Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. இலங்கை ஜனாதிபதி தேர்தல்- ‘பேரம் பேசும் அரசியலை விட மாற்று அணுகுமுறை இல்லையா?’ (பகுதி-2) August 30, 2024 (கேள்வி, பதில் வடிவில்) — வி. சிவலிங்கம் — கேள்வி: தமிழ் அரசியலில் தமிழ் தேசியம் குறித்து அதிகம் வற்புறுத்துகிறதே! இதன் அடிப்படை என்ன? பதில்: இத் தேசியம் என்ற சொற் பிரயோகம் மட்டுமே இவர்களது அரசியலில் உள்ளது. தேசியம் என்பதன் உட் பொருள் எப்போதோ நீங்கிவிட்டது. உதாரணமாக, தமிழ் அரசியலில் தமிழ் பேசும் மக்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழ் மொழியை பேசு மொழியாகக் கொண்டிருக்கும் சகல மக்களையும் ஒரு கூட்டுக்குள் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் இவ் வார்த்தைப் பிரயோகம் தற்போது வழக்கொழிந்த வார்த்தையாக மாறிவிட்டது. இதற்குப் பிரதான காரணம் தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட தீவிரவாத மற்றும் சாதி ஆதிக்க சக்திகளின் ஊடுருவல்களும், முஸ்லீம் எதிர்ப்பு நிலைகளின் விளைவுகளாலும் அக் கட்சி முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் ஆதரவையும் இழந்தது. அது மட்டுமல்ல, முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் நலன்கள் வடக்கு, கிழக்கில் தமிழ் தேசியம் பேசும் சக்திகளின் நலன்களோடு முரண்பட்டுச் சென்றமையால் அவர்களும் இக்குறும் தேசியவாத அரசியலோடு இணைந்து பயணிக்க முடியவில்லை. இன்று அடிக்கடி உச்சரிக்கப்படும் தமிழ் தேசியம் என்பது அரசு சாரா தமிழ் கட்சிகளைத் தம்மிலிருந்து வேறுபடுத்தப் பயன்படுத்தப்படுகிறதே தவிர வேறு நோக்கங்கள் அதற்கில்லை. இத் தேசியவாதம் பிரிவினை, சாதீய வாதம் மற்றும் சைவமத அடையாளங்களைப் பேணுதல் என்பவற்றை மறைமுகமாக உள்ளடக்கியுள்ளது. அதன் காரணமாகவே தமிழ் சமூகத்திலுள்ள ஏனைய பிரிவுகளை இவர்களால் இணைத்துச் செல்ல முடியவில்லை. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பின்னர் உருவாக்கிய போதிலும் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களால் இணைந்து பயணிக்க முடியவில்லை. அதே போல அஷ்ரப் அவர்களாலும் தொடர முடியவில்லை. எனவே இன்றைய தமிழ்த் தேசியவாதம் என்பது வெறும் அரசியல் கூச்சலே தவிர அர்த்தமுள்ளதாக இல்லை. கேள்வி: தமிழ் அரசியலின் ஆளுமைக்குள் தற்போது கிழக்கு மாகாணம். முஸ்லீம் மக்கள், மலையக மக்கள் இல்லாத நிலையில் தமிழ்தேசியம் என்பது வெறும் வரட்டு வாதமா? பதில்: நிச்சயமாக இது வெறும் வரட்டு வாதமே. உதாரணமாக சிங்கள அரசியலில் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் பலம் பொருந்திய நிலையிலுள்ளது. அது அரசியல் ஆதிக்கத்தையும் செலுத்துகிறது. இந் நிலையில் தமிழ் தேசியவாதம் தனக்குள் உள்ள சகல சமூகப் பிரிவினரையும் ஒன்றிணைக்கும் அரசியலை நோக்கி தனது கோட்பாடுகளை வகுக்க வேண்டும். அவ்வாறான போக்கு இன்று இல்லை. சிங்கள பௌத்த பேரினவாதம் ஆதிக்கம் செலுத்துகையில் தமிழ்த் தேசியவாதம் தவிர்க்க முடியாமல் வளர்வதற்கு நிலமைகள் உள்ளன. ஆனால் இத் தேசியவாதம் தனக்குள் முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்திச் செல்லுமாயின் அது தன்னைத் தானே அழிக்கும் நிலையை நோக்கிச் செல்கிறது. அதுவே இன்றைய தமிழ்க் குறும் தேசியவாதத்தின் போக்காக உள்ளது. கேள்வி: சிங்கள பௌத்த பெருந் தேசியவாதம் நாட்டின் இதர தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகளை மறுதலித்துச் செல்லும்போது ஒவ்வொரு தேசிய சிறுபான்மை இனங்களும் தத்தமது பாதுகாப்பை நோக்கிச் செல்வது தவிர்க்க முடியாதது தானே? பதில்: ஒடுக்குமுறை அதிகரிக்கும் போது பாதுகாப்பைத் தேடுவது இயல்பு. ஆனால் அப் பாதுகாப்பு என்பது சகலருக்குமான பாதுகாப்பாக அமையாத பட்சத்தில் இனவாதம் பிரித்தாளும் தந்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறது. இதுவே இன்றைய அரசியல். தமிழ் அரசியல் சிங்கள பௌத்த பெருந் தேசியவாதத்திற்கு எதிரான கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே பாதுகாப்பு அர்த்தமுள்ள ஒன்றாக அமையும். தமிழ்க் குறும் தேசியவாதத்தினை உச்சரிப்போர் இந்த ஒற்றுமையை ஏற்படுத்த எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளத் தயாராக இல்லை. ஏனெனில் இவர்கள் அதை வைத்து பாராளுமன்றம் செல்ல முயற்சிக்கிறார்களே தவிர தீர்வை நோக்கிய பயணம் அல்ல. தமிழ் அரசியல் தலைமை முதலில் தமிழ் மக்களினதும், இதர தமிழ் பேசும் மக்களினதும் இயல்பான வாழ்வும், வளமும் ஒருமித்த ஐக்கிய இலங்கைக்குள் உள்ளதா? இல்லையா? என்ற அறுதியான முடிவுக்கு செல்ல வேண்டும். மலையக, முஸ்லிம் மற்றும் வடக்கு, கிழக்கு தமிழர்களில் பெரும்பாலோர் இன்று ஏனைய ஏழு மாகாணங்களிலும் பரந்து விரிந்து வாழும் நிலையில் அவர்களின் நலன்களையும் கருத்தில் கொண்டே புதிய வியூகம் அமைதல் வேண்டும். கேள்வி: இப் பதில்கள் யாவும் நீண்டகால தீர்வைப் பற்றிக் கூறுகின்றன. ஆனால் தமிழர்களினதும், ஏனைய தேசிய சிறுபான்மை இனங்களினதும் இருப்பு. அடையாளம், அரசியல் உரிமைகள், மனித உரிமைகள், வாழ்வுரிமைகள் என பல அடிப்படை அம்சங்கள் தினமும் இல்லாமல் போகிறது. இதனைத் தடுக்காமல் எவ்வாறு நீண்ட கால தீர்வுகளை நோக்கிச் செல்வது? பதில்: எமது பலத்தையும், பலவீனத்தையும் சரியாக அடையாளம் கண்டு கொள்ளாமல் வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமையானால் இவற்றைத் தடுக்க முடியாது. இங்கு ராஜதந்திரம் அவசியமானது. உதாரணமாக தற்போது தேர்தல் நெருங்கியுள்ள சமயத்தில் சிலவற்றை விட்டுக் கொடுக்கவும், சிலவற்றைப் பெற்றுக் கொள்ளவும் எமது அரசியல் தயாராக இருத்தல் வேண்டும். நாம் இலங்கை அரசியலை தமிழ் அரசியலுக்கு வெளியில் நின்று அவதானித்தால் நிலமை தெளிவாகப் புரியும். சிங்கள அரசியலும் வெவ்வேறு நலன்களின் கூறுகளாக மாறியுள்ளன. நாடு மிகவும் வங்குறோத்து நிலைக்குச் சென்றுள்ள நிலையில் யாரும் பொறுப்பைச் சுமக்க முன்வர மாட்டார்கள். அவ்வாறு முன்வருபவர்கள் தேசபக்த சக்திகளாக இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இல்லையேல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சில தேசவிரோத சக்திகள் அரசைக் கைப்பற்ற முயற்சி செய்யும். தமிழ் அரசியல் தலைமைகள் முதலில் சரியான தேசபக்த சக்திகளை அடையாளம் காட்ட வேண்டும். அவர்களை ஆதரிக்க வேண்டும். இது விஷப்பரீட்சையாக அமையலாம். ஆனால் இதுதான் அரசியல் தலைமையின் கடமை. இக்கட்டான நேரத்தில் கட்சி மற்றும் சுயநலன்களுக்கு அப்பால் நாட்டின் பரந்த நலனுக்காக முடிவு செய்வதாகும். தமிழ் அரசியல் இன்று தமிழ் மக்களின் நலன்களுக்கு அப்பால் தேசத்தின் பரந்த நலன்களைக் கவனத்தில் கொண்டு யாரை ஆதரிப்பது? என்ற முடிவை நோக்கிச் செல்ல வேண்டும். கேள்வி: அவ்வாறு ஒரு ஜனாதிபதி வேட்பாளரை அடையாளம் காட்டும் நிலமை தமிழ் அரசியலில் இன்று காணப்படுகிறதா? பதில்: ஆம். அது நிச்சயமாக காணப்படுகிறது. தேர்தல் மிக நெருங்கும் வேளையில் அவை மிகத் தெளிவாகப் புலப்படும். தற்போதுள்ள தமிழ் அரசியல் தலைமையில் இருப்பவர்களில் சிலர் அதற்கான அனுபவ அறிவைக் கொண்டிருப்பது தற்போது வெளிவரும் வாதப் பிரதிவாதங்களிலிருந்து தெரிகிறது. இங்கு இரண்டு அம்சங்கள் கவனத்திற்குரியவை. முதலாவது மூவர் முன்னணியிலிருப்பதால் கட்சித் தலைவர்களுக்கும் மிக நெருக்கடியான காலமாகும். அவர்களின் முடிவு பிசகினால் நிலமை விபரீதமாக மாறலாம். தமிழ் அரசியல் தலைவர்கள் ஆரம்பத்திலேயே தமது தெரிவை வெளிப்படுத்தினால் சிங்கள பௌத் பேரினவாத சக்திகள் மறைமுக ஒப்பந்தம் இருப்பதாக நிலமைகளை வேறு நிலைக்கு மாற்றலாம் எனவே இறுதி வரை மௌனமாக இருப்பது ஒரு வகை ராஜதந்திரமே. ஏற்கெனவே குறிப்பிட்டது போல தமிழ் அரசியலில் காணப்படும் பிரிவினைவாத அரசியல் என்பது நாட்டின் பொதுவான அரசியல் போக்கோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் மட்டுமல்ல அம் மக்களின் பொருளாதாரத் தேவைகளும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். பிரதேச பொருளாதார வளர்ச்சி, மக்களின் கல்வி, சுகாதாரம், போக்கு வரத்து, சுற்றுச் சூழல் மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற பல இன்னோரன்ன பிரச்சனைகளையும் கவனத்தில் கொண்டே இந்த முடிவுக்குச் செல்ல வேண்டும். கேள்வி: இன்றைய ஜனாதிபதித் தேர்தலில் 38 அபேட்சகர்கள் போட்டியிடுகின்றனர். இதில் நால்வர் முன்னணியில் உள்ளனர். கடந்த காலங்களில் இருவர் போட்டியிட்டதால் அவர்களின் கடந்த கால அரசியல் வரலாற்றினை மதிப்பீடு செய்து வாக்களித்தார்கள். இம் முறை மூவர் என்பதால் மேலும் குழப்பநிலை காணப்படுகிறது. இச் சிக்கலான நிலையில் ஒரு தமிழ் வாக்காளன் எந்த அடிப்படையில் தனது விருப்பிற்குரிய அபேட்சகரைத் தேர்வு செய்வது? பதில்: இந்த நிலை தமிழ் வாக்காளர்களுக்கு மட்டுமல்ல சிங்கள வாக்காளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. மக்கள் வெளிப்படையாக தமது தெரிவுகளை வெளிப்படுத்தத் தயங்குகின்றனர். தமிழ் வாக்காளனுக்கு அதைவிட பல சிக்கல்கள் உள்ளன. அரசியல் என்பது வரலாறு ஆகும். வாக்கு என்பது ஒவ்வொரு குடிமகனினதும் இறைமை அதிகாரமாகும். இந்த வாய்ப்பு 5 வருடங்களுக்கு ஒரு முறை கிடைக்கிறது. இவ் இறைமை அதிகாரத்தினை ஒருவர் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி பயன்படுத்த முடியாது. இம் முடிவு பல சந்ததிகளைப் பாதிக்கிறது. எனவே தமிழ் வாக்காளன் இன்று முன்னணியிலுள்ள வேட்பாளர்களின் வரலாற்றினை நன்கு ஆராய்தல் அவசியமானது. உதாரணமாக தற்போது நான்கு வேட்பாளர்களில் சஜீத் பிரேமதாஸ முன்னணியில் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே முதலில் அவரது வரலாற்றினை ஆராயலாம். இவரின் அரசியல் ஆரம்பம் ஐ தே கட்சியிலிருந்து ஆரம்பிக்கிறது. இவரது தந்தை ரணசிங்க பிரேமதாஸ ஐ தே கட்சியின் மிக ஆரம்ப உறுப்பினர் நிலமையிலிருந்து மேலே வந்தவர். பொருளாதார அடிப்படையில் மிகப் பின்தங்கிய பிரிவைச் சார்ந்தவர். அவரது தளராத பொதுச் சேவை கட்சியின் உயர் பதவிகளை வழங்கியது. சஜீத் பிரேமதாஸ தனது தந்தையின் காலத்தில் அரசியலுக்கு வரவில்லை. தந்தையின் மறைவின் பின்னர் கட்சிக்குள் உயர் மட்டங்களை அடைவதற்கு மிகவும் போராட்டங்களை நடத்தினார். ரணிலுக்கும், இவருக்குமிடையே உள்முரண்பாடுகள் ஏற்பட்டதாக பத்திரிகைகள் தெரிவித்தன. அவர் பதவிக்கு ஆசைப்படுகிறார் எனவும், காலம் அவருக்கு இன்னமும் இருக்கிறது என்ற செய்திகளும் அவ்வப்போது வெளிவந்தன. தற்போது வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் பார்க்கும் போது அவரும், அவரது சக நண்பர்களும் நாட்டில் நிலவிய திறந்த பொருளாதாரத்தின் மோசமான விளைவுகள் குறித்து அங்கு விவாதித்ததாகவும், இப் பொருளாதாரம் காரணமாக தேசிய செல்வம் சுரண்டப்படுவதாகவும், தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு பதிலாக நாடு நுகர்வுக் கலாச்சாரத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான நிலமையில் தேசிய உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு என்பனவற்றிற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும் என்ற விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. 2019ம் பிற்பகுதியில் ஆரம்பித்த கொரொனா நோயின் தாக்கம் உலக நாடுகளின் உற்பத்தி, விநியோகம் போன்றவற்றைப் பாதித்த வேளையில் இறக்குமதிப் பொருளாதாரத்தில் தங்கியிருந்த இலங்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. வளர்ச்சியடைந்த நாடுகள் தத்தமது பொருளாதாரங்களை மூடிய நிலைக்கு எடுத்துச் சென்றன. இந் நிலையில் அதாவது பொருளாதார அடிப்படைகளில் நாடு மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வேளையில் ரணில் பதவியை இழந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். மக்கள் துன்பப்பட்ட வேளையில் நாட்டைக் காப்பாற்ற அவர் முன் வரவில்லை. ஜனாதிபதி அதிகார வாய்ப்புக் கிடைத்த வேளையில் நாட்டைக் காப்பாற்றுவதாக ஓடோடிச் சென்று பதவியைப் பெற்றார். நாட்டின் பொருளாதாரம், அரசியல் கட்டுமானம் குறிப்பாக நிறைவேற்று அதிகார முறை கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை நீக்கப்பட வேண்டும் என சஜீத் பிரேமதாஸ கட்சிக்குள் போராடினார். இனவாத அரசியலை கோதபய ராஜபக்ஸ 2019ம் ஆண்டு முன்னெடுத்த வேளையில் அதற்கு எதிராக சஜீத் போட்டியிட்டு தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றார். தற்போது 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளார். நாம் தற்போது மக்களின் இரண்டாவது தெரிவாக கருதப்படும் தேசிய மக்கள் சக்தி – ஜே வி பி ஆகியவற்றின் தலைவரான அநுர குமார திஸாநாயக்கா என்பவரின் அரசியலைப் பார்க்கும் போது இக் கட்சி பல மாற்றங்களைக் கடந்து வந்துள்ளது. அக் கட்சியின் ஐந்தாவது தலைமுறை தலைவராக அவர் காணப்படுகிறார். நாட்டின் தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக மிக மோசமான கொள்கைகளைக் கடந்த காலங்களில் கொண்டிருந்த போதிலும் அக் கட்சி அடிப்படையில் பல மாற்றங்களோடு மக்களை அடைந்துள்ளது. உதாரணமாக 2017ம ஆண்டளவில் தேசிய மக்கள் சக்தி என்ற கல்வி அறிஞர்கள், சமூகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் அமைப்பு ஜே வி பி யுடன் கூட்டினை ஏற்படுத்தியது. இக் கூட்டின் பின்னர் அக் கட்சியின் அரசியல் அடிப்படைகள் மிக அதிகளவில் மாறின. நாட்டின் அரசியலை வர்க்க அடிப்படையில் வர்ணித்த அவர்கள் தற்போது வர்க்க அடிப்படையிலான பார்வையை நீக்கி ஏற்கெனவே செயற்பாட்டிலுள்ள நவ தாரளவாத பொருளாதார செயற்பாட்டின் நல்ல அம்சங்களை ஏற்றுக் கொண்டு குறிப்பாக தேசிய பொருளாதார வளர்ச்சியில் அரசின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் கலப்பு பொருளாதாரத்தை குறிப்பாக பொருளாதார அடிப்படையில் நலிந்த பிரிவினரின் பாதுகாப்பு, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களின் பங்களிப்பு, தேசிய சிறுபான்மை இனங்களின் அடிப்படை உரிமைகள், தொழிற் சங்கங்களின் உரிமைகள் எனப் பல அம்சங்களல் பாரிய மாற்றங்கள் உள்ளன. உலகளவிலும், தேசிய அளவிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தமது அரசியல் பார்வையிலும் மாற்றங்களை ஏற்படுத்தி வருவதால் சிங்கள மக்களின் இளைஞர் ஆதரவு அதிகளவில் அவர்களுக்கு காணப்படுகிறது. தமிழ் வாக்காளர் ஒருவர் தேசிய அளவில் நல்லிணக்கத்திற்கும், இனவாத சக்திகளுக்கு எதிராகவும் செயற்படும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு எனக் கருதினால் அவர்களின் அரசியலை ஆழமாக ஆராய்ந்து வாக்களிக்க முடியும். இங்கு ரணில், நமல் ஆகியோரின் அரசியல் என்பது பலரும் அறிந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக ரணிலின் அரசு யாரின் ஆதரவோடு பயணிக்கிறது என்பதனையும், தேசிய செல்வத்தை சுரண்டியவர்கள் எனவும், இனப் படுகொலையை மேற்கொண்டார்கள் என ஐ நா மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டிய நிலையில் ரணில் யாரைப் பாதுகாத்து வருகிறார் என்பதனையும் காணலாம். ரணில் தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதாக பிரதமர் பதவியைப் பொறுப்பேற்ற போது கூறினார். ‘அறகலய’ போராட்டம் தொடர வேண்டும் என்றார் . ஆனால் ஜனாதிபதி பதவியை எட்டியதும் ராணுவ. பொலீஸ் உதவியுடன் பலரைச் சிறையிலடைத்தார். தேசிய அரசாங்கம் அமைப்பதாக் கூறிய அவர் பாராளுமன்றத்திலுள்ள 134 பொதுஜன பெரமுன ஆதரவாளர்களின் உதவியுடன் ஜனாதிபதியானார். இவரால் எப்படி தேசிய அரசாங்கம் ஒன்றை இனவாதிகளின் பின்னணியில் உருவக்கியிருக்க முடியும்? இவை தனியாக விளக்கமாக பேச வேண்டிய விடயங்கள். சிலவற்றை அடையாளப்படுத்தியுள்ளேன். கேள்வி: இன்றைய இலங்கை அரசியலின் நிலமைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் தற்போதைய அரசியல் யாப்பு பல வகைகளில் மாற்றத்திற்கான இடையூறாக அமையலாம் என்பது தெரிகிறது. அவ்வாறாயின் புதிய அரசியல் யாப்பிற்கான அவசியம் தற்போது உண்டா? பதில்: இக் கேள்வி மிக விரிவான பதிலை வேண்டி நிற்கிறது. இலங்கைக்குப் புதிய மூன்றாவது குடியரசு யாப்பு அவசியம் என்பதே எனது கருத்தாகும். உதாரணமாக பிரான்ஸ் நாடு தற்போது ஐந்தாவது குடியரசு என அழைக்கப்படுகிறது. வரலாற்றினைப் பார்க்கும் போது 1792-1804 காலப் பகுதி முதலாவது குடியரசுக் காலமாகவும், இரண்டாவது குடியரசுக் காலம் என்பது 1848-1852 எனவும், 1870- 1940 மூன்றாவது குடியரசுக் காலம் எனவும், 1946-1958 வரையான காலம் நான்காவது குடியரசுக் காலம் எனவும், ஐந்தாவது குடியரசுக் காலம் என்பது 1958- இற்றை வரையான காலப் பகுதியாகும். இங்கு இரண்டாவது குடியரசு 1852 இல் வீழ்ச்சியடைந்த பின்னர் அங்கு மீண்டும் மன்னராட்சி லூயிஸ் பிலிப்பி ( Louis Philippe) உருவானது. அதனால் ஓர் இடைவெளி உண்டு. அதே போலவே 1940 இல் முடிவடைந்த மூன்றாவது குடியரசு ஆட்சி பின்னர் 1946 இல் நான்காவது குடியரசாக மீண்டும் உருவானது. இந்த இடைவெளிக்குக் காரணம் இரண்டாவது உலகப் போராகும். பிரான்ஸ் நாட்டில் ஐந்து குடியரசு யாப்புகள் உருவானதற்குக் காரணம் அங்கு எழுந்த அரசியல் நெருக்கடிகளும், மாற்றங்களுமாகும். உதாரணமாக, பிரான்ஸ் நாட்டில் நான்காவது குடியரசு உருவானதற்கான பின்னணியை நோக்கினால் இரண்டாவது உலகப் போரின் பின்னர் 3வது குடியரசு அரசியல் ஸ்திரமற்ற பிரச்சனையில் சிக்கியது. அடிக்கடி அரசுகள் மாறின. அந் நாட்டின் ஆட்சிக்குள்ளிருந்த குடியேற்ற நாடுகளில் பெரும் உள்நாட்டு எழுச்சிகள் தொடங்கின. உதாரணமாக பிரான்ஸின் கட்டுப்பாட்டிலிருந்த வியட்நாம், அல்ஜீரியா போன்ற நாடுகளில் சுதந்திர விடுதலைப் போராட்டங்கள் வெடித்தன. இதன் காரணமாகவே நான்காவது குடியரசு தோற்றம் பெற்றது. இவ்வாறே ஜேர்மனியிலும் மூன்று குடியரசு யாப்புகள் உருவாகின. இப் பின்னணியில் இலங்கை நிலமைகளை அவதானிக்கும் போது புதிய குடியரசு யாப்பு ஒன்று உருவாகுமானால் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகள் ஒரளவு தீர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. தற்போது நடைமுறையிலுள்ள இரண்டாவது குடியரசு யாப்பு அறிமுகப்படுத்தப்பட்ட வேளையில்( 1978 )முன்வைக்கப்பட்ட நோக்கங்கள் சிலவற்றை அவதானித்தால் அவற்றைப் புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சி முறை என்பது அரசின் தலைவராகவும், அரசாங்கத்தின் தலைவராகவும் ஒருவராகவே இருந்தார். அவர் மிக அதிகளவு அதிகாரங்களைக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாதபடி யாப்பு மூலம் தடுக்கப்பட்டிருந்தது. இம் மாற்றத்திற்கான பிரதான காரணமாக நிலையான ஆட்சிக் கட்டுமானம், மாற்றங்களை தடையில்லாமல் மேற்கொள்ளும் அதிகாரம், புதிய பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றும் நோக்கங்கள் காரணமாக அமைந்தன. குறிப்பாக, பொருளாதாரம் அந்நிய மூலதன ஊடுருவலுக்குத் திறந்து விடப்பட்டதோடு பொருளாதார செயற்பாட்டில் அரசின் தலையீடு தடுக்கப்பட்டது. அரசியல் யாப்பு என்பது மிக உயர்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டது. அரசாங்கத்தின் சகல சட்டங்களும், செயற்பாடுகளும் அரசியல் யாப்பிற்கு அமைவாகவே செயற்பட வழிவகுத்தது. நீதித்துறை என்பது மிகவும் சுயாதீனமானது என வரையறுக்கப்பட்ட அரசின் செயற்பாடுகள் உச்ச நீதிமன்றத்தின் மூலமே மாற்றியமைக்க முடியும் என வரையறுக்கப்பட்டது. தேர்தல் முறை விகிதாசார பிரதிநிதித்துவம் என்ற புதிய முறைக்குள் கொண்டு வரப்பட்டது. சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் இம் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும் இப் புதிய முறை பல சிறிய கட்சிகள் பாராளுமன்றத்தின் தீர்மானங்களை மாற்றி அமைக்கும் வலுவைப் பெறும் அளவிற்கு மாறின. இதனால் கூட்டு அரசாங்கமே சாத்தியமாகும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் என்ன காரணங்களுக்காக புதிய அரசியல் யாப்பினை அறிமுகம் செய்தார்களோ அவை எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. அதிகாரக் குவிப்பு என்பது பலமான அரசுத் தலைவரை உருவாக்குவதற்குப் பதிலாக சர்வாதிகாரி ஒருவரை அதாவது ஏற்கெனவே காணப்பட்ட ஜனநாயக விழுமியங்கள் காணாமல் போகும் அளவிற்கு மாற்றங்கள் ஏற்பட்டன. அதிகாரக் குவிப்புக் காரணமாக பின்னாளில் பதவிக்கு வந்த ஜனாதிபதிகள் மேலும் மேலும் அதிகாரங்களைக் குவித்து நாட்டின் ஜனநாயக நிறுவனங்களின் செயற்பாட்டினை முடக்கினார்கள். தேசிய சிறுபான்மை இனங்களின் ஜனநாயக உரிமைகள் படிப்படியாக இல்லாதொழிந்தது. அதிகாரக் குவிப்பும், சிங்கள பௌத்த ஆதிக்கமும் தேசிய சிறுபான்மை இனங்களைப் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளின. இதன் விளைவாகவே 1983 இல் இனக் கலவரமாகவும், 30 வருட கால சிவில் யுத்தமாகவும் நிலமைகள் மாறின. எனவே முதலாம் இரண்டாம் குடியரசு யாப்புகள் எதிர்பார்த்த மாற்றத்தைத் தராத நிலையில் குறிப்பாக நாட்டின் பொருளாதாரம் வெளிநாடுகளிடம் கடன் பெற முடியாத நிலைக்கு சென்றுள்ளதாலும் தற்போதைய இரண்டாவது குடியரசு யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டடு 46 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த 46 ஆண்டுகளில் இதுவரை 21 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு திருத்தம் என்ற அடிப்படையில் அடிக்கடி யாப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் பார்க்கையில் எமது தேசம் ஓர் அளவில்லாத அல்லது பொருத்தமில்லாத சட்டையை அணிந்து அடிக்கடி தைத்துக் கொண்டிருக்கிறது. எனவே இந்த 46 ஆண்டுகளின் அனுபவத்தின் அடிப்படையில் நாட்டின் சகல சமூகங்களும் மாறுதலைத் தேடுகின்றன. ஆகவே புதிய மூன்றாவது குடியரசு அரசியல் யாப்பு அவசியம் என்றே கருதுகிறேன். தொடரும்….. https://arangamnews.com/?p=11176
  2. குரங்கு அம்மை: புதிய அச்சுறுத்தல்! ஆப்பிரிக்காவில் தற்போது வேகமாகப் பரவிவரும் ‘குரங்கு அம்மை’ (Monkey pox) எனும் வைரஸ் தொற்றுப் பரவலை, உலக அளவில் கவலை அளிக்கக்கூடிய பொதுச் சுகாதார அவசரநிலையாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்ததை ஒட்டி, உலக நாடுகள் பலவும் மீண்டும் கரோனா தொற்று பரவியதுபோல் பீதியில் உறைந்து கிடக்கின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் 2023 ஜனவரியிலிருந்து இது பரவிவருகிறது. இதுவரை 27,000 பேருக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,100 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் காங்கோ நாட்டில் மட்டும் 13,700 பேருக்குத் தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. 4,50 பேர் உயிரிழந்துள்ளனர். இப்போது இந்தத் தொற்று பாகிஸ்தான் மற்றும் சுவீடன் நாட்டுக்கும் பரவிவிட்டது. வழக்கமாக இது பரவுகிற மத்திய ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளைத் தவிர்த்துவிட்டு, இதுவரை பரவாத நாடுகளிலும் இது பரவிவருவதுதான் இந்தப் பீதிக்கு முக்கியக் காரணம். குரங்கு அம்மை புதிய நோயல்ல. உலகில் இப்படி ஒரு நோய் இருப்பது முதன் முதலில் 1958இல் டானிஸ் ஆய்வகத்தில் இருந்த குரங்குகளிடத்தில் அறியப்பட்டது. அதனால்தான் இதற்கு இந்தப் பெயர் வந்தது. 9 வயது பையன்தான் இதற்கு முதல் நோயாளி. 1970இல் ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் இந்த நோயாளி காணப்பட்டார். 2003இல் அமெரிக்காவில் இது பெரிதாகப் பரவியதை வரலாறு பதிவுசெய்துள்ளது. ஆப்பிரிக்காவைத் தவிர்த்து மற்ற நாடுகளில் இது பரவத் தொடங்கியது அப்போதுதான். என்றாலும்கூட 81 பேருக்கு மட்டுமே இந்த நோய் அப்போது அங்கே பரவியது; இறப்பு எதுவும் இல்லை. இதைத் தொடர்ந்து, 2017இல் நைஜீரியாவில் 172 பேருக்குப் பரவியதுதான் உலகளாவிய பரவலில் இது உச்சம் தொட்டது. 2022க்குப் பிறகு இது 116 நாடுகளில் பரவியுள்ளது. ஏறத்தாழ 99,000 பேரைப் பாதித்துள்ளது. இதுதான் அநேகரையும் அச்சுறுத்துகிறது. சமீபத்தில் பாகிஸ்தானின் வடக்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மூன்று பேருக்கு இந்தத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுவிட்டு பாகிஸ்தான் திரும்பியவர்கள். ஆப்பிரிக்காவிலிருந்து சுவீடன் நாட்டுக்குத் திரும்பிய ஒருவருக்கு இந்தத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்தியாவில் இதுவரை இந்த நோய் தடம் பதிக்கவில்லை என்பது நமக்கெல்லாம் ஓர் ஆறுதல். என்றாலும், பொதுச் சமூகத்தில் சரியான விழிப்புணர்வும் தடுப்பு ஏற்பாடுகளும் முன்னிறுத்தப்பட்டால், குரங்கு அம்மையின் பிடியிலிருந்து தப்பிப்பதும் எளிது. அரிய வகை அம்மை ‘குரங்கு அம்மை’ என்பது மிக அரிய வகை வைரஸ் நோய். இது பெரியம்மையை (Smallpox) ஒத்துப்போகும் நோய். இதைத் தோற்றுவிக்கும் வைரஸுக்குக் ‘குரங்கு அம்மை வைரஸ்’ (Monkeypox virus) என்று பெயர். இந்த வைரஸ் விலங்கினங்களில் காணப்படுவதுதான் வழக்கம். மாறாக, இப்போது இது மனிதர்களுக்கும் பரவுகிறது. உலகச் சுகாதார நிறுவனம் இதைக் ‘குரங்கு அம்மை வைரஸ்’ என்று சொல்வது தவறு என்கிறது; ‘எம்பாக்ஸ்’ வைரஸ் (mpox virus - MPXV) என்றே அழைக்கச் சொல்கிறது. இந்தக் கிருமியில் ‘கிளாட் ஒன்’ (Clade I), ‘கிளாட் டூ’ (Clade II) என இரண்டு வகை உண்டு. ‘கிளாட் ஒன்’ வகை பாலுறவின் மூலம் பரவக் கூடியது; அதிக ஆபத்தானது. ‘கிளாட் டூ’ வகைத் தொற்று அதிக ஆபத்து இல்லாதது; நோயாளியுடன் நேரடி தொடர்புகொள்கிறவர்களுக்கு மட்டும் பரவக்கூடியது. 2022இல் இது இந்தியாவில் பரவியபோது ‘கிளாட் டூ’ வகை இந்தியாவில் கண்டறியப்பட்டது. அதுவும் அப்போது கேரளாவில்தான் முதன்முதலில் இது அறியப்பட்டது. ஆனால், இப்போது உலக நாடுகளில் பரவும் வகை ‘கிளாட் ஒன்’ வகையில் மரபணுப் பிறழ்வு ஏற்பட்ட ‘கிளாட் ஒன்பி’ (Clade 1b) எனும் துணை வகை. இது பாலுறவு மூலம் மட்டுமல்லாமல், நேரடி தொடர்பு மூலமும் பரவுகிறது. மேலும், இது வேகமாகப் பரவக்கூடியது; அதிக ஆபத்து உள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது. ஆகவேதான், உலகச் சுகாதார நிறுவனம் இந்த நோயை இரண்டாம் முறையாகப் பொதுச் சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. அறிகுறிகள் என்னென்ன? குரங்கு அம்மையால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அவரது உடலுக்குள் தொற்று புகுந்த 5லிருந்து 21 நாட்களுக்குள் அறிகுறிகள் தெரியத் தொடங்கும். குளிர்காய்ச்சல், தலைவலி, தசைவலி, தொண்டை வலி, உடல்வலி, முதுகுவலி போன்றவை தொல்லை தரும். உடற்சோர்வு கடுமையாகும். இந்த அறிகுறிகள் தொடங்கிய 5 நாட்களில் உடல் முழுவதிலும் சிவப்பு நிறப் புள்ளிகளும் தடிப்புகளும் தோன்றும். அவற்றில் தாங்க முடியாத அளவுக்கு அரிப்பு உண்டாகும். பிறகு அவை கொப்புளங்களாக மாறும். அவற்றில் நீர்கோக்கும். உடலில் பல இடங்களில் நெறிக்கட்டிகள் தோன்றும். பொதுவாக, இந்தத் தொற்று 2லிருந்து 4 வாரங்கள் வரை நீடிக்கும். அதன் பிறகு கொப்புளங்கள் காய்ந்து பொருக்குகள் உருவாகி உதிர்ந்துவிடும். தானாகவே நோய் குணமாகிவிடும். மிக அரிதாகவே ஆபத்து நெருங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு நோய் பல வாரங்கள் நீடிக்கும். குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் இது பரவினால் உயிர் ஆபத்து அதிகம். பரவுவது எப்படி? குரங்கு அம்மைத் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு விலங்கிடமிருந்து மற்றொரு விலங்குக்குப் பரவுவதுதான் வழக்கம். முக்கியமாக, அணில்கள், எலிகள், முள்ளம்பன்றி போன்ற கொறித்து உண்ணும் பழக்கம் உள்ள விலங்கினங்களிலிருந்து மற்ற விலங்குகளுக்கு இந்த அம்மை நோய் பரவுகிறது. தொற்றுள்ள விலங்குகளோடு நெருங்கியத் தொடர்புகொள்ளும் மனிதர்களுக்கும் இது பரவுகிறது. குறிப்பாக, விலங்குக் கடிகள் மூலம் மனிதருக்குப் பரவுகிறது. விலங்கின இறைச்சிகளைச் சரியாக வேகவைக்காமல் சாப்பிட்டாலும் இது பரவக்கூடும். நோய்த் தொற்று உள்ளவர்களுடன் நெருக்கமாகப் பழகும்போதும், சருமத்துடன் சருமம் உரசும்போதும் இது அடுத்தவர்களுக்கு எளிதாகப் பரவிவிடுகிறது. நோயாளி இருமும்போதும், தும்மும்போதும் காறித் துப்பும்போதும் எச்சில் மற்றும் சளி மூலம் மற்றவர்களுக்கு இந்தத் தொற்று பரவுகிறது. நோயாளி பயன்படுத்திய ஆடை, துண்டு, போர்வை போன்றவற்றின் வழியாகவும் இது பரவக்கூடும். வியர்வை, கொப்புளநீர், கண்ணீர் போன்ற அவரது உடல் திரவங்கள் மூலமும் காய்ந்த பொருக்குகள் மூலமும் இது அடுத்தவர்களுக்குப் பரவலாம். பாலுறவு மூலமும் இது பரவுவதாகச் சமீபத்தில் அறியப்பட்டுள்ளது. என்ன பரிசோதனை உள்ளது? பயனாளியின் சளி, ரத்தம், கொப்புளம் நீர் போன்றவற்றின் மாதிரிகள் எடுத்து ‘ஆர்.டி.பி.சி.ஆர்’ (R.T.P.C.R.) பரிசோதனை செய்து இந்த நோயை உறுதிசெய்ய முடியும். சிகிச்சை என்ன? குரங்கு அம்மைக்கென தனிப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை என்பதே அநேக உலக நாடுகளின் நிலைப்பாடு. இந்த நோயாளிகளுக்கு அறிகுறிகளைக் குறைக்கும் மாத்திரைகள் மற்றும் ஊசிகள் வழங்கப்படுவதும், அம்மைக் கொப்புளங்களில் பாக்டீரியா தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்வதும், ஊட்ட உணவுகள் மற்றும் திரவ உணவுகள் தாராளமாக வழங்கப்படுவதும் இப்போதுள்ள முக்கிய சிகிச்சைகள். ஐரோப்பாவில் மட்டும் குரங்கு அம்மைக்கு ‘டெக்கோவிரிமெட்’ (Tecovirimat) எனும் மருந்து பயன்பாட்டில் உள்ளது. தடுப்பூசி உண்டா? பாதிக்கப்பட்டவரையும் அவரோடு தொடர்புகொண்டவர்களையும் 3 வாரங்களுக்குத் தனிமைப்படுத்தி உயர் சிகிச்சை அளிப்பது நோய் பரவுவதைத் தடுக்கும் வழிகளில் ஒன்று. அதோடு பெரியம்மைக்குச் செலுத்தப்படும் தடுப்பூசியை இந்த அம்மைக்கும் பயன்படுத்தினால் 85% பலன் கிடைக்கிறது. 1980இல் பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு பெரியம்மைத் தடுப்பூசி செலுத்தப்படுவது உலக அளவில் நிறுத்தப்பட்டது. ஆகவே, 44 வயதுக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு இது பரவும் வாய்ப்பு அதிகம். அவர்களுக்கு இந்தத் தடுப்பூசியைச் செலுத்த முன்னுரிமை தரப்படுகிறது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ‘எம்விஏ-பிஎன்’ (MVA-BN), ‘எல்சி 16’ (LC 16), ‘ஆர்தோபாக்ஸ் வேக்’ (Orthopox Vac) எனும் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் ஒன்றை 4 வார இடைவெளியில் இரண்டு தவணைகளில் செலுத்திக்கொள்ள வேண்டும். அம்மை நோயாளியைத் தொடர்புகொள்வதற்கு முன்போ, தொடர்புகொண்ட முதல் நான்கு நாட்களுக்குள்ளாகவோ இந்தத் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டால், குரங்கு அம்மை வருவது தடுக்கப்படுகிறது. ஆனாலும், இது எல்லோருக்கும் பரிந்துரைக்கப்படுவதில்லை. ஆபத்து அதிகம் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பரிந்துரைக்கப்படுகிறது. இந்தியா உட்பட பல நாடுகளில் இன்னும் இது மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இனிமேல் இது வரக்கூடும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-monkey-pox
  3. டெலிகிராம் செயலியும் உலக அரசியல் நிகழ்வுகளும் - சேது சிவன் நமது நிருபர்ஆகஸ்ட் 29, 2024 டெலிகிராமின் தலைமை நிர்வாக அதிகாரி யும் நிறுவனருமான பாவெல் துரோவ் ஒரு சர்வதேச குற்றவாளி போல பிரான்ஸ் அரசாங்கத்தால் தடுத்து, கைது செய்யப்பட்டுள் ளார்.இந்த கைதுக்கு எலான் மஸ்க் உள்ளிட்ட தொழில்நுட்பத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த னர். தற்போது அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனினும் பிரான்சை விட்டு வெளியே செல்லக்கூடாது என உத்தரவிடப் பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆணைக்கு இணங்க இவரை பிரான்ஸ் அரசு கைது செய்ததன் பின்னணியில் என்ன உள்ளது? முதலாளிகளுக்காக மட்டுமே ஆட்சி செய்யும் இந்த நாடுகள் ஏன் உலகின் மிகப்பெரிய முதலாளிகளில் ஒருவரைக் கைது செய்ய வேண்டும்? காரணம் வேறொன்றுமல்ல; காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைகள் பற்றிய தகவல்களை, வீடியோக்களை பதிவு செய்து உலகின் கண் முன் கொண்டு சேர்த்து வருகிற முதன்மை செயலியாக ‘டெலிகிராம்’ உள்ளது என்பது தான். உலகிற்கு டெலிகிராம் காட்டும் உண்மைகள் இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனக் குழந்தை கள், பெண்களைக் கொடூரமாக படுகொலை செய்யும் காட்சிகளையும், ஐ.நா. நிவாரண முகாம்கள் மீது நடத்தும் தாக்குதல்களையும் காசாவில் உள்ள பத்திரிகையாளர்கள் வீடியோ வாகவும் புகைப்படங்களாகவும் எடுத்து உட னுக்குடன் உலகம் முழுவதும் கொண்டு செல்ல டெலிகிராம் செயலியையே பயன்படுத்து கிறார்கள். தங்களது இனப்படுகொலையை வெளிக் கொண்டுவரும் 100க்கும் மேற்பட்ட ஊடகவிய லாளர்களை இதுவரை இஸ்ரேல் படு கொலை செய்துள்ளது. காசா மட்டுமின்றி உக்ரைனிலும் என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை தெரிவிக்கும் நம்பிக்கையான ஊடகமும் டெலிகிராம் தான். நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற பிரபலமான பல பத்திரிகைகள் அமெரிக்கா, உக்ரைன், இஸ்ரேலுக்கு ஆதரவாக மட்டும் செய்திகளை திரித்து வெளி யிடும் நிலையில், உலகிற்கு உண்மையை காட்டும் ஊடகங்களில் ஒன்றாக டெலிகிராம் உள்ளது.குறிப்பாக இந்த டெலிகிராம் அமெரிக்கா மற்றும் கூட்டாளிகளின் படையான நேட்டோவின் சைபர் டீம் கட்டுப்பாட்டில் இல்லை. உண்மையைக் கண்டறிய உதவுகிறது அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பரப்பும் செய்திகளுக்குப் பின்னே உள்ள போலி பிரச்சாரத்தை டெலிகிராம் செயலி மூலம் நாம் கண்டறிந்து விடலாம். உதாரணமாக ரஷ்யா - உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ வீரர்கள் போரில் ஈடுபடுத்தப்படவில்லை என அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் சொன்னாலும், சில இடங்களில் நேட்டோ வீரர்கள் போரில் ஈடுபட்டது டெலிகிராம் வாயிலாக அம்பலப்படுத்தப் பட்டுள்ளது. பிரான்ஸ் ஆதிக்கத்தை உடைக்க உதவியது மாலி,புர்கினோ பசோ,நைஜர் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் பிரான்ஸ் ராணுவத்தை வெளியேற்றும் போராட்டத்தில் டெலிகிராம் முக்கியப் பங்கு வகித்துள்ளது என்றால் மிகை யல்ல. ஆப்பிரிக்கர்கள் பிரான்ஸ் படைகளின் ஆதிக்கத்துக்கு எதிரான தங்களின் அனைத்து போராட்ட நடவடிக்கைகளையும் டெலிகிராம் வாயிலாகவே ஒருங்கிணைத்தனர். இந்த போராட்டங்கள் ஆப்பிரிக்காவில் பிரான்ஸ் ஆதிக்கத்துக்கு பெரிய அடியாக எழுந்தன. அமெரிக்காவின் கட்டளைக்கு சிறிதும் தயங்காமல் பிரான்ஸ் உடனடியாக டெலிகிராம் நிறுவனர் பாவெல்லை சர்வதேச குற்றவாளி போல தடுத்து கைது செய்ததற்கு இது ஒரு முக்கியமான காரணமாகும். மாபியா கும்பல்கள் இடமாகவும் அதே வேளையில் டெலிகிராம் செயலியில் பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், பணமோசடி, குழந்தைகள் கடத்தல் தொடர்பான மிகப்பெரிய மாபியா கும்பல்களின் சேனல்களும் இயங்கி வருகின்றன என்பது ‘ஆபத்தானது’. இதன் மூலம் ‘ஒழுங்கமைக்கப் பட்ட குற்றங்களை’ அந்த கும்பல்கள் செய்து வருகின்றன. இதனை டெலிகிராம் நிறுவனரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற காரணத்தை மேற்கு நாடுகள் தற்போது பிரதானமாக குறிப்பிடு கின்றன. உளவு நிறுவனங்களுக்கு உதவ மறுப்பு இந்த உண்மை ஒருபுறமிருக்க உண்மை யில் டெலிகிராம் நிறுவனமானது பாலஸ்தீன, ரஷ்யா ஆதரவு சேனல்களை முடக்கவும் அதில் உள்ள சாட் தகவல்களை நேட்டோ, மொசாட், சிஐஏ உள்ளிட்ட உளவு அமைப்பு களுக்கு கொடுக்கவும் மறுத்துவிட்டது. மறைகுறியாக்கப்பட்ட (encrypted ) செய்தியை கண்டறிய முடியாமல் அமெரிக்க, ஐரோப்பிய உளவு அமைப்புகள் பல தோல்விகளை அடைந்துள்ளன.( ரகசிய சாட் எனப்படும் மறைகுறியாக்கப்பட்ட அம்சம் மூலம் பேசும் போது அந்த உரையாடல்களை யாராலும் இடையில் புகுந்து தெரிந்து கொள்ள முடியாது ) டெலிகிராம் மீதான குற்றச்சாட்டுகள் பிற ஊடகங்களுக்கும் பொருந்தும் இதே வேளையில் எலான் மஸ்க், மார்க் ஸுக்கர்பெர்க் ஆகியோரின் ட்விட்டர், முகநூல், இன்ஸ்டா ஆகிய சமூக வலைத்தளங்களுக்கும், டெலிகிராம் நிறுவனத்தின் மீது,அதன் நிறு வனரைக் கைது செய்வதற்காக வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் பொருந்தும். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய பிறகு அதில் அதிதீவிர வலதுசாரி களுக்கு ஆதரவாகவும், சிறுபான்மை யினருக்கு எதிராகவும், இனவாதத்தை தூண்டும் கருத்துக்களும் அதிகரித்துள்ளன. உதாரணமாக வெனிசுலா தேர்தலுக்குப் பிறகு அந்நாட்டில் கலவரத்தை தூண்டிவிடும் வகையில் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக உள்நாட்டு அரசியலில் தலையீடு செய்து கருத்து தெரிவித்திருந்தார். அமெரிக்காவிற்கு வாலாட்டும் நிறுவனங்கள் இந்தியாவிலும் மதவெறி கருத்துக்களை பதிவிடும் பாஜக தலைவர்களின் கணக்குகளை முடக்காமல் சமூக செயற்பாட்டாளர்கள், மதவாதத்திற்கு எதிராக இயங்கும் செய்தி நிறுவனங்களின் கணக்குகளை எலான் மஸ்க்கும், ஸுக்கர்பெர்க்கும் முடக்கியுள்ளனர். மேலும் அவர்களின் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் பயனர்களின் தனி விவரங் களை எந்த ஒரு நாட்டின் அரசாங்கமும், மேற்கு லக நாடுகளின் உளவு அமைப்புகளும் கேட்கும் போதெல்லாம் அள்ளிக்கொடுத்து வருகின்றன. இந்தியாவிலும் பாஜகவின் ஆணைக்கு இணங்க பலரது கணக்குகளை இந்நிறுவனங் கள் முடக்கியுள்ளன. மேலும் இந்த இரு நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளும் அமெரிக்கா வின் அரசியலுக்கு வாலாட்டக் கூடியவர்கள் என்பதாலும் அவர்களது நிறுவனத்தின் மீது மட்டும் எந்த நடவடிக்கையும் பாயவில்லை. ரஷ்யாவின் உத்தரவுகளையும் உதாசீனப்படுத்திய பாவெல் 2011 ஆம் ஆண்டில் பாவெல் தனது சமூக ஊடககணக்கில் அரசாங்கத்திற்கு எதிரான நபர்களின் கணக்குகளை நீக்குமாறு ரஷ்ய அரசாங்கம் தன்னிடம் கூறியதாகவும் ஆனால் தான் அதனை செய்யவில்லை எனவும் தெரிவித்திருந்தார். அது மட்டுமின்றி தனது நடுவிரலை உயர்த்தி ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டார். ரஷ்ய ஜனாதிபதியின் கட்ட ளைக்கு அடிபணியாத பாவெல்லை அன்று மேற்கு நாடுகள் கொண்டாடின என்பது கவனிக்கத்தக்கது. உக்ரைன் ஆட்சிக் கவிழ்ப்பில் டெலிகிராம் 2014 ஆம் ஆண்டு நேட்டோ,சிஐஏ அமைப்பு களால் உக்ரைனில் ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தப் பட்டது. இந்த ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்ட நபர்கள் டெலிகிராம் செயலியையும் தகவல் பரி மாற்றத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். அப்போ தும் மேற்கு நாடுகள் அவரை பாராட்டிக் கொண்டிருந்தன. ஆனால் அப்போது அந்த பயனர்கள் பற்றிய தகவல்களை ரஷ்ய அரசாங்கத்திற்கு வழங்க பாவெல் தயாராக இருந்தார் எனவும் பிறகு அந்த ஆண்டே அவர் ரஷ்யாவை விட்டு வெளியேறினார் என்றும் கூறப்படுகிறது. பிறகு அவர் பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியுரிமையைப் பெற்றுக் கொண்டார். ரஷ்யாவுக்குத் திரும்ப தான் விரும்பவில்லை என்றும் அறிவித்தார். டெலிகிராமின் கடந்தகால செயல்களை பார்க்கும் போது, தற்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கட்டளைகளுக்கு அடிபணிய மறுத்ததாலேயே பாவெல் கைது செய்யப்பட்டுள் ளார் என்பதை உணர்த்துகிறது. - சேது சிவன் https://theekkathir.in/News/articles/உலகம்/telegram-app-and-world-political-events
  4. இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கக்கூடாது?(கேள்வி, பதில் வடிவில்) August 28, 2024 — வி.சிவலிங்கம் — கேள்வி: இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்யும் இத் தேர்தல் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது? பதில்: மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை வரலாற்றோடு அணுகுவது அவசியம். இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை 1978 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது குடியரசு யாப்பின் ஆரம்பமாகும். இதன் பிரகாரம் குடியரசின் முதலாவது ஜனாதிபதியாக ஐ தே கட்சியின் சார்பில் ஜே ஆர். ஜெயவர்த்தன பதவியைப் பெற்றார். அவரது பதவிக் காலம் என்பது இலங்கையின் அரசியலை முழுமையாக மாற்றிய காலமாகும். 1948ம் ஆண்டு கிடைத்த சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் சோல்பரி அரசியல்யாப்பின் பிரகாரம் பாராளுமன்ற அடிப்படையிலான ஆட்சி நடைபெற்றது. பாராளுமன்றம் சட்டவாக்கத்தையும், பிரதமர் தலைமையிலான அமைச்சரவை நிறைவேற்று அதிகாரத்தையும், நீதித்துறை நாட்டின் ஆட்சி முறை அரசியல் அமைப்பின் அடிப்படையில் சட்டம் ஒழுங்கைப் பேணுவதாகவும், மீறினால் தண்டனை வழங்கும் சுயாதீனக் கட்டுமானம் என மூன்று தனித்தனி சுயாதீன அமைப்புகளாகச் செயற்பட்டிருந்தன. ஆனால் 1978ம் ஆண்டின் அரசியல் அமைப்பு நாட்டில் ஏற்கெனவே செயற்பாட்டிலிருந்த சுயாதீன நிர்வாகங்களை அதிகாரம் குவிக்கப்பட்ட ஜனாதிபதி ஆட்சிமுறைக்குள் கொண்டு வந்ததால், பாராளுமன்றம், நீதித்துறை என்ற சுயாதீன அமைப்புகள் யாவும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. அரசியல் கட்டுமானம் மாற்றி அமைக்கப்பட்டது போலவே தேசத்தின் பொருளாதாரக் கட்டுமானமும் அந்நிய மூலதனக் குவிப்பிற்குள் தள்ளப்பட்டது. நாடு வெளிநாட்டுப் பொருட்களின் சந்தையாக மாற்றப்பட்டது. சுருக்கமாகக் கூறுவதாயின் நாடு நவ-தாராளவாத திறந்த பொருளாதாரமாக மாற்றப்பட்டது. ஜே ஆரின் பின்னர் ஐ தே கட்சியின் சார்பில் பிரேமதாஸ இரண்டாவது ஜனாதிபதியானார். அவரது காலத்தில் சிங்கள, பௌத்த பெருந்தேசியவாதம் மிக அதிகளவில் ஐ தே கட்சிக்குள் ஊடுருவியது. இதுவரையும் மேற்குலக லிபரல் ஜனநாயகத்தின் நிழலாகவும், பின்னர் நவ-தாராளவாத ஜனநாயகத்தையும் பின்பற்றிய அக் கட்சி சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தின் இருப்பிடமாகியது. அதனால் அதன் மேற்குலக குணாம்சங்கள் படிப்படியாக அகலத் தொடங்கின. பிரேமதாஸ அவர்களின் படுகொலைக்குப் பின்னர் துணை ஜனாதிபதி என்ற அடிப்படையில் செயற்பட்ட டி பி விஜேயதுங்க மூன்றாவது ஜனாதிபதியானார். இவரது பதவிக் காலம் சில மாதங்களே நீடித்தது. ஜே ஆர் காலத்தில் ஆரம்பித்து கூர்மை அடைந்து சென்ற இன முரண்பாடுகள் மேலும் வளர்ந்து சிவில் யுத்தமாக மாறிய நிலையில் சிவில் யுத்தம் என்பது பயங்கரவாதமாக மாற்றம் பெற்று ராணுவ ஆதிக்கம் அரச கட்டுமானத்திற்குள் படிப்படியாக நுழைந்;தது. தெற்கில் ஜே வி பி இனது போராட்டங்களும், தமிழ்ப் பகுதிகளில் விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் சிவில் யுத்தமும் வளர்ச்சியடைந்த நிலையில் அதனைக் கட்டுப்படுத்த அரச பயங்கரவாதம் சொந்த மக்களைக் கொன்று குவித்தது. இவை நாட்டின் பொருளாதாரத்தையும், அரச ஜனநாயககட்டுமானங்களையும் மிகவும் பின்தள்ளியது. இந் நிலையில் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நிகழ்ச்சி நிரலில் சந்திரிகா பண்டாரநாயக்கா 1994இல் நான்காவது ஜனாதிபதியானார். சந்திரிகாவின் ஆட்சிக் காலம் என்பது ஒரு புறத்தில் சமாதானத்தை கட்டி எழுப்பவும், மறுபுறத்தில் போரை முடிவுக்கு கொண்டு வரவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் இரு புறங்களிலும் காணப்பட்ட தீவிரவாத சக்திகள் அவரது முயற்சிகளைத் தோற்கடிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டன. இதன் விளைவாக அவரது முயற்சிகள் அவரது கட்சிக்குள் பல முரண்பாடுகளை உருவாக்கிய நிலையில் 2005ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ ஐந்தாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலம் என்பது போரை உக்கிரப்படுத்தும் அதே வேளையில் சிங்கள பௌத்த இனவாத அரசாகவும், ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகளை மறுதலிப்பதாகவும், இலங்கை என்பது சிங்கள பௌத்த தேசம் என்பதாகவும், ஏனைய சமூகங்கள் பெரும்பான்மை சமூகத்தின் தயவில் வாழ்வதாகவும் விளக்கங்களை வழங்கும் காலமாக அமைந்தது. இதனால் இலங்கையின் தேசிய சிறுபான்மை இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மிகவும் அப்பட்டமாக மறுதலிக்கவும், அதேவேளை ராஜபக்ஸ குடும்பத்தின் வரலாறு என்பது பண்டாரநாயக்கா குடும்பத்தின் வரலாற்றை விட மிக முக்கியத்துவமானது என்ற நிலைக்கு அதிகாரம் என்பது குடும்ப ஆதிக்கமாக மாறிய காலமாகும். சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்பது பண்டாரநாயக்கா குடும்பத்திலிருந்து ராஜபக்ஸ குடும்பத்தின் ஆதிக்கத்திற்குள் சென்ற நிலையில் நாட்டின் ஜனாதிபதி ஆட்சிமுறை ஏகபோக ராஜபக்ஸ குடும்ப ஆதிக்கமாக அரசியல் யாப்பு மாற்றங்கள் மூலம் மாறியதால் நாட்டிலும், சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் எழுந்த முரண்பாடுகள் 2015ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஆறாவது ஜனாதிபதியாக தெரிவானார். இவர் ஓர் பொது வேட்பாளர் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டமையாலும், பாராளுமன்றத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் அதன் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்த காரணத்தால் ஐ தே கட்சியின் பாராளுமன்ற ஆதரவோடு ஆட்சியை நடத்தினார். ஆனால் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்திய ராஜபக்ஸ ஆதரவு சக்திகள் ஐ தே கட்சியின் கூட்டோடு உருவான நல்லாட்சி அரசை நன்கு செயற்பட முடியாதவாறு தொல்லைகளைக் கொடுத்தனர். அரசியல் மாற்றங்களைக் கொண்டு வந்து ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் 19வது திருத்தத்தை கொண்டு வந்த போதிலும் நாட்டில் முதன் முதலாக பிரதான கட்சிகள் இரண்டும் இணைந்து உருவாக்கிய நல்லாட்சி அரசு ஓர் தோல்வியடைந்த அரசாக மாறியது. இத் தோல்வியின் விளைவாக 2015ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த ராஜபக்ஸாக்கள் மீண்டும் தமது குடும்ப ஆதிக்கத்தை தொடரும் வகையில் சிங்கள மக்களின் தனி ஆதரவுடன் ஜனாதிபதி பதவியை எட்ட முடியும் என்பதை மிகவும் அப்பட்டமான இனவாத அரசியலின் மூலம் செய்து முடித்தனர். 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஜபக்ஸ குடும்பத்தின் இன்னொரு உறுப்பினரான கோதபய ராஜபக்ஸ நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவானார். நாட்டில் இடம்பெற்ற 30 வருடகால உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்தவராகவும், 2019ம் ஆண்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு படுகொலைகள் காரணமாக உல்லாச பயணத்துறை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் நாட்டின் பாதுகாப்பை மீண்டும் கட்டியெழுப்ப இரும்புக் கரங்கள் தேவை என்பதால் அவரைத் தேர்வு செய்த போதிலும் அவருக்கும், அரசியலுக்கும் போதிய அனுபவம் இல்லாமை காரணமாக அவர் வேறு சிலரின் உபதேசங்களைச் செவிமடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதால் நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி, டொலர் நெருக்கடி எனத் தோற்றம் பெற்று நாடு வங்குறோத்து நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் கோபமடைந்த மக்கள் ஜனாதிபதி மாளிகையை நோக்கி விரைந்தார்கள். முடிவில் அவர் நாட்டை விட்டு வெளியேறினார் கோதபய அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதால் ஜனாதிபதி பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பவே 2022ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க அரசியல் யாப்பு வழிகள் மூலமாக நாட்டின் எட்டாவது ஜனாதிபதியானார். இவ் வரலாற்று விபரங்கள் தெளிவாக புரியப்பட்டால் மாத்திரமே இத் தேர்தலின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஜனாதிபதித் தேர்தலும் அதன் முடிவுகளும் நாட்டின் பொருளாதாரம், அரசியல் கட்டுமானம், மக்களின் நாளாந்த வாழ்வு, எதிர்காலம் என்பவற்றில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இதனை உணராத அல்லது உணர முடியாத சில சக்திகள் ஜனாதிபதித் தேர்தலை வெறும் தமிழர் உரிமைக்குள் முடக்கி தமிழ் மக்களை இருண்ட அரசியலை நோக்கித் தள்ளுவதன் ஆபத்துக்களை புரிதல் அவசியம். எனவேதான் இப் பதிலும் சற்று நீண்டு சென்றுள்ளது. கேள்வி: இத் தேர்தல் நான்கு முனைப் போட்டித் தளமாக வர்ணிக்கப்படுகிறது. அவ்வாறாயின் இந்த நான்கு முனைகளும் எவ்வாறு தனித்தனி அமைகின்றன? பதில்: சமீப காலமாக சிங்கள ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் நோக்கும்போது நான்கு பிரதான கட்சிகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அதில் முதலாவது இடத்தை சஜீத் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ( Samagi Jana Balavegaya- SJB ) எனவும், இரண்டாவது இடத்தில் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி- ஜே வி பி எனவும், மூன்றாவது இடத்தில் சுயேட்சை வேட்பாளரான ரணில் விக்கரமசிங்க எனவும், நான்காவது இடத்தில் நமல் ராஜபக்ஸவை தேசிய அமைப்பாளராகக் கொண்ட பொது ஜன பெரமுன எனவும் தெரிவிக்கின்றன. இந்த நான்கு வேட்பாளரும் தேசிய பிரச்சனைகளில் மிகவும் வித்தியாசமான கொள்கைகளைக் கொண்டுள்ளனர். இவ் விபரங்களைப் பின்னர் பார்க்கலாம். கேள்வி: தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் என்ற பெயரில் ஒருவர் போட்டியிடுகிறார். இவரது போட்டி என்பது தேசிய அரசியலில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? பதில்: ஜனாதிபதித் தேர்தல் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? என்பதனை எனது முதலாவது பதில் விபரமாகத் தந்துள்ளது. அப் பின்னணியிலிருந்தே இப் பொது வேட்பாளர் என்ற சங்கதியையும் நோக்க வேண்டும். இப் பொது வேட்பாளரைத் தேர்வு செய்த முறை மிகவும் கேலியானது. அரசியல் கட்சிகளையும், சிவில் அமைப்புகளையும் கொண்ட ஒரு பொதுக் கட்டமைப்பு இவ் வேட்பாளரைத் தெரிவு செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் இவ் அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் எத்துணை மக்களின் அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கின்றன? எவ்வாறு அவ்வாறான முடிவை நோக்கிச் சென்றார்கள்? தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவைச் சார்ந்த ஒருவர் அக் கட்சியின் முடிவுகளுக்கு எதிராக செயற்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மதிக்கத் தெரியாத ஒருவர் தமிழ் மக்களின் பொதுவேட்பாளராக நியமிக்கப்படுவாராயின் மக்களுக்கு எவ்வாறான செய்தியை கொடுக்கின்றனர்? இங்கு தமிழ் மக்கள் சார்பில் போட்டியிடுவதாக யாரும் போட்டியிடலாம். ஆனால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்குப் பொறுப்புச் சொல்லும் யோக்கியதை போட்டியாளர்களுக்கு அவசியம். சிவில் அமைப்புகள் என அழைப்பவர்கள் எவரும் மக்களின் ஆதரவைக் கொண்டிருப்பவர்களாக தெரியவில்லை. அதே போலவே அரசியல் கட்சிகள் என்போர் தமது பாராளுமன்றப் பதவிகளைத் தமிழரசுக் கட்சி மூலமாகவே பெற்றனர். அவ்வாறாயின் இவர்களில் எவரும் ஜனநாயக அம்சங்களை மதிக்கவில்லை என்பது தெளிவு. இப் போட்டியாளர் சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றினார்கள். இனிமேல் நாம் ஏமாறத் தயாராக இல்லை. எமது பலத்தை எதிரிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் கூறுவோம் என்பதைத் தவிர வேறு எதுவும் அவரின் கொள்கைகளாக இல்லை. நாட்டில் ஜனநாயக கட்டுமானங்கள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன. அரச கட்டுமானம் ஊழலால் நிரம்பி வழிகிறது. நாட்டில் ஜனநாயகம் பலப்படுத்தாமல் எதுவும் சாத்தியமில்லை. ஆனால் இப் பொது வேட்பாளரின் வாயிலிருந்து இப் பிரச்சனைகள் பற்றிய எதுவும் வரவில்லை. ஏன்? இவருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை. அதனால்தான அவர் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக செயற்பட்டார். தனிமனித ஆதிக்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டார். இவர் எவ்வாறு ஜனநாயகத்தை மதிக்க முடியும்? கட்சியின் கட்டுப்பாட்டை மதிக்கத் தெரியாத ஒருவர் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்காக குரல் கொடுப்பார் என எவ்வாறு நம்ப முடியும்? இவர்கள் தமிழ் மக்களின் ஜனநாயக அரசியல் கோரிக்கைகளை வேடிக்கைப் பொருளாக, தமது சுயநலன்களைப் பெறும் நோக்கிலான பேரம் பேசும் அரசியலை மேற்கொள்கின்றனர். மக்கள் மிகவும் எச்சரிக்கையோடு தமது வாக்குகளைப் பிரயோகிக்க வேண்டும். கேள்வி: இத் தேர்தலில் பேரம் பேசுவதற்கான வாய்ப்புகள் உண்டா? பதில்: மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளே தென்படுகின்றன. உதாரணமாக நால்வர் பிரதான போட்டியாளராக இருக்கையில் நால்வரும் இவர்கள் கோரிக்கைக்கு சாதகமான பதிலளித்தால் தமிழர் தரப்பு யாரை ஆதரிப்பது? அவ்வாறான நிலையில் மேலும் பல சோதனைகளை நடத்த வேண்டும். அதாவது அக் கட்சிக்குள் நடைபெறும் இதர அரசியல் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆராய்வது அவசியமாகிறது. உதாரணமாக நாட்டின் ஜனநாயக அரசியல் கட்டுமானங்களை ஜனநாயக வழிக்கு மீட்டெடுப்பதாயின் ஊழல், சட்டம், ஒழுங்கு, கட்சியிலுள்ள மிக முக்கிய தலைவர்களின் கடந்தகால அரசியல், அக் கட்சியின் உட் கட்டுமானத்தின் செயற்பாடுகள் என பல அம்சங்களில்; கவனம் செலுத்த வேண்டும். நாம் பேரம் பேசச் செல்லும் வேளையில் அக் கட்சிகளும் எமது தலைவர்களின் வாக்குறுதிகளை நம்பும் நிலை ஏற்பட வேண்டும். பேரம் பேசச் செல்லும் தமிழர் தரப்பினர் அவர்கள் எதிர்பார்க்கும் வாக்குப் பலத்தினை வழங்கும் ஒரு தரப்பினராக அவர்கள் நம்ப வேண்டும். இவை யாவும் தேர்தலுக்கு முன்னரான தொடர்புகளிலிருந்தே ஆரம்பமாகும். ஏற்கெனவே நம்பிக்கையைக் கட்டி எழுப்பவதற்கான சில அத்திவாரங்கள் ஏற்கெனவே இருந்தால் மட்டுமே அது சாத்திமாகும். தற்போதுள்ள தேர்தல் சூழலில், சஜித், அநுர ஆகியோர் புதியவர்கள். ரணில், நாமல் ஆகியோர் ஏற்கெனவே ஒரு வரலாற்றுச் சுமையை வைத்திருப்பவர்கள். பிற்பட்ட இருவரும் தமிழ் மக்களின் நம்பிக்கையை ஏற்கெனவே இழந்த நிலையில் முற்பட்ட இருவர் தொடர்பாக மக்கள் ஆழமாக விவாதிக்க வேண்டும். கேள்வி: தமிழர் தரப்பு வெறுமனே தமிழ் மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டார்கள். நாம் எமது ஒற்றுமையை வெளிக்காட்ட வேண்டும். சர்வதேசமும், சிங்கள அரசியல் சக்திகளும் அப்போதுதான் பேச வருவார்கள் எனக் கூறும் அரசியலில் ஏதாவது அர்த்தம் உள்ளதா? பதில்: இந்த பேரம் பேசும் அரசியல் புளித்துப்போன ஒன்றாகும். தமிழர் தரப்பில் பல்வேறு குழுக்களாக இந்த அரசியல் சக்திகள் செயற்படுகின்றன. தூரத்தில் நின்று ஒற்றுமை பற்றிப் பேசுகின்றனரே தவிர ஒற்றுமைக்கான முயற்சிகள் எதுவும் இல்லை. அடிப்படையில் கொள்கை, கோட்பாடுகளில் எவ்வித வேறுபாடுகளும் இல்லாத நிலையில் தனி நபர் அடையாளங்களே முன்னிலையில் உள்ளன. சிவில் மற்றும் அரசியல் தரப்பு என இரு வேறு பிரிவினரின் கூட்டு என்பதே பொதுக் கட்டமைப்பு என விளக்கம் தரப்படுகிறது. ஆனால் சிவில் அமைப்;பு, அரசியல் அமைப்பு என வேறுபடுத்தும் அளவிற்;கு பாரிய வேறுபாடுகள் எதுவும் இல்லாவிடினும் சிவில் அமைப்பு என தம்மை அழைப்பவர்களில் பலர் பிரிவினை அரசியலை ஆதரிப்பவர்களாக அதிகம் உள்ளனர். தலைவர் என்பவர் கட்சி ஒன்றின் உரித்தாளராக இருத்தல் அவசியம் என்ற நிலையில் ஆளுக்கொரு கட்சி உண்டு. இவர்கள் மத்தியில் பேரம் பேசி ஒரு பொது உடன்பாட்டிற்கு செல்ல முடியாமல் உள்ள இவர்கள் அரசியல் எதிரிகளிடம் எந்த அடிப்படையில் பேரம் பேசுவது? தற்போது பணப் பட்டுவாடாவும் பிரதான பங்கை வகிக்கிறது. சிங்கள அரசியல்வாதிகளுக்கு யாரை விலைக்கு வாங்கலாம்? என்பதும், யாரைப் பயமுறுத்தலாம்? என்பதும் நன்கு தெரியும். பலரின் குற்றப் பத்திரிகைகள் இவர்களிடம் உண்டு. இந் நிலையில் பேரம் என்பது பணப் பட்டுவாடாவுடன் முடியும். கேள்வி: அவ்வாறாயின் தேசிய இனப் பிரச்சனையின் எதிர் காலம் எவ்வாறு அமையும்? பதில்: முதலில் தமிழ் அரசியலின் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறு அமைதல் பொருத்தமானது என்பதிலிருந்தே நாம் ஆரம்பிக்கலாம். ஏனெனில் தமிழ் அரசியல் மிகவும் சிக்கலடைந்து சில சந்தர்ப்பவாத சக்திகளின் கரங்களில் தமிழ் அரசியல் சிக்கியிருக்கிறது. தமிழரசுக் கட்சிக்குள் இடம்பெற்று வரும் உள் முரண்பாடுகள் அதனையே அடையாளப்படுத்துகின்றன. தமிழரசுக் கட்சி குறித்து பலருக்குப் பல்வேறு விமர்சனங்கள் இருந்த போதிலும் இக் கட்சி தோல்வி அடையுமெனில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளும் தோல்வியை நோக்கிச் செல்லும் என்பதே எனது எண்ணமாகும். இதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றைப் பாரக்கலாம். தமிழ் அரசியலில் அதாவது கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அரசியல் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான குரலாகவே ஒலிக்கிறது. இருப்பினும் கட்சியில் காணப்படும் சந்தர்ப்பவாத சக்திகளின் ஊடுருவல்கள், தலைமைத்துவ பண்பில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள், மிதவாத, தீவிரவாத சக்திகளின் உள் மோதல்கள் அதனால் ஏற்பட்ட தொலைநோக்கற்ற அரசியல் மாற்றங்கள் அக் கட்சிக்குள் பாரிய நெருக்கடிகளை உருவாக்கின. இருப்பினும் தமிழரசுக் கட்சிக்கு வெளியில் மக்களின் நம்பிக்கைக்குரிய இன்னொரு கட்சியை இதுவரை எவராலும் தோற்றுவிக்க முடியவில்லை. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தற்காலிகமாக அக் கட்சியின் ஆதிக்கத்தைப் பறித்த போதிலும் போரின் பின்னரும் அதாவது போரின் அனுபவங்களின் பின்னரும் புதிய கட்சியை, புதிய பாதையை உருவாக்க முடியவில்லை. மீண்டும் தமிழரசுக் கட்சியே அத் தலைமையை மீட்டெடுத்தது. எனவே தமிழரசுக் கட்சியின் அனுபவம் என்பது தமிழ் மக்களின் ஓர் அரசியல் வரலாறாகவே இன்னமும் உள்ளது. மாற்று அரசியல் சிந்தனை, மாற்று அரசியல் வடிவம் என்பது தமிழரசுக் கட்சிக்கு வெளியில் பலமாகத் தோற்றம் பெறாத இச் சூழலில் மாற்றுத் தேர்வு என்ன? என்ற கேள்வி எழுகிறது. கட்சிக்கு வெளியில் மாற்றத்திற்கான நிலமைகள் தோற்றம் பெறாவிடினும் அக் கட்சிக்குள் எழுந்துள்ள உள் முரண்பாடுகள் புதிய அரசியல் வடிவத்தை நோக்கிய விவாதங்களாக மாற்றம் பெறுவதை அவதானிக்கலாம். எனவே புறவயத்தில் வாய்ப்புகள் இல்லாவிடினும், அக் கட்சிக்குள் எழுந்துள்ள நெருக்கடிகள் பாரிய அரசியல் மாற்றத்தை நோக்கியதாகவே உள்ளன. எனவேதான் தமிழரசுக் கட்சிக்கான மாற்று அரசியல் தலைமை என்பது அங்கிருந்தே தோற்றம் பெறும் வாய்ப்புகள் உள்ளதால் எமது கவனம் அங்கு குவிக்கப்படுதல் அவசியம் என்கிறேன். குறிப்பாக தமிழரசுக் கட்சியை அதாவது பலமான மாற்று அரசியல் கட்சி தமிழரசுக் கட்சிக்கு வெளியில் தோற்றம் பெறாத நிலையில் இக் கட்சியை அழிப்பது என்பது விடுதலைப் புலிகளின் ஆளுமை தமிழ் அரசியலில் இருந்த போது காணப்பட்ட பலம் அந்த அமைப்பின் அழிவுடன் பாரிய வெற்றிடமாக பல்வேறு விமர்சனங்கள் காணப்படினும் அதுதான் இன்னமும் நிலமையாக உள்ளது. அவர்களுக்குப் பதிலான மாற்றுத் தலைமை இல்லாத காரணத்தால் இன்று எதிர்ப்பு இயக்கம் என்பது இல்லாதொழிந்தது. மக்கள் இன்று வரை அதன் தாக்கத்தை உணர்கிறார்கள். எனவே தமிழரசுக் கட்சிக்குள்ளிருந்துதான் மாற்றங்கள் தோன்ற வேண்டும். சிங்கள, பௌத்த பெருந்தேசியவாதம் அந்த ஏக்களிப்பில் இன்றும் வாழ்கிறது. அவ்வாறான நிலை ஏற்படக் கூடாது என்பதன் காரணமாகவே தமிழரசுக் கட்சியின் தோல்வி தமிழ் அரசியலின் தோல்வியாக மாறலாம் என்ற அச்ச உணர்வே அல்லாமல் அக் கட்சியைக் காப்பாற்றும் நோக்கமல்ல. கேள்வி: தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் தற்போதைய முரண்பாடுகளின் எதிர் காலம் என்னவாக அமையலாம்? பதில்: தமிழரசுக் கட்சிக்குள் தற்போது அதன் எதிர்கால அரசியல் போக்கு குறித்த முரண்பாடுகளின் உருவமாகவே காண்கிறேன். வெளிப் பார்வையில் அவை சில தனி நபர்களின் முரண்பாடுகளாகக் காணப்படினும் அவை அடிப்படையில் அரசியல் அம்சங்களை வற்புறுத்துகிறது. கடந்த 30 வருட கால சிவில் யுத்தம் மிகவும் காத்திரமான, ஆழமான அரசியல் வடுக்களை தமிழ் அரசியலில் விதைத்திருக்கிறது. போர் தோற்றிருக்கலாம். உலகில் விடுதலைப் போராட்டங்கள் வெற்றி அடைந்ததை விட தோல்வி அடைந்தவை ஏராளம். எனவே இத் தோல்வி என்பது தற்காலிகமானது. ஆனால் இப் போராட்டம் விட்டுச் சென்ற அரசியல் குறித்தே எமது கவனம் செல்ல வேண்டும். உதாரணமாக, இலங்கையில் பெரும்பான்மை சிங்கள, பௌத்த பெரும் தேசியவாதம் இதர தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகளைத் தொடர்ந்து நிராகரித்துச் செல்லுமாயின் அங்கு போருக்கான சூழல் எப்போதுமே நீறு பூத்த நெருப்பாக இருக்கும். அதே போராட்ட அனுபவங்களும், சர்வதேச அரசியல் மாற்றங்களும் மாற்றுத் தேர்வுகளையும் வழங்கிச் செல்லும். தமிழ் அரசியல் பலமாக இல்லாத நிலையில் மக்களுக்கு மேலும் துன்பங்களை வழங்காத வகையில் அணுகுமுறைகளை வகுப்பது கட்டாயத் தேவையாக மாறுகிறது. இவ்வாறான ஒரு அனுபவ வெளிப்பாடே தமிழரசுக் கட்சிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகளாகும். பிரிவினைக் கோரிக்கையை ஆழமாக நம்பிய காரணத்தினால்தான் மிகவும் கணிசமான தொகை இளைஞர்கள் தம்மை ஆகுதியாக்கினார்கள். அதில் பங்களித்த பலர் இன்னமும் அது சாத்தியம் என நம்புகின்றனர். இவர்கள் எதிரிகளல்ல. போராட்டத்தின் கூறுகள். இவர்களை எவ்வாறு இணைத்துச் செல்வது என்பதே புதிய தலைமையின் ராஜதந்திரமாகும். உலகம் தீர்வுகளைத் தரும் என நம்புவதை விட எமது ராஜதந்திர செயற்பாடுகளே நம்பிக்கை தர வேண்டும். இப் பிரச்சனையில் பாலஸ்தீன அனுவபங்கள் வேறு பதிலைத் தருகின்றன. போரும் அதன் பின்னரான அனுபவங்களும் தமிழ் அரசியலில் இரு வேறு அரசியல் முகாம்களை உருவாக்கியுள்ளது. ஒட்டுமொத்த இலங்கைத் தேசியத்திற்குள் சகல தேசிய சிறுபான்மை இனங்களும் சமாதானத்தோடும், அமைதியோடும் வாழ்வதற்கான பாதை உண்டு என நம்பும் அரசியல் போக்கு தற்போது வளர்ந்துள்ளது. இதற்குப் பிரதான காரணம் சிங்கள சமூகத்திற்குள் இனவாதமற்ற அரசியல் விழிப்புணர்ச்சி காத்திரமாக வளர்ந்து வருகிறது. இருப்பினும் அது ஒரு போதும் சாத்தியமில்லை என நம்புவோர் தொடர்ந்தும் பழைய அனுபவங்களை உதாரணம் காட்டி பிரிவினைக்கான நியாயங்களை வற்பறுத்துவோரும் உண்டு. இப் பிளவுகள் பலவீனமடைந்தால் மாத்திரமே தமிழ் அரசியல் தழைக்க வாய்ப்பு உண்டு. கேள்வி: இப் பதில் ஒரு நம்பிக்கை தருவதாக அமையவில்லையே? அவ்வாறெனில் அதற்கான வாய்ப்பே இல்லையா? பதில்: சமூகத்தில் ஏற்பட்டு வரும் நிகழ்வுகள் மாற்றங்களைத் தரும் அடிப்படைகளைக் கொண்டிருக்காத நிலையில் எப் பதிலும் போலியாக அமைந்து விடும். போர் முடிவடைந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகியும், தமிழ் அரசியலில் உள்ளார்ந்த அடிப்படையில் ஓர் நல்லிணக்கம் ஏற்படவில்லை. இயக்கப் பிளவுகள் இன்னமும் கனதியாக உள்ளன. போரில் மரணித்தவர்கள் தமக்காக, சுயநலத்திற்காக செல்லவில்லை. அப்போதிருந்த அரசியல் சூழல்களின் அடிப்படையில் கிடைத்த வாய்ப்புகளினடிப்படையிலேயே தமது இயக்கத்தைத் தேர்வு செய்தார்கள். அனைவரும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்காகவே தம்மைப் பலி கொடுத்தார்கள். இவர்கள் எல்லோரும் தமிழ்த் தாயின் புதல்வர்கள். எனவே இயக்க வேறுபாடுகளின்றி சகலருக்கும் ஒரே மரியாதை வழங்குவது சமூகத்தின் கடமை. ஆனால் பல்வேறு தேவைகளுக்காக சமூகம் இன்னமும் பிளவுகளைக் கொண்டாடுகிறது. இந்த நிலை மாறாத வரை அதாவது எமது சமூகத்திற்குள் உள்ளளார்ந்த அடிபபடையில் நல்லிணக்கம் ஏற்படாத வரை அரசியல் கட்சிகள் மத்தியில் அல்லது சமூகத்தின் மத்தியில் ஒற்றுமை, நல்லிணகக்கம் ஏற்பட வாய்ப்பு இல்லை. தேர்தலில் வாக்குக்காக ஒற்றுமை எனக் குரல் கொடுப்பது வெறும் ஏமாற்று. தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் பிரிவினையா? அல்லது ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்க அடிப்படையிலான தீர்வா? என்பது குறித்த தெளிவான விவாதம் தீர்மானகரமான விதத்தில் மேலெழாத வரை எந்த அரசியல் தீர்வும் சாத்தியமில்லை. இவற்றைத் தனிநபர் பிளவுகளாக சில ஊடகங்களும் விபரிக்கின்றன. இதனால்தான் ஒருவர் காலை மற்றவர் இழுத்து வீழ்த்துவது வரலாறாக தொடர்கிறது. அத்துடன் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் எம்மைப் பிரித்தாளுவதற்கான வாய்ப்பாகவே அது அமையும். கேள்வி: எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது உசிதமானது? பதில்: இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதே எனது கரிசனையாகும். ஏனெனில் அடுத்த ஜனாதிபதியாக வருபவர் தமிழ் மக்களினதோ அல்லது நாட்டின் பொருளாதாரத்தில் அடிப்படை மாற்றங்களையோ ஏற்படுத்தி விட முடியாது. அந்த அளவிற்கு நாடு மிக மோசமான நிலையில் உள்ளது. எனவே நாடு ஒரு புதிய வழியில் செல்வதற்கான கொள்கை, கோட்பாடுகள், அரசியல் தலைமை அவசியமாகின்றன. இவை பற்றி பின்னர் பார்க்கலாம். இந்த அடிப்படையில் பார்க்கும்போது முதலில் ரணில் விக்ரமசிங்க தோற்கடிக்கப்படுவது அவசியம் என்பது எனது அபிப்பிராயம். அவற்றை சற்று ஆழமாகப் பார்க்கலாம். இலங்கையின் அரசியலில் மிக மோசமான தாக்கங்களைச் செலுத்திய அல்லது நாட்டை இவ்வளவு மோசமான நிலைக்கு எடுத்துச் சென்ற இரு கட்சிகளில் ஐ தே கட்சி மிக முக்கியமானது. நமது தேசத்தில் இனவாதத்திற்கான அடிப்படைகளாக கல்லோயா, மாவலி போன்ற அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்கி சிங்களக் குடியேற்றங்களை அமர்த்தி ஏனைய சிறுபான்மை இனங்களின் அடையாளங்களை அழிக்கக் காரணமாக இருந்தது அக் கட்சியாகும். தற்போதும் ரணில் தனது பிரச்சாரங்ககளில் டி எஸ்; செனநாயக்காவை நினைவூட்டுவது ஏன்? இக் கட்சியினால் அறிமுகப்படுத்தப்பட்ட இன்றைய இரண்டாவது குடியரசு யாப்பு நாட்டின் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கிருந்த குறைந்தபட்ச பாதுகாப்புகள் அனைத்தையும் இல்லாதொழித்தது. நாட்டின் பொருளாதாரத்தை மேற்கு நாடுகளின் உற்பத்திகளின் சந்தையாக மாற்றி, நாட்டில் நிலவிய உள்நாட்டு பொருளாதாரத்தையும் சீரழித்தது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நிலவும் தாராளவாத திறந்த பொருளாதாரமே இன்று எமது நாட்டை வங்குறோத்து நிலமைக்குத் தள்ளியது. நாட்டின் பிரதமராக 6 தடவைகள் பதவி வகித்த ரணில் இப் பாதக செயல்களுக்கு பொறுப்பில்லை என யாரும் கருத முடியுமா? தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வாக புதிய அரசியல் யாப்பினை சந்திரிகா முன் மொழிந்த வேளையில் அதனை எரித்து நிராகரித்தது ரணிலாகும். நாட்டில் இனவாதத்தின் மூலம் தேசிய அரசியல் வாழ்வை சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தை நோக்கித் திருப்பிய கட்சிகளில் ஒன்றான சிறீலங்கா சுதந்திரக் கட்சி இன்று அடையாளம் இல்லாமல் போய்விட்டது. நாம் ரணிலைத் தோற்கடிப்போமாயின் அவருடன் ஐ தே கட்சியும் அடையாளம் அற்றுப் போய் விடும். எனவே தமிழ் மக்கள் எமது சமூதாயத்தின் எதிர்காலம் கருதி இனவாதக் கட்சிகளைத் தோற்கடிப்பது தற்போது அவசியமானதே. எனவே இத் தேர்தலில் தமிழ் மக்கள் சிந்தித்து தமது வாக்குகளைச் செலுத்த வேண்டும். கேள்வி: ரணில் சிறைக் கைதிகளை விடுவித்தார் எனவும், பறித்த காணிகளை விடுவித்தார் எனவும், 13வது திருத்தத்தை அமுல்படுத்த முனைந்தார் எனவும், தற்போது வடக்கிலும், கிழக்கிலும் பொருளாதார வலையங்களைத் தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளாரே! மக்கள் அவரை வேறு விதமாகப் பார்க்கிறார்களே? பதில்: தமிழ் மக்களின் அரசியல் அனுபவங்களை அறியாதவர்கள், அரசாங்கத்தின் உதவிகளைப் பெற்று தமது சொந்த நலன்களை வளர்க்க எண்ணுபவர்கள் இவ்வாறான சில அற்ப சலுகைகளை பிரமாண்டமாக வர்ணிக்கலாம். ஆனால் அவர் மேற்கொள்ளும் இச் செயல்கள் தமிழ் மக்கள் உலக நாடுகளின் மேல் போட்ட அழுத்தங்களின் விளைவாக குறிப்பாக ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் மிக அதிகமான அழுத்தங்களே ரணிலின் சில நடவடிக்கைகளுக்குக் காரணமே தவிர இவை அவரது அரசியல் சிந்தனையின் விளைவானது அல்ல. தமிழ் மக்கள் தமது சந்ததியின் எதிர்காலத்திற்கு தேவையான தீர்வுகளை மையமாக வைத்தே இத் தேர்தலை அணுக வேண்டும். தமிழ் அரசியல்வாதிகள் பலர் ஒரு புறத்தில் தமிழ் பொது வேட்பாளர் தேவை என ஒப்பமிட்ட பின்னர் சிங்கள அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஏன் நடத்தினார்கள்? அவர்கள் வாங்கிய பணப் பெட்டிகளுக்கு வகை சொல்ல அல்லது மதுபான சாலை உத்தரவுப் பத்திரங்களுககுப் பதில் சொல்லவே அங்கு சென்றார்கள். உதாரணமாக, ரணில் பாராளுமன்;றத்தால் ஜனாதிபதியாக 134 வாக்குகளால் தெரிவு செய்;யப்பட்;;டார். இவர்களில் தமிழர் தேசியக் கூட்;டடமைப்பின் சில உறுப்பினர்;களும் அடங்குவர். சம்பந்தன் அவர்கள் டல்லஸ் அழகப்பெருமா அவர்களைத் தமது கட்சி ஆதரிக்கும் எனத் தெரிவித்;திருந்தார். ஆனால் பின்னனர் பணம் கைமாறியதாக டல்லஸ் கூறுகிறார். இவர்களில் தமிழ் உறுப்பினர்களும் அடங்குவர். இவ்வாறான சந்தரப்பவாத அரசியல்வாதிகள் எவ்வாறு எமது சந்ததியின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பார்கள்? மக்கள் ரணிலின் அரசியற் கட்சியையும், அதன் அரசியலையும் ஆழமாக அவதானித்தே தமது வாக்கைச் செலுத்த வேண்டும். இத் தீர்மானகரமான வேளையில் அற்ப சலுகைகளைக் காரணம் காட்டி வாக்களித்தால் தமது தலையில் தாமே மண் அள்ளி வீசுவதற்குச் சமானமானது. தொடரும் ……. https://arangamnews.com/?p=11161
  5. பொது இடங்களில் பெண்கள் பேசக்கூடாது; தலிபான்கள் கட்டுப்பாடு ஆப்கானிஸ்தானில் பொது இடங்களில் பெண்கள் பேசக்கூடாது மற்றும் முகத்தையும் உடலையும் காட்டக்கூடாது என்று தலிபான்கள் கட்டுப்பாட்டை விதித்துள்ளனர். புதிய சட்டங்கள் ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிப்பாக கடுமையாக பாதித்தது, பெண்கள் தங்கள் முகத்தையும் உடலையும் மட்டுமல்ல, தங்கள் குரலையும் வீட்டிற்கு வெளியே மறைக்க வேண்டும். இந்த சட்டத்தை ஐக்கிய நாடுகள் சபையும் உரிமைக் குழுக்களும் சமீபத்திய விதிகளை கடுமையாக விமர்சித்துள்ளன. அமெரிக்கப் படைகளை வெளியேற்றி ஆகஸ்ட் 2021 இல் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து , தலிபான்கள் பெண்களின் உரிமைகள் விஷயத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களில் அடைந்த முன்னேற்றத்தைப் பின்னுக்குத் தள்ளியுள்ளனர். அவர்கள் பொது வாழ்வின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பெண்களையும் சிறுமிகளையும் வெளியேற்றியுள்ளனர். புதிய தலிபான் விதிகள் ஆப்கானிஸ்தானில் பெண்களை மேலும் ஒடுக்குகிறது, பொது வாழ்க்கை மற்றும் அடிப்படை சுதந்திரங்களில் இருந்து அவர்களை தடை செய்கிறது. மேற்கத்திய அரசாங்கங்களால் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவிற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க முடியவில்லை. https://thinakkural.lk/article/308702
  6. யாழ் . பல்கலை முன்றலில் போராட்டம் adminAugust 31, 2024 சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது தினமான நேற்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு முன்னால், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தி, வாய்களை கறுப்பு துணியால் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக மாணவர்கள் , விரிவுரையாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், ஊழியர் சங்கத்தினர் ஆகியோர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர் https://globaltamilnews.net/2024/206267/
  7. சாணக்கியன் சுமந்திரனது செல்லப்பிள்ளை.சம்பந்தன் ஐயாவின் செயல்வடிவம் சுமந்திரன் : கஜேந்திரன் MP ! kugenAugust 28, 2024 (பாறுக் ஷிஹான்) மக்களை ஏமாற்றுவதற்காகவே அரசாங்கத்தை விமர்சித்துக்கொண்டிருக்கின்றார்கள். மக்கள் இவ்வாறானவர்களது பசப்பு வார்த்தைகளை கண்டு ஏமாற கூடாது. தேர்தலை பகிஸ்கரிப்பதற்கு மக்கள் தயாராக வேண்டும் . சாணக்கியன் சுமந்திரனது செல்லப்பிள்ளை. சம்பந்தன் ஐயாவின் செயல்வடிவம் சுமந்திரன் அவர்கள். கூட்டமைப்பினுள் பிளவு என்பது அவர்கள் பதவிக்காக சண்டை பிடிப்பதாக இருக்கலாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அண்மையில் அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை சாணக்கியன் எம்.பி அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் தீர்மானிக்கும் என்பதை அடிக்கடி கூறி வருகின்றார். இவர்கள் இந்தியாவின் முகவர்கள் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். இந்திய மேற்கு தரப்பு எந்த முகவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்கின்றதோ அந்த முகவருக்கு வெளிப்படையான அறிவித்தலை செய்வார்கள். தமிழ் மக்கள் அந்த மனநிலையில் இல்லை என்று சொன்னால் ஏதோ ஒரு வகையில் பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் இறுதி நேரத்தில் எடுத்து முடிவுகளை மாற்றக்கூடியவர்கள். தங்களுக்கென்று ஒரு நிலைப்பாடு கிடையாது. சாணக்கியன் அவர்கள் மும்மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர். இவ்வாறு பேசுகின்ற அவர் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவாக பேசுகின்றாரா அல்லது எதிராக பேசுகின்றாரா என்பது குறித்து மக்களால் பிரித்துணர முடியாதுள்ளது. எப்பொழுதும் அரசாங்கத்திற்கு எதிராக பேசுவாரே தவிர ஒரு போதும் அரசுக்கெதிராக அவர் பேசுவது கிடையாது. அரசாங்கத்தை விமர்சிப்பதன் ஊடாக அவர் மக்களுக்கு தன்னை தமிழ் தேசிய வாதியாக காட்ட முற்படுகின்றார். மக்களை ஏமாற்றுவதற்காகவே அரசாங்கத்தை விமர்சித்துக்கொண்டிருக்கின்றார்கள். மக்கள் இவ்வாறானவர்களது பசப்பு வார்த்தைகளை கண்டு ஏமாற கூடாது. தேர்தலை பகிஸ்கரிப்பதற்கு மக்கள் தயாராக வேண்டும் என்பதை கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். சாணக்கியன் சுமந்திரனது செல்லப்பிள்ளை. சம்பந்தன் ஐயாவின் செயல்வடிவம் சுமந்திரன் அவர்கள். கூட்டமைப்பினுள் பிளவு என்பது அவர்கள் பதவிக்காக சண்டை பிடிப்பதாக இருக்கலாம். எனினும் எமது தேர்தல் பகிஸ்கரிப்பு விடயத்தை இவ்வாறானவர்கள் பிரிந்து நின்றாலும் பகிஸ்கரிக்க விடமாட்டார்கள். நிச்சயமாக யாரோ ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறுவார்கள். தமிழ் மக்கள் தேர்தலை பகிஸ்கரிக்க கூடாது என்ற நிலைப்பாட்டை எடுக்க முடியாதவாறு வாக்களிப்பு முறைகளை எவ்வழியிலும் நடாத்தி செல்வார்கள். எனவே மக்கள் இவ்வாறானவர்களை நிராகரிக்க முன்வர வேண்டும் என்றார். https://www.battinews.com/2024/08/mp_83.html
  8. கனடாவில் குடியேற முடியாது: கனேடிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு கனடாவுக்குக் குடிபெயரும் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. கனடாவில் குறைந்த வருமானம் கொண்ட வேலைகளுக்காக தற்காலிகமாக குடிபெயரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால், கனேடியர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே கனேடிய நாட்டவர்களுக்கு முக்கியமாக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்றைய தினம் அறிவித்தார். தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்பவும், குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டவர்கள் வேலைக்கு வருவார்கள் என்பதாலும் கடந்த 2022 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டத்தின் கீழ் அதிகமானோர் அங்கு தற்காலிகமாக குடியேறி வருகின்றனர். இந்த நிலையில் இதன்மூலம் கடந்த ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரித்து, வீட்டு வசதி மற்றும் எனைய சேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என்ற நோக்கத்தில் அந்த திட்டத்தில் திருத்தம் செய்து குடிபெயர்வோரை தடுக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது. இதைத்தவிர்த்து நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையையும் குறிக்க கனேடிய அரசு திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://akkinikkunchu.com/?p=289463
  9. சாம்பல் மேட்டு அரசியல்! August 27, 2024 — கருணாகரன் — இரண்டு நாட்களுக்கு முன், நாம் வழமையாகச் சிற்றுண்டி வாங்கும் கடைக்குச் சென்றேன். சமூக நிலவரங்களை அறிவதற்காகப் பொதுவாகவே நான் பல்வேறு தரப்பினரோடும் உரையாடுவது வழக்கம். இது தேர்தல் காலம் வேறு. என்பதால், “தேர்தலைப் பற்றிச் சனங்கள் என்ன சொல்லுகினம்?” என்று கடைக்காரரிடம் கேட்டேன். “ஒவ்வொருதரும் ஒவ்வொரு மாதிரிக் கதைக்கினம். கொஞ்ச நாளுக்கு முதல்ல சஜித்துக்கும் ஜே.வி.பி (அநுர) க்கும்தான் போட்டி எண்டமாதிரிக் கதையிருந்துது. இப்ப ரணிலுக்கும் சஜித்துக்கும்தான் போட்டிபோலக் கிடக்கு” என்றார். “ஏன் அநுரவுக்கும் செல்வாக்கு இருக்கெண்டுதானே வெளியில கதையிருக்கு?” என்றேன். “அதைப்பற்றிச் சரியாத் தெரியாது. ஆனால், நம்மட்ட வாற ஆக்கள் ரணிலைப்பற்றியும் சஜித்தைப் பற்றியும்தான் கதைக்கினம்” என்றார். “அப்பிடியெண்டால் நீங்கள் என்ன முடிவில இருக்கிறியள்?” எனக் கேட்டேன். “இன்னும் நாட் கிடக்குத்தானே! பொறுத்துப் பாப்பம்” எனச் சொன்னார். நானும் விடவில்லை. “தமிழ்ப்பொது வேட்பாளர் எண்டு ஒருத்தர் நிறுத்தப்பட்டிருக்கிறாரல்லோ! அதைப்பற்றி ஆட்கள் என்ன கதைக்கினம்? நீங்கள் என்ன சொல்லுறியள்?” தொடர்ந்து கேட்டேன். “அதைப்பற்றிச் சிலர் கதைக்கினம்தான். ஆனால், நான் என்ன சொல்லிறது? உங்களுக்கு ஒண்டைச் சொல்லட்டே. உங்களிட்டக் கொஞ்சக் காசிருக்கெண்டு வையுங்கோ. அந்தக் காசை என்ன செய்வீங்கள்? ஏதாவது உருப்படியான வேலையைச் செய்யப் பயன்படுத்துவீங்கள். அல்லது தேவையான பொருள் எதையும் வாங்குவீங்கள். இல்லாவிட்டால், சொந்த பந்தங்களுக்குக் குடுத்து உதவுவீங்கள். அதுமில்லாவிட்டால், ஆராவது உதவி தேவைப்படுகிற ஆட்கள், கஸ்ரப்பட்ட சனங்களுக்குக் குடுப்பீங்கள். ஒண்டுமில்லையெண்டால் கோயில் உண்டியல்லயாவது போடுவீங்களல்லோ. சும்மா றோட்டில போட மாட்டீங்கள்தானே..!” என்றார். இதற்கு மேல் நான் எதுவும் கேட்க வேண்டியிருக்கவில்லை. 00 தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தைப் பற்றி நாம் அதிகமாகப் பேச வேண்டியதில்லை. அதற்காக நேரத்தைச் செலவழிப்பது வீண். இருந்தும் அதைப்பற்றி ஏன் பேசவேண்டியிருக்கிறது என்றால் – “பொதுவேட்பாளர் வந்து விட்டார்” “தமிழ்ப் பொதுவேட்பாளர் யாருக்காக?” “நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடிய இரண்டு (ரணில் – அரியநேந்திரன்) சுயேட்சை வேட்பாளர்கள்” “தமிழ் மக்கள் தாங்கள் யாரென்பதைக் காட்டுவார்கள்” “தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்” “1989 இல் ஈரோஸ் இயக்கத்தின் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் பெற்ற வெற்றியைப்போல இப்போதைய தமிழ்ப்பொது வேட்பாளரும் வாக்குகளை அள்ளுவார்!” போன்ற கருத்துகளை முன்வைத்துச் சனங்களைத் திசைதிருப்ப முற்படுவதை காணும்போது பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. காரணம், அத்தனையும் தவறான புரிதலின் அடிப்படையிலானவை. இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாகக் கூடப் பார்க்கலாம். 1. “பொதுவேட்பாளர் வந்து விட்டார்” என்றால் அவரென்ன வானத்திலிருந்து குதித்தாரா? அல்லது வாராது வந்த மாமணியா? (இப்படித்தான் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் தமிழ் மக்களின் மீட்பர், தமிழ்ச்சமூகத்துக்கு வராது வந்த மாமணி என்றார்கள்! இறுதியில் அரசியலில் அரிச்சுவடியே தெரியாதவர் என்பதை அவரே நிரூபித்தார்). அரியநேந்திரனைப் பொது வேட்பாளராக நிறுத்தியதற்குத்தான் இந்தப் பெரிய அமர்க்களமா? மலையகத்தில் மல்லியப்பு திலகர் என்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜூம்தான் போதுவேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவரும் மலையக மக்களை, அவர்களுடைய பிரச்சினையை வெளிப்படுத்துவதற்காகவே போட்டியிடுகிறார். இரண்டையும் சமப்படுத்த முடியாது என்று சிலர் சொல்லக் கூடும். இலங்கையில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கும் சிங்களவரல்லாத தேசிய இனங்களுக்கு ஒடுக்குமுறையும் அது சார்ந்த பிரச்சினையும் உண்டு. அப்படியென்றால், தமிழ், முஸ்லிம், மலையகத் தரப்புகள் இணைந்து ஏன் ஒரு பொது வேட்பாளரை அடையாளமாக முன்னிறுத்தவில்லை. அதற்கு ஏன் முடியாமற்போனது? மெய்யாகவே சிங்களத் தரப்புக்கு நெருக்கடியைக் கொடுப்பதாகவும் சர்வதேச சமூகத்துக்கு சிங்கள ஒடுக்குமுறையை வெளிப்படுத்துவதாகவும் இருந்தால் அதைத்தான் செய்திருக்க வேண்டும். அதை விடுத்து, இப்படி அரியநேந்திரனைக் கொண்டு வந்து நிறுத்துவதல்ல. பொதுவேட்பாளர் என்பதற்கான அர்த்தம் ஓரளவுக்கு அப்பொழுதுதான் பொருந்தும். இது பொதுவேட்பாளரேயல்ல. தமிழ் வேட்பாளர். அதிலும் ஒருசாராருடைய தரப்பின் வேட்பாளர். அவ்வளவுதான். 2. “தமிழ்ப் பொதுவேட்பாளர் யாருக்காக?” என்றால் நிச்சயமாக பொதுச்சபையினருக்கும் பொதுச்சபையினரின் ஏற்பாட்டில் உருவாக்கப்பட்ட பொதுக்கட்டமைப்பினருக்கும்தான். அவர்களுக்குப் பின்னின்று இயங்கும் சக்திகளின் விருப்பத்துக்குமாக. அதாவது இந்தத் தரப்பினருடைய தேவைக்காகவே தமிழ்ப் பொது வேட்பாளரும் தமிழ்ப்பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாடும். இதற்குக் காரணம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்புக்குள் தங்களுடைய செல்வாக்கு மண்டலத்தை விஸ்தரிப்பதற்கு பொதுச்சபையைச் சேர்ந்தவர்களிற் சிலர் கடந்த காலத்திற் கடுமையாக முயற்சித்தனர். இதற்காக இவர்கள், ஒரு கட்டம் வரையில் மறைந்த சம்மந்தனுடன்கூட நெருக்கமாகப் பழகியதுமுண்டு. அவருடைய மேடைகளிலும் நிகழ்ச்சிகளிலும் தம்மைப் பகிர்ந்ததுண்டு. ஆனால், என்னதான் நெருக்கம் காட்டினாலும் எப்படி அறிவுரை சொன்னாலும் எதற்கும் மசியாத சம்மந்தனுடைய நிலைப்பாட்டினால் இறுதியில் கசப்படைந்தனர். அந்தக் காய்ச்சலில் சிறிது காலம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் சம்மந்தனையும் வழிக்குக் கொண்டு வருவதற்காக – பழிதீர்ப்பதற்காக தமிழ்த்தேசியப் பேரவையை உருவாக்கினர். இரண்டாண்டுகளில் பேரவை சத்தமில்லாமற் படுத்து விட்டது. பிறகு, கஜேந்திரகுமார் – தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியோடு சமரசத்துக்கு முயற்சித்தனர். ஒரு எல்லைக்கு அப்பால் இவர்களை உள்ளே நுழைவதற்கும் தலையீடுகளைச் செய்வதற்கும் கஜேந்திரகுமார் அனுமதிக்கவில்லை. இதனால், விக்னேஸ்வரனைச் சாரத் தொடங்கினார். விக்னேஸ்வரனும் இவர்களுடைய கட்டுக்குள் நிற்கும் ஆளாகத் தெரியவில்லை என்றவுடன் தொடங்கப்பட்டதே தமிழ் மக்கள் பொதுச்சபையாகும். இப்பொழுது தமிழ் மக்கள் பொதுச்சபையானது தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பு என்ற பேரில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து (தமிழரசுக் கட்சியிலிருந்து) பிரிந்து சென்ற ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றது. ஏற்கனவே இந்தக் கட்சிகள் பொதுச்சபையினரின் கட்டுப்பாட்டுக்குள் பாதிக்குமேல் வந்து விட்டனர். வரும்நாட்கள் இதை மேலும் நிரூபிக்கும். ஏனென்றால், சம்மந்தன், சுமந்திரன்போலச் சுயாதீனமாகச் சிந்திக்கக் கூடிய, தலைமைத்துப் பண்புடைய ஆளுமைகளாக குறித்த கட்சியினர் இல்லை. என்பதால் பொதுச்சபையின் கட்டுப்பாட்டுக்குள் நிற்பது தவிர்க்க முடியாமற்போகும். 3. “நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடிய இரண்டு (ரணில் – அரியநேத்திரன்) சுயேட்சை வேட்பாளர்கள்” என்பது. இதைப்படிக்கும்போது சிரிப்புத்தான் வருகிறது. சுயேட்சை வேட்பாளர்கள் இருவர் என்பது சரியானதே. ஆனால், இருவரையும் சமனிலைப்படுத்திப் பார்ப்பது தவறு. அநேகமாக வடக்குக் கிழக்கில் அரியநேத்திரனை விட ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கவும் கூடும். அப்படியென்றால் நிலைமை? ரணில் தேர்தலில் தோற்றுப்போனால்? அதற்குப் பிறகு நாட்டின் தலைவிதி? சரி, அரியநேத்திரன் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றால், அதற்குப் பிறகு என்ன அதிசயங்கள், அற்புதங்கள் எல்லாம் நடக்கும்? அதைத் திட்டவட்டமாக பொதுச்சபையினரோ, பொதுக்கட்டமைப்பினரோ, அரியநேத்திரனை ஆதரிப்போரோ சொல்வார்களா? இந்த மாதிரி மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகளோடு தமிழ்ச்சனங்களை உச்சிக் கொப்பில் ஏற்றிய கதைகள் பலவுண்டு. ஒவ்வொரு தடவையும் கொப்பு முறிந்து விழுந்து இடுப்பு உடைந்ததே மிச்சம். 4. “தமிழ் மக்கள் தாங்கள் யாரென்பதைக் காட்டுவார்கள்” என்பது. நிச்சயமாக இதை ஏற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் தமிழ் மக்கள் அப்படித்தான் ஆக்கப்பட்டுள்ளனர். இல்லையென்றால் தங்களுக்கு எந்த நன்மைகளையும் செய்யாத, மக்களிடத்திலும் சூழலிலும் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாத, எந்த நெருக்கடியையும் தீர்க்காதவர்களையெல்லாம் இன்னும் தங்களுடைய பிரதிநிதிகளாகத் தேர்வு செய்து கொண்டிருப்பார்களா? அடுத்தது, தமிழ் மக்களிடத்தில் புதிதாகச் சிந்திக்கும் ஆற்றலை வளர்த்தெடுப்போரை விட, பழைய பாதையில் பயணிப்போரையே அவர்களுக்கு அதிகமாகப் பிடிக்கிறது. என்பதால் இனரீதியாக அடையாளப்படுத்தப்படும் எந்த விடயமும் அவர்களிடத்தில் சட்டெனப் பற்றி எரியும். தமிழ்ப்பொது வேட்பாளர் என்பது அப்படிப் பற்றி எரியக் கூடிய ஒரு சங்கதி. ஒரு பொருளே! ஆகவே தமிழ் மக்கள் அவரை ஆதரித்தோ கொண்டாடியோ தீருவர். அதன் விளைவுகள் எப்படியென்று பார்க்கவே மாட்டார்கள். காலம் கடந்த பிறகு வரும் ஞானத்தினால் பிறகுதான் கவலைப்படுவார்கள். ஆகவே வழமையைப்போலத் தாம் முன்னுணரக் கூடியவர்களில்லை என்பதைக் காட்டுவர். 5. “தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்” என்றால், யாருக்கு வழிகாட்டுவார்கள்? எதற்கு வழிகாட்டுவார்கள்? அந்த வழி எத்தகையதாக இருக்கும்? அது எங்கே செல்லதற்கானதாக இருக்கும்? இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வழிகாட்டுவார்களா? அப்படியென்றால் அது எத்தகைய வழி? அந்த வழியை சர்வதேச சமூகமும் இந்தியாவும் சிங்களத் தரப்பும் முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்வார்களா? மனோ கணேசனே வெளிப்படையாகச் சொல்லி விட்டார், “உந்த விளையாட்டை எல்லாம் வடக்குக் கிழக்கிற்குள் வைத்துக் கொள்ளுங்கள். தெற்கிற்கோ கொழும்புக்கோ மலையகத்துக்கோ கொண்டு வரவேண்டாம். அது வேறு உலகம் என்று. ஆகவே தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள் என்று சொல்லித் தாம் தப்புவதற்கு பொதுச்சபையினரும் பொதுக்கட்டமைப்பிலுள்ள கட்சியினரும் முயற்சிக்கலாம். அது வரலாற்று நகைப்புக்குரிய ஒன்றேயாகும். 6. “1989 இல் ஈரோஸ் இயக்கத்தின் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் பெற்ற வெற்றியைப்போல இப்போதைய தமிழ்ப்பொது வேட்பாளரும் வாக்குகளை அள்ளுவார்!” என்பது. இவ்வாறு இப்பொழுது சொல்வோர், அன்று ஈரோஸ் அமைப்பையும் அதனுடைய அன்றைய நிலைப்பாட்டினையும் அது தேர்தலில் நின்றதையும் கடுமையாக மறுதலித்தோரே. சரி, அந்தத் தவறைப் பின்னாளில் உணர்ந்தவர்கள் என்றாலும் அந்தச் சூழலையும் அந்த அமைப்பையும் இன்றைய நிலையோடு தொடர்புறுத்திப் பார்ப்பது தவறு. அப்படிப் பார்க்கவே முடியாது. காரணம், அது போராட்டம் நடைபெற்ற காலம். போட்டியிட்டவர்களும் போராளிகள். என்பதால்தான் மக்களும் அந்த நெருக்கடிச் சூழலிலும் அன்றைய சுயேட்சைகளுக்கு வாக்களித்தனர். மக்களுடைய அந்த நம்பிக்கைக்கு மதிப்பளித்து, அடுத்து வந்த பொருத்தமற்ற சூழலில் தங்களுடைய பதவிகளைத் துறந்தனர் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள். இவர்களோ (அதாவது பொதுக்கட்டமைப்பில் உள்ள கட்சியினரோ) நெருக்கடிகளை உருவாக்கியவர்கள் மட்டுமல்ல, இறுதிப்போர்க்காலச் சூழலில் தம்முடைய பதவியை விடாது இறுகப்பற்றிக் கொண்டிருந்தவர்கள். தவிர, இன்றைய சூழலானது பல தெரிவுக்குரியது மட்டுமல்ல, யார் மீதும் நம்பிக்கை கொள்ளக் கூடியதுமல்ல. மட்டுமல்ல, பொதுவேட்பாளரை நிறுத்தும் தரப்புகள் ஒன்றும் மக்களிடம் மாபெரும் செல்வாக்கைப் பெற்றவையும் அல்ல. அதில் உள்ள ஒரு தலைவராவது அனைத்துத் தமிழ் மக்களையும் ஒரு நிலைக்குக் கொண்டு வரக்கூடிய ஒரு அறிவிப்பையேனும் செய்து காட்டட்டும் பார்ப்போம். ஆகவே இந்தக் கருத்தை ஏற்கவே முடியாது. ஆனால், சிங்கள இனவாதத்துக்குப் பதிலளிக்க வேண்டும் என்பதற்காக மக்கள் இயல்பாக வாக்களிக்க முற்படலாம். என்பதால் மேற்படி வார்த்தைகளைப் படிக்கும்போது பாரதியின் பாடல் வரிகள் நினைவில் எழுகின்றன. “நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்…” உண்மையில் நெஞ்சு பொறுக்குதில்லைத்தான். சொந்த மக்களையே வைத்துச் சூதாடுவதைக் கண்டு எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? இதற்கு இவர்களுடைய மேலுமொரு உதாரணத்தைச் சொல்லுவது பொருத்தமாகும். “2005 ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப்புலிகள் இயக்கம் அதாவது தமிழ்த் தரப்பு எடுத்த முடிவானது முன்பு (1939 இல்) யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ் எடுத்த முடிவு போலவே செயல்முனைப்பானது.தேர்தலை தமிழ்நோக்கு நிலையில் இருந்து தந்திரோபாயமாக அணுகுவது” என்று ஒரு ஒப்புவமை சொல்லப்படுகிறது. போதாதென்று “அந்த பகிஷ்கரிப்பின் (2005 இல் மேற்கொள்ளப்பட்ட ) விளைவுகள் தமிழ் அரசியலின் மீது மட்டும் தாக்கத்தைச் செலுத்தவில்லை. அதற்குமப்பால் தென்னிலங்கை அரசியல், இந்தப் பிராந்திய அரசியல் என்று பல்வேறு பரிமாணங்களில் அந்த பகிஷ்கரிப்பின் விளைவுகள் அமைந்தன. அவற்றின் தொடர்ச்சிதான் இப்பொழுதுள்ள அரசியலும்” என்று வேறு சொல்லப்படுகிறது. ஈஸ்வரா! 2005 இல் மேற்கொள்ளப்பட்ட பகிஸ்கரிப்பின் விளைவுகள்தான் முள்ளிவாய்க்கால் முடிவுகளும் துயரமும் கூட. இவர்கள் எதைச் சொல்கிறார்கள்? என்ன எண்ணுகிறார்கள்? இதொன்றும் சாம்பல் அரசியல் அல்ல. சாம்பல் மேட்டு அரசியல். https://arangamnews.com/?p=11156
  10. ”தமிழ் பொது வேட்பாளர்: பொது வாக்கெடுப்பை கோரும் கருவியாக பயன்படுத்தப்பட வேண்டும்” மிழர் பொதுக்கட்டமைப்பினால் முன்னிறுத்தப்பட்டுள்ள பொதுவேட்பாளர் விடயத்தில், தமிழர் தேசத்துக்கான அரசியல் தீர்வினை மக்களே தீர்மானிக்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு வகையான தீர்வுத்திட்டங்களை நிலைப்பாடாக கொண்டிருக்கலாம். ஆனால் தேசமாக மக்களே தாம் எந்த அரசியல் ஏற்பாட்டக்குள் வாழ வேண்டும் என்பதனை தீர்மானிப்பவர்கள். அந்தவகையில் பொதுவாக்கெடுப்பு எனும் ஜனநாயகப் பொறிமுறையூடாக மக்கள் அதனை தீர்மானிக்கின்ற வகையில் அரசியல் தீர்வுக்கான செயல்வழிப்பாதையினை தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் தமிழர் பொதுக்கட்டமைப்பு முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், இது சர்வதேசத்தினால் அங்கீகரிக்ப்படப்ட மனித உரிமையாகும் எனவும் குறித்துரைத்துள்ளார். ஈழத்தமிழர்கள் ஓர் தேசிய இனம் என்பதனை அடிப்படையாக கொண்டு, தமிழர்களுடைய திரட்சியை, தனித்துவத்தினை, தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமையினை, தமிழர்களுடைய ஆட்புநிலப்பரப்பினை உலகிற்கு எடுத்துக் காட்டுகின்ற ஓர் விடயமாக தமிழர் பொதுவேட்பாளர் என்ற விடயத்தினை வரவேற்கின்றோம். தமிழர் தேசத்தனை பிரதிபலிக்கின்ற வகையில் தமிழர் பொது வேட்பாளரை முன்னிறுத்துவதனால், சிங்கள தேசத்தின் தென்னிலங்கை வேட்பாளர்கள் எவரும் தேர்தலின் முதற்சுற்றில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பில்லை. எனவே அவர்கள் இரண்டாவது சுற்றுக்கு தள்ளப்படுவார்கள். இவ்வேளை தமிழர்களின் சம்மதத்துடனோ அல்லது பங்களிப்புடனோ அல்லாமல் சிங்கள நலன்சார்ந்து உருவாக்கப்பட்ட இலங்கையின் அரசியலமைப்பு சட்டமானது, தமிழர்களை கட்டுப்படுத்தாது என்ற செய்தியினையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில், தமிழர்கள் 2ஆம் சுற்றுத் தேர்தலை புறக்கணிப்பதும் பொருத்தமானதாக இருக்கும். இதேவேளை, தமிழர் பொது வேட்பாளரை முன்னிறுத்துவதனால் தென்னிலங்கை தரப்புடன் பேரம்பேச முடியும் என்ற கருத்து தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கூறுகின்றனர். ஆனால் ஈழத் தமிழர் விவகாரத்தில் தென்னிலங்கை தரப்பினர் எழுத்திலோ, அல்லது வாக்குறுதியாகவோ எதுவாயினும் அவர்களால் நடைமுறைப்படுத்த முடியாது. காரணம் சிங்கள தேசத்தின் யதார்த்தம் என்பது சிங்கள பேரினவாதத்தினால் இனநாயகப்படுத்தப்பட்ட அரசியல் கலாச்சாரம் அதற்கு அனுமதிக்காது என்பது வரலாறாகவுள்ளது. தமிழர் தரப்பு பலமாக இருந்த அக்காலத்தில் 2004ம் ஆண்டு இலங்கையின் தேர்தல் களத்தில் தமிழ் தேசியக் கூட்டடைமப்பினை களமிறக்கிய தமிழீழ விடுதலைப் புலிகள், அத்தேர்தலை ஒரு கருவியாக கையாண்டனரே அன்றி, சிங்கள தரப்புடன் பேரம் பேசுவது நோக்கமாக இருக்கவில்லை என்பதனையும் நினைவிற் கொள்ள வேண்டும். ஆக்கிரமிப்பு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் இத்தேர்தலை, தமிழர்கள் ஒரு கருவியாகவும் ஓர் களமாகவும் பாவித்து நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான செயற்பாட்டை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்துவதற்கு தமிழர் பொதுவேட்பாளரை பயன்படுத்த வேண்டும். மகிந்த ராஜபக்ச ஆட்சியினை நீக்கம் செய்யும் நோக்கில், நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் மைத்திரியை ஆட்சிக் கதிரைக்கு கொண்டுவருவதற்கு, சர்வதேச சக்திகள் தமது நலன்களுக்காக தமிழர்களின் வாக்குகளை கருவியாக பயன்படுத்திக் கொண்டதனையும் நம் நினைவிற் கொள்ள வேண்டும். சர்வதேச சக்திகள் தமது பூகோள புவிசார் நலன்களுக்காக தமிழர்களை பாவிக்கின்றார்களே அன்றி, தமிழர்களை ஓர் தரப்பாக ஏற்றுக் நடப்பதில்லை. 1977ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை அடிப்படையாக கொண்டு தமிழர்கள் ஓர் தேசமாக மக்கள் கொடுத்த ஆணைக்கு மாறாக செயற்பட முடியாது. அந்தகையில் எந்த அரசியல் ஏற்பாட்டுக்குள் வாழ வேண்டும் என்பதனை தேசமாக மக்களே தீர்மானிக்கின்ற வகையில், பொது வாக்கெடுப்பினை முன்னிறுத்தி இலங்கையின் இன்றைய ஜனாதிபதி தேர்தல் களத்தினை தமிழர் தரப்பு கையாள வேண்டும். அதேவேளை இத்தேர்தல் காலத்தில் ஜெனீவாவில் கூடவிருக்கின்ற ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் வரவிருக்கின்ற தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துகின்ற வகையில் ஜெனீவாக் களத்தினையும் தமிழர் தரப்பு கையாள வேண்டும் எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-பொத/
  11. நோயாளர் காவு வண்டி அவசரமாக நோயாளிகளை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்ல மட்டுமே பாவிக்கப்படவேண்டும். ஆனால் சிறிலங்காவில் உணவு விநியோகத்திற்கும், மருத்துவர்களையும், தாதிமாரையும் ஏற்றி இறக்கவும் பயன்படுத்துகின்றார்கள்.
  12. தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன் “யாழ்ப்பாணம் இப்பொழுது வழிகாட்டியுள்ளது” இவ்வாறு 1931 ஆம் ஆண்டு எழுதியவர் பிலிப் குணவர்த்தன. இப்பொழுது பிரதமராக உள்ள தினேஷ் குணவர்த்தனவின் தகப்பன் அவர். ஒரு இடதுசாாரியாக இருந்தவர். 1931ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் முதலாவது தேர்தல் நடந்த பொழுது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கிய, யாழ்ப்பாணம் வாலிப காங்கிரஸ் தேர்தலை பரிஷ்கரிக்குமாறு மக்களைக் கேட்டது. காந்தியின் செல்வாக்குக்கு உள்ளாகிய யாழ்ப்பாணம் வாலிப காங்கிரஸ் இலங்கை தீவுக்கு முழு சுயாட்சி வேண்டும் என்று கேட்டு அத் தேர்தலைப் புறக்கணித்தது. அப்புறக்கணிப்பை தென்னிலங்கையில் உள்ள இடதுசாரிகள் பெருமளவுக்கு ஆதரித்தார்கள்.அவ்வாறு ஆதரித்த இடதுசாரிகளில் ஒருவராகிய பிலிப் குணவர்தன அது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்பொழுது மேற்கண்டவாறு கூறியுள்ளார். இக்குறிப்பு யாழ்ப்பாணம் யுத் காங்கிரசைப்பற்றி கலாநிதி சீலன் கதிர்காமர் எழுதிய நூலில் காணப்படுகின்றது. ஆனால் யாழ்ப்பாணம் வாலிப காங்கிரசை பின்பற்றி தேர்தல் புறக்கணிப்பை ஆதரித்த தென்னிலங்கை இடதுசாரிகள் கடைசி நேரத்தில் குத்துக்கரணம் அடித்து தேர்தலில் பங்குபற்றினார்கள் என்பது வேறு கதை. யாழ்.வாலிப காங்கிரசின் அழைப்பை ஏற்று யாழ்ப்பாணம் பெருமளவுக்கு வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்துக்கு வெளியில் ஓரளவுக்கு வாக்களிப்பு நடந்தது. வாலிபக் காங்கிரஸ் அவ்வாறு தேர்தலை புறக்கணித்தது சரியா பிழையா என்ற விவாதத்தில் இப்பொழுது இறங்கத் தேவையில்லை. ஆனால் கடந்த நூற்றாண்டில் இலங்கைத் தீவின் முதலாவது தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கிய ஒரு இளைஞர் அமைப்பு “ப்ரோ ஆக்டிவாக”-செயல் முனைப்பாக ஒரு முடிவை எடுத்துப் புறக்கணித்தது என்பதுதான் இங்கு முக்கியமானது. காலனித்துவ அரசாங்கம் நடாத்திய முதலாவது தேர்தலை தமிழ்த் தரப்பு எவ்வாறு செயல்முனைப்போடு அணுகியது என்பதற்கு அது ஒரு எடுத்துக்காட்டு. அங்கிருந்து தொடங்கி கடந்த சுமார் 83 ஆண்டுகால இடைவெளிக்குள் தமிழ்த் தரப்பு அவ்வாறு தேர்தல்களை செயல்முனைப்போடு கையாண்ட மேலும் ஒரு சந்தர்ப்பம் எதுவென்றால், அது 2005ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலாகும். அப்பொழுது வன்னியில் ஒரு கருநிலை அரசை நிர்வகித்த விடுதலைப்புலிகள் இயக்கம் அந் தேர்தலை புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்தது. அவ்வாறு தேர்தலை புறக்கணிப்பதன் மூலம் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்கக்கூடிய வாக்குகளை தடுப்பதே அந்த பகிஷ்கரிப்பின் நோக்கமாகும். ஏனென்றால் அப்பொழுது ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் ஆட்சியில் இருந்தது. அந்த அரசாங்கம் நோர்வையின் அனுசரணையோடு ஒரு சமாதான முயற்சியை முன்னெடுத்து வந்தது. சமாதான முயற்சியை விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தருமர் பொறியாகவே பார்த்தது. எனவே அதில் இருந்து வெளிவருவதற்கு ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்க வேண்டும் என்று அந்த இயக்கம் சிந்தித்தது. அதன் விளைவாக தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களுக்கு கோரிக்கை விடுத்தது. தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்திருந்தால் அவர்கள் தனக்கே வாக்களித்திருந்திருப்பார்கள் என்று ரணில் விக்ரமசிங்க இப்பொழுதும் நம்புகின்றார். தன்னுடைய வெற்றியைத் தடுத்து மஹிந்த ராஜபக்சவை ஆட்சிக்கு ஏற்றியதன்மூலம் விடுதலைப் புலிகள் இயக்கம் சமாதானத்தை முறிக்க விரும்பியது என்றும் அவர் நம்புகிறார். அத்தேர்தலில் விடுதலைப்புலிகள் இயக்கம் அதாவது தமிழ்த் தரப்பு எடுத்த முடிவானது முன்பு யாழ்ப்பான வாலிப காங்கிரஸ் எடுத்த முடிவு போலவே செயல்முனைப்பானது. தேர்தலை தமிழ்நோக்கு நிலையில் இருந்து தந்திரோபாயமாக அணுகுவது. அந்த பகிஷ்கரிப்பின் விளைவுகள் தமிழ் அரசியலின் மீது மட்டும் தாக்கத்தைச் செலுத்தவில்லை. அதற்குமப்பால் தென்னிலங்கை அரசியல், இந்த பிராந்திய அரசியல் என்று பல்வேறு பரிமாணங்களில் அந்த பகிஷ்கரிப்பின் விளைவுகள் அமைந்தன. அவற்றின் தொடர்ச்சிதான் இப்பொழுதுள்ள அரசியலும். இவ்வாறு தென்னிலங்கையில் இருந்து அறிவிக்கப்படும் ஒரு தேர்தலை செயல்முனைப்போடு அணுகும் மூன்றாவது முயற்சிதான் தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற கருத்துருவம் ஆகும். கடந்த 83 ஆண்டுகளிலும் மீண்டும் ஒரு தடவை தமிழ்த் தரப்பு ஒரு தேர்தலை நிர்ணயகரமான விதங்களில் எதிர்கொள்ளும் ஒரு முடிவு இது. முன்னைய இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழ்த் தரப்பு தேர்தலைப் புறக்கணித்தது. ஆனால் இம்முறை தமிழ்த் தரப்பு தேர்தலில் பங்குபற்றுகின்றது. அதன்மூலம் தமிழ் மக்களை ஒன்று திரட்ட முயற்சிக்கின்றது. தமிழ் மக்களை ஒரு திரண்ட அரசியல் ஆக்க சக்தியாக மாற்றுவதன்மூலம் தமிழ் மக்களுடைய பேரபலத்தை அதிகப்படுத்தி, இனப்பிரச்சினை தொடர்பான மேடைகளில் தமிழ் மக்களை ஒரு திரண்ட சக்தியாக நிறுத்துவது தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற கருத்துருவத்தின் முதல் நிலை நோக்கமாகும். தமிழ் மக்களை அகப்பெரிய திரட்சியாக மாற்றினால் அது பேச்சுவார்த்தை மேசையிலும், நீதி கோரும் மேடைகளிலும் தமிழ்மக்களை பலமான சக்தியாக மாற்றும். அந்த அடிப்படையில்தான் ஒரு பொது வேட்பாளர் நிறுத்தப்படுகின்றார். அந்த முடிவு தென்னிலங்கை வேட்பாளர்களின் மீது எவ்வாறான தாக்கத்தை செலுத்தியுள்ளது என்பதற்கு ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தரப்பைப் பேச அழைத்ததில் இருந்து விளங்கிக் கொள்ளலாம். ஆனால் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தென்னிலங்கையில் மட்டுமல்ல தமிழ் பகுதிகளிலும் ஒரு பகுதி அரசியல்வாதிகளும் விமர்சகர்களும் கடுமையாக எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள். தென்னிலங்கையில் யாரெல்லாம் தமிழ் வாக்குகளை கவர விரும்புகிறார்களோ அவர்கள் அனைவரும் பொது வேட்பாளரைக் கண்டு பதட்டமடைகிறார்கள். அவர்களுடைய தமிழ் முகவர்கள் எஜமானர்களை விட அதிகமாக பதறுகிறார்கள். தமிழ் வாக்குகள் கிடைக்கவில்லை என்றால் தமது தென்னிலங்கை எஜமானர்கள் திருப்தியூட்டும் வெற்றிகளைப் பெறத் தவறி விடுவார்கள் என்று அவர்களுக்கு பதட்டம். ஆனால் தமது தென்னிலங்கை எஜமானர்கள் தமிழ் மக்களுக்கு எதைத் தருவார்கள் என்பதனை அவர்களால் இன்று வரை தெளிவாகக் கூற முடியவில்லை. கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டதுபோல, அவர்களில் யாருமே சமஸ்டியைத் தரப்போவதில்லை. அப்படி என்றால், அவர்கள் தரக்கூடிய சமஸ்டிக்கு குறைவான வாக்குறுதிகளை நம்பித்தான் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அதாவது கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளை தந்து விட்டு அவற்றை மீறிய, அல்லது உடன்படிக்கைகளை எழுதி விட்டு அவற்றை தாமாக முறித்துக் கொண்ட ஒரு தரப்பு இப்பொழுதும் வாக்குறுதியைத் தரும் என்று காத்திருப்பதை எப்படிப் பார்ப்பது? அவர்கள் வரலாற்றில் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளவில்லை. தத்துவஞானி ஹெகல் கூறுவது போல “வரலாற்றில் இருந்து நாம் கற்றுக் கொள்வது என்னவென்றால், மனிதர்கள் வரலாற்றிலிருந்து எதையுமே கற்றுக் கொள்வதில்லை என்பதைத்தான்.” இவ்வாறு வரலாற்றுக் குருடர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் பொது வேட்பாளரை நிறுத்தும் தரப்பைப் பார்த்து முட்டாள்கள் என்கிறார்கள். அது ஒரு கேலிக்கூத்து என்கிறார்கள். அது ஒரு விஷப்பரீட்சை என்கிறார்கள். ஆனால் அவ்வாறு தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்க்கும் யாருமே இதுவரையிலும் எந்த தென்னிலங்கை வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் எதற்காக ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தைக் கூறவில்லை. இது ஒரு முக்கியமான விடயம். தமிழ்ப் பொது வேட்பாளர் பிழை என்று சொன்னால் தென்னிலங்கையில் உள்ள எந்த வேட்பாளர் சரி என்பதை அவர்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். ஆனால் தமிழ்ப் பொது வேட்பாளர் பிழை என்று சொல்பவர்கள் யாருமே இதுவரையிலும் எந்தத் தென்னிலங்கை வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று தெளிவான முடிவை மக்களுக்கு கூறவில்லை. ஏன் கூறவில்லை ? ஏனென்றால் தென் இலங்கையில் உள்ள எந்த ஒரு கட்சியும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆகக் குறைந்தபட்ச வாக்குறுதியைக்கூட தருவதற்குத் தயாராக இல்லை. இப்பொழுது தராத வாக்குறுதியை அவர்கள் பிறகெப்பொழுதும் தரப்போவதில்லை. எனவே இந்த இடத்தில் தமிழ் மக்கள் தெளிவாக செயல்முனைப்போடு இரண்டு முடிவுகளில் ஒன்றைத்தான் எடுக்கலாம். ஒன்று பகிஸ்கரிப்பது அல்லது தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது. தமிழ்ப் பொது வேட்பாளருக்குள் பகிஸ்கரிப்பும் உண்டு. அதாவது தென்னிலங்கையில் உள்ள எந்த ஒரு வேட்பாளரையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால்தான் தமிழ் வேட்பாளர் முன்னிறுத்தப்படுகிறார். கடந்த 84 ஆண்டுகளுக்குள் தமிழ் மக்கள் எடுத்த நிர்ணயகரமான ஒரு முடிவாக அதை மாற்ற வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். 83 ஆண்டுகளுக்கு முன் பிலிப் குணவர்த்தன “யாழ்ப்பாணம் இப்பொழுது வழிகாட்டியுள்ளது” என்று சொன்னார். இப்பொழுது கிழக்கிலிருந்து ஒரு பொது வேட்பாளர் கொண்டு வரப்பட்டிருக்கிறார். இம்முறை வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர் தாயகம் பொது வேட்பாளரை முன்னிறுத்துகின்றது. தமிழ்ப் பொது வேட்பாளர் அதிகரித்த வாக்குகளைத் திரட்டினால் அது தென்னிலங்கைக்கும் வெளியுலகத்துக்கும் தெளிவான கூர்மையான செய்திகளைக் கொடுக்கும். தமிழ் ஐக்கியத்தை மேலும் பலப்படுத்தும். எனவே இப்பொழுது தமிழ்மக்கள் முன்னாள் உள்ள தெரிவு இரண்டுதான். ஒன்று, தென்னிலங்கை வேட்பாளர்களுக்காக காத்திருந்து மேலும் சிதறிப் போவது. இன்னொன்று தமிழ்ப்பொது வேட்பாளரை பலப்படுத்துவதன்மூலம் முழு இலங்கைக்கும் வழிகாட்டுவது. https://www.nillanthan.com/6872/
  13. Dr முரளி வல்லிபுரநாதன் வாட்ஸப்பில் இருந்து.. மருத்துவ அலட்சியத்தால் நேரிடும் மரணங்களும் ஊடகங்களது சமூகப் பொறுப்பும். மருத்துவ அலட்சியத்தால் மன்னாரில் இறந்த இளம் தாயின் கணவர் நீதி தாமதிக்கப்பட்ட நிலையில் தவறான முடிவினை எடுத்த தகவலானது மனதைப் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளது. தவறான முடிவுகள் ஒருபோதும் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என்பதுடன் ஊடகங்கள், மருத்துவர் ஒருவர் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகிய தரப்பினர் மேலும் பொறுப்புடன் செயல்பட்டு இருந்தால் இந்த அநாவசிய இறப்புத் தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. 2014 இல் முதன் முதலில் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டு 2017இல் மேம்படுத்தப்பட்ட தற்கொலை தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துவதில் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோரின் பாரிய பொறுப்பை மீண்டும் நினைவு படுத்துகிறேன். குறிப்பாக தற்கொலையை நியாயப்படுத்துவது, தற்கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட முறைகளை வெளிப்படுத்துவது, மற்றும் தற்கொலை செய்தவரின் பெயர் விபரங்களை வெளியிடுவது ஆகியவற்றால் சமூகத்தில் தாமும் பாதிக்கப்பட்டுள்ளதாக உணரும் ஏனையவர்களையும் தற்கொலை செய்யத் தூண்டும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும். மன்னாரில் இளம் தாயின் சாவைத் தொடர்ந்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகர்கள், வலையொளி (Youtube) ஊடகர்கள் எனப் பலரும் ஊடக ஒழுக்க நெறியினைப் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாக மீறியுள்ளனர். முக்கியமாக இறந்தவரின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய்ந்து "யார் குற்றவாளி" என்று கருத்து வெளியிடும் நீதிபதிகளாக ஊடகவியலாளர்கள் குறிப்பாக Youtube பதிவாளர்கள் செயல்படுவது ஏற்கனவே குடும்ப உறுப்பினரின் உயிரிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள உறவினர்களின் மனவேதனையை அதிகரித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி அவர்களை மோசமான முடிவுகளை எடுக்க தூண்டுகிறது. இதனாலேயே பல சந்தர்ப்பங்களில் பொறுப்புடன் செயல்படும் ஒரு சிலரைத்தவிர ஏனைய Youtube பதிவாளர்களையும் சமூக ஊடகர்களையும் பொறுப்பற்ற- தமது இலாபத்தையே குறிக்கோளாக கொண்டு செயல்படும்- பிணந்தின்னிக் கழுகுகளாக கருத வேண்டியுள்ளது. அத்தோடு இவ்விடயத்தில் நேரடியாகத் தன்னார்வ அடிப்படையில் தலையிட்ட ஒரு வைத்தியர் வைத்தியத்துறையின் மீதான தனது நம்பிக்கையீனங்களை சமூகமயப்படுத்தியதால்- அதாவது 'வைத்தியர்களைத் தான் குறைகூறியதால் அவர்கள் தமக்குப் பாதகம் செய்துவிடுவார்கள்' என்ற கருத்தைக் கூறி, 'தனக்குத் தானே வைத்தியம் செய்து கொள்வதாகவும் தொடர்ச்சியாகக் கூறி வருவதால்'- சமூகத்தில் வைத்தியத்துறையின் தவறுகளைச் சுட்டிக்காட்டியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களும் அச்சத்தால் வைத்திய சிகிச்சை பெறுவதைத் தவிர்க்கும் நிலைப்பாட்டினை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம். இதன் காரணமாக 'வைத்தியருக்கே ஆபத்து வருமானால் நாம் எல்லாம் எம்மாத்திரம்' என்று அஞ்சி உரிய சிகிச்சைகளைப் பெறாது மக்கள் மரணிக்கும் ஆபத்து அதிகரித்திருக்கிறது. குறித்த கணவர் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தாலும், மேற்குறிப்பிட்ட பயம் காரணமாக, மருத்துவ உளவளத்துணை எதனையும் நாடாது மரணித்திருக்கக் கூடும். ஆகவே, தாமே குறித்த பாதிப்புக்குள்ளான குடும்பத்தினரைப் பாதுகாப்பதாக பகிரங்கமாகக் கூறித்திரியும் அதே வைத்தியர் உண்மையாகவே அக்குடும்பத்தின் நலன்களில் அக்கறை காட்டியிருந்தால் தகுந்த உளவள ஆற்றுகைககள் ஊடாக இந்த மரணத்தினைத் தவிர்த்திருக்கலாம். மறுபுறம் இளம் தாயின் இறப்பு தொடர்பான விசாரணையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சுகாதார ஊழியர்களின் பெயர்களை ஊடகங்கள் எந்தவித சுய கட்டுப்பாடும் இன்றி வெளிப்படுத்தி ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். பணி இடைநீக்கம் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது சந்தேகத்துக்குரிய ஊழியர்கள் மீது எடுக்கப்படும் தற்காலிக நடவடிக்கை ஆகும். இரண்டு மாதங்களுக்குள் ஆரம்ப கட்ட விசாரணை பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதுடன் அதன்பின் முறையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டு சம்பவம் நடந்து 6 மாதங்களுக்குள் விசாரணை பூர்த்தி செய்யப்பட்டு .குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ஆரம்ப கட்ட விசாரணைகளில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பலர் பின்னர் முறையான விசாரணையில் குற்றம் அற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்துக்கான சம்பளத்துடன் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதை நான் அவதானித்து இருக்கிறேன். எனவே ஆரம்ப கட்ட விசாரணைகளில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டவரின் பெயர் விபரங்களை அவர் இன்னமும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாத நிலையில் ஊடகங்கள் வெளிப்படுத்தி சமூகத்தில் குற்றவாளியாக வெளியே நடமாட முடியாதவாறு செய்வது ஊடகங்களின் ஒழுக்க நெறியை மீறிய அராஜக செயலாகவே கருத வேண்டியுள்ளது. இவரது மரணத்திற்குப் பொறுப்புச் சொல்லவேண்டிய கடமை இன்னொரு தரப்பினருக்கும் சம அளவில் உண்டு. கர்ப்பகாலத் தாயார் ஒருவரது இழப்பு எவராலும் ஈடுகட்டமுடியாத இழப்பு. அதனால் குறித்த தாயாரது குடும்பத்தவர்கள் நெருங்கியவர்கள் என அனைவரும் சுகாதாரத்துறையினரது உளவள மருத்துவப் பிரிவினர் மற்றும் தாய்சேய் நலப்பிரிவினர் ஆகியோரால் நெருக்கமான அரவணைப்பு மற்றும் ஆற்றுப்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட வேண்டும். அவ்வாறு உள ஆற்றுப்படுத்துகைக்குச் சென்ற உளவளத்துணையாளர்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றும், சுகாதாரதுறையினர் தொடர்பில் வழங்கப்படும் எதிர்மறையான தகவல்களால் சுகாதாரப் பணியாளர்களை எட்ட வைத்திருக்கவே அக்குடும்பத்தினர் விரும்பினர் என்றும் தெரியவருகிறது. குறித்த செயற்பாட்டால் சுகாதாரப் பணியாளர்கள் மனச்சோர்வடைந்தும், பொறுப்பற்ற ஊடக வசைச் சொற்களால் அச்சமடைந்தும் போனதால் அக்குடும்பத்தைத் தமது அரவணைப்பில் வைத்திருக்காது விலகியிருக்கலாம். அதேபோல் ஒரு இணையத் தளத்தில் மன்னார் இறப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட வைத்தியர் செந்தூரனின் குடும்பப் புகைப்படங்களுடன் பாலியல் ரீதியாகக் கொச்சைப் படுத்தும் கட்டுரைகளை வெளியிடுவது ஊடக தர்மத்துக்கு ஒவ்வாத ஒட்டுண்ணிகளால் இயக்கப்படும் ஊடக மாபியாவின் செயல்பாடாகவே கருதவேண்டியுள்ளது. இது போலவே GMOA மாபியா குழு உறுப்பினர்களினால் இயக்கப்படும் அநாமதேய முகநூல் பதிவுகள், கருத்துக்களைப் பதில் கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாத கோழைகள் தனிநபர்களையும் அவர்களது குடும்பங்களையும் தனிப்பட்ட ரீதியாகத் தாக்கும் கேவலமான செயலாக எடுத்துக்கொள்ளலாம். இவை ஒருபுறம் இருக்க, மன்னார் இளம் தாயின் அநியாயச் சாவுக்காக இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படாதது அனைவரின் மனதிலும் பெரும் கிலேசத்தினை எழுப்பியுள்ளது. ஏனைய இடங்களில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்ற வேளையில் மருத்துவ அலட்சியத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டிய மருத்துவர்கள் உட்பட சுகாதார ஊழியர்கள் பலரும் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டு இருந்தனர். உண்மையில் மன்னாரைச் சேர்ந்த சட்டவாளர்களும் ஏனைய மன்னார் சமூக செயற்பாட்டாளர்களும் பொது அமைப்புகளும் ஏழைகளின் கண்ணீருக்கு நீதி கிடைக்காத இந்தக் கேவலமான நிலையை எண்ணி வெட்கி தலைகுனிய வேண்டும். காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும் [Justice delayed is justice denied] என்பது ஒரு சட்ட அறம் என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் மனத்தில் இருத்தி விரைவான நீதியைப் பெற முற்படுவதே இழந்த உயிர்களுக்கும் பிஞ்சுக் குழந்தைக்கும் செய்யும் கைமாறாக இருக்கும். வட பகுதியில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நேர்மையான மருத்துவர்கள், கட்சி அரசியல் செய்யாத சட்டத்தரணிகள், சமூக நீதிக்காக குரல் கொடுப்போர் மற்றும் ஊறுபடும் நிலையில் உள்ள பெண்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகள் ஒன்றிணைந்து ஒரு தன்னார்வ சுயாதீனக் கட்டமைப்பினை மாவட்டங்கள் தோறும் ஏற்படுத்தி வைத்தியசாலைகளில் இடம்பெறும் ஒவ்வொரு உயிரிழப்பிலும் மருத்துவ அலட்சியம் இருந்ததா என்பதை ஆராய்ந்து பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு உதவ முன்வரவேண்டும்.. மருத்துவ அற நெறியை [medical ethics] கற்பிக்கும் ஆசிரியர் என்ற வகையில் நான் எப்போதும் எனது பக்கச்சார்பற்ற ஆலோசனைகளை வழங்க தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கான எழுச்சி பாதிக்கப்படும் பிராந்தியங்களில் இருந்து உருவாக வேண்டும். அதன் மூலமாகவே வவுனியா உட்பட வட பகுதியில் தொடர்ச்சியாக கவனக்குறைவு காரணமாக இடம் பெறும் தாய் மற்றும் சிசு மரணங்கள் தவிர்க்கப்படலாம். நன்றி Dr முரளி வல்லிபுரநாதன் சமுதாய மருத்துவ நிபுணர் 25.8.2024
  14. மோடி இன்று உக்ரைன் பயணம்: உற்றுநோக்கும் அமெரிக்கா, ரஷ்யா ‘உக்ரைனுக்கு இந்திய பிரதமர் மோடியின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது’ என அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ரிச்சர்ட் வர்மா தெரிவித்தார். போலந்து நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கிருந்து போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு இன்று 23ஆம் திகதி செல்ல உள்ளார். இந்நிலையில், அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ள ரிச்சர்ட் வர்மா, டில்லியில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்றார். அவரிடம் பிரதமர் மோடியின் உக்ரைன், போலந்து பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில், பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. ரஷ்யா உடனான இந்தியாவின் நீண்ட கால உறவை அமெரிக்கா புரிந்து கொண்டுள்ளது. இது போரின் சகாப்தம் அல்ல, இது அமைதிக்கான நேரம் என்று பிரதமர் மோடி கூறியது பாராட்டுக்குரியது. வங்கதேசத்தில் ஜனநாயக செயல்முறைக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக அங்குள்ள மக்களுக்கு இது ஒரு கடினமான சூழ்நிலை. சமூக ஊடகங்களில் வெளிவரும் அனைத்து தவறான தகவல்களையும் நாங்கள் நம்ப போவதில்லை. ஷேக் ஹசீனாவின் முந்தைய அரசாங்கத்தை சீர்குலைப்பதில் அமெரிக்காவின் தலையீடு இல்லை. இவ்வாறு அவர் கூறினார். பிரதமர் மோடி தனது மூன்றாவது பதவிக்காலத்தில் தனது முதல் இருதரப்புப் பயணமாக ரஷ்யாவைத் தேர்ந்தெடுத்ததைக் கண்டு சில மேற்கத்தியத் நாடுகள் கோபமடைந்தன. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை இந்தியா இதுவரை கண்டிக்கவில்லை. பேச்சுவார்த்தை வாயிலாக மோதலை தீர்க்க அழைப்பு விடுத்து வருகிறது என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. தற்போது பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவும் ரஷ்யாவும் இந்தப் பயணத்தை உற்று நோக்கியுள்ளன. https://akkinikkunchu.com/?p=288907
  15. மட்டக்களப்பில் இந்திய உயஸ்தானிகர் கிழக்கு மாகாண தமிழரசுக் கட்சியினருடனான முக்கிய சந்திப்பு ! kugenAugust 23, 2024 இன்று இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய பிரதிநிதிகளுக்கும், இந்திய உயர்ஸ்தானிகருக்குமான சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினர்களும் அத்துடன் ஏனைய அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக மாநகர சபை முதல்வர், இளைஞர் அணித் தலைவர், மகளிர் அணியினுடைய உப தலைவி ஆகியோர் கலந்து கொண்டனர். திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மற்றும் திருகோணமலை அங்கத்துவப் பிரதிநிதிகள் தவிர்க்கமுடியாத காரணத்தினால் வருகை தர முடியவில்லை. இச் சந்திப்பின் போது சமகால அரசியல், ஜனாதிபதி தேர்தல், தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சனைகள், அரசியல் சம்மந்தமான பிரச்சனைகள் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அம்பாறை மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் அவர்களால் கல்முனையில் கலாசார மண்டபமொன்றினை தாபிப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும் இவர் கிழக்கு மாகாணத்தில் Indian High Commission அலுவலகத்தினையும் அமைக்குமாறு கோரிக்கை விடுத்தார். https://www.battinews.com/2024/08/blog-post_703.html
  16. தமிழ்ப் பொதுவேட்பாளர் 2024 கேள்விகளும் பதில்களும் Vhg ஆகஸ்ட் 23, 2024 1. தமிழ்ப் பொது வேட்பாளர் ஏன்? தமிழ் மக்களை ஒன்று திரட்டுவதற்கு. தமிழ் மக்களுக்கே தங்கள் பலம் எது என்பதை உணர்த்துவதற்கு. தமிழ் மக்கள் ஒரு கொள்கைக்காக வாக்களிக்கும் மக்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிப்பதற்கு. தமிழ்மக்கள் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்பதனை நிரூபிப்பதற்கு. தமிழ்மக்களிற்கு என்ன தேவை என்பதைத் தொடர்ச்சியாகச் சொல்வதற்கு. சிறீலங்கா அரசை அம்பலப்படுத்துவதற்கு. 2. தமிழ் மக்களை ஏன் ஒன்று திரட்ட வேண்டும்? தமிழ்மக்கள் கட்சிகளாய். கொள்கைகளாய். சாதியாய். சமயமாய், வடக்காய். கிழக்காய். தியாகியாய், துரோகியாய், கட்சிக்குள்ளேயே அணிகளாய். ஆலய அறக்கட்டளை களுக்குள் அணிகளாய், திருச்சபைகளுக்குள் பிரிவுகளாய். பாடசாலை பழைய மாணவர் சங்கங்களுக்குள் அணிகளாய், உடைந்து சிதறிப்போய்க் காணப்படுகிறார்கள். எனவே. அவர்களைச் சிதறடிக்கும் எல்லா வேறுபாடுகளுக்கும் அப்பால் அவர்களை ஒன்று திரட்ட வேண்டும். ஒருவர் மற்றவரை நம்பும் மக்களாய். ஒருவர் மற்றவருக்கு உதவும் மக்களாய், ஒன்றாகத் திரண்டு உலகத்துக்குத் தங்கள் ஐக்கியத்தைக் காட்டும் மக்களாய்த் தமிழ் மக்களை ஒன்றாக்க வேண்டும். 3. பொது வேட்பாளரின் தேர்தல் அறிக்கையில் என்ன தீர்வு முன்வைக்கப்படும்? சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான உச்சபட்சத் தன்னாட்சி: இன அழிப்புக்கு எதிரான பரிகார நீதி. 4.தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளருக்கு வாக்களிக்கத் தவறினால் என்ன நடக்கும்? தமிழ் வாக்குகள் பலவாகச் சிதறும். தென்னிலங்கை மைய வேட்பாளர்களிற்குத் தமிழ் வாக்குகள் மூன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளாகச் சிதறும். ஒரு பகுதி வாக்களிக்காமல் விலகி நிற்கும். ஆக மொத்தம் தமிழ் வாக்குகள் நான்கிற்கும் மேற் பட்ட வேட்பாளர்களால் சிதறு தேங்காயாகச் சிதறடிக்கப்படும். இன்னுமொரு வகையில் கூறுவதானால். ஒரு தேசமாகத் திரண்டு எமது அரசியல் அந்தஸ்து, அபிலாசைகள் என்ப வற்றை உரத்துச் சொல்வதற்கான இன்னுமொரு சந்தர்ப்பத் தையும் அதற்கூடாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய அரசியற் பேரம் பேசும் பலத்தையும், தற்காலிகமாக இழப்போம். 5.தமிழ்ப் பொது வேட்பாளர் பெருமளவு வாக்குகளைப் பெறவில்லை என்றால்? தேசியவாத அரசியல் என்பது மக்களை ஆகப்பெரிய திரட்சியாக மாற்றுவது. பொது வேட்பாளர் அதைத்தான் செய்யப்போகின்றார். எவ்வளவுக்கு எவ்வளவு தமிழ்மக்கள் ஐக்கியப்படுகின்றார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு தமிழ் வாக்குகள் திரளும். தமிழ்ப் பொது வேட்பாளர் ஆகக் கூடிய வாக்குகளைப் பெறுவார். ஆகவே இக்கேள்வியே எழாதவாறு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுதல் காலத்தின் தேவை. 6. தமிழ்ப் பொது வேட்பாளர் தேர்தலில் வெல்வாரா? இல்லை. யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளர்தான் வெல்வார். 7. தோற்பதற்காக ஒருவரைத் தேர்தலில் நிறுத்த வேண்டுமா? அவர் ஜனாதிபதியாக வரமாட்டார் என்ற ஒரு விடயத்தில் தான் தோற்பார். மற்ற எல்லா விடயங்களிலும் வெல்வார். தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதில், கட்சி கடந்து, பிரதேசத்தைக் கடந்து சாதி கடந்து,சமயம் கடந்து, பால்நிலை அசமத்துவங்களைக் கடந்து தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதைத் தவிர வேறு வெற்றி மக்களுக்கு வேண்டுமா? 8.ஏன் தமிழ்ப் பொதுவேட்பாளர்? தென்னிலங்கையில் உள்ள வேட்பாளர்களில் யாரையும் நம்ப முடியாதா? முடியாது. ஏனென்றால். கடந்த பதினைந்து ஆண்டுகளாக மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களிற்கும் வாக்களித்ததால் தமிழ் மக்களிற்குத் தீர்வு கிடைத்ததா? வாழ்வின் சகல விடயங்களிலும் ஊடுருவியிருக்கும் இனப் பாரபட்சம் நீங்கியுள்ளதா? நிலப்பறிப்பும் சிங்களபௌத்தமயமாக்கலும் நிறுத்தப்பட்டதா? 9. தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் பொழுது அது தென்னிலங்கையில் இனவாதத்தைத் தூண்டி விடாதா? நீங்கள் கேட்பதைப் பார்த்தால் இனவாதம் இப்பொழுது பதுங்கி விட்டது அல்லது நித்திரை கொள்கிறது என்று கருதுவது போலத் தெரிகிறதே? அப்படியென்றால். மயிலத்தமடுவில், மாதவனையில் மேய்ச்சல் தரையை ஆக்கிரமிப்பது யார்? குருந்தூர் மலையில், வெடுக்குநாறி மலையில் கோவில்களை ஆக்கிரமிப்பது யார்? நடைமுறையில், சிங்கள் இனம் தவிர்ந்த ஏனைய தேசிய இனங்களையும். மக்கள் குழுமங்களையும் மட்டுமே பாதிக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் புதுப்பிக்க முற்படுவது யார்? நடந்தது இனஅழிப்பு என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பது யார்? பன்னாட்டு விசாரணையை ஏற்றுக்கொள்ள மறுப்பது யார்? தமிழ் மக்கள் பொதுச்சபை https://www.battinatham.com/2024/08/2024_23.html
  17. சங்கு சின்னத்தை சிபாரிசு செய்தவரே இவர் தான் - தமிழ் பொது வேட்பாளர் பெருமிதம் Vhg ஆகஸ்ட் 23, 2024 ஜனாதிபதி தேர்தலில் தாம் களமிறங்கும் சங்கு சின்னத்தை சிபாரிசு செய்தவரே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தான் என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் சந்தித்து கலந்துரையாடினார். கட்சியின் முடிவு அதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறீதரன், “இலங்கை தமிழ் அரசுக் கட்சி என்ன முடிவை எப்போது எடுத்தாலும் தனிப்பட்ட முறையில் எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும். கட்சி என்ன முடிவை எடுக்கிறதோ எடுக்கவில்லையோ அது எவ்வளவு தூரம் எம்மை தள்ளப்போகிறதோ என்பதை தமிழ் மக்கள் தீர்மானிப்பார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும். தமிழ் மக்கள் காத்திரமான ஒரு செய்தியை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வழங்க வேண்டும்” என அழைப்பு விடுத்தார். அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த அரியநேத்திரன், “தான் களமிறங்கும் சங்கு சின்னத்தை சிபாரிசு செய்தவர் சிறீதரன் எம்பி என தெரிவித்தார். மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் தமக்காக குறியீடாக சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். https://www.battinatham.com/2024/08/blog-post_816.html
  18. ‘நாம் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள்’: எம்.ஏ.சுமந்திரன் கருத்து August 23, 2024 நாம் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள்.தமிழ் பொது வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கவில்லை. அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவளிக்கும் என்பதை இதுவரை தீர்மானிக்கவில்லை. அவசரப்பட வேண்டிய தேவை கிடையாது. வாக்கெடுப்பு இடம் பெறுவதற்கு ஒருவாரத்துக்கு முன்னர் எமது தீர்மானத்தை அறிவிப்போம். ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு ஒரு தரப்பினர் குறிப்பிடுவதை தமிழ் மக்கள் ஏற்க போவதில்லை. இவர்கள் ஒவ்வொரு தேர்தல்களின் போதும் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு குறிப்பிட்டுக் கொள்வார்கள். ஆனால் மக்கள் தேர்தலை புறக்கணிக்கவில்லை. இம்முறையும் தேர்தலை புறக்கணிக்க போவதில்லை. தமிழ் பொதுவேட்பாளருக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அவர் எங்களின் கட்சி உறுப்பினர் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடடிக்கையை முன்னெடுத்துள்ளோம். இதனுடாக எமது நிலைப்பாட்டை விளங்கிக் கொள்ள வேண்டும். கடந்த கால தேர்தல்களில் எமது நிலைப்பாட்டை இறுதி தருணத்தில் அறிவித்திருந்தோம். அதற்கமைய 80 சதவீதமானோர் எமது தீர்மானத்துக்கு அமையவே வாக்களித்தார்கள். ஆகவே இம்முறையும் நாங்கள் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள் என்றார். https://www.ilakku.org/நாம்-குறிப்பிடும்-வேட்ப/
  19. ஜனாதிபதி வேட்பாளர் மரணம் Freelancer / 2024 ஓகஸ்ட் 23 , மு.ப. 12:39 - 0 இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட அய்ட்ரூஸ் முகமது இலியாஸ் (வயது 78) காலமானார். சுகவீனமுற்றிருந்த அவர் 2 நாட்களாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (22) காலமானார். அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதி-வேட்பாளர்-மரணம்/175-342660
  20. பொது வேட்பாளர் நோக்கத்துக்காக களத்திலும் புலத்திலும் கைகோர்ப்போம்! Hi ஆகஸ்ட் 22, 2024 “காக்காண்ணை”, என்று அறியப்பட்ட முத்துக்குமார் மனோகர் ஆகிய நான் மாவீரர் அறிவிழியின் தந்தை. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் போட்டியிட வேண்டிய அவசியம் பற்றிப் போதுமானளவு விடயங்கள் மக்களிடம் முன்வைக்கப்பட்டாயிற்று. எனவே, மேற்கொண்டு ஆற்றவேண்டிய விடயங்கள் தொடர்பாக சிலவற்றை மக்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை இறுக்கமாகப் பற்றிக் கொண்டதால் மாவீரரான எமது செல்வங்களின் குடும்பத்தினரும், முன்னாள் போராளிகள் குடும்பத்தினரும், எப்போதும் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு உறுதுணையாக எமது மக்களும் தமிழ்ப் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனின் சின்னமான சங்குக்கு வாக்களிக்கத் தவறாதீர்கள். இதனை உங்கள் தேசியக் கடமையாக உளமார ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள், உறவினர், நண்பர்களிடமும் இத்தேவையை உணர்த்துங்கள். இறுதியுத்தம் முடிந்து 15 வருடங்களாகிவிட்டது. பேச்சுவார்த்தை, பேசுதல் என்பவற்றை தொடர்ந்து கேட்டு காது புளித்துப்போய்விட்டது. தமிழரின் ஆறாம் அறிவைக் கேள்விக்குட்படுத்தும் விதத்தில் புதுப்புது விளக்கங்களைக் கேட்டாயிற்று. எனவே, நாம் இனி அடுத்த கட்டத்தை ஜனநாயக வழியில் மேற்கொள்வோம். புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள எமது உறவுகள் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தவறாமல் வாக்களிக்கும்படி தமது குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு அறிவுறுத்துங்கள். பொது வேட்பாளர் குறித்த விடயத்துக்கு சாத்தியமான - எவ்வகையில் உதவ - பங்காற்ற முடியுமோ அந்த வகையில் பங்காற்றுங்கள். திரு. பா. அரியநேத்திரன் 1984ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அவரது சொந்தக் கிராமமான அம்பிளாந்துறையில் எனக்கு அறிமுகமானவர். போராட்டப் பங்களிப்பு என்பதற்கு மேலாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் தொடர்பான விடயங்களில் இவரது ஈடுபாட்டை நான் அறிவேன். அதனாலேயே, 2004 பொதுத் தேர்தலில் போட்டியிடத் தேர்வானவர்களில் ஒருவராக இவரது பெயர் கிளிநொச்சியிலிருந்து அறிவிக்கப்பட்டது. இறுதி யுத்தத்தின் பின்னர் நெருக்கடிகளின் மத்தியிலும் மாவீரர் நினைவேந்தல்களை எப்படியோ தொடர்ச்சியாகச் செய்து வந்தவர். *** தமிழ்த் தேசியம் என்பதை வெறும் எதிர்ப்பரசியல் என்று கொச்சைப்படுத்தியவர்களும் உண்டு. ஆனால், எம்மை யார் என உணரவைத்து உணர்வோட்டத்தில் ஒன்றிக்கலக்க வைத்த விடயம் இது. இராஜதுரை வடக்குக்கு வருகிறார் என்றால் அவரது அழகு தமிழ் உரையைக் கேட்பதற்கு எத்தனை மைல் தூரமானாலும் துவிச்சக்கரவண்டியில் பயணிக்கும் அன்றைய இளைஞர்களை நான் சிறுவயதில் கண்டிருக்கிறேன். அன்றைய தமிழ் இளைஞர் பேரவை காலத்தில் பாசி என்றழைக்கப்பட்ட பாலிப்போடி சின்னத்துரையும் (அடுத்த கட்டபோராட்டத்தில் அவரது பெயர் யோகன் பாதர் - முள்ளிவாய்க்கால் வரை பயணித்தவர்) இன்னொருவரும் காசி ஆனந்தனின் பிறந்தநாளைக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர். தந்தை செல்வாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர் தனியாக தனது பயணப் பொதியுடன் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் வந்திறங்கினார். அவரைக் கண்டதும் இவர்கள் இருவரும் விழா நிகழ்ச்சி நிரலைக் குறிப்பிடும் துண்டுப் பிரசுரம் ஒன்றை வழங்கினர். அதனை வாசித்த தந்தையிடமிருருந்து ஒற்றை வரியிலான கேள்வி எழுந்தது. “இதில் இராஜதுரையின் பெயர் இல்லையே?” - அவ்வளவுதான் தான் ஏற்கனவே தங்கத் தீர்மானித்த இடத்துக்கு அவர் போய்விட்டார். குறிப்பிட்ட நிகழ்வில் பங்கேற்கவில்லை. அன்று மாலை கொழும்பு புறப்படும் தபால் புகையிரதத்தில் அவர் திரும்பிவிட்டார். அவர் சொல்லாமலே உணர்த்திய விடயம் இதுதான் “தமிழ்த் தேசியத்துக்காக உழைத்த மூத்தவர்களை மதிக்காத செயலை நான் ஏற்கமாட்டேன்”, என்பது. இவ்வாறான தலைமைத்துவப் பண்புதான் தமிழ்த் தேசியத்தின் அடிநாதம். அதனால்தான் தந்தை செல்வாவின் நினைவுத்தூபியில் தமிழரின் சகல மாவட்டத்தின் மண்ணும் ஒன்றிக்கலக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த வேண்டுகோளை ஏற்று கிழக்கு மாகாணம் அன்னமலையிலிருந்து உழவு இயந்திரப் பெட்டியில் மண் கொண்டுவந்தனர் அந்த ஊர் மக்கள். வெறுமனே ஓர் அரசியல் கட்சியின் தலைவர் என்று தந்தை செல்வாவைப் பார்க்கவில்லை வட- கிழக்கு மக்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம். தமிழ்த் தேசியத்தை ஓர் அஞ்சலோட்டமாக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொண்டு செல்கின்றனர். எல்லா நெருக்கடியான காலங்களிலும் அடுத்தடுத்த தொகுதியினரிடம் இந்த உணர்வைக் கடத்துகின்றனர். கடந்த 15ஆம் திகதி (வியாழக்கிழமை) தொழில்நுட்ப உதவியாளராக சூறாவளி வீசிய காலத்தில் மட்டக்களப்பில் பணியாற்றிய ப. திருக்கேதீஸ்வரன் அவர்கள் வெளியிட்ட 'புழுதிக்கதைகள்' என்ற நூலின் வெளியீடு இடம்பெற்றது. அதில், சேதமடைந்த மன்னம்பிட்டி பாலத்தை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் திருத்த உதவினர் என்ற விடயத்தைக் குறிப்பிட்டார். பின்னர், தேசியம் சார்ந்த எந்த நிகழ்விலும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்றே வந்துள்ளனர். “அங்கையிருந்து இஞ்சைவந்து...” என்று அவர்களின் பங்களிப்பை கொச்சைப்படுத்தினார் சாணக்கியன். இரா. பரமதேவாவின் காலத்தில் மட்டக்களப்பில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களில் தியாகி சிவகுமாரனும் சத்தியசீலனும் கலந்துகொண்டனர் என்ற வரலாறு இவருக்குத் தெரிந்திருக்காது. ஏனெனில், அப்போது இவர் பிறந்திருக்கவில்லை. இவரும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராக விஷத்தைக் கக்குகிறார். 2004இலேயே அரியநேத்திரனின் பங்கு எத்தகையதாக இருந்தது என்பதை தமிழ் அரசின் தலைவரும் துணைத் தலைவரும் சொல்லிக்கொடுக்கத் தவறிவிட்டனர். சம்பந்தன் ஐயாவுக்கு வயதாகிவிட்டது. அவர் பதவி விலகி அடுத்தவர்களுக்கு வழிவிட வேண்டும் என அமைப்பின் அங்கீகாரமின்றி சுமந்திரன் சொன்னபோது அவர்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள் மூத்தவர்கள் தொடர்பாக (சிறீநேசன்) முறையற்ற விதத்தில் ஒருமையில் வார்த்தைப் பிரயோகங்கள் மேற்கொண்டபோது ஒழுங்கைப் பேணாதவர்கள் தந்தை செல்வாவின் அமைப்பின் பெயரால் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தகுதியற்றவர்கள் - அமைப்பின் பெயரால் சுமந்திரன் தன்னிச்சையாக மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக இதுவரை ஏழுக்கும் மேற்பட்ட தடவைகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். 1989 தேர்தலில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன், ஆனந்தசங்கரி, யோகேஸ்வரன், போன்ற பிரபலங்களை தோற்கடித்தவர்கள் எமது மக்கள். ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகள் பெற்ற ஒருவரை இன்றுவரை வாக்களிப்பு மூலம் தெரிவு செய்யாதவர்கள் எமது மக்கள் என்பதை சாணக்கியனும் உணர்ந்து கொள்ளவேண்டும். மேய்ச்சல் தரை விவகாரத்தில் “மாடுகளுக்கு புல்லு வெட்டிப் போட முடியாதா?” என ஜனாதிபதி தன்னிடம் கேட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாணக்கியன் சொன்னார். இதன் அர்த்தம் “மேய்ச்சல் தரையை ஆக்கிரமித்தவர்களை அகற்ற நான் தயாரில்லை”, என்பதுதான். இப்போது ஜனாதிபதி பேச்சுக்கு அழைக்கிறார் என்றால் நாளாந்தம் எத்தனை தொன் புல்லுத் தர ஆயத்தமாக இருக்கிறார் என்றுதான் கேட்க முடியுமே தவிர, எப்போது இவர்களை அகற்றப்போகிறார் என்று பேச முடியாது. மேய்ச்சல்தரை விவகாரத்தில் 24 மணி நேரத்துக்குள் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அகற்றப்பட்ட மாவட்டச் செயலர் திருமதி கலாமதி பத்மராஜா கண்ணீருடன் தன்னை அனுப்பி வைத்த மாவட்ட செயலக ஊழியர்களிடம் சொன்ன வார்த்தைகளை சாணக்கியனுக்கு நினைவூட்டுகிறோம். “சோர்ந்து போகாதீர்கள்! சோரம் போகாதீர்கள்...!” * * * எல்லாவிதத் தடைகளையும் துரோகங்களையும் தாண்டி தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் முன்னோக்கிச் செல்வோம். புலம்பெயர் உறவுகளும் தாயகத்திலுள்ளோரும் கைகோர்த்து இதனை சாத்தியமாக்குவோம். https://www.battinatham.com/2024/08/blog-post_303.html
  21. 5ஆம் ஆண்டு மாணவிகளுக்கு தவறான படங்களை காண்பித்த அதிபர் கைது! Vhg ஆகஸ்ட் 22, 2024 மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5இல் கல்வி கற்கும் மாணவிகளுக்கு கையடக்க தொலைபேசியில் தகாத படங்களை காட்டி வந்த குற்றச்சாட்டில் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 57 வயதுடைய பாடசாலை அதிபரையே நேற்று (21-08-2024) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் 3 மாணவிகள், 3 மாணவன்கள் உட்பட 6 பேர் கல்விகற்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த மாணவர்கள் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் அவர்களுக்கு பாடசாலை முடிவுற்ற பின்னர் மேலதிகமாக மாலையில் அதிபர் கற்பித்து வந்துள்ளார். இதன்போது, கைது செய்யப்பட்ட அதிபர் மாணவர்களுக்கு தனது கையடக்க தொலைபேசியில் இருந்து தகாத படங்களை காட்டி வந்தமை காரணமாக ஒரு மாணவி மாலை நேர வகுப்பிற்கு போக முடியாது என பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அதற்கான காரணத்தை கேட்டபோது சிறுமி அதிபரின் இந்த செயல் தொடர்பாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, நேற்று இரவு மாணவியின் பெற்றோர், 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அறிவித்துள்ளனர். இதன் பின்னர், பொலிஸார் பாதிக்கப்பட்ட 3 மாணவிகளிடம் இருந்து வாக்குமூலத்தை பதிவு செய்ததுடன் 57 வயதுடைய அதிபரை கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட அதிபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெண்கள், சிறுவர்கள் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். https://www.battinatham.com/2024/08/5_22.html
  22. காசா போர் நிறுத்த முயற்சியில் முன்னேற்றம் இன்றி அமெரிக்கா திரும்புகிறார் பிளிங்கன் -இஸ்ரேலின் தாக்குதல்களில் மேலும் பல பலஸ்தீனர்கள் பலி sachinthaAugust 22, 2024 காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு தவறிய நிலையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் நேற்று (21) பிராந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். பரந்த அளவிலான போர் ஒன்றை தவிர்ப்பதற்கான கடைசி வாய்ப்பாக இது உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார். எனினும் காசாவில் இஸ்ரேல் நேற்றும் உக்கிர தாக்குதல்களை நடத்தியதோடு கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் முற்றுகையில் இருக்கும் அந்தப் பகுதியில் மேலும் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் போர் நிறுத்த முன்மொழிவை ஏற்கும்படி ஹமாஸை வலியுறுத்திய பிளிங்கன், காசாவின் எதிர்காலம் தொடர்பில் இஸ்ரேலுடன் வெளிப்படையாக முரண்பாட்டார். காசாவில் போர் வெடித்த பின்னர் கடந்த 10 மாதங்களில் ஒன்பதாவது முறையாக பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிளிங்கன் கட்டார், எகிப்து மற்றும் இஸ்ரேலுக்கு பயணமானார். அந்தப் பயணங்களை முடித்துக் கொண்ட அவர் ‘நேரம் முக்கியமானது’ என்று வலியுறுத்தினார். ‘கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும், நல்லவர்களுக்கு மிக மோசமான விடயங்கள் நடக்கக் கூடும்’ என்று நேற்று (21) டோஹாவில் இருந்து விமானத்தில் புறப்படும் முன்னர் குறிப்பிட்டார். ‘இது (போர் நிறுத்தம்) ஏற்படுத்தப்பட வேண்டும், எதிர்வரும் நாட்களில் ஏற்படுத்தப்பட வேண்டும். அதனை அடைவதற்கு நாம் முடியுமான அனைத்தையும் செய்வோம்’ என்று அவர் போர் நிறுத்தம் தொடர்பில் குறிப்பிட்டார். போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு இடையூறாக இருக்கும் இடைவெளிகளை நிரப்பும் யோசனைகளை அமெரிக்கா முன்வைத்து வருவதோடு, கெய்ரோவில் இந்த வாரம் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஹமாஸ் அமைப்பை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. காசாவின் எகிப்துடனான எல்லையான பிலடல்பியா தாழ்வார பகுதியின் கட்டுப்பாட்டை தொடர்ந்து தக்கவைப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். இந்த எல்லை பகுதியை இஸ்ரேல் ஹமாஸிடம் இருந்து கைப்பற்றியதோடு இங்குள்ள இரகசிய சுரங்கப்பாதை வழியாக ஆயுதங்கள் காசாவுக்கு கொண்டுவரப்படுவதாக இஸ்ரேல் கூறி வருகிறது. காசாவில் இருந்து துருப்புகள் வாபஸ் பெறும் அட்டவணை மற்றும் இடம் தொடர்பில் இஸ்ரேலுடன் ஏற்கனவே இணக்கத்தை எட்டி இருப்பதாக பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார். காசாவில் போர் வெடித்தது தொடக்கம் அங்கு இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை தொடர்வதை அமெரிக்கா நிராகரித்திருப்பதாக நெதன்யாகுவின் கருத்துகள் தொடர்பில் பிளிங்கனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் குறிப்பிட்டார். நெதன்யாகுவின் வலுவான அறிக்கை போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு உதவாது என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவத்திற்கு குறிப்பிட்டுள்ளார். காசா எல்லை பகுதியை இஸ்ரேல் கைப்பற்றி இருப்பது தொடர்பில் இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கையை செய்து கொண்ட முதல் அரபு நாடான எகிப்து அதிருப்தி அடைந்துள்ளது. இரு முஸ்லிம் புனிதத் தலங்களின் காவலாராக உள்ள சவூதி அரேபியா உட்பட அரபு உலகம் மற்றும் இஸ்ரேல் இடையே இயல்புநிலையை ஏற்படுவதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம் நெதன்யாகுவை சமரசம் செய்ய பிளிங்கன் முயற்சித்தார். இந்நிலையில் பிளிங்கனை சந்தித்த எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசி, ‘போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்றார். போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதில் ஹமாஸ் ஆர்வம் காட்டுகின்றபோதும் அமெரிக்காவின் புதிய போர் நிறுத்த முன்மொழிவில் இஸ்ரேல் முன்வைத்திருக்கும் புதிய நிபந்தனைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது. எகிப்துடனான எல்லையில் அமைந்துள்ள தெற்கு காசாவில் ரபா நகர் மீது இஸ்ரேலியப் படை நேற்றுக் காலை சரமாரியாக குண்டுகளை வீசியது. இதன்போது நான்கு சடலங்களை மீட்டதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரபா நகரின் மேற்கே அல் மவாசியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கி இருக்கும் கூடாரங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது. வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமில் உள்ள அல் காதிப் குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டுன் மீது நேற்று இடம்பெற்ற வான் தாக்குதல் ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வின் பல சுற்றுப்புறங்களில் இருந்து மக்களை வெளியேற இஸ்ரேல் இராணுவம் நேற்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த நகரின் தெற்கு பகுதியில் பல இடங்களும் ‘அபாயகரமான போர் வலயம்’ என்பதை காட்டும் வரைபடம் ஒன்றை இஸ்ரேல் இராணுவம் எக்ஸ் சமூகதளத்தில் வெளியிட்டுள்ளது. அங்குள்ள போராளிகளுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாகவும் மக்கள் மேற்கு பக்கமாக உடன் வெளியேற வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘நாம் எங்கே போவது? எங்கே தான் போவது?’ என்று வடக்கு காசாவில் உள்ள காசா நகரில் இருந்து வந்த 55 வயது அபூரக்கன் என்பவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். அவர் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஐந்து முறை இடம்பெயர்ந்துள்ளார். ‘அவர்கள் எம்மை நெருங்கி வருகிறார்கள் என்று உணர்கிறேன். அச்சுறுத்தல் பகுதிக்கு சில நூறு மீற்றர் தூரத்தில் நான் இருக்கிறேன். காலை தொடக்கம் டெயிர் அல் பலாஹ், கான் யூனிஸ் அல்லது நுஸைரத்தில் எஞ்சியுள்ள இடத்தை நான் தேடி வருகிறேன்’ என்று சாட் செயலி வழியாக கருத்துக் கூறியபோதும் அவர் தெரிவித்தார். ‘துரதிருஷ்டவசமாக இந்தப் போரின் முடிவைக் காண்பதற்கு முன் நாம் இறக்கக்கூடம். போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் எல்லாமே பெய்யானது’ என்றும் அவர் குறிப்பிட்டார். இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. கடந்த 10 மாதங்களுக்கு மேற்பட்ட காலத்தல் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 40,223 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 92,981 பேர் காயமடைந்துள்ளர். காசா போர் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்திருக்கும் சூழலில் தெற்கு லெபனானின் சிடோன் நகரில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல் ஒன்றில் மேற்குக் கரையில் ஆட்சி புரியும் பத்தா அமைப்பின் அதிகாரியான கலீல் மகாதா கொல்லப்பட்டுள்ளார். மகாதா மற்றும் அவரது சகோதரரான மூத்த பத்தா உறுப்பினர் முனீர் ஆகியோர் லெபனானில் இருந்து ஈரான் புரட்சிக் காவல் படையுடன் இணைந்து செயற்படுவதாகவும் மேற்குக் கரைக்கு பணம் மற்றும் ஆயுதங்களை கடத்துவதாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. https://www.thinakaran.lk/2024/08/22/world/80061/காசா-போர்-நிறுத்த-முயற்ச/
  23. வவுனியா வைத்தியசாலையில் பிறந்த சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் PrashahiniAugust 22, 2024 வவுனியா வைத்தியசாலையில் பிறந்த சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மரணித்த சிசுவின் உறவினர்கள் மற்றும் பொது மக்களால் நேற்று (21) மாலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வைத்தியசாலையின் முன்பாக வீதியில் அமர்ந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், வவுனியா வைத்தியசாலை வைத்தியர்களின் அசமந்தத்தால் மரணித்த சிசுவிற்கு நீதி வேண்டும் எனவும், வைத்தியசாலையின் உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை. சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண இது தொடர்பில் கவனம் செலுத்தி ஒரு விசாரணை குழுவை அமைத்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதியைப் பெற்றுத் தர வேண்டும் எனவும், தொடரும் மருத்துவ மாபியங்களின் அசமந்த போக்கிற்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் சட்டவைத்திய அதிகாரியின் விசாரணையில் நம்பிக்கை இல்லை எனவும் சிசுவின் சடலத்தை பார்வையிட்ட வவுனியா நீதிபதி விசாரணைகளை முன்னெடுத்திருந்தார். அவரை நாம் நம்புகின்றோம். நீதிபதி எமக்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் இதன்போது மரணித்த சிசுவின் உறவினர்கள் கோரினர். குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக வைத்தியசாலை பிரதான வாயில் அருகில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.thinakaran.lk/2024/08/22/breaking-news/80045/வவுனியா-வைத்தியசாலையில்/
  24. களைகட்டும் தவெக கொடி அறிமுக விழா : விஜய்க்கு சீமான் வாழ்த்து! Aug 22, 2024 07:51AM IST ஷேர் செய்ய : தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை இன்று (ஆகஸ்ட் 22) அறிமுகப்படுத்த உள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகர் விஜய். எனினும் அக்கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று காலை அறிமுகப்படுத்தப்படும் என விஜய் நேற்று அறிவித்தார். மேலும் கட்சியின் இசையமைப்பாளர் தமன் இசையில், பாடலாசிரியர் விவேக் வரிகளில் உருவாகியுள்ள கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் அடங்கிய பாடலையும் வெளியிட உள்ளார். இதனையடுத்து பனையூரில் கட்சி கொடி விழா அறிமுகப்படுத்தவதற்கான நிகழ்ச்சி இன்று காலை முதலே களைகட்டியுள்ளது. கட்சி நிர்வாகிகள் பலரும் அங்கு குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், நாளை கட்சி கொடியை அறிமுகப்படுத்த உள்ள விஜய்க்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”தம்மை வளர்த்தெடுத்து, வாழ்வளித்த தாய்த்தமிழ்நாட்டு மக்களுக்குத் தன்னலமற்ற தொண்டாற்ற வேண்டும் என்ற புனித நோக்கத்தோடு, தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை இன்று அறிமுகப்படுத்தி, நேரடி அரசியல் களத்தில் தடம் பதிக்கத் தொடங்கும், என் அன்புத்தம்பி தளபதி விஜய் லட்சிய உறுதிகொண்டு, தமிழக அரசியலில் வாகை சூட நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். https://minnambalam.com/political-news/tvk-flag-launch-ceremony-seeman-congratulates-vijay/
  25. ரணிலின் துணிவும் ஏனைய போட்டியாளரும்! August 21, 2024 — கருணாகரன் — நெருக்கடி காலத்திலிருந்து நாட்டை – மக்களை மீட்டது தானே என்கிறார் ரணில் விக்கிரமசிங்க. அதாவது தானொரு மீட்பர், ஆபத்பாந்தகர் என்றெல்லாம் சொல்கிறார். “அன்றைய நெருக்கடிச் சூழலில் யாருமே பொறுப்பேற்க முன்வராதபோது தனியாளாக முன்வந்து அந்தப் பொறுப்பைத்துணிவுடன் ஏற்றேன். நெருக்கடியிலிருந்து நாட்டைமீட்பதற்கான தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காகச் சஜித்தையும் அநுரவையும் கூட அழைத்தேன். அதைப்போல தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் மலையக் கட்சிகளையும் முஸ்லிம்களையும் கேட்டிருந்தேன். யாரும் வரவில்லை. ஆனாலும், இணைந்து பணியாற்றக் கூடியவர்களைச் சேர்த்து ஆட்சியை அமைத்தேன். அதன் மூலம் பொருட்களுக்காகக் காத்திருக்கும் வரிசை யுகத்தை மாற்றினேன். விவசாயிகளுக்கு உரத்தைத் தந்தேன். பொருட்களின் தட்டுப்பாட்டை நீக்கினேன்…. நாம் இனி வாழமுடியுமா என்று நம்பிக்கையற்றிருந்த மக்களை நிம்மதியோ, அச்சமின்றி வாழ்க்கையைத் தொடரக் கூடியவாறான சூழலை உருவாக்கினேன். அப்படிச்செய்தேன். இப்படிச் செய்தேன்.. ” என்று ஏராளமாகச் சொல்லிச்செல்கிறார் ஜனாதிபதி. இதில் சில உண்மைகளுண்டு. மறுக்க முடியாது. ரணில் சொல்வதைப்போல (அவர் விரும்பியதைப்போல அல்ல) தேசிய அரசாங்கத்தை அமைத்திருக்க வேண்டும். அது பொருளாதாரப் பிரச்சினையையும் இனப்பிரச்சினையையும் தீர்க்கும் முகமாகச் செயற்பட்டிருக்க வேண்டும். கூடவே நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்குவது உட்படப் பலவற்றைச் சீர்செய்திருக்க முடியும். முக்கியமாக அரசியலமைப்பை மாற்றியிருக்கலாம். குறைந்தபட்சம் அதை நோக்கி நகர்ந்து சாத்தியமான பலவற்றையும் செய்திருக்கலாம். தேசிய அரசாங்கத்தில் இணைந்திருந்தால் ஒருவரை ஒருவர் சாட்டித் தப்பி விட முடியாது. ஏனென்றால் அனைத்துத் தரப்பினரும் பங்காளிகள். அதில்லாதபோது ஒருவரையொருவர் குற்றம்சாட்டியோ அல்லது எதிர்ப்புக் காட்டியோ தப்பி விடலாம். அப்படித்தான் ஒவ்வொருவரும் இழிவான முறையில் தங்கள் தங்கள் அரசியலைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். நாட்டைப் பற்றியோ மக்களைப் பற்றியோ இவர்கள் நேர்மையாக – விசுவாசமாகச் சிந்திக்கவில்லை. “அந்த நெருக்கடிச் சூழலில் நாட்டைப் பொறுப்பேற்குமாறு தன்னை 71 தடவை அழைத்தார்கள். நான் செல்லவில்லை. அப்படிப் பொறுப்பேற்றிருந்தால் அது கள்வர்களைப் பாதுகாப்பதாகவே முடிந்திருக்கும். அதை நான் விரும்பவில்லை” என்று இப்பொழுது சஜித் பிரேமதாச பெருமையாகச் சொல்கிறார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நாட்டைப் பொறுப்பேற்று, ஆட்சியைப் பலப்படுத்திக் கொண்டு கள்வர்களைப் பிடித்துச் சிறையில் தள்ளி, ஊழலைக் கட்டுப்படுத்தியிருக்கலாம் அல்லவா! இதையே செய்திருக்க வேண்டும் சஜித். அப்படிச் செய்யாமல் விட்டதால்தான் அவர்கள் ரணில் அரசாங்கத்தில் பாதுகாக்கப்பட்டனர். ஊழல் தொடர்ந்தது. தவிர, ரணிலின் அழைப்பை ஏற்றுத் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டு செயற்படும்போது, ரணில் விக்கிரமசிங்க, தேசிய அரசாங்கத்திற்குரிய பொதுப் பண்புக்கு மாறாகச் செயற்பட முனைந்திருந்தால் அதை மக்களுக்குச் சொல்லி விட்டு (நிரூபித்துக் கொண்டு) அதிலிருந்து விலகியிருக்கலாம். அதுவே சரியானது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவேயில்லை. தேசிய அரசாங்கத்திற்கான வற்புறுத்தல்களை இலங்கையின் புத்திஜீவிகள், சமூகச் சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்குகின்ற மதத்தலைவர்கள் எவரும் செய்யவில்லை. இதனால் அரசியற் கட்சிகளைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தங்கள் நிலையிலிருந்தே, தங்களின் பாரம்பரியச் சிந்தனை முறையிலிருந்தே சிந்தித்தனர், செயற்பட்டனர். எவரும் நாட்டின் தேசிய நெருக்கடி, தேசியப் பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வு என்று சிந்திக்கவில்லை. பதிலாக தனியொருவராக (ஒற்றை ஆளாக) நிற்கும் ரணில் விக்கிரமசிங்க தன்னைப் பலப்படுத்துவதற்காக, பிறரைப் பயன்படுத்துவதற்காக, தந்திரோபாயத்தின் அடிப்படையில்தான் பலரையும் அழைக்கிறார் எனச் சொல்லப்பட்டதுண்டு. தனியொருவராக நிற்கும் ரணில் எப்படி ஆளுமையும் நேர்மையும் உள்ள மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்? அவர்கள் தங்கள் ஆளுமையினாலும் நேர்மையினாலும் ரணில் விக்கிரமசிங்கவை அம்பலப்படுத்தியிருக்கலாம். கட்டுப்படுத்தியிருக்க முடியும். என்பதால் அன்றைய சூழலை இழந்தது தவறேயாகும். இலங்கையின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வை எட்டக் கூடியதாக அந்த நெருக்கடிச் சூழல் அனைவருக்குமான பொறுப்பை ஏற்குமாறு அழைத்தது. பொதுவாகவே நெருக்கடியொன்றின் போதுதான் அனைத்துத் தரப்பும் ஒருமுகப்பட்டுச் செயற்படக்கூடிய சூழலும் உளநிலையும் உருவாகும். உதாரணம், சுனாமி அனர்த்தச் சூழல். அந்தப் பேரிடரின்போது புலிகளும் அரசும் தமிழரும் சிங்களரும் முஸ்லிம்களும் என எதிரெதிர்த் தரப்புகள் எல்லாம் ஒன்றிணைந்து பேதங்களின்றிப் பணியாற்றினர். அதொரு முன்னுதாரணமாகப் பேசப்பட்டது. அதிலிருந்து நல்லெண்ணச் செயற்பாடுகள் உருவாக்கப்பட்டிருந்தால் பிந்திய இலங்கையின் பேரழிவுகளும் இன்றைய பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டிருக்காது. இன்னொரு சந்தர்ப்பம், கொரோனா பெருந்தொற்றுக்காலப் பேரிடர்ச் சூழல். அதன் போதும் அனைத்துத்தரப்பினரிடத்திலும் ஒரு ஒற்றுமை உணர்வு மேலோங்கியிருந்தது. இனவாதம் தணிந்திருந்த சூழல்களிவை. ஆகவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியோடிணைந்த அந்த நெருக்கடிச் சூழலை அனைத்துத் தரப்பும் இலங்கையை மீட்பதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தியிருக்கவேண்டும். அதற்கான கருநிலை “அறகலய“வின் மூலம் உருவாக்கப்பட்டிருந்தது. “அறகலய”வில் நேரடியான அரசியற் கட்சிகளுக்கு அப்பாலுள்ள அனைத்துத்தரப்பும் ஒன்றிணைந்து நின்றது. மட்டுமல்ல, இனப்பிரச்சினையைப் பற்றிய புரிதலும் அங்கே ஓரளவு காணப்பட்டது. அல்லது அதைப்பற்றிப் பேச வேண்டும் என்ற உணர்வு அங்கே இருந்தது. ஆகவே அதையொட்டி, அதற்குப் பின் வரவிருந்த தேசிய அரசாங்கம் என்பதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு அனைவரும் செயலாற்ற முன்வந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு சஜித்தும் அநுரவும் ஏனைய தமிழ், முஸ்லிம், மலையகக்கட்சிகளும் சம்மதிக்கவில்லை. எல்லோருக்கும் இனவாதம் தேவைப்பட்டது. அதை விட்டு அரசியல் செய்து பழக்கமில்லை. இதனால் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்குப் பின்னின்றனர். அவர்கள் சொன்ன காரணங்கள், ஏற்றுக் கொள்ள முடியாதவெறும் சாட்டுகளே. அதிலொன்று, ரணிலை நம்பமுடியாது. அவர் சூழ்ச்சிக்காரர். ராஜபக்ஸக்களை (திருடர்களை) காப்பாற்றுபவர். அவர் வெளிச்சக்திகளின் நிகழ்ச்சிகளுக்காகச் செயற்படுகின்றவர் போன்றனவாகும். இதிலும் உண்மையுண்டு. ஆனால், ஏற்புடையதல்ல. ஏனென்றால் – ஒன்று, வெளிச்சக்திகள் ரணிலை மட்டுமல்ல, அதிகாரத்திலிருப்போரையும் அதிகாரத்திற்கு வெளியே இருப்போரையும்தான் கையாள – கைப்பொம்மைகளாக வைத்திருப்பதற்கு முயற்சிக்கின்றன. சஜித் பிரேமதாசா, அநுரகுமார திசநாயக்க, சுமந்திரன், மனோ கணேசன், ஹக்கீம், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சந்திரகுமார் போன்றவர்களைப் பிற நாட்டுத் தூதர்கள் சந்திக்கிறார்கள். தங்களுக்குப் பொழுது போகவில்லை என்பதற்காகவா இந்தச் சந்திப்பையெல்லாம் ஒவ்வொரு நாட்டுத் துதுவர்களும் நடத்துகின்றனர்? அல்லது இவர்கள் இந்தத் தூதர்களைச் சந்திப்பது ஏதோ அன்புறவு காரணமாகவா? எல்லாவற்றுக்குப் பின்னும் நிகழ்ச்சி நிரல்களுண்டு. ஆகவே பிறருடைய நிகழ்ச்சி நிரல்கள் எப்போதுமிருக்கும். அது யார் அதிகாரத்துக்கு வந்தாலும் தொடரும். அதிகாரத்தில் இல்லாத சக்திகளையும் அவர்கள் நாடிபிடித்துப் பார்ப்பர். எனவே இதை ஒரு காரணமாகச் சொல்லித் தப்ப முடியாது. அப்படித்தான் ரணிலை நம்ப முடியாது என்பதும். அவர் ஒரு சூழ்ச்சிக்காரர். சேர்ந்திருப்போரையே அணைத்துக் கெடுத்து விடுவார். கட்சிகளை உடைப்பதில் வல்லவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. அரசியலில் போட்டியிருக்கும். இந்த மாதிரிச் சூழ்ச்சிகளும் இருக்கும். அரசியலென்பதே போட்டிகளின் களம்தான். முரண்பாடுகளின் இயக்கம்தான். சூழ்ச்சிகள் இடையறாது நிகழும் ஆட்டமே. ஆகவே அதற்கேற்ற காய்நகர்த்தல்களும் காய் வெட்டுகளும் நடக்கும். ஒரே கட்சிக்குள், ஒரே அமைப்புக்குள், ஒரே அணிக்குள் கூட இதெல்லாம் நடந்து கொண்டுதானிருக்கின்றன. அப்படியில்லாத ஒரு அணியை – ஒரு கட்சியை யாராவது காட்டுங்கள் பார்க்கலாம். தங்கள் அணிக்குள் வெட்டுக்குத்துகளும் குழிபறிப்புகளும் முரண்பாடுகளுமிருப்பதைப் போலவே வெளியிலும் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏன், இப்படிச் சொல்வோர் தமது அணிக்குள்ளும் வெளியிலும் போட்டியாளர்களை முறியடிப்பதற்கும் வெட்டியெறிவதற்கும் முயற்சிப்பதில்லையா? எனவே ரணில் விக்கிரமசிங்கவைப் பற்றிய இந்தக் குற்றச் சாட்டுகளும் ஏற்புடையவையில்லை. ஆகவே இந்த மாதிரியான சிறுபிள்ளைத்தனமான சாட்டுப்போக்குகளைக் கடந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்குச் சஜித்தும் அநுரவும் முன்வந்திருக்க வேண்டும். இருவரும் இளைய தலைமுறையினர். அப்படி இருவரும் வந்திருந்தால், உரிய பொறுப்புகளை ஏற்றுத் திறம்படச் செயற்பட்டிருந்தால், தங்களுடைய செயற்பாட்டுத்திறனால் இன்று மிகப் பெரிய ஆளுமைகளாக மிளிர்ந்திருப்பர். நாடும் கணிசமான அளவுக்கு மீண்டிருக்கும். வயோபதிரான, ஒற்றையாளான ரணில் விக்கிரமசிங்கவை களத்திலிருந்தே அப்புறப்படுத்தியிருக்க முடியும். அவருடைய பலத்தையும் ஒளிவட்டத்தையும் இல்லாதொழித்திருக்க முடியும். ஆனால் நடந்தது என்ன? ஒற்றையாளான – தனியனான – ரணில், முதிய வயதில் தனிக்காட்டு யானையாக மெல்ல மெல்லச் சூழலைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். பதவியே இல்லாமல் தன்னுடைய வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தவர், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாடுமுழுக்கச் சென்று தன்னை நிலைப்படுத்தினார். இதற்கு வாய்ப்புக் கொடுத்தால் அவர் அதைச் செய்யத்தானே செய்வார்! அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவரில்லை. பின் கதவு வழியாக வந்தவர் என்ற பரிகாசமெல்லாம் அரசியலில் எடுபடாது. நீங்கள் களத்தில் நிற்கிறீர்களா இல்லையா என்பதே முக்கியமானது. ஜனாதிபதியாகப் பதவியேற்று ரணில் களத்தில் நின்றதே அவர் இன்று போட்டிக்குரிய வேட்பாளராக மாறிருப்பதற்கான காரணம். 2020 இல் ரணில் தோற்றுப்போன ஒருவர். அவரிடம் கட்சியும் இருக்கவில்லை. வெற்றியும் இருக்கவில்லை. ஏறக்குறைய அரசியலுக்கு முழுக்குப் போடும் நிலையில் இருந்தார். இன்று? சவாலுக்குரிய போட்டியாளராக – ஒரு இளைஞரைப்போல களத்தில் நிற்கிறார். செடியை முளையிலேயே கிள்ளாமல் விட்டால், அல்லது நமக்கு வாய்ப்புக் கிட்டும்போது அதைக் கை விட்டால் பிறகு அது நம்மையே பதம் பார்த்து விடும். https://arangamnews.com/?p=11123

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.