Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. மயிலிறகு......... 12. சில நாட்களாக வாமன் மயிலம்மா வீட்டுப் பக்கம் போகவில்லை.அவனுக்கு அதிகமான வேலைப்பளுவும் ஒரு காரணம்.அன்று அரசு விதானையுடன் சென்று இரு சகோதரர்களுக்கான எல்லைப் பிரச்சினையைத் தீர்த்து விட்டு அவர்கள் கோழி அடித்து விருந்து வைக்க சாப்பிட்டுவிட்டு இருவரும் விதானையாரின் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கிறார்கள்.அப்போது விதானையார் ஒரு பேரூந்து தரிப்பிடத்தில் வண்டியை நிறுத்தி இந்தாடா வாமு நான் கனநாளாய் உனக்கு காசு தரவில்லை, இப்ப இதை வைத்துக்கொள் பிறகு கணக்கு பார்த்துக் கொள்ளலாம்.இப்பவெல்லாம் நீ தனியாக சென்று வேலைகள் செய்யுமளவு தேறி விட்டாய். அநேகமாய் இந்த வாரத்தில் கூட உனக்கு வேலைக்கு கடிதம் வந்து விடும். நீ தினமும் தபால்காரரை விசாரித்துப் பார்.இப்ப எனக்கு இங்கால சில வேலைகள் இருக்கு, நீ பேரூந்தில் வீட்டுக்குப் போ என்று சொல்லி விட்டுப் போகிறார். அவன் பேரூந்தை எதிர்பாராமல் வழியில் வரும் சைக்கிள்களிலோ ட்ராக்டர்களிலோ செல்லலாம் என்று நினைத்து நடந்து வருகிறான். அப்படி வரும் வழியில் வட்டி வைத்தி வீட்டை கடக்கையில் ஒரு பெண் ஓடிவந்து அவனை மறித்து அண்ணா உங்களை அம்மா ஒருக்கால் வந்துட்டுப் போகட்டாம் என்று சொல்ல, அவள் அன்று அந்த அம்மா மயங்கி விழுந்த போது ஓடிவந்து ஒத்தாசை செய்த பெண் என்று கண்டு என்ன மோட்டார் வேலை செய்யவில்லையா என்று கேட்கிறான். சீச்சீ அதெலாம் நல்லா வேலை செய்யுது நீங்கள் வாங்கோ என்று சொல்லி முன்னாள் போகிறாள். வீட்டுக்கு வர கேட்டுக்கு அருகில் அஞ்சலா நிக்கிறாள். என்ன பிறகு உன்னை இந்தப் பக்கம் காணேல்ல....சரி....சரி ...உள்ளேவா உனக்கு நன்றி சொல்லத்தான் கூப்பிட்டானான். வேறு ஒன்றுமில்லை என்பதை நமுட்டுச்சிரிப்புடன் கொஞ்சம் அழுத்திச் சொல்கிறாள். எதுக்கு நன்றி......உண்மையிலேயே நாங்கள்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.இக்கட்டான நேரத்தில் நீங்கள் செய்த உதவி பேருதவி. (இருவரும் திண்ணையில் அமர்கிறார்கள். அவளின் தாயார் அருகில் கால்களை நீட்டியபடி வெற்றிலை இடித்து கொண்டிருக்கிறார்). அதை விடுடா ....அதெல்லாம் தொழில். நான் ஒன்றும் சும்மா செய்யவில்லை.வட்டிக்குத்தான் தந்தனான்.இன்னும் காணி உறுதி என்னிடம்தான் இருக்கு மறந்திடாத. இது அதில்லை.அண்டைக்கு நீ வரப்பில் மயங்கி விழுந்த என்ர அம்மாவை தகுந்த நேரத்தில் காப்பாற்றிக் கொண்டு வந்து விட்டதாக இவளும் அம்மாவும் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.அது எவ்வளவு பெரிய உதவி தெரியுமா. அது நான் என்ர அம்மாவாய் இருந்தால் செய்ய மாட்டனா, யாராய் இருந்தாலும் அதை செய்திருப்பார்கள். அவள் அருகில் நின்ற பெண்ணைப் பார்த்து எடி கவிதா, உள்ளே போய் பால் தேத்தண்ணியும் போட்டுகொண்டு பனங்காய் பணியாரத்தையும் ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு வா என்று சொல்ல அவளும் உள்ளே போகிறாள். அம்மா சுகமாக இருக்கிறாவா .....ஓம் இந்த நீரிழிவு வருத்தத்தால கொஞ்சம் கவனமாய் அவவைப் பார்த்துக் கொள்ள வேணும்.ஆனாலும் மனுசி சொல்வழி கேட்கிறேல்ல....ஒளிச்சு வைச்சு இனிப்புகள் சாப்பிடுது. அப்போது வீதியால் ஒரு நாய் போக மோட்டார் சைக்கிள் அருகில் படுத்திருந்த ஜிம்மி ஆக்ரோஷமாய் குரைக்கிறது. ஜிம்மி சும்மா இரு என்று அடக்கிய அஞ்சலா இதுக்கொன்றும் குறைச்சலில்லை அவரைமாதிரி குரைக்கத்தான் தெரியும் ஒரு சதத்துக்கு பிரயோசனமில்லை என்று சொல்ல அது புரிந்ததுபோல் எழுந்து வாலை பின்னங் கால்களுக்குள் மடக்கிக் கொண்டு அப்பால் போகிறது. திண்ணையில் இருந்த மோட்டார் சைக்கிளைப் பார்த்த வாமன் நீங்கள் இது ஓட்டுவீங்களா என்று கேட்கிறான்...... இல்லை சைக்கிள் ஓட்டுவன்.அதில்தான் பாடசாலைக்கும் போய் வந்தனான். உன்ர வேலைகள் எல்லாம் எப்படிப் போகுது......இப்பவும் வேலையாலதான் வருகிறேன். விதானையார் என்னை பேரூந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டுட்டுப் போகிறார். பஸ்ஸை காணேல்ல வந்தால் மறித்து ஏறுவம் என்றுதான் நடந்து வந்தனான். அப்ப இண்டைக்கு உனக்கு நல்ல விருந்து சாப்பாடும் தண்ணியும் கிடைத்திருக்கும் இல்லையா. ....ம்.....அதெல்லாம் கிடைத்ததுதான், ஆனால் இப்ப சாராயம் குடிக்க வெறுக்குது. சும்மா அவங்களுக்காக கொஞ்சம் எடுத்தனான். பின் அந்த மோட்டார் சைக்கிளைப் பார்த்தபடி நீங்கள் இதை விக்கிற எண்ணமிருந்தால் எனக்குத் தருவீங்களா என்று கேட்கிறான். எனக்கு அதை விக்கிற யோசனையில்லை.என்ன இருந்தாலும் அவர் பாவிச்சது.அவற்ர பிள்ளைகளும் இருக்கினம்.அண்டைக்கு ஒருநாள் சரியான மழை அவர் நல்ல வெறியில இந்த சைக்கிளோட சறுக்குப்பட்டு பள்ளத்துக்க விழுந்து எழும்ப முடியாமல் அப்படியே இறந்து போனார்.அப்போது இரவுநேரம் அருகில் யாரும் இல்லை. இதுவும் சேதமாயிட்டுது. பின் உதை அப்படியே கொண்டுவந்து திண்ணையில் விட்டதுதான்.அப்படியே நிக்குது. அதுக்கில்லை ஓரு மோட்டார் சைக்கிள் வாங்கத்தான் பார்த்துத் திரியிறன். ஒன்றும் தோதாக அம்பிடவில்லை. அதுவும் இப்ப வேலையும் அதிகம். அத்துடன் விரைவில் கிராமசேவகர் வேலையும் கிடைத்து விடும்.வெறும் சைக்கிளுடன் அந்த வேலை பார்க்கிறது சிரமம். அதுதான் கேட்டனான். ஓ......இப்பதான் ஞாபகம் வருது, நீ மோட்டார் சைக்கிள் வாங்க வைத்திருந்த காசைத்தான் உன்ர நண்பனுக்கு குடுத்ததாக அக்கா சொன்னவ. உண்மைதான் .....நானும் சுந்துவும் சிறுவயதில் இருந்தே அவ்வளவு பிரியமான நண்பர்கள். அவனளவு எனக்கு வேறு நண்பர்கள் கிடையாது.அப்படித்தான் அவனுக்கும். அவனது படிப்பை விட மோட்டார் சைக்கிள் ஒன்றும் பெரிதில்லை. (அப்போது கவிதா மூவருக்கும் பால்தேநீரும் பணியாரத் தட்டையும் கொண்டு வந்து வைத்து சீனி போடாத தேநீரை ஆச்சியின் அருகில் வைத்த விட்டுப் போகிறாள்). சரி...நீ முதல்ல அதை எடுத்து திருத்தி கொஞ்சநாள் ஓடிப்பார். பின்பு உனக்குப் பிடித்திருந்தால் நான் அக்காவிடம் கதைத்து விட்டு பிறகு விலையைப் பேசிக்கொள்ளலாம். அவன் கண்கள் மின்ன இப்பவே எடுக்கவா........ ....ம் பாரேன் அவற்ரை அவசரத்தை...... சரி போய் எடு. அவன் எழுந்து சென்று அந்த ஹோண்டா 200 மொடல் மோட்டார் சைக்கிளை செல்லமாய் வருடிவிட்டு மெதுவாக உருட்டிக்கொண்டு வந்து முற்றத்தில் நிறுத்தி விட்டு சாவியைப் போட்டு பட்டனை அமுக்கினால் அது இயங்கவில்லை. அதை உதைத்துப் பார்த்தும் ம்கூம்..... பின் அவன் அதன் பெட்டியைத் திறந்து பார்க்க அதற்குள் சாராயப்போத்தல்,மிக்ஸர் பைக்கட், ரெண்டு ஜட்டி, ஒரு வேட்டி துவாய் அவற்றின் அடியில் சில சாவிகள் குறடு,திருப்புளியுடன் சில தாள்காசுகள் சில்லறைகள் என்று இருக்கின்றன.அவன் ஆயுதங்களை தவிர்த்து ஏனையவற்றை எடுத்து அவளிடம் தருகிறான். அவளும் அவைகளை வாங்கிக் கொண்டு இன்னும் எந்தெந்தக் கடங்காரங்களின் வீட்டில் ஜட்டிகளும் வேட்டிகளும் கிடக்குதோ தெரியாது என்று சொல்லியபடி அவற்றை வாங்கிக் கொண்டு உள்ளே போகிறாள்........! 🦚 மயில் ஆடும்.............. 12.
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை ..........! 💐
  3. இது கணனி யுகம்.....எல்லாவற்றிலும் கணனி உட்புகுந்து விட்டது....... சாதாரணமானவர்களினால் ஓரளவுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது.....ஏதோ பேருக்கு ஒரிருவருக்கு கிடைக்கும் ......அவ்வளவுதான்.....!
  4. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : { கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே } (2) ஆண் : { அடி மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே } (2) பெண் : கண்ணு வலது கண்ணு தானா துடிச்சுதுனா ஏதோ நடக்குமின்னு பேச்சு ஆண் : மானம் குறையுமின்னு மாசு படியுமின்னு வீணா கதை முடிஞ்சு போச்சு பெண் : ஈசான மூலையில லேசான பல்லி சத்தம் மாமன் பேரை சொல்லி பேசுது ஆண் : ஆறாத சோகம் தன்னை தீராம சேத்து வச்சு ஊரும் சேந்து என்னை ஏசுது பெண் : மாமா மாமா உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே ஆண் : தென்னன்கிளையும் தென்றல் காத்தும் குயிலும் அடி மானே உன்னை தினம் பாடும் பெண் : காஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும் இந்த மாமன் கதையை தினம் பேசும் ஆண் : பொள்ளாச்சி சந்தையில கொண்டாந்த சேலையில சாயம் இன்னும் விட்டு போகல பெண் : பன்னாரி கோயிலுக்கு முந்தானை ஓரத்தில நேர்ந்து முடிச்ச கடன் தீரல ஆண் : மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே......! --- கூண்டுக்குள்ள என்ன வெச்சு ---
  5. நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு......! 😍
  6. எங்கே போகும் இந்த வாழ்க்கை யாரோ யார் அறிவாரோ .........! 😂
  7. சில வரிகளில் செழுமையான கருத்தான கவிதை .......! 👍
  8. கள்ளி மலர்......யார் பார்த்திருக்கிறீர்கள்......! 😂
  9. மயிலிறகு............ 11. மூவரும் வீட்டிற்குள் வருகிறார்கள். மயிலம்மா கேட்கிறாள் நீங்கள் ஆடுகள் கோழிகள் விக்கிறனீங்களோ என்று. ஓம் அக்கா ஏன் என்று கேட்க சிலநேரம் வீட்டு விசேசங்களுக்கு தேவைப்படும் அதுதான் விசாரிச்சானான். அங்கு ஒரு மூலையில் பெட்டியில் விசேஷ சாராயங்கள் இருக்குது.வாமன் அவற்றைப் பார்ப்பதைக் கண்ட அஞ்சலா வேணுமென்றால் ரெண்டு போத்தல் எடுத்துக் கொண்டு போ என்கிறாள். அவன் தயங்குவதைப் பார்த்து தானே எழுந்து சென்று ரெண்டு போத்தல் எடுத்து வந்து அவனிடம் தருகிறாள். பின் அவர்கள் அங்கிருந்த ஆச்சியிடம் சொல்லிவிட்டு அவளிடம் விடை பெற்றுக்கொண்டு செல்கிறார்கள். போகும்போது ரொம்ப நன்றி பிள்ளை ஏதாவது உதவிகள் தேவையென்றால் யாரிடமாவது சொல்லியனுப்பு நாங்கள் வந்து செய்து தருகிறோம். வெளியே மாலைச் சூரியனின் பொன்னிற வெய்யில் இதமான சூடாக இருக்கின்றது. இருவரும் தங்கள் வந்த வேலை முடிந்த மகிழ்ச்சியில் கதைத்துக் கொண்டு பழையபடி சைக்கிளில் வருகின்றார்கள். என்னடா உன்ர உடுப்புகள் அவியவிட்ட நெல்லுமாதிரி நாறுது.அது மயிலம்மா அந்தப் பம்மில் இருந்து திடீரென்று தண்ணி பாய்ந்து வந்ததா அந்தப் பெட்டை பயந்து என்னையும் தள்ளிக்கொண்டு சாக்குகளுக்கு மேல விழுந்திட்டுது.அதால சாக்கெல்லாம் ஈரமாகி நாங்களும் நனைஞ்சிட்டம். அதுதான் இப்ப காத்துக்கு காய காய மணக்குது. கெதியா வீட்டுக்கு போய் குளத்திலே முழுக வேண்டும் என்று சொல்லிக்கொன்டு வருகிறான். அப்போது எதிரில் வந்த டிப்பர் லொறிக்கு வழி விட்டு ஒதுங்க அது வீதிப் பள்ளத்தில் இருந்த வெள்ளத்தால் இவர்களைக் குளிப்பாட்டிவிட்டு போகின்றது. சடுதியாக அவள் லொறிக் காரனைத் வாயில் வந்தபடி திட்ட வாமன் வாய்விட்டு சிரித்துக் கொண்டே என்ன மயிலம்மா இப்ப எப்படி இருக்கு என்று சொல்ல ....சீ .....சும்மா போடா, சிரிச்சி எண்டால் கொன்னுடுவன் என்கிறாள் செல்லக்கோபத்துடன். வரும் வழியில் ஒரு ஆற்றுப்பாலம் குறுக்கிட எட அந்த ஆற்றங்கரைக்கு விடு கொஞ்சம் கை கால்களை சுத்தமாக்கிக் கொண்டு போவம் என்கிறாள்.அவனும் வீதியில் இருந்து சரிவில் சைக்கிளை இறக்கி ஆற்றங்கரையில் நிப்பாட்டி இருவரும் இறங்குகின்றார்கள். ஆற்றில் தண்ணி குடித்துக் கொண்டிருந்த மாடுகள் இரண்டு இவர்களைத் திரும்பிப் பார்த்து விட்டு மீண்டும் நீரருந்துகின்றன. வாமன் சாறத்தையும் சேர்ட்டையும் கழட்டி கரையில் போட்டுவிட்டு ஆற்றுக்குள் பாய்ந்து குதித்து நீந்துகிறான்.மயிலம்மாவிம் அங்கு நின்ற பனைமர மறைவில் அடைகளைக் களைந்து பாவாடையை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு கீழே கிடந்த ஆடைகளை எடுத்துக் கொண்டு கரையில் கிடந்த அவனது உடுப்புகளையும் பொறுக்கிக் கொண்டு வந்து நீருக்குள் இறங்கி நின்று கரையில் இருக்கும் கல்லில் அவற்றைப் போட்டு கும்மி நன்றாகப் பிழிந்து அங்கிருந்த பற்றைகளின் மேல் விரித்து காய விடுகிறாள்.பின் மயிலம்மா பாவாடை கிழிசல்களை ஒரு பக்கம் ஒதுக்கிக் கொண்டு வந்து ஆற்று நீருக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறாள். அவளும் நன்றாக நீந்தக் கூடியவளாகையால் நீருக்குள் முங்கி முங்கி நீந்தி மேலே வருகிறாள்.இருவரும் அந்த ஆழமான இடத்தில் மார்பளவு நீரில் இடைநீச்சலில் நின்று கொண்டு கதைத்தபடி உடம்பை கைகளால் உரஞ்சி முதுகு தேய்த்து விட்டு முங்கிக் குளிக்கிறார்கள். ஆற்றுமீன்கள் அவர்களுக்கு இடையில் புகுந்து கொத்திக் கொத்தி கிச்சு கிச்சு மூட்டி செல்கின்றன. ஒரு கட்டத்தில் இருவரும் ஏதேதோ கதைக்கிறார்கள் தவிர அவர்களுக்கு போதை தலைக்கேறி இருக்கு. மெல்ல மெல்ல பாறைக்குள் ஊடுருவிப் போகும் வேர் ஆங்காங்கு விரிசல்களை ஏற்படுத்தி நின்று நின்று போவதுபோல் விரல்கள் நகர்ந்து நகர்ந்து பழத்துக்குள் தங்கிய வண்டுபோல் சிறைப்படுகின்றன. அன்று நடந்த சம்பவம் உடலை சூடேற்ற அவனுக்கு அவள் அஞ்சலாவாகவே தெரிகிறாள். அவளுக்கு ஓர் ஆணின் அருகாமையும் அவனின் ஸ்பரிசமும் நெடிய தோள்களும் அகன்ற மார்புகளும் அவளை அலைக்கழிக்க அவள் அவள்வசம் இல்லை.இருவரும் ஒருவரிடம் ஒருவர் மிகவும் நெருக்கமாகி இருந்தனர்.எப்போது கரையேறினார்கள், எப்படி அங்கு தரைக்கு வந்தார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. ஆற்றுமீன்கள் உலவிய உடலெங்கும் விழிமீன்கள் மேய்கின்றன. கலவியில் கசிந்த வியர்வை ஊர்ந்து உருண்டு புற்களின் வேரில் விழுந்து கலந்து கலைந்து காய்ந்து போகின்றது. "பசுவின் மடிக்குள் இருக்கும் பால் எப்போதும் சூடாகவே இருக்கும், ஒருபோதும் பழுதாகுவதில்லை" அதுபோல் பயன்படுத்தாத காமமும் நினைவுகளின் வெப்பத்தில் உடலுக்குள் கனன்று கொண்டே இருக்கும். மயிலம்மாவிடம் மின்னல் போல் தோன்றிய மின்சாரம் காலங்களை மறக்கடிக்க அதன் வெப்பம் காலாக்கினியாகி அக் காலாக்கினி இருவரின் உடலையும் சேர்த்து எரிக்கின்றது.அஞ்சலா அவனுள் போட்ட விதை விருட்சமாய் விரிகின்றது. மேகம் கறுத்துவர மோகம் பெருகுது. உயிர்கள் ஊசலாட மனங்களும் மானங்களும் துகள்களாகி பறந்து மறைகின்றன.இடைகள் இணைந்து இழைந்து உடைகள் நெகிழ்ந்து தரையில். அந்திக் கருக்கலில் அந்த நான்கு கண்களும் அந்தகன் களாக அங்கும் இங்கும் அலையும் நகக்கண்களின் விழி திறக்கின்றது.அங்கங்கள் தம் ரகசியங்களை இழக்கின்றன.மரம், கிளை, இலை, கிளி எல்லாம் அவனுக்குத் தெரிகின்றது. அவளுக்கு கிளியும் தெரியவில்லை அதன் ஆரம் மட்டுமே தெரிகின்றது.அர்ச்சுனனாய் அவன்மேல் நின்று மலரம்புகளால் தாக்கிக் கொண்டே இருக்கிறாள்.வண்டிடம் தேன் இழந்த மலர் ஒருபோதும் களைப்பதில்லை மாறாக சிலிர்த்து எழுந்து நிக்கின்றது. ஆணும் பெண்ணுமாய் இணைந்து சொண்டை சொண்டால் கொத்தும் குருவிகளாய் மாறி உடலுடன் உடல் முறுக்கி ஊரும் அரவங்களாய் புணர்ந்து ஆயகலைகளில் சில கலைகளைப் பயின்றதால் நரம்புகள் புடைத்து தேகம் களைத்து சிதறிக் கிடக்கின்றனர் இருவரும். சற்று முன் அவள் துகிலுடன் இருக்கக் கண்டு விலகிச் சென்ற தென்றல் இக்கனம் அத் துகில்கள் விலகியது கண்டு அங்கமெங்கும் உரசிச் செல்கின்றது. பழக்கமில்லாதவன் பனை உச்சியில் இருந்து இறங்கினால் அவன் மார்பிலும் முகத்திலும் நிறைய கீறல்களும் சிராய்ப்புகளும் இருக்கும் அவன் உடலும் அப்படி இருக்கின்றது. தன் மார்பைத் தழுவிக்கிடக்கும் அவள் கையைத் தூக்கிப் பார்க்கிறான். அதில் சில நகங்கள் உடைந்துபோய் இருக்கின்றன. பெண்மான் பெற்ற மயில் அம் மானாய் குழல் தோகை விரித்துக் கிடக்கிறாள்.எதிரே வானளாவி நிக்கின்றது மயில் தோகைபோல் ஓலைகளை விரித்தபடி பனைமரம்.அதில் தெரிகிறாள் , "பனையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பணிமலர்ப் பூம் கனையும் கருப்புச் சிலையும் மென் பாசாங்குசமும் கையில் அணையும் திரிபுர சுந்தரி" அவளை அந்தரங்கமாய் தரிசித்த ஆனந்தத்தில் குரல் ஓலமிட தூரத்தில் இருந்து பள்ளியறைப் பூசைக்கு கோவில் மணி ஒலிக்கின்றது ...........! 🦚 மயில் ஆடும்........! 11.
  10. வெள்ளிக் கிண்ணந்தான் தங்கக் கைகளில் .........! 😍
  11. வணக்கம் வாத்தியார்..........! ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா சோள காட்டு பொம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல கைய விட்டு காதல் போன கையில் ரேக இல்ல கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்ல யாரும் என்ன மட்டும் வாழ சொல்லாதே உடம்பு குள்ள உசிர விட்டு போக சொல்லு நீதான் உன்ன விட்டு போக சொல்லாதே காணுகின்ற காட்சி எல்லாம் உந்தன் பூ முகம் அது எந்தன் ஞாபகம் காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு தானே சொல்லாமலே ஓடி போனாலே வேடந்தாங்கல் பறவைக்கெல்லாம் வேறு வேறு நாடு உன்னுடையே கூடு நானடி அண்ணாந்து பார்க்கின்ற கொக்கு நானடி அந்த விண்மீன் நீயடி .......! --- ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா ---
  12. மயிலிறகு .......10. வாமன் கிணற்றின் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அஞ்சலை அவனை கொஞ்சம் சீண்ட நினைத்து என்ன பார்க்கிறாய்....... யார் நானா ......பின்ன இங்கு வேறுயார் இருக்கிறார்கள். உன்னைத்தான் கேட்கிறேன். நீ பார்க்கிறதை பார்த்தால் மோட்டரை லவட்டிக் கொண்டு போற பிளான்போல கிடக்கு. அவளுக்கு அவனது முதலாவது அறிமுகமே மாங்காய்க்கு கல்லெறிந்து ஏச்சு வாங்கிக் சென்ற துடிப்பான வாலிபன் மற்றும் அவளும் இப்பொழுது பலரை வைத்து வேலை வாங்கும் ஒரு முதலாளியாக இருக்கிறாள்.அதனால் அந்த கம்பீரம் அவள் குரலிலும் தொனிக்கிறது. அவனை நீ நான் போடா வாடா என்றே அழைக்கிறாள். அப்படி வேலைகள் செய்கிறதாய் இருந்தால் நாங்கள் ஏன் இப்ப பணத்துக்கு உங்களிடம் வாறம். கிணற்றில் தண்ணி நல்ல தெளிவாக இருக்கு குடிப்பம் என்றால் குழாயில் தண்ணி வரவில்லை. ஓ......அதுவா அடிக்கடி தோட்டத்துக்கு நீர் இறைப்பதால் தண்ணி தெளிவாய் இருக்கு. இது நல்ல ஊற்றுக் கிணறு.இப்ப சில நாளாய் மோட்டர் வேலை செய்யவில்லை. எல்லாம் அவர்தான் பார்க்கிறவர்.இந்த வேலையெல்லாம் அவருக்குத்தான் தெரியும். நான் மின்சார வேலை தெரிந்த ஒரு ஆளுக்கு சொல்லியிருக்கிறன். அவருக்கும் நேரமில்லை நாலுநாள் பொறுங்கோ வாறன் என்று சொல்லி இருக்கிறார். அதுதான் பயிர் எல்லாம் நீரின்றி சோர்ந்து போய் கிடக்கு. அது கிடக்கட்டும் உன்னைப் பற்றி சொல்லு, நீ என்ன செய்கிறாய். என்னைப்பற்றி சொல்ல என்ன இருக்கு. என் பெயர் வாமதேவன். நானும் சுந்தரேசனும் பாலர் வகுப்பில் இருந்து ஒன்றாகத்தான் படித்து வந்திருக்கிறோம்.அவன் நல்லா படிப்பான். நான் சுமாராய் படிப்பன். இப்ப அவன் கம்பசுக்கு தெரிவாயிட்டான். ஆனாலும் நான் படித்துக் கொண்டே எங்கட விதானையாரிடம் பகுதிநேர வேலை செய்கிறேன். அதில் கொஞ்சம் பணம் கிடைக்கும். அதைவிட அவருடன் நாலு இடத்துக்கும் போகும்போது ஒரு கெத்தாய் இருக்கும்..... அவள் உதட்டை பிதுக்கி புருவத்தைத் தூக்கி ....ம் .....பெரிய வேலைதான் (அவருக்கு தான் அடியாள் போல என்பது கூடத் இவனுக்குத் தெரியவில்லை) சரி மேல சொல்லு..... போற இடங்களில் தண்ணிக்கும் விருந்து சாப்பாட்டுக்கும் குறைவில்லை. அதை விட அதிகாரிகளோ போலீசாரே யார் பார்த்தாலும் மரியாதையுடன் பழகுவார்கள். யார் எங்கட அரசு விதானையுடனோ வேலை செய்கிறாய் ....... ஓம்.....உங்களுக்கு அவரைத் தெரிந்திருக்கும்.அவருடன்தான்.....அவர் சொல்லி நானும் கிராமசேவகர் வேலைக்கு விண்ணப்பித்து இருக்கிறேன்.அநேகமாய் ஒரு மாதமளவில் கிடைக்கலாம் என்று விதானையார் சொன்னவர். அது சரி நான் இந்த மோட்டர் அறையைப் பார்க்கலாமா .......அதுக்கென்ன பார் என்று சொல்லி கதவைத் தள்ளி திறந்து விடுகிறாள்.வாமன் உள்ளே செல்ல அவளும் பின்னால் போகிறாள். அவன் மோட்டரை கையால் சுற்றிப்பார்த்து இது சரியாய் இருக்கு என்று சொல்லி பியூஸ் போர்ட்டைத் தேட அது எதிர் சுவரில் இருக்கு.அவன் சேர்ட்டைக் கழட்டி கதவில் கொழுவிவிட்டு சாரத்தை மடிச்சு சண்டிக்கட்டு கட்டிக்கொண்டு அங்கு போகிறான். அந்த இளம் வாலிபனின் மார்பிலும் கால்களிலும் சுருள் சுருளான உரோமங்கள். அவளுக்கு தலைமுடியில் சுருள்கள் கிடையாது, ஆனால் நீளமான நீண்ட முடிகள். தன்னிச்சையாய் தன் கூந்தலை எடுத்து முன்னால் போட்டுக் கொள்கிறாள். அங்கு குவிந்திருக்கும் சாக்குகளை விலத்தி மெயின் சுவிட்சை நிறுத்தி விட்டு பியூஸ் கட்டையை புடுங்கிப் பார்க்கிறான்.அது எரிந்து போய் கிடக்கு. அங்கேயே தேடி வேறு ஒரு பியூஸை எடுத்து அதில் சொருகி அதை சரியான இடத்தில் பொருத்தி விடுகிறான். அங்கே அந்தப் பெட்டிக்கு மேல் ஒரு சாராயப்போத்தல் இருக்க அவன் அதை எடுக்கிறான்....அவன் கேட்காமலே அவளும் அது அவர்தான் வைத்திருக்கிறார். அவர் உங்க போறவாற இடமெல்லாம் தான் குட்டிப்பதற்கு வைக்கிறது வழக்கம். விரும்பினால் நீ எடுக்கலாம் என்கிறாள். அவனும் அதைத் திறந்து மறுபக்கம் திரும்பி நின்று குடிக்கிறான். பின் அவன் மெயின் சுவிட்சைப் போட பைப்பில் முதல் காற்று வந்தது. அவன் அதை பொத்திப் பிடிக்க சற்று நேரத்தில் அவன் கையைத் தள்ளிக்கொண்டு அழுக்குத் தண்ணீர் சீறிப் பாய்ந்தது. அது புஷ்வாணமாய் அறை முழுதும் பாய்கிறது. அவன் பின்னால் நின்ற அஞ்சலா அஞ்சி என்ர அம்மா என்று கத்தியபடி அவனையும் இழுத்துக் கொண்டு தடுமாறிக் கீழே விழுகிறாள். இருவரும் தெப்பலாய் நனைந்து கொண்டு இருக்கிறார்கள். அவளது நீல நைலான் சேலை நன்றாக நனைந்து உடலை சிக் என்று இறுக்கிப் பிடித்திருக்கு. வாமன் தடுமாறி எழ முயற்சிக்க அவள் இடையில் அவன் முகம் பொருந்தி இருக்கிறது. கைகள் அவளை இறுகப் பற்றியிருக்கின்றன.அந்தப் பிடியில் இருந்து விலக அவளும் பிரயத்தனப் படவில்லை.அப்படியே கொஞ்சம் நிதானித்துக் கீழிறங்க அவன்மேல் பருவச்சுமை அழுந்துகிறது. காத்து வாக்கில் பூத்த வாசம் நாசியை நிறைக்கின்றது.கல்லுபோன்ற மாதுளைகள் அவன் கன்னங்களை உரசிக்கொண்டு அவன் வெற்று மார்பில் தஞ்சமடைய இளமையில் இள மயில் உறவு தேடித் தவிக்குது.நிலமையைப் புரிந்து அவனது பிடிகள் தளர்கின்றன. அவள் தன் கைகளால் அவன் தலைமுடியைக் கோதி தன் முகத்துடன் சேர்த்துக் கொண்டு மெல்ல காதுக்குள் கம்மும் குரலில் கிசுகிசுக்கிறாள், உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கொள். இதுவரை இதுபோன்ற அனுபவம் அவனுக்கு ஏற்பட்டதில்லை. காலத்தை மறந்து ஓரிரு நிமிடங்கள் அப்படியே இருக்கிறார்கள்.அந்தச் சிறு நேரத்துக்குள் அவன் இந்தமாதிரி அனுபவமில்லாதவன் என்று புரிந்து கொண்டு அவன் தொடைகள் நடுங்குவதை தன் கால்களால் உணர்ந்து கொள்கிறாள். புல்லாங்குழல் வாசிப்பதற்குத் துவாரங்களைக் கையாலத் தெரிய வேண்டும். அவனுக்கோ கையும் ஓடவில்லை காலும் நடுங்குகிறது. குழாயால் அறை முழுதும் சீறிப் பாய்ந்த தண்ணீர் குழாய்க்குள் அடங்கி தொட்டிக்குள் சீராக விழுகின்றது. மெதுவாக அவன் கன்னத்தில் அழுத்தி ஈர முத்தமொன்றைத் தந்துவிட்டு எழுந்து தனது ஆடைகளைச் சரிசெய்து கொள்கிறாள். அவனும் எழுந்து கொள்கிறான். அவள் முகத்தைப் பார்க்க அவனுக்கு கூச்சமாக இருக்கின்றது. நிராயுதபாணியாய் இராவணன் சென்றது போல் எழுந்து சென்று அறைக்குள் எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி மிச்ச சாராயத்தையும் ஒரு மிடறில் குடித்து விட்டு மோட்டரையும் நிப்பாட்டிவிட்டு நனையாத சேர்ட்டையும் எடுத்துக்கொண்டு இருவரும் ஈரம் சொட்ட சொட்ட வெளியே வருகிறார்கள். அவன் உம் என்று வருவதை பார்த்த அஞ்சலா அவனைக் கலகலப்பாக்க நினைத்து, அவனைப் பார்த்து கண் சிமிட்டிகொண்டே நான் மீண்டும் ஒருமுறை குளிக்க வேண்டி வந்திருக்கும் நல்லகாலம் தப்பீட்டன் என்று சொல்ல அவனுக்கு கொடுப்புக்குள் சிரிப்பு வருகிறது. அவன் சொல்கிறான் இப்ப மட்டும் என்ன அந்த ஈரச்சாக்கு ஊறலுக்குள் உருண்டு பிரண்டு எங்கட உடுப்புகளும் நாறுது, போய் குளிக்கத்தான் வேணும். அப்போது அங்கு மயிலம்மாவும் வருகிறாள். என்னக்கா எல்லாம் சரியா இருக்கா..... ஓம் பிள்ளை.....என்ன இரண்டு பேரும் நனைந்து போய் வருகிறீர்கள் என்று வினவ ..... அதொன்றுமில்லை அக்கா, சில நாட்களாக மோட்டர் வேலை செய்யவில்லை.அதுதான் இவன் அதைத் திருத்தினவன்.அப்போது எதிர்பாராமல் குழாயில் இருந்து தண்ணீர் சீறி அடித்து எங்களை நனைத்துப் போட்டுது..... மயிலம்மாவும் வாமன் வலு கெட்டிக்காரன் ......எல்லா வேலைகளும் தெரியும்....உடனே பிழைகளைக் கண்டு பிடித்து செய்து போடுவான் என்று சொல்லிக்கொண்டு முன்னே செல்கிறாள். அப்போது அஞ்சலா மெதுவாக இவனிடம் ...ம்....எனக்குத்தான் தெரியும் இது இன்னும் "எலி பிடிக்கப் பழகாத பூனை" என்று மெதுவாய் அவன் காதைத் திருகிவிட்டு சொல்கிறாள். உடனே வாமன் உஸ் என்று ஜாடையால் மயிலம்மாவைக் காட்டி கேட்டிருக்கும் என்கிறான்......! 🦚 மயில் ஆடும்.......! 10.
  13. இத் திட்டத்தால் தற்கொலை செய்ய தண்டவாளத்துக்கு வரும் காதலர்களும் காப்பாற்றப் படுவார்களா ......! 😁
  14. அப்படி ஒன்று இருந்தால் போடமாட்டார்களா ........ சும்மா யோசிக்காமல் அவசரப் படுகிறதே வேலையாய்ப் போச்சு........! 😂
  15. கொஞ்சம் வசதியானவர்கள் "சனடோஜன்" மாவும் தனியாக வாங்கி வைத்துக் குடிப்பார்கள்......! 😂
  16. சென்றவாரம்தான் இப்படி சூரியன்களும் கருங்குழியும் பற்றி ஒரு செய்தி வந்தது .அதை போறபோக்கில சந்தடி சாக்கில சேர்த்து விட்டதுதான்.......! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.