Everything posted by suvy
-
களைத்த மனசு களிப்புற ......!
பீச் பால் விளையாட்டு .........! 🙂
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணன் பிறந்தான் எங்கள் .......! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! தமிழ் பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : பாடினாள் ஒரு பாட்டு பால் நிலாவினில் நேற்று ஓடினேன் அதை கேட்டு தேடினேன் வலை போட்டு பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ ஆண் : நல்ல தமிழ் இசை அமுதென வருகையில் நெஞ்சம் அங்கே சென்றது ஆண் : மெல்ல மயங்கிய இரு விழி மலர்களை தென்றல் சொந்தம் கொண்டது ஆண் : வெள்ளி ரதமென உருகிய பனியினில் பெண்மை தெய்வம் நின்றது ஆண் : உள்ளம் முழுவதும் புதுவித கவிதைகள் அள்ளி அள்ளி தந்தது இருவர் : பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ ஆண் : ஆளில்லாத நீரோ ஆண் : நீரில்லாத ஆறோ ஆண் : ஆறில்லாத ஊரோ ஆண் : அவளில்லாத நானோ ஆண் : மனக்கோயில் வாழ வந்த தெய்வீக பெண் என்பதோ ஆண் : எனக்காக ஏங்குகின்ற செவ்வல்லி கண் என்பதோ ஆண் : பருவம் கொண்ட பாவை ஆண் : பனி படர்ந்த பார்வை ஆண் : வரவு சொல்ல தோன்றும் ஆண் : உறவு கொள்ள வேண்டும் ஆண் : மலர் மாலை யாருக்கென்று பெண் பாவை கண் தேடுமோ ஆண் : எதிர் பார்க்கும் ஏழை நெஞ்சம் என்னோடு ஒன்றாகுமோ ......! --- பாடினாள் ஒரு பாட்டு ---
-
மலரும் நினைவுகள் ..
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
100% பொழுது போக்கு 'சலங்கை ஒலி' படத்துல இதை நீங்க கவனிச்சீங்களா...? முன்னாள் காதலர்களான கமலும், ஜெயப்பிரதாவும் பிரிஞ்சிடுவாங்க. பல வருஷங்களுக்கு பின்னாடி கல்யாணம் செய்துக்கொண்ட ஜெயப்பிரதாவின் கணவர் இறந்துடுவார். ஆனால், ஜெயப்பிரதாவின் கணவரை கமல் ஏற்கனவே நேரில் சந்திச்சி பேசிருப்பார். இப்ப ஜெயப்பிரதா தன்னோட மகளுக்கு பரத நாட்டியம் கத்துக்கொடுக்க கமலை தன்னோட வீட்டுக்கு கூட்டிட்டு வந்து தங்க வைப்பார். ஆனால், கணவர் இறந்ததை மறைச்சிட்டு பொட்டு வெச்சிக்கிட்டு கமல் முன்னாடி சுமங்கலியா நடிச்சிட்டு இருப்பார். இதில் காமெடி என்னான்னா, ஜெயப்பிரதா மகளுக்கு ஹாலில் தான் கமல் நடனம் சொல்லிக்கொடுப்பார். இந்த ஹாலில் தான் செத்துப்போன ஜெயப்பிரதாவின் கணவர் போட்டோ மாலையுடன் தொங்கிட்டு இருக்கும். பல நாட்கள் அந்த வீட்டுல இருக்கும் கமல் அந்த போட்டோவை பார்க்காமல் தன் முன்னாள் காதலி சுமங்கலியா தான் இருக்காங்கன்னு நினைச்சிக்கிட்டு சந்தோஷமா இருப்பார். இத்தனை வருஷம் கழிச்சு ஒருத்தன் வந்து அந்த படத்தை யூடியூப்ல பார்த்து pause பண்ணி, அந்த போட்டோவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இப்படிலாம் கேள்வி கேட்பான்னு இயக்குனர் யோசிச்சிருக்க மாட்டார்ல 🤣" படித்ததில் பிடித்தது Voir la traduction- அதிசயக்குதிரை
தினமும் ஒரு வரி தத்துவம் · கேரளாவில் ஒரு பெரிய தொழிற்சாலை கட்டப்பட்டு, அந்த ஆலை கட்டும் போது பெரும் பிரச்சனை ஏற்பட்டது. பிரச்சனை என்னவென்றால் ஆலையில் கட்டப்பட்ட ஆழமான குழியின் அடிப்பகுதியில் மிகவும் கனமான இயந்திரம் வைக்கப்பட வேண்டும், ஆனால் இயந்திரத்தின் எடை ஒரு சவாலாக இருந்தது. இயந்திரம் தளத்திற்கு வந்து விட்டது, ஆனால் 30 அடி ஆழமான குழியில் அதை எவ்வாறு இறக்குவது என்பது பெரும் சிக்கலாக மாறிவிட்டது. சரியாக நிறுவப்படவில்லை என்றால், அடித்தளம் மற்றும் இயந்திரம் இரண்டும் மிகவும் பாதிக்கப்படும். இப்போது, மிக அதிக எடையைத் தூக்கக்கூடிய கிரேன்கள் எல்லா இடங்களிலும் கிடைக்காத காலம் இது. கிடைக்கக்கூடியவர்கள் இயந்திரத்தை தூக்கலாம், ஆனால் அதை ஆழமான குழியில் தரையிறக்குவது அவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டது. இறுதியாக, ஆலை கட்டும் நிறுவனம் கைவிட்டு, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண டெண்டர் விடப்பட்டது. இதனால், ஏராளமானோர், இந்த இயந்திரத்தை குழிக்குள் பொருத்தி, தங்கள் டெண்டர்களை அனுப்பினர். கிரேன் வரவழைத்து இயந்திரத்தை பொருத்தி விடலாம் என நினைத்தனர். அதன்படி, பணியை முடிக்க, 10 முதல், 15 லட்சம் ரூபாய் வரை கேட்டனர். ஆனால் அந்த மக்களிடையே ஒரு ஜென்டில்மேன் இருந்தார்,. மெஷின் தண்ணீரில் நனைந்தால், ஏதாவது பிரச்சனை வருமா?" என்று நிறுவனத்திடம் கேட்டார். "இது இயந்திரத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது” என்று நிறுவனம் பதிலளித்தது. அதன்பின், டெண்டரையும் நிரப்பினார். அனைத்து டெண்டர்களையும் பார்த்தபோது, அந்த நபர் வேலையை முடிக்க 5 லட்சம் ரூபாய் மட்டுமே கேட்டுள்ளார். எனவே வெளிப்படையாக, இயந்திரம் அமைக்கும் வேலை அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் விசித்திரமான விஷயம் என்னவென்றால், இந்த நபர் இந்த வேலையை எப்படி செய்வார் என்பதை பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டார். மேலும் அதைச் செய்வதற்கான திறமையும் சரியான குழுவும் தன்னிடம் இருப்பதாக மட்டுமே கூறினார். இந்த வேலையைச் செய்ய வேண்டிய தேதி மற்றும் நேரத்தைச் சொல்லுமாறு அவர் நிறுவனத்திடம் கேட்டார். அந்த நாள் இறுதியாக வந்தது. ஒவ்வொரு ஊழியரும், மேலாளரும், நிறுவனத்தின் முதலாளியும், சுற்றியிருந்தவர்களும் கூட, அந்த மனிதன் இந்த வேலையை எப்படிச் செய்வான் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர்! அவர் தளத்தில் எந்த தயாரிப்பும் செய்யவில்லை. முடிவு செய்த நேரத்தில், நிறைய லாரிகள் அந்த தளத்தை அடைய ஆரம்பித்தன. அந்த லாரிகள் அனைத்தும் பனிக்கட்டிகளால் ஏற்றப்பட்டிருந்தன, அவை அனைத்தும் குழிக்குள் நிரப்பப்பட்டன. குழி முழுவதுமாக பனியால் நிரம்பியதும், இயந்திரத்தை நகர்த்தி பனி அடுக்குகளின் மேல் வைத்தனர். இதற்குப் பிறகு, ஒரு சிறிய தண்ணீர் பம்ப் சுவிட்ச் ஆன் செய்யப்பட்டு, குழியில் ஒரு குழாய் செருகப்பட்டது. இதனால் தண்ணீர் வெளியே எடுக்கப்பட்டது. பனி உருகியது, தண்ணீர் தொடர்ந்து கொட்டியது, இயந்திரம் கீழே செல்லத் தொடங்கியது. 4-5 மணி நேரத்திற்குள் வேலை முடிந்து மொத்த செலவு ரூ.1 லட்சத்திற்கும் குறைவாகவே வந்தது. இயந்திரம் கச்சிதமாக பொருத்தப்பட்டு, அந்த நபருக்கு ரூ.4 லட்சத்துக்கு மேல் லாபம் கிடைத்தது. வணிகம் உண்மையில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம். பிரச்சினைக்கு எளிய தீர்வைக் கண்டறிவது ஒரு கலையாகும், இது மனிதனின் விவேகம், புத்திசாலித்தனம் மற்றும் நடைமுறை புரிதலைப் பொறுத்தது. கஷ்டமான பிரச்சனைகளுக்கு கூட விவேகத்தின் மூலம் எளிய தீர்வுகள் கிடைக்கும்.. # Voir la traduction- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
இவர்கள் அப்பவே சிறியருக்கு முன்னோடியாய் இருந்திருக்கிறார்கள் . ......! 😂- குட்டிக் கதைகள்.
Vikadam.com · டாக்டர் - என்ன பிரச்சினை உங்களுக்கு...? எனக்கு என்ன வயசுன்னு தெரியாதது தான் பிரச்சனை டாக்டர்... அப்படியா...!? ஆமா டாக்டர்... இப்ப பொண்டாட்டி புள்ள குட்டிகளோட வசதியாயிருந்தாலும்... சின்ன வயசுல அப்பா, அம்மா இல்லாமலயே வளந்துட்டதால வயசு தெரியல... இப்ப என்ன உங்க வயசு தெரியனும் அவ்ளோதானே...? ஆமா டாக்டர்... ஆமா...? சரி இப்ப நான் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க கண்டுபிடிச்சிடலாம்... சிஸ்டர் இங்க வாங்க நான் சொல்றத எழுதிக்குங்க... உங்க பேரென்ன... ராமநாதன்... என்ன தொழில் பண்றீங்க... பைனான்ஸ்... நைட்டு நல்லா தூங்குவீங்களா...? கடவுள் புண்ணியத்துல படுத்தவுடனே தூங்கிடுறேன் டாக்டர்... சந்தோஷம்... தூக்கத்துல கனவுலாம் வருமா... நெறய டாக்டர்.... அந்த கனவுல நடிகைகளெல்லாம் வர்றாங்களா...? ஆமா டாக்டர்.. எந்த மாதிரி நடிகைங்க... ரேவதி, அமலா மாதிரியான நடிகைங்க.... சிஸ்டர்... 45ன்னு நோட் பண்ணிக்குங்க... ம்... சரி வேற எந்த நடிகைகளும் வரமாட்டாங்களா...!!?? சிலசமயம் அம்பிகா, ராதா மாதிரியான வங்களும் வருவாங்க... சந்தோஷம்... சிஸ்டர் 48 ன்னு நோட் பண்ணிக்குங்க... ம்... அப்புறம் வேற யாரெல்லாம் வருவாங்க...? ஷகிலா... ஊஹூம்... ஷகிலாலாம் எவர்கிரின்... அதவெச் செல்லாம் வயச கணிக்க முடியாது... வேற...வேற...? வேற... சில சமயம் கனவுல ராதிகா வருவாங்க... திடீர்னு ஶ்ரீபிரியாக்கூட வருவாங்க... ம்ம்... சிஸ்டர் 54ன்னு நோட் பண்ணிக்குங்க.. ம்... அப்புறம் ராமநாதன்... அப்புறம்... அப்புறம்... ம்... என்னைக்காவது நான் ரொம்ப உற்சாகமா இருந்தா அன்னைக்கு கனவுல சிம்ரன், நயன்ஸ் வருவாங்க... சிஸ்டர் 40 ன்னு நோட் பண்ணிக்குங்க... ம் சொல்லுங்க ராமநாதன்... ம்ம்... அவ்ளோதான் டாக்டர்... அவ்ளோதானா... சரி சிஸ்டர் நான் சொன்ன நம்பரை யெல்லாம் சொல்லுங்க... 45, 48, 54, 41... நாலு ரிசல்ட்டையும் கூட்டி நாலால வகுத்தா வர்ற ரிசல்ட் 47... மிஸ்டர் ராமநாதன் உங்க வயசு நாற்பத்தேழு... அட கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க டாக்டர்...!! என்ன கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டேனா...? அப்ப ஏற்கனவே உங்க வயசு தெரியுமா...? தெரியும் டாக்டர்... பக்கத்து பார்பர் ஷாப்புக்கு முடிவெட்டிக்க வந்தேன்... அங்கே ஒரே கூட்டம் ஒருமணி நேரமாகும்னுட்டாங்க... திரும்ப வீட்டுக்கு போகவும் மனசில்ல... பக்கத்துலயே மனோதத்துவ டாக்டர் நீங்க சும்மா உக்காந்திருந்நீங்களா... அதான் சும்மா ஒரு டைம்பாசுக்கு... ரொம்ப தேங்ஸ் டாக்டர்...! அடேய்... இந்தாடா... அடப்பாவி... போய்ட்டானே!! Voir la traduction- இரசித்த.... புகைப்படங்கள்.
- அபிநய் திங்கட்கிழமையன்று உயிரிழந்தார்
ஆழ்ந்த இரங்கல்கள் ........!- மருத்துவ பீடத்திற்கு பேருந்து!
நியாயமான மக்களின் தேவைகளை புரிந்து செயல்படுதல் நல்ல நிர்வாகத்துக்கு அழகு . ........! 👍- நடனங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
- உணவு செய்முறையை ரசிப்போம் !
வெங்காயமும் கோழியும் உருண்டு பிரண்டு வரும் அழகே தனி . ........! 😍- களைத்த மனசு களிப்புற ......!
- அதிசயக்குதிரை
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 அம்மு ·rdSnooestpttm6lt148a161026ah1ti51g0i4mg51934hl8m1141h3a gl1a · JRD டாட்டாவுக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக் குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார். அப்போது டாட்டா தன் நண்பருக்கு ஒரு ஆலோசனை வழங்கினார். மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்கச் சொன்னார். அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார். பிறகு 6 மாதம் கழித்து டாட்டா அந்த நண்பரைச் சந்தித்தார். பேனா மறதியைப் பற்றி விசாரித்தார். அந்த தங்கப் பேனாவை தான் மிகவும் கவனமாக வைத்துக் கொள்வதாகவும், முன்பு இருந்ததை விட தன்னுடைய செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார். இது தான் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்துக் கொண்டிருக்கிறது நண்பர்களே. நாம் மதிப்பாக உணரும் ஒவ்வொன்றையும் கவனத்துடன் பார்த்துக் கொள்கிறோம். 1. உடலை மதிப்பாக உணர்ந்தால், சாப்பிடுவதில் கவனம் செலுத்துவோம். 2. நண்பனை மதிப்பாக உணர்ந்தால், அவனுக்கு மரியாதைக் கொடுப்போம். 3. பணத்தை மதிப்பாக உணர்ந்தால், அவசிய செலவுகள் செய்வோம். 4. உறவுகளை மதிப்பாக உணர்ந்தால், முறிக்க மாட்டோம். 5. வியாபாரத்தை மதிப்பாக உணர்ந்தால், அர்ப்பணிப்புடன் செய்வோம். 6. வாழ்க்கையை மதிப்பாக உணர்ந்தால், உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம். மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் நிச்சயமாக வெற்றி பெறுவதில்லை... இது தான் உண்மை √ Voir la traduction ......!- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Sundhari S ·tpdesnrSoocm8hg80l4cfcg9 i1mcu47ti91f2luu5u31i6t6428hm1hh900 · பைரவர்!!!! எங்கள் தெருவில் நிறைய வீடுகளில் நாய் வளர்க்கிறார்கள். இது போக நாலு தெரு நாயும் உண்டு.!!!ஏதாவது ஒரு வீட்டில் உள்ள நாய் தனியாக வெளியே வந்தால்,தெரு நாய்கள் எல்லாம் சேர்ந்து சத்தம் போட்டு,வீட்டு நாயை விரட்டும்!!!! வேற தெருவில் இருந்து ஏதாவது நாய்,தனியாகவோ,குரூப்பாகவோ வந்தால், எங்கள் தெருவில் உள்ள தெரு நாய்கள்,வீட்டு நாய்கள் எல்லாம் சேர்ந்து, வந்த நாயை சத்தம் போட்டு விரட்டி விடும்.!!!எங்க ஏரியா உள்ளே வராதே என்பது போல்.!!! பைரவருக்கே இந்த கதி.இதில் நடந்து போவோரையும்,காரில் போவோரையும் பைரவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்.!!!!!!பைக்,சைக்கிள் டூ வீலரில் போகிறவர்களை நன்றாகவே தெரு அத்தம் வரை விரட்டுவார்கள். பயங்கர சத்தம் போடுவார்கள்.பாவம் அலறி அடித்துக்கொண்டு ஓடுவார்கள்.!!! எனக்கு ஒரு 7__10 வயது இருக்கும் போது,இப்படி தொல்லை கொடுக்கிற நாய்களின் வாயை கட்டி விடுவார்கள் விசயம் தெரிந்தவர்கள்.!!!அப்புறம் அந்த நாய் சத்தம்போடாது(குறைக்காது) உணவு சாப்பிடாது..!!!! எங்க பெரியப்பாவிடம் சிலர் நாயை கூட்டிட்டு வருவாங்க.!!இந்த நாய் குறைக்க மாட்டேங்குது,சாப்பிடவும் மாட்டேங்குது,தெருவில் போன எவனோ இதன் வாயை கட்டி விட்டான் என சொல்வார்கள்.இரண்டு நாளாக இப்படித்தான் இருக்கிறது என சொல்வார்கள்.!!! உடனே எங்க பெரியப்பா நாயின் தலையை தடவி கொடுப்பார்.கொஞ்சம் தண்ணி வைத்து அதன் கழுத்தை தடவி கொடுப்பார்..அப்புறம் சொல்வார்.என்ன பைரவரே(நாய் என்று எப்போதும் சொல்ல மாட்டார்.)தெருவில் போகும் ஆட்களை ரொம்ப பயமுறுத்தக் கூடாது. வீட்டுக்குள்ள வந்தா மட்டும் சத்தம் போடுங்க என சொல்லிக்கொண்டே அவர் கையை நீட்டுவார்.அதில் பெரியம்மா,அத்தை,பாட்டி யாராவது ஒருத்தர் ஒரு துண்டு கருப்பட்டியை அவர் கையில் வைப்பார்கள்.!!!! அவர் அதை வாங்கி,நாய்க்கிட்ட போடுவார்.அந்த கருப்பட்டியை நாய் நக்கி,நக்கி திங்கும்.அப்புறம் ஊளையிடும்.!!! பெரியப்பா சொல்வார்,உன் பைரவருக்கு வாய் கட்டை அவிழ்த்து விட்டாச்சி.வீட்டுக்கு போயி கொஞ்சம் தண்ணீர் குடு. அப்புறம் அரை மணி நேரம் கழிச்சி சாப்பாடு குடு. என்பார். அப்புறம் அந்த நாய் வழக்கம் போல சத்தம் போடும்,சாப்பிடும்.!!! இன்று வரை எனக்கு இது ஒரு புரியாத புதிர் தான்.!!! இது மனிதர்களை,மெஸ்பரிஸம்,பண்ற மாதிரியா??? அல்லது மனோதத்துவம் முறையா எனக்கு தெரியல.????எப்படி சாத்தியம் .!!!இந்தக்கேள்வி எனக்குள் பல வருஷங்களாக இருக்கிறது.!!! உங்களுக்கு யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.!!!தெரிந்து கொள்கிறேன்.!!!! இது எப்படி,என்று பெரியப்பாவிடம் கேட்போம். எங்களுக்கும் நாய்க்கு வாயை கட்டவும்,அவிழ்த்து விடவும் சொல்லித்தாங்க என்று பல முறை கேட்டிருக்கிறோம்.அதற்க்கு அவர் சொல்லும் ஒரே பதில்.!!!! அம்மாவாசை,பௌர்ணமி இந்த இரண்டு நாட்களில் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் ,ஆறு,கடல்,குளம் இவற்றில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு,இரு கை கூப்பி ஓம்,ஓம் என ஒரு லட்சம் தடவை சொல்லனும்!!!!! மொத்தம் 41 நாட்கள் இவ்வாறு செய்தால், நீ சொன்னதெல்லாம் பலிக்கும்.அப்படின்னு சொல்வார்.!!! ஒரு கண்டிஷன் இதற்க்கு பணம் வாங்க கூடாது.ஒரு சேவையாக செய்யனும் என சொல்வார்.!!! இந்த அபூர்வ கலையை எங்க தாத்தாவிடம் இருந்து அவர் மட்டும் தான் கற்றார்.!!! ஆனால் பெரியப்பா யாருக்குமே சொல்லிக் கொடுக்க வில்லை.அவரோடு மறைந்து விட்டது அவர் கற்ற வித்தை.!!!!! தமிழர்களின் நிறைய வித்தைகள், கலைகள் யாவும் கிராமத்தை விட்டு நகரத்திற்க்கு வந்தவுடன் அழிந்து விட்டது.!!! நன்றி.!!!இது என் கற்பனை கதை அல்ல!!!🙏🏻".......!- இனித்திடும் இனிய தமிழே....!
பனி மலர் · Venkatesan Vellore · தன் நண்பரை காண மாடியில் உள்ள அவர் வீட்டுக்கு படத்தில் உள்ளவர் படியேறி செல்கிறார். அது மழைக்காலம் என்பதால் நண்பரின் மனைவி தன் புடவையை உலர்த்த வாசலில் கொடி கட்டி காயபோட்டிருக்கிறார். இவர் உள்ளே நுழையும்போதே " இதுதான் வாயில் புடவை என்பதோ?" என கேட்க, அதைகேட்ட நண்பரும் அவரது மனைவியும் வாய்விட்டு சிரித்தார்களாம். ------------------------ இவரும், குமரி அனந்தனும் அன்று ஒரே மேடையில் பேசுவதாக நிகழ்ச்சி இருந்தது. முதலில் குமரி அனந்தன் அட்டகாசமாய் பேசி கைத்தட்டல் பெற்று அமர்ந்துவிட்டார். அடுத்து இவரை அழைத்திருக்கின்றனர். இவர் மேடைக்கு முன் நின்று, குமரி அனந்தனை பார்த்து " எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறீர்கள்? என கேட்க, அவரோ அமர்ந்திருந்தவாறே " வண்ணாரப்பேட்டை" என்றாராம். " அதான், எனக்கு முன்னே வெளுத்து வாங்கிவிட்டீர்" என சொல்ல ....கூட்டம் சிரிப்பாலும் கரவொலியாலும் ஆர்ப்பரித்ததாம். -------------------- இலக்கிய கூட்டம் முடிந்து காரில் சென்று கொண்டிருக்கிறார். கார் திடிரென நின்றுவிட்டது. கூட வந்தவர்கள் இவரை உட்கார சொல்லிவிட்டு, கீழே இறங்கி தள்ளியிருக்கிறார்கள். கார் கிளம்பவில்லை. உடனே இவரும் கீழே இறங்கி காரை தள்ளியிருக்கிறார். " நீங்க ஏன் வந்தீங்க? என அதில் ஒருவர் கேட்க, " என்னை தள்ளாதவன்னு யாரும் சொல்லிட கூடாதுல்ல. அதான் வந்தேன்". என சொல்ல... எல்லோரும் சிரித்து மகிழ்ந்தார்களாம். அப்படியொரு சிலேடை பேச்சில் மன்னராக திகழ்ந்த கி.வா.ஜ.வின் நினைவுநாள்தான் இன்று. கவிஞராக, எழுத்தாளராக, கலைமகள் இதழின் ஆசிரியராக, இலக்கிய சொற்பொழிவாளராக திகழ்ந்த இவர், தமிழ்த் தாத்தா எனப்படும் உ.வே.சா.வின் மாணவர் ஆவார். Voir la traduction- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! தமிழ் பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் ஆண் : { மயக்கமென்ன இந்த மௌனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே } (2) ஆண் : தயக்கமென்ன இந்த சலனமென்ன அன்பு காணிக்கை தான் கண்ணே பெண் : கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா ஆண் : தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட பெண் : பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட ஆண் : கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட பெண் : கை வளையும் மை விழியும் கட்டி அணைத்து கவி பாட ஆண் : பாடி வரும் வண்ண நீரோடை உன்னை பாத பூஜை செய்து வர பெண் : ஓடி வரும் அந்த ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர ஆண் : மல்லிகை காற்று மெல்லிடை மீது மந்திரம் போட்டு தாலாட்ட பெண் : வள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்த வண்ண இதழ் உன்னை நீராட்ட ஆண் : அன்னத்தை தொட்ட கைகளினால் மது கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன் பெண் : கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மது அருந்தாமல் விட மாட்டேன் ஆண் : உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன் பெண் : உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தர மாட்டேன் ......! --- மயக்கமென்ன ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பொன்னெழில் பூத்தது புதுவானில் .......! 😍- வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் சடலமாக மீட்பு
ஆழ்ந்த இரங்கல்கள் ........!- இரசித்த.... புகைப்படங்கள்.
- மலரும் நினைவுகள் ..
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.