாழ் இந்து கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தினையும், மகரகம ஜனாதிபதி கல்லூரியில் 3/8/2024 ல் நடைபெற்ற தேசிய மட்ட போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்று வரலாற்று சாதனையினை படைத்துள்ளாா். இவர் 2018 ம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற English Resitation போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/207538/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.