Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. இந்தக் கட்டுரையில் கடைசிப் பந்திதான் எனக்குப் பிடித்திருக்கு.......! 😂
  2. ஆஹா.....சம்பந்திகளைக் கௌரவித்து இருக்கிறீர்கள்.......நல்ல விடயம்...... ஏன் மருமக்களின் தாய்மாரையும் அழைத்திருக்கலாம் ......இனி அவர்கள் வீடுகளுக்கு போனால் சம்பந்தி ஐயா தேநீர் போட்டுத்தருவார் வாங்கிக் குடியுங்கோ என்று சொல்லிப்போட்டு ஆட்கள் நழுவிப் போயிடுவினம்........! 😂
  3. மயிலிறகு ......... 06. அவர்களுடைய சம்பாஷணை மேலும் தொடர வாமுவும் சுந்துவும் மெல்லமாக கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அப்பொழுது அவர்களின் பேச்சில் "வட்டி வைத்தி"யின் பெயர் காதில் விழ வாமுவும் நண்பனை ஜாடையால் மறித்து அவர்களின் பேச்சைக் கவனிக்கச் சொல்கிறான். அவர்களில் ஒருத்தர் எங்கட வட்டி வைத்தி செத்துட்டார் எல்லோ .....மற்றவர் அந்தக் குத்தியன் என்னெண்டு செத்தவன்.....ஆரும் வெட்டி கிட்டி போட்டாங்களோ என்று கேட்க இன்னொருவர் அவனை யார் வெட்டுறது.அந்தத் தைரியம் இங்கு யாருக்கு இருக்கு.....அது நடந்து ஒருமாதத்துக்கு மேல் இருக்கும், அண்டைக்கு நல்ல மழை அவர் மோட்டார் சைக்கிளில் வேகமாய் வந்திருக்கிறார் அது சறுக்கி ரோட்டுக் கரைப் பள்ளத்துக்குள் விழுந்திட்டுது அவருக்கு மேல சைக்கிள். அடுத்தநாள் விடியலுக்க வேலைக்குபோனவைதான் கண்டு தகவல் குடுத்தவை. துலைவான் எத்தனை பேரிட்ட அறா வட்டி வாங்கி அந்தக் குடும்பங்களை அழிச்சவன். அவன் செத்தது நல்லதுதான் என்று இப்படிப் போகுது கதை......சுந்து வாமுவிடம் என்னடா விஷயம் என்று கேட்க அவர்தாண்டா மாங்காய்க்கு கல் எறிய வந்து துள்ளினார் அந்த வட்டி வைத்தி கொஞ்ச நாட்களுக்கு முன் செத்துட்டாராம். எண்டாலும் பாவம்டா அந்தப் பெண்.சின்ன வயது என்று வாமு சொல்கிறான். பின் இருவரும் வெளியே வருகினம். அப்போது வாமன் தன் பொக்கட்டில் இருந்து ஒரு கவர் எடுத்து சுந்துவிடம் தந்து இந்தா இதை வைத்துக் கொண்டு எதையும் யோசிக்காமல் பல்கலைக்கழகத்துக்கு சென்று கவனமாய்ப் படி. நான் அடிக்கடி சென்று உன் வீட்டைப் பார்த்துக் கொள்கிறேன்.ஏதாவது அவசரம் என்றால் விதானையார் வீட்டுக்கு போன் செய்து கதைக்கலாம். ( அங்கு சில இடங்களில் மட்டும்தான் தொலைபேசி வசதி உண்டு). வாமு நீ என்ர நல்ல நண்பன்டா. நீ உனக்கு மோட்டார் சைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த காசை எனக்குத் தருகிறாய்.எனக்கும் தற்போது வேறு வழியில்லை.உனக்கு என்ன கைம்மாறு செய்யப்போறேனோ தெரியவில்லை. விடுடா அதை....வா நான் உன் வீடுவரை வந்துட்டுப் போகிறேன். திங்கள் கிழமை உன்னை வழியனுப்ப வருகிறேன் என்று சொல்லி இருவரும் சைக்கிள்களில் செல்கிறார்கள். வீட்டுக்கு வந்த சுந்தரேசன் தன் தாயிடம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். வாமன் பணம் தந்தவன், இந்தாங்கோ இதை நீங்கள் கவனமாய் வைத்திருந்து நான் போகும்போது தாருங்கோ என்று சொல்லி மயிலம்மாவிடம் கொடுக்கிறான். அவளும் அதை வாங்கிக் கொண்டு அவன் வரேல்லையே என்று வினவ அவன் என்னோடு வீடுவரைக்கும் வந்திட்டு வேறு அலுவலாய்ப் போகிறான் என்று சொல்லிவிட்டு உள்ளே போகிறான். அட அவன் வந்திருந்தால் ஒரு வாய் தேத்தண்ணி குடிச்சுட்டுப் போயிருப்பான் என்று அவள் சொல்ல கூட இருந்த பூவனம் போம்மா நீயும் உன்ர தேத்தண்ணியும், அவங்கள் நீ குடுத்த காசை வீணாக்காமல் "புல்" அடித்து விட்டு வாறாங்கள்.....சும்மா போடி உனக்கு அவங்களைக் குறை சொல்லாட்டில் செமிக்காது.... ஒரு வழியாக அடுத்து வந்த திங்களில் சுந்தரேசனும் வாமுவுடன் சேர்ந்து சென்று புகையிரதத்தில் கிளம்பி விட்டான். வாமனும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுந்துவின் வீட்டுக்கு சென்று சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்து விட்டு வருவான். இடைக்கிடை விதானையார் வீட்டுப் போனிலும் நண்பனுடன் கதைத்து விட்டு அந்த செய்திகளையும் இவர்களுக்கு சொல்லிவிடுவான்.அப்படித்தான் சுந்து அங்கு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து விட்டதையும் "பகிடி வதை"யெல்லாம் பகிடியாய் போய் இப்ப வகுப்புகள் எல்லாம் நல்லபடியாய் போவதாகவும் சொல்லியிருந்தான். ஆனால் தனக்கு தனியாக நடந்த பகிடிவதைகளின் ரகசியங்களை வாமனிடம் மட்டும் பகிர்த்திருந்தான். வாமனும் அவற்றை யாருக்கும் சொல்லவில்லை. வாமனுக்கும் இப்போதெல்லாம் வேலை அதிகமாகிறது.அரசு விதானையும் அவன் கெதியாய் கிராமசேவகர் ஆகிவிடுவான் என்பதால் அவனுக்கு பலதரப்பட்ட வேலைகளையும் பழக்கி விடுவதில் ஆர்வமாகி அவனைத் தனியாகவும் வேலைகளைக் கவனிக்க அனுப்பி வைப்பதுண்டு.ஆகையால் மயிலம்மாவின் வீட்டுக்கு முன்பு போல் போய்வர நேரம் கிடைப்பதில்லை. அப்படித்தான் அன்று வேலை முடிந்து கிடைத்த நேரத்தில் மயிலம்மா வீட்டுக்கு வந்திருந்தான்.அங்கு மயூரியும் கனகமும் கவலையுடன் திண்ணையில் இருந்து கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்து என்ன விசயம் நீங்கள் கவலையாய் இருக்கிறதுபோல் தெரியுது. அதொன்றுமில்லையடா வாமு நேற்று பூவனத்தின்ர கலியாணம் சம்பந்தமாய் மாப்பிள்ளையின் தாய் தேப்பன் வந்து கதைத்தவை. அவையின்ர பாட்டி இப்பவெல்லாம் அடிக்கடி சுகயீனமாய் கிடக்கிறாவாம்.தான் சாகமுன் பேரனின் கலியாணத்தைப் பார்க்க ஆசைப்படுகிறாவாம். அதனால் வாறமாதம் ஒரு பொதுநாளாய்ப் பார்த்து கலியாணத்தை வைத்தால் நல்லது என்று சொல்லி எங்களையும் அதற்கேற்றாற் போல் ஆயத்தப் படுத்தும்படி சொல்லிபோட்டுப் போகினம். நானும் இப்பதான் என்ர மகனும் மேற்படிப்புக்கு வெளியூர் போயிருக்கிறான், ஒரு ஆறுமாதம் பொறுத்தால் நல்லது என்று சொல்லவும் அவர்கள் அதை காதில் வாங்கியது மாதிரித் தெரியேல்ல. அதுதான் ஒரே யோசனையாய் கிடக்கு. அதுக்குள்ளே இவள் கனகத்தின்ர புருசனும் நேற்று பின்னேரம் நல்ல வெறியில மதவடி வீதியால் வர எதிரில் ஒரு மாடு வந்திருக்கு, இவர் அதோட சொறியப் போக அது இவரை முட்டி மதகில விழுத்திட்டுப் போயிட்டுது. இவருக்கு முன்வாய் பல்லு ரெண்டு உடைஞ்சிட்டுது. அவர் இப்ப எங்க ஆஸ்பத்திரியிலோ என்று வாமு கேட்க கனகமும் அந்தாள் உந்தப் பரியாரியிட்ட மருந்து வாங்கிப் போட்டுகொண்டு வந்து வீட்டில படுத்திருக்கு என்று சொல்லிப்போட்டு சரி நீங்கள் இருந்து கதையுங்கோ நான் போய் அவர் சாப்பிட ஏதாவது கஞ்சி வைச்சுக் குடுக்கப்போறன்........! 🦚 மயில் ஆடும் ......!
  4. இப்ப எந்தச் சோடி எந்தச் சோடியுடன் போய்கொண்டு இருக்குதோ யாரறிவார்......! 😂
  5. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : தாழம் பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும் தாழம் பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும் அது தாமதித்தாலும் நிரந்தரமாக மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும் பெண் : பண்பான உள்ளம் துணிந்து விடும் அது பருவத்தின் முன்னே கனிந்து விடும் ஆண் : உண்மையும் சில நாள் மறைந்திருக்கும் அது ஒரு நாள் வந்து பதில் அளிக்கும் பெண் : அழகின் வழியில் ஆசை வரும் அந்த ஆசையில் கண்கள் தூது வரும் ஆண் : குல மகள் நாணம் புரிந்து விடும் மனம் கொள்கையின் வழியில் நடந்து வரும் பெண் : கடலென்ற மேனியில் அலையாடும் உயிர் காதலின் மேடையில் உலகாடும் ஆண் : கடமையும் காதலும் நிறைவேறும் அந்தக் காலமும் விரைவில் உருவாகும்.....! --- தாழம் பூவின் நறுமணத்தில் ---
  6. வள்ளிமலை மான்குட்டி எங்கே போறே........! 😍
  7. இங்கு வேலை செய்கிறது.......! இது ஒரு முகநூல் பதிவு .........! 😂
  8. யுத்தம் கொடுமையானது......அது எங்கே நடந்தாலும் எவருக்கு நடந்தாலும்.....ஒருசிலரின் அதிகார போதைக்கு அப்பாவிகள்தான் எப்போதும் இரையாகிறார்கள்.......!
  9. இப்ப எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும், ஜேக்கப் புகைவண்டியில் ஏறினாரா இல்லையா........! 😂
  10. மயிலிறகு ....... 05. எடேய் ....அப்போது நீ கவனிச்சனியே அவன் தன்ர மோட்டர் சைக்கிள் சைட் பெட்டியில் இருந்து ஒரு மஞ்சள் பை எடுத்து அவளிடம் பணம் பத்திரம், கவனமாய் கொண்டுபோய் பெட்டியில் வை என்று கொடுத்ததை. தோராயமாய் பார்த்தாலும் ஐந்தாறு லட்சங்களாவது இருக்கும் இல்லையா.....அதை சொல்லும்போது சுந்துவின் குரலில் ஒரு அவாவும் தடுமாற்றமும் இருக்கு. ஓமடா .....நானும் கவனித்தனான் ஆனாலும் அதடா என்பவனை இடைமறித்து அதுமட்டும் கிடைத்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துடுமடா. பூவனத்தின் கல்யாணம்,என்ர படிப்பு,உன்ர மோட்டார் சைக்கிள் மற்றும் ஊருக்குள் ஒரு மளிகைக் கடை என்று எல்லாம் செய்யலாம்டா...... சுந்துவுக்கு கொஞ்சம் வெறி ஏறீட்டுது. டேய் வாமு அவன்ர சேட்டைக்கு எப்படியாவது அதை அடிச்சுக்கொண்டு வரவேணும். குரல் உசாராய் சத்தமாய் வருகிறது. உனக்கென்ன பைத்தியமாடா சுந்து ....அப்படி ஏதாவது நடந்தால் உடனே அவருக்குத் தெரிந்து போயிடும் நாங்கள்தான் செய்திருப்பம் என்று...... பிறகு உன்ர படிப்பு, தங்கச்சியின் கல்யாணம் எல்லாம் பாழாகிடும்.இப்ப நீ ஒன்றுக்கும் யோசிக்காமல் போய்ப்படு.பிறகு பார்க்கலாம் என்று சொல்கிறான். மயிலம்மா அறைக்குள் தன் அலுமாரியில் எதையோ தேட பூவனம் அங்கு தேநீர் கோப்பைகளுடன் வருகிறாள்.தாயைப் பார்த்து என்னம்மா தேடுகிறாய் .....இல்லையடி இன்று முழுதும் செத்தவீடு, மார்அடிச்சு அழுதது, நடை என்று ஒரே அலுப்பாய் இருக்கு அதுதான் இந்த மருந்துப் போத்தலை இங்கினதான் எங்கேயோ வைத்தனான் காணேல்ல ஓ......அதுவா அதைத்தான் அவங்கள் இரண்டு பேரும் எடுத்து குடிச்சுட்டு அலட்டிக் கொண்டிருக்கிறாங்கள். அப்படியே.....சரி சரி அத விடு, உந்தத் தேத்தண்ணியைத் தா குடிப்பம். நீ அவங்களுக்கு நல்லா இடங் குடுக்கிறாய் சொல்லிப் போட்டன் என்று தாய்க்கும் தேநீரைக் குடுத்துட்டு தனது தேநீரை எடுத்துக் கொண்டு வெளியே போகிறாள் பூவனம். அடுத்தநாள் காலை பத்து மணியளவில் தபால்காரர் சைக்கிளில் மயிலம்மா வீட்டுக்கு முன் வந்து நின்று மணியடிக்க பூவனம் சென்று அவரிடமிருந்து பதிவுத்தபால் ஒன்றை கையெழுத்திட்டு வாங்கி வருகிறாள். வரும்போதே அண்ணா உனக்கொரு கடிதம் வந்திருக்கு வந்து பாரேன் என்று அழைக்கிறாள். அடுக்களையில் இருந்து மயூரியும் சுந்துவும் ஒரே நேரத்தில் வெளியே வருகிறார்கள். சுந்து வந்து தங்கையிடம் இருந்து கடிதத்தை வாங்கிக் கவனமாகப் பிரித்துப் படிக்கிறான்.அதில் அவன் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் படிப்பதற்குத் தேர்வாகி இருப்பதாகவும் வரும் திங்கள் கிழமை குறிப்பிட்ட ஆவணங்களுடன் வந்து சேந்து கொள்ளும்படி தெரிவிக்கப் பட்டிருந்தது.அதை அறிந்ததும் அவர்களுக்கு மிகவும் சந்தோசமாய் இருக்கு. அம்மா நான் இந்த நல்ல செய்தியை வாமனிடம் போய் சொல்லிப்போட்டு வாறன்.இதைக் கேட்டதும் அவன் மிகவும் சந்தோசப்படுவான் என்று சொல்லிவிட்டு தாயைப் பார்க்க அவளும் இருடா வாறன் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று கொஞ்ச பணம் எடுத்துவந்து மகனிடம் குடுக்கிறாள். பணத்தை வாங்கியதும் சுந்து சந்தோசத்துடன் சைக்கிளில் சிட்டாய்ப் பறக்கிறான்.இதை பார்த்த பூவனம் அம்மா இவங்கள் குடிக்கப் போறாங்கள், நீ வேற அவங்களுக்கு காசு குடுக்கிறாய்.... நீ சும்மா இருடி அவங்கள் என்னண்டாலும் செய்யட்டும். அங்க படிக்கப்போனால் இனி எப்ப அவனைப் பார்க்கபோறோமோ....நீ போய் அடுப்பில மா அவிய வைத்தனான் என்னெண்டு போய்ப் பார்....நான் ஒருக்கால் கனகத்தைப் பார்த்துட்டு வருகிறேன்.....பக்கத்து வீட்டுக்கு நடந்து செல்கையில் அவளின் மனம் கணக்குப் போடுகிறது. இன்று வெள்ளி அடுத்து சனி,ஞாயிறு பின் திங்கள் வந்துடும்.இதற்குள் பணத்துக்கு என்ன செய்வது. இப்ப ஒரு இரண்டாயிரம் இருந்தால் கூட போதும் பிறகு பார்த்து நிலத்தை ஈடு வைத்து எண்டாலும் பிள்ளையின் படிப்புக்கு உதவ முடியும். அவன் படித்து ஆளாயிட்டான் என்றால் எங்கட பஞ்சம் தீர்ந்திடும்.அதுக்குள் இவளின் சம்பந்தம் வேற நான் முந்தி, நீ முந்தி என்று நிக்குது.எல்லாவற்றையும் நினைக்க நினைக்க மயூரிக்கு மண்டை விறைக்குது. அங்கு வீட்டு வாசலில் கனகம் நிற்பதைக் கண்டு விரைவாக நடக்கிறாள். வாமு வீட்டை போன சுந்து அங்கு அவனைக் காணாது அவனின் தாயிடம் விசாரிக்க அவவும் அவன் அரசு விதானையார் கூப்பிட்டு போயிட்டான். இப்ப வரும் நேரம்தான் நீ உந்த வாங்கில இரு தம்பி. நான் தேத்தண்ணி போட்டுக்கொண்டு வாறன் என்று உள்ளே போகிறாள். சிறிது நேரத்தில் வாமுவும் சைக்கிளில் வந்து இறங்குகின்றன். அவனைக் கண்டதும் ஓடிச்சென்று வாமுவைக் கட்டிப்பிடித்த சுந்து தனக்கு பல்கலைக்கழகத்துக்கு வரச்சொல்லி கடிதம் வந்திருக்கு என்று சொல்லிவிட்டு சட்டென்று அமைதியாகின்றான்.அவனின் முகவாட்டத்தைப் பார்த்த வாமு என்னடா சொல்லு என்று கேட்க அவனும் வாற திங்கள் போகவேணும் இன்னும் இரண்டு நாள்தான் இருக்கு அதற்குள் பணத்துக்கு என்ன செய்யிறதென்றுதான் யோசிக்கிறன். எட மடையா, அதெல்லாம் வெல்லலாம், நீ ஒன்றுக்கும் யோசிக்காத.நீ இருந்து தேத்தண்ணியைக் குடி நான் உடுப்பு மாத்திக்கொண்டு வாறன் என்று உள்ளே போகிறான்.சிறிது நேரத்தில் இருவரும் தாயிடம் சொல்லிக்கொண்டு சைக்கிள்களில் வெளியே போகின்றார்கள். அந்த ஊரில் இருக்கும் ஒரேயொரு பாரில் சுந்து ஒருபோத்தல் சாராயம் வாங்கப் போக வாமு அவனிடம் கணக்க வேண்டாம் அரைப் போத்தல் வாங்கு போதும் என்று சொல்லி அரைபோத்தல் சாராயமும் இரண்டு பிளாஸ்டிக் கப்பும் அத்துடன் குடல் கறியும் வாங்கிக்கொண்டு வருகிறான். இருவரும் அங்கிருந்த சிறு மேசையில் அமர்ந்து கொள்கிறார்கள். பக்கத்தில் ஒரு மேசையில் நாலுபேர் ஊர் உலகத்தில் நடக்கிற பல விஷயங்களையும் கதைத்து சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். சுந்துவும் போத்தலை எடுத்து உள்ளங்கையில் ரெண்டு குத்து குத்தி மூடியிலும் குத்திவிட்டு மூடியைத்திருக அதுவும் மெல்லிய இழை தளர்ந்து புதுமணப்பெண்போல் முனகிக் கொண்டு திறந்து கொள்கிறது.ஒரு சுகந்தமான வாசனை அவர்களைச் சூழ்ந்து கொள்கிறது. அப்படியே அந்தப் பொன்னிறத் திரவத்தை இரண்டு கிளாஸ்களிலும் பாதி பாதியாக ஊற்ற வாமுவும் பக்கத்து மேசையில் இருந்து தண்ணி வாங்கி அதில் கலந்து விடுகிறான்.இருவரும் ஆளுக்கொரு மிடறு குடிக்கிறார்கள்.பின் வாமு பொக்கட்டில் இருந்து சிகரெட் பெட்டியை எடுத்து அவனுக்கும் ஒன்றைக் குடுத்து தானும் ஒன்றை வாயில் வைத்துக் கொண்டு தீப்பெட்டி தேட பக்கத்து கதிரையில் இருந்தவர் இங்காலுப்பக்கம் திரும்பாமல் தன்னிச்சையாய் தனது சிக்ரெட்டை நெருப்புடன் இவனிடம் தருகிறார். வாமனும் அதை வாங்கி தன் வாயில் இருந்த சிக்ரெட்டைப் பற்றவைத்து சுந்துவிடம் குடுத்துட்டு அவனிடமிருந்த சிக்ரெட்டை வாங்கி தான் பத்தவைச்சுக்க கொண்டு அவரிடம் அவருடையதைக் குடுத்து விடுகிறான். 🦚 மயில் ஆடும் ........!
  11. இந்தக் கூகுள் சிலசமயம் இப்படித்தான் பகிடி விடுகுது ........! 😂
  12. மனிதனின் தேவைகள் அதிகமாய் விட்டன......இவற்றை விட வருஷத்தில் இருமுறையாவது சுற்றுலா போகவேண்டும் ......என்ன செய்வது செய்யத்தான் வேண்டும்......! 😴
  13. படங்களுடன் செய்திகளும் நன்றாக இருக்கின்றன.......! 👍
  14. வணக்கம் வாத்தியார்.........! பெண் : உள்ளங்கள் பலவிதம் எண்ணங்கள் ஆயிரம் உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம் ஆண் : மலையில் பிறந்த நதி கடலுக்குப் போவதேன் மண்ணில் பிறந்த மலர் கூந்தலில் வாழ்வதேன் எங்கோ பிறந்தவர்கள் இங்கே இணைவதேன் பெண் : என்னவோ சொந்தமெல்லாம் கண்ணிலே தெரிவதேன் ஆண் : கிழக்கில் ஓடும் நதி தெற்கேயும் பாயலாம் கிளி உண்ணக் கனிந்த கனி அணிலுக்கும் போகலாம் பெண் : நதிவழி போவது போல் மனவழி போகலாம் ஆண் : நடக்கும் வழிகளெல்லாம் நல்வழி ஆகலாம் பெண் : மறைத்தால் மறைவதில்லை மங்கையின் கனவுகளே ஆண் : பிரித்தால் பிரிவதில்லை வளர்ந்திடும் உறவுகளே ஆண் : அடித்தால் அழுவதில்லை ஆனந்த நினைவுகளே பெண் : அன்பில் இணைந்தவர்கள் வார்த்தையில் ஊமைகளே --- உள்ளங்கள் பலவிதம் ---
  15. ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே........! 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.