Everything posted by suvy
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! பெண் : மேகம் கருக்குது குழு : தக்குசிக்கு தக்குஜின் பெண் : மின்னல் சிாிக்குது குழு : தக்குசிக்கு தக்குஜின் பெண் : சாரல் அடிக்குது குழு : தக்குசிக்கு தக்குஜின் பெண் : இதயம் பறக்குது குழு : தக்குசிக்கு தக்குஜின் பெண் : மேகம் கருக்குது மின்னல் சிாிக்குது சாரல் அடிக்கிறதே என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள் நதியாய் போகிறதே பெண் : நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும் வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும் பெண் : மழையே துளி போடு என் மாா்பே உன் வீடு பெண் : நிலாவே வா வா வா நில்லாமல் வா வா வா என்னோடு குளிப்பது சுகம் அல்லவா உன் கரையை சலவை செய்து விடவா பெண் : புறாவே வா வா வா பூவோடு வா வா வா உன்னோட குளிருக்கு இடம் தர வா என் கூந்தலில் கூடு செய்து தர வா பெண் : காற்றை போல் எனக்கு கூட சிறகொன்றும் கிடையாது தடைமீறி செல்லும் போது சிறை செய்ய முடியாது பெண் : இளமையின் சின்னம் இளம்பட்டு வண்ணம் இன்னும் இன்னும் வளா்த்துக்கொள்வேன் இருபத்தி ஒன்னு வயதுக்கு மேலே காலத்தை நிறுத்தி வைப்பேன் ஹோய் பெண் : நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும் வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும் பெண் : கனாவே வா வா வா கண்ணோடு வா வா வா விண்வெளியை அளந்திட சிறகு கொடு விண்மீனில் எனக்கு படுக்கை போடு பெண் : மைனாவே வா வா வா மையோடு வா வா வா என் கண்கள் அழகின் ஒளி பரப்பு என் அழகை பறந்து பறந்து பரப்பு பெண் : பூமிக்கு ஒற்றை நிலவு போதாது போதாது அதனால் தான் இரண்டாம் நிலவாய் நான் வந்தேன் இப்போது பெண் : பூக்களில் தூங்கும் பனிதுளி அள்ளி காலையில் குளித்துக்கொள்வேன் விடிகிற போது விடிகிறபோது வெளிச்சத்தை உடுத்திக்கொள்வேன் ஹோய் ........! --- மேகம் கருக்குது ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பொன்னை விரும்பும் பூமியிலே .........! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
- ஆண்குறிகள் அழுக்கானவை - நீலாவணை இந்திரா
"ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லையடி கண்ணே " என்னும் கோணத்தில் கதை போயிருக்கு ........ F பாதரின் குறிதான் அழுக்காய் இருந்திருக்கு ........!- நடனங்கள்.
😍 ரசித்து பார்த்த Prabhu Deva 👏">என்னமா ஆடுறாங்கப்பா 😍 ரசித்து பார்த்த Prabhu Deva 👏.......! 😂- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
askar Jayraman Mookkammal est à Bhavani Homeo Pharmacy. · Suivre troSeospndi0: jm9a8i30g19u95mg20g,52716n5a0l9508g1hur 4e5vff · வீடு_வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான். அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை. “கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?” தயக்கத்துடன் கேட்கிறான். அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு கப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள். பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்… “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?” “கடனா… அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள். “ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான். ஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான்.அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது. அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான். அன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள். அந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது. “இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்!” அவளுக்கு கண்கள் பனித்தன. அந்த சிறுவன் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான். நான் என்னன்னெவோ சொல்ல நினைச்சேன் முடிவுல. ஆனா கீழே பாருங்க அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரியில சொல்லிட்டார். அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226) பொருள் : வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அது தான் செல்வம்.......!- அதிசயக்குதிரை
(INTERESTING STORIES) படித்ததில் பிடித்தது · Balaji Srinivasan ·rspdoonetS 27405i9125a46famuih256i9164ahc0ac1ff786mi1a7g9502 · 1960-ல வாஷிங்டன்ல இருக்குற அந்த மருந்து கட்டுப்பாட்டு ஆபீஸ்க்குள்ள ஒரு சிங்க பெண்மணி கால எடுத்து வைக்குறாங்க, அவங்க பேருதான் டாக்டர் பிரான்சிஸ் கெல்சி. வேலைக்குச் சேர்ந்து முதல் நாளே அவங்க டேபிள்ல ஒரு ஃபைல் வந்து விழுது, அந்த ஃபைல்ல இருந்தது 'தாலிடோமைடு' அப்படிங்கிற ஒரு மருந்து. அவரோட கையெழுத்து அந்த ஃபைலக்கு தேவை அந்த நேரத்துல ஐரோப்பா முழுக்க அந்த மாத்திரை ஒரு 'மேஜிக் மருந்து' மாதிரி பேசப்பட்டுச்சு, குறிப்பா கர்ப்பமா இருக்குற பொம்பளைங்களுக்கு வர்ற அந்த வாந்தி, மயக்கம், அப்புறம் தூக்கம் வராம தவிக்கிற கஷ்டத்துக்கு இதுதான் பெஸ்ட்னு எல்லாரும் அடிச்சுக்கிறாங்க. அந்த மருந்து கம்பெனிக்காரங்க "ஏற்கனவே ஊர் முழுக்க வித்துக்கிட்டு இருக்கோம், கிறிஸ்துமஸ் குள்ள அமெரிக்காவுல கல்லா கட்டணும், சீக்கிரம் கையெழுத்தப் போடுங்கம்மா"ன்னு அவசரப்படுத்துறாங்க. ஆனா அந்த அம்மா சாதாரண ஆள் இல்ல, அவங்க கண்ணு அந்த ஃபைல்ல இருக்குற ஓட்டையக் கண்டுபிடிச்சிருச்சு. "எல்லாரும் விக்கிறாங்க சரி, ஆனா இந்த மருந்தால வயித்துல இருக்குற அந்தப் பச்சை மண்ணுக்கு என்ன ஆகும்னு நீங்க சரியா சொல்லலையே?"ன்னு கேட்டு அந்த ஃபைலை தூக்கி எறிஞ்சாங்க. அவ்வளவுதான், அந்த மருந்து கம்பெனிக்காரங்களுக்கு உச்சந்தலையில கோவம் ஏறிடுச்சு, "எங்ககிட்டயே வேலையைக் காட்டுறியா?"ன்னு இறங்குறாங்க. அவங்க மேலதிகாரிகளுக்குப் போன் போடுறது, அந்த அம்மாவை "உனக்கு ஒண்ணும் தெரியாது, நீ ஒரு லூசு, நீ ஏதோ பவர்ல இருக்கோம்னு ஆட்டம் போடுற"ன்னு அசிங்கப்படுத்துறதுன்னு இறங்குனாங்க. இன்னைக்கு இருந்தா கூட ஒரு பொண்ணு ஒரு பெரிய கம்பெனியை எதிர்த்து நிக்கிறது எவ்வளவு கஷ்டம்னு யோசிச்சுப் பாருங்க, அன்னைக்கு 1960-ல அந்த சிங்க பெண்மணி சுத்தி இருந்ததெல்லாம் ஆம்பளைங்க அதிகாரம், அவங்க கொடுத்த டார்ச்சர்ல அந்த அம்மா நினைச்சிருந்தா "போனா போகுது, எல்லாரும் கையெழுத்து போடுறாங்க நாமளும் போட்டுருவோம்"னு ஒதுங்கியிருக்கலாம். ஆனா அந்த அம்மாவுக்குத் தன்னோட படிப்பு மேலயும், அந்த நேர்மை மேலயும் இருந்த நம்பிக்கை பெருசு. "நீ என்ன வேணா பண்ணு, எனக்குச் சரியான பதில் கிடைக்கிற வரைக்கும் பேனா முனையைக் கூட அசைக்க மாட்டேன்"னு ஒத்தக் கால்ல நின்னாங்க. கிட்டத்தட்ட ஒரு வருஷம் அந்த கம்பெனியோட மிரட்டலைத் தாங்கிக்கிட்டு அந்த ஃபைலை லாக் பண்ணி வச்சாங்க. 1961-ல ஜெர்மனியில இருந்து வந்த அந்த நியூஸ் உலகத்தையே நடுங்க வச்சிருச்சு. அந்த மருந்தைச் சாப்பிட்ட தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகள் எல்லாம் கை, கால் இல்லாம, வெறும் முட்டி மட்டுமோ இல்ல சின்னதா மீன் துடுப்பு மாதிரி வளர்ந்த உறுப்புகளோட பிறக்க ஆரம்பிச்சது. பத்தாயிரம் குடும்பம் உருக்குலைஞ்சு போச்சு, பாதி குழந்தைங்க பிறந்த சில நாளுலயே செத்துப் போச்சு. அந்த நேரத்துலதான் அமெரிக்காவுக்கு உறைச்சது, அந்தப் பெண் சிங்கம் மட்டும் அன்னைக்கு மிரட்டலுக்குப் பயந்து கையெழுத்துப் போட்டிருந்தா, இன்னைக்கு அமெரிக்காவுல எத்தனையோ குடும்பம் கண்ணீர்ல மிதந்திருக்கும். அன்னைக்கு அவங்க தடுத்தது ஒரு பேப்பர் இல்ல, ஒரு தலைமுறையோட அழிவை. இதைக் கேள்விப்பட்ட உடனே அதிபர் கென்னடி அந்த பெண்மணி கூப்பிட்டு மெடல் கொடுத்து கௌரவிச்சாரு. பிரான்சிஸ் கெல்சி 90 வயது வரை அதே துறையில் பணியாற்றி, லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றினார், இது நமக்கெல்லாம் ஒரு பெரிய பாடம், அதாவது ஊரே ஒரு பக்கம் போனாலும், நாம் செய்வது சரி என்று நமக்குத் தெரிந்தால், அந்த நேர்மைக்காகப் போராடத் தயங்கக்கூடாது. இன்று அமெரிக்காவில் ஆரோக்கியமாக விளையாடிக்கொண்டிருக்கும் எத்தனையோ தலைமுறையினர், தங்களுக்குத் தெரியாமலேயே அந்தப் போராட்ட குணமிக்கப் பெண்ணுக்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள், நிஜமான வீரம் என்பது சண்டை போடுவது மட்டுமல்ல, தர்மத்திற்காகத் தனித்து நின்று 'வேண்டாம்' என்று சொல்லும் அந்தத் துணிச்சல்தான் என்பதை அவர் நிரூபித்துவிட்டார். இவ்வளவு பெரிய அநியாயத்துக்கு அப்புறம்தான், உலகத்துல ஒரு மருந்து மார்க்கெட்டுக்கு வரணும்னா அது எவ்ளோ கடுமையான டெஸ்ட்டுகளைத் தாண்டணும்ங்கிற அந்த 'எஃப்.டி.ஏ' (FDA) சட்டமே இன்னும் ஸ்ட்ராங் ஆச்சு. ஒரு தனி மனுஷியோட பிடிவாதம், இன்னைக்கு நாம சாப்பிடுற ஒவ்வொரு மாத்திரையோட பாதுகாப்புக்கும் அஸ்திவாரமா இருக்கு. அந்த அம்மா 101 வயசு வரைக்கும் வாழ்ந்துட்டு 2015-ல தான் இயற்கை எய்தினாங்க, நிஜமாவே அவங்க ஒரு நடமாடும் தெய்வம் தான். வணக்கம் பாலாஜி ஸ்ரீனிவாசன்.....!- குளியலறையில் வழுக்கி விழுந்த நபரின் தொண்டைக்குள் சிக்கிய பல் துலக்கும் பிரஷின் முன் பகுதி - என்ன ஆனார்?
நல்ல காலம் பல்துலக்கும் பொருள் ஒன்று தொண்டையை அறுக்கும் வாளாக மாற இருந்தது ........! 😚- குட்டிக் கதைகள்.
sonretodSp2753197 mai5tgm0m6tht76g49hcfm5191al559fm6t5hhm249 · அன்பான மனைவி ! அழகான துணைவி அமைந்தாலே பேரின்பம்! மனைவி - பாத்திரம் கழுவ சொன்னனே? கழுவி விட்டீர்களா! கணவன் - இல்ல.. அதுக்குள்ள தான், குழம்பு பொரியலுக்கு காய கட் பண்ண சொன்னியே? மனைவி - சரி காய் வெட்டி விட்டீர்களா? கணவன் - அதுக்குள்ளதான் வெங்காயம் பூண்டு உறிச்சி கட் பண்ண சொன்னியே ! மனைவி - சரி வெங்காயம் பூண்டு கட் பண்ணியாச்சா? கணவன் - அதற்கு முன்னாடி அரிசி கொஞ்ச நேரம் ஊறனும். முதல்ல அதை ஊற வைக்க சொன்னியே. மனைவி - சரி அரிசியாவது ஊற வைத்தாயா ! கணவன் - நீதான் அதுக்குள்ள பாப்பாக்கு நாளைக்கு போட்டு போகற யூனிபார்ம வாஸிங் மிஷின்ல போடனும்னு சொன்னியே! மனைவி - சரி அதையாவது செஞ்சிங்களா? கணவன் - டைம் ஆச்சி அவ இன்னும் எழுந்து இருக்க வில்லை ! நீ தான் பாப்பாவை எழுப்பி பாத்ரூம் போக சொன்ன சொன்னாயே! மனைவி - சரி பாப்பவையாவது எழுப்பி விட்டீர்களா ! கணவன் - இ..ல்..ல.. மனைவி - சரி வேற என்னதா பண்ணிட்டு இருக்கிங்க. கணவன் - காலையில் எழுந்த முதல் ஒரு வாய் காப்பி குடிக்க வில்லை அதான் எனக்கு டீ போட்டுட்டு இருக்கேன். மனைவி - ( கோபத்தில் ) உங்களை கட்டிகிட்டு நான் படும் கஷ்டம் இருக்கே!- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ........! இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : நான் சீனியில் செய்த கடல் நான் சீனியில் செய்த கடல் வெள்ளை தங்கத்தில் செய்த உடல் வெள்ளை தங்கத்தில் செய்த உடல் பெண் : உன் காதலி நானே காதல் தானே ஆனதே பெண் : { நான் முத்தம் தின்பவள் ஒரு முரட்டு பூ இவள் நான் தினமும் தோற்பவள் அந்த ஆடை சண்டையில் } (2) பெண் : இனி குறையட்டும் திருவிளக்கு நீ இடம் சுட்டி பொருள் விளக்கு அட கடவுளை அடையும் வழியில் என் பேர் எழுதிருக்கு பெண் : மையா மையா நிலாவை வண்ணம் பூசி வைத்துக்கொள் மையா மையா என் உடலினில் ஒளி விட்ட மலர்களும் பொய்யா பொய்யா பெண் : நான் புன்னகை செய்தால் போதும் அட திசைகள் உடைந்திட கூடும் என் நற்பமே என் கீரீடமே பல அம்புகள் செலுத்திடும் பெண்மகள் நான் பெண் : என்னை பார்த்ததுமே என் கண்ணாடி என்னை காதலிக்கும் பல பெண்களை திருடும் பல ஆண்களை வெல்ல ஆறடி ஆயுதம் ஆனேனே பெண் : மென் காற்றில் என் மூச்சில் சில யுகமாய் வீசும் பெண் : இனி நாளும் என் குரலில் பல கூ கூக்கள் கூவும் பெண் : கமா கமா இது போதுமா…என் பார்வை ஒளியை காலங்கள் தேடும்..........! --- நான் முத்தம் தின்பவள் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உறவுகள் தொடர்கதை ........! 😘- எதிர்பாராத காட்சிப்படுத்தல்களுடன் குறுங்காணொளிகள்
காணொளிகள் ஒவ்வொன்றும் அருமை . ...... நன்றாக இருக்கின்றன .........! 😀 நன்றி ஏராளன் ...........!- 4 மணி நேர வீர நீச்சல் : தாய், சகோதரன், சகோதரியை உயிருடன் மீட்ட 13 வயது சிறுவன்
சிறுவனுக்கு பாராட்டுக்கள் + வாழ்த்துகள் ........! 👍 ஒரு தொழில் முறை நீச்சல் வீரர் கூட இது போன்ற சமயத்தில் மன உறுதியுடன் செயல்பட்டிருப்பாரா என்பது சந்தேகம் . .....!- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கிருபன் வெற்றி பெற வாழ்த்துகள் ........! 😀- களைத்த மனசு களிப்புற ......!
பகிடியான சிகப்பு அட்டை தருணங்கள் .......! 😂- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பயிற்சியில் மட்டும்தான் கனடா தோற்கும் . ....... பரீட்சையில் ஆட்டமே வேற லெவல் .......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளா் : எ. ஆா். ரஹ்மான் பெண் : பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை புல்விாியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை பட்சிகளின் கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங் சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப் பெண்ணே பூமி ஒரு வீணை அதைக் காற்றின் கைகள் மீட்டுதே கேட்கும் ஒலியெல்லாம் அட சாிகமபதனிசாி பெண் : கண்தூங்கும் நேரத்தில் மௌனத்தின் ஜாமத்தில் கடிகாரச் சத்தம் சங்கீதம் கண்கானா தூரத்தில் சுதிசேரும் தாளத்தில் ரயில் போகும் ஓசை சங்கீதம் பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை சந்தோஷ சங்கீதம் தாலாட்டும் அன்னைக்கெல்லாம் தங்கள் பிள்ளை மாா்பை முட்டி பாலுண்ணும் சத்தம் சங்கீதம் பெண் : சிட்சிட்டுக் குருவிகளும் சில்லென்று நீராடி சிறகுலா்த்தும் ஓசை சங்கீதம் கரைகொண்ட பாறைமேல் கடல் கொண்ட அலைவந்து கைதட்டும் ஓசை சங்கீதம் காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை சிருங்கார சங்கீதம் முத்தாடும் நீாின் மேலே தத்தித் தத்தித் தாவிச் செல்லும் தவளைகள் ஓசை சங்கீதம் .......! --- பூப்பூக்கும் ஓசை ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மண்ணை நம்பி மரம் இருக்கு ........! 😍- குட்டிக் கதைகள்.
pdSonetsoruaiuhm1:m05uf38156t26i00u4e8nt7235 t 4a9,v72frh9ij · சிரிச்சு... வயிறு வலிச்சா நான் பொறுப்பல்ல... சொர்க்கத்துக்கு வருவோரின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது. கடவுள் உடனே ஒரு தேவதையை அழைத்து, "நீ என்ன பண்ணுவியோ தெரியாது. ஆனா இனிமே சொர்க்கத்துக்கு வரவங்க கூட்டம் பாதியாகணும்". என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். தேவதையும் உட்கார்ந்து யோசித்தது. அதற்கு ஒரு அருமையான யோசனை வந்தது. அதாவது, சொர்க்கத்துக்குள் நுழைய நினைப்போரிடம் அவர்கள் எப்படி இறந்து போனார்கள் என்று கேட்க வேண்டும். யாருடைய இறந்த விதம் வித்தியாசமாக இருக்கின்றதோ, அவர்களை மட்டும் சொர்க்கத்திற்குள் அனுமதிக்க வேண்டும். தேவதைக்கு இந்த யோசனை மிகவும் பிடித்துப் போக , உடனேயே அதை செயல்படுத்த முடிவெடுத்தது. அப்போது இறந்து போன ஒருத்தன் உள்ளே நுழையும் போது, அவனிடம் சொர்க்கத்தின் புதிய விதியை தேவதை கூற, அவனும் அவன் இறந்த கதையை கூற ஆரம்பித்தான். "எனக்கு கல்யாணம் ஆகி 5 வருசம் ஆகுவது. குழந்தைங்க இல்ல. என் பொண்டாட்டி எனக்கு துரோகம் பண்றானு எனக்கு ஒரு நாள் தோணிச்சு. நான் ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்கேன். என்னோட வீடு 5 ஆவது மாடில இருக்கு. ஒரு நாள் வேலைக்கு போறதா பொய் சொல்லிட்டு, பாதியிலேயே வீட்டுக்கு வந்துட்டேன். என் பொண்டாட்டி என்னைய எதிர்பாக்கல. என்னைப் பாத்ததும், 'ஏதாச்சும் மறந்து விட்டிட்டு போய்ட்டிங்களா?' ன்னு கேட்டா. நான் அவளுக்கு பதில் சொல்லாம வீடு பூரா தேடிப் பாத்தேன். ஆனா ஒருத்தனையும் காணோம். கடைசியா பால்கனிய (BALCONY) போய் பாத்தேன். நான் தேடி வந்த பன்னாடை அங்க பால்கனி க்ரில்ல புடிச்சி தொங்கிகிட்டு இருந்தான். எனக்கு ரொம்பக் கோபம் வந்துச்சி. அவன் வெரல்ல ஓங்கி ஓங்கி மிதிச்சேன். வலி தாங்காம அவன் பிடிய விட்டுட்டு கீழ விழுந்துட்டான். நான் கீழ எட்டி பாத்தேன். அந்த நாய் சாவாம ஒரு புதர் மேல விழுந்து கெடந்தான். நான் உடனே கிச்சனுக்குள்ள போய், பிரிட்ஜை இழுத்துகிட்டு வந்து, பால்கனி மேல கஷ்டப்பட்டு தூக்கி வச்சு, அந்த பிரிட்ஜை கீழ விழுந்து கெடந்த அவன் மேல போட்டு, அவன நசுக்கி கொன்னுட்டேன். இதெல்லாம் செஞ்ச பின்னாடி எனக்கு சந்தோஷத்துல நெஞ்சு வலி வந்து, அங்கேயே விழுந்து செத்துட்டேன்." அவன் கதையை கூறி முடித்ததும், தேவதை புன் சிரிப்புடன், "நீ உள்ளே போகலாம்". என்றது. அவன் போன சற்று நேரம் கழித்து, இன்னொருவன் வந்தான். அவனிடமும் தேவதை புது விதியை பற்றி கூற, அவன் அவனுடைய கதையை கூற ஆரம்பித்தான். "நான் ஒரு அபார்ட்மெண்ட்ல 6 ஆவது மாடில குடியிருக்கேன். நான் எப்பவும் ப்ரீயா இருந்தா பால்கனில யோகா பண்றது வழக்கம். அன்னைக்கு அப்படித்தான் தலைகீழ நின்னுக்கிட்டிருந்தேன். திடீர்னு பேலன்ஸ் மிஸ் ஆகி கீழ விழுந்துட்டேன். நல்ல வேளையா 5 ஆவது வீட்டு பால்கனி கிரில் கம்பிய பிடிச்சுக்கிட்டேன். அந்த வீட்டுல ஒரு புருஷனும் அவனோட பொண்டாட்டியும் மட்டும் இருக்காங்க. திடீர்ன்னு வெளிய வந்த அந்தம்மாவோட புருஷன், பால்கனில தொங்கிகிட்டு இருந்த என் கைய மிதிக்க ஆரம்பிச்சான். நான் வலி தாங்காம கீழ விழுந்துட்டேன். நல்ல வேளையா நான் விழுந்த எடத்துல ஒரு புதர் இருந்ததால நான் சாகல. ஆனா என்னோட முதுகு ஒடஞ்சி போச்சி. அந்தம்மாவோட புருஷனுக்கு என் மேல அப்படி என்னதான் கோபம்னு எனக்குத் தெரியல. கொஞ்ச நேரத்துல மேல இருந்து ஒரு பிரிட்ஜ்யை என் மேல தள்ளி வுட்டு என்ன கொன்னுட்டான்". அவன் பேசி முடித்ததும், தேவதைக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. கஷ்டபட்டு அடக்கிக் கொண்டு அவனை உள்ளே போக அனுமதியளித்தது. மூன்றாவதாக ஒருத்தன் வந்தான். அவனிடமும் தேவதை புது விதியை பற்றி கூறியது. அவனும் அவன் இறந்த கதையை கூற ஆரம்பித்தான். "எனக்கும் பக்கத்து தெருவுல ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்குற ஒருத்தனோட பொண்டாட்டிக்கும் இடையில 2 வருஷமா கள்ள தொடர்பு இருந்துச்சி. அவ புருஷன் வேலைக்கு போனதும், அவ எனக்கு போன் பண்ணுவா. ஒடனே நானும் அவ வீட்டுக்கு போய்டுவேன். அன்னைக்கும் அப்படித்தான் அவ எனக்கு போன் பண்ணுனா. நானும் உடனே கெளம்பி அவ வீட்டுக்கு போனேன். ஆனா கொஞ்ச நேரத்திலேயே அவ புருஷன் வந்து கதவ தட்ட ஆரம்பிச்சான். அவ உடனே என்ன பிரிட்ஜ்க்குள்ள வச்சு பூட்டிட்டு கதவ தெறக்க போனா. நான் பிரிட்ஜ்க்குள்ளேயே பயந்து போய் உக்காந்திருந்தேன். அப்புறம் என்னாச்சுன்னா...?- சிரிக்கவும் சிந்திக்கவும் .
பார்க்க மனசு தவிக்குது . ......! 😉- இனித்திடும் இனிய தமிழே....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ......! இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் பெண் குழு : சல சல சல சோலை கிளியே சோலைய தேடிக்க சிலு சிலு சிலு சா்க்கர நிலவே மாலைய மாத்திக்க { மாமன்காரன் ராத்திாி வந்தா மடியில கட்டிக்க மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுள வச்சுக்க } (2) பெண் : { கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ உன் பேரும் என் பேரும் தொியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ } (2) பெண் : உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம் தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம் எந்தன் நுாலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம் பிறை முகம் பாா்த்தது கொஞ்சம் பெண் : ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீா்க்குமிழ் போல சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிா்த்திடும் ஓா் இலை போல பனித்துளிதான் என்ன செய்யுமோ மூங்கில் காட்டில் தீ விழும்போது மூங்கில் காடென்று மாறினள் மாது பெண் : ஒரு மின்சாரம் பாா்வையின் வேகம் வேகம் உன்னோடு நான் கண்டுகொண்டேன் ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம் என்னோடு நான் கண்டுகொண்டேன் பெண் : என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை உன்னை இழந்துவிட்டால் எந்த மலாிலும் தேனில்லை தேனில்லை இது கனவா இல்லை நினைவா என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன் உன்னைப் பாா்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன் .......! --- கண்ணாளனே ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம் . .......! 😍 - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.