Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. வியட்னாம் புரட்சிவாதிகள் மேற்கொண்ட தற்காப்பு முறைகளை தமிழீழத்தில் உருவாக்கியவர் மேஜர் அகத்தியர் மேஜர் அகத்தியர் செல்லத்துரை புவினேயராஜ் கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு. வீரப்பிறப்பு:21.06.1967 - வீரச்சாவு: 01.01.1990 நிகழ்வு:முசல்குளத்தியில் புளொட் கும்பலின் முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: கொடிகாமம் மேலதிக விபரம்: கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது. புலேந்திரன் - குமரப்பா முதலான போராளிகள் இலங்கை - இந்திய கூட்டுச்சதிக்குப் பலியானதைத் தொடர்ந்து 'இனி யுத்த நிறுத்தம் இல்லை ' என தலைவர் பிரபாகரன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பில் ஒரு கண்ணிவெடித் தாக்குதல் இடம்பெற்றது. இலங்கை மக்களின் பாதுகாப்புக்கென உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இலங்கை இராணுவம், இந்திய இராணுவத்தின் பாதுகாப்புடன் உலா வருகையிலேயே இச்சம்பவம் நிகழ்ந்தது. இந்திய இராணுவத்தினரின் வாகனங்களைத் தவிர்த்து, இலங்கை இராணுவத்தைக் குறிவைத்து, மிகத் துல்லியமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என இலண்டன் பி.பி.சி.வர்ணித்தது. இந்த வர்ணனை அக்காலத்தில் பிரபலமாக இருந்தது. இத்தாக்குதலில் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பதிகாரியும் சிரேட்ட பொலிஸ் அத்தியட்சருமான நிமால் டி சில்வாவுடன் ஒன்பது இராணுவத்தினரும் பலியாகினர். அவ்வளவு திறமையான இத்தாக்குதலை மேற்கொண்டவன்தான் மேஜர் அகத்தியர். மட்டக்களப்பு மாவட்டத்தில், கல்வி ஆறு என சிறப்பாகக் குறிப்பிடப்படும் கோட்டைக்கல்லாறுப் பகுதியைச் சேர்ந்த இவன், 1984 ஆம் ஆண்டு புலிகளுடன் தன்னை இணைந்துக்கொண்டான். விடுதலைப் புலிகளின் ஐந்தாவது முகாமில் பயிற்சி பெற்றுக்கொண்ட இவன், மருத்துவக் குழுவினருக்கான விசேடபயிற்சியையும் மேலதிகமாகப் பெற்றுக்கொண்டான். மீண்டும் இந்த மண்ணில் அவன் மருத்துவனாக காலடி எடுத்துவைத்தாலும், திறமை மிக்கஒரு போராட்ட வீரனாகவே இனங்காணப்பட்டான். அதனாலேதான், அபாயகரமான பகுதிகள் எனக்கருதப்படும் பகுதிகளில் நடத்த உத்தேசிக்கப்படும் தாக்குதல்கள் இவனிடம் ஒப்படைக்கப்பட்டன. மட்டக்களப்பு - வாழைச் சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள வந்தாறுமூலை அம்பலத்தடிச் சந்தி, எமது போராளிகளில் கணிசமான பேரை பலிகொண்ட இடமாகும். ஏனெனில் இப்பகுதியில் இருந்தே எமது பயிற்சி முகாம்களுக்கான உணவுப் பொருட்கள் விநியோகிக்கப் படுவதுண்டு. எனவே இப்பாதை மீது சிறீலங்காப் படையினருக்கு எப்போதுமே குறியிருக்கும். இப்பகுதியில் துப்பாக்கிச் சன்னத்தைக் காணாத சுவர்களே இல்லையெனலாம். ஆனால், இந்த அபாயகரமான பாதையில் சண்டையிடத்தான் இவனுக்கு விருப்பம். தன்னைப் போலவே ஏனைய போராளிகளையும் உருவாக்கினான். ஒரு கட்டுப்பாடான ஒழுக்கமான போராளியால் தான் ஒரு சிறந்த தலைமையை அளிக்கமுடியும். எனவே கட்டுப்பாடு, ஒழுக்கம் என்பன போராளிகளுக்கு வேண்டும் என வலியுறுத்துவான். மட்டக்களப்பு படுவான்கரைப் பகுதியைப் பற்றி போராளிகள் குறிப்பிடும் போது “ஓடிணா வெளி, விழுந்தா வெளி” என்று குறிப்படுவார்கள். அப்படியான இயற்கை அமைப்பைக்கொண்ட அந்தப் பிரதேசத்தின் பொறுப்பாளனாக இவன் நியமிக்கப்பட்ட காலத்தில், இவன் எவ்வாறு போராளிகளைக் காப்பாற்றினான் என்பதை அறியும் போது ஒவ்வொருவர் நெஞ்சும் புல்லரிக்கும். மட்டக்களப்பில் இருந்து வளைந்து நீண்டுவரும் அந்த வாவிக்கரையில், தொம்பலும் (சேறு) கன்னாப்பற்றைகளும் ஒட்டு என்று அழைக்கப்படும் தாவரங்களும் நிறைந்திருக்கும் இப்பகுதிக்குள் இடுப்பளவு தண்ணீருக்குள்ளும் அதற்கு மேலும் இந்தப் பற்றைகளிடையே தடிகளினால் அரண் அமைத்து அவற்றையே முகாம் ஆக்கியிருந்தான். தேசத்துரோகிகள், எமது காற்றையே அசுத்தப் படுத்தும் வகையில் நிறைந்திருக்கும் இந்தியப் படையினர் இவர்களின் பார்வையில் படாது அந்த வயல்வெளிகளைக்கடந்து குளிர், நுளம்புத் தொல்லை மிகுந்த இந்த நீர்நிலை முகாம்களுக்குச் செல்வதென்றால் அதற்கு எவ்வளவு கவனம் தேவை. இந்த முகாம்களில் இருந்தே ஏனைய இடங்களுடன் தகவல் தொடர்பு எடுக்க வேண்டும். தொலைத் தொடர்புக் கருவிக்கு வேண்டும் பற்றரி கொண்டு செல்வதென்றால் கூட இலேசானதல்ல. ஆனால், இவன் அதையெல்லாம் செய்துகாட்டினான். அங்கிருந்தே தாக்குதலுக்குத் திட்டமிட்டான், போராடினான். இதற்கான மக்கள், பலத்தையும் திரட்டினான். இதனால்தான் 'புலிகளுக்கு குளிருக்கு போர்வையோ, உணவோ தேவையில்லை. ஆயுதங்களைக் கடலிற்குள் கூடப் புதைத்து வைத்தனர். இருட்டில்கூட அவற்றைத் தேடி எடுத்தனர் என பம்பாயில் வீக்லி இதழுக்கு பேட்டி அளித்தார் இந்தியப்படை எம் மீது போர் தொடுத்த காலத்தில் அதற்குப் பொறுப்பாயிருந்த இந்தியப்படை அதிகாரி. இதேபோல வந்தாறுமூலைப் பகுதிக்கு அப்பால் முகாம்களை அமைக்கும்போது இயற்கையினை போராளிகளுக்கு அரணாக்கித் தந்தான். மலைகளுக்குப் பக்கத்தில் உள்ள குகைகளே பாதுகாப்பு அரண்கள். விமானக்குண்டு வீச்சின்போதும் எறிகணைத் தாக்குதல்களின்போதும் குகைகளுக்குள்ளேயே தனது வாரிசுகளைப் பாதுகாத்தான். உணவைப் பெற்றுக்கொள்வதற்காக சுமார் 15 மைல்தூரம் நடந்துவரும்போது முன்னே செல்வது இவன்தான். ஏனையோரைவிட கூடுதலான பாரம் சுமப்பதும் இவன்தான். ஆம்.... போராட்டத்தினுள் உள்வாங்கப்படும் போராளிகளுக்கு இவன் புத்தகமாகத் திகழ்ந்தான். எமது தேசத்தை குடியேற்றத்தின் மூலம் அபகரிக்க முயலும் பேரினவாதிகளுக்கு, இவன் கனவிலும் பயமூட்டிக் கொண்டிருந்தான் மேஜர் அகத்தியர் இவனது தாக்குதல்கள் அவர்களைச் சொந்தப் பிரதேசங்களுக்கு ஓடவைத்தன. இந்திய இராணுவத்தினரின் காலத்தில் இவற்றைச் செய்வதென்பது சுலபமாக இருக்கவில்லை. ஒருமுறை நீண்ட தொலைவில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களின் இலக்குமீது தாக்குதல் தொடுத்துவிட்டு வந்துகொண்டிருந்தனர் இவனும் இவனது வாரிசுகளும், அனைவருக்கும் நல்ல பசி. சோர்ந்து வாடினார்கள். போராட என்று வெளிக்கிட்டால் எதையும் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறி, அவர்களை ஒருவாறு சமாளித்துகூட்டிக் கொண்டு வந்தான். இதே நேரம் சிங்களப்படை கொடுத்த தகவலின்பேரில் இந்தியப்படை இவர்களைத் தொடர்ந்துகொண்டிருந்தது. இவர்கள் அவர்களைக் காணவில்லை . அந்தளவுக்கு பசி, இவர்கள் கண்ணை மறைத்திருந்தது. முகாமுக்குச் சென்று அனைவரும் வாயில் உணவை வைத்ததுதான் தாமதம், இந்தியப்படையின் துப்பாக்கி வேட்டுக்கள் எல்லாவற்றையும் மறக்கவைத்தன. எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வெளியேறி இந்தியப்படையை எதிர்க்க இன்னொரு பாதையில் காத்திருந் தனர். ஏனெனில் இது எமது நாடு. நாம் ஓடமுடியாது. ஓட வேண்டியவர்கள் எல்லை தெரியாது எம்மண்ணை மிதித்தார்களே. ஆனால் இந்தியர்கள் வரவேயில்லை. ஏனோ தெரியாது. அப்படியே போய்விட்டனர். அக்காலங்கள் மிக வேதனை நிறைந்தவை. பல இடங்களில் பாதுகாப்புக்காக இந்தி மொழி பேசியே பாதையைக் கடக்கவேண்டிய தேவையை ஏற்படுத்தின. இந்தியை விரட்ட பல கட்டங்களில் இந்தி மாதிரிமொழியில் பேசினான் அகத்தியர். பின்னர் மட்டக்களப்பு பிராந்தியத்தை விட்டு, வன்னிக் காடுகளுக்கு நெருக்கமானான் இவன். அங்கும் பல தாக்குதல்களில் கலந்துகொண்டான். இறுதியில் முசல்குத்தியில், தேசவிரோதிகளின் மீதான தாக்குதல்களில் கப்டன் முரளி, இரண்டாவது லெப். அலெக்ஸ் ஆகியோருடன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டான். இத்தாக்குதலில் பல தேசத்துரோகிகள் உயிரிழந்தனர். வியட்னாமிலும், சிங்கராஜா காடுகளிலும் புரட்சிவாதிகள் மேற்கொண்ட தற்காப்பு முறைகளை தமிழீழத்தில் உருவாக்கிய இவன், என்றும் மறக்கப்பட முடியாதவன். அதைவிட ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் தமிழீழ மக்கள் இவனை நினைவுகூரத் தவறமாட்டார்கள். ஏனெனில் இவன் வீரச்சாவெய்திய தினம் ஜனவரி 1. -களத்தில் https://www.thaarakam.com/news/72096c59-5510-41de-b876-5b9cb3ee0f43
  2. அதுதானே ஈழப்பிரியன் ஐயா! தினமும் குப்பைகொட்டும் எங்களுக்கும் தெருவால் எட்டிப் பார்த்துவிட்டு போகின்றவருக்கும் ஒரே சலுகை கொடுக்கலாமா? ஆங்🤪
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன்🎉🎊🎈 வாழ்க வளமுடன்🎂
  4. இதை நாங்கள் “விண்” என்று சொல்லுவோம். வில்லு மாதிரி முறியாமல் வளையக்கூடிய தடி என்றால் மூங்கில் தடி அல்லது கமுகம் சிலாகை (தடி) பாவிப்போம். படலம் அல்லது தட்டி (காணொளியில் இருக்கும் செவ்வக வடிவ பட்டம்) க்கும், கொக்கு, பிராந்து போன்ற பட்டங்களுக்கும் விண்பூட்டித்தான் ஏத்துவோம். விண் செய்ய தேவையானவை: விசை - வில்லு மாதிரி வளையக்கூடிய மூங்கில் அல்லது கமுகம் தடி. விசையை வழுவழுப்பாக இணக்கி, நடுவில் வைத்து பலன்ஸ் பார்த்து, முறியாமல் வளையக்கூடிய மாதிரிச் செய்யவேண்டும். நார் - பார்சல் ரேப் அல்லது பனம் நார், அல்லது உரப்பையில் இருந்து கிடைக்கும் பொலித்தீன் நார் (1 1/2 முழ விசைக்கு மேல் பாவிக்கமுடியாது!) வெடிப்பு இல்லாத பார்சல் ரேப்பாக எடுத்து, பிசிங்கானால் “வாட்ட”வேண்டும். பிசிங்கான் உடைந்த போத்தல் துண்டு. சிலவேளை உடைந்த பல்ப் துண்டும் பாவிக்கலாம். வாட்டுவது என்றால் நாரை சீராக செம்மைப் படுத்துவது. அப்போதுதான் பிசிறில்லாமல் கூவும்! காணொளியில் உள்ள விண் “அழறுகின்றது” (நாரில் வெடிப்பு இருக்கலாம் அல்லது ரென்சன் போதாது!). பனம் நார் செய்வது மிகவும் கடினம். முதலில் வடலிப்பனையில் நீண்ட ஓலையைக் கண்டுபிடிக்கவேண்டும். மூன்று நாலு முழ நீளமான பச்சை ஓலையின் தடியில் நீளப்பாட்டுக்கு பிசிங்கானால் நாரை வெட்டியெடுக்கவேண்டும். இது சரியாகக் கிடைக்க மிகவும் பொறுமை தேவை. அதை வெடிக்காமல் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்னர் “வாட்ட”வேண்டும். நார் அறாமல் இருந்தால் அதிஸ்டம்! கொக்கு, பிராந்துப் பட்டங்களுக்கு பனம்நார் கலாதியாக இருக்கும்! அவை ஜா(சா)டும்போது விண் நன்றாகக் கூவும்! கூவைகள்- நாரை இழுத்துப் பிடித்துக்கொள்ள. இவற்றை கிளுவைத் தடியில் வெட்டி துளை போட்டுச் செய்வது. — காணொளியில் வரும் முதலாவது படலம் அளவு நானும் எனக்கு கூட்டுக்களும் கட்டி ஏத்தினோம். 😀 அதை ஒரு “மிஷனாக” இரண்டு மூன்று நாட்களில் செய்தோம். ஊரில் பலரது வேலிகளை வெட்டி தடிகளைப் பெற்றுக்கொண்டோம். நாங்கள் விண்ணை பட்டத்தின் மேல் விளிம்பில் இருந்து 2-3 இஞ்சுகள் கீழேதான் கட்டுவோம். அப்போதுதான் முழுநார் மீதும் காற்றுப் படாமல் வெளிநீட்டிய நாரின் பகுதிகளில் மட்டும் காற்றுப் படும். இது அதிர்வின் frequency ஐக் கூட்டும் என நினைக்கின்றேன்!
  5. வடமராட்சி என்றாலே பட்டம் ஏற்றுவதுதான் வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காலத்தில் எமது முக்கிய தொழில்..😄 நாமளும் என்னைவிட பெரிய படலம் கட்டி ஏற்றி இருக்கின்றேன்.☺️ ஆனால் இந்த துணிஞ்ச கட்டை மாதிரி மேலே போகவில்லை! யாழில் எழுதியதை தொகுத்தது. https://kirubans.blogspot.com/2017/04/blog-post_1.html
  6. மேஜர் அல்பேட் ச.கந்தையா ரூபதநிதி அச்சுவேலி தெற்கு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:24.06.1961 வீரச்சாவு:21.12.1985
  7. சைன் இன் பண்ணாவிட்டால் ஏதும் track பண்ணப்படவில்லை என்பது உங்கள் முந்திய பதிவின் மூலம் உறுதியாகிவிட்டது. சைன் இன் பண்ணினால் நீங்கள் இறுதியாக வாசித்த பதிவுகள் தானாகவே track பண்ணப்படும். இதன்மூலம் நீங்கள் ஒரு திரியை கிளிக்கினால் வாசிக்காத கருத்துக்கு உடனடியாகப் போகலாம். அதுதான் tracking. உங்களுக்கு கடைசிப் பதிவுக்குப் போகவும் வேண்டும், ஆனால் track பண்ணவும் கூடாது என்றால் அது மிகவும் கஷ்டம்!
  8. ஒளிச்சு வராமல் சைன் இன் பண்ணிவரத்தான் இந்த ஏற்பாட்டை மோகன் செய்திருக்கின்றார்😁 சைன் இன் பண்ணினால்தானே ஒவ்வொரு உறுப்பினர்களின் activities ஐ track பண்ணலாம். இல்லாவிட்டால் ஐபி முகவரியைக்கொண்டு அல்லது பாவிக்கும் device ஐக்கொண்டு track பண்ணவேண்டும்.
  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி🎉🎊🎈 வாழ்க வளமுடன்🎂
  10. தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் சிந்தனைகள் இன்றைய காலத்தின் தேவையாகிறது – ஆய்வாளர் பற்றிமாகரன் December 14, 2021 தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் சிந்தனைகள் இன்றைய காலத்தின் தேவையாகிறது: சிறிலங்காவில் பௌத்த சிங்களப் பெரும்பான்மையினர், ‘சிறிலங்காவினர்’ எனத் தங்களை அழைத்துக்கொள்ளும், அதே அரசியல் அடையாளத்துள்ளேயே, இலங்கையின் எல்லா மக்களும் வாழ்தல் வேண்டும் என்பது 2009இல் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு மூலம் நிலைநிறுத்தப்பட்ட மகிந்த சிந்தனை. பத்தாண்டுகளின் பின்னர் ‘அண்ணன் காட்டிய வழியம்மா’ என அவ்வழியைச் “சிறிலங்காவினர்க்கான அபிவிருத்திகள்” என்ற வார்த்தைஜாலங்கள் மூலம் நாட்டின் முன்னேற்றத்துக்கான புது வழியாக கோத்தபாய சிந்தனை காட்ட முற்பட்டிருக்கிறது. எப்பொழுதுமே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வை வடக்கு கிழக்கின் அபிவிருத்தி என்பதுடன் இணைத்து, ஈழத்தமிழர்களின் தாயகம் – தேசியம் – தன்னாட்சி என்ற தொன்மையும் தொடர்ச்சியுமான உரிமைகளை மறுத்து, சிறிலங்கா என்னும் நாட்டு அடையாளத்துடன் வாழும் சிறிலங்காவின் சிறுபான்மையினமாக அவர்களின் அடையாளத்தை நிலைப்படுத்திச் சில அபிவிருத்தித் திட்டங்களை முன்வைத்து அவற்றில் பங்கெடுக்க வரும் சர்வதேச அரசுக்களின் நிதி மற்றும் ஆயுத ஆதரவையும் பெற்று வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் மேல் தன் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்வது சிறிலங்கா அரசின் வழமையாகத் தொடர்கிறது. இவ்வாறு தமிழர்களின் தேசியப் பிரச்சினை (Tamil’s National Question)என்ற ஒன்றே இலங்கையில் இல்லை எல்லாமே அபிவிருத்திப் பிரச்சினையெனச் சிறிலங்கா உலகுக்குக் காட்ட முற்படும் இவ்வேளையில், இலங்கையில் தமிழர்களின் தேசியப் பிரச்சினை என்றால் (Tamil’s National Question) இதுதான் என உலகுக்குத் தெளிவாகவும் உறுதியாகவும் எடுத்துரைத்து வந்த தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தெளிவான அரசியல் சிந்தனைகள் நினைவுக்கு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவேந்தல் நாளான டிசம்பர் 14ம் நாளன்று உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் நன்றியுடன் அவரை நினைவு கூர்ந்து வீரவணக்கம் செய்வது தமிழர் சமுதாய வழமையாக உள்ளது. இவ்வாண்டு அவரின் 15வது ஆண்டு நினைவேந்தல் காலமான டிசம்பர் மாதத்தில் ஈழத்தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு இன்றைய காலகட்டத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் சிந்தனைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைச் சிந்திப்பது சாலப்பொருத்தமாக அமைகிறது. “மாநிலங்களுக்கு இறையாண்மை அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலாக, அதிகாரப் பரவலாக்கம் பற்றியே அவர்கள் சிந்திக்கின்றார்கள்” (போரும் சமாதானமும் 647) என்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் கருத்து இன்றைய காலகட்டத்தில் தெளிவாக உலகுக்கு மீளவும் எடுத்துச் சொல்லப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. இந்தச் சிந்தனையே இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வைக் காண முடியாத நிலையை உருவாக்கி வருகிறது. சுயநிர்ணய உரிமை அதிகாரப்பரவலாக்கம் என்பது எப்பொழுதும் மையப்படுத்தப்பட்டுள்ள தங்களின் அதிகாரத்தை மற்றைய மாநிலங்கள் மேல் நடைமுறைப்படுத்துவதற்கான உத்தியே தவிர இலங்கைத் தீவு போன்ற வரலாற்றில் இருதேசியங்களின் இறைமைகளை இறைமை இழப்பு ஏற்படாது பகிர்ந்து கொள்வதற்கு எந்த விதத்திலும் பயனளிக்காது. உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் “பிரதேச சுயாட்சி” என்பதே தமிழர்களின் வரலாற்றுத் தாயகத்தில் அவர்களுடைய தன்னாட்சி உரிமை இழப்பின்றி இறைமை பகிரப்படுவதற்கான நேர்மையான வழியாக அமையலாம். ஒரு அரசு தனது மக்கள் என்று கூறிக்கொள்பவர்களின் உள்ளக சுயநிர்ணய உரிமைக்கு மதிப்பளித்து நடக்கும் பொழுதே அந்த அரசுக்கு பிரதேச ஒருமைப்பாடு உள்ளதென்பதையும் தனது மக்களை அடக்கு முறைக்கு உள்ளாக்கும் போது அந்த அரசு அந்த மக்கள் மீதான பிரதேச ஒருமைப்பாட்டு உரிமையைத் தானே இழந்து விடுகிறது என்பதையும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கியூபெக் மாநிலத்தின் பிரிவினைப் பிரச்சினையை கனடிய உச்ச நீதிமன்றம் விசாரித்து அளித்த தீர்ப்பின் பின்வரும் வாசகங்களின் அடிப்படையில் பின்வருமாறு விளக்குகிறார் :- ‘தன்னாட்சி உரிமை (சுயநிர்ணய உரிமை) என்பது வளர்ந்து வரும் ஒரு கருத்துருவம். பரிணாமம் பெற்று வரும் ஒரு கோட்பாடு. சர்வதேசச் சட்டத்துறையில் புத்தாக்கம் பெற்று வரும் விதியாகவும், சர்வதேச மனிதஉரிமை நியமமாகவும் இது கொள்ளப்படுகிறது. சுயநிர்ணய உரிமைக் கோட்பாடானது, ஆரம்பத்தில் மேற்குலக வல்லரசுகளின் குடியேற்றத்திற்கு அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. 1970ம் ஆண்டுக்குப் பின்பு இக்கோட்பாடு புத்தாக்கம் கண்டது. பிரத்தியோகமாகக் குடியேற்ற நாட்டு மக்களின் அரசியல் சுதந்திரத்திற்கான தகைமையை நிர்ணயிப்பதற்காகப் பிரயோகிக்கப்பட்டது. இவ்வாண்டிலேயே ஐக்கிய நாடுகள் சபையில் ‘அரசுகள் மத்தியில் நல்லுறவையும் ஒத்துழைப்பையும் நிலைநாட்டுவது பற்றிய சர்வதேச சட்டவிதிகள்’ என்ற புதிய பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. இப்பிரகடனத்தில் “சுயநிர்ணயமும் சம உரிமை விதிகளும்” என்ற தலைப்பில் நிறைவேற்றப்பட்ட ஒரு விதி பின்வருமாறு உள்ளது:- “ஐநா சாசனத்தில் பொறிக்கப் பட்டிருக்கும் சமஉரிமைகளும் மக்களது சுயநிர்ணயமும் என்ற விதிக்கு இணங்க, எல்லா மக்களும் வெளிப்புறத் தலையீடு எதுவுமின்றி, தமது அரசியல் தகைமையைச் சுதந்திரமாகத் தீர்மானிப்பதற்கும், தமது பொருளாதார, சமுக,கலாசார வளர்ச்சியைப் பேணுவதற்கும் உரிமை உடையவர்களாவர். இந்தச் சாசனத்திற்கு அமைய ஒவ்வொரு அரசும் இந்த உரிமைக்கு மதிப்பளிக்கக் கடமைப்பட்டிருக்கிறது. “இப்போதுள்ள அரசுக்கள், கனடா உட்பட தமது பிரதேச ஒருமைப்பாட்டைப் பேண விழைவதற்கும், ஒரு ‘மக்கள்’ ஒரு சுயநிர்ணய உரிமையை முழுமையாகப்; பெற்றுக் கொள்ள முனைவதற்கும் இடையில் மத்தியில் முரண்பாடு எழுவதற்கு அவசியமில்லை. எவ்வித பாகுபாடுமின்றி முழு மக்களையும் அல்லது மக்கள் சமுகங்களையும் தனது ஆட்சி அமைப்பில் பிரதிநிதப்படுத்தி, உள்ளீட்டான ஆட்சி ஒழுங்கில் சுயநிர்ணயத்தின் விதிகளுக்கு ஒரு அரசு மதிப்பளிக்குமானால், சர்வதேச சட்டத்திற்கு அமைய தனது பிரதேச ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கு அந்த அரசுக்கு உரிமையுண்டு. ஒரு அரசின் பிரதேச ஒருமைப்பாட்டை இந்தப் பிரகடனம் உறுதிப்படுத்துகிறது. ஆனால் ஒரு சிறுபான்மை மக்களை அடக்கு முறைக்கு ஆளாக்கும் பொழுது, பிரிவினைக்கு இடமளிக்கும் விதிவிலக்காக, ஒரு அரசு தனது பிரதேச ஒருமைப்பாட்டு உரிமையை இழக்கிறது.எனவே இந்த விளக்கத்தின் மூலம் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் இலங்கை அரசாங்கம் இலங்கைத் தமிழ் மக்களின் மேலான தனது அடக்கு முறைகளால் தமிழர் தாயகப் பகுதிகளில் தானாகவே தனது பிரதேச ஒருமைப்பாட்டை இழந்து விட்டது என்பதை மிக அழகாக விளக்குகிறார். ஒருதலைபட்சமான பிரிவினையைப் பிரகடனம் செய்யும் பிரத்தியோகச் சூழ்நிலை பற்றிய கனடிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: – அரசியல் சுதந்திரத்தைத் தேர்ந்தெடுக்கும் அல்லது நிறுவிக் கொள்ளும் உரிமையான வெளியக சுயநிர்ணய உரிமை இரு வகுப்பினரான மக்களுக்கு (குடியேற்ற ஆட்சியின் கீழுள்ள மக்களுக்கு அல்லது அந்நிய ஆதிக்கத்தின் கீழுள்ள மக்களுக்கு) உரித்தாகும். ஏகாதிபத்திய வல்லரசிடமிருந்து உறவை முறித்துக் கொண்டு தமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்குக் குடியேற்ற நாட்டு மக்களுக்கு உரிமையுண்டு என்பது இப்பொழுது விவாதத்திற்கு இடமற்ற உண்மையாகி விட்டது. குடியேற்றத்திற்கு வெளியான சூழ்நிலையை எடுத்துக் கொண்டால், ஒரு மக்கள் சமுகம் அந்நிய அடக்கு முறைக்கும், ஆதிக்கத்திற்கும், சுரண்டல் முறைக்கும் ஆளாகும் பொழுது வெளியக சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டலாம். ஒருதலைபட்சமான பிரவினைக்கு சுயநிர்ணய உரிமையைப் பாவிக்கும் மூன்றாவது சூழ்நிலை பற்றியும் சில மதிப்புரைஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். இந்த மூன்றாவது சூழ்நிலை குறித்துப் பலதரப்பட்ட அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்பட்ட போதும், ஒரு மக்கள் சமுகம் தனது உள்ளக சுயநிர்ணய உரிமையை அர்த்தமுள்ள முறையில் அடைவதற்குத் தடையேற்படுமானால், இறுதி வழிமுறையாகப் பிரிந்து செல்லும் உரிமையைப் பயன்படுத்த அந்த மக்களுக்கு உரிமையுண்டு.” என்கிறது. எனவே ஒரு அரசு தனது மக்களின் சமமான உரிமைகளையும் உள்ளக சுயநிர்ணய உரிமையையும் தனது அரசின் கட்டமைப்புக்கு உள்ளேயே நிறைவு செய்யாவிட்டால் அந்த மக்கள் இயல்பாகவே வெளியக சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிக்க உரிமையுடையவர்கள். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இவற்றைத் தெளிவுபடுத்தியது பிரிவினையைத் தூண்டவல்ல அரசின் கடமையையும் மக்களின் உர்pமையையும் இருதரப்பினருக்கும் தெளிவுபடுத்துவதற்காகவே. இதனை உறுதி செய்யக் கூடிய முறையிலேயே 2003ம் ஆண்டு மாவீரர் உரையில் தேசியத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையையும் அவர் குறிப்பிடுகிறார் :- “தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில், வரலாற்று ரீதியாக வாழ்ந்து வரும் பாரம்பரிய மண்ணில், அந்நிய சக்திகளின் ஆதிக்கம், தலையீடின்றி, சுதந்திரமாகக் கௌரவமாக வாழ விரும்புகின்றார்கள். தமது மொழியை வளர்த்து, தமது பண்பாட்டைப் பேணி, தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமது இனஅடையாளத்தைப் பாதுகாத்து, வாழ விரும்புகிறார்கள். தமது தாயக மண்ணில் தம்மைத் தாமே ஆளும் சுயாட்சி உரிமையோடு வாழ விரும்புகிறார்கள். இதுவே எமதுமக்களின் அரசியல் அபிலாசை, உள்ளக சுயநிர்ணயத்தின் அர்த்த பரிமாணம் இதில்தான் அடங்கியிருக்கிறது” என்பது தேசியத் தலைவரின் கருத்து. தமிழ் மக்களின் பிரதேச சுயாட்சி என்றால் என்ன என்பதை இதில் மிக அழகாக எடுத்துரைத்தார். தமிழ் மக்கள் தமது வரலாற்றுத் தாயக மண்ணில் தம்மைத் தாமே ஆளும் தன்னாட்சி அதிகாரத்தை, அதாவது உள்ளக சுயநிர்ணய உரிமையை தேசியத் தலைவர் அவ்வுரையில் வலியுறுத்தி வேண்டினார். ஆயினும் அவர் உள்ளக சுயநிர்ணய உரிமையின் எல்லை வரம்புடன் நின்று விடவில்லை. https://www.ilakku.org/balasingham-their-thoughts-are-the-need-of-the-hour/
  11. தாயக விடுதலைக்கு ஏற்பட்ட தடையை நீக்கி போராட்டத்தை அடுத்த கட்டத்திற்க்கு நகர்த்திய கடற்கரும்புலிகள். கடற்கரும்புலி லெப்கேணல் சிவரூபன் சிவநேசன் சிவபாக்கியநாதன். வீரச்சாவு ..08.12.1999 1995ம் ஆண்டு இராணுவத்தால் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட நில ஆக்கிரமிப்பான முன்னேறிப்பாயச்சலும் அதனைத்தொடர்ந்து மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் அதிகமானோர் காயப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தும்.இருந்த சூழலில் இச்சம்பவங்களை நேரில் பார்த்த சிவரூபன் வீணாகச் சாவதைவிட இவ் ஆக்கிரமிப்புக்கெதிராக போராடுவதென முடிவெடுத்து . விடுதலைப் புலிகளில் தன்னை இணைத் கொண்டு தனது ஆரம்பப் பயிற்சியை முடித்து கடற்புலிகளின் தரைத்தாக்குதலனியான மண்டைதீவுச் சமரில் மாவீரரான லெப் கேணல் சூட்டி அவர்களின் பெயரைச் சுமந்த சூட்டி படையணியில் இணைந்து முல்லைத்தீவுச் சமரில் பங்குபற்றினான் .அதனைத் தொடர்ந்து காங்கேசன்துறை கடலில் வீரச்சாவடைந்த லெப் கேணல் நரேஸ் அவர்களின் பெயரைச் சுமந்த படையணியான நரேஸ் படையணியில் கனரக ஆயுதப் பயிற்சி மற்றும தொலைத்தொடர்பு சம்பந்தமான பயிற்சிகள் முடித்து அப்படையணியில் கடமையாற்றிக் கொண்டிருந்த வேளையில் சர்வதேசக் கடற்பரப்பில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட சம்பவமொன்றை அடுத்து தலைவர் அவர்களின் பணிப்புரைக்கமைவாக சர்வதேசப் பொறுப்பாளர் அவர்களால் சர்வதேசக் கடற்பரப்பில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது.அதற்கமைவாக தமிழிீழத்திலிருந்து சில போராளிகள் சர்வதேசக் கடற்பரப்பிற்க்குச் சென்றனர்.அப்போராளிகளுள் ஒருவனாகச் சென்ற சிவரூபன் அங்கு மாவீரரான கடற்கரும்புலி லெப் கேணல் பெத்தா அவர்களுடன் இணைந்து விநியோகப்பணியில் ஈடுபட்டான். விநியோக பணிகளின் ஓய்வு நேரங்களில் கப்பல் சம்பந்தமாகவும் கடல் சம்பந்தமாகவும் நிறையவே கற்றான்.இவனது வளர்ச்சியில் லெப் கேணல் பெத்தாவின் பங்கும் அளப்பரியது.அங்கே ஒரு கப்பலில் தனக்கு அடுத்த நிலையில் சிவரூபனை வளர்தெடுத்தார் பெத்தா . அதன் பின்னர் தமிழீழம் திரும்பிய சிவரூபன் கடற்சண்டைபிடிக்கவேணும் என்கிற தனது ஆர்வத்தை சிறப்புத்தளபதியிடம் தெரிவித்து அவரின் அனுமதியைப் பெற்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் நடந்த விநியோகப் பாதுகாப்புச்சமர் மற்றும் வலிந்த தாக்குதல்களிலும் கனரக ஆயுத இயக்குனராக தொலைத்தொடர்பாளனாக ஒரு படகின் இரண்டாம் நிலை அதிகாரியாகவும் பின்னர் ஒரு படகின் கட்டளை அதிகாரியாகவும் பங்குபற்றினான்.அதனைத்தாெடர்ந்து மன்னார் கடற்பரப்பில் 08.02.1999 அன்று விநியோகப்பாதுகாப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளையில் விநியோகப் படகுகள் மீது சிறிலங்காக் கடற்படையினர் தாக்குதல் நடாத்த முற்பட்டவேளை அவ் சிறிலங்காக் கடற்படையினர் மீது மேற்கொண்ட தாக்குதலில் இவனது பங்கும் அளப்பரியது. அதனைத் தொடர்ந்து இவனது திறமையான செயற்பாடுகளாலும் ஆளுமைத்திறனாலும் போராளிகளோடு பழகும் தன்மையினாலும் சுண்டிக்குளம் சண்டைப்படகுகளின் தொகுதிக் கட்டளை அதிகாரியாகவும் அம் முகாம் பொறுப்பாளராகவும் சிறப்புத் தளபதி சூசை அவர்களால் நியமிக்கப்படுகிறான்.அங்கு சிலகாலம் செயற்பட்டு வந்த சிவரூபன் சூசை அவர்களின் வேண்டுதலுக்கிணங்க சாளையிலிருந்து கப்பலுக்கு சென்று தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கிற பணியில் படகுக் கட்டளை அதிகாரியாக மிகவும் திறம்பட பணியாற்றுகிறான்.அக்காலப் பகுதியில் தான் இவ் விநியோக நடவடிக்கைக்கு ஏற்பட்ட தடைகளை அகற்றவேண்டிய நிலைமை ஏற்பட்டபோது அதற்காக அனுபவம் வாய்ந்த கடற்கரும்புலிகள் தேர்வு செய்யப்பட்டபோது அந்த நடவடிக்கையின் பொறுப்பாளனாக பல சண்டைகளில் முக்கிய பங்காற்றியவரும் நீண்ட கால கடல் அநுபவமும் கொண்ட சிவரூபன் சிறப்புத்தளபதியால் தேர்வு செய்யப்பட்டான்.தலைவர் அவர்களின் திட்டத்திற்கேற்ப இந்நடவடிக்கைக்கான ஏனைய கடற்கரும்புலிகள் தெர்வு செய்யப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு திட்டம் விளங்கப்படுத்தப்பட்டு இந் நடவடிக்கையின் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டு இக்கடற்கரும்புலிகள் சென்றனர்.08.12.1999 அன்று ஆழ்கடலால் கடற்படையின் தொடரணி சென்று கொண்டிருக்கும் போது அதற்க்கு பாதுகாப்பாகச் சென்ற டோறா ஒன்று இவர்களை நோக்கி நெருங்கி வரும்போது இவர்கள் அவ் டோறாமீது தாக்குதல் நடாத்தி வீரச்சாவடைந்தனர்.சிவரூபன் இறுதிவரை கள நிலவரம் தொடர்பாக தெளிவாகவும் உறுதியாகவும் கட்டளைமையத்திற்க்கு தகவல்களை வழங்கிக் கொண்டிருந்தான். இவ் வெற்றிகரத் தாக்குதலில் கடற்கரும்புலி லெப் கேணல் சிவரூபன் மேஜர் இசைக்கோன் மேஜர் யாழ்வேந்தன் கப்டன் கானகன் ஆகியோர் கடலண்ணை மீது காவியமானார்கள். தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கின்ற விநியோகத்திற்க்கு ஏற்பட்ட தடையை நீக்கி விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்க்கு நகர்த்திய பெருமை இவர்களையே சாரும் எனக் கூறுவதில் மிகையாகாது. எழுத்துருவாக்கம் - .சு.குணா. https://www.thaarakam.com/news/1a126ee5-d537-4398-ab05-5bb9486573b5
  12. ரஞ்சித்துக்கும் சகாறா அக்காவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎊🎈
  13. “போர்க்கால இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்த பெருமைக்குரியவர் புதுவை இரத்தினதுரை.! தமிழ் வாசகர்களுக்கு புதுவை அண்ணருக்குமான அறிமுகம் தேவையில்லை. வீச்சும், மூச்சுமான அவரது படைப்புக்களுக்கு எமது விடுதலைப்போரில் தனியானதோர் இடமுண்டு. சொல்லப்போனால் விடுதலைப்போரின் வரலாற்றுடன் சேர்ந்து அவரது கவிதைகளும் பயணித்துள்ளன எனலாம். விடுதலைப் போராடடம் போரியலில் முனைப்புப்பெற்ற 1987க்கு முந்திய காலத்தில் அவரது கவிதைகள் ஒரு தேசம் என்ற கருத்தின் தோல்வியை உரைத்தன. எம் தேசியத்து எழுச்சியின் நம்பிக்கையைக் கூறின. இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு காலத்தில் அவரது பாடல்கள் காடுகளின் கரந்துறை விடுதலை வாழ்வியலுடன் பயணித்தன. யாழ்ப்பாணத்தில் பதுங்குகுழி வாழ்க்கைக்கும் அவரது கவிதைகள் பழக்கமாயின. விமானத்தின் குண்டு வீச்சுக்களும், பீரங்கிகளின் எறிகணை வீச்சுக்களும் அவரது கவிதைப் பொருளாயின. அவற்றின் படுகொலை வீச்சுக்கண்டு வெம்பி, வெடித்து கோபம் கொண்டு சாபமிட்டன. யாழ்ப்பாணத்தைவிட்டு விடுதலைப்போரியல் தலைமை இடம்பெயர்ந்த போது புதுவை அண்ணரின் கவிதைகளும் அழுதபடியே சேர்ந்துவந்தன. ஆனால் நம்பிக்கை தளராத வரிகளுடன் விடுதலைக்கனவு குலையாத பாடல்களாய். பொருட்தடை, மருந்துத்தடை, போக்குவரத்துத்தடையென எல்லாத் தடையினுள்ளும் கிடந்தழுந்திய எம்மக்களுடன் சேர்ந்திருந்தன புதுவை அண்ணரின் கவிதைகள். வன்னியினுள்ளே நடந்தேறிய விடுதலை வேள்வியில் சேர்ந்தொலித்தன அவரது பாடல்களும். இராணுவக் கொலை வலயத்தினுள் பயணிக்கும் இளம் வீரருடன் சேர்ந்து புதுவை அண்ணரின் பாடல்களும் பயணித்தன. எம்மக்களுக்கு ஆறுதல் சொல்லின…… போரிட அழைத்தன….. போரிட்டன….. வெற்றிச் செய்திகளும் சொல்லின…. விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் பற்றி மட்டுமல்லாது, தமிழீழ கட்டமைப்பு, எமது தேசத்து நிலபுலங்கள், மக்களது கலாச்சார வாழ்வியல்கள், தமிழீழப் பெண்களது புரட்சிகர போரியல், சர்வதேச அரசியலுடனான எம்மின வாழ்வு என புதுவை அண்ணரது படைப்புக்கள் பன்முகப்பட்ட வாசிப்பனுபவத்தை தருபவை. புதுவை அண்ணரது கவிதைகள், பாடல்கள் பற்றி எம்முள்ளே பேசப்படும் வேளைகளில் “காலத்தின் குரல்கள்” என்று கூறுவேன். எமது விடுதலைப்போர் கடந்து வந்த பாதையின் வீரமும், சோகமும், கோபமும், மகிழ்ச்சியும், பெருமிதமுமென மாறி மாறிய உணர்வுகளைக் கொண்ட காலங்களைக் கடந்துள்ளோம். அந்தக்கால உணர்வுகளின் குரலாக புதுவை அண்ணரின் படைப்புக்கள் பதிவு பெற்றுள்ளன என்பது எனது கருத்து. புதுவை அண்ணருக்கு வாய்த்துள்ள அற்புதமான கவி ஆற்றலும், அனாசயமான சொல் வளமும் அவரை பெரும் கவிஞர்களது வரிசையில் சேர்த்துள்ளது. இவற்றுடன் அவர் தன்னை இணைத்துக் கொண்ட இல்டசிய வாழ்வும் அவரது படைப்புக்களில் சேர்ந்துள்ளது. இவையே அவரை “காலத்தின் குரலாகப் பேசும்” கவிஞராக ஆக்கியது எனலாம். இங்கு நூலுருப் பெறும் உலைக்களம் அவ்வகையில் எழுந்த உணர்வு வரிகளின் தொகுப்பு. அந்தந்த காலத்தய விடுதலைப் போரின் களநிலைகளைத் தழுவிய உணர்வின் குரல்கள். இந்த உலைக்களத்தின் சிறப்பு என நான் பார்ப்பது இது வெறும் புதுவை இரத்தினதுரை என்ற தனி ஒருவனின் உணர்வின் குரலாக மட்டும் அமைந்து விடாததுதான். மாறாக உலைக்களத்தை ஆழ்ந்து, விரும்பி வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பொருந்திப் போகும் உணர்வுகளின் வெளிப்பாடுகளை அவற்றில் காணலாம். போராளி நிலையிலோ, பொதுமகனின் நிலையிலோ அல்லது படித்தவரின் நிலையிலோ, பாமரரின் நிலையிலோ எந்த நிலையில் நின்று பார்க்கும் போதும் அவரவரின் உணர்வின் வரிகளாக உலைக்களம் பொருந்தி வரும். ஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதமென வர்ணிக்கும் விடுதலைப் போரியல் நடவடிக்கைகள் உலைக்களத்தில் பல இடங்களில் பேசப்பட்டுள்ளன. அந்நடவடிக்கைகளின் பின்னே உள்ள அர்ப்பணிப்புக்களையும், எம்மினத்தின் உணர்வுகளையும், அரசியல் அர்த்தங்களுடன் உலைக்களத்தில் பதிவாக்கியுள்ளார். எமது தலைவர் அவர்கள் உலைக்களத்தை ஒவ்வொரு வாரியாக ஏற்றி, இறக்கி, தணித்து வாசிக்கும் வேளையில் அருகில் இருந்து கேட்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். சிலவேளைகளில் எனக்கென தனியாகக்கூட தலைவர் அவர்கள் வாசித்து காட்டியுள்ளார். தலைவர் அவர்கள் சிறந்த வாசகர் என்பதற்கு மேலாக உலைக்களத்தின் கருத்தோட்டத்தில் மீதான ஈர்ப்பே அதனை அவரை அப்படி வாசிக்க வைத்திருக்குமென நம்புகிறேன். “போர்க்கால இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்த பெருமைக்குரியவர்” எனவும், “எம் விடுதலைப் போராட்ட வாழ்வையும், வரலாற்றையும் தமிழீழ இலக்கிய இயக்கத்திற்குள் முதன்மைப்படுத்தி தமிழ்த் தேசிய பிரக்ஞையை விழிப்புறச்செய்ய உழைத்தவர்.” எனவும் எம் தேசியத் தலைவர் அவர்களால் விதந்து பாராட்டுப்பெற்ற புதுவை அண்ணரைப் பற்றி நான் சொல்ல என்னதான் உள்ளது? இலக்கிய வித்தகரும், பெரும் கவிஞருமான அவரது நூலுக்கு கருத்து எழுதுவதற்கு வாசகன் என்ற தகுதிநிலை போதுமெனக் கூறிய புதுவை அண்ணரது வார்த்தைக்கு கட்டுண்டு எழுதியுள்ளேன். எமது விடுதலைப்போர் எதிர்கால மாணவர்களுக்கான ஆய்வுப் பொருளாகும் காலம் வரும். அவ்வேளையில் விடுதலைப் போராட்டம் கடந்துவந்த வரலாற்றுப் பாதையின் போக்குகளையும், இந்த போருடன் வாழ்ந்த மானிடரின் மன உணர்வுகளையும், சொல்லும் பெட்டகமாக உலைக்களம் திகழும் என நம்புகிறேன். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” அன்புடன் ச.பொட்டு அம்மான் பொறுப்பாளர் புலனாய்வுத் துறை, தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழம் முக்கிய குறிப்பு :- 2009 ஆண்டு சர்வதேச துணையுடம் சிங்கள அரசின் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் மே மாதம் 2009 இல் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் 146,679 தமிழர்கள் வன்னி பிரதேசத்திலிருந்து வலிந்து கானாமல் ஆக்கப்பட்டார்கள் இவர்களில் புதுவை இரத்தினதுரை அவர்களும் அடங்குவார்கள் இவர்களுடன் காணாமல்போன எம் தமிழ் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று சிங்கள அசரே பொறுப்பு கூற வேண்டும் https://www.thaarakam.com/news/34e23897-b6d6-4583-a16c-8aed66c799e6

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.