Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார்.......! பெண் : அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்த கூறு யாரிடத்தில் உன் மனசு போச்சு நூல போல உன் உடம்பு ஆச்சு பெண் : வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு வாய விட்டு போனதென்ன பேச்சு ஆண் : ஆத்தங்கரை அந்தப்புறம் ஆக்கி கொள்ளவா அந்த அக்கரைக்கும் இக்கரைக்கும் கோட்டை கட்டவா பெண் : மாமன் கையில் பூவை தந்து சூடி கொள்ளவா அடி ஆசைஎன்னும் ஊஞ்சல் கட்டி ஆடி கொள்ளவா ஆண் : சொல்லு சொல்லு திட்டம் என்ன சொல்லுவது கஷ்டமா பொத்தி பொத்தி வச்சதென்ன என்ன என்னவோ இஷ்டமா பெண் : கூவாம கூவுறியே கூக்கூ கூக்கூ பாட்டு மாட்டாம மாட்டிபுட்ட சொக்கு பொடி போட்டு ஆண் : யாரிடத்தில் உன் மனசு போச்சு நூல போல உன் உடம்பு ஆச்சு பெண் : ஊரை எல்லாம் சுத்தி வந்த ஒத்தக்கிளியே இப்போ ஓரிடத்தில் நின்றதென்ன சொல்லு கிளியே ஆண் : சொந்த பந்தம் யாரும் இன்றி வந்த கிளியே ஒரு சொந்தம் இப்போ வந்ததென்ன வாசல் வழியே பெண் : வேரு விட்ட ஆலம் கன்னு வானம் தொட பாா்க்குது வானம் தொடும் ஆசையில மெல்ல மெல்ல பூக்குது ஆண் : பூ பூவா பூக்க வச்ச மாமன் அவன் யாரு பாடுகிற பாட்டுல தான் நீயும் அதை கூறு ஆண் : வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு வாய விட்டு போனதென்ன பேச்சு......! --- பூங்குயிலே பூங்குயிலே கேளு ---
  2. உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு ......! 😂
  3. ஒரு பெற்றோர் தாம் பெற்ற மக்களை வளர்த்தெடுப்பார்கள் ஆனால் பேரப்பிள்ளைகளைக் கொண்டாடுவார்கள்.......! 😍
  4. அண்ணம்போன்ற அழகிய சொன்டுடன் ஆயிரம் ஆட்களை அள்ளிக்கொண்டு அசைந்து வரும் கடற்தேவதை ..........! 😁
  5. மயிலிறகு......... 16. பின் சுந்து வாமனைப் பார்த்து நீ ஏதோ கவலையுடன் இருக்கிறதுபோல் தெரியுது. என்னடா விஷயம்...... அதடா வந்து அஞ்சலைக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலைமையை அவனுக்கு சொல்கிறான். சரியடா .....அது அவர்களின் குடும்பப் பிரச்சினை.....அதுக்கேன் நீ கவலைப் படுகிறாய்..... அதில்லையடா ஏனோ மனசு கேட்க மாட்டேன் என்கிறது அதுதான்..... சரி நான் உன்னை ஒன்று கேட்கிறேன் நல்லா யோசித்துப் பதில் சொல்லு......நீ அஞ்சலையை விரும்புறியா...... அதுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியல்லையடா..... சரி இதுக்கு பதில் சொல்லு.....அவளைக் கலியாணம் செய்ய உனக்கு விருப்பமா..... ....ம்.....செய்யலாம் என்றுதான் தோன்றுகிறது.....ஆனால் அவர்களும் சம்மதிப்பினமோ தெரியாது..... சரி பக்கத்தில்தானே வீடு, வா போய் கதைத்துப் பார்க்கலாம்.....இருவரும் அஞ்சலை வீட்டுக்கு வருகிறார்கள்....... அவர்கள் வரும் வழியில் அவர்களைக் கடந்து ஒரு வெள்ளை வானும் கூட ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் (அவ்வூருக்கு அறிமுகமில்லாதவர்கள்) குறுக்கும் நெடுக்குமாய் போய் வருகிறார்கள். வானில் சாரதிக்கு பக்கத்து ஆசனத்தில் வைத்தியின் இரண்டாவது மகன் யோகிபாபு இருக்கிறான். ஒவ்வொரு முறையும் இவர்களைக் கடக்கும்போது வாகனத்தை மெதுவாக செலுத்தி நன்றாகப் பார்த்துக் கொண்டு செல்கிறார்கள். இவர்கள் வீட்டுக்கு முன் வந்து நிக்க நாயும் மெதுவாகக் குரைத்துக் கொண்டு வாலாட்டுகின்றது. அதன் அருகில் அஞ்சலையின் அப்பா நிக்கிறார். அவர் உள்ளே பார்த்து மகளைக் கூப்பிட அவளும் ஜன்னலைத் திறந்து சுற்றுமுற்றும் பார்த்து விட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து இவர்களை அழைத்துக் கொண்டு போகிறாள். அப்பாடா நல்ல காலம் இப்ப நீங்கள் வந்தது..... ஏன் ஏதும் பிரச்சினையோ என்று வாமன் கேட்கிறான்..... ஓம்....அப்படித்தான் தெரியுது.....ஒரு வெள்ளை வானில் அவன் அடிக்கடி அங்கும் இங்குமாய் போய் வருகிறான். அதோடு இரண்டுபேர் மோட்டார் சைக்கிளிலும் .....அங்க மெதுவாய் திரும்பிப் பாருங்கோ என்கிறாள். அப்போது அந்த வான் மெதுவாக வீட்டை நோட்டம் விட்டபடி கடந்து போகிறது..... சுந்து சொல்கிறான் இப்ப நாங்கள் வரும்போது கூட இவங்கள் எங்களை ஒரு விரோதப் பார்வை பார்த்துக் கொண்டு போனவங்கள். வாமனுக்குப் பிரச்சினையின் தீவிரம் புரிந்தாலும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் நீங்கள் ஒன்றுக்கும் பயப்பிடாதையுங்கோ நாங்கள் வந்திட்டமெல்லோ இனி நாங்கள் பார்த்துக் கொள்ளுறம் என்கிறான். சுந்து வெளியே சென்று கேட்டடியில் நின்று கொண்டு வாமுவை ஜாடையால் அழைத்து நீ போய் அவவிடம் கேளடா அல்லது நான் போய்க் கேட்கவா என்று சொல்ல .... இருடா நானே போய்க் கேட்கிறேன் என்று சொல்லி அவளிடம் வருகிறான். வந்தவன் அவள் கையைப் பிடித்து மா மரத்தின் பின்னால் அழைத்துச் சென்று, அஞ்சலா இது இந்த நேரத்தில் கேட்பது சரியோ எனக்குத் தெரியாது ஆனால் இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்று தெரிகிறது. உங்களுக்கு என்னைக் கலியாணம் செய்ய சம்மதமா யோசித்து சொல்லுங்கோ...... என்னடா திடுதிப்பென்று இப்படிக் கேட்கிறாய்.... நீங்கள் இல்லையென்று சொன்னாலும் பரவாயில்லை......ஆனால் யாராலும் உங்களுக்கு ஒரு பிரச்சினையும் வர நான் விடமாட்டன்.....கொஞ்சம் யோசித்தவள் இரு வாறன் என்று போய் தந்தையையும் தாயையும் சேர்த்து வைத்து கதைத்து விட்டு வந்து ....ம்....சம்மதம் என்று சொல்கிறாள். அவளை அன்பு பொங்கப் பார்த்தவன் சுந்துவை அழைத்து கைகளால் "ஹார்ட்" காட்டி ....ம்......என்கிறான். கொஞ்ச நேரம் வெளியில் நின்று பார்க்கிறார்கள்.போன வானையும் ஆட்களையும் காணவில்லை. உடனே வாமன் அவளின் பெற்றோரை கவனமாய் இருங்கோ,கதவைத் திறக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவளையும் கூட்டிக்கொண்டு பின் தோட்டத்தால் வேகமாய் நடந்து வர சுந்துவும் மோட்டார் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வருகிறான். மூவருமாக வயலுக்குள்ளால் வெகுதூரம் வந்து ஒரு ஒழுங்கையையைப் பிடித்து, சுந்து மோட்டார் சைக்கிளை ஓட்ட அஞ்சலா நடுவில் இருக்க வாமன் பின்னால் ஏற வண்டி வேகமாய் வந்து மயிலம்மா வீட்டின் முன்னால் நிக்கிறது......... அங்கு முன் முற்றத்தில் இருந்து மயிலம்மா,கனகம் அவளின் புருஷன் மகள் கோமளம் எல்லோரும் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பொடியளுடன் அஞ்சலாவைக் கண்டதும் எல்லோரும் திகைத்துப் போனார்கள். சுந்து சென்று அவர்களுக்கு நடந்தவற்றை சுருக்கமாய் சொல்ல வாமுவும் அஞ்சலையும் அவர்கள் வீட்டு முன் அலுவலக அறைக்குள் செல்கிறார்கள். சுந்து அவர்களிடம் வந்து அம்மா அவர்கள் இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புகினம். இப்ப அவர்களுக்கு வைத்தியின் இரண்டாவது மகன் யோகிபாபுவால்தான் பிரச்சினை. அதுதான் இங்கு கூட்டிக்கொண்டு வந்தனாங்கள் என்று சொல்கிறான்..... 🦚 மயில் ஆடும்......... 16.
  6. இவருடைய பேச்சுகள் மிகவும் நன்றாக சிந்திக்கக் கூடியதாக இருக்கும்........! 👍 நன்றி சகோதரி........!
  7. மனிதரின் சிந்தனைகள் சிவப்பாய் இருப்பதால் அது கொல்லும் , மரங்களின் வேர்கள் பச்சையாய் இருப்பதால் அது வெல்லும்........! 😁
  8. தாயின்றி நாமில்லை.......நல்லதோர் கவிதை .......! 👍 நன்றி கோபி .....!
  9. சில நேரங்களில் சில மனிதர்கள்......அசாத்தியமான மன உறுதியுடன் வாழ்பவர்கள்.......! 👍
  10. மயிலிறகு.......... 15. வாமன் சாதாரணமாய் அஞ்சலா வீட்டுப்பக்கம் போய்வர நேர்ந்தால் அவளோடும் தாயாருடனும் கொஞ்ச நேரம் கதைத்துக் கொண்டிருந்து விட்டு வருவான்.அது அவர்களுக்கும் பிடித்தமானதாயும் பொழுதுபோக்காகவும் இருந்தது. அன்றும் அப்படி ஒருநாள் போனபோது அஞ்சலா மிகவும் சோகமாய் இருந்தாள். என்ன இன்று மிகவும் கவலையுடன் இருக்கிறீர்கள்..... அதொன்றுமில்லையடா வாமு, "மழை விட்டும் தூவானம் போகேல்ல" என்ற மாதிரி என் நிலைமை இருக்கு. என்னெண்டு சொல்லுங்கோ.......இவற்ர இரண்டாவது மகன் யோகிபாபு இருக்கிறான் எல்லோ அவன்தான் அன்று இவற்ற செத்தவீட்டில் என்னோடு குழப்பம் செய்தவன். சரி ....அதுக்கென்ன....... இப்ப அவர் என்னை கடத்திக் கொண்டுபோய் அவற்ர நண்பனுக்கு மணமுடித்து விடுகிற பிளானில் இருக்கிறார் என்று அவர் பாரில் தன் நண்பர்களுடன் கதைத்ததை எனக்கு நம்பகமான ஒருத்தர் அங்கிருந்து கேட்டுவிட்டு வந்து சொன்னவர்.அதைக் கேட்டதில் இருந்து மனம் ஒரே குழப்பமாய் இருக்கு. என்ன பணம் சொத்து எல்லாம் இருந்தால் என்ன எல்லாம் அவங்கட கையில் இருக்கிறமாதிரி நடக்கிறாங்கள். வாமனும் ....இல்ல நான் ஒரு பேச்சுக்கு கேட்கிறேன் ஏன் நீங்கள் அவர் சொல்லுற இடத்தில கலியாணம் செய்யக்கூடாது. அதுக்கில்ல.....எனக்கு அது விருப்பமில்லை....விட்ட படிப்பைத் தொடரலாமா என்றும் ஒரு எண்ணம் எனக்கு வருகுது.....அதுக்குள்ளே இவன் இந்தமாதிரி வேலை பார்க்க நிக்கிறது எனக்கு சுத்தமாய் பிடிக்கேல்ல. இவற்ற சம்சாரமோ மூத்தப்பிள்ளையோ வந்து கதைத்தால் கதைத்துப் பார்க்கலாம்.அதை விட்டிட்டு கடத்திக் கொண்டு போக நினைப்பதெல்லாம் துப்பரவாய் சரியில்லை. ஓம்.......நீங்கள் சொல்லுறதும் சரிதான்..... நான் இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து இரண்டு முறைதான் இந்தப் படலையைத் தாண்டி இருக்கிறன். அவற்ர செத்தவீட்டுக்கும், மயிலம்மா வீட்டுக் கலியாணத்துக்கும்தான். எனக்கென்ன தெரியும் அவங்களை மீறி நான் என்ன செய்ய முடியும். நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்காதையுங்கோ......அவன் என்ன செய்யுறான் என்று நானும் பார்க்கிறன். இன்னும் இரண்டு நாளில் சுந்துவும் விடுமுறையில் வருகிறான். நான் போய் அவனைக் கூட்டிக்கொண்டு வரவேண்டும். எதையும் யோசித்து செய்யலாம். அதுக்குள்ள ஒன்றும் நடக்காது என்று நினைக்கிறன். அப்படி பிரச்சினை என்றால் உங்கட தொலைபேசியால் அரசு விதானைக்கு அறிவியுங்கோ. அல்லது அங்கு போய் இருங்கோ. அநேகமான நேரங்களில் நானும் அங்குதான் இருப்பேன்.இப்ப போய் நானும் அவரிடம் சொல்லி வைக்கிறன். பின் வாமன் அரசு விதானையிடம் சென்று விஷயத்தை சொல்கிறான். அதற்கு அவர் நீ ஒன்றுக்கும் யோசிக்காத. ஆர் அந்த யோகிபாபுதானே, அவன் ஒரு மொக்கன். அவனைத் தெரியும் எனக்கு. வைத்தி இருக்கேக்க அவரை ரெண்டு கேசில இருந்து காப்பாற்றி விட்டனான். மூத்தவன் விவேக் கொஞ்சம் நல்லமாதிரி சொன்னால் கேட்பான். விடு அதை நான் பார்த்துக் கொள்கிறேன். ஏன்டா நீ அவளுக்காக இவ்வளவு கரிசனைப் படுகிறாய்...என்ன விசயம் சொல்லு. அப்படி ஒன்றுமில்லை அண்ணா ....அந்தப் பிள்ளை எங்களுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கு. நல்ல பிள்ளை அதுதான்.... சரி....சரி.....அப்படி ஏதாவது இருந்தாலும் சொல்லு செய்திடலாம் யோசிக்காத.... ஒன்று சொல்லுறன் கேள், பிறகு விதானைக்கு பொம்பிளை தர மாட்டாங்களாடா.......சும்மா சொல்லுவாங்கள் அரச உத்தியோகம்.....நல்ல வேலை என்று எல்லாம்....... பொம்பிளை கேட்டுப் போனால்தான் தெரியும்.....ஹா .....ஹா என்று வெடிச்சிரிப்பு சிரிக்கிறார். அடுத்து வந்த சில நாட்களில் சுந்து விடுமுறையில் வருகிறான். வாமன் சென்று அவனை அழைத்துக் கொண்டு வந்து அவன் வீட்டில் விடுகிறான்.அங்கு அவன் தனது தாய் சகோதரங்களுடன் வழமையான குசலங்கள் விசாரித்து விட்டு, அம்மா நான் வாமனுடன் வெளியே போய் விட்டு வருகிறேன் என்று சொல்லி அவனின் அலுவலக அறைக்கு சென்று அவனையும் அழைத்துக் கொண்டு இருவருமாக மோட்டார் சைக்கிளில் வெளியே போகிறார்கள். அப்போது வாமன் ஏதோ யோசனையில் இருப்பதை சுந்துவும் கவனித்துக் கொண்டு வருகிறான். அவர்கள் வழமையாகப் போகும் "பாரு"க்கு சென்று அரைப்போத்தல் சாராயமும் தண்ணிப் போத்தலும், கணவாய்ப் பிரட்டலும் வாங்கிக் கொண்டு வந்து ஒரு கதிரையில் அமருகிறார்கள். இப்போது வாமன் விதானையாகிய பின் எங்கு சென்றாலும் அவனுக்கு தனி மரியாதை கிடைக்கின்றது. அப்போது அங்கு ஒரு குடிமகன் போதையில் தள்ளாடியபடி வந்தவர் வாமனைப் பார்த்துவிட்டு தம்பி புது விதானையார் எனக்கொரு சந்தேகம்..... கொஞ்சம் விளக்க முடியுமோ..... வாமனும் என்ன அண்னை சொன்னால் தானே தெரியும்......சரி.....நீங்கள் மாளிகைக் கடைக்குப் போனால் என்ன செய்வீங்கள்..... சாமான்கள் வாங்குவோம் .......பிறகு .......பிறகு பணம் குடுப்போம். .... முடி வெட்டப் போனால் ......முடி வெட்டுவோம் ....பிறகு பணம் குடுப்போம் .... உடுப்புகளை சலவைக்குப் போட்டால் ........இதென்ன கேள்வி கொண்டு வந்து தந்தபின் பணம் கொடுப்போம். தேனீர் சாப்பாட்டுக் கடைக்குப் போனால் .......சாப்பிட்டுட்டு பணம் கொடுத்து விட்டு வருவோம்......சரி......சரி......ஆனால் ஒரு பாருக்கு போனாலோ, சினிமாவுக்கு போனாலோ அல்லது விலைமாதிடம் போனாலோ என்ன செய்கிறீர்கள் .......பக்கத்தில் குடித்துக் கொண்டிருந்த ஒரு வண்டிச்சாரதி சொல்கிறார் .....ஹா....ஹா.....இது நல்ல கேள்வி..... முதலில் பணத்தைக் குடுத்து விட்டுத்தான் பொருளை நுகர்கிறோம்....சரியா .....மெத்தச் சரி...... விதானைத் தம்பி நீயே கேள் இவனிட்டை ஒரு கால் போத்தல் தாடா நாளைக்கு காசு தருகிறேன் என்றால் தராமல் விரட்டுறான். அங்கிருந்த எல்லோரும் சிரிக்கிறார்கள்.....வாமனும் சிரித்து விட்டு சரி அண்ணை நான் சொல்லுறன் நீங்கள் போய் வாங்குங்கோ நான் அவரிட்டை சொல்லுறன். அவர் தள்ளாடி கும்பிட்டுக்கொண்டு போகிறார். சுந்து சொல்லுறான், டே வாமு ஆனாலும் விதானை வேலை ரெம்பக் கஷ்டமடா.........! 🦚மயில் ஆடும்............. 15.
  11. அம்மா படிக்கும் புத்தகத்தின் பெயர் : "நான் ஒரு முட்டாளை மணமுடிக்கப் போறேன்".
  12. அவர்கள் ஒருபோதும் உயிருடன் விடமாட்டார்கள் .....ஏதாவது சாக்கு போக்கு சொல்லி காலத்தை இழுத்தடித்துக் கொண்டு போவார்கள் .........!
  13. ஒரு யுத்தம் என்பது எவ்வளவு அவலங்களை மக்களிடம் ஏற்படுத்துகின்றது.......! 😴 தொடருங்கள் கிருபன்........!
  14. மயிலிறகு........... 14. நேரே மயிலம்மா வீட்டுக்கு வந்தவன் முன்னால் இருந்த அம்மன் கோயிலில் வண்டியை நிப்பாட்டி விட்டு சென்று அம்மனைக் கும்பிட்டு கற்பூரம் ஏற்றி ஒரு சிதறுதேங்காயும் உடைத்து மூன்று பட்டும் ஒரு மஞ்சள் பட்டுச் சேலையும் அவ காலடியில் வைத்து விட்டு, சைக்கிளுடன் வீட்டுக்குள் வருகிறான். அவனைக் கண்டதும் மயிலம்மாவுக்கு முகம் மலர்ந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் ஏன்டா வாமு இப்பதான் உனக்கு வழி தெரிஞ்சதோ. இத்தனை நாளா உன்னை இங்காலுப் பக்கம் காணேல்ல. சும்மா கோவப்படாதையுங்கோ மயிலம்மா.ஒரு நல்ல செய்தி உங்களிடம் சொல்ல வருகிறன் என்று சொல்ல.......பின்ன எனக்கு கோவம் வராதா கல்யாண வேலைகள் தலைக்கு மேல் கிடக்கு உன்னையும் காணேல்ல நான் என்னெண்டு நினைக்கிறது எதையென்று நினைக்கிறது சொல்லு. முதல்ல எனக்கு கிராமசேவகர் வேலை கிடைத்திருக்கு மயிலம்மா.நீங்கள் அப்போது வீட்டுக்கு வந்ததா அம்மா சொன்னவ. எனக்கு இப்ப விதானையாருடன் வேலை அதிகம். விடிய வெள்ளன அவரோடு போனானான் பின்னேரம்தான் வீட்டை வந்தனான் என்று சொல்லி தான் அஞ்சலாவிடம் மோட்டார் சைக்கிள் வாங்கியதுவரை எல்லாவற்றையும் சொல்லி முடிக்கிறான். உண்மையா வாமு நான் கொஞ்சம் பயந்திட்டன்டா. சரி ஏதோ பொல்லாத காலம் அதெல்லாவற்ரையும் மறந்திடுவோம். அதென்ன கையில் பார்சல் என்று கேட்கிறாள். இது மயிலம்மா உங்களுக்குத்தான் எடுத்து வந்தனான்.அவளும் அதை அங்கேயே பிரித்துப் பார்க்க அதில் சுந்துவுக்கு ட்ரவுசர் சேர்ட் பனியன், பூவனத்துக்கு மூன்று சுடிதார் ஹீல்ஸ் செருப்பு, மயிலம்மாவுக்கு நாலு சேலைகள் சட்டைகள் பாவாடைகள், உள்ளாடைகள் அத்துடன் பாட்டா உட்பட ரெண்டு சோடி செருப்பு எல்லாவற்றுடனும் இனிப்பு சொக்கிலேட் எல்லாம் இருக்கு. அதெல்லாம் பார்த்த மயிலம்மாவுக்கு மனம் நெகிழ்கின்றது. பின் அதில் இருந்து ஒரு சேலையும் சுடிதாரும் தனியாக எடுத்து வைத்து உள்ளே சென்று ஒரு புது வேட்டியையும் கொண்டு வந்து அதோடு சேர்த்து சொக்கிலேட் மற்றும் இனிப்புகளும் வைத்து அவனிடம் இதை நீ கனகத்திடம் குடு. நாங்கள் ஒன்டுக்க ஒன்டாய் பழகிறானாங்கள். அவர்களும் சந்தோசப் படுவினம். பின் அவள் சிறிது தள்ளிச் சென்று கனகத்தைக் கூப்பிட அவளும் தன் வீட்டில் இருந்து எட்டிப்பார்த்து விட்டு வருகிறாள். கனகத்திடம் தனக்கு வேலை கிடைத்ததை சொல்லிய வாமன் பார்சலை அவளிடமும் தர அவளும் நெகிழ்ந்து போய் நன்றி சொல்லிவிட்டு வாங்கிக் கொள்கிறாள். அடுத்து செய்யவேண்டுய வேலைகள் பற்றி மயிலம்மாவும் வாமுவும் கலந்துரையாடி ஒரு கொப்பியில் எழுதுகின்றனர்.பின் மயிலம்மா அவனை வீட்டுக்குள் கூட்டிச்சென்று அந்த ஒரு லட்சம் ரூபா பணத்தில் இருந்து இருபத்தையாயிரம் ரூபாவை தனியாக எடுத்து அவனிடம் தர அவனும் என்ன மயிலம்மா இது எதுக்கு எனக்கு என்று கேட்கிறான். டேய் இது உனக்கென்று தரவில்லையடா. நான் ஒரு எழுபது எழுபத்தைஞ்சுக்குள் இந்தக் இந்தக் கலியானச் செலவுகளை முடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். கையில அதிகம் பணம் இருந்தால் கண்டபடி செலவு செய்யத் தோன்றும். மேலும் உனக்கு பூவனத்தைப் பற்றி தெரியும்தானே. என்ர மகள்தான் ஆனால் இந்தப் பணத்தைக் கண்டால் பெரிசாய் சிலவு செய்து கலியாணம் கட்ட நிப்பாள் அல்லது இந்தப் பணத்தை அப்படியே தனது புருஷன் வீட்டுக்கு கொண்டுபோக அடம்பிடிப்பாள். அம்மா படும் கஷ்டத்தைப் கொஞ்சமும் நினைக்க மாட்டாள். என்ர பிள்ளையைப்பற்றி எனக்குதான் தெரியும். இதை நீ கவனமாய் வீட்ட கொண்டுபோய் வைத்துக்கொள். அந்தப்பிள்ளை எவ்வளவு நம்பிக்கையுடன் நகைகளைக் கூட எடுக்காமல் நம்பிப் பணம் தந்தது. அதனால் எப்படியும் ஆறுமாதத்துக்குள் கடன் அடைச்சுப்போட வேணும் என்கிறாள்.அவனுக்கும் அது சரியென்றே தோன்றியது. அன்று அந்தச் சம்பவம் வெய்யிலில் வானவில் தோன்றி மறைவதுபோல் தற்செயல் நிகழ்வாய் நடந்து முடிந்து விட்டது. ஆனால் அதிலிருந்து மயிலம்மா மது பாவிப்பதை அறவே விட்டிருந்தாள். வாமனும் தனது வேலையின் நிமித்தம் ஆங்காங்கே கொஞ்சமாவது பாவிக்க வேண்டிய அல்லது பாவிப்பதுபோல் நடிக்க வேண்டிய சூழ்நிலை இருக்குது. அவனால் அவளைபோல் அறவே விட முடியவில்லை. பூவனத்தின் திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பே சுந்துவும் வந்து விட்டான். அவர்கள் ஒரு வாடகைக்காரில் பெரியகடைக்கு சென்று தேவையான சாமான்கள் எல்லாம் வாங்கி வந்திருந்தார்கள்.வாமுவும் மற்றவர்களும் சுந்துவோடு அவன் இல்லாத சமயத்தில் நடந்த சம்பவங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.வாமனுக்கு கிராமசேவகர் வேலை கிடைத்தது பற்றி கதை வந்தபோது பூவனம்தான் சொல்கிறாள் அண்ணா அவன் அலுவலகம் திறக்க இடம் பார்க்கிறான் இன்னும் சரியா அமையவில்லை. சுந்துவும் என்னடா இவள் சொல்வது உண்மையா, நீ எனக்கு சொல்லவில்லை. அதெடா சுந்து இடத்தை பிடிச்சுட்டு சொல்லுவம் என்று இருக்கிறன் என்கிறான். கொஞ்ச நேரம் யோசித்த சுந்து ஏண்டா நீ எங்கட முன் அறையைப் பாவிக்கக் கூடாது. தங்கச்சியும் மாப்பிள்ளை வீட்டுக்குப் போயிடுவா, நானும் இங்கில்லை, அம்மாவும் தனியாய் இருக்கிறா.நீ இங்கிருந்தால் அவவுக்கும் துணையாய் இருக்கும். நாங்களும் பயமில்லாமல் இருப்பம். நீ என்னம்மா சொல்கிறாய் என்று தாயாரைக் கேட்கிறான். அவளும் நான் அதைப்பற்றி நினைக்கவில்லை, நீங்கள் விரும்பினால் அப்படியே செய்யலாம் என்கிறாள். வாமு நீ என்னடா சொல்கிறாய் என்று கேட்க அதில்லடா சுந்து விதானையின் அலுவலகம் எண்டால் நாலுவிதமான ஆட்களும் வந்து போவினம்.அது மயிலம்மாவுக்கு இடைஞ்சலாய் இருக்கும் இல்லையா..... அது ஒன்றும் இடைஞ்சல் இல்லை. உனக்கு வேறு நல்ல இடம் கிடைக்கும் வரை கூட நீ இதைப் பாவித்துக் கொள்ளலாம். அப்போது பூவனம் நீ விதானையானால் அலுவலகத்துக்கு தொலைபேசி தருவார்கள் எல்லோ. ஓம் தருவார்கள்....அப்ப நாங்கள் அண்ணனுடன் கதைக்கலாம் என்ன.... பின் எல்லோரும் கலைந்து போகிறார்கள். உற்றார் உறவினர் நண்பர்களுடன் பூவனத்தின் கல்யாணம் அருகில் இருந்த அம்மன் கோயில் மண்டபத்தில் சிறப்பாக நடந்தேறியது. திருமணத்துக்கு அரசு விதானையும் அஞ்சலாவும் கூட வந்திருந்து அன்பளிப்புகள் கொடுத்து சிறப்பித்திருந்தார்கள். சுந்துவும் சமயத்தில் அவள் செய்த உதவிக்கு மனதார நன்றியைத் தெரிவித்து கொண்டான்.அடுத்து வந்த இரு நாட்களில் அவன் எல்லோரிடமும் சொல்லி விடை பெற்றுக்கொண்டான். அவன் வாமுவுடன் புகையிரத நிலையத்துக்கு செல்லும்போது அடுத்த மாதம் எனக்கு ஒரு மாத விடுமுறை வருகிறது அப்ப சந்திக்கலாம் என்று சொல்லி வந்த வண்டியில் ஏறி கையசைத்து விடை பெற்றுக்கொள்கிறான்........! 🦚 மயில் ஆடும்........! 14.
  15. உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே.......! 😍
  16. வணக்கம் வாத்தியார்.......! ஆண் : கண்ணானா கண்ணே கண்ணானா கண்ணே என் மீது சாய வா புண்னான நெஞ்சை பொன்னான கையால் பூ போல நீவ வா ஆண் : நான் காத்து நின்றேன் காலங்கள் தோறும் என் ஏக்கம் தீருமா ஆண் : நான் பார்த்து நின்றேன் பொன் வானம் எங்கும் என் மின்னல் தோன்றுமா ஆண் : தண்ணீராய் மேகம் தூறும் கண்ணீர் சேரும் கற்கண்டாய் மாறுமா ஆண் : அலை கடலின் நடுவே அலைந்திடவா தனியே படகெனவே உனையே பார்த்தேன் கண்ணே…. ஆண் : புதை மணலில் வீழ்ந்து புதைந்திடவே இருந்தேன் குறு நகை எரிந்தே மீட்டாய் என்னை ஆண் : விண்ணோடும் மண்ணோடும் வாடும் பெரும் ஊஞ்சல் மணதோரம் கண்பட்டு நூல் விட்டு போகும் எனை ஏதோ பயம் கூடும் ஆண் : மயில் ஒன்றை பார்க்கிறேன் மழையாகி ஆடினேன் இந்த உற்சாகம் போதும் சாக தோன்றும் இதே வினாடி ஆண் : நீ தூங்கும் போது உன் நெற்றி மீது முத்தங்கள் வைக்கணும் போர்வைகள் போர்த்தி போகாமல் தாழ்த்தி நான் காவல் காக்கணும் எல்லோரும் தூங்கும் நேரம் நானும் நீயும் மௌனத்தில் பேசணும்.......! --- கண்ணானா கண்ணே ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.