Everything posted by suvy
-
அதிசயக்குதிரை
- மயிலம்மா.
மயிலிறகு .......10. வாமன் கிணற்றின் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அஞ்சலை அவனை கொஞ்சம் சீண்ட நினைத்து என்ன பார்க்கிறாய்....... யார் நானா ......பின்ன இங்கு வேறுயார் இருக்கிறார்கள். உன்னைத்தான் கேட்கிறேன். நீ பார்க்கிறதை பார்த்தால் மோட்டரை லவட்டிக் கொண்டு போற பிளான்போல கிடக்கு. அவளுக்கு அவனது முதலாவது அறிமுகமே மாங்காய்க்கு கல்லெறிந்து ஏச்சு வாங்கிக் சென்ற துடிப்பான வாலிபன் மற்றும் அவளும் இப்பொழுது பலரை வைத்து வேலை வாங்கும் ஒரு முதலாளியாக இருக்கிறாள்.அதனால் அந்த கம்பீரம் அவள் குரலிலும் தொனிக்கிறது. அவனை நீ நான் போடா வாடா என்றே அழைக்கிறாள். அப்படி வேலைகள் செய்கிறதாய் இருந்தால் நாங்கள் ஏன் இப்ப பணத்துக்கு உங்களிடம் வாறம். கிணற்றில் தண்ணி நல்ல தெளிவாக இருக்கு குடிப்பம் என்றால் குழாயில் தண்ணி வரவில்லை. ஓ......அதுவா அடிக்கடி தோட்டத்துக்கு நீர் இறைப்பதால் தண்ணி தெளிவாய் இருக்கு. இது நல்ல ஊற்றுக் கிணறு.இப்ப சில நாளாய் மோட்டர் வேலை செய்யவில்லை. எல்லாம் அவர்தான் பார்க்கிறவர்.இந்த வேலையெல்லாம் அவருக்குத்தான் தெரியும். நான் மின்சார வேலை தெரிந்த ஒரு ஆளுக்கு சொல்லியிருக்கிறன். அவருக்கும் நேரமில்லை நாலுநாள் பொறுங்கோ வாறன் என்று சொல்லி இருக்கிறார். அதுதான் பயிர் எல்லாம் நீரின்றி சோர்ந்து போய் கிடக்கு. அது கிடக்கட்டும் உன்னைப் பற்றி சொல்லு, நீ என்ன செய்கிறாய். என்னைப்பற்றி சொல்ல என்ன இருக்கு. என் பெயர் வாமதேவன். நானும் சுந்தரேசனும் பாலர் வகுப்பில் இருந்து ஒன்றாகத்தான் படித்து வந்திருக்கிறோம்.அவன் நல்லா படிப்பான். நான் சுமாராய் படிப்பன். இப்ப அவன் கம்பசுக்கு தெரிவாயிட்டான். ஆனாலும் நான் படித்துக் கொண்டே எங்கட விதானையாரிடம் பகுதிநேர வேலை செய்கிறேன். அதில் கொஞ்சம் பணம் கிடைக்கும். அதைவிட அவருடன் நாலு இடத்துக்கும் போகும்போது ஒரு கெத்தாய் இருக்கும்..... அவள் உதட்டை பிதுக்கி புருவத்தைத் தூக்கி ....ம் .....பெரிய வேலைதான் (அவருக்கு தான் அடியாள் போல என்பது கூடத் இவனுக்குத் தெரியவில்லை) சரி மேல சொல்லு..... போற இடங்களில் தண்ணிக்கும் விருந்து சாப்பாட்டுக்கும் குறைவில்லை. அதை விட அதிகாரிகளோ போலீசாரே யார் பார்த்தாலும் மரியாதையுடன் பழகுவார்கள். யார் எங்கட அரசு விதானையுடனோ வேலை செய்கிறாய் ....... ஓம்.....உங்களுக்கு அவரைத் தெரிந்திருக்கும்.அவருடன்தான்.....அவர் சொல்லி நானும் கிராமசேவகர் வேலைக்கு விண்ணப்பித்து இருக்கிறேன்.அநேகமாய் ஒரு மாதமளவில் கிடைக்கலாம் என்று விதானையார் சொன்னவர். அது சரி நான் இந்த மோட்டர் அறையைப் பார்க்கலாமா .......அதுக்கென்ன பார் என்று சொல்லி கதவைத் தள்ளி திறந்து விடுகிறாள்.வாமன் உள்ளே செல்ல அவளும் பின்னால் போகிறாள். அவன் மோட்டரை கையால் சுற்றிப்பார்த்து இது சரியாய் இருக்கு என்று சொல்லி பியூஸ் போர்ட்டைத் தேட அது எதிர் சுவரில் இருக்கு.அவன் சேர்ட்டைக் கழட்டி கதவில் கொழுவிவிட்டு சாரத்தை மடிச்சு சண்டிக்கட்டு கட்டிக்கொண்டு அங்கு போகிறான். அந்த இளம் வாலிபனின் மார்பிலும் கால்களிலும் சுருள் சுருளான உரோமங்கள். அவளுக்கு தலைமுடியில் சுருள்கள் கிடையாது, ஆனால் நீளமான நீண்ட முடிகள். தன்னிச்சையாய் தன் கூந்தலை எடுத்து முன்னால் போட்டுக் கொள்கிறாள். அங்கு குவிந்திருக்கும் சாக்குகளை விலத்தி மெயின் சுவிட்சை நிறுத்தி விட்டு பியூஸ் கட்டையை புடுங்கிப் பார்க்கிறான்.அது எரிந்து போய் கிடக்கு. அங்கேயே தேடி வேறு ஒரு பியூஸை எடுத்து அதில் சொருகி அதை சரியான இடத்தில் பொருத்தி விடுகிறான். அங்கே அந்தப் பெட்டிக்கு மேல் ஒரு சாராயப்போத்தல் இருக்க அவன் அதை எடுக்கிறான்....அவன் கேட்காமலே அவளும் அது அவர்தான் வைத்திருக்கிறார். அவர் உங்க போறவாற இடமெல்லாம் தான் குட்டிப்பதற்கு வைக்கிறது வழக்கம். விரும்பினால் நீ எடுக்கலாம் என்கிறாள். அவனும் அதைத் திறந்து மறுபக்கம் திரும்பி நின்று குடிக்கிறான். பின் அவன் மெயின் சுவிட்சைப் போட பைப்பில் முதல் காற்று வந்தது. அவன் அதை பொத்திப் பிடிக்க சற்று நேரத்தில் அவன் கையைத் தள்ளிக்கொண்டு அழுக்குத் தண்ணீர் சீறிப் பாய்ந்தது. அது புஷ்வாணமாய் அறை முழுதும் பாய்கிறது. அவன் பின்னால் நின்ற அஞ்சலா அஞ்சி என்ர அம்மா என்று கத்தியபடி அவனையும் இழுத்துக் கொண்டு தடுமாறிக் கீழே விழுகிறாள். இருவரும் தெப்பலாய் நனைந்து கொண்டு இருக்கிறார்கள். அவளது நீல நைலான் சேலை நன்றாக நனைந்து உடலை சிக் என்று இறுக்கிப் பிடித்திருக்கு. வாமன் தடுமாறி எழ முயற்சிக்க அவள் இடையில் அவன் முகம் பொருந்தி இருக்கிறது. கைகள் அவளை இறுகப் பற்றியிருக்கின்றன.அந்தப் பிடியில் இருந்து விலக அவளும் பிரயத்தனப் படவில்லை.அப்படியே கொஞ்சம் நிதானித்துக் கீழிறங்க அவன்மேல் பருவச்சுமை அழுந்துகிறது. காத்து வாக்கில் பூத்த வாசம் நாசியை நிறைக்கின்றது.கல்லுபோன்ற மாதுளைகள் அவன் கன்னங்களை உரசிக்கொண்டு அவன் வெற்று மார்பில் தஞ்சமடைய இளமையில் இள மயில் உறவு தேடித் தவிக்குது.நிலமையைப் புரிந்து அவனது பிடிகள் தளர்கின்றன. அவள் தன் கைகளால் அவன் தலைமுடியைக் கோதி தன் முகத்துடன் சேர்த்துக் கொண்டு மெல்ல காதுக்குள் கம்மும் குரலில் கிசுகிசுக்கிறாள், உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கொள். இதுவரை இதுபோன்ற அனுபவம் அவனுக்கு ஏற்பட்டதில்லை. காலத்தை மறந்து ஓரிரு நிமிடங்கள் அப்படியே இருக்கிறார்கள்.அந்தச் சிறு நேரத்துக்குள் அவன் இந்தமாதிரி அனுபவமில்லாதவன் என்று புரிந்து கொண்டு அவன் தொடைகள் நடுங்குவதை தன் கால்களால் உணர்ந்து கொள்கிறாள். புல்லாங்குழல் வாசிப்பதற்குத் துவாரங்களைக் கையாலத் தெரிய வேண்டும். அவனுக்கோ கையும் ஓடவில்லை காலும் நடுங்குகிறது. குழாயால் அறை முழுதும் சீறிப் பாய்ந்த தண்ணீர் குழாய்க்குள் அடங்கி தொட்டிக்குள் சீராக விழுகின்றது. மெதுவாக அவன் கன்னத்தில் அழுத்தி ஈர முத்தமொன்றைத் தந்துவிட்டு எழுந்து தனது ஆடைகளைச் சரிசெய்து கொள்கிறாள். அவனும் எழுந்து கொள்கிறான். அவள் முகத்தைப் பார்க்க அவனுக்கு கூச்சமாக இருக்கின்றது. நிராயுதபாணியாய் இராவணன் சென்றது போல் எழுந்து சென்று அறைக்குள் எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி மிச்ச சாராயத்தையும் ஒரு மிடறில் குடித்து விட்டு மோட்டரையும் நிப்பாட்டிவிட்டு நனையாத சேர்ட்டையும் எடுத்துக்கொண்டு இருவரும் ஈரம் சொட்ட சொட்ட வெளியே வருகிறார்கள். அவன் உம் என்று வருவதை பார்த்த அஞ்சலா அவனைக் கலகலப்பாக்க நினைத்து, அவனைப் பார்த்து கண் சிமிட்டிகொண்டே நான் மீண்டும் ஒருமுறை குளிக்க வேண்டி வந்திருக்கும் நல்லகாலம் தப்பீட்டன் என்று சொல்ல அவனுக்கு கொடுப்புக்குள் சிரிப்பு வருகிறது. அவன் சொல்கிறான் இப்ப மட்டும் என்ன அந்த ஈரச்சாக்கு ஊறலுக்குள் உருண்டு பிரண்டு எங்கட உடுப்புகளும் நாறுது, போய் குளிக்கத்தான் வேணும். அப்போது அங்கு மயிலம்மாவும் வருகிறாள். என்னக்கா எல்லாம் சரியா இருக்கா..... ஓம் பிள்ளை.....என்ன இரண்டு பேரும் நனைந்து போய் வருகிறீர்கள் என்று வினவ ..... அதொன்றுமில்லை அக்கா, சில நாட்களாக மோட்டர் வேலை செய்யவில்லை.அதுதான் இவன் அதைத் திருத்தினவன்.அப்போது எதிர்பாராமல் குழாயில் இருந்து தண்ணீர் சீறி அடித்து எங்களை நனைத்துப் போட்டுது..... மயிலம்மாவும் வாமன் வலு கெட்டிக்காரன் ......எல்லா வேலைகளும் தெரியும்....உடனே பிழைகளைக் கண்டு பிடித்து செய்து போடுவான் என்று சொல்லிக்கொண்டு முன்னே செல்கிறாள். அப்போது அஞ்சலா மெதுவாக இவனிடம் ...ம்....எனக்குத்தான் தெரியும் இது இன்னும் "எலி பிடிக்கப் பழகாத பூனை" என்று மெதுவாய் அவன் காதைத் திருகிவிட்டு சொல்கிறாள். உடனே வாமன் உஸ் என்று ஜாடையால் மயிலம்மாவைக் காட்டி கேட்டிருக்கும் என்கிறான்......! 🦚 மயில் ஆடும்.......! 10.- யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் தடுக்கும் அதிநவீன AI கேமரா
இத் திட்டத்தால் தற்கொலை செய்ய தண்டவாளத்துக்கு வரும் காதலர்களும் காப்பாற்றப் படுவார்களா ......! 😁- சிந்தனைக்கு சில படங்கள்...
அப்படி ஒன்று இருந்தால் போடமாட்டார்களா ........ சும்மா யோசிக்காமல் அவசரப் படுகிறதே வேலையாய்ப் போச்சு........! 😂- ஆரோக்கிய நிகேதனம்
கொஞ்சம் வசதியானவர்கள் "சனடோஜன்" மாவும் தனியாக வாங்கி வைத்துக் குடிப்பார்கள்......! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- மயிலம்மா.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : தூவானம் இது தூவானம் இது தூவானம் சொட்டு சொட்டா உதிருது உதிருது அது தாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும் தளதளவென வளருது ஆண் : பூவாடும் இளம் கூந்தலுக்குள் புகுந்து புகுந்து ஓடுது பெண் : மேலாடை தனில் மழை விழுந்து நனைந்து நனைந்து மூடுது ஆண் : பூவாடும் இளம் கூந்தலுக்குள் புகுந்து புகுந்து ஓடுது ஆண் : மானோடும் சிறுவிழியில் இட்ட மையும் கரைந்து ஓடுது பெண் : தேனோடும் இதழ் மீது வந்து பனித்துளி போல் தேங்குது ஆண் : உட்காரச் சொல்லி நான் அழைக்கும்போது ஓட்டம் என்ன முன்னாலே பெண் : என் பக்கம் மனசை இந்த வெட்கமும் வந்து பாய்ந்திழுக்குது பின்னாலே ஆண் : தக்க நேரம் வந்து விட்டது தையல் போடு கண்ணாலே பெண் : இந்த சரசமாடக் கூடாது ஒரு தாலி கட்டும் முன்னாலே.......! --- தூவானம் இது தூவானம் ---- மயிலம்மா.
மயிலிறகு ....... 09. அக்கா நீங்கள் இப்பொழுது எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறீர்கள் என்று அஞ்சலா கேட்க மயிலம்மாவும் எங்களுக்கு ஒரு ஒரு லட்சம் வரை தேவைப்படும்போல இருக்கு என்கிறாள். உங்களின் நகைகளை நான் பார்க்கலாமா .... அதுக்கென்ன என்று சொல்லி அங்கிருந்த கிணற்றுக் கட்டில் அருகில் அமர்கிறார்கள்.பின் மயிலம்மாவும் நகைப் பையையும் பத்திரப் பையையும் அவளிடம் தருகிறாள். இவர்கள் கதைத்துக் கொண்டிருக்க வாமன் அந்தப் பெரிய கிணற்றையும் அருகிலே மோட்டர் பம்ப் அறையையும் பார்க்கிறான்.கிணற்றுக்குள் இரண்டு பெரிய குழாய்கள் இறங்கி இருக்கின்றன.மிகவும் ஆழமான கிணறு. இந்த வெய்யில் காலத்திலேயே ஒரு ஆள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் இருக்கின்றது. அப்படியே நடந்து வர கிணற்றை ஒட்டி மரக்கறி வகைகள், வெற்றிலைக்கொடிகள் சற்று தள்ளி வாழைத்தோட்டம் கரும்பு எல்லாம் செழிப்பாக இருக்கின்றன. கீரைப் பாத்திகள்தான் நீரின்றி சோர்ந்துபோய் இருக்கு. அவற்றைக் கடந்தால் பெரிய நெல் வயல் பல ஏக்கருக்கு பரந்து கிடக்கு.ஆங்காங்கே கூலியாட்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.கொட்டில்களில் மாடு, ஆடுகள்,பரணில் கோழிகள் மற்றும் தகரக் கொட்டகையில் இரண்டு டிராக்டர்கள் நிக்கின்றன . எல்லாவற்றையும் ஒரு நோட்டம் விட்டுக்கொண்டு வயல் பக்கம் வரும்போது ஒரு வயதான பெண்மணி வரப்போரம் தட்டுத் தடுமாறி நடந்து தள்ளாடி வரப்பில் சரிந்து விழுகிறாள்.வாமன் பதறிப்போய் அங்கு வேலைசெய்து கொண்டிருந்த பெண்ணையும் கூப்பிட்டுக்கொண்டு ஓடிப்போய் அந்த அம்மாவிடம் என்னம்மா செய்யுது என்று கேட்க அந்த அம்மா இடுப்பில் இருந்த பையைகாட்ட அதற்குள் ஒரு சீசாவில் சீனியும் சிறிய போத்தலில் பழச்சாறும் இருப்பதைக் கண்டு அவற்றை எடுத்து உங்களுக்கு சீனி வருத்தமா என்று கேட்டு சீனியை அவவின் வாயில் போட்டு பழசாற்றைக் குடிக்கக் கொடுக்கிறான்.அந்த அம்மாவை நிமிர்த்தி இருக்க வைக்கும்போது அந்தப் பெண்ணும் வந்துவிட்டாள்.அவள் சிறிது சிறிதாக நீரைப் பருக்கிக் கொண்டு மார்பை கைகளால் நீவி விடுகிறாள்.கொஞ்ச நேரத்தில் அந்த அம்மாள் சரியாகி விடுகிறாள்.பின் இருவரும் கைத்தாங்கலாக அவவைக் கொண்டுவந்து வீட்டுத் திண்ணையில் விடுகிறார்கள்.அந்தப் பெண்ணை அவாவுடன் இருக்கச் சொல்லிவிட்டு வாமு அங்கிருந்து கிளம்பி வருகிறான். அஞ்சலா உறுதியை மேலோட்டமாய் பார்த்து விட்டு நகைகளைப் பார்க்கிறாள். எல்லாம் கனமான நல்ல நகைகள்.அதிகம் பாவிக்காது இருந்ததால் பொலிவிழந்து கிடக்கு. புன்னைக்காய் நீரில் ஊறவைத்து பிரசால் தேய்த்தால் புதிதாக மினுங்கும் என்று நினைத்துக் கொண்டு சரி அக்கா நான் முன்பே சொன்னபடி இந்தத் தொழில் இனிமேல் செய்வதில்லை என்னும் முடிவில் தான் இருந்தேன்.ஆனால் உங்களின் நிலமையைப் பார்க்கவும் எனக்கு ஒரு மாதிரி இருக்குது. அதனால் நான் உங்களுக்கு பணம் தருகிறேன்.என்னிடம் பணம் வாங்கியதாக யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்லிப் பின் அந்தப் பணத்துக்கு உரிய வட்டிகள் பற்றி கதைத்து விட்டு அவற்றை எடுத்துக் கொண்டு உள்ளே போகிறாள். அங்கு அவர்களின் இரும்புப் பெட்டியைத் சாவி போட்டு திறந்து பல இடங்களில் திருகித் திறந்து அவற்றை வைக்கும்போது பார்க்கிறாள் அதில் அவள் பெற்றோர்களின் காணி உறுதி மற்றும் அவர்களது நகைகள் இன்னும் யார்யாருடையதோ எல்லாம் இருக்கின்றன.அதை அப்பப்ப திறந்து பார்த்து நினைப்பதுண்டு இதற்காகத்தானே எங்கள் குடும்பமும் அழிந்து,எனது படிப்பும் பாழாக்கி, வாழ்க்கைக் கனவுகளையும் இந்த மனிதன் அழித்து விட்டாரே.ஆனால் இப்ப இவையாவும் என் கையில்.என் பெற்றோரும் என்னுடன் வந்து இருக்கிறார்கள். இவர் போகும்போது மக்களின் வயித்தெரிச்சலைத் தவிர வேறு என்னத்தைக் கொண்டு போனவர். இந்தக் காலத்தின் கோலத்தை என்னவென்று சொல்வது. சிறிது நேரம் தன்னிரக்கத்தில் மூழ்கியவள் பின் தன் கையிலிருந்த பைகளை உள்ளே வைத்து விட்டு தேவையான சில பணக்கட்டுகளை எடுத்துக் கொண்டு பெட்டியைப் பூட்டும்போது என்ன நினைத்தாளோ தெரியாது அந்த நகைகள் இருக்கும் பையை மட்டும் எடுத்துக் கொண்டு மயிலம்மாவிடம் வருகிறாள். அவளிடம் பணத்தைக் குடுத்து எண்ணிப்பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு பையுடன் நகைகளை அவளிடம் தந்து அக்கா நான் அந்தக் காணிப் பத்திரத்தை மட்டும் எடுத்து வைத்துள்ளேன், நீங்கள் இந்த நகைகளைக் கொண்டுபோய் மகளின் திருமணத்தை நன்றாக நடத்துங்கள். கூடிய சீக்கிரம் பணத்தைத் தந்து பத்திரத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல மயிலம்மாவும் வாஞ்சையுடன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு பிள்ளை இந்த உதவியை நான் ஒருநாளும் மறக்க மாட்டேன், நீ நல்லா இருக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறுகிறாள். என்னக்கா நீங்கள்......அன்று எனக்கு எவ்வளவு பெரிய உபகாரம் செய்தனீங்கள். சரி....சரி....இங்கு காத்தடிக்குது நீங்கள் அங்கு திண்ணையில் போய் இருந்து பணத்தை எண்ணி எடுங்கள் என்று சொல்ல ....அவளும் உன்னை நான் நம்புகிறேன் அஞ்சலா ......அப்படி சொல்லாதையுங்கோ, பணம் சம்பந்தப்பட்ட விசயம் நீங்கள் எண்ணி எடுப்பதுதான் சரி. அங்க அந்தத் திண்ணையில் இருந்து ஆறுதலாய் எண்ணுங்கள் என்று அனுப்பி வைக்கிறாள். பின் மோட்டாரையும் கிணத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும் வாமுவிடம் வருகிறாள். மயிலம்மாவும் பணத்தை எண்ணுவதற்காக அந்தத் திண்ணைக்குப் போகிறாள். அங்கு மயங்கி விழுந்த அம்மா களைப்புடன் இருக்க பக்கத்தில் அந்தப் பெண் பனையோலை விசிறியால் விசிறிக்கொண்டு இருக்கிறாள். மயிலம்மாவும் சென்று கொஞ்சம் தள்ளி அமர்கிறாள். அந்த அம்மாவும் அந்தப் பெண்ணிடம் பிள்ளை அந்தமருந்தை எடுத்துத் தானை என்று சொல்ல அதை புரிந்து கொண்டு அந்தப் பெண்ணும் அங்கிருந்த போத்தல் சாராயத்தை எடுத்து வந்து குவளையில் விட்டு நீர் கலந்து கொடுக்கிறாள். சரி பிள்ளை நீ போய் வேலையைப்பார் இவ இங்கு இருக்கிறாதானே என்று சொல்ல அவளும் அம்மா இவவை கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கள் அங்கு மயங்கி விழுந்துட்டா என்று சொல்லிவிட்டு போகிறாள். மயிலம்மாவும் அவளிடம் என்ன நடந்தது என்று கேட்க அது பிள்ளை சீனி குறைஞ்சு போச்சு அதுதான் மயக்கமாயுட்டன். நல்ல காலம் ஒரு பொடியன் கண்டுட்டு ஓடிவந்து காப்பாற்றி இங்க கொண்டுவந்து விட்டவன். மயிலம்மா பக்கத்தில் போத்திலைப் பார்க்க அது அப்பப்ப கொஞ்சம் மருந்து குடிக்கிறது. காலம் முழுக்க காணி, பூமியோட கிடந்து உழைஞ்சு உடம்பு களைச்சுப் போச்சு. இரவில நித்திரையும் வருகுதில்லை.நீங்கள் எடுக்கிறனீங்களோ. சீ சீ எப்போதும் இல்லை. நீங்கள் சொன்னமாதிரி வயல் வேலைகள் செய்துபோட்டு வந்தால் உடம்பு அலுப்பாய் இருக்கும். அப்பொழுது கொஞ்சம் எடுக்கிறதுதான். அப்ப அந்த அம்மா தண்ணியையும் தண்ணிப் போத்தலையும் அவள் பக்கம் அரக்கி வைக்கிறாள். மயிலம்மாவும் தங்கள் வந்த வேலை சுலபமாய் முடிந்ததால் மனசுக்குள் ஒரு புளுகம் ஏற்பட அவற்றை எடுத்து சீராகக் கலந்து கொஞ்சம் கொஞ்சமாய் குடித்துக் கொண்டு பணக்கட்டைப் பிரித்து எண்ணுகிறாள்.......! 🦚 மயில் ஆடும்.........! 09.- ஆரோக்கிய நிகேதனம்
இப்பதான் ஒவ்வொன்றாய் கேட்டுக் குடுக்கிற பழக்கம் வந்திருக்கு.....அதிலும் காரணம் இருக்கு, அநேகமானவர்கள் விதவிதமான வருத்தங்களுடன் குளிசைகளும் கட்டிக்கொண்டு திரிகின்றனர்.....நாங்கள் பொதுவா வெய்யில் என்றால் பழரச பானங்களும் குளிர் என்றால் தேனீரோ கோப்பியோ போட்டுக் குடுக்கிறதுதான் வழக்கம்......! 😂- உணவகத்தில் தங்கத்தூள் கலந்து செய்த பருப்பு குழம்பு
அதுதெரியாது ஆனால் அவர்கள் கழிக்கிறதை தனியாக எடுத்து தண்ணீரில் அரித்து சேகரித்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும். செய்வார்களோ தெரியாது......மொத்தத்தில் பருப்பு 100 === 1200 லாபம் ......! 😂 ஊரிலும் தங்கபஸ்பம் பீடா என்று இருந்தது.கே.கே.எஸ் வீதியில் வசந்தா சலூனுக்கு அருகில்...... இந்தியாவிலும் இருக்கும். செட்டிமார் தாம்பூலம் போடுவதற்கென்றே பிறந்தவர்கள். எம்.ஜி.ஆர்.....அது போடுவதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்......!- இலை என்றால் உதிரும்
இதை ஏன் பிரச்சினையாக நினைக்கிறீர்கள்......பனியைத் தள்ளுவதிலும் பார்க்க இலைகளை அள்ளுவது சுலபம் அல்லவா .....! 😂- சிந்தனைக்கு சில படங்கள்...
மேலே இருக்கும் படத்துக்கும் இதுக்கும் விட்டகுறை தொட்ட குறை இருக்கும் போல.......! 😂- களைத்த மனசு களிப்புற ......!
- மயிலம்மா.
- அதிசயக்குதிரை
மனசார நினைத்தால் எதுவும் நடக்கும்.....ஆனால் நல்லதே நினைக்க வேண்டும்......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : மொட்டு மொட்டு மலராத மொட்டு கட்டு கட்டு எனை அள்ளி கட்டு பெண் : ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு சிட்டு சிட்டு சிங்கார சிட்டு பெண் : ஆணழகா உன் அடிமை இங்கே நீ தேன் அள்ளி தூவிட வா தோளிரண்டில் உன் இளங்கிளி நான் நீ தினம் தினம் கூடிட வா பெண் : தமிழ் தரும் சுவை என உன் வாய் மொழி கேட்டேன் பெண் : அது தரும் சுகம் என விழி பார்வையை பார்த்தேன் பெண் : { உந்தன் கையில் பெண்ணாக வேண்டும் உன்னால் பெண்ணை பண்பாட வேண்டும் ஒன்றும் ஒன்றும் மூன்றாக வேண்டும் என்றும் நீயே நான் ஆக வேண்டும் } (2) பெண் : இலக்கியம் எனதுடலே வா நீ வா இலக்கணம் உனதுருவே தா நீ தா தேவா பெண் : எனை தொடு வரம் கொடு உயிர் வாழ்ந்திட கேட்டேன் மலர் உடல் மணம் பெற தினம் தேவனை பார்த்தேன் பெண் : { பெண்மை என்றும் உன்னோடு தஞ்சம் பெண்ணில் இன்பம் கொண்டாடும் மன்றம் முத்தம் என்னும் வித்தாடு நித்தம் நித்தம் நித்தம் பித்தான சித்தம் } (2) பெண் : இளமையின் ரகசியமே வா நீ வா இது தினம் அவசியமே தா நீ தா தேவா......! --- மொட்டு மொட்டு மலராத மொட்டு ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம்........! 😁- நான் கண்ட யாழ்ப்பாணம்!!
கண்ணுக்கு தெரியாதபடி ஒரு இராணுவச் சிறைக்குள் இருக்கும் நகரம் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்......!- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- மயிலம்மா.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.