Everything posted by suvy
-
"காதலர்தின", சிரிப்புகள். (14.02.)
அரிசி , எண்ணெய் என்று எல்லாத்திலும் கலப்படம் செய்கிறார்களே இந்த பூச்சி மருந்துகளில் கலப்படம் செய்ய மாட்டார்களா .......! 😴
-
இனித்திடும் இனிய தமிழே....!
திருக்குறளில் ஒரு பயமுறுத்தும் குறள் உண்டா, உண்டு ...... அதுதான் இது .......! 👍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பறவைகள் பலவிதம் . ......... மேல்நாட்டு நடனமும் இறுதியில் உண்டு...... நன்றாக இருக்கின்றது . ........! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! பெண் : மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே குழு : { முத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்களையே வண்ண வண்ண கதிரே கதிரே தொடு ஆயிரம் சுகங்களையே } (2) பெண் : நாடகம் ஆடிய பாடகன் ஓ நீ இன்று நான் தொடும் காதலன் ஓ ஆண் : நீ சொல்ல நான் மெல்ல மாறினேன் நன்றியை வாய் விட்டு கூறினேன் பெண் : தேர் அழகும் சின்ன பேர் அழகும் உன்னை சேராதா உடன் வாராதா ஆண் : மான் அழகும் கெண்டை மீன் அழகும் கண்கள் காட்டாதா இசை கூட்டாதா பெண் : பாலாடை இவன் மேலாட வண்ண நூலாடை இனி நீயாகும் பெண் : மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே ஆண் : நான் ஒரு பூச்சரம் ஆகவோ ஓ நீள் குழல் மீதினில் ஆடவோ ஓ பெண் : நான் ஒரு மெல்லிசை ஆகவோ நாளும் உன் நாவினில் ஆடவோ ஆண் : நான் படிக்கும் தமிழ் கீர்த்தனங்கள் இங்கு நாள் தோறும் உந்தன் சீர் பாடும் பெண் : பூ மரத்தில் பசும் பொன் நிறத்தில் வளை பூத்தாடும் உந்தன் பேர் பாடும் ஆண் : மா கோலம் மழை நீர் கோலம் வண்ண நாள் காணும் இந்த ஊர்கோலம்......! --- மலை கோவில் வாசலில் ---
-
அதிசயக்குதிரை
- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கிருபன் அவர்களுக்கு ....., எனது பதிலில் 26 வது கேள்விக்கு pumra வுக்குப் பதிலாக jofra archer என்பவரைச் சேர்த்து விடவும் ......! 😁- இன்றைய அதிசயம்
இப்பொழுது யாழ்ப்பாண நகரத்தில் மண்வாசனையை நுகர முடியாது அவ்வளவுக்கு எல்லா வீடுகளிலும் சீமெந்து போட்டு மண்தரையை மூடி விட்டார்கள். உண்மையை சொல்லணும் என்றால் மழை பெய்து முடிய நல்ல பனங்காட்டுக்குள் ஒற்றையடிப் பாதையில் நடந்து செல்லவேண்டும், அப்போது தெரியும் நிஜமான மண்வாசனை .........! 😇- வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
வாழும்வரை போராடு . ........ 09. அடுத்தநாள் காலையில் பீற்றரின் அண்ணருடைய வீட்டில் இருந்து மினிபஸ்சும் லொறியுமாக இரு வாகனங்களும் கிளம்பி புத்தளம் போகாமல் குருநாகல் வீதியைப் பிடித்துச் சென்று தொடர்ந்து கொழும்பு செல்கிறார்கள். வழியில் அவ்வளவு பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆங்காங்கே பயணிகளையும் இறக்கி விடுகிறார்கள். லொறியை அவர்களது விலாசத்தில் கொண்டுபோய் சேர்ப்பித்து விட்டு அங்கிருந்து சந்துரு போன்மூலம் இராகவனின் தந்தை தாமோதரத்துக்கும், மாணிக்கம் முதலாளிக்கும் தங்கள் நலமாக வந்து சேர்ந்த தகவல் சொல்லிவிட்டு அவரின் மூத்தமகனுடைய கடைக்குச் சென்று எல்லாப்பொருட்களையும் ஒப்படைத்து கணக்கு வழக்கெல்லாம் முடித்துக் கொண்டு ஒரு லொட்ஜுக்குச் சென்று பீற்றரும் சந்துருவும் ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள். இரண்டு நாட்களின் பின் அவர்கள் யாழ்ப்பாணம் வந்ததும் அவர்களை மாணிக்கம், தாமோதரம் எல்லோரும் பாராட்டிக் கொண்டாடி விட்டார்கள். அவர்களுடைய கொழும்பில் இருந்து கொண்டுவந்த பொருட்கள் கணக்குகள் எல்லாம் முடித்து விட்டு இராகவன் எங்கே என்று கேட்கிறான். அப்போது தாமோதரம் அவனிடம் கலவரம் நடந்த அன்று ஸ்ரீ காந்திடம் இருந்து அவனுக்கு போன் வந்ததும் அவன் பெட்டியில் தனது உடுப்புகள் எல்லாம் அள்ளிப் போட்டுக்கொண்டு திரும்பி வர சில நாளாகும் என்று சொல்லிப் போனவன்தான் இன்னும் ஆளைக் காணவில்லை. எங்களுக்கும் எங்கேயென்று தெரியவில்லை என்ன நடக்குது என்று ஒன்றும் புரியவில்லை என்று சொல்கிறார். சரியப்பா நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்கவேண்டாம் நான்போய் விசாரித்து வந்து சொல்கிறேன் என்று சொல்லிப் போகிறான். அவர் வீட்டில் இருந்து கிளம்பியதும் அவர்கள் பஸ்ஸை ஒரு மோட்டார் சைக்கிள் பின்தொடர்ந்து வந்து முன்னால் வந்து மறிக்கின்றது. அதில் இருந்து ஸ்ரீ காந் இறங்கி வந்து சந்துருவிடம், டே சந்துரு இவன் இராகவனைக் கண்டனியோ அவனைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. --- நீ என்னடா சொல்கிறாய் அன்று நீ போன் பண்ணித்தான் அவன் வெளியே போனவனாம்.அவர்களும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று சந்துரு சொல்ல.... --- ஓமடா நான் அன்று சொன்னதுதான் ஆனால் இப்ப பிரச்சனையெல்லாம் சரிப்பண்ணிப் போட்டன் அதுதான் அதை சொல்ல அவனைத் தேடுகிறேன் கிடைக்கிறான் இல்லை. --- சரி....சரி.....முதலில் என்னுடைய வீட்டுக்கு போய் முகத்தைக் காட்டிவிட்டு அவனைப் போய்த் தேடலாம் என்று ஸ்ரீகாந் திடம் சொல்லிவிட்டு பீற்றரிடம் அண்ணை நீங்கள் போய் வண்டியைக் கழுவிக்கொண்டு வீட்டுக்கு வாங்கோ என்று அனுப்பிவிட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் சந்துருவின் வீட்டுக்குப் போகின்றனர்.வீட்டுக்கு வெளியே சைக்கிளை விட்டுட்டு உள்ளே போனால் அங்கு விறாந்தையில் சந்துருவின் தந்தையுடன் இராகவன் செஸ் விளையாடியபடி தேநீர் குடித்துக் கொண்டிருக்கிறான். --- அந்தக் காட்சியைக் கண்ட ஸ்ரீகாந், டே இராகவ் நீ ஒழிக்கிறதுக்கு இதைவிட சிறந்த இடம் ஒன்று கிடையாதுடா என்று சொல்ல எல்லோரும் துன்பங்களை மறந்து சிரிக்கிறார்கள்.......! யாவும் கற்பனை. யாழ் இணையம் அகவை 27 க்காக ……… ! ஆக்கம் சுவி ..........! 💚 💚- ஓணாண்டி அன்போட கோஷான் நான் எழுதும் கடிதமே!
நானும் இப்போதுதான் இவற்றைப் படிக்கிறேன் ....... ஆஹாங், எப்பேர்பட்ட நகைச்சுவை எழுத்தாளனை இந்த நாசமாய்போன அரசியல் திசைமாறிப் போக வைத்து விட்டதே ........ தொடர்ந்து நகைச்சுவைகளாக எழுதுங்கள் . ........ இந்த யாழ் 27 ம் அகவையில் இருந்து மீண்டும் ஆரம்பியுங்கள் .........! 👍 கோஷானின் கவிதைக்கு ஒரு ஆகர்ஷண சக்தி இருக்கத்தான் செய்யுது . ........!- உணவு செய்முறையை ரசிப்போம் !
சுறா புட்டு . .......... செம ........! 👍- வழிகாட்டி ரன்னர்கள்: பார்வை மாற்றுத் திறனாளிகள் தடகளப் போட்டிகளில் பங்கெடுக்க உதவும் இவர்கள் யார்?
குறைபாடு உள்ளவர்களை அது தெரியாதபடி அரவணைத்துச் செல்லும் உத்தமர்கள்..........அதற்கு எவ்வுளவு பொறுமையும் விடாமுயற்சியும் வேண்டும் ...........! 🙏- ஓணாண்டி அன்போட கோஷான் நான் எழுதும் கடிதமே!
என்னத்தை சொல்ல ........ கமல் கண்டால் கதறிடுவார் ...........! 😂 அடுத்த கவிதை வருமுன் ஓணாண்டி தயவு செய்து மேடைக்கு வரவும் . ........!- வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
வாழும்வரை போராடு ....... 08. என்ன அப்பா இப்படி சொல்லி விட்டீர்கள். மற்ற லொறியை சந்துரு எடுத்துக் கொண்டு போயிருக்கிறான். அந்த வண்டியிலும் பல லட்ஷம் பெறுமதியான பொருட்கள் எல்லாம் இருக்கு. அவையெல்லாம் என்னவாயிற்றோ தெரியவில்லையே. --- இந்தா பார் இராகவ். முதலில் எரிந்த வண்டியின் சாரதியும் கிளீனரும் என்ன ஆனார்கள் என்று பார். அவனை வெட்டினது, அடித்தது என்று இவன் சொல்கிறான். முதலில் அவர்களின் நிலமையைக் கவனிக்க வேண்டும். மேலும் இந்த நேரத்தில் எங்கட ஆள் என்று சந்துரு அங்கிருக்கிறான். அவனது நிலைமையையும் நீ யோசித்துப் பார்க்க வேண்டும். உன்னுடைய லொறி மட்டுமல்ல, எங்களுடையதும் எம்போன்ற பல கடைக்காரர்களின் நகை, நட்டு, பணம் எல்லாம் அவன் பொறுப்பில் இருக்கு தெரியுமா .... --- உங்களுக்கு என்ன தெரியும் அப்பா, நாங்கள் படிப்பை விட்ட காலத்தில் இருந்து நான் தனியாக உழைத்து நகரில் சொந்தமாய் ஒரு கடையும், எனக்கென்று ஒரு வீடு, மற்றும் இரண்டு புத்தம்புது லொறிகளும் சம்பாதித்திருக்கிறேன் என்று அவனுக்கு கொஞ்சம் பொறாமையுண்டு என்று எனக்குத் தெரியுமப்பா..... அவனுக்கு இன்னும் அந்தப் பழையவீடு ஒரு வேன் அதுவும் மாணிக்கம் மாமா வாங்கிக் கொடுத்தது . வேறு என்ன இருக்கு அவனிடம். இப்ப என்னுடைய லொறியொடு அவ்வளவு பொருட்களையும் தான் எடுத்துக் கொண்டு விடலாம் என்று திட்டம் போட்டிருப்பான். --- பொத்தடா வாய்......என்னடா சொல்லுறாய். கோத்தை மாதிரி அறிவு கெட்ட கதை கதையாதை சொல்லிப் போட்டன். இதற்கு மேலும் ஒரு வார்த்தை தப்பாகப் பேசினால் பல்லுடைத்துப் போடுவன். நீ இங்க ஏ. சி வீட்டுக்குள் இருந்து கொண்டு விண்ணானம் கதைக்கிறாய். அவன் அங்கு கலவரம் நடக்கும் இடத்தில் உயிரைப் பணயம் வைத்து நிக்கிறான். அவனிடம் என்ன இருக்கென்று கேட்கிறியா நீதி நேர்மை, யாரையும் ஏமாற்றாத குணம் இருக்கு. உன்னிடம் இருக்கா.....செய்யிறது முழுக்க கள்ளக் கடத்தலும் கஞ்சா விக்கிறதும் பெயருக்கு ஜவுளி வியாபாரம் செய்கிறன் என்று பினாத்தல் வேறு. அப்போது வீட்டுத் தொலைபேசி அழைக்கிறது. இராகவன் சென்று எடுக்கிறான். எதிர் முனையில் மாணிக்கம் பேசுகிறார். தம்பி இராகவனோ , அப்பாவைக் கொஞ்சம் அழைக்கிறீர்களா. சரி ஐயா என்று சொல்லிவிட்டு போனைத் தந்தையிடம் தரும்போது " உங்கள் நண்பர் மாணிக்கம் பேசுகிறார். சந்துருவைப் பற்றி நல்லா "டோஸ்" தருவார் வாங்குங்கோ என்று சொல்லிக் கொடுக்கிறான். --- தாமோதரம் அதை வாங்கி ஹலோ மாணிக்கம் இங்கு நான் பேசுகிறேன், என்ன விஷயம். --- செய்திகள் பார்த்தனீங்களோ, அனுராதபுரத்தில் ஒரே கலவரமாம். தம்பி சந்துருவும் நேற்றுப் போனவர்.ஒன்றும் தெரியேல்ல. உங்களுக்கு ஏதாவது செய்திகள் தெரியுமோ என்றுதான் எடுத்தனான். --- நீங்கள் பயப்படாதையுங்கோ. அவன் பத்திரமாய் இருக்கிறான் என்றுதான் நினைக்கிறேன். எங்களுடைய ஒரு லொறியும் சாமான்களுடன் அவன் பொறுப்பில்தான் இப்போது இருக்குது. நீங்கள் நிறையப் பொருட்கள் குடுத்தனுப்பினனீங்களோ என்று கேட்க...... --- இல்லையில்லை, அவை போனாலும்கூட பிறகு சம்பாரிச்சுக் கொள்ளலாம், பொடியனுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது. அதுதான் விசாரிச்சனான். நீங்களும் ஒன்றுக்கும் யோசிக்காதையுங்கோ, எனக்குத் தகவல் ஏதாவது தெரிந்தாலும் நான் உங்களுக்கு அறிவிக்கிறேன் என்று சொல்லிப் போனை வைக்கிறார். --- பின் இராகவனிடம் திரும்பி பார்த்தியா அவர் அவன்மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார். அதில் கொஞ்சமாவது அவன் நண்பன் உன்னிடம் இருக்க வேண்டாமா. --- ஓமப்பா நானும் எதோ கவலையில் அப்படிப் பேசிப்போட்டேன். அதற்காக மிகவும் மனம் வருந்துகிறேன் அப்பா. இப்பவே நானும் அங்கு சென்று நிலமைகளைப் பார்க்கின்றேன் என்று புறப்பட எத்தனிக்க .... --- சரி.....சரி..... எதுக்கும்கடையில் இருந்து உன்னுடன் இரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போ என்று சொல்கிறார். --- மறுபடியும் ஒரு போன் வருகின்றது. இம்முறை ஸ்ரீகாந்த்திடம் இருந்து இராகவனுக்கு.......என்னடா சொல்லு.... --- அதெடா இராகவ் எங்களுடைய சாமான்கள் கொண்டுவந்த போட் இரண்டும் நடுக்கடலில் அடிபட்டுப் போச்சுதடா....கடற்படையைக் கண்டதும் பொருட்களை கடலில் தள்ளிப் போட்டாங்கள். இப்ப நீ ஒரு இடமும் திரிய வேண்டாம், யாராவது உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தங்கவும். உங்கள் வீட்டிலும் நிக்காதே, நான் எல்லாவற்றையும் சரி பண்ணிப்போட்டு மறுபடி உன்னைத் தொடர்பு கொள்ளும்வரை எனது வீட்டுக்கும் போன் எடுக்காதே. மிகக் கவனமாயிரு. --- டே ....என்னுடைய ஒரு லொறியும் உன்னுடைய இரண்டு லொறிகளும் கலவரத்தில் எரிச்சுப் போட்டாங்களடா....மற்ற லொறி இப்பொழுது சந்துரு வசம் இருக்கு, அதுவும் என்னாகும் என்றே தெரியவில்லை. --- டே இராகவ்......போனதைப் பற்றியெல்லாம் இப்ப யோசிக்கிற நேரமில்லை. சந்துரு சுழியன் எப்படியும் நல்ல செய்தியுடன்தான் வருவான். அதிகம் கவலைப்படாதே என்று சொல்லிப் போனை வைத்து விட்டான்...........! வாருங்கள் போராடலாம் ........... 🦔 🦔 🦔 🦔 🦔 🦔 🦔 🦔 .- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காலமகள் மடியினிலே ஓடும் நதி . .........! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! பெண் : என்னை மானமுள்ள பொண்ணு இன்னு மதுரையில கேட்டாக குழு : மன்னார்குடியில் கேட்டாக அந்த மாயவரத்தில கேட்டாக பெண் : சீர் செனத்தையோட வந்து சீமையில கேட்டாக குழு : அந்த சிங்கப்பூரிலும் கேட்டாக நம்ம சின்னமனூர்லயும் கேட்டாக பெண் : { அதை எல்லாம் உன்னால வேணாமுன்னு சொன்னேன் தன்னால என் மச்சான் உன் மேலே ஆச பட்டு வந்தேன் முன்னால } (2) பெண் : கொண்ட முடி அழக பார்த்து கோயம்பத்தூரிலே கேட்டாக நெத்தியில பொட்ட பார்த்து நெல்லூரில கேட்டாக குழு : ரெண்டு புருவ அழக பார்த்தாக ஒரு கோட்டையில் இவள கேட்டாக பெண் : கண்ணழக பார்த்து பார்த்து கண்டமனூரிலே கேட்டாக மூக்கழக பார்த்து என்ன மூக்கையன் கோட்டையில் கேட்டாக பெண் : கோபமுள்ள பொண்ணுன்னு என்ன கோட்டையில கேட்டாக பாசமுள்ள பொண்ணுன்னு என்ன பண்ணைபுரத்தில கேட்டாக பெண் : இத்தனை பேரு சுத்தி வளைச்சும் உத்தம ராசா உன்ன நினைக்கும் பத்தினி உள்ளமையா பெண் : வேண்ட ஒரு சாமியுமில்ல விரும்பி வந்தேன் உங்கள உன்ன விட யாரும் இங்கே உருப்படியா தோணல குழு : நல்ல வாட்டமுள்ள ஆம்பள உன்ன மறக்க இவளுக்காகல பெண் : வாரி கட்டி தோளில் அணைச்சு வெச்சுக்கங்க வேற கேக்கல மாறி நீங்க போனீங்கன்னோ மனசு இப்போ ஆறல பெண் : தொட்டணைக்க கூடாதா என்ன சூடி கொண்டா ஆகாதா பட்டு துணி மேலாக்கு அத தொட்டு இழுக்க கூடாதா பெண் : உள்ளத எல்லாம் சொல்லி முடிச்சேன் நல்ல முடிவு சொல்லுங்க மச்சான் இன்னமும் சொல்லனுமா .........! --- என்னை மானமுள்ள பொண்ணு இன்னு ---- இரசித்த.... புகைப்படங்கள்.
முதல்முத்தம் என்றும் உன்னதமானது . ........! 😍- இடியப்பமும்.. முரல் மீன் சொதியும்.
இடியப்பமும் முரல்மீன் சொதியும் சுவைதான் . ......... ஆனால் எனக்கு முரல் கருவாடு மிகவும் பிடிக்கும் . ......நாங்கள் சீசனுக்கு மாதகல்லுக்கு சென்று ரெண்டு சிற்பமாக (குடலையாக கட்டியபடி இருக்கும் ) முரல் கருவாடு வாங்கி வருவதுண்டு . ........ அதை அப்படியே அடுப்புத் தணலுக்குள் புதைத்து விட்டு சுட்டதும் எடுத்து புட்டுடன் கடித்துக் கொண்டு சாப்பிட சுவையோ சுவையாக அந்தமாதிரி இருக்கும் . ........ இப்ப எல்லா நினைவுகளும் கனவாகிப் போச்சு . .........! 😇 பகிர்வுக்கு நன்றி சிறியர் . ........!- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- இந்தியாவில் இலங்கை சார்பாக பதக்கங்களை குவித்த மலையக சாதனை வீரர்!
பாராட்டுக்கள் விஜின் . ......! 💐- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆனால் நெடுநாட்கள் ரைவருக்கு அருகில் முன் சீட்டுகளில் இருந்து எல்லோரையும் கதிகலங்க வைத்தவர் என்பதையும் மறக்கக் கூடாது .......... வீரப்பையனே வீரம் எல்லாம் தொலைத்து போர்க்களத்தில் இராவணன் போல் பம்மிக் கொண்டு இருந்தவர் ..........! 😂- அதிசயக்குதிரை
- சிரிக்க மட்டும் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
வாழும்வரை போராடு . ........... 07. அந்த இடம் ஒரே கலவர பூமியாய்க் கிடக்கு. யார் கொள்ளையடிக்கிறார்கள் யார் வாகனங்களைப் போட்டுக் கொழுத்துகிறார்கள் என்று எதுவும் விளங்கவில்லை. பாதிக்கப் பட்டவர்கள் எல்லாம் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாய் நிக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு கும்பலையும் விலக்கி விலக்கிப் பார்த்துக் கொண்டு போக அஞ்சாறுபேர் சந்துரு அண்ணா என்று கத்திக் கொண்டு ஓடிவருகிறார்கள். அவர்களது உடல்முழுதும் வெட்டுக்காயங்களும் இரத்தங்களும், அடிபட்ட இடங்கள் எல்லாம் வீங்கிக் கிடக்கு. அவர்களை பயப்பிடவேண்டாம் என்று சொல்லி ஆசுவாசப்படுத்தி முடிந்தளவு அங்கிருந்த எல்லோருக்கும் தண்ணீரும் உணவும் கொடுக்கிறான். --- அண்ணா ஒரு பத்து நிமிடத்துக்குள் வாகனத்துக்குள் இருந்த முழுச் சாமான்களையும் கொள்ளை அடித்துவிட்டு கொழுத்திப் போட்டாங்கள் அண்ணா. நாங்கள் கொண்டுவந்த மூன்று லொறியையும் அங்கே பாருங்கண்ணா, சாம்பலாய் கிடக்குதுகள். என்று அவர்கள் மாறி மாறி சொல்லிக்கொண்டிருக்கும்போது அவ்விடத்துக்கு போலீசும் அம்புலன்ஸ் வண்டிகளும் இராணுவ வாகனங்களுமாய் வந்து குவிகின்றன.பெருங்காயம் பட்ட அவர்களையெல்லாம் ஆறுதல் சொல்லி அம்புலன்ஸ்களில் ஏற்றி விட்டு நாளைக்கு பீற்றரின் அண்ணர் வந்து உங்களைப் பார்ப்பார், ஆகவேண்டிய காரியங்கள் எல்லாம் செய்வார் பயப்பிட வேண்டாம் என்று சொல்லி அனுப்பிவிட்டு மீண்டும் இவர்கள் வீட்டுக்குவர விடிந்து விட்டிருந்தது. நல்லகாலம், ஒரு உயிர்சேதமும் ஏற்படவில்லை. சந்துருவுக்கு மனதில் இருந்த பாரமும் அகன்றிருந்தது. அடுத்தநாள் காலை யாழ்ப்பாணத்தில் பத்திரிகைகளிலும்,அங்கிருந்து வந்தவர்கள் மூலமாகவும் அனுராதபுரத்துக் கலவரமே பேசுபொருளாக இருக்கின்றது. இராகவன் கையில் அன்றைய காலைப் பத்திரிகையுடன் தந்தையிடம் ஓடி வருகிறான். கூடவே ஒரு மனிதனும் வருகிறான். தகப்பன் தாமோதரம் ரூபவாஹினியில் அன்றைய அவசரச் செய்திகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்.அதிலும் இந்தக் கலவரச்செய்திகள்தான் முக்கிய செய்தியாக ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்கு. --- அப்பா தெரியுமா செய்தி என்னுடைய ஒரு லொறியும் சாமான்களும் முற்றாக எரிந்துபோய் விட்டது. இதோ இவன்தான் அதைப் பார்த்துக் கொண்டு எப்படியோ அந்தக் காடையர்களிடம் இருந்து தப்பிப் பிழைத்து வந்திருக்கிறான். --- தாமோதரம் அவனைப் பார்த்து தம்பி இங்கே வா, என்ன நடந்தது வடிவாய் சொல்லு. --- ஐயா, அந்த அதிகாலைநேரம் முன்னுக்கு வந்த ஐந்தாறு லொறிகளை காட்டுக்குள் இருந்து திடீரென்று வந்த காடையர்கள் மறித்து வண்டிக்குள் இருந்தவர்களையெல்லாம் வெளியே இழுத்துப் போட்டு கத்திகளாலும் பொல்லுகளாலும் தாக்கிக் கொண்டிருக்க, மற்றும் பலர் ஓடிவந்து லொறிகள் எல்லாவற்றையும் உடைத்து பொருட்கள் எல்லாவற்றையும் தாங்கள் கொண்டுவந்த லொறி, டிராக்டர்,கார் போன்ற வாகனங்களில் ஆளாளுக்கு கொள்ளையடித்துக் கொண்டு போகிறார்கள். பின் கும்பல் கும்பலாக அந்த வாகனங்களை எரியூட்டினார்கள். --- எங்கட லொறியின் சாரதி மற்றும் கிளீனரைப் பார்த்தாயா. --- ஓம் ஐயா, அவருக்கும் அடியும் வெட்டும் விழுந்திருந்தது, கிளீனர் முதலே இறங்கி காட்டுக்குள் ஓடியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் அவரைக் காணவில்லை. --- அப்ப மற்ற லொறி என்னவானது என்று தெரியுமா. --- நானும் அடிவாங்கி நீண்ட தூரம் ஓடி ஒரு ட்ராக்டரில் தொத்திக் கொண்டு வரும்போது மிகிந்தலைச் சந்தியில் சந்துரு அண்ணாவின் மினிபஸ்சும் உங்களின் மற்ற லொறியும் திரும்பிப் போவதைப் பார்த்தேன் ஐயா. எங்கும் கலவரமயமாய் இருந்தபடியால் என்னால் மேற்கொண்டு எதையும் கவனிக்க முடியவில்லை ஐயா. --- சரி, நீ போகலாம். தம்பி இவனுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பு என்று சொல்கிறார். இராகவனும் அவனுக்கு பணம் கொடுத்து நன்றியும் சொல்லி அனுப்பி விட்டு உள்ளே கோபத்துடன் வருகிறான்.............................! வாருங்கள் போராடலாம் . .......... 🐪 🐪 🐪 🐪 🐪 🐪 🐪. - யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.