suvy
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
Everything posted by suvy
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : தூவானம் இது தூவானம் இது தூவானம் சொட்டு சொட்டா உதிருது உதிருது அது தாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும் தளதளவென வளருது ஆண் : பூவாடும் இளம் கூந்தலுக்குள் புகுந்து புகுந்து ஓடுது பெண் : மேலாடை தனில் மழை விழுந்து நனைந்து நனைந்து மூடுது ஆண் : பூவாடும் இளம் கூந்தலுக்குள் புகுந்து புகுந்து ஓடுது ஆண் : மானோடும் சிறுவிழியில் இட்ட மையும் கரைந்து ஓடுது பெண் : தேனோடும் இதழ் மீது வந்து பனித்துளி போல் தேங்குது ஆண் : உட்காரச் சொல்லி நான் அழைக்கும்போது ஓட்டம் என்ன முன்னாலே பெண் : என் பக்கம் மனசை இந்த வெட்கமும் வந்து பாய்ந்திழுக்குது பின்னாலே ஆண் : தக்க நேரம் வந்து விட்டது தையல் போடு கண்ணாலே பெண் : இந்த சரசமாடக் கூடாது ஒரு தாலி கட்டும் முன்னாலே.......! --- தூவானம் இது தூவானம் ---- மயிலம்மா.
மயிலிறகு ....... 09. அக்கா நீங்கள் இப்பொழுது எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறீர்கள் என்று அஞ்சலா கேட்க மயிலம்மாவும் எங்களுக்கு ஒரு ஒரு லட்சம் வரை தேவைப்படும்போல இருக்கு என்கிறாள். உங்களின் நகைகளை நான் பார்க்கலாமா .... அதுக்கென்ன என்று சொல்லி அங்கிருந்த கிணற்றுக் கட்டில் அருகில் அமர்கிறார்கள்.பின் மயிலம்மாவும் நகைப் பையையும் பத்திரப் பையையும் அவளிடம் தருகிறாள். இவர்கள் கதைத்துக் கொண்டிருக்க வாமன் அந்தப் பெரிய கிணற்றையும் அருகிலே மோட்டர் பம்ப் அறையையும் பார்க்கிறான்.கிணற்றுக்குள் இரண்டு பெரிய குழாய்கள் இறங்கி இருக்கின்றன.மிகவும் ஆழமான கிணறு. இந்த வெய்யில் காலத்திலேயே ஒரு ஆள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் இருக்கின்றது. அப்படியே நடந்து வர கிணற்றை ஒட்டி மரக்கறி வகைகள், வெற்றிலைக்கொடிகள் சற்று தள்ளி வாழைத்தோட்டம் கரும்பு எல்லாம் செழிப்பாக இருக்கின்றன. கீரைப் பாத்திகள்தான் நீரின்றி சோர்ந்துபோய் இருக்கு. அவற்றைக் கடந்தால் பெரிய நெல் வயல் பல ஏக்கருக்கு பரந்து கிடக்கு.ஆங்காங்கே கூலியாட்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.கொட்டில்களில் மாடு, ஆடுகள்,பரணில் கோழிகள் மற்றும் தகரக் கொட்டகையில் இரண்டு டிராக்டர்கள் நிக்கின்றன . எல்லாவற்றையும் ஒரு நோட்டம் விட்டுக்கொண்டு வயல் பக்கம் வரும்போது ஒரு வயதான பெண்மணி வரப்போரம் தட்டுத் தடுமாறி நடந்து தள்ளாடி வரப்பில் சரிந்து விழுகிறாள்.வாமன் பதறிப்போய் அங்கு வேலைசெய்து கொண்டிருந்த பெண்ணையும் கூப்பிட்டுக்கொண்டு ஓடிப்போய் அந்த அம்மாவிடம் என்னம்மா செய்யுது என்று கேட்க அந்த அம்மா இடுப்பில் இருந்த பையைகாட்ட அதற்குள் ஒரு சீசாவில் சீனியும் சிறிய போத்தலில் பழச்சாறும் இருப்பதைக் கண்டு அவற்றை எடுத்து உங்களுக்கு சீனி வருத்தமா என்று கேட்டு சீனியை அவவின் வாயில் போட்டு பழசாற்றைக் குடிக்கக் கொடுக்கிறான்.அந்த அம்மாவை நிமிர்த்தி இருக்க வைக்கும்போது அந்தப் பெண்ணும் வந்துவிட்டாள்.அவள் சிறிது சிறிதாக நீரைப் பருக்கிக் கொண்டு மார்பை கைகளால் நீவி விடுகிறாள்.கொஞ்ச நேரத்தில் அந்த அம்மாள் சரியாகி விடுகிறாள்.பின் இருவரும் கைத்தாங்கலாக அவவைக் கொண்டுவந்து வீட்டுத் திண்ணையில் விடுகிறார்கள்.அந்தப் பெண்ணை அவாவுடன் இருக்கச் சொல்லிவிட்டு வாமு அங்கிருந்து கிளம்பி வருகிறான். அஞ்சலா உறுதியை மேலோட்டமாய் பார்த்து விட்டு நகைகளைப் பார்க்கிறாள். எல்லாம் கனமான நல்ல நகைகள்.அதிகம் பாவிக்காது இருந்ததால் பொலிவிழந்து கிடக்கு. புன்னைக்காய் நீரில் ஊறவைத்து பிரசால் தேய்த்தால் புதிதாக மினுங்கும் என்று நினைத்துக் கொண்டு சரி அக்கா நான் முன்பே சொன்னபடி இந்தத் தொழில் இனிமேல் செய்வதில்லை என்னும் முடிவில் தான் இருந்தேன்.ஆனால் உங்களின் நிலமையைப் பார்க்கவும் எனக்கு ஒரு மாதிரி இருக்குது. அதனால் நான் உங்களுக்கு பணம் தருகிறேன்.என்னிடம் பணம் வாங்கியதாக யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்லிப் பின் அந்தப் பணத்துக்கு உரிய வட்டிகள் பற்றி கதைத்து விட்டு அவற்றை எடுத்துக் கொண்டு உள்ளே போகிறாள். அங்கு அவர்களின் இரும்புப் பெட்டியைத் சாவி போட்டு திறந்து பல இடங்களில் திருகித் திறந்து அவற்றை வைக்கும்போது பார்க்கிறாள் அதில் அவள் பெற்றோர்களின் காணி உறுதி மற்றும் அவர்களது நகைகள் இன்னும் யார்யாருடையதோ எல்லாம் இருக்கின்றன.அதை அப்பப்ப திறந்து பார்த்து நினைப்பதுண்டு இதற்காகத்தானே எங்கள் குடும்பமும் அழிந்து,எனது படிப்பும் பாழாக்கி, வாழ்க்கைக் கனவுகளையும் இந்த மனிதன் அழித்து விட்டாரே.ஆனால் இப்ப இவையாவும் என் கையில்.என் பெற்றோரும் என்னுடன் வந்து இருக்கிறார்கள். இவர் போகும்போது மக்களின் வயித்தெரிச்சலைத் தவிர வேறு என்னத்தைக் கொண்டு போனவர். இந்தக் காலத்தின் கோலத்தை என்னவென்று சொல்வது. சிறிது நேரம் தன்னிரக்கத்தில் மூழ்கியவள் பின் தன் கையிலிருந்த பைகளை உள்ளே வைத்து விட்டு தேவையான சில பணக்கட்டுகளை எடுத்துக் கொண்டு பெட்டியைப் பூட்டும்போது என்ன நினைத்தாளோ தெரியாது அந்த நகைகள் இருக்கும் பையை மட்டும் எடுத்துக் கொண்டு மயிலம்மாவிடம் வருகிறாள். அவளிடம் பணத்தைக் குடுத்து எண்ணிப்பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு பையுடன் நகைகளை அவளிடம் தந்து அக்கா நான் அந்தக் காணிப் பத்திரத்தை மட்டும் எடுத்து வைத்துள்ளேன், நீங்கள் இந்த நகைகளைக் கொண்டுபோய் மகளின் திருமணத்தை நன்றாக நடத்துங்கள். கூடிய சீக்கிரம் பணத்தைத் தந்து பத்திரத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல மயிலம்மாவும் வாஞ்சையுடன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு பிள்ளை இந்த உதவியை நான் ஒருநாளும் மறக்க மாட்டேன், நீ நல்லா இருக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறுகிறாள். என்னக்கா நீங்கள்......அன்று எனக்கு எவ்வளவு பெரிய உபகாரம் செய்தனீங்கள். சரி....சரி....இங்கு காத்தடிக்குது நீங்கள் அங்கு திண்ணையில் போய் இருந்து பணத்தை எண்ணி எடுங்கள் என்று சொல்ல ....அவளும் உன்னை நான் நம்புகிறேன் அஞ்சலா ......அப்படி சொல்லாதையுங்கோ, பணம் சம்பந்தப்பட்ட விசயம் நீங்கள் எண்ணி எடுப்பதுதான் சரி. அங்க அந்தத் திண்ணையில் இருந்து ஆறுதலாய் எண்ணுங்கள் என்று அனுப்பி வைக்கிறாள். பின் மோட்டாரையும் கிணத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும் வாமுவிடம் வருகிறாள். மயிலம்மாவும் பணத்தை எண்ணுவதற்காக அந்தத் திண்ணைக்குப் போகிறாள். அங்கு மயங்கி விழுந்த அம்மா களைப்புடன் இருக்க பக்கத்தில் அந்தப் பெண் பனையோலை விசிறியால் விசிறிக்கொண்டு இருக்கிறாள். மயிலம்மாவும் சென்று கொஞ்சம் தள்ளி அமர்கிறாள். அந்த அம்மாவும் அந்தப் பெண்ணிடம் பிள்ளை அந்தமருந்தை எடுத்துத் தானை என்று சொல்ல அதை புரிந்து கொண்டு அந்தப் பெண்ணும் அங்கிருந்த போத்தல் சாராயத்தை எடுத்து வந்து குவளையில் விட்டு நீர் கலந்து கொடுக்கிறாள். சரி பிள்ளை நீ போய் வேலையைப்பார் இவ இங்கு இருக்கிறாதானே என்று சொல்ல அவளும் அம்மா இவவை கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கள் அங்கு மயங்கி விழுந்துட்டா என்று சொல்லிவிட்டு போகிறாள். மயிலம்மாவும் அவளிடம் என்ன நடந்தது என்று கேட்க அது பிள்ளை சீனி குறைஞ்சு போச்சு அதுதான் மயக்கமாயுட்டன். நல்ல காலம் ஒரு பொடியன் கண்டுட்டு ஓடிவந்து காப்பாற்றி இங்க கொண்டுவந்து விட்டவன். மயிலம்மா பக்கத்தில் போத்திலைப் பார்க்க அது அப்பப்ப கொஞ்சம் மருந்து குடிக்கிறது. காலம் முழுக்க காணி, பூமியோட கிடந்து உழைஞ்சு உடம்பு களைச்சுப் போச்சு. இரவில நித்திரையும் வருகுதில்லை.நீங்கள் எடுக்கிறனீங்களோ. சீ சீ எப்போதும் இல்லை. நீங்கள் சொன்னமாதிரி வயல் வேலைகள் செய்துபோட்டு வந்தால் உடம்பு அலுப்பாய் இருக்கும். அப்பொழுது கொஞ்சம் எடுக்கிறதுதான். அப்ப அந்த அம்மா தண்ணியையும் தண்ணிப் போத்தலையும் அவள் பக்கம் அரக்கி வைக்கிறாள். மயிலம்மாவும் தங்கள் வந்த வேலை சுலபமாய் முடிந்ததால் மனசுக்குள் ஒரு புளுகம் ஏற்பட அவற்றை எடுத்து சீராகக் கலந்து கொஞ்சம் கொஞ்சமாய் குடித்துக் கொண்டு பணக்கட்டைப் பிரித்து எண்ணுகிறாள்.......! 🦚 மயில் ஆடும்.........! 09.- ஆரோக்கிய நிகேதனம்
இப்பதான் ஒவ்வொன்றாய் கேட்டுக் குடுக்கிற பழக்கம் வந்திருக்கு.....அதிலும் காரணம் இருக்கு, அநேகமானவர்கள் விதவிதமான வருத்தங்களுடன் குளிசைகளும் கட்டிக்கொண்டு திரிகின்றனர்.....நாங்கள் பொதுவா வெய்யில் என்றால் பழரச பானங்களும் குளிர் என்றால் தேனீரோ கோப்பியோ போட்டுக் குடுக்கிறதுதான் வழக்கம்......! 😂- உணவகத்தில் தங்கத்தூள் கலந்து செய்த பருப்பு குழம்பு
அதுதெரியாது ஆனால் அவர்கள் கழிக்கிறதை தனியாக எடுத்து தண்ணீரில் அரித்து சேகரித்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும். செய்வார்களோ தெரியாது......மொத்தத்தில் பருப்பு 100 === 1200 லாபம் ......! 😂 ஊரிலும் தங்கபஸ்பம் பீடா என்று இருந்தது.கே.கே.எஸ் வீதியில் வசந்தா சலூனுக்கு அருகில்...... இந்தியாவிலும் இருக்கும். செட்டிமார் தாம்பூலம் போடுவதற்கென்றே பிறந்தவர்கள். எம்.ஜி.ஆர்.....அது போடுவதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்......!- இலை என்றால் உதிரும்
இதை ஏன் பிரச்சினையாக நினைக்கிறீர்கள்......பனியைத் தள்ளுவதிலும் பார்க்க இலைகளை அள்ளுவது சுலபம் அல்லவா .....! 😂- சிந்தனைக்கு சில படங்கள்...
மேலே இருக்கும் படத்துக்கும் இதுக்கும் விட்டகுறை தொட்ட குறை இருக்கும் போல.......! 😂- களைத்த மனசு களிப்புற ......!
- மயிலம்மா.
- அதிசயக்குதிரை
மனசார நினைத்தால் எதுவும் நடக்கும்.....ஆனால் நல்லதே நினைக்க வேண்டும்......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : மொட்டு மொட்டு மலராத மொட்டு கட்டு கட்டு எனை அள்ளி கட்டு பெண் : ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு சிட்டு சிட்டு சிங்கார சிட்டு பெண் : ஆணழகா உன் அடிமை இங்கே நீ தேன் அள்ளி தூவிட வா தோளிரண்டில் உன் இளங்கிளி நான் நீ தினம் தினம் கூடிட வா பெண் : தமிழ் தரும் சுவை என உன் வாய் மொழி கேட்டேன் பெண் : அது தரும் சுகம் என விழி பார்வையை பார்த்தேன் பெண் : { உந்தன் கையில் பெண்ணாக வேண்டும் உன்னால் பெண்ணை பண்பாட வேண்டும் ஒன்றும் ஒன்றும் மூன்றாக வேண்டும் என்றும் நீயே நான் ஆக வேண்டும் } (2) பெண் : இலக்கியம் எனதுடலே வா நீ வா இலக்கணம் உனதுருவே தா நீ தா தேவா பெண் : எனை தொடு வரம் கொடு உயிர் வாழ்ந்திட கேட்டேன் மலர் உடல் மணம் பெற தினம் தேவனை பார்த்தேன் பெண் : { பெண்மை என்றும் உன்னோடு தஞ்சம் பெண்ணில் இன்பம் கொண்டாடும் மன்றம் முத்தம் என்னும் வித்தாடு நித்தம் நித்தம் நித்தம் பித்தான சித்தம் } (2) பெண் : இளமையின் ரகசியமே வா நீ வா இது தினம் அவசியமே தா நீ தா தேவா......! --- மொட்டு மொட்டு மலராத மொட்டு ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம்........! 😁- நான் கண்ட யாழ்ப்பாணம்!!
கண்ணுக்கு தெரியாதபடி ஒரு இராணுவச் சிறைக்குள் இருக்கும் நகரம் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்......!- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- கொஞ்சம் ரசிக்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கலாம் வாங்க
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
தண்ணீருக்குள் தன்னைத் தானே முகம் பார்த்துக் கொண்டு நிக்கும் தென்னைகள்......! 😂- மயிலம்மா.
மயிலிறகு........ 08. மயிலம்மாவை அவள் வைத்தியின் செத்தவீட்டில் பார்த்திருக்கிறாள்.ஆனால் அதிகம் பேசிப் பழக்கமில்லை. அன்று அவரின் மகன்களும் மகளும் வைத்தியின் செத்தவீட்டுக்கு வந்த இந்தப் பெண்ணை அவரது உடலைப் பார்க்க விடாமல் தடுத்து " நீ இங்கு வரக்கூடாது, அப்பாவைப் பார்க்க விடமாட்டோம் வெளியே போடி" என்று முக்கியமாக அவர்களின் இரண்டாவது மகன் யோகிபாபு விரட்டியபோது அவர்களின் தாயார்காரி அவர்களைத் தடுத்து தன் பிள்ளைகளைப் பேசி மல்லுக் கட்டிக்கொண்டிருக்க மயிலம்மாவும் அவள் அருகில் நின்று தம்பிகள் நீங்கள் இந்த நேரத்தில் இப்படியெல்லாம் சண்டை போடக்கூடாது.இது உங்கட வீட்டுக் காரியம்.அப்பாவை அமைதியாய் நிம்மதியாக அனுப்பி வைக்க வேண்டும். உங்கள் அம்மா சொல்வதைக் கேளுங்கோ. அவள் ஒரு ஓரமாய் நின்று பார்த்திட்டுப் போகட்டும். அங்க ஐயரும் காத்துக் கொண்டிருக்கிறார்.போய் ஆகவேண்டிய காரியங்களைப் பாருங்கோ என்று விலக்குப் பிடித்து விட்டவள்.அதன் பின் மூத்தவன் ரவிராஜ்யும் தங்கை மீனாவும் சென்று காரியங்களைக் கவனிக்க அது நல்லபடியாய் நடந்து முடிந்தது. சடங்குகள் முடிந்து சவம் வேலியைப் பிய்த்துக் கொண்டு வீதியால் போகும்வரை அந்தப் பெண் மயிலம்மா பக்கத்திலேயே நிக்கிறாள்.மயிலம்மாவும் அவளைத் திரும்பிப் பார்க்காமலேயே நீ ஒன்றுக்கும் பயப்பிடாத நான் இருக்கிறன் என்று அவளுக்குத் தைரியம் தருகிறாள். அதுதான் அந்தப் பெண் இந்த நினைவுகள் மனதில் நிழலாட அவளைக் கண்டதும் முன்வந்து வாங்கக்கா என்ன விசயம் என்று சொல்லி அன்று நீங்கள் மட்டும் அந்தப் பிள்ளைகளை சமாளித்திருக்காது விட்டால் பெரிய களேபரமாய் போயிருக்கும். அதிலும் அவன் சின்னவன் யோகிபாபுவின் ஆவேசத்தை நினைக்க இப்பவும் ஈரக்குலை நடுங்குது. என்று சொல்லி அவளின் கையைப் பிடித்து அழைத்துப் போகிறாள்.அங்கு விறகு வெட்டிக்கொண்டிருந்த வேலையாளிடம் "அண்ணை ரெண்டு இளநி சீவிக்கொண்டு வாங்கோ" என்று சொல்லிவிட்டு வாமனைப் பார்த்து எங்க உன்னோடு கூட ஒரு பையன் வருவானே காணேல்ல .....உங்களுக்கு என்னெண்டு தெரியும் என்று வாமு கேட்கிறான்.அதுவா நான் இந்தத் திண்ணையில் இருந்து வெளி உலகத்தைப் பார்க்கிறேன்.அப்போதுதான் நீங்கள் இருவரும் அடிக்கடி இந்த வீதியால் போய் வருவதைக் கண்டிருக்கிறேன்.இப்ப சில நாட்களாய் நீ தனியாகப் போய் வருகிறாய். அன்று மாங்காய்க்கு கல் எறிந்ததும் அந்தப் பையன்தானே என்று சொல்லிவிட்டு உன் பெயர் என்ன என்று கேட்க, மயிலம்மா குறுக்கிட்டு இவன் பெயர் வாமன். அந்தப் பையன் என் மகன் சுந்தேரேசன்.அவன் மேற்படிப்புக்காக கண்டிக்குப் போயிருக்கிறான். பல்கலைக்கழகத்துக்கா .......ஓம்.......சிறிது யோசித்தவள் ....ம்....என்று ஒரு பெருமூச்சு விட்டுட்டு அது நல்லது.இந்தக் கிராமத்தில் இருந்து மேற்படிப்புக்கு போகும் பிள்ளைகள் மிகக் குறைவு.அவர்கள் நன்றாகப் படித்து முன்னுக்கு வரவேண்டும்.அப்போதுதான் மற்றப் பிள்ளைகளுக்கும் படிக்க ஊக்கம் வரும். பின் தனக்குள் நினைக்கிறாள் இவர் மட்டும் வலுக்கட்டாயமாய் தன்னை இங்கு கூட்டி வந்திருக்காது விட்டால் இந்நேரம் நானும் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்திருப்பேன்.அவர் தன்ர பவிசுக்காக எல்லோரும் பார்த்திருக்க என்னை இழுத்துக் கொண்டு வந்திட்டார் .எனக்கு இங்கு வாழ்க்கை வசதி எல்லாம் இருக்கு ஆனால் எதுவுமே இல்லாத வெறுமை எனக்குத்தான் தெரியும். "நலமடித்தஎருதுபோல் அவர் இருக்க நீரில்லாத கொடியாக நான் வாடுகிறேன். ....ம் .....எல்லாம் என் விதி என்று தன்னை நொந்து கொள்கிறாள். சரி......சரி....நானே கதைத்துக் கொண்டு இருக்கிறேன். நீங்கள் சொல்லுங்கோ என்ன விசயம் வந்தது என்று கேட்க மயிலம்மாவும் என் மக்களுக்கு ஒரு சம்பந்தம் கை கூடி வந்திருக்கு. நான் ஒரு ஆறுமாதமாவது பொறுத்து செய்யலாம் என்று இருந்தேன்.ஆனால் அவர்கள் அவசரப் படுத்தினம். அதனால அவசரமாய் கொஞ்சப் பணம் தேவைப்படுது. அதுதான் இப்ப என்னிடம் காணிப் பத்திரமும் கொஞ்ச நகைகளும் இருக்கு, அதுகூட பிள்ளையின் கல்யாணத்துக்கு சேர்த்து வைத்த நகைகள்தான். இப்ப அவசரத்துக்கு அதையும் கொண்டு வந்திருக்கிறன்.இதை வைத்துக் கொண்டு நீங்கள்தான் பணம் தர வேண்டும் என்று கேட்கிறாள். கடவுளே: என்னங்க நீங்க இந்த வேலைகள் எல்லாம் அவர்தான் பார்த்தவர். நான் இதொன்றும் செய்யிறேல்ல. ஏன் உங்களுக்கு அவற்ர சம்சாரம் பழக்கம்தானே அவர்களிடம் கேட்டுப்பார்க்கலாமே. அவ நல்ல பழக்கம்தான். அதுதான் அவாவிடம் கேட்க கூச்சமாய் இருக்குது.....அப்ப வாமு குறுக்கிட்டு அங்கு வட்டியும் அதிகம் என்று நினைக்கிறம். இதென்ன கூத்தா இருக்கு.இவர் வாங்கும் வட்டியை விட அவ குறைவாத்தான் எடுக்கிறவ. இவரிடம் வந்தவர்களில் பத்துக்கு இரண்டு பேர்தான் தப்பிப் போவார்கள்.மற்றவர்கள் எல்லாவற்றையும் இழந்து தெருவிலே நின்று தூற்றிவிட்டுப் போவதை நான் நேரிலே பார்த்திருக்கிறேன். நல்ல காலம் இவர் இப்ப இல்லை.இருந்திருந்தால் நீங்கள் உடும்பிடம் தப்பி முதலை வாயில் விழுந்ததுபோல் ஆகியிருக்கும். ஏன் ஊருக்கே தெரியும் உங்களுக்கு சொன்னால் என்ன நானே எங்கப்பா வாங்கிய கடனுக்கு வட்டியாய் வந்தவள்தானே. அதுதான் எனக்கு அந்த வலி தெரியும். மயிலம்மாவும் சரி அப்படியென்றால் இனி வேறு இடம்தான் போகவேணும்போல இருக்கு. சரி பிள்ளை நாங்கள் போட்டு வாறம் என்று கிளம்ப அங்கு இளநியுடன் வேலையாள் வருகிறான்.நில்லுங்க அக்கா நல்ல வெய்யுலுக்க வந்திருக்கிறீங்கள். கொஞ்சம் இளநி குடியுங்கள் இதமாய் இருக்கும். மயிலம்மா சிறிது தயங்குகிறாள். பரவாயில்லை அக்கா குடியுங்கள் என்கிறாள்.வாமுவும் நிலைமையை சுமுகமாக்க நினைத்து உங்கட பெயர் என்ன என்று கேட்க்கிறான். என் பெயர் அஞ்சலா.....ம்.....நல்ல பெயர் பின் மா மரத்தைப் பார்த்து என்ன அஞ்சலா எல்லாம் பிஞ்சுகளாய் விழுந்து கிடக்கு.....ஓம் ....மழைக்கும் காத்துக்கும் கொட்டுண்டு கிடக்கு. அதற்கு மேலால் தொலைபேசி வயர் வீதியில் இருந்து வீட்டுக்கு போகின்றது.....நீங்களும் உங்களுக்குத் தேவையானதை பறித்துக் கொண்டு போகலாமே.....உங்கட வீட்டுக்கு பின்னால் பெரிய தோட்டம் இருக்கு போல மயிலம்மா இளநி குடித்துக் கொண்டே வினவ, ஓம் அக்கா எனக்குத் தோட்டம் செய்ய மிகவும் பிடிக்கும்.அதனால்தான் இந்த வீடு வளவு தோட்டம் வயல் எல்லாம் நான் அடம்பிடிக்க எனக்கென்றே எழுதித் தந்து விட்டார்.வாருங்கள் தோட்டம் பார்க்கலாம் என்று கதைத்துக் கொண்டு பின்னால் போகிறார்கள். அப்படிச் செல்லும்போது மயிலம்மாவும் தங்களுக்கு எதிர்பாராமல் மகன் சுந்தரேசனுக்கு பல்கலைக்கழகம் வரும்படி கடிதம் வர என்னிடம் கையில் பணமில்லை அப்போது வாமன்தான் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு வைத்திருந்த பணத்தை நண்பனுக்கு குடுத்து உதவி அனுப்பி வைத்தவன். அது ஒருவழியாக முடிஞ்சுது என்று இருக்க, முந்தாநாள் சம்பந்தி வீட்டார் வந்து வாறமாதம் அவைகளின்ர மகனுக்கும் என்ர மகள் பூவனத்துக்கும் கலியாணம் செய்து வைக்கவேணும் என்று பிடிவாதமாய் நிக்கினம். மாப்பிள்ளையும் நல்ல பிள்ளை அதனால் எனக்கு இந்த சம்பந்தத்தை விட விருப்பமில்லை. அவர்களிலும் பிழையில்லை.காரணம் பொடியனின் பேத்தியும் வருத்தமாய் இருக்கின்றா,தான் சாகமுதல் அவற்ர கலியாணத்தைப் பார்க்க விரும்புகிறா. அதுதான் எனக்கு திடீரென்று பணத்தட்டுப்பாடு வந்தது.இல்லையென்றால் இன்னும் ஒரு மூன்று மாதம் பொறுத்து நெல்வயல் அறுவடை செய்து இந்தப் பிரச்சினைகளை சமாளித்திருப்பேன் என்கிறாள்.இப்படிப் போகும்போது மயிலம்மா நகைகள் இருந்த சுருக்குப் பையை தன் இடுப்பில் சொருகி வைத்துக் கொண்டு காணி உறுதிப் பாத்திரங்கள் இருக்கும் பையை கையில் கொண்டு வருகிறாள். வெய்யிலில் முகம் கழுத்தெல்லாம் வேர்த்துக் கொட்டுது. இடைக்கிடை முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொள்கிறாள். அஞ்சலையும் கூட நடக்கும்போது அதைப் பார்த்துக் கொண்டே வருகிறாள்.அப்போது அவர்களின் இக்கட்டான நிலைமை அவளுக்குப் புரிகின்றது. ஒருகனம் தனது பெற்றோரின் நிலைமை கண்முன் வந்து போகின்றது.........! 🦚 மயில் ஆடட்டும்........ 08.- எச்சரிக்கை
நீங்கள் கொடுத்தாலும் சரி கொடுக்காவிட்டாலும் சரி ......நீங்கள் செய்வது ஒரு தலைப்பட்ச ஒப்பந்தமாகத்தான் இருக்கும்.......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : தூவானம் தூவ தூவ மழை துளிகளில் உன்னை கண்டேன் என் மேலே ஈரம் ஆக உயிா் கரைவதை நானே கண்டேன் ஆண் : கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன் அவரே வரமாய் வருவதை இங்கு பாா்த்தேன் வேறு என்ன வேண்டும் வாழ்வில் ஆண் : குயிலென மனம் கூவும் மயிலென தரை தாவும் என்னோடு நீ நிற்கும் வேளையில் புழுதியும் பளிங்காகும் புழுக்களும் புனுகாகும் கால் வைத்து நீ செல்லும் சாலையில் ஆண் : யாா் தீங்கு செய்தாலும் மன்னிக்க தோன்றும் நீ தந்த இம்மாற்றம் என் வெட்கம் தூண்டும் காதல் வந்தால் கோபம் எல்லாமே காற்றோடு காற்றாக போகின்றதே ஆண் : இரவுகள் துணை நாடும் கனவுகள் கடை போடும் நீ இல்லை என்றால் நான் காகிதம் விரல்களில் விரல் கோா்க்க உதட்டினை உவா்பாக்க நீ வந்தால் நான் வண்ண ஓவியம் ஆண் : நெஞ்சுக்குள் பொல்லாத ஆறேழு வீணை ரிங்காரம்தான் செய்து கொல்கின்ற ஆணை நீ தான் கை தூக்க வேண்டும் என் கண்ணே கை நீட்டு தாலாட்டு கண் மூடுவேன்......! --- தூவானம் தூவ தூவ ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமாம் தென்றல்......! 😍- கொஞ்சம் சிரிக்க ....
- சிரிக்க மட்டும் வாங்க
காவலர்: எனது சகோதரா உன்னை தொழுது சொல்கிறேன். இப்பொழுது நீ ஒரு முடிவு எடுக்க வேண்டும். ஒரு கார் வாங்கவும் அல்லது காண்டம் (ஆணுறை) வாங்கவும்......! 😂- மயிலம்மா.
மயிலிறகு........07. மயூரியும் வாமனும் தனித்து இருக்கிறார்கள்.அப்போது அவனிடம் மயூரி அப்பன் இப்ப கொஞ்சப் பணம் அவசரமாய்ப் புரட்ட வேணும். என்னிடம் கொஞ்ச நகைகள் இருக்கு. பின்னுக்கு இருக்கும் பத்து ஏக்கர் காணியில் ஐந்து ஏக்கர் காணியை எங்காவது ஈடு வைத்து பணம் புரட்டலாம் என்று நினைக்கிறன். நீ என்ன சொல்கிறாய். கொஞ்சம் என்றால் எவ்வளவு தேவைப்படும் உத்தேசமாய் என்று வாமன் கேட்கிறான். எனக்கும் வடிவா சொல்லாத தெரியேல்ல, கல்யாண வீட்டு செலவுகள் உடுப்புகள் நகைகள் என்று, பின் நாலாம் சடங்குக்கு மச்சம் மாமிசம் சமைச்சுக்க குடுக்க வேணும். ஏன் அவையள் கலியானச் செலவில பாதி தரமாட்டினமோ......நான் ஒன்றும் அதுபற்றிக் கேட்கேல்ல.....வாறகிழமை அவையள் வருவினம் அப்ப நீயும் வா இதுபற்றிக் கதைப்பம். அண்ணனும் (கனகத்தின்ர புருசன்) இது போன்ற காரியங்களில் நியாயமாய் கதைக்கக் கூடியவர். எப்படியெண்டாலும் நாங்களும் கையில காசு வைத்திருக்க வேணுமெல்லோ. ஒரு ஐம்பது அறுபதாயிரம் எண்டாலும் கொஞ்சம் சமாளிக்கலாம் பின் மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்து ம்கூம் பத்தாது இப்ப சாமான் சட்டுகள் எல்லாம் விலை கூடிப்போச்சு....கோயிலில் வைத்து தாலி கட்டினாலும்கூட ஒரு லட்சமாவது தேவைப்படும். வாமுவும் யோசித்தபடி ஓம் என்று தலையாட்டுகிறான். அப்பன்.....நீ உந்த விதானையோட எல்லாம் நாலு இடத்துக்கும் போய்வாறனிதானே உனக்கு யாரையும் தெரியுமோ என்று கேட்கிறாள். ஏன் மயூரம்மா உங்களுக்கு அந்த "வட்டி வைத்தி"யின் பொஞ்சாதி நல்ல பழக்கம்தானே, அங்கு கேட்டுப்பார்த்தால் என்ன......நானும் அதை யோசித்தனான்.அவ நல்ல பழக்கம்தான் ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் நான் ஒருநாளும் அவையலிட்டை போய் நின்றதில்லை. அதோட அவையும் அறா வட்டி வாங்குவினம். வட்டி வைத்தியும் செத்துட்டாரெல்லோ அது உங்களுக்குத் தெரியுமோ......ஓம்.....நான் செத்த வீட்டுக்கும் போனானான். கொஞ்ச சனம்தான் அவற்ர சா வீட்டுக்கும் வந்தது. உந்தக் கொடுக்கல் வாங்கலால கனபேர் வரவில்லை. ஒரு மனிதனின் செத்த வீட்டில்தான் தெரியும் அவர் வாழ்ந்த வாழ்க்கை. அது கிடக்கட்டும். எங்களுக்கு குறைந்த வட்டியில் யாரும் தருவினமாய் இருந்தால் நல்லதுதானே. சரி.....நாளைக்கு மதியத்துக்கு மேல் நீங்கள் தயாராய் இருங்கோ ஒரு இடத்துக்குப் போய் கேட்டுப் பார்ப்பம். சரிவந்தால் நல்லது, இல்லையென்றால் மேற்கொண்டு விதானையாரிடம் விசாரிக்கலாம். நான்போட்டு நாளைக்கு வாறன் .....! அடுத்தநாள் வாமு சொன்னபடியே இரண்டுமணிபோல் மயூரியின் வீட்டுக்கு வருகிறான். மயிலம்மாவும் இருப்பதில் நல்லா சேலை சட்டை அணிந்து தயாராக வருகிறாள்.அவள் முன் பாரில் அமர்ந்து கொள்ள வாமன் சைக்கிளை நேராக வைத்தியின் வீட்டுக்கு கொண்டுவந்து மதில் அருகில் நிறுத்தி இருவரும் இறங்குகிறார்கள். அவன் அந்த கேட்வழியே உள்ளே பார்க்க நேற்று பெய்த மழையில் மா மரத்தில் இருந்து நிறைய பூக்களும், பிஞ்சுகளும் கொட்டுண்டு தரை முழுதும் பரவிக் கிடக்கிறது. திண்ணையில் வைத்தியின் மோட்டார் சைக்கிள் நிக்க அதன் அருகில் ஒரு நாய் படுத்திருக்கு. வேற்று மனிதரைக் கண்ட அசுமாத்தத்தில் அது அதிக ஆக்ரோஷமில்லாமல் வீட்டுக்காரரை அழைப்பதுபோல் குரைக்கின்றது. கேட்டை திறக்கப்போன வாமன் கொஞ்சம் தயங்கி நிக்க, நாயின் குரைப்புச் சத்தம் கேட்டு வைத்தியின் இரண்டாம் தாரமாய் இருக்கும் அந்த இளம்பெண் "யாரது" என்று கேட்டுக்கொண்டே வெளியே வருகிறாள். வாமனைக் கண்டதும் ஓ.....நீயா உள்ளேவா, இனி நீ கல்லெறிந்து மாங்காய் அடிக்கத் தேவையில்லை நானே பறித்துத் தருகிறேன் என்கிறாள். அவன் நாயைப் பார்க்க அது ஒன்றும் செய்யாது, பயப்பிடாமல் வா என்று சொல்ல வாமனும் கேட்டைத் தள்ளிக்கொண்டு உள்ளே செல்கிறான். அதுவரை மதில் அருகில் நின்ற மயிலம்மாவும் அவன் பின்னால் வருகிறாள். அப்போதுதான் அவளைக் கண்ட அந்தப் பெண் திண்ணையை விட்டு இறங்கி வந்து வாங்கோ வாங்கோ என்று வரவேற்கிறாள்.மாலை நேரத்துக்கு முன்னான சூரியன் வைரம்போல் ஒளிர்ந்து தகிக்கின்றது. அப்போதுதான் தலைக்கு தோய்ந்து விட்டு வந்திருப்பாள் போல. தலைமுடியின் ஈரம் போக ஒரு துணியையும் அதோடு சேர்த்து முறுக்கி கொண்டை போட்டிருந்தாள். தலையின் ஈரம் தோள்களில் விழுந்து சற்று நின்று கழுத்தால் வடிகின்றது. குரைக்கிற நாயைப் பார்த்து திரும்பி நின்று ஜிம்மி சும்மா இரு என்று அதட்ட அது வெளியே போகின்றது. நீல நிறத்தில் நைலான் சாறியும் அதுக்குத் தோதாய் கருப்பு பிளவுசும் அணிந்திருக்கிறாள். அந்த ப்ளவுஸ் முதுகில் அரை வட்டமடித்து தோள்களில் இருந்து இடைவரை தசைகளின் திரட்சியை எடுப்பாக காண்பிக்குமாப் போல் இறுக்கமாய் இருக்கின்றது. பின் திரும்பி இவர்களை பார்க்கிறாள். அவள் முகத்துக்கு நேரே சூரியன். மார்பில் இருந்து முத்து முத்தாய் உருளும் நீர்த் திவலைகளுக்குள் ஆயிரம் சூரியன்கள். அவைகள் ஒவ்வொன்றாய் மார்புக்கும் அந்த கருப்பு ப்ளவுசுக்கும் நடுவில் இருக்கும் கருங்குழியால் ஈர்க்கப்பட்டு நகர்ந்து மறைகின்றன...........! 🦚 மயில் ஆடும்..........! 07. - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.