வணக்கம் வாத்தியார்.........!
பெண் : மலர்ந்து
மலராத பாதி மலர்
போல வளரும் விழி
வண்ணமே
பெண் : வந்து விடிந்தும்
விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
பெண் : நதியில் விளையாடி
கொடியில் தலை சீவி நடந்த
இளம் தென்றலே
பெண் : வளர் பொதிகை
மலை தோன்றி மதுரை
நகர் கண்டு பொலிந்த
தமிழ் மன்றமே
ஆண் : யானை படை
கொண்டு சேனை பல
வென்று ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா
ஆண் : அத்தை மகளை
மணம் கொண்டு இளமை
வழி கண்டு வாழப் பிறந்தாயடா
வாழப் பிறந்தாயடா
பெண் : தங்கக் கடியாரம்
வைர மணியாரம் தந்து
மணம் பேசுவார் பொருள்
தந்து மணம் பேசுவார்
பெண் : சிறகில் எனை
மூடி அருமை மகள்
போல வளர்த்த கதை
சொல்லவா
பெண் : கனவில் நினையாத
காலம் இடை வந்து
{ பிரித்த கதை சொல்லவா } (2)
ஆண் : கண்ணில் மணி
போல மணியின் நிழல்
போல கலந்து பிறந்தோமடா
ஆண் : இந்த மண்ணும்
கடல் வானும் மறைந்து
முடிந்தாலும் மறக்க
முடியாதடா உறவை
பிரிக்க முடியாதடா.......!
--- மலர்ந்தும் மலராத ---
வணக்கம் வாத்தியார்.......!
பெண் : யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ
எந்த பார்வை பட்டு சொந்த உள்ளம் விட்டு
எங்கே மயங்கி நின்றாரோ
பெண் : கட்டவிழுந்து கண் மயங்குவாரோ
அதில் கை கலந்து காதல் புரிவாரோ
பெண் : தொட்டு தொட்டு பேசி மகிழ்வாரோ
இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ
பெண் : ஊரறிய மாலை இடுவாரோ
இல்லை ஓடிவிட எண்ணமிடுவாரோ
பெண் : சீர்வரிசை தேடி வருவாரோ
இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ
பெண் : எந்த பார்வை பட்டு
சொந்த உள்ளம் கேட்டு
எங்கே மயங்கி நின்றாரோ…...!
--- யாருக்கு மாப்பிள்ளை யாரோ ---
பொதுவாக ஒரு சொல் அதிகம் நீளமாக போகாமல் இருந்தால்தான் அது புழக்கத்துக்கு சரியாக இருக்கும்.....அந்த வகையில் "முன்பதிவு" சரியாக வரும் என நினைக்கின்றேன்......அச்சொல்லுக்கு முன்னால் யாருடன் என்பதை சேர்த்துக் கொள்ளலாம்....... வைத்தியருடன்,இன்ன அதிகாரியுடன் போன்று.....!
முதலிரவை ஞாபகப்படுத்தும் .......இது சரி........இடையில் இந்த "ஏறத்தாள" என்னும் சொல் அந்த முதலிரவுக்கு கடமையை சரிவர நிறைவேற்ற முடியுமா என்னும் தொனியில் தொக்கி நிக்கிறது........ அதுதான் யோசிக்கிறேன்.......! 😂
இன்று இப்படித்தான் மக்கள் பலர் சென்று கொண்டிருக்கிறார்கள்........பணத்தை மையப்புள்ளியாக வைத்து சுழலும் இவ்வுலகில் மக்கள் பெரும்பாலும் இப்படித்தான் வாழ்வார்கள்......! 😴