Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    34939
  • Joined

  • Days Won

    173

Everything posted by கிருபன்

  1. எக்ஸெல் மண்டபத்திற்கு அதிகம் பேர் வந்திருந்தாலும், முன்னைய வருடங்களுடன் ஒப்பிடும்போது வருகையில் வீழ்ச்சி தெரிந்தது. அத்தோடு எல்லோரையும் மண்டபத்தில் இருக்க வைக்கும் தலைவரின் உரை, அதன் பின்னர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பொழிப்புரை போன்றன இல்லாததால் வந்தவர்கள் மாவீரர்களுக்கு வணக்கங்களைச் செலுத்திவிட்டு திரும்பவும் போய்க்கொண்டிருந்தனர். தற்போது தேர்தல் காலம் இல்லையென்பதால் ஆங்கிலேய அரசியல்வாதிகளின் வருகையும் மிகவும் குறைவு (Siobhain McDonagh வந்திருந்தார்). சில ஆங்கிலேய பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறு உரை காணொளியில் காண்பிக்கப்பட்டது.
  2. வரித்த இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
  3. [size=6] உடன் நடக்கும் நீ [/size] எம் கோபாலகிருஷ்ணன் விநோதமான பாதை அது, மூர்க்கம் உலராத வெயில் போர்த்தி நீண்டும் நெளிந்தும் போகிறது, தொலைவானில் வட்டமிட்டுப் பறக்கிறது கழுகுக்கூட்டம், இதோ உடன் நடக்கும் உன் முகம் நான் முன்பு அறியாதது, இப்பாதையில் என்னுடன் எது வரையிலும் உடன்வருவாய் என்றும் தெரியாது, பாதங்களைத் தடுமாற்றி நடை சிதைக்கும் நன்னிலம், முகம் அறைந்து விரட்டும் ஈனக்காற்று, நல் வருகையல்ல உமது என எச்சமிட்டுப் பறக்கிறது அண்டங்காக்கை, இருவரும் நடக்கிறோம், இன்னுமொரு தப்படியில் கண்ணிவெடிகள் நம்மை சிதறடிக்கலாம் வெட்டவெளிகள் கைநீட்டி மார்நோக்கி துப்பாக்கிகளை நீட்டலாம் உள்ளதனைத்தும் களவாடப்படலாம், அல்லது இதுவொன்றுமே நிகழாமல் போகலாம் நீயும் நானும் இப்பாதை கிளை பிரியும் தொலைவு வரை இப்படியே நடக்கலாம், இப்போதைக்கு உடன் நடந்து செல்கிறோம், நீயும் நானும். http://solvanam.com/?p=22516
  4. [size=6]பரிசு[/size] [size=6][size=4]காலபைரவன்[/size][/size] [size=5] எல்லையற்ற கருணை நிரம்பிய இவ்வுலகில்தான் ஒரு தற்கொலையை மேற்கொண்டு சிறு முத்தத்தை சமப்படுத்த வேண்டியிருக்கிறது [/size] http://kalabairavan....og-post_10.html
  5. தேடல் இல்லாத வாழ்வு உயிர்த்து தளிர்ப்பதில்லை, புரிதல் இல்லா நட்பு நிலைப்பதில்லை..

  6. ஓஹோ! அவர்களையே உளவு பார்க்கவேண்டும் என்றால் அவர்களுக்குத் தெரிந்துவிடக்கூடும்
  7. நீங்கள் "மறைவில்" இருந்தால் (உள்ளே நுழையும்போது login anonymously என்பதை tick செய்யுங்கள்) profile க்கு வருகை தருவது தெரியாது. விரும்பினால் எனது profile ஐ உளவு பார்க்கலாம்!
  8. பழஞ்சொல், அல்லது உதிரபலி, அல்லது பழங்குடி அல்லது பிணங்களின் வெள்ளை அறிக்கை, அல்லது உங்களது சாவுப் பத்திரம், இறுதியாக மிஞ்சப்போவது எதுவுமேயில்லை..... கொற்றவை கோமான்களே கனவான்களே கைவிடப்பட்ட எம் மக்களின் கனவுகளை தோட்டாக்களாக்கும் பேராற்றலில் திளைத்தவர்கள் நினைவூட்டத் தவறுவதேயில்லை எங்கள் மூத்திரம் மரங்களின் வேர்களில் கலந்திருந்தது பூக்களில் நாற்றம் வீசியதில்லை மணக்கும் அப்பூக்களை கொன்றறுத்துச் சூடியதில்லை பசியென்ற சொல் சதையானபிறகே தோளிலேறும் வில் எளிய வேட்டை இப்படியாகத்தான்.......... சில காலம் முன்பு வரை இப்போது நாங்கள் புதிய வாடைகளை நுகர்கிறோம் உடல்களில் சாம்பல் நிறம் தேமலெனப் பரவுகிறது நாசி கந்தக வாசத்தில் கருகி எரிகிறது தொப்புள் துவள்கிறது எம் வியர்வையில் வாசம் இல்லை அடர்த்தியான வனங்களின் ஊடே நிர்வாணமாய் இருந்த பாறைகள் பிணங்களை உடுத்தத் துவங்கி வெகு காலமாயிற்று எங்கள் மண் நிறமிழந்து இருக்கிறது சிதறி விழும் நிழல்கள் சிவப்பைக் கக்குகின்றது பிள்ளைகள் மணல்களை, பாறைகளை, மரங்களை மற்றும் இதுவரை கேள்விப்பட்டிராத மரணத்தின் விழிகளை வரைந்து பார்த்து மகிழ்கின்றனர் அதில் அழித்தொழிப்பின் இளிநகை செங்கோடுகளாக நெளிகிறது சொல்லியிருக்கிறோம் எங்கள் சிறார்களுக்கு இயற்கையின் பிதாமகர்கள்... (அப்படித்தான் எக்கணமும் உங்களை எங்கள் முன் உச்சரித்து, அனுபவித்து, எங்கள் உடல் பதறுமளவுக்குச் சொல்வீர்கள். முட்டாள்களே... இவ்வார்த்தைகளை நீங்கள் எமக்கெதிராக உச்சரிக்கையில் எமது பற்கள் இறுகி உதிர்வதை எப்போதும் கண்டதில்லை நீங்கள். ) மாசற்ற ரப்பர் பொம்மைகளை அனுப்பி வைப்பார்களென்று உறுதி அளித்திருக்கிறோம் எங்கள் உடல் சூட்டின் உரிமைகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குள் சேர்க்கப்பட்டுவிட்டது ஒளிக்கற்றைகள் பேராசைமிக்க விழிகளைக் கொண்டு பதுங்கு குழிகளுக்குள் இருக்கும் சிறார்களின் புன்னகைகளைப் பிடுங்கிச் செல்கிறது அவை எம் குடியினருக்கான அருங்காட்சியகத்திற்காக சேர்க்கப்பட்டுவருவதாக அரசின் சமாதானத் தூதுவர் புன்னகையுடன் எம் சிறுமிகளின் இளமுலைகளை கண்டுணர்ந்து சொல்லிச் செல்கிறார் தானியங்கிகள் கூட இரும்புக்குறிகளை ஈணித்தள்ளுகிறது எம் பெண் மக்களைக் காணும் பொழுது ஆதிக்கம் தனது கொடிய சங்கை ஊதிப் பிளிறுகிறது வனம் தனது தூக்கத்தை இழக்கிறது போர் தொடங்குகிறது சதை, நிணம், உங்களது அரிய பார்வையில் ஊளையாகி சீழ் வீசும் எமது மண் மிதக்கும் கைப்பிடி இதயம் வழியும் குருதி கைதூக்கிய சொற்கள் அனைத்தும் களைத்து விழுகிறது உடல்களுக்கு தாக்குதல் ஓரிருமுறை யோனிகளின் சிதைவு எண்ணிக்கைக்குள் அடங்குவதில்லை (எப்பொழுதும் பேரழிவுக்கு முன்னும் பின்னும் யோனிகள் கருகி எரிவது ஏனென்று தெரியவில்லை. பாலியல் வல்லுறவுக்கு முன்னும் பின்னும் அன்னையின் முகமும் தெரிவதில்லை. பெண்களுக்கு முகமே யோனிகளாய் இருக்கிறது.... புணருங்கள் ஆண்களே) உங்களது வரைபடத்தில் சுழல்கிறது புவி உங்களின் கரங்களுக்கு சிலுவைகளில் இடமில்லை ஆதிக்கம் அவ்வாறே என்பதற்கு எங்களிடம் பிணத்தை பிணச்சூட்டை கருகிய மரத்தை கந்தக நிலத்தை இப்படியாக.... கிழிக்கப்பட்ட நைய்யப்பட்ட குருதியோடிய இன்னும்...... துப்பாக்கிகள் நுழைக்கப்பட்ட பார்த்து மகிழ்ந்த வெந்து தணிந்த சிதைந்த சிறிய பெரிய முதிர்ந்த விழிகள் கரங்கள் சதைகள் மற்றும் இறுதியின் இறுதியாக எல்லாச் சிதைவுகளுக்கும் சாட்சியாக இருக்கும் மரத்த யோனிகளைத் தவிர யெது வுமில்லை எங்களுக்கு எதுவுமில்லை எதுவுமே........................யில்லை. கற்களையெரித்து சாம்பலாக்கும் ஆற்றலை மின் தகனங்கள் கொண்டிருக்கவில்லை துரதிருஷ்டம் சாபத்திற்கு உண்டந்த பலம் தங்களது மேன்மை பொருந்திய இருதய அளவிலும் சிறிதாய்ப் போனது எம்மக்கள் வயிறு குடல்கள் தின்னத் துவங்கிய எங்கள் வயிற்றின் தசை நார்களில் வெளிப்படுகிறது உறைந்துபோன எங்கள் கனவுகள் கண்ணீர் இழந்த எமது இளமை வரலாற்றின் பக்கங்கள் நிகழ்வுகளின் பாவக் கணக்குகளை சேமித்து வருகிறது இயற்கை எல்லாவற்றையும் எப்பொழுதும் சகித்துக்கொள்வதில்லை அது கணிக்கும் கண்காணிக்கும் அழிவின் தும்மலை அறிவித்து வாரிக்குடிக்கும் எம்மக்களின் கையில் திணிக்கப்பட்ட உங்களது ரப்பர் பொம்மைகளும் வாசலில் சிரிக்கும் சுத்தமான நறுமணம் கமழும் உங்களின் பிணங்களின் இளித்த புன்னகை கண்டு நிறையட்டும் உங்கள் வயிறு இயற்கையைச் செரிக்க இம்மண்ணில் பெருவயிறு எவருக்கும் இல்லை இல்லை இல்லை இனி இடம்பெயர யெதுவுமே இப்படி எதுவுமே இனி எப்பொழுதுமே எதுவுமே இருக்கப்போவதில்லை. (குறளி இதழில் வெளிவந்துள்ள கவிதை) http://saavinudhadug...og-post_10.html
  9. [size=5] கரையில் தேடும் சிறுமி [/size] - தாட்சாயணி (இலங்கை) நுரை சுழித்த கடலின் கரையில், நீண்ட நாட்களாக ஒரு சிறுமி வந்து போகிறாள்…! அவள் எதைத் தேடுகிறாள்…? சிப்பிகளும்,சோகிகளும்… தேடும் வயதுதான்… என்றாலும், அது குறித்த ஆர்வம் அவளுக்கிருப்பதாய் இன்னும் அறியப்படவில்லை! அவள் அலைகளுக்கிடையில் நுரை பிடிக்க முயற்சித்தாளுமில்லை! நெடுந்துயர் விரவிக்கிடக்கிறது அவள் விழிகளில்… அவளறியாத எதையோ… அவளிடமிருந்து யாரோ… பறித்துவிட்டார்கள்… அவளறிய… அது என்னவென்று தெரியவில்லை அவளுக்கு… உலகில் சிப்பிகளுக்கும்,சோகிகளுக்கும் மேலாக… எதுவோ இருக்கிறதுதான்…! அவளறிய… அது என்னவென்று தெரியவில்லை அவளுக்கு… நுரை சுழித்த கடலின் கரையில் அவள் எதையோ… தேடிக்கொண்டிருக்கிறாள் ! http://www.oodaru.com/?p=5589
  10. [size=5] ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல் [/size] [size=5][size=4] சமயவேல் [/size][/size] [size=4] ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல் கசாப்புக் கடையின் வெட்டுமரத்தோடு முடிந்துவிடும் என்று நீங்கள் வருத்தப்படவோ பகடி செய்யவோ வேண்டாம் ஓங்கிய அரிவாளின் கீழே தலையில் தண்ணீர் ஊற்றப்படும் பொழுது கூட மரணம் பற்றிய பிரக்ஞையற்று குலுக்கி எறிவோம் ஓர் உடல்மழையை; உள்ளக இடம்பெயர் மனித முகாம்கள் பக்கத்து நாட்டின் அகதி முகாம்கள் எல்லையோர தற்காலிகக் கொடுஞ் சிறைகள் விசாரணைக் கொட்டடிகள் வீட்டுக் காவல்கள் என்று வதைபடும் மனிதர்களை விட எத்தகு மேன்மையான வாழ்வுடன் நாங்கள் புல்வெளிகளில் அலைகிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள் எங்கள் மேய்ப்பர்கள் பெற்ற காசுக்காக நாங்கள் கொல்லப் படுவதில் ஒரு அறம் இருக்கிறது ஆனால் நீங்கள் எந்த அறமும் அற்று ஒருவரை யொருவர் கொல்வது பற்றி உங்களால் மே என்று கூட கத்த முடியாது எங்கள் கொலைகளின் கதறல்களுக்கும் உங்கள் கொலைகளின் கதறல்களுக்கும் நடுவில் ஒரு சிறு கிறுக்கலைக் கூட உங்களால் வரைய முடியாது. 2 இருமைகள் என்பது எதார்த்தம் எனில் அதில் ஒரு கை அள்ளி என் கண்களைக் கழுவுவேன் இரவு பகலோ, இறப்போ பிறப்போ இருமைகள் றெக்கைகளாக ஒரு பறவைக் கூட்டமாய் பழுப்பு வானில் பறந்து திரிவேன் மூன்றாம் நான்காம் அடுக்குகள் தேடி அதல பாதாளம் மூழ்கிப் பார்ப்பேன் இதுவும் அதுவும் கவ்வி முயங்கும் இடமோ பொழுதோ வெளியோ சிந்தும் இன்மையின் இனிமையை பருகி மகிழ்வேன் ஒரு சிறு ஆட்டுக் குட்டியல்ல நான் எல்லாப் புள்ளிகளிலும் இருக்க முடிகிற ஒரு முடிவிலி எனக்குள் சுழல்கிறது அதன் வெண்மணற் பரப்பில் கோபுரங்களும் மலைகளும் கடல்களும் நகரங்களும் ஆகாயமும் கூட சிப்பிகள் போலவும் நுரைச்செடிகள் போலவும் புதைந்து கிடக்கின்றன என் புல் வெளியில் மரணம் ஒரு சர்ப்பமென சரசரத்து வருகையில் நான் ஒரு நாகலிங்க மரமாவேன் என் கழுத்தைத் தழுவி ஆயிரம் நாகங்கள் பூக்களாய் தொங்கும் எங்கிலும் என்றென்றைக்கும் ஆனவன் நான். [/size] http://samayavel.blo...01_archive.html
  11. [size=5]தலைகளைப் பறி கொடுத்தோர்!! [/size] [size=4]மா.சித்திவினாயகம்[/size] [size=4]உண்மையிலேயே அந்தப் பலசரக்குக் கடை விளம்பரங்களைப் படித்துப்பார்த்ததில் மிக…மிக…சர்ச்சைக்குரியதாகவும்….சஞ்சலப்படுத்துவதாகவும்… பயப்பட வைப்பதாகவும்…இருந்தது![/size] [size=4]தலையுள்ள இறால்களை விட………… தலையில்லா இறால்களுக்கும் தலையுள்ள நெத்தலிகளை விட…………… தலையில்லா நெத்தலிகளுக்கும் அதிக விலையும் அதிக மவுசும் என அந்த விளம்பரங்கள் –என்னைக்குழப்பி விடுகின்றன ![/size] [size=4]தலைகள் இருப்பதே கேவலமாகவும் கௌரவக் கோளாறாகவும் உணருகிற நாட்கள் இது ! மண்ணுள் புதைந்த பாறாங் கல்லெனச் சிந்திப்பதையே மறுதலித்தெறிந்து[/size] [size=4]பழைய பித்தலாட்டக்காரர்கள்… காலம் காலமாக விரித்துப் போட்டிருக்கிற கட்டுக் கட்டான பொய்ப் பந்தல்களின் மேல் தலையே இல்லாமல் – நீ தத்தி நடக்கலாம் ! படுத்து உறங்கலாம் ! குந்தியிருந்து பஞ்சாயத்து நடத்தலாம் ![/size] [size=4]செத்தபிணங்கள் முரசமொலிக்க‌ எலும்புக்கூடுகள் ஊர்வலம் போகுமாம். சிந்திய குருதியுள் நாடுகள் அமிழ்ந்து நமக்கென ஒருபெரு உலகம் விரியுமாம். கதையளந்து, வெறும் வாய்ப்பந்தல் போடலாம்! உரலில் போட்ட தானியம் போல உன் இனத்தை – நீயேகுத்தி அரிக்கலாம் ! அழுது புரண்டெழும் வாழ்விற்கு அர்த்தமிருப்பதாய் புரட்டுக் கூறித் தீபாவளி ,பொங்கல், புதுவருசம் எனச் சலிப்புகளை உற்சாகங்களாக்கி வியாபாரமாய் விற்றுத் தள்ளலாம் ![/size] [size=4]பிரபஞ்சத்திற்கான புதிய சங்கீதங்களைச் சுடுகாடாக்கி விட்டு அடுத்தவன் பிரக்ஞையை உன் பிரக்ஞை என்று வாதிடும் உனக்கு – வட்டமாய் திரண்ட ஓர் தலையிருந்தென்ன ??? இல்லாமலிருந்தென்ன ??[/size] [size=4] http://inioru.com/?p=30881[/size]
  12. சகாறா என்றால் வறண்டுபோயிருப்பதுதான் நினைவுக்கு வருகின்றது. எனவே பெயர் மாற்றவேண்டும் என்று அடம் பிடித்தால் செழிப்பான பெயராகத் தெரிவு செய்யுங்கள்.
  13. புதிய பதிவுகளைக் காண்பிக்கவும் என்று அழுத்தினால் திண்ணை ஒளிந்துகொள்கின்றது. சுவாரஸ்யமான சம்பாஷனைகளை பார்க்கமுடியாமல் இருக்கு!
  14. புதிய மட்டுக்களுக்கு வாழ்த்துக்கள். ரதியின் கேள்வியிலும் (எப்பவும் போல) நியாயம் இருக்குத்தான்.
  15. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.
  16. உங்கள் தரவுகள் எல்லாம் server இல்தான் பதியப்படும் என்று நினைக்கின்றேன். எதற்கும் ஒபரா மினியை தரவிறக்கம் செய்து சரிபார்த்துக்கொள்ளுங்கள்! opera mini இல் தமிழ் எழுத்துரு தெரியாவிட்டால்: enable the bitmap font settings procedure for enable the bitmap font setting. 1. Open the address about:config in your opera mini browser (in mobile). This will open the browser’s power setting option page. 2. Scroll down until you see something like this: Use bitmap fonts for complex scripts. 3. Set the above option value to yes and then click on Save button. restart the browser. you will see the Tamil webpages .
  17. நான் பாவிக்கும் opera mini இல் திரியிலுள்ள புதிய கருத்தைத்தான் காட்டுகின்றது! கடவுச் சொல்லைப் பாவித்து நுழைந்துதானே பார்க்கின்றீர்கள்!
  18. முடியுமே! எந்தத் தொலைபேசியை என்பதைப் பொறுத்தது!! நான் பாவிக்கும் நொக்கியா (லூமியா அல்ல!) இல் கூட பார்க்கமுடிகின்றது (ஒபராவில்). "கருத்துக்களம்" என்று நடுவில் தலைப்பு காட்டுகின்றது. அதற்கு வலதுபுறமாக சிறிய சதுர வடிவில் உள்ள பட்டனை (விண்டோஸ் பட்டன் போன்றது) அழுத்தினால் பல உப பிரிவுகளைக் காட்டுகின்றது, New Content ஐ அழுத்தினால் இறுதியாகக் கருத்துக்கள் பதிந்த திரிகளைக் காட்டும்!
  19. கலை இல்லாத நாடகமா.. காதல் இல்லாத வாலிபமா.. அழகில்லாத ஓவியமா.. ஆசையில்லாத பெண் மனமா...

  20. [size=6] முடிவுறாத இருவருக்குமான முரண் [/size] ஜே.டேனியல் [size=4]ஒரே[/size] [size=4]ஒரு முறை[/size] [size=4]வருகிற நாள்[/size] [size=4]எனக்கும்[/size] [size=4]உனக்குமான[/size] [size=4]நாளாக இருக்கும்.[/size] [size=4]முரண்பாடுகள் முற்றி[/size] [size=4]தலை வீங்கி[/size] [size=4]வார்த்தைகள் வழிந்து[/size] [size=4]இதயத்தை நிரப்புகிறபொழுது[/size] [size=4]நம்[/size] [size=4]இருவருக்குமான[/size] [size=4]பாதை[/size] [size=4]இரு வேறு[/size] [size=4]திசைகளைக் காட்டி[/size] [size=4]கொக்கரிக்கும்,[/size] [size=4]கடந்த காலம் முழுக்க[/size] [size=4]நடந்துகொண்டதை[/size] [size=4]நினைத்துக்கொண்டிருக்கும்பொழுதே[/size] [size=4]ஒரு[/size] [size=4]மழைத் துளியின் வேகமாக[/size] [size=4]எதிர்காலம்[/size] [size=4]முடிந்திருக்கும்.[/size] [size=4]நானோ[/size] [size=4]நீயோ[/size] [size=4]எங்கு இருந்தோம் என்பது[/size] [size=4]நம் இருவருக்குமேத் தெரியப்போவதில்லை.[/size] http://nampuzhuthi.b...og-post_28.html
  21. [size=6]பழுதான பாலம்[/size] [size=4]ராகவன்[/size] [size=4]பழுதான பாலம் என்று தான் தோன்றுகிறது அப்புறத்திற்கு கொண்டு சேர்க்குமா என்று தெரியவில்லை கடக்காமலே பார்த்துக் கொண்டிருந்ததில் எதிரில் ஒருவர் கடந்து கொண்டிருந்தார் விரைந்து கடந்தால் இருவரை தாங்குமா என்று சந்தேகம் வந்த்து கொஞ்சம் காத்திருந்தேன் ஏதோ பேசிக் கொண்டே வந்த இரண்டு பேர்கள் கடக்க ஆரம்பித்தார்கள் நானும் சேர்ந்து கொண்டால் பிடித்திருக்கும் கயிறுகள் அறுபடலாம் அல்லது பாலத்தின் பலகைகள் முறியலாம் மறுபடி காத்திருந்தேன் அவர்கள் என்னை வேடிக்கையாய் பார்த்து கடந்து சென்றார்கள் இப்போது பாலத்தில் யாருமில்லை தனியாய் கடக்க தயக்கமாய் இருந்தது திரும்பவும் ஊருக்குள் நகர்ந்து வேற்று வழி இருக்கா என்று விசாரிக்க ஆரம்பித்தேன்.[/size] http://koodalkkootha...01_archive.html
  22. விடிவது நாளாவதற்கு மட்டுமல்ல உனக்கு வயதாவதற்கும் தான்!

  23. [size=6]Untitled[/size] டிசே தமிழன் ஒவ்வொருவரின் வருகைகளும் கண்காணிக்கப்பட்டு அவர்களின் முன்/பின் கதைகள் மூச்சுக்கூட விடமுடியா பெரும்புகையாய் கிளம்பும் விழாக்கள் மனதிற்கு உவப்பில்லாதவை பிரியமானவர்களின் விருந்துகள் புறக்கணிக்கமுடியாதன. பிறரைக் காயப்படுத்தித்தான் நம்பிக்கைகள் வாழவேண்டுமென்பதில்லை மனிதர்கள் முக்கியம் எனக்கு. நெளிநெளியான வர்ணம்பூசிய கூந்தற்கற்றைகளை அலட்சியமாய் ஒதுக்கிவிடும் பெண்களை இன்னொருமுறை திரும்பிப் பார்க்காமல் இருக்க முடிவதில்லை சூழலின் இறுக்கந்தளர்த்தி சிறுபுன்னகையுடன் இவர்களை இரசிக்கத்தொடங்கினால் விழாக்களின் உயிர்ப்பை அறிந்துகொள்ளலாம் சிலவேளைகளில் இன்றைய விருந்தில் தேனீக்களாய் பறந்துதிரிந்து அறுசுவையுணவு பரிமாறிய வளரிளம்பெண்கள் சிலிர்ப்பூட்டினர் கோடைகாலத்து சிறுமழைபோல அவர்களுடன் உரையாடுவதற்கான காலமும் தனிமையும் கனிந்தபோதும் இப்படி இயல்பாய் சிரித்துப்பழகுபவர்களை 'வேசிகள்' என விளித்து நக்கலும் (பாலியல்) சேட்டைகளும் செய்யும் என்னைப்போன்றவர்களின் நினைவுவர விலகிப்போகின்றேன் புன்னகைகளுடன் முகஞ்சுழிக்காது அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றும் அவர்களை ஒரு மேசையில் அமர்த்தி சில மெழுகுதிரிகளை ஒளிரவிட்டு ஆறுதலாய் உணவு பரிமாறும் ஆசை எழுகிறது எனக்குள் விழாவின் முடிவில் எஞ்சியிருந்த அலங்கரிக்கப்பட்டிருந்த பலூன்களை ஒன்றாய் இணைத்து நிலவினொளியில் பறக்கவிடுகையில் குதூகலத்துடன் ஆடத்தொடங்குகின்றான் அண்ணாவின் மகன் அவன் நடனம் கண்டு கலகலவெனச் சிரிக்கும் அந்தப்பெண்களை அவதானிக்கையில் என் ஆயுட்காலத்தின் எந்தக்கணத்திலும் பெண்களை வெறுக்கமுடியாது போலத்தான் தோன்றுகின்றது http://djthamilan.bl...5/untitled.html
  24. அடடா.. புத்தகம் வாங்கிப் படிக்கிற பழக்கம் உங்களுக்கும் வந்துவிட்டதா? சொல்லவே இல்லை. நான் 50 Shades triology படித்து முடித்துவிட்டேன் (ASDA இல் பத்து பவுண்ட்ஸ்களுக்குக் விற்கின்றார்கள்)!!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.