Everything posted by suvy
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- மயிலம்மா.
மயிலிறகு ........... 13. வாமன் அந்த சாவிகளைப் பயன்படுத்தி யந்திரத்தை மூடியிருந்த இருபக்கப் பெட்டிகளையும் கழட்டிவிட்டு அழுக்கேறியிருந்த பில்டர், பிளக் எல்லாவற்றையும் சுத்தமாக்கி மீண்டும் பொருத்தி விடுகிறான்.பின் அதில் சாவிபோட்டு பொத்தானை அமுக்க அது இயங்கத் தொடங்கி விட்டது. சிறிது நேரம் அதை அப்படியே ஓடவிட்டு நிப்பாட்டுகிறான். பின் பக்கத்துப் பெட்டிகளை பூட்டும்போது அதில் ஏதோ நெகிழிப் பையில் சுற்றியபடி இருக்க முதலில் அதை வாகனப் புத்தகம் என்று நினைத்தவன் எதுக்கும் பார்ப்பம் என்று எடுத்துக் பார்க்க அதில் வாகனப் பத்திரத்துடன் தனியாக ஒரு கட்டுப் பணமும் இருக்கு.அதைமட்டும் பூட்டாமல் அருகில் வைத்து விட்டு அருகில் இருந்த குழாயில் தண்ணிர் எடுத்து வண்டியை நன்றாக கழுவித் துடைத்து விடுகிறான். அப்போது அஞ்சலா ஒரு பையுடன் அங்கு வருகிறாள். அஞ்சலா இங்கு கொஞ்சம் வாங்கோ என்று அழைத்து அந்தப் பணக்கட்டை எடுத்து இது இங்கே இருந்தது என்று சொல்லித் தருகிறான். அதை அவள் வாங்கிப் பார்த்துக் கையில் வைத்துக் கொண்டு அது சரி வண்டிக்கு நீ முன்பணம் தரவேண்டும் என்கிறாள்.அவனும் அதுக்கென்ன என்று சொல்லி இப்பதான் விதானையார் சம்பளப்பணம் தந்தவர் என்று அதில் இருந்து ஒரு ஆயிரம் ரூபாவை எண்ணிஎடுத்து மீண்டும் பொக்கட்டில் தேட அவள் என்ன என்று கேட்கிறாள்......அதுவந்து இன்னும் ஒருரூபாய் தேடுகிறேன் என்று சொல்ல அங்கிருந்த ஆச்சி தனது கொட்டப்பெட்டிக்குள் இருந்து ஒரு ரூபா நாணயத்தை எடுத்து அவன் கையில் தர அதை அப்படியே அஞ்சலாவின் கைகளில் தருகிறான். அவளுக்கு அவன் செயல்களைப் பார்க்க சிறுபிள்ளைத்தனமாயும் சிரிப்பாகவும் இருக்கிறது. மேலும், உன்னிடம் யாராவது இந்த சைக்கிள் சம்பந்தமாய் ஏதாவது கேட்டால் நான் அதை திருத்தத் தந்தது என்று சொல்லி அவர்களை என்னிடம் அனுப்பு என்கிறாள். பின் தன் கையில் இருந்த பையை வண்டியின் பக்கப் பெட்டியில் வைத்து விட்டு இதில் கொஞ்சம் வெற்றிலை, தேசிக்காய், மாங்காய் பணியாரம் எல்லாம் இருக்கு கொண்டுபோய் உன் வீட்டுக்கும் மயிலக்கா வீட்டுக்கும் குடு என்கிறாள். அவனும் அவளுக்கு மிகவும் நன்றி சொல்லி விட்டு மோட்டார் சைக்கிளை வீதிக்கு உருட்டிக்கொண்டு வந்து சர் என்று சீறிக்கொண்டு பறக்கிறான். வீட்டுக்கு வர அவன் தாய் தம்பி உனக்கு ஒரு தபால் வந்திருக்கு, அப்பாதான் கையெழுத்துப் போட்டு வாங்கினவர் என்று சொல்லிக் குடுக்கிறா. அதோடு கொஞ்ச நேரத்துக்கு முதல் மயூரியும் வந்திருந்தவ. உன்னை அங்காலுபக்கம் காணேல்லயாம் ஏதும் சுகயீனமோ என்று பார்க்க வந்தவ. ஓமன அம்மா இப்ப கொஞ்சம் வேலைகள் கூட அதுதான் அங்காலுபக்கம் போகேல்ல. எனக்குத் தெரிந்த ஆட்கள் இந்த மோட்டார் சைக்கிளை வச்சு பாவிக்கச்சொல்லி தந்திருக்கினம் என்று சொல்லி விட்டு கடிதத்தைப் பிரித்துப் படிக்கிறான். அது அவன் கிராமசேவகர் நியமனத்துக்கான கடிதம். அந்த நல்ல செய்தியை தாய் தகப்பனிடம் சொல்லிவிட்டு நாளைக்கு அரசு விதானையிடம் சென்று அதற்குரிய சம்பிரதாயங்களைச் செய்ய வேண்டும் என்று சொல்கிறான். இனி நான் கிராமசேவகர் அம்மா என்று சொல்லியபடி பக்கப் பெட்டியைத் திறந்து பையை எடுத்து தாய்க்கு அஞ்சலா தந்த பொருட்களை எடுத்துக் குடுக்கும்போது அங்கு அவன் அஞ்சலாவிடம் குடுத்த பணப்பை இருக்கின்றது. அஞ்சலா நான் உங்களுக்கு ரொம்ப ரொம்ப கடமைப் பட்டிருக்கிறேன் என்று கண்களை மூடி சொல்லிக் கொள்கிறான். சரியம்மா நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வாறன் என்று சொல்லிவிட்டு நேராக கடைத்தெருவுக்கு செல்கிறான். அங்கு ஒரு கடைக்குள் சென்று தொலைபேசி வாங்கி சுந்துவுக்கு போன் செய்ய சிறிது நேரத்தில் சுந்துவுக்கு தகவல் போய் அவன் வந்து தொடர்பு கொள்கிறான். அவனிடம் வைத்தி வீட்டில் பணம் வாங்கியதில் இருந்து இன்று தனக்கு வேலை கிடைத்தது வரை சொல்கிறான்.சுந்துவும் தான் கல்யாணத்துக்கு ஒரு கிழமைக்கு முன் வருவதாகச் சொல்கிறான். பின் அங்கு ஒரு புடவைக்கு கடைக்கு சென்று சில பல புடவைகள்,வேட்டிகள், காற்சட்டை சேர்ட்டுகள் என்று எல்லோரையும் நினைத்து தனித்தனியாக பார்சல் பண்ணி எடுத்துக் கொள்கிறான். இப்பொழுது கையில் நிறையப் பணம் இருக்கின்றது அத்துடன் வேலையும் கிடைத்திருக்கு.அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி, இன்று யார் முகத்தில் முழித்தேனோ தெரியவில்லை. வெளியே வரும்போது அங்குள்ள பொம்மை அணிந்திருந்த சுடிதாரைப் பார்த்ததும் அஞ்சலாவின் நினைவு வர அவளுக்கு இது மிகவும் அழகாய் இருக்கும் என்று நினைத்து அதோடு அவள் தாய் தந்தைக்கும் சேர்த்து ஆடைகள் வாங்கிக் கொள்கிறான். பின் செருப்புக்கு கடைக்கு சென்று நல்ல நல்ல செருப்புகள் மற்றும் பாட்டா செருப்புகள், இனிப்புகள் சொக்கிலேட் எல்லாம் வாங்கிக் கொண்டு மீண்டும் வீட்டுக்கு வந்து தாயிடம் சேலைகள் வேட்டிகள் இருக்கும் பார்சலைக் குடுத்து விட்டு அஞ்சலா வீட்டுக்கு வருகிறான். அப்போது அஞ்சலா திண்ணையில் இருந்தவள் மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டதும் எதோ நினைவில் வைத்தி என்று நினைத்து ஓடிவந்து கேட்டைத் திறக்கிறாள். அங்கு சைக்கிளுடன் வாமனைக் கண்டதும் ஒரு நிமிடம் தனது செயலை நினைத்து வெட்கம் வருகிறது. வாமனும் சைக்கிளை ஸ்ராண்டில் நிப்பாட்டி விட்டு என்ன சிரிக்கிறீங்கள் என்று கேட்டுக்கொண்டே ஒரு பார்சலைக் கொண்டு வந்து அவளிடம் தருகிறான். அவளும் ஒன்றுமில்லை என்று சொல்லி விட்டு அதை வாங்கி அவன் முன்பே திறந்து பார்க்கிறாள். அதில் வேட்டி சேலைகளுடன் ஒரு அழகான சுடிதாரும் பொன்னிற வாருடன் ஹீல்ஸ் வைத்த செருப்பும் இருக்கிறது. அவளுக்கு கண்கள் கலங்கி விட்டன. இப்படி ஒரு பரிசு இதுநாள் வரை எனக்கு யாரும் தந்ததில்லை. நீ எனக்குத் தந்தது பெரிதில்லை என் பெற்றோரையும் நினைத்து வாங்கிக் கொண்டு வந்தது என்னை என்னவோ செய்யிறதெடா ......சீ ....போடா....என்னை கொஞ்சம் தனியா விடுடா....நிறைய அழவேனும் போல் இருக்குடா. அந் நிலையிலும் அவள் உன் பெற்றோருக்கும் உடுப்புகள் எடுத்தனியாடா என்று கேட்க ....வாமனும் ஓம் அவைக்கும் எடுத்து அங்கேயும் குடுத்து விட்டுத்தான் வருகிறேன். பின் அவன் அவளை நெருங்கிச் சென்று அவளது கைகளை எடுத்து சிறிது நேரம் தன் கைகளுக்குள் பொத்திப் பிடித்திருந்து விட்டு எதுவும் பேசாமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு மயிலம்மா வீட்டுக்கு வருகிறான்........! 🦚..........மயில் ஆடும்.......... 13.- வாழ்ந்து பார்க்க வேண்டும்
150,000 யூரோக்கள் கிடைத்ததா .........முதலில் அதைச் சொல்லுங்கள்........! 😂 மற்ற இருவரையும் இன்னும் இருபது வருடங்களுக்குப் பிடித்தாலும் பரவாயில்லை........!- அன்றுபோல் இன்று இல்லையே!
நல்ல கவிதை..........பாராட்டுக்கள் கோபி ..........! 👍- அதிசயக்குதிரை
Ram P · This guy donated 11 bicycles to students who walk to school around 4+ kilometers Note- He is an daily labour.. Really great.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- கொஞ்சம் ரசிக்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் ........! 😍 பாசம் படத்தில் கல்யாணகுமார் & ஷீலா ......so aweet ......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்த கூறு யாரிடத்தில் உன் மனசு போச்சு நூல போல உன் உடம்பு ஆச்சு வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு வாய விட்டு போனதென்ன பேச்சு ஆத்தங்கரை அந்தப்புரம் ஆக்கி கொள்ளவா அந்த அக்கரைக்கும் இக்கரைக்கும் கோட்டை கட்டவா மாமன் கையில் பூவை தந்து சூடி கொள்ளவா அடி ஆசை என்னும் ஊஞ்சல் கட்டி ஆடி கொள்ளவா சொல்லு சொல்லு திட்டமென்ன சொல்லுவது கஷ்டமா பொத்தி பொத்தி வச்சதென்ன என்னென்னவோ இஷ்டமா கூவாம கூவுறியே கூ-கூ கூ-கூ பாட்டு மாத்தாம மாத்திபுட்ட சொக்கு பொடி போட்டு ஊரை எல்லாம் சுத்தி வந்த ஒத்தக்கிளியே இப்போ ஓரிடத்தில் நின்றதென்ன சொல்லு கிளியே சொந்த பந்தம் யாரும் இன்றி வந்த கிளியே ஒரு சொந்தம் இப்போ வந்ததென்ன வாசல் வழியே வேரு விட்ட ஆலங்கன்னு வானம் தொட பாக்குது வானம் தொடும் ஆசையில மெல்ல மெல்ல பூக்குது பூ பூவா பூக்க வச்ச மாமன் அவன் யாரு பாடுகிற பாட்டுலதான் நீயும் அதை கூறு வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு வாய விட்டு போனதென்ன பேச்சு.......! --- பூங்குயிலே பூங்குயிலே கேளு---- மயிலம்மா.
மயிலிறகு......... 12. சில நாட்களாக வாமன் மயிலம்மா வீட்டுப் பக்கம் போகவில்லை.அவனுக்கு அதிகமான வேலைப்பளுவும் ஒரு காரணம்.அன்று அரசு விதானையுடன் சென்று இரு சகோதரர்களுக்கான எல்லைப் பிரச்சினையைத் தீர்த்து விட்டு அவர்கள் கோழி அடித்து விருந்து வைக்க சாப்பிட்டுவிட்டு இருவரும் விதானையாரின் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கிறார்கள்.அப்போது விதானையார் ஒரு பேரூந்து தரிப்பிடத்தில் வண்டியை நிறுத்தி இந்தாடா வாமு நான் கனநாளாய் உனக்கு காசு தரவில்லை, இப்ப இதை வைத்துக்கொள் பிறகு கணக்கு பார்த்துக் கொள்ளலாம்.இப்பவெல்லாம் நீ தனியாக சென்று வேலைகள் செய்யுமளவு தேறி விட்டாய். அநேகமாய் இந்த வாரத்தில் கூட உனக்கு வேலைக்கு கடிதம் வந்து விடும். நீ தினமும் தபால்காரரை விசாரித்துப் பார்.இப்ப எனக்கு இங்கால சில வேலைகள் இருக்கு, நீ பேரூந்தில் வீட்டுக்குப் போ என்று சொல்லி விட்டுப் போகிறார். அவன் பேரூந்தை எதிர்பாராமல் வழியில் வரும் சைக்கிள்களிலோ ட்ராக்டர்களிலோ செல்லலாம் என்று நினைத்து நடந்து வருகிறான். அப்படி வரும் வழியில் வட்டி வைத்தி வீட்டை கடக்கையில் ஒரு பெண் ஓடிவந்து அவனை மறித்து அண்ணா உங்களை அம்மா ஒருக்கால் வந்துட்டுப் போகட்டாம் என்று சொல்ல, அவள் அன்று அந்த அம்மா மயங்கி விழுந்த போது ஓடிவந்து ஒத்தாசை செய்த பெண் என்று கண்டு என்ன மோட்டார் வேலை செய்யவில்லையா என்று கேட்கிறான். சீச்சீ அதெலாம் நல்லா வேலை செய்யுது நீங்கள் வாங்கோ என்று சொல்லி முன்னாள் போகிறாள். வீட்டுக்கு வர கேட்டுக்கு அருகில் அஞ்சலா நிக்கிறாள். என்ன பிறகு உன்னை இந்தப் பக்கம் காணேல்ல....சரி....சரி ...உள்ளேவா உனக்கு நன்றி சொல்லத்தான் கூப்பிட்டானான். வேறு ஒன்றுமில்லை என்பதை நமுட்டுச்சிரிப்புடன் கொஞ்சம் அழுத்திச் சொல்கிறாள். எதுக்கு நன்றி......உண்மையிலேயே நாங்கள்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.இக்கட்டான நேரத்தில் நீங்கள் செய்த உதவி பேருதவி. (இருவரும் திண்ணையில் அமர்கிறார்கள். அவளின் தாயார் அருகில் கால்களை நீட்டியபடி வெற்றிலை இடித்து கொண்டிருக்கிறார்). அதை விடுடா ....அதெல்லாம் தொழில். நான் ஒன்றும் சும்மா செய்யவில்லை.வட்டிக்குத்தான் தந்தனான்.இன்னும் காணி உறுதி என்னிடம்தான் இருக்கு மறந்திடாத. இது அதில்லை.அண்டைக்கு நீ வரப்பில் மயங்கி விழுந்த என்ர அம்மாவை தகுந்த நேரத்தில் காப்பாற்றிக் கொண்டு வந்து விட்டதாக இவளும் அம்மாவும் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.அது எவ்வளவு பெரிய உதவி தெரியுமா. அது நான் என்ர அம்மாவாய் இருந்தால் செய்ய மாட்டனா, யாராய் இருந்தாலும் அதை செய்திருப்பார்கள். அவள் அருகில் நின்ற பெண்ணைப் பார்த்து எடி கவிதா, உள்ளே போய் பால் தேத்தண்ணியும் போட்டுகொண்டு பனங்காய் பணியாரத்தையும் ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு வா என்று சொல்ல அவளும் உள்ளே போகிறாள். அம்மா சுகமாக இருக்கிறாவா .....ஓம் இந்த நீரிழிவு வருத்தத்தால கொஞ்சம் கவனமாய் அவவைப் பார்த்துக் கொள்ள வேணும்.ஆனாலும் மனுசி சொல்வழி கேட்கிறேல்ல....ஒளிச்சு வைச்சு இனிப்புகள் சாப்பிடுது. அப்போது வீதியால் ஒரு நாய் போக மோட்டார் சைக்கிள் அருகில் படுத்திருந்த ஜிம்மி ஆக்ரோஷமாய் குரைக்கிறது. ஜிம்மி சும்மா இரு என்று அடக்கிய அஞ்சலா இதுக்கொன்றும் குறைச்சலில்லை அவரைமாதிரி குரைக்கத்தான் தெரியும் ஒரு சதத்துக்கு பிரயோசனமில்லை என்று சொல்ல அது புரிந்ததுபோல் எழுந்து வாலை பின்னங் கால்களுக்குள் மடக்கிக் கொண்டு அப்பால் போகிறது. திண்ணையில் இருந்த மோட்டார் சைக்கிளைப் பார்த்த வாமன் நீங்கள் இது ஓட்டுவீங்களா என்று கேட்கிறான்...... இல்லை சைக்கிள் ஓட்டுவன்.அதில்தான் பாடசாலைக்கும் போய் வந்தனான். உன்ர வேலைகள் எல்லாம் எப்படிப் போகுது......இப்பவும் வேலையாலதான் வருகிறேன். விதானையார் என்னை பேரூந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டுட்டுப் போகிறார். பஸ்ஸை காணேல்ல வந்தால் மறித்து ஏறுவம் என்றுதான் நடந்து வந்தனான். அப்ப இண்டைக்கு உனக்கு நல்ல விருந்து சாப்பாடும் தண்ணியும் கிடைத்திருக்கும் இல்லையா. ....ம்.....அதெல்லாம் கிடைத்ததுதான், ஆனால் இப்ப சாராயம் குடிக்க வெறுக்குது. சும்மா அவங்களுக்காக கொஞ்சம் எடுத்தனான். பின் அந்த மோட்டார் சைக்கிளைப் பார்த்தபடி நீங்கள் இதை விக்கிற எண்ணமிருந்தால் எனக்குத் தருவீங்களா என்று கேட்கிறான். எனக்கு அதை விக்கிற யோசனையில்லை.என்ன இருந்தாலும் அவர் பாவிச்சது.அவற்ர பிள்ளைகளும் இருக்கினம்.அண்டைக்கு ஒருநாள் சரியான மழை அவர் நல்ல வெறியில இந்த சைக்கிளோட சறுக்குப்பட்டு பள்ளத்துக்க விழுந்து எழும்ப முடியாமல் அப்படியே இறந்து போனார்.அப்போது இரவுநேரம் அருகில் யாரும் இல்லை. இதுவும் சேதமாயிட்டுது. பின் உதை அப்படியே கொண்டுவந்து திண்ணையில் விட்டதுதான்.அப்படியே நிக்குது. அதுக்கில்லை ஓரு மோட்டார் சைக்கிள் வாங்கத்தான் பார்த்துத் திரியிறன். ஒன்றும் தோதாக அம்பிடவில்லை. அதுவும் இப்ப வேலையும் அதிகம். அத்துடன் விரைவில் கிராமசேவகர் வேலையும் கிடைத்து விடும்.வெறும் சைக்கிளுடன் அந்த வேலை பார்க்கிறது சிரமம். அதுதான் கேட்டனான். ஓ......இப்பதான் ஞாபகம் வருது, நீ மோட்டார் சைக்கிள் வாங்க வைத்திருந்த காசைத்தான் உன்ர நண்பனுக்கு குடுத்ததாக அக்கா சொன்னவ. உண்மைதான் .....நானும் சுந்துவும் சிறுவயதில் இருந்தே அவ்வளவு பிரியமான நண்பர்கள். அவனளவு எனக்கு வேறு நண்பர்கள் கிடையாது.அப்படித்தான் அவனுக்கும். அவனது படிப்பை விட மோட்டார் சைக்கிள் ஒன்றும் பெரிதில்லை. (அப்போது கவிதா மூவருக்கும் பால்தேநீரும் பணியாரத் தட்டையும் கொண்டு வந்து வைத்து சீனி போடாத தேநீரை ஆச்சியின் அருகில் வைத்த விட்டுப் போகிறாள்). சரி...நீ முதல்ல அதை எடுத்து திருத்தி கொஞ்சநாள் ஓடிப்பார். பின்பு உனக்குப் பிடித்திருந்தால் நான் அக்காவிடம் கதைத்து விட்டு பிறகு விலையைப் பேசிக்கொள்ளலாம். அவன் கண்கள் மின்ன இப்பவே எடுக்கவா........ ....ம் பாரேன் அவற்ரை அவசரத்தை...... சரி போய் எடு. அவன் எழுந்து சென்று அந்த ஹோண்டா 200 மொடல் மோட்டார் சைக்கிளை செல்லமாய் வருடிவிட்டு மெதுவாக உருட்டிக்கொண்டு வந்து முற்றத்தில் நிறுத்தி விட்டு சாவியைப் போட்டு பட்டனை அமுக்கினால் அது இயங்கவில்லை. அதை உதைத்துப் பார்த்தும் ம்கூம்..... பின் அவன் அதன் பெட்டியைத் திறந்து பார்க்க அதற்குள் சாராயப்போத்தல்,மிக்ஸர் பைக்கட், ரெண்டு ஜட்டி, ஒரு வேட்டி துவாய் அவற்றின் அடியில் சில சாவிகள் குறடு,திருப்புளியுடன் சில தாள்காசுகள் சில்லறைகள் என்று இருக்கின்றன.அவன் ஆயுதங்களை தவிர்த்து ஏனையவற்றை எடுத்து அவளிடம் தருகிறான். அவளும் அவைகளை வாங்கிக் கொண்டு இன்னும் எந்தெந்தக் கடங்காரங்களின் வீட்டில் ஜட்டிகளும் வேட்டிகளும் கிடக்குதோ தெரியாது என்று சொல்லியபடி அவற்றை வாங்கிக் கொண்டு உள்ளே போகிறாள்........! 🦚 மயில் ஆடும்.............. 12.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை ..........! 💐- உணவு செய்முறையை ரசிப்போம் !
- தோற்கும் விளையாட்டு
இது கணனி யுகம்.....எல்லாவற்றிலும் கணனி உட்புகுந்து விட்டது....... சாதாரணமானவர்களினால் ஓரளவுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது.....ஏதோ பேருக்கு ஒரிருவருக்கு கிடைக்கும் ......அவ்வளவுதான்.....!- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : { கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே } (2) ஆண் : { அடி மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே } (2) பெண் : கண்ணு வலது கண்ணு தானா துடிச்சுதுனா ஏதோ நடக்குமின்னு பேச்சு ஆண் : மானம் குறையுமின்னு மாசு படியுமின்னு வீணா கதை முடிஞ்சு போச்சு பெண் : ஈசான மூலையில லேசான பல்லி சத்தம் மாமன் பேரை சொல்லி பேசுது ஆண் : ஆறாத சோகம் தன்னை தீராம சேத்து வச்சு ஊரும் சேந்து என்னை ஏசுது பெண் : மாமா மாமா உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே ஆண் : தென்னன்கிளையும் தென்றல் காத்தும் குயிலும் அடி மானே உன்னை தினம் பாடும் பெண் : காஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும் இந்த மாமன் கதையை தினம் பேசும் ஆண் : பொள்ளாச்சி சந்தையில கொண்டாந்த சேலையில சாயம் இன்னும் விட்டு போகல பெண் : பன்னாரி கோயிலுக்கு முந்தானை ஓரத்தில நேர்ந்து முடிச்ச கடன் தீரல ஆண் : மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே......! --- கூண்டுக்குள்ள என்ன வெச்சு ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு......! 😍- மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு
- சிரிக்கலாம் வாங்க
எங்கே போகும் இந்த வாழ்க்கை யாரோ யார் அறிவாரோ .........! 😂- கொஞ்சம் சிரிக்க ....
- வெறுப்பு!
சில வரிகளில் செழுமையான கருத்தான கவிதை .......! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கள்ளி மலர்......யார் பார்த்திருக்கிறீர்கள்......! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- மயிலம்மா.
மயிலிறகு............ 11. மூவரும் வீட்டிற்குள் வருகிறார்கள். மயிலம்மா கேட்கிறாள் நீங்கள் ஆடுகள் கோழிகள் விக்கிறனீங்களோ என்று. ஓம் அக்கா ஏன் என்று கேட்க சிலநேரம் வீட்டு விசேசங்களுக்கு தேவைப்படும் அதுதான் விசாரிச்சானான். அங்கு ஒரு மூலையில் பெட்டியில் விசேஷ சாராயங்கள் இருக்குது.வாமன் அவற்றைப் பார்ப்பதைக் கண்ட அஞ்சலா வேணுமென்றால் ரெண்டு போத்தல் எடுத்துக் கொண்டு போ என்கிறாள். அவன் தயங்குவதைப் பார்த்து தானே எழுந்து சென்று ரெண்டு போத்தல் எடுத்து வந்து அவனிடம் தருகிறாள். பின் அவர்கள் அங்கிருந்த ஆச்சியிடம் சொல்லிவிட்டு அவளிடம் விடை பெற்றுக்கொண்டு செல்கிறார்கள். போகும்போது ரொம்ப நன்றி பிள்ளை ஏதாவது உதவிகள் தேவையென்றால் யாரிடமாவது சொல்லியனுப்பு நாங்கள் வந்து செய்து தருகிறோம். வெளியே மாலைச் சூரியனின் பொன்னிற வெய்யில் இதமான சூடாக இருக்கின்றது. இருவரும் தங்கள் வந்த வேலை முடிந்த மகிழ்ச்சியில் கதைத்துக் கொண்டு பழையபடி சைக்கிளில் வருகின்றார்கள். என்னடா உன்ர உடுப்புகள் அவியவிட்ட நெல்லுமாதிரி நாறுது.அது மயிலம்மா அந்தப் பம்மில் இருந்து திடீரென்று தண்ணி பாய்ந்து வந்ததா அந்தப் பெட்டை பயந்து என்னையும் தள்ளிக்கொண்டு சாக்குகளுக்கு மேல விழுந்திட்டுது.அதால சாக்கெல்லாம் ஈரமாகி நாங்களும் நனைஞ்சிட்டம். அதுதான் இப்ப காத்துக்கு காய காய மணக்குது. கெதியா வீட்டுக்கு போய் குளத்திலே முழுக வேண்டும் என்று சொல்லிக்கொன்டு வருகிறான். அப்போது எதிரில் வந்த டிப்பர் லொறிக்கு வழி விட்டு ஒதுங்க அது வீதிப் பள்ளத்தில் இருந்த வெள்ளத்தால் இவர்களைக் குளிப்பாட்டிவிட்டு போகின்றது. சடுதியாக அவள் லொறிக் காரனைத் வாயில் வந்தபடி திட்ட வாமன் வாய்விட்டு சிரித்துக் கொண்டே என்ன மயிலம்மா இப்ப எப்படி இருக்கு என்று சொல்ல ....சீ .....சும்மா போடா, சிரிச்சி எண்டால் கொன்னுடுவன் என்கிறாள் செல்லக்கோபத்துடன். வரும் வழியில் ஒரு ஆற்றுப்பாலம் குறுக்கிட எட அந்த ஆற்றங்கரைக்கு விடு கொஞ்சம் கை கால்களை சுத்தமாக்கிக் கொண்டு போவம் என்கிறாள்.அவனும் வீதியில் இருந்து சரிவில் சைக்கிளை இறக்கி ஆற்றங்கரையில் நிப்பாட்டி இருவரும் இறங்குகின்றார்கள். ஆற்றில் தண்ணி குடித்துக் கொண்டிருந்த மாடுகள் இரண்டு இவர்களைத் திரும்பிப் பார்த்து விட்டு மீண்டும் நீரருந்துகின்றன. வாமன் சாறத்தையும் சேர்ட்டையும் கழட்டி கரையில் போட்டுவிட்டு ஆற்றுக்குள் பாய்ந்து குதித்து நீந்துகிறான்.மயிலம்மாவிம் அங்கு நின்ற பனைமர மறைவில் அடைகளைக் களைந்து பாவாடையை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு கீழே கிடந்த ஆடைகளை எடுத்துக் கொண்டு கரையில் கிடந்த அவனது உடுப்புகளையும் பொறுக்கிக் கொண்டு வந்து நீருக்குள் இறங்கி நின்று கரையில் இருக்கும் கல்லில் அவற்றைப் போட்டு கும்மி நன்றாகப் பிழிந்து அங்கிருந்த பற்றைகளின் மேல் விரித்து காய விடுகிறாள்.பின் மயிலம்மா பாவாடை கிழிசல்களை ஒரு பக்கம் ஒதுக்கிக் கொண்டு வந்து ஆற்று நீருக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறாள். அவளும் நன்றாக நீந்தக் கூடியவளாகையால் நீருக்குள் முங்கி முங்கி நீந்தி மேலே வருகிறாள்.இருவரும் அந்த ஆழமான இடத்தில் மார்பளவு நீரில் இடைநீச்சலில் நின்று கொண்டு கதைத்தபடி உடம்பை கைகளால் உரஞ்சி முதுகு தேய்த்து விட்டு முங்கிக் குளிக்கிறார்கள். ஆற்றுமீன்கள் அவர்களுக்கு இடையில் புகுந்து கொத்திக் கொத்தி கிச்சு கிச்சு மூட்டி செல்கின்றன. ஒரு கட்டத்தில் இருவரும் ஏதேதோ கதைக்கிறார்கள் தவிர அவர்களுக்கு போதை தலைக்கேறி இருக்கு. மெல்ல மெல்ல பாறைக்குள் ஊடுருவிப் போகும் வேர் ஆங்காங்கு விரிசல்களை ஏற்படுத்தி நின்று நின்று போவதுபோல் விரல்கள் நகர்ந்து நகர்ந்து பழத்துக்குள் தங்கிய வண்டுபோல் சிறைப்படுகின்றன. அன்று நடந்த சம்பவம் உடலை சூடேற்ற அவனுக்கு அவள் அஞ்சலாவாகவே தெரிகிறாள். அவளுக்கு ஓர் ஆணின் அருகாமையும் அவனின் ஸ்பரிசமும் நெடிய தோள்களும் அகன்ற மார்புகளும் அவளை அலைக்கழிக்க அவள் அவள்வசம் இல்லை.இருவரும் ஒருவரிடம் ஒருவர் மிகவும் நெருக்கமாகி இருந்தனர்.எப்போது கரையேறினார்கள், எப்படி அங்கு தரைக்கு வந்தார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. ஆற்றுமீன்கள் உலவிய உடலெங்கும் விழிமீன்கள் மேய்கின்றன. கலவியில் கசிந்த வியர்வை ஊர்ந்து உருண்டு புற்களின் வேரில் விழுந்து கலந்து கலைந்து காய்ந்து போகின்றது. "பசுவின் மடிக்குள் இருக்கும் பால் எப்போதும் சூடாகவே இருக்கும், ஒருபோதும் பழுதாகுவதில்லை" அதுபோல் பயன்படுத்தாத காமமும் நினைவுகளின் வெப்பத்தில் உடலுக்குள் கனன்று கொண்டே இருக்கும். மயிலம்மாவிடம் மின்னல் போல் தோன்றிய மின்சாரம் காலங்களை மறக்கடிக்க அதன் வெப்பம் காலாக்கினியாகி அக் காலாக்கினி இருவரின் உடலையும் சேர்த்து எரிக்கின்றது.அஞ்சலா அவனுள் போட்ட விதை விருட்சமாய் விரிகின்றது. மேகம் கறுத்துவர மோகம் பெருகுது. உயிர்கள் ஊசலாட மனங்களும் மானங்களும் துகள்களாகி பறந்து மறைகின்றன.இடைகள் இணைந்து இழைந்து உடைகள் நெகிழ்ந்து தரையில். அந்திக் கருக்கலில் அந்த நான்கு கண்களும் அந்தகன் களாக அங்கும் இங்கும் அலையும் நகக்கண்களின் விழி திறக்கின்றது.அங்கங்கள் தம் ரகசியங்களை இழக்கின்றன.மரம், கிளை, இலை, கிளி எல்லாம் அவனுக்குத் தெரிகின்றது. அவளுக்கு கிளியும் தெரியவில்லை அதன் ஆரம் மட்டுமே தெரிகின்றது.அர்ச்சுனனாய் அவன்மேல் நின்று மலரம்புகளால் தாக்கிக் கொண்டே இருக்கிறாள்.வண்டிடம் தேன் இழந்த மலர் ஒருபோதும் களைப்பதில்லை மாறாக சிலிர்த்து எழுந்து நிக்கின்றது. ஆணும் பெண்ணுமாய் இணைந்து சொண்டை சொண்டால் கொத்தும் குருவிகளாய் மாறி உடலுடன் உடல் முறுக்கி ஊரும் அரவங்களாய் புணர்ந்து ஆயகலைகளில் சில கலைகளைப் பயின்றதால் நரம்புகள் புடைத்து தேகம் களைத்து சிதறிக் கிடக்கின்றனர் இருவரும். சற்று முன் அவள் துகிலுடன் இருக்கக் கண்டு விலகிச் சென்ற தென்றல் இக்கனம் அத் துகில்கள் விலகியது கண்டு அங்கமெங்கும் உரசிச் செல்கின்றது. பழக்கமில்லாதவன் பனை உச்சியில் இருந்து இறங்கினால் அவன் மார்பிலும் முகத்திலும் நிறைய கீறல்களும் சிராய்ப்புகளும் இருக்கும் அவன் உடலும் அப்படி இருக்கின்றது. தன் மார்பைத் தழுவிக்கிடக்கும் அவள் கையைத் தூக்கிப் பார்க்கிறான். அதில் சில நகங்கள் உடைந்துபோய் இருக்கின்றன. பெண்மான் பெற்ற மயில் அம் மானாய் குழல் தோகை விரித்துக் கிடக்கிறாள்.எதிரே வானளாவி நிக்கின்றது மயில் தோகைபோல் ஓலைகளை விரித்தபடி பனைமரம்.அதில் தெரிகிறாள் , "பனையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பணிமலர்ப் பூம் கனையும் கருப்புச் சிலையும் மென் பாசாங்குசமும் கையில் அணையும் திரிபுர சுந்தரி" அவளை அந்தரங்கமாய் தரிசித்த ஆனந்தத்தில் குரல் ஓலமிட தூரத்தில் இருந்து பள்ளியறைப் பூசைக்கு கோவில் மணி ஒலிக்கின்றது ...........! 🦚 மயில் ஆடும்........! 11.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வெள்ளிக் கிண்ணந்தான் தங்கக் கைகளில் .........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்..........! ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா சோள காட்டு பொம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல கைய விட்டு காதல் போன கையில் ரேக இல்ல கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்ல யாரும் என்ன மட்டும் வாழ சொல்லாதே உடம்பு குள்ள உசிர விட்டு போக சொல்லு நீதான் உன்ன விட்டு போக சொல்லாதே காணுகின்ற காட்சி எல்லாம் உந்தன் பூ முகம் அது எந்தன் ஞாபகம் காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு தானே சொல்லாமலே ஓடி போனாலே வேடந்தாங்கல் பறவைக்கெல்லாம் வேறு வேறு நாடு உன்னுடையே கூடு நானடி அண்ணாந்து பார்க்கின்ற கொக்கு நானடி அந்த விண்மீன் நீயடி .......! --- ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா --- - மயிலம்மா.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.