Everything posted by suvy
-
சிரிக்க மட்டும் வாங்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
நீங்களாவது நின்று கவனித்தீர்களே அதற்கு நன்றி satan ........ ஆனால் இங்கு நீங்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும் ......... ஏராளமான பாடல்களை நாங்கள் சாதாரணமாக கேட்டுக்கொண்டு கடந்து விடுகின்றோம் . ........அவற்றில் நிறைய கவிதைநயம் பொதிந்த வரிகள் உள்ளன ......அவற்றை இப்படித் தனியாக படிக்கும் போதுதான் அனுபவிக்க முடியும் . ........இது யாழ் அந்தப் பாடலாசிரியருக்குத் தரும் மரியாதை + கௌரவம் ......... தினமும் இங்கு வாருங்கள் திகட்டாத விருந்து தயாராக இருக்கு ........! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மாமியாருக்கு ஒரு சேதி இதை மதித்து நடந்தால் மரியாதை ..........! 😍 அழகான சிரிப்புப் பாடல் . ........கேட்டுப் பாருங்கள் . .........! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது இடையா இது இடையா அது இல்லாததுபோல் இருக்குது ஆண் : கடற்கரை காற்று அடிக்குது காத்துல சேலை நடிக்கிது கடற்கரை காற்று அடிக்குது காத்துல சேலை நடிக்கிது முன்னால வரச் சொல்லி அழைக்கிது முகத்தில கடுகு வெடிக்கிது ஆண் : வெள்ளிக் கண்ணு மீனா வீதி வழிப் போறா தையாதக்கா தையாதக்கா உய்யா ஆண் : கண்ணுன்னு இருந்தா இமை வேணும் கழுத்துன்னு இருந்தா நகை வேணும் கண்ணுன்னு இருந்தா இமை வேணும் கழுத்துன்னு இருந்தா நகை வேணும் பொண்ணுன்னு இருந்தா துணை வேணும் ஒன்னும் புரியல்லையா இன்னும் தெரியல்லையா ஆண் : தேரோட்டும் கண்ணனுக்கு ராதா சிங்கார ராமனுக்கு சீதா தேரோட்டும் கண்ணனுக்கு ராதா சிங்கார ராமனுக்கு சீதா காரோட்டும் எனக்கொரு கீதா கல்யாணம் பண்ணிக்கொள்ள தோதா .......! --- நடையா இது நடையா ---- களைத்த மனசு களிப்புற ......!
Arun Kumar G · "நான் தனியா tenseஆ உக்காந்திருந்தேன். அப்ப சச்சின் வந்து என் தோள்ல கை போட்டார். என் பேட்டை வாங்கி அதோட handle adjust பண்ணி tape போட்டுக்குடுத்தார். அப்படி எனக்கு என்ன Tension...?! எங்க Hotel க்கு பக்கம்தான் அந்த அழகான Lords ground. காலைல எல்லாரும் அங்க வந்து சேரனும்னு news. எந்த வண்டியும் வரல நாங்க நடந்துதான் அங்க போகனும். நான் மெதுவா நடக்க ஆரம்பிச்சேன். Hotel கேட்டைத்தாண்டி Road cross பண்ணி அந்த அழகான Mecca Of Cricket கிரண்டுக்குள்ள நுழைஞ்சேன். Indian Jersey போட்டிருந்தாலும் Security யாராவது கேள்வி கேப்பாங்களோன்னு பயந்தேன். அந்தமாரி எதுவும் நடக்கல. உள்ள நுழைஞ்சதும் ஏதோ ஒரு பெரிய Office க்கு வேலைக்கு வந்துட்ட மாரி உணர்ந்தேன். அதோட நீளமான Room களையும், Honour Boardஐயும், அங்கிருந்த உயரமான Chairகளையும் பாத்தேன். அதுல Members மட்டும்தான் உக்காரனும்னு நெனச்சேன். எப்ப வேணா அங்க work பண்ற யாராவது கண்காணிப்பாளர் வந்து என்னை வெளிய போக சொல்லுவாங்கன்னு நெனச்சேன். அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம நின்னுட்டிருந்தேன். Coach Sandeep வந்து 'கங்குலி நீ நாளைக்கி Testல No.3ல இறங்கறே'ன்னு சொல்லீட்டு போயிட்டார். எனக்கு செம excitement ஆ இருந்தது. முதல் நாள் 26 ரன்னுல முடிச்சிருந்தேன். Bowling போட்டு 2 நல்ல விக்கெட் எடுத்திருந்தேன் அது எனக்கு Confidence குடுத்தது. அடுத்தநாள் Lunch அப்போ 65ல இருந்தேன். சாப்பிடாம தனியா இருந்தேன், கூட்டத்துல distract ஆக நான் விரும்பல. அந்த நேரம் வந்தது. அடுத்த Session பத்தியோ , அடுத்த ஓவர் பத்தியோ நான் கவலைப்படல என் கவனம் முழுசும் அந்த பால்ல இருந்தது. என் முதல் Century ஐ அடிச்சேன். ஒரு சாதனையை படைச்சேன். ஒட்டுமொத்த கிரவுண்டும் எழுந்து நின்னு கைதட்டனாங்க. Dressing Roomக்கு போறப்ப Dravid என்னை முன்னால போக சொன்னார். உள்ள எல்லாரும் Standing Ovation குடுத்தாங்க. அது ஒரு விவரிக்க முடியாத தருணம். அப்ப நான் சொல்லிக்கிட்டேன் 'சர்வதேச கிரிக்கெட்டே.. இதோ நான் வந்துவிட்டேன்..'! Lords 100 எப்பவும் Special. அங்க நேத்து நான் பாத்த அந்த நீளமா Hallல, அங்கிருக்கற Honour boardல, என் பேர் பெரிய பெரிய வீரர்களோட நிரந்தரமா பொறிக்கப்படப்போகுது. அது ஒரு அற்புதமான உணர்வா இருந்தது. நான் ஒரு Milestone achieve பண்ணீட்டேன் என் debut மேட்ச்ல." -கங்குலியின் முதல் Test Debut 100 அனுபவங்கள். 👏" Voir la traduction- இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
யானை · "பசிக்குது தோழா, நாலு இட்லி வாங்கிட்டு வாங்க, சாப்பிட்டுட்டுப் போவோம்" என்கிறார் ஜீவா "இங்கயே கேண்டீன் இருக்கு, சாப்பிட்டிருக்கலாமே தோழர்..." "சரிதான், எங்கிட்ட காசில்லைல்ல" தோழர் போய் இட்லி வாங்கிக் கொண்டு வர, அதை சாப்பிட்டுவிட்டு தான் கொண்டு வந்த மூட்டையை எடுத்துக் கொண்டு ஜீவா கிளம்புகிறார்... "கொடுங்க தோழர், அதை நான் கொண்டாறேன்" என்று ஜீவாவின் கையிலிருந்த மூட்டையை வாங்குகிறார் தோழர்... அப்போதுதான் அது நோட்டுகளும், சில்லறைக் காசுகளும் அடங்கிய பணமூட்டையென்பது தோழருக்குத் தெரிகிறது "இது என்னங்க" "மதுரை பொதுக்கூட்டத்துல தோழர்களும், பொதுமக்களும் கட்சிக்காக நிதி திரட்டிக் கொடுத்திருக்காங்க" என்கிறார் ஜீவா "மூட்டை நெறையா பணத்தை வச்சுக்கிட்டா பசியோட இருந்தீங்க.. இதுலருந்து எடுத்து சாப்பிட்டிருக்கலாமே"... "அதெப்படி தோழர் கட்சிக்குக் கொடுத்த நன்கொடைல நான் இட்லி வாங்கித் திங்க முடியும், அது தப்பில்லையா?" என்றார் ஜீவா.. தோழர் ஜீவா ❤ வீராசாமி Voir la traduction இப்படியெல்லாம் கூட வாழ்ந்திருந்திருக்கிறார்கள் ............! 🙂- கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுமா?
- கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுமா?
அந்த வைத்தியரிடம் நானும் பாம்பு கடித்தவரை அழைத்து சென்றுள்ளேன் ....... அவர் சில மருந்துகளும் குடுத்து பின் கடிவாயில் கோழிகளின் பின்பக்கத்தை வைத்து அழுத்தி பிடிப்பினம் ......விஷமேறி அதுகள் ஒவ்வொன்றாய் இறக்கும் ........பின் கோழி சாகாதபோது நிறுத்துவார்கள் . ....... உறங்க விட மாட்டார்கள் ........ உங்களுக்கும் அப்படி நடந்ததா . .......! மன்னார் விடத்தல்தீவில் எனது உறவினர் ஒருவர் பிரபலமான பாம்புக்கடி வைத்தியராக இருந்தவர் . ........ இப்போது அவர் காலமாகி விட்டார் ......... அவரெல்லாம் மிகவும் ஆச்சாரமாக பக்திசிரத்தையாக வாழ்ந்து வந்தவர் . ......... ஒருவர் வீட்டுக்குள் வருவதைக் கொண்டு நேரகாலமெல்லாம் கணித்தே பாம்பு கடித்தவர் இருக்கிறாரா மோசம்போய் விட்டாரா என்பதை சொல்லி விடுவார் ........ இவர் பெரும்பாலும் இலவச வைத்தியம்தான் செய்வது வழமை ........ இன்றைய காலத்தில் பலர் இவற்றை நம்பப் போவதில்லை ஆயினும் எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன் . .........!- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- கொஞ்சம் ரசிக்க
நாம் வாழும் உலகில் விசித்திரங்களுக்குப் பஞ்சமே கிடையாது .........! 😀- ரசிக்கலாம் வாங்க
நல்லா இருக்கு .........! 🙂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! தமிழ் பாடகி : சுஜாதா இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : காற்றின் மொழி ஒலியா இசையா பூவின் மொழி நிறமா மணமா கடலின் மொழி அலையா நுரையா காதல் மொழி விழியா இதழா பெண் : இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை பெண் : காற்று வீசும் போது திசைகள் கிடையாது காதல் பேசும் போது மொழிகள் கிடையாது பெண் : பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது பெண் : உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது பெண் : வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும் வான வில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும் பெண் : உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும் பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும் பெண் : ஓசைதூங்கும் ஜாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும் ஆசைதூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும் .......! --- காற்றின் மொழி ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மெதுவா மெதுவா தொடலாமா என் மேனியிலே கை படலாமா ...........! 😍- எளிமையாக தமிழ் மூலம் பிரெஞ்சு மொழி கற்றல் .......!
50 முக்கிய பிரெஞ்சு வசனங்கள் | உங்களைப் பற்றி பிரெஞ்சில் பேசுங்கள் .........! 👍- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
Thapes Vlogger est à Oslo, Norvège. · வீட்டுக்கு பக்கத்தில் ஒரு Petrol நிரப்பும் நிலையமும் அதனுடன் சேர்ந்து ஒரு சிறிய உணவகமும் ( snacks, Coffees) இருக்கிறது. இது 24 மணி நேரமும் திறந்திருக்கும். இந்த கடையில் அடிக்கடி ஒரு விளம்பரத்தை பார்க்க முடியும்.. அது இரவு நேர ஊழியர் ஒரு தேவை என்று.. இரவு நேர வேலைக்கு வருபவர்கள், நின்று பிடிப்பதில்லை. நோர்வேயில் இரவு வேலை எனில் என்ன ஒரு நல்ல விசயம் எனில்.. ஒரு கிழமை வேலை, ஒரு கிழமை விடுமுறை, அதாவது 7 நாட்கள் வேலை, அடுத்த 7 நாட்கள் விடுமுறை.. அதாவது மாதத்தில் 14 நாட்கள் வேலை, 14 நாட்கள் விடுமுறை, அது என்ன இரவு நேர வேலையாக இருந்தாலும்.. இரவு 09:00 மணியிலிருந்து காலை 06:00 மணிக்குள் 7.5 மணிநேர வேலை. மாதத்தில் 105 மணிநேரம் தான் வேலை. சம்பளம்..?? Just 14 நாட்கள் வேலைக்கே முழுமையான ஒரு மாத சம்பளம் கிடைக்கும். அதைவிட இரவு நேர வேலைக்கு உங்கள் வழமையான சம்பளத்தை விட 25% அதிக சம்பளம். (உதாரணம்- பகலில் ஒரு வேலைக்கு ஒரு மணி நேரத்திற்க்கு 200 குரோனர் எனில், அதே வேலையை இரவு 09:00-06:00 மணிக்குள் செய்தீர்கள் என்றால் ஒரு மணி்நேரத்திற்க்கு 250 குரோனர்) இதுவும் ஒரு காரணம் இரவு ஒன்பது மணிக்கு பின் Scandinavian நகரங்கள் ஆள் நடமாட்டம் அற்ற நிலையில் இருப்பதற்க்கு.. நகரத்துக்குள் பல உணவகங்களே இரவு 10:00 மூடப்பட்டுவிடும். உலகில் வாழச்சிறந்த நாடுகளாக வகைப்படுத்த படுவதற்க்கு, எடுக்கப்படும் ஒரு முக்கிய காரணி Work Life Balance, 8 மணி நேரம் வேலை 8 மணி நேரம் உறக்கம் 8 மணி நேரம் உங்களுடைய இதர அலுவல்களுக்கு. இவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும், நீண்ட ஆயுளுக்குமான பல காரணிகளில் இதுவும் ஒன்று. #fblifestyle Voir la traduction- அதிசயக்குதிரை
DoctorFarook Abdulla · இன்று இந்தப் பதிவை எழுதி இந்த உன்னதமானவரைப் பற்றி தெரிவித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்குகிறேன் படத்தில் நாம் அனைவரும் பார்ப்பது யார் தெரியுமா? உழைப்பாலும் அறிவாலும் ஆற்றலாலும் சிந்தனையாலும் ஒப்பற்ற நிலையை எய்திய பெண்மணி திருமதி மரியா சலோமியா ஸ்கொலோட்வ்ஸ்கா அவர்கள். இவரைப் பற்றி எழுதும் கணமெல்லாம் புல்லரிக்கும்படி இருக்கும் இவரது வரலாறு. வாருங்கள் இவரது கதையைக் கூறுகிறேன். பிறந்தது 1867 ஆம் ஆண்டு போலந்து நாட்டில் உள்ள வார்சவ் எனும் நகரத்தில் இவர் பிறந்த போது போலந்துக்கு சுதந்திரம் கிடைக்காமல் ரஷ்யா, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா ஹங்கேரி ஆகிய நாடுகள் போலந்தைக் கூறுபோட்டு பாகம் பிரித்து ஆண்டுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில் இவரது தந்தை தவறான முதலீட்டில் தனது செல்வத்தை இழக்க குடும்பம் வறுமைக்குத் தள்ளப்படுகிறது. படிப்பில் படுகெட்டி. அதீத நினைவாற்றல். ஆழ்ந்த சிந்தனையாற்றல் என்று இருந்தவரை வறுமை மேற்படிப்பு படிக்க அனுமதிக்கவில்லை. இவருக்கு ப்ரோனிஸ்லாவா எனும் அக்காள் இருக்கிறார். அவர் ப்ரான்சின் தலைநகரமாம் பாரிஸில் தங்கி மருத்துவம் பயில்வதற்கு ஏதுவாக பணம் அனுப்புவதற்கு தங்கையான மேரி க்யூரி தனது 16 வயதில் செல்வந்தர் வீட்டில் குழந்தைகளுக்கு வீட்டிற்கு சென்று பயிற்றுவிக்கும் ஆசிரியப்பணி புரிந்து வந்தார். எனினும் படிப்பின் மீதும் இயற்பியல் மற்றும் கணிதத்தின் மீது இருந்த தீராத காதலால் அவர் தனது தமக்கை இருந்த பாரீஸ் நகருக்கு 1891 இல் குடிபெயர்ந்தார். ப்ரான்சு நாட்டுக்கு ஏற்றவாறு தனது பெயரான "மரியா" என்பதை "மேரி" என்று மாற்றிக் கொண்டார். அக்காவின் தங்குமிடத்தில் தங்கிக் கொண்டு சோர்பன் பல்கலைக்கழகத்தில் இணைந்தார். இயற்பியலுக்கான தகுதித் தேர்வை 1893இலும் கணிதத்துக்கான தகுதித் தேர்வை 1894 ஆம் ஆண்டிலும் தேர்ச்சி பெற்றார். 1894 ஆம் ஆண்டு சக இயற்பியலாளரான பியரி க்யூரி எனும் நபரைச் சந்திக்கிறார். அந்தச் சந்திப்பு தனது வாழ்க்கையை மாற்றி அமைக்கும் சந்திப்பு என்று அப்போது அவருக்குத் தெரிந்திருக்காது. அவர்கள் இருவருக்குள்ளும் இருந்த இயற்பியல் மற்றும் கணிதத்திற்கான வேட்கை காதலாக அரும்ப 1895 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் நாள் இருவரும் இல்லறத்தில் இணைந்தனர். இனி இருவேறு திசையில் பயணிக்காமல் ஒரே திசையில் இயற்பியல் ஆராய்ச்சியில் பயணிக்கத் தொடங்கினர். 1896ஆம் ஆண்டு ஹென்றி பெக்குரல் எனும் இயற்பியலாளர் யுரேனியத்தில் இருந்து கண்ணுக்குப் புலப்படாத அணுக்கதிர்கள் வெளிப்படுகின்றன என்பதை அறிந்து கூறினார். பியரி க்யூரி அந்த அணுக்கதிர்களின் இயற்பியல் தத்துவங்களை அறிவது குறித்த ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டினார். நமது கதையின் நாயகியான மேரி க்யூரிக்கோ யுரேனியம் மட்டுமே இத்தகைய கதிரியக்கத்தை கொண்டிருக்காது . மேலும் பல உலோகங்கள் கனிமங்கள் இத்தகைய கதிரியக்கத்தைக் கொண்டிருக்கும் என்று பலமாக நம்பினார். அதன் விளைவாக "பிட்ச் ப்ளெண்ட்" எனும் யுரேனியத்தை பெரும்பகுதியாகக் கொண்ட கனிமத்தை ஆராயும் போது அது யுரேனியத்தை விட பன்மடங்கு கதிரியக்கம் கொண்டதாக இருந்தது. எனவே இந்த பிட்ச் ப்ளெண்டில் யுரேனியத்தை விடவும் சக்தி வாய்ந்த பொருட்களை இருக்கும் என்ற ஆராய்ச்சியின் விளைவாக 1898 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது தான் - போலோனியம். மேரி க்யூரி பிறந்த நாடான போலோனியா ( போலந்தின் பெயர்) அந்த கனிமத்துக்கு சூட்டப்பட்டது. இந்தப் பெயரை சூட்டுவதன் மூலம் தனது நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பது குறித்து அறிவியல் உலகம் பேச வேண்டும் என்று கருதினார். அடுத்த சில மாதங்களில் இன்னும் அதிக கதிரியக்க சக்தியைக் கொண்ட ரேடியம் எனும் கனிமத்தைக் கண்டறிந்தார். அவரது ஆராய்ச்சிகளைப் போற்றும் விதமாக இயற்பியல் விரிவுரையாளர் பொறுப்பைப் பெற்றார். 1903ஆம் ஆண்டு "கதிரியக்கத்தைக் கண்டறிந்து கூறியதற்காக மேரி க்யூரி இவரது கணவர் பியரி க்யூரி மற்றும் பெக்குரல் மூவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1904 ஆம் ஆண்டு இவரது கணவரின் இயற்பியல் ஆய்வகத்தில் தலைமை உதவியாளராக இணைந்தார். இத்தகைய கடுமையான ஆராய்ச்சிப் பணிகளை 1895 முதல் 1905 வரை செய்திருந்தாலும் இடையே இருமுறை கர்ப்பமுற்று 1897 ஆம் ஆண்டு முதல் பெண் குழந்தை - ஐரின் 1904 ஆம் ஆண்டு ஈவ் என்ற இரண்டாவது பெண் குழந்தையையும் ஈன்றெடுத்தார். 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி கணவர் பியரி க்யூரி குதிரை சாரட் வண்டி மோதிய விபத்தில் திடீரென இறந்தது இடியென மேரியைத் தாக்கியது. எனினும் தான் கொண்ட லட்சியத்தில் சிறிதும் துவளாமல் தன் கணவர் ஏற்றிருந்த பேராசிரியர் பொறுப்பை மனமுவந்து ஏற்றார். சோர்பன் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு பெண் பேராசிரியர் பொறுப்பேற்றது அதுவே முதல் முறை. தொடர்ந்து அடுத்த ஐந்து வருடங்கள் போலோனியம் மற்றும் ரேடியத்தை பிரித்தெடுத்தல் குறித்த ஆராய்ச்சிகளைச் செய்து 1911 ஆம் ஆண்டு ரேடியத்தை கச்சிதமாக பிரித்தெடுத்துக் காட்டி இம்முறை வேதியியலுக்கு நோபல் பரிசைப் பெற்றார். 1914ஆம் ஆண்டு இவரது ஆராய்ச்சிக்கென பிரத்யேகமாக ஆய்வகக்கூடத்துடன் கூடிய நிறுவனம் தொடங்கப்பட்டது. அதில் அணுக்கதிர் மருத்துவம் குறித்த ஆராய்ச்சிகள், புற்று நோய்க்கு அணுக்கதிர்களை வைத்து சிகிச்சை அளிப்பது குறித்த ஆராய்ச்சிகள் என தனது அறிவியல் சிந்தனையை மானுட நலனுக்கான பாதையில் திருப்பலானார். 1914 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் உலகப்போர் மூண்ட போது போர் முனைக்கே சென்று நடமாடும் எக்ஸ் ரே கருவிகளைத் தானே இயக்கி போரில் அடிபட்ட ராணுவ வீரர்களுக்கு எலும்பு முறிவு, குண்டினால் ஏற்பட்ட காயங்கள், உடலில் இருக்கும் துப்பாக்கி குண்டுகள் போன்றவற்றை அறிவதற்கு வழிவகை செய்தார். போர் முனைக்கு தனது 17 வயதே ஆன மூத்த மகள் ஐரினையும் அழைத்துச் சென்று பணி செய்ய வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. போர் 1918 ஆம் ஆண்டு ஓய்ந்ததும் தனது ஆராய்ச்சி முழுவதையும் அணுக்கதிர் இயற்பியல் மற்றும் வேதியியலை மருத்துவத்தில் பயன்படுத்துவது குறித்த செயல்படுத்தினார். இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் இவரது மூத்த மகளான ஐரின் இணைந்து ஆராய்ச்சி செய்து வந்தார் 1922 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான அகாடமியில் உறுப்பினர் பதவி தேடி வந்தது. 1934 ஆம் ஆண்டு இவரது மகள் ஐரின் மற்றும் அவரது கணவர் ஜோலியட் இருவரும் இணைந்து செயற்கை கதிரியக்கத்தைக் கண்டறிந்தனர். இதற்காக இவர்கள் இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு சில மாதங்கள் கழித்து மேரி க்யூரி நலிவுற்று கதிரியக்கத்தால் ஏற்படும் புற்று நோய்க்கு இரையானார். காலம் முழுவதும் கதிரியக்கத்தின் பயன்பாடு குறித்து ஆராய்ச்சி செய்தவருக்கு அதன் தீய விளைவுகள் குறித்து அப்போது தெரிந்திருக்கவில்லை. கதிரியக்க ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவரது மூத்த மகளும் லூகிமியா எனும் ரத்த புற்றுநோய் ஏற்பட்டு இறந்தார். இவரது இரண்டாவது மகளான ஈவை மணந்த ஹென்றி ரிச்சர்ட்சன் லபோய்ஸ் 1965 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். இந்த வகையில் க்யூரி குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் நோபல் பரிசு பெற்றவர்களாக இருக்கிறார்கள். வரலாற்றில் இரு வேறு அறிவியல் துறைகளில் நோபல் பரிசு பெற்ற ஒரே நபர் - மேடம் மேரி க்யூரி இவரது பெயரில் இயங்கும் தொண்டு நிறுவனம் இன்றைய பொழுதும் புற்று நோயாளர்களுக்கு வழங்கப்படும் கதிரியக்க சிகிச்சை குறித்த ஆராய்ச்சி மற்றும் நிதி பங்களிப்பு செய்து வருகிறது. இன்றைய உலகில் மருத்துவத் துறையில் நியூக்லியர் மெடிசின் எனும் கதிரியக்கத் துறை புற்றுநோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை வழங்கி வருகிறதென்றால் அதற்கான விதையைப் போட்டு விருட்சமாக வளர்த்து அதற்குத் தானே இரையான மேடம் மேரி க்யூரி முதலும் முக்கியமானவர் அன்னார் பிறந்த தினமான நவம்பர் ஏழு - உலகம் முழுவதும் புற்று நோய் விழிப்புணர்வு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரை என்றும் மறவோம். அன்னாரின் தியாகத்தையும் அறிவையும் போற்றுவோம். நன்றி Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை Voir la traduction 💐💐- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
கட்டுரைப் பூங்கா · Natesan Natesan ·opsnedSotri4ifm6f 6i6gi120lh2m1m1u610h863ir f,e0122là5711H3: · #இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய ஜப்பானில் இருந்து ஒரு குழு வந்திருந்தது. அதில் ஒரு 20 வயது மதிக்கத்தக்க ஒருவன். துறுதுறு வென்று எல்லாரிடமும், பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டுமிருக்கிறான். இங்கிலாந்து* கம்பெனியின் நிர்வாகிக்கு அந்தச் சிறுவனைக் கண்டதுமே ஏனோ பிடிக்க வில்லை. இரண்டொரு நாளில் இன்ஸ்டலேஷன் பணிகள் துவங்க இருக்க, ஜப்பான் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்புகிறார். “ஏப்பா.. அவ்ளோ துட்டுப் போட்டு வாங்கிருக்கோம். சர்வீஸ் டீம்ல சின்னப்பையனைலாம் சேர்த்தி அனுப்பிருக்கீங்க? என்ன டூர் வந்திருக்காங்களா? ஏர்போர்ட்ல இருந்து ரூமுக்கு அனுப்ச்சாச்சு. நாளைன்னைக்கு இன்ஸ்டால் பண்றப்ப அந்தப் பையன் மிஷின்ல கைய வைக்கக்கூடாது ஆமா. அதென்ன சின்னப் புள்ளைக சமாச்சாரமா?” - இதுதான் அவர் அனுப்பிய மின்னஞ்சலின் சாராம்சம். உடனடியாக பதில் அஞ்சல் வந்தது. “மன்னிக்க வேண்டும். தவறு தான். நாங்கள், அந்தச் சிறுவனுக்கு பதில் கொஞ்சம் சீனியரை டீமுக்கு அனுப்புகிறோம். அந்தச் சிறுவன் அங்கே இருப்பான். ஆனால் கருவியைக் கையாள மாட்டான்” என்று பதில் வருகிறது. சொன்னபடியே கொஞ்சம் வயதில் மூத்தவர் வருகிறார். குழுவுடன் இணைந்து பணியாற்றுகிறார். அந்தச் சிறுவனும் அவர்களுடன் தான் இருக்கிறான். ஆனால் அந்த மிஷின் வேலை செய்யும் இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளியே அமர்ந்திருக்கிறான். இந்தக் குழுவினார் டீ ப்ரேக், லஞ்ச் ப்ரேக்கெல்லாம் ஒன்றாக அமர்ந்து பேசிக்* கொண்டிருந்து, இரண்டு நாட்களில் இயந்திரத்தை நிறுவிவிடுகிறார்கள். வேலை வெற்றிகரமாக முடிந்து விடுகிறது. வழியனுப்பும் போது, இந்த இங்கிலாந்து கம்பெனி நிர்வாகிக்கு சின்னதாக ஒரு குற்ற உணர்வு. என்ன இருந்தாலும் அவ்வளவு கடுமையாக மின்னஞ்சல் அனுப்பியிருக்கக் கூடாது என்று தோன்றுகிறது. அந்தச் சிறுவன் அவன் பாட்டுக்கு சிரித்த முகத்துடனேயே வளைய வருகிறான். அவனிடம் இதைச் சொல்லி விட்டால் மனது லேசாகி விடும் என்று உணர்கிறார். குழுவினர் எல்லாரும் இருக்க, சொல்கிறார்: “ஸாரி.. ஆக்சுவலி பலகோடி ரூபாய் ப்ராஜக்ட். இன்ஸ்டால் பண்றப்ப எதும் சிக்கல் வந்தா அப்பறம், பணம் நேரம்னு பெரிய நஷ்டமாகிடும். அதான் கொஞ்சம் சீனியர் வேணும்னு கேட்டேன். மத்தபடி ஐ லைக் த பாய். துறுதுறுன்னு இருக்கான். ஆனா இந்த டீம்ல இப்படி ஒரு சின்னப் பையன் வந்தது எனக்கு சரின்னு படலை. அதான்..” என்று பாலிஷாகச் சொல்கிறார். அந்தச் சிறுவன் அதே புன்னகையுடனே இருக்க, புதிதாக வந்தவர் சொல்கிறார். “இட்ஸ் ஓகே சார். நாங்க வாடிக்கையாளர் கருத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்போம். நீங்க சொன்னதுமே என்னை அனுப்பி வெச்சாங்க. இப்ப மிஷின் நல்லபடியா இன்ஸ்டால் செஞ்சு, ஓடிட்டிருக்கு. ஆனா ஒரு விஷயம்..” தயங்குகிறார். ”பரவால்ல.. எதாருந்தாலும் சொல்லுங்க” “நான் அந்தக் கம்பெனில அக்கவுண்ட்ஸ்ல வொர்க் பண்ற ஆளுதான். எனக்கு இந்த மிஷின் பத்தி ஏபிசிடிகூட தெரியாது” நிர்வாகி அதிர்ச்சியாகிறார். “அப்பறம் இன்ஸ்டலேஷனப்ப வேலை செஞ்சுட்டிருந்தீங்க?” “இந்தப் பையன்கிட்ட போய்ப் போய்க் கேட்டு* அவன் சொல்றத மட்டும் பண்ணினேன் அவ்ளதான்” “அந்தப் பையன் எப்படி மிஷின் பக்கமே வராம, உங்களுக்கு இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் குடுத்திருக்க முடியும்?” “முடியும். ஏன்னா, இந்த மிஷினைக் கண்டுபிடிச்சதே அவன் தான்..........! Voir la traduction- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
யாராய் இருக்கும் . .......... ? 😀- புகைப்படம் எடுத்தாலும் பத்மேவைத் தெரியாது -நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா
என்னது .....இடையிலே செய்திகளும் இருந்தனவா .........! 😊- இனித்திடும் இனிய தமிழே....!
கவி காளமேகம் சிலேடை . ........! 🙂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! பாடகர் : கமல் ஹாசன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : இன்னாடா சொல்லிக்கின்னே கிறேன் தாளமா போடுற ஆண் : சொன்னத கேட்டுத்தான் தாளம் போடுறேன் பெண் : ஹான் காது வரைக்கும் கிழியுது வாய் துடுக்கு ஆண் : இன்னும் கூட கிழியும் காது தடுக்கும் பெண் : புரியாம பேசாத பல்ல தட்டுவேன் ஆண் : பேசுறதே புரியாது மொக்கை ஆய்டுவ பி பி பி ஹா ஹா ஆஹா பெண் : யாரை பார்த்து பேசுறேன்னு நினைப்பிருக்குதா ஆண் : பேரு வச்ச ஆத்தாவ மறப்பேனா பெண் : வம்பு பண்ணுனா கொன்னுபுடுவேன் ஆண் : ஆ ஆ ஆ நீ வளத்தது அப்படி நான் என்ன பண்ணுவேன் பெண் : ராங்கு பண்ணாத அப்றோம் எல்லாம் ராங்கா போய்டும் ஆண் : அது எப்படி போகும் ராஜா கைய வச்சா ஏன்டா டேய் அது ராங்கா புடுமாடா புடும் றிங்களா இல்ல போவாது றிங்களா குழு : போவாது போவாது ஆண் : அப்படி சொல்லு ஹான் ஹோ ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை குழு : ஹாஹாஹாஹா ஆண் : ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை நான் தாஜா பண்ணி வச்சா வண்டி பேஜார் பண்ணதில்லை ஆண் : பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலத்தான் குழு : தர ரம்பம் பம் ஆண் : இந்த ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை ராஜா கைய வச்சா ஆண் : கட்டவண்டி என்கிட்ட காரா மாறுன்டா ஓட்டவண்டி கைப்பட்டா ஜோரா ஓடுன்டா ஆண் : என்னைப் பத்தி யாருன்னு ஊர கேளுப்பா இல்லையினா உன் வீட்டுக் காரை கேளப்பா ஆண் : சரக்கிருக்கு குழு : பபபப்பா ஆண் : முறுக்கிருக்கு குழு : பபபப்பா ஆண் : தலைகிறுக்கு குழு : பபபப்பா அது எனக்கெதுக்கு குழு : பபபப்பா ஆண் : வாழ்ந்திடத்தான் பொறந்தாச்சு வாசல்கள் தான் தொறந்தாச்சு பாடுங்கடா இசைப்பாட்டு ஆடுங்கடா நடைப்போட்டு ஆண் : பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலத்தான் குழு : தர ரம்பம் பம் குழு : இந்த ராஜா கைய வச்சா ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை ஆண் : கன்னிப்பொண்ணா நெனச்சி கார தொடனும் கட்டினவன் விரல்தான் மேலப்படனும் ஆண் : கண்டவங்க எடுத்தா கெட்டுப் போயிடும் அக்கு அக்கா அழகு விட்டுப் போயிடும் ஆண் : தெரிஞ்சவன் தான் குழு : பபபப்பா ஆண் : ஓட்டிடனும் குழு : பபபப்பா ஆண் : திறமை எல்லாம் குழு : பபபப்பா ஆண் : அவன் காட்டிடனும் குழு : பபபப்பா ஆண் : ஓரிடத்தில் உருவாகி வேரிடத்தில் விலைப்போகும் கார்களை போல் பெண் இனமும் கொண்டவனை போய் சேரும் ஆண் : வேகம் கொண்டாட காரும் பெண்போல தேகம் சூடாகுமே தர ரம்பம் பம் .......! --- ராஜா கைய வச்சா ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கடலில் விழுந்த ஓர் காக்கை ........ t .r .மகாலிங்கம் . ........! 😍- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
Noorul Ibn Jahaber Ali · சக்தே இந்தியா படம் பார்த்திருப்போம். கனா படம் பார்த்திப்போம். தங்கல் படமும் பார்த்திருப்போம். அதில் பயிற்சியாளர்களாக வரும் கபீர் கான், நெல்சன் திலீப் குமார், அமீர் கான் கதாபாத்திரங்களை உண்மையில் காண வேண்டும் என்றால் இந்த மனிதனை பார்த்துக்கொள்ளுங்கள். இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனைகள் உலகக்கோப்பை வென்றவுடன் காலில் விழும் இந்த நபர்தான் அந்த அணியின் பயிற்சியாளர். இவர் பெயர் அமோல் மஜும்தார். அமோல் மஜும்தார் அவர்களின் வாழ்வும், இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு அவர் பெற்றுத் தந்த உலகக் கோப்பை வெற்றியும், திரைப்படங்களின் கதையை கண்முன்னே நிறுத்துகின்றன. உள்நாட்டு கிரிக்கெட்டில் 11,000-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து ஜாம்பவானாகத் திகழ்ந்தபோதும், அமோல் மஜும்தாரால் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கங்குலி போன்ற ஜாம்பவான்கள் மத்தியில் இந்திய அணியில் இடம்பெற முடியவில்லை. இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப்பெரிய ஏமாற்றம். தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட இந்த ஏமாற்றங்களே அவர்களை மீண்டும் களத்திற்குத் திரும்ப வைத்தன. மஜும்தார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரானார். அமோல் மஜும்தார், ஒரு வீரராக தன் கனவு நிறைவேறாத போதும், ஒரு பயிற்சியாளராக இந்தியாவிற்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். தன்னால் அடைய முடியாத உலகளாவிய புகழை அல்லது தவறான முத்திரையை தாங்கள் பயிற்சி அளித்த அணியின் வெற்றியின் மூலம் அடையும் வைராக்கியம் கொண்ட கதைதான் மஜும்தாருடையது. தங்கள் அணியின்மீது வைத்த அசைக்க முடியாத நம்பிக்கையை, முக்கிய முடிவுகள் மூலம் வெளிப்படுத்தினர். அரையிறுதியில் சோபித்திராத ஷஃபாலி வர்மா மீதான நம்பிக்கையை இறுதிப் போட்டியிலும் தொடர்ந்து, இறுதிப் போட்டியிலும் அதே வீராங்கனை மீது நம்பிக்கை வைத்து களமிறக்குவதும், ஒரு கோச்சின் உச்சகட்ட தன்னம்பிக்கை மற்றும் வீரரின் திறமை மீதான ஆழமான நம்பிக்கையைக் காட்டுகிறது. இதன் விளைவாக, ஷஃபாலி வர்மா சிறப்பாக ஆடி ஆட்டநாயகன் விருது வென்றது, அந்தக் கோச்சின் முடிவுக்கு கிடைத்த மகத்தான அங்கீகாரம்! - நூருல் Voir la traduction - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.