Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. நான் 2022 இல் கொழும்பில் நின்றபோது Odel இல் ஷொப்பிங் முடித்து முன்னால் நின்ற ஆட்டோவைப் பிடித்தேன். ஆட்டோக்காரன் தமிழன் அல்லது முஸ்லிம். ஆனால் ஆரம்பத்தில் சிங்களத்தில் கதைத்தான். எனக்கு கொழும்புக்குப் போனால் சிங்களவரோடும் திமிராக தமிழில்தான் கதைக்க விருப்பம்😄 நான் தமிழில் ஆட்டோவுக்கு பேரம்பேச அவனும் தமிழில் கதைத்தான். அப்ப இப்போது போல் பெற்றோலுக்கு QR கோட் பாவிக்கவேண்டும்! வெள்ளவத்தைக்குப் போக 300 ரூபாவுக்கு ஒத்துக்கொண்டான். ஆனால் ஒரு வேண்டுகோளை வைத்தான். அவன் சொல்கிற இரத்தினக்கல் எக்ஸிபிஷன் கடைக்குப் போய் எக்ஸிபிஷனைப் பார்த்தால் அவர்கள் பெற்றோல் அடிக்க QR கோட் தருவார்கள். தனக்கு உதவியாக இருக்கும் என்றான். எனக்கு இலவசமாக எவர் என்ன தந்தாலும் வாங்கும் பழக்கம் இல்லை. அத்தோடு இந்தியாவில் பெங்களூருக்குப் போனபோது எனக்கு வேலை நண்பர்கள் சொன்ன அட்வைஸும் ஞாபகத்தில் வந்தது. ஒருபோதும் ஓட்டோக்காரர், ரக்ஸிக்காரரிடம் உணவகம், ஷொப்பிங் கடைகளுக்கு எங்கே போகலாம் என்று கேட்கக்கூடாது. அவர்களுக்கு கட் அண்ட் ரைட்டாக எங்கே போகவேண்டும் என்று சொல்லிவிடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். என்றாலும் ஓட்டோக்காரனுக்கு பெற்றோலுக்கு உதவ இரத்தினக்கல் எக்ஸிபிஷனுக்கு போக ஒத்துக்கொண்டேன். அது கொள்ளுப்பிட்டியில்தான் இருந்தது. முஸ்லிம்களின் கடை என்று நினைக்கின்றேன். எக்ஸிபிஷன் ஹோல் என்று எதுவுமில்லை. நான் எச்சரிக்கையாகி உள்ளே போனேன். ஆனால் இலண்டன்காரன் ஆகி இங்கிலிஸீலில் மட்டும் கதைத்தேன். வாங்கும் ஆர்வம் இருக்கிறமாதிரி ஃபோனில் படங்கள் எல்லாம் எடுத்தேன். அவர்கள் ஆள் வாங்கப்போகின்றார் என்று உடைத்த குளிர்பானம் கொண்டுவந்தார்கள். ஆனால் மூடி எனக்கு முன்னால் உடைக்காவிட்டால் நான் தருவதைக் குடிப்பதேயில்லை. சும்மா கொஞ்ச நேரம் இரத்தினக்கல்லுகளைப் பற்றியும், விலைகளையும் கேட்ட பின்னர் வட்ஸப்பில் மனைவியுடன் வீடியோகோல் எடுத்து அவற்றைக் காட்டி அவருக்கு டிசைன் பிடிக்கவில்லை, அவர் வந்துபார்த்துத்தான் வாங்குவா என்று சொல்லி வெளியே வந்துவிட்டேன். ஓட்டோக்காரனுக்கு QR கோட் கிடைத்திருந்தது. அவன் தனது காரியத்தில் கெட்டிக்காரன் என்றும் தெரிந்தது! உங்கள் அனுபவத்தைப் பார்த்தால் நான் மனத்தை மாத்தாமல் இருந்தது ஏமாறாமல் காப்பாத்தி இருக்குதென்று தெரிகின்றது!
  2. என் பெயர் பூனா (Buna)! இலவசக் கொத்தனார் மார்ச் 22, 2026 காலை எழுந்தவுடன் படிப்பு என்றான் முண்டாசுக் கவி. ஆனால் அவன் இன்றைக்கு இருந்திருந்தால் நம்மை எல்லாம் பார்த்துக் காலை எழுந்தவுடன் காபி என்றுதான் பாடியிருப்பான். அந்த அளவு காபிக்கு அடிமையாகி இருக்கிறோம். ஆனால் காபியின் வரலாறு நமக்குத் தெரியுமா? அதைக் காபியே சொல்லிக் கேட்போம். என் பெயர் பூனா (Buna). எனது பூர்விகம் கிழக்கு ஆப்பிரிக்கா. நான் புதர் போன்ற அமைப்புடைய ஒரு செடி. எத்தனையோ யுகங்களாக நான் இந்தப் பகுதியில் வளர்ந்து வந்தாலும் மனிதர்கள் கண்ணில் பட்டது என்னவோ அவர்களின் காலக்கணக்கின்படி பொதுயுகம் ஒன்பதாம் நூற்றாண்டில், எத்தியோப்பியா என்று வழங்கப்படும் நாட்டில்தான். என்னைக் கண்டு கொண்டது பெரிய விஞ்ஞானியோ அறிவியலாளரோ இல்லை, ஒரு ஆடுமேய்ப்பவனால்தான் நான் இந்த உலகத்திற்குத் தெரிய வந்தேன். என்னுடைய சிவப்பு நிறப் பழங்களை உண்ட ஆடுகள் மற்றவற்றைக் காட்டிலும் உற்சாகமாக இருப்பதைப் பார்த்த அவன், சில பழங்களைப் பறித்து உண்டான். அதுவரை இல்லாத ஓர் உற்சாகம் அவனுக்கும் வர, என் பழங்களைப் பறித்து தன் மதத் தலைவர்களோடும் மற்றவர்களோடும் பகிர்ந்து கொண்டான். என் பழங்களை உண்பது அவர்களுக்குப் பழக்கமானது. என்னதான் உற்சாகம் தந்தாலும் என் பழங்களின் ருசி என்னவோ கசப்புதான். இதை எப்படிச் சமாளிக்க என்று பார்த்த எத்தியோப்பியர்களுக்கு ஒரு சமயம் உற்சாகம் தருவது பழங்கள் அல்ல, அவற்றின் கொட்டைகள்தாம் எனப் புரிந்தது. கொட்டையை எடுத்துக் காய வைத்து உண்பது, பொடி செய்து உண்பது என்று மெதுவாக உண்ணும் முறை மாறத் தொடங்கியது. எதோ ஒரு சமயம் தீயில் விழுந்த கொட்டைகளை எடுத்து உண்ண அதன் ருசி இன்னும் நன்றாக இருப்பதை உணர்ந்தார்கள். செங்கடலைத் தாண்டி யெமன் என்ற நாட்டுக்குச் சென்றேன். அங்கே கொட்டைகளை வறுத்துப் பொடி செய்து அப்பொடியின் மேல் வெந்நீரை ஊற்றி வரும் சாற்றினை குடிக்கக் கற்றுக் கொண்டார்கள். பொதுயுகம் பதினைந்தாம் நூற்றாண்டில் அங்கு என்னை இப்படிக் குடிப்பது பரவலாகி இருந்தது. அங்குள்ள சூபிகள் இரவு முழுவதும் விழித்திருக்க என்னைக் குடிக்கத் தொடங்கினர். மயக்கம் தரக்கூடிய பானங்களை அவர்கள் காவா என்பார்கள். அந்தப் பெயரையே எனக்கு வைத்து விட்டார்கள். யெமனில் இருந்து நான் சுற்றி இருக்கும் இஸ்லாமிய நாடுகளுக்குப் பரவினேன். மெக்கா, கெய்ரோ, இஸ்தான்புல் போன்ற நகரங்களில் எல்லாம் என்னைக் குடிப்பதற்கு என்றே கடைகள் தோன்றின. அங்கு அமர்ந்து என்னைக் குடித்துக் கொண்டே இலக்கியம், தத்துவம், அரசியல் பேசுவதும் ஆடுவதும் பாடுவதும் அவர்களின் பழக்கமாயின. பல நேரங்களில் என்னைக் குடிப்பது தடை செய்யப்பட்டது ஆனால் என்னைக் குடிக்காமல் அவர்களால் இருக்க முடியவில்லை. மறைவாகக் குடித்துக் கொண்டுதான் இருந்தார்கள். நான் மீண்டும் மீண்டும் துளிர்த்து எழுந்தேன். இந்நாடுகளில் இருந்து, குறிப்பாகத் துருக்கி வழியாக நான் ஐரோப்பாவை பதினேழாம் நூற்றாண்டில் அடைந்தேன். துருக்கியில் காவா என்ற என் பெயர் காவே என்றானது அங்கிருந்து இத்தாலிக்குச் சென்ற பொழுது என்னைக் காபே என்று அழைத்தனர். பின்னர் ஆங்கிலத்தில் நான் காபி என்று அழைக்கப்படலானேன். ஆமாம் இன்றைக்கு உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும் என் ஆதி வரலாறு இதுதான். முதலில் என்னைச் சந்தேகக் கண்களுடன் பார்த்த ஐரோப்பா விரைவிலேயே என்னை இரு கரம் கொண்டு அணைத்துக் கொண்டது. கொஞ்சம் கசப்பாகவே இருந்த என் ருசி அவர்களுக்குப் பிடிக்காமல் போனதால் என்னுடன் கொதிக்கும் பாலைச் சேர்த்துக்கொண்டு குடிக்கும் பழக்கத்தை அவர்கள் தொடங்கினர். அது போதது என்று சர்க்கரையையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டனர். உலகின் மற்ற பகுதிகளைத் தங்கள் காலனி ஆக்கிக் கொள்ளும் பொழுது இவர்கள் என்னையும் அவர்களுடன் எடுத்துச் சென்றனர். அப்படி இவர்கள் கொண்டு சென்ற நாடுகளான பிரேசில், வியட்நாம், கொலம்பியா, இந்தோனேசியா ஆகியவற்றில்தான் நான் இன்றைக்கு அதிகம் பயிர் செய்யப்படுகிறேன். இதே பதினேழாம் நூற்றாண்டில் நான் நுழைந்த மற்றொரு நாடு இந்தியா. மற்ற நாடுகளுக்கு என்னைக் கொண்டு செல்லக் கட்டுப்பாடுகள் இருந்த நேரம். பாபா புதன் (Baba Budan) என்ற துறவி தன்னுடன் ஏழே ஏழு விதைகளைக் கொண்டு வந்து சிக்மக்ளூர் குன்றுகளில் என்னை விதைத்ததாகச் சொல்கிறார்கள். இன்றைக்கு அந்தக் குன்றுகளைப் பாபா புதன் குன்றுகள் (Bababudangiri) என்றே அழைக்கின்றார்கள். இங்கிருந்து கூர்க், கேரளா, தமிழ்நாடு போன்ற பகுதிகளில் என்னைப் பயிரிடுவது பரவலானது. வடஇந்தியாவில் தேநீர் குடிப்பது அதிகம் என்றாலும் தென்னிந்தியாவில் என்னைக் குடிப்பவர்கள்தான் அதிகம். அதிலும் பில்டர் காபி என்றாலே தென்னிந்தியா என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் பொழுது வறுத்து, பொடி செய்து, வெந்நீர் சேர்த்து வடிகட்டி என்று நிதானமாகக் காபி போட வழி இல்லாத பொழுது என்னை நேரடியாக வெந்நீரில் கலந்து குடிக்கும் படி ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள். அதுதான் இன்ஸ்டண்ட் காபி. அந்த சமயத்தில் நான் கிடைப்பதற்கு அரிதான பொழுது என்னுடன் சிக்கரி என்ற செடியின் வேரைக் காயவைத்துப் பொடி செய்து கலந்து காபியைத் தயாரித்தனர். அந்த சுவை பிடித்த மக்கள் இன்றைக்கும் சிக்கரி கலந்த காபியைத்தான் விரும்புகிறார்கள். இன்றைக்குக் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக அதிகம் வர்த்தகம் செய்யப்படும் பொருள் நான்தான். அராபிகா, ரொபஸ்டா என்று இரண்டு வகையில் என்னைப் பயிரிடுகிறார்கள். இந்த இரண்டு வகைகளையும் கலந்து காபி தயாரிப்பவர்களும் உண்டு. இவை இரண்டுதான் முக்கியமான வகைகள் என்றாலும் நான் நூற்றுக்கணக்கான வகைகளில் பயிரிடப்படுகிறேன். இந்தோனேசியாவில் வேறு ஒரு விந்தையான விஷயமும் உண்டு. அங்கு சிவெட் என்ற வகை பூனை போன்ற மிருகம் என் பழங்களை உண்ணும். ஆனால் அது பழத்தை உண்ணுமே தவிர என் விதைகளை அவை வெளியேற்றிவிடும். அப்படி வெளியேறிய விதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் கோபி லுவக் (உவ்வேக் இல்லை, லுவக்) தனித்த சுவையோடு இருப்பதால் அதை யானை விலைக்கு விற்கிறார்கள். இதே போல யானைகளை உண்ணச் செய்து அவற்றின் கழிவுகளில் இருந்து எடுக்கப்படும் கொட்டைகளைக் கொண்டும் காபிப்பொடி தயாரிக்கிறார்கள். இதற்கும் யானை விலைதான் என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை. என் பிரத்யேகமான மணத்திற்குக் காரணம் எண்ணூறுக்கும் மேற்பட்ட ரசாயனச் சேர்வை காரணமாம். எல்லாரும் முகர்ந்து பார்த்து, பின் அருந்தும் வொயினில் கூட இவ்வளவு ரசாயனச் சேர்வை கிடையாது என்பது ஆச்சரியகரமான தகவல். இன்றைக்கு இத்தாலியின் காபிக் கலாச்சாரம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் உலகிலேயே தனி நபர் பயனீட்டளவில் அதிகம் என்னைக் குடிப்பவர்கள் இத்தாலியர்கள் இல்லை, அந்தப் பெருமை பின்லாந்து நாட்டுக்குத்தான். என்னைக் குடிப்பதற்கு ஒவ்வொருவரும் அவர்களுக்கான தனித்தன்மையான வழியை வைத்திருக்கிறார்கள். எடுத்துக் காட்டாக, பிரபல இசையமைப்பாளர் பீத்தோவன் ஒரு முறை காபி அருந்த சரியாக அறுபது விதைகளை எண்ணி எடுத்துக் கொள்வாராம். எல்லாமே நல்லபடியாகத்தான் என்றில்லை. நான் விளைவிக்கப்பட தொழிலாளர்களின் உழைப்பு அதிகம் தேவை. ஆனால் அவர்களுக்குச் சரியான சம்பளம் தரப்படுவதில்லை, குழந்தைத் தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர், இயற்கை வளங்களைப் பற்றிக் கவலைப்படாமல் காபித் தோட்டங்கள் உருவாக்கப்படுகின்றன எனப் பலக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுகின்றன. இவை எல்லாம் இல்லாமல் வளம் குன்றா வளர்ச்சி (Sustainable Development), அறவழி பயிரிடுதல் (Ethical Farming) போன்ற வழிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவை குறித்த சான்றுகள் பெற்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. மேய்ப்பரால் கண்டுபிடிக்கப்பட்டு உலகத்தினரையே தன் கைப்பிடிக்குள் போட்டுக் கொண்டது மதம் மட்டுமல்ல, நானும் தான்! யார் எப்படிக் குடித்தால் என்ன காபி நம் வாழ்வில் ஓர் அங்கமாகி விட்டது. எல்லாருக்கும் மனத்தில் என்றோ எங்கேயோ குடித்த ஒரு வாய் காபி நினைவில் நிற்கிறது. அதன் வாசம் பழைய நினைவுகளைக் கிளப்பி விடுகிறது. உடன் குடித்தவர்கள் ஞாபகத்திற்கு வருகிறார்கள். அன்று இருந்த மகிழ்ச்சியோ துக்கமோ குழப்பமோ மீண்டும் நினைவுக்கு வருகிறது. எழுதத் தெரிந்தவர்கள் அதைக் குறித்து எழுதிவிடுகிறார்கள். இப்படி நனவிடை தோயாத எழுத்தாளர்கள் குறைவு. ஆனால் ஒவ்வொருவரும் எழுதும் கோணம் அவ்வளவு வித்தியாசமாக இருக்கும். அசோகமித்திரன் அவருடைய அனுபவங்களைக் குறித்து எழுதும் பொழுது காபியை அடிநாதமாக வைத்து அலுவலகப் பணிகளுக்கு நடுவே அருந்தும் காபி, அதைச் சுற்றி நடைபெறும் உரையாடல்கள் என்று நம்மை அந்தத் தருணத்திற்கே அழைத்துச் செல்வார். வேறு சில எழுத்தாளர்கள் காபிக் கடைகளில் உட்கார்ந்து அதன் வாசத்தைத் நுகர்ந்து கொண்டேதான் எழுதுவார்கள். ஹாரி பாட்டர் தொடரின் ஆரம்ப அத்தியாயங்களை எடின்ப்ரா நகரில் உள்ள ‘தி எலிபெண்ட் ஹௌஸ் காபே’ என்ற காபிக்கடையில் அமர்ந்துதான் ஜே.கே. ரௌலிங் எழுதினாராம். இதனால் புகழ் பெற்ற அந்தக் கடை சுற்றுப்பயணிகளால் மெய்க்கப்படுகிறதாம். எழுத்தாளர்கள் மட்டும் என்றில்லாமல் இன்றைக்கு வீட்டில் இருந்து வேலை செய்வது போல் அருகில் இருக்கும் காபிக்கடைகளுக்குச் சென்று அங்கிருந்து வேலை செய்யும் பழக்கம் பொதுவாகவே அதிகரித்து வருகிறது. வீட்டில் இருந்தால் தெரியும் தனிமை, இங்கு மற்றவர்களுக்கு இடையே அமர்ந்து வேலை பார்க்கும் பொழுது தெரிவதில்லை. உண்ண உணவும், குடிக்கப் பானங்களும், இலவச இணைய இணைப்பும் பலரையும் இந்தக் காபிக்கடைகளுக்கு வரச் செய்கின்றன. சுறுசுறுப்பாக வேலை செய்யவும் காபி வேண்டும். தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது அதை சற்று நிறுத்தி ஓய்வெடுக்க நினைத்தாலும் ஒரு காபி குடிக்கத் தோன்றும். சிலருக்குக் கவனத்தைக் குவித்து யோசிக்கக் காபி வேண்டும். வேறு சிலருக்கோ, அதிகம் யோசித்துத் தலைவலிக்கிறது, ஒரு காபி குடித்தால்தான் சரியாகும் எனத் தோன்றும். இப்படி முரண்பட்டக் காரணங்களுக்காகக் காபி தேவைப்படுவது ஆச்சரியம்தான். உண்மையில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பல முறை காபி குடுத்து தூக்கத்தைக் கெடுத்துக் கொள்பவர்கள் அதிகம். காபியில் இருக்கும் கபெயின் (Caffeine) என்ற வேதிப்பொருள் நம் உடம்பு ஓய்வு வேண்டும் என மூளைக்கு அனுப்பும் செய்தியைத் தடுக்கும் வல்லமை கொண்டது. அதனால் நம் உடம்பு அயர்ந்தாலும் அது நமக்குத் தெரிவதில்லை. தூங்க வேண்டிய நேரத்தில் தூக்கத்தைத் தவிர்க்க காபி குடிப்பது, அதனால் தேவையான ஓய்வு கிடைக்காமல் போவது, ஓய்வினைத் தவிர்க்க மீண்டும் காபி என்ற சுழலில் நாம் மாட்டிக் கொள்கிறோம். தூங்குவதற்கு முன் கபெயின் இருக்கும் பொருட்களை உள்ளெடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. எனக்குக் காபி குடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் என் காபி நான் நினைக்கும் ருசியில் இருக்க வேண்டுமென்பதால் நானே போட்டுக் குடித்தால்தான் எனக்குத் திருப்தி. வறுத்த கொட்டையை வாங்கி வைத்திருக்கிறேன். காலை எழுந்து கொட்டைகளைப் பொடி செய்யும் பொழுது வீடே மணக்கும். அந்தப் பொடியைப் பில்டரில் போட்டு, வெந்நீரை ஊற்றி, அது வடியும் வரை காத்திருக்கும் பொழுது அன்றைக்குச் செய்ய வேண்டிய வேலைகளை மனத்தில் பட்டியல் போட்டுக் கொள்வேன். காபிக் கோப்பையைக் கையில் எடுத்து, அதன் வாசத்தை நுகர்ந்து, முதல் சொட்டு நாக்கில் படும் பொழுது எழும் ருசியில்தான் அந்த நாள் தொடங்கும். “ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா” என்று கண்ணதாசன் எழுதியதைப் போல நம்மை இந்தக் காபி ஆட்டுவிக்கிறதே என்று ஒரு நாள் நினைக்கப் போக. கண்ணனையும் காபியையும் வைத்து எழுதிய சிலேடை வெண்பா https://solvanam.com/2026/03/22/என்-பெயர்-பூனா-buna/
  3. ஈரான் வழங்கிய மர்ம பரிசு! வியந்து போன ட்ரம்ப்! 25 March 2026 சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்காவிற்குப் பெரும் பணமதிப்புடைய ஒரு 'விலைமதிப்பற்ற பரிசை' ஈரான் வழங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமான ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ள வியக்கத்தக்க முன்னேற்றம் குறித்து விபரித்தார். "ஈரான் பேச்சுவார்த்தையாளர்கள் நேற்று (24) ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்கள். அவர்கள் எங்களுக்கு ஒரு பெரிய பரிசை (Present) வழங்கியுள்ளனர். இதன் மதிப்பு மிகப்பரிசுத்தமானது," என்று டிரம்ப் உற்சாகத்துடன் தெரிவித்தார். ட்ரம்பின் கருத்துப்படி, இந்தப் பரிசு நேரடியாக எண்ணெய் மற்றும் எரிவாயு (Oil and Gas) வர்த்தகம் தொடர்பானது. குறிப்பாக, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் நிலவும் பதற்றங்களைக் குறைக்கும் அல்லது அங்குள்ள வளங்களைக் கையாளும் ஒரு முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. இருப்பினும், அந்தப் பரிசு என்ன என்பது குறித்த துல்லியமான விபரங்களை டிரம்ப் தற்போது வெளியிடவில்லை. "நாங்கள் சரியான நபர்களுடன் தான் டீல் (Deal) செய்கிறோம் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. ஈரான் எங்களுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்ள மிகத் தீவிரமான ஆர்வத்துடன் இருக்கிறது," என்று ட்ரம்ப் குறிப்பிட்டார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், டிரம்பின் இந்த அறிவிப்பு ஒரு முக்கிய சமாதானத் தூதாக அல்லது மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தின் அறிகுறியாக இருக்கலாம் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். https://hirunews.lk/tm/455553/trump-is-surprised-by-the-mysterious-gift-from-iran
  4. இந்த யோசனையெல்லாம் ஒரு குழந்தை பிறந்து ஒரு வருசத்துக்குள் இன்னொன்றை பெற்றுக்கொள்பவர்களுக்கு வருவதேயில்லை😜
  5. தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து மட்டக்களப்பில் போராட்டம்.! Vhg மார்ச் 23, 2026 தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து போராட்டம்.! வடகிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து நேற்று (23.03.2026)ஆம் திகதி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடகிழக்கு பெண்கள் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திபூங்காவிலிருந்து ஊர்வலமாக வந்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மக்கள் தேவைகளுக்கு குரல்கொடுப்பதை விடுத்து இனங்களிடையே இழிவுபடுத்தும் கருத்துகளை சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் தமிழ் அரசியல்வாதிகள் வெளிப்படுத்துவதை நிறுத்தவேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்போது பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர், சபாநாயகர், நாடாளுமன்ற செயலாளர், பெண்கள் விவகார அமைச்சர், மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றிற்கு அனுப்பவதற்கான மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் சமூக ஒற்றுமை, ஜனநாயக பண்புகள் மற்றும் மக்கள் பாதுகாப்பை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அரசியல் பிரதிநிதிகள், சமீபத்தில் பொதுத் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையையும் கடுமையான கண்டனத்தையும் வலியுறுத்துகிறோம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் மனித மரியாதைக்கு எதிரான சொற்கள் பயன்படுத்தப்படுவது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இத்தகைய வெறுப்பு தூண்டும் பேச்சுக்கள் சமூகங்களுக்கிடையேயான நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், பிரதேச மற்றும் இன அடிப்படையிலான பிளவுகளை தீவிரப்படுத்துகின்றன. இது நாட்டின் அமைதிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நேரடி அச்சுறுத்தலாகும். மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களின் பிரச்சினைகளை பொறுப்புடன், நாகரிகத்துடன் முன்வைத்து தீர்வுகளை உருவாக்க வேண்டியவர்கள். ஆனால், அதற்கு பதிலாக வெறுப்பு, இழிவு மற்றும் பிரிவினை உணர்வுகளை தூண்டும் கருத்துக்களை வெளியிடுவது அரசியல் பொறுப்பின்மையின் வெளிப்பாடாகும். இத்தகைய செயல்கள் ஜனநாயக மரபுகளுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் நேரடி அவமதிப்பாகும். மேலும், அரசியல்வாதிகள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் போதெல்லாம் ஆதிக்க சிந்தனைகளை பிரதிபலிக்கும் வகையிலான மொழியையும் அணுகுமுறையையும் முற்றாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். மக்கள் மத்தியில் சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர புரிதலை வளர்க்கும் உரைகள் மட்டுமே அரசியல் உரையாடலின் அடிப்படையாக அமைய வேண்டும். இவ்வாறான பொறுப்பின்மை கொண்ட பேச்சுக்கள் தொடர்ந்தால், சமூகத்தில் இனவாதம், பிரதேசவாதம் மற்றும் பகைமை மனப்பான்மை ஆழப்படுத்தப்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு மட்டுமல்லாமல், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகக் குழுக்கள் மனஅழுத்தத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாகின்றனர். எனவே, அனைத்து அரசியல் தலைமைகளும் உடனடியாக தங்களது பொது உரைகளில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இன, பிரதேச, மொழி அடிப்படையிலான இழிவுபடுத்தல், அவதூறு மற்றும் வெறுப்பு பேச்சுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம். அத்துடன், இனம், பிரதேசம், மொழி, சாதியம் மற்றும் ஆணாதிக்க சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகும் அவதூறான மற்றும் வெறுக்கத்தக்க நடத்தைகளை கண்காணிக்கவும், அவற்றைத் தடுக்கவும், தண்டிக்கவும் கூடிய தெளிவான மற்றும் வலுவான நாடாளுமன்ற நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். மேலும், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் தங்களது உள்கட்டமைப்பு கொள்கைகள் மற்றும் ஒழுக்க விதிகளை உருவாக்கும் போது, இவ்வாறான வெறுப்பு பேச்சுக்களைத் தடுக்கும் உறுதியான வழிகாட்டுதல்களை இணைத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய கொள்கை மாற்றங்கள், நிலையான சமூக மாற்றத்திற்கும் நீடித்த சமூக அமைதிக்கும் அடித்தளமாக அமையும். https://www.battinatham.com/2026/03/blog-post_501.html
  6. பெண்களே அறிமுகமில்லாத வாகனங்களில் பயணிப்பதைத் தவிருங்கள் - கிழக்கு மாகாண பெருங்குற்றவியல் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி By Batticaloa கிழக்கு மாகாணத்தில் பெண்களின் பயணப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண பெருங்குற்றவியல் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் பல முக்கிய விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார். அண்மையில் இலங்கையை உலுக்கிய பாழ்ங்கிணறு படுகொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவர் இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார். பொறுப்பதிகாரி மேனன் விடுத்துள்ள அறிவுறுத்தலில் குறிப்பிட்டுள்ளதாவது - ஆபரணங்கள்: பெண்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது, பெறுமதிமிக்க தங்க நகைகளை அநாவசியமாக வெளிப்படையாக அணிவதைத் தவிர்க்க வேண்டும். பயணம்: முன்பின் தெரியாத முச்சக்கர வண்டிகள் (Auto) உள்ளிட்ட அறிமுகமில்லாத வாகனங்களில் ஏறுவதைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை அறிமுகமான வாகனங்களைப் பயன்படுத்தவும். குழுவாகச் செல்லுதல்: பெண்கள் தனித்துப் பயணிப்பதைத் தவிர்த்து, குழுவாகவோ அல்லது உறவினர்களுடனோ பயணங்களை மேற்கொள்வது பாதுகாப்பானது. உங்களது பயண விபரங்களை நெருங்கிய உறவினர்களிடம் முன்கூட்டியே பகிர்ந்து கொள்ளுங்கள். உணவு மற்றும் பானங்கள்: அந்நியர்கள் வழங்கும் உணவுப் பொருட்கள் அல்லது பானங்களை எக்காரணம் கொண்டும் உட்கொள்ள வேண்டாம். மயக்கமருந்து கொடுத்து நகைகளைப் பறிக்கும் சம்பவங்கள் குறித்து அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும். அவசர உதவி: ஏதேனும் ஆபத்தான அல்லது சந்தேகத்திற்கிடமான சூழல் ஏற்பட்டால், உடனடியாக 119 எனும் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும். நெருக்கடி கால நடைமுறைகள்: தற்போதைய எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதாரச் சூழலைக் கருத்திற்கொண்டு அவர் மேலும் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். தனிப்பட்ட வாகனங்களைத் தவிர்த்துப் பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்துதல் சிறந்தது. ஒரே பயணத்தில் பல வேலைகளைத் திட்டமிட்டு முடிப்பதன் மூலமும், அத்தியாவசியப் பொருட்களை அருகிலுள்ள கடைகளில் கொள்வனவு செய்வதன் மூலமும் பயணங்களைக் குறைக்கலாம். முடிந்தவரை கல்வி வகுப்புகள் மற்றும் அலுவலகப் பணிகளை இணையதளம் (Online) வாயிலாக மேற்கொள்ள முயற்சிப்பது காலத்திற்குப் பொருத்தமானது. குறுகிய தூரங்களுக்கு நடைபயணம் அல்லது மிதிவண்டிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் எரிபொருள் வளத்தைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். https://www.battinews.com/2026/03/blog-post_270.html
  7. யாழில். எரிபொருள் விநியோகம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் adminMarch 24, 2026 யாழ்ப்பாணத்தில் சீரான எரிபொருள் விநியோகம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகமானது சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரே சீரான பொறிமுறை ஊடக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக உரிய அறிவுறுத்தல்கள் பிரதேச செயலாளர்களுக்கு மாவட்ட செயலர் வழங்கினார். அத்துடன் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொழும்பில் இருந்து எடுத்து வருதல், உள்ளூர் உற்பத்திப் பொருட்களை வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லுதல், விவசாயம் மீன்பிடி போன்ற அத்தியாவசிய தேவைப்பாடுகளுக்கு எரிபொருள் சீராக விநியோகத்தினை வழங்குதல் தொடர்பாகவும், மேலதிக எரிபொருள் விநியோகம் தொடர்பாக உரிய மேலதிக வழிகாட்டுதல்களைப் பெற்று வழங்குவது தொடர்பாகவும் மாவட்ட செயலரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இக் கலந்துரையாடலில் மேலதிக செயலர்கள், பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2026/230940/
  8. வலி. தெற்கில் பிரமாண்ட உள்ளக விளையாட்டரங்கு – அடுத்த வருட இறுதிக்குள் பணிகளை முடிக்க முயற்சி adminMarch 24, 2026 வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 120 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வலிகாமம் தெற்கில் புதிய உள்ளக விளையாட்டரங்கு அமைக்கப்படவுள்ளதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த திட்டம் தொடர்பாக பிரதேச செயலகத்தில் பணியாற்றும் விளையாட்டுத்துறை உத்தியோகஸ்தர்கள், பிரதேச விளையாட்டுத்துறையுடன் தொடர்புடையவர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்களுடன் கலந்துரையாடி முதல் கட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் கேள்வி கோரல்கள் (tenders) நடைபெறவுள்ளதாகவும், அதன் பின்னர் கட்டுமானப் பணிகள் ஆரம்பித்து அடுத்த ஆண்டுக்குள் திட்டத்தை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த உள்ளக விளையாட்டரங்கில் மேசைப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம் (Badminton) மற்றும் கரப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளுக்கான திடல்கள் அமைக்கப்படவுள்ளன. அதோடு கரம் மற்றும் சதுரங்கம் போன்ற விளையாட்டுகளுக்கான பயிற்சி நிலையங்களும் ஏற்படுத்தப்படவுள்ளன. மேலும், ஒரே நேரத்தில் சுமார் 1000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை காணக்கூடிய பார்வையாளர் இருக்கைகளும் அமைக்கப்படவுள்ளன. இதனுடன் இணைந்து சிறுவர் பூங்கா மற்றும் நீச்சல் பயிற்சிக்கான நீச்சல் தடாகமும் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். https://globaltamilnews.net/2026/230931/
  9. மணல்காட்டில் சுற்றுலாவிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட காவல்துறையினா் - இருவர் வைத்தியசாலையில் adminMarch 24, 2026 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் நடந்த ஒரு சர்ச்சையான சம்பவத்தில், காவல்துறைக் குழுவொன்று தமது உத்தியோகபூர்வ வாகனத்தில் சுற்றுலா சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு அவர்கள் உணவு சமைத்து மது அருந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, அதே இடத்திற்கு சுற்றுலா சென்ற மற்றொரு குழுவுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் பின்னர் கைக்கலப்பாக மாறி, அதில் இருவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்டிருந்த காவல்துறையினா் மதுபோதையில் இருந்ததுடன், பொது இடத்தில் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், அவர்கள் உத்தியோகபூர்வ வாகனத்தை தனிப்பட்ட பயணத்திற்குப் பயன்படுத்தியதும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக காவல்துறை திணைக்கள மட்டத்தில் விரிவான விசாரணை நடத்தி, பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. https://globaltamilnews.net/2026/230924/
  10. சுமே ஆன்ரிக்கு பயணக் கதை எழுதுவது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி🤣
  11. இது எனக்குத் தெரியும் வயது இல்லை😀 நான் வீடியோவில் அதிகம் மினக்கெடவில்லை! அதுக்கு @sinnakuddy thasan தான் உதவி செய்யவேண்டும்!
  12. நிவாரணம் என்றால் இருக்கிறவனும் வரிசை கட்டுற கலாச்சாரம் வந்த பின்னர் சொந்தங்களிடம் உரிமையாக அப்பிள் ஐபோன் கேட்பதில் என்ன தயக்கம் வரப்போகின்றது? கேட்டதை கொடுக்காவிட்டால், உங்களுக்குத்தான் எதிர்பாராத இடங்களில் இருந்தும் அழுத்தம் வரும்😁
  13. அது நான் திருத்தியது இல்லை! AI பாடல்வரிகளாக மாற்றித் தந்தது! “சிமிட்டக் கண்டேன்”😘 என்பது மட்டும்தான் எனது சொந்த வரி😂🤣 படங்களை யாழில் இணைப்பது இலகு. சொந்தப்படம் என்றால் கருத்துக்களத்தின் மெனு (Menu) க்குப் போய் Gallery ஐ தெரிவு செய்து Add Images (வலது பக்க மேல் பகுதியில்) ஐ கிளிக் செய்து Gallery Image ஐ தெரிவு செய்து ஒரு அல்பம் உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள அல்பத்தைப் பாவிக்கலாம் அதில் வேண்டிய படங்களை தரவேற்றலாம். பின்னர் கருத்து எழுதும் பெட்டியில் Insert other media ஐ கிளிக் பண்ணி Insert existing attachment ஐ கிளிக் பண்ணி படங்களை உள்ளிடலாம்.
  14. நான் புரிவதற்கு இலகுவாக எழுதியிருக்கின்றேன் என்றல்லவா நினைத்தேன்🤣 உண்மையில் பாடல் வரிகளையும், பாடலையும் உருவாக்குவது இலகு. ஆனால் சொற்களில் சமரசம் வேண்டும். அதனை Gemini Pro போன்ற AI tools களிடமே கேட்டால் மாற்றித் தரும். பொருத்தமானதா இல்லையா என்பதை நாங்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.😇
  15. மேற்காசியப் போர்: தமிழ்மக்களின் நிலைப்பாடு ? - நிலாந்தன் 1991ஆம் ஆண்டு,”ஓபரேஷன் டிசேர்ட் ஸ்ட்ரோம்”- “பாலைவனப் புயல்” என்ற பெயரில் ஒரு படை நடவடிக்கையை, அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஈராக்குக்கு எதிராக முன்னெடுத்தன. 42 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அந்தப் படை நடவடிக்கையின் ராணுவ இலக்கு குவைத் நாட்டுக்குள் புகுந்த ஈராக்கியப் படைகளை அங்கிருந்து அகற்றுவது. இதுதொடர்பாக அப்பொழுது யாழ். பல்கலைக்கழகத்தில், புவியியல் துறையில் ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கருத்தரங்கில் ஆய்வுரை நிகழ்த்திய புவியியல் துறையைச் சேர்ந்த புலமையாளர் தனது ஆய்வுரையில் “மத்திய கிழக்கு” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அப்பொழுது அங்கே பார்வையாளராக வந்திருந்த பௌதீகவியல் துறையைச் சேர்ந்த ஒரு புலமையாளர் உரை நிகழ்த்தியவரிடம் கேட்டார், “ஏன் மத்திய கிழக்கு என்று அழைக்கிறீர்கள்? அது எங்களுக்கு மத்தியகிழக்கு இல்லைத்தானே? அப்படியென்றால் நீங்கள் எங்க நின்று கதைக்கிறீர்கள்? இங்க இருந்தா ? அல்லது ஐரோப்பாவிலிருந்தா ? என்று. அந்தக் கேள்வி ஆழமானது. மத்தியகிழக்கு என்பது பிரித்தானிய குடியேற்றவாத காலத்தில் குடியேற்றவாத நோக்குநிலையில் இருந்து பிரித்தானிய குடியேற்றவாத அதிகாரி ஒருவரால் 1850ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை. பிரித்தானியாவின் நோக்குநிலையில் இருந்து கிழக்கை அவர்கள் தூர கிழக்கு(far East) அண்மை கிழக்கு(near east) மத்திய கிழக்கு (Middle East) என்று பிரித்தார்கள். பின்னர் அந்த வார்த்தை அமெரிக்கரும் கடல்சார் மூலோபாய ஆராய்ச்சியாளருமாகிய அல்பிரட் தாயர் மாகன் என்பவரால் ஆய்வு நோக்கு நிலையில் இருந்து(1902இல்) அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. அதிலிருந்து இந்த வார்த்தை பரவலாக உபயோகிக்கப்படுகிறது. ஆனால் அது பிரித்தானிய “கொலோனியல் நோக்கு நிலையில்”-குடியேற்றவாத நோக்கு நிலையில் இருந்து பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை என்பதனால் அதை நிராகரித்து இந்தியாவின் முதலாவது பிரதமர் ஆகிய ஜவஹர்லால் நேரு மேற்காசியா என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். ஆசிய நோக்கு நிலையிலிருந்து அது ஆசியாவின் மேற்கே காணப்படுவதனால் அவ்வாறு அவர் அழைத்தார். எனவே அதை மத்திய கிழக்கு என்று அழைப்பதா அல்லது மேற்காசியா என்று அழைப்பதா என்பது அரசறிவியல் ஒழுக்கத்தின்படி எந்த மையத்திலிருந்து அந்தப் பிராந்தியத்தை நாங்கள் நோக்குகிறோம் என்பதைக் குறிக்கும். ஆனால் அதற்காக இப்பொழுது மேற்கு ஆசியாவை மத்திய கிழக்கு என்று அழைக்கும் ஆசியர்கள் இப்பொழுதும் “கொலோனியல் நீக்கம்” செய்யப்படவில்லை என்று மிகைப்படுத்திக் கூறத்தேவையில்லை. இப்பொழுது ஈரானை ஆதரிப்பவர்களும் மத்திய கிழக்கு என்கிறார்கள். அமெரிக்காவை ஆதரிப்பவர்களும் மத்திய கிழக்கு என்கிறார்கள். இங்கே வார்த்தைகள் அவற்றின் பெறுமதியுணர்ந்து பயன்படுத்தப்படுவது குறைவு. அமெரிக்க எழுத்தாளர் ஏர்ணஸ்ற் ஹெமிங்வே கூறியதுபோல புனிதமிழந்த வார்த்தைகள். ஹெமிங்வே எழுதிய உலகப் புகழ் பெற்ற நாவலாகிய போரே நீ போ(“A farewell to Arms” (1929) என்ற நாவலின் இறுதிப் பகுதியில் கதாநாயகன் சலிப்போடு பின்வரும் பொருள்படக் கூறுவான்… ”போர் நிறுத்தம், சமாதானம், பேச்சுவார்த்தை போன்ற வார்த்தைகளுக்கு இப்பொழுது பொருள் இல்லை. புனிதமும் இல்லை. புனிதம் கெடாமல் இருக்கும் வார்த்தைகள் எவையென்றால், படைப்பிரிவின் பெயர்கள், படை அணிகளின் பெயர்கள், வீதிகளின் பெயர்கள், நகரங்களின் பெயர்கள் மட்டும்தான்”… என்று. எனவே கடந்த மூன்று கிழமைகளுக்கு மேலாக நடந்து வரும் போர்க் களத்தை மத்திய கிழக்கு என்று அழைப்பவர்கள் அநேகமானவர்கள் அதன் சரியான பொருள் உணர்ந்து அழைக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அது நூற்றாண்டு காலமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கும்,நன்கு பழகிய வார்த்தை என்பதனால் பழக்கதோஷத்தில் அவர்கள் அதை அவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். அதை அவர்களுடைய அரசியல் சாய்வாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?. ஆனால் நிகழும் போரில் ஈழத்தமிழர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் இதில் எடுக்கக்கூடிய நிலைப்பாடு யுத்தத்தின் போக்கை மாற்றப் போவதில்லை என்பதனால் தமிழர்கள் நிலைப்பாடு ஒன்றை எடுக்கவேண்டிய தேவை என்ன? என்று ஒரு பகுதியினர் கேட்கின்றார்கள். ஆனால், அரசு இல்லாத, நீதிக்காகப் போராடுகின்ற ஒரு மக்கள் கூட்டம் உலகில் நடக்கும் மோதல்கள் தொடர்பில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அந்த நிலைப்பாட்டை அறத்தின் அடிப்படையில் எடுப்பதா? அல்லது ஒர் அரசுபோல சிந்தித்து முடிவெடுப்பதா? மேற்காசிய யுத்தம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு விரிவடையுமாக இருந்தால் அது இப்போதுள்ள உலக அரசியலில் துருவ நிலைப் போக்குகளை மாற்றக்கூடும். எனவே கேந்திர முக்கியத்துவம்மிக்க ஓர் அமைவிடத்தைக் கொண்ட மக்களாகிய ஈழத்தமிழர்கள் இந்தவிடயத்தில் தெளிவாக ஒரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும். போர் நிகழ்வது ஆசியக் களம். நேரடியாக மோதுவது இரண்டு ஆசிய நாடுகளும் அமெரிக்காவும். தவிர ஈரானைச் சுற்றியிருக்கும் நாடுகளில் அமெரிக்காவின் தளங்கள் உண்டு. எனவே போர்க்களம் அங்கேயும் விரிவடைந்திருக்கிறது. இதுவரையிலுமான உயிர்ச் சேதத்தைக் கணக்கிட்டால் அதிகமாகக் கொல்லப்பட்டிருப்பது ஆசியர்கள்தான். மிகச்சொற்பமான தொகை அமெரிக்கர்கள்தான் இறந்திருக்கிறார்கள். ஆசியாவுக்கே சேதம் அதிகம். ஆசியாவுக்கே உயிரிழப்புகள் அதிகம். ஆசியர்கள் ஒருவர் மற்றவரோடு மோதிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டதோர் பிராந்திய அரசியல் பின்னணிக்குள் ஆசியர்களாகிய ஈழத் தமிழர்கள் என்ன நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்? ஆசிய சகோதரத்துவம் என்ற நிலைப்பாட்டை எடுக்கலாமா? ஈழத் தமிழர்களின் விவகாரத்தில், இறுதிக்கட்டப் போரில் ஆசிய நாடுகள் ஈழத் தமிழர்களோடு நிற்கவில்லை. ஈரானும் உட்பட பெரும்பாலான ஆசிய நாடுகள் அரசாங்கத்தோடுதான் நின்றன. அங்கே ஆசியர்கள் என்பதற்காக அவர்கள் ஈழத் தமிழர்களோடு தமது சகோதரத்துவத்தை நிரூபிக்கவில்லை. மேலும் பொறுப்புக்கூறலுக்கான ஐநா நடவடிக்கைகளிலும் ஆசிய நாடுகள் பெருமளவுக்கு ஈழத் தமிழர்களோடு நிற்கவில்லை. அமெரிக்காவின் மேலாண்மையை அனுசரித்துப்போகும் மேற்கத்திய நாடுகள்தான் பெருமளவுக்கு ஐநா தீர்மானங்களைக் கொண்டு வருகின்றன. அப்படிப் பார்த்தால் கடந்த 16 ஆண்டுகால ஐநாமைய அரசியலின் அடிப்படையில் ஈழத் தமிழர்கள் மேற்கு நாடுகளின் பக்கம் நிற்கவேண்டுமா? ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினர் இப்பொழுதும் பலஸ்தீனத்தை ஆதரிக்கிறார்கள். ஆனால் பலஸ்தீன தன்னாட்சி அதிகார அமைப்பானது இலங்கை அரசாங்கத்தோடுதான் நிற்கின்றது. போராடி வென்ற நாடுகளான வியட்நாம்,கியூபா, எரித்திரியா போன்ற நாடுகளும் ஈழத்தமிழர்களோடு இல்லை. அந்த நாடுகள் அறநெறி, நீதிநெறி என்பவற்றின் அடிப்படையிலோ அல்லது நீதிக்கான போராட்டம் என்ற அடிப்படையிலோ ஈழத்தமிழர்களோடு தமது சகோதரத்துவத்தை வெளிப்படுத்தவில்லை. அதேசமயம் ஐநாவில் தீர்மானங்களைக் கொண்டுவரும் மேற்கு நாடுகள் தமிழர்கள் மீது கொண்ட காதலால், அன்பினால் அல்லது அறத்தின் அடிப்படையில் அந்த முடிவை எடுக்கின்றன என்பதல்ல. பிராந்தியத்தில் சீனாவின் விரிவாக்கத்தை தடுப்பதற்கான ஒரு கருவியாக இலங்கை அரசாங்கத்தின் மீது எப்பொழுதும் ஒரு பிடியைப் பேணுவதற்கு அவர்கள் ஈழத் தமிழர் விவகாரத்தைக் கையாண்டு வருகிறார்கள் என்பதுதான் ராஜதந்திர யதார்த்தம். இதுதான் அரசுகளின் உலகம். எந்த ஒரு நாடும் இன்னொரு நாட்டுடன் அல்லது அரசு இல்லாத சிறிய மக்கள் கூட்டத்துடன் வைத்துக்கொள்ளும் உறவு என்பது அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்பு சார்ந்த நலன்களின் அடிப்படையில்தான் பேணப்படும். அங்கே அறநெறி, நீதிநெறி, பிராந்திய சகோதரத்துவம் போன்றவை கிடையாது. அவையெல்லாம் “அம்புலிமாமா” கதைகளில் வருபவை. ஈழப்போரின் போதும் போருக்கு முன்னரும் பின்னரும் இலங்கை இனப் பிரச்சினையில் பெரும்பாலான நாடுகள் இலங்கை அரசாங்கத்தைத்தான் கையாள முயற்சித்தன. அரசாங்கத்தைக் கையாள முடியாத நிலை வரும்பொழுது அரசாங்கத்தைப் பணிய வைப்பதற்காக தமிழ்மக்களை, தமிழ் மக்களின் போராட்டத்தை,தமிழ் மக்களின் அரசியலை ஓர் அழுத்தப் பிரயோக கருவியாக அவை கையாண்டன. இப்பொழுதும் கையாண்டு வருகின்றன. இதுதான் கடந்த சுமார் அரை நூற்றாண்டு கால அனுபவம். இப்படிப்பட்டதோர் குரூர உலகில், அரசு இல்லாத சிறிய மக்கள் கூட்டமாகிய ஈழத் தமிழர்கள் எப்படிப்பட்ட ஒரு நிலைப்பாட்டை எடுக்கலாம்? எனது கட்டுரைகளில் நான் திரும்பத்திரும்பக் கூறும் ஓர் ஆபிரிக்கப் பழமொழி உண்டு. “நீ நீதியாக இருக்கிறாய் என்பதற்காக உலகம் உன்னிடம் நீதியாக நடந்துகொள்ளும் என்று எதிர்பார்க்காதே. அவ்வாறு எதிர்பார்ப்பது, நீ சிங்கத்தைச் சாப்பிட மாட்டாய் என்பதற்காக சிங்கம் உன்னைச் சாப்பிடாது என்று நம்புவதற்கு நிகரானது.” இதுதான் உலக அரசியல்.ஈழத் தமிழர்கள் ஒரு தேசமாகத் திரளும்போது ஜோன் லொகே கூறுவது போல “ஒரு சமூகத்தின் பலமானது அந்தச் சமூகத்தின் தார்மீக ஒருமைப்பாட்டில் தங்கியிருக்கிறது” என்ற அடிப்படையில் திரளவும் வேண்டும். அதேசமயம் அரசுகளின் அரங்கில் ஓர் அரசைப்போலவும் சிந்திக்க வேண்டும். செயற்பட வேண்டும். “புலிகள் சண்டையிடும்போது மலை உச்சியில் அமர்ந்திருந்து அதைப் பார்க்கவேண்டும்” என்ற சீனப் பழமொழி இங்கே பொருத்தமாக இருக்குமா? https://www.nillanthan.com/8211/
  16. மாயப் போரும் ரெண்டுகால் பூச்சிகளும் - நிலாந்தன் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கார்ல் மார்க்ஸ் சொன்னார் “மதம் ஓர் அபின்” என்று. கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஹெபர்ட் மார்க்யூஸ் சொன்னார் “நுகர்வுப்பண்டங்களே அபின்” என்று. இந்த நூற்றாண்டில் தகவல் ஓர் அபினா? சமூக வலைத்தள “அல்கோரிதம்” எனப்படுவது ஒருவகை போதை ஊக்குவிப்புத்தான். நீங்கள் எதை தேடுகிறீர்களோ அது உங்களைத் தேடி வரும். நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்று கண்டு அதை நோக்கி உங்களை ஊக்குவிப்பது. ஒரு போதைப்பொருள் பாவனையாளர் எந்தப் போதைக்குப் பழக்கப்படுகிறாரோ, அதே போதையை அவருக்குத் தொடர்ந்து ஊட்டுவதன் மூலம் அவரை அதற்கு அடிமையாக்கிவிடுவது. அதாவது இலத்திரனியல் அடிமைகள். இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் உலகளாவிய பரந்த மாய வலைப் பின்னலுக்குள் சிக்கிய ரெண்டு கால் பூச்சிகள். தகவல் ஒரு போதை மட்டும் அல்ல. கவிஞரும் திசை வாரப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவருமாகிய மு.பொன்னம்பலம் கூறுவார் “தகவல் ஒரு மாயை” என்று. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியோடு அது இப்பொழுது மகா மாயையாக உருவெடுத்துவிட்டது. தகவல் புரட்சியின் ரெண்டுகால் பூச்சிகள் ஒரே சமயத்தில் மாயப் போரின் பலியாடுகளாகவும் இருக்கிறார்கள்; பரிசோதனைக்கூட எலிகளாகவும் இருக்கிறார்கள்; தம்வசமிழந்த பார்வையாளர்களாகவும் இருக்கிறார்கள். இஸ்ரேல் அண்மை ஆண்டுகளாக ஈரானிய தலைவர்கள் தளபதிகள் விஞ்ஞானிகளுக்கு எதிராக முன்னெடுத்து வரும் தாக்குதல்கள் பெருமளவுக்கு மாயத் தொழில்நுட்ப வகைப்பட்டவைதான். இப்பொழுதும் மேற்காசியாவில் திறக்கப்பட்டிருக்கும் போர்க்களத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கு பெரியது. அந்த மாயப் போர்க்களத்தில் அதிகம் பலியாவது ஆசியர்கள்தான். மேற்கு நாடுகள் தங்களுடைய நவீன தொழில்நுட்பத் திறன்களையும் புதிய போர்த் தளபாடங்களையும் கண்டுபிடிப்புகளையும் பரிசோதனை செய்யும் ஆய்வுக்கூடங்கள் பெருமளவுக்கு ஆசிய, ஆபிரிக்க,லத்தீன் அமெரிக்க, கிழக்கு ஐரோப்பியப் போர்க் களங்கள்தான். மேற்கு ஐரோப்பாவும் அமெரிக்காவும் அனேகமாகப் பாதுகாப்பாக இருக்கும். ஏனைய பகுதிகள்தான் புதிய யுத்தத் தளபாடங்களின் பரிசோதனைக் கூடங்களாகப் பயன்படுத்தப்படும். குறிப்பாக உலகப் பேரரசு அமேரிக்கா எல்லா யுத்த அரங்குகளுக்கும் வெளியே ,தொலைவில் பத்திரமாக இருக்கிறது. ஒசாமா பின் லேடன்தான் அமெரிக்காவை அதன் வாசற்படிவரை சென்று தாக்கினார். அணுகுண்டை தூய விஞ்ஞானத்தின் வார்த்தைகளில் சொன்னால் அது ஒரு யூதக் குண்டு. அதற்குரிய சமன்பாட்டை கண்டுபிடித்தது யூதரான ஐன்ஸ்டீன். அதனை ஒரு செய்முறையாக மாற்றியவர் யூதராகிய ஓபன் ஹெய்மர். அதனால் பிரயோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் கூறினால் அது முதலில் அமெரிக்க யூதக் குண்டு. ஆனால் அதை அவர்கள் பரிசோதித்த இடம் ஆசிய ஜப்பானில்தான். அணுகுண்டின் முதலாவது பரிசோதனைக் கூட எலிகள் ஆசியர்கள்தான். இப்பொழுது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியோடு முன்னெடுக்கப்படும் மாயப் போரிலும் முதல் பலிகளும் பரிசோதனை கூட எலிகளும் பெருமளவுக்கு ஆசிரியர்களும் ஆபிரிக்கர்களும் உக்ரேனியர்களும்தான். ஆளில்லா விமானங்களின் மாயத் தாக்குதல்கள் அதிகம் நடந்த இடங்கள் ஆசிய, ஆப்பிரிக்க, கிழக்கு ஐரோப்பியப் பிராந்தியங்கள்தான். மூன்றாவது உலகப்போர் என்று ஒன்று இதுவரை நடக்கவில்லை. ஆனால் பனிப் போர் நடந்தது.அந்தப் பனிப் போரானது மேற்கு ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு நிழல் போராக இருந்தது. ஆனால் ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களில் நிஜப் போராக இருந்தது. பேரரசுகளின் நிழல் போரை ஏனைய நாடுகள் நிஜப் போராக முன்னெடுத்தன. ஈழப்போரும் அப்படித்தான். ஜெயவர்த்தனா அமெரிக்காவின் நண்பனாக இருந்தார்.இந்தியா, ரஸ்சியாவின் கூட்டாளியாக இருந்தது. 1983க்குப் பின் ஈழப் போர் எனப்படுவது பனிப்போரின் ஒரு பகுதியாக மாறியது. அதனாலேயே வளர்ந்தது. ஆசிரியர்களாகிய சிங்களவர்களும் ஆசிரியர்களாகிய தமிழர்களும் ஐரோப்பியர்களின் நிழல்போரை நிஜப்போராக முன்னெடுத்தார்கள். ஆசியர்களாகிய, அரசில்லாத, சிறிய ஈழத் தமிழர்கள் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் உசார் மனோ நிலையிலிருந்தும் தற்காப்பு உணர்விலிருந்து விடுபடவில்லை. அதனால்தான் மேற்காசியாவில் போர் வெடித்தபோது யாழ்ப்பாணத்தில் எரிபொருளுக்கும் எரிவாயுவுக்குமாக வரிசைகள் நின்றன. அதைப் பலரும் நக்கல் அடித்தார்கள். ஆனால் அது யாழ்ப்பாணத்து நோக்கு நிலையில் தவிர்க்க முடியாதது. ஒரு குடா நாட்டு மனோநிலை அப்படித்தான் இருக்கும். யாழ்ப்பாணத்தவர்களின் தற்காப்பு உணர்வின் விளைவுதான் சேமிப்பு பண்பாடு. அது குடா நாட்டு மனோநிலையின் பிரதான அம்சம். போர் இந்த சேமிப்பு பண்பாட்டை மேலும் பலப்படுத்தியது. ஒருவகையில் போருக்குள் நின்று நிலைத்தமைக்கு அதுவும் காரணம். போருக்குப் பின்னரும் அந்த மனோநிலை அப்படியே மாறாமல் இருக்கிறது. ஏனென்றால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை. அதனால் யாழ்ப்பாணத்தவர்களின் மனோநிலை மட்டுமல்ல முழு ஈழத் தமிழர்களின் மனோநிலையும் ஒருவிதத்தில் அமைதியுறாத, கொந்தளித்த, ”அண்செற்றில்ட்” மனோநிலையாகத்தான் காணப்படுகிறது. சதா உஷாராகவும், அளவுக்கு மிஞ்சிய தற்காப்பு உணர்வோடும் காணப்படுகிறது. எனினும் மேற்காசியாவில் யுத்தம் வெடித்த உடனே வரிசையில் நின்ற பலரும் இப்பொழுது தாங்கள் செய்தது சரிதான் என்று திருப்திப்படுகிறார்கள். ஒரு சிறிய மக்கள் கூட்டம் தற்காப்பு உணர்வோடு இருப்பதில், முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வதில் தவறில்லை. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ராஜதந்திரி என்னிடம் கேட்டார் யாழ்ப்பாணத்தை “ஒரு தூங்கா நகரமாக மாற்ற முடியுமா?” என்று. யாழ்ப்பாணம் மட்டுமல்ல தென்னிலங்கையிலும் பல நகரங்கள் இரவு கிட்டத்தட்ட எட்டு மணிக்கு பின் தூங்கும் நகரங்கள்தான். விசேஷமாக வடக்கு கிழக்கில் உள்ள நகரங்கள் அதிகாலையில் சூரியனோடு சேர்ந்து விழித்தெழுவதில்லை. இரவானதும் ஒன்பது மணிக்கு முன்னரே பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டுவிடும். அதற்குக் காரணம் தமிழ்மக்களின் கூட்டு உளவியலில் ஒருவித “உளவியல் ஊரடங்குச் சட்டம்”தொடர்ந்தும் அமுலில் இருப்பதுதான் என்று எனது நண்பன் ஒருவர் கூறுவார். இந்த “உளவியல் ஊரடங்குச் சட்டம்” என்பது முன்சொன்னதுபோல அண்செற்றில்ட்டான ஒரு கூட்டு உளவிகளின் விளைவு. இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காதவரை அது தொடர்ந்தும் இருக்கும்.2009க்குப் பின்னரான தொடர்ச்சியான புலப்பெயர்ச்சிக்கு அதுவும் ஒரு பிரதான காரணம். அரசில்லாத சிறிய,ஆசிய மக்கள் கூட்டம் ஆகிய ஈழத் தமிழர்கள் மேற்காசியப் போரில் நேரடியாகச் சம்பந்தப்படவில்லை. ஆனால் அமெரிக்கா போரை இலங்கை கடற்கரையில் இருந்து 19 கடல் மைல்வரை கொண்டு வந்துவிட்டது. ஈரானியப் போர்க்கப்பல் அமெரிக்க நீர் மூழ்கியால் தாக்கப்பட்டது. எனவே இலங்கை போர்க்களத்துக்கு வெளியே இருக்கிறது என்று கூறமுடியாது. மேலும் எரிவாயுவுக்கும் எரிபொருளுக்குமாக வரிசையில் நிற்கும் ஒரு நிலை வந்திருக்கிறது. புதன் கிழமை விடுமுறையாக்கப்பட்டிருக்கிறது. அதாவது போர் நமது குசினி, அலுவலகம் ,பாடசாலை வரை வந்துவிட்டது. அமெரிக்கா எதிர்பார்த்ததுபோல ஈரான் துவண்டு விடவில்லை. தலையை நசக்கினால் பாம்பு செத்துவிடும் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் நம்பியிருக்கலாம். ஆனால் ஈரான் நின்று பிடிக்கின்றது. இந்தப் போரில் சீனாவும் ரஷ்யாவும் நேரடியாக போர்க்களத்தில் இறங்கவில்லை. ஆனால் ஈரானின் பின்னணிப்பலம் அந்த நாடுகள்தான். நிகழும் போரில் சீனா ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளினதும் பங்களிப்பின் அளவும் பங்களிப்பின் தன்மையும்தான் புதிய உலக வலுச் சமநிலையைத் தீர்மானிக்கும். அவ்வாறு உலக வலுச்சமநிலையில் ஏற்படும் தளம்பல்கள் சிறிய ஈழத் தமிழர்களின் அரசியலிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும். பனிப்போர் எப்படி ஈழப் போரில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியதோ அப்படி. கடந்த 16 ஆண்டு காலமாக சீனாவுக்கு எதிரான மேற்கத்திய வியூகத்தின் ஒரு பகுதியாக ஈழத் தமிழர்கள் ஐநாவில் கையாளப்படுவதையும் அவ்வாறுதான் விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே பிராந்தியத்தில்,கண்டத்தில், பூகோள அளவில் ஏற்படும் திருப்பகரமான மாற்றங்கள் ஈழத் தமிழர்களுக்கு புதிய வாய்ப்புகளை திறக்கக்கூடும். சில சமயம் இருக்கின்ற வாய்ப்புகளை மூடவும்கூடும். ஆனால் அவ்வாறு ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஈழத் தமிழ் அரசியலில்,இலங்கை அரசியலில் என்னதான் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தினாலும், அவற்றைக் கையாள்வதற்கு ஈழத் தமிழர்கள் தயாராக இருக்கிறார்களா ? https://www.nillanthan.com/8207/
  17. யாழில் விரிவுரையாளரின் படுகொலையும் ; அதன் பின்னணிகளும் ஞாயிறு, 22 மார்ச் 2026 10:27 AM எனது மனைவி அவரது தாயாரின் கால்களை அழுத்தி பிடிக்க நான் கழுத்தை நெரித்து படுகொலை செய்தேன் என யாழ் . பல்கலைக்கழக விரிவுரையாளரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய விரிவுரையாளரின் மருமகனான பிரதான சந்தேகநபரான பொலிசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரான வைத்தியர் தயாளினி திலீபன் (வயது 54) என்பவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவருவதாவது, மூன்று மாதங்களில் முறிந்த திருமண வாழ்க்கை. கொலையின் பிரதான சந்தேகநபரான அரியாலை பகுதியை சேர்ந்த திவாகர் (வயது 20) எனும் இளைஞன் விரிவுரையாளரின் மகளான சுவித்தியா (வயது 19) என்பவரை காதலித்து வந்த நிலையில் , கடந்த வருடம் (18 வயது திருமண வயதை எட்டியதும்) இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பதிவு திருமணம் செய்துள்ளனர். பதிவு திருமணம் செய்து சுமார் 3 மாத காலம் வாழ்ந்த நிலையில் , சுவித்தியா , கணவருடன் வாழ முடியாது. கொடுமைகளுக்கு தான் உள்ளாவதாக கூறி தாய் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அதனை அடுத்து ஓரிரு மாதங்களில் தனக்கு விவாகரத்து கோரி யாழ். மாவட்ட நீதிமன்றில் தாயரின் அறிவுறுத்தலில் பிரபல மூத்த சட்டத்தரணி ஊடாக வழக்கு தொடர்ந்துள்ளார். குறித்த வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் நடைபெற்று வந்த வேளை பெண்ணின் கணவன் நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு சமூகமளிக்காது இருந்துள்ளார். இரு தவணைகளுக்கு மேல் சமூகமளிக்காத நிலையில் , வழக்கினை ஒரு முக விளக்கத்திற்கு எடுக்குமாறு சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்த நிலையில் வழக்கு அடுத்த தவணைக்கு திகதியிடப்பட்டது. நள்ளிரவு ஓடு பிரித்து வீட்டிற்குள் இறங்கிய கணவன். வழக்கு தவணைக்கு தான் செல்லாததும் , வழக்கு ஒரு முக விளக்கத்திற்கு சென்று தமக்கு விவாகரத்து கிடைத்து விடும் என அறிந்த கணவனான திவாகர் கடந்த 17ஆம் திகதி பாண்டியன் தாழ்வு பகுதியில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்கு நள்ளிரவு வேளை மோட்டார் சைக்கிளில் சென்று , மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்திய பின்னர் , வீட்டின் ஓட்டை கழட்டி கயிறு மூலம் மனைவியின் அறைக்குள் இறங்கியுள்ளார். அங்கு நித்திரையாக இருந்த மனைவியை எழுப்பி , தனது செயற்பாடுகளுக்கு மன்னிப்பு கோரி , சமாதானமாகி மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ்வோம் என கோரியுள்ளார். தாயை கொலை செய்த கணவனுடன் கைகோர்த்த மனைவி அதற்கு மனைவி தாம் இருவரும் சேர்ந்து வாழ அம்மா அனுமதிக்க மாட்டார் என கூறியதை அடுத்து , அவர் உயிருடன் இருந்தால் தானே அனுமதிக்க மாட்டார். அவரை கொலை செய்வோம் என கூறி , தாயாரின் அறைக்குள் சென்றுள்ளனர். அங்கு தூக்கத்தில் இருந்த தாயின் கால்களை மகள் அழுத்தி பிடிக்க , மகளின் கணவன் கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளார் உயிரிழந்த தாயின் சடலத்தை படுக்கை விரிப்பினால் (பெட் சீட்) சுற்றி கட்டி , தாயின் காரின் பின் பகுதியில் சடலத்தை மறைத்து வைத்த பின்னர் , கணவன் மனைவியான இருவரும் வீட்டை விட்டு வெளியேறி , கணவனின் மோட்டார் சைக்கிளில் கணவனின் வீட்டிற்கு சென்று அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு , வாடகை வாகனம் ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி மீண்டும் தனது வீட்டிற்கு கணவனுடன் வந்துள்ளார். காரில் சடலத்துடன் தப்பியோட்டம் பின்னர் விரிவுரையாளரான தனது தாயின் வங்கி அட்டையையும் நகைகள் சிலவற்றையும் எடுத்து கொண்டு தாயின் காரில் தாயின் சடலத்துடன் பயணித்து , தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றை காட்டில் சடலத்தை வீசி விட்டு காரில் தொடர்ந்து பயணித்துள்ளனர். பரந்தன் பகுதியில் தாயின் வங்கி அட்டையை பயன்படுத்தி பணத்தினை பெற்று காரில் தொடர்ந்து பயணித்துள்ளனர். பின்னர் திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் காருக்கு QR பயன்படுத்தி எரிபொருள் நிரப்பியுள்ளனர். அதனை தொடர்ந்து தாயின் ஒரு ஜோடி காப்பை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர். அந்த பணத்தில் திருகோணமலையில் வாடகைக்கு வீடொன்றினை பெற்று வாழ்ந்துள்ளார். தாயை காணவில்லை என மகன் முறைப்பாடு அதேவேளை கடந்த 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தனது தாயையும் சகோதரியையும் காணவில்லை என விரிவுரையாளரின் மகன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததுடன் , சகோதரியின் கணவன் மீது சந்தேகம் நிலவுவதாகவும் குறிப்பிட்டு இருந்துள்ளார். ஆனாலும் பொலிஸார் ஆரம்பத்தில் இதனை ஒரு குடும்ப பிரச்சனையாக கருத்தி விசாரணைகளில் தீவிரம் காட்டாத நிலைமை காணப்பட்டதாகவும் , அதனை அடுத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோர் வடமாகாண மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு கோரிக்கைகளை முன் வைத்ததன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை தீவிர படுத்தினர் மகன் பொலிஸாருக்கு வழங்கிய தகவல்கள் அதேவேளை , தாயின் வங்கி அட்டையை பயன்படுத்தி பரந்தனில் பணம் பெறப்பட்டமை , தாயின் காருக்கு QR மூலம் திருகோணமலையில் எரிபொருள் நிரப்பியமை உள்ளிட்ட தகவல்களை மகன் பொலிஸாருக்கு வழங்கி இருந்தார். அவற்றின் அடிப்படையில் திருகோணமலைக்கு சென்ற விசேட பொலிஸ் குழு , காருக்கு எரிபொருள் நிரப்பிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விசாரணைகளை முன்னெடுத்து , கணவன் - மனைவி இருவரும் திருகோணமலையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்ததனை அறிந்து , அங்கு விரைந்து அவர்கள் இருவரையும் மீட்டு ,யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர். திருகோணமலையில் மீட்கப்பட்ட கணவன் - மனைவி வெள்ளிக்கிழமை இருவரையும் மீட்டு யாழ்ப்பாணம் அழைத்து வரும் போது இருவரிடமும் விரிவுரையாளர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போதிலும் இருவரும் அது தொடர்பில் முன்னுக்கு பின் முரணான தகவல்களையே வழங்கி வந்துள்ளனர். யாழ்ப்பாணம் அழைத்து வந்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து , நேற்றைய தினம் சனிக்கிழமையும் தொடர் விசாரணைகளை முன்னெடுத்த வேளையே விரிவுரையாளரை கொலை செய்த சம்பவத்தை கூறி தனது வாக்கு மூலத்தை பொலிஸாரு க்கு மருமகன் கூறியுள்ளார். தாயின் கொலைக்கு நான் உடந்தை இல்லை - மகள் வாக்குமூலம் அதேவேளை , தான் கொலைக்கு எந்தவகையிலும் உடந்தையாக இருக்கவில்லை எனவும் , கணவன் மீதான பயத்தின் காரணமாக அவரது செயற்பாடு குறித்து வெளியில் கூறவில்லை என விரிவுரையாளரின் மகள் தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு. மருமகனின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மூன்று நாட்களின் பின் சடலத்தை மீட்டமையால் , சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. சடலத்தை மீட்ட பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர். கழுத்து நெரித்தே கொலை. போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் உடலில் காயங்கள் எதுவும் இன்றிய நிலையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது. இறுதி கிரியைகள் அதனை அடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , விரிவுரையாளரின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. https://jaffnazone.com/news/55760
  18. தமிழகத்தில் தத்தளிக்கும் த.வெ.க... அப்போ விஜய்யின் கதி? "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று கோட்டையை நோக்கிப் பயணத்தைத் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரதத்திற்கு, இப்போது 'பெட்ரோல்' போடக் கூடப் பணமில்லாமல் என்ஜின் முனகிக் கொண்டிருக்கிறது. “தளபதி வருவார்... மாற்றத்தைக் தருவார்" என்று காத்திருந்த நிர்வாகிகளுக்கோ, இப்போது "கடன் காரன் வருவான்... கழுத்தைப் பிடிப்பான்" என்ற பயமே மேலோங்கி நிற்கிறது. தவெக-வின் தற்போதைய நிலைமையை 'ஆக்‌ஷன்' படம் என்று நினைத்து உள்ளே வந்தவர்களுக்கு, இப்போது அது 'சோகப் படமாக' நீண்டு கொண்டிருக்கிறது. கட்சி ஆரம்பித்து மாநாடு நடத்தியதோடு சரி, அடுத்தகட்ட நகர்வுகளில் தலைமை காட்டும் மந்தகதி அடிமட்டத் தொண்டர்களை அதிர வைத்திருக்கிறது. குறிப்பாக, தேர்தல் பணிகளை முடுக்கிவிட வேண்டிய மாவட்ட மற்றும் உள்ளூர் நிர்வாகிகள், இப்போது கையை விரித்து நிற்கிறார்கள். "கட்சிப் பணிக்காக ஏற்கெனவே கையில் இருந்ததைச் செலவு செய்துவிட்டு, இப்போது வட்டிக்குக் கடன் வாங்கி திண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், தலைமையோ எட்டிப் பார்க்கக்கூடத் தயாராக இல்லை" என்பதுதான் மாவட்டச் செயலாளர்களின் குமுறலாக இருக்கிறது. நிதிய நெருக்கடி என்ற புயல், தவெக-வின் அடிமட்டக் கட்டுமானத்தையே ஆட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டது. தேர்தல் களம் என்பது வெறும் ஆக்ரோஷமான பேச்சால் மட்டும் அமைவது அல்ல; அதற்கு 'பணபலம்' என்ற எரிபொருள் மிக அவசியம். ஆனால், தவெக-வின் கஜானாவோ 'ஈ' ஆடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், கட்சியின் உச்சகட்டத் தலைமை (விஜய்) எடுக்கும் முடிவுகள் நிர்வாகிகளை மேலும் வேதனையில் ஆழ்த்தியுள்ளன. "கட்சியைக் கொண்டு சேர்க்க நாங்கள் ரத்தம் சிந்துகிறோம், ஆனால் விஜய் அண்ணனோ வசதி படைத்தவர்களை (Rich background) மட்டுமே அருகில் வைத்துக்கொள்ள விரும்புகிறார்" என்ற பேச்சு அறிவாலயத்தின் சுவர்களைத் தாண்டி வெளியே ஒலிக்கத் தொடங்கியுள்ளது. உள்ளூர் அளவில் செல்வாக்கு இருந்தும், கையில் காசில்லாத காரணத்தால் பல விசுவாசமான நிர்வாகிகள் ஓரங்கட்டப்படுவதாகத் தெரிகிறது. இது ஒருபுறமிருக்க, "தன்னுடைய சொந்தப் பணத்தைச் செலவு செய்ய விஜய் தயாராக இல்லை, மாறாக நிர்வாகிகளையே நிதியைத் திரட்டச் சொல்கிறார்" என்ற தகவலும் தீயாய்ப் பரவுகிறது. பல நிர்வாகிகள் மாநாடு மற்றும் உறுப்பினர் சேர்க்கைக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கட்சியே வேண்டாம் என்ற விளிம்பிற்கே தள்ளப்பட்டுள்ளதாக 'சோர்ஸ்கள்' தெரிவிக்கின்றன. தேர்தல் பணிகள் குறித்து எந்தவொரு தெளிவான திட்டமிடலோ அல்லது நிதி ஒதுக்கீடோ தலைமையிடமிருந்து வராதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை நீடித்தால், தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே முக்கிய நிர்வாகிகள் மாற்று முகாமிற்குத் தாவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில கடனோடு கட்சி பணிகளை நிறுத்திவிட்டு.. போதும்டா சாமி என்று கிளம்பும் சூழல் உள்ளது. 'வெற்றி நிச்சயம்' என்று முழங்கிய தவெக, இப்போது 'நிதி நெருக்கடி' என்ற சுழலில் சிக்கித் தவிக்கிறது. விஜய் தன் 'பர்ஸ்' கயிற்றைத் தளர்த்துவாரா அல்லது தொண்டர்களே தங்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்க வேண்டுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். https://www.tamilmirror.lk/cinema/தமிழகத்தில்-தத்தளிக்கும்-த-வெ-க-அப்போ-விஜய்யின்-கதி/54-374319
  19. ஹோர்முஸ் நீரிணை: ஜப்பானிய கப்பல்களுக்கு ஈரான் பச்சைக்கொடி? adminMarch 22, 2026 மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக ஜப்பானிய எண்ணெய் கப்பல்கள் செல்வதற்கு அனுமதி வழங்க ஈரான் முன்வந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் இந்த நீரிணையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருப்பினும், ஜப்பானை ஈரான் ஒரு “எதிரி நாடாக” கருதவில்லை என்பதால், அந்நாட்டு கப்பல்களுக்கு மட்டும் சில விதிவிலக்குகளை அளிக்க முன்வந்துள்ளது. புதிய வரி விதிப்புத் திட்டம்: ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் சோமையே ரஃபி (Somayeh Rafiei) உள்ளிட்டோர், இந்த நீரிணையைப் பயன்படுத்தும் கப்பல்களுக்கு ‘பாதுகாப்பு வரி’ மற்றும் ‘சுங்கக் கட்டணம்’ விதிக்கும் மசோதாவைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர். https://globaltamilnews.net/2026/230837/
  20. மன்னாரில் காற்றாலை மின்சாரம் கொண்டு செல்லும் கேபிள்களில் சிக்கி விபத்துக்குள்ளான பருவகாலப் பறவைகள். adminMarch 22, 2026 மன்னார் மாவட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்த வெளிநாட்டு பறவை இனமான பிளமிங்கோ (Flamingo) பறவைகள் மூன்று(3) வங்காலை பறவைகள் சரணாலய பகுதி ஊடாக அதி வலு கொண்ட காற்றாலை மின்சாரம் கொண்டு செல்லும் கேபிள்களில் சிக்கி விபத்துக்குள்ளாகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளாகிய பறவைகளில் இரண்டு உயிரிழந்த நிலையிலும், ஒன்று பலத்த காயமடைந்த நிலையிலும் மன்னார் மாவட்ட வனவிலங்குப் பாதுகாப்பு திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பறவைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் உரிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வெளிநாட்டு பறவைகள் மன்னார் தீவு பகுதிக்கு வருகை தரும் காலமாக உள்ளது.இந்த நிலையில் வருகை தந்த பறவைகளில் மூன்று பறவைகள் மன்னாரில் காற்றாலை மின் சாரத்தை கொண்டு செல்லும் கேபிள்களில் சிக்கி விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டுப் பறவைகளான பிளமிங்கோ (Flamingo) போன்றவற்றை நேரில் காண்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர். இந்தப் பறவைகளைப் பாதுகாப்பதற்காக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனவள திணைக்களம் போன்ற அரச நிறுவனங்கள் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் குறித்த விபத்து காரணமாக 2 வெளிநாட்டு பறவைகள் உயிரிழந்துள்ளதுடன்,ஒரு பறவை காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/230806/
  21. படுகொலை செய்யப்பட்ட மூத்த விரிவுரையாளரின் பூதவுடல் யாழ்.பல்கலையில் அஞ்சலிக்காக adminMarch 22, 2026 யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளா் தயாளினி திலீபனின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிகள் நடைபெற்று , அங்கிருந்து பூதவுடல் யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்திற்கு எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் போது , பல்கலைக்கழக துணைவேந்தர் , பேராசிரியர்கள் , விரிவுரையாளர் , மாணவர்கள் கல்வி சாரா ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்கிருந்து பூதவுடல் கோம்பயன் மணல் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. குறித்த மூத்த விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் இணைந்து அவரை கடந்த 18ஆம் திகதி படுகொலை செய்து சடலத்தை தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் வீசிய நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/230812/
  22. 60 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுடன் பயற்சி - வடக்கை சேர்ந்தவர்கள் அதிகம் விண்ணப்பிக்க வேண்டும் adminMarch 22, 2026 பயிற்சி காலத்தில் மாதம் ரூ. 60,000 கொடுப்பனவும் சீருடை கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது அதனால், பொருளாதார சுமை இன்றி மாணவர்கள் எளிதாக பயிற்சியை நிறைவு செய்ய முடிகின்றது. அத்துடன் பயிற்சி முடிந்ததும் உடனடி தொழில் வாய்ப்பு கிடைப்பதால், நிலையான சேவை வாழ்க்கை உறுதி செய்யப்படுகிறது எனவே வடக்கு மாகாணத்தில் உயர்தரப் பரீட்சை எழுதி எதிர்கால தொழில் வாய்ப்பை எதிர்நோக்கும் மாணவர்கள், வரவிருக்கும் தாதியர் உள்ளீர்ப்பில் தயக்கமின்றி விண்ணப்பிக்க வேண்டும் என யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலை தாதிய பயிற்சி கல்லூரியில் தாதியர்களுக்கான பயிற்சி ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். சுகாதார அமைச்சு கடந்த ஆண்டு ஆவணி மாதத்தில் சுமார் 3000 தாதியர்களை உள்ளீர்ப்பதற்கான நேர்முகத் தேர்வுகளை ஆரம்பித்திருந்தது. அதன் விளைவாக, இவ்வாரம் அவர்கள் பயிற்சிக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இலங்கை முழுவதும் உள்ள 16 தாதியர் பயிற்சி கல்லூரிகளில் இப்பயிற்சிகள் ஆரம்பமாகின்றன. வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சி கல்லூரியும் வவுனியா தாதியர் பயிற்சி கல்லூரியும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பயிற்சிகளை வழங்குகின்றன. யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சிக்காக 100 பயிற்சியாளர்கள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பயிற்சியை 2029 ஆம் ஆண்டில் நிறைவு செய்தவுடன், உடனடி நியமனம் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் உறுதியளித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் தற்போது பணிபுரியும் தாதியர்களில் சுமார் 50% பேர் இலங்கையின் பிற மாகாணங்களில் இருந்து வந்தவர்கள். அவர்கள் தங்கள் முதல் நியமனத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றி பின்னர் மாற்றம் பெறுகின்றனர். இதனால், பல வைத்தியசாலைகளில் அனுபவமிக்க (சிரேஷ்ட) தாதியர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. வடக்கில் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் தாதியர் பயிற்சியைத் தேர்வு செய்து தொழிலில் நுழைவது மிகவும் இலகுவானதும் பயனுள்ளதுமான ஒரு வாய்ப்பாகும். பயிற்சி காலத்தில் மாதம் ரூ. 60,000 கொடுப்பனவும் சீருடை கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது. தேவையானவர்களுக்கு இலவச இருப்பிட வசதிகளும் வழங்கப்படுகின்றன. இதனால், பல்கலைக்கழகப் படிப்புகளுடன் ஒப்பிடுகையில், இந்த மூன்று ஆண்டுகளை பொருளாதார சுமை இன்றி மாணவர்கள் எளிதாக நிறைவு செய்ய முடிகின்றது.மேலும், பயிற்சி முடிந்ததும் உடனடி தொழில் வாய்ப்பு கிடைப்பதால், நிலையான சேவை வாழ்க்கை உறுதி செய்யப்படுகிறது. இதேவேளை, பல பல்கலைக்கழகங்கள் BSc Nursing பட்டப்படிப்பையும் வழங்குகின்றன. அவற்றை முடித்தவர்கள் ஆறு மாத உள்ளகப் பயிற்சிக்குப் பிறகு வைத்தியசாலைகளில் பணியமர்த்தப்படுகின்றனர். தாதியர்கள் தங்கள் தொழிலில் ஈடுபட்ட பின்னரும் பல்வேறு கட்டங்களில் மேலதிக பயிற்சிகளைப் பெறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆதார வைத்தியசாலைகள், பொது வைத்தியசாலைகள், போதனா வைத்தியசாலைகள், தேசிய வைத்தியசாலைகள் போன்ற இடங்களில் நிபுண மருத்துவர்கள் பணியாற்றுவதால், விஷேட சேவைக்கு ஏற்ப தாதியர்களுக்கும் விசேட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அவர்கள் திறமைகளை மேலும் மேம்படுத்திக் கொள்ள முடிகிறது. தாதியர் பயிற்சி கல்லூரிகளில் மூன்று ஆண்டுகள் பயின்ற பின் டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படுகிறது. பலர் பின்னர் பணியில் இருக்கும் போது BSc Nursing பட்டப்படிப்பையும் தொடர்ந்து கற்றுக்கொள்கின்றனர். அதன் பின்னர் MSc மற்றும் PhD போன்ற உயர் பட்டப்படிப்புகளையும் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. வளர்ந்த நாடுகளில் தாதியர்கள் பேராசிரியர்களாக உயர்ந்து விளங்குகின்றனர். அதேபோன்று, இலங்கையிலும் இத்தகைய உயர்வுகளை அடையும் வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, தாதியர் தொழில் என்பது சேவை உணர்வுடன் கூடியதோடு, கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான அனைத்து வாய்ப்புகளும் கொண்ட ஒரு சிறந்த துறையாகும். ஒரு குடும்பத்தில் குறைந்தது ஒருவர் தாதியராக இருந்தால், அந்தக் குடும்பத்தினருக்கும் சுற்றத்தாருக்கும் சுகாதார சேவைகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கிறது. அவர்களால் பிறரை சரியான சிகிச்சை சேவைகளுக்கு வழிநடத்தவும் முடிகிறது. பயிற்சி காலங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் உள்ளன. பயிற்சி பெறும் காலத்தில், வைத்தியசாலையின் பல்வேறு பிரிவுகளுக்கு சென்று அனுபவம் பெறுவதன் மூலம், பின்னாளில் எளிதாக கடமையாற்றும் திறனை அவர்கள் வளர்த்துக் கொள்கின்றனர். தற்போது இலங்கையின் அரசாங்க வைத்தியசாலைகளில் சுமார் 42,000 தாதியர்கள் பணியாற்றுகின்றனர். மேலும் 6000 பேர் பயிற்சியில் உள்ளனர். எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தற்போது 725 தாதியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க சுகாதார அமைச்சுக்கும் நிதி அமைச்சுக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பயிற்சிக்காக 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சை எழுதியவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், அடுத்த சில மாதங்களில் 2500 புதிய தாதியர்களை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 2022, 2023, 2024 ஆண்டுகளில் பரீட்சை எழுதியவர்கள் சேர்க்கப்படுவார்கள். தாதியர் பயிற்சிகள் அனைத்தும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதால், இப்பயிற்சியில் சேரும் மாணவர்கள் எதிர்காலத்தில் மும்மொழித் திறன் பெற்றவர்களாக உருவாகின்றனர்.சில தாதியர்கள் மேல்படிப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கும் செல்கின்றனர். இலங்கையில் வழங்கப்படும் தரமான பயிற்சி காரணமாக, வெளிநாடுகளில் தொழில் பெறுவதும் எளிதாக உள்ளது. எனவே, வடக்கு மாகாணத்தில் உயர்தரப் பரீட்சை எழுதி எதிர்கால தொழில் வாய்ப்பை எதிர்நோக்கும் மாணவர்கள், வரவிருக்கும் தாதியர் உள்ளீர்ப்பில் தயக்கமின்றி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2026/230821/
  23. யாழில். விரிவுரையாளர் படுகொலை - தீவிர விசாரணைகளில் தடயவியல் பொலிஸார் சனி, 21 மார்ச் 2026 11:12 AM யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவபீட மூத்த விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அரியாலை பகுதியை சேர்ந்த மருத்துவர் தயாளினி திலீபன் (வயது 54) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மீட்கப்பட்ட பகுதி சாவகச்சேரி நீதிமன்ற ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக காணப்படுவதால், சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதிவான் சடலத்தை பார்வையிட்ட பின், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை எடுத்து செல்ல பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சித்த மருத்துவ பீடத்தின் மூத்த விரிவுரையாளரின் மகன், விரிவுரையாளரான தனது தாயையும், சகோதரியையும் காணவில்லை என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், காணாமல் போன யுவதியும் இளைஞன் ஒருவரும் திருகோணமலை பகுதியில் உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் அவர்களை மீட்டு யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர். யாழ்ப்பாணத்தில் அவர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளில் விரிவுரையாளரின் மகளின் காதலன் என கூறப்படும் இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் விரிவுரையாளரை கொலை செய்து , சடலத்தை தனங்கிளப்பு பகுதியில் உள்ள காட்டுக்குள் வீசியதாக கூறியுள்ளார். அதனடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர். https://jaffnazone.com/news/55737
  24. அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை கவிஞர் வைரமுத்து ஒரு கவிஞர் இல்லை வெறும் பாடலாசிரியர், அவருக்கு ஞானபீட விருது கொடுத்தது தவறு என ஆசான் ஜெயமோகனும், இன்னும் பல படைப்பாளிகளும் முழங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். இவர்களுக்கு எதிராக சில படைப்பாளிகளும், இலக்கியம் என்றால் என்னவென்று தெரிந்த அல்லது தெரியவே தெரியாத கற்றுக்குட்டிகளும் கம்புசுற்றிக் கொண்டிருக்கின்றார்கள்! கவிஞர் வைரமுத்து காம உணர்வுகளை அழகியலோடு, சில நேரங்களில் அதையும் தாண்டி பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார். உதாரணம் ஒன்று: ஜீன்ஸ் படத்தில் வரும் அன்பே அன்பே பாடலில்.. பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி ஆசான் ஜெயமோகனும் தனது படைப்புக்களில் பெண்களை, காம உணர்வுகளை, கலவியை சமரசம் எதுவுமின்றி எழுதி வாசிப்பவர்களை பிரமிக்கவைத்துள்ளார்! ஆசானின் வெண்முரசு காவிய நாவல் தொடர்களைப் பல வருடங்களாகப் படித்து வருகின்றேன் (26 இல் இன்னும் நான்கு நாவல்கள் படிக்க உள்ளன!). படிக்கும்போது குறிப்புக்கள் எடுப்பது வழக்கம். 😀 அவற்றில் காமரசம் ததும்பும் வரிகளை ஒன்றாக்கி AI மூலம் பாடல் ஒன்றை உருவாக்க கடந்த சில நாட்களாக முயற்சித்தேன்😍. தமிழில் லகர, ளகர, ழகர, ந,ன, ண போன்ற இடையினம், மெல்லினங்களில் AI தடுமாறியதால் எதிர்பார்த்த மாதிரி பாடலைக் கொண்டுவருவது இலகுவாக இருக்கவில்லை. ஆனால் பொதுவான தமிழ்ச் சொற்களைக் கொண்டு பாடல் உருவாக்குவது இலகு என்று தெரிந்தது. AI எப்படி வேலை செய்யும் என்பது AI நிபுணர்களுக்கே தெரியாது என்பதால் எப்படியான இசை வாத்தியங்களை அது தேர்வு செய்யும், எப்படிப் பாடல் அமைக்கும் என்பதை அறியமுடியாது. கிடைப்பதில் விருப்பமானதுடன் திருப்தியடையவேண்டியதுதான். அதிகம் பொருத்தமான பாடல்களை உருவாக்க வேண்டும் என்றால் இலவசமான limited model களை விட்டுவிட்டு கட்டணம் செலுத்தி தரமான model களை, AI agent களைப் பாவிக்கலாம் என்று நினைக்கின்றேன். எனக்கு அப்படி எல்லாம் கட்டணம் செலுத்த மனமில்லை! சரி எப்படிப் பாடலை உருவாக்கினேன் என்று கீழே விளங்கப்படுத்துகின்றேன். முதலில் AI tools களைப் பார்ப்போம். பாடல் வரிகளை உருவாக்க பொருத்தமான AI tools: Claude AI (sonnet 4.6 extended) - இலவசம். கட்டணம் செலுத்தி இன்னும் நல்ல tools ஐ பாவிக்கலாம் Gemini AI Pro: இலவசம் ஆனால் ஒரு நாளில் பல தடவைகள் பாவிக்கமுடியாது. கட்டண version உள்ளன. பாடல் உருவாக்க பொருத்தமான AI Tools: Suno AI: பாடல்களை இலகுவாக உருவாக்கலாம். வேறு சில AI tools உள்ளன ஆனால் நேரம் விரயமானதுதான் மிச்சம். படங்களை உருவாக்க: Gemini AI pro, Copilot படங்களில் இருந்து காணொளிகளை உருவாக்க: Grok, Meta AI, Runway போன்றவற்றை 5 செக்கன் காணொளிகளை உருவாக்கப் பாவிக்கலாம். பாடல்வரிகளை உருவாக்குதல்: நான் Claude, Gemini Pro இரண்டையும் பாவித்தாலும் Gemini Pro தான் பிடித்திருந்தது. எனது கேள்விக்குப் பின்னர் வெண்முரசு நாவல்களில் இருந்து எடுத்த குறிப்புக்களை அப்படியே ஒட்டிவிட்டேன்! கொடுத்த Prompt: Suno AI இல் ஒரு பாடல் கீழே உள்ள குறிப்புக்களைக் கொண்டு உருவாக்கவேண்டும். அழகிய இளம்பெண்ணைக் காணும் இளைஞன் ஒருவனின் ததும்பும் காம உணர்வுகளை வெளிப்படுத்தும் நான்கு நிமிடங்கள் வரக்கூடிய பாடலாக உருவாக்க உதவி தேவை. Suno AI இல் உணர்வு பூர்வமாகவும், சரியான தமிழ் உச்சரிப்புடனும் பாடலை உருவாக்க பொருத்தமான பாடல் வரிகளையும், தேவையான tags களையும், பாடலுக்குப் பொருத்தமான Styles களையும் தரமுடியுமா? அவள் இடையிலிருந்து நீலப்பட்டாடை முழுமையாக நழுவிச்சரிய, வெண்பளிங்குயானையின் மத்தக முழையென விரிந்த இடையும் மலர்தார் தொடைகள் நடுவே மான்குளம்பென அல்குலுமாக அவள் நின்றாள். மழைக்கால மலைகள் அருவிகளை அணிந்திருப்பதுபோல நகைகள் மட்டுமே அணிந்திருந்தாள். மூச்சில் முலைகள் மெல்ல ஏறியிறங்கின. முலைக்கண்களின் கருவட்டத்தில் மயிர்ப்புள்ளிகள் சிலிர்த்திருந்தன. விலாவெலும்புகள் வெண்தோலுக்குள் பாலைநில மணலலைகள் போல தெரிந்தன. அவள் விழிகள் அவனை நோக்கி ஒருசொல்லும் இல்லாமல் வெறுமனே விரிந்திருந்தன. நீரைப்பிளந்து எழுந்து கரைநோக்கிச் சென்ற ஒரு செந்நிறப்பேரழகியைக் கண்டான். அவள் உடல் தழலாக இருந்தது. கூந்தல் அதன் புகையென நெளிந்தது. செந்தாமரை இதழிலென நீர்த்துளிகள் ஆடையற்ற அவள் உடலில் ஒளியுடன் உருண்டு வழிந்தன. மலர் சுமந்த பனித்துளிகள் போல முலைகள் ததும்பின. இரையை இறுக்கும் மலைப்பாம்பு போல அசைந்தது இடை. நடையின் அசைவில் இறுகி நெகிழ்ந்தன தொடைத்தசைகள். செம்பொற்தாலத்தில் ஏந்திய அகல்விளக்கின் சுடரென அல்குலின் செந்நிற மென்மயிர். வைரத்தால் செதுக்கப்பட்ட பெண்ணுடல் Gemini AI தந்த பாடல்வரிகள். சில இடங்களில் பொருத்தமான சொற்களை நான் மாற்றினேன்.. கீழே உள்ளது பிந்திய வரைபு.. [Intro] [Seductive Flute with Deep Bass] [Chorus] அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை... நீரைப் பிளந்து எழுந்த செந்நிறப் பேரழகி...! உடல் தழலாக... கூந்தல் புகையென நெளிய... என் உள்ளம் எரிக்கும் காதல் தீ அழகி...! [Verse 1] நீலப் பட்டாடை இடையில் மெல்ல நழுவ... வெண்யானை மத்தகம் என விரிந்தது அவள் இடை...! மலர்தார் தொடைகள் நடுவே மான் குளம்பு சிமிட்டக் கண்டேன்...! என் மூச்சே உறைந்தது ஒரு கணம்..! [Build Up] என் நெஞ்சினிலே... புரவிக் குளம்பு ஓசை! [Pre-Chorus] செந்தாமரை இதழில் பனித் துளிகள் போலே... ஆடை இல்லா மேனியில் நீர்த் தாரை உருள... தழல் உடலோடு அவள் என்னை நோக்க... பனியாகக் கரைந்து போனேன்... அந்த அனலின் சூட்டிலே...! [Chorus] அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை... நீரைப் பிளந்து எழுந்த செந்நிறப் பேரழகி...! உடல் தழலாக... கூந்தல் புகையென நெளிய... என் உள்ளம் எரிக்கும் காதல் தீ அழகி...! [Verse 2] மூச்சில் மார்புகள் மெல்ல மெல்ல ஏறி இறங்க… மலர் சுமந்த பனித்துளிகள் போல அவை ததும்ப…! மலர்முலை கண்களில் மென் மயிர்கள் சிலிர்க்க….! வெண்மேனி விலாவினிலே பாலை மணல் அலை ஆகுதே…! [Verse 3] இரையினை இறுக்கும் பாம்பென நெளிந்தது இடை….! நடையின் அசைவில் இறுகி நெகிழ்ந்தன தொடைத் தசைகள்…! செம்பொன் தட்டில் தவழும் விளக்கின் சுடரென… செந்நிற மென் மயிர் தூவல் என் தேகத்தை அனலாய் சுடுதே….! [Bridge] அவள் விழிகள் என்னை நோக்கி அகல விரிந்தன…! என் ஆண்மை சிறகு விரித்தது…! காம நெருப்பின் கலசமே…! என் தாகம் தீர்க்கும் நதியே…! உன் தீண்டலில் உயிர்த்தெழ ஏங்கித் துடிக்கின்றேனே...! [Chorus] அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை... நீரைப் பிளந்து எழுந்த செந்நிறப் பேரழகி...! உடல் தழலாக... கூந்தல் புகையென நெளிய... என் உள்ளம் எரிக்கும் காதல் தீ அழகி...! [Outro] தழல் உடலே...! ஆஹா...! பனித்துளியே...! ம்ம்ம்...! வைரம் தகிக்கும் கனலே...! என் உயிரே...! உன் விரிந்த விழிகளில்.. நான் வீழ்ந்தேனே...! [Fade out: Sensuous flute and echoing vocals] Styles: Passionate Male Tenor Vocal, Sensual Tamil Cinematic Pop, Seductive Groove, Deep Bass, Traditional Indian Percussion With Modern Synth, Carnatic-Inspired Strings, Tabla Rhythm, Flute Melody, Romantic, Emotional Intense Erotic Vibe, A.R. Rahman Style Fusion, Young Expressive Voice, Accurate Tamil Diction. Pronounce Tamil Words Clearly Without Mistakes, Native Tamil Phonetics. No Accidental Hindi/English Accent In Tamil Lyrics பாடலை உருவாக்குதல்: Suno AI இல் Simple மற்றும் Custom என்று இரு தெரிவுகள் உள்ளன. Custom தெரிவுக்குள் உள்ள Lyrics பெட்டிக்குள் Gemini Pro தந்த பாடல்வரிகளை (tags உடன்) ஒட்டவேண்டும். சரியான தமிழ் உச்சரிப்பு வர நான் சில இடங்களில்: - (hyphen) - syllables ஐ சரியாகப் பிரிக்க , காற்புள்ளி - இடைவெளி விட ! ஆச்சரியக்குறி - நிறுத்த … (ellipses) - நீட்டிப் பாட பாவித்திருந்தேன். இவற்றை பாடல்களின் Suno இணைப்புக்களில் பார்க்கலாம். Styles பெட்டிக்குள் Gemini AI தந்த styles களை அப்படியே ஒட்டவேண்டும். பின்னர் Advanced Options இல்: Style Influence: 100 80 க்கு மேல் கொடுத்தால் கேட்ட style களுக்கு கிட்டவரும் Weirdness: 0 10க்கு கீழ் கொடுத்தால் AI வித்தியாசமாக முயற்சி செய்வதைக் குறைக்கும் எனத் தெரிவு செய்தேன். ஆனால் இவற்றை இப்படியான extreme ஆக தெரிவு செய்வதும் நல்லதல்ல. பாடலுக்கு ஒரு தலைப்பையும் Titles இல் கொடுக்கலாம். இரண்டு பாடல்களை உருவாக்கினேன். அவற்றை தரவிறக்கி Files இல் சேமித்த பின்னர், Copilot AI ஐப் பாவித்து ஒரு பொருத்தமான படத்தை உருவாக்கினேன். படத்திற்கான prompt ஐ ஆசானின் வரிகளை Claude AI இல் கொடுத்துக் கேட்டிருந்தேன்😁 Prompt: Create an image of A Tamil girl, a red enchantress rising from the water. Her body like fire, her hair coiling like smoke, a fiery beauty burning with love. A blue silk saree gently slipping from her waist, revealing her hips like a white elephant’s forehead. Water droplets like dewdrops on red lotus petals, streams of water rolling on her body. Her fiery body gazes at me, and I melt like snow in the heat of that fire. Her reddish black hair floats in the breeze கிடைத்த படத்தை Meta AI, Runaway AI ஐப் பாவித்து 5 செக்கன்கள் வீடியோ உருவாக்கி, அதையே loop ஆக ஓடவிட்டு iMovies இல் காணொளிகளைக் தயாரித்தேன். கீழே உள்ள பாடல்களில் எது உங்களுக்குப் பிடித்துள்ளது என்பதைச் சொல்லுங்கள்😊 ஒன்று 4 நிமிடங்கள் 19 செக்கன்கள் Suno: https://suno.com/s/PsdURePRy1Ahzj8b இரண்டு: 6 நிமிடன்கள் 28 செக்கன்கள் Suno: https://suno.com/s/GohzmvqVFQbeBnvc
  25. ஞானபீடம் சர்ச்சையை முன் வைத்து. மரபின் மைந்தன் முத்தையா திரு சீமானுக்கு திரு.ஜெயமோகன் எழுதிய கடிதத்தில் தனக்கு அவர் தரப்பில் இருந்துவரும் வசை மொழிகளை தடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்திருக்கிறார். அதில் “இலக்கியம் என்றால் விவாதம் வரும் பூசல் வரும் “என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் அவரும் சரி மற்றவர்கள் பலரும் சரி இந்த விவாதத்தை இலக்கியப்பூர்வமாக கொண்டு செலுத்தவில்லை. கவிஞர் வைரமுத்து படைப்பாளரே இல்லை என்பது போன்ற சித்திரத்தை நிறுவ முயலும் போதே விமர்சனம் விவாதம் என்பதெல்லாம் வெறும் அவதூறுகளாகத் திரிந்து விட்டன. கவிஞர் வைரமுத்து பற்றிய என்னுடைய புத்தகம் குறித்து திரு ஜெயமோகன் எழுதிய கட்டுரை இணையத்தில் பரவலாக கிடைக்கின்றது. “முழுக்கமுழுக்க நேர்நிலை நோக்கு கொண்ட கவிஞர் அவர். துயரங்கள் இல்லாதவர். கவிதை பொதுவாக மானுடனின் தவிர்க்கமுடியாத கையறுநிலைகளை நோக்கிச் செல்வது. அங்கே செயலற்று நின்று ஏங்குவது. அந்த அம்சம் வைரமுத்துவிடம் இல்லை. சாதாரணமாக கவிஞர்களில் இருக்கும் தனிமை ஏக்கம், இறந்தகால ஏக்கம் போன்றவையும் இல்லை. நவீன கவிதைகளில் உள்ள இருண்மையும் கைவிடப்பட்ட நிலையும் முற்றிலும் இல்லை. வைரமுத்துவின் கவிதைகள் வெயில் பரந்த தெற்கத்தி நிலம் போல பளீரென்று நான்கு பக்கமும் திறந்து கிடக்கின்றன.” இவை கவிஞர் வைரமுத்து கவிதைகள் பற்றி திரு ஜெயமோகன் எழுதியது. நவீன கவிதையின் போக்குக்கும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை பாணிக்கும் இருக்கிற வித்தியாசத்தை இவரே இவ்வளவு தெளிவாக சொல்லியிருக்கிறார். ஃபிரண்ட்லைன் பேட்டியில் கவிஞர் வைரமுத்துவின் திரைப்பாடல்கள் பல நேரங்களில் inappropriate என்று எழுதுவதும் இலக்கிய விவாதம் என்கிற அளவுகோலுக்குள் வரவே வராத அவதூறு. ஏனென்றால் கவிஞர் வைரமுத்துவின் திரைப்பாடல்கள் பற்றி அந்தக் கட்டுரையில் திரு.ஜெயமோகன் இப்படி எழுதுகிறார்… “வைரமுத்துவின் சிறப்பாக நான் காண்பதை இங்கே முத்தையாவும் சுட்டிக்காட்டுகிறார். அவர் தமிழ் மரபின் சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவர். பாடல் [லிரிக்] என்பது எடுத்தாள்கை கவிதை [அப்ளைட் பொயட்ரி] ஒரு மரபின் சாரமான கவித்துவத்தை முழுக்க வேர்பரப்பி உறிஞ்சி தன் கவித்துவத்துடன் இணைத்து ஒன்றாக்கி இசைக்குள் பொருத்தும் கலை அது. தமிழின் பிற பாடலாசிரியர்கள் செவ்வியல் மரபில் இருந்து பெற்றுக்கொண்டதே அதிகம். நாட்டார் மரபில் இருந்தும் புதுக்கவிதை மரபில் இருந்தும் தமிழ்ச் செவ்வியல் மரபில் இருந்தும் ஒரேசமயம் பெற்றுக் கொண்ட பாடலாசிரியர் என்பதே வைரமுத்துவின் தனித்தன்மை.” தமிழ் கவிதையில் மரபுக் கவிதையை ஆழமாக பயின்று புதுக்கவிதையை தனித்தன்மை கொண்ட வீச்சுகளுடன் வெளிப்படுத்தி திரு ஜெயமோகனே சொல்வது போல நவீன கவிதையின் இருண்மை இல்லாமல் உருவாகும் படைப்புகள் கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள். சமீபத்தில் ஆனந்த விகடன் நேர்காணலில் கவிஞர் வைரமுத்து சொல்லியுள்ள ஒரு கருத்து இங்கு முக்கியமானது. “எதார்த்தத்தை அப்படியே எழுதுவது ஒரு வகை. கலைத்தன்மையோடு வெளிப்படுத்துவது இன்னொரு வகை” என்று சொல்லி இருக்கிறார். இரண்டு பாணிகளுமே படைப்பிலக்கியத்திலும் திரைப்பாட்டிலும் கொண்டாடப்படுபவை. நான் அடிக்கடி சொல்லும் உதாரணம் ஒன்று. ஒரு படத்தில் கதாநாயகி கண்ணீர் வடிக்கிறாள் என்றால் கவியரசர் கண்ணதாசன் ” ஏன் அழுதாய் ஏன் அழுதாய்! என்னுயிரே ஏன் அழுதாய்! நான் அழுது ஓய்ந்ததற்கு நன்றி சொல்லவோ அழுதாய்”என எழுதும்போது கேட்பவருடைய உள்ளங்கள் உருகி விடுகின்றன. வேறொரு படத்தில் அதே சூழலுக்கு கவிஞர் வைரமுத்து எழுதும்போது “கண்ணில் என்ன கார்காலம்? கன்னங்களில் நீர்க்கோலம்” என எழுதுவது கலைத்தன்மை கொண்டது. அவரைப் பிடிக்காதவர்கள் இதை அலங்கார அடுக்கு என்று சொல்லிவிட்டுப் போகலாம். ஒருவர் எவ்வளவு பெரிய படைப்பாளியாகவும் இருக்கலாம். அல்லது திறனாய்வு அறிஞராக இருக்கலாம். ஒரு படைப்பை வாசிக்கும் நேரத்தில் நான் ஒரு வாசகம் என்ற உணர்வுடன் வாசித்தால் திறந்த மனதுடன் அந்தப் படைப்பை பார்க்க முடியும். கவிஞர் வைரமுத்து எழுத்துகள் இவர்கள் முன்னிறுத்தும் வகைமையிலிருந்து வேறானது.இலக்கியச் செழுமை இலக்கணத் துல்லியம் ஆகியவற்றை உணர்ந்த உள்வாங்கிய எழுத்து நடை. இன்றளவும் இந்த வடிவம் தான் இலக்கியத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது. இளைஞர்களை மொழியின்பால் ஈர்ப்பது. இவர்கள் முன்னிறுத்தும் வகையில் இருந்து வேறானது என்பதாலேயே அது இலக்கியம் அல்ல என்று ஆகிவிடாது. இருபதாம் நூற்றாண்டிலும் 21ம் நூற்றாண்டிலும் கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளை ஒரு வாசகன் என்ற முறையில் “காவிய மரபின் குறுநீட்சி” என்று வகைப்படுத்துகிறேன். இந்தச் சூழலில் அவர் படைப்பாளியே அல்லர் என்பது போன்ற அவதூறு யார் செய்தாலும் அது உண்மையின்நோக்கத்தில் இல்லாமல் உள்நோக்கத்தின் அடிப்படையில் வீசப்படும் வசை தான் என்பது உறுதி. இந்த அவதூறுக்கு இலக்கிய விவாதம் இலக்கியப் பூசல் என்றெல்லாம் நாகரீகச் சாயம் பூச முயலாதீர்கள். வல்லமை மிக்க தமிழ் மரபின் பின்புலத்தில் கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள் துலங்கும் தன்மை பற்றி தொடர்ந்து எழுதுகிறேன். https://www.marabinmaindan.com/2026/03/20/ஞானபீடம்-சர்ச்சையை-முன்/?fbclid=IwdGRleAQrPChleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEex_omHbQiM_-FZaNBVoghJXLinLc5AWZHjVeqAR2-mgYGbOTekSx1JabubfE_aem_fm_nj37FkT9wDvQjKSlluQ

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.