Jump to content

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    30755
  • Joined

  • Last visited

  • Days Won

    273

Everything posted by suvy

  1. Sakthi FM Vincent Raj Raj Raj · · மூத்த குடி மக்களுக்கான பதவி இது. பிள்ளைகள் அனைவரையும் திருமணம் முடித்துக் கொடுத்த பணியிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் கீழ்கண்ட பத்து கட்டளைகளை பின்பற்றினால் வாழ்வின் கடைசி பக்கங்கள் மிகவும் சுவாரசியமாகவும் இனிமையாகவும் இருக்கும்* 1- எந்த நிலையிலும் உங்கள் வாழ்வின் கடைசி பகுதியில் உங்க பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ நினைக்காதீர்கள். (உங்கள் சுதந்திரம் அனைத்தும் பறிபோகும்) 2- உங்க பேரக்குழந்தைகளின் மேல் உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை மறக்கவேண்டாம். குழந்தை வளர்ப்பில் மகனுக்கோ மகளுக்கோ எவ்வித அறிவுரையும் சொல்லாதீர்கள். உங்கள் அறிவுரை மற்றும் அனுபவங்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள். (மதிக்கத்தெரியாது) 3- விலகியே இருங்கள் உறவுகள் இனிமையா இருக்கும். என் பிள்ளை என்பிள்ளை என பதறாதீர்கள். சிறகு முளைத்த பறவைகள் அவர்கள் என்பதை நினைத்து அமைதியா இருங்கள். 4- *பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை . கையில் பணம் இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும், உரிமையும் உங்களுக்கு நிச்சயம் இருக்காது. சேமிப்பு மற்றும் உங்கள் சுய சம்பாத்ய சொத்துக்களை உயிருடன் இருக்கும் வரை யாருக்கும் பகிரவேண்டாம். முழுவதும் பகிர்ந்தால் நீங்கள் நிற்க வேண்டியது நடுத்தெருவில்தான்.* 5 - காலம் முழுதும் அவர்கள் உயர்வுக்காக பாடுபட்டு பல இழப்புகளை சந்தித்து இருப்பீர்கள் அவற்றை சொல்லி காட்டவேண்டாம் உங்கள் கடமையை செய்தீர்கள் அவ்வளவே. 6 -கூட்டு குடும்ப வாழ்வு சிதைந்துபோன தலைமுறையில் வாழ்கிறோம் என்பதை மறவாதீர்கள் தேவைபட்டால் வருடம் ஒருமுறை சென்று பேரன் பேத்திகளுடன் சந்தோஷமா இருந்து வாருங்க .அங்கே அதிகம் தங்க வேண்டாம். 7- எந்த நேரத்திலும் உங்கள் மருமகள் முன் உங்கள் மனைவியை - கணவனை விட்டுக்கொடுத்து பேசாதீர்கள் உங்கள் இருவரில் ஒருவரை யார் குறைத்து பேசினாலும் எதிர்குரல் கொடுங்க. பிள்ளைகள் வீட்டிற்கு சென்றால், கூடவே உங்களுக்குத் தேவையான மருந்து மாத்திரை, எண்ணெய், பவுடர், சீப்பு, சோப், போன்றவற்றை எடுத்து செல்லுங்கள். 8- அவர்களின் ஆடம்பர வாழ்வை விமர்சிக்கவேண்டாம். சேமிப்பின் அவசியம் பற்றி சொல்லி அவமானபடவேண்டாம். அவர்கள் வாழ்வது உங்க வாழ்க்கை போல் போராட்ட வாழ்க்கை இல்லை நவீன கார்போரேட் வாழ்க்கை நீங்கள் 1000 ரூ பெரிதாக நினைத்தவர்கள் அவர்கள் லட்சங்களை புரட்டி பார்ப்பவர்கள் எனவே சூரியனுக்கு டார்ச் அடிக்காதீர்கள். 9- அதிக பாசம் ஆசை வைத்தால் அது மோசம். அவர்கள் குழந்தையை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் உங்க அறிவுரைகளை தவிருங்கள். 10-உங்களை விட அறிவிலும் திறமை யிலும் அவர்கள் சிறந்தவர்கள் என்பதை ஏற்று கொள்ளுங்கள். அல்லது நீங்கள் முட்டாள்களாகவே நடியுங்கள். அப்பொழுதுதான் பிழைப்பீர்கள். *அதிக அறிவுரைகள் இக்கால சந்ததியினருக்கு அறவே பிடிக்காது*. நீங்கள நன்கு படித்திருந்தாலும் நல்ல பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் அவர்கள் முன் தற்குரிகளே. தலையாட்டும் பொம்மைகளே.. நன்றி #அன்புடன்_சகோ_வின்சென்ட்_ராஜ்
  2. கவிதை பூக்கள் · Rejoindre Sembula Peyal Neer · ertSdoopsnla41amch4hh2gl56am3f8 97979lmcg0c4078f25th9hahali2 · கர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள்... "உனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா?" என்று... மகள், "தம்பி வேண்டும்" என்றாள். "யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?" என்று தாய் கேட்க, "ராவணனைப் போல் இருக்க வேண்டும்" என்றாள் மகள். திடுக்கிட்ட தாய், "உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன? ராமனைப் போல் ஒரு சகோதரன் வேண்டும் என்று சொல்லாமல், ராவணனைப் போல் வேண்டும் என்கிறாயே!" என்றாள். "அம்மா! நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? உடன் பிறந்த சகோதரி அவமானப்பட்டாள் என்பதற்காக, ராவணன் தன் அரியணை, ராஜ்ஜியம், உயிர் அனைத்தையும் இழந்தானே! தன் எதிரியின் மனைவியைச் சிறை பிடித்த போதிலும், அவளை ஒரு போதும் தீண்டவில்லையே! ஆனால் ராமன், யாரோ ஒருவன் சொன்னான் என்பதற்காக, கர்ப்பவதியாக இருந்த தன் மனைவியை ஒதுக்கி வைத்தானே! அவளை தீக்குளித்துத் தன் புனிதத்தை நிரூபிக்கச் செய்தானே! உனக்கு வேண்டுமானால் ராமனைப் போல் மகன் பிறக்கட்டும். ஆனால் எனக்கு ராவணன் போன்ற சகோதரன் தான் வேண்டும்" என்றாள் மகள். தாயால் பதில் கூற முடியவில்லை. அதிர்ந்து போனாள். இக்கதை ஒரு விவாதத்தைத் துவக்கலாம். ஆனால் கதையின் உட்பொருளைக் கூர்ந்து நோக்கினால், ஒரு உண்மை புலப்படும்.இவ்வுலகில் நல்லவர், கெட்டவர் என்பது நாம் நம் தனிப்பட்ட அனுமானங்களால் முடிவு செய்வதே. கேளிக்கைகளில் திளைப்பவன் என்பதால், ஒருவன் கெட்டவன் என்றில்லை. கோவிலுக்குச் செல்பவன் என்பதால், ஒருவன் நல்லவனும் இல்லை. கோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக்காரனும் சரி - கேட்பதென்னவோ பிச்சை தான். நம் எண்ணங்கள் தராசின் முள் போல் இருத்தல் வேண்டும்...!!
  3. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மடை திறந்து தாவும் நதியலை நான் மனம் திறந்து கூவும் சிறு குயில் நான் இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது ஹோ… ஆண் : காலம் கனிந்தது கதவுகள் திறந்தது ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைத்தேன் நான் ஆண் : நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம் இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம் வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம் வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம் இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எனக்கே தான்….....! --- மடை திறந்து தாவும் நதியலை நான் ---
  4. மிக்க மகிழ்ச்சி சகோதரி...... உங்களுடன் அளவிலாவது பெரும் பாக்யம்......! 🙏 அப்போதெல்லாம் பெண்கள் பொதுவாக வயதுக்கு வந்தவுடன் திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.....பெண்கள் 13 / 14 வயதுக்குள் .....எனது அம்மம்மா , ஆச்சி போன்றோர் அப்படித்தான்...... அதுகளுக்கு ஒரு சோறும் ஒரு சாறும் (கறி) சமைக்கத் தெரிந்தால் போதும்......அதுதான் அதிகபட்ச தகுதி ......... 😁
  5. மூன்று நான்கு விளையாட்டுகளில் தொடற்சியாக "சேம் சைட் கோல்" போட்டிருக்கிறார்கள்........அது நல்லா இருக்கு........! 😂
  6. ரசோதரன் கூற்றை நான் ஆமோதிக்கிறேன்........ஆனால் புள்ளிகளில் நாங்கள் மோதிக்கிறோம் ......நீங்கள் யோசிக்காமல் புள்ளிகள் போடுங்கள் ........! 😂
  7. வணக்கம் வாத்தியார்.......! ஆண் : இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே மேகம் முழிச்சு கேக்குதே ஆண் : கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே மழைச்சாரல் தெளிக்குதே புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் புடிக்குதே புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் புடிக்குதே ஆண் : மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே ஆண் : பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும் நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சி இருக்கு உறவு எல்லாம் அமைஞ்சி இருக்கு அள்ளி அள்ளித் தந்து உறவாடும் அன்னமடி இந்த நிலம் போல சிலருக்குத் தான் மனசு இருக்கு உலகம் அதில் நிலைச்சு இருக்கு நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல யாரோ வழித்துணைக்கு வந்தால் ஏதும் இணை இல்லை உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல ஆண் : மனசுல என்ன ஆகாயம் தினம்தினம் அது புதிர் போடும் ரகசியத்தை யாரு அறிஞ்சா அதிசயத்தை யாரு புரிஞ்சா விதை விதைக்கிற கை தானே மலர் பறிக்குது தினம்தோறும் மலர் தொடுக்க நாரை எடுத்து யார் தொடுத்தா மாலையாச்சு ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம் மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதை எல்லாம் தாலாட்டு கேட்டிடாமலே தாயின் மடியைத்தேடி ஓடும் மலைநதி போல.......! --- இளங்காத்து வீசுதே ---
  8. பாடசாலை சுற்றுலா....... மகாபலிபுரம் வரமாட்டேன்.........! 😂
  9. இல்லை இணையவன் அது அரைவாசி தப்பு .......பெண் சிங்கங்கள் சும்மா சும்மா ஆண்சிங்கங்களை அதட்டி வெருட்டி அ சிங்கப் படுத்திக்க கொண்டிருக்கும் ......நம்ம வீடுகள் போலத்தான் அங்கேயும்......ஆனால் வேட்டை என்று வந்துவிட்டால் ஆண் சிங்கம் சிங்கன்தான் .........! 😂
  10. மாட்சிமை பொருந்திய ஐயன் நாவலர் பெருமான் தமிழை தலையில் சுமந்து திரிந்தார்........அவர்களை முத்திரையில் இட்டு சிறப்பித்து மகிழ்ந்தோம் ........... ஐயகோ அவரின் சந்ததிகள் தட்டுவடை பலகாரங்கள் எல்லாம் தட்டுடன் கடத்திக் கொண்டு திரிகிறார்களே, இவர்களை என் செய்வோம் ......... ! 😂
  11. மிகவும் வித்தியாசமான கண்ணோட்டம் ........ அருமையான பேச்சு ........! 👍
  12. நீங்கள் இப்பொழுது யாழின் முன் இருந்து கொண்டு கிருபனின் அட்டவனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்....... அவர் வந்து கொண்டிருக்கிறார் ........! 😂
  13. மிகவும் தத்துவார்த்தமான பாடல்.........! 😁
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.