Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! தமிழ் பாடகி : ஸ்வேதா மோகன் பாடகா் : சோனு நிகம் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார் ஆண் : கண்ணோடு கண் சேரும் போது வார்த்தைகள் எங்கே போகும் ஆண் : கண்ணே உன் முன்னே வந்தால் என் நெஞ்சம் குழந்தை ஆகும் ஆண் : விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில் என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே பெண் : வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில் என் வழித்துணை நீ தான் என்று நிழல் சொன்னதே ஆண் : உன்னோடு வாழ்ந்திடதானே நான் வாழ்கிறேன் பெண் : உன் கையில் என்னை தந்து தோள் சாய்கிறேன் ஓ… தோள் சாய்கிறேன் ஆண் : இதுவரை என் இருதயம் இந்த உணர்வினில் தடுமாறவில்லை பெண் : முதல்முறை இந்த இளமையின் சுகம் உணர்கிறேன் நான் தூங்கவில்லை ஆண் : குடையோடு நான் போனேன் வழியினில் ஏனோ நனைகின்றேன் பெண் : கடிகாரம் இருந்தாலும் காலடி சத்தத்தில் மணி பார்த்தேன் ஆண் : என் தனிமைக்கு தனிமைகள் நீ வந்து கொடுத்தாய் ஆண் : சிரிப்பிலே உன் சிரிப்பிலே சிறை அடைக்கிறாய் நான் மீளவில்லை பெண் : உறவுகள் ஒன்று சேர்கையில் என்ன ஆகிறேன் என்று தெரியவில்லை ஆண் : உன்னோடு நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே பெண் : உரையாடல் தொடர்ந்தாலும் மௌனங்கள் கூட பிடிக்கிறதே ஆண் : என் கனவுக்கு கனவுகள் நீ வந்து கொடுத்தாய் ........! --- விழியில் உன் விழியில் ---
-
சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
- குட்டிக் கதைகள்.
RAVI MANY · பண்டைய சீனர்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்காக சீனப் பெருஞ்சுவரை நிர்மாணித்தனர். அதன் அதிகபட்ச உயரத்தின் காரணத்தினால் யாருமே அதன் மீது தாவி, ஏறி உள்நுழைய முடியாது என அவர்கள் உறுதியாக நம்பினர். ஆனால் சீனச் சுவர் நிர்மாணிக்கப்பட்டு முதல் நூற்றாண்டு காலப்பகுதிக்குள் மாத்திம் சீனா மூன்று போர்களை சந்தித்தது. அந்த மூன்று முறையும் சீனச் சுவரை ஊடறுத்துச் செல்ல வேண்டிய தேவை எதிரிகளின் காலாற்படைகளுக்கு ஏற்பட்டது. அப்போதெல்லாம் வாயிற்காவலுனுக்கு இலஞ்சம் கொடுத்துவிட்டு, வாயிற்கதவினூடாக அவர்கள் நுழைந்தனர். சுவரை கட்டியெழுப்புவதில் சோலியாக இருந்த சீனர்கள், வாயிற்காவலாளியை கட்டியெழுப்ப மறந்து விட்டனர். மனிதனை கட்டியெழுப்புவது வேறு அனைத்தையும் கட்டியெழுப்புதவற்கு முன்னர் செய்ய வேண்டிய விடயமாகும். இன்றைய மாணவர்களுக்கு சொல்ல வேண்டிய முக்கிய கருத்து இது. கீழைத்தேய அறிஞர் ஒருவர் சொல்கிறார். ஒரு சமூகத்தின் நாகரீகத்தை அழிக்க விரும்பினால் அங்கே மூன்று வழிமுறைகள் உள்ளன. 1- குடும்பங்களை சீர்குழைத்தல் 2- கல்வியை இல்லாமல் செய்தல் 3- முன்மாதிரிகளையும், மூலாதாரங்களையும் வீழ்த்துதல் குடும்பத்தை சீர்குழைக்க வேண்டுமா? தாயின் வகிபாகத்தை இல்லாமல் செய்யுங்கள். தாய் 'குடும்பத் தலைவி' என்று சொன்னால் அவள் வெட்கப்பட வேண்டும் என்ற அளவில் அவளை ஆக்கிவிடுங்கள். கல்வியை இல்லாமல் செய்ய வேண்டுமா? சமூகத்தில் ஆசிரியருக்கு உள்ள முக்கியத்துவத்தை வழங்காதீர்கள். அவர்களின் அந்தஸ்த்தை குறைத்து, மாணர்களும் அவர்களை பரிகஷிக்கும் அளவுக்கு செய்து விடுங்கள். முன்மாதிரிகளை வீழ்த்த வேண்டுமா? அறிஞர்களை குறைகாணுங்கள். அவர்கள் மீது சந்தேககங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களது மதிப்பை கொச்சைப்படுத்துங்கள். அவர்களை செவிமடுக்கவோ, பின்பற்றவோ யாரையும் விட்டுவிடாதீர்கள். உணர்வுபூர்வ தாய் இல்லாமலாகி, தூய்மையான ஆசிரியரும் இல்லாமலாகி, முன்மாதிரியும், மூலாதாரமும் வீழ்ச்சியுறும் போது பெறுமானங்களை அடிப்படையாகக் கொண்ட தலைமுறையை உருவாக்க யார் இருக்கப் போகிறார்கள்?! Voir la traduction- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Rajasekaran Kannamal · Suivre ntdrpSeoso,u0u991m0fahtt019tr5 :15mH 48àg76agl85f371emigi96f · ஒருமுறை மும்பையிலிருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் பணியில் இருந்த TTE (Train Ticket Examiner) இருக்கைக்கு அடியில் மறைந்திருந்த ஒரு பெண்ணைப் பிடித்தார். அவளுக்கு 13 அல்லது 14 வயது இருக்கும். TTE அந்த பெண்ணிடம் டிக்கெட்டை காண்பிக்கும்படி கூறினார். அந்தச் சிறுமி தன்னிடம் டிக்கெட் இல்லை என்று தயங்கித் தயங்கி பதிலளித்தாள். TTE உடனடியாக அந்த பெண்ணை ரயிலில் இருந்து இறங்குமாறு கூறினார். திடீரென்று, பின்னால் இருந்து ஒரு குரல், "அவளுக்கு நான் பணம் தருகிறேன்." தொழில் ரீதியாக கல்லூரி விரிவுரையாளராக இருந்த திருமதி உஷா பட்டாச்சார்யாவின் குரல் அது. திருமதி பட்டாச்சார்யா அந்தப் பெண்ணின் டிக்கெட்டைப் பணம் கொடுத்து, அவளை அருகில் உட்காரச் சொன்னார். அவள் பெயர் என்ன என்று கேட்டாள். "சித்ரா", அந்த பெண் பதிலளித்தாள். "நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?" "நான் செல்ல எங்கும் இல்லை," என்று பெண் கூறினார். தான் அனாதை என்பதை அப்பெண் அப்படி சொன்னாள். "அப்படியானால் என்னுடன் வா." திருமதி பட்டாச்சார்யா அவளிடம் கூறினார். பெங்களூரு சென்றடைந்த பிறகு, திருமதி பட்டாச்சார்யா சிறுமியை ஒரு NGO வசம் ஒப்படைத்தார். பின்னர் திருமதி பட்டாச்சார்யா டெல்லிக்கு மாறினார், பின்னர் சில ஆண்டுகளில் இருவரும் ஒருவருக்கொருவர் தொடர்புகளை இழந்தனர். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, திருமதி பட்டாச்சார்யா, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு கல்லூரியில் விரிவுரை ஆற்றுவதற்காக அழைக்கப்பட்டார். அவர் ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். முடித்த பிறகு பில்லைக் கேட்டார். ஆனால் அவருடைய பில் ஏற்கனவே செலுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. அவர் திரும்பிப் பார்த்தபோது, கணவனுடன் ஒரு பெண் தன்னைப் பார்த்து சிரித்தாள். திருமதி பட்டாச்சார்யா அந்த தம்பதியினரிடம், "எனக்கு ஏன் கட்டணம் செலுத்தினீர்கள்?" அதற்கு அந்த இளம்பெண், "மேடம், மும்பையிலிருந்து பெங்களூர் செல்லும் அந்த ரயில் பயணத்திற்கு நீங்கள் செலுத்திய கட்டணத்தை ஒப்பிடுகையில், நான் செலுத்திய பில் மிகவும் குறைவு. இரு பெண்களின் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தது. "ஐயோ சித்ரா... நீயா ..!!!" திருமதி பட்டாச்சார்யா மகிழ்ச்சியுடன் வியந்து கூறினார் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தபடி, "மேடம் என் பெயர் இப்போது சித்ரா இல்லை. நான் சுதா மூர்த்தி. மேலும் இவர் என் கணவர்... நாராயண மூர்த்தி" என்றாள். ஆச்சரியப்பட வேண்டாம். இன்ஃபோசிஸ் லிமிடெட் தலைவரான திருமதி சுதா மூர்த்தி மற்றும் பல மில்லியன் இன்ஃபோசிஸ் மென்பொருள் நிறுவனத்தை நிறுவிய திரு. நாராயண மூர்த்தி ஆகியோரின் உண்மைக் கதைதான இது. ஆம், மற்றவர்களுக்கு நீங்கள் செய்யும் சிறிய உதவி அவர்களின் முழு வாழ்க்கையையும் மாற்றிவிடும்! "துன்பத்தில் இருப்பவர்களுக்கு நல்லது செய்வதை தயவு செய்து தடுக்காதீர்கள், உதாரணமாக, அதைச் செய்ய உங்களுக்கு அதிகாரம் இருக்கும்போது". இந்தக் கதைக்குள் சற்று ஆழமாகச் சென்றால்... அக்ஷதா மூர்த்தி இந்த தம்பதியின் மகள் மற்றும் இப்போது இங்கிலாந்தின் பிரதமராக இருக்கும் ரிஷி சுனக்கின் மனைவி. Voir la traduction- யாழ்ப்பாணத்தில் முதல் உள்ளக விளையாட்டரங்க கட்டுமானம் ஆரம்பம்
தகவலுக்கு நன்றி ஏராளன் .........! 🙂- வீட்டை சுத்தம் செய்யும்போது கிடைத்த புத்தகம் ரூ. 82 கோடிக்கு ஏலம் போனது ஏன் தெரியுமா?
"குடுக்கிற தெய்வம் பரணைத் திறந்தும் குடுக்கும் " ........! 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இனித்திடும் இனிய தமிழே....!
Paranji Sankar · இரண்டு கேள்விகளைக் கேட்டு அவற்றிற்கு ஒரே பதிலைச் சொல்லுமாறு தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு. உதாரணமாக, "தேர் ஓடுவது எதனால்? தெருவை மெழுகுவது எதனால்?" என்ற இரண்டு கேள்விகளுக்குமான ஒரே பதில், "அச்சாணியால்" என்பது. தேர் ஓடுவது அச்சாணியால், தெருவை மெழுகுவது அச்-சாணியால் என்று பதிலில் விளக்கம் கிடைக்கும். "நீ வசிக்கும் ஊர் எது? உன் காலில் காயம் வந்தது எப்படி?" என்ற இரு கேள்விகளுக்கான ஒரே பதில் "செங்கல்பட்டு" என்பது. "சாம்பார் மணப்பதேன்? உடல் நலிவதேன்?" என்ற இரு வினாக்களுக்கு ஒரே பதில் "பெருங்-காயத்தால்" என்பது. இன்று ஆங்கில வழிக் கல்வி பெருகிவிட்ட காலம். முன்னர் பெரும்பாலானோர் தமிழ்வழிக் கல்வியில் பயின்றபோது இத்தகைய சொல் விளையாட்டுகள் குழந்தைகளின் தமிழறிவையும், சிந்தனைத் திறனையும் ஒரு சேர வளர்த்தன... இடைக்காலத்தில் வாழ்ந்த இளஞ்சூரியன், முதுசூரியன் என்ற இரட்டைப் புலவர்களில் ஒருவர் கண் பார்வையற்றவர், ஒருவர் கால் ஊனமானவர். கால் ஊனமானவரைக் கண்பார்வையற்றவர் தோளில் சுமந்து செல்வார். கால் ஊனமானவர் தோளில் இருந்தவாறே எப்படிச் செல்ல வேண்டும் என வழி சொல்வார். இவ்விரு புலவர்கள் எழுதிய வெண்பாக்கள் பலவும் இதேபோல் சொல் விளையாட்டு பாணியில் அமைந்தவை தான். ஒருவர் வெண்பாவின் இரண்டடியில் கேள்வி கேட்க மற்றவர் அடுத்த இரண்டடிகளில் பொருத்தமான பதில் சொல்வார். மதுரைத் தெப்பக் குளத்தில் கால் ஊனமானவர் படியில் அமர்ந்து பார்த்தவாறிருக்க, கண்பார்வை அற்றவர் தம் துணியை நீரில் அலசினார். அப்போது துணி குளத்தில் நழுவி எங்கோ சென்றுவிட்டது. அதைப் பார்த்த கால் ஊனமானவர்? "அப்பிலே தோய்த்து அடுத்தடுத்து நீர் அதனைத் தப்பினால் நம்மையது தப்பாதோ?" - எனக் கேள்வி கேட்டார். அதாவது, தண்ணீரில் துணியைப் போட்டு துவைக்கிற சாக்கில் அடிஅடியேன்று அடித்தால் அது (கோபித்துக் கொண்டு) நம்மை விட்டுப் போகாதா என்பது அவர் கேள்வியின் பொருள். அதற்கு பார்வையற்றவர் சொன்ன பதில் இதுதான்.. "எப்படியும் இக்கலிங்கம் போனால்என் ஏகலிங்க மாமதூரைச் சொக்கலிங்கம் உண்டே துணை" - என்று வெண்பாவை நிறைவு செய்தார். அதாவது கலிங்கம் என்ற சொல்லுக்குத் துணி என்று பொருள். இந்தத் துணி போனால் என்ன? மதுரைச் சொக்கலிங்க மாகிய தெய்வம் நம்மைக் காப்பாற்றும் என்பதே அவரது பதில். பார்வையற்றிருந்தாலும் அவரது தெய்வ நம்பிக்கையின் ஆழம் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. இப்போது முழு வெண்பாவையும் பார்க்கலாம்.... "அப்பிலே தோய்த்து அடுத்தடுத்து நீர் அதனைத்தப்பினால் நம்மையது தப்பாதோ? - எப்படியும் இக்கலிங்கம் போனால்என் ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை". எழுத்தாளர் சுஜாதா அவர்களிடம், திருக்குறளைப் பற்றி ஒருவர் கேள்வி கேட்டார். "திருக்குறள் 1330 குறள்கள் அல்லவா? திருக்குறளைத் திருக்குறள்கள் என்று தானே சொல்லவேண்டும்? அப்படியிருக்க பன்மையில் சொல்லாமல் ஏன் ஒருமையில் திருக்குறள் என்று சொல்கிறோம்?" என்று கேள்வி கேட்டார். அதற்கு சுஜாதா அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா? "திருக்குறள் '#கள்'ளை அனுமதிப்பதில்லை". Voir la traduction- இரசித்த.... புகைப்படங்கள்.
- இந்தியா எப்படி தோற்றது?
நன்றி பிரியன் ........! 🙂- இரத்தப் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த என் நண்பனின் கதை இது - கண்டிப்பாக வாசிக்கவும் - நிழலி
இதுபோன்று தானம் கொடுத்தவரும் பெறுபவரும் சந்திப்பது அரிதிலும் அரிது .......உங்கள் நண்பரின் வாழ்க்கையில் அது நடந்திருக்கு . ........! தகவலுக்கு நன்றி நிழலி .......!- ஏஐ சொல்வதை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் - சுந்தர் பிச்சை
தகவல்களுக்கு நன்றி .......!- சென்னைக்கு மாற்று அவயங்களை பொருத்த சென்றவர்கள் மகிழ்ச்சியுடன் நாடு திரும்பினர்
அவர்களுக்கு பாராட்டுக்கள் +நன்றிகள் ........!- களைத்த மனசு களிப்புற ......!
நடுவர்கள் அழகோ அழகு .......! 😍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......! Paranji Sankar · கவிஞர் கண்ணதாசன் நாத்தீகத்திலிருந்து மீண்டு, ஆன்மீகத்திற்கு மாறி, அர்த்தமுள்ள இந்துமதம் படைத்து பெறும் புகழ் பெற்றிருந்த நேரம். இதை பொறுக்க முடியாத சில நாத்தீக அன்பர்கள் ஒரு அதிகாலையில் கவிஞரை சந்தித்து "கடவுள் இருக்கிறானா? இருந்தால் எங்களுக்கு காட்டமுடியுமா?" என கிண்டலாக கேட்டனர். அதற்கு கவிஞரோ அடுத்த நொடியே எந்தக் குறிப்புமின்றி காட்டாற்று வெள்ளமென கரைபுரண்டோடிய கவிதை வடிவான பதிலடி கண்டு வந்தவர்கள் வாயடைத்து திரும்பினர். இறைவன் குறித்த கவிஞரின் அற்புதமான தத்துவம் இதோ.... பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப் புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன். ஒன்பது ஓட்டைக்குள்ளே ஒருதுளிக் காற்றை வைத்து சந்தையில் விற்று விட்டான் ஒருவன் -அவன் தடம் தெரிந்தால் அவன்தான் இறைவன். முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனைத் தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன். தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே தேங்காயைப் போலிருப்பான் ஒருவன் - அவனைத் தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன். வெள்ளருவிக் குள்ளிருந்து மேலிருந்து கீழ்விழுந்து உள்ளுயிரைச் சுத்தம் செய்வான் ஒருவன் - அவனை உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன். வானவெளிப் பட்டணத்தில் வட்டமதிச் சக்கரத்தில் ஞானரதம் ஓட்டிவரும் ஒருவன் - அவனை நாடிவிட்டால் அவன்தான் இறைவன். அஞ்சுமலர்க் காட்டுக்குள்ளே ஆசைமலர் பூத்திருந்தால் நெஞ்சமலர் நீக்கிவிடும் ஒருவன் - அவனை நினைத்துக் கொண்டால் அவன்தான் இறைவன். கற்றவர்க்குக் கண் கொடுப்பான் அற்றவர்க்குக் கை கொடுப்பான் பெற்றவரைப் பெற்றெடுத்த ஒருவன் - அவனை பின்தொடர்ந்தால் அவன்தான் இறைவன். பஞ்சுபடும் பாடுபடும் நெஞ்சுபடும் பாடறிந்து அஞ்சுதலைத் தீர்த்துவைப்பான் ஒருவன் - அவன்தான் ஆறுதலைத் தந்தருளும் இறைவன். கல்லிருக்கும் தேரைகண்டு கருவிருக்கும் பிள்ளை கண்டு உள்ளிருந்து ஊட்டி வைப்பான் ஒருவன் - அதை உண்டுகளிப் போர்க்கவனே இறைவன். முதலினுக்கு மேலிருப்பான் முடிவினுக்குக் கீழிருப்பான் உதவிக்கு ஓடிவரும் ஒருவன் - அவனை உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன். நெருப்பினில் சூடு வைத்தான் நீரினில் குளிர்ச்சி வைத்தான் கறுப்பிலும் வெண்மை வைத்தான் ஒருவன் - உள்ளம் கனிந்து கண்டால் அவன்தான் இறைவன். உள்ளத்தின் உள் விளங்கி உள்ளுக் குள்ளே அடங்கி உண்டென்று காட்டிவிட்டான் ஒருவன் - ஓர் உருவமில்லா அவன்தான் இறைவன். கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன் - அந்த ஏழையின் பேர் உலகில் இறைவன். சின்னஞ்சிறு சக்கரத்தில் ஜீவன்களைச் சுற்ற வைத்து தன்மை மறந்தே இருக்கும் ஒருவன் - அவனைத் தழுவிக் கொண்டால் அவன்தான் இறைவன். தான் பெரிய வீரனென்று தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும் நாள் குறித்துக் கூட்டிச்செல்லும் ஒருவன் - அவன்தான் நாடகத்தை ஆடவைத்த இறைவன். Voir la traduction- இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
- சிரிக்க மட்டும் வாங்க
Mr_kattupoochi · 🔘" >என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்! 🔗">பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்? ☑" படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே? 🔗" புக்கை மூடிடுவேன்! 🔘" காலில் என்ன காயம்? 🔗"செருப்பு கடித்து விட்டது 🔗" >பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா! ☑" குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்? 🔗" தெரியல, குளிக்கும் போதே துவட்ட முடியாதே! 🔘" இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..? 🔗"என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது, புட்டு புட்டுதான் சாப்பிடனும்! ☑"டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு 🔗" என்னிடம் சுத்தமா இல்ல 🔗">பரவாயில்லை கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்! 🔘" இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..? 🔗" >கிடைக்காது.. கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்! ☑"சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க? பையன்: பி.எ. சர்தார்: அடப்பாவி, படிச்சதே ரெண்டு எழுத்து அதையும் தலை கீழா படிச்சிருக்கே! 🔘" இன்டெர்வியு, சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா? 🔗" ஒ! நிறைய என் வீடு, கார் மற்றும் என்னுடைய மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்! ⭕" உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே ! வருத்த படாதே ! ஃபீல் பண்ணாதே ! உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள் ! ⭕" காதல் ஒரு மழை மாதிரி , நனையும் போது சந்தோஷம், நனைந்த பின்பு ஜலதோஷம்.. ⭕" மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது ?.. ஐந்து கேள்விப்பா.. நீ எத்தனை கேள்வி விட்டுட்டே ?.. முதல் மூணும், கடைசி இரண்டும்.. வெரிகுட் கீபிடப்... ⭕" டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்..இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு ??? ⭕" என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க ?.. டாக்டர் தான் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.. ⭕ நீங்க உடனடியா மீன் , ஆடு , கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்... அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர் ... ⭕" டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி பாக்குறா.. ”எந்த அளவுக்கு பாக்குறாங்க?”.. கரண்ட் கட்டானாலும் , டார்ச் அடிச்சி பாக்குறா.. ⭕" நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க.. அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை பத்திரமா இருக்கும்.. ⭕" ஒரு காப்பி எவ்வளவு சார் ?.. 5 ரூபாய்.. எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?... டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா !!!! ⭕" உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.... நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.. ⭕ தனியாக சிரிக்க வேண்டாம். குடும்பம் முழுவதும் கூடி இருந்து சிரித்து மகிழுங்கள் Voir la traduction- இரசித்த.... புகைப்படங்கள்.
- இனித்திடும் இனிய தமிழே....!
Prashantha Kumar · இளையராஜாவின் தன் மனைவியின் மேல் கொண்ட காதல்! அதற்கு என்ன என்று தானே கேட்கிறீர்கள்.. விஷயத்துக்கு வருவோம்... 1985ல் இதய கோவில் என்று ஒரு படம் மணிரத்னம் இயக்கத்தில் வந்தது. இசை இளையராஜா தான். மொத்தம் 7 பாடல்கள், எல்லா பாடல்களும் செம ஹிட். ஒவ்வொரு பாடலை எழுதியதும் ஒவ்வொரு கவிஞர்கள். இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் … இந்த பாடலை எழுதியது சாட்சாத் ராஜா தான். தன்னை ஒரு கவிஞராக அறிமுகப்படுத்தி கொண்டது இந்த பாடல் வழியே தான். அதற்கு பின் நம் ஆத்மாவை தொடும் பல பாடல்கள் அவர் இயற்றி இருக்கிறார். அதெல்லாம் சரி, இன்னும் திருமதி ராஜா பற்றி விஷயம் எதுவும் வரவேயில்லையே! இதோ வரேன்!! இந்த பாடலில் ஒவ்வொரு சரணத்திலும் தன மனைவி பெயர் வருமாறு எழுதியுள்ளார். திருமதி ஜீவா என்பது அவர் மனைவியின் பெயர். பல்லவியிலேயே வண்டியை செகண்ட் கியர் போட்டு தூக்கி விட்டார்: இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன் சரணத்தை கவனியுங்கள்: ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை! ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை!! எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது இப்பொழுது இரண்டாவது சரணத்துக்கு செல்வோம். காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால் ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும் ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றினாரம்மா! அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார் என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது? சும்மா எப்போ பார்த்தாலும் ரெக்கார்டிங்! ரெக்கார்டிங்ன்னு பிரசாத் ஸ்டூடியோவிலேயே இருந்தால், யுவன் ஷங்கர் ராஜாவுக்கு யார் ஹோம்வர்க் சொல்லி குடுக்கறதாம்? எல்லா பாடத்திலயும் முட்டை வாங்கிட்டு வரான்! என்று ஒரு வேளை திருமதி ஜீவா அவர்கள் ராஜாவை அன்போடு கேட்டிருக்கலாம். கடைசி சரணத்தில் அம்மணிக்கு நாசூக்கா ஒரு செய்தி வேறு சொல்லி விடுகிறார். பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா மீராவின் கண்ணன் மீராவிடமே எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே தனது முதல் பாடலை அவர் நினைத்திருந்தால் ஒரு ஜனரஞ்சக டூயட்டாகவோ, ஐட்டம் நம்பராகவோ எழுதி இருக்கலாம். தம் மனதில் இருக்கும் அன்பை, காதலை, பிரமத்தை, ப்யாரை எவ்வளவு பக்திபூர்வமாக சொல்லியிருக்கிறார் பாருங்கள். காரணம் திருமதி ஜீவா மிகுந்த தெய்வ நம்பிக்கை உடையவர்கள். பிரின்ஸ் ஜுவல்லரிகாரர்கள் வேண்டுமானால் "காதலை சொல்லிடும் வழி தங்கம்!" என்று World Gold Council tagline ஐ தாங்களே யோசித்து எழுதிய வரிகள் போல விளம்பரப்படுத்தி நம் தலையில் மிளகாய் அரைக்கலாம். மேதைகள் தமக்கே உரிய பாணியில், அசால்ட்டா சொல்லி விட்டு போய்க் கொண்டேயிருப்பார்கள். சூட்சம புத்தியுளளவர்களுக்கு புரியும். மற்றவர்கள் "என்னடே பாட்டு இது? என்று கொட்டாவி விட்டு கேண்டினில் பஜ்ஜி சாப்பிட்டு விட்டு வருவார்கள். ஆனால் தனது மனைவியின் மேல் உள்ள காதலை இளையராஜா பாடல் சொல்லிய விதம் ஒரு கவிஞரால் மட்டும் தான் முடியும் . நன்றி ரங்கா அவர்கள் முகநூல் தொகுப்பு:பிரசாந்த் Voir la traduction- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கட்டான கட்டழகு கண்ணா .........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! தமிழ் பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : அரியதாய் பெரியதாய் வணக்கத்திற்குரியதாய் எளியதாய் வலியதாய் என்றுமே இனியதாய் மலர்ந்ததாய் கனிந்ததாய் மனதிலே நிறைந்ததாய் வளர்ந்ததாய் வாழ்வதாய் வந்த தாய் எங்கள் தாய்……எங்கள் தாய்…… ஆண் : தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக ஆண் : கண் பட்ட இடம் பூ மலரும் பொன் மகளே வருக பொன் மகளே வருக…..நீ வருக ஆண் : கருணை என்ற தீபம் இரு கண்களில் ஏந்திய தாயே காலங்கள்தோறும் நெஞ்சில் வந்து கோவில் கொண்ட நீயே ஆண் : பூ முகத்தாமரை மேலே அருள் பொழிகின்ற தெய்வத்தாயே பூ முகத்தாமரை மேலே அருள் பொழிகின்ற தெய்வத்தாயே வானம் பார்த்த பூமிக்கெல்லாம் மாரியென்பது நீயே முத்து மாரியென்பது நீயே முத்து மாரியென்பது நீயே…. ஆண் : தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக ஆண் : இதயம் உன்னைப்பாடும் நல்ல எண்ணங்கள் மாலைகள் போடும் இன்னல் வந்த நேரம் உந்தன் புன்னகை ஆறுதல் கூறும் ஆண் : வாவென வேண்டிடும்போது எதிர் வருகின்ற செல்வம் நீயே நாலும் கொண்ட பெண்மைக்கெல்லாம் தலைவியாகிய தாயே ஒரு தலைவியாகிய தாயே…….. --- தொட்ட இடம் துலங்க வரும் ---- தன்னறம்
"தன்னறம் " நல்ல தலைப்பு + நல்ல அனுபவமான கதை . .......! வீதியில் நேராய் ஓடும் ஒரு பெரிய தேரை ஒரு சிறிய மரக்கட்டை தடம்மாற்றி திருப்பி விடுதல் போல் வாழ்க்கையும் சிறு சிறு நிகழ்வுகளால் தடம்மாறிப் போய் விடுகின்றது .......! முதுமை வரும்போது மனம் உற்சாகமாய் இருந்தாலும் உடல் அதிகம் ஓய்வை தேடுவதால் மனமும் தானாகவே அமைதியாகி விடுகின்றது . .....! சமீபத்தில் சில நிகழ்வுகள் வீடியோவில் பார்த்தேன் . ......! உசைன்போல்ட் ..... ஓட்டத்தில் பல சாதனைகள் செய்த மனிதர் . ....... இப்போது வாசல்படி ஏறவே சிரமப்படுகிறார் .....கொஞ்சம் கூடுதலாக ஓடி விட்டார் போல......! முகமதலி (கசியஸ்கிலே) எவ்வளவோ போட்டிகளில் எதிரிகளைப் பந்தாடியவர் ....... இப்போது பக்கத்தில் இருவர் அவர் விழுந்து விடாமல் பிடித்துக் கொண்டு வர நடந்து வருகிறார் . ........ கொஞ்சம் கூடுதலாக குத்து வாங்கியிருக்கிறார் போல .......! சில யதார்த்தங்களை நாம் ஏற்றுக்கொண்டுதான் வாழ்க்கையை கடந்து போகணும் . ......! - சிரிக்கலாம் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.