Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார்..........! ஆண் : சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ மை விழி ஜாடைகள் முல்லைப்பூ மணக்கும் சந்தனப்பூ ஆண் : சித்திர மேனி தாழம்பூ சேலை அணியும் ஜாதிப்பூ சிற்றிடை மீது வாழைப்பூ ஜொலிக்கும் செண்பகப்பூ ஆண் : சித்திரை மாத நிலவொளி அவள் சில்லென தீண்டும் பனித்துளி கொஞ்சிடும் பாத கொலுசுகள் அவை கொட்டிடும் காதல் முரசுகள் ஆண் : பழத்தைப் போல இருப்பவள் வெல்லப் பாகைப் போல இனிப்பவள் சின்ன மை விழி மெல்ல திறப்பவள் அதில் மன்மத ராகம் படிப்பவள் ஆண் : உச்சியில் வாசனைப் பூமுடித்து உலவும் அழகு பூந்தோட்டம் மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம் ஆண் : சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ மை விழி ஜாடைகள் முல்லைப்பூ மணக்கும் சந்தனப்பூ ஆண் : சித்திர மேனி தாழம்பூ சேலை அணியும் ஜாதிப்பூ சிற்றிடை மீது வாழைப்பூ ஜொலிக்கும் செண்பகப்பூ.......! --- பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ ---
  2. Raja K Welder dpoStrsnoeul90 3g51afg5858at,lf1flmuo8891:mhû4i0 m1a2333025h · #பந்த_பாசம் இந்த மாசம் தாத்தா நம்ம வீட்டுக்கு வரலையாப்பா?’ ஆசையோடு கேட்டான் மகன்.. . “அப்பா அழைக்கப் போகாட்டாலும் உங்க பெரியப்பா தாத்தாவை இங்கே கொண்டு வந்து விட்ருவாருடா. கவலைப்படாதே!’ குதர்க்கமாய் பதில் சொன்னாள், என் மனைவி... . அப்போது என் அலைபேசி மணி ஒலித்தது. “எடுங்க உங்க அண்ணனாய்த்தான் இருக்கும்! ‘ மனைவியின் யூகம் சரிதான். அண்ணன்தான் அழைத்தார்... . “வணக்கம்ண்ணே, சொல்லுங்க’ என்றேன். “என்னடா, அப்பாவை அழைச்சிட்டுப் போகலையா?’ அண்ணன் கேட்டார். அவரைச் சொல்லியும் குற்றமில்லை. அண்ணி தொந்தரவு செய்திருப்பாள்... . “கொஞ்சம் வேலையாப் போய்டுச்சிண்ணே… இன்னும் ஒரு மணி நேரத்துல வந்திடுறேன்’ இணைப்பை துண்டித்தேன். புறப்பட ஆயத்தமானேன்... . “அப்பா, எனக்கொரு சந்தேகம்’ என்றான் மகன். . “என்னடா சந்தேகம்?’ “தாத்தாவுக்கு நீ, பெரியப்பான்னு ரெண்டு பிள்ளைங்க… தாத்தாவை மாறி மாறி வச்சுக்கிறீங்க… உனக்கு நான் ஒரே பிள்ளை உனக்கு வயசாய்ட்டா ஒரு மாசம் நான் வச்சுக்குவேன்…. அடுத்த மாசம் நீ எங்கே போவே...?’ . என்னை யாரோ பிடரியில் ஓங்கி அறைந்தது போல வலித்தது. மனைவியை பார்த்தேன்.. அவளும் தலைகுனிந்திருந்தாள். அவளுக்கும் வலித்திருக்க வேண்டும்......!
  3. Variety of images · Rejoindre Anu Anish · · ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை நேரம் நடைபயிற்சி போனாங்க. ஒரு ஆத்தங்கரை ஒரமா போயிட்டு இருந்தாங்க. அப்போ அங்கே ஒரு கொடியில வெள்ளரிக்காய் காய்ச்சு தொங்குவதை பார்த்த ராஜா... "மந்திரி அந்த வெள்ளரிக்காய பறிச்சுட்டு வா சாப்பிடலாம்"ன்னு சொன்னார். *மந்திரி பறிக்க போனார். அங்கே உக்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான். ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அது தின்னா வாந்தி தான் வரும்.* *ராஜா சொன்னார். யோவ் மந்திரி.!! அத பறிச்சு சாப்பிடு. வாந்தி வருதான்னு பாக்கலாம்.* *வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டார். உடனே மந்திரிக்கு குமட்டிக்கிட்டு ஒரே வாந்தி.* *ராஜா கேட்டார். யோவ்.!! கபோதி..!! இதுக்கு என்ன தீர்வு.? ன்னு.* *அந்த குருடன் சொன்னான். அது பக்கத்துல ஒரு கை மாதிரி பச்சை இலை இருக்கும். அத கையில கசக்கி மந்திரி வாயில விட்டா வாந்தி நிற்கும்ன்னு.* *ராஜாவும் அப்படியே பண்ண... மந்திரிக்கு வாந்தி நின்னு போச்சு. மந்திரிக்கு போன உசுரு திரும்பி வந்தது.* *ராஜா குருடனை பார்த்து கேட்டார். உனக்கு தான் கண் தெரியாதே.? எப்படி சரியா தீர்வு சொன்னாய்.? குருடன் சொன்னான். ராஜா..!! இந்த நாட்ல எங்கேயும் பஞ்சம் பசி பட்டினி. அப்படி இருக்கும் போது எவனாவது வெள்ளரி பிஞ்ச விட்டு வச்சிருப்பானா.? எப்பவும் இயற்கை ஒரு நோய் கொடுக்கற காய கொடுத்தா இறைவன் பக்கத்துலயே ஒரு மாற்று மருந்து வெச்சிடுவார்.* *ராஜாவுக்கு சந்தோஷம்.* *இந்தா ஒரு டோக்கன். என் அரண்மனையில கிழக்கு வாசலுக்கு போ. பட்டை சாதம் கொடுப்பாங்க. சாப்பிட்டு ஜாலி யா இரு. சொல்லிவிட்டு ராஜா போய்ட்டார்.* *கொஞ்ச நாள் கழித்து ஒரு வெளியூர் வியாபாரி ராஜா கிட்ட வந்தான். ராஜா என்கிட்ட வைரம் நிறைய இருக்கிறது. வாங்குறீங்களா ன்னு கேட்டான்.* *இது ஒரிஜினலா போலியா ன்னு எப்படி தெரிஞ்சுக்கறதுன்னு ராஜாவுக்கு குழப்பம். மந்திரிய கூப்பிட்டார்.* *ஏற்கனவே ஒரு தடவை வாந்தி எடுத்த அனுபவம் இருந்ததால...* *வைரத்தை முழுங்கித்தொலைக்க சொன்னா என்ன பண்றதுன்னு பயந்துட்டு தெரியாதுன்னுட்டார்.* *ராஜா சொன்னார். மந்திரி.!! போய் அந்த கபோதிய கூட்டிட்டு வா. அவன்தான் காரண காரியத்தோட சரியாக சொல்லுவான்.* *மந்திரி போய் அந்த குருடனை கூட்டிட்டு வந்தார். ராஜா சொன்னார். டேய் இது ஒரிஜினல் வைரமா.? போலி வைரமா.? இல்லன்னா ரெண்டும் கலந்து இருக்கா ன்னு பார்த்து சொல்லு.* *அந்த குருடன் அந்த மொத்த வைரத்தையும் எடுத்து மத்தியான வெயில்ல கொண்டு போய் வெச்சான். கொஞ்ச நேரம் கழித்து அதை கையில எடுத்து பிரிச்சு.... ராஜா இதெல்லாம் வைரம். மற்றது எல்லாம் கண்ணாடின்னு பிரிச்சு கொடுத்துட்டான்.* *வியாபாரியும் எதோ தெரியாம நடந்துடுச்சு ன்னு சொல்லி எல்லா வைரத்தையும் இனாமா கொடுத்துட்டு நழுவிட்டான்.* *ராஜாவுக்கு ஆச்சர்யம்.* *எப்படிப்பா கண்டு பிடிச்ச.? விவரமா சொல்லு.?* *குருடன் சொன்னான்.* *ராஜா.!! வெயில்ல வைரம் சூடாகாது. ஆனா கண்ணாடி சூடாகும். அதனால சூடானது எல்லாம் கண்ணாடின்னும் சூடு ஆகாதது எல்லாம் வைரம்ன்னும் பிரிச்சேன்.* *ராஜா சந்தோஷமா பாக்கெட்ல கைய விட்டு ஓரு டோக்கன் எடுத்து குருடன் கிட்ட குடுத்து போடா மேற்கு வாசலுக்கு. டோக்கன குடுத்து பட்டை சாதம் வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இருன்னு சொல்லி அனுப்பி வச்சார்.* *இப்படியே கொஞ்ச நாள் போச்சு. ராஜா தன் மகனுக்கு கல்யாணம் பண்ண வரன் தேட ஆரம்பிச்சார். பக்கத்து ஊர்ல இருந்து எல்லாம் இளவரசி கொடுக்க தயாராக இருந்தாங்க. ராஜாவுக்கு குழப்பம்.* *யாரை தேர்ந்து எடுப்பதுன்னு. மந்திரிகிட்ட கேட்கிறார். எல்லா பொண்ணுமே நல்லா இருக்குன்னு பயந்து கிட்டே மந்திரி சொல்றார்.* *ராஜா பார்த்தார்.* *கூப்புடுங்கடா அந்த கபோதிய.* *குருடன் வந்தான்.* *ராஜா குருடன் கிட்ட சொன்னார். என் மகனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பார்க்குறேன். எந்த ராஜாவோட குமாரி சரியா இருக்கும்ன்னு காரண காரியத்தோட தெளிவா சொல்லு.* *குருடன் சொன்னான்.* *ராஜா..!! அடுத்த நாட்டை விட்டுட்டு அதுக்கு அடுத்த நாட்டு ராஜாவோட பொண்ண பாருங்கன்னான். அந்த ராஜா உங்க சம்பந்தி ஆயிட்டா பக்கத்து நாட்டு ராஜா உங்க ரெண்டு பேருக்கும் நடுவில இருப்பான். அப்போ எல்லை பிரச்சினை வராது. பொண்ண கொடுத்ததால அந்த இடைப்பட்ட பகுதில பிரச்சினை வராம பார்த்துப்பான்.* *ராஜாவுக்கு ஒரே குஷி.* *சபாஷ்.!! இந்தா டோக்கன். அரண்மனையின் வடக்கு வாசலுக்கு போடா. பட்டை சாதம் குடுப்பாங்க. வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு அப்படின்னார்.* *குருடனும் போய்ட்டான்.* *கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள் ராஜா அந்த குருடனை தன்னோட அந்தரங்க ஆலோசனை அறைக்கு வர சொன்னார்.* *டேய்.!!* *நான் ஒன்னு கேட்பேன். சரியா காரண காரியதோட சொல்லனும்.* அப்படின்னார். குருடனும் சரின்னான். இந்த ஊர்ல எல்லோரும் என்னைய *பிச்சைகாரனுக்கு பிறந்த பய அப்படின்னு சொல்றாங்க. இதுக்கு நீ என்ன சொல்ற.? சரியா சொல்லனும் என்றார்.* *குருடன் அமைதியா இருந்தான்.* *பதிலே பேசல.* *ராஜா திரும்ப கேட்டார்.* *குருடன் அமைதியா சொன்னான்.* *ராஜா நீங்க திரும்ப திரும்ப கேட்கறதால சொல்றேன்.* *நெசமா நீங்க பிச்சை காரனுக்கு பிறந்தவன் தான். அதுல சந்தேகமே வேணாம் அப்படின்னான்.* *ராஜாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. ரொம்ப வருத்தம். ஏன்டா என்னய பார்த்தா இப்படி கணிச்சே..?? ன்னு வருத்தமா கேட்டார்.* *ராஜா...* *முதல்ல குமட்டி காய பத்தி சொன்னேன். நீங்க சந்தோஷம் ஆயிட்டீங்க. ஆனா குடுத்தது பட்டை சாதத்துக்கு இலவச டோக்கன்.* *நிஜமான ராஜாவா இருந்தா கையில இருந்த மோதிரத்தை கழட்டி குடுத்து இருப்பார்.* *அப்புறம் கோடி கணக்குல வைரம் கிடைக்க வழி செஞ்சேன். நிஜமான ராஜாவா இருந்தா கழுத்துல இருந்த வைர மாலைய குடுத்து இருப்பார்.* *ஆனா நீங்க குடுத்தது பட்டை சாத டோக்கன்.* *மூன்றாவது... ஒரு ராஜ்ஜியமே உங்க கைகுள்ள வருவதற்கு வழி சொன்னேன். உண்மையான ராஜாவா இருந்தா நாலு கிராமத்த எழுதி குடுத்து இருப்பார்.* *நீங்க குடுத்தது வடக்கு வாசல் பட்டை சாத டோக்கன்.* *ஆக.... சோத்தை தாண்டி உங்க எண்ணம் போகல. உலகத்துலேயே பெரிய விஷயம் சோறுன்னு முடிவு பண்ணிட்டீங்க. இதுல இருந்து தெரியல.?* *நீங்க பிச்சைக்காரனுக்கு பிறந்தவன்னு.? ஏன்னா உங்க புத்தி டோக்கனோடவும் பட்டை சாதத்தோட வும் முடிஞ்சு போச்சு. அதுக்கு மேல போகல என்றான்.* *மன்னர் வெட்கி தலைகுனிந்தார்.* நீங்கள் யார் என்பதை உங்களிடம் இருக்கும் *பணமோ,சொத்தோ,* *பதவியோ* தீர்மானிப்பதில்லை.. *உங்கள் எண்ணங்களே தீர்மானிக்கின்றன......!
  4. Rajini Kannan nrodSspteo:i ,u60hiH5920rt1l6h081f5a8gl98gt7u5tlm5 4h74aeà78 · 70 வயது கிழவர் அவருக்கு தெரிந்த தொழிலில் உழைத்து சம்பாதிக்கிறார். இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? அரசாங்க வேலையில் உள்ளவர்களுக்குதான் 60 வயதில் ஓய்வு; உழைப்பவனுக்கு ஓய்வு கிடையாது. இந்த 70 வயசு கிழவரை நம்பிதான் 500 கோடி முதல் போட்டு படம் எடுக்கிறார்கள். அடுத்து 1000 கோடி முதல் போடவும் தயாரா இருக்கிறார்கள் இந்த 70 வயது கிழவர் நடக்கும் போது உள்ள வேகம் இப்போதுள்ள 30 வயசு இளைஞரிடம் இருக்குமா என்பதே சந்தேகம். இந்த 70 வயசு கிழவரைத்தான் ஜப்பான் நாட்டில் கோடிக் கணக்கான பேர் கொண்டாடுகிறார்கள். இந்த 70 வயசு கிழவரை பார்த்துதான் 6 வயது குழந்தை முதல் 60 வயது பெரியவர் வரை #சூப்பர்_ஸ்டார் என்று துள்ளி குதிச்சு கை தட்டி ரசிக்கிறார்கள். இந்த 70 வயசு கிழவரைத்தான் அடுத்த நாட்டு (மலேசிய) பிரதமரே வீடு தேடி வந்து பார்த்துட்டு போனார். இந்த 70 வயது கிழவரை உலகத்தில் தெரியாதவங்களே இல்லை. தமிழ் திரையுலகில் 45 வருடங்களாக தொடர்ந்து கதாநாயகனாக நடித்து திரையுலகில் #முதல்வனாக இருக்கும் ஒரே நடிகன் இந்த கிழவர். தமிழ் திரையுலக வரலாற்றில் படத்திற்கு 700 கோடி வசூல் செய்து தமிழ் திரையுலகை உலகமே திரும்பி பார்க்க வைத்த ஒரே நடிகன் இந்த கிழவர். இந்த வெற்றியை, வசூலை இப்போதுள்ள இளம் நடிகர்கள் மட்டுமல்ல, அவர்களின் வாரிசுகள் நடிக்க வந்தாலும் முறியடிக்க முடியாது. மூன்று மொழிகளில் 100 கோடிக்கு மேல் வசூல் கண்ட ஒரே இந்திய நடிகன் இந்த கிழவர். பொறாமைகள் இருக்கத்தானே செய்யும் வயிறெல்லாம் எறியத்தானே செய்யும். என்னடா இந்த குதிரை ஒடிக்கிட்டே இருக்குன்னு. அந்த கிழவர் பொதுவாழ்க்கைக்கு வந்து மக்களுக்கு எதிராக செயல்பட்டால் அப்போது விமர்சனம் செய்யுங்கள். தன் படத்தை ஓட வைப்பதற்காக அரசியலுக்கு வருகிறேன் என 30 வருடமாக ஏமாற்றுகிறார் என கூறுவதும் நீங்கள் தான்; அரசியலுக்கு வரமட்டார் என நன்றாக தெரிந்து வைத்துக் கொண்டு ஒரு நடிகனை அரசியல் எதிரியாக நினைப்பதும் நீங்கள் தான். வயது என்பது ஒரு எண் தான், திறமைக்கும் சாதனைக்கும் வயது தடை இல்லை. நம்மால் 70 வயதில் கம்பில்லாமல் நடக்க முடியுமா? 70 வயதில் தினம் 700 ரூபாய் சம்பாதிக்க முடியுமா? என்பது நமக்கு தெரியாது. படித்ததில் பிடித்தது......!
  5. Arunkumar V · இந்த மாதிரி ஏதாவது டிப்ஸ் வரும் போது நான் பொதுவாய் நம்புவதில்லை ஆனால் இது உண்மையாகவே செம்ம்ம.. சூப்பரா வேலை செய்யுது நான் கியாரண்ட்டி. விவரம் கேட்ட நண்பர்களின் கவனத்திற்காக பதிகிறேன். எல்லார் வீட்டிலயும் ஏதாவது டீ.வி சமையல் நிகழ்ச்சில அவங்க சமைக்கிறாங்கன்னு பார்த்து புது ரெசிபி - வத்தக் குழம்பு வைக்கிறேன், பால்கோவா கிண்டறேன், பதிர்பேனி செய்யுறேன்னு (தோள்பட்ட தெறிக்குது சார்) முக்கால்வாசி இந்த மாதிரி பாத்திரங்கள் ஆக்கி வைத்திருப்பார்கள். நான் செய்ததை நீங்களும் செய்யுங்க கண்டிப்பாகத் தீர்வு கிடைக்கும். இந்த சைஸ் பாத்திரத்திற்கு ரெண்டு பெரிய ஸ்பூன் வினீகர் , ஒரு பெரிய ஸ்பூன் பேகிங் சோடா - இரண்டையும் நல்ல கொதிக்கிற வெந்நீரில் போட்டு சாறில்லாத எலுமிச்சம்பழ மூடி ஒன்ன போட்டு இந்த பாத்திரத்த ஒரு நாற்பத்தைஞ்சு நிமிஷம் அந்த வெந்நீர்ல உள்ள போட்டு ஊற வைச்சிடுங்க. 45 நிமிஷத்துக்கு அப்புறம் ஒரு நல்ல கர கரன்னு இருக்கிற ப்ரெஷல தேய்ச்சிட்டு அடுப்புலயோ இல்ல மைக்ரோவேலயோ ஒரு ஒரு நிமிஷம் சூடு பண்ணி திரும்ப அதே வெந்நீர்க் கலவையில ஒரு மூடி க்ளோரின் ஊத்தி திரும்ப ஊற வைச்சிடுங்க. இப்ப போய் கைக் கால் மூஞ்சியெல்லாம் நல்லா கழுவி, நல்ல அழகா ட்ரெஸ் பண்ணிட்டு வந்து இந்த பாத்திரத்த பார்த்தீங்கன்னா... முன்னாடி கரி பிடிச்சி இருந்திச்சில்ல அதே மாதிரி தான் இருக்கும். ரொம்ப கர கரன்னு தேய்ச்சிருந்தா கொஞ்சமா கரி போயிருக்கும். அத அப்படியே ஒரு பைல கட்டி கைல எடுத்துட்டு பக்கத்துல இருக்கிற நாடார் பாத்திரக் கடைக்குப் போய் கேட்டீங்கன்னா இதே மாடல்ல புதுசு ஒன்னு தருவாங்க. வாங்கிட்டு திரும்ப வரும் போது மறக்காம இந்தப் பழைய பாத்திரத்த குப்பத் தொட்டியில போட்டிருங்க. சனியன் நம்மள பெண்டு நிமித்திட்டு ஷெல்புல இடத்த வேற அடைக்கும். இப்ப வீட்டுக்கு வந்து அந்த புதுப் பாத்திரத்த பார்த்தா பளபளன்னு புதுப் பாத்திரம் மாதிரியே இருக்கும். செஞ்சு பாருங்க கண்டிப்பா வொர்க் ஆகும் - நான் கியாரண்ட்டி. Happy Independence day !!!
  6. அழகுமயில் கோலமென பழகும் மகள் வருக.......! 😍
  7. வணக்கம் வாத்தியார்.......! என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ அவள் வான்மேகம் காணாத பால்நிலா இந்த பூலோகம் பாராத தேன்நிலா தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களோ பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி தரும் கூந்தலோ தொட்டாடும் மேடை பார்த்து வாடிப் போகும் வான்திரை முத்தாரம் மீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை வண்ணப் பூவின் வாசம் வந்து நேசம் பேசும் அவள் நான் பார்க்கத் தாங்காமல் நாணுவாள் புதுப் பூக்கோலம் தான் காலில் போடுவாள் அவள் வான்மேகம் காணாத பால்நிலா இந்த பூலோகம் பாராத தேன்நிலா கண்ணோரம் ஆயிரம் காதல்கணை வீசுவாள் முந்தானைச் சோலையில் தென்றலுடன் பேசுவாள் ஆகாயம் மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள் நீரோடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள் அதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள் இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்......! --- என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை ---
  8. சரி....சரி .....வருத்தம் மீளப்பெறப்பட்டு விட்டது இனி எல்லாம் சுகமே......! 😁
  9. இது நல்ல வேலை.......தண்ணீர் வெளியே சிந்தாது........! 👍
  10. நிர்மலா கணேஷ் · பசங்க வாசல்ல கிரிக்கெட் விளையாடும் போது வெளியே வரவே மாட்டேன். கார் கண்ணாடி ஒடைஞ்சிரும், ஜன்னல் கண்ணாடில பட்ரும், பல்புல பட்ரும், டைல்ஸ் ஒடைஞ்சிரும்னு டென்சன்ல சத்தம் போட்ருவேன். சொன்னாலும் கேக்காதுக. சோ உள்ளயே இருந்திருவேன். நேத்து என்னமோ சாவகாசமா வேடிக்க பாத்திட்டிருந்தேன். பெரியவன பாதில கூப்பிட்டு மேல்படிப்ப பத்தி விசாரிச்சேன். அடுத்த வருசம் அப்ராட் போக இருக்கான். அந்த படிப்புக்கு இந்தியால என்ன வேலை கிடைக்குனு கேட்டதுக்கு .... நா அங்க படிச்சிட்டு இங்க எதுக்கு வர்ரேன். அப்ராட்லயே செட்டில் ஆகலாம்னு இருக்கேன்னான். அடேய் அங்க செட்டில் ஆனா தம்பி கூட யார் கிரிக்கெட் விளையாடுவா? யார் கூட நா சண்ட போட? எனக்கு யார் சோறு போடுவான். ம்மா என்னைய நம்ப வேணா. என் கேரியர் படி தான் நான் போவனும். எனக்கு பொக்குனு ஆகிருச்சு. இந்த ஒரு வருசம் புள்ளைக்கு நல்லா ருசியா ஆக்கி போடனும்னு உடனே கிச்சன் போய்ட்டேன் #Dis இவனுக்கு பத்து வயசு இருக்கும் போது மாமியார் , வீட்டுக்கார் கூட எங்கயோ கோவிலுக்கு போனான். அங்க சும்மா இருக்காம கிளி ஜோசியம் பாத்தான். நீ உங்கம்மாக்கு சோறு போட மாட்டன்னு சொல்லிட்டாங்க. இவன் கோவில்லயே ஓ..... ன்னு அழுகை. வீட்டுக்கு வந்து என்னைய கட்டி அழுகுறான். அன்னிக்கு நைட் என்னைய உக்கார வச்சு சோறு போட்டு சாப்ட வச்சான் #தக்காளி இந்த வாழ்க்கை இருக்கே
  11. Compasion Charity LK pnorsedSto0tf02tah1 lif36m3uh885ci1773cl35l320f0m18u f7h1mmu · நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் : 1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம். 2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கு கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம். 3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம். 4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம். 5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம். 6. ஒட்டு மத்த இந்து சமுகத்தை கட்டுபடுத்தும் மதத் தலைவர் என்று யாரும் இல்லை. 7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு இந்துகளுக்கு. 8. இயற்கையை தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுமில்லை. மரமும் கடவுள் ,கல்லும் கடவுள், நீரும் கடவுள்(கங்கை), காற்றும் கடவுள் (வாயு), குரங்கும் கடவுள் அனுமன், நாயும் கடவுள் (பைரவர்) பன்றியும் கடவுள் (வராகம்). 9. நீயும் கடவுள். நானும் கடவுள் ...பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா. 10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பன்னிரு திருமுறைகள் , மண் ஆசையை ஒழிக்க இராமாயணம், பொன் ஆசையை ஒழிக்க மகா பாரதம், கடமையின் முக்கியத்துவத்த ை உணர்த்தும் பாகவதம், அரசியலுக்கு அர்த்த சாஸ்த்திரம், தாம்பத்தியத்திற்கு காம சாஸ்திரம், மருத்துவத்திற்கு சித்தா, ஆயுர்வேதம், கல்விக்கு வேதக் கணிதம், உடல் நன்மைக்கு யோகா சாஸ்த்திரம், கட்டுமானத்திற்கு வாஸ்து சாஸ்திரம், விண்ணியலுக்கு கோள் கணிதம். 11. வாளால் பரப்பப் படாத மதம். 12. எதையும் கொன்று உண்ணலாம் என்றுதொடங்கிய ஆதி மனித உணவு முறையிலிருந்து "கொல்லாமை ""புலால் மறுத்தல்", ஜீவ காருண்ய ஒழுக்கம், என்று மனிதனுக்கு பரிணாம வளர்ச்சி கொடுத்த மதம்.சைவம் என்ற வரையறை உள்ள மதம்........!
  12. நீ நினைத்தால் இந் நேரத்திலே ஏதேதோ நடக்கும்.......! 😍
  13. வணக்கம் வாத்தியார்.......! பெண் : வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும் அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் நானே நான் பெண் : அடை மழை வரும் அதில் நனைவோமே குளிா் காய்ச்சலோடு சிநேகம் ஒரு போா்வைக்குள் இரு தூக்கம் குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய் அது தொிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிா்பாா்க்கும் எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும் சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும் பெண் : தினம் நீ குளித்ததும் என்னை தேடி என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை திருடன் போல் பதுங்கியே திடீரென்று பின்னாலிருந்து என்னை நீ அணைப்பாயே அது கவிதை யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக்கூடத் தொியாதே காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே......! --- வசீகரா என் ---
  14. இதிலென்ன சந்தேகம்.....இது ஆந்தைதான்........தவறுக்கு வருந்துகிறேன் ஏராளன் .....! 😁
  15. காத்திருக்கும் கொக்கைப் பார்த்ததும் கழுகுக்கு மூக்கு வேர்த்திருக்கு......இனி கொக்குக்கு சங்குதான்......! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.