Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார்......! ஆண் : தும்பி பறந்ததுனா தூரத்துல மழை அடிக்கும் கம்பு விளைஞ்சதுன்னா மேகத்துல இடி இடிக்கும் ஆண் : பூம் பூம் மாடு தலையாட பொண்ணும் பையனும் விளையாட கூடி நிக்கிற ஊரு சனம் கொண்டாட போகுதையா ஆண் : ராசாத்தி ராசாத்தி போகாத சூடேத்தி பெண் : பாராட்டி சீராட்டி போவேனா ஏமாத்தி ஆண் : மாராப்பு போட்ட என் மறிக் கொழுந்தே ஊருக்கு போடணும் காி விருந்தே பெண் : பொல்லாத ஆச எல்லாம் உம் முன்னால கொட்டாயி போடா ஆண் : சொல்லாத சேதியெல்லாம் நான் சொல்வேனே தெம்மாங்கு பாட பெண் : ஒதட்டுக்கு சிாிப்பு உரலுக்கு இடிப்பு உன்னால ஆனேனே செவப்பு உயிா் போனாலும் போகாதோ நெனப்பு ஆண் : இடுப்புக்கு மடிப்பு இளமைக்கு வனப்பு உன் மேல உண்டாச்சு மதிப்பு ரதி தேவி நீ என்னோட சிறப்பு ஆண் : மஞ்சளும் குங்குமம் தொட்டு வையி நீ மல்லிக பூ வாங்கி கட்டி வையி ஆண் : அச்சத தட்டோட பொட்டு வையி உன்சீதனம் நான் இன்னு தட்டு வையி குழு : டமுக்கு டப்பாங்குத்து நீ அய்யாவோட ஊரு சுத்து ஏன் குமுக்கு கும்மாங்குத்து நீ கூட வந்தா தானே கெத்து.......! --- ராசாத்தி ராசாத்தி போகாத சூடேத்தி ---
  2. காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு ........! 😍
  3. சிறப்பான கருத்து......உந்த தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளை போட்டுத்தானே எம்மினத்தவர்களையும் அழித்தார்கள் ...... இப்ப தங்கள் அயலவர்களையும் அழிக்கிறார்கள்......எந்தப் பக்கமாய் இருந்தாலும் சரி அப்பாவி மக்களுக்குத்தான் அவலம் எல்லாம்......!
  4. மொறு மொறுப்பான பூண்டு போண்டா.........! 👍
  5. கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே ......! 😍
  6. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : தொட்டு தொட்டு பொட்டு வச்ச சுட்டு விரல் காயலியே குழு : மறிக்கொழுந்து வெச்ச கையில் வாசம் இன்னும் போகலையே ஆண் : மருதையில வாங்கித் தந்த வளவி ஓடையலையே குழு : மல்லு வேட்டி மத்தியில மஞ்சக் கர மாறலையே ஆண் : அந்தக் கழுத்து தேமலையும் காதோர மச்சத்தையும் பாப்பதெப்போ குழு : பாப்பதெப்போ பாப்பதெப்போ பௌர்ணமியும் வாரதெப்போ ஆண் : அந்தக் கொலுசு மணி சிரிப்பும் கொமரி இளஞ் சிரிப்பும் கேட்பதெப்போ குழு : கேட்பதெப்போ கேட்பதெப்போ கீரதண்டும் பூப்பதெப்போ ஆண் : கருவேலங் காட்டுக்குள்ள கரிச்சான்குருவி ஒண்னு சுதி மாறிக் கத்துதம்மா தொணையத்தான் காணோமின்னு ஆண் : ஓஓஒ… ஓஒ…ஓஒ…ஊ..ஓஒ… குழு : {கடலக் காட்டுக்குள்ள கையடுச்சு சொன்ன புள்ள காத்‌துல எழுதனும் பொம்பலைங்க சொன்ன சொல்ல} (2)......! --- ராசாத்தி என் உசுரு என்னதில்ல ---
  7. பூச்செடியை வேரோடு பிடுங்கிக் கொண்டு போறமாதிரி இருக்குது.......! 😂
  8. எம் இனம் பற்றியும், ஏமது கையறு நிலை பற்றியும் மிகச் சிறப்பான கருத்து.......! நாங்கள் கள நிலைமையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தால் போதும்.....!
  9. Ravi Paramasivan · நீரால் கோலம் போடாதே நெற்றியைக் காலியாய் விடாதே குச்சியைக் கொளுத்தி வீசாதே இரவில் ஊசியை எடுக்காதே கால் மேல் காலைப் போடாதே கவட்டையில் துணியை சொருகாதே காலையில் அதிகம் தூங்காதே மாலையில் அதிகம் சிரிக்காதே தொடையில் தாளம் போடாதே தரையில் வெறுமென கிடக்காதே மலஜலம் அடக்கி வைக்காதே மார் தட்டி பேசாதே நகத்தை நீட்டி வளர்க்காதே ஆலயம் செல்லத் தவறாதே அளவு இல்லாமல் உண்ணாதே அள்ளிக் கொடுக்க மறவாதே அனைத்தையும் உண்ணத் தவறாதே அதிகமாக பேசி நோகாதே எண்ணெய் தேய்க்க மறக்காதே முச்சந்தியில் நீயே உண்ணாதே விரிப்பைச் சுருட்ட மறக்காதே பகலில் படுத்து உறங்காதே இரவில் உறங்காமல் இருக்காதே குளிக்கும் முன்பு புசிக்காதே ஈரம் சொட்ட நிற்காதே திரு நாமம் சொல்ல மறக்காதே நல்ல குடியைக் கெடுக்காதே தீய வார்த்தை பேசாதே தீமைக்கு துணை போகாதே தீயோர் சொல் கேட்காதே நின்று தண்ணீர் குடிக்காதே எதையும் காலால் தட்டாதே எச்சில் பட்டதை திண்ணாதே 40ல் 50 போகாதே... கொண்டோரே, சான்றோரே, ஆண்டோரே, எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே எம் மூத்தோரே இப்போது எல்லாம் கேட்டு தெரிந்தும் நோய் நொடியில் சிக்கி தவித்தீரே சிந்தனை செய்ய மறந்தீரே புத்தியை தீட்ட தவரிட்டீரே வந்தவன் போனவன் ஆண்டானே... ஆண்டவன் எந்நாட்டவன் தெரியாதே. *என்ன அழகான வரிகள் இதை முதலில் நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே* Voir la traduction Toutes les réactions : 2Vous et 1 autre personne
  10. அம்மம்மா கன்னத்தில் கன்னம் வைத்து கொள்ளு ........! 😍
  11. வணக்கம் வாத்தியார்......! வெதவெதமாய் இனிச்சிருக்கும் வெடலப்பொண்ணு நானு விருப்பப்பட்டு நெறுங்கி... வந்தா வெலக்கணைக்குன்னு வாம்மான்னு நீ சொன்னா தருவேனே தே... னு வட்டியோட அசலவாங்கும் அதுதானே சீ... னு ஏன்டா எலி புடிக்கிற ஈயா இலை விரிக்கிற தூண்டி துரவும் நிக்கிற சுதி ஏத்தி வான்டா சுழல வைக்கிற வாகா வழி மறிக்கிற தாண்டி தவறு பன்னுற அடி ஆத்தி ஆச வெறகடுப்புல வேக வெளைஞ்சி நிக்கிற ரோசா ஒன்ன நெனைக்கையில் நெடியேறும் பாசி பயிறக்கண்ணுல பாதாம் பறுப்பு செய்யிற ராசா ஒன்ன நெறுங்கையில் ருசி மாறும் மத்தாக மனச நீ கடையாம என்ன மாராப்பில் பதம்பாரு சொத்தாக சகலமும் தரப்போறேன் மத்த சாப்பாட்டில் பசியா... ற உசுரே... கேக்கா... ஒன நான் தூக்க வாரேன் மாமன் கூத்தடிக்க பாலும் கொதிச்சிருக்குது பாயும் விரிச்சிருக்குது ஆனா அது எதுக்குன்னு தெரியாதா? காயும் கனிஞ்சிருக்குது பாயும் நனஞ்சிருக்குது ஆனா அது ஒனக்குன்னு புரியாதா? உன் கண்ணாடி வளவியும் ஒடையாம உன்ன கட்டோட மடிப்பேனே... என் கண்டாங்கி பொடவையும் கசங்காம தொட மல்லாந்துக்கிடப்பேனே... ஒடனே வாடி... ஒழுங்கா தாடி... மூடி போட என்னாதடி........! --- லாலா கட சாந்தி உன்ன போவேனே நான் எந்தி ---
  12. VIRUMBI KETTAVAI விரும்பி கேட்டவை · Rejoindre Prashantha Kumar · · வற்புறுத்திய ஏ.ஆர்.ரகுமான்… ட்யூன் பிடிக்காமல் பாடிக்கொடுத்த எம்.எஸ்.வி…ஆனா பாடல் சூப்பர்ஹிட்… என்ன பாட்டு தெரியுமா? கோலிவுட்டின் மெல்லிசை மன்னராக இருப்பவர் எம்.எஸ்.விஸ்வநாதன். பல வருட உழைப்புக்கு பிறகு சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி கொண்டே வந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன். அப்போது ஒருமுறை இவரின் வீட்டிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் நேரில் சந்திக்க வருகிறார். அவரை பார்த்த எம்.எஸ்.விக்கும் சந்தோஷம். என்னப்பா இந்த பக்கம் எனக் கேள்வி கேட்கிறார். ஐயா என்னுடைய அடுத்த படத்தில் நீங்க ஒரு பாட்டு பாட வேண்டும். அதற்காக தான் வந்தேன் எனக் கூறுகிறார். எம்.எஸ்.வியோ நான் இப்போலாம் பாடுவதே இல்லையே என மறுத்துவிட ரஹ்மானோ தன்னுடைய ட்யூனை கொடுத்து கேளுங்கள் என சொல்லிவிட்டு சென்றார் அதை கேட்ட எம்.எஸ்.விக்கு மேலும் குழப்பம் இதுக்கு எப்படி பாட முடியும். சரி முடியாது என சொல்லிவிடுவோம் என ரஹ்மான் வீட்டிற்கு செல்கிறார். அந்த நாள், ரஹ்மானின் பிறந்தநாளாக இருந்து இருக்கிறது. இவரை பார்த்த ரஹ்மான் ஆர்வத்துடன் வரவேற்றார். சொல்லி இருந்தால் நானே வந்திருப்பேனே ஐயா எனக் கேட்டார் பிறந்தநாள் அதுவுமாக ஏ ஆர் ரகுமான் சங்கடப்படும் படி எதுவும் சொல்ல வேண்டாம் என நினைத்து, வந்தது தான் வந்து விட்டோம் பாடலை பாடிவிட்டே சென்று விடுவோம் என்று முடிவு செய்துள்ளார். ரெக்கார்டிங் ஸ்டூடியோவிற்குள் சென்று எம்எஸ் விஸ்வநாதன் அவர்கள் பாடுவதற்கு தயாரான பொழுது ஆர்மோனிய பெட்டியை வாசிப்பவரை வெளியே அனுப்பிவிட்டு அந்த ஹார்மோனி பெட்டியில் வந்து அமர்ந்து ஏ ஆர் ரகுமான் வாசிக்க ஆரம்பித்துள்ளார். ஐயா நான் பாடல் சொல்லித் தர மாட்டேன் நீங்களாகவே பாடுங்கள் என்று ஏ ஆர் ரகுமான் சொல்ல... தம்பி நானாக பாட மாட்டேன் நீ சொல்லித் தருவதை தான் பாடுவேன் என்று எம் எஸ் விஸ்வநாதன் ஒருபுறம் அடம்பிடிக்க..... நான் ராகத்தை சொல்கிறேன், நீங்கள் உங்கள் இஷ்டப்படி அந்த ராகத்திற்கு ஏற்றவாறு பாடுங்கள் என்று ரகுமான் கூற ஒரு வழியாக ரெக்கார்டிங் ஆரம்பித்தது. சுமார் 4மணி நேரம் நடந்த ரெக்கார்டிங் முடிந்த பின்பு பாடலை இசைத்து காட்டுமாறு எம் எஸ் வி ரகுமானிடம் கேட்டுள்ளார். இன்னும் கொஞ்சம் வேலை இருக்கிறது நான் பிறகு உங்களுக்கு போட்டு காட்டுகிறேன் என்று ஏ ஆர் ரகுமான் கூறியுள்ளார். ஒருவேளை நாம் சரியாக பாடவில்லையோ..!! இல்லை நாம் பாடிய பாடல் ரகுமானுக்கு பிடிக்கவில்லையோ..!? என்று குழப்பத்தோடு சென்ற எம் எஸ் விஸ்வநாதன் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தை பார்த்து ரகுமானிடம் சொல்லி அந்தப் பாட்டை கொஞ்சம் போட்டு காட்ட சொல்லுப்பா என்று ரெக்கமண்ட் கேட்டுள்ளார். எஸ் பி பாலசுப்ரமணியம் ரகுமானிடம் சென்று எம்எஸ் விஸ்வநாதன் அவர்கள் கேட்டபடி பாடலை போட்டு காட்ட சொல்லி கேட்டிருக்கிறார்.ரகுமானும் பாடலை ஓரளவிற்கு முடித்துவிட்டு போட்டுக் காட்டியுள்ளார். அதை கேட்ட எம் எஸ் விஸ்வநாதன் தான் பாடிய பாடலா இவ்வளவு அருமையாக வந்துள்ளது என்று ஆச்சரியப்பட்டு போனாராம். எம்.எஸ்.விக்கே பிடிக்காமல் கம்போஸ் செய்த பாடல் தான் “சங்கமம்” படத்தில் வரும் “ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க” என்ற பாடல். ரஹ்மானை மட்டுமல்ல ரசிகர்கள் எம்.எஸ்.வியையும் ஏமாற்றவில்லை. பாடல் இன்று வரை ஹிட் பட்டியலில் தான் இருக்கிறது. Voir la traduction Toutes les réactions : 3,2 KVous et 3,2 K autres personnes

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.