Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. Trader Sudhakar · சலூன்ல ஹேர்கட் பண்ணிட்டு எழுந்தேன். திடீர்னு கடை ஓனரு செவுத்துல ஒட்டியிருந்த விஜய், அஜித், தனுஷ், சிம்பு போஸ்டரையெல்லாம் கிழிக்க ஆரம்பிச்சுட்டாரு. நான் பதறி போய் ஏங்கன்னு கேட்டதுக்கு உங்களுக்கே தெரியாம நீங்க ஹேர்கட் பண்ணும் போது உங்கள விதவிதமா ஃபோட்டோ எடுத்துட்டேன் தம்பி. அத ப்ரிண்ட் போட்டு மாட்டப் போறதால இந்த குப்பைங்க எல்லாம் இனி தேவைப்படாதுன்னாரு. நான் வாஸ்தவம்தாண்ணா, ஆனா என்ன பண்றது எனக்கு விளம்பரம் பிடிக்காது. இதனால தான் KGF மற்றும் RRR போன்ற சின்ன பட்ஜெட் படங்களில் ஹீரோவா நடிக்க வந்த வாய்ப்பை கூட மறுத்துட்டேன்னு சொல்லி அவர் மொபைல வாங்கி என் ஃபோட்டோ எல்லாம் அழிச்சுட்டு அழுதுட்டிருந்த அவர் கண்ணை துடைச்சு விட்டு கிழிச்ச போஸ்டரையெல்லாம் திரும்ப ஒட்டிக்கங்கன்னு சொல்லி பசை வாங்க அவர் பாக்கெட்ல ஒரு பத்து ரூபாய சொருகிட்டு கிளம்பினேன்......!
  2. நகைச்சுவை மழை · Rejoindre Ram Ram · · ஒரு தம்பதிக்கு மூன்று மகள்கள். மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மருமகன்களின் அன்பை பரிசோதிக்க மாமியார் விரும்பினார். அதற்காக ஒரு நாடகத்தை நடத்த எண்ணி முதலாவது மகள் மற்றும் மருமகனுடன் ஒரு ஏரியில் படகு சவாரி செய்தார். தான் திட்டமிட்டபடி ஏரியில் விழுந்து உயிருக்கு போராடுவதாய் நடித்தார். இதையறியா மருமகன் உடனே தண்ணீரில் குதித்து மாமியாரைக் காப்பாற்றினார். அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்த மருமகன் வாசலில் ஒரு புத்தம் புதிய மாருதி desire கார் இருப்பதைக் கண்டார். அருகில் சென்று பார்த்தார். அதில் மாமியாரின் அன்புப் பரிசு என்று இருந்தது. இதே போல் இரண்டாவது மருமகனையும் சோதித்தார். அவரும் முதல் மருமகனைப் போலவே செய்ததால் அவருக்கும் ஒரு மாருதி desire கார் பரிசாக வழங்கினார். முன்றாவது மருமனுக்கும் இதே சோதனை. திட்டமிட்டபடி தண்ணீரில் விழுந்து தவித்தார். மாப்பிள்ளை கண்டுகொள்ளவேயில்லை. மாமியார் கெஞ்சினார். ம் ஹும். பார்க்காதது போல் இருந்தார். மாப்பிள்ளை காப்பாற்றுங்கள்.. இன்னோவா கார் வாங்கித் தருகிறேன் என்று சொன்னார். காரும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்.. பொண்ண வளக்க சொன்னா பேய்ய வளர்த்திருக்கிற...சாகுன்னு சொல்லிட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்கு வந்துவிட்டார். மாமியார் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார். அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்து பார்த்தால்.... ஒரு புத்தம் புதிய BMW கார் வாசலில் நின்றது. அருகில் சென்று பார்த்தால்.. ............. மாமனாரின் அன்புப் பரிசு என்றவாசகம் காரில் தொங்கியது.
  3. ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்........! 😍
  4. வணக்கம் வாத்தியார்........! ஆண் : காந்தக் கண்ணழகி லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் முத்து பல் அழகி சோடி சேர வாடி பெண் : காந்தக் கண்ணழகா டக்குன்னுதான் தட்டி தூக்கும் முத்து பல் அழகா முத்தம் ஒன்னு தாடா ஆண் : பொண்ணு பாத்தா மண்ணை பாக்கும் சங்கத்தோட லீடர்ரு நான் உன்ன பாத்த பின்னே அத ரிசைன் பண்ணேனே பெண் : காதல் என்னும் ட்விட்டர்ல ஆள் இல்லாம காத்திருந்தேன் உன்ன பாலோவ் பண்ணதால டிரெண்டிங் ஆனேனே ஆண் : சிங்கிள் இப்போ சிக்ஸர் ஆனேனே…..ஏ… ஆண் : வெண்ணிலவில் லேண்டு வாங்கி மச்சிவீடு கட்டிக்கிட்டு இன்டர்நெட் இல்லாமலே வாழலாம் பெண் : பத்து புள்ள பெத்துகிட்டு தமிழ் மட்டும் சொல்லி தந்து தெனம் தெனம் கதை சொல்ல கேக்கலாமா ஆண் : ஜில்லு ஜில்லு ஜிகர்தண்டா கிட்ட வாடி உன்ன அப்படியே சாப்புடுவேன் கெத்தாதாண்டி பெண் : கேடி இல்ல கில்லாடிதான் தெரியும் மாமா நீ கேட்காமலே தந்திடுவேன் என்ன ஆமா ஆண் : பட்டுன்னுதான் தொட்டதுமே காலி ஆனேன் பெண் : நீ கொஞ்சுனதும் நெஞ்சுக்குள்ளே ஜாலி ஆனேன்.......! --- காந்தக் கண்ணழகி ---
  5. பழமையும் புதுமையும் Chinnaiyan K · · *_முத்துக்கள் மூன்று..._* 1. யாருக்காகவும் காத்திருக்காத மூன்று ★நேரம் ★இறப்பு ★வாடிக்கையாளர்கள் 2.சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும் மூன்று ★ நகை ★ பணம் ★ சொத்து 3. யாராலும் திருட முடியாத மூன்று ★ புத்தி ★ கல்வி ★ நற்பண்புகள் 4. அவசியம் நினைவு வைக்க மூன்று ★ உண்மை ★ கடமை ★ இறப்பு 5. வெளிவந்து திரும்பாத மூன்று ★ வில்லிலிருந்து அம்பு ★ வாயிலிருந்து சொல் ★ உடலிலிருந்து உயிர் 6. வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் மூன்று ★ தாய் ★ தந்தை ★ இளமை
  6. இந்தப் படத்துக்கு மொழிபெயர்ப்பு அவசியமா கோப்பால் .......! 😂
  7. வானொலி மற்றும் சினிமாவின் பொற்கால நினைவலைகள்... · Rejoindre Sukumar Shan · · காண கிடைக்காத அரிய புகைப்படம் ! இலங்கை வானொலி அறிவிப்பாளர் எஸ். பி. மயில்வாகனம் அவர்களின் கொழும்பு வெள்ளவத்தை இலக்கம் 58 விவேகானந்தா ரோடு இல்லத்துக்கு நடிகர் சந்திரபாபுவும் நடிகர் ஸ்ரீ ராமும் வருகைதந்தபோது எடுத்த புகைப்படம் . சந்திரபாபு மடியில் மயில்வாகனம் அவர்களின் மகளும் மயில்வாகனம் மடியில் அவரது மகனும் அமர்ந்துள்ளார்கள் . பின்னால் வெள்ளை புடவையுடன் காட்சியளிப்பவர் . திருமதி .செந்திமணி மயில்வாகனம் . புகைப்பட உதவி - யசோதா மயில்வாகனம் அவர்கள்.....!
  8. மனைவி என்பவள் உயிர் · நான் படித்ததில் பிடித்தது மற்றும் ரசித்தது... என் மனைவி )... ஆழ்ந்த உறக்கத்தில் அமைதியாக உறங்கும் என் மனைவியை சற்று அமைதியாகக் கூர்ந்துப் பார்க்கிறேன்... இத்தனை வருட வாழ்வில் அவள் ஆசைகள் என்ன என்பதைக் கூட அறியாத ஆண்மகனாக நான்... இருப்பதை நினைத்து முதன் முதலாக என்னையே வெறுக்கிறேன்... என் கையைப் பற்றி என்னோடு வாழ வருகையில் அவள் ஒரு வளர்ந்தக் குழந்தையாகவே எனக்குத் தெரிந்தாள்.. விட்டு வைத்தேனா? இளமையின் மிடுக்கில் தடுக்கி விழுந்த இரவுகளில் முனகல்களோடு என்னை அணைத்துக் கொள்வாள்... வாலிபத்தின் திமிரில் அவளின் வலிகளை உணர்ந்ததில்லை நான்... எப்பொழுது பசித்தாலும் உணவு தயார் பண்ணி என்னை உபசரித்து மகிழும் அவளின் பசி அறியாமலே புசித்திருக்கிறேன்... கோபங்கள் எழும் போதெல்லாம் வார்த்தைகளால் வைதிருக்கிறேன்... திருப்பி ஒரு நாளேனும் என்னைத் திட்டியதில்லை அவள்... திட்டி இருந்தால் திருந்தியிருப்பேனோ.. ஏனடி எல்லா வலிகளையும் உனக்குள்ளேயே புதைத்துக் கொண்டாய்... மெதுவாக அவள் கைகளை எடுத்து என் கண்ணில் ஒற்றிக் கொள்கிறேன்.. கரடு முரடான அவள் கைகளின் கீறலில் என் கண்களில் நீர் வலிக்கிறது கைப்பட்டதால் அல்ல.. . மென்மையான அவள் கைகள் இன்று கரடு முரடான காரணம் நினைத்து... எங்கே இருந்தேன் இத்தனை நாளும் என்னருகிலேயே இருந்தவளை இத்தனை நாளும் எப்படித் தொலைத்திருத்தேன்... பாவியம்மா நான் பருவ வயதுகளில் உன்னைத் தூங்க விடவில்லை நான் பின் நான் பெற்றதுகளும் உன் நாத்தனார்களும்... செல்வமே அத்தனைச் சொத்துக்கள் சேர்த்த எனக்கு... எனக்குக் கிடைத்த சொத்து உன்னைப் பாதுகாக்க மட்டும் எப்படி மறந்தேன்... இத்தனை வருடமும் உன் நிழல் கொண்டு குடும்பம் காத்தவள் நீ நாங்கள் அத்தனை பேரிருந்தும் உனக்குள் அனாதைப் போல வாழ்ந்தவள் நீ எப்படி மறந்தேன் உன்னை... நானில்லாத போதும் நீ தைரியமாக கடந்து விடுவாய் உன் இறுதி நாட்களை நீயில்லாமல் என் வாழ்க்கை நினைத்தும் பார்க்க முடியவில்லை என்னால்... தீர்க்கச் சுமங்கலியாகி நீ முந்திக் கொண்டால் ஊரே போற்றும் உன்னை... உன்னைத் தொலைத்து விட்டு நானிருந்தாலோ ஏறெடுத்தும் பாரார் என்னை நீ இருக்கும் வரையில் தான் என் திமிரெல்லாம்... நான் சத்தியமாகச் சொல்கிறேன் நீ மட்டும் போதுமடி எனக்கு உன்னை விட எதுவும் என்னை ஈர்க்காது இனிமேல்.. சாகும் வரையில் உன் காலடி போதும் உன் மார்போடு என்னை அணைத்து ஒரு தாலாட்டு போதும்... கதையின் நீதி :- வெறும் உடலால் இணைபவர்கள் கணவன் மனைவி அல்ல... ஆத்மார்த்தமாக அன்பான உள்ளத்தால் இணைபவர்கள் தான் உண்மையான கணவன் மனைவி √ @everyone
  9. என்ன மான் பொண்ணு மான் சும்மா சும்மா பார்க்காதே......! mgr பெண் வேடத்தில்.......! 😍
  10. வணக்கம் வாத்தியார்.......! பெண் : நான் என்னை காணாமல் தினம் உன்னை தேடினேன் என் கண்ணீர் துளியில் நமக்காக ஒரு மாலை சூடினேன் பெண் : விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே உயிரிலே நினைவுகள் தழும்புதே பெண் : இமைகளிலே கனவுகளை விதைத்தேனே ரகசியமாய் நீரூற்றி வளர்த்தேனே பெண் : இன்று வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன் உன் கையோடு கை சேரத்தான் பெண் : உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை இனி என் காதல் தொலை தூரம்தான் பெண் : நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே பெண் : உள்ளிருக்கும் இதயத்துக்கு எனை புரியும் யாருக்குத்‌தான் நம் காதல் விடை தெரியும் பெண் : காதல் சிறகானது இன்று சருகானது என் உள் நெஞ்சம் உடைகின்றது பெண் : உன் பாதை எது என் பயணம் அது பனி திரை ஒன்று மறைக்கின்றது பெண் : ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா விதி கண்ணாமூச்சி விளையாட நான் காதல் பொம்மையா......! --- விழியிலே என் விழியிலே கனவுகள் ---
  11. புன்னகையில் பூ பூக்கும் திருமகளே.......! 😍
  12. வணக்கம் வாத்தியார்.......! பாவாட கட்டையில பார்த்தேனே மச்சம் ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம் நோகாம பார்த்துப்புட்ட வேறென்ன மிச்சம் கல்யாண கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம் அச்சு வெல்ல பேச்சுல ஆழ தூக்குற கொஞ்ச நேரம் பாரு நா கூலி கேக்குற துள்ளி போகும் துள்ளி மான மல்லு வேட்டி இழுக்குது மாமன் பேசும் பேச்சு கேட்டு வேப்பங்குச்சி இனிக்குது பூஜைக்கேத்த பூவிது நேத்து தானே பூத்தது பூத்தது யார் அத பார்த்தது ஊரெல்லாம் உன்னை பத்தி வெறும் வாய மெல்ல தோதாக யாரும் இல்ல தூது சொல்ல வாய் வார்த்த பொம்பளைக்கு போதாது புள்ள கண் ஜாட போல ஒரு பாஷ இல்ல சுத்தி சுத்தி வந்து நீ சோப்பு போடுற கொட்டி போன குடும்பிக்கு சீப்பதேடுற என்ன பார்த்து என்ன கேட்ட ஏட்ட ஏண்டி மாத்துற கால நேரம் கூடி போச்சு மாலை வந்து மாத்துற.......! --- பூஜைக்கேத்த பூவிது ---
  13. Vijay est à பசித்தோருக்கு உணவளிக்கும் இன்பம் உணவகம். · முல்லா நஸ்ருதீனுக்கு ஒரு அழகிய வீடு இருந்தது. ஆனால் அதில் வாழ்ந்து அவருக்கு அலுப்புத் தட்டி விட்டது. அவ்வீடு எவ்வளவோ அழகாக இருந்தும், அந்த வீட்டிலேயே நெடுநாட்கள் வாழ்ந்து விட்டதால், அவருக்கு அலுப்புத் தட்டி விட்டது. அந்த வீட்டில் ஒரு பெரிய தோட்டம் இருந்தது. ஒரு அழகான நீச்சல் குளம் இருந்தது. அப்படி இருந்தும் அலுப்புத் தட்டி விட்டது. அவர் ஒரு வீட்டுத் தரகரைக் கூப்பிட்டு, “வீட்டை விற்று விட விரும்புகிறேன். இதில் வாழ்ந்து சலித்துவிட்டது. இந்த வீடு இப்பொழுது எனக்குப் பிடிக்கவில்லை. உடனே விற்க விரும்புகிறேன்' என்று சொன்னார். அடுத்த நாள் செய்தித்தாள்களில் அந்த வீட்டுத் தரகர் அவ்வீட்டைப் பற்றி மிக அழகான வீடு விற்பனைக்கு இருப்பதாக விளம்பரம் கொடுத்து இருந்தார். முல்லா நஸ்ருதீன் செய்தித்தாள்களில் இந்த விளம்பரத்தைப் பார்த்து மீண்டும் மீண்டும் படித்தார். பிறகு அவர் வீட்டுத்தாகருக்கு தொலைபேசியில் சொன்னார் "என் வீட்டை விற்க வேண்டாம். உங்கள் விளம்பரம் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. இம்மாதிரி வீட்டுக்குத்தான் நான் நெடு நாட்களாக ஏங்கிக்கொண்டிருந்தேன். என்னுடைய வீட்டில் இவ்வளவு அழகிய விஷயங்கள் இருப்பதை உங்களுடைய விளம்பரம் பார்த்து அறிந்து கொண்டேன். நான் ஏங்கிக் கொண்டிருந்த அதே வீட்டில்தான் நான் இருந்து கொண்டிருக்கிறேன் என்பதை உங்கள் விளம்பரம் என்னை திருப்திப்படுத்தி விட்டது என்றார். இருப்பதில் திருப்தி அடையாதவர்கள் எதிலுமே திருப்தி அடைய முடியாது. மனம் எப்பொழுதும் ஒன்றிலிருந்து ஒன்றிற்கு தாவிக்கொண்டே இருக்கிறது. கார்,வீடு, நண்பன், காதலி என ஓடிக்கொண்டே இருக்கிறது. அது கிடைத்தவுடன் அடுத்ததில் தாவி விடுகிறது. கிடைத்ததில் திருப்தி அடைவதில்லை. மனம் என்றாலே ஓட்டம் தான். அது ஓடும் திசையில் நீங்கள் ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள். இதனால் மிஞ்சப் போவது எதுவும் இல்லை. களைப்பை தவிர.......! __ஓஷோ......!
  14. கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன்......! 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.