Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. Creativity கிரியேட்டிவிட்டி · Anbu Anbu ·deSoosnrptn2l0 110b2:m,he9hr7m1 7h778aecail1a5t00afg2v948om7 · குஞ்சுப் பறவை ஒன்று சோகமாய் இருந்தது. அதன் தாய்ப் பறவை, ‘‘ஏன் சோகமாய் இருக்கிறாய்’’ என்று கேட்டது. குஞ்சுப் பறவை, ‘‘எனக்கு பிறரிடம் எதையும் கேட்பதற்கே கூச்சமாக இருக்கிறது’’ என்றது. ‘‘தேவையில்லாத வெட்கம் உன் வாழ்க்கையை சிறப்பில்லாததாக ஆக்கிவிடும்’ என்று தாய் எச்சரித்தது. குஞ்சு அதைக் கேட்டு, ‘‘சும்மா பொன்மொழியாக சொல்வது எளிது. செய்து காட்டுவது கடினம்’’ என்றது. இதைக் கேட்ட தாய்ப்பறவை, தன் குஞ்சுப் பறவையை அழைத்துக் கொண்டு பறந்தது. ஏரிக்கரையோரம் சென்று பறந்தபடி, நீரின் அருகே எச்சமிட்டது. ஏரியில் ததும்பிய சிற்றலை, எச்சத்தை நீரில் கரைத்தது. தாய்ப்பறவை ஏரியை அழைத்து, ‘‘எனக்கு என் எச்சம் வேண்டும். கொடுத்து விடு’’ என்றது. ‘‘அது என்னுள் கரைந்து போய்விட்டது. அதைத் திருப்பிக் கொடுக்க முடியாது. அதற்கு பதிலாக ஏரிக்குள் இருக்கும் மீன் ஒன்றைத் தருகிறேன்’’ என்றது ஏரி. தாய்ப்பறவை அந்த மீனை எடுத்துக்கொண்டு பறந்தது. ஒரு வீட்டின் முன்னால் வைத்துவிட்டு கொஞ்ச நேரம் மறைந்திருந்தது. வீட்டில் இருந்தவர்கள் மீனை எடுத்துச் சென்ற சிறிது நேரம் கழித்து கதவைத் தட்டி, ‘‘என் மீன் எங்கே? எனக்கு அது வேண்டும்’’ என்றது. ‘‘அதைக் குழம்பு வைத்து சாப்பிட்டுவிட்டோம். அதற்கு பதிலாக நாங்களே தயாரித்த தரமான கயிறு தருகிறோம்’’ என்று கொடுத்தார்கள். தாயும் குஞ்சும் கயிறை எடுத்துக் கொண்டு பறந்தன. வழியில் ஒருவர் கிணற்றருகே கவலையுடன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தன. அவருடைய கிணற்றில் கயிறு இற்றுப் போய்விட்டதாம். ‘‘கயிறில்லாமல் நீர் இறைக்க முடியாது. நீர் இல்லாமல் போனால் என் வீட்டில் நடக்க இருக்கும் விழா நடக்காது’’ என்று புலம்பினார். ‘‘நான் கயிறைக் கொடுத்தால் நீங்கள் என்ன தருவீர்கள்?’’ என்று தாய் கேட்டது. ‘‘என்னிடம் இருக்கும் அரிய வகை விதை நெல் ஒரு படி தருகிறேன். அது அழிந்து விட்டதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அழியவில்லை. என்னிடம் விதையாக கொஞ்சம் இருக்கிறது’’ என்றார் அவர். தாயும் குஞ்சும் விதைநெல்லை சுமந்துகொண்டு வயலுக்கு வந்தன. அங்கே அந்நாட்டின் ராஜா விவசாயத்தை கண்காணித்துக் கொண்டிருந்தார். அவருக்கு விவசாயத்தில் அதிக ஆர்வம். அவர் அருகே விதை நெல்லைப் போட்டுவிட்டு தாயும் குஞ்சும் மறைந்தன. திரும்பி வந்தால் நெல் இல்லை. ராஜாவிடம் தாய் கேட்டது, ‘‘என் அரிய வகை விதை நெல் எங்கே?’’ ராஜா திடுக்கிட்டு, ‘‘அந்த அரிய வகை விதை நெல் யாருடையது என தெரியாது. நான் அதைப் பயிரிடச் சொல்லிவிட்டேன். அது உன்னுடையதா? அதற்கு பதிலாக நீ என்ன கேட்டாலும் செய்கிறேன்’’ என்றார். ராஜாவின் அரியணையில் ஒரு மணி நேரம் அமர்ந்து அரசாட்சி புரியும் உரிமையை தாய்ப்பறவை கேட்டது. ராஜாவும் ஒரு மணி நேரம் அதை ஆட்சி செய்ய வைத்தார். அதிகாரத்தைப் பெற்றதும் தாய்ப்பறவை, ‘‘எங்கள் பறவை இனங்களுக்கு தேவையான உணவை இனிமேல் ராஜாவே கொடுக்க வேண்டும்’’ என்றொரு ராஜ கட்டளை பிறப்பித்தது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குஞ்சுப் பறவை அசந்துவிட்டது. ஒன்றுக்குமே உதவாத எச்சத்தில் ஆரம்பித்து நாட்டை ஆளும் அதிகாரத்தைப் கைப்பற்றி, தங்களுக்கான உணவுக்கும் வழி செய்த அம்மாவின் செயல்திறன் பற்றி பெருமைப்பட்டு புகழ்ந்து சொன்னது. அதற்கு தாய்ப்பறவை, ‘‘நமக்கு இந்த உணவு வேண்டாம். ராஜாவிடம் சொல்லிவிடுவேன். நான் இதைச் செய்து காட்டியது உனக்கு புரிய வைக்கத்தான். ஒன்றுமே இல்லாத ஒன்றில் இருந்துகூட, கூச்சப்படாமல் கேட்கும் திறனால் பலவற்றை உருவாக்கிவிட முடியும். வெட்கப்படும் உயிரினங்களால் இவ்வுலகில் சிறப்பாக வாழ முடியாது. உனக்குத் தேவையானவற்றை கூச்சப்படாமல் உலகத்திடம் வாய்விட்டுக் கேள். கொடுப்பதும் கொடுக்காததும் அவர்கள் இஷ்டம். கேட்காமலேயே, ‘கொடுக்க மாட்டார்கள்’ என்று யூகம் செய்யாதே’’ என்றது. உழைப்போம் உயா்வோம்! படித்து பகிர்ந்தேன்!! Voir la traduction
  2. கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா .......! 😍
  3. வணக்கம் வாத்தியார் . .........! தமிழ் பாடகர்கள் : எஸ். என் சுரேந்தர் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : சின்ன பையன் சின்னபொண்ண காதலிச்சா ஒரு பாட்டு வரும் காதல் பாட்டு வரும் ஆண் : கன்னி பொண்ணு என்ன பார்த்து கண் அசைச்சா ஒரு காய்ச்சல் வரும் மன காய்ச்சல் வரும் பெண் : உன்ன தோளோடு தோள் சேர்த்து தினம் நான் பாடும் தேன் பாட்டு சின்னைய்யா என்னைய்யா இன்னும் என்ன வேணும் சொல்லைய்யா பெண் : எண்ணிரெண்டு வயதில் உன் கண்ணிரெண்டில் விழுந்தேன் ஆண் : முத்திருக்கும் கடலில் நான் முக்குளிச்சு எழுந்தேன் பெண் : வேலிகளை தாண்ட சொல்லும் வாலிபத்தின் வேகம்தான் ஆண் : வேறெதுக்கு பூத்ததிந்த பேரழகு தேகம்தான் பெண் : உன் முத்தமழையே இங்கு நித்தம் குளிக்கும் சின்ன சிற்பம் இந்த பட்டு கன்னம் கட்டி வெள்ளம் அல்லவா ஆண் : சின்ன சின்ன கவிதை என் கை எழுத துடிக்கும் பெண் : மெல்ல மெல்ல எழுது என் மெல்லிடையும் தவிக்கும் ஆண் : கன்னி மலர் கண்ணில் பட்டால் கற்பனைகள் பாயாதா பெண் : கற்பனைகள் பாயாவிட்டால் கன்னி மலர் காயாதா ஆண் : என் முல்லை வனமே மின்னும் முத்து வடமே உன்னை பக்கம் வந்து நிக்கும் இன்ப சொர்க்கம் என்று சொல்லவா .......! --- சின்ன பையன் ---
  4. தெய்வம் என்றால் அது தெய்வம் .....சிலையென்றால் வெறும் சிலைதான் உண்டென்றால் அது உண்டு .....இல்லை என்றால் அது இல்லை . .....! 🙏
  5. தமிழா தமிழா · லாபத்தை விட இரக்கம் - **மருத்துவ அற்புதங்கள் பெரும்பாலும் மில்லியன் டாலர் விலைக் குறிச்சொற்களுடன்** வரும் உலகில், **பெங்களூரைச் சேர்ந்த தொலைநோக்கு பார்வை கொண்ட **புற்றுநோய் நிபுணர்** டாக்டர் விஷால் ராவ்**, லாபத்தை விட இரக்கத்தைத் தேர்ந்தெடுத்து வாழ்க்கையை என்றென்றும் மாற்றினார். 👨‍⚕️" *தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குரல் பெட்டிகளை இழந்த பிறகு மீண்டும் பேச உதவும் ஒரு புரட்சிகரமான சாதனமான **ஆம் வாய்ஸ் புரோஸ்டெசிஸ்** ஐ அவர் கண்டுபிடித்தார். இறக்குமதி செய்யப்பட்ட சாதனங்களின் விலை **₹15,000 முதல் ₹30,000** வரை இருந்தாலும், டாக்டர் ராவின் பதிப்பின் விலை **₹50** மட்டுமே - ஆனால் பணத்தால் வாங்க முடியாததை மீட்டெடுக்கிறது: **கண்ணியம், நம்பிக்கை மற்றும் குரல்.** 🔊" சிலிகானால் தயாரிக்கப்பட்ட இந்த சிறிய சாதனம், மூச்சுக்குழாய் மற்றும் உணவுக் குழாய்க்கு இடையில் **ஒரு வழி வால்வாக** செயல்படுகிறது, இதனால் நோயாளிகள் மீண்டும் இயற்கையாகப் பேச முடியும். 🙌" இன்னும் ஊக்கமளிக்கும் வகையில் - டாக்டர் ராவ் மற்றும் அவரது இணை கண்டுபிடிப்பாளர் **காப்புரிமையை இந்திய அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினர்**, சுகாதாரத் திட்டங்களின் கீழ் தேவைப்படுபவர்களுக்கு இது **மலிவு விலையில் அல்லது இலவசமாக** இருப்பதை உறுதி செய்தனர். 🤝" லாபத்தால் இயக்கப்படும் ஒரு சகாப்தத்தில், மனிதகுலத்தால் இயக்கப்படும் **₹50 அதிசயத்தை** அவர் உருவாக்கினார் - உண்மையான கண்டுபிடிப்பு இதயத்திலிருந்து நேரடியாகப் பேசுகிறது என்பதை நிரூபிக்கிறது. 💙" #DrVishalRao #AumVoiceProsthesis #IndianGenius #HealthcareHero #Innovation #Inspiration #PrideOfIndia #fblifestyle Voir la traduction
  6. காமிலா காதி · ஒட்டகச்சிவிங்கியின் பிறப்பு வித்தியாசமானது. ஒட்டகச்சிவிங்கி நின்று கொண்டு குட்டிப் போடும் பழக்கமுடையது. சுமார் எட்டு அடி உயரத்தில் இருந்து குட்டியானது பூமியில் விழும்போதே பலமான அடிப்பட்டுக்கொண்டு தான் தன் வாழ்க்கையை துவக்குகிறது. குட்டி ஒட்டகச்சிவிங்கி தன் தாயின் கருவறையிலிருந்து வெளிவரும்போதே கிழே விழுந்து அடிபடுவதை யோசித்துப்பாருங்கள். கொடுமையான விஷயம். இதைவிட கொடுமையான விஷயம் அடுத்தது நடக்கும் . தாய் ஒட்டகச் சிவிங்கி தன் குட்டியின் கழுத்தை ஒரு சில நிமிடங்கள் மெதுவாக முத்தமிடும். நாவால் நக்கிவிடும். பின்பு தன் நீண்ட கால்களால் குட்டியை ஓங்கி உதைக்கும். குட்டியானது காற்றில் பறந்து சற்று தள்ளிப் போய் விழும். ஏற்கனவேவிழுந்து அடிபட்ட வலி கூட மாறாத நிலையில் அடுத்த அடி. தாயின் கருவறையிலிருந்து வெளிவரும் போது உடம்போடு ஒட்டியிருந்த ஈரம் கூட காயவில்லை. வலியோடு தடுமாறி எழுந்து நிற்க முயற்சி செய்யும். ஆனாலும் மீண்டும் தடுமாறி கீழே விழுந்து விடும். மீண்டும் தாய் உதைக்கும். குட்டி எழுந்து நிற்க முயற்சி செய்யும். ஆனால் மீண்டும் விழுந்து விடும். குட்டி சுயமாக சொந்த காலில் எழும்பி நிற்கும் வரை தாய் உதைத்துக் கொண்டே இருக்கும். காட்டில் உலவும் சிங்கம், புலி , ஓநாய் போன்ற விலங்குகளுக்கு ஒட்டகச் சிவிங்கியின் மாமிசம் மீது அலாதிப் பிரியம். நடக்கத் தெரியாத குட்டியாக இருந்தால் இவை அந்த விலங்குகளுக்கு இரையாகிவிடும் என்று பயப்படும் தாய் தன் குட்டியை உதைத்து நடக்க கற்றுத்தருகிறது. ஓரிரு நாட்களில் குட்டி ஒட்டகச் சிவிங்கி எழுந்து நடந்து விடுகிறது. இந்த உலகில் மற்ற உயிர்களோடு உயிர் வாழ வேண்டுமென்றால் வலியை தாங்கிக்கொண்டு போராடவேண்டும் என்ற உண்மையை பிறந்த முதல் நாளிலேயே தன் குட்டிகளுக்கு ஒட்டகச்சிவிங்கி கற்றுக்கொடுக்கிறது. குட்டி ஒட்டச்சிவிங்கி கிழே விழுந்ததால் பட்ட வலி தீரும் வரை ஓய்வு எடுத்திருந்தால் மற்ற காட்டு விலங்குகளுக்கு இரையாகிவிடும். ஆனால் அதன் தாய் வலியை தாண்டி வெற்றியை பெறும் சூட்சமத்தை சொல்லிக்கொடுத்து சூழ்நிலைக்கேற்ற வாழ்வை கற்பதற்கு உதவி செய்கிறது. வலிகளை வெற்றிகளாக்கும் சூட்சமங்களைக் கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்!! Voir la traduction
  7. நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் .........! 😍 இது ஒரு நல்ல பாடல் . ........கொஞ்சம் கலர் பூசி விட்டிருக்கிறார்கள் .........!
  8. வணக்கம் வாத்தியார் . ..........! தமிழ் பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் சின்மயி இசை அமைப்பாளர் : ஏ . ஆர். ரகுமான் ஆண் : {நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்} (2) பெண் : {ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே} (2) பெண் : வாழ்வு தொடங்கும் இடம் நீதானே… ஆஹா …ஆஆஆ…ஆஆஆ….. வாழ்வு தொடங்கும் இடம் நீதானே வானம் முடியுமிடம் நீதானே காற்றைப் போல நீ வந்தாயே சுவாசமாக நீ நின்றாயே மார்பில் ஊறும் உயிரே பெண் : எனது சொந்தம் நீ எனது பகையும் நீ காதல் மலரும் நீ கருவில் முள்ளும் நீ பெண் : செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ பெண் : பிறந்த உடலும் நீ பிரியும் உயிரும் நீ பிறந்த உடலும் நீ பிரியும் உயிரும் நீ மரணம் ஈன்ற ஜனனம் நீ ........! --- ஒரு தெய்வம் தந்த பூவே ---
  9. உஸ் .....இது நமக்குள்ளேயே இருக்கட்டும் . ......... இதையும் கொஞ்சம் பாருங்க ........! 😇
  10. கால்பந்து விளையாட்டில் அரிதான சில நிகழ்வுகள் ........! 😂
  11. யானை · ஒரு கிராமத்தில் யார் அறிவாளி என்று ஒரு போட்டி! இளைய தலைமுறை தான் அறிவாளிகள் என்று இளைஞர்கள் சொல்ல! வயதில் பெரியவர்கள் தான் என்று பெரியவர்கள் சொல்ல! சரி யார் அறிவாளிகள் என்று பார்க்க இருவருக்கும் ஒரு செடியை கொடுத்து ஒரு மாதம் டைம் கொடுத்து யார் இந்த செடியை நன்றாக வளர்க்கிறார்கள் என்று பார்க்கலாம் என்றார்கள்! இளைஞன் செடியை நல்ல இடமாக தோண்டி நட்டு வைத்து தினமும் நீரும் உரமும் தெளித்து நன்றாக வளர்த்தான்! ஆனால் பெரியவர் நட்டு வைத்ததோடு சரி! தண்ணீரும் ஊற்ற வில்லை உரமும் போட வில்லை! ஒரு மாதம் ஓடியது இளைஞன் வைத்த செடி நன்றாக வளர்ந்து இருந்தது. பெரியவர் வைத்த செடி சிறியதாக வளர்ந்து இருந்தது. அன்று இரவு திடீர் என்று பெரிய காற்றுடன் மழை ! இளைஞன் வைத்த செடி காற்றில் ஒடிந்து மழையில் அடித்து செல்லப்பட்டது! ஆனால் பெரியவர் வைத்த செடி அப்படியே மழை புயல் தாங்கி நின்றது! மறு நாள் காலை இளைஞன் பெரியவர் கிட்ட இது எப்படி சாத்தியம்! நான் தினம் நீர் ஊற்றி உரம் போற்று நன்றாக வளர்ந்து இருந்த செடி ஒடிந்து மழையில் அடித்து செல்லப்பட்டது! நீங்கள் தண்ணீர் கூட ஊற்ற வில்லை ஆனால் செடி எப்படி புயல் மழையை தாங்கி நிற்கிறது என்று கேட்க ! அதற்கு அவர் சொன்னார் ! நீ எல்லாம் அதற்கு கொடுத்தால் அது சுகமாக வேர் விடாமல் அப்படியே இருந்து விட்டது. நான் வைத்த செடி நான் நீர் ஊற்றாததால் உயிர் வாழ நிலத்தில் வேர் ஊன்றி நன்கு வளர்ந்து விட்டது! இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையும் அப்படித்தான் என்றார்........! Voir la traduction
  12. நன்றி பையா .......!"கூழுக்கும் பாடி உப்புக்கும் பாடி ஒப்பிக்கும் என் உள்ளம் " .........!
  13. எதிர்கால ரௌடிகள் ......... இப்படிக்கு மான்கள் .......! 😂
  14. தினமும் ஒரு வரி தத்துவம் · 🌹" படித்து பகிர்ந்து🌹" *Forwarded many times* *கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக்குங்க*😀" செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது . --- தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ) இட்லி மாவை வச்சு இட்லி போடலாம். சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்... ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா? --- ராவெல்லாம் முழிச்சு கெடந்து யோசிப்போர் சங்கம். என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல் , காடு , கரைன்னு எல்லாம் இருந்தாலும் , ரயிலேறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும் . இதுதான் வாழ்க்கை . பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் . ஆனா,ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ? நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!! (என்ன... தத்துவம்...) என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும், ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !! அதேமாதிரி, என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!! டிசம்பர் 31 க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம் . ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம். இதுதான் உலகம். பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் . ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் .. சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் . ஆனா...கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ?? யோசிக்கணும்............ ...!! தத்துவம் 1: இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம் . ஆனா பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா? தத்துவம் 2 ஆட்டோக்கு ' ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும் , மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும் . தத்துவம் 3: தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் , ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது ! (என்ன கொடுமை சார் இது !?!) தத்துவம் 4: வாழை மரம் தார் போடும் ஆனா....... அதை வச்சு ரோடு போட முடியாது! (ஹலோ ! ஹலோ !!!!) தத்துவம் 5: பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம் , ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா? இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா? (டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!) தத்துவம் 6: சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும் , அதுக்காக, மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ? (ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க!!!) பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் , கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகனும். கொலுசு போட்டா சத்தம் வரும் . ஆனா, சத்தம் போட்டா கொலுசு வருமா ? பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும், ஃப்ரன்ட் வீல முந்த முடியாது . இதுதான் உலகம் T Nagar போனா டீ வாங்கலாம் . ஆனால்....... விருதுநகர் போனா விருது வாங்க முடியுமா? என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா, திருப்பி அடிக்க முடியாது . இளநீர்லயும் தண்ணி இருக்கு,..... பூமிலயும் தண்ணி இருக்கு.... . அதுக்காக, இளநீர்ல போர் போடவும் முடியாது , பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது .. உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும் ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது . நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம் ஆனா...... ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது . வண்டி இல்லாமல் டயர் ஓடும் . ஆனால்............டயர் இல்லாமல் வண்டி ஓடுமா ? (இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.) சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா..... ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல.......... பிளேன் ஓட்டுறது பிளானிங் னுதான் ஆகிடுமா. நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும் மெஸேஜ் Forward தான் பண்ண முடியும்..... Rewindலாம் பண்ண முடியாது. "Tea" / " Coffee" எது சுகாதாரம் ??........ "Tea"ல ஒரு "ஈ " இருக்கும். "Coffee"ல 2 "ஈ " இருக்கும். நீங்களே முடிவு பண்ணிக்கீங்க..🤓" Voir la traduction
  15. சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் · Guru Tamilanda ·odoSnestrpgg6m81f3gmf148 8hm2tf2gg0ci8gf941ctm9igiu8muuth2lt · ’முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி' - இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன?’' வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார். ”முல்லை என்பது ஒரு கொடிவகை தாவரம். அது பற்றிப்படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது” என்றான் ஒரு மாணவன். ”ஒரு தாவரம் பற்றிப்படர இடமின்றி தவித்தால்கூட அதனை கண்டு மனம்துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது”- இன்னொரு மாணவன். ”இதென்ன பைத்தியக்காரத்தனம்?, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு குச்சியை அல்லது கோலை ஊன்றுகோலாய் கொடுக்கலாம் அதனை விடுத்து அவ்வளவு பெரிய தேரை யாராவது கொடுப்பார்களா? முட்டாள் அரசர்களும் அந்நாளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது” – சொல்லிவிட்டு நக்கலாய் சிரித்தான் வேறொரு மாணவன். ”தான் பயணித்த தேரை ஒரு முல்லைகொடிக்காக விட்டுவிட்டு தான் நடந்து செல்ல துணிந்த அரசன் தான் எவ்வளவு பெரிய வள்ளல்" - ஒரு மாணவி. ”முதலில் தேர் செய்ததே மரத்தில்தான், மரத்தை வெட்டி தேர் செய்துவிட்டு கொடியை காப்பது அறிவுடைமையா? தேர் செய்ய மரம் வெட்டுவதை நிறுத்தவேண்டும் என சொல்லியிருக்கவேண்டும் அந்த அரசன்”- இன்னொரு மாணவியின் பதிலிது. செயல் ஒன்றுதான்… எத்தனை எத்தனை பார்வை. எத்தனை எத்தனை கண்ணோட்டம். ஒரு விஷயத்தில் எல்லோருக்கும் ஒரே கண்ணோட்டம் இருக்க எப்போதும் சாத்தியமில்லை. அவரவர் பார்வை… அவரவர் கண்ணோட்டம். இப்படித்தான் நமது செயல்களைப்பற்றி நாம் நன்மையே செய்தாலும் ஆயிரம் விமர்சனங்கள் வரலாம். அதனாலெல்லாம் மனம் சோர்ந்துவிடாமல், மற்றவர்க்கு தீங்கு இல்லையெனில் நமக்கு சரியென்று தோன்றுவதை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பதே சிறப்பு. Voir la traduction
  16. அப்படியே வரையறுக்கப்பட்ட முறையில் புகையிலையை பயிரிடுதல் பற்றியும் யோசிக்கலாம் .......!
  17. பையா இது வழமைதான் ....... அறிமுகமாகும் ஒருவரின் திறமையை மற்றவர்களும் அறியும்படி உயர்வாக சொல்வதென்றால் எல்லோரும் அறிந்த ஒருவருடன் ஒப்பிட்டு சொல்வது .......! உதாரணமாக....... ஈழப்பிரியன் வந்து சுவிக்கு வீரப்பையனை விட கிரிக்கட் விபரங்கள் தெரியும் என்று சொன்னால் இங்கு எல்லோருக்கும் தெரியும் சுவி ஒரு 10 என்றும் பையன் 100 என்றும் . ...... ஆனால் சுவி யை விளம்பரப்படுத்த பையனுடன் ஓப்பிடவேண்டிய தேவை உள்ளது அதுதான் விடயம் . .....! 😂 அந்த ஜாம்பவான்களுடன் ஒப்பிடப்படுவது அவவுக்கு மிகவும் பெருமையான விடயம் . .......!
  18. Swag Sports Tamil · கபில்தேவ் தோனி சாதித்ததை விட.. ஹர்மன் செஞ்சது இதனால பெரிய விஷயம்.. இதை வெப் சீரிஸா எடுக்கணும் – அஸ்வின் கோரிக்கை.......! 🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.