Everything posted by கிருபன்
-
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 04 வீரையாவின் இடத்தைக் கண்டுபிடிக்கவே வாரங்களாயின. அவருக்கு முன்னால் இரத்த அழுத்தம் அதிகரித்து பதற்றத்துடன் அழுதபடி நின்றாள் அத்தை. எதையும் பொருட்படுத்தாமல் அத்தையளித்த சரைகளைப் பிரித்து பொருட்களைச் சரிபார்த்தார். சடங்குக்கு தேவையான பொருட்களின் பட்டியலை அத்தைக்கு தெரிவித்தது யாரென்று வீரையாவுக்குத் தெரியவில்லை. ஆனால் எல்லாப் பொருட்களும் உபரியாக வந்திருந்தன. ரெண்டு சரை சாம்பிராணித் தூளுக்குப் பதிலாக ஐந்து வந்திருந்த போதுதான் இது செவிடன் ரத்தினத்தோட ஆளென்று அடையாளம் கண்டார். வீரையாவுக்கு வன்னி முழுதும் பக்தர்கள் பெருகியிருந்தமையால் ஏற்படும் குழப்பம் தானன்றி வேறில்லை. “அழாதே” என்று சைகை செய்து, அமர்ந்து கொள்ளெனக் கட்டளையிட்டார். நிலத்தைக் கால்களால் விலக்கித் துப்பரவு செய்து கைகூப்பி அமர்ந்தாள் அத்தை. வீரையாவின் கண்களில் சிவப்பு தரித்திருந்தது. தனது இருப்பிலிருந்து மாடப்புறா ஒன்றை எடுத்தார். கால்களில் இடப்பட்டிருந்த கட்டினை அவிழ்த்தார். அதனது கண்களில் காய்கள் வளர்ந்திருந்தன. புறாவை அத்தையின் கையில் கொடுத்து குங்குமத்தை தடவினார். சாம்பலில் குருதி இறங்குவதைப் போல புறாவின் இறகுகளுக்குள் குங்குமம் புகுந்தது. அத்தை அருவருத்தபடி புறாவை இறுக்கிப் பிடித்திருந்தாள். வெறிகொண்ட கொடுங்கரமேந்தி சிறிய வெள்ளிக்கத்தியால் புறாவின் கழுத்தை அறுத்தார் வீரையா. அத்தையின் மூக்கின் கீழ்ப்பகுதியில் புறாவின் குருதிச் சாரல். சிந்தும் குருதியை குப்பியொன்றில் பிடித்து, ஏதேதோ மந்திரங்கள் சொல்லி அடைத்துக் கொண்டார். அத்தை கண்களை மூடிக்கொண்டு “என்ர தெய்வமே” என்று உடல் நடுங்கினாள். வீரையா ஒருபிடி திருநீற்றையள்ளி குப்பியிலிட்டார். புறாக்குருதியும் நீறும் குப்பியில் கலந்தன. காட்டின் திக்குகள் அறிந்து திருநீற்றை ஊதி “தெய்வம் உன்னோட இருக்கும், தெய்வம் உன்னோட இருக்கும்” என்று சொன்னார். கூப்பிய தனது கரங்களை இன்னும் இறுக்கியபடி “நீயொரு சக்தியுள்ள தெய்வமெண்டால் என்ர மகள காப்பாத்திப் போடு” என்ற அத்தைக்கு மேலே குருவியுண்டு கனிந்த காட்டுப்பழமொன்று உதிர்ந்தது. அந்தக் குப்பியை ஒரு சிறிய துணிப் பொட்டலமாக கட்டிக்கொடுத்து “ அவளின்ர கழுத்தில இது எப்பவும் இருக்கவேணும். அவளுக்கு இதைவிடவும் ஒரு காவலில்லை. துணையில்லை. விளங்குதோ” என்றார். அத்தை பயபக்தியோடு அதை வாங்கி, அவரது காலைத் தொட்டு வணங்கி எழும் போதுதான் காட்டுக்குள் சிலர் கதைக்கும் சத்தம் கேட்டது. வீரையா விழிப்புற்று தடயங்களை அழித்தார். பொருட்களை அள்ளிக் கொண்டார். புறாக்கூடையை எடுத்துக் கொண்டார். அத்தையை தன்னோடு அழைத்துச் சிறிது தூரம் ஓடிச் சென்றார். மறைவிடத்தில் பதுங்கினார்கள். அத்தைக்கு மூச்சுத் திணறியது. அகப்பட்டால் மரணமன்றி வேறேது என்றுரைத்தபடி சத்தம் கரையும் திசை வரை காதை வளர்த்தார் வீரையா. அது புதிய போராளிகளின் அணி. பயிற்சி முடித்து காடு வழியாக நடத்திச் செல்லப்படுகிறார்கள் என்பதை வீரையா விளங்கிக் கொண்டார். “சரி நீங்கள் தாறத தந்திட்டு கெதியா வெளிக்கிடுங்கோ” அத்தை தன்னுடைய பணப்பையிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து நீட்டினாள். வீரையாவுக்கு அதில் திருப்தியில்லை. “எனக்கு நீங்கள் பிச்சை போடவேண்டாம். என்ர வேலைக்கு தகுந்த காசு குடுங்கோ” என்றார் வீரையா. “இந்த மாசம்தான் நான் சீட்டு எடுக்கப்போறன். காசு வந்ததும் உங்களிட்ட செவிடன் ரத்தினம் மூலமாய் சேர்ப்பிக்கிறன். அதுவரைக்கும் பொறுத்துக் கொள்ளுங்கோ” அத்தை சொன்னாள். வீரையா சரியென்று சொல்லி தலையசைத்து “ஊருக்குள்ள போகேக்க கவனமாய்ப் போ, எந்தக் கஷ்டம் வந்தாலும் என்ர பேரைச் சொல்லிப்போடாத, தெய்வத்தைக் காட்டிக் குடுத்த பாவம் உன்ர குலத்தையே அழிக்கும்” என்றார். “வீரையாவைச் சந்திக்க காட்டில் ஒரு பாதையிருக்கு. அது இயக்கத்திற்கும் தெரியாது, ஆர்மிக்கும் தெரியாது. அமெரிக்காவுக்கும் தெரியாது, அன்ரன் பாலசிங்கத்துக்கும் தெரியாது” என்று கள்வெறியில் புலம்பிய வியட்நாம் பெரியப்பாவை இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவினர் பிடித்துச் சென்றனர். இந்தச் செய்தியோடு ஊருக்குள் நுழைந்ததும் அத்தைக்கு திகில் பெருகிவிட்டது. குளித்து முடித்து சமையல் செய்தாள். உள்ளேயொரு ஆடை அணிந்து அதற்குள் உணவைப் பத்திரமாக பதுக்கிக் கொண்டாள். மீண்டும் மேலேயொரு ஆடை. மலங்கழிக்க செல்லும் பாவனையோடு போத்தில் தண்ணீரோடு காட்டிற்குள் புகுந்தாள். காடெங்கும் அசையும் மரத்தின் இலைகள், தன்னைக் கண்காணிக்கும் காலத்தின் கண்களென அத்தை பதறினாள். பதினைந்து நாட்களாக காட்டுக்குள்ளேயே அமர்ந்திருக்கும் பூதவதியின் நிலையெண்ணி அத்தையால் எதுவும் செய்ய இயலாமாலிருந்தது. பூதவதி காத்திருக்கும் கருங்காலி மரத்தடியில் வேறு ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருடைய கையில் சிறிய கோடாரியும், தலையில் பெரிய கடகமொன்றுமிருந்தது. அத்தை புதரொன்றுக்குள் படுத்துக் கொண்டாள். கருங்காலி மரத்தின் கீழே நின்றவர் பூமியின் கீழே புதையுண்டு போவதைப் பார்த்து கூக்குரலிட்டாள். சத்தம் எழவில்லை. சில நிமிடங்கள் கழித்து அவள் சுயத்திற்கு திரும்பிய போது பூதவதியின் மடியில் கிடந்தாள். “என்னம்மா, சின்னப்பிள்ளையள் மாதிரி காட்டுக்குள்ள எதையோ பார்த்திட்டு கத்தி மயங்கிப் போறியள்” “எடியே, அது எதோ இல்ல. எங்கட கருங்காலி முனி” “நீ முனியைப் பார்த்துக் கத்தி, புலி என்னப் பிடிச்சுக் கொண்டு போகப்போகுது” என்றாள் பூதவதி. “அது இனிமேல் நடக்காது. நான் வீரையாவ போய் பார்த்து காவலுக்கு எல்லாமும் செய்து எடுத்துக் கொண்டு வந்திட்டன்” சொல்லியபடி அந்தப் பொட்டலத்தைக் கொடுத்தாள். பொட்டலம், குருதிக் கறையோடு திருநீற்று வாசமெழும் வெள்ளை நிறச் சுண்டுவிரல் போலவிருந்தது. “இதை உன்ர கழுத்தில கட்ட வேணும். புலியில்லை. எலி கூட உன்னை நெருங்காது. வீரையா சும்மா ஆளில்லை. விளங்குதா” என்றாள் அத்தை. பூதவதி சாப்பிட்டு முடித்தாள். கழுத்தில் பொட்டலத்தை கட்டிவிட்டு அத்தை காட்டை விட்டுப் புறப்பட்டாள். பூதவதி காட்டின் நடுவே சீற்றம் கொண்டு உலரும் பேய் மகளாய் தேசம் பார்த்து வெறித்திருந்தாள். வீட்டுக்கு ஒருவர் கட்டாயமாக இயக்கத்தில் சேர்ப்பிக்கப்பட்டார்கள். பிள்ளைகளைக் காப்பாற்ற வழியற்று சனங்கள் காடுகளுக்குள் பாய்ந்தனர். இரவும் பகலும் துரத்தப்பட்டனர். படையில் பலாத்கார ஆட்சேர்ப்புக்கு எதிராகக் கொதித்தனர். தெய்வங்கள் உறைந்த வெளியில் பிள்ளைகள் பலி கேட்கப்பட்டனர். வீடுகளுக்கு நடுவே சின்னச் சுரங்கங்கள் வளர்ந்தன. மூச்சுப்பிடித்து மண்ணுக்குள் கிடந்தனர். புறாக்கூடுகளுக்குள், சுடுகாடுகளுக்குள், வைக்கோல் போருக்குள், பாழ் கிணற்றுக்குள், குளத்துக்குள் என காலத்தின் வேட்டைப்பற்களுக்குள் சிக்க விரும்பாத மாம்சங்களாய் தப்பிக்க எண்ணினர். “பூமியிலுள்ள எல்லாவற்றுக்கும் எங்கட சனங்களின் ரத்தம் தேவைப்படுகிறது” விசாரணை முடிந்து விடுவிக்கப்பட்டிருந்த வியட்நாம் பெரியப்பா சொல்லிக்கொண்டிருந்தார். வீரையா காட்டின் எந்தப் பகுதியில் இருக்கிறாரென அறியவே விசாரணை நடந்திருக்கிறது.“அது இயக்கத்திற்கும் தெரியாது. ஆர்மிக்கும் தெரியாது. அமெரிக்காவுக்கும் தெரியாது, அன்ரன் பாலசிங்கத்துக்கும் தெரியாது” என்று நான் சொல்லும்போதே எனக்கும் தெரியாது என்று சொல்லியிருக்கவேணும். அது என்ர பிழை தான். அதுக்காக என்னை நீங்கள் துரோகி எண்டு நினைக்க வேண்டாம். கிட்டண்ணா யாழ்ப்பாணத்தில இருக்கும் போது, அவருக்கு நிறைய மாம்பழங்கள் குடுத்திருக்கிறன்” என்றிருக்கிறார். கடுமையான மழை பெய்து கொண்டிருந்த அதிகாலையில் காட்டிற்குள் போராளிகளின் நடமாட்டத்தைப் பார்த்த வீரையா வேறொரு திக்கில் ஓட்டம் பிடித்தார். ஆனால் பச்சை நிறப்பட்டுத் துணியையும், கால்கள் கட்டப்பட்டிருந்த மாடப்புறாவையும் அவசரத்தில் விட்டுச் சென்றிருந்தார். அணியின் தலைமை அதிகாரி அந்த இடத்தை ஆய்வு செய்ய கட்டளையிட்டார். ஆழ ஊடுருவி அப்பாவிச் சனங்களைக் கொன்று குவிக்கும் வன்கவர் வெறிப்படையைத் தேடிய அணியினரின் கண்களில் வீரையாவின் தளம் சிக்கியது. மறைத்து வைக்கப்பட்ட திருநீற்று மூட்டையும், பெருந்தொகைப் பணமும், நகைகளும், அறுக்கப்பட்ட புறாத்தலைகளும் கைப்பற்றப்பட்டது. பல்வேறு புலனாய்வு விசாரணைகளுக்குப் பிறகு வீரையாவின் இடமென உறுதியாயிற்று. காடெங்கும் விரவி தேடத் தொடங்கினர் போராளிகள். பூதவதியைப் போல பலருக்கு வீரையா பொட்டலம் கட்டிக் காவல் செய்திருக்கிறார். சிலரைத் தான் இயக்கத்தாலும் நெருங்க முடிந்தது. ஆனால் வீரையாவை அவர்கள் அன்று மதியமே நெருங்கிப் பிடித்தனர். வீரையா தன்னிடமிருந்த புறாக்களை அவர்களை நோக்கி வீசி தற்காத்திருக்கிறார். காட்டிற்குள் மண்டியிட்டு கைகளை உயர்த்தி “தனது எஜமானர்களின் குருத்தையுண்டு வாழும் பிராணிகள் அழிந்துபோம்” என்று மட்டும் வீரையா அறம்பாடியிருக்கிறார். அவர் கைது செய்யப்பட்ட செய்தி, வன்னி நிலம் முழுக்க பாய்ந்தோடியது. அவரிடம் காவல் வாங்கியவர்கள் எச்சிலை விழுங்க முடியாமல் தொண்டையைப் பிடித்துக் கொண்டு மிரண்டனர். செவிடன் ரத்தினம் உட்பட வீரையாவிற்கும் சனங்களுக்கும் இடைத்தரகராக இருந்தவர்கள் பலரையும் இயக்கம் சடுதியாக கைது செய்தது. அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை கணக்கிடப்பட்டது. ஆனால் அவரிடம் சென்று வந்த சனங்களை விசாரணைக்கு அழைக்கவில்லை. அந்தக் குழப்பமே பலருக்கு உறக்கத்தை தரவில்லை. வீரையாவை இயக்கம் சுட்டுக் கொல்லுமென அத்தை நம்பினாள். பூதவதி காட்டை விட்டு வெளியேறும் எண்ணத்தில் இருந்தாள். அத்தை வேண்டாமென தலைப்பாடாய் அடித்துக் கொண்டாள். “எத்தன நாளைக்குத் தான் இப்பிடி காட்டுக்குள்ள இருந்து ஆந்தை மாதிரி முழிக்க ஏலும். நான் போறன். அங்க போய்ச் சாகிறன்” “எடியே, நான் கும்பிடுகிற தெய்வம் உன்னைக் காப்பாத்தும். நீ கொஞ்சம் குழம்பாம இரு” “இல்ல, இஞ்ச காப்பாத்திற உன்ர தெய்வம், எல்லா இடத்திலையும் காப்பாத்தும் தானே, என்னால இனியொரு நிமிஷமும் இஞ்ச இருக்கேலாது” பூதவதியை கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் அத்தை. கழுத்தில் கிடந்த பொட்டலத்தை அறுத்து எறிந்தாள் பூதவதி. கழுத்துப் புடைத்து கண்கள் சிறுத்து புறாவாக எழுந்து பறக்க முனைந்தாள். அடுத்த கணத்தில் அவளது தலை அறுபட்டு நிலத்தில் துடிக்க, காடு ஒரு குப்பியாக அவளது குருதியை நிரப்பிக்கொண்டது. அய்யோ என்ர பிள்ளை என்று அத்தை எழுப்பிய சத்தம் கேட்டு நள்ளிராப் போழ்தின் நாய்கள் மிரண்டன. தலைமாட்டில் கிடந்த லாம்பைத் தீண்டி ஊரெழும்பியது. அத்தை வெளிச்சம் எதுவுமின்றி காட்டுக்குள் நுழைந்தாள். பூதவதியின் இருப்பிடம் நோக்கி அலறித் துடித்தது தாய்மை. ஒவ்வொரு திரளிலும் காடு இருளால் அசைந்தது. அத்தை நெடுமூச்சு விட்டு பூதவதி…பூதவதி என்று அழைத்துக் கொண்டே கருங்காலி மரத்தைக் கடக்கும் போது, அதில் நின்ற உருவம் அவளை மறித்தது. அத்தைக்கு திடுக்கிடல் எதுவுமில்லை. “என்ர முனியப்பா, வழிவிடு. துர்க்கனவு. பிள்ளையைப் பார்க்கவேணும்” முனி எதுவும் கதைக்கவில்லை. அவளைப் போ என்பதைப் போல கையசைத்தது. அத்தை பூதவதியின் இருப்பிடத்திற்குப் போன போது அங்கு அவளில்லை. இருளின் தோல் கிழித்து தன் பிள்ளையைத் தேடினாள் அத்தை. இல்லை, இல்லை. பூதவதி இல்லை. கையில் அகப்பட்ட கற்றையான தலைமுடியைப் பற்றிக் கொண்டு கதறியழுதாள். அவளுடைய காலணிகள் அறுபட்டிருந்தன. பொட்டலத்தின் முடிச்சு அவிழாமல் கழன்று விழுந்திருந்தது. காடுறைத் தெய்வங்கள் கண் மலர்த்தி கசிந்த கண்ணீர் இரவை எரியூட்டின. கருங்காலி மரத்தின் கீழே நின்றிருந்த முனிக்கு தகவல் வந்தது. அது தனது ஆயுதத்தை எடுத்துக் கொண்டு வாகனம் நிற்கும் திசையை நோக்கிப் போனது. அந்தக் காட்டிற்குள் மறைந்திருந்த எட்டுக்கு மேற்பட்டவர்களை அழைத்துக் கொண்டு முனியின் வாகனம் புறப்பட்டது அத்தைக்கு தெரியவில்லை. ஐந்து நாட்கள் கழித்து பூதவதி இயக்கத்தின் பயிற்சி முகாமிலிருந்தாள். அவளுக்கு ஆயுதத்தை தொடப் பிடிக்கவில்லை. தன்னால் முடியாதென மறுத்தாள். சில நாட்களுக்குப் பின் பயிற்சிக்கு ஒத்துக் கொண்டாள். மூன்று மாதங்களில் பயிற்சி முடிந்திருந்தது. வீரையாவின் பொட்டலம் கட்டப்பட்டிருந்த கழுத்தில் இப்போது நஞ்சு மாலை அணிந்தாள். பயிற்சி நிறைவு பெற்று தர்மபுரத்தில் நிகழ்ந்த போராளிகள் சந்திப்பில் பூதவதியைச் சென்று அத்தை பார்த்தாள். அவளுக்குப் பிடித்த பயித்தம் பணியாரமும், முறுக்கும் கொண்டு போயிருந்தாள். “நீ ஓடி வந்திடு. உன்ன நான் எப்பிடியாவது காப்பாத்தி வைச்சிருப்பன்” “அம்மா, எங்களை மன்னார் சண்டைக்கு அனுப்பப் போயினம். அங்க இருந்து வட்டக்கச்சிக்கு ஓடி வர ஏலுமே” “உனக்கு உந்த நக்கல் புண்டரியம் மட்டும் உதிர்ந்து தீராது என்ன” “அம்மா, உன்னோட இருந்தால் சாகாமல் இருக்க முடியுமோ சொல்லு. இஞ்ச எப்பிடியாய் இருந்தாலும் மண்ணுக்குள்ள தான். இந்தச் சாவில ஒரு ஆறுதல்” “என்னடி பிரச்சாரம் பண்ணுறியே” “பின்ன, கருங்காலி முனி மட்டும் என்ன, பயந்து செத்துப்போன தெய்வமே, துணிஞ்சு நிண்டவர் தானே, அதுமாதிரி நானும் நிண்டு சாகிறன். விடன்” “கருங்காலி முனியும் நீயும் ஒண்டோடி, என்னடி கதைக்கிறாய். துவக்கை கையில தூக்கினால் உங்களுக்கு தெய்வமும் தெரியுதுல்ல. கருங்காலி முனி, அண்டைக்கிரவு நான் ஓடி வரேக்க வழி மறிச்சு நிண்டது. பிறகு கை காட்டி போ எண்டு உத்தரவு சொன்னதெல்லாம் உனக்குத் தெரியாது” “அண்டைக்கு அங்க நிண்டது முனியில்லை. புலி. மேஜர் பகீரதன். பத்து நாளுக்கு முன்னாலதான் கிபிர் அடியில வீரச்சாவு அடைஞ்சிட்டார். “நீ முனியெண்டு நினைச்சு அவரிட்ட கதைச்சதை என்னட்ட சொல்லிச் சிரிச்சவர்” என்றாள். “இவங்கள் முனியாவும் உருமறைப்பு செய்யத் தொடங்கிட்டாங்களே” “இப்ப அவரும் முனி தான். நீ போய்ப்பார். கருங்காலி மரத்தடியில நிற்பார்” பூதவதி சிரித்துக் கொண்டு விடைபெற்றாள். “என்ர தெய்வமே” என்று அத்தை தன்னுடைய பிராணத்தை இழுத்து வெளியேற்றினாள். வீட்டிற்கு வந்து அழுதழுது நொந்தாள். சனங்களை ஏமாற்றி காசு, நகை போன்றவற்றை வாங்கியமைக்காக வீரையாவுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதாக செய்திகள் உலவின. மன்னார் களமுனையில் பூதவதி சமராடினாள். பகைவர் அஞ்சும் போர்க்குணத்தோடு எல்லையில் நின்றாள். விடுமுறை அளித்தும் வீடு செல்ல மாட்டேனென அடம்பிடித்தாள். மன்னாரில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான களமெங்கும் அனலாடினாள். அத்தை வீட்டுக்கு வருமாறு கடிதத்துக்கு மேல் கடிதம் கொடுத்தனுப்பினாள். பூதவதி வருவதாயில்லை. முள்ளிவாய்க்காலில் அத்தையை கூடாரத்தில் வந்து பார்த்தாள். அத்தை இப்படியே இங்கேயே தங்கிவிடு என்று கைகூப்பினாள். பூதவதி கூடாரத்தை விட்டு தனது அணியினரோடு புறப்பட்டாள். சில நாட்களில் சனங்கள் நிலத்தைக் கைகூப்பி தொழுதனர். நிலம் அவர்களை மட்டுமல்ல தன்னையும் பறிகொடுத்தது. இறுதிப்போரில் காணாமல்போனவர்கள் பட்டியலில் பூதவதியுமொருத்தியானாள். அத்தை சோதிடர்கள் சொல்வதைக் கேட்டு பூதவதி வருவாள் என்று நம்பிக் காத்திருந்தாள். ஊருக்குள் எல்லோரும் மீளக்குடியமர்த்தப்பட்டனர். நீண்ட வருடங்களின் பின்னர் பன்றி வேட்டைக்குச் சென்று திரும்பியவர்கள் கருங்காலி மரத்தின் கீழே பெண்ணொருத்தி நின்று மறைவதைக் கண்டிருக்கிறார்கள். அவளுடைய கழுத்தில் சுண்டு விரலளவில் பொட்டலம் தொங்கிக் கொண்டிருந்ததாகவும், தோளில் புறாவொன்று கால்கள் கட்டப்பட்டு பறக்க முடியாமல் சிறகடித்ததாகவும் சொன்னார்கள். அத்தை மறுகணமே கருங்காலி மரம் நோக்கி ஓடிச் சென்று பூதவதி… பூதவதி… என்று நிலம் தோய அழுதாள். மரம் அசைய மேலிருந்து நறுமணம் கமழ பொட்டலங்கள் உதிர்ந்தன. அத்தை ஒன்றைப் பிரித்துப் பார்த்தாள். ரத்தம் கண்டி நாள்பட்டிருந்த பூதவதியின் கால் பெருவிரல். “என்ர தெய்வமே” யென அதைக் கண்களில் ஒத்திக்கொண்ட அத்தையை நடுநடுங்கிப் பார்த்துக் கொண்டிருந்தது காடு. அத்தையின் முன்னே தோன்றி நின்றனர் பல்லாயிரம் முனிகள். https://akaramuthalvan.com/?p=1167
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
தந்தையாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் யாயினிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்
-
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 03 திலகாவுக்கு புற்றுநோய் என்ற தகவலை சிவபாதசுந்தரம் மாமாவின் துவச வீட்டில் வைத்துத்தான் கேள்விப்பட்டோம். புதுக்குடியிருப்பிலிருக்கும் திலகாவை பார்க்க அம்மாவும் நானும் கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டோம். தீர்ந்த போரின் சிறிய எச்சங்களையும் அழித்தொழிக்கும் தீவிரத்தோடு வேலைகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன. “சமாதானத்திற்கான போர்” வெற்றியின் வீரப்பிரதாபங்கள் வீதிகளின் இருமருங்கிலும் காட்சியாகியிருந்தன. அப்பாவிச் சனங்களின் குருதியாற்றின் தடயம் அழிக்கப்பட்டு புனரமைக்கப்பட்ட வீதியில் வாகனங்கள் விரைந்தன. “பேரழிவு முடிஞ்சுது எண்டு பார்த்தால், மிஞ்சியிருக்கிற எங்களுக்குள்ளேயும் அது ஒளிஞ்சு கிடக்குது போல. பாவம் திலகா. எத்தனை இடியைத் தான் தாங்குவாள்” அம்மா புலம்பினாள். “இப்ப எல்லாருக்கும் உந்தக் கோதாரி கான்சர் தான் வருகுது. சண்டையில உவங்கள் அடிச்ச பொசுபரசுதான் வேலையக் காட்டுதாம்” பக்கத்து இருக்கையிலிருந்தவர் சொன்னார். அம்மா வலதுகையின் ஆட்காட்டி விரலால் கண்ணீரைத் தொட்டுச் சுண்டினாள். மீண்டும் பொல பொலவென கண்ணீர் பெருகியது. “அதைச் சும்மா விடுங்கோ. துடைக்க துடைக்கத்தான் எங்கையோ இருந்து உடைப்பு எடுக்குது. ஒரு பிரயாணத்தில அழுது தீர்ந்து போகிற அளவுக்கா எங்கட உத்தரிப்புகள். அதை துடைக்காம விடுங்கோ” பக்கத்து இருக்கைக்காரர் சொன்னார். அவருடைய தலையின் ஒருபகுதி பள்ளமாக இருந்தது. நான் பார்ப்பதை விளங்கிக் கொண்டவர் “சுதந்திரபுரத்தில விழுந்த அஞ்சு இஞ்சி ஷெல். மண்டையோட்ட வைச்சு பிச்சை கேக்கிறனெண்டு நினைச்ச தெய்வம் இரங்கிக் காப்பாத்தி போட்டுது” என்றார். பேருந்திலிருந்து இறங்கினோம். திலகா வீட்டை அடைவதற்கு பிரதான வீதியிலிருந்து கொஞ்சத்தூரம் நடக்க வேண்டியிருந்தது. சிலவருடங்களுக்கு முன்பு நானும் தவேந்திரன் மாமாவும் இப்படியொரு பொழுதில் இந்தப் பாதை வழியாக நடந்து போனோம். பெருமூச்சை விட்டு ஆசுவாசமானேன். தவேந்திரன் மாமா இருபதாண்டுகளுக்கு மேலாக இயக்கத்திலிருந்தவர். பல களமுனைகள் கண்டவர். உடலெங்கும் விழுப்புண் தழும்புகள். போர் மறவர். பகையறிந்த பெயர் திலகா. உக்கிரம் கொண்டாடும் காளி. தாக்குதல்களில் அவளணி பெற்ற வெற்றிகள் பெருநிரை. தவேந்திரன் மாமாவுக்கும் திலகாவுக்கும் நீண்ட வருடங்கள் காதலுறவு. இரண்டு பேரின் தளபதிமாரும் ஒப்புதல் அளிக்க திருமணம் நடந்தேறியது. தவேந்திரன் மாமாவை இனி களம் செல்ல வேண்டாமென தலைமைச் செயலகம் உத்தரவு பிறப்பித்தது. அதனை ஏற்கமறுத்து அறிக்கை எழுதினார். ஒருநாள் இரவு தவேந்திரன் வீட்டு முற்றத்தில் வந்து நின்ற வாகனத்தை விட்டு, தலைவர் இறங்கினார். இருவருக்கும் திருமணப் பரிசு வழங்கி வாழ்த்தினார். தடல்புடலாக சமைத்து விருந்துண்டார்கள். “தவா நீ இனிமேல் சண்டைக்கு போகவேண்டாம். படையணி நிர்வாகத்தில வேலையைப் பார்” என்றார் தலைவர். “இல்லை அண்ணா நான் லைனுக்கு போறன், நிர்வாகம் எனக்குச் சரிவராது” என்று மறுத்தான் போட்டார். “நிர்வாகம் சரி வராட்டி என்னோட வந்து நில், அது உனக்கு சரிவருமோ” என்று தலைவர் கேட்டதும் தவேந்திரன் மாமாவுக்கு ஒன்றும் ஓடவில்லை. சரியென்று தலையசைத்தார். இரவு தீர்வதற்கு முன்பு வாகனம் அங்கிருந்து புறப்பட்டது. அம்மாவுக்கு ஆயிரம் தவிப்புக்கள். திலகாவின் விதி நினைத்து கலங்கினாள். ஊருக்குள் ஆங்காங்கே மனிதர்களின் நடமாட்டமிருந்தது. முழுதாய் சனங்கள் இன்னும் மீளக்குடியேற்றப்படவில்லை. போராளிகளின் புழக்கத்திலிருந்த வீடுகள் இராணுவம் முகாம்களாகியிருந்தன. திலகாவின் வீடு மாமரங்களுக்கு நடுவே இருந்தது. படலையை ஒட்டியிருக்கும் வைரவர் கோவில் கவனிப்பாரற்றுக் கிடந்தது. “இந்தக் கோயில கூட்டித் துப்பரவு செய்து குடுத்திட்டு போவம்” என்றாள் அம்மா. உள்ளே நுழைந்ததும் பாழடைந்து சிதைந்திருந்த பதுங்குகுழியைக் கண்டேன். தென்னங்குத்திகள் உக்கிக் கிடந்தன. அதனுள்ளிருந்து வெளியேறிய வீமனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அம்மா வீமன் என்றழைத்ததும் மூன்று கால்களால் கெந்திக் கெந்தி ஓடிவந்தான். அவனுக்கு முன்னங்கால் ஒன்று இல்லாமலிருந்தது. அவனுடைய குழைவும் வாலாட்டலும் வரலாற்றின் எஞ்சுதல். அம்மாவின் கையயும் முகத்தையும் நக்கித் துள்ளிக் குதித்தான். வீமனின் சத்தம் கேட்டு சாய்மனைக்கதிரையில் அமர்ந்திருந்த திலகா திரும்பினாள். அம்மாவை அடையாளம் கண்டவுடன் எழுந்தோடி வந்து கட்டியணைத்தாள். அவளுடைய உடலில் கலக்கத்தின் நடுக்கம், ஆற்றாமையின் அலைச் சீற்றம். ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்ல இயலாத ஆகக் கொடிய இருளில் அம்மாவும் திலகாவும் விம்மி அழுதனர். கொஞ்ச நேரம் எதுவும் கதையாமல் நின்றிருந்தோம். வீமன் தளர்ந்த தனது குரலினால் ஆனந்தம் பொங்க எட்டுத் திக்குகள் நோக்கி குரைத்தான். திலகா என்னை அணைத்து முத்தமிட்டாள். மாமரங்கள் பூத்திருந்தன. அன்றிரவு திலகாவுக்கு பிடித்த பால்புட்டை சமைத்துப் பரிமாறினாள் அம்மா. வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்து நிறையைக் கதைத்தோம். திலகா என்னிடம் “ உனக்கு உந்த பங்கர் ஞாபகம் இருக்கோடா” கேட்டாள். “நானும் மாமாவும் நாலு நாளில அடிச்ச பங்கரெல்லே, எப்பிடி மறக்கேலும்”. அம்மா அடுப்படியில் அப்பத்திற்கு மா தயாரித்தாள். பிடித்தது அப்பமா? தவேந்திரன் மாமாவா? என்று கேட்டால் திலகாவின் பதில் எப்போதும் அப்பமாகவிருக்கும். நாளைக்கு காலையில் குளத்தடிக்குச் சென்று மீன் வாங்கிவரவேண்டும். அங்குள்ள குளத்து மீனுக்கு நிகர்த்த உருசை எந்தச் சமுத்திர மீனுக்கும் இல்லை. வீமன் என்று குரல் கொடுத்தேன். பதுங்குகுழிக்கு மேலே வந்து நின்று, திக்குகள் பார்த்து என்னிடம் ஓடிவந்தான். “வீமன் உந்த பங்கருக்குள்ளேயே தான் இருக்கிறான். கூப்பிட்டால் தான் வெளிய வருகிறான்” திலகா சொன்னாள். “இவ்வளவு சண்டைக்குள்ளையும் உயிர் தப்பி நிண்டிட்டான். இவனைப் பார்த்ததும் என்னால நம்ப முடியேல்ல” என்றேன். “வீமனுக்கு முன்னங்கால் போன மூன்றாவது நாள் இஞ்ச இருந்து வெளிக்கிட்டனான். எங்கட மெடிக்ஸ் ஆக்களக் கூப்பிட்டு மருந்து கட்டி உந்த பங்கருக்குள்ளேயே விட்டிட்டு போனான். இத்தனை வருஷம் கழிச்சு திரும்ப வந்தால் வாலாட்டிக் கொண்டு வைரவர் கோயில் கருவறைக்குள்ள படுத்திருக்கிறான்.” வீமன் எனக்கருகே விழித்திருந்தான். அவனுடைய மூன்று கால்களையும் தடவிக் கொடுத்தபடியிருந்தேன். கண்கள் துஞ்சி சுகம் கண்டான். திடுமென விழித்தோடி பதுங்குகுழிக்குள் புகுந்தான். அம்மா சாயத்தண்ணி போட்டுக் கொண்டு வந்தமர்ந்து, “நாளைக்கு காலம்பிறயே வைரவர் கோயிலைத் துப்பரவு செய்யவேணும், வெள்ளன எழும்பு” என்றாள். “இப்ப எதுக்கு அதெல்லாம் செய்து முறியிறியள். சும்மா இருங்கோ. நீ ஆறுதலாய் எழும்படா” என்றாள் திலகா. “நீ சும்மா இரு. வளவோட வாசலில இருக்கிற தெய்வத்தை பூசிக்காம விட்டு இன்னும் தரித்திரத்த அனுபவிக்க ஏலாது” அம்மா இறுக்கமாகச் சொன்னாள். திலகா பதிலேதும் கதையாமல் சாயத்தண்ணியைக் குடித்து முடித்தாள். பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனவைகள் பற்றி எதுவும் கதைப்பதில்லை என அம்மா உறுதி பூண்டிருந்தாள். மூவரும் ஒன்றாக உறங்கச் சென்றோம். லாம்பைத் தணித்து தலைமாட்டில் வைத்துக் கொண்ட அம்மா “வெள்ளனவா எழும்பு, உன்னை எழுப்புறத ஒரு வேலையாக்கிப் போடாத” என்றாள். அருந்திய மருந்துகளின் வெக்கையில் உறங்கியிருந்த திலகாவை அம்மா போர்த்திவிட்டாள். என்னை உறக்கம் சேரவில்லை. இந்த வீட்டில் அளவற்ற ஒளியும் மகிழ்வும் நிறைந்திருந்த தருணங்கள் கண்ணுக்குள் நிறைந்தன. ஞாபகத்தின் ஒவ்வொரு துளியும் இரவின் தாழ்வாரத்தில் கோர லயத்துடன் விழத்தொடங்கின. அடுப்படிக்குத் தண்ணீர் குடிக்க போனேன். குடத்தைச் சரித்து செம்பில் நிறைத்தேன். ஆசுவாசத்திற்கு எதுவுமில்லை. மீண்டும் படுக்கைக்குப் போனேன். தணித்து வைக்கப்பட்டிருந்த லாம்பின் வெளிச்சம் விழிப்புக்கு துணையாகவிருந்தது .” “அழுதால் பயனென்ன நொந்தால் பயனென்ன ஆவதில்லை; தொழுதால் பயனென்ன நின்னை ஒருவர் சுடவுரைத்த பழுதால் பயனென்ன; நன்மையும் தீமையும் பங்கயத்தோன் எழுதாப்படி வருமோ; சலியாதிரு ஏழைநெஞ்சே” என்றுரைத்த பட்டினத்தாரை நெய்யென என்னுள் ஊற்றினேன். உறக்கம் அழிந்தது. அகலென மனம் சுடர்ந்தது. லாம்பைக் கையிலேந்தியபடி வீட்டின் வெளியே வந்தேன். காற்றணைத்தது. ஆனாலும் மாமரங்கள் அசையாதிருந்தன. இருளினுள்ளே உடல் நுழைத்து அசையாது நின்றேன். பதுங்குகுழியிலிருந்து வெளிச்சம் பிறந்திற்று. அது நொடிக்கு முன் அணைந்த லாம்பின் வெளிச்சத்தை ஒத்திருந்தது. மெல்லமாக வீமன் என்று குரல் கொடுத்தேன். அவன் வருவதாயில்லை. ஆனால் பதுங்குகுழிக்குள் அவனுடைய நடமாட்டத்தின் ஒலி துல்லியமாகக் கேட்டது. முன்னோக்கி பாதங்களை வைத்து பதுங்குகுழியை நெருங்கினேன். வீமன் வருவதற்கும் போவதற்குமான பாதையே இருந்தது. என்னால் உள்ளே செல்ல முடியவில்லை. உள்ளே கட்டளைகள் வழங்கும் சத்தம் கேட்டது. எக்கோ – த்ரீ, எக்கோ – த்ரீ ஓவர் ஓவர்.. நான் என்ர பக்கத்தால ஒரு அணியை அனுப்புறன். உங்கட எட்டில வைச்சு ஒரு தள்ளுத்தள்ளுங்கோ. விளங்குதா! “ஓமோம்…இனியவன் நீ ரெண்டு நாகத்த எடுத்துக் கொண்டு போ. அது காணும்…டெல்டா – பைவ் நான் சொல்றது விளங்குதா” சமர்க்களத்தின் உரையாடல்கள் தொடர்ந்தன. வீமன் யாரையோ நக்கிக்கொடுத்து குழையும் சிணுங்கல். ஒளியூறித் தளும்பும் பதுங்குகுழியின் மீது ஏறிநின்று “வீமன் வெளிய வா” என்று நானும் கட்டளையிட்டேன். சில நொடிகளில் வெளியே வந்து “ தம்பியா, சுகமோடா” என்று கேட்டார் தவேந்திரன் மாமா. அதிகாலையில் விழித்தெழும்பிய அம்மா தலைமாட்டில் கிடந்த லாம்பையும் என்னையும் காணாது தவித்தாளாம். அம்மாவின் திகைப்பும் அல்லலும் திலகாவை எழுப்பியிருக்கிறது. ஒரு டோர்ச் லையிற்றை கையில் பிடித்தபடி திலகா “வீமன்” என்று குரல் கொடுத்திருக்கிறாள். பதுங்குகுழியிலிருந்து பாய்ந்து சென்றிருக்கிறது. மூவருமாய் சேர்ந்து என்னைத் தேடிப் பார்த்திருக்கிறார்கள். திலகாவுக்கு கணத்தில் உறைத்து “வைரவர் கோவிலுக்கு போய் துப்பரவு செய்யிறானோ” என்றிருக்கிறாள். அங்கு சென்றிருக்கின்றனர். லாம்புமில்லை நானுமில்லை. முற்றத்திலிருந்த என்னுடைய காலடித்தடத்தைப் பார்த்து பதுங்குகுழியை வந்தடைந்து இருக்கிறாள் அம்மா. “அவன் இதுவரைக்கு வந்திருக்கிறான் திலகா. கால்தடம் இருக்கு” “இஞ்ச எதுக்கு வந்தவன். அதுவும் இந்த இருட்டுக்குள்ள” திலகா பங்கருக்கு மேலே ஏறி, மூடியிருந்த மண்ணையும் செடிகளையும் அகற்றி இடுக்கு வழியாகப் பார்த்தபோது உள்ளே நான் மயங்கிக் கிடந்திருக்கிறேன். திலகா பதறாமல் “அவனுள்ள படுத்திருக்கிறான்” என்று அம்மாவிடம் சொல்லியுள்ளாள். “பாம்பு பூச்சி இருந்தாலும்” என்று சொல்லி உள்ளே நுழைய முனைந்த அம்மாவுக்கு எந்தப்பக்கம் வாசலென்று தெரியவில்லை. “இருங்கோ வீமன் போகத்தான் ஒரு சின்ன வாசல் இருக்கு. நாங்கள் சைட்டால ஒரு பாதை வெட்டலாமென்று திலகா மண்ணை வெட்டி வீசியிருக்கிறாள்” அவளுக்கு நடப்பதெல்லாம் குழப்பத்தையே தந்தது. ஆனால் அம்மாவிடம் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. வாசலை உண்டு பண்ணி உள்ளே நுழைந்த திலகாவுக்கு பதுங்குகுழியினுள்ளே அடர்ந்திருந்த வாசனை வெறிகொள்ளச் செய்தது. அவள் மூலை முடுக்கெல்லாம் தவா…தவா… என்று கதறியபடி மோதுண்டாள். ஆலாலமுண்டவனை பூமி குடைந்து தேடியரற்றும் அணங்கானாள். வெளியே நின்ற அம்மா உள்ளே ஓடிவந்தாள். திலகாவை அம்மா கட்டுப்படுத்தமுடியாமல் திணறினாளாம். என்னைத் தட்டியெழுப்பியும் சுயநினைவற்று மயங்கிக் கிடந்திருக்கிறேன். நடந்தவற்றையெல்லாம் பின்பு அம்மா சொன்னாள். அடுத்தநாள் பதுங்குகுழியைத் துப்பரவு செய்தோம். வைரவர் கோவிலில் இருந்த விக்கிரத்தையும், சூலத்தையும் தூக்கி வந்து பதுங்குகுழிக்குள் பிரதிஷ்டை செய்தோம். அந்த ஊரிலிருந்த சிலருக்கு அன்னதானம் கொடுத்தோம். மூன்று கால்களோடு வீமன் பதுங்குகுழிக்குள் உறங்கிக் கிடந்தான். “பங்கர் வைரவர்” என்றனர். அம்மாவும் நானும் அங்கிருந்து புறப்பட்ட போது பதுங்குகுழிக்குள் படுத்திருந்த வீமனிடம் “நாங்கள் போய்ட்டு வாறம் தவேந்திரன் மாமா” என்றேன். மூன்று கால்களும் திரிசூல இலைகளாய் எழுந்து ஒளிர விடைகொடுத்தான் எங்கள் வீமன். https://akaramuthalvan.com/?p=1134
-
கிழக்கின் தனித்துவ அரசியலை பிரதேசவாதமாகக் கூறுவது யாழ். மையவாதக்கட்சிகளின் சூழ்ச்சி
கிழக்கின் தனித்துவ அரசியலை பிரதேசவாதமாகக் கூறுவது யாழ். மையவாதக்கட்சிகளின் சூழ்ச்சி — தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் — இப் பத்தியிலே கூறப்போகின்ற விடயம் ஏற்கெனவே இப்பத்தித் தொடரில் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயம்தானெனினும் அதனை மீண்டும் ஒரு முறை அழுத்திக் கூற வேண்டியுள்ளது. அது கிழக்கின் தனித்துவ அரசியல் என்கின்ற விடயமாகும். கிழக்கின் தனித்துவ அரசியல் எனும்போது அதனை வடக்கிற்கு எதிரான அல்லது வடகிழக்கு இணைப்புக்கு எதிரான அல்லது வடக்கு கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாட்டிற்கு முரணான பிரதேச வாதமாகப் பார்க்கின்ற தவறான புரிதலும் பிழையான விளக்கமும் இல்லாமலில்லை. இந்தத் தவறான புரிதலையும் விளக்கத்தையும் ‘தமிழ்த் தேசிய’ க் கட்சிகளே வேண்டுமென்று முன்னெடுக்கின்றன. கிழக்கின் தனித்துவ அரசியல் என்பதன் தாற்பரியத்தைத் தெளிவுபடுத்துவதே இப்பத்தியின் பிரதான நோக்கமாகும். கிழக்கு மாகாணத் தமிழர்கள் முகம் கொடுக்கும் சமூக பொருளாதார அரசியல் பிரச்சினைகளும் சவால்களும் வடக்கு மாகாணத் தமிழர்கள் எதிர்நோக்கும் சமூக பொருளாதார அரசியல் பிரச்சினைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட சில தனித்துவமான பரிமாணங்களைக் கொண்டவை என்பதை முதலில் தெரிந்தும்-தெளிந்தும்கொள்ள வேண்டும். அப்படித் தெரிந்தும்-தெளிந்தும் கொள்ளும்போது சமூக பொருளாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அரசியற் சமன்பாடு வடக்கு மாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் வெவ்வேறானவை என்பதும் இரண்டு மாகாணங்களுக்கும் ஒரு பொதுவான அரசியற் சமன்பாடு பொருந்தாது என்பதும் புரியவரும். 1949 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்ற காலத்திலிருந்து பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணிக் காலமென்றும் அதற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காலமென்றும் இப்படி எல்லாக் காலத்திலும் ‘தமிழ்த் தேசியம்’ என்ற கருத்தியலின் அடிப்படையில் இக்கட்சிகளையே அவற்றின் சரிபிழைகளுக்கப்பால் இன்றுவரை கிழக்கு மாகாணத் தமிழர்கள் பெரும்பான்மையாக ஆதரித்து வருகிறார்கள். இதன் விளைவு, இன்று கிழக்கு மாகாணத் தமிழர்கள் இருந்ததையும் இழந்து நிர்க்கதியாகி நிற்கின்றனர். அம்பாறை மாவட்டத்தில் (முன்னாள் நீதி அமைச்சரும் உள்நாட்டலுவல்கள் அமைச்சருமாயிருந்த அமரர் கே. டபிள்யு. தேவநாயகம் பா.உ. அவர்களால் கால்கோள் இடப்பெற்று முன்னகர்த்திக் கொண்டுவரப்பட்ட) குறைந்தபட்சம் கல்முனை வடக்குத் தமிழ்ப் பிரதேச செயலக விவகாரத்தைக்கூட வென்றுதர இயலாத அரசியல் கையாலாகாத்தனத்தையே வடக்கு மாகாணத்தைத் தளமாகக் கொண்ட இத் ‘தமிழ்த் தேசிய’ க் கட்சிகள் வரலாற்றில் நிரூபித்துள்ளன. இந்தக் கட்டத்திலாவது கிழக்கு மாகாணத் தமிழர்கள் கிழக்கு மாகாணத்திற்கு ஒரு செயற்பாட்டுத் திறன்மிக்க அரசியல் வியூகத்தை -அணுகுமுறையைக் காலம் கடந்தாவது வலுவாகக் கட்டமைக்க வேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ளது. இதனையே ‘கிழக்கின் தனித்துவ அரசியல்’ என இப் பத்தி அடையாளப்படுத்துகிறது. ஏற்கெனவே எனது அரசியல் பத்தித் தொடர்களில் குறிப்பிட்டது போல, கிழக்கு மாகாணத் தமிழர்கள் அடிப்படையில் மூன்றுவகைச் சவால்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளனர்/வருகின்றனர். ஒன்று; வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத் தமிழர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக முகம் கொடுக்கும் பௌத்த சிங்கள பேரினவாத ஒடுக்குமுறை அரசியல் மற்றும் தமிழ் மக்களின் சமூக பொருளாதார இருப்பைப் பாதிக்கும் பாரபட்சமான நடவடிக்கைகள். இவற்றைத் தடுத்து நிறுத்தும் அரசியல் வல்லமை இதுவரையிலும் வடக்கைத் தளமாகக் கொண்ட ‘தமிழ்த் தேசிய’க் கட்சிகளிடம் இல்லை; இனிமேலும் இருக்கப் போவதுமில்லை. மற்றையது; அரசியல் செல்வாக்கினதும் பொருளாதாரப் பலத்தினதும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பலவீனத்தினதும் பின்னணியில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் மதவாத இனவாத சக்திகளினால் காலத்திற்குக் காலம் பாரம்பரிய தமிழ்ப் பிரதேசங்களிலும் தமிழ் மக்களிடையேயும் ஏற்படுத்தப்பெற்றுவரும் (மதமாற்றம் உட்பட) இஸ்லாமிய விஸ்தரிப்பு வாதம். ‘தமிழ் பேசும் மக்கள்’ எனும் வார்த்தைப் பிரயோகத்தினால் மட்டும் கிழக்கில் தமிழ்-முஸ்லிம் உறவை ஓதிய வடக்கைத் தளமாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கட்சிகளால் கிழக்கின் முஸ்லிம் அரசியல்வாதிகளினால் கிழக்குத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட எந்த பாரபட்சமான நடவடிக்கைகளையும் தடுக்க முடியவில்லை; இனிமேலும் முடியாது. அடுத்த சவால்; கிழக்கு மாகாணத் தமிழர்களின் நலன்களை அறவே நாட்டத்தில் கொள்ளாத வடக்கைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியற் கட்சிகளினால் தமிழ்த் தேசிய அரசியல் எனும் பெயரில் அல்லது போர்வையில் முன்னெடுக்கப்பட்ட/ முன்னெடுக்கப்பட்டுவரும் யாழ்மேலாதிக்க மேட்டுக்குடி அரசியல். தமிழ்த் தேசிய அரசியல் எனும் பெயர்ப் பலகையைத் தாங்கி வடக்கைத் தளமாகக் கொண்ட தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் யாழ் மேலாதிக்க மேட்டுக்குடி அரசியலானது, அடிப்படையில், யாழ்குடா நாட்டுக்குள்ளே பெரும்பான்மையாக வாழுகின்ற குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களைப் பேணிப் பாதுகாப்பதற்காக, யாழ்குடா நாட்டுக்குள் வாழும் விளிம்பு நிலைத் தமிழ் மக்களினதும் மற்றும் யாழ்குடா நாட்டிற்கு வெளியே வன்னிப் பிரதேசம் உட்பட கிழக்கு மாகாணத்தில் வாழும் விவசாய மனோபாவம் கொண்ட தமிழ் மக்களினதும் நலன்களைப் பலி கொடுக்கத் துணிகின்ற வர்க்கக் குணம்சத்தையே கொண்டுள்ளது. சேர். பொன்னம்பலம் இராமநாதனுடைய காலத்திலிருந்து இன்றுவரை இக்குணாம்சத்தில் மாற்றமில்லை; இனிமேலும் மாற்றமுறுவதற்கான சாத்தியக் கூறுகளும் தென்படவில்லை. மேற்கூறப்பெற்ற மூன்று சவால்களுக்கும் கிழக்கு மாகாணத் தமிழர்கள் முகம் கொடுக்க வேண்டியேற்பட்ட காரணங்களினால், கடந்த காலங்களில் அரசாங்கங்களினால் அவ்வப்போது அறிமுகம் செய்யப்பட்ட பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள்-விவசாய நடவடிக்கைகள்-உள்ளூராட்சி சீர்திருத்த நடவடிக்கைகள்-தேர்தல் தொகுதி மற்றும் உள்ளூராட்சி மற்றும் நிர்வாக அலகுகளின் எல்லை மீள் நிர்ணயங்கள்-நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள்-வன் செயல் இழப்பீட்டுக் கொடுப்பனவுகள்-வறுமை ஒழிப்பு திட்டங்கள்-அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் என எல்லா விடயங்களிலுமே புறக்கணிப்புக்குள்ளும் பாரபட்சங்களுக்கும் உள்ளான சமூகமாகவே கிழக்கு மாகாணத் தமிழர்கள் இன்றுவரை இருந்து வருகின்றனர். உதாரணங்கள் சில * 1959 இல்நடந்த தேர்தல் தொகுதி எல்லைகள் மீள் நிர்ணயத்தின் போது அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் வாழ்ந்த தமிழர்களுக்கு (தற்போதைய அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கு) பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்வதில் தமிழரசுக் கட்சி அக்கறை செலுத்தவில்லை *1965இல் தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கம் அமைத்து தமிழரசுக் கட்சியின் சார்பில் காலஞ்சென்ற மு. திருச்செல்வம் ஸ்தலஸ்தாபன (உள்ளூராட்சி) அமைச்சராகவிருந்த போதிலும் கல்முனைத் தமிழர்களின் நியாயமான கோரிக்கையான கல்முனை வடக்கு உள்ளூராட்சி அலகை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. *1976 இல் நடந்த தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயத்தின் போது வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு (புதிய) தேர்தல் தொகுதியை பெற்றுக் கொள்வதற்காக திருகோணமலை மாவட்டத்தில் (புதிய) சேருவிலத் தொகுதி உருவாவதற்குத் தமிழரசுக் கட்சி விட்டுக் கொடுத்து திருகோணமலை மாவட்டத்திற்கு இருந்துவந்த இரண்டு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாகக் குறைவதற்குக் காரணமாயிருந்தமை. *1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில் , இராசதுரையையும் காசிஆனந்தனையும் வேட்பாளர்களாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி நிறுத்தி (காசியானந்தனை தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில்) மட்டக்களப்புத் தமிழ் மக்களின் ஒற்றுமையைக் குறைத்தமை; தமிழ்-முஸ்லிம் உறவுக்கும் குந்தகம் விளைவித்தமை. *1994 பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் (திகாமடுல்ல தேர்தல் மாவட்டம்) தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை வேட்பாளராக யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மாவை சேனாதிராசாவை நிறுத்தியதன் மூலம் அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்குச் சாத்தியமான ஒரேயொரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும் பறிபோகச் செய்தமை. *ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் முன்வைக்கப்பட்ட தென்கிழக்கு முஸ்லிம் மாகாணக் கோரிக்கைக்கு அதனால் பாதிக்கப்படக்கூடிய அம்பாறை மாவட்டத் தமிழர்களுடன் கலந்தாலோசியாது தமிழர் விடுதலைக் கூட்டணி அக்கோரிக்கையை நிபந்தனையின்றி ஆதரித்தமை. *2012 இல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் 11 உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 07 உறுப்பினர்களைக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு முதலமைச்சர் பதவியைக் காவு கொடுத்தமை. (விரிவஞ்சி உதாரணங்கள் மட்டுப்படுத்தப்படுகின்றன) மேற்குறிப்பிடப்பெற்ற மூன்று சவால்களிலும் முதலிரண்டு சவால்களும் (பௌத்த சிங்களப் பேரின வாதமும், இஸ்லாமிய விஸ்தரிப்பு வாதமும்) வெளித் தெரியக்கூடிய புறப்பகைகள் ஆகும். ஆனால், மூன்றாவது சவாலான யாழ் மேலாதிக்க வாதம் உள்ளிருந்து அரித்துக்கொல்லும் உட்பகையாகும். கிழக்கு மாகாணத் தமிழர்கள் உட்பகையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு அரசியலில் சுதந்திரமாக இயங்கும்போது மட்டுமே புறப்பகைகளை வெல்ல முடியும். இதுவே யதார்த்தம். இந்த யதார்த்தத்தை எதிர்மறையாக நோக்காது புரிந்துணர்வுடன் நேர்மறையாக நோக்குவதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் வடமாகணத்தைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும். அப்படியானால் இக் கட்சிகள் செய்ய வேண்டியது என்ன? எதிர்காலத்தில் இலங்கையில் ஜனநாயக ரீதியாக நடைபெறப்போகின்ற எல்லாத் தேர்தல்களிலும் அது உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலாயிருந்தாலென்ன-மாகாண சபைத் தேர்தலாயிருந்தாலென்ன-பாராளுமன்றப் பொதுத் தேர்தலாயிருந்தாலென்ன தனித்தனியே போட்டியிடாமல் தத்தமது கட்சி வேட்பாளர்களை கிழக்கு மாகாணத்தைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகளுக்கூடாக நிறுத்த வேண்டும். அது தமக்கு ஏற்புடையதல்ல என உணரும் கட்சிகள் தேர்தல்களிலே கிழக்கு மாகாணத்தில் போட்டியிடாமல் ஒதுங்கியிருந்து கிழக்கு மாகாணத்தைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகளுக்குப் புரிந்துணர்வோடு வழிவிடவேண்டும். இது நடைமுறைச் சாத்தியமானால் நன்று. அப்படி நடைபெறாவிட்டால் கிழக்கு மாகாணத் தமிழர்கள் செய்யவேண்டியது என்ன? மேற்கூறியவாறு, வடமாகாணத்தைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் கிழக்கு மாகாணத்தைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகளுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வர மறுத்தால் அல்லது பின் வாங்கினால் கிழக்கு மாகாணத் தமிழர்கள் இனிவரும் எல்லாத் தேர்தல்களிலும் வடக்கைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் எதுவென்றாலும் சரி கிழக்கில் தனித்தனியாகப் போட்டியிடும் அவ்வாறான கட்சிகளையெல்லாம் முற்றாக நிராகரித்து கிழக்கு மாகாணத்தைத் தளமாகக் கொண்ட கட்சிகளுக்கு அல்லது கட்சிகளின் கூட்டுக்கு மட்டுமே வாக்களித்திடச் சங்கற்பம்கொள்ளவேண்டும். இத்தகைய அரசியல் வியூகம் ஒன்றுதான் எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத் தமிழர்களை ஓரளவுக்கேனும் பாதுகாக்கும். இந்த வியூகம் எந்த வகையிலும் வடக்கு மாகாணத்திற்கு எதிரானதல்ல. எதிர்காலத்தில் இலங்கை அரசியலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஓர் ஒற்றை மொழிவாரி மாகாண அதிகார பகிர்வு அலகாகவரும் ‘அற்புதம்’ நிகழுமாயின் அந்த அற்புதம் நிகழ்கின்ற வேளையில் கிழக்கு ‘இல்லை’ யென்று ஆகிவிட்டால் வடக்கோடு எதனை (இல்லாததை) இணைப்பது என்று ஆகிவிடும். எனவே, மேற் கூறப்பெற்ற அரசியல் வியூகமானது வடக்கிற்கு எதிரானது அல்ல; கிழக்கைக் காப்பாற்றித் தக்க வைப்பதற்கானதென்பதை வடக்கைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும். அதேவேளை, கிழக்கைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியற் கட்சிகள் கிழக்கின் தனித்துவ அரசியலென்பது பிரதேச வாதமாகப் பிறழ்வடையாதிருக்கும் வகையில் அரசியலில் அவதானமாகவும் அறிவுபூர்வமாகவும் செயற்பட வேண்டும். ஏனெனில் அத்தகைய பிறழ்வு எதிரிகளுக்கு வாய்ப்பாகிவிடும். அதிலும் எச்சரிக்கை வேண்டும். ‘கிழக்கின் தனித்துவ அரசியல்’ எனும் கருத்தியலைப் பிரதேச வாதமாகவோ அல்லது தமிழ்த் தேசியக் கருத்தியலுக்கு எதிரானதாகவோ நோக்காது அதனைக் கிழக்கைக் காப்பாற்றுவதற்கான மூலோபாயம் என வடக்கைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியற் கட்சிகள் யாவும் உணர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு உணர மறுக்கின்ற வடக்கைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியற் கட்சிகளையெல்லாம் கிழக்குத் தமிழர்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும். இந்த அணுகுமுறை ஒன்றே கிழக்கைத் தக்க வைப்பதற்கான அரசியற் சமன்பாடு ஆகும். https://arangamnews.com/?p=10073
- மத அடையாள தேசம்: உருவாகிவிட்ட யூத இஸ்ரேலும், இந்துத்துவம் உருவாக்க விரும்பும் இந்து இந்தியாவும்
-
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 02 நான் வீட்டில் தங்குவதில்லை. கோயில் குளமென்று துறவியாக அலைந்தேனில்லை. ஈருருளியில் வன்னிநிலம் அளந்து மகிழ்ந்தேன். கம்பீரத்தில் அணையாத தணலின் சிறகுகள் என்னுடையவை. செல்லும் பாதைகள் தோறும் விடுதலையின் மகிழ்வு திகழ்ந்தது. “நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி உனக்கு அதைத் தருவேன்” என்று தம்மைத் தியாகித்த போராளிகளைக் கண்டு நெஞ்சுள் வணங்கினேன். அவர்களால் அளிக்கப்பட்ட வாழ்வின் முழுமையை உணர்ந்தேன். நண்பகல் வெயில் பூமியில் விரியும் போது மாவீரர் துயிலுமில்லங்களுக்குச் செல்வது பிடிக்குமெனக்கு. கல்லறைகளும் நடுகற்களும் பெருங்கனவின் உப்பளமாய் பளபளக்கும். மண்டியிட்டுத் தோற்றுப்போகத் தெரியாத ஆதீரத்தின் தணல் முற்றத்தில் அமர்ந்திருப்பேன். கண்ணீர் விம்மிக் கசியும். மேற்கில் மெல்லச் சூரியன் புதைந்தும் பிரகாசம் எழும். தியாகிகளின் மூச்சு மண்ணிலிருந்து விண்ணுக்கெனப் பாயும் தேவகணமது. அன்றைக்கு கிளிநொச்சியில் லேசாக மழை தூறியது. துயிலுமில்லத்திலேயே அமர்ந்திருந்தேன். தும்பிகள் நடுகற்களிலும் கல்லறைகளிலும் அந்தரத்தில் பாவி அசையாமல் நின்றன. விதைகுழிகளை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மண்வெட்டிகள், அலவாங்குகள், குழி அளவிடும் கயிறுகளென எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கொட்டில் நோக்கி ஓடினர். நொடிகளில் திக்கெல்லாம் இடிமுழங்க, மின்னல் நகங்கள் புலன்கீறின. ஆவேசமுற்ற மழையின் கூர்வாள்கள் மூர்க்கமாய் மண்ணில் இறங்கின. நிரை நிரையாக வாய்பிளந்து காத்திருக்கும் விதைகுழிகளுக்குள் வான்மழை நிரம்பக் கண்டேன். துயிலுமில்லத்தின் முகப்பு வாயிலில் வித்துடல்ளைச் சுமந்த ஊர்திகளிரண்டு நுழைந்தன. ஊர்திகளிலிருந்து வித்துடல்கள் இறக்கப்பட்டு பீடத்தில் வைக்கப்பட்டன. அழுகுரல்கள் காலத்தின் மீதியைப் படபடக்கச் செய்தன. ஈரத்திலும் சிவந்த புலிக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தது. மாவீரர் விதைப்பு பாடல் ஒலித்தது. குண்டுகள் முழங்கின. மழை விடுவதாயில்லை. மண்ணைக் காத்தவர்களை மண் விதைத்தது. மாவீரர் துயிலுமில்லத்தில் விதைகுழி தயார்படுத்துவதற்கான ஊதியத்தைப் பெறுகையில் குற்றவுணர்ச்சியாக இருக்கிறதென பொறுப்பாளரிடம் திருப்பிக் கொடுத்து “நாட்டுக்காக நான் இதையேனும் செய்கிறேன், என்னை அனுமதியுங்கள்” என்றிருக்கிறார் ஒருவர். “இப்பவும் நீங்கள் நாட்டுக்காகத் தான் உழைக்கிறியள், ஊதியத்தை வாங்குங்கோ” பொறுப்பாளர் சொல்லி கையில் திணித்திருக்கிறார். இந்தச் சம்பவத்தை வீட்டிற்கு வந்திருந்த பொறுப்பாளர் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். குப்பிவிளக்கில் புகைகுடித்து கதை படித்துக் கொண்டிருந்த என்னுள்ளே அந்தப் பணியாளரின் பெயர் அப்படித்தான் தையலிட்டது. ஆரூரன். எத்தனையோ தடவைகள் அவரைப் பார்த்திருக்கலாம். புன்னகைத்திருக்கலாம். அவர் வசிக்கும் இடத்தை பொறுப்பாளரிடம் கேட்டுத் தெரிந்தேன். அதிகாலையிலேயே உருத்திரபுரத்துக்கு ஈருருளியை உழக்கி வீட்டை அடைந்தேன். வாசலில் அமர்ந்திருந்து சுருட்டுப் புகைத்த படுகிழவரொருவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு “என்ன விஷயம் மோனே” என்று கேட்டார். “ஆரூரனைப் பார்க்க வந்தனான்” “அவன் வாய்க்காலுக்கு குளிக்கவெல்லே போயிட்டான்” படுகிழவர் இருமி இருமி மூச்சுவிட்டார். “வாய்க்காலுக்கு எப்பிடி போக வேணும்” படுகிழவன் சொன்ன பாதையில் ஈருருளியை உழக்கினேன். வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த ஆரூரனைக் கண்டேன். ஏற்கனவே துயிலுமில்லத்தில் நிறையத் தடவைகள் பார்த்த முகம். சுருட்டை முடி. வெளிப்பிரிந்த பெரிய உதடுகள். கண்கள் தளும்பி அவரைக் கட்டியணைத்து கதைக்கத் தோன்றியது. மலர்கள் புன்னகைக்கும் அந்த விடிகாலைக்கு சொற்கள் அவசியமில்லாதிருந்தன. நறுமணம் உருகி கதிராக எழுந்தது. எதுவும் கதையாமல் அவரைப் பார்த்துவிட்டு திரும்பினேன். பிறகான நாட்களில் ஆரூரனும் நானும் நண்பர்களானோம். அமைதிப்படையினரால் சங்ஹாரம் செய்யப்பட்ட தந்தை, தாயினது உடலங்களை வீட்டினுள்ளேயே வைத்துப் போர்வையால் மூடிய போது இவருக்கு எட்டு வயதாம். பெற்றோரின் உடலங்களை புதைக்க முடியாமல் பூமியின் மேல் வைத்துவிட்ட காயத்தில் கொதித்தெழும்பும் சீழின் நொம்பலம் தாங்காது, எப்போதாவது “அம்மா” என்றழைத்து பெருமூச்சுடன் கண்ணீர் உகுப்பார். அப்போதெல்லாம் ஒரு துளி மழை பூமியில் விழும். “மேலயிருந்து அம்மா என்னை அழவேண்டாமெனச் சொல்லுறா” எனும் ஆரூரனை பல நாட்களுக்கு பிறகு வீரச்சாவு வீடொன்றில் சந்தித்தேன். திறக்கப்பட முடியாதபடி சீல் செய்யப்பட்டிருந்த பெண் போராளியின் வித்துடல் அங்கே கொண்டுவரப்பட்டது. இயக்கம் கடுமையான இழப்பைச் சந்திக்கும் போர்முனையாக மன்னார் மாறியிருந்தது. நிலத்தின் வீழ்ச்சியோசையின் முன் நிர்க்கதியாக நிற்கும் தனது காதுகள் செவிடாகவும், யுத்த ரதத்தின் சக்கரங்களில் சகதியாய் வழியும் வீரச்சாவுகளைக் கண்டு பதற்றமுறும் தனது கண்கள் குருடாகவும் ஆகட்டுமென இறையிடம் இரந்து கேட்பதாகச் சொன்னார். மூர்ச்சையாகி சில நொடிகளுக்கு பின்பு கலக்கமுற்ற கண்களைத் துடைத்துக் கொண்டு சிறுகச் சிறுக நம் சர்வமும் தீர்கிறது, ஒவ்வொரு நாளும் துயிலுமில்லத்திற்கு நாற்பதுக்கு மேற்பட்ட வித்துடல்கள் வருகின்றன. இரவிரவாக விதைகுழிகள் தயார்படுத்தப்படுகின்றன. பூமியைத் தோண்டத் தோண்ட வந்து விழும் கட்டிமண்ணைப் போல் வித்துடல்கள் பொலிகின்றன. பணியாளர் அணியிலிருந்த ஒருவரின் மகளும் வீரச்சாவு. விசுவமடு துயிலுமில்லத்தில் விதைப்பு நடந்தது என்றார். வன்னியில் மூன்றுக்கும் மேற்பட்ட துயிலுமில்லங்கள் இருந்தன. அப்படியெனில் ஒருநாள் என்பது எத்தனை எத்தனை விதைப்புக்களால் ஆனது என் தெய்வமே! நானும் ஆரூரனும் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்குச் சென்றிருந்தோம். அன்றும் கடுமையான மழை. வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. உள்ளூர் சனங்கள் கோவிலில் நிறைந்திருந்தனர். வானத்தைப் பிளந்த அசுர மழை எங்கள் பாதையை மூடியிருந்தது. இருவரும் கோவிலில் தங்கிவிடலாமென்று முடிவெடுத்தோம். எனக்கு உறக்கம் வரவில்லை. ஆரூரன் இரண்டு கைகளையும் கூப்பி கவட்டுக்குள் கொடுத்து குறண்டிக் கிடந்தார். “நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்; நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்” என்றுருகி பதிகம் பாடினேன். உறக்கம் வராவிடிலும் சோர்வு அழுத்தி தலை சாய்த்து சில நிமிடங்களில் திடுக்கிட்டு விழித்தேன். அருகில் உறங்கிக் கொண்டிருந்த ஆரூரன் பிதற்றியபடி விம்மி விம்மி அழுதார். உன்னதமான விடுதலையின் கோட்டைகள் கனவாகிக் கரையும் காலத்தில் கண்ணீரில் நனையுமொரு கனவு. ஆரூரன்…ஆரூரன் என்று தட்டினேன். ஆனால் கண் திறக்கவில்லை. சிலநிமிடங்கள் கழித்து புரண்டு படுத்தார். அழுகை நின்றிருந்தது. அரற்றல் தீர்ந்திருந்தது. கருவறை அகல் விளக்கில் அமர்ந்திருந்து நிலமெங்கும் மிரண்டு திணறும் சீவன்களை தான்தோன்றீஸ்வரர் பார்க்ககூடுமென ஆறுதலானேன். காலையில் எழுந்து ஊருக்குப் புறப்பட்டோம். வீதிகளில் வெள்ளம் வடிந்திருந்தது. அதன்பிறகு ஒருநாள் மைமலில் தேக்காங்காட்டு வீரபத்திரர் கோயிலடியில் சித்தியின் இளைய மகளான சுமதியக்காவைப் பார்த்தேன். அவளுக்கு மிக நெருக்கமாக ஆரூரன் நின்றார். அப்போதுதான் விஷயம் விளங்கியது. சுமதியக்கா ஒருகட்டு விறகைச் சுமந்து வரும்போது வீடுகளில் விளக்குகள் ஒளிரத்தொடங்கியிருந்தன. கொஞ்சம் கழித்து ஆரூரன் வீதியில் நடந்து போவதையும் பார்த்தேன். சில மாதங்களிலேயே இருவருக்கும் திருமணம் நடந்தேறியது. ஆரூரன், அத்தான் ஆனார். சுமதியக்கா என்னை அழைத்து “நன்றியடா தம்பி” என்றாள். “தேக்கங்காட்டு வீரபத்திரருக்குத் தான் நீங்கள் நன்றி சொல்ல வேணும், எனக்கு உங்கட காட்சி தந்தது அவர் தான்” என்றேன். வெட்கம் துளிர்த்து ஆரூரனின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு “போடா காவாலிப் பெடியா” என்றென்னை செல்லமாக ஏசினாள். வற்றாப்பளை அம்மன் கோவிலுக்கு குடும்பத்தோடு சென்று வந்தோம். ஆழிப்பேரலையிலும் எதுவும் ஆகாத தேவாலயம் ஒன்றை முல்லைத்தீவில் பார்த்தோம். ஆரூரனுக்கும் சுமதிக்கும் நல்ல உருவப்பொருத்தமென்று பழச்சாமியார் சொன்னார். புதுத் தம்பதிக்கான விருந்து உபசரிப்புகள் நடந்து முடிந்தன. முகமாலை, மன்னார் களமுனைகள் தீப்பற்றி எரிந்தன. எதிரியின் தலைகள் கொய்து அடுக்கப்பட்டன. சூழ்ந்து கொண்டழிக்கும் எதிரியின் தந்திரங்களை வெற்றிகொண்டு சூரிய உதயத்திற்கு படையலாக்கினார்கள் போராளிகள். நடுங்கும் இரவுகளை எவன் தந்தானோ அவனுக்கே திருப்பியளிக்கும் கம்பீரத்தின் கலன்களால் நட்சத்திரங்களைப் பாயச் செய்தனர். எரிகல், பகை வீழ்த்தும் எரிகல் பல்லாயிரம் ஒளிர்ந்தன. சண்டமாருதம் தீராது பெருகியது. பகைத்திசையில் அசையும் ஒவ்வொன்றுக்கும் பெருவெடி. இத்தனையும் பழங்கதையோ என்றெண்ணும் வகையில் களச்செய்திகள் திகிலூட்டின. எம்மவர் வித்துடல்கள் பகைவசம் ஆகினதாய் ஒரு செய்தி. அறுபதிற்கும் மேற்பட்ட போராளிகள் ஒரே களமுனையில் சொற்ப நேரத்தில் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று வேறொரு செய்தி. எங்கும் வீழ்ந்து போகிறோம் எனும் துர் செய்தியால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தோம். வன்னி நிலம் வெற்றிகளை நினைவில் மீட்டி உளஉறுதி கொள்ள முனைந்தது. ஆரூரனை வீட்டில் சந்திக்கமுடியாது. துயிலுமில்லத்தில் கடுமையான வேலையில் இருந்தார். நாளுக்கு ஐம்பதிற்கு மேற்பட்ட வித்துடல்கள் வரத்தொடங்கியிருந்தன. சூடடிக்குமிடத்தில் நெற்கதிர்கள் குவிவதைப் போல களமெங்கும் வித்துடல்கள். நீலவானில் படர்ந்திருக்கும் மேகத்தின் கீழே துயிலுமில்லம் எப்போதும் தவிப்பின் வெளியாகி நம்பிக்கையை நழுவச் செய்தது. விதைகுழிகளை தயார்படுத்துபவர்கள் வியர்த்துச் சோரும் வரை பூமியை அளவிட்டுத் தோண்டினார்கள். கால்களைப் பார்த்து வைக்குமளவு விதைகுழிகள் நெருங்கியிருந்தன. எல்லோருக்குக்குள்ளும் கனமான காலமொன்று வால்சுருட்டிப் படுத்திருந்தது. மன்னார் களமுனை வன்கவர் படையினரால் முற்றாகக் கைப்பற்றப்பட்டது. போரரங்கின் இரும்புக்கதவுகள் பீரங்கிகளால் தகர்க்கப்பட்டன. இனிய அமுதென பாடிக் களித்திடும் விடுதலைப் பாடலை எத்தனை மரணத்தால் நிரப்பவேண்டும்? களமுனைகள் தொடர்ந்து பின்வாங்கின. இராணுவத் தந்திரோபாயம் என்பதெல்லாம் இருளுக்குள் நகரும் இரவெனப் பொய்த்தது. வெற்றிப்பரணி பாடிய வீதிகள் வெறிச்சோடின. திகைக்க கூட நொடியற்று வாயில்தோறும் ரத்தம் ருசிக்கும் போரே என்று எல்லோர் சித்தமும் வெறுத்தது. வீரம் காக்கும் தெய்வமே எம்மைக் காக்காது போனால் உன்னை ஊழ் உறுத்தும் என்று சபித்தபடி தேக்கங்காட்டு வீரபத்திரரின் பீடத்தை மண்வெட்டியால் தோண்டிக் கொண்டிருந்தார் ஆரூரன். நான் கூப்பிட்டும் அவரிடமிருந்து எந்த எதிர்வினையுமில்லை. குழியைத் தோண்டி முடித்து நிமிர்ந்து பார்த்தார். “என்ன பார்க்கிறியள், இதுவும் விதைகுழி தான்” “உங்களுக்கு என்ன மண்டைக் கோளாறா, கோயில்ல குழியைத் தோண்டிட்டு விதைகுழி, புதைகுழின்னு ஏதேதோ கதைக்கிறியள்” “தக்கன்ர சிரச கைவாளினால் அறுத்த வீரபத்திரர் எங்களைக் காப்பாற்றாமல் நிக்கேக்கயே அவர் வீரச்சாவு அடைஞ்சிட்டார் என்று உங்களுக்கு விளங்கேல்லையோ” என்றார். “ஆரூரன் தெய்வத்த அப்பிடிச் சொல்லக் கூடாது. அதுவும் இவர் அகோர வீரபத்திரர்” “இவர் மட்டுமா தெய்வம். இஞ்ச எங்களைக் காப்பாத்திற எல்லாரும் தெய்வம் தான். நான் இவரை எடுத்து விதைக்கப்போறன். நாளைக்கு இந்த இடமும் விடுபட்டு ஆர்மியோட வசமாகும். நாங்கள் எங்கட ஆக்களின்ர ஒரு வித்துடலையும் விதைக்காம விடக் கூடாது” வீரபத்திரச் சூலத்தை பீடத்திலிருந்து கிளப்பி விதைகுழிக்குள் வைத்தார். பூக்கள் சொரிந்தார். எனது கையாலும் ஒரு பிடிமண்ணள்ளிப் போடுமாறு சொன்னார். எங்களிருவரையும் உற்றுப் பார்த்தவாறு தேக்கங்காடு அசைந்தது. சில நாட்களிலேயே ஆரூரன் சொன்னது நடந்தது. வன்கவர் வெறியர்களின் வசம் வன்னியின் ஒரு பகுதி கைவிடப்பட்டது. பற்றியவனை கீழே விழுத்தி முறியும் கிளையென மாவீரர் துயிலுமில்லம் உட்பட கிளிநொச்சி முழுதும் பறிபோனது. நாங்கள் இழந்தது வாழ்வை மட்டுமல்ல விதைகுழிகளையும் வீரபத்திரர்களையும் தானென்றார் ஆரூரன். எங்களூரை விட்டு இடம்பெயர்ந்தோம். சுமதியக்கா சிறிய பதுங்குகுழியைக் காட்டி “கொத்தான் இதையும் விதைகுழின்னு நினைச்சுத்தான் வெட்டியிருப்பார்” என்று சொல்லிச் சிரித்தாள். முள்ளிவாய்க்காலில் நாங்கள் எல்லோரும் ஒன்றாகவிருந்தோம். ஒருநாள் இரவு ஆரூரன் கனவு கண்டு திமிறி எழுந்து கதறி அழுதார். பக்கம் பக்கமாகவிருந்த அனைவரும் பதுங்குகுழிகளுக்குள் விழித்தனர். நான் அவரை இறுக்கிப்பிடித்தபடி ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்றேன். “அங்க விதைகுழியெல்லாம் மூடாமல் கிடக்கு, புழு நெளியுது. என்ர மனிசியின்ர வயித்துக்குள்ள விதைகுழி ஆழமாகுது” என்று தொடர்பற்று பிதற்றி ஓய்ந்து உறங்கினார். காலையில் முந்தியெழும்பியவர் என்னைத் தட்டியெழுப்பினார். உறக்கக் கலக்கத்தோடு என்னவென்று கேட்டேன். “ஒரு கனவு கண்டனான். வயித்துக்குள்ள குழந்தை, கால் மடக்கி நீந்துது. என்னைப் பார்த்து கைகளை நீட்டுது. நானும் நீட்டுறன். அப்ப ஒரு விதைகுழியை கிழிச்சுக் கொண்டு பூமியை நோக்கி குழந்தையோட கை நீளுது. அந்தக் கையில மூன்று விரல்கள் மட்டும் சூலம் மாதிரியிருக்கு. பக்கத்து விதைகுழிக்குள்ள ஆயிரம் வீரபத்திரச் சூலம் நெருப்பில் தகதகத்துக் கிடக்கு” என்றார். ஆரூரனுக்குத் தொடர்ச்சியாக விதைகுழிக் கனவுகள் வந்தன. பேரழிவுகள் நிகழ்ந்த வண்ணமிருந்தன. முள்ளிவாய்க்காலில் பலியுறும் மனுஷத்துவத்தின் குருதியாறு இந்து சமுத்திரத்தில் காட்டாறாய் கலந்தபடியிருந்த பெளர்ணமி இரவொன்றில் பதுங்குகுழிக்குள்ளிருந்த சுமதியக்காவின் அழுகுரல் தீனமாய் ஒலித்தது. பதுங்குகுழியில் மல்லாந்து கிடந்த ஆரூரனின் கண்கள் வானத்தை வெறித்தபடி அசையாதிருந்தன. வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் பெருகிய குருதியை சுமதியக்கா அளைந்தழுது தனது கர்ப்ப வயிற்றின் மீது தடவிக் கொண்டாள். ஆரூரனுக்கு ஒருபிடி மண்ணை அள்ளி போட்டதும் சுமதியக்காவை இன்னொரு பதுங்குகுழிக்கு அழைத்துச் சென்றார்கள். ஆரூரனின் புதைமேட்டினை போர்வையால் மூடினேன். பிறகு சில நாட்களிலேயே எங்களை வீழ்ச்சி முற்றாக மூடியது. செட்டிக்குளம் முகாமில் சுமதியக்காவுக்கு பெண் குழந்தை பிறந்தது. கொற்றவை என்று அவளுக்கு பெயர் சூட்டினேன். கூடாரத்திற்குள் சேர்ந்திருந்து எல்லோரும் கொற்றவை என்று சத்தமாக அழைத்தோம். வெளியே இடியும் மின்னலுமாக மழை பெய்யத்தொடங்கியது. கொற்றவை தனது இரண்டு கைகளையும் வான் நோக்கி நீட்டி கால்களால் வெளியை உதைந்தபடி உறங்கினாள். வருடங்களுக்கு பின் சொந்தவூரில் மீளக்குடியமர்த்தப்பட்டோம். ஆரூரனை புதைத்த இடத்திற்கு கொற்றவையை அழைத்துச் சென்றேன். இடத்தை அடையாளம் காண்பது சிரமமாயிருந்தது. ஆனாலும் அந்தப் போர்வை உக்கிக் கிழிந்து கொஞ்சம் மிஞ்சிக் கிடந்தது. கொற்றவையை தூக்கிச் சென்று உன் தந்தை இதற்குள் தான் இருக்கிறார் என்றேன். அவள் தன்னுடைய பிஞ்சுக்கரங்களால் மண்ணைத் தோண்டத் தொடங்கினாள். கண்கள் சிவந்து கனத்திருந்த அவளின் உக்கிரம் மீட்சியாகவிருந்தது. பெளர்ணமி நாளின் நள்ளிரவில் கொற்றவையை படுக்கையில் காணவில்லை. சுமதியக்காவின் ஒப்பாரி ஊரை எழுப்பியது. கொற்றவையை எல்லோரும் தேடி அலைந்தனர். தேக்கங்காட்டு வீரபத்திரர் கோயிலுக்கு விரைந்தோடினேன். நானும் ஆரூரனும் விதைத்த சூலத்தை கைகளில் ஏந்தி அமர்ந்திருந்த கொற்றவை வளர்ந்திருந்தாள். அவள் கூந்தலில் பூக்கள், கைகளில் வளையல்கள், கழுத்தில் புலிப்பல் தாலி. அவள் மங்கலம் கொண்ட குமரியாக அமர்ந்திருந்தாள். தேக்கங்காடு முழுதும் விதைகுழிகள் தோன்றி சூலங்கள் எழுந்தன. எல்லாச் சூலங்களிலும் சுடர் ஏற்றி நடுவே அமர்ந்திருந்தார் ஆரூரன். கொற்றவை சொன்னாள், “அப்பா, என்னை அம்மா தேடுகிறாள்” “ஆமாம் கொற்றவைத் தாயே! உனக்காகத்தான் தாய்மாரும் காத்திருக்கிறார்கள். நானும் காத்திருக்கிறேன். கெதியாக வா” என்ற குரல் ஒலித்தது. தாய்நிலத்தின் அழைப்பில் போர் மகள் சிலிர்த்தாள். பெளர்ணமி பொலியும் வெளிச்சத்தில் விதைகுழிகள் நிறைந்திருந்த தேக்கங்காட்டு மண்ணெடுத்து உடலெங்கும் பூசிக்கொள்ளச் சுட்டதென் குருதி. https://akaramuthalvan.com/?p=1047
-
மத அடையாள தேசம்: உருவாகிவிட்ட யூத இஸ்ரேலும், இந்துத்துவம் உருவாக்க விரும்பும் இந்து இந்தியாவும்
மத அடையாள தேசம்: உருவாகிவிட்ட யூத இஸ்ரேலும், இந்துத்துவம் உருவாக்க விரும்பும் இந்து இந்தியாவும் Oct 23, 2023 07:00AM IST ஷேர் செய்ய : ராஜன் குறை அறுபதுகள், எழுபதுகளில் கோடை விடுமுறை என்றால் ‘டென் கமாண்ட்மென்ட்ஸ்’ (Ten Commandments, 1956) படத்தை திரையரங்குகளில் திரையிடுவார்கள். பள்ளி மாணவர்களை பெற்றோர் கூட்டிச் செல்வார்கள் என்பதால். எகிப்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மோசஸ் கடவுளின் துணையுடன் விடுவித்து அவர்களுக்கு கடவுளால் வாக்களிக்கப்பட்ட நிலமான இஸ்ரேலுக்கு கூட்டிச் செல்வதுதான் கதை. மோசஸ் குழந்தையாக ஆற்றில் விடப்பட்டு எகிப்து இளவரசியால் கண்டெடுக்கப்பட்டு, அரச குடும்பத்தில் வளர்வார், கர்ணனைப் போல. பின்னர் உண்மை வெளிப்பட்டு, நாட்டை விட்டு துரத்தப்படுவார். அலைந்து திரிந்து சினாய் மலையில் ஏறி கடவுளின் குரலைக் கேட்பார். கடவுள் கட்டளைப்படி எகிப்து சென்று மன்னருடன் வாதாடி, பலவித உற்பாதங்களைத் தோற்றுவித்து, பெருந்திரளான அடிமைகளுடன் வெளியேறுவார். அவர்கள் செங்கடலை நெருங்கும்போது மன்னனின் படைகள் துரத்திக்கொண்டு வரும். மோசஸ் கோலை உயர்த்த செங்கடல் இரண்டாகப் பிரிந்து வழிவிடும். இந்தக் காட்சிக்கு அரங்கில் பெரும் கரவொலி எழும்பும். அந்தக் கடல் பிரிந்து கொடுத்த வழியில் யூதர்கள் கடந்து அக்கரை சென்ற பின், துரத்திக்கொண்டு வரும் மன்னனின் படைகள் அதில் இறங்கியவுடன் கடல் மூடிக்கொண்டு அவர்களை மூழ்கடித்துவிடும். இப்படியாகத் தப்பி வந்த மக்களுக்கு மோசஸ் மூலமாக பத்து கட்டளைகளை கடவுள் கொடுப்பார். அதன்படி வாழ்ந்தால் அவர்களுக்கு வாழ்வதற்கு ஒரு நிலத்தைத் தருவதாகக் கூறுவார். அப்படி வாக்களிக்கப்பட்ட நிலம், Promised land என்பதுதான் இஸ்ரேல் என்று இப்போது அழைக்கப்படும் பாலஸ்தீனம் என்பது புராணம், நம்பிக்கை. யூதர்களின் டோரா, பைபிள் உள்ளிட்ட மத நூல்களில் குறிப்பிடப்படும் இந்த கதைக்கு வரலாற்று ஆதாரம் எதுவும் கிடையாது. கிடைத்துள்ள வரலாற்று ஆதாரங்களின்படி சிந்தித்தால் அப்படியெல்லாம் நடந்திருக்கும் சாத்தியம் அதிகமாக இல்லை. ஆனால், ஏசு கிறிஸ்து பிறந்த நேரத்தில், கிறிஸ்துவ மதம் தோன்றிய நேரத்தில் யூதர்கள் பாலஸ்தீனத்தில் வாழ்ந்தார்கள் என்பது உண்மை. கிறிஸ்து பிறப்புக்கு பிறகான நானூறு, ஐந்நூறு ஆண்டுக் காலத்தில் அவர்கள் அங்கிருந்து வெளியேறி ஐரோப்பா முழுவதும் பரவி பல்வேறு நாடுகளில் வசிக்கத் தொடங்கினார்கள். பாலஸ்தீனத்தில் வாழ்ந்த அரேபியர்கள் பெருமளவு இஸ்லாமிய மதத்தை தழுவினார்கள். பொது ஆண்டு 500 முதல் பொது ஆண்டு 1900 வரை பல்வேறு நாடுகளில் வாழ்ந்த யூதர்கள் பாலஸ்தீனம்தான் சொந்த ஊர் என்று எண்ணி வந்தார்கள் என்று கிடையாது. அவர்கள் குடியேறிய நாடுகளில் வர்த்தகம் செய்தும், வட்டித் தொழில், வங்கித்தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டும் வாழ்ந்தார்கள். ஆனால் இவர்களுக்கும், பொது சமூகத்துக்கும் இடைவெளியும், முரண்பாடுகளும் நிலவி வந்ததும், யூதர்களுக்கு எதிரான வன்முறை, சமூக விலக்கம், கட்டாய வெளியேற்றம் ஆகியவை அவ்வப்போது நிகழ்ந்ததும் உண்மைதான். இதன் உச்சகட்டமாகத்தான் ஹிட்லரால் லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் இரண்டாம் உலகப் போர் நேரத்தில் நிகழ்ந்தது. புராணத்தை வரலாற்றாக்கிய தீர்வு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே யூதர்களுக்கென ஒரு நாடு தேவை என்ற எண்ணம் உருவாகத் தோன்றியது. கடவுள் யெஹோவாவால் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமி எனப்படும் இஸ்ரேல்/பாலஸ்தீனம்தான் அது என்ற சிந்தனையும் உருவானது. இந்த சிந்தனையால் பல்வேறு நாடுகளில் வசிக்கும் யூதர்களுக்கும் அவர்கள் பல தலைமுறைகளாக பார்த்தே இராத, நினைத்தே இராத பாலஸ்தீனம் அவர்களது சொந்த ஊர், உரிமையுள்ள நிலம் என்ற எண்ணம் உருவாகத் தொடங்கியது. இதன் உச்சமாகத்தான் இஸ்ரேல் என்ற நாடு இங்கிலாந்தால் உருவாக்கப்பட்டதும், உலகின் பல பகுதிகளிலிருந்தும் யூதர்களுக்கு அந்த நாட்டுக்கு “திரும்பி வரும் உரிமை” (Right to Return) வழங்கப்பட்டதும் நடந்தது. அதாவது எத்தனையோ தலைமுறைகளாக ஃபிரான்சிலோ, அமெரிக்காவிலோ வாழ்ந்து வரும் வம்சாவழியைச் சேர்ந்த யூதர் ஒருவர் இஸ்ரேலுக்குச் சென்று குடியேற நினைத்தால் அது ‘திரும்பிச் செல்வதாக’க் கருதப்படும். இந்த முரண்பாட்டை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், இலங்கையின் மலையகத் தமிழர்களை யோசித்துப் பாருங்கள். அவர்கள் நூறு முதல் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தேயிலைத் தோட்ட த்தில் வேலை செய்ய தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களின் வம்சாவழிகள்தான். அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்கு ‘திரும்பி வரும் உரிமை’ கோர முடியுமா? சாஸ்திரி-சிரிமாவோ 1964 ஒப்பந்தத்தின்படி திரும்ப வர ஏற்கப்பட்டவர்களிலேயே பலர் தமிழ்நாட்டுக்கு வந்த பின்னும் குடியுரிமை இல்லாமல் அவதிப்பட்ட கதை பேசப்பட வேண்டியது. இப்படி நன்றாக அறியப்பட்ட வரலாற்றில் இடம் பெயர்ந்தவர்களின் சந்ததியருக்கே திரும்பி வரும் உரிமை இல்லாதபோது, எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் சென்றிருக்கலாம் என யூகிக்கப்படுபவர்களின் சந்ததியருக்கு ‘திரும்பி வரும் உரிமை’ வழங்குவது எவ்வளவு முரண்பாடானது. இஸ்ரேல் நாட்டினை எதிர்க்கும் சனாதன யூதர்கள் சனாதனம் என்றால் மாறாதது என்று பலரும் கூறுவதை சமீப காலங்களில் கேட்டுள்ளோம். அதனால் மாற்றங்களை விரும்பாதவரை சனாதனி என்று கூறுகிறோம். பொதுவாக இவர்கள் பிற்போக்காளர்களாக இருப்பார்கள். ஆனால், யூதர்கள் விஷயத்தில் ஒரு சுவாரஸ்யமான முரண் ஏற்படுகிறது. யூத மத நம்பிக்கையில் ஒரு பகுதி கடவுளின் கட்டளைகளை யூதர்கள் பின்பற்றாததால், அவர்களுக்குத் தருவதாகச் சொன்ன பூமி வழங்கப்படவில்லை என்பதாகும். அதனால் அவர்கள் பல்வேறு நாடுகளிலும் வாழ்வதுதான் சரியே தவிர, தங்களுக்கென ஒரு நாடு என இஸ்ரேலை உருவாக்கியதும், அந்த நிலத்திலிருந்து பாலஸ்தீனியர்களை அகற்றியதும் தவறு என்பது சனாதன யூதர்களில் ஒரு பிரிவினரின் கருத்து. யூதர்களின் சம்பிரதாயப்படி ஆண்கள் தாடி வளர்த்து கறுப்பு ஆடையும், கறுப்புத் தொப்பியும் அணிய வேண்டும். அவ்வாறு மத வழக்கத்தை தீவிரமாக பின்பற்றும் சனாதன யூதர்கள் இஸ்ரேலுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி நியூயார்க்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை நான் பலமுறை கண்டுள்ளேன். நீங்களும் இங்கே இணைக்கப்பட்டுள்ள படத்தில் காணலாம். பல நேரம் இவர்கள் ‘JEWS AGAINST OCCUPATION’ என்ற பதாகையையும் பிடித்திருப்பர். அதாவது இஸ்ரேல் நாடு என்பது பாலஸ்தீனியர்களின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது என்பதே பொருள். கீழேயுள்ள படத்தில் டோரா என்ற யூதர்களின் புனித நூல் பாலஸ்தீனம் முழுவதையும் பாலஸ்தீனியர்களின் இறையாண்மைக்கு விட்டுவிட வேண்டும் எனக் கூறுவதாக ஒரு பதாகையை ஏந்தியுள்ளதைக் காணலாம். இந்தியாவில் சனாதனிகள் இப்போது மிகுந்த ஆவேசத்துடன் சனாதன எதிர்ப்பாளர்களைக் கண்டித்துப் பேசுகிறார்கள். சனாதனம் என்றால் அது வர்ணாசிரம தர்மம் அல்ல, தீண்டாமை அல்ல என்று சொல்கிறார்கள். அவர்களெல்லாம் இது போல “ஜாதி மறுப்பே சனாதனம்”, “வர்ண பேதம் கடவுளுக்கே அடுக்காது”, “உங்கள் ஜாதிக்குள் திருமணம் செய்யாதீர்கள்”, “ஜாதிக்குள் திருமணம் செய்ய கட்டாயப்படுத்துவது அதர்மம்”, “பார்ப்பனர்கள் யாருக்கும் உயர்ந்தவர்கள் அல்ல”, “சனாதனம் ஜாதீயத்தை எதிர்க்கிறது”, “தீண்டாமை என்பது கொடிய பாவம்” என்றெல்லாம் பதாகைகளைப் பிடித்துக்கொண்டு ஊர்வலம் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதுவும் விபூதி, திருமண் முதலிய சின்னங்களை நெற்றியில் அணிந்து, குடுமி வைத்தவர்கள் இப்படியெல்லாம் பதாகைகளை ஏந்தி வந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என நினைத்துப் பார்க்க வேண்டும். ஆனால் அப்படியெல்லாம் இவர்கள் செய்வதில்லை. சனாதனம் என்றால் இதுதான், சனாதனம் என்றால் அதுதான் என்று வாயினால் பசப்புகிறார்களே தவிர, திட்டவட்டமாக களத்தில் இறங்கி ஜாதி மறுப்பு பிரச்சாரம் செய்வதில்லை. சனாதன யூதர்களைப் பாருங்கள். பாலஸ்தீனத்தை விடுவியுங்கள். பாலஸ்தீனியர்களிடம் இறையாண்மையைக் கொடுங்கள் என்று திட்டவட்டமாக கோருகிறார்கள். இந்துத்துவத்தின் புண்ணிய பூமி கருத்தாக்கம் யூதர்களுக்கு கடவுள் வாக்களித்த பூமி இஸ்ரேல் என்று சொன்னதால் எப்படி தேசம் என்ற நவீன அரசியல் அடையாளம், மதத்துடன் பிணைந்துகொண்டதோ, அது போன்றதுதான் சாவர்க்கர் புண்ணிய பூமி என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியதும். உண்மையில் இந்துத்துவத்தின் சாராம்சமே அதுதான். அதன்படி யார் ஒருவரின் புண்ணிய தலங்கள் இந்திய எல்லைக்குள் இருக்கிறதோ அவர்தான் இந்தியர். முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் ஆகியவர்களின் புண்ணிய தலங்கள் இந்தியாவுக்கு வெளியே இருப்பதால் அவர்கள் இந்தியாவின் முழுமையான குடிமக்கள் கிடையாது. இவ்வாறு நாட்டின் குடியுரிமையை மதம் என்பதுடன் பிணைப்பதுதான் மத அடையாள தேசியம் ஆகும். அரசாங்கம் அதிகாரபூர்வ மதமாக ஒரு மதத்தை ஏற்பது என்பது கூட பிரச்சினை கிடையாது. குடியுரிமையை, குடிநபரின் வரையறையை மதம் என்பதுடன் இணைப்பதுதான் கடுமையான பிரச்சினை. ஆங்கிலத்தில் தேசம் என்ற வார்த்தையை ‘நேஷன்’ என்று கூறுகிறோம். இதன் மூலச் சொல் லத்தீன் மொழியில் பிறப்பினை குறிப்பதாகும். ஒருவரின் பிறப்பு சார்ந்ததே அவரது தேசம் என்பது. உதாரணமாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் என்பவர் இருக்கிறார். இவரின் தாயார் சியாமளா சென்னையில் பிறந்தவர். தந்தை ஜமைக்காவில் பிறந்தவர். ஆனால், கமலா அமெரிக்காவில் பிறந்ததால் அந்த நாட்டின் குடிநபர் ஆகிறார். அதனால்தான் அவர் தேர்தலில் போட்டியிட முடிகிறது. துணை அதிபராக முடிகிறது. அமெரிக்காவில் பல இந்து கோயில்களைக் கட்டியுள்ளார்கள். இந்து மதத்தினரும் அங்கே அதிபர் தேர்தலில் பங்கேற்கிறார்கள். இங்கிலாந்து நாட்டின் பிரதமராக ஒரு இந்து, ரிஷி சுனக் இருக்கிறார். அவர் காசியை புண்ணிய தலமாக நினைத்தால் அது குறித்து இங்கிலாந்தில் யாரும் கவலைப்படவில்லை. மதத்துக்கும் குடியுரிமைக்கும் இந்த நாடுகள் முடிச்சுப் போடவில்லை. ஆனால் சாவர்க்கரின் இந்துத்துவம் முடிச்சுப் போடுகிறது. இந்தியாவை புண்ணிய பூமியாகக் கொள்ளாதவர்கள் இந்திய குடிமக்களாக இருக்க முடியாது என்ற கருத்தை அது விதைக்கிறது. இஸ்ரேலின் அடிப்படையான மோசஸ் கதைபோல சாவர்க்கர் ராமாயணத்தைப் பயன்படுத்துகிறார். ராமர்தான் இந்தியாவை ஒரே நாடாக இணைத்தவர் என்று கூறுகிறார். ராமாயணம் ஒரு புராணக்கதையாகும். ஆதாரபூர்வமாக நிறுவப்பட்ட வரலாறு அல்ல. மேலும் வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்படும் இலங்கை என்பது மத்தியப் பிரதேசத்தில் இருப்பதாகக் கருதும் ஆய்வாளர்கள் பலர் இருக்கிறார்கள். புராணத்தை வரலாறாக ஆக்குவதிலும், மதத்தை தேசமாக ஆக்குவதிலும் இஸ்ரேலின் முன்மாதிரிக்கும், இந்துத்துவ சிந்தனைக்கும் நிறைய ஒப்புமைகளைக் காணலாம். உள்ளபடி சொன்னால் குடியுரிமை சீர்திருத்தச் சட்டம் என்பது ஒருவகையில் இந்துக்களின் “திரும்ப வரும் உரிமை” எனலாம். பிற நாடுகளில் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் ஒருவர் இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டால் கொடுப்பதற்கான விதிமுறைகளை வகுக்காமல், இந்துக்களாக இருந்தால் குடியுரிமை வழங்கலாம், இஸ்லாமியர்கள் என்றால் முடியாது என்றெல்லாம் விதிமுறைகள் வகுப்பது குடியுரிமையையும், மதத்தையும் இணைக்கும் செயல் என்பதால்தான் போராட்டங்கள் வெடித்தன. இந்துத்துவ அணியினரின் வெளிப்படையான இஸ்ரேல் ஆதரவு என்பது, முஸ்லிம்களை பொது எதிரியாக காண்பதிலிருந்து, பலவகையான தொடர்பு புள்ளிகளைக் கொண்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது. இஸ்ரேல் மேலும் வலுப்பெறுவது இந்துத்துவர்களின் வேலை திட்டத்தை ஊக்கப்படுத்தவே செய்யும். ‘மதமே தேசம்! புராணமே வரலாறு’ என்ற முழக்கத்துக்கு இஸ்ரேல் மிகவும் அனுசரணையான சிறந்த முன்மாதிரியாகும். கட்டுரையாளர் குறிப்பு: ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி https://minnambalam.com/political-news/israel-and-bjp-exploiting-using-religon-rajan-kurai/
-
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 01 October 2, 2023 வீரயுகத்தின் அந்தி நந்திக்கடலில் சாய்ந்து ஆண்டுகள் இரண்டாகியிருந்தன. செட்டிக்குளம் அகதி முகாமில் அடைக்கப்பட்டு பலாத்காரங்களுக்கும் வன்முறைக்கும் உள்ளான சொற்ப சனங்கள் சொந்தவூர்களுக்கு மீளக்குடியமர்த்தப்பட்டனர். வரிசையில் நிற்க வைத்து அடையாளங்களைச் சரிபார்த்து ஆவணங்களை தருவித்து இராணுவப் பேருந்துகளில் அவர்கள் ஏற்றப்பட்டனர். செத்துப்போனாலும் சொந்தக் காணியில் சாகவேண்டும் என்பவர்களுக்கு நிம்மதி திரும்பிற்று. ஒரு பெருங்கனவு சிதைந்து உருக்குலைந்து மண்ணோடு மண்ணாகியிருந்தது. அளவற்ற தியாகமும், உயிரிழப்பும் அந்த மண்ணில் வெறித்திருந்தது. சொந்தவூரில் இறக்கிவிடப்படும் வரை அம்மாவோ அக்காவோ எதுவும் கதையாமல் வந்தனர். வழிநெடுக பனைகள் தலையற்றும் நிமிர்ந்து நின்றன. வீட்டுக்கு முன்பாக இறக்கிவிடப்பட்டோம். புதர்கள் மண்டிக்கிடந்தன. வீட்டுக் கூரையில் கறையான் படை. சுடுகாட்டமைதி. வாசலற்ற வீடு. சொந்த வீட்டினுள் செல்வதற்கு வழியற்று நின்றோம். எந்தத் துயரத்திலும் கண்ணீர் சிந்தாத அம்மா தனது காலடி மண்ணை இரண்டு கைகளாலும் அள்ளி வான் நோக்கி எறிந்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். அது சாபமோ, பிரார்த்தனையோ யாரறிவார்? காணியைத் துப்புரவு செய்வது அவ்வளவு கஷ்டமாயிருக்கவில்லை. இரண்டு காட்டுக்கத்திகளாலும் மண்வெட்டியாலும் மரங்களையும் புதர்களையும் புரட்டிப்போட்டோம். வீட்டினுள்ளே எழுந்திருந்த பாம்பு புற்றுக்களை எதுவும் செய்யாமல் அடுத்தநாள் பார்த்துக் கொள்ளலாம் என்றாள் அம்மா. பார்த்தீனியத்தின் நாற்றம். இரவானதும் மாமரத்தின் கீழே அம்மாவும் நானும் அக்காவும் படுத்துக் கொண்டோம். நான்கு வருடங்களுக்குப் பிறகு சொந்தக் காணியில் நித்திரையாவது கனவெனத் தோன்றியது. அம்மாவுக்கு நித்திரை வரவில்லை. அவள் லாம்பைத் தீண்டி வைத்துவிட்டு எழுந்திருந்தாள். காற்றில்லாத இரவு. அம்மாவிடம் அனலின் விறைப்பு. அவள் மெல்ல எழுந்து கிணறு நோக்கிப் போனாள். வெட்டப்பட்ட செடிகளும், புற்களும் கும்பியாகி கிடந்தது. என்ன தோன்றியதோ! லாம்பிலிருந்து மண்ணெண்ணையை ஊற்றி கும்பியில் தீ வைத்தாள். அந்த இரவுக்கு அப்படியொரு வெளிச்சம் தேவையாகவிருந்தது. தீயின் சடசடப்பு பச்சையத்தில் எழுந்தது. அக்கா பயந்தடித்து நித்திரையிலிருந்து எழுந்தாள். புன்னகைத்தபடி நெருப்பு என்றேன். ஏற்கனவே சித்தம் குழம்பியிருந்த அவள் வெளிச்சத்தைப் பார்த்து வெருண்டிருந்தாள். நந்திக்கடலில் இறப்பதற்கு விஷம் தேடி அலைந்து களைத்தவள் அக்கா. “ஊழியில சாவு வாய்ப்பதெல்லாம் ராசியடி மோளே” என்று ஆச்சி சொல்லியும் அவள் கேட்கவில்லை. அக்காவுக்கு சித்தம் குழம்பியதை அம்மாதான் முதலில் உணர்ந்தாள். ஆனால் என்னிடமோ யாரிடமோ அதனைச் சொல்லாமல் தவிர்த்தாள். முள்ளிவாய்க்கால் நாட்களில் கட்டுப்படுத்தமுடியாமல் போயிற்று. பதுங்குகுழிக்குள் இருந்தபடி வெறித்துப் பார்த்து அழுவாள். யாரேனும் சமாதானம் சொன்னால் வெளியே எழுந்து ஓடுவாள். பிறகு அந்தக் கூடாரங்களுக்குள் அவளைக் கண்டுபிடிப்பது பெரியதொரு வாதை. என்னிடமொரு பழங்கால செபமாலையிருந்தது. டச்சுக்காரர்களின் தேவாலய அருங்காட்சியத்திலிருந்து அதனைக் களவாடியிருந்தேன். எங்கு சென்றாலும் என்னோடு வருகிற நிழலது. அக்காவின் கழுத்தில் அதனை விளையாட்டாக அணிவித்து உனக்கு வடிவாக இருக்கிறது என்றேன். அவள் சிலுவையைப் பிடித்து அறுத்தாள். செபமாலையை பதுங்குகுழிக்கு வெளியே எறிந்துவிட்டு “போடா கள்ளா” என்று அழத்தொடங்கினாள். சாவுகள் மலிந்து விளைந்த படுகளத்தில் தற்கொலை செய்து உயிரை மாய்க்க எண்ணி பலமுறை முயன்றும் தோற்றாள். ஒருநாள் இரவு அவளைப் பதுங்குகுழியில் காணாமல் தேடித்திரிந்தோம். நீரடர்ந்த குளத்து ஒற்றைப்பனையின் கீழே நின்றாள். அவள் இன்னும் நந்திக்கடல் வீழ்ச்சியை அறியவில்லை. எரியும் நெருப்பைப் பார்த்தபடி அம்மா….அம்மா என்று கூப்பிட்டாள். எந்த அசைவுமின்றி எரிந்தசையும் ஒளியின் முன்னே இரவு முழுவதும் நின்றாள் அம்மா. அடுத்தநாள் காலையில் மீண்டும் துப்பரவு பணிகளைத் தொடங்கினோம். வீட்டினுள்ளே இருந்த புற்றை வெட்டியெறிந்தோம். பாம்பில்லை. புற்று மண்ணை அம்மா பத்திரமாக எடுத்து வைத்தாள். காணி கொஞ்சம் வடிவெய்தியிருந்தது. கிணறு இறைக்க வேண்டும். வீடு வேயவேண்டும் என பெரிய பட்டியல் போட்டோம். நாங்கள் இடம்பெயர்கையில் மண்ணுக்குள் புதைத்து வைத்த அம்மிக்கல்லையும், சில பொருட்களையும் எடுக்கலாமென்று அகழ்ந்தோம். எல்லாமும் இருந்தது. இரண்டு பெரிய புகைப்பட அல்பங்கள் பொலித்தீன் படையால் காக்கப்பட்டிருந்தது. அக்கா ஒவ்வொன்றாக எடுத்துப் புரட்டினாள். வீரயுகத்தின் நாயகர்கள் பலர் உயிர்ப்புடன் இருந்த புகைப்படங்கள். அக்கா எல்லோரையும் பார்த்து புன்னகை செய்து, அவர்களின் பெயர்களையெல்லாம் மறவாமல் சொன்னாள். அம்மிக்கல்லை எடுத்து தென்னைமரத்தின் கீழே வைத்தோம். அம்மியில் அரைத்த சம்பலும், ரொட்டியும் சாப்பிடவேண்டுமென சொன்னேன். அம்மா சரியென்று தலையசைத்தாள். அன்றைக்கு வெளியில் அடுப்பு மூட்டி, மாவைக் குழைத்து ரொட்டி சுட்டோம். சம்பலுக்கு வெங்காயம் போடாமல் வெறும் மிளகாயை தேங்காய்ப் பூவோடு அரைத்தோம். அக்கா நன்றாகச் சாப்பிட்டாள். அவளுக்கு ஏதோ பேய் பிடித்திருக்கிறது என்றாள் அம்மா. ஊரில் ஏனையோரும் தங்களது வீட்டையும் வளவையும் சீராக்கியிருந்தனர். பொதுக்கிணற்றை எல்லோரும் பணம் போட்டு இறைத்துச் சுத்தம் செய்தனர். கள்ளருந்திக் கூத்திசைக்கும் கனவான்கள் பனைமரங்களின் பாளையைச் சீவி முட்டியைக் கட்டிக் காத்திருக்கத் தொடங்கினர். கள்வெறிக்கு நிகர்த்த இன்பம் ஈழருக்கு வேறில்லை. காவோலையில் கருவாட்டைச் சுட்டு இரண்டு தூசணங்களோடு பொழுதை மங்கலமாக்கும் அப்புமார் பனைக்கு கீழே அமர்ந்திருந்து கதையளந்தனர். வசந்தம் வருமென்றில்லை, ஆனாலும் நாம் பூப்போம் என்பதைப் போல பெண்கள் கூந்தல் நனைத்து வழிநெடுக காற்சங்கிலி ஒலிக்க நடந்து போயினர். கனரக ஆயுதங்களின் வெற்றுக் கோதுகளைச் சேமித்து பூஞ்செடிகளை நட்டுவைத்து சின்னஞ்சிறுசுகள் தங்களை ஆமி இயக்கமாய் பாவித்து சண்டை செய்து விளையாடினர். கிளித்தட்டு விளையாடும் இளையோர்கள் வேர்த்தொழுக மறிக்கின்றனர். அடிக்கின்றனர். இரவானதும் விளக்குகள் திரி குறைக்கப்பட்டு வீடுகள் குளிர்கின்றன. வெறுமை அழிந்து உடல்கள் இன்பம் நுகர்கின்றன. காற்றில் ஈரம் திரும்புகிறது. கிளைகளில் அசையும் மலர்களில் தேன் அடர்ந்து திரள்கின்றது. ஊரில் மனுஷ வாசனை தளும்பத் தளும்ப முட்டிகளில் கள் நிரம்பிற்று. ஒரு மாதத்தில் வீட்டை திறமாகச் சரிப்படுத்தியிருந்தோம். அக்காவும் நானும் யாழ்ப்பாணத்திலுள்ள பெரியம்மா வீட்டுக்குச் சென்றிருந்தோம். அம்மா மட்டுமே வீட்டிலிருந்தாள். ஒரு குழம்பும் சோறும் வைத்துச் சாப்பிடுவது அவளுக்கு போதுமானதாக இருந்தது. உறைப்புக்கு கொச்சி மிளகாய் காய்த்திருந்தது. ஒருநாள் சந்தைக்குச் சென்று திரும்புவதற்குள் அம்மாவைத் தேடி வந்திருந்த ஆச்சியொருத்தி வீட்டின் முன்னால் குந்தியிருந்துள்ளாள். நடுவெயில் வெக்கை வீச தலைவிரிகோலமாய் வெள்ளைச் சீலை உடுத்தியிருந்த ஆச்சியைப் பார்த்த ஊரவன் “ஆரன வேணும்” என்று கேட்டிருக்கிறார். ஆச்சி வீட்டைக் காண்பித்து “இவள் தான்” என்றிருக்கிறாள். “சந்தைக்குப் போயிட்டாள். வரப்பிந்தும். அவள் வருகிற வரைக்கும் என்ர வீட்டில வந்து இருங்கோ. அவள் வந்ததும் இஞ்ச வரலாம்” “அவள் வரட்டும். நான் இதிலையே இருக்கிறன்” “நீங்கள் எங்க இருந்து வாறியள்” “உதில இருந்துதான். நடந்து வந்தனான்.” “உதில எண்டால் எங்க” “எனக்கு சரியான பசி. அவளைச் சோறு கொண்டுவந்து தரச் சொல்லு. என்னைக் கொஞ்சம் குளிப்பாட்டச் சொல்லு. நான் வெளிக்கிடுறன்” என்றெழுந்த ஆச்சியின் வெண்கூந்தல் மண்வரை நீண்டு, அவளது தடத்தையே அழித்திருக்கிறது. “எங்க இருந்து வந்தனியள், உங்கட பேர் என்ன, எதுவும் சொல்லாமல் போனால், அவளிட்ட நான் எப்பிடிச் சொல்லுவன்” என்று கேட்ட ஊரவனைப் பார்த்து “நீ அவளிட்ட சூலக்கிழவி வந்தனான் என்று சொல்லு, என்னை நல்லாய்த் தெரியும்” என்றிருக்கிறாள். ஊரவன் அவளுடைய பதிலைக் கேட்டு உறைந்து நின்றார். முன்னே நடந்து சென்றவள் வெயிலானாள். கண்கள் கூசுமளவுக்கு வெளிச்சம் வந்தடைந்த ஊரவன் மயக்கமுற்று வீதியில் விழுந்தான். அம்மா வீட்டுக்கு வந்ததும் இந்தச் செய்தியை அவரே சொன்னார். “உன்னைத் தேடி சூலக்கிழவி வந்து தனக்கு பசிக்குதாம், குளிக்க வேணுமாம், வந்து பார்க்க சொல்லுது” என்றார். அம்மாவிடம் அந்தத் தகவலைச் சொன்னதும் ஊரவனுக்கு இந்தச் சம்பவத்தின் அனைத்து துளிகளும் மறந்து போயிற்று. விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ஆற்றாமையும் சந்தோசமும் பொலிந்த அம்மா கொட்டடி காளி கோயிலை நோக்கி ஓடினாள். வழிநெடுக அவள் காளியை நோக்கி ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தாள்.“இஞ்ச உள்ள ஒருத்தரிட்டையும் வராமல் என்ர வீடு தேடி வந்த உனக்கு நான் என்ன செய்வேன். என்ர ஆச்சியே” என்றபடி கோயிலிருக்கும் இடத்தை அடைந்தாள். சதுப்புக் காணியில் வெள்ளம் தேம்பி நின்றது. புதர்களும் செடிகளும் மண்டி வளர்ந்திருந்தன. காளி செடிகளுக்குள் புதைந்திருந்தாள். ஓடுகளற்ற கோயில் கூரையையும் கொடிகள் சடைத்து பிடித்திருந்தன. ஆழமிக்க தண்ணீரில் இறங்கி நடந்தாள். எதற்கும் அஞ்சாதவள் தாய். உக்கிரம் பெருகி தளும்பித் தளும்பி அழுதபடி புதர்களை பிடுங்கி எறிந்தாள். ஈரச்சருகுகளின் வாசனையும் பூச்சிகளும் குமைந்து கிடந்தன. வெடிக்காத எறிகணையொன்று குத்திட்டிருந்து. துருவேறிய அதன் மேற்பரப்பில் லட்சோப லட்ச சனங்களின் குருதியுறைவு. காளியின் பீடம் தகர்ந்திருந்தது. எங்களுடைய குலத்தின் விலா எலும்பு சூலம். எங்கே எங்கள் விலா எலும்பு! அம்மா பிய்த்துக் கொண்டு அலறினாள். விஷப்பூச்சிகள், எதையும் பொருட்படுத்தாமல் சருகுகளை கைகளால் அகற்றினாள். ஒரு படை விலக இன்னொரு படை. சருகுகள் அழுகிக் கிடந்தன. நாற்றம் குமட்டியது. முறிந்து துருப்பிடித்த சூலத்தை கண்டெடுத்து நெஞ்சோடு அணைத்து “என்ர ஆச்சி, உன்னைக் கைடவிடமாட்டேன்” என்ற அம்மாவின் குரல் பேரிகையாக ஒலித்தது. அவளது இரு கால்களுக்குமிடையால் துயின்றிருந்த நாகமொன்று படமெடுத்தபடி அசைந்து அருளியது. மண்ணில் சரிந்திருந்த சூலத்தை நிமிர்த்தி ஊன்றிய அம்மா, புதர்களில் மலர்ந்திருந்த செங்காந்தள் மலர்களை ஆய்ந்து படைத்தாள். சூலத்தில் சூட்டப்பட்ட செங்காந்தள் மலர்களின் நெருப்பு இதழ்கள் கனன்று நிறத்தன. வளவை மொத்தமாய் துப்புரவு பண்ணி, அடுத்தமாதமே பூசையைத் தொடங்கவேண்டுமென எண்ணம் தகித்தது. ஊழியுண்ட பெருநிலத்தின் மீதியாய் தன்னைப் போலவே காளியும் காந்தள் மலர்களோடு வெறித்திருப்பதை அவளால் ஏற்கமுடியாதிருந்தது. தெய்வமும் வாழ்வுக்கு மீளட்டுமென்று மண்ணை வேண்டிக்கொண்டு புறப்பட்டாள். கொட்டடி காளி காந்தள் மலர்கள் சூடி நின்ற அன்றிரவு அம்மா விளக்கு வைத்தாள். வெகு விரைவிலேயே கோவில் வளவைத் துப்பரவு செய்து வழிபாடு தொடங்கியது. முறிந்து போன சூலத்தை வைத்து வழிபடுவது ஊருக்கு நல்லதில்லை என்று பலர் சொல்லியும் அம்மா கேட்கவில்லை. அதே சூலம் புளிபோட்டு மினுக்கி மீண்டும் வழிபடு பீடத்திற்கு வந்தது. காந்தள் மலர்கள் மீண்டும் சூடப்பட்டது. கொட்டடி காளிக்கு இப்போது காந்தள் காளி, கார்த்திகைப் பூ காளி எனப் பலபெயர்கள். கோயிலை ஒட்டியுள்ள சதுப்பு நிலத்தில் எல்லா மாதங்களிலும் காந்தள் பூக்கள் மலர்கின்றன. அது காளியின் அற்புதம் என்கின்றனர் சனங்கள். நீண்ட வருடங்களின் பின்னர் காந்தள் காளி அம்மாவின் கனவில் வந்தாள். அவளுடைய முகத்தில் ஒருவித உலர்ச்சியிருப்பதைக் கண்ட அம்மா “ஏதேனும் உடம்பு சுகமில்லையா” என்று கேட்டாளாம். காளி ஓமென்று தலையசைத்திருக்கிறாள். என்னவென்று கேட்க காளி பதில் சொல்லாமல் உம்மென்று இருந்திருக்கிறாள். சித்தம் பிசகிய அக்காவிடம் கனவைச் சொல்லிக்கொண்டிருந்தாள் அம்மா. எல்லாவற்றையும் கேட்ட அக்கா, தன்னுடைய கனவிலும் காளி வந்தாள் என்றாள். அம்மா திகைப்புற்று “என்ன சொன்னவா” என்று கேட்டாள். “காளிக்கு ஒரு காயமிருந்திருக்கு. ஷெல் காயம். ஒரு பீஸ் துண்டு காளியின்ர தலைக்குள்ள இப்பவும் இருக்கு. வெயில் நேரத்தில அது குத்தி நோக வெளிக்கிடுது. மண்ட பீஸ். காளி அதை நினைச்சு பயப்பிடுறா” என்றாள் அக்கா. அம்மாவுக்கு வந்த கோபம் ஆறாமல் “போடி விசரி, உனக்குத் தான் மண்ட பீஸ்” என்றாள். “அதுதான் நானும் சொல்றேன். காளிக்கு மண்ட பீஸ். கொட்டடி காளிக்கு மண்ட பீஸ்” என்று அக்கா அரற்றத் தொடங்கினாள். அப்போதும் சூலம் மண்ணில் நிமிர்ந்து நிற்க காந்தள் மலர்கள் கனன்று மலர்ந்தன. https://akaramuthalvan.com/?p=847
-
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – அறிவிப்பு மெய்த்தலம் மூண்டெழுகிறது நெருப்பு முடுகி முடுகி எரிகின்றது ஒருபொறிதான் உள்விழுந்தது உலகே பற்றி எரிவதென ஓங்கி எரிகின்றது கீழிருந்து மேலெழுகிற சோதி ஆளுகின்றதா ?எனது போக்கும் வரவும் புணர்வுமெரிகின்றதா? சிற்றறிவாளும் நினைவுகளை சீண்டியழித்துச் செயலை முடுக்கி தூண்டும் சுடரொளியான சுதந்திரப் பிழம்பாய் மூண்டெழுகிறது நெருப்பு மேலே மேலே இன்னும் மேலே வாலின் நுனியை ஊன்றியெழுந்து வளர்பிறை நிலவைக் குறிவைத்து தூவெளி வானில் சோதி சுடர்த்தி நீலநிறத்துச் சுவாலையை வீசி சீறியெழுகின்ற அரவென நெளிதரு நடனம் நடனம் தீயளி நடனம்! நர்த்தனமாடும் அக்கினி வீச்சம் அக்கினியாளே அக்கினியாளே நர்த்தனமாடிடும் அக்கினியாளே சிற்பரமென மெய்த்திரள் நிலவை சுடர் நா நீட்டி கொத்திய கொத்தில் பொத்தல் விழுந்து பொழியுது பொழியுது முட்டி நிரம்பிய மூவா அமிழ்தம் மெய்த்தவமாகி மிளிருது உலகம். சு.வில்வரத்தினம் இப்படியொரு தொடர் எழுதவேண்டுமெனும் விருப்பம் மனத்துள் துளிர்த்து ஆண்டுகள் பல. இனிய நினைவுகள் இழக்கவியலாத கனவாக தொடர்கின்றன. சொந்த நிலம் பாலித்த சுகப்பொழுதுகளை மீளத் தீண்டுகிறேன். என் அகமெரியும் சந்தம் இசைக்கிறேன். செவியுள்ளோர் கேட்கட்டும். வாழ்வென்பது எழுத்தினால் அர்த்தமாகும் ஒரு சுடர்வெளி. அங்கு இருளிருந்தும் நிகழ்பவை எல்லாம் ஒளியின் அசைவே. என்னுடைய புனைவுலகை வாசித்து அதன்வழியாக என்னைத் தொகுத்துக் கொண்டவர்கள் சிலர் “உங்கள் வாழ்வில் இழப்புக்களும் துயரங்களும் தான் இருக்கின்றனவா, மங்கலங்கள் இல்லையா” என்று கேட்பதுண்டு. பதிலாக ஒரு புன்னகையைப் பரிமாறுவேன். அவர்களுக்கு மங்கலம் வாய்க்கட்டும் என்று பிரார்த்திப்பேன். எவ்வளவு துயரத்தையும் அவலத்தையும் எழுதினாலும், எழுத்தாளன் மங்கலமானவன். என் வாழ்வு மங்கலத்தால் ஆசிர்வதிக்கப்பட்டது. ஈழத்தில் ஊழித்தேர் ஓடிய தெருக்கள், தீவட்டிகளாய் மனிதச் சடலங்கள் எரிந்த நாட்கள் என கோரங்களின் புகைமூடிய திகைப்புக்களை இங்கே நான் பதியவில்லை. பூவரசம் இலையைச் சுருட்டி பீப்பி ஊதி, தித்திப்பாய் புழுதி தின்ற போதம் நெருப்பென அசைந்து எழுவதைக் காண்பீராக! இத்தொடர் மகாத்மா காந்தியின் நினைவு தினம் அன்றைக்கு வெளியாகிறது. காந்தி என்பது விடுதலையின் சொல். ஈழத்தமிழர்க்கு காந்தியும் ஒரு பெருஞ்சோதி. இந்தத் தொடருக்கான தலைப்பை உறுதி செய்வதில் நிறையக் குழப்பங்கள் இருந்தன. என்னுடைய தலைப்புக்கள் கடினமாக இருந்தன. பிறகு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களிடம் இதுகுறித்து உதவி கோரினேன். என்னுடைய தலைப்பை விடவும் அவர் அனுப்பிய இந்தத் தலைப்பு சிறந்த ஆசியாகவும் சிறப்பாகவும் இருந்தது. பகிடியாக அவரிடம் “சேக்கிழாருக்கு முதல் அடி தருவித்த விரிசடையானைப் போல எனக்கு நீங்கள் “போதமும் காணாத போதம்” என்று தந்துள்ளீர்கள் என்றேன். நாஞ்சில் நாடன் அப்புவின் சிரிப்பும் மகிழ்வும் எனக்கு பதிலாகக் கேட்டது. ஓவியர் கருப்பன் இந்த தொடருக்கான ஓவியங்களை வரையும் ஓவியர் கருப்பன் மிகச் சிறந்த ஆற்றல் மிக்கவர். நவீன ஓவியங்களின் அறிவிக்கப்படாத இலக்கணங்களை கூடப் பேணுபவர் கிடையாது. அவருடைய வெளியும், கோடுகளும், வண்ணங்களும் தமிழ் நவீன கலைத்துறையில் ஒரு கவனத்தைப் பெறும் என்று வாழ்த்துகிறேன். தளம் ஆரம்பித்து கட்டுரைகள் வெளியான நாட்களில் அழைத்து அறிவுரை கூறிய விஷ்ணுபுரம் குவிஸ் செந்தில் அவர்களுக்கு என் சிரம்தாழ்ந்த நன்றி. அவர் அழைத்திராவிட்டால் இந்த உத்வேகம் பிறந்திருக்கா. நன்றி செந்தில். “போதம் என்றால் என்ன மாமா” என்று அண்ணன் மகள் ரமணி கேட்டாள். சொல்லுங்கள் பார்க்கலாம் என்றேன். தெரியவில்லை என்றாள். எனக்கு இது தெரியவில்லை என்று சொல்லுவதும் போதம் தான் என்றேன். ஆமாம் தெரியாது என்பது போதத்தின் முதல் நிலை என்றால் மிகையில்லை. வடிவமைப்பு செய்கிற நூல்வனம் மணிகண்டனுக்கு நன்றி. எழுதி எழுதி தீ வளர்க்க! எழுதி எழுதி ஒளி வளர்க்க! இங்கே நான் எழுதுபவை கசப்புக்களோ, இனிமைகளோ அல்ல .இயல்புகள். ஆளரவமற்ற வீதியில் அந்தியில் நடந்து வருகிற போது என்னுடன் கூடவே வருகிற ஆலமரத்து முனியை, கொட்டடி காளியை எழுதித்தான் பூசிக்க வேண்டும். போதந்தருவது நீறு என்கிறார் ஞானசம்பந்தர், எழுத்தும் போதந்தரும் என்கிறேன். போதமே எழுக! காணாத போதமே வந்தடைக! பணிகிறேன். https://akaramuthalvan.com/?p=719
-
மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்
இப்படிப் பல இணைப்புக்கள் கிடப்பில் போய் இருக்கின்றன! மூனா அண்ணாவின் ஓவியங்கள் மட்டுமல்ல, பல கட்டுரைகள், அனுபவக் குறிப்புக்களை எல்லாம் முன்னர் இணைத்திருந்தேன். அதனால்தான் என்னவோ, அவரே யாழ் இணையத்தில் வெவ்வேறு பெயர்களில் இணைந்து ஓவியங்களையும், கதைகளையும் பதிந்து வருகின்றார்.😀 அவரது மூன்று நூல்களையும் அனுப்பியிருந்தார். கிறுக்கல்களின் வண்ண அச்சுக்கு அதிகம் செலவாகியிருக்கும் என நினைக்கின்றேன். மூனாவின் கிறுக்கல்கள் மறந்து போக மறுக்கும் மனசு நெஞ்சில் நின்றவை இன்னொரு பகிடி என்னவென்றால், யாழ் இணையத்தில் சின்னக்குட்டி என்ற உறவையும், அவர் பல பெயர்களில் உறுப்பினராக இருந்தவர், என்னையும் ஒருவர் என்று நினைத்திருந்தார்! நான் சின்னக்குட்டியை விட சின்னப்பொடியன் என்று நிரூபிக்கவேண்டியதாகப் போய்விட்டது. இப்போதைய எனது யாழ் கள அவதார் படமும் மூனா என்ற கவி அருணாசலம் அண்ணாவின் கைவண்ணம்தான்! மிகவும் பெருமையாகவே உணர்ந்தேன்😀 நன்றி மூனா அண்ணா🙏🏽
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
கொடூரத்தின் உச்சம்; உயிரிழந்த உடல்களில் வெடிகுண்டுகள்… ஹமாஸ் அமைப்பின் தந்திரம் வெளியீடு இஸ்ரேல் மீது கடந்த 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என சிக்கியவர்களை கடுமையாக அடித்து, தாக்கி வன்முறையில் ஈடுபட்டது. இதில், 260 பேர் கொல்லப்பட்டனர். 210 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. 17-வது நாளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. இதில், இஸ்ரேல் பாதுகாப்பு படையின் (ஐ.டி.எப்.) யஹலோம் பிரிவு, கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி விட்டு தப்பிய பின்னர், மீதமுள்ள வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இந்த பணி ஆபத்து மற்றும் மிக கடினம் நிறைந்துள்ளது என்று இந்த சிறப்பு படைப்பிரிவானது, தெரிவிக்கின்றது. ஏனெனில், இஸ்ரேலிய எல்லை பகுதியில் பயங்கரவாதிகள் யாரும் உள்ளனரா? என்று பாதுகாப்பாக செல்ல வேண்டி உள்ளது. வெடிக்காத வெடிகுண்டுகள் மீதம் உள்ளனவா? என்றும் அவற்றை தூய்மைப்படுத்தும் மற்றும் அப்புறப்படுத்தும் பணியும் சேர்த்து மேற்கொள்ளப்படுகிறது. இதில், உயிரிழந்த சில உடல்களில் வெடிகுண்டுகள் இணைக்கப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுபற்றிய சில புகைப்படங்களை ஐ.டி.எப். வெளியிட்டிருக்கிறது. அவற்றில், குழந்தைகள் பள்ளிக்கு போகும்போது கொண்டு செல்ல கூடிய பை ஒன்று வயல்வெளியில் கிடக்கிறது. ஆனால், அதில், ரிமோட் உதவியுடன் வெடிக்க கூடிய 7 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டு உள்ளது. இதனை எப்படியும் யாரேனும் எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில், உள்நோக்கத்துடன் ஹமாஸ் அமைப்பு தேர்வு செய்துள்ளது. போரில் பல தந்திரங்களில் ஒன்றாக இதனை அந்த அமைப்பு பயன்படுத்தி உள்ளது என கூறப்படுகிறது. https://akkinikkunchu.com/?p=259150
-
பச்சைப் புள்ளிகளும் சிவப்பு புள்ளிகளும் கருத்துக்களமும்
இதைத்தான் துஷ்பிரயோகம் என்றேன். கறள், வன்மங்களை வைத்து சிவப்புப் புள்ளி போடுவது இப்போது இலகுவாகிவிடும். இதனால்தான் முகநூலில் சிவப்புப் புள்ளி இல்லை! முகநூலில் dislike இல்லாததன் காரணம் இப்படி உள்ளது. நம் நிஜ வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பரந்த அளவிலான விஷயங்களுக்கு நாம் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறோம் என்பதை இருமையான ‘பிடித்த’ மற்றும் ‘பிடிக்காதது’ சரியாகப் பிரதிபலிக்கவில்லை.
-
பச்சைப் புள்ளிகளும் சிவப்பு புள்ளிகளும் கருத்துக்களமும்
எப்போது இருந்து நடைமுறைப்படுத்தப்படும்? சிவப்புப் புள்ளியை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கமுடியும் என்று நம்பவில்லை! இது ஒருவரின் reputation score ஐ குறைக்க வழிவகுக்கும்!
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
யானை பார்த்த குருடர்கள்! - வ.ந.கிரிதரன் - யானை பார்த்துப் பெருமிதமுறும் குருடரிவர். காலைப் பார்த்துரலென்பார்.. காதைப் பார்த்துச்சுளகென்பார். முழுவுரு அறிதற்கு முயலார். ஆயின் முற்றுந் தெரிந்ததாய் முரசறைவார். சொல்லின் பொருளறியார். ஆயின் சொல்லழகில் சொக்கி நிற்பார். 'இஸம்' பல பகர்வாராயின் 'இஸம்' புரியார். குழுச் சேர்த்துக் குளிர் காய்வார். இருப்போ தற்செயல். தற்செயலுக்குள் இவர்தம் தற்செயற் தந்திரம் தான் என்னே! நிலையற்றதனுள் நிலைப்பதற்காயிவர் போடும் ஆட்டம் தான் என்னே! புரிந்து கொள்ளப் படிக்கார். அறிந்து கொள்ளப் படிக்கார். புலமை பகிர்வதற்கன்றிப் பகர்வதற்காய்ப் படிப்பார். ஆனை பார்க்கும் அந்தகரே! தனியறிவை இணைத்தறிய என்றுதான் முயல்வீர்? https://mail.vaarppu.com/poem/573
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஜோ பைடனின் அரபு தலைவர்கள் உடனான சந்திப்பு ரத்து ஹமாஸ் அமைப்பு தாக்குதலுக்குப் பிறகு காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் காசாவில் உள்ள மக்கள் ஏவுகணை தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் திங்கட்கிழமை (17) காசாவில் உள்ள மருத்துவமனை ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. இதில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை இஸ்ரேல் தாக்கியதாக காசா மற்றும் பலஸ்தீன அதிகாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செவ்வாய்க்கிழமை (18) இஸ்ரேல் சென்று ஜோர்டான் தலைநகர் அம்மானில் ஜோ பைடன் ஜோர்டான் மன்னர் அப்துல்லா, எகிப்து அதிபர், பாலஸ்தீன தலைவர் ஆகியோரை சந்தித்து பேச இருந்தார். இதனால் காசா- இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு ஜோ பைடன் அமெரிக்கா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/அரபு-தலைவர்கள்-உடனான-சந்திப்பு-ரத்து/50-326307
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்து புரிந்த தாக்குதலும், சாதாரண மக்களை மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்ததும், குழந்தைகள் உட்பட பலரைக் கடத்தி பணயக் கைதிகளாக வைத்திருப்பதும் பலஸ்தீனர்களின் வரலாற்றில் மிகமோசமான கட்டம். ஹமாஸின் இந்த மோசமான படுகொலைகளை எவராலும் நியாயப்படுத்தமுடியாது. முக்கியமாக உரிமைகளுக்குப் போராடும் அடக்கப்பட்ட இனமான தமிழர் நாம் அடிப்படையான மனிதப் பண்புகளை எந்தக் காலகட்டத்திலும் கைவிடக்கூடாது. இந்த வகையில் ஹமாஸ் இஸ்ரேலிய யூத மக்களை கொடூரமாகப் படுகொலை செய்ததையும், பணயக் கைதிகளாகச் சிறைபிடித்து கொடுமை செய்வதையும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். அதேவேளை, ஹமாஸின் தாக்குதலைக் காரணமாக வைத்து இஸ்ரேலிய அரசும், படைகளும் காஸாவில் நடத்தும் மிகமோசமான விமானத் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களை கொத்துகொத்தாகக் கொல்வதையும், குடியிருப்புக்களை தரைமட்டமாக்குவதையும், உணவு, குடிநீர், மருத்துவ உதவிகளை முற்றாக முடக்குவதையும், அதற்கும் மேலாக வடகாஸாவின் 10 லட்சத்திற்கு மேலான மக்களை 24 மணிநேரத்தில் வெளியேற உத்தரவு இட்டு மிக மோசமான அவலத்தை உருவாக்குவதையும் ஒருபோதும் ஆதரிக்கமுடியாது. இஸ்ரேலின் காஸா மீதான முற்றுகைக்கும் உள்ளே நிகழப்போகும் பேரழிவுக்கும் அமெரிக்கா, பிரித்தானியா உட்பட மேற்குநாடுகளும், கையாலாகாத ஐ.நா. சபையுமே காரணம். இஸ்ரேலின் “தாக்குதல் தவிர்ப்பு வலயம்” ஆன தெற்கு காஸாவும் மிகமோசமான தாக்குதலுக்கு ஆளாகும். ஹமாஸை அழித்துத் துடைக்க என்று தாக்குதலை நடாத்தும் இஸ்ரேல், காஸாவில் வாழும் ஒட்டுமொத்த பலஸ்தீனர்களை அழிக்கவும், முழுமையாக வெளியேற்றவும் இந்தத்தாக்குதலை உச்சமாகப் பாவிக்கும். நாம் இதனைப் “பொப்கோர்னை” கொறித்துக்கொண்டு வேடிக்கை பார்க்கக்கூடாத். குறைந்த பட்ச மனித நேயமுள்ள அனைவரும் ஒட்டுமொத்த பலஸ்தீன மக்களைப் பழிவாங்கும் இஸ்ரேலின் பேரழிவு தரும் தாக்குதலை எதிர்க்கவேண்டும்.
-
மிருசுவில் படுகொலை : சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கிய மன்னிப்புக்கு எதிரான மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி!
மிருசுவில் படுகொலை வழக்கு….! பொது மன்னிப்பிற்கு எதிரான மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் அதிரடி அனுமதி மிருசுவில் படுகொலைகளைச் செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கியமையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்ய இலங்கை உச்சநீதிமன்றம் இணங்கியுள்ளது. அந்த படுகொலைச் சம்பவத்தை செய்த குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட சார்ஜண்ட் சுனில் ரத்நாயக்கவிற்கு மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பதவியிலிருந்து விலகும் நிலைக்கு தள்ளப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். இதை எதிர்த்து கொழும்பிலுள்ள மாற்றுக் கொள்ளைகளுக்கான நிலையம் மற்றும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தொடர்ந்த வழக்கை விசாரிக்க இலங்கை உச்ச நீதிமன்றம்(13.10.2023) அனுமதியளித்தது. 2000ஆம் ஆண்டு டிசம்பரில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மிருசுவில் கிராமத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 8 தமிழ் பொதுமக்களை படுகொலை செய்த குற்றச்சாட்டில் 2015 ஆம் ஆண்டு சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க குற்றவாளியாக கொழும்பு உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். மிருசுவில் படுகொலை வழக்கு….! பொது மன்னிப்பிற்கு எதிரான மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் அதிரடி அனுமதி | Mirusuvil Massacre Case Allowed To Hear Petition மேலும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் 2019 இல் உறுதி செய்தது. எனினும், கோவிட் பெருந்தொற்றுக்கால நெருக்கடியின் போது அதைச் சமாளிக்க இலங்கை போராடிக் கொண்டிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ச 2020 மார்ச் 26 அன்று, அவருக்கு பொது மன்னிப்பு வழங்கினார். இதை எதிர்த்து இப்போது மேல் முறையீடு செய்யப்பட்டுள்ள வழக்கில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறுப்பினர்களும் இணைந்துள்ளனர். இந்த மனுவை மேலும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், எதிர்மனுதாரர்களுக்கு பதில் அளிக்க கால அவகாசம் அளித்து, வழக்கின் விசாரணையை 2024 மே 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது. உள்நாட்டில் இடம்பெயர்ந்த மிருசுவிலை சேர்ந்த ஒன்பது அப்பாவி தமிழ் பொதுமக்கள் தங்களின் பூர்வீக வீட்டிற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இரண்டு இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கண்கள் கட்டப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அதில் ஒரு இளைஞர் தப்பினார். மீதமுள்ளவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு அவர்களின் உடல்கள் அருகிலேயே புதைக்கப்பட்டன. இதையடுத்து கைது செய்யப்பட்ட சுனில் ரத்நாயக்க மீது வழக்கு தொடுக்கப்பட்டு அது 13 ஆண்டுகள் நடைபெற்றது. பின்னர் 2015 ஜூலை மாதம் கொழும்பு உயர்நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டார். தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணையின் பின்னர் நீதிபதிகள் 9 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என உறுதி செய்தனர். இதையடுத்தே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் சுமார் ஐந்து தசாப்தங்களாக இலங்கையில் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த வேளையில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், “தாமதங்கள் இருந்த போதிலும், வழங்கப்பட்டபோது இது ஒரு அரிய நிகழ்வு” எனக் கூறியது. மன்னிப்பு வழங்க அதிகாரம் இலங்கை அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு மன்னிப்பு வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, ஆனால் குற்றவாளி மரண தண்டனை விதிக்கப்பட்டவராக இருக்கும் போது கூடுதல் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். கூடுதலாக, ஜனாதிபதி எந்தவொரு அதிகாரத்தையும் நியாயமாகவும், பொது நலனுக்காகவும் மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என்கிறது அரசியல் யாப்பு. எவ்வாறாயினும், இந்த வழக்கில் ரத்நாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான தீர்மானம் தன்னிச்சையானது, நியாயமற்றது, சட்டத்திற்கு புறம்பானது மற்றும் பொதுநலன் கருதி எடுக்கப்படவில்லை என்பது மனுதாரர்களின் நிலைப்பாடாகும். மேலும் ரத்நாயக்கவுக்கு உரிய சட்டவழிமுறைகள் அளிக்கப்பட்டன எனவும் நீதிபரிபாலனத்தில் பிறழ்வு ஏதுமில்லை எனவும் அந்த நிலையம் தனது அறிக்கையில் கூறியுள்ளது ”உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் தண்டனையை உறுதிசெய்துள்ள நிலையில், ஒரு குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்குவது நீதித்துறையின் சுதந்திரத்தை குறைத்து மதிப்பிடுவதாகவும் , சட்டத்தின் ஆட்சியை அவமதிப்பதாகவும் மனுதாரர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு மன்னிப்பு என்பது மக்களின் இறையாண்மையையும், அரசியலமைப்பின் 12 (1) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளையும் மீறுவதாகும் என்று மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச சட்டத்தரணிகள் அமைப்பு (ICJ) அந்த நேரத்தில் இந்த பொது மன்னிப்பைக் கண்டித்து “இந்த மன்னிப்பு இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பின் மீது கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்று கூறியது. மரண தண்டனை நீக்கப்பட்டதை ICJ வரவேற்றிருந்த போதிலும், இலங்கை அரசாங்கம் தன்னிச்சையான முறையில் அத்தகைய மன்னிப்பை வழங்கியதை கடுமையாக விமர்சித்தது. 2020ஆம் ஆண்டில் மன்னிப்பு வழங்கப்பட்ட நேரத்தில் ICJ இன் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய இயக்குனர் பிரடெரிக் ரவாஸ்கி கூறினார். “அத்தகைய மன்னிப்பானது தண்டனையின்மை மற்றும் நீதிக்கான அணுகல் தொடர்பான சர்வதேச நியமங்கள் மற்றும் தரங்களுடன் பொருந்தாது, மேலும் மிகவும் கொடூரமான குற்றங்களுக்கு கூட இராணுவத்திற்கு எந்தவொரு பொறுப்புக்கூறலிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது என்று நன்கு நிறுவப்பட்ட பொதுக் கருத்தை வலுப்படுத்துகிறது”. மேலும், சட்டவிரோதமாக பொதுமக்கள் கொல்லப்படுவது போன்ற கடுமையான குற்றங்களுக்கு, அத்தகைய மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான உரிமைக்கு முரணாக பொது மன்னிப்பு இருக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார். https://akkinikkunchu.com/?p=258337
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
வட காஸா மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு! வட காஸாவில் உள்ள 10 லட்சம் மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய 6-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்கள் அடுத்த 24 மணி நேரத்தில் துரிதமாக தெற்கு பகுதிக்கு வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்கள், பள்ளிகள் உட்பட அனைத்து இடங்களில் உள்ள பாலஸ்தீனியர்களை உடனே வெளியேறவும் அறிவுறுத்தியுள்ளது. http://www.samakalam.com/வட-காஸா-மக்களை-உடனடியாக-வ/
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்லாமியருக்கும், கிறிஸ்த்தவர்களுக்கும் யூதர்தான் மூதாதை. ஆனால் யூதருக்கு லெமூரியக் கண்டத்தின் தமிழர்தான் மூதாதை!!! ‘அகண்ட இஸ்ரேலும்’ ஆவேச பாலஸ்தீனமும்! - எஸ்.பி.ராஜேந்திரன் அக்டோபர் 9, 2023 செப்டம்பர் 22, 2023. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தில் அந்த நபர் பேசிக் கொண்டிருந்தார். திடீரென ஒரு வரைபடத்தை எடுத்து அவையோரிடம் காட்டி, இனி இதுதான் ‘புதிய மத்திய கிழக்குப் பிரதேசம்’ (The New Middle East) என்று கூறினார். பலரும் அந்த வரைபடத்தை உற்று நோக்கினார்கள். அதில் பாலஸ்தீனம் என்ற ஒரு நாடே இல்லாமல் செய்யப்பட்டிருந்தது. அந்த வரைபடத்தை மிகுந்த இறுமாப்போடு, தான் செய்து கொண்டிருப்பது முற்றிலும் ஒரு சட்ட விரோத காரியம் என்பதை உணர்ந்தே வெளியிட்டவர் வேறு யாருமல்ல, இஸ்ரேல் ஜனாதிபதி பெஞ்சமின் நேதன்யாகு. 56 சதவீதமும் 78 சதவீதமும் 1947இல் யூத மக்களுக்கு சொந்தமாக ஒரு நாடு வேண்டும் என்பதற்காக ஐ.நா. சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு பாலஸ்தீனத்தின் 56 சத வீத நிலப்பகுதியை பிரித்து அவர்களை குடியேற்றம் செய்ய வைத்து, இஸ்ரேல் எனப் பெயரிடப்பட்டது. ஆனால் பாலஸ்தீனத்தை பிரித்து சரிபாதிக்கும் அதிகமான நிலப்பகுதியை வேறொரு நாடாக மாற்றுவதை அன்றைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஏற்கவில்லை. எனினும் இஸ்ரேல் என்ற நாடு உருவாகி விட்டபின்னர் 1950ல்தான் இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்தது என்பது தனி வரலாறு. உருவானது முதலே இஸ்ரேலின் ஆட்சியாளர்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக, ஏவலாளிகளாக, பாலஸ்தீன மக்களை அழித்தொழிக்கும் இனவெறி கொண்டவர்களாக செயல்பட்டார்கள். 1947-48இல் அதிபயங்கரமான தாக்குதல் சம்பவங்களை இஸ்ரேல் அரங்கேற்றியது. பாலஸ் தீனத்தின் ஐநூறுக்கும் மேற்பட்ட கிராமங்களை இஸ்ரேல் ராணுவம் அழித்தொழித்தது. 7.5 லட்சம் பாலஸ்தீனர்கள் வீடுகளை இழந்து, கிராமங்களையும், நகரங்களையும் இழந்து அகதிகளாக நின்றார்கள். இதையொட்டி நடந்த மோதல்களில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள், இஸ்ரேலிய ராணுவத்தினர் மற்றும் யூத இனவெறி கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார்கள். 56சதவீத நிலப்பகுதிக்கு பதிலாக இஸ்ரேலிய அரசு பாலஸ்தீனத்தின் 78 சத வீத நிலப்பகுதியை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டது. இந்த பாலஸ்தீனப் பேரழிவின் 75ஆம் ஆண்டு, சமீபத்தில் 2023 மே மாதம் நினைவு கூரப்பட்டது. அன்று துவங்கிய பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இன அழிப்பு கடந்த 75 ஆண்டுகளாக - உலக நாடுகள் அனைத்தும் கண்டித்த போதிலும், ஐக்கிய நாடுகள் சபையில் எண்ணற்ற தீர்மானங்கள் நிறைவேற்றிய போதிலும்- அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் கொடூரமான முறையில் இப்போது வரை நீடிக்கிறது. 1947-48 இல் நடந்த இஸ்ரேலின் மிகப் பெரும் இனஅழிப்பு நடவடிக்கையில் வாழ்விடங்களை இழந்த பாலஸ்தீனர்கள் மேற்குகரையிலும் காசா திட்டுப் பகுதியிலுமாக குடியேறினர். ஏராளமானோர் லெபனான், சிரியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். அன்று முதல் இஸ்ரேல் பாலஸ்தீனை படிப்படியாக ஆக்கிரமித்து, மேற்குகரையில் ஒரு சிறிய பகுதி மற்றும் காசா நகரம் ஆகிய இரண்டு இடங்கள் தவிர அனைத்து பகுதிகளையும் தன்வசமாக்கிவிட்டது. தற்போது வெறும் ஏழு சதுர கிலோ மீட்டர் அளவிற்கு மட்டுமே பாலஸ்தீனர்கள் வாழும் பகுதியாக உள்ளது. ‘அகண்ட இஸ்ரேல்’ இந்தப் பகுதியையும் அழித்து, இங்குள்ள பாலஸ்தீனர்களை முற்றாக ஒழித்து, வேறு நாடுகளுக்கு விரட்டி, நாடற்றவர்களாக ஆக்குவதுதான் இஸ்ரேலின் தற்போதைய திட்டம். இதைத்தான் பெஞ்சமின் நேதன்யாகு ஐ.நா. பொதுச் சபையில் பகிரங்கமாக முன்வைத்தார். அவர் வெளியிட்ட வரைபடத்தில் சிரியா மற்றும் லெபனானின் சில பகுதிகளை யும் உள்ளடக்கி ‘அகண்ட இஸ்ரேல்’ (Greater Israel) என்று பெயரும் வைத்து விட்டார். இவருக்கு முன்பே இந்தாண்டு துவக்கத்தில் இஸ்ரேல் நிதியமைச்சர் பெசாலல் ஸ்மோட்ரிச், பாலஸ்தீனம், லெபனான், சிரியா ஆகிய மூன்று நாடுகளையும் அழித்து, ஒரு வரைபடத்தை வெளியிட்டார். இவையனைத்தும் உள்ளடக்கியதுதான் நாங்கள் எதிர்நோக்கும் அகண்ட இஸ்ரேல் என்று அறிவிக்கவும் செய்தார். ஹமாஸ் இயக்கத்தினர் அதிரடியாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதன் பின்னணி இதுதான். பாலஸ்தீனத்தின் காசா பகுதி ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதற்கு முன்பு மேற்கு கரை மற்றும் காசா இரண்டுக்குமான தலைமையிடமாக மேற்குகரையில் உள்ள ரமல்லாவே இருந்தது. பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO)இந்த ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்களை உணர்வூட்டி, இஸ்ரேலின் அட்டூழியங்களுக்கு எதிராக எண்ணற்ற போராட்டங்களை நடத்தியது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராபத் தலைமையில் இந்த எழுச்சி நீடித்து வந்தது. ஏராளமான பேச்சுவார்த்தைகள், அமைதி முயற்சிகள், இஸ்ரேலின் மீறல்கள், பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதல்கள், மேலும் மேலும் ஆக்கிரமிப்பு என வரலாறு நெடுகிலும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் களத்தில் நின்று சந்தித்தது. ஆனால் சுதந்திர பாலஸ்தீனத்துக்கான தீர்வு கிடைக்கவில்லை. இஸ்ரேலின் கொடிய அடக்குமுறைகள் தீரவில்லை. ஹமாஸ் இயக்கத்தின் ஆயுதப் போராட்டம் இந்த பின்னணியில், ரமல்லாவை தலையிட மாகக் கொண்ட பாலஸ்தீன விடுதலை இயக்கம் தலைமையிலான நிர்வாகத்தை காசா பகுதியில் செயல்பட்டு வந்த ஹமாஸ் இயக்கம் ஏற்க மறுத்தது. யாசர் அராபத்தும் மறைந்த நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டமே தீர்வு என்ற முடிவு டன் ஹமாஸ் இயக்கம் மக்களை அணிதிரட்ட துவங்கியது. காசா பகுதியில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுத வழி போராட்டத்தை உறுதியுடன் மேற்கொண்டது. ஏற்கெனவே கடும் ஒடுக்குமுறையை மேற்கொண்டிருந்த இஸ்ரேல், ஹமாஸ் தலைமையிலான காசா பகுதியை மேலும் மேலும் முற்றுகையிட்டு, குண்டுமழை வீசி சல்லடையாக துளைத்தது. காசாவில் 2008க்கு பிறகு இது வரை சுமார் 1.5 லட்சம் பாலஸ்தீன மக்களின் உயிரைப் பறித்துள்ளது இஸ்ரேலிய ராணுவம். இவர்களில் 33ஆயிரத்திற்கும் அதிகமானோர் குழந்தைகள். தற்சமயம் 20 லட்சத் திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் காசா, உலகிலேயே மிக மிக மோசமான முறையில் சிதைக்கப்பட்ட, எதிர்காலம் முற்றிலும் சூனியமாக்கப்பட்ட நகரம். ஐ.நா.சபையின் தோல்வி 75 ஆண்டு கால வரலாற்றில் பாலஸ்தீனத்திற்கு உரிய நியாயத்தை உறுதி செய்வதில், ஐக்கிய நாடுகள் சபை அப்பட்டமாக தோல்வியடைந்துள்ளது. ஐ.நா. சபையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொண்டு வரப்பட்ட ஒரு தீர்மானத்தைக் கூட அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆதரித்ததில்லை. மாறாக, இஸ்ரேலை ஏவலாளியாக பயன்படுத்தி வளைகுடா பிரதேசத்தில் நிரந்தரமான பதற்றத்தை நிலவச் செய்வதில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது. இத்தகைய பின்னணியில்தான், இஸ்ரேலில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள அதிதீவிர வலதுசாரியான பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான அரசு, பாலஸ்தீனத்தையே முற்றாக அழிப்பது என்ற நோக்கத்துடன் மேற்கொண்ட நகர்வுகள், ஹமாஸ் உள்ளிட்ட பாலஸ்தீன மக்களின் இயக்கங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுப்பதே பொருத்தமானது என்று, மிகுந்த நுட்பத்துடன் திட்டமிட்டு, இஸ்ரேலின் வலுவான உளவு அமைப்புகளின் கண்களில் மண்ணைத் தூவி, வலுவான தாக்குதலை நடத்தியுள்ளது ஹமாஸ் இயக்கம். இதற்கு இஸ்ரேல் தரப்பில் எதிர்வினை கடுமையாக இருக்கும் என்பது தெரிந்ததே. கடந்த இரண்டு நாட்களாக ‘போர்’ அறிவித்து காசாவை இன்னும் கடுமையாக தாக்கி வருகிறது இஸ்ரேல். இந்தியா என்ன செய்ய வேண்டும்? இத்தனை ஆண்டுகளாக தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றிக் கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபை இப்போதேனும் பாலஸ்தீன மக்களின் தாய்நாட்டிற் கான சட்டப்பூர்வமான உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்; கிழக்கு ஜெருசலேமை தலைநகராக கொண்டு சுதந்திர பாலஸ்தீனம் என்ற தனி நாட்டை உருவாக்குவது என ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக அமலாக்க வேண்டும்; பாலஸ்தீனத்தின் ஒட்டுமொத்த பகுதிகளிலிருந்தும் இஸ்ரேல் குடி யிருப்புகளும் ராணுவமும் அகற்றப்பட வேண்டும். இதுதான் தீர்வு. ஆனால் இந்தத் தீர்வை எட்டுவதற்கு ஆயுத மோதலோ, உயிர் பறிக்கும் கொடிய போரோ வழி அல்ல. இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளும் - அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அலட்சியம் செய்து - இஸ்ரேலை முற்றாக தனிமைப்படுத்தி, அதன் மூலம் அரசியல் தீர்வுக்கு வரச் செய்ய வேண்டும். அத்த கைய தீர்வை நோக்கி உலகை உந்தித் தள்ளுவதில் இந்திய அரசுக்கும் முக்கியப் பங்கு உண்டு. https://theekkathir.in/News/articles/உலகம்/greater-israel-and-palestinian-palestine
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
புலனாய்வில் கோட்டைவிட்டதா மொஸாட்? எல்லைகளை இறுக்கமாக வைத்திருக்கவேண்டிய இஸ்ரேல் படைகளும் தூங்கிவிட்டன. இவையே ஹமாஸ் ஊடுருவித் தாக்குதல் செய்ய உதவிவிட்டது. இந்தத் தாக்குதல் மூலம் ஹாஸா பகுதி முழுவதும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்படும். பலஸ்தீனியர்கள் இனி ஹாஸாவில் இருக்கமுடியாது போகும் போலத் தோன்றுகின்றது. எனக்கு சஹ்ரான் குழுவினர் எப்படி ஈஸ்டர் படுகொலைகளைச் செய்தார்களோ, அதுபோல இதுவும் இஸ்ரேலியர்களை ஒன்றிணைக்க மறைமுகமாகவும் திட்டமிட்டு செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தோன்றுகின்றது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
தலைமுறை தலைமுறையாக பலஸ்தீனர்களை திறந்தவெளிச் சிறை போல மேற்குக்கரையிலும், ஹாஸாவிலும் ஆயுத பலத்தைக் காட்டி அடக்கிவைத்திருக்கும் இஸ்ரேலும், அதற்கு முட்டுக்கொடுக்கும் அமெரிக்காவும், ஒற்றுமையில்லாத மத்தியகிழக்கு நாடுகளும், பாலஸ்தீனம்- இஸ்ரேல் இரண்டும் இருநாடுகள் என்ற தீர்வை கொடுக்கமுடிடியாத வலுவற்ற ஐ.நா. அமைப்பும் இன்றைய தாக்குதலுக்கும், பொதுமக்களின் உயிரழப்புக்களுக்கும் பதில் சொல்லவேண்டியவர்கள். எதிர்வரும் நாட்களில் இஸ்ரேல் கொடூரமான முறையில் இன்னும் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்களைக் கொன்றழிக்கும்போது இந்த சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கும்.
-
‘ஐபோன் 15’… களமிறக்கிய ‘ஆப்பிள்’: விலை, சிறப்பம்சங்கள் என்ன?
நான் ஒருபோதும் சாம்சுங் பொருட்கள் வாங்குவதில்லை என்ற கொள்கையுடன் இருக்கின்றேன். ஏனெனில் நான் முன்னர் வேலையில் இருந்த chipset கொம்பனியில் உள்ளவர்களை சாம்சுங் தென்கொரியாவில் மிக மோசமாக நடாத்தினார்கள். 7 நாட்களும் 16 மணித்தியாலம் வேலை செய்ய வைத்தார்கள். இதனால் முக்கியமான என்ஜினியர்கள் வேலையை விட்டு விலகியிருந்தனர். அவர்கள் கூறிய அனுவத்தில் இருந்து சாம்சுங் பொருட்களை வாங்குவதில்லை என்று முடிவெடுத்தேன். 2016 வரை நான் எனது பணத்தைச் செலவழித்து ஃபோன் வாங்கியதில்லை. எப்போதுமே லேட்டஸ்ட் நொக்கியா ஃபோன் இருந்தது! கடைசியில் நான் வேலை செய்த ஃபோன் 2016 வரை வைத்திருந்தேன். அதன் பின்னர் அப்பிளுக்கு மாறிவிட்டேன். iPhone 15 Pro Max எனது இரண்டாவது அப்பிள் ஃபோனாக இருக்கும்! 2011 - 2016 வரை வைத்திருந்த நொக்கியா ஃபோன்கள்! மூன்று வர்ணங்களிலும்!
-
‘ஐபோன் 15’… களமிறக்கிய ‘ஆப்பிள்’: விலை, சிறப்பம்சங்கள் என்ன?
‘ஐபோன் 15’… களமிறக்கிய ‘ஆப்பிள்’: விலை, சிறப்பம்சங்கள் என்ன? monishaSep 13, 2023 09:18AM ஐபோன் 15 சீரிஸ் அறிமுகம் இணையவாசிகள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த ‘ஐபோன் 15’ தொடரின் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 போன்களை, ஆப்பிள் நிறுவனம் தனது ‘வண்டர்லஸ்ட்’ நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ரூ.79,900 என்ற துவக்க விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஐபோன்கள், ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் வழக்கமான ‘லைட்னிங்’ சார்ஜிங் போர்ட் வசதியுடன் இல்லாமல், முதன்முறையாக ‘டைப் – சி’ போர்ட் வசதியுடன் அறிமுகமாகியுள்ளது. ஐபோன் 15 (iPhone 15) & ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus) 512ஜிபி வரை சேமிப்பு அம்சம் கொண்ட இந்த ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ், இந்தியாவில் முறையே ரூ.79,990 மற்றும் ரூ.89,990 என்ற துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2 நானோ சிம்களை இணைக்கும் வசதி கொண்ட இந்த ஐபோன்களில், ஐபோன் 15 6.1-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED திரையுடனும், ஐபோன் 15 பிளஸ் 6.7-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED திரையுடனும் அறிமுகமாகியுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் பயன்படுத்தப்பட்ட ஏ16 பயோனிக் சிப்பே இந்த ஐபோன்களிலும் நிறுவப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை, இந்த 2 ஐபோன்கள் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா என 2 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. இந்த கேமராக்கள் 4x ஆப்டிகல் ஜூம் வசதியையும் கொண்டுள்ளது. செல்ஃபிகளுக்காக 12 மெகாபிக்சல் ட்ரூ-டெப்த் கேமராவை ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது. கருப்பு, நீலம், பச்சை, மஞ்சள் மற்றும் பிங்க் என இந்த ஐபோன்கள் 5 வண்ணங்களில் விற்பனைக்கு வரவுள்ளன. ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஃபோன்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 15 அன்று துவங்கும் என்றும், அவை செப்டம்பர் 22 அன்று விற்பனைக்கு வரும் என்றும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) & ஐபோன்15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) ஐபோன் 15 போல் இல்லாமல், ஆப்பிளின் புதிய ‘ஏ17 பயோனிக்’ சிப்புடன் அறிமுகமாகியுள்ள ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஐபோன்கள், இந்தியாவில் முறையே ரூ.1,34,900 மற்றும் ரூ.1,59,900 என்ற ஆரம்ப விலைகளில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஐபோன்கள் 1டிபி வரை சேமிப்பு வசதி கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 15 ப்ரோ 6.7-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED திரையையும் மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் 6.7-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED திரையையும் கொண்டுள்ளது. 3 பின்புற கேமராக்களை கொண்டு இந்த ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் 3x டெலிபோட்டோ கேமரா என 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபிகளுக்காக ஐபோன் 15 சீரிஸ் போன்களை போலவே, ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் ஐபோன்களிலும் 12 மெகாபிக்சல் ட்ரூ-டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் முன்பதிவும் செப்டம்பர் 15 அன்றே துவங்க உள்ளது. செப்டம்பர் 22 அன்று இந்த ஐபோன்கள் விற்பனைக்கு வருகின்றன. கருப்பு டைட்டேனியம், வெள்ளை டைட்டேனியம், நீல டைட்டேனியம், நேச்சுரல் டைட்டேனியம் என 4 வண்ணங்களில் இந்த ஐபோன்கள் கிடைக்க உள்ளன. ஆப்பிள் வாட்ச் 9 சீரிஸ் & ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 ஐபோன் 15 சீரிஸ்ஸ் போன்களுடன், ஆப்பிள் வாட்ச் 9 சீரிஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 என ஸ்மார்ட்-வாட்ச்களையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அலுமினியம் & ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் என 2 வகைகளில், மிட்நைட், ஸ்டார்நைட், சில்வர், சிவப்பு, பின்க் என 5 வண்ணங்களில், இந்தியாவில் ரூ.41,900 என்ற விலையில் ஆப்பிள் வாட்ச் 9 சீரிஸ் விற்பனைக்கு வரவுள்ளது. மறுபுறத்தில், அல்பைன் லூப், டிரைல் லூப், ஓசென் பேண்ட் என 3 வகைகளில், 9 வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2, இந்தியாவில் ரூ.89,900 என்ற விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த 2 ஸ்மார்ட் வாட்ச்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிய நிலையில், மற்ற ஐபோன்களை போலவே இவையும் செப்டம்பர் 22 அன்று விற்பனைக்கு வரவுள்ளது. https://minnambalam.com/archives-trending-news-in-tamil/what-are-the-special-features-of-apple-iphone-15-series/
-
அமைப்பில் சிறந்த ஆளுமையுள்ள பல போராளிகளை உருவாக்கிய போர்ப்பயிற்சி ஆசான்” மேஜர் செல்வராசா மாஸ்ரர்
அமைப்பில் சிறந்த ஆளுமையுள்ள பல போராளிகளை உருவாக்கிய போர்ப்பயிற்சி ஆசான்” மேஜர் செல்வராசா மாஸ்ரர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்ப கால சிறந்த போர்ப்பயிற்சி ஆசாண் மேஜர் செல்வராசா மாஸ்ரர்/அன்பு…! “புலிகள் அமைப்பில் சிறந்த ஆளுமையுள்ள பல போராளிகளை உருவாக்கிய போர்ப்பயிற்சி ஆசான்” இப்பிடித்தான் 1990களில் சண்டைகள் இல்லாத நேரங்களில் அண்ணை தளபதி மாரை தான் நிக்கிற இடத்துக்கு கூப்பிட்டு ஏதாவது போட்டி நடக்கும். பெரும்பாலும் அது துப்பாக்கி சூட்டுப்போட்டியா தான் இருக்கும். ஒருநாள் ரெண்டு கையிலை, ரெண்டு துவக்கு தூக்கிர போட்டி ஒண்டை வைச்சார். உது ஈஸி தானே? எண்டு “ரம்போ” கணக்கா யோசிக்கக்கூடாது. அவர் வச்ச போட்டி என்னண்டா.! ரெண்டு துவக்கை முன் நுனி பெரலில பிடிச்சு தூக்கி, நீட்டி வச்சிருக்கோணும்.! போட்டி SMG இல தொடங்கி,AK, SLR, எண்டு போய், கடைசியில இந்தியன்ற பிறண் LMG இல வந்து நிண்டிச்சுது. போட்டியில எல்லாரும் தோத்து போக, ரெண்டு பிரண் LMG ஐ தூக்கி செல்வராஜா மாஸ்ட்டர் முதலாம் இடம் பிடிச்சார். அவருக்கு 30- 9mm ரவுண்ஸ் பரிசா அண்ணையிட்டை இருந்து கிடைச்சுது. மாஸ்டர் அடிக்கடி பெடியளுக்கு உடம்பை இறுக்கோணும்! உடல் பயிற்சி செய்யுங்கோ எண்டு கத்திரத்தின்ற அர்த்தம் அண்டைக்கு விளங்கிச்சுது. எங்கட ஊர் “ரம்போ” எங்கட மாஸ்ட்டர் தானே. பெடியள் ஏதாவது குழப்படி செய்தால் அண்ணை சொல்லுற வசனம், “செல்வராஜாட்டை ட்ரெயினிங் எடுத்திருந்த உந்தப்பிழை வந்திருக்காது” எண்டுவார். இதுவே மாஸ்ட்டரின் தகுதிக்கான விருது. செல்வராசா மாஸ்ரர் இன் போராட்ட காலப்பகுதியின் முக்கிய நினைவில் இதுவுமொன்று அந்த காலப்பகுதியில் அதாவது இந்திய இராணுவ ஆதிக்கத்தில் மட்டுவிலில் தலைவரின் மனைவியும் பிள்ளைகளும். ஆள்மாறி ஆள்விட்டு – அங்கும், எங்கும் விசாரித்தபோது வந்தது வின்சனின் வீரச்சாவுச் செய்தி!. மட்டுவில் செல்லப்பிள்ளையார் கோயிலடி சிலுவில் வயல்வெளியில், மதியக்காவும், பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் கிடந்தது வின்சனின் வித்துடல் இந்தியப்பத்திரிகை நிருபர் அனிதா பிரதாப் எழுதிய “இரத்தத்தீவு” (Island of Blood)) எனும் நூலில் குறிப்பிடப்படும் வின்சன் இவராவார். அக்காவையும், பிள்ளைகளையும் காணிக்கை அண்ணரின் வீட்டருகில் இருந்த நடராசா ஐயாவின் வீட்டில் – மட்டுவில் மகேஸ் வீட்டில் – சந்தித்துவிட்டு திரும்பும் வேளையில் இந்தியப்படை எதிர்கொண்டது. தப்பும் முயற்சியும் முடியாமல் போக, சயனைட் அருந்தி தலைவரின் குடும்பத்தையும், தமிழீழத்தின் மானத்தையும் காத்து தன்னுயிர் கொடுத்து நின்றான் வின்சன். வின்சன் வீரச்சாவடைந்த சோகமும், தலைவரின் குடும்பத்தைப் பாதுகாத்து விட்டான் என்ற நிம்மதியுமாக, அன்றைய தமிழ்ச்செல்வனின் உணர்வுகள் – அவனது நினைவில் அழியாதவை. இனி வேறு வழியில்லை என்றானபோது குழந்தைகளைத் தனியாக வேறிடம் அனுப்புவதென்றும், தாயாரை தனியே நகர்த்துவதென்றும் முடிவானது. “தாயும் – இருபிள்ளைகளும்” என்ற அடையாளத்தைநோக்கி வேட்டையாட அலையும் இந்தியப் படைகளிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற இந்தமுடிவு தவிர்க்க முடியாததானது. இந்தியப்படையைக் கலக்கிய கச்சாயைச் சேர்ந்த கந்தண்ணை இந்தியப்படை சூழ்ந்துநிற்க கச்சாய் – புங்கம்பிள்ளையார் கோயிலடிக்கரையில் கந்தண்ணை ஒழுங்குசெய்த மரத்தோணியில் ஏற்றி மதியக்காவை சொர்ணத்திடம் பொறுப்புக் கொடுத்தார்கள் தமிழ்ச்செல்வனும் அவனது அணியினரும். தென்மராட்சியில் இந்திய இராணுவத்தினருக்கு முகம் கொடுக்கத்தக்க, புடம் போடப்பட்ட போராளிகள் பலர் தமிழ்ச்செல்வனின் அணியில் இருந்தனர். தலைவரின் குடும்பம் தென்மராட்சியிலிருந்து இடம்மாறிய பின்னரும் அங்கு புலி அணியினரைத் தேடிய பாரதப் படையினர் பாவம், பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. மிருசுவிலில் தினேசுடன் பரணியும், அம்மாவும், மகேந்தியும் நிற்பதாய் தேடிப் போவார்கள். எல்லாச் சோதனையும் முடிந்து ஊர்ச்சனத்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டு படையினர் முகாம் திரும்பும்வேளை, சுற்றி வளைப்புக்குப் போகாத குடுகுடு ஆச்சியின் சோற்றுக் குழையல் உருண்டையில் பசிபோக்கிக் கொண்டிருப்பார்கள் இவர்கள். மட்டுவிலில் புலிகள் நிற்பதாக அறிந்து ஊரை வளைத்திருப்பர் இந்தியப் படையினரும், அவர்தம் கைக்கூலிகளும். வயலிற்கு வேலைசெய்யும் கணவனுக்கு என்று சொல்லி அந்த அம்மா கொண்டுவந்த கஞ்சியைக் குடித்துக் கண்பனிப்பர் குணாவும், பாப்பாவும், மந்துவிலில் ஆஞ்சியும் (இளம்பருதி), ரவி அண்ணையும் அப்போதும் கூடநிற்பதைத் தெரிந்துதான் பெரும் படையாய்ப் போனார்கள் இந்தியப் படையினர். வீதியின் முன்புறத்துச் சிறுவனும், தோட்டத்துப் பெரியவரும் முன்னரே சொன்னதால் சேற்றுநிலத்து கண்ணாப்பற்றைக்குள் இறங்கி – இந்தியப் படையை ஏமாற்றி வருவார்கள் இவர்கள். இந்திய இராணுவ காலத்தின் 1988 இன் பிற்பகுதி, மணலாற்றுக் காட்டிலிருந்த தலைவர் என்னிடம் யாழ் மாவட்டப் பொறுப்பைத்தந்து வழியனுப்பி வைத்தார். தலைவரின் சொற்படி வல்வெட்டித்துறையில் எனது பாதுகாப்பிடத்தை அமைத்துக் கொண்ட பின்னர், நாம் ஆயுதஅணியாகச் சென்றது தென்மராட்சிக்குத்தான். கிட்டண்ணா யாழ்ப்பாணம் புறப்படும்போது தலைவர், “வல்வெட்டித்துறையில் நின்றுகொண்டு செயற்படு, அங்கேயுள்ள சனம் உனக்குப் பாதுகாப்பைத் தரும்” என்றும், புதியவர்கள் வந்தால் இலகுவாக அடையாளம் காணக் கூடியபடியாக அவ்வூரில் புவியியல், சமூக அமைப்புள்ளமை போன்ற விடயங்களைச் சொல்லித்தந்து வழியனுப்பினார். அவ்வேளையில் உடனிருந்த கிட்டண்ணை “வல்வெட்டித்துறைக்குப் போகவேண்டா மென்று சொல்லவில்லை, அதற்குப் பிறகு நீ போய் தினேசைப் பிடி” என்றார். அதாவது தினேஸ் உங்களுடன் ஒத்துழைப்பான் என்பதும், தென்மராட்சியின் பெரும் தென்னை மரங்களும், மாஞ்சோலைகளும், புதர்க்காடுகளும் நல்ல பாதுகாப்பைத் தரும் என்பதும் கிட்டண்ணையின் கருத்தாக இருந்தது. புலியணிகளின் வரணித்தளம் அங்கு தென்மராட்சியில் நாவற்குழியிலிருந்து பளைவரை இருந்த அனைவரையும் மிருசுவிலில் ஒன்றாக்கித்தந்தான் தினேஸ். தென்மராட்சி அணியினரின் கைத் துப்பாக்கிகளுக்கும் ஓய்வு கொடுத்து பெரியசுடுகலன்களுக்கு (றைபிள்கள்) மாறினோம். அணியானோம். தென்மராட்சி – மந்துவிலில் சிலகாலமும், வரணியில் ஏதோவொரு இந்துக்கோயிலின் அருகாமையில் அதற்கு பொற்கோயில் என பெயரிட்டு பல மாத காலமுமாக அணியாய் தளமமைத்துச் செயற்பட்டோ மென்றால் அது தமிழ்ச்செல்வனது தளம். வரணியூரில் எமதுதேவைக்கு வசதியாக, வாகாக உணவுசெய்து தருவதற்கும், ஊர்ப்புதினம் பார்த்துச் சொல்லவுமாக விநாயகத்தை நியமித்து, தன்னுடன் நின்ற குணா, குணத்தார், செல்வராசா ஆகியோரை ஆமிபார்த்துச் சொல்ல காவல்விட்டு, ஆஞ்சி (இளம்பருதி), ரவியண்ணை, விநாயகம், ரவி, டானியல், ரட்ணா என தனது ஆளணியை என்னோடுநிற்கவிட்டு தளமமைத்துத் தந்தான் தினேஸ். தென்மராட்சியில் தமிழ்ச்செல்வனது அணியினரது வீரம் செறிந்த நாட்கள். வீரம் மட்டுமல்ல போரிடுவதில் போட்டியும், நகைச்சுவையும் கலந்திருந்த மறக்க முடியாத நாட்கள் அவை. சாரங்கட்டிய புலிகள் ஜீன்சுக்கு மாறிய கதை “சாரங்கட்டிய புலியென்று எதிரிநாடு சொன்னதனால், சாரத்தைமாற்றி எல்லோரும் காற்சட்டைகளுக்கு மாறுவோம்”, கதைத்துவிட்டோம். “ஜீன்சிற்கு மாற விரும்புவோர் வாருங்கள்” என்று சொல்ல அங்கிருந்த அணியில் கையை உயர்த்தியவர்கள் இரண்டு பேர் தான். கொஞ்ச நாட்களாக ஜீன்ஸ் போட கையை உயர்த்தியவர்களைப் பார்த்து ஒரே சிரிப்பு – அறுவை – பகிடி, இன்னும் கொஞ்சநாள் கழித்து ஜீன்ஸ் போடாமல் சாரத்துடன் திரிபவர்களைப் பார்த்து அதே சிரிப்பு – அறுவை பகிடி ஆமி ஒருமுறை கலைக்க, அங்குநின்ற ஏழெட்டுப்பேர் ஒன்றாக ஓட ஒருவர்பின் ஒருவராய் ஓடிய எல்லோரும் இரும்புப் படலை ஒன்றை படாத பாடுபட்டு ஏறிக்கடந்து பாய்ந்தோட உயரமேற முடியாத கடைசிஆள் பதறிப் போய் தள்ள படலை முன்னரே திறந்துதான் இருந்ததாம். கச்சாய் றோட்டுப்பக்கமோ அல்லது அந்தப்பகுதியில் எங்கோவோர் இடத்தில் கந்தண்ணையைக் கட்டிப்பிடித்த ஆமியை தோளிலிருந்த துவக்கால் அப்படியே சுட்டுச்சாய்த்துவிட்டு எதிரியின் இரத்தம் தன் உடலெல்லாம் தோய, திரும்பிப் பார்க்காமல் ஒரே ஓட்டமாய் ஓடிவந்ததை சொல்லும் போதும் அந்த இடமெல்லாம் சிரிப்பில் அதிரும். தமிழ்ச்செல்வன் மற்றும் தென்மராட்சி அணியெல்லாம் நாமிருந்த பொற்கோயில் தேடிவந்தால் பம்பலில் கலகலப்பில், சிரிப்பில் அதிரும் எமதிடம். என்னுடன் அணிகளுக்குப் பொறுப்பாகவிருந்த செல்வராசா மாஸ்ரர் குளிக்கும் நேரம்தவிர மற்றநேரமெல்லாம் தன்னுடலில் இருக்கும் ரவைக்கூடுதாங்கியை (கோல்சர்) கழற்றமறுக்கும் செல்வராசா மாஸ்ரர் வந்து முறைப்படுவார், “இவர்கள் வந்தால் ஒரே சிரிப்பும்சத்தமும். சொல்லுக் கேட்கிறார்கள் இல்லை” என. நடேஸ், பாபுவின் வீரச்சாவிற்குப் பதிலடித்தாக்குதல். மீசாலை மண்ணின் மைந்தன் கப்டன் கில்மன் மிருசுவில் – கண்டிவீதி நெடுஞ் சாலையில் – தேவாலய சுற்றாடலில் அமைந்திருந்தது இந்தியப்படை நிலை, மேஜர் சிறி சாரதியாக வர, ரூபனை நடுவிலிருத்தி கைகளில் குண்டுகளேந்தி வெள்ளைச்சட்டை அணிந்து, வயதானவர்போல் தலைப்பாகைக்கட்டுடன், வஞ்சினம் பொங்கும் நெஞ்சுடன் முன்னிருக்கையில் அமர்ந்து சென்றான் தமிழ்ச்செல்வன். அவனது தலைமையில் பார ஊர்தியொன்றில் சென்ற எமது அணியினரின் தாக்குதலை இந்தியப்படை எதிர்பார்க்க வில்லை. நாம் எதிர்பார்த்திருந்ததை விடவும் படையினரது எண்ணிக்கையும் அதிகம்தான்| நல்ல வேளையாக பக்க உதவியாக ஈருருளிகளில் சென்ற ரவியண்ணை, ரேகா, பாப்பாவையும் உட்படுத்திய அம்மானின் அணியும் இன்னொரு பக்கத்தால் தாக்குதலைத் தொடுக்க, வெற்றி எமதானது. நாம் தங்கியிருந்த பொற்கோயிலுக்கு நெஞ்சில் படுகாயமடைந்த ராகுலனுடன் சேர்ந்துவந்தது வெற்றிச் செய்தியுடன் கப்டன் கில்மனின் வீரச்சாவும், வித்துடல் விடுபட்டுவிட்டதென்ற சோகச்செய்தியும், எமது தரப்பில் கப்டன் கில்மன் வீரச்சாவடைய, ராகுலன், பரணி, வீமன் ஆகிய மூவர் காயமடைந்த அத்தாக்குதலில், அங்கு நின்ற தமது நான்கு அணியினரில் ஒரு அணியினர் முழுப்பேருமே ஒரு ரவைகூட திருப்பிச் சுடமுடியாமல் இறந்து போனதையும், மற்றைய அணியில்கூட ஒருவர்மட்டும் தப்பமுடிந்ததையும் சர்தேஸ்பாண்டே என்ற இந்திய இராணுவ அதிகாரி “யாழ்ப்பாணம் – இடுபணி” (Jaffna Assignment)) என்ற நூலில் விபரிப்பதிலிருந்தே தாக்குதலின் தீவிரத்தையும், திட்டத்தின் துணி கரத்தையும் புரிந்துகொள்ளலாம். அதில் கூட ஒரு வீரச்சாவு மற்றும் சிலகாயத்துடன் பெரியவெற்ற கிடைத்துவிட்டதனாலும், பிறண் இலகு இயந்திரத்துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதனாலும் நாம் பெருமையும், மகிழ்ச்சியும் அடைந்தோம். இவர்களின், அதாவது தினேசின் அணியினரின் கவலை என்னவென்றால் “கால் கஸ்ரோ” அதாவது சுவீடன் நாட்டின் போர்பஸ் என்ற நிறுவன வடிவமைப்பான உந்துகணைசெலுத்தியை கைப்பற்ற முடியாமல் போனது தான், “சனியன் கால்கஸ்ரோக்காரன் ஓடிவிட்டானம்மான்” என்பான் தமிழ்ச்செல்வன். நன்றி – (உலக புலனாய்வு வல்லுநர்களால் நன்கறியப்ப்பட்ட தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளர் ச.பொட்டு அவர்களினது பிரிகேடியர் தமிழ்ச்செல்வின் நினைவுக் குறிப்பிலிருந்து) https://www.thaarakam.com/news/b9cf8b47-2d59-4110-ad47-535be2fd2b6d
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அவர் முன்னர் ஈரோஸ் என்ற புரட்சிகர அமைப்பின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் அல்லவா! அவர் சொல்லும் விடயங்களை மறுதலிக்க முடிந்தால் நல்லது. மூடிமறைத்து தேசியம் வளர்க்கமுடியாது