Everything posted by suvy
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- எதிர்பாராத காட்சிப்படுத்தல்களுடன் குறுங்காணொளிகள்
எல்லாம் அருமை . ........ சூப்பர் ........! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- தாயைப் போல பிள்ளை
அவனவன் வெளியே சென்று சிரமப்பட்டு களவெடுக்கிறான் ...... இவர் வீட்டுக்குள் இருந்து கொண்டே "நோகாமல் நுங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறார் " . ......... மனிசிதான் பாவம் செத்தும் பிள்ளையை போஷித்துக் கொண்டிருந்திருக்கு ......! 🙂- இனித்திடும் இனிய தமிழே....!
💐💐💐பிரியாத உறவு நம் நட்பு🥰❤🥰 Best Friends For Ever💐💐💐 பாரதப் போர் முடிந்த 19-ஆம் நாள்! அந்தக் கால வழக்கப்படி, போரில் வென்ற மஹாரதர்களுக்கும், மன்னர்களுக்கும் மாலை- மரியாதை செய்யும் விழா ஒன்று நடக்கும். போரில் பங்கேற்ற தேர்கள் வரிசையாக நிறுத்தப்படும். தேரோட்டிகள் கீழே இறங்கி, மண்டியிட்டு நிற்பார்கள். மன்னன் அல்லது மஹாரதர்கள் கீழே இறங்கியதும், தேர்ப்பாகன் மன்னனை வணங்கி, மாலையிட்டு, வெற்றி கோஷம் முழங்குவான். அதன்பிறகு, போரில் வெற்றி தேடித்தந்த தேர்ப்பாகனுக்கு மன்னன் அல்லது மஹாரதர்கள் பொன்னும் பொருளும் சன்மானமும் தந்து கௌரவிப்பார்கள். குருக்ஷேத்திரப் போர் வெற்றிகரமாக முடிந்தபின், வெற்றி கண்ட பாண்டவ சகோதரர்களுக்காக இந்த விழா ஏற்பாடாகி இருந்தது. தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவரது ரதங்களும் வரிசையாக நின்றன. மரியாதை விழாச் சடங்குகள் ஆரம்பமாயின. தர்மனுடைய தேரின் முறை முடிந்தபின், பீமனது சாரதி அவனை வணங்கி வாழ்த்தினான். பரிசாக விலை உயர்ந்த ரத்தினமாலையை பாகனுக்கு அணிவித்து கௌரவித்தான் பீமன். மேலும், பூமியும் பொன்னும் பொருளும் வழங்கினான். வெற்றி கோஷங்கள் வானைப் பிளந்தன. அடுத்தது, அர்ஜுனன் ரதம். சாரதியோ பகவான் ஸ்ரீகிருஷ்ணன். 'யாருக்கும் கிட்டாத மாபெரும் பேறு தனக்குக் கிடைக்கப்போகிறது. பகவான் கிருஷ்ணனே தன்னை வணங்கிப் பாராட்டப் போகிறான்’ என்று எண்ணி, ஒரு கணம் தன்னை மறந்த நிலையில் இறுமாப்போடு, அந்த அற்புத தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் அர்ஜுனன். ஆனால், கண்ணன் தேரைவிட்டு இறங்கவில்லை. அர்ஜுனன் திகைத்தான். 'பெருமையோ சிறுமையோ பாராது, கடமையை நிறைவேற்ற வேண்டும்’ என்று கீதையில் தனக்கு உபதேசித்த கண்ணன், தேர்ப் பாகனுக்குரிய கடமையைச் செய்ய ஏன் தயங்க வேண்டும் என்று நினைத்தான் அர்ஜுனன். அப்போது பகவான் கிருஷ்ணன், அர்ஜுனனின் அறியாமையை எண்ணி நகைத்தார். "அர்ஜுனா! இந்தத் தேர் மட்டும் இந்தச் சடங்குக்கு விதிவிலக்கு. முதலில் நீ இறங்கு!'' என்று கட்டளையிட்டார். கண்ணனின் வார்த்தையை மீறி அறியாத அர்ஜுனன், அக்கணமே தேரில் இருந்து கீழே இறங்கினான். அதேநேரம், 'தன் சகோதரர்களுக்குக் கிடைத்த கௌரவம் தனக்குக் கிடைக்கவில்லையே’ என ஒரு கணம் ஏங்கினான். "கர்மயோகம்’ என்ற பகுதியாகக் கடமையைப் பற்றி அத்தனை தத்துவங்களைச் சொன்ன கண்ணன், ஒரு தேர்ப்பாகனாக பணியாற்றுவதற்குரிய கடமையைச் செய்ய ஏன் தயங்குகிறான்? இதனால் மஹாரதனான எனக்கு ஏற்படும் அவமானத்தை ஏன் அவன் எண்ணிப் பார்க்கவில்லை? நான் கண்ணனை என்னுடைய தேர்ப்பாகனாக ஏற்றுக்கொண்டதால்தானே, எல்லோர் முன்னிலையிலும் எனக்கு இந்தச் சிறுமை ஏற்பட்டுள்ளது?' என்று எண்ணி, மனம் குமுறினான் அர்ஜுனன். அர்ஜுனனின் மனோநிலையைத் தன் ஞானத்தால் அறிந்தார் ஸ்ரீகண்ணன். அடுத்த விநாடியே தேரிலிருந்து கீழே இறங்கினார். அதே விநாடியில், தேர்க் கொடியில் இருந்த ஆஞ்சநேயரும் விலகி மறைந்தார். கண்ணன் தேரைவிட்டு இறங்கிய மறுவிநாடியே அர்ஜுனனின் தேர் குபீரென்று தீப்பிடித்து, அக்னி ஜுவாலையுடன் எரிய ஆரம்பித்தது. எல்லோரும் திகிலோடும் ஆச்சரியத்தோடும் பார்த்தனர். யாருக்கும் எதுவும் புரியவில்லை. ''அர்ஜுனா! இந்த பாரத யுத்தத்தில் உன் எதிரிகள் அனைவரின் தாக்குதல்களும் உன் ரதத்தின் மீதுதான் குறிவைத்து நிகழ்த்தப்பட்டன. அவர்கள் போரில் எய்த அஸ்திரங்கள், ஏவிவிட்ட தீய மந்திரங்கள், அனுப்பிய தீய சக்திகள் அத்தனையையும் தடுத்து நிறுத்தி, யுத்தம் முடியும்வரை இந்தத் தேருக்கு உயிர் கொடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருந்தேன். நான் சாரதியாக அமர்ந்துகொண்டிருந்ததால்தான், இந்தத் தீய சக்திகள் இதுவரை செயலற்றிருந்தன. படைக்கப்பட்ட பொருள்கள் அனைத்துக்கும் ஆரம்பமும் முடிவும் உண்டு. இந்தத் தேரின் முடிவு ஏற்படும் தருணம் வந்ததை உணர்ந்தேன். நான் முதலில் இறங்கினால் இந்தத் தீய சக்திகள் செயல்படத் தொடங்கிவிடும். அந்த விநாடியே தேர் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகும் என்பதையும் அறிந்தேன். இப்போது புரிகிறதா, நான் முதலில் இறங்கியிருந்தால், நீ இந்தத் தீயில் சிக்கியிருப்பாய். இப்போதும் உன்னைக் காப்பாற்றவே இந்தத் தேரை விதிவிலக்காக்கி, உன்னை முதலில் இறங்கச் சொன்னேன்! தேர்ப் பாகனாகப் பணிபுரிந்த நான் உன்னை வணங்கி, வாழ்த்தி, நீ தரும் சன்மானத்தைப் பெறத் தயங்குவதாக நீ நினைத்தாய். என் எல்லாச் செயல்களுக்கும் ஒரு காரணம்- காரியம் உண்டு என்பதைப் பல சந்தர்ப்பங்களில் நீ அறிய வாய்ப்பளித்து இருக்கிறேன். இருந்தாலும், உன்னுடைய சுயகௌரவத்தால் உன் சிந்தனை சற்று நேரம் கலங்கி இருந்தது. அது தவறு. இதோ... உன்னை வணங்க நான் சித்தமாயிருக்கிறேன்'' என்று, நீண்ட விளக்கம் தந்தார் ஸ்ரீகண்ணன். அவர் கூறிய கடைசி வார்த்தைகள் அர்ஜுனன் காதில் விழவில்லை. காரணம் அவர் கால்களில் அர்ஜுனன் வேரற்ற மரம் போல விழுந்துகிடந்தான். வாழ்க்கை எனும் ரதத்தினில், கடவுளை சரணடைந்தால், இறுதி வரை துன்பத்தையும் தடைகளையும் களைந்து, பிறவிப்பிணியினை கடந்தேற, சாரதி போல் நம்மை நடத்தி செல்வார். எனவே அவனை கேள்வியேயில்லாமல் சரணடைவோம். *மனதை கவர்ந்த பதிவு* 👉" சாதத்துடன் *பக்தி* இணையும்போது அது *பிரசாதமாகிவிடும்.!* 👉" பட்டினியுடன் *பக்தி* சேரும்போது அது *விரதமாகிவிடும்.!* 👉"தண்ணீருடன் *பக்தி* சேரும்போது அது *தீர்த்தமாகிவிடும்.!* 👉"பயணத்துடன் *பக்தி* சேரும்போது அது *யாத்திரையாகிவிடும்.!* 👉" இசையுடன் *பக்தி* சேரும்போது அது *கீர்த்தனையாகிவிடும்.!* *👉"பக்தியில்* வீடு திளைக்கும்போது, அது *கோயிலாகிவிடும்.!* 👉" செயல்களுடன் *பக்தி* சேரும்போது, அது *சேவையாகிவிடும்.!* 👉" வேலையுடன் *பக்தி* சேரும்போது, அது *கர்மவினையாகிவிடும்.!* 👉" பிரம்மச்சரியத்தோடு *பக்தி* சேரும் போது அது *துறவறம்* ஆகின்றது.! *👉" இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!* *🙇" ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்.!* *🙏" மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்..!!*- அதிசயக்குதிரை
Chandran Veerasamy · Suivre treoonpdSsh a0e203i:i16u2,16a110tc0H219à498a4681r7329 f6ft5l · இப்படியே போராடிக்கொண்டிருந்தால் ஒருபயனும் ஏற்படாது. இனி கெரில்லா யுத்த முறைகளைக் கையாள வேண்டும் என எண்ணி, யுத்த முறைகளைக் கற்றுக்கொள்வதற்காக மெக்சிகோவுக்கு பயணப்படுகிறார். அங்குதான் 'எனது கால்கள் அநீதிகளை எதிர்க்க எல்லைகளைக் கடந்தும் பயணிக்கும்' என்று சொன்ன மாவீரன் 'சேகுவேரா' வை சந்திக்கிறார். கியூபாவின் பிரச்னையை அறிந்த 'சே', 'நானும் உங்களோடு கியூபா வருகிறேன்' என்று சொல்கிறார். இரண்டு மாபெரும் சக்திகள் இணைந்தது தெரியாமல், அமெரிக்காவும், பாடிஸ்டாவும் கியூபாவில் ஆதிக்க வெறியை அதிகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஃபிடலும், சே-வும் இணைந்து அடர்ந்த வனப்பகுதியான சியாரா மேஸ்த்ரா காடுகளில் இளைஞர்களையும், விவசாயிகளையும் ஒன்றுதிரட்டி கடுமையான போர் பயிற்சிகளை வழங்குகிறார்கள். 1956 -ல் கியூபா புரட்சியாளர்கள் தோற்கடிக்கப் படுகிறார்கள். ஆனால் சே, ஃபிடல் காஸ்ட்ரோ, ஃபிடலின் தம்பி ரவுல் காஸ்ட்ரோ உட்பட 12 வீரர்கள் தப்பித்துச் சென்றனர். கிடைத்த வாய்ப்பில், இன்னும் பல இளைஞர்களைத் திரட்டிக் கெரில்லா யுத்தப் படை வீரர்களாக அவர்களையும் மாற்றினார்கள். 1959-ம் ஆண்டு 9,000 கெரில்லா யுத்த வீரர்கள் ஹவானா வழியாக ஊடுருவி பாடிஸ்டா ராணுவ வீரர்களுடன் யுத்தம் புரிந்தபோது, 'இனியும் இவர்களோடு சண்டையிட்டு நம்மால் தப்பிக்க இயலாது' என நினைத்த பாடிஸ்டா கியூபாவை விட்டு தப்பித்து ஓடுகிறான். இந்த யுத்தத்தின் மூலம் அமெரிக்க காலனி ஆட்சி முறை கியூபாவில் முடிவுக்கு வருகிறது. கியூபாவின் ஆட்சி அதிகாரத்துக்கு வருகிறார் ஃபிடல். கியூபா விடுதலைக்குப் பெரும் பங்காற்றியவர் 'சே' என பின்நாளில் ஃபிடல் அறிவிக்கிறார். இப்போதும் உலக வழக்கத்தில் 'சே'வையும் ஃபிடலையும் இப்படிக் கூறுவார்கள்... 'சிறந்த தலைவன் ஃபிடல் என்றால், ஆகச் சிறந்த தளபதி சே' என்று. இவர் பதவியேற்றதை அமெரிக்காவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் ஃபிடலுக்கும் அமெரிக்காவுக்கும் நேரடி மோதல்கள் நடைபெறத் தொடங்கின. ஆனால் அதையெல்லாம் ஃபிடல் வெற்றிகரமாக முறியடித்தார். இதில் ஏமாற்றத்தை சந்தித்த அமெரிக்கா ஃபிடலை எப்படியாவது தன் பக்கம் இழுத்துக்கொள்ளத் திட்டம் தீட்டியது. ஆனால், அனைத்துத் திட்டங்களுமே தோல்வியாகத்தான் இருந்தது. 'கியூபாவுக்கு சொந்தமான எல்லா வளங்களும் கியூபா மக்களுக்கே சொந்தம். வேறு எந்த ஏகாதிபத்தியத்துக்கும் அது கிடையாது' என அறிவித்தார் ஃபிடல். இதனால் கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. அதனால், கியூபாவில் உற்பத்தியான பொருட்கள் அனைத்தும் கியூபாவிலேயே தேங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நேரத்தில் கியூபாவுக்கு ரஷ்ய அரசு கைகொடுக்கத் தயாரானது. கியூபாவின் பொருட்களை ரஷ்யாவில் இறக்குமதி செய்ய சம்மதித்தது அந்த நாடு. இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற அமெரிக்கா, அமெரிக்காவின் மத்திய உளவுப் பிரிவின் துணையோடு ஃபிடலை கொல்லத் திட்டம் தீட்டியது. ஒரு முறை இருமுறையல்ல 650- க்கும் அதிகமான முறை ஃபிடலைக் கொல்ல முயற்சிகள் செய்தது C.I.A எனப்படும் அமெரிக்காவின் மத்திய உளவுப் பிரிவு. ரசாயனக் குண்டுகள் போடுவது, சுருட்டில் விஷம் தடவிக் கொடுப்பது, துப்பாக்கியால் சுடுவது, மேலாடையில் விஷ வாயுவைத் தேய்த்துக் கொடுப்பது, விஷ மாத்திரைகளைக் கொடுப்பது, விபத்தினை ஏற்படுத்துவது உள்ளிட்டத் திட்டங்களை செயல்படுத்தி 650-க்கும் மேற்பட்ட முறை ஃபிடலைக் கொல்ல முயற்சி செய்தது அமெரிக்கா. ஆனால் அந்த முயற்சிகள் அனைத்திலும் ஃபிடல் தப்பித்துக் கொண்டே இருந்தார். கொலைத் திட்டங்களில் ஒவ்வொரு முறையும் தப்பித்து வருவதால் ஃபிடலைப் பற்றி மக்களிடத்தில் தவறான கருத்துகளையும் பரப்பத் தொடங்கியது அமெரிக்கா. இதனால் அடிக்கடி மக்கள் முன் தோன்றி உரையாற்ற வேண்டிய அவசியம் ஃபிடலுக்கு இருந்தது. எப்படியாவது ஃபிடலைக் கொன்று, கியூபாவில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தீவிரக் கவனத்தைக் காட்டி வந்தது அமெரிக்கா. ஆனால், அவர்கள் செய்த சதிகள் அனைத்தையும் தூள் தூளாக்கினார் ஃபிடல். பிடலின் இந்த வாக்கியம் இப்போது மட்டுமல்ல எப்போதும் மிகப் பிரசித்தி பெற்றது 'படுகொலை முயற்சியில் உயிரோடு இருப்பதற்கான ஒலிம்பிக் போட்டி இருந்தால், கண்டிப்பாக நான்தான் தங்கப் பதக்கம் வெல்வேன்.'........!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நெஞ்சுக்கு முகமே கண்ணாடி ......... இரவிச்சந்திரன் & ஜெயலலிதா ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! தமிழ் பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : நெஞ்சுக்கு முகமே கண்ணாடி நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி நெஞ்சுக்கு முகமே கண்ணாடி நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி ஊரறியாமல் மறைத்த போதும் ஊரறியாமல் மறைத்த போதும் ஓடும் விழிகள் தள்ளாடி நெஞ்சுக்கு உன் நெஞ்சுக்கு முகமே கண்ணாடி நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி பெண் : சபை அறியாமல் நடக்கும் அது தலைமுதல் கால்வரை அளக்கும் சபை அறியாமல் நடக்கும் அது தலைமுதல் கால்வரை அளக்கும் இடை இடையே கொஞ்சம் சிரிக்கும் அது ஏழையின் பசிபோல் இருக்கும் இருக்கும் நெஞ்சுக்கு முகமே கண்ணாடி நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி ஆண் : ஆசையை பலநாள் அடக்கும் அந்த அடக்கத்திலே உடல் இளைக்கும் ஆசையை பலநாள் அடக்கும் அந்த அடக்கத்திலே உடல் இளைக்கும் பெண் : ஆயினும் நெஞ்சத்தை மறைக்கும் அது ஆண்களுக்கு எங்கே இருக்கும் இருக்கும் ஆண் : நெஞ்சுக்கு முகமே கண்ணாடி நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி ஆண் : பெண்ணுக்கு ரகசியம் ஏது தலை பின்னலும் பேசிடும்போது பெண்ணுக்கு ரகசியம் ஏது தலை பின்னலும் பேசிடும்போது பெண் : கண்ணுக்கு திரை கிடையாது அது கலந்த பின் விலகுவதேது …ஏது............! --- நெஞ்சுக்கு முகமே கண்ணாடி ---- இன்று மாவீரர் தினம்!
- களைத்த மனசு களிப்புற ......!
Ans-cyclopedia · ஆசிய XI அணியில், இந்தியாவின் அக்னி நட்சத்திரம் எம்.எஸ்.தோனியும் இலங்கையின் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்த்தனேவும் இணைந்து ஆப்பிரிக்க XI அணிக்கு எதிராக நிகழ்த்திய அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணி இன்றும் கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறது. அது 2007 ஆம் ஆண்டு, ஆப்ரோ-ஆசிய கோப்பையின் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த அந்த போட்டியில், ஆசிய XI அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. அணியின் ஸ்கோர் 72 ஆக இருக்கும்போதே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். யுவராஜ் சிங், சனத் ஜெயசூர்யா, வீரேந்திர சேவாக் என அனைவரும் பெவிலியன் திரும்ப, ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவானது. அப்போதுதான், ஆசிய XI அணியின் கேப்டன் ஜெயவர்த்தனேவுடன், இளம் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தோனி கை கோர்த்தார். தோனியும் ஜெயவர்த்தனேவும் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து, அணியை மீட்டெடுத்ததோடு மட்டுமல்லாமல், ஆப்பிரிக்காவின் வெற்றிக் கனவை சிதைத்தனர். ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இந்த இருவரும் ஒரு அபாரமான இரட்டை சதம் கூட்டாண்மையை அமைத்தனர். இந்த ஜோடி 178 பந்துகளில் 218 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது! இது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆறாவது விக்கெட்டுக்கான அதிகபட்ச ஓடிஐ பார்ட்னர்ஷிப்பாகும் (பின்னர் முறியடிக்கப்பட்டது). ஜெயவர்த்தனே தனது கேப்டன்சி இன்னிங்ஸில் 106 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 107 ரன்கள் எடுத்து மிரட்டினார். அவர் ஆட்டமிழந்த பிறகும், தோனி தன் அதிரடியைத் தொடர்ந்தார். தோனி வெறும் 97 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 5 இமாலய சிக்ஸர்களுடன் 139 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஆட்டம், ஒருநாள் போட்டிகளில் அவரது ஆரம்பகால ஆதிக்கத்தின் வெளிப்பாடாக இருந்தது. இருவரும் சதம் அடித்ததன் விளைவாக, 72/5 என்ற மோசமான நிலையிலிருந்து மீண்ட ஆசிய XI அணி, 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் என்ற பிரம்மாண்டமான இலக்கை எட்டியது. ஆப்பிரிக்க அணி கடுமையாகப் போராடிய போதிலும், 318 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆசிய XI அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக வென்றது. இந்த பார்ட்னர்ஷிப், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த இரண்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஒரு பொதுவான இலக்குக்காக இணைந்து, எப்படி வரலாற்றை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்தது. இந்த கிரிக்கெட் திருவிழா பற்றிய உங்கள் எண்ணங்களை கீழே கமென்ட் செய்யுங்கள்! இந்த இடுகையை உங்களுக்கு பிடித்திருந்தால், மற்ற கிரிக்கெட் ரசிகர்களுடன் பகிருங்கள்♥️" #cricket #tamilcricket #msdhoni #Jayawardene #Sports #SportsRivalry Voir la traduction- இனிமேல் மரணங்கள் இப்படித்தான் இருக்கு மா? படித்ததும் பகிர்ந்ததும்
மணப்பெண் ஓரிடம் மாப்பிள்ளை ஓரிடம் என இப்பொழுது கலியாணமே இப்படி நடக்கும்போது கருமாதி மட்டும் விதிவிலக்கா என்ன, அதுவும் தன் பாட்டுக்கு நடந்துட்டு போகுது . .......போகட்டும் ........!- இனித்திடும் இனிய தமிழே....!
Magudeswaran Govindarajan · Suivre sdSntrooepm07i4fgtu5l85hc0i542919ull402la2clm1l0m0u2u2 16682 · இரு சொற்களுக்கிடையே எல்லா இடங்களிலும் வலிமிகுதல் இல்லை. வலிமிகவேண்டிய இடங்களில் தவறுமாயின் பொருள் வேறுபாடு தோன்றிவிடும். சந்திப் பிழைக்கான தலையாய அறியாமை இந்நுணுக்கம் அறியாமல் இருப்பதுதான். ஒரே சொற்றொடர்தான். அவ்விரு சொற்களுக்கிடையே ஓரிடத்தில் வலிமிகும். ஓரிடத்தில் வலிமிகாது. என்ன காரணம் ? அவ்விரு சொற்களுக்குமிடையே தோன்றும் பொருள் வேறுபாடுதான். அவ்விரு சொற்களும் சொற்றொடராகி அடுத்தடுத்து வருகையில் தாம் உணர்த்த விரும்பும் பொருளுக்கேற்ப வலிமிகுத்தோ மிகாமலோ வரும். சொற்றொடர் அமைப்புகளின் பொருளுணர்ச்சிக்கேற்றவாறு/பொருள் நோக்கத்திற்கேற்றவாறு வலிமிகுவிக்கவேண்டும், அல்லது வலிமிகுவிக்காமல் விடவேண்டும். ஒரே சொற்றொடர் அமைப்புக்குள் பொருள் வேறுபாடுகள் தோன்றும் அமைப்புகளை எடுத்துக்காட்டுகளாக எழுதியுள்ளேன், காண்க :- இரவு முழுவதும் பெய்த மழையினால் சாலைகளில் நீர் தேக்கம். மேட்டூரில் இருப்பது நீர்த்தேக்கம். 00 கற்ற கலை பொருள் செய்யப் பயன்படவில்லை. கலைப்பொருள் செய்து பெரிதாக ஈட்டியவர்கள் பலர். 00 அவர்களுக்கிடையே இருந்த உறவு சிக்கலாகிவிட்டது. உறவுச்சிக்கல் ஏற்படாதபடி வாழப் பார். 00 இந்தப் பேருந்து பயணத்திற்கு உதவாது. பேருந்துப் பயணம் அலுத்துவிட்டது. 00 உழவர்க்கு உழவு தொழிலாகும். உயிர்காப்பது உழவுத்தொழில். 00 நீ எடுத்த காட்சி பிழையானது. என்னுடைய பார்வையில் காட்சிப்பிழை உண்டோ ? 00 அன்பு தளையாகக்கூடாது. அன்புத் தளைக்குள் அகப்பட்டதனால் விடுபட முடியவில்லை. 00 கிளி பேசும். கிளிப்பேச்சு கேட்பதற்கு இனிமை. 00 மழை காலந்தவறிப் பெய்கிறது. மழைக்காலம் வந்துவிட்டது. 00 வளர்ச்சி தடைபடக்கூடாது. வளர்ச்சித்தடை ஏற்படாமல் பார்த்துக்கொள். 00 இரு சொற்களுக்கிடையே தோன்றும் இருவகையான பொருட்பயன்பாடுகள் இவை. இவற்றை நினைவிற்கொண்டால் வலிமிகல், மிகாமை குறித்துத் தெளிவடையலாம். - கவிஞர் மகுடேசுவரன் Voir la traduction- வணக்கம்உறவுகளே
வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துகள் !!!- கல்முனையில் வெள்ள அபாயம்; முகத்துவாரங்கள் அனைத்தும் திறப்பு
இதைத்தான் வருமுன் காப்பது என்று சொல்வது . ........! 👍- எங்க வீட்டில் எல்லாவற்றுக்கும் மழைநீர் தான்.
விரிவான விளக்கமான நல்ல தகவல்கள் ........நன்றி புலவர் .......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! தமிழ் பாடகி : மதுஸ்ரீ இசையமைப்பாளா் : சி.சத்யா பெண் : உன் பேரே தொியாது உன்னை கூப்பிட முடியாது நான் உனக்கோா் போ் வைத்தேன் உனக்கே தொியாது அந்த பேரை அறியாது அட யாரும் இங்கேது அதை ஒருமுறை சொன்னாலே தூக்கம் வாராது அட தினம்தோறும் அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன் நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன் பெண் : ஹோ சூடான பேரும் அதுதான் சொன்னவுடன் உதடுகள் கொதிக்கும் சூாியனை நீயும் நினைத்தால் அது இல்லையே பெண் : ஹோ ஜில்லென்ற பேரும் அதுதான் கேட்டவுடன் நெஞ்சம் குளிரும் நதியென்று நீயும் நினைத்தால் அது இல்லையே பெண் : சிலிா்க்கவைக்கும் தெய்வமில்லை மிரளவைக்கும் மிருகம் இல்லை ஒளிவட்டம் தொிந்தாலும் அது பட்டப்போில்லை என் போின் பின்னால் வரும் போ் நான் சொல்லவா பெண் : பொிதான பேரும் அதுதான் சொல்ல சொல்ல மூச்சே வாங்கும் எத்தனை எழுத்துக்கள் என்றால் விடையில்லையே பெண் : சிறிதான பேரும் அதுதான் சட்டென்று முடிந்தே போகும் எப்படி சொல்வேன் நானும் மொழி இல்லையே பெண் : சொல்லிவிட்டால் உதடு ஒட்டும் எழுதிவிட்டால் தேனும் சொட்டும் அது சுத்த தமிழ் போ் தான் அயல் வாா்த்தை அதில் இல்லை என் போின் பின்னால் வரும் போ் நான் சொல்லவா........! --- உன் பேரே தொியாது ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உள்ளதை சொன்னா பைத்தியம்னு உலகம் சொல்லுது . ......... எம் . ஜி .ஆர் . .........! 😂- சிரிக்க மட்டும் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
சி.வெற்றிவேல் · ஜெர்மன் ராணுவத்தைக் கலங்கடித்த The NIGHT WITCHES இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த நேரம். 1941-ல் ஜெர்மனியின் நாஜிப் படைகள், சோவியத் யூனியனுக்குள் (ரஷ்யா) சூறாவளி போலப் புகுந்தன. கண்ணில் எதிர்ப்பட்ட அனைத்தையும் அழித்தொழித்துவிட்டு முன்னேறினார்கள். ரஷ்ய ராணுவம் திணறியது. அவர்களுக்குப் போதுமான விமானங்கள் இல்லை, விமானிகளும் இல்லை. இந்த இக்கட்டான சூழலில், சோவியத் தலைவர் ஸ்டாலின் ஒரு அதிரடி முடிவை எடுத்தார். வரலாற்றிலேயே முதல் முறையாக, பெண்கள் மட்டுமே கொண்ட விமானப் படைப் பிரிவுகளை உருவாக்க உத்தரவிட்டார். அதில் மிக முக்கியமானது, 588-வது இரவு நேரக் குண்டுவீச்சுப் படைப்பிரிவு (588th Night Bomber Regiment). இதில் விமானிகள், மெக்கானிக்குகள், கமாண்டர்கள் என அனைவரும் 17 முதல் 26 வயதுடைய இளம் பெண்கள் தான்! இந்தப் பெண்கள் படைக்குக் கொடுக்கப்பட்ட விமானங்கள் என்ன தெரியுமா? நவீன போர் விமானங்கள் அல்ல. Polikarpov Po-2 என்ற பழைய மாடல் விமானங்கள். * இது முழுக்க முழுக்க ’மரக்கட்டைகளாலும் (Plywood), துணிகளாலும்’ செய்யப்பட்டது. * இதன் வேகம் மிகக் குறைவு. ஒரு சாதாரணக் காரை விடச் சற்று வேகமாகப் பறக்கும், அவ்வளவுதான். * இதில் பாதுகாப்புக்காக ஒரு கவசமும் (Armor) கிடையாது. எதிரி ஒரு தோட்டா சுட்டால் கூட விமானத்தில் ஓட்டை விழுந்து தீப்பிடித்துவிடும். * மிக முக்கியமாக, இதில் ’ரேடியோவும் கிடையாது, ராடாரும் கிடையாது, ஏன்... அவசரத்துக்குக் குதிக்க பாராசூட் கூடக் கிடையாது! சுருக்கமாகச் சொன்னால், இவை ’பறக்கும் சவப்பெட்டிகள்’. இவற்றைக் கொண்டுதான் உலகின் மிக நவீனமான ஜெர்மன் விமானப் படையை (Luftwaffe) எதிர்க்க வேண்டும். இந்தப் பழைய விமானங்களை வைத்துக்கொண்டு பகலில் பறந்தால், ஜெர்மன் விமானங்கள் இவர்களைக் குருவி சுடுவது போலச் சுட்டுத் தள்ளிவிடும். எனவே, இவர்களின் களம் ’இரவு’ மட்டும்தான். இவர்கள் கையாண்ட போர்முறை சிலிர்க்க வைப்பது: 1. நிசப்தமான வருகை: இரவு நேரத்தில், ஜெர்மன் முகாம்களுக்கு அருகே மிகத் தாழ்வாகப் பறந்து வருவார்கள். 2. இன்ஜின் ஆஃப்: இலக்கை நெருங்கியதும், விமானத்தின் இன்ஜினை 'ஆஃப்' (Idle Mode) செய்துவிடுவார்கள்! 3. மிதக்கும் மரணம்: இன்ஜின் சத்தம் இல்லாமல், காற்றின் வேகத்தில் மட்டுமே அந்த மரக்கட்டை விமானம் சத்தமின்றி மிதந்து வரும். கீழே இருக்கும் ஜெர்மன் வீரர்களுக்குத் தலைக்கு மேலே ஒரு விமானம் வருவது தெரியவே தெரியாது. 4. தாக்குதல்: சரியான இடத்திற்கு வந்ததும், கைகளால் குண்டுகளை எடுத்துக் கீழே வீசுவார்கள். குண்டு வெடித்த பிறகு, மீண்டும் இன்ஜினை ஆன் செய்துவிட்டுப் பறந்துவிடுவார்கள். அந்தக் காரிருளில், இன்ஜினை ஆஃப் செய்துவிட்டு, காற்றைக் கிழித்துக்கொண்டு அந்த விமானங்கள் வரும்போது ஒரு விசித்திரமான சத்தம் (Whooshing sound) கேட்கும். கீழே இருந்த ஜெர்மன் வீரர்களுக்கு இந்தச் சத்தம், சூனியக்காரிகள் தங்கள் துடைப்பத்தில் பறந்து வரும்போது ஏற்படும் சத்தம் போல கேட்டது. பயத்தில் உறைந்த ஜெர்மன் வீரர்கள், இந்தப் பெண்களை ’Nachthexen’ அதாவது ’இரவு நேர சூனியக்காரிகள்’ (Night Witches) என்று அழைத்தார்கள். இந்தப் பெயர் அவர்களுக்கு ஒரு கௌரவப் பெயராகவே மாறிப்போனது. இந்த ’சூனியக்காரிகள்’ ஜெர்மன் ராணுவத்திற்கு ஒரு சிம்மசொப்பனமாக விளங்கினார்கள். * ஒரு இரவில் ஒருவர் குறைந்தது 8 முதல் 18 முறை பறந்து சென்று தாக்குதல் நடத்துவார்கள். * மொத்தமாகப் போரின் முடிவில், இந்தப் பெண்கள் படை 30,000-க்கும் அதிகமான முறை பறந்து, ’23,000 டன்’ குண்டுகளை நாஜிக்கள் மீது வீசியது! * இந்தப் படையிலிருந்த 23 பெண்களுக்கு, சோவியத் யூனியனின் மிக உயரிய விருதான ’சோவியத் யூனியனின் ஹீரோ’ (Hero of the Soviet Union) விருது வழங்கப்பட்டது. போர் என்பது நவீன ஆயுதங்களில் மட்டும் இல்லை; அதை எதிர்கொள்ளும் நெஞ்சுறுதியில்தான் இருக்கிறது என்பதை உலகுக்கு உணர்த்தியவர்கள் The Night Witches. கையில் ரேடியோ இல்லை, பாராசூட் இல்லை, ஓட்டுவது ஒரு மரக்கட்டை விமானம்... ஆனாலும், எதிரிகளின் இதயத்தில் மரண பயத்தை விதைத்த அந்த 'இரவு நேர சூனியக்காரிகள்' வரலாற்றின் மிகச்சிறந்த வீராங்கனைகள்! 'துணிச்சல் என்பது பயம் இல்லாமல் இருப்பது அல்ல; பயத்தையும் மீறிச் செயல்படுவதுதான்!' 🔥" #NightWitches #WWII #History #BraveWomen #SovietUnion #AviationHistory #TamilPost #Facts #UntoldWarStories #WomenInWar Voir la traduction- களைத்த மனசு களிப்புற ......!
cric Universe · Lionel Messi visited India to attend the wedding of Smriti Mandhana and enjoying with Virat Kohli and Cristiano Ronaldo #smritimandhanawedding #smritimandhana #cristianoronaldo #rcb #viratkohli #wedding #lionelmessi #love #football #cricket #viral- அதிசயக்குதிரை
- சிரிக்கலாம் வாங்க
- களைத்த மனசு களிப்புற ......!
Arun Kumar G · "நான் கேப்டன் ஆன பிறகு ஜெயிக்கற டீமை உருவாக்க நெனச்சேன். கிழக்கு , மேற்கு , வடக்கு, தெற்கு எந்த zoneஆ இருந்தாலும் அவனுக்கு experience குறைவா இருந்தாலும் flightல கொண்டு வந்து இறக்குங்க பாத்துக்கலாம் Skill இருந்தா போதும்னு சொன்னேன். Zaheer khan, Yuvi , Harbajan எல்லாரையும் டீம்ல சேர்த்தேன். Shewag லேட்டா வந்து இணைஞ்சார். அவரை Testல ஓபன் பண்ணவைக்கலாம்னு நெனச்சேன். 'நான் fail ஆகீட்டா என்ன பண்றது'ன்னு கேட்டார் அவர். நீ எத்தனை தடவை fail ஆனாலும் உன்னை நான் back பண்ணுவேன்னு சொன்னேன். Shewag ரொம்ப நல்லா set ஆனார் அந்த slotக்கு. இருந்தாலும் பேட்டிகள்ல 'எனக்கு Middle orderதான் comfortable னு சொல்லீட்டிருந்தார். நான் அதை கண்டுக்கல. ஒரு கேப்டனா ஆட்டத்தை மாத்தற capacity இருக்கற அதிரடி வீரர்களை எப்பவும் நான் எதிர்பாத்துட்டிருப்பேன். அப்படித்தான் 2004ல தோணிய பத்தி கேள்விப்பட்டேன். Challenger Trophy போட்டீல அவரை Opening இறக்கனேன். Netsல அடி பிரிச்சார். Wankadeல ஒரு போட்டீல 100 அடிச்சதும் இல்லாம Nehra ஓவர் பெரிய Six அடிச்சதை மறக்கமாட்டேன். Sachin, Shewag, நான்- 3 பேரும் இருந்தாலும் இன்னொரு Power hitterஆ தோணியை எதிர்பாத்தோம். அவர் ஒரு match winnerஆ இருப்பார்னு நம்பினோம். அவரை 2003 World cupல include பண்ண நெனச்சேன். ஆனா அந்த சமயத்துல அவர் Indian Railwaysல டிக்கெட் கலெக்டரா இருந்தார்னு கேள்விப்பட்டு ஆச்சர்யப்பட்டேன். ஆனா என் கணிப்பு தப்பாகல, தோணி பெரியாளா வந்தார். " GANGULY'S TEAM BUILT. 👏" (Excerpts from his Autobiography 'A Century Is Not Enough' ) Voir la traduction- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
இது விதியின் உருட்டு ........! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வா வாத்யாரே ஊட்டாண்டே .......... சோ & மனோரமா ........! 😍 - எதிர்பாராத காட்சிப்படுத்தல்களுடன் குறுங்காணொளிகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.