Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. நல்ல தகவல்கள் .........பொதுவா நீங்கள் சொல்லியவை அனைத்தும் எங்கள் உணவுகளில் இடம்பெறுபவையே ........ ஆயினும் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது.......! 👍 நன்றி தமிழன்பன் ......!
  2. இல்லை புங்கை, அப்பொழுது நீங்கள் மிகவும் ஆரோக்கியமாக இருந்திருக்கிறீர்கள் ........இப்பொழுது பண்பட்டு விட்டீர்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.......! 😂 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ......!
  3. இப்போதுதான் இந்தப் பதிவைப் பார்க்கிறேன்........படங்கள் நன்றாக இருக்கின்றன.......! 👍 நன்றி கவி அருணாசலம்........!
  4. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : { அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு கட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு } (2) ஆண் : { சங்கீதமே சந்நிதி சந்தோசம் சொல்லும் சங்கதி } (2) ஆண் : கார்காலம் வந்தால் என்ன கடும் கோடை வந்தால் என்ன மழை வெள்ளம் போகும் கரை ரெண்டும் வாழும் காலங்கள் போனால் என்ன கோலங்கள் போனால் என்ன பொய் அன்பு போகும் மெய் அன்பு வாழும் ஆண் : அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்லை வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை ஆண் : இன்றென்பது உண்மையே நம்பிக்கை உங்கள் கையிலே ஆண் : தண்ணீரில் மீன்கள் வாழும் கண்ணீரில் காதல் வாழும் ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே பசியாற பார்வை போதும் பரிமாற வார்த்தை போதும் கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும் ஆண் : தலை சாய்க்க இடமா இல்லை தலை கோத விரலா இல்லை இளங்காற்று வரவா இல்லை இளைப்பாறு பரவா இல்லை ஆண் : நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது.......! --- அகரம் இப்போ சிகரம் ஆச்சு ---
  5. கூத்தாடும் கொண்டையிலே ........! 😍
  6. கிழங்கு பீன்ஸுடன் ஒரு அருமையான உணவு.........! 🤩
  7. அக்காவின் அக்கறை அன்பாய் என்னை அருகிலிருத்தி வலிக்காமல் தலைவாரி வகிடெடுத்த பின்னாலே சித்திரமாய் திலகமிட்டுடுவாள் தந்தையே தடியெடுத்திடினும் தானோடி வந்து தாவியெடுத்தென்னை தன்னோடணைத்து தான் அடிவாங்கி என்துயர் போக்கிடுவாள் முழுபாவாடையை முன் இடுப்பில் சொருகி எட்டுக்கால் கோட்டில் எம்பி எம்பி ஆடுகையில் பின் எல்லோரையும் தள்ளி விட்டு எஞ்ஞான்றும் அவளே ஜெயித்திடுவாள் கபடி விளையாடுகையில் கிளிபோலப் பறந்து பறந்து காலாலே கலங்கடித்து காளையரையும் விரட்டிடுவாள் எதிர் வீட்டு முகுந்தனிடம் மட்டும் எப்போதும் சண்டையும் சச்சரவும் கேலிசெய்து கொண்டு அவன் ஓட ஓட கோலிகுண்டால் எறிந்து கொண்டு பின்னாலே ஓடுவாள் முற்றத்து மாமரத்தில் கொக்கத்டியெடுத்து முற்றிய மாங்காய்களை நான் பறிக்கையில் முன்னால் வந்த அக்காளும் தடியெடுத்து தனக்கும் ரெண்டு பிஞ்சு பறித்துக்கொண்டாள் அக்காளும் முன்போல் இல்லை குறும்புத்தனமும் குறைஞ்சு போச்சு தடியெடுத்த தந்தையும் "யாரடி அவன்" என்று தளராமல் அடிக்கின்றார் அக்காளை அன்று என்னைப் பொத்திக் காத்தவளை அருகில் நெருங்கவும் என்னால் முடியவில்லை குறுக்கேவந்த அம்மாவுக்கும் குறைவின்றி அடிவிழுது வாடிய மலர்க்குவியலாய் மண்ணில் புரளும் அக்காள் படலையை தள்ளியே பதற்றமாய் வந்தாள் மாமி தந்தையிடம் தடியைப் பிடுங்கி எறிந்தாள் உன்ர பிள்ளையை நீ அடி அல்லது கொல் -ஆனால் என்ர வாரிசை வம்சத்தை அழிக்க உனக்கேது உரிமை விக்கித்து நின்ற அப்பாவை விலக்கிவிட்டு -அக்காளை அணைத்தெடுக்கையில் அருகே வருகின்றான் முகுந்தனும் இரு இறக்கைக்குள் குஞ்சுபோல் கூடவே அக்காள் செல்ல அம்மாவின் முகத்தில் நிம்மதி, அண்ணாந்து ஆகாசம் பார்க்கிறாள்......! ஆக்கம் சுவி ......! யாழ் அகவை 26 க்காக ........!
  8. சமைக்கும்போது எண்ணை முகத்தில் தெறிக்காமலும், முத்தமிட வருபவரை எட்டியும் நிக்க வைக்கும் கேடயம்.......! 😂
  9. Packiyanathan Sasikumar derStponos031l5hc071i f58c3a206288m13g38hcm8hg545036h9a0m09a · முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது.* அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை தூக்கிச் சென்று, மலைப் பகுதியில் விட்டு விட வேண்டும். இதனால் வயதானவர்களைப் பராமரிக்க வேண்டிய சுமை நாட்டு மக்களுக்கு இல்லை என்பது அரசனின் எண்ணம். அந்தச் சட்டம் நடைமுறையில் இருந்த போது ஒரு தந்தையும் மகனும் ஒருவரிடம் ஒருவர் மிகுந்த அன்பு கொண்டவர்களாக விளங்கினர். நாளடைவில் அந்த‌த் தந்தை வேலை செய்ய இயலாத முதுமைப் பருவத்தை அடைந்தார். ஆதலால் அந்நாட்டின் சட்டப்படி அவரை மகன் மலைப்பகுதியில் கொண்டு விட்டு விட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானான். தந்தையைப் பிரிய அவனுக்கு மனமே வரவில்லை. எனினும் அரச தண்டனைக்குப் பயந்து அவன் தன்னுடையத் தந்தையை மலைப்பகுதிக்கு முதுகில் சுமந்து சென்றான். மலைப்பகுதியை அடைந்த போது அவனுடைய மனம் மிகவும் வருந்தியது. ஆதலால் அவன் தந்தையை தன்னுடனே அழைத்துக் கொண்டு திரும்பி வீட்டிற்கு வந்து விட்டான். வீட்டின் பின்பகுதியில் தந்தையை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்தான். மிகவும் ரகசியமாக அவருக்கு உணவளித்து வந்தான். சாம்பல் கயிறு. ஒரு நாள் அரசன், தன் மக்களின் அறிவுத் திறனை சோதிக்க எண்ணி, போட்டி ஒன்றை அறிவித்தான். சாம்பலால் திரிக்கப்பட்ட கயிறினை கொண்டு வர வேண்டும் என்பதே அப்போட்டியாகும். போட்டியைக் கேட்டதும் எல்லோரும் சாம்பலால் எவ்வாறு கயிறு திரிக்க இயலும் என்று எண்ணினர். யாராலும் சாம்பல் கயிறு உருவாக்க முடியவில்லை. அரசனின் போட்டி பற்றி அந்த‌ மகன் தன் தந்தையிடம் தெரிவித்தான். போட்டியைக் கேட்ட தந்தை, மகனிடம் பெரிய தாம்பாளத்தில் கயிறினை முறுக்கி வைத்து, அதனை எரியச் செய்தால் சாம்பலால் திரித்த கயிறு கிடைக்கும் என்றார். மகனும் தந்தை கூறியபடி தாம்பாளத்தில் கயிறினை வைத்து எரித்தான். கயிறு எரிந்து சாம்பாலான பின்பும் அதே கயிறு வடிவில் இருந்தது. இதனை அரசனிடம் காண்பித்து பரிசினைப் பெற்றான். அடி எது? நுனி எது? ஒரு மாதம் கழித்து அரசன் இரண்டாவது போட்டியை அறிவித்தான். அரசன் ஒரு மரக்கொம்பைக் கொடுத்து இதனுடைய அடிப் பாகம் மற்றும் நுனிப் பாகத்தைக் கண்டு பிடிக்குமாறு மக்களுக்கு ஆணையிட்டான். கிட்டத்தட்ட இரு பகுதியும் ஒன்றாகத் தெரிந்ததால் யாராலும் அடி எது? நுனி எது? என்று சொல்ல முடியவில்லை. மகன் தந்தையிடம் அரசனின் கேள்வியைக் கேட்டான். தந்தை மரக்கொம்பை தண்ணீரில் போட்டால், அது லேசாக சாய்வாக மூழ்கும்; அப்போது கீழ் நோக்கி இருக்கும் பகுதி அடி, மேல் நோக்கி இருக்கும் பகுதி நுனி என்றார். மகனும் தந்தை கூறியவாறே அரசனுக்குச் செய்து காண்பித்து இம்முறையும் பரிசினைப் பெற்றான். தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம். அரசன் மூன்றாவது போட்டியை மிகவும் கடுமையானதாக வைத்தான். அதாவது தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் ஒன்றினைத் தயார் செய்து வருமாறு மக்களிடம் கூறினான். வழக்கம் போலவே எல்லா மக்களும் பின்வாங்கி விட்டனர். அரசனின் கேள்வியால் மகன் மிகவும் சோர்ந்து தந்தையிடம் வந்து நடந்ததைக் கூறினான். தந்தை அவனிடம் “மேளத்திற்குத் தேவையான தோல்களை எடுத்துக் கொள். மலைப்பகுதிக்குச் சென்று தேனீக்கூடு ஒன்று கொண்டு வா. அதனை உள்ளே வைத்து மேளத்தை தயார் செய்” என்றார். மகனும் தந்தை கூறியவாறே மேளத்தை தயார் செய்து அதனை அசைக்காமல் கொண்டு சென்று அரசனிடம் தந்தான். அரசன் மேளத்தைக் கையில் எடுத்து மேளத்தை அசைத்தான். மேளத்திற்கு உள்ளே இருந்த தேனீக்கள் அசைவினால் மேளத்திற்குள் இங்கும் அங்கும் பறந்தன. இதனால் மேளத்தில் தட்டாமல் ஒலி உண்டானது. இதனைக் கண்டு ஆச்சர்யமடைந்த அரசன் “உன்னால் எப்படி மூன்று கேள்விகளுக்கும் சரியான விடைகளை செய்து காண்பிக்க முடிந்தது?” என்று கேட்டான். அனுபவம் தந்த பதில்கள். “அரசே உங்களுடைய கேள்விகளுக்கு விடை காணும் அளவிற்கு எனக்கு அனுபவம் கிடையாது. என்னுடைய வயதான தந்தை என்னுடன் இருக்கிறார். அவர் மூலமே எனக்குத் தங்களின் கேள்விக்கான பதில் கிடைத்தது.” என்று கூறினான். இளைஞனின் பதில் அரசனை நெகிழச் செய்தது. சிக்கலான பிரச்சினைகளைத் தீர்வு செய்ய‌ வயதானவர்களின் அனுபவம் உதவியாக இருக்கும் என்பதை அரசன் உணர்ந்து கொண்டான். உடனே அவன் “இனி வேலை செய்ய இயலாத வயதானவர்களை, மலைப்பகுதிக்கு கொண்டு போய் விடத் தேவையில்லை” என்று உத்தரவு போட்டான். அதுமுதல் வயதானவர்கள் தங்கள் கடைசிக் காலத்தை பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகக் கழித்தனர். அனுபவ அறிவு என்றைக்கும் விலை மதிப்பில்லாதது என்பதைத் தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் கதை மூலம் அறியலாம். ஆம், வயதான பெரியவர்கள் வீட்டில் இருப்பதே நமக்கு இறைவன் கொடுத்த அருள் என்று உணர்வோம். நம்மை ஆளாக்கிய பெற்றோரின் வயதான காலத்தில் அவர்கள் நம்மோடு இருப்பதும் அவர்களை பராமரிப்பதும் நமக்கான கடமை மட்டுமல்ல நமக்கு கிடைத்த அருள் என்று உணர்வோம். தொப்புள் கொடியில் இருந்தே தொடங்கிய தாயும் மார்பிலும் தோளிலும் தூக்கிச் சுமந்து கால் தேய உழைத்து நம்மை உருவாக்கிய தந்தையும் நம்மிடம் நன்றியை எதிர்பார்க்கவில்லை *என்றாலும் நாம் நன்றியுடன்* *பராமரிக்க வேண்டும்.*
  10. கடசி தொடங்குதல் பலவற்றுக்கும் நல்லதுதான்........எதிர்க்கட்சி தலைவராக பாராளுமன்றத்துக்குள்ளேயே வந்து கர்ஜித்த விஜயகாந்தையும் தலைகுப்புற கவிழ்த்து குதறி எறிந்த குள்ளநரிகள் இன்னமும் வெளியேதான் இருக்கின்றன ......அவைகளை கிட்ட நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டாலே பாதி வெற்றிதான்........! 😁
  11. இன்றைய உணவு தயார்...... நன்றி ஆண்டவரே.....! 🙏
  12. அட, கழுகு தேன் குடிக்குமா.....! 😂
  13. வணக்கம் வாத்தியார்.......! சம்போ மகாதேவா சாம்ப சதாசிவா சந்திர கலாதரா சர்வ செவாதரா உன் பாதம் பணிந்தேன் ஹேய் கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வாறியா குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா ஹேய் கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வாறியா குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா நீ நாட்டுபுற ஆளுடா ஆட்டம் போட்டு பாருடா என்னாட்டம் என்னாட்டம் ஆட யாருடா அடியே அடியே நீ யாருகிட்ட மோதிபுட்ட கேட்டு பாருடி படவா படவா நான் சூப்பர் ஸ்டாரு ஜோடி தான் கூட ஆடுடா ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு நான் சிவகாசி தானே கொளுத்து மத்தாப்பு Black'ல தான் டிக்கெட்டு தான் வாங்கி பாக்கும் எங்க ஜனம் தான் Market தான் எங்கிட்ட தான் இருக்குது பக்கபலம் தான் Theatre ticket விலை கேளுமா ஏழைங்க பட்ஜெட்டு தாங்காதும்மா ஆட்டம் பாட்டம் டைம்பாசுடா ரேட்டையும் காசையும் பாக்காதுடா உந்தன் பேரில் கோயில் உண்டா பெண்கள் கூட சாமி தாண்டா ஆண்டிப்பட்டி அரசம்பட்டி எந்த ஊரு உங்க ஊருடா உங்க city பட்டி தொட்டி மொத்த ஊரும் நம்ம ஊருதான் ஸ்டாருன்னு நாங்களும் ஓட்டு கேட்டா யாருமே ஜாதிதான் பாப்பதில்ல ஏழைங்க பாழைங்க நெனச்சிப்புட்டா நாளைக்கு நீங்களும் CM தான் வேண்டாமடா வெவகாரம் தான் ஆட்சி வந்தா அதிகாரம் தான் ......! --- ஹேய் கோடம்பாக்கம் ஏரியா ---
  14. கொஞ்சி கொஞ்சி பேசி மதிமயக்கும்......! 😍
  15. நான் ஒரு வார்த்தை பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். புன்னகையுடன் கைகுலுக்கி நான் அவருக்கு அளிக்கவேண்டிய செக்கை அளித்துக்கொண்டு கிளம்பினேன். திரும்பும் வழியில் என்னுடன் வந்த இன்னொருவர் ‘என்ன சார் பேசாமலிருக்கீங்க?’ என்றார். அவரும் மிகச்செல்வந்த குடியில் பிறந்தவர். நிர்வாகவியலில் உயர்கல்வி கற்றவர், தொழிலதிபர். அவர் பேச ஆரம்பித்தார். பிராமணர்கள் பற்றி இங்கே சொல்லப்படும் எல்லா அபத்தமான காழ்ப்புக் கருத்துக்களையும் வரிசையாகச் சொன்னார். அவரும் எல்லாவற்றுக்கும் அறிவியல் விளக்கமும் சொன்னார். பெரியார், அண்ணா பற்றிய எல்லா பொய்க்கதைகளையும் வரிசையாகச் சொன்னார். இன்னொரு வகை பாமரர். இங்கும் நான் புன்னகையுடன் அமர்ந்திருந்தேன். இவர் எனக்கு பெரிய தொகையை தந்தவர். ஆகவே இரண்டு மடங்கு புன்னகை புரிந்தேன்.....! இந்த இடத்தில் எனக்கு ஒரு குழப்பம் இருக்கின்றது......இவ்வளவு தெளிவுடன் இருக்கும் ஜெயமோகனும் சில கொள்கைகளை சமரசம் செய்வதற்கு தனக்கென ஒரு விலையை நிர்ணயம் செய்திருக்கின்றாரோ என்று....... மற்றும்படி கட்டுரை நன்றாகத்தான் இருக்கின்றது.........! 👍 நன்றி கிருபன்......!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.