Everything posted by கிருபன்
-
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
முள்ளிக்குளம்தான் சரி. நான் மதவாச்சி/ வவுனியா - மன்னார் பாதையில் இருக்கும் குளங்களை எல்லாம் மூளையைக் கசக்கியும், கூகிள் மாப்பைப் பார்த்தும் முள்ளிக்குளம் நினைவுக்கு வரவில்லை! இன்னும் வர இருக்கின்றது!
-
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
நீங்கள் புளட் டம்பிங் சங்கிலி கந்தசாமியுடன் இந்தக் கதையில் வரும் சங்கிலி என்பவர் என்று நினைத்து குழம்பியுள்ளீர்கள்! டம்பிங் சங்கிலி கந்தசாமி மிகவும் கொடூரமான புளட்டின் உட்கொலைகள், புலிகள் இயக்கத்தினரை படுகொலைகள் செய்தது என்று தெரிந்திருக்கும். டம்பிங் சங்கிலி இந்திய இராணுவம் நின்ற காலத்தில் புலிகளால் நடாத்பட்ட செட்டிக்குளம் புளட் முகாம் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்றுதான் ஞாபகம் இருக்கின்றது.
-
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 07 ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை மாலையில் சங்கிலி பெரியப்பாவை புலிகள் இயக்கம் சுட்டுக்கொன்றது. மூன்று பிள்ளைகளையும் அழைத்துச் சென்று வீதியில் கிடந்த கணவனின் உடலத்தின் முன்பாக விழுந்தரற்றினாள் கிடுகு பெரியம்மா. ஊர்ச்சனங்கள் கூடி அவளையும் பிள்ளைகளையும் ஆற்றுப்படுத்தி, சங்கிலியின் இறுதிச் சடங்கை செய்து முடித்தனர். சங்கிலி பெரியப்பா ஆயுதமேந்திய வேறொரு அமைப்பைச் சேர்ந்தவர். அவர்களுக்கும் புலிகளுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. அந்த நடவடிக்கைகளில் சங்கிலிக்கு பெரிய பங்கிருந்தது. பிறகான நாட்களில் தான் சார்ந்திருந்த ஆயுத அமைப்போடு முரண்பட்டு புலிகளிடம் சரணடைந்து விசாரணைகளைச் சந்தித்தார். உயிருக்கு அச்சமற்று உலகியலோடு மட்டும் அமைந்திருந்தார். கிணறு வெட்டுவது, வேலி அடைப்பது, வீடு வேய்வதென கூலியானார். ஆனாலும் மீண்டும் மீண்டும் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டார். “பெடியள் உங்களில எதோ ஐமிச்சப்படுறாங்கள். அதுதான் இப்பிடி அடிக்கடி விசாரிக்கிறாங்கள். எனக்கு பயமாயிருக்கு” என்றிருக்கிறாள் பெரியம்மா. பதிலுக்கு “நான் பயப்பிடேல்ல, அதிகபட்சம் சுடுவாங்கள். அதுதானே நடக்கும்” என்றிருக்கிறார். பெரியம்மா மூன்று பிள்ளைகளுக்கு நடுவில் அவரை உறங்குமாறு கூறினாள். அவளுக்கு ஆறுதல் தருகிற ஒன்றைச் செய்வதில் பெரியப்பா பின் நின்றதில்லை. அப்படித்தான் உறங்கவும் செய்தார். குளித்து முடித்து குளத்திலிருந்து வீடு நோக்கி நடந்து சென்றவரை போராளிகள் அழைத்துச் சென்றனர். பெரிய புளியமரத்தின் கீழே நிற்கவைத்து அவருடைய தலைக்கு மேல் துரோகியென எழுதப்பட்ட சிறிய இரண்டடியிலான கரும்பலகையை அறைந்தார்கள். துரோகம் ஒழியட்டும் எனத்தொடங்கும் மரண தண்டனை அறிக்கையை வாசித்து முடித்த குரல் ஓய்வதற்குள் தோட்டாக்கள் பாய்ந்தன. வெளியேறிக் கொதித்த குருதியை வெடியோசைகள் அறைந்தன. சங்கிலி பெரியப்பாவின் உடலுக்கு கொள்ளிவைக்கும் போது சந்தனனுக்கு ஏழு வயது. மிச்ச இருவரும் அவனிலும் இளையவர்கள். தியாகம் துரோகம் எதுவுமறியாத மழலைகள். எச்சில் சிந்தும் அமுத உயிரிகள். சந்தனன் தோளில் கொள்ளிக்குடத்தை வைத்து சங்கிலி பெரியப்பாவின் உடலத்தை மூன்றுமுறை சுந்திவந்தான். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் தன்னிடமிருந்த கத்தி முனையால் கொள்ளிக்குடத்தைக் கொத்தினார் மார்க்கண்டு மாமா. சந்தனன் கொள்ளி வைத்து திரும்பிப் பார்க்காமல் அழைத்துச் செல்லப்பட்டான். ஆனாலும் அவன் எரியும் சிதையை ஒருகணம் திரும்பி நின்று பார்த்தான். தீயென எரியும் குருதி. நிணமுருக்கும் சுவாலை. மஞ்சள் சிவப்பென எழுந்தாடும் ஒரு போழ்தெனப் பிணையும் வெளிச்சம். அப்பாவென்று அழைத்தான். மார்க்கண்டு மாமா அவனை அணைத்தபடி கண்ணீர் உகுத்தார். காடாற்றும் சடங்குக்காக போயிருக்கையில் சாம்பலை அள்ளி சிறு மண்முட்டியில் போட்டனர். சந்தனன் கையில் வைத்திருந்து அந்த முட்டியைப் பார்த்தான். குருதி தளும்பிக் கிடந்தது. ரத்தமென பயந்தடித்து முட்டியைத் கை தவறிக் கீழே போட்டான். சாம்பல் மண்ணில் கலந்தது. மண்ணெனக் கிடந்த சாம்பலை அள்ளி வேறொரு முட்டியில் அடைத்து கடலில் கரைத்தனர். ஒரு பேரலையின் சீற்றம் சாம்பலை உள்வாங்கிக் கொண்டது. சந்தனன் ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்த்தான். குருதியலைகள். ஓலங்கள் நிரம்பிய உடலங்கள் அதில் சுருள்கின்றன. திடுமென கடலின் இரைச்சல் கூடி “துரோகி சங்கிலி” என்று ஒலித்தது. கரையொதுங்கிக் கிடந்த மண்டையோடொன்றையெடுத்து வெறிகொண்டு வீசினான். “அப்பாவை ஏனம்மா சுட்டவே” சந்தனன் கேட்டான். காற்று மோதும் குப்பி விளக்கு அணையாது தப்ப “ துரோகம் செய்திட்டாராம். துரோகியாம்” பெரியம்மா சொன்னாள். “துரோகமென்றால் என்னம்மா” இதனைக் கேட்ட சந்தனனை அணைத்துச் சொன்னாள் “ நாங்கள் மனுஷராய் பிறந்தது. அதுவும் இந்த மண்ணில பிறந்தது. இதுதான் துரோகம்” என்றாள். நிலவேறி அலை மடித்து வெறித்திருந்த கடலில் சாம்பல் முட்டி மிதந்தது. இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு நவம்பர் மாதம் இருபத்தேழாம் திகதி. இருபத்தோராவது வயதில் சந்தனன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான். அவன் எழுதிய கடிதம் செத்தையில் செருகியிருந்தது. பெரியம்மா அதனை வாசித்ததும் அச்சத்தில் துண்டு துண்டாய் கிழித்து அடுப்பை மூட்டி ஒவ்வொன்றாக சாம்பலாக்கினாள். பிள்ளைக்கு எதுவும் நேரக்கூடாதென தெய்வத்திடம் இறைஞ்சி அழுதாள். ஏனைய இரண்டு பிள்ளைகளையும் வெளியே செல்ல வேண்டாமென கட்டளையிட்டாள். தன் பிள்ளையிடம் துளிர்த்த வன்மத்தை எண்ணி கசந்து அழுதாள். ஏற்கமுடியாதவொரு சூளுரையை சந்தானம் அளித்திருக்கிறான். அவனுள் தலைவிரித்து நிற்கும் அனலரவத்தின் விஷம் முறிக்க ஏது வழி? இதற்கெல்லாம் காரணம் தானன்றி வேறு யார்? சொல்லிச் சொல்லி வளர்த்தேனா? என்று நெஞ்சிலடித்து அழுதாள். ரத்தத்தால் பழியழிக்கும் வெறியூட்டிய மார்போ தன்னுடையதென தாய்மை கருக பேதலித்தாள். அன்றிரவு அடிப்படை ஆயுதப் பயிற்சிக்கான முகாமில் சேர்க்கப்பட்டான் சந்தனன். அங்கே பேண வேண்டிய ஒழுங்குகளையும், மீறல்களையும் பயிற்சி ஆசிரியர்களில் ஒருவர் அறிவுறுத்தினார். தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சந்தனன் அமர்ந்தான். அதிகாலையில் விசில் சத்தம் கேட்டதும், எழுந்திட வேண்டுமென கூறப்பட்டிருந்தது. மெல்லக் கண்களை மூடி உறங்கிப் போனான். ஆனால் பெரியம்மா இயல்பு குலைந்திருந்தாள். ஒருதடவையேனும் அவனை நேரில் சந்தித்து அறிவுரை சொல்லவேண்டுமென பதகளித்தாள். அம்மாவைச் சந்திக்க வீட்டிற்கு வந்தாள். அம்மாவைத் தனியாக அழைத்துச் சென்று நடந்தவற்றை சொன்னாள். “உடனடியாக சந்திக்க வாய்ப்பிருக்குமோ தெரியாது. எண்டாலும் கேட்டுப் பார்க்கிறேன்” என்றாள் அம்மா. வெளியே துப்ப இயலாத ஒரு நஞ்சைத் தன்னுள்ளே விழுங்க இயலாமலும் துடித்து நின்றாள் பெரியம்மா. சந்தனனுக்கு இயக்கத்தைப் பிடியாது. எப்போதும் குற்றம் சொல்லுவான். தந்தையைக் கொன்றவர்கள் என்பதைத் தாண்டியும் இயக்கத்திடம் குறைப்பட அவனுக்கு காரணங்களிருந்தன. அந்தப் புளியமரத்தை தாண்டும் போதெல்லாம் “அப்பா கடைசியா இதில தான் படுத்திருந்தவர். ரத்தம் வேரடி முழுவதும் பரவியிருந்தது. குப்புறக்கிடந்த வாயில் ரத்தமும் மண்ணும் ஒட்டிக்கிடந்தது. ரத்தம் குடித்து செழித்து நிற்கும் புளியம் மரம்” என்பான். ஆனால் இன்று இயக்கத்தில் இணைந்திருக்கிறான். அவனுள் நிகழ்ந்திருப்பது திரிபென நம்ப இயலவில்லை. அம்மாவும் பெரியம்மாவும் இரவோடு இரவாக ஓட்டோவில் புறப்பட்டனர். “நான் வரப் பிந்துமடா, நீ படு” என்ற அம்மாவின் கண்களில் ஒருவிதமான அவசரத்தைப் பார்த்தேன். “எங்க போறியள்” கேட்டேன். “கிளிநொச்சிக்கு, ஏன் நீயும் வரப்போறியோ” என்று அம்மா கேட்டாள். அது அழைப்பல்ல. இதற்கு மேல் கேளாதே என்கிற சமிக்ஞை. ஓட்டோ புறப்பட்டது. பெரியம்மாவின் கண்ணீர் வெளியெங்கும் பறந்தது. இரண்டு கைகளையும் கூப்பி ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லத் தொடங்கினாள். “இப்ப நடக்கிறதுக்கெல்லாம் நீ தான் காரணம் அக்கா” என்றாள் அம்மா. பெரியம்மா எதுவும் பதில் கதைக்கவில்லை. மூன்று மாத ஆயுதப் பயிற்சி முடித்த சந்தனனை சந்திக்க நாங்கள் போயிருந்தோம். உடல் பெருத்திருந்தான். புலிச்சீருடை அணிந்து மிடுக்கேறி நின்றான். பெரியம்மா அவனது கைகளைப் பிடித்து “சந்தனா, கடிதத்தில நீ எழுதியிருந்த எல்லாத்தையும் மறந்திடு. உன்னைத் தெய்வமாய் பார்த்தனான். ஆனா ரத்தம் கேக்கிற தெய்வமில்லை நீ” என்றாள். அந்தச் சொற்களில் எவற்றையும் பொருட்படுத்தவில்லையென அவன் உடல்மொழி கூறியது. தன்னுடைய கழுத்தில் கிடக்கும் குப்பியை தாயிடம் காட்டி “ இது கழுத்தில மட்டுமில்ல, எனக்குள்ளேயும் கிடக்கு” என்றான். பெரியம்மா அவனை கன்னத்தில் அறைந்து “நீ செத்தொழிஞ்சாலும் கவலையில்லை” என்று கத்தியபடி வெளியேறினாள். பெரியம்மாவுக்கு பின்னால் ஓடினேன். அம்மா சந்தனனிடம் “ நீ அவனைச் சுட்டுப் பழி தீர்க்க நினைக்கிறாய் எண்டு தெரிஞ்சாலே, அவ்வளவு தான்” என்றாள். என்ன நடந்தாலுமென்ன சாகத்தானே போகிறேன். அதிகபட்சம் என்ன செய்வார்கள். சுடத்தானே செய்வார்கள்” என்றான். சங்கிலிப் பெரியப்பாவை சுட்டுக்கொன்றவர் சரித்திரன். இன்றைக்கு முக்கிய பொறுப்பொன்றில் உள்ளவர். அன்று துரோகிகளை அழித்தொழிக்கும் பணியில் துடிப்புடன் இருந்தவர். இத்தனை வருடங்களில் பெரியம்மா சந்தனனுக்கு அடிக்கடி சொன்ன பெயர் சரித்திரன். எங்கு சரித்திரனைக் கண்டாலும் “அங்க பார், அவன் தான்” என்பாள். அப்படித்தான் சந்தனன் குருதியில் தீ மூண்டது. மெல்ல மெல்ல கங்குகள் பிணைந்து, காற்றில் தப்பிப் புகைந்து எரியத்தொடங்கியது. “அப்பாவைச் சுட்டவனை சுடுவேன்” என்று சந்தனன் முதன்முதலில் சத்தியம் செய்தது அந்தப் புளியமரத்தில் தான். அதற்கு ஒரே வழியாக இயக்கத்தில் சேர்ந்தான். ஆதிப்பலிக்கு ரத்தம் கேட்கும் உக்கிரம் அவனுள் உயர்ந்தது. சந்தனன் சொன்னதும் அம்மா அதிர்ச்சியடையவில்லை. அவனிடம் தெளிவாகவும் உறுதியாகவும் சொன்னாள். “இஞ்ச பார் சந்தனன், நீ சின்னப்பெடியனில்லை. உனக்கு நான் சொல்றது விளங்குமெண்டு நினைக்கிறன். பழிவாங்கத் துடிக்கிறது உனக்குத் தான் ஆபத்து.” என்றாள். சந்தனன் எதுவும் கதையாமலிருந்தான். புதிய போராளிகளின் பெற்றோர்கள் அனைவருக்கும் சந்திக்கும் நேரம் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. படையணி முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கிருந்து களமுனைக்கு கொண்டு செல்லப்படும் அணியோடு சேர்க்கப்பட்டான். சந்தனனிடமிருந்த ஆயுதத்தின் ஒயில் வாசனை அவனுக்குப் பிடிக்கவில்லை. மீண்டும் மீண்டும் துணியால் துடைத்தான். இரண்டு நாட்கள் பயணம் செய்து, களமுனைக்கு வந்தடைந்தான். முன்னரங்கு. எப்போதும் விழிப்பு. பதுங்குகுழிகள் நீண்டிருந்தன. காப்பரண்கள் கொதித்தன. நாளுக்கு பத்து மணிநேரம் மோதல் நிகழும் படுகளம். சந்தனனுக்கு காவலரண் ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே அங்கிருந்தவர்களோடு அறிமுகமானான். துவக்கைத் தன்னுடைய நெஞ்சோடு அணைத்தபடி பதுங்குகுழிக்குள் அமர்ந்தான். அன்றிரவு எந்த மோதலும் நிகழவில்லை. உறக்கம் வாய்த்தது. சந்தனன் மட்டும் விழித்திருந்தான். அவனுடைய காவல் நேரம் தாண்டியும் கடமை செய்தான். டிகரில் வலது கையின் ஆட்காட்டி விரலை வைத்தபடி புளியமரத்தை நினைத்துக் கொண்டான். தேசத்துரோகியென எழுதப்பட்டு முதல் ஆணியில் அறையப்பட்டிருந்த தந்தை பெயரைச் சொன்னான். உள்ளம் எரிந்து கண்ணீர் புகைந்தது. அப்பா அப்பா என்றான். இயலாமை ஊறி இருள் திரண்டு நின்றது. அவனிருந்த திசை நோக்கி குண்டுகள் பொழிந்தன. போழ்தின் இருள் அழிந்து ஊழி பொழிந்தது. சந்தனன் சண்டையில் காயமுற்றான். அவனிருந்த மருத்துவ விடுதியின் தலைமைப் பொறுப்பதிகாரியாய் சரித்திரன் இருந்தார். மேனியெங்கும் நஞ்சின் சூறை தீப்பிடிக்க சந்தனன் யாரோடும் கதையாமலிருந்தான். வீட்டில் செய்த உணவுகளை சரித்திரன் மூலமாய் அம்மா கொடுத்தனுப்பினாள். சந்தனன் அந்த உணவுகளைத் தீண்டக் கூடவில்லை. சரித்திரனுக்கு அது கவலையாகவிருந்தது. சில நாட்கள் கழித்து சரித்திரன் தனது வாகனத்தில் சந்தனனை ஏற்றிக்கொண்டு சென்றான். அவன் எதுவும் கதையாமல் வீதியை வெறித்திருந்தான். மழை பெய்யத் தொடங்கியது. “நீ என்னைச் சுடத்தான் இயக்கத்துக்கு வந்தனியெண்டு கேள்விப்பட்டனான்” என்ற சரித்திரனை அதிர்ச்சியோடு பார்த்தான் சந்தனன். உன்ர தந்தையைச் சுட்டது நானெண்டு தெரிஞ்ச உனக்கு ஏன் சுட்டனான் எண்டு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை” என்று தொடர்ந்தார். “அதுதான் நல்லாய்த் தெரியுமே, தேசத்துரோகி, ஒருத்தனைக் கொல்ல நீங்கள் துவக்கெடுக்க முதல், இப்பிடியொரு பட்டம் வைச்சே கொலை செய்திடுவியள்” என்றான் சந்தனன். சரித்திரன் கொஞ்சம் இறுக்கமாக “அது பட்டமில்லை. தண்டனையோட முதலடி.” என்று சொன்னார். வாகனம் புளியமரத்தடியில் நின்றது. அங்கு நிறைய ஆணிகள் அறையப்பட்டிருந்தன. சரித்திரன் வாகனத்தை விட்டு கீழே இறங்கி, தன்னுடைய பிஸ்டலை அவனிடம் கொடுத்து என்னைச் சுடு என்றார். சந்தனன் வாகனத்தை விட்டு கீழே இறங்கினான். பிஸ்டலை சரித்திரனின் நெற்றி நோக்கி நீட்டினான். மூன்று வெடிகள் முழங்கின. துரோகத்தின் துருவேறிய ஆணிகள் சிதறுண்டு பறந்தன. கிளையில் துளிர்த்திருந்த இலைகள் மெல்லக் காற்றில் அசைந்தன. இராணுவ மிடுக்கோடு, பிஸ்டலை சரித்திரனிடம் கையளிக்க முன்னே நடக்கலானான். துரோகத்தின் ஆணிகள் சிதறிக்கிடந்த நிலத்தில் சந்தனன் அவதானமும் விழிப்பும் கூட்டியிருந்தான். புளியமரத்தின் கீழே இரண்டு பேரும் நின்று கதைக்கத் தொடங்கினார்கள். இத்தனை நாட்களும் ஆறாத தன்னுடைய காயத்தைப் பார்த்தான் சந்தனன். அது கொதியடங்கி ஆறியிருந்தது. https://akaramuthalvan.com/?p=1304
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎂🎊
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
‘வெற்றியை நோக்கி இறுதிவரை நாங்கள் செல்வோம்’ – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக்டோபர் 7-ந்தேதி போர் வெடித்தது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த தற்காலிக போர் நிறுத்தம் கடந்த 1-ந்தேதி முடிவுக்கு வந்தது. இதையடுத்து காசாவை இஸ்ரேல் மீண்டும் முழு வேகத்துடன் தாக்கத் தொடங்கியது. இதனால் இஸ்ரேல்-ஹமாஸ் போர் மீண்டும் உக்கிரமடைந்துள்ளது. இதனால் அங்கு உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் போர் காரணமாக காசாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகவும், சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் குறித்து பேசியபோது, “காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் படையினர் மீதான தாக்குதலில், பாலஸ்தீன மக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இதேநிலை தொடர்ந்து நீடித்தால் இஸ்ரேல் மிக கடினமான நிலையை சந்திக்க நேரிடும். இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருகிறது” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், வெற்றியை நோக்கி இறுதிவரை நாங்கள் செல்வோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “நாங்கள் இறுதி வரை போரை தொடர்வோம். இதற்கு மேல் எந்த கேள்வியும் இல்லை. மிகுந்த வலியுடனும், சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு மத்தியிலும் இதை நான் கூறுகிறேன். எங்களை எதுவும் தடுத்து நிறுத்தாது. வெற்றியை நோக்கி இறுதிவரை நாங்கள் செல்வோம்” என்று தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=263248
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
எங்கள் இலக்கு முடியும் வரை உக்ரைனில் அமைதி திரும்பாது: அதிபர் புதின் பேட்டி உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்தது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவி, பொருளாதார ரீதியாக உதவி வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்கா இதுவரை 111 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.9 லட்சத்து 25 ஆயிரத்து 617 கோடி) வரை நிதி உதவி செய்திருக்கிறது. எனினும், ரஷியா தொடர்ந்து உக்ரைன்மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தனது கட்டுப்பாட்டுக்குள் உக்ரைனைக் கொண்டுவர ரஷியா தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், உக்ரைனில் மொத்தம் 6 லட்சத்து 17 ஆயிரம் படைவீரர்கள் முகாமிட்டுள்ளனர். எனவே மேலும் படைகளை அணிதிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. எங்களின் இலக்கு நிறைவடையும் வரை உக்ரைன் நாட்டில் அமைதி திரும்பாது என தெரிவித்தார். அதிபராக கடந்த 24 ஆண்டுக்கு மேல் பதவி வகித்துவரும் புதின், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ரஷிய அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவுசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=263285
-
செயற்கை நுண்ணறிவு உருவாக்கி படங்கள்
Prompt தமிழில் - உருவியது எங்கே என்று ஞாபகமில்லை! செம்பருத்தி இதழ்போல சிவந்த சுருக்கங்கள்கொண்ட உதடுகளும், காதோரம் ஆடும் குறுமயிர்களுமாக. அவளுடைய உடலின் மணம், ஆடையின் தொடுகை, மூச்சின் அலைவு என்னை அடைந்தது. அவள் கைகளின் மென்மயிர். கண்விழித்து அவை கனவென உணர்ந்தபின்னரும் அந்த உணர்வு நீடித்தது. சிலசமயங்களில் மெய்யாகவே அவள் வந்தாள் என்றே என் நினைவு பதியவைத்துக்கொண்டது.
- IMG_6681.jpeg
-
செயற்கை நுண்ணறிவு உருவாக்கி படங்கள்
Prompt ஆங்கிலத்தில் App: Bing Image Creator a tamil girl around 18 years old in blue saree looking confident and sporting a big smile at a sandy beach. waves are seen in the background. also a sivan temple is in on the landscape
- IMG_6672.jpeg
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
விமான நிலையம் அளவு நிலத்தில் 1.8 மில். மக்களை அனுப்ப திட்டம் sachinthaDecember 8, 2023 தெற்கு காசாவில் உள்ள சிறு நகரான அல் மவாசியின் ஒரு பகுதியை பாதுகாப்பான இடம் என்று அறிவித்திருக்கும் இஸ்ரேல் பலஸ்தீனர்களை அங்கு செல்லும்படி கூறியுள்ளது. வடக்கு காசாவை அடுத்து தெற்கு மீது இஸ்ரேல் சராமாரி குண்டு வீசிவரும் நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த பாதுகாப்பு பகுதி போரினால் வெளியேற்றப்பட்டுள்ள 1.8 மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனர்களுக்கு இடவசதி அளிக்கப் போதுமானதா? என்று கேள்வி எழுந்துள்ளது. பழங்குடி மக்களின் கரையோர நகரான அல் மவாசி சுமார் 1 கி.மீ. அகலம் மற்றும் 14 கி.மீ. நீளமான குறுகலான மற்றும் சிறிய நிலப்பகுதியாகும். இதில் வெளியேற்றப்பட்டவர்கள் அடைக்கலம் பெற வேண்டிய பகுதியாக இஸ்ரேல் அறிவித்திருப்பது அந்த நகரில் வெறிச்சோடிய, மணல் திட்டான வெறுமனே 6.5 சதுர கிலோமீற்றர் இடமாகும். இது லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்தின் அளவானதாகும். இந்த விமானநிலையத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 167,000 பேர் வருகை தருகின்றனர். அதன்படி ஹீத்ரூ விமானநியைத்தை விட 20 மடங்குக்கு மேற்பட்ட மக்களுக்கு இந்தப் பகுதியில் அடைக்கலம் வழங்க வேண்டி உள்ளது. எனவே இந்தப் பகுதி பெரும் எண்ணிக்கையான இடம்பெயர்ந்த மக்களுக்கு இட வசதி அளிக்க போதுமானது அல்ல என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். “காசா ஏற்கனவே சனநெரிசல் மிக்க பகுதியாக இருக்கும் நிலையில் விமான நிலையம் ஒன்றுக்குள் சுமார் 1.8 மில்லியன் மக்களை உள்ளடக்குவது பற்றி நாம் பேசுகிறோம்” என்று ரமல்லாவை தளமாகக் கொண்ட சட்ட நிபுணர் புஷ்ரா காலிதி தெரிவித்துள்ளார். சன நெரிசல் மிக்க இடத்தில் வாந்திபேதி, இரைப்பைக் குடலழற்சி போன்ற நோய்கள் வேகமாகப் பரவக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இஸ்ரேலின் இந்த அறிவிப்பு பேரழிவை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைச்சின் தலைவர் டெட்ரொஸ் அதனொம் கெப்ரியேசுஸ் ஏற்கனவே எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.thinakaran.lk/2023/12/08/world/28565/விமான-நிலையம்-அளவு-நிலத்/
-
துவாரகா உரையாற்றியதாக...
போரில் மாண்ட தலைவனுக்கு அஞ்சலி செலுத்த திராணியற்ற கோழைகள்!! ஆண்டவர் என்றாலும் மாண்டபின் வந்தவருண்டோ.? December 4, 2023 (மௌன உடைவுகள் -58) ” MANKIND MUST PUT AN END TO WAR BEFORE WAR PUTS AN END TO MANKIND “. -JOHN F. KENNEDY – ” மனித குலத்திற்கு யுத்தம் முடிவு கட்டுவதற்கு முன் , யுத்தத்திற்கு மனிதகுலம் முடிவுகட்ட வேண்டும்.” இன்றைய உலகிற்கு பொருத்தமான இந்த ஜதார்த்தமான வார்த்தைகள் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன்.எப்.கென்னடிக்கு சொந்தமானவை. கென்னடியின் கருத்தை அமெரிக்கா காற்றில் பறக்கவிட்டு எதிர்மறையாக மனித குலத்தை அழித்து தசாப்தங்களாக யுத்தத்தை காப்பாற்றிவருகிறது. உக்ரைன்…… பாலஸ்தீனம்……… பட்டியலில் இலங்கை…… முன்னால் உள்ளது. 30 ஆண்டுகால யுத்த வலிகளை சுமந்த இலங்கை மக்களை – மனித குலத்தை தொடர்ந்தும் அழிக்க “துவாரகா” என்ற பெயரில் ஒரு பூதம் புறப்பட்டு இருக்கிறது. மனித குலத்தை யுத்தம் அழிக்கும் முன், யுத்தத்தை அழிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் இருதரப்பு யுத்தப்பிரியர்களால் தோற்கடிக்கப்பட்டன. அழிந்தது மனிதகுலம். அழிவுக்கு பின்னர் ஈழத்தமிழர்கள் மத்தியில் கொஞ்சமாவது எஞ்சிக்கிடக்கின்ற மானிடநேயத்தை, மத நம்பிக்கை பண்பாட்டு பாரம்பரியங்களை மட்டும் அல்ல கொல்லப்பட்டவர்களை மீண்டும் ஒருமுறை சாகடித்தே தீருவோம் என்று ஒரு கூட்டம் கங்கணம் கட்டி நிற்கிறார்கள் . கவிஞர் காசி.ஆனந்தன் வார்த்தைகளில் “தலைமகள் துவாரகா களமாட வருகிறாள்”. “என்.ஜி.ஓ. அமைத்து புலத்தில் நிதிசேகரித்து நிலத்தில் அரசியல் செய்ய சகோதரி வருவார் ” என்று கூறுகிறார் போராளிகள் கட்சி க.இன்பராசா. “துவாரகாவின் உரைக்கு பின்னால் பிரபாகரன் இருக்கிறார்” .இது பழ.நெடுமாறன். இவர்களைப்போன்று இன்னும் சிலர் வாயில் வருவதை உளறித்தள்ளுகிறார்கள். எனினும் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களில் அதிகப்பெரும்பான்மையினரும், விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களும் இந்த பொய்க்கும், புரட்டுக்கும், புனைகதைக்கும் எதிராக குரல்கொடுத்து வருகிறார்கள். இது மாற்று கருத்தாளர்களுக்கு எதிராக புலிகளே வளர்த்து விட்ட “புனை கதை கலாச்சாரம்” இப்போது அவர்களில் ஒருபகுதியினர் அதற்கு எதிராக போராட வேண்டிய நிலை. இந்த விவகாரம் தொடர்பாக பல் பக்க நோக்கு தேவைப்படுகிறது. இது துவாரகா உண்மையா? பொய்யா? அசலா ? நகலா? என்பதற்கு அப்பால் ஈழத்தமிழர்கள் மத்தியில் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை விதைக்க வேண்டிய அவசிய தேவையைக்கொண்டது. ஆயுதப்போராட்ட காலத்தில் புறநானூற்று பெரும் புகழ்பாடி அப்பாவி இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்தவர்கள், கேவலம் களத்தில் வீரச்சாவடைந்த தங்கள் தலைவர் குடும்பத்திற்கு பொதுவெளியில் அஞ்சலி செலுத்தவும், போரில் மாண்டதை ஏற்கவும் திராணியற்ற கோழைகளாக நிற்கிறார்கள். இது தனிநபர் வழிபாடு மீதான பக்தி அரசியல் தர்மசங்கடம். தூவாரகா ஏன் சுவிஸில் உயிர்த்தெழுந்தாள்….? உயிர்த்த தின கட்டுக்கதையால் நன்மை அடையப்போகிறவர்கள் யார்….? இதற்கு பின்னணியில் உள்ள பிராந்திய, சர்வதேச அரசியல் சதி என்ன….? இவர்களுக்கு பின்னால் காசி.ஆனந்தன் – பழ.நெடுமாறன் கும்பல் ஏன் ஒத்தோடுகிறது….? யாருடைய இருப்பை தக்க வைக்க துவாரகா தேவைப்படுகிறாள்……? இதற்கு பின்னால் உள்ள பண மோசடி எதுவரை போகும்…..? இப்படி துவாரகா விவகாரத்தில் பதில்களைத் தேடவேண்டிய கேள்விகளே அதிகம்? இது ஒன்றும் புதிதல்ல. இது புலிகளின் அரசியல் பொதுநிலை. பதில்களற்ற கேள்விகளோடு கடந்த முப்பது ஆண்டுகளை கடத்திய அரசியல் சூனியத்தில் இதைத்தவிர போராட்டத்தின் எச்சமாக வேறு எவற்றை எதிர்பார்க்க முடியும்? துவாரகா மேட் இன் சுவிஸ்……! ——————————– பிரபாகரன் குடும்பத்தை மறுபிறப்பு – மீள் உருவாக்கம் செய்வதற்கு சுவிஸைப்போன்று வாய்ப்பான வேறு ஒரு நாடு உலகில் இருக்கமுடியாது. உலகில் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பயங்கரவாத இயக்கமாக தடை செய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்பு சுவிஸில் தடைசெய்யப்படவில்லை. அல்கைதா, ஐ.எஸ்.எஸ். இயக்கங்களே தடைசெய்யப்பட்டுள்ளன. ஹாமாஸ் தடைபற்றி அரசியல் மட்டத்தில் தற்போது பேசப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய சூழலில் பிரபாகரன் குடும்பத்தை உயிர்ப்பித்தல் இதன் சூத்திரதாரிகளுக்கு சட்டச் சிக்கல்களை ஏற்படுத்திவிடும் என்பதால் சுவிஸ் சூழல் மட்டுமே இவர்களுக்கு இப்போதைக்கு சாதகமானது. குறிப்பிட்ட மாறுவேடக்காரி சுவிஸில் அகதி அந்தஸ்து பெற்றவர் என்பதால் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான பயணம் இலகுவானது. புலிகளைத் தடைசெய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எல்லை கடந்த நிதிசேகரிப்பை செய்வதற்கு இது உதவும்.. வெளியாருக்கு அடையாளம் தெரியாத கறுப்புக்கண்ண்ணாடி காரில், முக்காடு போட்டு முகம் மறைத்து முடிந்ததைச் செய்ய முடியும். இதில் இதுவரை பெண் என்றால் பேயும் இரங்கும் வலையில் சிலர் சிக்கியிருக்கிறார்கள். காசி.ஆனந்தனுக்கு எலும்பு முறிவு வைத்தியம் செய்ய மிதுஷியா இந்தியா போனாலும் ஆச்சரியம் இல்லை. இதன் முக்கிய பின்னணி “பணப்பறிப்பு” என்பதால் மாபியாக்களுக்கான காசுமரம் சுவிஸில் காய்க்க காலநிலை பொருத்தமாக உள்ளது. போராட்ட காலத்தில் அதிக நிதிப்பங்களிப்பை வழங்கிய மக்கள் சுவிஸ் தமிழர்கள். தாலிக்கொடி நடராஜா முரளிதரன் புலிகளின் பொறுப்பாளராக இருந்த காலம் முதல் இந்த கட்டாய நிதி திரட்டல் ஆரம்பமானது. துரதிர்ஷ்டவசமாக புலத்திலும், நிலத்திலும் புலிகளால் இருந்த அச்சுறுத்தல் காரணமாக இதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க மக்கள் தயங்கினர். சுவிஸ் புலிப்பொறுப்பாளர் குலத்தின் காலத்திலும் 2009வரை இது தொடர்ந்தது. மக்களை அச்சுறுத்தும் புலிகளின் பாணி, தமிழீழ அடையாள அட்டை அச்சுறுத்தல், விடுமுறைக்கு ஊருக்கு போகும்போது முகமாலையில் சுவிஸில் பணம் வழங்கியதை உறுதிப்படுத்த வேண்டிய நிலை, அதிகபணம், தாலிக்கொடி, நகைகள் போன்றவற்றை முன்கூட்டிய ஏற்பாட்டில் திட்டமிட்டு உண்டியலில் போடவைத்து மற்றையவர்களுக்கு மண்டைச்சலவை செய்த உளவியல் போன்றவற்றிற்கு பின்னால் பிராபாகரன் குடும்பம் இன்னும் உயிரோடு இருக்கிறது என்று கூறுகின்றவர்கள் இருந்தார்கள் /இருக்கிறார்கள். தங்களை படைப்பாளிகள், வெளியீட்டாளர்கள், தொகுப்பாளர்கள், கலைஞர்கள், நாடககாரர்கள் என்றெல்லாம் கூறிக்கொண்டும், ஜெனிவாவுக்கு காவடி எடுத்துக் கொண்டும் இருப்பவர்கள் முரளியின் அட்டூழியங்களுக்கு மௌனம்காத்தது போன்று இன்றும் காக்கிறார்கள். உலகத்தமிழர் ஒருங்கிணைப்பு குழு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம், கல்விக்கழகம், கலைபண்பாட்டுக்கழகம் , இளையோர் அமைப்பு, சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு போன்றவற்றின் மரியாதைக்குரிய மனிதர்களாக இவர்கள் இன்னும் நடமாடுகிறார்கள். சர்வதேச, மற்றும் ஐரோப்பிய டயஸ்போரா அமைப்புக்களும் இது விடயத்தில் ஊமையாகிவிட்டன. சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் 13 புலி சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில் போதுமான சாட்சியங்களை அரசதரப்பால் சமர்ப்பிக்க முடியவில்லை. மக்கள் கட்டாயத்தின் பேரில் நிதி செலுத்தினார்கள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கவில்லை. இதற்கு ஒரு முக்கிய காரணம் கட்டாயப்படுத்தி, போலியான ஆவணங்களை தயாரித்து, கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவனும் வங்கிக்கடன்களை பெற்றுக்கொடுத்து இருந்தார்கள். அதை வட்டியுடன் திருப்பி செலுத்துவதை இயக்கம் பொறுப்பெடுத்து இருந்தது. 2009 க்குப் பின்னர் இதில் ஏற்பட்ட சிக்கல் பல குடும்பங்களை பிரித்தது , குடும்ப வன்முறை அதிகரித்தது, பிள்ளைகள் பராமரிப்பு இல்லங்களில் வளர்ந்தார்கள். நீதி மன்றத்தில் ஆதாரம் இல்லை என்பதற்காக புலிகள் சட்டப்படி குற்றமற்றவர்களாக இருக்கலாம் , சுவிஸ் மக்கள் மன்றத்தில்….? சுவிஸ் அரசு தொடுத்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அழைத்து வரப்பட்ட சுமார் 150 பேர் நீதிமன்றம் முன் சுவிஸ் புலிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தனர். 5,200 பேர் சந்தேகநபர் சுவிஸ் புலிப்பொறுப்பாளர் குலத்திற்கு ஆதரவாக கையொப்பமிட்ட மனுவை புலிகளின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. போலி ஆவணங்களை தயாரித்தது மட்டும் குற்றமாக கொள்ளப்பட்டது. சுமார் 55,000 க்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் வாழ்கின்ற சுவிஸில் இவர்கள் வெறும் 10 வீதம் . இந்த நிலையில்தான் துவாரகா என்று காட்சிப்படுத்தக்கூடிய ஒருவர் சுவிஸில் கிடைத்ததும் நிலத்திலும், புலத்திலும் உள்ள ஈழத்தமிழர்களின் துரதிஷ்டம். மறு பிறப்பின் பின்னணி அரசியல் …..! ———————————————————————– “துவாரகா ” நாடகத்தின் தயாரிப்பாளர்கள் இந்திய மத்திய ஆட்சி அதிகாரத்தின் கைக்கூலிகளாக இருக்கிறார்கள். பாரதீய ஜனதாவின் பச்சை இந்துத்துவ மதவாத அரசியலை முற்று முழுதாக நியாயப்படுத்துபவர்கள். இதில் இரண்டு விடயங்கள் மறைந்துள்ளன ஒன்று: ஈழத்தமிழர்கள் இந்துக்கள் என்ற காட்டப்படுவதன்மூலம் குறுக்கு வழியில் இந்திய மத்திய அரசின் ஆதரவை ஈழப்போராட்டத்திற்கு பெறமுடியும் என்று கூறுபவர்கள். இவர்கள்தான் பழ.நெடுமாறன்- காசி ஆனந்தன் அணி, மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியை சேர்ந்தவர்கள். இவர்களின் டெல்லி சந்திப்புகள் இதற்கு சான்று. இவர்களை இந்திய முன்னாள் புலனாய்வாளர்கள் நெறிப்படுத்துவதாக கூறப்படுகிறது. இவர்கள் பிராபாகரன், பொட்டம்மான் குடும்பம் இறுதி யுத்தத்தில் தப்பிவிட்டார்கள் என்று காசுக்கு கதையளப்பவர்கள். இந்தியாவே அவர்களை காப்பாற்றியது என்று கூறுபவர்கள். இத்தனைக்கும் இவர்கள் புலிகள் மீதான தடை நீக்கத்துக்கு எதிரான வட இந்திய கருத்தியலைக்கொண்டவர்கள். ஆனால் தடை நீக்கம் முக்கியமல்ல புலிகள் இந்தியாவுக்குள் சட்டரீதியாக நுழையவும், ஒன்று கூடவும் தடையில்லை என்றும், இந்தியா உதவிகளை வழங்கவும் தடையில்லை என்றும் கூறுகிறார்கள். இந்த கால்கழுவும் அரசியலே காசி.ஆனந்தனுடையது. இதன் மூலம் இந்தியாவுக்கும் இவர்களுக்கும் இடையிலான தொடர்பை மையப்படுத்தி பிராபாகரன் குடும்பம் உயிரோடு இருக்கிறது என்ற அச்சத்தை இலங்கை அரசுக்கு ஏற்படுத்துவது. இது சிங்கள பௌத்த பேரினவாத அரசியல்வாதிகள் புலிகளின் மீள் உருவாக்கம் பற்றி உரத்து பேச களம் அமைக்கிறது. இதனூடாக வடக்கு கிழக்கில் நெருக்கடியை ஏற்படுத்தி அதிலிருந்து கட்சி அரசியல் இலாபத்தை பெற்றுக்கொள்வது. இரண்டு: சீனாவுக்கு எதிரான இந்திய சார்பு நிலைப்பாடு. உண்மையில் இந்தியா ஈழப்போராட்டத்தில் தலையிட்டு வளர்த்தும், அழித்தும் விட்ட செயற்பாடுகளுக்கு எண்ணற்ற ஆதாரங்கள் உண்டு. இதை விடுதலைப்புலிகளைவிடவும் அதிகம் தெரிந்திருப்பவர்கள் எவரும் இருக்கமுடியாது. இந்த நிலையில் இந்தியாவை திருப்திப்படுத்துவதற்காக தமிழ்த்தேசிய அரசியல் சீன எதிர்ப்பு அரசியல் பேசுகிறது. உண்மையில் இவர்கள் இரு பிராந்திய வல்லரசுகளையும், ஆதிக்க சக்திகளையும் ஒன்றாகப்பார்க்காமல் எடுப்பார் கைப்பிள்ளையாக இந்தியாவின் சீன எதிர்ப்பு கொள்கையேயே தத்தெடுத்துள்ளனர். இதை பிரபாகரனின் வருகையின் மூலம் இப்படி நியாயப்படுத்துகின்றனர்: “புலிகளின் மீள்வருகை இந்தியாவுக்கு பாதுகாப்பு, புலிகள் இருக்கும் வரை சீனா இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் வாலாட்ட முடியாது”. இது இன்றைய சீனாவின் உலகமயமாக்க சர்வதேச சமூக, பொருளாதார, அரசியல் பட்டுவீதி கடற்பரப்பு ஆதிக்கத்தில் குருடனுக்கு யானைகாட்டிய கதை. இலங்கையின் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலுக்கு துவாரகாவின் அசல், நகல் தெரியும். அதை வெளிப்படையாக பேசுவது புனிதமான பாராளுமன்ற கோயில் வழிபாட்டுக்கு தெய்வப்பழியாகிவிடும். ஒரு கட்சி உண்மையை போட்டுடைத்தால் மறுகட்சிக்கு வாக்கு பெட்டி உடைக்கப்படும்போது அதன் விளைவு வெளிப்படும். ஈழப்போராட்டம் எவ்வாறு பொய்மைகாளால் கட்டிவளர்க்கப்பட்டு வியாபார அரசியலானதோ அந்த நிலை தொடர்வதையே இவர்கள் விரும்புவார்கள். அதையே செய்கிறார்கள். சர்வதேச அரசியல் தாக்கம்….! ——————————- யுத்தம் முடிவடைந்த கையோடு காணாமல் ஆக்கப்ப்பட்டவர்கள் என்ற பட்டியலில் இருந்தவர்கள் திரும்பிவந்தார்கள், சிலர் வெளிநாடுகளில் அரசியல்தஞ்சம் கோரினார்கள். இன்னும் சிலர் இலங்கை சிறைகளில் -முகாம்களில் இருப்பது தெரியவந்தது. இந்த சில்லறை நிகழ்வுகளுக்கு அப்பால் போர்க்குற்ற விசாரணை, வெள்ளைக்கொடி விவகாரம், யுத்தமீறல்கள், இனப்படுகொலை என்ற பல குற்றச்சாட்டுக்கள் சர்வதேசத்தின் – நிறுவனங்களின் உதவியுடன் இலங்கை அரசு மீது வைக்கப்பட்டது. ஆனால் வேடதாரி துவாரகாவோ ” அப்பாவும், அம்மாவும்” சுகமாக இருக்கிறார்கள் என்று கூறி ஊர் வாயை அடைக்க முயற்சித்துள்ளார். யுத்தம் மௌனிக்கப்பட்டு 14 ஆண்டுகள் தொடர்ந்தும் மனித உரிமைகள் பேரவையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக பிராபாகரன் – மதிவதனி தம்பதியரின் மகன் பாலச்சந்திரன் கொலை பல கேள்விகளை எழுப்பியது. பல ஆவணங்கள், முறைப்பாடுகள், புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லா விசாரணை பனல்களுக்கும் சேர்க்கப்பட்டது. இப்போது பிரபாகரன், பொட்டம்மான் குடும்பம் இருக்கிறார்கள். இன்னும் எத்தனை குடும்பங்கள் உயிரோடு இருக்கின்றன…..? சர்வதேசம் இந்த விசாரணையை தொடர்வதா ? அல்லது பிரபாகரன் குடும்பம் திரும்பிவிட்டது என்று விசாரணைகளை இரத்துசெய்வதா? இலங்கை அரசு எமது படையினர் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்து முக்கிய புள்ளிகள் உயிரோடு இருக்கிறார்கள் என்று கூறப்போகிறது, பயங்கரவாதத்திற்கும், புலிகள் மீதான தடை க்கும் சாதகமான சூழலை துவாரகா இலங்கைக்கு வழங்கியுள்ளார். போராளிகள் கட்சியின் கதிரை அரசியலுக்கு இவை மூலதனம். அதன் மூலமான பக்க விளைவுகளுக்கு நிவாரணம் வழங்க புலம்பெயர்ந்த மக்களின் நிதியியல் என்.ஜி.ஓ. தோல்வி அடைந்த ஆயுதப்போராட்டம் ஒன்றின் அடையாளங்களை போராடியவர்களை கொண்டே எப்படி வேரோடு அழிப்பது என்பதற்கு உலகில் மிகப்பிந்திய உதாரணம் இதை விடவும் வேறு என்ன இருக்கமுடியும்.? “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் “. https://arangamnews.com/?p=10203
-
துவாரகா உரையாற்றியதாக...
புலவரின் மீட்பரும் இந்தியர்தான்🤪 நிலாந்தன் சொல்லுவதை சரியாக புரிந்துகொண்டால், தமிழ் மக்களுக்குத் தேவையாக இருப்பது தொண்டுத் தேசியந்தான். முன்னுதாரணம் மிக்க செயற்பாட்டாளர்கள்; முன்னுதாரணம் மிக்க தொண்டர்கள். ஆயுத மோதல்களுக்குப் பின்னரான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பத் தேவையான பொருத்தமான நிறுவனங்களை புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி மற்றும் துறைசார் அறிவுப் பங்களிப்புடன் கட்டியெழுப்ப வேண்டும். அதாவது தேசத்தை கட்டியெழுப்பக் கூடியவர்கள்தான் மீட்பர்கள். வெளியார் அல்ல. முக்கியமாக ஊடக அடியாள் சேரமானின் பொம்மை அல்ல.
-
துவாரகா உரையாற்றியதாக...
- துவாரகா உரையாற்றியதாக...
இன்பராசாவின் சிவமூலிகைப் புகையடிப்பு- துவாரகா உரையாற்றியதாக...
பிரபாகரன் மகள் துவாரகாவா? உண்மை என்ன? -சாவித்திரி கண்ணன் பேசிய பெண் பிரபாகரனின் மகளா? அதை உறுதிபடுத்த பழ.நெடுமாறனும், கவிஞர் காசி ஆனந்தனும் மெனக்கெடுவதின் பின்னணி என்ன? இலங்கை தமிழர்களுக்கு பாஜக அரசின் உதவியை பெற்றுத் தரும் நகர்வுகள் பலனளிக்குமா? இந்திய உளவுத் துறைக்கும் இந்த விவகாரத்திற்கும் என்ன தொடர்பு..? ”விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், அவருடைய மனைவி மதிவதனி, மகள் துவாரகா ஆகியோர் நலமுடன் இருக்கிறார்கள், அவர்கள் உரிய நேரத்தில் வெளிப்படுவார்கள்” என உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமில்லாது, உலக அளவில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது! இந்த நிலையில், இந்த அறிவிப்பு குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறையின் முன்னாள் பொறுப்பாளரும், தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தயாமோகனிடம் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் பேசியதில் அவர், ”இது மக்களை குழப்புவதற்கான அறிவிப்பு. சமீபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது சில நாடுகள் தடைகளை விதித்திருக்கின்றன. தடையை நீட்டிப்பதற்கான முன் முயற்சியாகத்தான் இதை நான் பார்க்கிறேன். 13 ஆண்டுகளுக்கு முன்பாக, பிபிசியின் மூலமாக பிரபாகரன் இறந்ததை நாங்கள் உறுதிசெய்தோம். நாங்கள் போர்க்களத்தில் இருந்தோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் தொடர்பில் இருந்தோம். எங்களுக்குத் தெரியாத செய்தி, இந்தியாவில் இருந்த இவர்களுக்கு எப்படித் தெரியுமெனத் தெரியவில்லை. பிறகு நான் பிபிசி மூலம் அந்தச் செய்தியை அறிவித்தேன். இப்போது அவர்கள் செய்வது மக்களைக் குழப்பும். எதிரியைத் தூண்டிவிடும். இப்போதுதான் கொஞ்சம் மீண்டு, புனர்வாழ்வு பெற்றிருக்கும் அவர்கள் மீது எதிரிப் படையின் கண்காணிப்பை தொடர்ந்து தக்கவைக்கும். அதுதான் இந்த அறிவிப்பின் மூலம் நடந்திருக்கிறது” என்றார். ”பிரபாகரன் உட்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் அழிந்து போனதாக கூறினார்கள். இப்போது அவரது மகள் வந்து உலக மக்கள் முன்பாக பேசி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை அவராக வந்து செய்திருக்க முடியாது. பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார் என்பது தான் உண்மை. இந்த உரையை கேட்ட மக்கள் எல்லோருக்கும் ஓர் எழுச்சியும், நம்பிக்கையும், புத்துணர்வும் ஏற்பட்டுள்ளது. இளவேங்கை உறுமியிருக்கிறது. சினவேங்கை விரைவில் உறுமும்…”என தெரிவித்தார்! பிரபாகரன் உயிரோடு இருக்கும் வரை நவம்பர் 27 ஆம் தேதி மாவீரர் உரை ஆற்றி வந்தார்! 1989 முதல் 2008 வரை சுமார் 20 ஆண்டுகள் அந்த உரையை பலரும் கேட்டிருப்பார்கள்! அந்த உரையில் ‘சமகால உலக அரசியல் சூழலில் தமிழ் ஈழப் போராட்டத்தின் திசை வழியும், அணுகுமுறையும் என்ன’ என்பது வெளிப்படும். தற்போது பிரபாகரன் மகளாக தன்னைச் சொல்லிக் கொள்பவரால் குறைந்தபட்சம் ”விடுதலைப் புலிகள் மீதான தடை இந்திய அரசு விலக்கிக் கொள்ள வேண்டும்” என வேண்டுகோள் வைக்கக் கூட துணிவில்லை! எங்களுடன் தனித்து நின்று போர் புரிய திராணியற்ற சிங்கள அரசு, சக்தி வாய்ந்த நாடுகளை வளைத்து தங்கள் பக்கம் ஈர்த்துக் கொண்டது. போர் நிகழ்ந்த பகுதிகளில் ஆசை வார்த்தை கூறி நம்பிக்கையை ஊட்டிய உலகின் சக்தி வாய்ந்த நாடுகள், ஐ.நா மன்றம் இன்று வரை எங்களுக்கு தீர்வை வழங்கவில்லை. எனச் சொல்லும் அவரால், ‘இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கை அரசுக்கு உதவியது’ என சொல்ல முடியவில்லை என்பது கவனத்திற்கு உரியது! ‘’எங்களது மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தாலும், எமது சுதந்திரத்துக்கான அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் உயிர்ப்போடு தான் உள்ளது “ என அவர் சொல்லும் போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்வதற்கு இந்திய அரசுக்கு தேவைப்படும் காரணத்தை அவர் ஏற்படுத்திக் கொடுக்கிறார் என்பது தான் முக்கிய செய்தியாகும். மேலும் பழ. நெடுமாறனின் சகாவான ஈழக் கவிஞர் காசி ஆனந்தன், ”இந்திய அரசின் உதவி மற்றும் அனுசரணையுடன் தமிழ் ஈழ பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்” என்ற நம்பிக்கையை விதைக்கிறார். இவர் தான் கடந்த பிப்ரவரி மாதம், ”விடுதலைப் புலிகளின் தலைவரின் மனைவி மதிவதனி மற்றும் துவாரகா தங்கள் குடும்பத்தை கவனிக்க சுவிட்சர்லாந்தில் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு நிதி சேர்த்ததாக கூறிய தகவல் எனக்கு வருத்தமாக இருந்தது” எனப் பேசினார். இதைவிட பிரபாகரனையும் அவர் குடும்பத்தையும் இழிவுபடுத்த முடியாது என்பது ஒருபுறம் இருக்க, இதன் மூலம் நமக்கு எழுகின்ற முக்கிய கேள்விகள் சில; அப்படியானால், விடுதலை புலிகளின் பினாமியாக இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, நார்வே போன்ற நாடுகளில் பெரும் வியாபார நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள், ஷாப்பிங் மால்கள் போன்றவை வைத்து செயல்பட்டவர்கள் இன்று அவர் குடும்பத்தை கூட கவனிக்காமல் பிச்சை எடுக்க விட்டுவிட்டனர் எனச் சொல்வதாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. உலகின் போராளி இயக்கங்களில் மிகப் பெரிய பணபலம், ஆயுத பலம் கொண்டு இயங்கிய இரண்டாவது பெரிய இயக்கமாக சர்வதேச அளவில் அறியப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பல லட்சம் கோடி சொத்துக்களை பராமரித்தவர்கள் இன்று இலங்கையில் சிங்கள அரசின் ஒடுக்குமுறை மற்றும் பாரபட்சத்தால் வறுமையில் உழலும் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கூட உதவத் தயாரற்றவர்களாக உள்ளனரே ஏன்? இந்தியாவிலேயே கூட, சீனாவால் பாதிக்கப்பட்ட திபெத் அகதிகளுக்கு குடியுரிமை கொடுத்த இந்திய அரசு இங்குள்ள இலங்கை அகதிகள் சுமார் 80,000 பேரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடியுரிமை தராமல், அகதி முகாம்களில் திறந்த வெளிச் சிறையில் வைத்துள்ளதைப் போல நடத்தி வருகிறது! அவர்களுக்கு மனிதாபிமானம் காட்ட வக்கில்லாத – அதற்கு முயற்சி செய்யாத – தமிழர் தலைவர்களாக வலம் வருபவர்கள் இன்னும் விடுதலைப் புலிகள் பெயரால் ஆதாய அரசியலை – அவர்களின் மொழியிலேயே சொல்ல வேண்டும் என்றால், துரோக அரசியலை முன்னெடுப்பது வேதனை தரக் கூடியதாக உள்ளது. தமிழ் நாட்டில் பாஜகவின் செல்வாக்கை அதிகரிக்க இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் கரிசனம் கொண்டவர்கள் போல பாவனை செய்யும் ஒரு அரசியலை முன்னெடுத்து அதற்கான ஆட்களை இயங்க வைத்துக் கொண்டுள்ளது பாஜக என்ற பின்னணியை உணர்பவர்களுக்கு இந்த துவாரகா விவகாரம் எந்த குழப்பத்தையும் உருவாக்க வாய்ப்பில்லை! மேலும், பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் அவர்களே, ”பேசிய பெண் என் தங்கை துவாரகா இல்லை! என் சித்தப்பாவும், சித்தியும் உயிரோடு இல்லை” என உறுதிபடக் கூறியுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது! பிரபாகரன் உயிரோடு இருக்கும்பட்சத்தில் அவர் சர்வதேச ஊடகங்களின் பார்வையில் இருந்து 14 ஆண்டுகள் தப்பி இருக்க முடியாது என்பது மாத்திரமல்ல, அமெரிக்கா, சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் உளவுத் துறைகளின் கண்களில் இருந்து அவர் தப்பி இருக்கவே வாய்ப்பில்லை! இலங்கையிலும் இங்குமுள்ள ஈழத் தமிழ் ஆதரவாளர்கள், ‘நாம் இந்து, பாஜக இந்துக்களை ஆதரிக்கும் கட்சி. ஆகவே பெளத்த மத பின்னணி கொண்ட சிங்கள அரசை எதிர்க்க பாஜகவின் உதவியை பயன்படுத்துவது தான் ராஜ தந்திரம்’ என காய் நகர்த்தி, ஆர்.எஸ்.எஸ் சூழ்ச்சிக்கு பலியாகிக் கொண்டுள்ளார்கள்! ஆனால், இவர்கள் ஒரு உண்மையை உணரத் தவறுகின்றனர். இந்த விவகாரத்தில் இலங்கை தமிழர்களுக்கு உதவுவது என்பதில், தமிழர் என்ற இன உணர்வை அங்கீகரிக்கும் ஒரு மனப் பக்குவம் தேவை! அது பாஜகவிடம் சுத்தமாக இல்லை என்பது மட்டுமல்ல, அது இன உணர்வையே பகையாக பாவிக்கும் கொள்கையுள்ள இந்திய தேசிய மேலாதிக்கச் சிந்தனை கொண்ட கட்சி என்ற யதார்தத்தை மறந்து விடுகிறார்கள் அல்லது மறைத்துப் பேசுகிறார்கள்! அது ‘இலங்கையைத் தமிழர்களுக்காக துண்டாடினால், அது தமிழகத்திலும் பெரிய எதிர்விளைவை ஏற்படுத்தி, இந்திய தேசியத்திற்கு நெருக்கடி தரும்’ என சிந்திக்கும் தேசியக் கட்சி என்பதை கூட உணர முடியாதவர்கள் அரசியலுக்கே தகுதியற்றவர்கள்! இது பாஜக அரசின் உளவுத் துறை இயக்கத்தில் நடத்தப்படும் நாடகம். இந்த நாடகத்திற்கு துணை போகுமளவுக்கு அவல நிலை சிலருக்கு ஏற்பட்டுள்ளது! ‘ஐயோ, பரிதாபம்’! தமிழ் இன உணர்வை ஒரு காலத்தில் அரசியல் வெற்றிக்கான சூத்திரமாகப் பயன்படுத்தி, சில கட்சிகள் தமிழர்களை காயடித்தது போல, தற்போது பாஜகவும் செய்யப் பார்க்கிறது! அவர்களுக்கும், அதற்கு துணை போகிறவர்களுக்கும் ”ஐயோ பாவம்” என்பதை சொல்லி வைப்போம்! சாவித்திரி கண்ணன் அறம் இணைய இதழ் https://aramonline.in/15824/prabakaran-thuvaraka-tamils/- துவாரகா உரையாற்றியதாக...
மாவீரர் நாளில் துவாரகா எனக் கூறும் பெண்ணின் உரை..இந்திய ஊடகங்களே முக்கியத்துவம். மாவீரர் நாளான நேற்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா எனக் குறிப்பிடும் பெண் ஒருவர் ஆற்றியுள்ள கொள்கைப் பிரகடன உரை சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. மாவீரர் நாளில் பிரபாகரனின் மகள் துவாரகா, யூடியூப் காணொலி ஊடாக கொள்கைப் பிரகடன உரையாற்றுவார் என சமூக ஊடகங்களின் வழி தகவல்கள் வெளியாகியிருந்தன. அந்த அறிவிப்பின்படி, குறிப்பிட்ட நேரத்தில் யூடியூப் காணொலி வாடாக பிரபாகரன் மகள் துவாரகா எனக் குறிப்பிடப்பட்ட பெண்மணி உரையாற்றியுள்ளார். சுமார் பத்து நிமிடங்கள் வரை இந்தக் காணொலி நீடித்துள்ளது. இந்த காணொலி குறித்த செய்திகளுக்கு இந்திய ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (எ) https://newuthayan.com/article/மாவீரர்_நாளில்_துவாரகா_எனக்_கூறும்_பெண்ணின்_உரை..இந்திய_ஊடகங்களே_முக்கியத்துவம்.- துவாரகா உரையாற்றியதாக...
எதற்கும் ஊடக அடியாள் சேரமானின் துணையுடன் வந்த கொள்ளை பரப்புரையை யாழை வாசிப்பவர்கள் பாருங்கள். இதில் உள்ளவை எந்த எந்த ஆண்டு மாவீரர் உரைகளில் இருந்து உருவியதென்று கண்டுபிடித்துப் போட்டாலும் நல்லது.. ::::::::::::::::::: எனது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். தமிழீழம் என்ற அதியுன்னத இலட்சியத்திற்காகத் தமதுஇன்னுயிரை ஈகம் செய்த எமது காவல் தெய்வங்களை எமதுஇதயக் கோவில்களில் நாம் பூசிக்கும் இத் திருநாளில்உங்கள் முன் வெளிப்படுவதற்குக் காலம் எனக்கு வாய்ப்புஅளித்திருப்பதை மிகப்பெரும் பேறாகவே கருதுகின்றேன். இப்படி ஒரு சந்தர்ப்பம் எனது வாழ்நாளில் ஏற்படும் என்று நான் நினைத்திருக்கவில்லை. எத்தனையே ஆபத்துகள், நெருக்கடிகள், சவால்கள், துரோகங்களைக் கடந்தே இன்று உங்கள் முன் நான் வெளிப்படுகின்றேன். அதே போல்என்றோ ஒரு நாள் தமிழீழத் தாயகம் திரும்பி, அங்கு எமதுமக்களோடு கூட இருந்து அவர்களுக்காகப் பணிசெய்வதற்குக் காலம் வாய்ப்பளிக்கும் என்ற அசையாதநம்பிக்கை எனக்கு உண்டு. எனது அன்பார்ந்த மக்களே, முழு உலகமுமே வியப்படையும் வகையில் களமுனைகளில்சாதனை படைத்தவர்கள் எமது மாவீரர்கள். தனித்து நின்றுஎம்மோடு போர்புரியத் திராணியற்ற சிங்கள அரசு, சக்திவாய்ந்த நாடுகளைத் தன் பக்கம் வளைத்தது. தோல்வியின்விளிம்பில் நின்ற தருணங்களில் எல்லாம் அந்நியசக்திகளிடமும், சக்திவாய்ந்த நாடுகளிடமும் மண்டியிட்டுயாசகம் புரிந்தது. எமது தேச சுதந்திர இயக்கத்தின் மீதுஉலகின் பல நாடுகளில் தடைகள் விதிக்கப்பட்டு எமதுவளங்கள் முடக்கப்பட்டன. தமிழீழ தாயகத்திற்கானவிநியோகப் பாதைகள் மூடப்பட்டன. சிங்களப் படைஇயந்திரத்தை எமது தேச சுதந்திர இயக்கம்பலவீனப்படுத்திய ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும்சக்திவாய்ந்த நாடுகள் தலையிட்டு சிங்களப் படைஇயந்திரத்திற்கு உயிர்ப்பூட்டின. உலகின் ஒரு மூலையில்தனித்து நின்று, எமது மக்களின் ஆதரவில் மட்டும் தங்கிநின்று போராடிய எமது தேச விடுதலை இயக்கத்தின் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனித்துப் போனதற்குஇதுவே காரணமாகும். ஆனாலும் அரசியல் சுதந்திரத்திற்கான எமது போராட்டம்முற்றுப் பெறவில்லை. தமிழீழம் என்ற அரசியல் வேணவாகருக் கொள்வதற்குக் காரணமாக இருந்த புறநிலைசூழல்கள் இன்றும் கூட அப்படியே தான் இருக்கின்றன. தமது தாயக பூமியில் தமது கலாச்சார பண்பாட்டுவிழுமியங்களையோ, தத்தமது சமய வாழ்வையோ, மொழிப் பாதுகாப்பையோ பேணிப் பாதுகாக்க முடியாத அளவிற்குப்பண்பாட்டுச் சீர்கேடுகளை ஊக்குவித்து, கல்வி, வேலை வாய்ப்புகளில் பாகுபாடுகளை மேற்கொள்வதோடு, சிங்கள-பௌத்த மயப்படுத்தல் நடவடிக்கைகளை சிங்களஅரசு முழு மூச்சுடன் முன்னெடுத்து வருகிறது. இவை போதாதென்று ஈழத்தீவில் முற்று முழுதாகச் சிங்களப்படையாட்சிக்கு உட்பட்ட ஒரேயொரு மாநிலமாகத் தமிழீழதாயகத்தைச் சிங்களம் மாற்றியமைத்துள்ளது. அனைத்துசுதந்திரங்களும், மனித உரிமைகளும் மறுக்கப்பட்டதேசமாகத் தமிழீழத் தேசம் திகழ்கின்றது. சட்ட ஆட்சிமறுக்கப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகாலச்சட்டம் என எந்நேரமும் இராணுவப் பேயாட்சியைச் சிங்களம் திணித்துள்ளது. குரல்வளை நசுக்கப்பட்ட ஒரு மக்களாகவேஈழத்தீவில் எமது மக்கள் வாழ்கிறார்கள். மறுபுறத்தில் எமது ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தால், அரசியல் வழிகளில் எமது மக்களின் அபிலாசைகளைநிறைவேற்றலாம் எனப் போர் நிகழ்ந்த காலப்பகுதியில்ஆசைவார்த்தை கூறி, நம்பிக்கையூட்டிய உலகின் சக்திவாய்ந்த நாடுகள் இற்றை வரைக்கும் எமதுமக்களுக்கு ஒரு காத்திரமான அரசியல் தீர்வைத் தானும்வழங்கவில்லை. ஈழத்தீவில் தமிழ் மக்களுக்குஇழைக்கப்பட்டது போர்க் குற்றம் என்றும், மானிடத்திற்குஎதிரான குற்றச்செயல் என்றும் கடந்த பதினான்குஆண்டுகளில் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்ட ஐ.நா. மன்றமும், இவை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள்பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றிய சக்தி வாய்ந்தநாடுகளும், இனவழிப்பிற்கு ஆளாக்கப்பட்ட தமிழீழத்தேசத்திற்கு இற்றை வரைக்கும் ஒரு பரிகார நீதியைத்தானும் பெற்றுத் தரவில்லை. இவை தான் அரசியல் சுதந்திரத்திற்கான எமது போராட்டம்தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருப்பதற்கான காரணிகளாகும். சமஸ்டி அரசு கோரி 1950களில் எழுச்சி கொண்ட எமதுதேசத்தின் அகிம்சைப் போராட்டம், 1960களில் ஆயுத வலுக்கொண்டு சிங்கள அரசால் நசுக்கப்பட்டது. இதன் விளைவாகவே 1970களில் போர்க்குணம் கொண்ட இளையதலைமுறை தோற்றம் பெற்றது. சிங்கள ஆயுதப்படைகளையும், அதன் ஒடுக்குமுறை அரச இயந்திரத்தையும்எதிர்த்து வீரம்செறிந்த ஆயுதப் போராட்டத்தை எமதுஇளைஞர்கள் நிகழ்த்தினார்கள். எமது தேசியத் தலைவரும்எனது தந்தையுமாகிய மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்அவர்களின் வழிநடத்தலில் ஆயிரமாயிரமாய் அணிதிரண்டஎமது இளைஞர்களும், யுவதிகளும் ஈழத்தமிழினம் ஓர்வீறுகொண்ட, மண்டியிடாத வேங்கையினம் என்பதைநிறுவினார்கள். இந்த நிலையை உருவாக்கித் தந்தவர்கள்தமிழீழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிரை ஈகம்செய்தமாவீரர்களே. மாவீரர்கள் என்றும் காலத்தால் அழியாதவர்கள்.அந்த மகத்தான, உன்னதமானவர்களை என்றும் எம்மனக்கோவிலில் வைத்துப் பூசிப்போம். எமது ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், எமதுசுதந்திரத்திற்கான, எமது அரசியல் அபிலாசைகளைவென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் உயிர்ப்போடுஇருப்பதற்கு, எமது தாயகத்திலும், புலம்பெயர்தேசங்களிலும் எமது மக்களும், அரசியல் தலைவர்களும், எமது தேச விடுதலை இயக்கத்தில் பணிபுரிந்தபோராளிகளும், செயற்பாட்டாளர்களுமே காரணம் என்பேன். சுதந்திரத்திற்கான போராட்டம் முனைப்புடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறான யதார்த்தசூழமைவில் மக்கள் என்றும், புலிகள் என்றும்ஈழத்தமிழர்களை வேறுபடுத்திப் பார்ப்பது அர்த்தமற்றது. மக்களே புலிகளாகவும், புலிகளே மக்களாகவும் விளங்கும்யதார்த்தம் எமது போராட்டத்தின் பரிமாணமாகும். ஆனாலும் எமது அரசியல் போராட்டத்தை மேலும்வினைத்திறனுடன் முன்னெடுத்து, எமது அரசியல்உரிமைகளை வென்றெடுக்க வேண்டியவர்களாக நாங்கள்இருக்கின்றோம். கட்சி பேதங்கள், அமைப்புகளுக்கிடையேநிலவும் வேறுபாடுகளைக் கடந்து தமிழீழ தேசத்தின்அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காகவும், இனவழிப்பிற்கு ஆளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதிகிட்டுவதற்காகவும் ஒற்றுமையோடும், வினைத்திறனோடும்பயணிக்க வேண்டிய கடப்பாடு தாயகத்திலும், புலம்பெயர்தேசங்களிலும் வாழும் ஒவ்வொரு ஈழத்தமிழர்களுக்கும்உண்டு. கருத்து வேறுபாடுகள் எமக்கிடையே நிலவலாம். ஆனாலும் வேற்றுமையிலும் ஒற்றுமை என்பதே தேசத்தின் அரசியல் உரிமைகள் என்று வரும் போது ஒரே கோட்டின் கீழ்பயணிக்க வேண்டியவர்களாக நாம் எல்லோரும்இருக்கின்றோம். அதே நேரத்தில் தாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும்எமது மக்களினதும், கடந்த காலங்களில் தம்மையேஅர்ப்பணித்துப் போராடிய முன்னாள் போராளிகளினதும்வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பி, அவர்களின் பொருண்மியவாழ்வை மேம்படுத்த வேண்டிய கடப்பாட்டைக்கொண்டவர்களாக எமது தேசத்தின் வளம்கொண்டதரப்பினர் இருக்கின்றார்கள். குறிப்பாக இதற்கானபொறுப்பு புலம்பெயர் தேசங்களில் வாழும்ஈழத்தமிழர்களுக்கு உண்டு. வறுமைக் கோட்டின் கீழ் வாழும்எம் இன உறவுகள் அனைவரையும் பொறுப்பேற்று உதவி புரிந்தால் அந்நியர்களிடம் எமது தேசம் கையேந்தி நிற்கும்நிலை ஏற்படாது. இத்தனை ஆண்டுகளாக எமக்காகத் தொடர்ச்சியாகக்குரலெழுப்பி, பக்கபலமாகத் திகழும் தாய்த் தமிழகஉறவுகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், உலகத் தமிழ்மக்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். எமது இனம் கடந்து இந்தியாவிலும் மற்றும்உலகநாடுகள் எங்கும் எமக்காகக் குரல் கொடுத்துதுணைநிற்கும் உறவுகளின் கரங்களையும் வாஞ்சையோடுபற்றிக்கொள்கிறேன். தமிழீழ தேசத்திற்குப் பக்கபலமாகத்திகழும் தாய்த் தமிழக உறவுகளும், உலகத் தமிழர்களும்எமது மக்களுக்கு உறுதுணையாக நின்று, எமது மக்கள்தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காகத் தொடர்ந்தும்நீங்கள் குரல் கொடுப்பீர்கள் என்று எனக்கு அசையாதநம்பிக்கை உண்டு. எனது அன்பார்ந்த மக்களே, நாம் வரித்துக் கொண்ட இலட்சியமும், இதற்காக எமதுமாவீரர்கள் கொடுத்த விலையும், எமது தேசம் புரிந்தஈகங்களும், சந்தித்த இழப்புகளும் அளப்பரியவை. இவைஒரு நாளும் வீண்போகாது. நெருக்கடி மிகுந்த காலங்களில்எல்லாம் எமக்குத் தூண்களாக நின்றவர்கள் எமதுமக்களாகிய நீங்களே. இலட்சியத்தால் ஒன்றுபட்டமக்களாக எமது விடுதலையை வென்றெடுக்க ஒன்றுசேரவேண்டுமென்று அன்புரிமையோடு வேண்டி நிற்கின்றேன். மாற்றம் கண்டுள்ள உலக ஒழுங்கிற்கு ஏற்ப, அரசியல்வழியில், அறநெறி நின்று நாம் தொடர்ந்தும் போராடுவோம். எல்லா வகையான போராட்டங்களிலும் அரசியல்போராட்டம் மிகவும் கடினமானது. இவ் வகையானபோராட்டத்திற்குப் பொறுமையும், நம்பிக்கையும், இலட்சியஉறுதியும் அடிப்படையானது. இதனை நான் புரிந்துகொள்ளாமல் இல்லை. தமிழீழத் தனியரசே எமது தேசத்தின் இறைமையையும், தன்னாட்சி உரிமையையும் உறுதி செய்யும் என்பது எனதுஅசையாத நம்பிக்கை. இதுவே எமது தேசியத் தலைவரின்நிலைப்பாடும் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். எமதுமக்கள் தமது தாயக பூமியில் அவர்களது மொழியையும், பண்பாட்டையும், தத்தமது சமய வாழ்வையும், பொருண்மியவளங்களையும் பேணிப் பாதுகாத்து, மேம்படுத்தக் கூடியவகையிலும், சனநாயக விழுமியங்களுக்கு இசைவாகவும், தனிமனித சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும்பேணக் கூடிய விதத்திலும், சட்ட ஆட்சி கொண்டமக்களாட்சியாகத் "தமிழீழம்" என்ற தனியரசுஅமைவதற்கான புறச்சூழலை காலம் ஒரு நாள்கட்டவிழ்க்கும் என்ற திடமான நம்பிக்கை எனக்கு உண்டு. அதேநேரத்தில் தமிழீழ தாயகத்தில், தன்னாட்சி உரிமையின்அடிப்படையில் ஒரு தேசமாகத் தமிழீழ மக்கள் வாழ்வதற்குவழிசமைக்கக் கூடிய வகையில் உலகம் முன்வைக்கக்கூடியஅரசியல் தீர்வுகளைப் பரிசீலித்துப் பார்ப்பதற்கு எமது தேசம்தயாராக இருக்க வேண்டும் என்பதை நான் உணராமல்இல்லை. சிங்கள மக்களுக்கும் இந்நேரத்தில் ஒரு விடயத்தைக்கூறிக்கொள்ள விரும்புகிறேன். நாம் சிங்கள மக்களுக்குஎன்றுமே எதிரானவர்கள் அல்ல. நீங்கள் எங்களுக்குஎதிரிகளும் அல்ல. சிங்கள மக்களுக்கு எதிராக நாம்செயற்பட்டதுமில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். சிங்களஇனவெறிகொண்ட அரசு இயந்திரத்தாலும் சுயநலம்கொண்ட சிங்கள அரசியல்வாதிகளினாலும் திட்டமிட்டவகையில் பொய்யான கருத்துக்கள் விதைக்கப்பட்டுஅப்பாவிச் சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்குஎதிரானவர்களாகத் தூண்டிவிடப்பட்டார்கள் என்பதையும்நான் அறிவேன். எனவே எம்மினத்தின் தார்மீகஉரிமைகளையும் எமது மக்களின் உணர்வுகளையும், எமதுஅறத்தின்பாற்பட்ட போராட்டத்தையும் ஏற்றுக்கொள்வீர்கள்என்று நம்புகிறேன். எனது அன்பார்ந்த மக்களே, எமது தேசியத் தலைவர் குறிப்பிட்டது போன்று “எமதுபாதைகள் மாறலாம், ஆனால் ஒரு போதும் எமது இலட்சியம்மாறப் போவதில்லை.” சத்தியத்தின் சாட்சியாக நின்று எமதுமாவீரர்களின் தியாகமும், மாண்டு போன மக்களின்ஈகங்களும் எமது தேசத்திற்கு வழிகாட்டும். அந்தச்சத்தியத்தின் வழியில் சென்று, என்றோ ஒரு நாள் நாம் எமதுஇலட்சியத்தை அடைந்தே தீருவோம். "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"- துவாரகா உரையாற்றியதாக...
நான் உரையை கேட்டேன். முன்னைய மாவீரர் தின உரைகளில் இருந்து பலவற்றை உருவித் தொகுக்கப்பட்டுள்ளது. புதிய செய்தி என்னவென்றால் புலம்பெயர் தமிழர்கள் வறுமையில் வாடும் மக்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் உதவவேண்டும் என்பதுதான். தேசியத்தலைவரின் மகள் என்று சொல்லும் ஒருவர் போராளிகளாக தமது உயிரையும் கொடுக்க துணிந்தவர்களை முன்னாள் போராளிகள் என்று ஏன் விளிக்கின்றார்? ஒரு அமைப்பை தலைமைதாங்க வருபவர் உறுப்பினர்களை முன்னாள் போராளிகள் என்றால் இந்த அமைப்பின் தற்போதைய உறுப்பினர்கள் யார்? மேலும், துவாரகாவாகத் தோன்றியவருக்கு தமிழ் உச்சரிப்பை சரியாகச் சொல்லிக்கொடுக்கவில்லை. லகரம் மோசமாக இருக்கின்றது. இறுதியாக அவர் சொன்னது சரிதான்! ”புளிகளின் தாகம் தமிளீளத் தாயகம்”- இன்று மாவீரர் தினம்!
- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 06 இருபத்தைந்து வருடங்கள் வன்கவர் படை ஆக்கிரமித்திருந்த கேணியடி கிராமத்திற்குள் சனங்கள் அனுமதிக்கப்பட்டனர். ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த படைமுகாம் மட்டும் நாலுசுற்று முட்கம்பி வேலிகளால் அரணாகியிருந்தது. சூனியம் சடைத்த கிராமம் பெருவயிறெனத் திறந்து கிடந்தது. சனங்கள் கருப்பையின் தட்பத்தை உணர்ந்த உயிரென குதூகலத்தில் கால் பதித்தனர். ”இந்த நிலம் இராணுவத்துக்குச் சொந்தமானது. அனுமதியின்றி உட்பிரவேசியாதீர்கள்” என்றெழுதப்பட்டிருந்த அறிவிப்பு பலகையை கழற்றி வீசினர். ஆயுதமற்ற சிப்பாயொருவன் குதிரையிலிருந்தபடி எல்லாவற்றையும் கண்காணித்தான். சின்னாச்சி மண்ணை அள்ளி மேலெங்கும் பூசினாள். உயிர்மீட்சி கொண்ட ஆனந்தத்தில் அருள் கொண்டாடினாள். குண்டுமணி அத்தை வேப்பிலைகளைப் பிடுங்கி வந்து சின்னாச்சி கையில் கொடுத்தாள். பேரன் புண்ணியன் வேதத்துக்கு மாறியிருந்தான். அதனால் பக்கத்தில் வரவில்லை. சின்னாச்சி சன்னதம் கொண்டாடினாள். மண்ணுக்குத் திரும்பியது சனங்கள் மட்டுமல்ல, கண்ணகித் தெய்வமும் தான் என்றார் ஊத்தை மாமா. சின்னாச்சி கண்கள் சிவந்து அந்தரத்தில் எழுந்து நிலத்தில் இறங்கி ஆவேசம் கொண்டாள். ஆங்காரம் பொங்க கைகள் விரித்து ஆலமரம் நோக்கி சின்னாச்சி ஓடினாள். “இந்த நிலம் இராணுவத்துக்குச் சொந்தமானது” என்ற அறிவிப்பு பலகையைத் மிதித்தேறி ஆலமரத்தை அண்மிக்கையில் நிலம் பிளந்து ஒலித்தது வெடியோசை. சின்னாச்சி கீழிருந்து மேலேறி ஒரு விழுதென நிலம் பதிந்தாள். ஆலமரத்தின் கீழே மேடெனக் கிடந்த பறவை எச்சங்களோடு அவளது கால்விரல்கள் எஞ்சியிருந்தன. சனங்கள் சின்னாச்சி என்று கதறினார்கள். சூனியமெரிந்த வெளியில் மனுஷ அழுகுரல் கேட்ட பறவைகள் எழுந்து பறந்தன. சிப்பாய் குதிரையை உசுப்பிவிட்டு சனங்களைச் சிதறியோடச் செய்தான். சனங்கள் உறைந்தனர். ஆலமரத்தின் கீழே குருதிக் குத்தியாய் சின்னாச்சி மீந்திருந்தாள். அவளுடைய உடலத்தை மீட்பது சிரமம். கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கும் வலயத்திலிருந்து சின்னாச்சியை குப்பைவாரியால் இழுத்து எடுத்தோம். சின்னாச்சியின் கால் துண்டொன்று ஆலமரத்தின் வேர் இடுக்கில் இறுகிக்கிடந்தது. சின்னாச்சியை கேணியடிக் கிராமத்தின் சுடலையிலேயே தகனமாக்க முடிவெடுத்தனர். அந்தப் பகுதிக்குச் செல்ல அனுமதியில்லையென வன்கவர் படை மறுத்தது. “மொத்தக் கிராமத்தையும் சனங்களிட்ட குடுத்தாச்செண்டு சொல்லிப்போட்டு, இப்ப செத்துப்போன ஆள எரிக்க அனுமதியில்லை எண்டால் எப்பிடி?” புண்ணியன் கேட்டான். “உங்களுடைய எல்லா இடங்களையும் நீங்கள் துப்பரவு செய்யத்தானே போகிறீர்கள். அதற்கு தீ வைக்க வேண்டுமல்லவா. ஆகவே இங்குள்ள எந்த இடத்திலாவது போட்டு எரியுங்கள்” என்றான் வன்கவர் படை அதிகாரி. “இந்தப் பாழ்படுவார் இத்தனை சனங்களை முள்ளிவாய்க்கால்ல கொண்டு குவிச்சும் கொலைவெறி அடங்காமல் நிக்கிறாங்களே” என்று குண்டுமணி அத்தை கொதித்தாள். சின்னாச்சியின் உடலத்தை தூக்கி வந்து வன்கவர் படை முகாமுக்கு முன்னால் கிடத்தினார்கள். ஈமச் சடங்கை செய்து முடித்தனர். பட்டினத்தார் பாடலைச் சுந்தரம் பாடினார். நெற்றியிலும் வயிற்றிலும் கற்பூரம் குவித்து சிதை மூட்டினான் புண்ணியன். எரிந்துருகும் சின்னாச்சியின் உடலத்தைச் சூழ்ந்த பெண்கள், தங்களுடைய முலைதிருகி வான் பார்த்து எறிவதைப் போல பாவித்தனர். “தீ மூளும், தீ மூளுமெனப் பாடுகையில் சின்னாச்சியின் உடல் விறகென மிளாசி எரிந்தது. அடுத்து சில மாதங்களில் இருபது குடும்பங்கள் கிராமத்தில் குடியேறி அங்கிருந்த தேவாலயத்தைச் சுத்தப்படுத்தினர். சின்னாச்சி கண்ணிவெடியில் செத்துப்போன ஆலமரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆட்கள் நடமாட அஞ்சினர். “கண்ணிவெடியை நெருக்கிப் புதைச்சிருக்கிறாங்கள். அங்கால் பக்கம் போகாதேங்கோ” பெரியவர்கள் சொல்லினர். சுத்திகரிக்கப்பட்ட தேவாலய கிணற்றிலிருந்து பெரிய ரங்குப் பெட்டியொன்று மீட்கப்பட்டது. அது தண்ணீர் புகமுடியாத தடித்த பொலித்தீன் உறைகளாலும், விலையுயர்ந்த மெழுசீலையாலும் பொதி செய்யப்பட்டிருந்தது. தேவாலயத்தின் உள்ளே எடுத்துவந்து ரங்குப்பெட்டியைத் திறந்தனர். உள்ளே பாதிரியார் அணியும் வெள்ளைநிற அங்கியும், பவளத்தால் செய்யப்பட்ட செபமாலை இரண்டும் இருந்தன. இன்னொரு அடுக்கில் சிறிய தங்கச் சிலுவையொன்றில் அறையப்பட்டிருந்த இயேசுவும் தங்கமாயிருந்தார். புண்ணியன் அந்தச் சிலுவையைத் தூக்கிச் சென்று பீடத்தில் வைத்தான். சனங்கள் முழந்தாளிட்டு அமர “அவர் பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுகிறார். வில்லை உடைத்து, ஈட்டிகளை முறிக்கிறார். போர் ரதங்களை நெருப்பில் சுட்டெரிக்கிறார்” என்றாள் ஒற்றைக்கண் சரசு. “கடவுளே, உங்களுடைய பெயரைப் போலவே உங்களுடைய புகழும் பூமியெங்கும் எட்டுகிறது. உங்களுடைய வலது கை நீதியால் நிறைந்திருக்கிறது. உங்களுடைய நீதித்தீர்ப்புகளால் எங்கள் நிலம் சந்தோஷிக்கட்டும்.” என்ற புண்ணியனின் கண்களை முட்டிப் பெருகிய கண்ணீர் செபமாலையின் மீது சொரிந்தது. இந்தச் சம்பவத்திற்கு பிறகு “தங்க இயேசு கோயில்” என்று புதுநாமம் பொறிக்கப்பட்ட தேவாலயத்தில் கேணியடிச் சனங்கள் வாரமொருமுறை ஒன்று கூடுவர். கிராமத்தில் இன்னும் செய்யவேண்டிய பொதுவேலைகளைப் பற்றி கதைத்து முடிவு செய்வார்கள். முதலில் சுடலைக்குச் செல்லும் பகுதியை இராணுவத்திடமிருந்து பெற்றுத் தரவேண்டுமென தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கு அழுத்தமாக கடிதம் எழுதினர். கேணியடி கிராமம், மக்களிடம் கையளிக்கப்பட்டது தன்னாலென தம்பட்டம் அடித்த அரசியல்வாதியைச் சந்திக்க இயலாமல் சனங்கள் சோர்ந்தனர். குதிரையில் சென்றுவரும் சிப்பாய்கள், பெண்கள் நீரள்ளும் சந்திக்கிணற்றடியில் குவிந்து நின்றனர். பெண்பிள்ளைகளை வெளியே அனுப்ப பயந்தொடுங்கினர் சனங்கள். சிப்பாய்களிடமிருந்து இனிப்பும் பழங்களும் வாங்கியுண்ட எதுவுமறியாத குழந்தைகளை பூவரசம் கம்பு தும்பாக அடித்தனர் தாய்மார்கள். சுடலை மீட்பை கேணியடி தீவிரமாக்கியது. கையளிக்கப்பட்ட பகுதியிலிருந்து இடதுபக்கமாக ஆறுகிலோ மீட்டர் பகுதிகளை இன்னும் இராணுவமே வைத்திருப்பதாக சனங்கள் வீதிக்கு வந்தனர். புண்ணியன் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்தான். சின்னாச்சி எரியூட்டப்பட்ட அதே இடத்தில் சனங்கள் அமர கொட்டகை அமைக்கப்பட்டது. கைக்குழந்தைகளை ஏந்தி வந்தவர்களும் அங்கேயே இருந்தனர். நெடுத்துக் கிளைவிரித்து நிழலூட்டும் வேப்பமரத்தில் குழந்தைகள் உறங்க ஏணைகள் கட்டப்பட்டன. இரவு பகலாக சனங்கள் வீதியில் படுத்துறங்கினர். போராட்டத்தை தலைமையேற்று நடத்தும் புண்ணியனை அவனது அணியினரையும் அழைத்து வன்கவர் வெறியர்கள் மிரட்டினர். “கடத்திச் சென்று உயிரோடு புதைப்போம்” என்றார்கள். புண்ணியன் சாந்தமூறும் புன்னகையோடு “அரசனுடையதை அரசனுக்கும் கடவுளுடையதைக் கடவுளுக்கும் கொடுக்கும் நீங்கள் எங்களுடையதை எங்களிடம்தான் தரவேண்டும்” என்றான். இராணுவம் சனங்களைச் சுடலைக்குள் அனுமதிக்கவில்லை. சனம் போராட்டத்தில் அரசியல்வாதிகளை அனுமதிக்கவில்லை. மூன்று நாட்களுக்கு மேலாக தொடரும் போராட்டம் ஊடகங்களில் செய்தியானது. மனித உரிமை ஆர்வலர்கள் துணை நின்றார்கள். “பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை. எழுந்து செல்லுங்கள். நீங்கள் எரிய வேண்டுமென்று அவசியமில்லை. உங்கள் உடலங்களை நான் வளர்க்கும் நாய்களுக்கு அளிப்பேன்” என்ற வன்கவர் படை அதிகாரி, மேலும் ஒருமணி நேரம் கெடு வழங்கினான். அதற்குள் போராட்டம் கைவிடப்பாடாது போனால் உயிரிழப்பு நிகழுமென்றான். நிலவெறியும் இரவு. வேப்பமரத்தில் கட்டப்பட்டிருந்த ஏணைகளில் குழந்தைகள் உறங்கினர். குதிரைகளின் குளம்பொலிகள் நிலத்தை அதிர்வித்தன. வன்கவர் வெறிப்படை முகாமின் பெருத்த கதவுகள் வாய் பிளந்தன. குதிரைகளின் மூச்சில் நடுங்கிய இரவு, புழுதியால் போர்த்தப்பட்டது. ஏணையில் கிடந்த குழந்தையின் அழுகுரல் கேட்ட தாய் ஓடோடி விரைந்தாள். குதிரைகள் கொட்டைகையை நோக்கி பாய்ந்து வந்தன. சிப்பாய்கள் தங்களது துவக்குகளை நீட்டி “ பத்து நிமிசத்திற்குள் எழுந்து செல்ல வேண்டும், இல்லையேல் வெடிதான் கதைக்கும்” என்றனர். சனங்கள் பின்வாங்கினர். குதிரைகள் கொட்டகைக்குள் புகுந்து வெறிகொண்டு அலைந்தன. மண்ணில் சரிந்தது கொட்டகை. புண்ணியன் எல்லாவற்றையும் பார்த்தபடி நின்றான். அவனை நோக்கி வந்த சிப்பாயொருவன் துவக்கின் பின்பகுதியால் தோள்மூட்டில் ஓங்கி அடித்தான். புண்ணியன் ஷணத்தில் சுதாகரித்து தப்பி தங்க இயேசு கோயிலுக்குச் சென்றான். ஏற்கனவே அங்கு சனங்கள் கூடியிருந்தனர். புண்ணியன் யாரோடும் எதுவும் கதையாமல் தங்கச்சிலுவையின் முன்பாக முழந்தாளிட்டான். “கர்த்தாவே! நீரோ, வியக்கத்தக்க காரியங்களைச் செய்தீர்! விண்ணுலகம் இதற்காக உம்மைத் துதித்தது. ஜனங்கள் உம்மைச் சார்ந்திருக்கமுடிந்தது. பரிசுத்தரின் கூட்டம் இதைப்பற்றிப் பாடியது. ஆனால் என்றைக்கும் இருளை மட்டுமே எங்களிடம் நிலைகொள்ளச் செய்திருக்கிறீர். துயரங்களுக்காக அழுது எங்கள் கண்கள் புண்ணாகிவிட்டன. ஏற்கெனவே கொல்லப்பட்ட சனங்களை புதைக்காமலும் எரிக்காமலும் கைவிட்டோம். வாழப் பெலனற்று மரித்தவர்கள் இங்கு குறைவு. கர்த்தாவே! இது எத்தனை காலம் தொடரும், எதுவரைக்கும் நீர் எங்களை உதாசீனப்படுத்துவீர்? என்றென்றும் உமது கோபம் நெருப்பைப் போல் எரியுமென்றார்கள். எமக்காக ஒரு தீக்குச்சி அளவு கூட எரிய மாட்டேன் என்கிறீர்கள். எங்கள் ஆயுள் எத்தனை குறுகியது என்பதை நினைவுகூரும். குறைந்த காலங்கள் வாழ்ந்து, மடியும்படியா நீர் எங்களைப் படைத்தீர். நீர் எங்கள் அரசனின் பகைவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தீர். போர்ப் பகைவர்கள், அவனை வெற்றிக்கொள்ள அனுமதித்தீர். எம் அரசன் யுத்தத்தில் வெல்ல நீர் உதவவில்லை. நீர் அவனை வெல்ல விடவில்லை. நீர் அவனைத் தரையில் வீசினீர். நீர் அவனது ஆயுளைக் குறைத்தீர். நீர் அவனை அவமானப்படுத்தினீர். கர்த்தாவே, உமது அன்பு என்றைக்கேனும் எங்களுக்காய் நிலைக்குமென உண்மையாகவே நான் நம்புகிறேன். கர்த்தருக்கே என்றென்றும் ஸ்தோத்திரம்! ஆமென், ஆமென்” என்றான். அப்போது புண்ணியனைச் சூழ்ந்து நின்ற சனங்கள் ஒரு முடிவை அறிவித்தனர். சுடலை எப்போது தங்களுக்கு கையளிக்கப்படுகிறதோ அன்றைக்கு இந்தவூருக்கு திரும்பலாம் என்றார்கள். புண்ணியன் இந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. இனியும் இடப்பெயர முடியாது, எல்லாத்துக்கும் ஒரு முடிவு கிடைக்கும் தானே என்றான். அவர்கள் ஒப்புக்கொண்டனர். அடுத்தநாள் பகல் முழுதும் தேவாலயத்திலேயே தனித்திருந்தான் புண்ணியன். சூரியன் வீட்டுக்கூரையில் தொங்கிநிற்பதைப் போல வெயில் உலர்த்தியது. வன்கவர் வெறிப்படையினர் குதிரைகளோடு ஊர் புகுந்தனர். வாசலில் உறங்கிக் கிடந்த செட்டித்தாத்தாவை குதிரைகள் மிதித்தன. அவர் சீவன் சிலிர்த்து அடங்கியது. செட்டித்தாத்தா கண்கள் மலர்த்தி வானத்தைப் பார்த்திருந்தார். சனங்கள் ஓலமெழுப்பி குதிரைகளை எதிர்த்தனர். சிப்பாய்கள் புண்ணியனைத் தேடினர். அவன் தேவாலயத்தில் இருப்பதை அறிந்து கொண்டு பாய்ந்து விரைந்தனர். தேவாலயத்தினுள்ளே அமர்ந்திருந்த அவனுக்கு குளம்படிகள் கேட்டன. சிப்பாய்கள் வருவது நன்றாகத் தெரிந்தது. ஆனாலும் அவன் அஞ்சவில்லை. நடப்பதை எதிர்கொள்ள காத்திருந்தான். உள்ளே நுழைந்தவர்கள் ஆயுதமுனையில் அவனை மண்டியிடப் பணித்தனர். சிலுவையைப் பார்த்தபடி முழந்தாளிட்டு அமர்ந்தவனின் பிடரியில் துவக்கின் குழல் அமைந்தது. கபாலத்தில் உலோகக் குளிர். சனங்கள் ஆர்ப்பரிப்போடு உள்ளே நுழைந்தனர். புண்ணியனை நோக்கிப் அன்னை மரியாக்கள் ஓடிவந்தனர். சிப்பாய்கள் அங்கிருந்து வெளியேறினர். முழந்தாளிட்டு அமர்ந்திருந்தவன் எழுந்திராமல் நெடுநேரமாக கண்களை நிலைகுத்தியிருந்தான். குண்டுமணி அத்தை அவனைத் தொட்டு “புண்ணியா, எழும்புடா செல்லம், நாங்கள் இந்த ஊர விட்டே போகலாம்” என்றாள். தலையை மேல் நோக்கிய அவன் கருவிழிக்குள் நெருப்புச் சுவாலை. அன்றிரவு புண்ணியனின் தலைமையில் ஊர், சுடலை நோக்கிச் சென்றது. செட்டித்தாத்தாவின் உடலத்தை சாக்குப் பையில் போட்டு மூட்டையாக்கினார்கள். குழந்தைகள் அழாமல் முலைகள் அவர்களது வாயிலேயே கிடந்தது. பாதையில் அரவமில்லை. புண்ணியன் எதிரே உருவமொன்று அசைந்தது. பின்னால் வருபவர்களுக்கு தொடுதல் மூலம் தகவல் சொன்னான். உருவம் எங்கே பதுங்கிற்று? புண்ணியன் மெல்லக் காலடி எடுத்து வைத்து யாருமில்லையென உறுதி செய்தான். பிறகு மீண்டும் நடக்கத் தொடங்கினார்கள். சுடலை எங்கே இருக்கிறதென அடையாளம் சொல்ல வந்த ஊத்தை மாமா இன்னும் கொஞ்சத் தூரம் போகவேண்டுமெனச் சொன்னார். அவருக்கு பூதவராயர் கோயில் கடந்து மூன்றாவது வளைவு என்பது ஞாபகம். அவர் வளைவை எட்டிய போது அடையாளம் காணமுடியவில்லை. திடீரென ஒரு வளவில் சிதையெரிந்து ஒளி ஊண்டியது. எல்லோரும் தெய்வச் செயல் என்றார்கள். அவ்விடம் நோக்கி எல்லோரும் ஓடினார்கள். சிதைக்கருகில் புண்ணியன் சென்றான். ஒற்றைக்காலுடன் சின்னாச்சி எரிந்து கொண்டிருந்தாள். இழந்துபட்ட கால்விரல்களை பொறுக்கி பொறுக்கித் தீயிலிடும் இன்னொரு சின்னாச்சி நிலத்தில் அமர்ந்திருந்தாள். புண்ணியன் அவள் சிதையை விழுந்து வணங்கி, செட்டித்தாத்தாவின் உடலத்தில் தீ எழுப்பினான். சனங்கள் ஊருக்குள் நுழைந்த போது குதிரைகளின் ஓலவொலி எழுந்தது. பெருந்தீ எழுந்தாடும் வெளிச்சம் ஊர் முழுதும் நிலைத்தது. சிப்பாய்கள் உறங்கிய ஆடைகளோடு வெளியேறி ஓடினர். முகாம் வாசலுக்கு சனங்கள் போயினர். தீ மூண்டு ஆயுதங்கள் வெடித்தன. சிப்பாய்கள் எரிந்துருகிச் சாம்பலாய் ஆனார்கள். போர்க்குதிரைகளின் மயிர் பொசுங்கும் வாடை கேணியடிக் கிராமத்தை அடைத்தது. வன்கவர் படையின் முகாமுக்கு முன்பாக, சின்னாச்சியை எரித்த ஸ்தலத்தில் ஒரு முலை தீக்குண்டாய் தகித்துக் கிடப்பதைப் பார்த்த குண்டுமணி அத்தை “அது எங்கட கண்ணகியின்ர இடது முலை. காலங்காலமாய் கவிந்த இருள் எரிக்கும் அமுதம், அதுக்குள்ள சுரக்குது என்றாள். அப்போது “ என் பிள்ளைகளே! குந்த ஒருபிடி நிலமும், எரிய ஒரு பிடிநிலமும் சொந்தமாய் வேணும். இல்லாட்டி அலைவு தான்” என்றொரு குரல் கேணியடியெங்கும் ஒலித்தது. https://akaramuthalvan.com/?p=1272- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஜெயமோகனின் குறிப்பில் இருந்து.. இன்றைய போர் என்பது ஒரு தீவிரவாத அமைப்பும் ஒரு பொறுக்கிதேசமும் தங்கள் மக்களையே பலியாக்கி, மாறிமாறி மக்களைக் கொன்று ஆடும் வெறியாட்டம். * இதில் மிகக்கீழ்த்தரமானது அவரவர் அரசியல், சாதி, மதச்சார்புக்கு ஏற்ப ஒரு பக்க நிலைபாடு எடுத்து களமாடுவதுதான். ஹமாஸை ‘மாவீரர்கள்’ ‘போராளிகள்’ ‘தியாகிகள்’ என புகழ்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் சிலவற்றை வாசித்தேன். பாலஸ்தீன மக்களின் உயிர்வதையை தன் மதவெறியரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்தும் ஒருவரின் உளநிலை என்ன? இந்த வகை கட்டுரைகள் உடனடியாக பல்லாயிரம்பேரை மறுதரப்பு நோக்கி கொண்டுசெல்பவை. மறுபக்கம், மொத்த பாலஸ்தீன தேசியக்கோரிக்கையையே மதத்தீவிரவாதமாகப் பார்க்கும் பார்வை. அது இந்தியாவுக்கு எதிரானது என்னும் பார்வை. அதிலிருந்து எழும் குரோதங்கள். இஸ்லாமிய எதிர்ப்பரசியலையே இஸ்ரேலிய ஆதரவாக ஆக்கிக்கொள்ளும் மனச்சிக்கல். இரு சாராருக்குமே மக்கள் பெரிதல்ல. அவர்களுக்கு போர் என்பது கிரிக்கெட் போல ஒரு விளையாட்டு. அன்றாடச் சலிப்பை நீக்கும் ஒரு சுவாரசியம். தன் தரப்பு ஜெயிக்கவேண்டும், அவ்வளவுதான்.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் அன்றாடம் 4 மணி நேரம் போர் நிறுத்தம்: அமெரிக்கா சொன்ன தகவலும்; இஸ்ரேல் பிரதமரின் விளக்கமும் காசாவில் அன்றாடம் 4 மணி நேரம் போரை நிறுத்த இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது விளக்கத்தை அளித்துள்ளார். முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் தரப்பில், மனிதாபிமான அடிப்படையில் வடக்கு காசாவில் அன்றாடம் 4 மணி நேரம் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்தது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பைடன், குறைந்தது மூன்று நாட்களுக்கு மேலாவது போர் நிறுத்தம் மேற்கொள்ளும்படி இஸ்ரேலிடம் வேண்டியுள்ளதாகக் கூறினார். அதேவேளையில் “இஸ்ரேல் நிச்சயமாக முழுமையான போர் நிறுத்தத்தை இபோதைக்கு மேற்கொள்ள வாய்ப்பில்லை” என்றும் கூறினார். இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில், “போர் நிறுத்தம் என்பது ஆங்காங்கே மேற்கொள்ளப்படும். ஆனால் இது மீண்டும் மீண்டும் நடக்குமா எனத் தெரியவில்லை. ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நாங்கள் போர் மேற்கொண்டுள்ளோம். ஆகையால் வடக்கு காசாவில் உள்ள பொது மக்கள் பத்திரமாக வெளியேறும் வகையில் சில மணி நேரங்கள் தாக்குதல்கள் நிறுத்தப்படும். அதுவும் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே. பொது மக்களின் நலன் கருதி இது மேற்கொள்ளப்படுகிறது” என்றார். இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி ஒருமாத காலம் ஆன நிலையில் காசா உருக்குலைந்துள்ளது. அங்கு இதுவரை 10 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த இஸ்ரேலுக்கு பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்தச் சூழலில் அன்றாடம் 4 மணி நேரம் காசாவில் முழுமையாக தாக்குதல் நிறுத்தப்படும். இது அங்குள்ள பிணைக் கைதிகளை விடுவிக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் பெயரவும், நிவாரண உதவிகள் முகாம்களுக்கு சென்று சேரவும் உதவியாக இருக்கும் வகையில் எடுக்கப்பட்ட முடிவு என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தரப்பில் இதுவர 1400 பேர் உயிரிழந்துள்ளனர். 239 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர். https://thinakkural.lk/article/280840- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
☝🏿பலஸ்தீன மக்களின் மீதான இஸ்ரேலின் அடக்குமுறையை ஆதரிப்போர், எதிர்ப்போர் படிக்கவேண்டியது..- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 05 புலித்தேவன் பிறந்து பத்து நாட்களில் அவனது தாயும் தந்தையரும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்கள். துரதிஸ்டவசமாய் உயிர் தப்பினான். நச்சுப்புகை மூடிய பாழ்வெளியில் பச்சிளம் குழந்தையாக அலறினான். இறந்துபட்ட தாயின் வலதுமுலையில் பாலுண்டு தவித்தான். குருதியும் பாலும் கலந்து ஊட்டிய தாய்நிலத்தில் தனியனாய் துடித்தான். தீச்சூளையில் பொசுங்கிடும் பட்டுப்பூச்சியைப் போல அலைகுமுறும் கடலுக்கு முன்பாக தாய்ப்பிணத்தின் மீது நெளிந்த புலித்தேவனை தூக்கி ஏந்தினாள் அம்மா. அக்கணம் எறிகணைகள் வீழவில்லை. போர்விமானங்கள் வானத்தில் இல்லை. கடற்பறவைகள் கரை வந்து திரும்பின. கூடாரங்களுக்குள் கிடந்த போர்க்காயங்களில் எரிவு அடங்கியிருந்தது. அம்மா புலித்தேவனை அரவணைத்து மிகவேகமாக பதுங்குகுழிக்குள் நுழைந்தாள். புலித்தேவனின் முகத்தை ஈரச் சீலையால் துடைத்து, சரையில் வைத்திருந்த புளியன் பொக்கணை நாகதம்பிரான் கோவில் திருநீற்றைத் தரித்தாள். பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிட பாற்கடல் ஈந்தபிரான் புலித்தேவனுக்கு இரங்கவில்லை. பால்வற்றிய தன்முலையை ஈய்ந்து போக்கு காட்டினாள் அம்மா. குடிதண்ணீரும் கிட்டாத கடல் வெளியில் சனங்களின் கண்ணீர் உப்பளமாயிற்று. ஓயாது அழுது சோர்ந்தான் பாலகன். மகப்பேறு கொண்ட பெண்ணொருத்தியை கூடாரங்களுக்குள் தேடி, புலித்தேவனுக்கு பாலூட்டினாள். “ஒருவேளை இஞ்ச நான் செத்துப்போனாலும், உங்களில ஆர் மிஞ்சியிருக்கிறியளோ புலித்தேவன கைவிடாமல் வளர்க்க வேணும்” என்றாள் அம்மா. நாங்களிருந்த இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு நள்ளிரா வேளையில் ஓடிச்சென்றோம். கடுமையான தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமிருந்தன. புலித்தேவனை அணைத்துப் பிடித்தோடி வந்த அம்மாவின் வலது காலை துப்பாக்கி ரவைகள் தாக்கின. அம்மா முகங்குப்புற மண்ணில் விழுந்தாள். புலித்தேவன் பிடிதளர்ந்து மண்ணின் மீது தொப்பென விழுந்தும் அழாமலிருந்தான். அவனுக்கருகில் அசையாமலிருந்தது வடலி. அடுத்த இரண்டு நாட்களிலேயே எங்கள் பனைகளை நாங்கள் பறிகொடுத்தோம். எங்கள் கம்பீரங்கள் முற்றுகையிடப்பட்டன. எரிந்தெரிந்து சாம்பலான நிலத்தின் மீது எஞ்சிய விறகுகளாய் தோற்கடிக்கப்பட்டோம். அம்மாவின் காயத்திலிருந்து குருதியின் பெருக்கு நிற்கவில்லை. அன்று தாயும் தாய்நிலமும் குருதியின் அனாதைகளாக முழங்காலில் நிறுத்தப்பட்டார்கள். ஆயுதங்கள் அவர்களை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்தன. யுத்தம் தீர்ந்த பின்னைய வருடங்களில் வெளிநாட்டிலிருந்த வந்தவர்கள் சிலர் புலித்தேவனை சந்தித்து உதவிகளைச் செய்ய விரும்புவதாகக் கூறினார்கள். அம்மா வேண்டாமென்று மறுத்தாள். புலித்தேவனோ அவர்களைச் சந்திக்கவே விரும்பாதிருந்தான். ஒருமுறை ஐரோப்பாவிலிருந்து தாயகம் திரும்பிய புலம்பெயர் தமிழர் மூன்று கிலோ சீனியும், இரண்டு ஷேர்ட்டும் அளித்து புகைப்படமாக்கினார். புலம்பெயர்ந்த தமிழர் நீட்டிய உதவிக்கரமென இணையத்தளங்களில் செய்தி வெளியானது. இதனைக் கேள்விப்பட்ட அம்மா கொதித்தாள். “கள்ள வேசமொக்கள், வெளிநாட்டில இருந்து வந்து எங்களை வைச்சு ஷோ காட்டுறாங்கள். மூண்டு கிலோ சீனிக்கும், ரெண்டு ஷேர்ட்டுக்கும் வழியில்லாமலா இஞ்ச நாங்கள் இருக்கிறம்” என்று பேருந்தில் ஏறினாள். அந்த நபர் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று அவர் கொடுத்த பொருட்களை தூக்கி வீசிவிட்டு “இவ்வளவு பெரிய யுத்தத்துக்குள்ளையும் சாகாமல் தப்பி மீண்ட சனங்களை, இப்பிடி நீங்கள் குடுக்கிற சீனியையும், உடுப்பையும் போட்டோ எடுத்துச் செய்தி போட்டு அவமானப்படுத்தி கொல்லாதேங்கோ” என்றாள். புலித்தேவனின் கண்களை சந்திக்க முடியாமல் தலைதாழ்த்தி நின்றார் அந்த நபர். இப்போது அவனுக்கு பதின் மூன்று வயது. பள்ளிக்கூடத்தில் பெயர் பெற்ற மாணாக்கன். மாலையில் குளக்கரைப் பட்டியைப் பார்த்து வருவான். விடுப்பு நாட்களில் நாற்பது ஆடுகளையும் அழைத்துச் சென்று, சடைத்து வளர்ந்திருக்கும் புல் காணிகளுக்குள் மேய்ப்பான். வாய்க்காலில் நீரருந்தவிட்டு மரத்தின் கீழே இளைப்பாறுவான். வன்கவர் படையினரின் முகாம்கள் நிலந்தோறும் முளைத்து வளர்ந்திருந்தன. சஞ்சீவி தோட்டத்தின் வழியாக ஆடுகளைச் சாய்த்துப் பட்டிக்குத் திரும்புவான் புலித்தேவன். ஒருநாள் ஆடுகளைப் பட்டியில் கிடத்திவிட்டு வீட்டிற்கு வந்து குளித்துமுடித்து நீறள்ளிப் பூசியவன் “அம்மா, இண்டைக்கு ஒற்றன் தோப்பு பக்கமாய் ஆடு மேய்க்கப்போனான். வாய்க்கால தாண்டி அங்கால போனால் ஒரு குடிசை மண்ணோடு மண்ணாய் இத்துக் கிடக்குது. அதுக்கு மேல சிவப்புக் குமிழி உலையாய் பொங்கி வெடிக்குது” என்றான். “அலட்டாம சாப்பிடு. உலை பொங்கிறதுக்கு அங்க என்ன அடுப்பா இருக்கு. அது எதாவது பூச்சி புழுவாய் இருக்கப்போகுது” என்றாள். “இல்லை அம்மா. நான் நல்லாய்ப் பாத்தனான். அடுப்பில கொதிக்கிற மாதிரி உலை பொங்கின சிவப்புக் குமிழ்கள்” அம்மா எதுவும் பதிலுக்கு கதைக்கவில்லை. புலித்தேவன் சாப்பிட்டு முடித்ததும் படிக்க அமர்ந்தான். அவனுக்கு குமிழ் குமிழாக உலையெழுந்தது குழப்பமாகவே இருந்தது. நாளைக்கும் விடுமுறை என்பதால் ஒற்றன் தோப்புக்கே பட்டியை அழைத்துச் செல்வதென தீர்மானித்தான். அவன் சொன்ன சித்திரமே அம்மாவின் மூளையில் தையலாய் ஏறியும் இறங்கியும் பின்னியது. வன்னி முழுதும் காட்டாறாய் பெருகி மண்ணுக்குள் இறங்கிய ரத்தம் கனன்று பூமிக்கு திரும்புகிறதோ என எண்ணினாள். ஒருகணம் சிவந்து கொப்பளிக்கும் குருதியாக நிலம் அகத்துள் விரிந்தது. “என்ர நாகதம்பிரானே” என்று உடல் சிலிர்த்து விதிர்விதிர்த்து அம்மா திடுக்குற்றாள். புலித்தேவன் பயந்தடித்து “அம்மா, என்னனே, என்ன நடந்தது” என்றுலுக்கினான். ஒவ்வொருவருக்குள்ளும் சொல்லவியலாத துயரங்களும் அச்சங்களும் சுருண்டிருந்தன. உள்ளம் காய்ந்திருந்தது. அம்மா எழுந்து படுக்கைக்குச் சென்றாள். இரவு முழுதும் குருதி உலையெனக் கொதித்துப் பொங்கி காய்ச்சலில் தவித்தாள் அம்மா. அதிகாலையிலேயே இடியுடன் கூடிய மழை நீடித்துப் பெய்தது. புலித்தேவன் உறக்கம் கலைந்து சீதளக்காற்றால் நடுங்கினான். எரிந்துபட்ட எரிமலையின் மீதமாய் உறங்கிக் கொண்டிருந்த அம்மாவை அப்போதுதான் பார்த்தான். அவளுடைய உடலிலும் குமிழ்கள் தோன்றி மறைந்தன. அதனைக் கற்பனையென எண்ணி தன்னைத் தானே நொந்தான். கண்களை அங்கிருந்து நகர்த்தி மீண்டும் அம்மாவிடம் கொண்டு வந்தான். உலைக் குமிழ்கள் தோன்றி உடையும் நிலமென அம்மாவின் மேனியிருந்தது. மழையை உமிழும் இடியும் மின்னலும் தொடர்ந்தன. புலித்தேவன் பதறியடித்துக் கொண்டு தட்டியெழுப்பினான். ஆழ்ந்த கனவிலிருந்து அறுபட்டு எழுந்தவளைப் போல பிரமையற்று எழுந்த அம்மா, புலித்தேவனை அடையாளம் காணவே நொடிகள் ஆனது. நடப்பது எதையும் புலித்தேவனால் நம்பமுடியவில்லை. அவன் கட்டியணைத்தபடி “அம்மா உங்கட உடம்பிலயும் அந்தக் குமிழ்கள் தோன்றி மறைவதைப் பார்த்தேன்” என்றான். “சும்மா விசரன் மாதிரி அலட்டாத. உனக்கு தேத்தண்ணி வைச்சுத்தாறன்” என்று சொன்ன அம்மாவை கட்டியணைத்து விம்மி விம்மி அழுதான். அம்மா அவனுக்கு நீறள்ளிப் பூசினாள். மாலையில் ஒற்றன் தோப்புக்குள் ஆடுகளை சாய்த்து விட்டவன், அந்த இடத்துக்குப் போனான். அங்கே மட்டும் மழை பெய்தமைக்கான அறிகுறிகள் எதுவுமில்லை. நிலமுலர்ந்து வெப்பம் தகித்தது. கொஞ்சச் சருகுகளை எடுத்து வந்து போட்டால் தீ மூளுமளவுக்கு அனல் வந்தது. புலித்தேவன் அங்கேயே நின்று கொண்டான். குமிழ்கள் தோன்றத்தொடங்கின. குருதிக் குமிழ்கள். சூறைக்காற்றின் பேரொலி. காதை விண்ணென்று அதிர்விக்கும் கூர்மையான சப்தம். ஊன்றியிருக்கும் கால்களுக்கு கீழேயும் குமிழ்கள் கொப்பளித்தன. புலித்தேவன் சலனமுற்றான். நிகழ்வது மாயமல்ல.எங்கிருந்தோ தனக்கு கிடைக்கும் செய்தியென எண்ணினான். வானத்திலிருந்து பூமிக்கு இறங்கிய கட்டளைகளைப் போலவல்ல இது. பாதாளத்திலிருந்து பூமியை வந்தடையும் சமிக்ஞையென நம்பினான். அவன் மண்ணைத் தொழுது மண்டியிட்டு அமர்ந்தான். குருதிக் குமிழ்கள் தோன்றத் தோன்ற நிலம் பிளந்து நாகங்கள் மேலேறின. புலித்தேவனுக்குள் அச்சத்தின் தலை விரிந்தது. ஒவ்வொரு குருதிக் குமிழிலிருந்தும் நாகக் குட்டிகள் ஜனித்தன. புலித்தேவன் “என்ர நாகதம்பிரானே” என்று சிலிர்த்துச் சிலிர்த்து அழுதான். நிலம் பரவசமாய் பூர்வபிள்ளைகளை ஏந்தியது. நாகங்கள் நெளிந்தோடின. வாய்க்காலைக் கடந்து வீட்டிற்கு ஓடினான். நடந்தவற்றை அம்மாவிடம் சொல்லி அழைத்தான். இருவரும் ஒற்றன் தோப்பையடைந்து வாய்க்காலைக் கடந்து போயினர். அந்தவிடத்தில் நின்று கொண்டவன் “ அம்மா, இந்த இடத்தில் லட்சக்கணக்கான நாக குட்டிகள் நெளிந்தன. என் கண்ணுக்கெட்டிய தூரம் வரை புற்களைப் போல நாகங்கள் விளைந்திருந்தன” என்றான். அவ்விடத்தில் பெருகிய வெப்பத்தை அம்மாவும் உணர்ந்தாள். புலித்தேவன் சொல்வதைக் கேட்டதும் அவளுக்கு பயமாகவிருந்தது. “நாகதம்பிரான் சித்து விளையாட்டெதோ காட்டுறார்” என்றாள் அம்மா. “ஆயிரம் தலை கொண்டு பூமியைத் தாங்கும் ஆதிசேஷன் பாதாளத்திலிருந்து ஏதேனும் செய்திகள் அனுப்புகிறாரோ” “எங்கட நாட்டுப் பிரச்சனையை தீர்க்க எத்தனை பேர் செய்தியனுப்பி முடியாமல் போனதெண்டு உனக்கு தெரியாது. ஆதிசேஷனுக்கு நல்லாய்த் தெரியும். அதனால அவர் இப்ப மினக்கெட மாட்டார்” “அம்மா, நாகங்கள் மேல வந்தது ஏதோவொரு நல்ல சகுனம். எங்கட மூதாதையர் பாதாளத்திலயிருந்து பூமிக்கு வருகினம். அதுதான் நடக்குது” என்றான் புலித்தேவன். “எடே, இத்தனை பிள்ளையளைச் சாக குடுத்தும் விடிவு வராமல் போயிற்று. இனி ஆர் வந்தென்ன, வராமல் போனாலென்ன” “அம்மா அங்க பாருங்கோ. குமிழி தோன்றி உடையுது” என்று புலித்தேவன் காட்டினான். அவர்கள் நின்றதிலிருந்து ஏழடிகள் தள்ளி குமிழ்கள் உடைய நாகங்கள் அசைந்தன. அம்மா கையெடுத்துக் கும்பிட்டு, என்ர நாகதம்பிரானே, எல்லாமும் உன்ர அற்புதம் என்று நெக்குருகி அழுது கசிந்தாள். உடல் வியர்த்து விழுந்து மண்ணில் புரண்டாள். அன்றிரவு ஊருக்குள்ளிருந்த வன்கவர் வெறிப்படையினரின் முகாம்களுக்குள் பாம்புகள் புகுந்தன. ஆயுதங்களோடு வீதியில் குவிந்து நாகங்களை சுடத் தொடங்கினர். இரவே ஒரு மாபெரும் குமிழாகத் தோன்றி நாகங்கள் வந்தவண்ணமிருந்தன. சனங்கள் வீடுகளுக்குள் பதுங்கிக் கொண்டனர். நாகங்கள் தம்மைத் தீண்டத் துரத்துவதாக வன்கவர் வெறியர்கள் மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அடைக்கலம் கேட்டனர். அம்மா வீட்டினுள்ளே அமர்ந்திருந்தாள். புலித்தேவன் படலையில் நின்றபடி வீதியில் நடப்பவற்றை வேடிக்கை பார்த்தான். வன்கவர் சிப்பாயொருவன் புலித்தேவனிடம் ஓடிவந்து “எங்களை விஷப்பாம்பு துரத்துகிறது. காப்பாற்றுங்கள்” என்றான். அவனிடம் ஆயுதமிருந்தது. கண்களில் போர் வெறியிருந்தது. பகைமையிருந்தது. ஆனால் புலித்தேவன் எதையும் பொருட்படுத்தவில்லை. நாகம் கொத்திய சிப்பாய் விஷமேறிச் சாகும் வரை புலித்தேவன் பார்த்துக் கொண்டேயிருந்தான். ஊர்ந்து சென்ற அந்த நாகத்தை வாசுகி என்று அழைக்க, சிவனின் கழுத்திலிருந்து கீழே இறங்கி புலித்தேவனின் கால்களுக்குள் ஊர்ந்து வந்தது. அச்சத்தில் அம்மாவென்று கதறியெழுந்தவனை கட்டியணைத்து மூன்றுமுறை எச்சிலால் துப்பி “ஒன்றுமில்லை ஒன்றுமில்லை கனவு” என்று உறங்க வைத்தாள் அம்மா. காலையில் பள்ளிக்கூடம் போகாமல் ஒற்றன் தோப்பின் வழியாக அந்த இடத்தை அடைந்தான். அப்போதும் குருதிக் குமிழ்கள் உடைத்து நாகங்கள் ஜனித்தன. புலித்தேவன் அந்தக் குடிசைக் கஞ்சல்களை அள்ளியெறிந்தான். நிலத்தில் புலிவரிக் கோடுகளோடு உறங்கிக் கிடந்த ராஜ நாகம் அசையத் தொடங்கியது. தனது செட்டையைக் கழற்றி அவனுக்கு தருவித்தது. இன்னும் பக்கமாய் புலித்தேவனை அழைத்தது. ஒரு கொடிபோல அவனில் பற்றியேறி கழுத்தில் படம்விரித்து நின்றது. பாரந்தாளது மண்ணில் அமர்ந்த புலித்தேவன் “அம்மா”வென அழைத்தான். நிலம் நீண்டு கடல் பிளந்து தொனித்தது அவன் குரல். உடலழிந்து, முகமழிந்த பெண்ணொருத்தி முலைகட்டிய வலியால் துடிதுடித்து அங்கே தோன்றினாள். அவள் அள்ளியெடுத்து அமுதூட்ட புலித்தேவன் உறங்கிப் போனான். ஒற்றன் தோப்புத்தாண்டி அம்மா அவனைத் தேடிப்போனாள். ராஜ நாகத்தின் பாம்புச் செட்டையால் போர்த்தப்பட்டிருந்தான். அவனது கடவாயில் குருதியும் பாலும் ஒட்டிக்கிடந்ததைப் பார்த்து “என்ர நாகதம்பிரானே” எனச் சதுரம் நடுங்கிப் அவனை அள்ளியெடுத்தாள். இப்போதும் பத்து நாள் குழந்தையாகவே அம்மாவின் கரங்களில் குளிர்ந்தான் புலித்தேவன். https://akaramuthalvan.com/?p=1213 - துவாரகா உரையாற்றியதாக...
Important Information
By using this site, you agree to our Terms of Use.