Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. வைத்தியரால் நிலைகுலைந்த - மாவை,சிறிதரன் மூன்று மாதங்கள் மட்டுமே எம்.பி Vhg அக்டோபர் 06, 2024 நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, சி.சிறிதரன், ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையின் முதல் படியாக விளக்கம் கோரி பதில் பொதுச் செயலாளர் வைத்தியர் பா.சத்தியலிங்கத்தால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதை யாழ்ப்பாண புலனாய்வு அறிந்துள்ளது. இவ்வாறான கடிதத்தை அனுப்புவதாயின் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும் என்பது பொதுவான விதி, அவ் விதி இங்கு மீறப்பட்டுள்ளது. இவ்வாறான கடிதம் எழுதுவதற்கு முன்னர் கட்சி தலைவருடன் பொதுச் செயலாளர் கலந்துரையாட வில்லை. நடந்து முடிந்த கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தேர்தலின் பின்னர் விளக்கம் கோரி கடிதம் அனுப்புவது என்று எடுக்கப்பட்ட முடிவு மாற்றப்பட்டு வேட்பு மனு தாக்கலுக்கு முன்னர் இக்கடிதங்கள் அனுப்பப்பட்டமையின் பின் பெரும் ஆபத்து உள்ளதை இச் சிக்கலுக்குள் ஆக்கப்பட்டவர்களுக்கு தெரியுமோ தெரியாது. சுமந்திரன் மன்னாரில் கடந்த வாரம் கூறினார் இன் நடவடிக்கை பற்றி இப்போது நடத்தி விட்டார். சுமந்திரன், சீ.வி.கே.சிவஞானம், துரைராஜசிங்கம், பதில் பொதுச் செயலாளர் சத்தியலிங்கம் இக் கடித வரைவில் பங்கெடுத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது. சுமந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை 2020 பாராளுமன்ற தேர்தலின் போது எடுக்க வேண்டும் என்று மத்திய குழு தீர்மானம் நிறைவேற்றிய போது ஒழுக்காற்றுக் குழுவின் தலைவராக இருந்த சீ.வி.கே. சிவஞானம் பதவியை இராஜனாமா செய்து சுமந்திரனின் விசாரணையை நீர்த்துப் போக செய்தவர். கட்சியால் விளக்கம் கோரி கடிதம் அனுப்பப் பட்ட ஒருவரை வேட்பாளர் பட்டியலில் இணைத்தாலும் கட்சியின் செயலாளர் அவரின் வேட்பாளர் உரிமையை இரத்துச் செய்யும் அதிகாரம் உள்ளதை நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட அனைவரும் சிந்திப்பது நல்லது. இந்த நோக்கத்தின் அடிப்படையில் இக்கடிதங்கள் நகர்த்தப்பட்டுள்ளமை மிக ஆபத்து என்பதை அனைவரும் உணர வேண்டும். ஆகவே சுமந்திரனின் அடுத்த திட்டமும் வெற்றி, அரசியல் அநாதைகளாக்கப் படும் சங்கூதிய சாமானுகள். இது போலவே வேட்பாளர் பட்டியல் அமையும் இறுதி நாளில் வேட்புமனு தாக்கல் இடம் பெறும், சுமந்திரனின் விருப்பப் பட்டியல் மட்டுமே தெரிவத்தாட்சி அலுவலகரிடம் வழங்கப்படும் யாழ்ப்பாண புலனாய்வுக்கு கிடைத்த மிக முக்கிய தகவல். இந்த மொக்கு மாவை பாப்பம் தம்பி, ஓ... தம்பி என கூறி தானும் அழித்து, கட்சியையும் அழித்து, தமிழ் தேசியம் என்றவர்களையும் அழிக்கப் போகிறது. சுமந்திரன் நேற்று கூறிய கூற்று மிக முக்கியமானது, யாழ் தேர்தல் மாவட்டத்தில் நானும் சிறிதரனும் போட்டியிடுகிறோம் என்று கூறியதன் அடிப்படையில் ஆழமாக பார்த்தால் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்ட வரை கட்சி அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து நீக்கியது என முடிவெடுத்தால் கட்சியின் அங்கத்துவம் இழக்கப்படும். பின்னர் இப்போதைய சட்டத் திருத்தத்திற்கு அமைய கட்சியின் செயலாளர் கட்சி நீக்கிய ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதனை நிராகரிக்கிறது புதியவரின் பெயரை பரிந்துரைக்கிறோம் என தேர்தல் திணைக்களத்தை கோரினால் கட்சியின் முடிவை தேர்தல் திணைக்களம் நடைமுறைப்படுத்தும். அதற்கு எதிராக நீதிமன்றத்தில் இடைக்கால தடையுத்தரவு எடுத்தால் கூட மூன்று மாதங்களுக்கு மேல் செல்லாது எனவே புதிய பாராளுமன்றத்தில் சிறிதரன் வெற்றி பெற்றால் அவரின் பாராளுமன்ற ஆயுள் வெறும் மூன்று மாதங்கள் மட்டும். எனவே சுமந்திரனின் ஆதரவாளர்களால் தமிழரசுக் கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் எல்லாம் இவ்வருட இறுதியில் மீளப் பெறப்பட்டு வருகின்ற தை மாதம் கட்சியின் மகாநாட்டை நடத்தி தலைவராக சுமந்திரனும் செயலாளராக சாணக்கியனும் தெரிவு செய்யப்படுவர் என யாழ்ப்பாண புலனாய்வு அறிகிறது. இத்தனை செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்த நன்றி கடனுக்கு இம்முறை தேசிய பட்டியல் ஊடாக பதில் பொதுச் செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம் பாராளுமன்றம் செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.battinatham.com/2024/10/blog-post_48.html
  2. மீண்டும் கூடியுள்ள தமிழரசுக்கட்சியின் நியமனக்குழு Vhg அக்டோபர் 06, 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் இன்று (06-10-2024) கூடியுள்ளது. நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் களம் இறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக ஆராய்வதற்காக 11 பேர் கொண்ட நியமனக்குழுவை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு நியமித்திருந்தது. களம் இறங்கவுள்ள வேட்பாளர்கள் இந்நிலையில் குறித்த நியமனக்குழு இன்று காலை 11 மணியளவில் வவுனியாவில் கூடியுள்ளது. இதன்போது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழ் கட்சிகள் இணைந்து போட்டியிடுதல் மற்றும் களம் இறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ககப்படுகின்றது. https://www.battinatham.com/2024/10/blog-post_8.html
  3. கனடாவில் யாழ்.பெண் கொலை பெண்ணின் சகோதரன் கைது gayanOctober 5, 2024 கனடா -ஸ்காபுரோ பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இச் சம்பவம் தொடர்பாக பெண்ணின் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 54 வயதான துஷி லட்சுமணன் என்ற பெண்ணே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். கனடாவின் Orton Park – Ellesmere சந்திப்புக்கு அருகாமையிலுள்ள வீடொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தக் கொலைச் சம்பம் இடம்பெறுள்ளதுடன், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமையினால் இப் பெண் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக, உயிரிழந்த பெண்ணின் சகோதரர் மீது இரண்டாம் நிலை கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், டொராண்டோ நகரைச் சேர்ந்த அவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதிலும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. எவ்வாறாயினும், கொலைக்கான காரணங்கள் இதுவரை தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். https://www.thinakaran.lk/2024/10/05/breaking-news/88755/கனடாவில்-யாழ்-பெண்-கொலை-ப/#google_vignette
  4. எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய மற்றும் தமிழ் அரசியலின் வகி பாகம் என்ன? October 5, 2024 — வி.சிவலிங்கம் — நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலும், அதன் முடிவுகளும் புதிய அரசியல் சகாப்தத்தைத் தோற்றுவித்துள்ளன. சுதந்திரத்திற்குப் பின்னதான அரசியல் வரலாற்றில் முதன் முறையாக அதிகார வர்க்கத்திற்கு அப்பால் அரசியல் அதிகாரம் கை மாற்றப்பட்டிருக்கிறது. அதுவும் சாமான்ய குடும்பத்தில் பிறந்து, அதிகாரம் என்பதை சுவைத்து அனுபவிக்காத குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் அதுவும் மிகவும் கொடுமையான ஒடுக்குமுறைகளுக்கு முகம் கொடுத்த அமைப்பினைச் சார்ந்த ஒருவர் மிக நீண்ட போராட்டத்தின் பின்னணியில் இன்று மக்களால் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டுள்ளார். இதற்காக அவர்கள் பல சகாப்தங்கள் சளைக்காமல் பல இழப்புகளுக்கு மத்தியில் மக்கள் மத்தியில் செயற்பட்டதன் விளைவே இவ் அதிகார மாற்றம் ஆகும். கோட்பாட்டு அடிப்படையிலான மாற்றங்கள்: ———————————- இத் தேர்தல் முடிவுகளைக் கோட்பாட்டு அடிப்படையில் விபரிப்பதானால் மக்கள் இனவாதம், அதிகாரக் குவிப்புக் கலந்த நவதாராளவாத ஆட்சிக் கட்டுமானத்தை மாற்ற உதவியதோடு, அதன் அடிப்படையில் உருவான பொருளாதாரக் கட்டுமானத்தையும் மாற்றும்படி கோரியுள்ளனர். அவ்வாறாயின் புதிதாக பெரும்பான்மை மக்களால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன முன்னைய பிரதான கட்சிகளை விட முற்றிலும் வேறான அரசியல் மற்றும் பொருளாதாரக் கோட்பாடுகளைக் கொண்டிருப்பதாகவே அடையாளப்படுத்த முடியும். அந்த அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன நவதாராளவாத அரசியல் மற்றும் நவ தாராளவாத பொருளாதாரக் கட்டுமானங்களுக்கு மாற்றாக புதிய சமூக ஜனநாயக அரசியல் கட்டுமானத்தையும், சமூக சந்தைப் பொருளாதாரக் கோட்பாட்டை நோக்கியே தமது கவனத்தைக் குவித்துள்ளதாக கருதலாம். குறிப்பாக இந்த இரு சாராரும் இடதுசாரி மைய விசையைக் ( Centre-left forces) கொண்ட சக்திகளாகவே கொள்ள வேண்டும். இதற்கான நியாயங்களைத் தொடர்ந்து படிக்கும் வேளையில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். அத்துடன் தமிழ் அரசியலின் எதிர்காலத்தை மையமாகக் கொண்டு பார்க்கையில் பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத ஐக்கிய இலங்கைக்குள் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகளை நோக்கியே மக்களின் எண்ணம் திரும்பியுள்ளது எனலாம். இக் கட்டுரை அகில இலங்கை அளவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் கவனத்தில் கொண்டும், தேசிய ஐக்கியத்தை நோக்கிய பாதையில் நாடு மாற்றத்தை நோக்கி நகர்வதாக கருதுகிறது. ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த நிலையில் பொதுத் தேர்தலுக்கான திகதியும் வெளியாகியுள்ளது. எனவே ஜனாதிபதித் தேர்தலை அடிப்படையாக வைத்து பொதுத் தேர்தலுக்கான அணுகுமுறை எவ்வாறு அமைதல் அவசியம்? என்பது குறித்தே இக் கட்டுரை அதிக கவனம் செலுத்துகிறது. தேர்தலும், கொள்கை மாற்றங்களும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி- ஜே வி பி இணைந்த அணி வெற்றி பெற்ற போதிலும் ஐக்கிய மக்கள் சக்தி சகல சமூகங்களினதும் நம்பிக்கையைப் பெற்ற கட்சியாக காணப்படுகிறது. அந்த அடிப்படையில் இந்த இரு கட்சிகள் பற்றிய குறிப்பாக அரசியல் தாக்கங்களையும், எதிர் காலம் பற்றிய விபரங்களையும் ஆராய்வது முக்கியமானது. ஜே வி பி- தேசிய மக்கள் சக்தி ஆகியன இணைந்து எவ்வாறு அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்தது? என்பதை நாம் அறிதல் அவசியம். இக் கட்சிகளின் இணைவும், தேர்தல் முடிவுகளும் ஓர் பாரிய மாற்றம் ஒன்றிற்கான ஆரம்பமாகவே உள்ளது. மாக்ஸிச சித்தாந்தத்தினை தனது அரசியல் கோட்பாடாகக் கொண்டிருந்த கட்சி குறிப்பாக மிகவும் அடிப்படை மாற்றங்களைக் கோரி பல இழப்புகளைச் சந்தித்த ஒரு கட்சி இன்று தன்னால் நாட்டின் பிரதான அரசியல் நீரோட்டத்தின் தீர்மானகரமான அரசியல் சக்தியாக தேசிய அளவில் நடைபெற்ற தேர்தலில் தனித்து வெல்ல முடியும் என்பதை நிருபித்துள்ளது. இந்தக் கட்சியின் வெற்றி என்பது நாட்டு மக்கள் கடந்த கால அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில் எவ்வளவு வெறுப்படைந்துள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டியது. குறிப்பாக சிறீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன நாட்டின் அரசியலில் பல தசாப்தங்களாக பாரிய தாக்கத்தைச் செலுத்தி வந்தன. ஆனால் இன்று அக் கட்சிகளே நாட்டில் ஊழலையும், பொருளாதார நெருக்கடியையும். வறுமையையும் மக்களுக்கு விட்டுச் சென்றுள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் வெற்றி என்பது பரந்த தொழிலாள வர்க்கத்தின் செயற்பாட்டின் வெளிப்பாடே இந்த வெற்றியாகும். அவர்களே பொருளாதார மாற்றம் ஒன்றைத் தரும்படி தேசிய மக்கள் சக்தி மேல் அழுத்தங்களைப் பிரயோகித்தார்கள். நியாயமான விதத்தில் தேசிய செல்வத்தைப் பங்கீடு செய்யுமாறும், ஊழலை ஒழிக்கும்படியும், சமூக நீதியை வழங்குமாறும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்குமாறும் கோரினார்கள். இத் தேர்தல் முடிவுகள் அவர்களின் குரலாகவே முடிவடைந்துள்ளது. தேசிய மக்கள் சக்தியினர் தமது கூட்டங்களில் பொருளாதார ஏற்றத் தாழ்வை, ஊழலை ஒழிப்பதாக மக்களுடன் ஒரு ஒப்பந்தம் ஒன்றை இத் தேர்தல் மூலம் ஏற்படுத்தியுள்ளனர். ஜே வி பி- தேசிய மக்கள் சக்தி இணைப்பு அமைப்பினர் எதிர்க் கட்சியில் இருந்த வேளையில் அதுவும் மூன்று உறுப்பினர்களே பாராளுமன்றத்தில் இருந்த போதிலும் தமது அரசு பதவிக்கு வந்தால் என்ன செய்வோம்? என்பது குறித்து மிகவும் விரிவாகவே விவாதங்களின்போது முன் வைத்தார்கள். குறிப்பாக, வினைத்திறன் மிக்க பொருளாதார முகாமைத்துவம், அரச கட்டுமானங்களில் சீர் திருத்தம், வெளி நாட்டு முதலீடுகளை ஆகர்ச்சிக்கும் வகையில் உள்கட்டுமான மாற்றங்கள் போன்றவற்றை மேற்கொள்வதாக மக்களுக்கு உறுதியளித்தார்கள். இதுவே இக் கட்சி மீது மக்கள் நம்பிக்கை கொள்வதற்கு காரணமாக அமைந்தது. அத்துடன் நாட்டினை ஓர் கலப்புப் பொருளாதாரத்தின் அடிப்படையில் எடுத்துச் சென்று நாட்டில் ஓர் சோசலிச சமூகத்தைத் தோற்றுவிக்க முடியும் என்பதாக நம்பிக்கை ஊட்டினார்கள். இங்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பணி குறித்து குறிப்பாக சிறுபான்மைத் தேசிய இனங்களின் நம்பிக்கையை அக் கட்சி வென்றுள்ளது. அக் கட்சி தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சி குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தித் துறைகளின் வளர்ச்சிக்கான திட்டங்களை அறிவித்தார்கள். ஐக்கிய மக்கள் சக்தியினர் இத் தேர்தலில் எவ்வாறு தேசிய சிறுபான்மை இனங்களின் வாக்குகளை அதிகளவில் பெற முடிந்தது? என்பதனை ஆராய்ந்தால் அக் கட்சியினர் முதலில் தேசிய நல்லிணக்கம் தொடர்பாகவும், சிறுபான்மைத் தேசிய இனங்களின் குறிப்பாக தமிழ், முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பாக எடுத்த முடிவுகள் ஒரு வகையில் லிபரல் ஜனநாயக அடிப்படைகளைக் கொண்டுள்ளதாகவும், மத்தியை நோக்கிய பாதையாகவும் சிறுபான்மை இனத்தவர் அடையாளம் கண்டார்கள். குறிப்பாக வரலாற்று அடிப்படையில் தொடர்ச்சியாக ஒதுக்கப்பட்ட மக்கள் அதுவும் இனக் குழுமம் மற்றும் மத அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்கான நம்பிக்கையான அணுகுமுறையாக சகல சிறுபான்மைத் தேசிய இனங்களும் உணர்ந்தன. தேர்தல் முடிவுகளை ஆராயும்போது ஐக்கிய மக்கள் சக்தி தன்னைத் தேசிய நல்லிணக்கத்திற்கான சக்தியாக, சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளை அங்கீகரிக்கும் சக்தியாக, ஆட்சியில் சகல பிரிவினருக்குமான வாய்ப்பு உண்டு என்பதை நம்பும் வகையில் கருத்துக்களை முன் வைத்தார்கள். இக் கட்சியினர் தேசிய பொருளாதார வளர்ச்சியில் சாத்தியமான வகைகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த திட்டங்களை முன் வைத்தார்கள். குறிப்பாக பொருளாதார வளர்ச்சியுடன், சமூக பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளையும் தேசிய மக்கள் சக்தியை விட வித்தியாசமான வகையில் முன் வைத்தார்கள். இந்த இரு கட்சிகளினதும் அரசியல் மற்றும் பொருளாதார திட்டங்களை நோக்கும்போது சில அடிப்படைகளில் வித்தியாசமான போக்குகளை நாம் அடையாளம் காண முடியும். உதாரணமாக தேசிய மக்கள் சக்தியின் அணுகுமுறை என்பது தொழிலாள வர்க்கத்தை முதன்மைப்படுத்துவதாக அமைந்திருந்தது. குறிப்பாக கிராமிய ஏழை விவசாய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் அடிப்படை நோக்கத்தைக் கொண்டிருந்தது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியினரின் அணுகுமுறைகள் சிறுபான்மைத் தேசிய இனங்களினதும், நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தின் தேவைகளை உள்ளடக்கியதாக அமைந்தது. வாக்களிப்பு முறை இலங்கையின் வாக்களிப்பு முறை என்பது சமூகம் மிக அதிக அளவில் வர்க்கங்களாக பிளவுற்றிருப்பதையே இத் தேர்தல் உணர்த்தியது. தேசிய மக்கள் சக்தியினர் செல்வத்தை நியாயமான விதத்தில் பங்களிப்பதையும், இதில் அரசின் தலையீட்டின் அவசியம் குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது. பதிலாக ஐக்கிய மக்கள் சக்தியினர் உற்பத்தி குறித்தே அதிக கவனம் செலுத்தினர். இக் கொள்கைகள் மத்தியதர வர்க்கத்தினருக்கு உகந்த கொள்கைகளாக அமைந்திருந்தன. இருப்பினும் இனப் பிரச்சனை குறித்த அம்சங்கள் குறிப்பாக பிராந்திய மற்றும் இனக் குழும அடிப்படையில் நோக்கும்போது சிறுபான்மைத் தேசிய இனங்கள் ஐக்கிய மக்கள் சக்தி மேல் தமது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். வெவ்வேறு பிரதேசங்களில் காணப்பட்ட வாக்களிப்பு விபரங்கள் இவற்றைப் புலப்படுத்தின. இப் பிரச்சனை என்பது மிகவும் உணர்ச்சிகள் கலந்த பிரச்சனை என்பதும், தேசிய மக்கள் சக்தியினர் அதில் மேலும் தெளிவான நிலைப்பாடுகளை எடுத்தல் அவசியம் என்பதையே முடிவுகள் உணர்த்துகின்றன. இனப் பிரச்சனை குறித்து சரியான கொள்கைகளைப் பின்பற்றாவிடில் மேலும் பிளவுகளை அதிகரிப்பதாகவே நிலமைகள் மாறக் கூடும். எனவே தேசிய நல்லிணக்கம், அதிகார பகிர்வு போன்ற அம்சங்களில் தீவிர கவனம் செலுத்துவதன் மூலம் ஓர் நிலையான அரசியல் புறச் சூழலை ஏற்படுத்த முடியும். கூட்டு அரசியலுக்கான அடித்தளங்கள் இத் தேர்தல் முடிவுகள் புதிய அத்தியாயம் ஒன்றிற்கான குறிப்பாக புதிய அரசியல் கூட்டணிக்கான வாய்ப்புகளைத் திறந்துள்ளது. உதாரணமாக, தேர்தல் முடிவுகளை ஆராயும் போது தேசிய மக்கள் சக்தியினர் தமது ஆட்சியை பலமானதாகவும், வினைத் திறன் மிக்கதாகவும் நடத்துவதற்கு அதுவும் பாராளுமன்ற ஆட்சி முறைக்குள் கூட்டணி அவசியமாகிறது. அதே போலவே ஐக்கிய மக்கள் சக்தியினரும் சிறிய கட்சிகளுடன் இணைந்து பரந்த கூட்டணி உருவாக்குவது காலத்தின் தேவையாக மாறியுள்ளது. குறிப்பாக, சிவில் சமூக அமைப்புகள், சிறிய கட்சிகள், நாட்டின் பொருளாதாரத்தில் அக்கறையுடைய வர்த்தக சமூகத்தினது ஆதரவு அவசியமாகிறது. இதன் மூலமே எதிர்கால தேர்தல்களை எதிர் நோக்க முடியும். பொருளாதார முகாமைத்துவம் மற்றும் கொள்கை வேறுபாடுகள் தேசிய மக்கள் சக்தியினர் தற்போது மிகவும் பலமான சவால்களுக்கு முகம் கொடுக்கும் நிலையில் உள்ளனர். மிக அதிக அளவிலான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கடன், உள்நாட்டு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி மூலப் பொருட்கள் இல்லாமல் தொழிற்சாலைகளை இயக்க முடியாத நிலை, வெளிநாட்டுச் செலாவணிப் பற்றாக்குறை, உற்பத்திச் செலவு அதிகரிப்புக் காரணமாக விவசாயம் பாதிப்படைந்துள்ள நிலமைகள் எனப் பல பிரச்சனைகளை எதிர்கொள்ளப் போகின்றனர். தேர்தலில் தொழிலாளர்கள், அரச ஊழியர்கள், விவசாயிகள் மற்றும் பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த பிரிவினருக்கான கொடுப்பனவுகள் தேசிய செல்வத்தைப் பகிர்ந்தளித்தல் என்ற அடிப்படையில் பல வாக்குறுதிகள் தேசிய மக்கள் சக்தியினரால் வழங்கப்பட்டுள்ளன. இவ் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதானால் அதிக வரி விதிக்கவேண்டிய நிலை ஏற்படலாம். இவ்வாறு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை உள்ளுர் வர்த்தக சமூகமும், வெளிநாட்டு கடன் வழங்குவோரும் பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்த வாய்ப்பு உண்டு. இவ்வாறான தருணத்தையே அரசியல் எதிரிகளும் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறான சிக்கலான வேளையில் இரு தரப்பாருக்குமிடையே சம நிலையைப் பேணிச் செல்வது தவிர்க்க முடியாத அம்சமாக மாறலாம். ஐக்கிய மக்கள் சக்தியினர் தம்மை பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்பவர்களாகவும், சந்தை நடிவடிக்கைகளில் சீர் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும், தேசிய உற்பத்தியைத் தூண்டும் விதத்தில் புதிய உற்பத்தியாளர்களை உருவாக்கப் போவதாகவும் தெரிவித்தார்கள். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் நிதி முகாமைத்துவம், ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரித்தல், சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தித் துறைகளை விஸ்தரித்தல் என்ற கொள்கைகளை முன்வைப்பதில் அல்லது செயற்படுத்துவதில் கொள்கை வேறுபாடுகள் எழ வாய்ப்பு உண்டு. சிக்கலைத் தோற்றுவிக்கும் அம்சங்கள் மேலே குறிப்பிட்ட அம்சங்களை அவதானிக்கும் போது பொருளாதாரக் கொள்கைகளில் முரண்பாடு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக, வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுதல், தனியார் மயமாக்குதல், சந்தைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல் என்பன சிலவாகும். இன்று இந்தியப் பொருளாதாரத்தில் இப் பிரச்சனைகள் மிகவும் உக்கிரமடைந்து வருவதை அவதானிக்கலாம். திறந்த பொருளாதாரம் குறித்து இந்த இரு சாராரும் சந்தேகங்களை வெளியிட்டு வருகின்ற போதிலும் குறிப்பாக தேசிய மக்கள் சக்தியினரின் கொள்கைகள் ஐக்கிய மக்கள் சக்தியினரின் அணுகுமுறைகளோடு முரண்படும் வாய்ப்புகள் உண்டு. உதாரணமாக, ஐக்கிய மக்கள் சக்தியினர் சந்தை விஸ்தரிப்பில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அவ்வாறாயின் சில கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். உதாரணமாக நாடு அதிகளவு கடனில் இருப்பதால் கடன் வழங்குபவர்கள் பல நிபந்தனைகளை விதிக்கலாம். வரிச் சலுகைகள், மற்றும் பல கோரிக்கைகளை முன் வைக்கலாம். இதன் மூலம் இந்த இரு பிரிவினருக்குமிடையே கொள்கை அடிப்படையில் முரண்பாடுகள் தோற்ற வாய்ப்பு உண்டு. தேசியவாதமும், நாட்டின் இறைமையும் இப் பிரச்சனை குறித்து நாம் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகிறது. தேசிய மக்கள் சக்தியினர் இலங்கைத் தேசியத்தின் அடையாளம் குறித்து பல்வேறு கருத்துக்களைக் கடந்து வந்துள்ளனர். குறிப்பாக இலங்கையின் பொருளாதார இறைமையை அந்நிய நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள் செல்ல அனுமதிக்க முடியாது என்ற கோட்பாட்டை அடிக்கடி வலியுறுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, தேசிய உற்பத்தியின் பிரதான துறைகள் அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருத்தல் அவசியம் என்கின்றனர். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியினர் நாட்டின் பிரதான துறைகள் சர்வதேச தரத்திற்கு உற்பத்தியை மேற்கொள்ளும் விதத்தில் நவீன மயப்படுத்தப்பட வேண்டுமென வற்புறுத்துகின்றனர். அவ்வாறு நவீன மயப்படுத்த வேண்டுமெனில் அந்நிய நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட வேண்டும். அவ்வாறாயின் நாட்டின் இறைமை அதிகாரம் என்பது பங்கீட்டு அடைப்படையில் அமைய வேண்டும். ஒரு புறத்தில் தேசத்தின் உற்பத்தித் துறையை பாதுகாத்தல் என்பதும், மறு புறத்தில் அவை வெளிநாட்டு உதவியுடன் நவீன மயப்படுத்தல் என்பதும் மிகவும் சிக்கலான கொள்கைப் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கலாம். இலங்கை உற்பத்திகள் சர்வதேச தரத்தை அடைய வேண்டுமெனில் வெளிநாட்டு தொழில்நுட்ப உதவிகள் இவற்றை எதுவித லாப நோக்கமும் இல்லாமல் இந் நாடுகள் வழங்கப் போவதில்லை. அத்துடன் சீனா அல்லது ரஷ்யா பொன்ற நாடுகளின் உதவிகளைப் பெறுவதாயின் அணிசேராக் கொள்கை என்பது சிக்கலான நிலைக்குள் தள்ளப்படும். நாம் ஒரு புறத்தில் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியைக் கொண்டாடுகின்ற போதிலும், அவை அதிகாரக் கட்டுமானத்தை அடைந்ததும் புதிய நிலமைகளைத் தோற்றுவிப்பதால் ஏற்கெனவே தெரிவித்த கொள்கைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த நிர்ப்பந்திக்கின்றன. இவற்றைக் கட்சி அடிப்படையிலான பிரச்சனைகள் என்பதை விட சமூகத்தின் வெவ்வேறு பிரிவினரின் நலன்களின் போட்டியாக அவை மாறிவிடும். இங்கு கட்சி அரசியலை விட தேசிய நலன் முதன்மை பெறுகிறது. விட்டுக் கொடுப்பு என்பது நிர்ப்பந்திக்கப்படுகிறது. கூட்டாட்சியும், கட்டுமான சீர் திருத்தமும் பொருளாதார அடிப்படைகளில் முரண்பாடுகள் எழும்போது அது ஆட்சிக் கட்டுமானத்தை நெருக்கடிக்குள் தள்ளுகிறது. தற்போதுள்ள ஆட்சிக் கட்டுமானம் இவ்வாறான நெருக்கடிகளைச் சமாளிக்கும் அடிப்டையில் மாற்றங்கள் தேவையாகின்றன. பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் சில பிரிவினர் அரசாங்கத்திற்கு சில சமயங்களில் நிர்ப்பந்தத்தினை ஏற்படுத்தக் கூடும். தேசிய மக்கள் சக்தியினர் இவ்வாறான பிரிவினரின் நிபந்தனைகள், ஊழல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதாயின் அரச நிறுவனங்கள் பலப்படுத்தப்படுதல் அவசியமாகிறது. இவ்வாறான சமயங்களில் ஐக்கிய மக்கள் சக்தியினர் வெளிப்படைத் தன்மை, வினைத் திறன் மிக்க பொதுச் சேவை, சட்டப்படியான ஆட்சி என்பவற்றை வற்புறுத்தக் கூடும். எதிர்காலம் எவ்வாறு அமையலாம்? இலங்கையின் சமீப கால அரசியலை நோக்கும்போது அவை ஓர் கூட்டு அரசாங்கமாகவே அமைந்துள்ளன. அவ்வாறான ஓர் கூட்டு அரசு ஒன்றிற்கான அடையாளங்களே தற்போதும் தென்படுகின்றன. நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டு இருக்கையில் கட்சி அரசியலுக்கு முதலிடம் கொடுக்க எந்த ஆட்சியாளரும் விரும்பப் போவதில்லை. தேர்தல் முடிவுகள், கொள்கைகள் அக் கொள்கைகள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகப் பிரிவுகளின் நலன்களும் செயற்பாடுகளும் சமூக முன்னேற்றத்திற்கு அவசியமானவை. ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பொதுத் தேர்தல் முடிவுகளைக் கணித்தால் அவை ஆட்சி என்பது நல்லிணக்க கூட்டு அரசாக அமைவதே சாத்தியம் எனக் கருத முடிகிறது. தென் ஆபிரிக்கா 1994 ம் ஆண்டு வெள்ளை இன ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு பெரும்பான்மை கறுப்பு இன மக்களின் அரசாக மலர்ந்தது. அவ் விடுதலைப் போராட்டத்தில் நெல்சன் மன்டெலா தலைமையிலான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி தலைமை தாங்கியது. கடந்த 30 ஆண்டுகளாக தென் ஆபிரிக்க பாராளுமன்றத்தில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றிருந்தது. ஆனால் 2024ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தனது பெரும்பான்மையை இழந்தது. இதற்குப் பிரதான காரணம் ஆபிரிக்க தேசிய காங்கிரசிற்குள் ஏற்பட்ட உள் முரண்பாடுகள், ஊழல், விரயம் அதிகரித்துச் சென்றமையேயாகும். இந் நிலையில் தமது தோல்வியை ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பின்வருமாறு விபரித்தது. அதாவது தேசிய ஐக்கியமும், எதிர்பார்த்த பொருளாதார அபிவிருத்தியும் அடைய முடியாமைக்குக் காரணம் அரசியல் கட்சிகளுக்கிடையே காணப்பட்ட முரண்பாடுகளே எனவும், தேசிய பொருளாதாரத்தை எடுத்துச் செல்வதில் அதாவது முதலாளித்துவமற்ற வளர்ச்சிப் பாதையில் நாட்டை இட்டுச் செல்வதா? அல்லது தாராளவாத பொருளாதார அடிப்படையில் எடுத்துச் செல்வதா? என்ற பிரச்சனைகள் எழுந்த நிலையில் நாட்டின் பிரதான எதிர்க் கட்சியாகிய ஜனநாயக கூட்டணியுடன் ( பெரும்பான்மை வெள்ளை இன மக்களின் ஆதரவுடைய கட்சி) புதிய அரசை உருவாக்கினர். தற்போது அந்த அரசு தேசிய ஐக்கிய அரசு என அழைக்கப்படுகிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடி பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய அடிப்படையில் அவ்வாறான ஒரு தேசிய அரச உருவாக்கமே இலங்கையிலும் சாத்தியமாகத் தென்படுகிறது. தேசிய மக்கள் சக்தியினர் நாட்டின் சிறுபான்மைத் தேசிய இனங்களினதும், மத்தியதர வர்க்கத்தினரதும் நம்பிக்கையை வெற்றி கொள்வதாயின் ஒரு கூட்டு அரசை தோற்றுவிப்பதன் மூலம் நிலைபேறான ஆட்சியை வழங்க முடியும். ஐக்கிய மக்கள் சக்தியினர் எதிர்க் கட்சியாக அமர்ந்தாலும் தேசிய முன்னேற்றம் குறித்த பிரச்சனைகளில் ஒத்துழைப்பு வழங்கும் விதத்திலான இணைப்பு அவசியம். உதாரணமாக, தேசிய இனப் பிரச்சனை சாத்தியமான விதத்தில் தீர்க்கப்படுவதற்கு இந்த இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தேவையாகிறது. மிக நீண்டகாலப் பிரச்சனையை நியாயமான விதத்தில் அணுகித் தீர்த்தால் பொருளாதாரப் பிரச்சனை தீர்வதற்கான பல கதவுகள் திறக்க வாய்ப்புண்டு. உதாரணமாக தேர்தல் முடிவுகளை ஆழமாக அவதானிக்கும் போது குறிப்பாக 50 சதவீதத்திற்கும் குறைவான மக்களே ஜனாதிபதிக்கு வாக்களித்த நிலையிலும், பெரும்பான்மையான சிறுபான்மை இனத்தவர்களும், மத்தியதர வர்க்கத்தினரும் புதிய ஜனாதிபதிக்கு வாக்களிக்காத நிலையிலும் அனைவரையும் அணைத்துச் செல்லும் அரசியல் அணுகுமுறை மூலமே நிலைபெறான ஆட்சியை நடத்த முடியும் என்பது மிகவும் வெளிப்படை. எனவே கூட்டு அடிப்படையிலான அரசு ஒன்றிற்கான அதாவது சிறுபான்மைத் தேசிய இனங்களினதும், மத்தியதர வர்க்கத்தினதும் நம்பிக்கையைப் பெறும் வகையிலான கூட்டு அரசு தேவையாகிறது. தேர்தல் முடிவுகள் தற்போது புதிய தேர்தல் கூட்டணிக்கான அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிலவும் பொருளாதார சமத்துவமற்ற நிலமையை ஏற்படுத்தவும், ஆட்சி முறையில் பாரிய மாற்றங்களையும் ஏற்படுத்தினால் தேசிய மக்கள் சக்தியின்மேல் தொழிலாள வர்க்கத்தினர் நம்பிக்கை கொள்வார்கள். ஆனால் மறு பக்கத்தில் பொருளாதார செயற்பாடுகள் சிக்கலான நிலமைகளைத் தோற்றுவித்தால் மத்தியதர வர்க்கத்தினரும், நகர்ப்புற தொழிலாளர்களும் ஐக்கிய மக்கள் சக்தியை நோக்கி நகர முற்படலாம். இவை பொதுத் தேர்தலில் பலமான போட்டிக் களங்களைத் தோற்றுவிக்கலாம். எனவே எதிர்வரும் பொதுத் தேர்தல் என்பது எதிர்கால அரசியல் பொருளாதாரப் பாதையை தேர்ந்தெடுக்கும் தேர்தலாக அமையலாம். தேசிய இனப் பிரச்சனை இலங்கை அரசியலில் தேசிய இனப் பிரச்சனை என்பது பிரதான மைய அம்சமாக உள்ளது. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது ஐக்கிய மக்கள் சக்தியினர் தேசிய சிறுபான்மை இனங்களின் பலமான ஆதரவைக் கொண்டிருப்பது புலப்படுகிறது. அந்த அடிப்படையில் தேசிய இனப் பிரச்சனைக்கான நியாயமான தீர்வுகளை எட்டுவதற்கு அக் கட்சி காத்திரமான பங்கினைச் செலுத்த வேண்டும். குறிப்பாக தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாக அல்லது ஐக்கிய மக்கள் சக்தி அரசாக அமைந்தாலும் நிலையான ஆட்சி ஒன்றினைத் தருவதாயின் நாட்டில் இன மற்றும் மத முரண்பாடுகளைத் தணித்தல் அவசியமாகிறது. குறிப்பாக இனியும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித்து விடப்பட்டவைகளாக உணரும் நிலை ஏற்படக் கூடாது. தேசிய பொருளாதாரக் கட்டுமானம் தொடர்பான விவாதங்கள் எதிர் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் நிறைந்த அம்சங்களாக மாற வாய்ப்புண்டு. இவையே தேசிய அரசியலின் எதிர்காலப் போக்கினைத் தீர்மானிக்கும். கடந்த காலங்களில் இனவாதம், தேசிய பாதுகாப்பு என்பன தேசிய அரசியலின் போக்கைத் தீர்மானித்தன. தேசிய மக்கள் சக்தியின் பிரதான இலக்குகளான தேசிய பொருளாதார வளர்ச்சி, சந்தைச் செயற்பாடுகளில் நம்பிக்கை கொள்ளுதல் என்பன தேசிய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் பாரிய பங்கினைச் செலுத்தப் போகின்றன. ஒரு புறத்தில் பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த பிரிவினருக்கான பாதுகாப்புக் கொள்கைகளுக்கும், பொருளாதார வளர்ச்சியில் சந்தைச் செயற்பாடுகளின் பங்களிப்பிற்குமிடையே மிகக் காத்திரமான பொருளாதார முரண்பாடுகள் தோற்றம் பெற வாய்ப்பு உண்டு. இலங்கையின் எதிர்கால அரசியல் என்பது ஏற்கெனவே குறிப்பிட்ட பிரச்சனைகளில் ஜே வி பி- தேசிய மக்கள் சக்தி எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறது? என்பதிலும் அவ்வாறான நெருக்கடிகளின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளிலும் எதிர்காலம் மிகவும் தங்கியுள்ளது. இவ்வாறான சிக்கலான பின்னணியில் தமிழ் அரசியலின் மூலோபாய தூர நோக்கு என்ன? என்பதே பிரதான கேள்வியாக அமைகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னதான நிலமைகளை அவதானிக்கும் போது தமிழ் பிரதேசங்களிலுள்ள இடதுசாரி மையக் கருத்துகளைக் கொண்டிருக்கும் கட்சிகள், குழுக்கள், இயக்கங்கள், தனி நபர்கள் என்போர் இச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் தற்போது எழுந்துள்ள அரசியல் சூழல் என்பது மிக அபூர்வமாகவே ஏற்படும். பழைய வலதுசாரி இனவாத, ஏகாதிபத்தியசார்பு அதிகார வர்க்க பிரிவினர் நாட்டை மிக மோசமான நிலைக்குள் தள்ளி மக்களை வறுமை நிலைக்குத் தள்ளியதன் விளைவே தற்போதைய புதிய நிலமையாகும். அது மட்டுமல்லாது கடந்த காலங்களில் தமிழ் அரசியல் என்பது முரண்பாட்டை கூர்மைப்படுத்தும் அணுகுமுறையைக் கையாண்டிருந்தது. உதாரணமாக, இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணியாக 1970 ம் ஆண்டு சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் ஐக்கிய முன்னணி அரசு தோற்றம் பெற்றது. தமிழரசுக் கட்சி அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தவில்லை. 1994 இல் சந்திரிகா தலைமையில் அரசு உருவானபோது எடுக்கப்பட்ட முடிவுகள் குறிப்பாக 2000ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசியல் பொதி தமிழரசுக் கட்சியின் ஆதரவு அற்ற நிலையில் தோற்றுப் போனது. அதே போலவே 2015ம் ஆண்டில் மைத்திரி தலைமையில் நல்லிணக்க அரசு தோற்றம் பெற்ற வேளையில் தமிழரசுக் கட்சிக்குள் உள் முரண்பாடுகள் அதிகரித்தன. இவ்வாறு கிடைத்த சந்தர்ப்பங்கள் நழுவ விடப்பட்ட பின்னர் அத் தீர்வுகள் குறித்து குறிப்பாக சந்திரிகா தலைமையில் முன்வைக்கப்பட்ட அரசியல் பொதி பற்றி இன்னமும் சிலாகித்துப் பேசப்படுகிறது. இந்த நிலமைகளைச் சரியாகக் கணித்து எதிர்கால அரசியலுக்கான புதிய பாதையைத் தோற்றுவிப்பதே இந்த இடதுசாரி மைய விசைகளின் பணியாக அமையும். குறிப்பாக இலங்கை முழுவதும் புதிய மாற்றத்தை நோக்கி மக்கள் தயாராவதை அவதானிக்க முடிகிறது. பழைய பிற்போக்கு இனவாத, மதவாத சக்திகளைத் தோற்கடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே போலவே இன முறுகல்களைப் பயன்படுத்தி பிரிவினைவாத அரசியலை முன்னெடுக்கும் குறும்தேசியவாத சக்திகளும் தோல்வியடையும் நிலைகள் உள்ளன. மறு புறத்தில் பல அரசியல் கட்சிகள் சமூக ஜனநாயக கோட்பாடுகளை வரித்து இன நல்லிணக்கம், சகல பிரிவினரையும் உள்ளடக்கிய ஆட்சி முறை, மொழி அடிப்படையிலான பாரபட்ச கொள்கைகளை நிராகரிக்கும் போக்கு, பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பிரதேசங்களின் வளர்ச்சிக்கான திட்டங்கள், அதிகார பரவலாக்கம் என்பது பற்றி தேசிய அளவில் விவாதங்கள் ஆரம்பமாகியுள்ளன. இவ்வாறான விவாதங்கள் முன்னெப்போதும் சிங்களப் பகுதிகளில் நடந்ததில்லை. நிறைவேற்று அதிகாரத்தை எட்டியுள்ள தேசிய மக்கள் சக்தியினர் பிரதேச அபிவிருத்தி, சம அடிப்படையிலான பிரதிநிதித்துவம், சுயாதீன செயற்பாடு என்பவற்றை மிகவும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். சிறுபான்மைத் தேசிய இனங்களின் நம்பிக்கையை வெல்வதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான முன்னெடுப்புகள் என்பது மொழி, மத, இன மற்றும் வர்க்க வேறுபாடுகளைக் கடந்து செல்வதாக உள்ளது. இக் கொள்கைகள் இன்று பலமாக முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்ப் பிரதேச அரசியல் மேலும் மேலும் இன ஐக்கியத்தை நோக்கிய வழியில் திரும்பியுள்ள பின்னணியில், தமிழ் மக்களின் வாக்குப் பலம் படிப்படியாக தேசிய ஐக்கியத்தை வலியுறுத்தும் கட்சிகளை நோக்கிச் சென்றுள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன தேசிய நல்லிணக்கத்திற்கான பாலமாக மாற்றமடைந்து வருகின்றன. இவ்வாறான வரலாற்று மாற்றத்தை தமிழ் அரசியலில் உள்ள இடதுசாரி மைய விசைகள் இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு சக்திகளையும் தமது நேச சக்திகளாக மக்கள் கருத வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார சமத்துவம், தேசிய செல்வத்தை நியாயமான விதத்தில் பங்கீடு செய்தல் போன்றவற்றில் இணைந்தும், சமூக நீதி, பொருளாதார சமத்துவம், சகலத்தையும் உள்ளடக்கிய அபிவிருத்தி போன்றவற்றில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் செயற்பட முடியும். இந்த இரு கட்சிகளும் ஊழலுக்கு எதிராகவும், நியாயமான பொருளாதார வளர்ச்சியை ஆதரித்தும், தேசிய சிறுபான்மை இனங்களின் ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தியும், ஓர் ஜனநாயக அரசை தோற்றுவித்தலை வலியுறுத்தியும் செல்கையில் இப் பொதுவான அம்சங்களில் தமிழ் தலைமை தனித்து நிற்பதை விட இணைந்து செல்வதே மேல் என்பதை நாம் உணர வேண்டும். சிறுபான்மைத் தேசிய இனங்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான அடையாளங்கள் தென்படும் இவ் வேளையில் குறிப்பாக தமிழ் பிரதேசங்களின் கல்வி, சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் காத்திரமான கரிசனையைக் கொண்டிருக்கும் இத் தருணத்தில் தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன தேசிய வளர்ச்சியில் அதிக கரிசனையைக் கொண்டிருக்கும் வேளையில் அதிகார பரவலாக்கம், போர்க்குற்ற விசாரணைகள், காணி அதிகாரம், கலாச்சார சுயாதீனம் என்பவற்றை வலியுறுத்தும் புறச் சூழல் படிப்படியாக ஏற்பட்டு வருகிறது. தேசிய ஐக்கியம், தேசிய அரசுக் கட்டுமானத்தில் சகல தேசிய இனங்களுக்குமான பங்களிப்பு என வற்புறுத்தி வரும் இன்றைய அரசு ஒரு பரந்த தேசிய நல்லாட்சிக் கட்டுமானத்தை நோக்கிச் செல்கையில் அவ்வாறான முற்போக்கான பயணத்தில் ஏனைய தேசிய சிறுபான்மை இனங்கள் இணைந்து கொள்ள மறுப்பதற்கான தடைகள் என்ன? ஓர் காத்திரமான சமூக நீதியை நோக்கிச் செல்கையில் அவற்றைப் பலப்படுத்த தவறுவதன் அடிப்படை என்ன? இலங்கை ஒரு பல் தேசிய இனங்கள் வாழும் நாடு என்பதை ஏற்றுள்ள நிலையில் குறிப்பாக பொருளாதார சமத்துவத்தை வலியுறுத்துவதோடு, தேசிய சிறுபான்மை இனங்களின் பிரச்சனைகளையும் அணுகித் தீர்ப்பதற்கான தருணத்தில் ஐக்கியத்தை நோக்கிய பாதையில் அரசியலை எடுத்துச் செல்வது அத்தியாவசியமானது. இடதுசாரி மைய விசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் சக்திகள் இந்த ஒட்டு மொத்தமான மாற்றத்தில் ஓர் பரந்த முற்போக்கு அணியைப் பலப்படுத்துவதில் ஈடுபட வேண்டும். குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியிலுள்ள முற்போக்கு மற்றும் இடதுசாரி மையவிசை சக்திகள் வலதுசாரி பிற்போக்கு சக்திகளுக்கு எதிரான இப் போராட்டத்தில் கலந்து பலப்படுத்துவது வரலாற்றுக் கடமையாகும். இவ்வாறான பரந்த இடதுசாரி மைய விசைக் கூட்டணியை தோற்றுவிப்பதன் மூலம் பிளவுபட்டிருக்கும் தமிழ், முஸ்லீம், மலையக தமிழ் கட்சிகளையும் அதே வேளை தேசிய முன்னேற்றத்தில் அதிக கவனத்தைச் செலுத்தும் மத்தியதர வர்க்கத்தினருடனும் இன, மத, வாக்காளர் என்ற எல்லைகளைக் கடந்து இணைய முடியும். இவ்வாறான இணைப்பு என்பது பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தமிழரசுக் கட்சியின் பணி என்ன? தமிழரசுக் கட்சியும் மிக நிர்ணயமான அரசியல் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 76 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் தேசிய பாதுகாப்பை நோக்கி தமிழ் அரசியல் சென்றிருந்தது. ஆரம்பத்தில் மிதவாதத் தலைமையினாலும் பின்னர் தீவிரவாதத் தலைமையினாலும் வழி நடத்தப்பட்டது. முடிவில் தீவிரவாதத் தலைமையின் ஜனநாயக விரோத செயற்பாடுகள் படிப்படியாக வன்முறையை நோக்கி மாறி பாரிய சிவில் யுத்தத்தைத் தோற்றுவித்தது. பல ஆயிரம் மக்களும், கோடிக் கணக்கான சொத்துக்களும், பல லட்சம் மக்களின் இடப் பெயர்வுகளும் தமிழ் தேசியவாதத்தின் விளைபொருளாக அமைந்தன. இன்று தமிழ் தேசியவாதம் என்பது மிகவும் பலவீனமடைந்து கூறுகளாக உள்ளது. இவ்வாறான நிலையைச் சிங்கள பௌத்த பேரினவாதம் தமக்குச் சார்பாகப் பயன்படுத்தியது. தமிழ் பிரதேசங்களில் ராணுவ முகாம்கள், குடியிருப்புகள், குடியேற்றங்கள், நில அபகரிப்புகள், அரச நிறுவனங்களில் தமிழர்களின் பங்களிப்பு அருகிச் செல்லல் என நிலமைகள் நாளாந்தம் அடையாளங்களை இழக்கும் அவதிக்குள் சென்றுள்ளன. இவ்வாறான நிலையில் முதலில் இருப்பதையும் இழக்கும் நிலையை நோக்கி வழுக்கிச் செல்லும் நிலமைகளைத் தடுப்பதாயின் தற்போதுள்ள வாய்ப்பான ஜனநாயக மாற்றங்களை இறுகப் பற்றுவது அவசியமானது. தற்போதைய தமிழ் அரசியல் மிக மோசமான தனிநபர் தாக்குதலாக மாறி பண்பற்ற, நெறி பிசகிய வரலாற்றிற்குள் சென்றுள்ளது. இவ்வாறான நிலையிலிருந்து மாற்றத்தைக் கோரும் வகையிலேயே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியின் கோரிக்கையை ஏற்று வாக்களித்துள்ளனர். 2015ம் ஆண்டு மகிந்த ராஜபக்ஸ தனது மூன்றாவது பதவிக் காலத்திற்காக நடத்திய ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள, முஸ்லீம் மற்றும் மலையக மக்கள் ஒன்றிணைந்து தோற்கடித்தார்கள். அவ்வாறே 2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இனவாத ரணில்-ராஜபக்ஸ கூட்டிற்கு எதிராக முழு நாடும் இணைந்து வாக்களித்தது. இன்று தேசிய ஐக்கியத்தை வலியுறுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்துள்ளது. தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகளை வலியுறுத்தியும், தேசிய பொருளாதார வளர்ச்சியை முன் நிறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் மக்கள் வாக்களித்துள்ளனர். இதில் தமிழ் மக்களும் இணைந்துள்ளனர். எனவே தேசிய நல்லிணக்கத்திற்கு ஆதரவான இரு பிரதான சக்திகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் இக் கட்சிகளுடன் நல்லுறவை ஏற்படுத்துவது தமிழரசுக் கட்சியின் பிரதான கடமையாகிறது. குறும் தேசியவாத சகதிக்குள் மக்களை அழைத்துச் செல்லாது தேசிய அடிப்படையிலான மாற்றத்தின் பங்குதாரிகளாக மாற்றுவது தமிழ் அரசியல் தலைமைகளின் பிரதான பணியாகிறது. எனவே எதிர்வரும் பொதுத் தேர்தல் என்பது தமிழ் அரசியலில் காத்திரமான அடிப்படை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியைத் தோற்றுவிக்க வேண்டும். https://arangamnews.com/?p=11302
  5. அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் மீண்டும் இழக்கப்படும் ஆபத்து!!! October 5, 2024 அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் மீண்டும் இழக்கப்படும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது. 1994 மற்றும் 2020 களில் அம்பாறை மாவட்டத்தில் ஒற்றுமை இன்மையால் தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டமை தெரிந்ததே. இம் முறையும் அதே போன்றதொரு துர்ப்பாக்கிய நிலை உருவாகக் கூடிய களநிலவரம் ஒன்று தென்படுகிறது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவு மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த வேளையில் அம்பாறை மாவட்டத்தில் மூன்றாவது சமூகமாகவுள்ள தமிழர்கள் ஒரு குடையின் கீழ் போட்டியிட வேண்டும். இன்றேல் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு பிரதிநிதித்தும் இழக்கப்படும் என்று பொதுக் கட்டமைப்பு உட்பட பல சமூக ஆர்வலர்களும் உரத்த குரலில் கருத்தை தெரிவித்துள்ளார் வைத்தனர். இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளிட்ட ஆறு தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஓரணியில் போட்டியிடுவதென வியாழக்கிழமை இரவு காரைதீவில் இடம் பெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் 24 மணிநேரத்துள் இலங்கை தமிழரசுக் கட்சி தனிவழி போக தீர்மானித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தங்கள் தலைமையில் ஓரணியில் ஒன்றுசேருமாறு கோரி வேட்புமனு விண்ணப்ப படிவத்தை பெற்றுள்ளது. இந் நிலையில் ஏனைய கட்சிகளும் தனிவழி போனால் சுமார் எட்டு அணிகள் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிச்சயமாக பிரதிநிதித்துவத்தை இழக்க செய்யும் என்பதை அனைவரும் அறிவர். பிரதிநிதித்துவம் தான் குறிக்கோள் என்றால் அனைவரும் இதயசுத்தியுடன் ஒரு அணியில் போட்டியிடுமாறு அக்கறையுள்ள சமூக ஆர்வலர்கள் இறுதி நேர கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.supeedsam.com/206392/
  6. பார் பெர்மிற் – நிலாந்தன் அரசுத் தலைவர் அனுர, பார் பெர்மிற் – மதுச்சாலை அனுமதிகள் தொடர்பான விடயத்தைக் கைவிட்டாலும் சுமந்திரன் அதனைக் கைவிட மாட்டார் போலத் தெரிகிறது என்று ஒரு வெளிநாட்டில் வசிக்கும் நண்பர் முகநூலில் எழுதியுள்ளார். அதில் உண்மை உண்டு. தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு பகுதியினருக்கு ரணில் விக்கிரமசிங்க மதுச்சாலை அனுமதிப் பத்திரங்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் அதிகமாக முன்வைத்ததும் அதைப் பிரசித்தப்படுத்தியதும் சுமந்திரனும் அவருடைய அணியினரும்தான். ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தன் வசப்படுத்துவதற்கு அவ்வாறு மதுச்சாலை அனுமதிப் பத்திரங்களை வழங்கியதாகக் குற்றஞ் சாட்டப்படுகின்றது. தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே தமது சொந்த மக்களுக்கு மது விற்கிறார்கள் என்பது தமிழ் பொது உளவியலில் தாக்கத்தைச் செலுத்தக்கூடிய ஒரு குற்றச்சாட்டு. சுமந்திரன் அதை நன்கு விளங்கி தனக்கு எதிரான தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக அதனை திட்டமிட்டுக் கட்டமைத்து வருகிறார். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் மதுச்சாலைகளுக்கான அனுமதிப் பத்திரத்தை அல்லது எரிபொருள் விற்பனை நிலையத்துக்கான அனுமதிப் பத்திரத்தை வாங்குகிறார்கள், மதுசாலைகளையும் எரிபொருள் விற்பனை நிலையங்களையும் தாங்களே நடத்துகிறார்கள் அல்லது தங்களுடைய பினாமிகளுக்கு ஊடாக நடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு புதியது அல்ல. கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீதும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீதும் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் உண்டு. ஆனால் தொகையாக ஒரு தொகுதி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அவ்வாறு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவது இதுதான் முதல் தடவை. அவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறுமைப்படுத்தலாம், மக்கள் முன் அம்பலப்படுத்தலாம் அவமானப்படுத்தலாம். அவர்களுடைய வாக்காளர்கள் மத்தியிலேயே அவர்களுடைய மதிப்பைக் குறைக்கலாம். அவர்கள் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதையும் தடுக்கலாம். தமிழ்ப் பொதுப் புத்திக்குள் குடியாமை அதாவது மது அருந்தாமை என்பது ஓர் ஒழுக்கமாக கருதப்படுகின்றது. எனினும் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய பல சான்றோர், துறைசார் நிபுணர்கள் மதுப்பிரியர்களாக இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள். இங்கே பிரச்சினை எங்கு வருகிறது என்றால் மக்கள் பிரதிநிதிகள் மதுச்சாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுதான். அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராகிய விக்னேஸ்வரன் அதை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியதன் விளைவாக இப்பொழுது சர்ச்சைகளுக்குள் சிக்கியிருக்கின்றார். ஆனால் குற்றஞ்சாட்டப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அவர் ஒருவர் தான் இதுவரை குற்றச்சாட்டு தொடர்பாக தனது வாக்காளர்களுக்கு தன்னிலை விளக்கத்தை வழங்கியிருக்கிறார். ஏனைய யாருமே அது தொடர்பாக வாய் திறக்கவில்லை. அரசுத் தலைவர் அந்தப் பட்டியலை வெளிவிடும்வரை காத்திருக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் குற்றச்சாட்டுகளில் உண்மை உண்டா இல்லையா என்பதனை தமது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உண்டு. மதுச்சாலை அனுமதிப் பத்திரங்களில் மட்டுமல்ல காசுப் பெட்டி கைமாறியது, கள்ள டீல்கள் செய்தது போன்றவை தொடர்பாகவும் வாய்திறக்க வேண்டும். இவை தொடர்பில் அவர்கள் கள்ள மௌணம் சாதிக்க முடியாது. இவைபோன்ற விடயங்களில் தமது சொந்த மக்களுக்குப் பொறுப்புக்கூற முடியாத அல்லது பதிலளிக்க முடியாத அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கத் தகுதியற்றவர்கள். தென்னிலங்கையில் இப்பொழுது “அனுர அலை” ஒன்று அடிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழ் நோக்கு நிலையில் அது மெய்யான மாற்றம் இல்லைத்தான். ஆனாலும் அரசியலில் நேர்மையானவர்களையும் கண்ணியமானவர்களையும் தெரிவு செய்ய வேண்டும் என்ற பொது ஜன விருப்பத்தை அது மீண்டும் அரங்கில் பேசுபொருள் ஆக்கியிருக்கிறது. அந்த அலை தமிழ் மக்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உண்மையானவர்கள், நேர்மையானவர்கள், கண்ணியமானவர்கள் போட்டியிட வேண்டும். குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்களும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அரசியலை தேக்க நிலையில் வைத்திருப்பதற்கு பொறுப்பானவர்களும் போட்டியிடக் கூடாது என்ற கோரிக்கைகள் வலிமையாக மேலெழுகின்றன. பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும், தமது மக்களுக்கு பொறுப்புக் கூறத்தக்க நேர்மையானவர்கள், தகுதியுள்ளவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக மேலெழுகின்றன. இப்படிப்பட்டதோர் பின்னணியில் தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக சுமந்திரன் அணியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு வலிமை உண்டு. தமிழ்ப் பொது புத்தியை பொறுத்தவரை மக்கள் பிரதிநிதிகள் மதுச்சாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றது, அல்லது தமது பினாமிகளின் ஊடாக மதுச்சாலைகளை நிர்வகிப்பது என்பது அவர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கூடியது. ஆனால் தன் அரசியல் எதிரிகளை அவ்வாறு தகுதி நீக்கம் செய்ய முற்படும் சுமந்திரன் அணி அந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் தகுதியுடையதா? ஏனெனில் சுமந்திரன் எப்படிப்பட்ட ஒரு அரசியலை செய்கின்றார்? தமிழ் மக்களைச் சிதறடிக்கும் அரசியலைத்தான் அவர் செய்து வருகிறார். அவர் எல்லாவற்றையும் கொட்டிக் குலைக்கிறார். தனது சொந்தக் கட்சியையும் கொட்டிக்குலைக்கிறார். அவரும் தமிழ் மக்களுக்குப் பொறுப்புக் கூறாத ஒருவர்தான். அதைவிட முக்கியமாக, தமிழ் மக்களுக்கு எதிரான இனஅழிப்புத் தொடர்பில் பொறுப்புக்கூறத் தயாரற்ற சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டார். ஜனாதிபதித் தேர்தல் நடந்த பொழுது ஐநா கூட்டத் தொடரும் நடந்து கொண்டிருந்தது. அங்கே போர்க்களத்தில் நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பாக சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகத்தின் அடுத்த கட்டத்தைத் தீர்மானிப்பது தொடர்பில் விவாதங்கள் நடந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் சஜித் பிரேமதாச பொறுப்புக்கூறல் தொடர்பில் தமிழ் மக்களுக்கு எந்த வாக்குறுதியையும் வழங்கவில்லை. பொறுப்புக்கூறல் எனப்படுவது இறந்த காலத்தில் நிகழ்ந்த குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவது. இறந்த காலத்துக்கு பொறுப்புக்கூறத் தயாரற்ற ஒரு தலைவர் நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் எப்படிப் பொறுப்புக் கூறுவார்? இந்த விடயத்தில் பொறுப்புக் கூறத் தயாரற்ற சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்கும் ஒரு அரசியல்வாதி, தமிழ் அரசியலை எங்கே கொண்டு போய் நிறுத்த முயற்சிக்கின்றார்? தமிழ் மக்களுக்கு எப்படிப்பட்ட ஒரு நீதியைப் பெற்றுத் தர முயற்சிக்கின்றார்? பிரதான அரசியல் விவகாரத்தில் தனது சொந்த மக்களுக்குப் பொறுப்புக் கூறாத ஓர் அரசியல்வாதி தனது அரசியல் எதிரிகள் சலுகையாக மதுச்சாலை அனுமதிகளைப் பெற்றது குறித்துக் குற்றம் சாட்டுகிறார். தனது அரசியல் எதிரிகளை சிறுமைப்படுத்தித் தோற்கடிக்க முயற்சிக்கும் அவர் எப்படிப்பட்ட ஓர் அரசியலை முன்னெடுக்கிறார்? தமிழ் மக்களைச் சிதறடிக்கும் ஓர் அரசியலைத்தானே முன்னெடுக்கிறார்? தனது அரசியல் எதிரிகளைக் குற்றஞ் சாட்டுவதன் மூலம் அவர் தன்னை குற்றமற்றவராகக் காட்டப் பார்க்கிறாரா? கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மிதவாத அரசியல் எனப்படுவது குற்றங்கள் மிகுந்ததாக, கண்ணியமற்றதாக, நேர்மையற்றதாக மொத்தத்தில் பொறுப்புக்கூறத் தயாரற்றதாக மாறிவிட்டது. அதற்கு சம்பந்தரும் பொறுப்பு, சுமந்திரனும் பொறுப்பு. சுமந்திரனை குற்றஞ்சாட்டும் ஏனைய தமிழ் அரசியல்வாதிகளும் பொறுப்பு. ஆனால் அதைத் தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிரான சக்திகள் மிகவும் தந்திரமாக திட்டமிட்டு பயன்படுத்துகின்றன. எப்படியென்றால், தமிழ் மக்கள் தெரிந்தெடுத்த பிரதிநிதிகளையே அவர்கள் முன் குற்றவாளிகளாகக் காட்டி, சிறுமைப்படுத்தி, கீழ்மைப்படுத்தி தமது சொந்த பிரதிநிதிகளை தமிழ் மக்கள் நம்ப முடியாத ஒரு சூழலை அவர்கள் ஏற்படுத்துகிறார்கள். இது எங்கே கொண்டு போய்விடும்? தமது சொந்தப் பிரதிநிதிகளின் மீது நம்பிக்கையிழந்த மக்கள் தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் அலைக்குப் பின் போகக்கூடிய வாய்ப்புகளை அதிகப்படுத்தும். தமிழ் வாக்குகள் தமிழ்த் தேசிய அரசியலுக்கு வெளியே போகும் வாய்ப்புகளை அதிகப்படுத்தும். இதை இப்படி எழுதுவதற்காக இக்கட்டுரையானது மதுச்சாலை அனுமதிகளைப் பெற்ற அரசியல்வாதிகளை அம்பலப்படுத்தக்கூடாது என்று கூறுவதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. தமது வாக்காளர்களுக்குப் பொறுப்புக்கூறும் தகுதியற்றவர்கள் அனைவரையும் தமிழ் அரசியலில் இருந்து அகற்ற வேண்டும். ஆனால் அதனை தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து செய்ய வேண்டும். தமிழ் மக்களை ஒரு இனமாகத் திரட்டுவது; தேசமாகத் திரட்டுவது என்ற நோக்கு நிலையிலிருந்து செய்ய வேண்டும். தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் நோக்கு நிலையிலிருந்து செய்ய முடியாது. தமிழ் மக்களைச் சிதறடிக்கும் அரசியல்வாதிகள் அதைச் செய்வது என்பது தமிழ்த் தேசிய அரசியலை சிதைக்க முற்படும் வெளித் தரப்புகளுக்குத்தான் சேவகம் செய்யும். மாறாக தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் நோக்கு நிலையில் இருந்து தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள நேர்மையற்றவர்கள், கண்ணியமற்றவர்கள், நபுஞ்சகர்கள், நசியல் பேர்வழிகள், வழிந்தோடிகள், டீலர்கள் போன்றவர்களைத் தமிழ்மக்கள் தோற்கடிக்க வேண்டும். https://www.nillanthan.com/6916/
  7. அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறும் மகிந்த ராஜபக்ச adminOctober 6, 2024 அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என அவா் தீர்மானித்துள்ள நிலையில் தற்போது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. சமகால அரசியலில் நிலவும் பாதகமான சூழல், உடல்நிலை, வயது போன்றவற்றை கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த காலங்களில் பல்வேறு இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் அங்கம் வகித்த பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள மைதொடர்பில் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதுடன் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மகிந்த அரசாங்கமே காரணம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2024/207190/
  8. காத்தான்குடியிலிருந்து வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிகள் பாலியல் வன்கொடுமை பெற்றோர்களின் தொல்லை தாங்க முடியாது, கொழும்பு சென்று வாழ வேண்டும் என வீட்டை விட்டு வெளியேறிய 14 வயதுடைய இரு சிறுமிகளை விடுதி ஒன்றிற்கு கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்த சென்ற தனியார் பேருந்தொன்றின் நடத்துனர் மற்றும் சாரதி சனிக்கிழமை (5) அன்று கைது செய்யப்பட்டுள்ளனர் . காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய இரு சிறுமிகளின் பெற்றோர்கள் தொடர்ச்சியாக கண்டித்து வருவதன் காரணமாக அவர்களின் தொல்லை தாங்க முடியாது வீட்டை விட்டு கொழும்புக்கு சென்று தங்கி வாழ வேண்டும் என திட்டமிட்ட சிறுமிகள் புதன்கிழமை (02) அன்று காலை பாடசாலை செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி மட்டக்களப்புக்கு சென்று ஓர் இடத்தில் தமது பாடசாலை உடைகளை மாற்றிக்கொண்டு கொழும்பு செல்வதற்காக பஸ் தரிப்பு நிலையத்தில் காத்திருந்துள்ளனர் . இதன் போது அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்து மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்துக்கு வந்த நிலையில் அதன் மூலம் ஓட்டுமாவடிக்கு சென்று அங்கிருந்து கொழும்பிற்கு செல்ல முடியும் என இருவரும் பேருந்தில் ஏறி ஓட்டுமாவடிக்கு செல்ல பிரயாண சீட்டை பெற்றுக் கொண்டுள்ளனர் . பேருந்து வாகரைக்கு சென்றடைந்த நிலையில் , நடத்துனர் நித்திரையில் இருந்த இரு சிறுமிகளிடம் சென்று ஓட்டுமாவடிக்கு ரிக்ட் எடுத்துவிட்டு இறங்காமல் இருந்துள்ளீர்கள் தற்போது வாகரைக்கு வந்துள்ளீர்கள் என கூறியபோது தாங்கள் கொழும்புக்கு போவதாக சிறுமிகள் தெரிவித்த நிலையில், திருகோணமலை சென்று அங்கிருந்து ரயிலில் செல்ல முடியும் நான் ரயிலில் ஏற்றி விடுகிறேன் என நடத்துனர் கூறியுள்ளார் . திருகோணமலைக்கு சென்றடைந்ததும் இரு சிறுமிகளையும் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில் , ரயில் கொழும்பு நோக்கி புறப்பட்டு சென்று விட்டது எனவும் இனி கொழும்புக்கு பேருந்துகள் காலையில் தான் இருக்கும் எனவே அதுவரைக்கும் இருவரையும் அறை ஒன்றில் தங்க வைத்து அனுப்புவதாகவும் கூறி விடுதியொன்றில் இரு அறைகளை எடுத்து அந்த சிறுமிகளுடன் நடத்துனரும் சாரதியும் தங்கியிருந்து அவர்களை இரு தினங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனையடுத்து இரு சிறுமிகளையும் திருகோணமலையில் இருந்து வெள்ளிக்கிழமை (04) இரவு 10 மணிக்கு காத்தான்குடியில் விட்டு சென்றுள்ளதையடுத்து என்ன செய்வது என தெரியாது சிறுமிகள் வீடுகளுக்கு திரும்பி சென்று தமக்கு ஏற்பட்டதை வீட்டாரிடம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியபடுத்தியதையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் திருகோணமலை மற்றும் கல்முனை நாற்பட்டிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 35, மற்றும் 27 வயதுடைய நடத்துனர் மற்றும் சாரதியை கைது செய்துள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய தனியார் பேருந்தையும் கைப்பற்றியுள்ளனர் . கைது செய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . https://www.tamilmirror.lk/செய்திகள்/வீட்டை-விட்டு-வெளியேறிய-சிறுமிகள்-பாலியல்-வன்கொடுமை/175-344963
  9. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள்! Share This : ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியின் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பலரின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அக் கட்சி தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி என்பன இணைந்து ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியில் போட்டியிடுகின்றன. குறித்த கட்சியில் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவனேசன் (பவான்), ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் துளசி, கரைத்துறைப்பற்று பிரதேச சபை முன்னாள் தவிசாளர் க.விஜிந்தன், முருங்கன் பகுதி வர்த்தகர் அ.றொஜன், முன்னாள் போராளியான க.ஜசோதினி ஆகியோரது பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ரெலோ மற்றும் புளொட் சார்பாக மேலும் ஒவ்வொருவர் நியமிக்கபடவுள்ளனர். http://www.samakalam.com/வன்னித்-தேர்தல்-தொகுதிய-2/
  10. அம்பாறை மாவட்டத்தில் ஏழு தமிழ் தேசிய கட்சிகள் ஒரே குடையின் கீழ் ஒரே சின்னத்தில் போட்டியிட முடிவு : காரைதீவில் சிவில் அமைப்பு கூட்டத்தில் தீர்மானம் ! kugenOctober 4, 2024 (வி.ரி.சகாதேவராஜா) எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள ஏழு தமிழ் தேசிய கட்சிகள் ஒரே குடையின் கீழ் ஒரே சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளன. சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (4) வியாழக்கிழமை இரவு காரைதீவு பொது நூலக கட்டிடத்தில் இடம் பெற்ற இக் கலந்துரையாடலில், இலங்கை தமிழரசுக்கட்சி ,ரெலோ, புளட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் ஜனநாயக முன்னணி , ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் பங்குபற்றியிருந்தனர். ஆசன ஒதுக்கீடு சின்னம் பற்றி ஓரிரு நாளில் தெரியவரும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆறு தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் பங்குபற்றிய கட்சிகளின் பிரதிநிதிகள் , அம்பாறை மாவட்ட நிலைமையில் தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற ஓரணியில் போட்டியிட வேண்டும் எனும் கோரிக்கைக்கு தமது சம்மதத்தை தெரிவித்திருந்தனர் . கூட்டம் தொடர்பாக தமது கட்சி தலைமைகளுக்கு தெரியப்படுத்துவதாக கட்சி பிரதிநிதிகள் தெரிவித்தனர். கொள்கை அளவில் இணங்கிய தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் பொதுத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் தொடரந்து ஒரு மணி நேரம் இடம் பெற்றது. கலந்துரையாடலின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்ட பொது கட்டமைப்பின் மத்திய குழு உறுப்பினரும் ,தமிழ் மக்கள் பொதுச்சபையின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான இ.விக்னேஸ்வரன் மற்றும் அம்பாறை மாவட்ட சிவில் அமைப்பின் தலைவர் கண.வரதராஜன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.. இன்றைய கலந்துரையாடல் முதற்கட்ட வெற்றியாகும் . அம்பாறை திருகோணமலை மாவட்டங்களின் நிலைமையினை கருத்தில் கொண்டு தமிழ் ஆசனத்தை காப்பாற்றும் வகையில் தமிழ் கட்சிகளை ஓரணியில் போட்டியிட வைக்கும் முயற்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம். தமிழ் கட்சிகளின் தலைவர்களுடனும் பேசி வருகின்றோம். இன்றைய அம்பாறைக்கான கலந்துரையாடலில் தமிழ் தேசிய பரப்பில் உள்ள ஆறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தார்கள். முதற் கட்ட முயற்சி வெற்றியளித்துள்ளது . அடுத்து சின்னம், ஆசன பங்கீடு தொடர்பாக விரைந்து ஒரு கலந்துரையாடல் மூலம் ஒரு இணக்கப்பாட்டை எடுக்கும் முயற்சியில் எமது சிவில் சமூக கட்டமைப்பும் ,தமிழ் மக்கள் பொதுச்சபையும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. அம்பாறை மாவட்டத்தில் தமிழ் கட்சிகள் பிரிந்து நிற்பதால் மாவட்டத்தில் ஆசனம் இழக்கபடும் என்பதால் தமிழ்க் கட்சிகள் இணைந்து போட்டியிட வேண்டும் எனும் கோரிக்கையின் அடிப்படையில் இந்த கலந்துரையாடல் காரைதீவில் இடம் பெற்றது என்றனர். இங்கு பங்குபற்றிய தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த தேர்தல் கூட்டில் தமிழ் தேசிய பரப்புக்கு வெளியில் உள்ள கட்சிகளை இணைக்க வேண்டாம் என தங்கள் கருத்தை கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அழைப்பு விடுத்தும் கலந்து கொள்ளவில்லை என்று இணைப்பாளர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில். எமக்கு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி கிடைத்தது. அதாவது சங்கு சின்னத்தில் பொது வேட்பாளருக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமானதாகும். நாம் தமிழர்கள் ஒன்றாகவே இருக்கிறோம் என்பதை உலகிற்கு சொல்லியிருக்கிறோம். அதே ஒற்றுமையை இந்த பாராளுமன்ற தேர்தலிலும் ஒன்றாக பயணிப்போம் என்பதை கூறவேண்டும். திருகோணமலையிலும் இதே ஒற்றுமை ஆயர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஆரம்பம் வெற்றி. இனி பொதுச் சின்னம் மற்றும் ஆசன பங்கீடு தொடர்பில் ஓரிரு நாட்களில் கலந்து பேசி முடிவுக்கு வரவுள்ளோம். என்றார். https://www.battinews.com/2024/10/blog-post_64.html
  11. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் - சம்பந்தன் இறந்தும் கையளிக்கப்படாத உத்தியோகபூர்வ வீடு! Vhg அக்டோபர் 03, 2024 முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு கொழும்பு 7, மகாகமசேகர மாவத்தையில் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் அவர் இறந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த உத்தியோகபூர்வ இல்லம் அமைச்சரவையின் அனுமதியுடன் அவரது பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. இந்த வீட்டை மீண்டும் அரசாங்கத்திடம் பெறுவதற்கு முன்னைய அமைச்சரவை முடிவை மாற்றி புதிய அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், நீதித்துறை மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆட்சி மாற்றத்தால் கைநழுவிப்போன வாய்ப்பு.... இந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை மீண்டும் அரசாங்கத்திடம் பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அன்றைய அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம் அமைச்சு கையளித்த போதிலும், ஆட்சி மாற்றத்துடன் தாபினட் அங்கீகாரம் நிறுத்தப்பட்டதாக அறியமுடிகிறது. புதிய அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் இதற்கான பத்திரத்தை கையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றதன் பின்னர் சம்பந்தனுக்கு இந்த உத்தியோகபூர்வ இல்லம் கிடைத்தது. பின்னர் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச ஐம்பத்திரண்டு நாட்கள் அரசாங்கத்தின் பிரதமரானார், ஆனால் அவர் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு திரும்பினார், எனினும் சம்பந்தனுக்கு அந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் தொடர்ந்து இருக்க வாய்ப்பளித்தார். நல்லாட்சி அரசாங்கத்தில் பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் போது அப்போதைய காணி அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரம், 2019 பெப்ரவரி 26 ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், சம்பந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவராக இருக்கும் வரை அந்த வீட்டை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டார். இந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் நீர்க் கட்டணம், மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், பராமரிப்புச் செலவுகள் என்பன அரசாங்கத்தினால் ஏற்கப்படுவதாகவும், இந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களின் சம்பளம் அரசாங்கத்தினால் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2017ஆம் ஆண்டு அந்த வீட்டின் மராமத்து பணிக்காக மூன்று கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்து இறக்கும் வரை எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே வாழ்ந்தார். https://www.battinatham.com/2024/10/blog-post_3.html
  12. தமிழ்த் தேசிய அரசியலில் இன்று நிராகரிக்க முடியாத தரப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்கிறார் கஜேந்திரகுமார் தமிழ்த் தேசிய அரசியலில் இன்று நிராகரிக்க முடியாத ஒரே ஒரு தரப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியே உள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி தேர்தல் தொகுதி செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று (02) மாலை மாங்குளம் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி தேர்தல் மாவட்ட பிரதான வேட்பாளர் தவபாலன் தலைமையில் இடம்பெற்றது நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் வன்னி தேர்தல் தொகுதி வேட்ப்பாளர்கள் வன்னி தேர்தல் தொகுதியின் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர் இங்கு சமகால அரசியல் நிலைமைகள் எதிர்வரும் தேர்தலை தமிழ் தேசிய மக்கள் முன்னணி எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு வன்னி தேர்தல் தொகுதியில் தேர்தலுக்காக பணியாற்றுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது https://thinakkural.lk/article/310267
  13. பெய்ரூட்டின் மத்திய பகுதியில் உள்ள மருத்துவநிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் – ஐவர் பலி October 3, 2024 லெபனான் தலைநகரின் மத்திய பகுதியில் உள்ள மருத்துவ நிலையமொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமிய சுகாதார அமைப்பிற்கு சொந்தமான மருத்துவ நிலையத்தின் மீதே இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. மத்திய பெய்ரூட் மீது இந்த வாரம் இஸ்ரேல் மேற்கொண்ட இரண்டாவது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.இஸ்ரேல் அதிகளவிற்கு பெய்ரூட்டின் தென்பகுதி புறநகர் பகுதிகளை இலக்குவைத்தே தாக்குதல்களை மேற்கொண்டுவந்துள்ளது. ஏவுகணை செல்லும் சத்தத்தையும் பின்னர் அது விழுந்து வெடிக்கும் சத்தத்தையும் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கட்டிடமொன்று தீப்பிடித்து எரிவதையும் மக்கள் தப்பியோடுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக கடந்த இரண்டு வாரங்களில் பல துணை மருத்துவ பணியாளாகள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் 14 துணை மருத்துவ பணியாளர்கள் கொல்லப்பட்டனர்,திங்கட்கிழமை பெக்காவில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் இவர்கள் அனைவரும் இஸ்லாமிய சுகாதார அமைப்பை சேர்ந்தவர்கள் . https://eelanadu.lk/பெய்ரூட்டின்-மத்திய-பகுத/
  14. மோடியின் செய்தியுடன் நாளை இலங்கை வருகிறார் ஜெய்சங்கர் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நாளை வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 4ஆம் திகதி) இலங்கை வரவுள்ளார். இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னர் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், இந்நாட்டுக்கு வரும் முதலாவது வெளிநாட்டு இராஜதந்திரி இவராவார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட புதிய அரச தரப்பினருடனும், தமிழ், முஸ்லிம் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடனும் மற்றும் சிவில் சமூகத்தினருடனும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்தவுள்ளார். இந்த விஜயத்தின்போது டில்லி வருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை, ஜனாதிபதி அநுரகுமாரவிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கையளிக்கவுள்ளார். http://www.samakalam.com/மோடியின்-செய்தியுடன்-நாள/
  15. ரணிலை ஆதரித்தவர்கள் பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் களமிறங்க முடிவு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் அடுத்த பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு சம்பந்தப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (02) பிற்பகல் கொழும்பு மல் வீதியில் அமைந்துள்ள தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் கூடியிருந்தனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து இயலும் சிறிலங்கா மாநாட்டில் 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் கையெழுத்திட்டிருந்தன. http://www.samakalam.com/ரணிலை-ஆதரித்தவர்கள்-பொது/
  16. இது ஒரு சமூகச் சீரழிவை வெளிக்கொண்டுவரும் மஞ்சள் பத்திரிகைச் செய்தி. புலம்பெயர் நாடுகளில் இருந்து தாயகத்திற்கு விடுமுறையில் போகும் ஒரு சிலர் தமது பகட்டாலும், பணத்தை வீசிச் செலவழித்தும் இவ்வாறு நடப்பது தொடர் செய்திகளாக வருகின்றது. அடுத்த சம்மர் சீஸனிலும் இன்னும் அதிகரிக்கும்!
  17. தமிழர்களின் நம்பிக்கையை பெறவிரும்பினால் சிங்கள பௌத்த தேசியவாதிகளை கவரும் முயற்சிகளை ஜனாதிபதி கைவிடவேண்டும் தமிழர்களின் நம்பிக்கையை பெறவிரும்பினால் சிங்கள பௌத்த தேசியவாதிகளை கவரும் முயற்சிகளை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க கைவிடவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் கடும் போக்குடைய சிங்கள பௌத்த தேசியவாதிகளை; கவரும் முயற்சியில் ஈடுபட்டால் தேசிய மக்கள் சக்தி புதிய ராஜபக்சாக்களாக மாறும் என தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னர் இடம்பெறுகின்ற விடயங்களை பார்க்கும் நல்லாட்சி 2 என்ற உணர்வும்,முன்னர் நடந்ததை மீண்டும் அனுபவிக்கின்ற உணர்வும் எனக்கு ஏற்படுகின்றது. ஜனாதிபதி வெற்றியடையவேண்டும்,தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்ற பெரும்பான்மை கிடைக்கவேண்டும் என நான் விரும்புகின்றேன். அது நடைபெறாவிட்டால் கூட்டணி அரசாங்கமே ஒரேயொரு சாத்தியப்பாடாகயிருக்கும். தேசிய மக்கள் சக்தி எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என என்னால் ஊகிக்க முடியாது,மேலும் இலங்கை கூட்டணி அரசாங்கங்கள் விடயத்தில் சிறந்த வரலாற்றை கொண்டிருக்கவில்லை. மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தவறுகள் இழைக்கப்படுவதை தூண்டுகின்றன.நல்லாட்சியில் இடம்பெற்ற விடயங்கள் மீண்டும் இடம்பெறாமலிருப்பதற்காக விமர்சனங்களை முன்வைக்கவேண்டிய தேவை காணப்படுகின்றது. ஜனாதிபதியை விமர்சிப்பவர்களை தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் நியாயமற்ற விதத்தில் தாக்குவதும் கண்டிப்பதும் ஜனாதிபதிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் வாக்களிக்காதவர்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தப்போவதில்லை. தேசிய மக்கள் சக்தி கருத்துவேறுபாடுகளை பொறுத்துக்கொள்ளாத வழிபாட்டு மனப்பான்மை உள்ள குழு என்ற எண்ணங்களை இது வலுப்படுத்தப்போகின்றது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற சிங்கள வாக்காளர்களை கவரவேண்டும் என தேசிய மக்கள் சக்தி நினைப்பதை நான் புரிந்துகொள்கின்றேன். ஆனால் தேசிய மக்கள் சக்தி மூலோபாய ரீதியில் செயற்படவேண்டும்,நம்பவைக்ககூடியவற்றில் மாத்திரம் கவனம் செலுத்தவேண்டும். ஜனாதிபதிக்கு வாக்களித்தவர்கள் தேசிய மக்கள் சக்தி வித்தியாசமானது என கருதுபவர்கள் விலகிச்செல்லும் நிலையை ஏற்படுத்தக்கூடாது. கடும் போக்குடைய சிங்கள பௌத்த தேசியவாதிகளை வசீகரித்தால் தேசிய மக்கள் சக்தி புதிய ராஜபக்சாக்களாக மாறும். வித்தியாசமானதாக அல்லது சிறுபான்மையினத்தவர்கள் நம்பக்கூடிய சக்தியாக விளங்காது. 1994 -2001- மற்றும் 2015ம் ஆண்டுகளில் அதிகாரத்திலிருப்பவர்களுடன் நெருக்கமான உறவுகளை கொண்டிருந்த சிவில் சமூகம் முறைசாரா ஆலோசகராக மாறியது,அல்லது நிழலில் செயற்பட்ட குழுக்களாக ,காணப்பட்டதுடன் செல்வாக்கு செலுத்தியது,சட்டங்களை கூட உருவாக்கியது. 2022 இல் ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றபோது ராஜபக்சாக்களை விமர்சித்த சில சிவில் சமூக குழுவினர் ரணில்விக்கிரமசிங்கவை ஆதரித்ததுடன்,அவர் மனித உரிமைகளை மீறியதுடன், ஏதேச்சதிகாரிபோன்று ஜனநாயக விரோதமான முறையில் செயற்பட்டவேளை அதனை நியாயப்படுத்தியிருந்தன. இது ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மீண்டும் இடம்பெறுவதை காண்கின்றோம். சிவில் சமூகத்தின் சில பிரிவினர் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவை விமர்சிக்ககூடாது அது அவரை பலவீனப்படுத்தும் அவருக்கு கால அவகாசத்தை வழங்கவேண்டும். இவர்கள் அவர்களின் தவறுகளை நியாயப்படுத்துகின்றனர்,அல்லது அலட்சியம் செய்கின்றனர். நல்லாட்சி அரசாங்கத்தின் போது மத்தியவங்கி பிணைமுறி மோசடி,யுத்தத்திற்கு பிந்தைய விவகாரங்களிற்கு தீர்வை காணதவறுதல் போன்றவை குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டவேளை இதேபோன்ற கருத்துக்கள் வெளியாகியிருந்தன. நல்லாட்சி அரசாங்கத்தை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த தவறியதன் காரணமாகவே ராஜபக்சாக்கள் மீண்டும் துரிதமாக ஆட்சிக்கு வரமுடிந்தது. தற்போது அதுபோன்ற நியாயப்படுத்தல்களை காணமுடிகின்றது. உதாரணத்திற்கு தனிப்பட்ட தொடர்புகள் இருப்பதற்காக உரிய தகுதியற்றவர்கள் குறிப்பிட்ட பகுதிகளிற்கு நியமிக்கப்படுதல் அதிகாரத்திற்கு நெருக்கமாகயிருப்பதை மாத்திரம் முக்கிய பரப்புரை தந்திரோபாயமாக கொண்டிருக்கும் சில சிவில் சமூகத்தினர் எவ்வாறான அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவது என்பதை தீர்மானிக்க முடியாத நிலையில் காணப்படுகின்றனர். இது அனைத்தையும் உடனடியாக மாற்றமுடியாத இடைக்கால அரசாங்கம் என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் உணர்ந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.அதற்கு மக்கள் ஆணையில்லை மேலும் அது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய குழப்பங்களை உருவாக்கலாம். அரசாங்கம் செய்யவேண்டிய செய்யக்கூடாத சில விடயங்கள்- உங்களுடைய தனிப்பட்ட தொடர்புகளிற்காக உரிய தகுதியற்றவர்களை பதவிகளிற்கு நியமிக்கவேண்டாம் -ஜனாதிபதி ஊடகப்பிரிவிற்கு மருத்துவர் நியமனம். ஏற்கனவே இல்லாத புதிய பதவிகளை உருவாக்கி உங்களுடன் தனிப்பட்ட தொடர்பில் உள்ளவர்களை அதற்கு நியமிக்கவேண்டாம். ராஜபக்சாக்களின் தோல்வியடைந்த பேரழிவு கொள்கைகளை போற்றியவர்களை பதவிகளிற்கு நியமிக்கவேண்டாம். ஜனாதிபதி நிறுவனங்களின் செயற்பாடுகளை பொறுப்பேற்ககூடாது,மற்றும் சட்டபூர்வமாக வரையறுக்கப்பட்ட எல்லைகளிற்கு வெளியே செயற்படக்கூடாது-ஊழலிற்கு எதிரான விசாரணைகளிற்கு தலைமை தாங்ககூடாது அதில் தன்னை ஈடுபடுத்தக்கூடாது. போலியானது மனித உரிமை மீறல்களிற்கு வழிவகுத்தது என நிரூபிக்கப்பட்டுள்ள யுக்திய போன்ற செயற்பாடுகள் கொள்கைகளை நிறுத்துங்கள் . நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றால் சில விடயங்களை புதிதாக ஆரம்பிக்கவேண்டாம் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளில் இருந்து ஆரம்பியுங்கள் -அரசமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளை ஆரம்பிக்கவேண்டாம்,ஆனால் நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்ததிலிருந்து ஆரம்பியுங்கள். தமிழர்களின் நம்பிக்கையை பெறவிரும்பினால் சிங்கள பௌத்த தேசியவாதிகளை கவருவதை நிறுத்துங்கள் தமிழர்களை சொல்லிலும் செயலிலும் சமமான பிரஜைகளாக நடத்துங்கள். யுத்த குற்றங்களி;ல் ஈடுபட்டார்கள் என கருதப்படுபவர்களை உயர்பதவிகளிற்கு நியமிப்பது சிறந்த ஆரம்பமில்லை. https://akkinikkunchu.com/?p=293723
  18. பொதுத் தேர்தலுக்குப் பின்னர் NNPஐ ஆதரிக்க ஈபிடிபி தயார் October 2, 2024 ஆயுதம் ஏந்திய அனுபவம், புதிய ஜனாதிபதியால் உருவாக்கப்படவுள்ள எதிர்கால அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கான தகுதியாக தமிழ் துணை இராணுவக் குழுவின் தலைவர் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் என்ற அடிப்படையில் நல்ல புரிந்துணர்வு இருப்பதாக முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். “தேர்தல் முடிந்த பின்னர், அந்த வெற்றிக்கு பின்னர் ஆட்சியில் இருக்கின்றவர்களோடு கலந்துரையாடி, ஏனென்றால் அவர்களும் உங்களுக்குத் தெரியும் ஒரு ஆயுத போராட்டத்தின் ஊடாகத்தான் இன்று தேசிய நீரோட்டத்தில் ஜனநாயக வழிக்கு வந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். அதேபோல் நாங்களும் ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டோம். கொள்கை எனப் பார்க்கையில் அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் கொள்கையில் வேறுபாடுகள் இல்லை. அதாவது அவர்கள் ஒரு இடதுசாரி பாரம்பரியத்தில் வந்தவர்கள். ஈபிடிபியும் ஒரு இடதுசாரி பாரம்பரியத்தில் வந்தது. அந்த வகையில் எங்களுக்கு இடையில் ஒரு புரிந்துணர்வு இருக்கின்றது.” டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் ஆகியோர் மஹிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த 2004 இல் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்தனர். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் பின்னர் புதிய அரசாங்கத்துடன் இணையும் சாத்தியம் குறித்தும் ஈபிடிபி தலைவர் அதிக நம்பிக்கை வெளியிட்டுள்ளார். “தேர்தலுக்கு பின்னர், இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் ஈபிடிபியின் வீணை சின்னத்தின் வெற்றியின் பின்னர் நிச்சியம் அது நிறைவேறும் என்பதை கூறிக்கொள்கிறேன்.” அரசாங்கத்திற்கு ஆதரவான ஆயுதக் குழுவாக செயற்பட்ட ஈ.பி.டி.பிக்கு எதிரான கடத்தல், சித்திரவதை, கப்பம் பெறுதல், கொலை செய்தல் போன்ற குற்றச்சாட்டுக்களை எந்த அரசாங்கமும் விசாரிக்கவில்லை. அந்த கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா 1994 பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பல அரசாங்கங்களில் அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார். பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசாங்க அச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.supeedsam.com/206232/
  19. பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கருணா அம்மான் Vhg அக்டோபர் 02, 2024 எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைமை வேட்பாளராக கருணா அம்மான் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.battinatham.com/2024/10/blog-post_87.html
  20. பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்! Vhg அக்டோபர் 02, 2024 யாழ்ப்பாண பகுதியில் வசித்து வந்த 22 வயதான பல்கலைக்கழக மாணவி ஒருவர் 47 வயதான கனடா தமிழ் குடும்பஸ்தருடன் தலைமறைவாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர் தலைமறைவான மாணவியின் தந்தையின் நெருங்கிய நண்பர் என தெரியவருகின்றது. கனடா செல்வதற்கு முன்னரே வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இருவரும் பாடசாலை நண்பர்களாகவும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்துள்ளனர். அடிக்கடி யாழ்ப்பாணம் வந்து சென்ற சந்தேக நபர் தனது பாடசாலை நணபனான மாணவியின் தந்தையுடன் பல இடங்களுக்கும் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந் நிலையிலேயே சந்தேக நபர் தனது நண்பனின் மகளுடன் தற்போது தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் காணாது தேடி மாணவியின் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோதே மாணவி தான் சந்தேக நபருடன் குடும்பம் நடாத்திவருவதாகவும், கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னைத் தேட வேண்டாம் எனவும் தனது தாயாருக்கு கூறியதாகத் தெரியவருகின்றது. சந்தேக நபரான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர் தங்கியிருந்த அக்காவின் வீட்டுக்குச் சென்ற தந்தை அங்கு கலவரத்தில் ஈடுபட்டதுடன் சந்தேக நபரின் பொருட்களை அடித்து உடைத்து அட்டகாசம் செய்ய முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது. https://www.battinatham.com/2024/10/blog-post_2.html
  21. தமிழரசு கட்சி எங்கு செல்லுகின்றது? மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தனது முகநூலில் நேற்று 01 ஆம் திகதி அவருடைய புகைப்படத்துடன் பதிவிட்ட விடயம் பலருடைய கவனத்திற்கு வந்துள்ளது. அதில் அவர் குறிப்பிட்டுள்ள விடயம் என்னவென்றால், “உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை நோக்கிய தமிழர் தாயகம்” என்ற கருத்து பட அவர் இதனை கூறியிருக்கின்றார். தமிழரசு கட்சி ஆரம்ப காலம் முதல் அபிருத்தியை இரண்டாமிடத்திற்கு வைத்து, தமிழ் தேசியத்தை முன்னுரிமை படுத்தியே இதுவரை காலமும் எல்லா தேர்தல்களிலும் போட்டியிட்டு வந்துள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் கூட தமிழ் தேசியத்தை உறுதிப்படுத்துவதாக கூறியே சஜித்திற்கு ஆதரவாக அவர்கள் செயற்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் திடீரென சாணக்கியன் தனது முகப்புத்தகத்தில் அபிவிருத்தியையும் சேர்த்திருப்பது பல கேள்விகளை எழுப்பி நிற்கின்றது. தமிழரசு கட்சி தமிழ் தேசியத்தை கைவிட்டுள்ளதா? அல்லது தமிழ் தேசியம் இப்பொழுது தேவையில்லாத விடயம் என்று அவர்கள் கருதுகின்றார்களா? ஏனைய கட்சிகள் கூறுவதை போலவும், இலங்கையிலே இருக்கின்ற பெரும்பான்மை தேசிய கட்சிகள் கூறுவதை போலவும் அபிவிருத்தியை நாங்கள் எட்டிவிட்டால் இனப்பிரச்சனை தானாக தீர்ந்துவிடும் என்கின்ற சித்தார்ந்தத்திற்கு துணைபோகின்றதாக அமைகின்றதா? அல்லது இப்போதைக்கு தமிழ் தேசியத்தை வைத்து அரசியல் செய்ய முடியாது என்பதால் அபிவிருத்தியையும் கொண்டுவந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இடங்களை தக்கவைத்துக் கொள்வதற்காக தமிழரசு கட்சி செய்யும் முயற்சியா என்ற கேள்விகள் எல்லாம் மக்கள் மத்தியில் எழுந்து நிற்கின்றது. தமிழர் தேசியத்தை அடிப்படையாக கொண்டு இதுவரை காலமும் செயற்பட்டு வந்த தமிழரசு கட்சி திடீரென உரிமையுடன் கூடிய ஒரு விடயத்தை முன்வைக்கின்ற பொழுது இது தமிழரசு கட்சி எடுத்த முடிவா என்று கேட்ட தொன்றுகிறது. அத்தோடு தமிழரசு கட்சி இது தொடர்பில் யாருடன் கலந்துரையாடியுள்ளது, மக்களிடம் இது தொடர்பான அபிப்பிராயம் பெறப்படதா என்பது போன்ற கேள்விகளெல்லாம் கேட்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே சாணக்கியன் தன்னுடைய முகநூல் புத்தகத்தில் பதிவிட்ட தேசியத்தையும், அபிவிருத்தியையும் சமமாக பார்க்கின்ற அல்லது ஒன்றையொன்று குறைத்து மதிப்பிட்டு பார்க்கின்ற இந்த நிலைமைக்கு என்ன பதில் சொல்ல போகின்றார். https://battinaatham.net/?p=91440
  22. தமிழரசுக் கட்சியின் பொதுக்குழுவுக்குள் சுமந்திரன் சார்பானவர்கள் அதிகம். சிறிதரனை பொதுத்தேர்தலில் நிற்காமல் பண்ணும் அளவிற்கு போக முயற்சிக்கின்றார்கள். சிறிதரன் சுயேட்சைக்குழு ஊடாக தேர்தலில் நிற்கவேண்டி வரலாம் என்று செய்திகள் உலாவுகின்றன.
  23. பிரிந்து நின்று செயல்படுவோமாக இருந்தால் பாராளுமன்ற ஆசனங்களை இழப்போம்: செல்வம் எச்சரிக்கை October 2, 2024 நாங்கள் பிரிந்து நின்று செயல்படுவோமாக இருந்தால் ஆசனங்கள் வேறு யாருக்கும் கிடைக்கின்ற வாய்ப்புகள் இருக்கும் என முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இந்திய தூதுவருடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், நேற்று இந்திய தூதுவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இரு விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தன. தற்போதுள்ள ஜனாதிபதியின் செயற்பாட்டில் தாங்களும் இணைந்து செயல்பட போவதாக இந்திய தூதுவர் எடுத்துக் கூறினார். அடுத்து வடக்கில் அதிகமான அபிவிருத்தியை இந்தியா செய்ய இருக்கின்றது. அவ்வாறான அபிவிருத்தியின் போது அதன் பலன்களை தமிழ் மக்கள் அடைய வேண்டும் என்ற ரீதியில் அவருடைய கருத்துக்கள் இருந்தன. அது மாத்திரம் அல்ல தமிழ் தரப்பு ஓரணியிலே ஒன்றாக வேண்டும். பிரிந்து நிற்கும் செயற்பாட்டை தொடர்ந்து வைத்திருப்பது நல்லதல்ல. நல்லதொரு ஒற்றுமையான முடிவை எட்டி இந்த தேர்தலில் கூடுதலான ஆசனங்களை பெற வேண்டும் என தெரிவித்திருந்தார். அந்த வகையில் தமிழர் தரப்பில் உள்ளவர்கள் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய வகையில் ஆசனங்களை பெறுவதன் ஊடாகத்தான் புதிய அரசாங்கத்தோடு பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முடியும். அந்த வகையிலே நீங்கள் ஒற்றுமையோடு இருந்தால் தான் எல்லா விடயங்களையும் சாதிக்க முடியும். அதேபோல் இந்த அபிவிருத்தி பணிகளை நாங்கள் கூடுதலாக வடக்கிலே செய்ய இருக்கின்றோம். அந்த அடிப்படையில் தமிழர் தரப்பு கூடுதலான ஆசனங்களை பெறுவதன் ஊடாகத்தான் அபிவிருத்தி பணிகளை மக்களிடம் சென்றடைய கூடிய வாய்ப்பு உள்ளது எனவும் எடுத்துக் கூறினார். இந்நிலையில் தமிழரசு கட்சியும் ஒன்றாக சேர வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன் வைத்திருக்கின்றது. இந்நிலையில் நான் ஒரு ஆலோசனையை முன் வைப்பதற்கு விரும்புகின்றேன். இப்போதுள்ள கள நிலவரம் எங்களுடைய பிரதிநிதித்துவம் குறைகின்ற செயற்பாடாகத்தான் காணப்படுகிறது. அண்மையில் நாங்கள் ஒற்றுமையாக இல்லை என்பதை காணக் கூடியதாகவும் உள்ளது. ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் தமிழரசு கட்சியிடம் கேட்டுக்கொள்கின்றோம் ஒரு பொதுச் சின்னத்திலே குறிப்பாக குத்துவிளக்கு சின்னத்திலும்கூட வலியுறுத்தாமல் எல்லோரும் இணைந்து ஒரு பொது சின்னத்திலே இந்த தேர்தலில் பங்குபற்றினால் அதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் ஆதரவாக இருக்கும். அந்த வகையில் எங்களைப் பொருத்தமட்டில் ஒற்றுமை என்பது காலத்தின் கட்டாயம். விமர்சனங்கள் என்பது இருந்து கொண்டே இருக்கிறது. சிலர் வெளிப்படையாக சஜித்துக்கும் ரணிலுக்கும் செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்திலே பொது வேட்பாளராக களம் இறங்கிய அரியனேந்திரன் 2 லட்சம் வாக்குகளை பெற்றது என்பது சாதாரண விடயம் அல்ல. நாங்கள் இன்னும் முழுமையாக வேலை செய்திருந்தால் கூடுதலாக வாக்குகளை பெற்று இருக்கலாம் என்பது என்னுடைய கருத்தாக உள்ளது. இந்த காலத்திலே விமர்சனங்கள் மேலோங்கி இருக்கின்றது. தேசியத்தோடு இல்லாமல் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள தலைவர்களுக்கு விரலை நீட்டி அவருக்கு வாக்களியுங்கள் என்று சொன்ன நிலைமை காணப்பட்டது. அது சம்பந்தமான விமர்சனங்கள் இருக்கின்றது. அவை ஆராயப்பட வேண்டும். குறிப்பாக அம்பாறை, திருகோணமலை போன்ற பிரதேசங்களிலே நாங்கள் பிரிந்து நின்றால் இருக்கின்ற பிரதிநிதித்துவமும் இல்லாமல் போய்விடும். அங்கு மட்டுமல்ல வன்னியிலும் எமக்கு பெரிய ஆபத்து உள்ளது. நாங்கள் பிரிந்து நின்று செயல்படுவோமாக இருந்தால் ஆசனங்கள் வேறு யாருக்கும் கிடைக்கின்ற வாய்ப்புகள் இருக்கும். மக்களின் கோபத்துக்கு உள்ளாக்கப்பட்டு நமக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவம் ஒன்று, இரண்டாக மாறுகின்ற நிலைமை ஏற்படும். ஆகவே வன்னியை பொருத்தவரையும் அது ஒரு அபாயகரமான நிலைப்பாட்டில் தான் இருக்கிறது. சிங்கள பிரதிநிதித்துவம் கூடி விடுமா என்கின்ற ஒரு அச்சம் காணப்படுகிறது. அது மாத்திரமல்ல எங்களுக்குள் பிரச்சனைகளை நாங்கள் வைத்திருப்போமாக இருந்தால் முஸ்லிம் சகோதரர்களுக்கும் பிரதிநிதித்துவத்தில் கூடுதலாக வருகின்ற நிலைமை காணப்படும். ஆகவே மக்கள் கோபப்படும் அளவிற்கு எமது செயற்பாடுகள் இருக்காது, இருக்கவும் கூடாது என கேட்டு கொள்வதோடு ஒரே அணியில் ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிடுவது தான் சாதகமாக இருக்கும் என்றார். https://www.ilakku.org/பிரிந்து-நின்று-செயல்படு/
  24. ’’அனுரவை 12 வயதில் பிக்குவாக்கக் கூறினர்’’: தாய் உருக்கம் “எனது மகன் அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவியாக்குவதற்காக துறவறத்துக்கு அனுப்புமாறு சொல்லியதை நான் ஏன் ஏற்கவில்லை” என இலங்கையின் புதிய ஜனாதிபதியின் தாயார் சீலாவதி தெரிவித்துள்ளார். இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் தலைநகரான அனுராதபுரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாய கிராமமான தம்புத்தேகம எனும் பகுதியில் ஒரு சிறிய ஆஸ்பெட்டாஸ் கூரையினாலான வீட்டில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தாயார் டி.எம். சீலாவதி (86) தனது மகள் ஸ்ரீயலதாவுடன் (62) வசித்து வருகிறார். இலங்கையின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இளம் பருவம் பற்றி தாயார் சீலாவதி அளித்த பேட்டி ஒன்றில் கூறியது: “எனது மகனுக்கு சிறுவயதில் காற்றில் பட்டங்களை பறக்க விட மிகவும் பிடிக்கும். தினமும் அருகிலுள்ள நீச்சல் குளத்திற்கு சென்று நீச்சலடிக்கவும் பிடிக்கும். அநுரவுக்கு எப்போதும் புத்தகங்களை வாசிப்பது மிகவும் பிடிக்கும். வீட்டின் எதிரே இருந்த மரத்தின் கிளையில் அமர்ந்து சப்தமாக படித்து கொண்டிருப்பது இன்னும் நினைவில் எனக்கு இருக்கிறது. சாப்பிடும் போதும் புத்தகமோ செய்தித்தாளோ வாசித்துக் கொண்டே சாப்பிடுவது அநுரவின் வழக்கமாக இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது அநுரவுக்கு அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு கொலை மிரட்டலும் வந்தது. அவர் நெருங்கிய தொடர்பிலிருந்த அவரது சிறிய தந்தையார் (தந்தையின் சகோதரர்) கொலை செய்யப்பட்டார். அநுர தலைமறைவாக இருந்த காலத்தில் 1992-ம் ஆண்டு அவரது அப்பா இறந்துபோது, அவரது இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ள முடியவில்லை. 12 வயதிருக்கும்போது புத்த விகாரை ஒன்றின் தலைமை குரு ஒருவர், அநுரவை துறவறத்துக்கு அனுப்புமாறு கேட்டார். அதனை நான் மறுத்து விட்டேன். அநுர பிறந்து ஆறாம் மாதத்தில் அவரது ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் காட்டியபோது, ’உங்கள் மகன் ஒரு நாள் அரசாள்வான்’ என்று அதிர்ச்சியோடு சொன்னார். எனது மகன் சாதாரண குடும்பத்திலிருந்து இன்று அதிபராகி உள்ளார். அவர் பொய் சொல்பவரோ, மோசடி செய்பவரோ கிடையாது. அனுராதபுரத்தில் உள்ள ஆலயங்களில் எனது மகனுக்காக பிரார்த்திக்க வேண்டும்” என தெரிவித்தார். சகோதரி ஸ்ரீயலதா கூறும்போது, “எனது தாயார் தினமும் இரவு தொலைக்காட்சியில் செய்திகளை பார்க்கிறார். செய்தியில் எனது சகோதரன் வரும்போதெல்லாம் என் மகனா என கேட்பார். மகனுடன் இருக்க அவர் விரும்புவார். என் சகோதரன் அநுரவும் இந்தப் பகுதிக்கு வரும்பொதெல்லாம் எங்களை பார்க்க வீட்டுக்கு வருவார். அவர் இந்த நாட்டின் இந்த பகுதிக்கு வரும்போதெல்லாம், எங்களை சந்திக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, அநுர காரில் தூங்கியதுதான் அதிகம். அவரது பதவியேற்பு ஆரவாரமின்றி நடைபெற்றது. அவர் ஆடம்பரத்தை விரும்ப மாட்டார்” என தெரிவித்துள்ளார். யார் இந்த திசாநாயக்க? - இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அநுராதபுரம் மாவட்டம் தம்புத்தேகம எனும் பகுதியில் 24.11.1968-ல் அநுர குமார திசாநாயக்க பிறந்தார். தனது பள்ளி படிப்பினை தம்புத்தேகவில் உள்ள கமினி மகா வித்யாலயா பள்ளியிலும், தம்புத்தேகம மத்திய கல்லூரி மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1988-ம் வருடம் இடதுசாரிக் கட்சியான தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி)யில் இணைந்தார். 1995-ம் ஆண்டு அதன் மாணவர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் மூலம் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினராக ஆனார். 2004-ம் ஆண்டு அப்போதைய கூட்டணி ஆட்சியில் விவசாய அமைச்சராக அநுர குமார திசாநாயக்க பதவி வகித்தார். 2014-ஆம் ஆண்டு ஜேவிபியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க 418,553 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். தொடர்ந்து இலங்கையில் ஊழலுக்கு எதிராக அநுர குமார திசாநாயக்க குரல் கொடுத்து வந்தார். மேலும், இலங்கையில் 2022-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது நடைபெற்ற போராட்டங்களில் முன்நின்று நடத்தியதில் அநுர குமார திசாநாயக்க முன்னணி வகித்ததும் குறிப்பிடத்தக்கது. 2024-ம் ஆண்டு நடைபெற்ற ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க 57,40,179 வாக்குகள் பெற்று ஜனாதிபதியானார். (நன்றி: தி ஹிந்து) https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அனுரவை-12-வயதில்-பிக்குவாக்கக்-கூறினர்-தாய்-உருக்கம்/91-344793
  25. இலங்கை தூதரகம் முன் முற்றுகைப் போராட்டம் இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்ய வேண்டும்; இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 192 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அரசையும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகளையும் வலியுறுத்தி அக்டோபர் 8-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை சென்னையில் பாமக சார்பில் இலங்கை துணைத்தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களின் மீதான சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலும், அடக்குமுறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாரம்பரிய கடல் பகுதியில் தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்தி வரும் போதிலும் அதை சிங்கள அரசு மதிக்க மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான இந்திய எல்லைக்கும், இலங்கை எல்லைக்கும் இடைப்பட்ட கடல் பரப்பு மிகவும் குறுகியது ஆகும். அதனால், தமிழ்நாட்டு மீனவர்களாக இருந்தாலும், இலங்கை மீனவர்களாக இருந்தாலும் எல்லையைக் கடக்காமல் மீன்பிடிக்க முடியாது. அதே நேரத்தில் அந்தப் பகுதிகளில் தான் இரு நாட்டு மீனவர்களும் காலம் காலமாக மீன் பிடித்து வருகின்றனர் என்பதால், அவர்களின் பாரம்பரிய மீன் பிடிக்கும் உரிமையை மதிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள மீனவர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அதை மதிக்காத சிங்கள கடற்படை, பல நேரங்களில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் கைது எண்ணிக்கை அதிகரித்திருப்பது மட்டுமின்றி, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகளும் அதிகரித்து வருகின்றன. சிங்களக் கடற்படையினரின் அண்மைக்கால கொடிய அத்துமீறல்களுக்கு எடுத்துக்காட்டு தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் மீனவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் தான். வங்கக்கடலில் இரு படகுகளில் சென்று ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த தருவைக்குளம் மீனவர்கள் 22 பேர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கடல் நீரோட்டத்தின் காரணமாக இலங்கை கடல் எல்லைக்குள் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை கைது செய்து சிறையில் அடைத்த இலங்கைக் கடற்படை இரு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் விடுதலை செய்யவில்லை. அதுமட்டுமின்றி, அனைத்து மீனவர்களுக்கும் இலங்கை ரூபாய் மதிப்பில் தலா ரூ.3.5கோடி அபராதம் விதித்த நீதிமன்றம், அதை செலுத்தாத வரை விடுவிக்க முடியாது என்று கூறிவிட்டது. அபராதத்தை செலுத்த முடியாத மீனவர்கள் இன்னும் சிறையில் வாடுகின்றனர். தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களையும் கைது செய்து 6 மாதங்கள், ஓராண்டு, ஒன்றரை ஆண்டு என சிறை தண்டனை விதித்து வருகிறது சிங்கள அரசு. இத்தகைய கொடூர அணுகுமுறை காரணமாக கடந்த ஜூன் 16&ஆம் தேதி மீன்பிடி தொடங்கிய பிறகு இன்று வரையிலான மூன்றரை மாதங்களில் மட்டும் 404 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி 54படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக சேர்த்து தமிழக மீனவர்களின் 192 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இன்றைய நிலையில் மட்டும் இலங்கை சிறைகளில் 162 பேர் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்ட மீனவர்களால் அவர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி, அவர்கள் பிடித்து வரும் மீன்களை சுத்தம் செய்தல், பதப்படுத்துதல், ஏற்றுமதி செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்யும் பத்து மடங்கு குடும்பத்தினரும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். அவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்பது தெரியவில்லை. மீனவர்களைக் காக்கவும், மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் கடமையை முடித்துக் கொள்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இந்தியப் பொருளாதாரத்தின் ஓர் அங்கம் ஆவர். கடல் மீன்கள் ஏற்றுமதியால் மட்டும் மத்திய அரசு பல்லாயிரம் கோடி வருவாய் ஈட்டுகிறது. அவர்கள் எல்லையில்லாமல் இலங்கைச் சிறைகளில் வாடுவதை அனுமதிக்க முடியாது. எனவே, இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்ய வேண்டும்; இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 192 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அரசையும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகளையும் வலியுறுத்தி அக்டோபர் 8-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை சென்னையில் பாமக சார்பில் இலங்கை துணைத்தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இணைப் பொதுச் செயலாளருமான ஏ.கே.மூர்த்தி - பாமக பொருளாளர் திலகபாமா ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து இணை மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள மீனவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கை-தூதரகம்-முன்-முற்றுகைப்-போராட்டம்/175-344804

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.