Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார் . ......... ! ஆண் : { ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி } (2) ஆண் : பச்சக் குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன் பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி ஆண் : ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம் காசு பணம் வந்தா நேசம் சில மாசம் ஆண் : சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண் தானோ வேப்பிலை கரிவேப்பிலை அது யாரோ நான் தானோ ஆண் : என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி தீப்பட்ட காயத்தில தேள் வந்து கொட்டுதடி கண்மணி கண்மணி ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி ஆண் : நேற்று இவன் ஏணி இன்று இவன் ஞானி ஆள கரை சேத்து ஆடும் இந்தத் தோனி ஆண் : சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்ச நேரம் பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம் ஆண் : பணங்காச கண்டு புட்டா புலி கூட புல்ல தின்னும் கலிகாலம் ஆச்சுதடி கண்மணி என் கண்மணி அடங்காத காள ஒன்னு அடிமாடா போனதடி கண்மணி கண்மணி .......... ! --- ஊரத் தெரிஞ்சிகிட்டேன் ---
  2. தாழம்பூ கைகளுக்கு . ........ ! 😍
  3. நீருக்குள் நீந்த குளிரும் என்று - தாயின் சிறகின் மேல் தாவி நின்று பார்க்கும் தளிர் ஒன்று ....... ! 😁
  4. 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 செல்வன் சௌந்தரராஜ் ·porSendtsoi0l77hci1ta1haa4hg59a8 ga0lmmuch98ct0l4g3t7tf697c9 · ‘நாய்க்_குட்டிகள்_விற்பனைக்கு’ என்று எழுதிய பலகையை தனது கடைக் கதவுக்கு மேல் மாட்டிக் கொண்டிருந்தார் அதன் உரிமையாளர். அந்தப் பலகை குழந்தைகளை ஈர்க்கும் என்று நினைத்தார் அவர். அதன்படியே ஒரு சிறுவன், கடையின் முன் வந்து நின்றான். "நாய்க்குட்டிகளை நீங்கள் என்ன விலைக்கு விற்கப் போகிறீர்கள்?" என்று கேட்டான். 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை என்று கடைக்காரர் பதில் சொன்னார். நான் நாய்க் குட்டிகளைப் பார்க்கலாமா?" என்று கேட்டான். கடை உரிமையாளர் புன்னகைத்து, உள் பக்கம் திரும்பி விசிலடித்தார். நாய்க் கூண்டிலிருந்து பந்துகளைப் போல ஐந்து குட்டியூண்டு நாய்க்குட்டிகள் ஓடி வந்தன. ஒரு குட்டி மட்டும் மிகவும் பின்தங்கி மெதுவாக வந்தது. பின் தங்கி, நொண்டி நொண்டி வந்த அந்தக் குட்டியை உடனே கவனித்த சிறுவன்,"என்னாச்சு அதுக்கு?" என்று கேட்டான். அந்தக் குட்டி நாயைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர், அதற்குப் பிற்பகுதி சரியாக வளர்ச்சி அடையவில்லை.எனவே எப்போதும் முடமாகத் தான் இருக்கும் என்று கூறி விட்டதாக விளக்கினார் கடைக்காரர். சிறுவனின் முகத்தில் ஆர்வம். "இந்தக் குட்டிதான் எனக்கு வேணும்."என்றான். "அப்படின்னா நீ அதுக்குக் காசு கொடுக்க வேணாம். நான் அதை உனக்கு இலவசமாகவே தர்றேன்" என்றார் கடைக்காரர். அந்தக் குட்டிப் பையனின் முகத்தில் இப்போது சிறு வருத்தம். கடைக்காரரின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து விரல் நீட்டிச் சொன்னான். "நீங்க ஒண்ணும் எனக்கு இலவசமாகக் கொடுக்க வேணாம். மற்ற நாய்க் குட்டிகளைப் போலவே இதுவும் விலை கொடுத்து வாங்கத் தகுதியானது தான். நான் இந்தக் குட்டிக்கு உரிய முழுத் தொகையையும் கொடுக்கிறேன். ஆனா, இப்போ எங்கிட்ட கொஞ்சம் பணம் தான் இருக்கு. பாக்கித் தொகையை மாசா மாசம் கொடுத்துக் கழிச்சிடறேன்." என்றான். ஆனாலும் கடைக்காரர் விடவில்லை. "பையா... இந்த நாய்க் குட்டியால உனக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. இதால மற்ற நாய்க்குட்டிகளைப் போல ஓட முடியாது...குதிக்க முடியாது... உன்னோட விளையாட முடியாது."என்றார் உடனே, அந்தப் பையன் குனிந்து தனது இடது கால் பேண்டை உயர்த்தினான். வளைந்து, முடமாகிப் போயிருந்த அக்காலில் ஓர் உலோகப் பட்டை மாட்டப்பட்டிருந்தது. இப்போது அவன் கடைக்காரரை நிமிர்ந்து பார்த்துச் சொன்னான். "என்னாலும் தான் ஓட முடியாது... குதிக்க முடியாது. இந்தக் குட்டி நாயின் கஷ்டத்தைப் புரிஞ்சிக்கிறவங்க தான் இதுக்குத் தேவை!" என்றான். உன் வலியை உன்னால் உணர முடிந்தால் நீ உயிரோடு இருக்கிறாய். ஆனால் பிறர் வலியை உன்னால் உணர முடிந்தால் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.....!💪"
  5. முதன்முறையாக சாலட் இலையை சாப்பிட்ட சிங்கம் அதன் சுவையை அசிங்கமாய் உணர்ந்த தருணம் . ....... ! 😀
  6. நூற்றுக்கு நூறு உண்மைதான் ........ எனக்கும் எங்கேயோ இடிக்குது . ....... ! 😇
  7. தெய்வ மலரோடு வைத்த மனம் நறுமணம் ....... ! 😍
  8. வணக்கம் வாத்தியார் .......... ! ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல ஆண் : வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன் பொன்னம்மா சின்னக் கண்ணம்மா ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல பெண் : விவரம் இல்லாமலே பூக்களும் வாசம் வீசுது உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது ஆண் : எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது பெண் : ஓடை நீரோடை இந்த உலகம் அது போல ஆண் : ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அது போல பெண் : நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே ஆண் : ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது நேசம் பிறந்தாலே உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது பெண் : ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது அலையும் அலை போலே அழகெல்லாம் கோலம் போடுது ஆண் : குயிலே குயிலினமே அந்த இசையா கூவுதம்மா பெண் : கிளியே கிளியினமே அதைக் கதையாப் பேசுதம்மா ஆண் : கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான் ........ ! --- தென்றல் வந்து தீண்டும் போது ---
  9. 💐💐💐பிரியாத உறவு நம் நட்பு🥰❤🥰 Best Friends For Ever💐💐💐 Dharma Lingam ·ontdeSrposcftmh7654al4ct59 g1m2334uhiiag16t6fn04ci3hai6cafa6 · ஒரு தெருநாயை சிறுத்தைப்புலி ஒன்று வேட்டையாட துரத்தி வந்துள்ளது . அந்த நாய் மக்கள் வசிக்கும் தெருவில் புகுந்து ஒரு வீட்டின் கழிவறைக்குள் சென்றுவிட்டது . பின்னாலே துரத்தி வந்த சிறுத்தைப்புலியும் கழிவறைக்குள் புகுந்து விட , அப்போது வீட்டு உரிமையாளர் சிறுத்தைப்புலியின் வாலைப் பார்த்துவிட்டார் . கழிவறைக் கதவை வெளியே இருந்து பூட்டி விட்டு வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளார் . வனத்துறையினர் வந்து கழிவறை கூரையை தகர்த்து , சிறுத்தைப்புலிக்கு மயக்கமருந்து செலுத்தி அதை மீட்க ஏறத்தாழ 7 மணிநேரம் ஆகியது . அதாவது நாயும் சிறுத்தைப்புலியும் மிகச்சிறிய இடத்தில் ஆறுமணி நேரத்திற்கு மேல் ஒன்றாக இருந்துள்ளன. வேட்டையாட வந்த சிறுத்தைப்புலி நாயை எதுவும் செய்யவில்லை . காரணம் அது தனது சுதந்திரத்தை இழந்து விட்டது. அதனால் ஏற்பட்ட அழுத்தம் . அது உணவு எடுத்து கொள்ளவில்லை( பசி மறந்து போனது) . வனவிலங்குகளுக்கு அது உயிரோடு இருக்கும் போது இழக்கும் கடைசி விசயம் அதன் சுதந்திரம். இப்போது நாம் , மனிதர்கள் . நாம் எடுத்தவுடன் நம் தேவையை பூர்த்தி செய்ய இழக்க நினைக்கும் முதல் விசயம் நம் சுதந்திரம் . வசதியான வாழ்க்கைக்காக விலை உயர்ந்த பொருட்களை வாங்கி கடனில் மூழ்கி அதை அடைக்க பணத்தேவையை தீர்க்க சுதந்திரத்தை இழந்து வேலை . வசதியான/ சொகுசான வாழ்க்கைக்கான விலை சுதந்திரம் . ஒரு உறவு நீடிக்க , அவர்களின் அன்பு வேண்டும் என்று வேறொருவர் நாம் உடுத்தும் உடை வரை தேர்வு செய்ய விட்டுவிடுவோம் . அடுத்தவரின் அன்பு, அக்கறை வாங்க நாம் தரும் விலை சுதந்திரம் . நம் அன்பை புரியவைக்க கூட சில இடங்களில் நம் சுதந்திரத்தை அடகு வைக்கிறோம் . இந்த மாதிரி பல சூழல்களில் நாம் ஒன்றை நிரூபிக்க / பெற நம் சுதந்திரம் தான் மனிதர்கள் தரும் முதல் விலை . ஆனால் சுதந்திரம் மனிதனுக்கு மிகவும் அவசியம். தெளிவான சிந்தனை மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அதுதான் தேவை . நிம்மதி கிடைக்கும். தங்கச்சிறையானாலும் சிறைதான், மூன்று வேளையும் அறுசுவை உணவு என்றாலும் சிறைஉணவு தான். அதனால் எந்த காரணத்திற்காகவும் சுதந்திரத்தை இழக்காதீர்கள்....... !
  10. ஆதரவற்றோரை ஆதரித்து அவர்க்கு அன்னமும் அளித்து கல்வியும் தந்துதவும் அகரம் பவுண்டேசன் ஞான்றும் ஞாலத்தில் காலங்கள் கடந்தும் வாழியவே ....... ! 🙏
  11. பாதி காசாவை காலியாக்கியாச்சுது மீதி காசாவாவது மிஞ்சட்டும் ...... !
  12. மழைத்துளி போகாத எருமைத் தோலுக்குள் பாசமழை ஊடுருவி நேசம் நிறைந்திடுமே ......... ! ❣️
  13. நிஜமாகவே சிரிப்பு சிரிப்பாய் வருகுது . .......! அதுசரி கிருபன், நம்ம ஆசான் இதுக்குள்ள எந்த வைத்தியம் பார்க்கிறார் ....... தெரிஞ்சா எங்களுக்கும் உபயோகமாய் இருக்கும் அதுதான் ....... ! 😀
  14. இளமைக் கவிதைகள் இறக்கை விரிக்கின்றன .......... நல்லாஇருக்கு ......... ! 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.