Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. "மனமே கலங்காதே " ஊக்கம் தந்திடும் ஒரு கவிதை . .........! 👍 "இயற்கையின் இன்ப அழகில் " மனசை மலர்விக்கும் ஒரு கவிதை .........! 👍
  2. வேண்டாம் . ........ நானும் கலந்து கொள்வேன் .......இப்போ சிறிது களைப்பாக இருக்கிறது .....இரண்டொரு நாளில் சந்திக்கலாம் . ........! 😁
  3. வாழும்வரை போராடு . .......... 04. காலங்கள் எதற்காகவும் காத்திருப்பதில்லை. அவை தன் பாட்டுக்கு நகர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த இரு வருடங்களில் இராகவன் சந்துரு வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டிருந்தன.....ஒரே இடத்தில் வசித்தும் வேலைப்பளுவால் அவர்கள் சந்திப்பதும் அரிதாகவே போய்விட்டிருந்தது. இராகவன் ஸ்ரீ காந்துடன் சேர்ந்து ஜவுளி வியாபாரமும் அதனூடே சிறிதாகவும் பெரிதாகவும் கடத்தல்களும் செய்து பெரும் முதலாளியாக வந்திருந்தான். யாழ்ப்பாணம் பெரியகடை வீதியில் ஒரு பெரிய ஜவுளிக்கடையும் வாங்கி விட்டிருந்தான் . அத்துடன் இரண்டு புதிய இசுசு லொறிகளும் யாழ்ப்பாணம்--- கொழும்பு என்று ஓடுகின்றன. சராசரி பதினைந்துபேர்கள் அவன் கடையிலும் லொறியிலுமாக வேலை செய்கின்றார்கள். அவனும் ஸ்ரீகாந்தும் தங்களது ஒரு ஜீப்பிலோ காரிலோ திரிந்து திரிந்து இடையில் வரும் தடைகளை விலக்கி சுழன்று சுழன்று வேலை செய்கின்றார்கள். சந்துருவும் இந்த இரு வருடங்களில் மாணிக்கம் ஜூவலரியில் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்து நகைத்தொழிலையும் அதன் நுணுக்கங்களையும் நன்றாகக் கற்றுக் கொண்டு வருகின்றான். மாணிக்கத்தின் இரு மகன்களுடனும் சேர்ந்து அவர்களுக்கு உதவியாக கடையில் வியாபாரம் செய்வதும், அன்றன்றைய வரவு செலவுகளைக் கணக்கெடுத்து வங்கிகளில் பணம் வைப்பிடுவது என்று மிகவும் நேர்மையாக அவர்களுக்கு உதவியாக இருந்தான். மற்ற நேரங்களில் கடையின் உள்ளே பட்டறையில் மோதிரம், காதணிகள்,வளையல்கள், சங்கிலிகள் என்று எல்லாம் துப்பரவாகவும் அழகாகவும் செய்யக் கற்றிருந்தான். கல்யாண நாட்களில் தாலிக்கொடி பின்னும் வேலைகள் அதிகம் வருவதால் அவர்களின் அனுமதியுடன் கடையில் இருந்து தங்கக் கம்பிகளை வீட்டிற்கு எடுத்துச் சென்று தனது தந்தை தம்பிகளுக்கும் அதை இழுத்துப் பின்னுவதற்கு பழக்கி விட்டிருந்தான். பாய், பெட்டி இழைப்பதில் வரும் வருமானத்தைவிட இதில் அதிக வருமானம் வருவதால் அவர்களும் இதை ஆர்வமுடன் பழகிச் செய்துகொண்டு வருகின்றார்கள் . அதனால் மாணிக்கம் ஜுவல்லரியில் வாடிக்கையாளர்கள் குடுக்கும் வேலைகள் தாமதம் இல்லாமல் அவர்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்தன.வியாபாரமும் அமோகமாய் நடந்து கொண்டிருந்தது. வீட்டிலும் அவர்களது வாழ்வும் மேம்பட்டிருந்தது. சென்ற சில மாதங்களுக்கு முன் மாணிக்கம் மூப்பின் காரணமாய் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார்.அதனால் அவர் தனது இரு மகன்களையும் குடும்பத்துடன் வீட்டிற்கு அழைத்திருந்தார். அவர்களோடு அவர்களது குடும்ப வக்கீலும் வந்திருந்தார். அவரது மூத்த மகன் கொழும்பில் பெரிய ஷோரூமுடன் கூடிய நகைக்கடை வைத்திருக்கின்றார். அவருடைய கடைக்கும் இங்கிருந்தே நகைகள் எல்லாம் போய் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது பெரும்பாலும் சந்துருவே கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் அவர்களுடைய ஒரு வானில் பொருட்களை ஏற்றி இறக்கிக் கொண்டு வருகின்றான். மாணிக்கத்தின் இளையமகன் தந்தையுடன் இருந்து இந்தக் கடையை நடத்தி வருகின்றான். மேலும் கடையில் ஆரம்பகாலத்தில் இருந்து அவருடன் கூடவே வேலைசெய்து வந்த தொழிலாளர்களும் அங்கு வந்திருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் மாணிக்கம் அவ்வப்போது யாழ்பாணத்திலேயே ஆங்காங்கே வீடுகள் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அவர்களுடைய வீட்டு வைபவங்கள் மற்றும் பெரிய செலவுகள் யாவையும் மாணிக்கமே மனங்கோணாது செய்துகொண்டு வந்திருந்தார் . அதனால் அவர்கள் எல்லோருடைய கணக்குகள் எல்லாம் அதிக சிரமமின்றி முடித்து தேவையான பணம் எல்லாம் குடுத்து அவர்களை ஓய்வெடுக்க அனுப்பி வைத்தார்கள். இக்காலகட்டத்தில் மாணிக்கத்தின் கடையில் அவரது சகோதர சகோதரிகளின் பிள்ளைகள் என்று பலர் வந்து வேலை செய்கிறார்கள். அதனால் உறவினர்களுக்குள்ளே சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவது வாடிக்கையாகி இருந்தது. அது சிலசமயங்களில் சந்துருவையும் பாதித்து வருகின்றது. அதனால் அவனும் இப்பொழுது ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறான். வாருங்கள் போராடலாம் . ........ 🐐 🐐 🐐 🐐.
  4. ஆத்தங்கரை ஓரத்திலே யாருமில்லா நேரத்திலே . ..........! 😍
  5. வணக்கம் வாத்தியார் . ...........! தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாரும் இல்ல கம்பங்கூழில் போட்ட உப்பு கஞ்சி எல்லாம் சேர்தல் போல கண்டபோதே இந்த மூஞ்சி நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள நாக்குல மூக்கையே ஹே ஹே தொட்டவன் நானடி பார்வையால் உசுரையே ஓகோ தொட்டவ நீயடி ஐயாறெட்டு நெல்லைப் போல அவசரமா சமஞ்ச ஐத்தமகென் பஞ்சத்துக்கு ஆதரமா அமஞ்ச குட்டிபோட்ட பூனைப் போல காலச் சுத்திக் கொழஞ்ச பாவமென்னு நீவி விட்டா பல்லுப் போட துணிஞ்ச சொந்தக்காரன் நான் தானே தொட்டுப் பாக்கக் கூடாதா கன்னம்தொடும் கை ரெண்டும் கீழேக் கொஞ்சம் நீளாதா இந்த நாட்டில் தீண்டமை தான் இன்னும் உள்ளதா வயசுக்கு வந்தப் பூ ஒகோ ஆசையே பேசுமா வண்டுக்கும் பூவுக்கும் ஒகோ சண்டையா சத்தமா? மாலையும் சூடவில்ல கம்மாக்குள்ள ஒத்த மரம் அங்கே போவோம் மாமா கம்மாத்தண்ணி வத்தும்போது திரும்பிறுவோம் மாமா நீச்சல் எல்லாம் சொல்லித் தாரேன் நீயும் கொஞ்சம் வாமா அங்கே இங்கே கையிப்படும் சொல்லிபுட்டேன் ஆமா நிலாக் கறைய அழிச்சாலும் உன்னைத் திருத்த முடியாது பொரட்டிப்போட்டு அடிக்காம ஆமை ஓடு ஒடையாது போகப் போக மாமனுக்கு புத்தி மாறுது கிள்ளவா அள்ளவா ஓகோ சொல்லடி செய்யலாம் வேட்டியா சேலையா ஒகோ பட்டிமன்றம் வைக்கலாம்.......! --- தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் ---
  6. அது விசுவாமித்திரர் பிரியன் ......... வசிட்டர் பாவம் . .........! 😁
  7. நான் ssc படித்தபின் விடுமுறையில் கொழும்பில் அத்தானின் கடைக்குப் போயிருந்தேன் . அப்போது அரைக் காற்சட்டைதான் அணிவது வழக்கம் . அன்று கொல்பிட்டியில் பிரபலமான சாப்பாட்டுக்கடை ......... அதற்கு பெற்றா சந்தையில் தேவையான மரக்கறி சாமான்கள் எல்லாம் வாங்கி வானில் ஏற்றிவிட்டு வரும்பொழுது அத்தான் நேராக ஒரு அவரது வாடிக்கையான தையல்கடைக்குப் போய் அங்கு எனக்கு அளவுகள் எடுத்து மூன்று நீளகாற்சட்டைகளும் (ஜபார்ஜி பிரதர்ஸ் துணியில் ) தைக்க சொல்லிவிட்டு ரெடிமேட்டாக மூன்று ஹென்லி சேர்ட்டுகளும் எடுத்துக் கொண்டு வந்தோம் . ....... அடுத்தநாள் கடைக்கு சென்று அவற்றைப் போட எனக்கு ஒரே கூச்சமாய் இருந்தது ......பின் அதைப் போட்டுகொண்டு யாழ்ப்பாணம் வர வீட்டிலும் சரி நண்பர்களும் சரி என்னை பகிடிபண்ணி ஒரு வழி பண்ணிவிட்டார்கள் ....... பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் பழகிவிட்டது. அந்த நாட்கள் இன்றும் மறக்க முடியாதவை ............! 😇
  8. வாழும்வரை போராடு . ........ 03. பின்பு நாகலிங்கம் மகனைப் பார்த்து என்ன தம்பி நேற்றிரவு வீட்டுக்கு வர நேரமாயிட்டுது போல. ஓமப்பா நேற்று மாலை நானும் இராகவனும் முனியப்பர் கோயிலடியில் இருந்து, படிப்பும் முடிந்து போட்டுது இனி நாங்கள் என்ன செய்யலாம் என்று கதைத்துக் கொண்டிருந்தனாங்கள் அதுதான் நேரம் போட்டுது. --- அப்ப நீ மேற்கொண்டு படிக்கேல்லையோ.பெரியப்பா கேட்க, இல்லையப்பா, அதுக்கு நிறைய பணம் செலவாகும். இப்ப எங்களிடம் அவ்வளவு வசதி இல்லையென்று எனக்குத் தெரியுமப்பா. தம்பியும் இரண்டு வருடங்களில் கல்லூரிப் படிப்பை முடித்து விடுவான்.... ஒரு விரக்தியில் சிரிக்கிறான். --- ஏனப்பு ஒரு மாதிரிச் சிரிக்கிறாய். தந்தை வினவ சந்துரு சொல்கிறான் அதில்லையப்பா மேலே படிக்க என்னிடம் மார்க்ஸ் இருக்கு மணி இல்லை......இராகவ்விடம் மணி இருக்கு ஆனால் மார்க்ஸ் இல்லை. அதுதான் என்னையுமறியாமல் சிரிப்பு வந்து விட்டது. --- அப்ப என்ன செய்யப் போகிறாய். --- அவன் ஜவுளி வியாபாரம் செய்யப் போகிறானாம். அதற்காக அவன் பெற்றோர்களும் அவனுக்கு மூன்று லட்சம் ரூபாய் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். என்னையும் விரும்பினால் கூட்டு சேரும்படி சொன்னான். இராகவனுக்கும் எங்கள் நிலைமை தெரியும்தானே. அதனால் என்னால் முடிந்தளவு பணம் போடு வரும் லாபத்தைப் பார்த்துப் பிரித்துக் கொள்ளலாம் என்று. என்ன செய்வது அவனுக்கும் மனம் கேட்கவில்லை. சிறுவயது முதல் இன்றுவரை நாமிருவரும் ஒன்றாய் இருந்து விட்டோம். இனியும் என்னைத் தனியே விடாமல் வியாபாரத்திலும் சேர்ந்து இருக்கலாம் என்று நினைக்கிறான். --- அப்ப நல்லதாய்ப் போச்சு நீயும் அவனுடன் சேர்ந்து வியாபாரம் செய்யலாம். பணத்துக்கு அதிகம் யோசிக்காதை, நானும் கொஞ்சம் பணம் தருகிறேன். மனிசியின் நகைகளும் இருக்கு என்று பெரியப்பா சொல்கிறார். நீங்கள் என்னப்பா சொல்கிறீர்கள். சந்துரு கேட்கிறான். ஆனால் நாகலிங்கம் ஏதோ யோசனையில் இருந்து விட்டு சொல்கிறார். எனக்கென்னமோ இது அவ்வளவு நல்லதாய்ப் படேல்ல என்று சொல்லும்போது மேலே இருந்து பல்லியும் உச்சுக் கொட்டிவிட்டு போகிறது. --- நான் அதுக்கு சொல்லவில்லை அண்ணா, பங்கு வியாபாரம் ஒருநாள் இல்லை ஒருநாள் பிரச்சினையில் கொண்டுவந்து விடும். "நட்போடு ஊடாடிய உறவு பொருளோடு உறவாடக் கெடும்" என்று ஆகிவிடக் கூடாது. இவன் எங்கட பிள்ளைதான் ஆனால் தனித்து ஒரு கைத்தொழிலும் தெரியாது. இந்தப் பிள்ளைகளின் நட்பும் இரு குடும்பங்களின் அந்நியோன்னியமும் என்றும் நிலைத்திருக்க வேண்டும். இராகவன் தந்தையுடன் இருப்பதால் வியாபார அனுபவம் கொஞ்சமாவது இருக்கும். ஒருவேளை நட்டமேற்பட்டாலும் அவர்களால் சமாளித்துவர முடியும். ஆனால் இருக்கும் கொஞ்ச விதைநெல்லையும் இழந்தபின் நம்மால் மீளவே முடியாது போகலாம் இல்லையா. தந்தையின் பேச்சை சந்துரு உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கிறான். --- அப்ப அவன் என்ன செய்யலாம் என்று சொல்கிறாய், அதை முதல்ல சொல்லு.பெரியப்பா கேட்கிறார். --- ம்....முதலில் இவன் ஓரிரு வருடங்கள் ஒரு தொழிலைப் பழகட்டும். அதில் நல்ல அனுபவம் பெறட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்.....அதுவரை நாங்கள் இப்ப வழமைபோல் செய்கிற பாய் பெட்டி இழைத்து விக்கிற வேலையை செய்து கொண்டிருப்போம் என்று முடிவாகச் சொல்கிறார். அன்று மாலை அவர்கள் வீட்டில் எடுத்த முடிவை இராகவ்விடம் சொல்வதற்காக சந்துரு இராகவ் வீட்டிற்கு செல்கிறான். வழியில் சிறு தோப்பு உண்டு. அதனூடாக சந்துரு செல்லும்போது எதிரில் இராகவனின் தந்தை தாமோதரம் நடைப்பயிற்சி மேற்கொண்டு நடந்து வருகின்றார்.அவரைக் கண்டதும் மிகவும் பணிவாக வணக்கம் சொல்கின்றான் சந்துரு. --- அவரும் இயல்பாக என்ன சந்துரு நலமா ........ எங்கே இராகவனைப் பார்க்க வீட்டுக்குப் போகின்றாயா என்று விசாரிக்கின்றார். --- ஓம் ஐயா. அத்துடன் உங்களையும் ஒருக்கால் பார்த்து விட்டு வரலாம் என்றுதான் வருகின்றேன். --- என்ன விஷயமென்றாலும் சொல்லு, உங்களின் வியாபாரம் சம்பந்தமாகவா...... --- ஓம் ஐயா..... --- இதோ பார் சந்துரு, நீயும் என் பிள்ளை போலத்தான்.எதுவாயினும் என்னிடம் தயக்கமின்றிக் கேட்கலாம். மகன் சொன்னவன் உனக்கும் மேற்கொண்டு படிப்பதற்கு வசதி இல்லையென்று சொன்னதாக. நீ விரும்பினால் நான் அதற்கும் உதவி செய்கின்றேன். அல்லது அவனோ வியாபாரம் செய்வதென்று பிடிவாதமாய் இருக்கிறான். அப்படியென்றால் கூட உனக்கு நான் கொஞ்சம் பணமும் தருகின்றேன். --- உங்களின் அன்புக்கு மிக்க நன்றி ஐயா. ஆனால் நான் அவற்றுக்காக உங்களைக் காண வரவில்லை என்று சொல்லியபின் அன்று மதியம் அவர்கள் வீட்டில் நடந்த விவாதங்களை சொல்கின்றான். --- அதைக் கேட்டதும் அவரும் உன் தந்தை சரியாகத்தான் சொல்லியிருக்கின்றார். இதையேதான் நாங்கள் சிறுவயதில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது என் தந்தையும் எனக்கு சொன்னவர். இராகவ்வும் அவன் தாயாரும் கஷ்ட நஷ்டம் தெரியாமல் வளர்ந்தவர்கள். அதனால் பிடிவாதம் கொஞ்சம் அதிகம். சரி.....நீ இப்போது அவன்கூட சேர்ந்து வியாபாரம் செய்யப் போவதில்லை என்றால் என்னிடம் என்ன மாதிரியான உதவி எதிர்பார்கிறாய். --- நீங்கள் சொல்வது சரி ஐயா..... நான் இப்போது உங்களிடம் கேட்பது, எனக்கு ஒரு தொழில் கற்றுக் கொள்வதுபோல் ஒரு வேலை வேண்டும். --- இது நல்ல யோசனை......நீ நல்லா வருவாய்..... இப்போது நான் உனக்கு எனது கடையில் கூட வேலை தரலாம்.....கொஞ்சம் யோசித்து ஆனால் அது சரிவராது. பின்னாளில் சிறு சிறு பிரச்சினைகள் வரலாம். பின்னும் கண்களை மூடி யோசிக்கிறார். சந்துருவும் அவர் அருகே பவ்யமாக நிக்கிறான். சற்று நேரத்தின் பின், ம்....அதுதான் சரி என்று தெளிந்து, சந்துரு எதற்கும் நீ நாளை காலை ஏழு மணிக்கு மாணிக்கம் ஜுவல்லரிக்கு வந்துவிடு. நானும் அங்கு வந்து விடுகின்றேன் எனச் சொல்லிவிட்டு தனது நடைபயிற்சியைத் தொடருகின்றார்.....! சந்துருவும் அவரது வீடு நோக்கிப் போகின்றான்...........! வாருங்கள் போராடலாம் ............ 🐇 🐇 🐇.
  9. தவறுகளை உணரும்வரை அவரும் சக்கரவர்த்திதான் ..........! 😁 நல்ல கவிதை ரசோதரன் . ........!
  10. · வெளிநாட்டில் இருக்கும் தன் கணவருக்கு மனைவி எழுதிய கடிதம் வெளிநாட்டில் இருக்கும் தன் கணவருக்கு மனைவி எழுதிய கடிதம். .......... #என்_வெளிநாட்டு_காதல்_கணவனே....! சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடினாய்..! என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டினாய்.! சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல.இரவில் மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடினாய்....! பள்ளிக்கு செல்ல மறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனை போல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுத்தாய்.....! இவை போன்ற எல்லா சொர்கத்தையும் மூன்றே மாதம் தந்துவிட்டு... எனை தீயில் தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்...! என் வெளிநாட்டு கணவா!ٌ கணவா... - எல்லாமே கனவா.......? கணவனோடு மூன்று மாதம்,கனவுகளோடு எத்தனை மாதம்? 12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ...! 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....! 4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ...! 2 வருடமொருமுறை கணவன் ...! நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!ٌ இது வரமா ..? சாபமா..? கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா? திரும்பி வந்துவிடு என் வெளிநாட்டு கணவா...! வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்…..! விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...தேவை அறிந்து... சேவை புரிந்து...உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு.....! வாரவிடுமுறையில் பிரியாணி... காசில்லா நேரத்தில் பட்டினி... இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்....! மூன்று மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு, உல்லாச பயணம்..! பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா! தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா? எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ? இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா? விரைவுத்தபாலில் காசோலை வரும்,காதல் வருமா..? பணத்தை தரும் பாரத வங்கி ! பாசம் தருமா..? நீ இழுத்து சென்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்....,அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை? உன் வெளிநாட்டு தேடுதலில்,தொலைந்து போனது - நம் வாழ்க்கையல்லவா..? விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த பாஸ்போர்ட் நமக்கு வேண்டாம்,கிழித்துவிடு! விசா ரத்து செய்துவிட்டு வா,என் காதல் கணவனே,இல்லையென்றால் விவாக ரத்து செய்து விட்டு போ.! நீ தொலைபேசியில் கொடுத்த அனைத்து முத்தத்ததையும் ஒன்றாக சேர்த்து வைத்து இருக்கிறேன்......... என்றாவது ஒரு நாள் அதையெல்லாம் உனக்கு நேரில் தரவேண்டும் என்ற ஏக்கத்தோடு........!! கனவுகளோடும்,அதைவிட ஒவ்வொரு வினாடியும் உன் நினைவுகளோடும் ..........!
  11. வாழும்வரை போராடு . ........ 02. --- உனக்கு எங்கட நண்பன் ஸ்ரீ காந்தை நினைவிருக்கா. --- யார் அவன், சென்ற வருடம் கணக்கு ஆசிரியருடன் பிணக்குப் பட்டு பாடசாலை வருவதையும் விட்டு விட்டானே அவனா. --- ஓமடா சந்துரு அவனேதான்.... அவனை சிலநாட்களுக்கு முன்பு லிங்கம் கூல்பாரில் சந்தித்திருந்தேன். இப்ப அவன் நல்ல நிலைமையில் மிகவும் வசதியாய் வாழுறானடா. இந்த இரு வருடங்களில் இரண்டு புதிய லொறிகள், அவனது ஊரில் அழகான பெரிய வீடு, கார், ஹோண்டா மோட்டார் சைக்கிள் எல்லாம் அவனிடம் இருக்குடா. --- அப்படியா எனக்குத் தெரியாதே, அப்படி என்ன வேலை செய்கிறானாம். --- எல்லாம் ஜவுளி வியாபாரம்தான் என்று கண்ணடித்துக் கொண்டே சொல்கிறான் இராகவ்.....ம்....நாங்களும் அவன்கூட சேர்ந்து செய்யலாமடா. --- என்னது கள்ளக் கடத்தலா ...... இது உனது அப்பாவுக்குத் தெரியுமா. --- தெரியாது.....ஆனால் நான் நேற்றிரவு வீட்டில் அப்பா அம்மாவுடன் கதைத்திருந்தேன்..இவையெதையும் சொல்லவில்லை. பொதுவாக வியாபாரம் செய்யப்போகிறேன் அதற்கு எனக்கு கொஞ்சம் பணம் வேண்டும் என்று மட்டும் சொன்னேன். அப்பா முதலில் சம்மதிக்கவில்லை. நிறைய புத்திமதி எல்லாம் சொன்னார். ஒரே போர்.... வியாபாரத்தில் பலப்பல நுணுக்கங்கள், தந்திரங்கள் எல்லாம் உண்டு.இப்ப ஏமாற்றும் பேர்வழிகள் அதிகமாகி விட்டார்கள். நீ ஓரிரு வருடங்கள் எங்கள் கடையில் வேலை செய். கொஞ்சமாவது வியாபாரத்தைக் கற்றுக்கொள், பின் தனியாக வியாபாரம் செய்யலாம் என்று. அதைக் கேட்டு கேட்டு எனக்கு ஒரே சலிப்பாகி விட்டது. பின்பு அம்மாதான் எனக்காக அப்பாவுடன் வாதாடி அவரை இறங்கி வரப் பண்ணிவிட்டா. --- அட இவ்வளவும் நடந்திருக்கா. நல்லா இருக்கு. பிறகு என்னடா நடந்தது சொல்லடா இராகவ். --- பிறகென்ன அப்பா சமாதானமாகி எனக்கு வியாபாரம் செய்ய இரண்டு இலட்சம் ரூபா தருவதாக சொல்லி இருக்கிறார். அம்மாவும் என்னைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போய் அப்பாவுக்குத் தெரியாமல் தானும் ஒரு இலட்சம் ரூபா தருவதாக சொல்லியிருக்கிறா. --- அட.... பரவாயில்லையே, நீ கெட்டிகாரனடா இராகவ். --- அதுதாண்டா சந்துரு நானும் சொல்கிறேன், நீ ஒரு இலட்சம் ரூபா போட்டால் கூடப் போதும், போட்ட பணத்துக்கு தகுந்த மாதிரி இலாபத்தைப் பிரித்துக் கொள்ளலாம். --- எனக்கு உடனடியாய் என்ன சொல்வதென்று தெரியவில்லை. எதற்கும் வீட்டில் கதைத்துப் பார்த்துவிட்டு சொல்கிறேன், ஒரு வாரம் அவகாசம் தா என்கிறான். இருவரும் இராகவனின் மோட்டார் சைக்கிளில் கிளம்பிச் செல்கிறார்கள். அடுத்தநாள் மதியம் கடந்து இரண்டு மணியிருக்கும் சந்துருவின் தந்தை நாகலிங்கம் வீட்டின் பின்னால் கொட்டிலில் கட்டியிருந்த பசுமாட்டை அவிழ்த்து படலையால் தெருவில் விட்டு விட்டு சாப்பிட வீட்டுக்குள் வருகிறார். உள்ளே நிலத்தில் புற்பாய் விரித்து அதில் உணவுகளை சட்டிகளுடன் கொண்டுவந்து வைத்துவிட்டு வந்து சாப்பிடும்படி அழைக்கிறார் பெரியப்பா பழனிவேல். சந்துருவோடு அவரது மகனும் சேர்ந்து நாலைந்து வாழையிலையுடன் வந்து அமர்கின்றார்கள். நாகலிங்கமும் வந்தமர பெரியப்பாவும் அவர்களுக்குப் பரிமாறி விட்டு தனது இலையிலும் சோறும் கோழி இறைச்சிக் கறிகளையும் போட்டு விட்டு பிள்ளையள் இந்த எலும்பு ரசத்தைச் சூட்டோடு குடியுங்கோ நெஞ்சுக்கு பிலமாய் இருக்கும் என்று சொல்லி எல்லோருக்கும் கிளாசில் ஊற்றி வைக்கிறார். அவர்களும் சூடான அந்த ரசத்தை ஊதி ஊதி குடித்துக் கொண்டு எலும்புகளையும் கடித்து சுவைக்கின்றனர். அப்போது பக்கத்து வீட்டில் குஞ்சாச்சி சத்தம் போடுவதும் கந்தப்பு வேலிக் கதியாலால் இடறுபட்டுக்கொண்டு இவர்கள் வீட்டுக்கு ஓடிவரவும் சரியாய் இருக்கு. என்னனை குஞ்சியப்பு நெத்தி வீங்கிக் கிடக்கு முழங்கால் சில்லாலை இரத்தம் ஒழுகுது என்று சந்துரு கேட்க, அத விடுடா அப்பப்ப நடக்கிறதுதானே என்று சொல்கிறார்.அப்போது பெரியப்பா தனக்கு கிளாசில் ஊற்றி வைத்திருந்த ரசத்தை எடுத்து இந்தா முதல்ல இதைக் குடி என்று குடுக்கிறார்.அவர் அதைக் குடிக்கும் பொழுது தனக்குப் பக்கத்தில் அவருக்கும் ஒரு இலை போட்டு சோறும் கறிகளையும் பரிமாறி வைக்கிறார். பிறகு அண்ணை உந்த இரத்தத்தை துடையனை என்று ஒரு துண்டைக் குடுக்கிறார். அவரும் அதை வாங்கி துடைத்துக் கொண்டே அவளும் பாவம்தான், என்ன செய்யிறது நான் கலியாணம் கட்டேக்க எனக்கு இருபது வயது அவளுக்கு பதினாலு வயது இருக்கும். இப்ப எனக்கு எழுபது வயதாகுது. அம்மாவின்ர கையால சாப்பிட்டதை விட அவளின்ர கையாள சாப்பிட்ட காலம்தான் அதிகம். அவளிலும் பிழையில்லை கண்டியளோ. அவள் ஆசையாய் வளர்த்த சேவலை காலையில் இருந்து காணேல்லை என்று தேடிக் கொண்டிருக்கிறாள், அந்த நேரம் நானும் குடிச்சுட்டு வெறியில வீட்ட வந்ததும் ஏதோ நான்தான் அதை பிடித்துக் கொண்டுபோய் வித்துட்டு குடிச்சுட்டு வாறன் என்று நினைத்திட்டாள். உன்னாணை அதைநான் கண்ணிலும் காணேல்ல. --- சரி சரி உதை விடு, அது உங்கனேக்கைதான் எங்காவது மேயப் போயிருக்கும் என்று பெரியப்பா சொல்லிவிட எல்லோரும் சாப்பிடுகிறார்கள். கந்தப்பு அங்கேயே குந்தில துண்டை விரித்துப் படுத்துக் கொள்கிறார். நாகலிங்கமும் பழனியும் முற்றத்தில் கை கழுவும்போது, அண்ணை நான் மாட்டுக் கொட்டிலில கோழிச் செட்டைகளைப் பார்த்தேன், இனி இதுபோல செய்ய வேண்டாம் என்று சொல்ல பழனி தலை கவிழ்ந்து கொள்கிறார்............! வாருங்கள் போராடலாம் . ........ 🐶 🐶 .
  12. வணக்கம் வாத்தியார் . .........! பெண் : கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு கண்கள் மூடியே வாழ்த்து பாடு பெண் : கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு இன்னும் வாழனும் நூறு ஆண்டு பெண் : எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் அழகே பூமியின் வாழ்கையை அன்பில் வாழ்ந்து விடைப் பெறுவோம் பெண் : பூமியில் பூமியில் இன்பங்கள் எங்கும் குறையாது வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கொன்றும் குறைகள் கிடையாது எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ ஆண் : எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ அது வரை நாமும் சென்றிடுவோம் விடை பெறும் நேரம் வரும் போதும் சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம் ஆண் : பரவசம் இந்த பரவசம் எந்நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே ஆண் : நாமெல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது மேகங்கள் மேகங்கள் இடங்களை பார்த்து பொழியாது ஆண் : கோடையில் இன்று இலை உதிரும் வசந்தங்கள் நாளை திரும்பி வரும் வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால் குயில்களின் பாட்டு காற்றில் வரும் ஆண் : முடிவதும் பின்பு தொடர்வதும் இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தான் நீ கேளடீ........! --- கடவுள் தந்த அழகிய வாழ்வு ---
  13. உருவம் கண்டு என் மனசு உருகுது .........! 😍.......டி . எஸ் . பாலையா & கே . ஆர் . ராமசாமி (பெண் வேடத்தில் ) அட்டகாசம் . .......!
  14. பிக்பாஸ் 8 வெற்றியாளர் ....... திரு. முத்துகுமாரனின் முந்தைய சிறப்பான தமிழ்ப்பேச்சு .........! 👍
  15. இது அந்த விருது பெருமை பெறுகின்றது . .......... பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் ஐயா ..........! 💐
  16. அங்கே பாருங்கள் அங்கே ஒருத்தர் உங்களின் கருத்துக்கு சிரிக்கிறார் . ....... உந்த நக்களுக் கெல்லாம் நாங்கள் இடம் கொடுக்கக் கூடாது . ....... எப்போதும் போல அண்ணாவாகவே இருந்துட்டுப் போறேனே .......! 😢
  17. கதைகளுக்கிடையே கவிதைகளும் அவற்றின் விளக்கங்களும் வாசிக்க சுவையாக இருக்கின்றன ...........! 👍
  18. Jerry Purpdrank · Suivre · Sheep shows gratitude to the dog who saved them from a wolf attack
  19. வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம். வாழும்வரை போராடு....... 01. யாழ்ப்பாணம் முற்றவெளியில் இருக்கும் அந்தப் பிரமாண்டமான கோட்டை போத்துக்கேயரால் முற்றிலும் மனித வலுவைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது. அது பகலில் மிகவும் அழகாகவும் இரவில் மிக மிகப் பயங்கரமாகவும் தோற்றம் தரும். அந்த மாலை நேரத்தில் சூரியன் தன் பொற் கதிர்களைத் தெறிக்கவிட்டு மறைவதையும், அதே நேரத்தில் வெண்ணிலவு மேலெழும்புவதையும் சில காலங்களில் தரிசிக்க முடியும். அன்றும் அதுபோன்றதொரு நாள் அருகில் இருக்கும் முனியப்பர் கோவிலின் மாலைப் பூசையின் மணியோசை அந்த அமைதியை ஊடறுத்துக் கொண்டு கேட்கின்றது. அந்தக் கோட்டை மதிலின் கட்டில் இராகவன் அமர்ந்திருக்கிறான். கீழே புற்தரையில் சந்துரு சப்பாணி கட்டி சக்கப்பனிய உட்கார்ந்திருக்கிறான். இருவரின் கைகளும் அனிச்சயாய் கோவிலை நோக்கிக் கும்புடுகின்றன. கீழுள்ள அகழியின் கரையோடு ஒரு காதல் ஜோடி கைகளால் இடைதழுவியபடி தனிமை நாடித் தனியிடம் தேடி நடக்கின்றது. அப் பெண்ணின் இடையழகும் கூடவே அசையும் பேரழகுகளும் பார்க்க ரசனையாக இருக்கின்றன . இராகவன் அவர்களைப் பார்த்தபடி சந்துருவிடம், என்னடா சந்துரு இனி என்ன செய்வதாய் உத்தேசம் என்று வினவுகிறான். --- அதுதாண்டா இராகவ் நானும் யோசிக்கிறேன். நாமிருவரும் சிறுவயதில் இருந்தே ஒரே பாடசாலையிலும் ஒரே வகுப்பிலுமாகப் படித்து பின் கல்லூரியிலும் சேர்ந்து படித்து அதுவும் சென்ற வாரத்துடன் முடிந்து விட்டது. --- ஓமடா சந்துரு, நாங்கள் கடந்து வந்த காலத்தை நினைத்தால் இனிமையாகவும் மலைப்பாகவும் இருக்குதடா. எங்களைப்போல் இவ்வளவு வகுப்புகள் சேர்ந்து படித்த பள்ளித் தோழர்கள் குறைவு என்னடா. --- உண்மைதான் இராகவ், இனி மேற்கொண்டு படிப்பதாய் இருந்தாலும் உனக்கு வசதியிருக்கு. உன் அப்பா தாமோதரம் கஸ்தூரியார் வீதியில் பெரிய நகைக்கடை வைத்திருக்கிறார். இனி நீ அந்தக் கடையைக் கூட உங்க அப்பாவுக்கு உதவியாய் பார்த்துக் கொள்ளலாம். நான் இனித்தான் என்ன செய்வதென்று யோசிக்க வேண்டும். சந்துரு நீ சொல்வது உண்மையென்றாலும் கூட, எனக்கு அப்பாவின் கடையைப் பார்த்துக் கொண்டு வேலை செய்வதில் கொஞ்சமும் ஈடுபாடில்லை. மேற்கொண்டு படிப்பதென்றாலும் உன்னளவுக்கு எனக்கு படிப்பு வராது என்றும் எனக்குத் தெரியும். ஆனாலும் நான் முடிவு செய்து விட்டேன், நான் ஜவுளி வியாபாரம் செய்வதென்று. நீ விரும்பினால் நாமிருவரும் சேர்ந்துகூட இந்த வியாபாரம் செய்யலாம். இப்ப நான் உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன் கேள். --- என்னடா இராகவ் புதிர் போடுகின்றாய். என்னவென்று சொல்லடா.........! வாருங்கள் போராடலாம் ......... 💪 .
  20. கூடஇருந்து குழிபறித்தல் , உறவாடிக் கெடுத்தல் போன்ற போன்ற விதிகள் உள்ளடக்கப்பட்டிருந்தால் இந்தியா முதலாவதாகக் கூட வந்திருக்கும் ........!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.