Everything posted by suvy
-
"ஏனிந்தக் கோலம்"
"உண்மையை உணர்ந்து உலகை அறிந்து பண்பாட்டு நிலையில் சமநிலை போற்றி கண்கள் போகும் வழிகளில் போகாமல் பெண்ணே உங்கள் கைகள் சேரட்டும்!" இந்த வரிகள் பிடித்திருக்கு . ..........! 😁
-
இனித்திடும் இனிய தமிழே....!
கடல் கவிதை . .........! 👍
-
அரசியல்வாதிகள் யார்? | இந்துமைந்தர்களின் பேச்சால் அதிர்ந்த அரங்கம்.
காணொளிக்கு நன்றி பிரியன் . ......... பேச்சுக்கள் நன்றாக இருக்கின்றன ........!
-
சுவிசின் முக்கிய சுற்றுலா தளங்கள்
மிக மிக அழகான இடங்கள் . ........... ஒரு முறை போய்ப் பார்க்கத்தான் வேண்டும் . ........! 😂 நன்றி நுணா .......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! பெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதைய்யா நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதைய்யா பெண் : பச்சரிசி சோறு..ம்ம் .. உப்பு கருவாடு சின்னமனூரு வாய்க்கா சேலு கெண்ட மீனு குருத்தான மொளை கீரை வாடாத சிறு கீரை நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது அள்ளி தின்ன ஆசை வந்து என்னை மீறுது பெண் : பாவக்கா கூட்டு பருப்போட சேத்து பக்குவத்த பாத்து ஆக்கி முடிச்சாச்சு சிறுகாலான் வருத்தாச்சு பதம் பாத்து எடுத்தாச்சு கேழ்வெரகு கூழுக்கது ரொம்ப பொருத்தமைய்யா தெனங்குடிச்சா ஒடம்பு இது ரொம்ப பெறுக்குமைய்யா பெண் : பழையதுக்கு தோதா புளிச்சி இருக்கும் மோறு பொட்டுகள்ள தேங்கா போட்டறச்ச தொவயலு சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும் அதுக்கு இணை ஒலகத்துல இல்லவே இல்ல அள்ளி தின்னேன் எனக்கு இன்னும் அலுக்கவே இல்ல பெண் : இத்தனைக்கும் மேலிருக்கு நெஞ்சுக்குள்ளே ஆச ஒன்னு சூசகமா சொல்ல போறேன் பொம்பள தாங்க சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க.......! --- நித்தம் நித்தம் நெல்லு சோறு ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே .......! 😍
-
களைத்த மனசு களிப்புற ......!
நானும் என் பாரதியும் · Rejoindre Jay R Jayakumar · · ஒருமுறை பத்திரிக்கையாளர் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம், “உன் அம்மா ஏன் இன்னும் உன்னுடனேயே வாழ்கிறார்? நீ ஏன் அவளுக்குச் சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டிக் கொடுக்கவில்லை?" எனக்கேட்டார். கிறிஸ்டியானோ இதயப்பூர்வமான வார்த்தைகளால் பதிலளித்தார்: “என் அம்மா தன் வாழ்நாள் முழுவதையும் எனக்காக அர்ப்பணித்தார். அவள் அளவில்லாத தியாகங்களை எனக்காகச் செய்தாள், நான் சாப்பிடுவதற்காக அவள் அடிக்கடி பசியுடனே படுக்கைக்குச் சென்றாள். எங்களிடம் பணம் இல்லை, ஆனால் அவள் அயராது வேலை செய்தாள்-வாரத்தில் ஏழு நாட்களும், இரவில் பணிப்பெண்ணாகக்கூட. எனக்கு முதல் ஜோடி கால்பந்து பூட்ஸை வாங்கித் தத்தார். அதனால் நான் ஒரு வீரராக வேண்டும் என்ற எனது கனவை நனவாக்கினேன். நான் சாதித்த அனைத்தும், எனது வெற்றிகள் அனைத்தும் அவளுடைய அசைக்க முடியாத அன்பிற்கும் தியாகத்திற்கும் கிடைத்தவை. நன்றிகள். நான் அவளுக்கு எல்லாம் கடமைப்பட்டிருக்கிறேன். நான் வாழும் வரை அவள் என் பக்கமே இருப்பாள். நான் கொடுக்கக்கூடிய அனைத்தும் அவளிடம் ஏற்கனவே உள்ளது, ஆனால் மிக முக்கியமாக, அவள் என் அடைக்கலம், என் வலிமை மற்றும் என் மிகப்பெரிய ஆசீர்வாதம். கிரெடிட்: மஹௌ க்ரூஸ்..........!
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ALL IS WELL.- வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
வாழும்வரை போராடு . ...... 06. அனுராதபுரத்தில் இருந்து சில கிலோ மீற்றர்களுக்கு முன் காடையர்கள் வாகனங்களை மறித்து கொள்ளையடித்து பின் எரிக்கிறார்கள் என்னும் செய்தி இவர்களுக்குக் கிடைக்கிறது. அந்த இடத்தில் என்ன செய்வதென்று அறியாது முன்னும் பின்னுமாய் வாகனங்கள் தரித்து நிக்கின்றன. எல்லா சாரதிகளும் வீதிகளில் இறங்கி கும்பல் கும்பலாய் கதைத்துக் கொண்டு நிக்கிறார்கள். தூரத்தில் பார்க்க ஆகாயத்தில் ஒரே புகையும்,வாகனங்கள் எரியும் வெடிச்சத்தமும் கேட்கிறது. சந்துரு பீற்றரிடம் அண்ணை இப்ப என்ன செய்யலாம் என்று கேட்கிறான். அதுதான் தம்பி நானும் யோசிக்கிறன். அப்போது இவர்களின் பின்னால் ஒரு லொறி வந்து நிக்கின்றது. சந்துரு திரும்பிப் பார்க்க அது இராகவனின் இரண்டு லொறிகளில் ஒன்று என்று தெரிகின்றது. சந்துரு இராகவனோடு கதைத்தே நெடுநாட்களாகி விட்டன. அந்த லொறியில் இருந்து இறங்கி வந்த சாரதியும் கிளீனரும் சந்துருவை இனங்கண்டு, சந்துரு அண்ணே மேலே போகமுடியாது போல் இருக்கே, என்ன செய்வது. ஓம் தம்பி அதுதான் நாங்களும் யோசித்துக் கொண்டு இங்கு நிக்கிறம். ஆனால் இரவாகிக் கொண்டு போகுது அதனால் இங்கு அதிகநேரம் தங்குவதும் ஆபத்து, பாதுகாப்பில்லை. --- அண்ணை, எங்கட முதலாளியின் மற்றலொறியும், ஸ்ரீகாந் அவர்களின் இரண்டு லொறிகளும் புல்லா லோட் ஏற்றிக்கொண்டு நேரத்தோடு எங்களுக்கு முன்னால் வந்தவை. இப்ப அவை இந்தக் கலவரத்தைத் தாண்டிப் போய் விட்டினமோ, அல்லது கலவரத்துக்குள் மாட்டுப் பட்டினமோ தெரியவில்லை. --- நாங்கள் வரும்போது அவைகளைக் காணவில்லை தம்பி. --- உங்களுக்குத் தெரியும்தானே அண்ணை, ஊருக்குள் பதுக்கி வைத்திருந்த அவ்வளவு பொருட்களும் இன்று கொழும்புக்கு கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்னும் நோக்கத்துடன் ஏற்றிக்கொண்டு வந்தது. அது இன்று பார்த்து இப்படிக் கலவரம் வெடித்திருக்கு. அதுதான் பயமாய் இருக்கு. --- சந்துரு அவரிடம் ஏன் தம்பி இவ்வளவு நாளும் இருந்திட்டு இப்ப எல்லாத்தையும் கொழும்புக்கு கொண்டு போகினம் என்று கேட்கிறான் . --- என்னண்ணா தெரியாதமாதிரிக் கேட்க்கிறீங்கள் . --- எட உண்மையா எனக்குத் தெரியாது அப்பன் . --- அண்ணை இந்தக் கிழமை விடுமுறைகள் முடிந்து பாடசாலைகள் எல்லாம் திறக்குது எல்லோ, அதுதான் பொருட்கள் எல்லாம் இங்கு கொண்டு வருகினம் . பாடசாலை உடுப்புகள் வியாபாரமும் அதைவிட மாணவர்களிடம் கஞ்சா மற்றும் விதவிதமான போதைப்பொருள் விற்பனையும் அமோகமாய் நடக்கும் இவை மட்டுமல்ல இன்னும் இரண்டு படகுகளில் சாமான்கள் நிறைய படகுகளில் வருகுது . --- ஓ அப்படியா , முதல்ல நீ காடையர்களிடம் இருந்து மட்டுமல்ல காவலர்களிடம் இருந்தும் தப்ப வேணும்........மிகவும் கவனம் தம்பி . --- ஓமண்ணை ........! --- சரி....சரி.....நீ பயப்பிடாதை ஏதாவது வழி இருக்கும் பார்க்கலாம். என்று சொன்ன சந்துரு பீற்றரின் பக்கம் திரும்பி, அண்ணா உங்களுடைய அண்ணரின் வீடும்கூட இங்குதான் எங்கோ இருப்பதாய் நீங்கள் சொன்ன ஞாபகம், இப்ப அங்கு சொல்லமுடியுமா வழியிருக்கா என்று கேட்கிறான் ....... --- ஓம் தம்பி, அதை நான் முதலில் நினைத்தனான், சொன்னால் நீங்கள் என்ன நினைப்பீங்களோ என்றுதான் சொல்லவில்லை. இங்கால மிகிந்தலை வீதியில் பத்து கி.மீ தூரம் போக அவரின் வீடு வயல் எல்லாம் வரும் என்று சொல்கிறார். --- நீங்கள் என்னண்னை ...... உங்களை நான் அப்படி நினைப்பேனா .....இனியும் தாமதிக்க வேண்டாம்.வாகனங்களைத் திருப்பிக்கொண்டு அங்கு செல்வோம்.பிறகு யோசிக்கலாம் என்று சொல்லிவிட்டு, லொறி சாரதியின் பக்கம்திரும்பி தம்பி நீங்களும் எங்களுடன் வாறீங்களா என்று கேட்க அவரும் சரி என்கிறார். பின் அவன் தனது மினிபஸ்சுக்குள் வந்து பயணிகளிடம் நிலைமையைச் சொல்லி அவர்களின் அனுமதியையும் பெற்றுக் கொள்கிறான். இரு வாகனங்களும் மிகிந்தலை வீதிக்குள் திரும்பி பீற்றரின் வீட்டுக்குப் பயணிக்கின்றன.இரவு அங்கு தங்குகின்றார்கள். பீற்றரின் அண்ணன் குடும்பமும் அந்த அகால நேரத்தில் எல்லோருக்கும் உணவு தயாரிப்பதில் ஈடுபடுகின்றார்கள். அங்கு இருக்க இருக்க சந்துருவுக்கு மனம் இருப்புக் கொள்ளவில்லை. ஆதங்கத்துடன் பீற்றரைப் பார்க்கிறான். அவரும் அவன் பார்வையை உணர்ந்து, என்ன தம்பி செய்ய வேணும் என்று கேட்கிறார். அண்ணை என் நண்பர்களின் மற்ற லொறிகளும் சாரதிகளும் என்ன பாடோ தெரியவில்லை. அதோ அங்கு நிக்கிற மோட்டார் சைக்கிளில் கிட்டவா சென்று என்ன நிலைமை என்று பார்த்து வருவோமா என்று கேட்கிறான். அதுக்கென்ன தம்பி பார்த்துவரலாம். வாகனங்கள் இங்கு நிக்கட்டும். அண்ணர் இருக்கிறார் பயமில்லை என்று சொல்ல, இருவரும் கொஞ்ச உணவுகளும் தண்ணீரும் எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் கலவரம் நடக்கும் இடத்துக்குச் செல்கின்றனர்………………………………… 🐘 🐘 🐘 🐘 🐘 🐘. வாருங்கள் போராடலாம் . .........!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ரங்கா ரங்கா மன மோகன ரங்கா என்னைப் பாரடா . .........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை இந்த பூலோகத்தில் யாரும் பாா்க்கும் முன்னே உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் ஆண் : இது இருளல்ல அது ஒளியல்ல இது இரண்டோடும் சேராத பொன் நேரம் இது இருளல்ல அது ஒளியல்ல இது இரண்டோடும் சேராத பொன் நேரம் ஆண் : தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும் பெண்ணே பெண்ணே பூலோகம் எல்லாமே தூங்கிபோன பின்னே புல்லோடு பூவிழும் ஓசை கேட்கும் பெண்ணே நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலுாட்ட நிலவுண்டு பெண் : எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு ஆண் : இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன் எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு பெண் : பெண்ணே பெண்ணே பூங்காற்று அறியாமல் பூவை திறக்க வேண்டும் பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும் ஆண் : அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு ........! --- வெண்ணிலவே வெண்ணிலவே ---- சிரிக்கலாம் வாங்க
- "காதலர்தின", சிரிப்புகள். (14.02.)
இது 90 s kids சோட காலண்டர் . .........! 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
எனக்கு ஒன்று மட்டும் புரிஞ்சு போச்சு ......இந்த இரண்டு பகிடிகளின் ஹீரோ சாட்சாத் பெருமாள்தான் . .....! 😂 நீங்கள் இணைக்கும் நகைச்சுவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசானவை பெருமாள் ....... தொடருங்கள் . ........!- வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
வாழும்வரை போராடு . .......... 05. இப்பொழுது மாணிக்கம் நேராக சந்துருவைப் பார்த்து தன்னருகே அழைக்கின்றார். அவனைப் பார்த்து சந்துரு நீ இப்பொழுது என்ன செய்ய நினைக்கிறாய், எதுவாயினும் தயங்காமல் சொல்லு என்கிறார். அப்போது அவரது மூத்தமகன் குறுக்கிட்டு சந்துரு நீ பேசாமல் என்கூட கொழும்புக்கு வந்துவிடு. என் கடையையும் பார்த்துக் கொண்டு என் கூடவே இருக்கலாம் என்கிறார். இளையமகனோ நோ....நோ.....அதெல்லாம் முடியாது அவன் எப்பொழுதும் போல எங்ககூடவே இருக்கட்டும் என்னப்பா என்று தகப்பனையும் துணைக்கு அழைக்கிறான். --- நீங்கள் கொஞ்சம் பொறுங்கள், சந்துரு சொல்லட்டும். சந்துரு நீ என்ன சொல்கிறாய். --- சந்துரு சொல்கிறான் .....ஐயா இந்தக் கடை வணிகத்தில் நீங்களும் பெரியமுதலாளி, சின்ன முதலாளி மற்றும் இங்கு வேலை செய்யும் பெரியவர்களும் என்னைத் தங்களில் ஒருவராய் வளர்த்து வந்திருக்கிறீர்கள். எல்லோருக்கும் மிக மிக நன்றி.நான் எப்போதும்போல் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் பொருட்கள் யாவற்றையும் பாதுகாப்பாக கொண்டு போய் சேர்ப்பது உட்பட தனியாகத் தொழில் செய்ய விரும்புகின்றேன். அதுபோல் நீங்களும் உங்களுக்கு வரும் மேலதிகமான ஓடர்களை எனக்குத் தந்துதவ வேண்டும் என்று விரும்புகின்றேன். ஆயினும் அது செய்வதற்கு எனக்கு தனியாக ஒரு வேன் வேணும்.அதற்காக நான் வங்கியில் கடன் எடுக்கலாம் என்று நினைக்கிறேன்.அதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்கிறான். --- கொஞ்சம் யோசித்த பெரியவர் அவனிடம் தம்பி நீ கொஞ்சம் வெளியில் இரு நான் பிறகு கூப்பிடுகிறேன் என்று சொல்கிறார்.அவனும் வெளியில் போகிறான். உடனே இளையமகன் தந்தையிடம் என்னப்பா சந்துரு இப்படி சொல்கிறான் . சம்பளத்தைக் கொடுத்து நிப்பாட்டி விடலாமா என்று கேட்கிறான். --- சரி, நிப்பாட்டிப் போட்டு என்ன செய்யப் போகிறாய் . ......அவன் துடியாட்டமாய் செய்யும் வேலைகளை உன்னால் செய்ய முடியுமா ....... என்னுடைய அண்ணர், தங்கச்சி பிள்ளைகள் எல்லாம் இப்ப வளர்ந்து அஞ்சாறு பேர் எங்கள் கடையில் வேலை செய்யினம்தான் . ...... ஆனால் எப்ப பார் நான் பெரிசு நீ பெரிசு என்று தினம் தினம் சண்டையும் சச்சரவுமாய் கடை இருக்கு ......எல்லாம் நான் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன் . ........ எங்கே சந்துருவின் இடத்தை நிரப்பக்கூடிய ஒருவரை நீங்கள் இருவரும் சொல்லுங்கள் நான் ஏற்றுக் கொள்கிறேன் . ...... --- மூத்தமகன் சொல்கிறார் . ....... தம்பி அப்பா சொல்வதும் சரியாத்தான் இருக்கு ....... தற்சமயம் சந்துருவைவிட நம்பிக்கையானவன் எங்களிடம் இல்லை . ..... நீ இங்கே கடை பார்க்க வேண்டும் . ..... நான் கொழும்பில் கடையை கவனிக்க வேண்டும் . ....... நாங்கள் கொஞ்சம் அசந்தாலும், இது மற்ற மற்ற வியாபாரம் போல் கிடையாது, எல்லாம் சேதாரமாய் போயிடும். அதனால் நாங்கள் நல்லா யோசித்து சந்துருவை எங்களில் ஒருவனாய் நினைத்து முடிவெடுப்போம் என்று சொல்கிறார் . --- மாணிக்கமும் தம்பி , நீ சொல்வது ரெம்பச் சரி . ....... பின் அவர்கள் கலந்துரையாடி ....... சிறிது நேரத்தின்பின் அவர்கள் தங்களுக்குள் விவாதித்து சந்துருவை மீண்டும் உள்ளே அழைக்கின்றனர். அவன் வந்ததும் மாணிக்கம் முதலாளி அவனைப் பார்த்து சொல்கிறார், தம்பி சந்துரு நீ சொன்னதை நாங்கள் யோசித்துப் பார்த்தோம் அதுவும் ஒரு வகையில் சரியென்றே படுகின்றது. நீ விரும்பியபடியே செய்யலாம். எமக்கு வரும் மேலதிகமான ஓடர்களை உனக்குத் தருகின்றோம். நீயும் குறித்த நேரத்தில் தாமதமின்றிச் செய்து தரவேண்டும்.உனக்கு வேன் ஒன்று நாங்களே வாங்கித் தருகின்றோம். மூத்தமகனைப் பார்த்து நீ அவருக்கு ஒரு நல்ல வேன் ஒன்று வாங்கிக் குடு என்று சொல்ல அவரும் சரி என்கிறார்........ சிலநாட்களில் மினிபஸ் போன்ற ஒரு வானை மாணிக்கம் சந்துருவிடம் கையளிக்கின்றார் ......... சந்துருவும் அந்த வானில் நகைகள் , பணம்கள் மறைத்துக் கொண்டு போகக்கூடியவாறு சில திருத்தங்கள் செய்து விடுகிறான் . ....... இப்பொழுது சந்துருவிடம் ஒரு மினிபஸ் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் ஓடுகின்றது. அதில் அவனும் பீற்றர் என்றொரு பெரியவரும் சாரதிகளாக இருக்கின்றனர். பீற்றர் முன்பு ஒரு ஓவசியரிடம் டிப்பர் வண்டி ஓடிக்கொண்டிருந்தவர். ஓவசியர் ஒய்வு பெறும்பொழுது அவரின் சிபாரிசுடன் சந்துருவிடம் வேலைக்கு வந்து சேர்ந்தவர். அவருக்கு குடும்பம் என்று எதுவுமில்லை. ஒரு தமையனின் குடும்பம் அனுராதபுரத்தில் வசதியாக இருக்கின்றது. எப்போதாவது அங்கு போய் வருவது வழக்கம். மற்றும்படி வேனில்தான் அவரது வாழ்க்கை எல்லாம். சந்துருவும் அந்த வேனிலேயே பயணிகளை ஏற்றி இறக்குவதும், நகைக் கடைகளுக்கு பொருட்கள் பரிமாற்றத்தையும் செய்து வருகின்றான். தனது வீட்டையும் கொஞ்சம் பெரிதாகக் கட்டி அங்கு நகைகள் செய்வதற்குத் தேவையான சில யந்திரங்களையும் வாங்கிப் போட்டிருந்தான். அங்கும் சில பொற்கொல்லர்கள் வேலை செய்கின்றனர்.அவர்களுடன் அவனது தந்தையும் தம்பிகளும் கூடமாட ஒத்தாசையாய் இருக்கின்றனர். அன்றைய பொழுது அவர்களுக்கு அவ்வளவு நல்ல பொழுதாக விடிந்திருக்கவில்லை. சந்துருவும் பீற்றரும் அவர்களது வாடிக்கையான கடைகளுக்குச் சென்று பொருட்களையெல்லாம் (நகைகள்,பவுன்கள் மற்றும் பணம் முதலியன) கணக்குப் பார்த்து எடுத்துக் கொண்டு அவற்றை வேனில் பத்திரப்படுத்தி வைத்து விட்டு நேராக பேரூந்து நிலையத்துக்கு வந்து கொழும்பு செல்லும் பயணிகளையும் ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கிப் புறப்படுகின்றார்கள். ஆணையிறவைத் தாண்டும்பொழுது அங்கு சென்றியில் நிக்கும் போலீசார் பீற்றரிடம், பார்த்துப் போங்கள் பீற்றர். அனுராதபுரத்தில் கலவரம் ஏற்படும்போல் செய்திகள் வருகின்றன.என எச்சரித்து விடுகிறார்கள். பின் இருக்கையில் இருந்த சந்துரு என்ன அண்ணை என்று வினவ அவரும் அந்தப் போலீஸ்காரர் எச்சரித்ததை சொல்கிறார். சரி விடுங்க அண்ணை , வவுனியா மதவாச்சி வரை போய்ப் பார்க்கலாம் என்று சந்துரு சொல்கின்றான்.வேனும் மிதமான வேகத்தில் செல்கின்றது. எதிரே வரும் வாகனங்களும் வழமைபோலன்றி குறைவாக இருப்பதையும் கவனித்துக் கொண்டு செல்கிறார்கள்....... சில வாகனங்கள் முன் லைற்றுகளால் அவர்களுக்கு எச்சரிக்கை செய்து கொண்டு போகின்றன . ..... அவர்களுடைய வானும் தொடர்ந்து முறிகண்டியில் சாமி கும்பிட்டு கடையில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பயணம் தொடங்கி வவுனியாவையும் மதவாச்சியையும் கடந்து அனுராதபுரத்துக்கு கிட்ட முட்டவா வந்தாச்சுது….........! வாருங்கள் போராடலாம் ............ 🐈 🐈 🐈 🐈 🐈.- இரசித்த.... புகைப்படங்கள்.
- காற்றாடி
வசீ நானும் உங்கள் கூட்டாளிதான் ......... இவர்களின் படிப்பு அலப்பறை தாங்க முடியல்ல .........! 😂- கர்ண பரம்பரையின் கனவு
சுகமான கற்பனை , சுவையாக உள்ளது . .......! 😇- களைத்த மனசு களிப்புற ......!
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- உணவு செய்முறையை ரசிப்போம் !
பூரிமசாலா ........இதை மசாலா தோசைக்கும் வைச்சு செய்யலாம் . .........! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : அடியே மனம் நில்லுனா நிக்காதுடி கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி ஆண் : வெட்கம் என்னடி துக்கம் என்னடி உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி ஆண் : முத்தம் என்னடி முத்து பெண்ணடி மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி பெண் : { மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதய்யா பாக்காத பார்வையெல்லாம் பாக்குதய்யா } (2) பெண் : காலம் கடக்குது கட்டழகு கரையுது காத்து கெடக்குறேன் கைய கொஞ்சம் புடி ஆண் : தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி அடியே மனம் நில்லுனா நிக்காதுடி ஆண் : கட்டிலிருக்கு மெத்தையிருக்கு கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு பெண் : கிட்டயிருக்கு கட்டி நொறுக்கு தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு ஆண் : தூங்காம நான் காணும் சொப்பனமே பெண் : உனக்காக என் மேனி அா்ப்பனமே பெண் : சாய்ந்து கெடக்குறேன் தோள தொட்டு அழுத்திக்க சோலைக்கிளி என்ன சொக்க வச்சுப்புடி ஆண் : இச்சை என்பது உச்சம் உள்ளது இந்திரன போல ஒரு மச்சம் உள்ளது பெண் : பக்கம் உள்ளது பட்டு பெண்ணிது என்னிடமோ இன்பம் மட்டும் மிச்சம் உள்ளது ஆண் : இது பாலாக தேனாக ஊறுவது பெண் : பாராத மோகங்கள் கூறுவது ஆண் : பாசம் இருக்குது பக்கம் வந்து அணைச்சிக்க பெண் : காலு தவிக்குது பக்குவமா புடி ..........! --- அடியே மனம் நில்லுனா நிக்காதுடி ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கோட்டையிலே ஒரு ஆலமரம் . ..........! 😁- இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.