Everything posted by suvy
-
குற்றமே தண்டனை
பல படிக்கக் கூடிய பிள்ளைகள் சில தவறுகளால் படிக்காமல் போய் பின் பெரிய முதலாளிகள் ஆகிவிடுகின்றனர்.........கவலை வேண்டாம்.......! 😁
- காதல் கடை - T. கோபிசங்கர்
-
களைத்த மனசு களிப்புற ......!
Muhammad Ali vs Jerry Quarry | KNOCKOUT Legendary Fight | 4K Ultra HD......!
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் தவிக்கிறேன்.......! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிா் தீயே நீயே ஆண் : தந்தை நீயே தோழன் நீயே தாலாட்டிடும் என் தோழி நீயே ஆண் : ஏப்ரல் மே வெயிலும் நீயே ஜூன் ஜூலை தென்றலும் நீயே ஐ லைக் யூ செப்டம்பா் வான் மழை நீயே அக்டோபா் வாடையும் நீயே ஐ தேங்க் யூ ஆண் : உன்னை போல் ஓா் தாய்தான் இருக்க என்ன வேண்டும் வாழ்வில் ஜெய்க்க ஆண் : என் கண்ணில் ஈரம் வந்தால் என் நெஞ்சில் பாரம் வந்தால் சாய்வேனே உன் தோளிலே ஆண் : கண்ணீரே கூடாதென்றும் என் பிள்ளை வாடாதென்றும் சொல்வாயே அந்நாளிலே ஆண் : இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும் உன் மகனாகும் வரம் தருவாய் ஆண் : உன் வீட்டு சின்ன குயில் நீ கொஞ்சும் வண்ண குயில் நான்தானே நான் வயது வளா்ந்தால் கூட மடி ஊஞ்சல் வேண்டும் ஆட ஆண் : வேருக்கு நீரை விட்டாய் நீராய் கண்ணீரை விட்டாய் பூவாச்சு என் தோட்டமே ஆண் : உன் பேரை சொல்லும் பிள்ளை போராடி வெல்லும் பிள்ளை பூமாலை என் தோளிலே ஆண் : இளம்பிறை என்று இருந்தவன் என்னை முழு நிலவாய் நீ வடிவமைத்தாய் ஆண் : வற்றாத கங்கை நதியாய் பெய்யாத மங்கை நதியாய் நீ வாழ்க ஆண் : புது விடியல் வேண்டும் எனக்கு எந்த நாளும் நீதான் கிழக்கு.........! --- நீயே நீயே நானே நீயே ---
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
நினைவுகளால் இணைவது உறவுப் பாலம்....... இரு கரைகளை இணைப்பது காங்கிரீட் பாலம்......! 😁
-
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
மிகத் துக்கத்துடனும் சஞ்சலிக்கும் மனத்துடனும் வாசிக்கத் தூண்டுகின்றது........! 🙏
-
அம்மாவும் நானும்
சா.......எவ்வளவு அழகாக சுரங்களுடன் பாடுகிறார்கள்.........! 💐
-
மணி(யம்)வீடு
உண்மைதான் .....நாங்கள் ஆற்றில் ஒருகால், சேற்றில் ஒருகால் என்று வாழ்ந்தால் இப்படித்தான் இருக்கும்......! 😴
-
என் இந்தியப் பயணம்
தொடருங்கள்..........தொடர்ந்து வருகின்றோம்........! 👍
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நல்ல வேகமாய் இயங்குகின்றது ......நன்றி நிர்வாகம்.......! 💐
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்........! 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்..........! ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே ஆண் : கைகள் தானாய் கோர்தாய் கட்டி முத்தம் தேனாய் வார்தாய் இன்பம் இன்பம் சிங்கார லீலா ஆண் : பாடி வரும் வான் மதியே பார்வைகளின் பூம்பனியே தேவ சுக தேன் கனியே மோக பரி பூரணியே பெண் : பூவோடு தான் சேர இளங்காற்று போராடும் போது சேராமல் தீராது இடம் பார்த்து தீர்மானம் போடு ஆண் : புது புது விடுகதை தொடதொட தொடர்கிறதே பெண் : உன்னை சேர்ந்தாள் பாவை இன்னும் அங்கு ஏதோ தேவை சொல்லு சொல்லு சிங்கார வேலா பெண் : தேன் கவிதை தூது விடும் நாயகனே மாயவனே நூல் இடையை ஏங்க விடும் வான் அமுத சாகரனே ஆண் : நீதானே நான் பாடும் சுகமான ஆகாச வாணி பாடாமல் கூடாமல் உறங்காது ரீங்கார தேனீ பெண் : தடைகளை கடந்து நீ மடைகளை திறந்திட வா .......! --- இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்---
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- தம்பி நீ கனடாவோ..?
புலத்துக்குப் போன புலம் பெயர்ந்தவரின் நிலையை அழகாக குறிப்பிட்டுள்ளீர்கள்.......! 😁 நன்றி அல்வாயன் ...... நல்ல கவிதை......!- என்னோட சாதி..
குள்ளநரிக்கூட்டம் குறுக்கிடத்தான் செய்யும்.....அவற்றைப் புறந்தள்ளிவிட்டு உங்கள் பாதையில் முன்னேறுங்கள்.......!- மயிலம்மா.
மயிலிறகை......... 19. மயிலம்மா வீட்டுப் படுக்கை அறை. கல்யாணக் கலாட்டா எல்லாம் முடிந்து வர நேரமும் இரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. வாமனும் பொடியலுடன் கொஞ்சம் மதுவும் பாவித்து சாப்பிட்டு விட்டு வந்ததால் அறையில் பால்பழங்கள் எதுவும் அங்கில்லை. புது இடமாய் இருந்த போதிலும் அஞ்சலா கட்டிலில் சிறிதும் அச்சமின்றி அமர்ந்திருக்கிறாள். தலையில் வட்டமாய் கொண்டை போட்டு பின்னலில் சடைநாகமும் குஞ்சமும் வைத்து நிறைய பூக்களால் அலங்காரம் செய்து அனுப்பி இருந்தார்கள். அவள் தனக்குள் இவன் ஒரு தொடை நடுங்கி, இவனால் என்ன பெரிதாய் செய்துவிட முடியும் என்னும் எகத்தாளம் கண்களில் தெரிகின்றது. புத்தம் புது வாலிபனான இவனை நான்தான் சாமர்த்தியமாக வழிக்குக் கொண்டுவர வேண்டும். ஒரேயடியாய் பயப்படுத்தக் கூடாது என்று நினைக்க சிரிப்பும் கூடவே வருகின்றது. அப்போது வாமன் அங்கு நாலுமுழம் வேட்டி கட்டி நாஷனல் சேர்ட்டும் போட்டுகொண்டு கழுத்தில் மைனர் செயினும் கைகளில் மோதிரங்களும் மின்ன உள்ளே வருகிறான். அவன் விதானையல்லவா, இதுநாள்வரை எத்தனை எத்தனையோ பேரின் பொய் மெய் களை அவர்களின் கண்களை பார்த்தே கண்டுபிடித்திருக்கிறான். அதுபோல் அஞ்சலாவின் எண்ண ஓட்டங்களும் அவனுக்குப் புரிகின்றது. மெல்லமாய் நடந்து அவளை நெருங்கி அருகில் நிக்கிறான். அவளும் கொஞ்சம் அரக்கி இருந்து கொண்டு உட்காருடா என்கிறாள். அவனும் அருகில் அமர்கின்றான். அவள் தனக்கு சொல்வதுபோல் அவனுக்கும் சேர்த்து சொல்கிறாள். சே எல்லாம் புஷ்வாணமாய் போச்சுது. எனக்கென்ன தெரியும் அவங்கள் மோட்டார் சைக்கிளுக்காத்தான் அப்படி அலைஞ்சு திரிஞ்சவங்கள் என்று சொல்ல அவனும் எனக்கு அப்படித் தோன்றவில்லை. திருமணங்கள் சொர்க்கத்தில் நிட்சயிக்கப் படிக்கிறது என்பார்கள் அது நிஜமோ பொய்யோ தெரியாது ஆனால் எங்களை பொறுத்தவரை யோகிபாபுவால் தான் நிட்சயிக்கப் பட்டிருக்கு. அதென்னமோ உண்மைதான் என்று அதை அவள் ஆமோதிக்கிறாள். பின் அவன் கையை எடுத்து தன் இடுப்பைச் சுற்றி வைத்துக் கொண்டு மெதுவாக அவன் மார்பில் சாய்கிறாள். அவன் சும்மா இருப்பதைப் பார்த்து என்னடா பயமாய் இருக்கா.....என்னிடம் என்னடா பயம் என்கிறாள். அவனும் ....ம்.....கொஞ்சம் என்று சொன்னவன், அப்படியே அவளை சரித்து மடியில் வளர்த்தி கண்களில் காதல் மின்ன உதடுகளில் முத்தமிடுகிறான். அதை அவள் ரசிக்கிறாள்.கண்கள் கிறங்குகின்றன. அவள் சற்றே அசைந்து அவன் கண்களை நோக்க அதில் காதலுடன் காமமும் ஒளிர்கின்றது. கண்களின் வார்த்தைகளை அவள் புரிந்து கொள்ளும் அடுத்த கனத்தில் இருந்து அவன் அவனாக இல்லை. கொதிக்கக் காய்ச்சிய இரும்பு கொல்லனின் அடியில் வளைந்து நெளிந்து வசமாவதுபோல் அவளும் நெகிழ்ந்து மகிழ்ந்து மலர்ந்து நிக்கிறாள்.மேனி துடிதுடித்து மயங்கி முயங்கி நிலைகுலைகிறாள். இதுநாள்வரை கஞ்சனின் பெட்டிக்குள் பணக் கட்டாய் பஞ்சடைத்து இருந்தவள் இப்போது திருவிழாவில் சிறுவனின் கையில் கிடைத்த சில்லறைகள் போல் சிறகடித்துப் பறக்கிறாள். அவள் மேனியில் ஆடைகள் சில இருந்த போதும் அவை தம் கடமையை மறந்து ஒதுங்கி நின்று ஓரங்க நாடகம் பார்க்கின்றன. சென்றி உடைத்து உட்புகுந்த இராணுவத்திடம் பாதுகாவல் அரண்களும் பதுங்கு குழிகளும் சரண்டர் ஆகின்றன. கொஞ்சம் கொஞ்சமாய் கெஞ்சிக் கெஞ்சி கொஞ்சிக் கொஞ்சி அணைக்கும் அவனின் வலிமையான கரங்களை அவளின் வளைக்கரங்கள் தடுக்க முயன்று தோற்று மென்மேலும் இறுக்கித் தழுவிக் கொள்கின்றன. செவ்விதழ்கள் செந்தேனாய் சிந்துகின்றன. தேன்துளிகள் தெறிக்கும் இடமெல்லாம் அவன் ஆதரங்களால் மேய்கிறான். கன்னிமலர் காகிதமாய் கசங்கி போகிறது. மதனநீர் ஒழுக மதம் பிடித்து நின்ற பிடி அங்குசத்துக்கு அடங்கிக் கிடக்கின்றது. அன்று அப்படி இருந்த இவன் இன்று எப்படி இப்படி மாறினான். மனதில் எழும் ஆயிரம் கேள்விகளை உடலின் இன்பவேதனை மறக்கடிக்க அவளும் அவனுடன் மல்லுக்கட்டிக் களைத்து அவனருகில் அயர்ந்து உறங்கி விடுகிறாள். அடுத்தநாள் பகல் பத்து மணிக்குமேல் எழும்பி கைகளை உயர்த்தி உடம்பு முறித்து கதவு திறந்து வெளியே வருகிறாள். மாருதியின் ஓவியம்போல் தலை நிறைய பூக்களுடன் பொலிவாய் உள்ளே போனவள் இப்பொழுது கன்னங்களும் உதடு முகம் எல்லாம் வீங்கி கண்களும் சுருங்கி அரசியல் கார்ட்டூன் போல் அலங்கோலமாய் இருக்கிறாள்.அங்கிருந்த கண்ணாடியில் பார்க்க சந்திரபிம்பமாய் இருந்தவள் சந்திரமுகியாய் வெளியே வருகிறாள்.அந்த அலங்கோலத்திலும் அழகு கொட்டிக் கிடக்கு. மயிலம்மாவும் அவளைக் கண்டு சிநேகமாய்ப் புன்னகைத்து அவளைக் குளக்கரைக்குக் கூட்டிப் போகிறாள்.போகும்போது மறக்காமல் அஞ்சலா மாற்றுவதற்காக்க பூவனத்தின் ஆடைகளையும் துவாயையும் எடுத்துக்கொண்டு போகிறாள். பின் சம்பிரதாயமாக என்னம்மா நன்றாகத் தூங்கினாயா என்று கேட்க அவளும் கைகளை உதறி விரல்களை நெட்டி முறித்துக் கொண்டே மயிலம்மாவை நேராகப் பார்க்காமல் எங்கையம்மா உங்களுக்கு பகிடியாய் இருக்கு போல. ஏன் என்ன நடந்தது நேற்றிரவு நடந்த சம்பவத்துக்கு உன்னை கோபித்துக் கொண்டானோ...... அப்படி கோபித்துக் கொண்டால்கூடப் பரவாயில்லை என்று தோன்றுகின்றது. அப்போது இருவரும் குளத்தருகில் வந்து விட்டார்கள். இருவரும் ஆடைகளைக் களைந்து கரையில் வைத்து விட்டு குறுக்குக் கட்டிக்கொண்டு குளத்துக்குள் இறங்கி முங்கி முங்கி மூழ்கிக் குளித்து மேலே வருகிறார்கள்.அஞ்சலா கல்லில் இருக்க மயிலம்மா ஒரு சவர்காரத்தை எடுத்து அவளுக்கு முதுகு தேய்த்து விட்டு முகத்துக்கு போடுவதற்கு அவளிடம் தருகிறாள். என்ன முதுகெல்லாம் ஒரே கீறலாயிருக்கு. சே....என்ன பையன் அவன் .....அவன் ஒரு மிருகம். பத்து கைகளும் எட்டுக் கால்களுமாய் என்னை எத்தனை இம்சை செய்தான் தெரியுமா. எனக்கென்ன தெரியும், நீ சொன்னால்தான் தெரியும். அன்று என் வீட்டில் தண்ணிப் பம்பு திருத்தும்போது அப்படிப் பயந்தாங் கொள்ளியாய் இருந்தவன்.... மயிலம்மா இடைமறித்து எப்படி "எலிபிடிக்கப் பழகாத பூனை" என்று என்னவோ சொன்னாயே அப்படியா ....ம்....அன்று நான் சொன்னது உங்களுக்கு கேட்டுட்டுது போல......அதேதான் இந்த சில மாதங்களில் இப்படி ஆகியிருக்கிறான்..... என்ன வேகம் ....ஓடுற முயல்களை விரட்டி வேடடையாடும் புலியாய் இருந்தான். அப்போது இல்லாத வெட்கம் இப்போது என்னை ஆட்கொள்ள டேய் வெட்கமாய் இருக்குடா,லைட்டை அணையடா, லைட்டா அணையடா செல்லம் என்று சொல்கிறேன் அவன் கேட்டால்தானே, நீ என் ஸ்வீட் ஹார்ட் அதுதான் ஹார்ட்டை அணைக்கிறேன் ஹார்ட்டாய் அணைகிறேன் என்று இதயத்துக்குள் இதயத்தைப் புகுத்துவது போல் இம்சை செய்தான். இது எப்படி என்று இவர்கள் கதைக்கும் போது தூரத்தே வாமன் வருகிறான். வரும்போது முற்றத்தில் நின்ற பாம்பை கையில் எடுத்து, கையிலும் தோளிலும் ஊரவிட்டுக் கொண்டே அங்கு வருகிறான். ஐயே பாம்போடு வருகிறான் பயமில்லையா என்று அஞ்சலா வினவ... இல்லை அது சின்னனில் இருந்தே அவனோடு நல்ல பழக்கம் ஒன்றும் செய்யாது. சரி இப்ப அவனிடமே கேட்கிறேன் எப்படிடா உனக்குள் இந்த மாற்றம் என்று.....அப்படியே கேட்கவும் செய்கிறாள். வாமன் இவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே பாம்பை கீழே விட அது அப்பால் போகின்றது.பின் நாலுமுழ வேட்டியையும் பனியனையும் கழட்டிக் கரையில் வைத்து விட்டு ஜட்டியுடன் குளத்துக்குள் பாய்கிறான். மயிலம்மா நைசாக நழுவி ஆடைகளை அலம்பும் சாக்கில் அப்பால் போகிறாள். நன்றாக முங்கிக் குளித்து மேலே வந்தவனிடம் அஞ்சலாவும் டே நீ இந்த வித்தையெல்லாம் எங்கு கற்றாய் ..... எந்த வித்தை...... தெரியாத மாதிரி கேட்டியென்றால் கல்லெடுத்து அடிச்சுப்போடுவன் சொல்லடா என்கிறாள். இவர்களின் சண்டையை ரசித்தபடியே இவன் என்ன சொல்லித் துலைக்கப் போறானோ என்னும் பதட்டத்தில் மயிலம்மா ஆடைகளை அலம்பிப் பிழிகிறாள்…. ஓ....அதுவா ....சொல்கிறேன் கேள்.....நீ என்னை அன்று அவமதித்தாய் அல்லவா .. சீ ......நான் ஒன்றும் உன்னை அவமதிக்கவில்லை..... இருக்கட்டும், முதலில் நீ என்னைப் பூனையுடன் ஒப்பிட்டதே தவறு..... பெருந்தவறு ..... அதன் பின்தான் நான் கோயில் தேரில் சிலைகளைப் பார்த்தேன்.....கோபுரத்தில் சிற்பங்கள் பார்த்தேன்..... சோலையில் கிளிகளைப் பார்த்தேன்.....மரங்களில் மந்திகளைப் பார்த்தேன்..... பாதையில் நாய்களைப் பார்த்தேன் .......பட்டிகளில் மாடுகள் பார்த்தேன்.... மலர்களில் வண்டுகள் பார்த்தேன்.....சந்து பொந்துகளில் சர்ப்பங்கள் பார்த்தேன்.... இவைகளும் போதாதென்று சரோஜாதேவியைப் பிடித்தேன் படித்தேன் ...... சரோஜாதேவியா ...... என்னடா சொல்கிறாய் , அஞ்சலா கேட்க, மயிலம்மா வியக்கிறாள்..... ஓம்.......சரோஜாதேவியேதான்......கையடக்கமான ஒரு காவியம்.....கலவிக் கலையின் அத்தனை நுணுக்கங்களும் அதில் அடக்கம்..... எல்லாவற்றையும் எனக்குள் ஒத்திகை பார்த்து வைத்துக் கொண்டேன் .....எதிர்காலத்தில் உதவலாம் என்று..... நேற்றிரவு என் பத்தினி நீ எகத்தாளமாய் மெத்தையில் இருந்தாய். புதுப் பெண்ணுக்குரிய வெட்கம் கிஞ்சித்தும் இல்லை உன்னிடம். அது என்னை சூடேற்ற, பார்த்து வைத்திருந்த ஒத்திகை அத்தனையையும் தத்தை உன்னிடம் மெத்தையில் அரங்கேற்றினேன்..... ஓ....அதுவா விசயம் .....நானும் என்னென்னமோ நினைத்துக் கொண்டேன் என்று மயிலம்மாவை ஓரக்கண்ணால் ஒரு நொடி பார்த்து விட்டு சொல்கிறாள்....மயிலம்மாவும் நிம்மதியாய் ஒரு பெருமூச்சு விடுகிறாள். அது சரி.....நீ எப்படி என்னைப் பத்தினி என்கிறாய். பத்தினிக்கு அர்த்தம் என்னென்று தெரியுமாடா உனக்கு....வட்டிக்காக வட்டிவைத்தி வீட்டில் வெட்டியாய் வாழ்ந்து வந்தவள் நான்.....நான் பத்தினியா..... நீ பத்தினிதான், அதில் என்ன சந்தேகம் உனக்கு.... எப்படி..... இப்படி.....அசோகவனத்தில் ஆண்டு முழுதும் வாழ்ந்த சீதை அக்நியில் குளித்து வந்த பத்தினி..... அக்நியில் பிறந்து ஐவருடன் வாழ்ந்த பாஞ்சாலியும் பத்தினி ..... முனிவன் உருவில் வந்து முயங்கியவனை சாபமிடாமல் சல்லாபித்த அகலிகையும் பத்தினி..... கோவலனை மணந்த கண்ணகியும் பத்தினி..... கணிகையர் குலத்தில் பிறந்தும் அவனோடு மட்டும் வாழ்ந்து பின் தானும் துறவியாகி பெற்ற மகளையும் துறவியாக்கிய மாதவியும் பத்தினி..... படகில் முனிவனுடன் சல்லாபித்து வியாசரைப் பெற்று பின் கன்னியாகி மணமுடித்த சத்யவதியும் பத்தினி.... கணவனின் கருத்துக்கமைய ஆகாயத்தில் சென்ற தேவர்களைக் கூவி அழைத்து குழவிகளைப் பெற்ற குந்திதேவியும் பத்தினி என்றால் என்றால் ..... நீயும் பத்தினியே.....உன்னையும் என்னையும் சேர்த்து மணமுடித்து வைத்து அழகுபார்க்கும் இந்த மயிலம்மாவும் பத்தினிதான். என்றவனைப் கல்லில் இருந்து பாய்ந்து தாவியணைக்கிறாள் அஞ்சலா.... மனதில் இருந்த பாரம் இறங்கிய நிம்மதியில் வாமனின் அறிவை வியந்துகொண்டே பிழிந்த துணிகளை எடுத்துக் கொண்டு பின்னழகு அசைந்து அசைந்து அவனுக்கு நன்றி சொல்ல அன்னம்போல் நடந்து முன்னால் செல்கிறாள் மயிலம்மா.....! சுபம். மது வீட்டுக்கு கேடு.....! யாவும் கற்பனை....! யாழ் அகவை 26 க்காக...... ஆக்கம் சுவி........!- கொஞ்சம் ரசிக்க
- உணவு செய்முறையை ரசிப்போம் !
அட ......இது கூட நல்லா இருக்கே.........! 👍- மயிலம்மா.
மயிலிறகு........... 18. உடனே யோகிபாபு ஐயோ அம்மா, அண்ணா நான் ஒன்றும் அவங்களைக் கடத்துறதுக்கு வரேல்ல. எங்கட அப்பான்ர மோட்டார் சைக்கிளை யாரோ ஒரு பொடியன் ஓடித் திரிகிறதாய் கேள்விப் பட்டன். அதுதான் அவனுக்கு இரண்டு தட்டு தட்டிப்போட்டு சைக்கிளைத் தூக்கிக் கொண்டு வரத்தான் பிளான் போட்டு பொடியளுடன் இந்தப் பக்கம் திரிஞ்சனாங்கள். அப்போது அஞ்சலா முன் வந்து அதை இவர் கேட்டிருந்தால் நானே குடுத்திருப்பேனே. இவர் "பாரில்" கடத்துறது தூக்கிறது என்று கதைத்ததால்தான் அது எனக்குத் தெரிந்து இவ்வளவும் நடந்திட்டுது. அதோ அந்தா நிக்குது மோட்டார் சைக்கிள். நான்தான் அது பழுதாய் இருந்தது. அவர் கம்பிரமாய் அதில் இருந்து இந்த ஊர் முழுதும் ஓடித் திரிந்தவர். அது பழுதாகி திண்ணையில் நிற்பதை பார்க்க எனக்கு ஒரு மாதிரி இருந்தது. அதனால்தான் இவரிடம் அதைத் திருத்தி சில நாட்கள் ஓடிப்பார்த்துட்டு கொண்டு வரச்சொல்லி குடுத்தனுப்பினனான். எங்க அந்தத் தம்பியைக் கூப்பிடு என்று சொல்ல அரசு விதானை முன்னால் வந்து அவனை உங்களுக்குத் தெரியும் தம்பி,எப்போதும் என்கூடத்தான் வேலை செய்து வருகிறவன். பெயர் வாமன். இப்ப அவனும் இங்கு விதானையாகி இருக்கிறான் என்று சொல்ல வாமன் முன்னால் வருகிறான். ஓ.....அப்படியா நல்லது, அவனைப் பார்த்து நல்ல ராஜாவாட்டம் இருக்கிறாய்......அவர்களை நல்லபடியாய் வைத்து வாழ்ந்துகொள் என்று வாழ்த்துகிறான். வாமனும் சைக்கிள் சாவியை அவனிடம் தர நீட்டுகிறான். அதை அவன் தாய் மறித்து இந்தப் பிள்ளை விடயத்தில் அவர் செய்த பாவத்துக்கு தன் மோட்டார் சைக்கிள் மூலமாய் பிராயசித்தம் செய்திருக்கிறார். அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார். அப்போது மூத்தமகன் ரவியும் எங்களுக்கு கொஞ்சம் முன்னால்தான் விதானையார் பிரச்சினைகளைச் சொல்லி கூட்டி வந்தவர். அதுவும் நல்லதாய் போயிற்றுது. உங்களின் திருமணத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கு என்கிறான். மயிலம்மாவும் ஏதோ அந்தப் பெண்ணுக்கு உரித்தானவர்கள் வந்திருக்கிறீர்கள், சாப்பாடு எல்லாம் தயாராய் இருக்கு. இருந்து சாப்பிட்டு விட்டுத்தான் போக வேணும் என்று சொல்ல அங்கேயே படங்கு விரித்து தாமரை இலையில் எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறப் படுகிறது. பின் அவர்கள் போகும் போது அந்த அம்மாள் தன் கையிலும் கழுத்திலும் இருந்ததைக் கழட்டி அஞ்சலாவுக்கு காப்பும் வாமனுக்கு சங்கிலியும் போடுகிறாள்.ரவியும், யோகிபாபுவும் கூட தங்களிடம் இருந்த சங்கிலி மோதிரங்களை கழட்டி இருவருக்கும் போடுகிறார்கள். பின் எல்லோருக்கும் நன்றி கூறிவிட்டு செல்கிறார்கள். போகும் போது மூத்தமகன் ரவி அவர்களை பார்த்து இனிமேல் உங்களுக்கு என்ன பிரச்சினை என்றாலும் எனக்கு சொல்லியனுப்பவும் நான் பார்த்துக் கொள்கிறேன். அவர்களின் தாயாரும் மயிலம்மாவையும் மற்றும் எல்லோரையும் பார்த்து நீங்கள் நாலாம் சடங்குக்கு எங்கள் வீட்டிற்கு வாருங்கோ, நாங்கள் எல்லா ஏற்பாடும் செய்த்து வைக்கிறம் என்று சொல்கிறார்கள். யோகிபாபு வானில் ஏறும்போது அவனது கூட்டாளிகள் அப்பாடா கனகாலத்துக்குப் பிறகு நல்ல சாப்பாடு என்று சொல்லி ஏப்பம் வீட்டுக் கொண்டே வர யோகிபாபு அவங்களை பார்த்து நில்லுங்கடா....சும்மா தன்பாட்டில் வீட்டுக்ல வந்து நிக்கப் போற மோட்டார் சைக்கிளுக்கு என்னை உசுப்பேத்தி விட்டு நான் வானையும் வாடகைக்கு எடுத்து உங்களுக்கும் ஒரு வாரமா விஸ்கியும் பிரியாணியுமாய் அழுது கடைசில சைக்கிளும் கையை விட்டுப்போய் கையில கழுத்தில கிடந்த நகைகளும் போகப் பண்ணிட்டீங்களேடா. ஏறுங்கடா பஸ் ஸ்ராண்டில இறக்கி விடுவன் காலமை முதல் பஸ்ஸில இந்த ஊரைவிட்டே ஓடிடனும் சொல்லிப்போட்டன். வான் போகுது எல்லோரும் சிரிக்கிறார்கள். ஏதோ சண்டை கலாட்டா நடக்கும் தான் விலக்குப் பிடித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த விதானையும் விசயம் சப்பென்று போனதைப் பார்த்து மணமக்களை அழைத்து பொக்கட்டில் இருந்து பணம் எடுத்து இந்தா இதை வைத்துக் கொள் என்று குடுக்கிறார். என்ன அண்ணா இது சம்பளப்பணமா என்று நமுட்டுச் சிரிப்புடன் வாமன் கேட்க, போடாங்.....பக்கத்தில பிள்ளை நிக்குது இல்லையென்றால் இப்ப உனக்கு சொல்லுவான், ஏன்டா ஒன்றுமே இல்லாத விசயத்துக்கு இப்படிக் கலாட்டா பண்ணிட்டீங்களேடா. என்று சொல்லி விட்டுப் போகிறார். மற்றவர்களும் நல்ல சாப்பாடு நல்ல கலியாணம் என்று சொல்லி சிரித்துக் கொண்டு போகிறார்கள்.......! 🦚 மயில் ஆடும்........... 18.- மயிலம்மா.
மயிலிறகு........... 17. பின்பு மயிலம்மாவும் கனகமும் சுந்துவும் வந்து அவர்களின் அறைக் கதவைத் தட்டிவிட்டு திறந்து கொண்டு உள்ளே வருகிறார்கள். கதிரையில் அஞ்சலா இருக்கிறாள். மயிலம்மா அவள் தோளில் கை வைத்து நீ பிள்ளை ஒன்றுக்கும் யோசிக்காதை, பயப்படாமல் இரு என்று சொல்லிவிட்டு வாமனைப் பார்த்து இப்பவே இரவாகப் போகுது இனி எது செய்யிறதெண்டாலும் நாளைக்குத்தான் பார்க்கலாம். நான் போய் உங்களுக்கு சாப்பாடும் தேநீரும் எடுத்துக் கொண்டு வாறன் எண்டு கிளம்ப அவளைத் தடுத்த வாமன் அவங்கள் எல்லா இடங்களிலும் எங்களைத் தேடிக்கொண்டு திரிகிறாங்கள். அதனால் இன்றிரவே நாங்கள் தாலி கட்டி கலியாணம் செய்ய வேண்டும் என்று சொல்கிறான். அப்ப கனகத்தின் புருஷன் வந்து நடந்தது நடந்து போச்சு, அவன் சொல்லுறதுதான் சரி அதெல்லாம் செய்யலாம் என்கிறார். கனகமும் அங்கபார் அவற்ர உசாரை என்று சொல்கிறாள். பின்பு வாமன் அலுவலகத்தில் இருந்த தொலைபேசியை எடுத்து அரசு விதானைக்கு விஷயத்தை சொல்லி அண்ணா என்ர நண்பன் சுந்து அங்க வருவான். உங்கட காரில் அவனோடு சென்று அஞ்சாலாவின் பெற்றோரையும் என் பெற்றோரையும் கூட்டிக்கொண்டு மயிலம்மா வீட்டுக்கு வர முடியுமோ என்று கேட்க மறுமுனையில் இருந்து சரியடா நான் எல்லாவற்றையும் கவனிக்கிறன். நீ சுந்துவை அனுப்பு. நீங்கள் அங்கேயே கவனமாய் இருங்கோ வெளில வரவேண்டாம் என்று சொல்கிறார். சுந்துவும் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு செல்கிறான். இங்கே கோமளம், வீட்டு முற்றத்தையும் கோயில் முற்றத்தையும் கூட்டி சாணி தெளித்து கோலங்கள் போடுகிறாள். அப்போது விதானையாருடன் காரில் இருவரது பெற்றோர்களும், பின்னால் சைக்கிளில் சுந்துவும் வந்து இறங்குகின்றார்கள். இவர்களை இறக்கி விட்டுட்டு விதானையார் காரை எடுத்துக் கொண்டு வலு வேகமாய் செல்கிறார். மற்றப்பக்கம் கனகத்தின் புருசனும் இவங்கட நண்பர்களுமாய் சேர்ந்து ஆங்காங்கே மரங்களில் தூங்கிக் கொண்டிருந்த அஞ்சாறு சேவல்களைப் புடுங்கிக் கொண்டு வந்து அடித்து கறிசோறு சமைக்கின்றார்கள். மயிலம்மாவும் அன்று அஞ்சலா குடுத்து விட்ட சாராயப்போத்தல்களை அவர்களிடம் குடுத்து கெதியாய் சமையுங்கோ, இன்னும் என்னென்ன பிரச்சினை நடக்கப் போகுதோ தெரியாது என்று சொல்லிவிட்டு போகிறாள். அயலில் உள்ளவர்கள் அரசல் புரசலாய் விசயம் கேள்விப்பட்டு தங்கள் தங்கள் வீடுகளில் இருந்த கறி சாமான்களுடன் வந்து வேலைகள் செய்கிறார்கள். பூவனமும் புருசனுடன் காரில் வந்து இறங்குகிறாள். அவளும் கோமளத்துடன் சேர்ந்து அஞ்சலாவை மணப்பெண்ணாய் கூந்தலில் மலர் மாலைகள் மற்றும் சடைநாகம் எல்லாம் சூட்டி அலங்கரிக்கிறார்கள். வேறு சிலர் அம்மனுக்கும் மணமக்களுக்கும் மலர்களைச் சேகரித்து மாலைகள் கட்டுகிறார்கள். பூவனத்தின் புருசனும் வாமனின் தந்தையும் கோயிலைக் கழுவி விட சுந்து சென்று ஐயரை மோட்டார் சைக்கிளில் அழைத்து வருகிறான். வாமனின் தாய் அவன் தங்களுக்குத் தந்த வேட்டி சேலைகளை பூவனத்திடம் குடுத்து பொண்ணு மாப்பிள்ளைக்கு உடுத்தி விடத் தருகிறாள். ஐயரும் அம்மனுக்கும் பட்டுசேலை உடுத்தி அருகில் இருக்கும் விநாயகர், முருகனுக்கும் புதுப் பட்டுடுத்தி அலங்கரித்திருக்கிறார். அந்நேரம் அரசு விதானையாரும் காரில் வந்து இறங்குகிறார். பெண்கள் தேவாரம் பாடிக்கொண்டிருக்க எல்லோரும் மலர்தூவி வாழ்த்த கோவில் மணி ஒலிக்க ஐயர் மந்திரம் சொல்லி அம்மனின் கழுத்தில் இருந்து தாலியை எடுத்துக் குடுக்க வாமன் அஞ்சாலாவின் கழுத்தில் தாலி கட்டுகிறான். அப்போது ஒரு காரில் வைத்தியின் மனைவியும், மூத்த மகனும் வந்து இறங்குகிறார்கள். அவர்களுக்கு விதானையார் நடந்தவற்றை கூறியிருந்தார். வந்தவர்கள் தாலி கட்டுவதைக் கண்டதும் அங்கிருந்த தட்டில் இருந்த மலர்களை எடுத்து தூவி ஆசீர்வதிக்கிறார். சற்று நேரம் கழித்து பின்னால் வெள்ளை வானும் ஒரு மோட்டார் சைக்கிளும் வந்து நிக்கின்றது. வானில் இருந்து யோகிபாபு இறங்கி வருகின்றான். அவனுக்கு அங்கு தனது சித்திக்கு திருமணம் நடக்கிறதைப் பார்க்க ஆச்சரியமாய் இருக்கு. வந்தவர்களைக் கண்டு எல்லோரும் திகைத்து நிக்க மயிலம்மா முன் வந்து வைத்தியின் மனைவியிடம் அம்மா நீங்கள் பெரியவங்கள் பிள்ளைகளை மன்னிக்க வேணும். ஏனடி மயிலு, இதெல்லாம் என்ன நடுநிசியில் திடீர் திருமணம் என்று கேட்கிறாள்...... எல்லாம் உங்கள் சின்னமகனால்தான் இப்படி நடக்கிறது என்று மயிலம்மா சொல்கிறாள். அவள் யோகிபாபுவின் பக்கம் திரும்பி எடேய் சின்னவனே என்னடா இது என்று கேட்க, எனக்கு ஒன்றும் தெரியாதம்மா இந்தக் கல்யாணம் எனக்கும் திகைப்பாத்தான் இருக்கு என்று சொல்கிறான். அப்போது அஞ்சலா முன் வந்து இவர் பொய் சொல்கிறார் அம்மா. என்னைக் கடத்திக் கொண்டுபோய் தனது நண்பனுக்கு கட்டி வைக்கிறதுக்காக இன்று முழுதும் என் வீட்டுக்கு முன்னால் நூறுதரம் அந்த வானில் அங்கும் இங்குமாய் திரிஞ்சவர். நான் பயத்துடன் வீட்டுக்குள் பூட்டிக்கொண்டு இருந்தனான். அதோ அந்த வெள்ளை வான்தான், இப்பவும் அதுக்குள் ஆட்கள் இருக்கினம் வேணுமென்றால் போய்ப் பாருங்கள் என்கிறாள். மூத்த மகன் தம்பியைப் பார்த்து என்னடா வேலை இது.....அப்பாக்குத்தான் அறிவில்லை எண்டால் உனக்கு அறிவு எங்க போச்சுது. அந்தப் பிள்ளைக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய நீயே இப்படி செய்யலாமா மடையாஎன்று ஏசிப்போட்டு டேய் யாரங்கே வானுக்குள்ளே இறங்கி வாங்கடா இங்கே என்று கத்த அதில் இருந்து நாலுபேர் கை கட்டிக்க கொண்டு முன்னால் வந்து நிக்கிறார்கள்.......! 🦚 மயில் ஆடும் .......... 17.- சிரிக்கலாம் வாங்க
- களைத்த மனசு களிப்புற ......!
Fenomeno a une nouvelle photo. Diego Maradona, Pelé and Zinedine Zidane- விழல்
என்ன இது, யாராவது இரும்புக்கம்பியைக் சூடாக்கி முடியில் வைத்தால் முடி பொசுங்கும்தானே......நான் ஒன்றும் அவ்வளவுக்கு விவரமில்லாத ஆள் கிடையாது.........கிளுவம் கதியாலில் மோதிரவிரல் அளவு தடிமனான தடியை ஒரு முழம் அளவு பிசிறில்லாமல் வெட்டி அடுப்புத் தணலுக்குள் (சுடருக்குள் அல்ல) வைத்து விட்டு தலையை பட்டையாய் வாரி வைத்துக் கொண்டு திருவிழாவில் வாங்கிய சதுரக் கண்ணாடியை இடது கையால் பிடித்துக் கொண்டு வலது கையால் அந்தத் தணலுக்குள் இருந்த தடியை எடுத்து இரண்டு விரற்கடை இடைவெளியில் தலையில் தலையில் அழுத்தி அழுத்தி வைத்து எடுக்க வேண்டும். கொஞ்சம் சுடும்தான் பொறுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த சனி முழுகிறவரை அழகாய் இருக்கும் பின் பனிபோல் மறைந்திடும்......! 😁 எச்சரிக்கை: அப்பா , சித்தப்பா , மாமா உள்ளவர்கள் வீட்டில் இருக்கும்போது முயற்சிக்கக் கூடாது.....முயற்சித்தால் முதுகில் உதை கிடைப்பது உறுதி.......! 😴- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
கண்களில் பட்டாலும் கண்டுக்காமல் விட்டிருப்பார்கள்.......! 😴 - தம்பி நீ கனடாவோ..?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.