Everything posted by Justin
-
தமிழர் பகுதியில் சீரழியும் கலாச்சாரம்..!😱
"ஒப்பற்ற தமிழினம்" தானாக எப்பவும் சீரழிவுகளைத் தேடுவதில்லை! வேறு யாராவது தான் திட்டமிட்டு தமிழினத்திற்குள் விசச்செடிகளைப் பரப்புகிறார்கள். மற்றும்படி தமிழினம் 100% நல்லவர்களால் நிறைந்தது😎! இப்படியான "பொறுப்பை எடுத்துக் கொள்ளாத" சிந்தனையே உண்மையான விஷம்!
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
தவறான தகவல். மஸ்க் தேர்தலுக்கு முதல் நாள் நான் மேலே குறிப்பிட்ட அன்ட்றூ கூமோவை ஆதரித்திருந்தார்👇. https://www.foxbusiness.com/politics/musk-slams-mamdani-charismatic-swindler-warns-policies-would-hurt-quality-life-nyc Business InsiderElon Musk backs Cuomo against Zohran Mamdani in NYC mayor...Musk encouraged NYC voters to back former Gov. Andrew Cuomo over Zohran Mamdani the day before the city's mayoral election.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
எல்லா வர்த்தக, கடன் பித்தலாட்டங்களும் ஒன்று அல்ல! ஆனால் எல்லா வர்த்தக, கடன், வியாபார பித்தலாட்டங்களுக்கும் அடிப்படை ஒன்று தானே? தனி நபரின் அறமில்லாத தன்மை. பொலிஸ் கண்காணிக்காத வீதியில் வேகக் கட்டுப்பாடில்லாமல் வாகனம் ஓடுவதற்கும், கண்காணிக்க வேண்டிய அமைப்புகள் கண்காணிக்காமல் விடும் இடத்தில் சுருட்டுவதற்கும் ஒரே அடிப்படை அறமில்லாத மன அமைப்புத் தானே ஐயா? இதைப் புரிந்து கொள்ள ஏன் தலைமுடியை இப்படி நார் நாராகப் பிரித்தெடுக்கிறீர்கள் என விளங்கவில்லை😂! இதே வேலையைத் தான் ராஜ் ராஜரட்ணம் பற்றிய கேசிலும் எங்கள் தமிழ் சமூகத்தில் சிலர் செய்வதைப் பார்த்தோம். அவர் சட்ட விரோதமான insider trading இனைச் செய்து கையும் மெய்யுமாகப் பிடிபட்டார். தண்டனை முடிந்து வெளியே வந்ததும், "எல்லோரும் செய்தார்கள், என்னை மட்டும் பிடித்தார்கள்" என்று "சமனற்ற நீதி" புத்தகத்தில் எழுத சிலர் "அதானே?" என்று அவரை தியாகி ரேஞ்சில் உயர்த்தினர். என்னைப் பொறுத்தவரை, இது போன்ற வெள்ளைக் கொலர் குற்றங்களை வெள்ளையடிப்பதும், சாதாரணமயப்படுத்துவதும் எங்கள் சமூகத்தை குட்டிச் சுவராக்க உதவும் செயல்கள் என நினைக்கிறேன்.
-
புகைப்படம் எடுத்தாலும் பத்மேவைத் தெரியாது -நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா
நான் வந்து படங்களுக்கிடையில் இருக்கும் செய்தியை வாசித்து விட்டுப் போய்க் கொண்டிருக்கிறேன்😇!
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
ரசோவின் பதிலோடு உடன்படுகிறேன், அதற்கு மேலதிகமாக இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்: 1. "நியூயோர்க் நகரில் ஒரு கழுதையை நீலக் கட்சி நிறுத்தினாலும் அது வெற்றி பெறும்" என ஒரு ஜோக் இருக்கிறது. அது உண்மை என்றாலும், இந்த தேர்தலில் கூமோ (Andrew Cuomo) என்ற முன்னாள் நியூயோர்க் மாநில ஆளுனரும் சுயாதீன வேட்பாளராக போட்டியிட்டார். லிபரல், நீலக் கட்சிக் காரரான அவர் போட்டியிடக் காரணமே, மம்தானியின் சோசலிஸ்ட் கொள்கை, முஸ்லிம் மத அடையாளம், இஸ்ரேல் எதிர்ப்பு என்பன நீலக்கட்சியின் வாக்குகளை மம்தானி பக்கமிருந்து தன் பக்கம் திருப்பும் என்ற நம்பிக்கை தான். அப்படியிருந்தும் 9% வித்தியாசத்தில் மம்தானிக்கு வெற்றி என்பது எவ்வளவு தூரம் அவர் மீது சுமத்தப் பட்ட முத்திரைகள் வேலை செய்யவில்லை எனக் காட்டுகிறது. இன்னொரு ஜோக்கும் நடந்தது. தேர்தலுக்கு இரு நாட்கள் முன்பு ட்ரம்ப் "மம்தானியை விட கூமோவை நான் ஆதரிக்கிறேன்!" என்று ஒரு "பாரிய பாறாங்கல்லை" கூமோவின் கழுத்தில் கட்டி விட்டார்😂 - அன்றே கூமோவின் வெற்றி வாய்ப்பு பூச்சியமாகி விட்டது! 2. வேர்ஜினியா மாநிலம் எப்போதும் சிவப்பு நீலம் என மாறிக் கொண்டிருக்கும் ஒரு மாநிலம். அங்கே நீலக் கட்சியின் பெண் ஆளுனரும், மாநில சட்டமா அதிபராக ஒரு ஆபிரிக்க அமெரிக்கரும் வென்றிருக்கிறார்கள். எனவே, இது நியூயோர்க்கை விட முக்கியமான ஒரு அமிலப் பரிசோதனை முடிவு எனலாம். 3. நியூஜெர்சி- இது நான் வசிக்கும் மாநிலம். இதுவும் பல ஆண்டுகளாக நீல மாநிலம், ஆனால் சிவப்புக் கட்சியினர் ஆளுனர்களாக இருந்திருக்கின்றனர் - 2018 வரையில் இது சாத்தியமாக இருந்தது. போன வருடம் அதிபர் தேர்தலில், நியூஜேர்சி மாநிலத்தை வெறும் 6% வாக்கு வித்தியாசத்தில் கமலா ட்ரம்பை வென்றார் . அப்போதே நியூஜேர்சி சிவப்புக் கட்சியின் பக்கம் சாய்கிறதோ என அச்சம் வெளிப்பட்டது. ஆனால், இந்த ஆளுனர் தேர்தலில், ஷெரில் 15% வித்தியாசத்தில் சிவப்புக் கட்சி வேட்பாளரான ட்ரம்ப் விசிறியை வென்றிருக்கிறார். இந்த வாக்கு வித்தியாசம் தான் முக்கியமானது. நியூயோர்க் போலவே லண்டனும் ஒரு உலக ரீதியில் முக்கியமான நகரம் - சந்தேகமில்லை. ஆனால், அமெரிக்காவினதும் உலகினதும் பொருளாதார தலை நகரம் என்ற வகையில் ஒரு சோசலிஸ்ட் வென்றிருப்பது கவனத்திற்குரிய ஒன்று என நினைக்கிறேன். அச்சமின்றி, யூதர்களின் நிறுவனங்கள் ஆளும் நியூயோர்க் நகரிலேயே இஸ்ரேல் எதிர்ப்பை வெளிக்காட்டிய படி மம்தானி வென்றிருக்கிறார் என்பது இனப்படுகொலையை ஆதரிக்கும் தீவிர இஸ்ரேலியர்களுக்கு வயிற்றில் புளி கரைக்கும் ஒரு விடயம்!
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
நல்ல முடிவைத் தந்த நியூ யோர்க் தேர்தல்👍. இவர் திட்டமிடும் எல்லா விடயங்களையும் நடைமுறைப்படுத்த இயலாது. ஆனால், பலஸ்தீன ஆதரவு, இஸ்ரேல் எதிர்ப்பிற்கு ஒரு தலைமைக் குரலாக இருத்தல், குடியேறிகளை வரவேற்கும் போக்கு, என்பன காரணமாக என் போன்ற குடியேறிகளின் முழுமையான ஆதரவு மம்தானிக்கு! பி.கு: ட்ரம்பின் சிவப்புக் கட்சிக் காரர்களுக்கு செம அடி நேற்று, நியூ ஜேர்சியில் எப்போதும் போல நீலக் கட்சியின் பெண் ஆளுனர் 15% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி (கமலா நியூஜேர்சியில் அதிபர் தேர்தலை வென்றது ட்ரம்பை விட 6% வாக்குகளால் தான், எனவே இது சாதனை!) வேர்ஜினியா மாநில ஆளுனர் பதவி சிவப்புக் கட்சியிடம் இருந்து நீலக் கட்சியிடம் - இன்னொரு பெண் ஆளுனரிடம்- சென்று விட்டது. பென்சில்வேனியாவின் உச்ச நீதி மன்றத்தின் லிபரல் நீதிபதிகள் மூவர் சிவப்புக் கட்சியினரின் பிரச்சாரத்தையும் மீறி வென்றிருக்கின்றனர் -ட்ரம்ப் வந்து தேர்தல் மோசடி வழக்குப் போடும் போது குட்டி அனுப்பி விடுவார்கள்!
-
மறந்து போனோமா வழுக்கி ஆற்றை
https://noolaham.net/project/169/16872/16872.pdf தன் காதலியைக் கொன்ற ஒரு தனியன் யானையை ஒருவர் காடுகளில் துரத்தித் திரிவதைப் பற்றிய கதை. இதுவும் 3 பதிப்புகள் வெளிவந்த பிரபலமான செங்கை ஆழியான் நாவல்.
-
மறந்து போனோமா வழுக்கி ஆற்றை
இதே போல செங்கை ஆழியானின் இன்னொரு கதை "யானை". வன்னிக்கும் கிழக்கிற்குமிடையேயான அடர் காடுகளின் புவியியலை விபரிக்கும் கதை. ஊரில் செங்கை ஆழியானின் புத்தகத்தை நூலகத்திலிருந்து கொண்டு வந்தால் ஒரு நாளில் வாசித்து முடிந்து விடும்😂! சிறியவை ஆனால், சுவாரசியமானவை!
-
மறந்து போனோமா வழுக்கி ஆற்றை
"நடந்தாய் வாழி வழுக்கியாறு" செங்கை ஆழியான் 1984 இல் எழுதி வெளியிட்ட, வழுக்கியாற்றின் தடத்தினூடாக மாடு தேடிப் பயணிக்கும் கதை👇! https://noolaham.net/project/176/17527/17527.pdf
-
தமிழர்களின் குடித்தொகைப் பெருக்கத்தில் பாரிய வீழ்ச்சி - ச.லலீசன் சுட்டிக்காட்டு
சமுதாய மருத்துவ நிபுணர் (தற்போது புதிதாக "குடித்தொகையியல் ஆய்வாளர்") தகுதியில் இருக்கும் முரளி வல்லிபுரநாதனும் "ஊகங்களை" வைத்துத் தான் தமிழர் குடித்தொகையைப் பற்றிக் கருத்துச் சொல்ல வேண்டியிருக்கிறதா😂? "தமிழர் குடித்தொகை பிறப்பு வீதம் காரணமாக வளர்ந்திருக்கிறதா?" என்று திடமாகக் கண்டறிய தமிழர் பகுதிகளில் இருக்கும் பிறப்புகளின் எண்ணிக்கையை கடந்த 10 வருடங்களுக்குப் பின்னோக்கிப் பார்த்து ஒரு அறிக்கை தயாரிக்க முடியாதா? இதை விட்டு விட்டு இதைப் போன்ற தரவுகளை சந்தேகத்திற்குள்ளாக்கும் வேலைகளை ஒரு நிபுணரே செய்தால், ஏனையோர் எப்படி நடந்து கொள்வர்? பிகு: அண்ணளவான பிறப்பு இறப்பு வீதங்கள் 2020 ஆண்டுக்குரியவை இலங்கையின் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப் பட்டிருக்கின்றன. https://www.statistics.gov.lk/Resource/en/Population/Vital_Statistics/CrudeBirthRatesCrudeDeathRatesProvinceDistrictSex2019-2022.pdf அதன் படி பார்த்தால், தேசிய மட்ட பிறப்பு இறப்பு வீதங்களில் காணப்படும் மாற்றங்கள் (national trend) தான் தமிழ் மாவட்டங்களிலும் காணப்படுகின்றன. இது இலங்கை முழுவதற்கும் பொதுவான ஒரு போக்கு, தமிழர்களுக்கென்று தனியான சனத்தொகை வளர்ச்சிக் குறைபாடெதுவும் இல்லை!
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
2008/2009 பிரச்சினைக்கு கடன்பட்டவர்கள் மாதாந்தத் தொகையைச் செலுத்தாமை காரணமல்ல என்கிறீர்களா? "ஒப்புவிக்கக் கூடாது" என்று நேத்தி வைத்திருப்பதால், முகட்டைப் பார்த்து யோசிக்கும் போது உங்களுக்கு வெளிப்பதை எல்லாம் எழுதி ஏன் ஐயா களத்தைத் தவறான தகவல்களால் நிரப்புகிறீர்கள்😂 ? ஆர்வமுள்ள வாசகர்களுக்காக: தன் வருமானத்திற்கு மீறிய மாதாந்தக் கட்டணத்தைக் கொண்ட வீட்டுக் கடன்களை நிரந்தரமாகத் தொழில் இல்லாத பலர் எடுக்க மேல் வியாபாரி போன்ற ஊழல் நிறுவனங்கள் அனுமதித்தன. அந்த றிஸ்க் கொண்ட sub-prime கடன்களை, ஏனைய நம்பிக்கையான கடன்களோடு சேர்த்து மொத்தமாக காப்புறுதி செய்தனர். இந்தக் றிஸ்க் கொண்ட கடன்களை ஊழல் வழிகளில் பெற்றவர்கள் கட்ட முடியாமல் (default) வீட்டுச் சாவியை தங்கள் தபால் பெட்டியில் போட்டு விட்டு தலை மறைவாயினர். காப்புறுதி நிறுவனம், ஒரே சமயத்தில் நிகழ்ந்த எல்லா இழப்புகளையும் ஈடு செய்ய இயலாமல் வங்குரோத்தானது. ஒபாமா பதவிக்கு வந்தவுடன் "Troubled Asset Recovery Program" என்ற முறையை சட்டமாக்கி மக்களின் வரிப்பணத்தை வைத்து இந்த $700 billion ஓட்டையை அடைக்க வேண்டியிருந்தது. மக்கெயின் பதவிக்கு வந்திருந்தால் அதையும் செய்யாமல் இன்னும் மக்களை அல்லாட விட்டிருப்பார்.
-
ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி?
ஹிஸ்புல்லாவையும் விசாரிக்க வேண்டும்..அத்தோடு 2020 இல் அயோத்தியில் இராமர் கோவில் கட்ட தங்கக் கல் அனுப்பிய முன்னாள் பா.உ சீனித்தம்பி யோகேஸ்வரனையும் விசாரிக்க வேண்டும்??😎
-
மன்னார் தீவின் மக்களும், உயிரியல் சமூகமும் பெரும் ஆபத்தில்…
மன்னார் காற்றாலைத் திட்டத்தைப் பற்றி இது வரை நான் கண்ட கட்டுரைகளில் எல்லாத் தரவுகளையும், சட்ட ஆதாரங்களையும் உள்ளடக்கிய ஒரேயொரு கட்டுரை இது மட்டும் தான். இரண்டாம் தடவையும் வாசிக்க வேண்டும், முழுவதையும் விளங்கிக் கொள்ள. இந்தத் தரவுகளை வைத்துக் கொண்டு யாராவது இலங்கையில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடையுத்தரவு கோரியாவது ஏதாவது வழக்குப் போட்டிருக்கிறார்களா இது வரை? தேர்தல் நேரம் மட்டும் வெளிப் பட்டு வரும் "ஜனாதிபதி சட்டத்தரணிகள்" எவராவது ஒரு சூழல் பாதுகாப்பு சட்டத் தரணியோடு இணைந்து இதை உச்ச நீதிமன்றத்திற்குக் கொன்டு போக முடியாதா? இலங்கையில், இந்த விடயங்களில் eminent domain என்ற அரசுக்கான விசேட உரிமை சட்டத்தில் இருக்கிறதா?
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
என்ன "வெள்ளிடைமலை" உங்களுக்குத் தெரிந்தது? "தமிழேண்டா!" என்று கண்ணை மூடிக் கொண்டு எல்லாவற்றையும் ஆதரிக்கா விட்டால், பல்வேறு முத்திரைகளை இங்கே குத்துவார்கள்: மதம் உள்ளே வரும் (பெயர் ஜஸ்ரின் என்பதால்!), படிப்பு வரும், பிறகு "மாற்று இயக்கத்தில் இருந்தவர் போல" என்றும் ஊகம் பரப்புவர். எதுவும் செய்ய முடியா விட்டால் "முற்றுப் புள்ளி" போட்டு விட்டு ஓடி விட வேண்டியது தான்😎!
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
என்னுடைய அனுபவம் இது. இது முஸ்லிம் தரப்பிற்கு நற்சான்றிதழாக மாறி விடும் என்பதற்காக நான் பகிராமல் மௌனமாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களோ தெரியவில்லை. உங்கள் போன்றோர் இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கும் ஒரு விடயம், இந்த சட்டத்தரணி போன்றோர் வெளியே வந்து பேசி, வரவேற்பைப் பெறுவதற்கு பிரதான தூண்டிகளாக இருப்பது உங்கள் போன்ற பிழையைப் பிழை என்று ஏற்றுக் கொள்ளாமல் கடைந்தெடுத்த இனக்குரோதத்தோடு விடயங்களை அணுகும் ஆட்கள் தான். நீங்கள் பேசும் வரை, இவர் போன்றவர்களும் பேசுவார்கள், அவை அக்குரணை நியூசில் வரும், இங்கேயும் பகிரப் படும்!
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
ஒரு குற்றத்தை குறைத்து மதிப்பிடுவதன் ஆபத்தை வெளிக்காட்டிய அண்மைய உதாரணம் கேள்விப் பட்டிருப்பீர்கள். பிரான்சில், தன் பாலியல் வக்கிரத்திற்காக தன் மனைவியை மயக்க நிலையில் வைத்து பல ஆண்கள் அவரை பாலியல் வல்லுறவு செய்ய அனுமதித்த சைக்கோ கணவன் கேசில், கணவனின் விருப்பப் படி வந்து வல்லுறவில் ஈடுபட்ட ஐம்பது ஆண்களுக்கும் தண்டனை விதித்தார்கள். அவர்களுள் பலர் மேன் முறையீடு செய்யத் தயாராகினர். இறுதியில் பெரும்பாலானோர் பின்வாங்கி விட ஒரேயொருவர் மட்டும் "நான் வழி தவறிய பலியாடு, இங்கே நான் தான் பாதிக்கப் பட்டவன்" என்று துணிந்து மேன் முறையீடு செய்தார். "நீ செய்த வேலைக்கு, உனக்குக் கிடைத்த 9 வருடம் காணாதே? என்று 10 வருடம் விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறார்கள்😂. Man who appealed Pelicot rape conviction handed longer ja...A French court increases by a year the jail term of the only man who challenged his conviction for raping Gisèle Pelicot.என் சந்தேகம், இந்த "வழி தவறிய ஆட்டுக்கு" நண்பர் கடஞ்சா போலவே ஒரு வக்கீல் அட்வைஸ் கொடுத்திருப்பார்!
-
இஷாராவை போல ஈஸ்டர் தாக்குதல் கொலையாளிகளை தப்பிக்கவைத்த ஆனந்தன்!
அதிஷ்டக் காரக் கணவன் நீங்கள்! இப்படியான அதிர்ஷ்டம் எல்லாக் கணவர் மாருக்கும் கிடைக்காது! அதுவும் ஈழத்தமிழ் பெண்களின் கணவர் மாருக்கு "வாய்ப்பேயில்லை😂!"
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
முதலில் தலைவர்கள் வேறு மக்கள் வேறு என்பதை நீங்கள் உங்கள் பக்திப் பரவசத்தை இறக்கி வைத்து விட்டுப் புரிந்து கொள்ள முனைய வேண்டும்! பிரபாகரன் பின்னால் எல்லாத் தமிழரும் நிற்கவில்லை (நிச்சயமாக இந்த முஸ்லிம்கள் வெளியேற்ற விடயத்தில் நிற்கவில்லை). அஷ்ரப்பின் பின்னால் எல்லா இலங்கை முஸ்லிம்களும் நிற்கவில்லை. பாதிக்கப் பட்டவர்கள் மக்கள், அவர்கள் வலி இருக்கும் வரை பேசுவர். பேசாதே என்று சொல்லும் உரிமை முஸ்லிம்கள் வெளியேற்றத்தையே வெள்ளையடிக்க முயலும் எந்த தமிழருக்கும் இல்லை. எந்த ஒப்பந்தங்களை நான் மெச்சியிருக்கிறேன்? தமிழர்களுக்கு வாய்ப்புகள் வந்தன, மெச்சக் கூடியதாக ஒரு ஒப்பந்தமும் வரவில்லை. ஆனால், "புலிகளும், மக்களும் அழிதல்" என்ற தீர்வை விட, இது வரை வந்த எந்த ஓட்டை ஒப்பந்தமும் திறம் தானே? இதைப் புரிந்து கொள்ள எத்தனை நியூரோன்கள் ஒருவருக்குத் தேவை?
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
என் தற்போதைய ஆசை: கடஞ்சாவின் எழுத்துக்களைப் வாசித்து "நான் கள்வன் அல்ல, ஒரு வழி தவறிய ஆடு!" என்று நினைத்து சஞ்ஜீவும் ஆரணியும் பிரிட்டனுக்கு மீள வர வேண்டும்😂! பிரிட்டனின் நீதித்துறை தன் கடமையை செய்ய உதவியமைக்காக கடஞ்சாவுக்கு ஒரு OBE கொடுக்கும் பக்கிங்ஹாம்!
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
நீங்கள் ஒவ்வாமை அல்ல! பாதிக்கப் பட்டவன் (victim) தான் வலி இல்லாமல் போய் விட்டதா என்று உறுதி செய்ய வேண்டுமேயொழிய, பாதிப்பைக் கொடுத்தவர்களின் தரப்பு (perpetrator) அல்ல. இதை சிங்களவர்களுக்கும், இந்தியாவிற்கும் நாம் சொல்லிக் கொண்டு, "வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களின் வலி முடிவுக்கு வந்தது"😎 என்று எழுதுவதை என்னவென்று சொல்வது?
-
தவெக உட்கட்சி மோதல்
உண்மையாகவா😂? தமிழ் நாட்டின் பொருளாதார, கல்வி, சமூக நிலை வலதுசாரித்தனத்தாலும், மத - இன வாதங்களாலும் பாதிக்கப் பட்ட பிரிப்பரசியல் செய்யும் ஏனைய இந்திய மாநிலங்களின் நிலையை விட பல மடங்கு மேலாக இருக்கிறது - இதற்கான ஆதாரங்களும், தரவுகளும் நீங்கள் "கண்களை" திறந்து பார்த்தால் மட்டும் தான் உங்களுக்குத் தெரியும். சீமான் போன்ற வலதுசாரித் தமிழர்களின் சமூகவலை ஊடகங்களின் வர்ணங்களில் கண் மங்கிப் போனால் "திராவிடம் எதுவும் சாதிக்கவில்லை" என்ற புரிதல் மட்டும் தான் எஞ்சும்!
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
எனக்கு, இந்த முஸ்லிம்கள் வெளியேற்றம் பற்றி இரண்டு வகையான அனுபவங்களும் கிடைத்திருக்கின்றன. ஒரு தடவை ஜனாதிபதி மாவத்தையில் போக வேண்டியிருந்த ஒரு இடத்திற்கு, பஸ்ஸில் இடம் மாறி இறங்கி விட்டேன். நடந்து போய்க் கொண்டிருந்த ஒரு முஸ்லிம் நபரிடம் வழி கேட்டேன். "அந்த வழியாகத் தான் போகிறேன், வாருங்கள்" என்று அழைத்துப் போகும் போது "எங்கிருந்து வருகிறீர்கள்?" எனக் கேட்டார், "யாழ்ப்பாணம்" என்றேன். ஆங்கிலத்தில் எனக்கு அர்ச்சனை செய்ய ஆரம்பித்து விட்டார் (ஆனால், எனக்கு முன்னால் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்😂). நான் எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். 5 நிமிடங்களில் இடம் வந்தது. "அந்த நேரம் நீங்கள் சிறுவனாக இருந்திருப்பீர்கள், நீங்களும் தான் என்ன செய்திருக்க முடியும்? உங்களிடம் நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது, மன்னியுங்கள்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். மன்னாரில் இருந்து வெளியேறிய ஒரு முஸ்லிம் முதியவரை, புத்தளத்தில் ஒரு ஆட்டுப் பண்ணையில் சந்தித்தேன். சந்திரிக்கா, ரத்வத்தை போன்றோர் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்த காலம். "புலிகளால் தான் இவங்களுக்கு ஒரு முடிவு வரும், வேறெவரும் எதுவும் செய்ய முடியாது" என்றார். ஏன் சொல்கிறார், கொக்கி போடுகிறாரா என்று புரியாததால், நான் சிரித்துக் கொண்டு பேசாமல் இருந்து விட்டேன்.
- தவிக்கும் தன்னறிவு
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
🤣 இப்படியாக இருந்து பேசி நாமும் பல வலிகளை மறக்கலாம் போல இருக்கு! கருணாநிதி, சோனியா காந்தி, ஏன் கோத்தா ரீமோடு கூட இருந்து பேசி வலியைக் கடந்து விடலாம் போல! மேலே வசி சொல்லியிருப்பதைப் போல, ஒரு தரப்பு தங்களுக்கு நடந்த அநியாயத்தைப் பற்றிப் பேசினாலே கோபம் கொள்கிறவர்களும், "அவங்கள் நகை போடுவதில்லையே?" என குர் ஆன் வரையில் தேடிப் போய் நியாயம் கற்பிப்போரும் வலியை மறைய விடப் போவதில்லை!
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
வெளியேற்றப் பட்ட முஸ்லிம் குடும்பங்கள் "ஒரு தொகைப் பணம் எடுத்துச் செல்லலாம். வீட்டுச் சாமான்களை எடுத்துச் செல்ல முடியாது" என்ற நிபந்தனை இருந்ததாக அறிந்திருக்கிறேன். மீறி தங்க நகைகளை எடுத்துச் செல்ல முயன்றவர்களிடம் அவை பலவந்தமாகப் பறிக்கப் பட்டதாக செவிவழிச் செய்திகள் கேள்விப் பட்டேன். எவ்வளவு பரவலாக இது நடந்தது என அறியேன் (இவையெல்லாம் செய்திகளாக அந்த நாட்களில் உதயனில், ஈழநாட்டில் வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும், எனவே பதிவுகள் இல்லை). யாழ் நகர நவீன சந்தையில் பான்சி (Fancy) கடைகள் என நாம் அழைக்கும் வீட்டு அலங்கரிப்புப் பிளாஸ்ரிக் பொருட்கள் விற்கும் கடைகள் பல முஸ்லிகளுக்குச் சொந்தமாக இருந்தன. அவற்றின் திறப்புகள் பலவற்றை "நாம் பத்திரமாக பாதுகாக்கிறோம்" என்று கூட்டம் வைத்து உறுதி கொடுத்து புலிகளின் அரசியல் துறையினர் வாங்கிக் கொண்டனர். சில உரிமையாளர்கள், தங்கள் கடைத் திறப்புகளைப் புலிகளிடம் கொடுக்காமல் அயல் கடைகளின் உரிமையாளர்களான தமிழர்களிடம் கொடுத்திருக்கின்றனர். அடுத்த சில வாரங்களுக்குள் இந்தத் திறப்புகளையும் புலிகள் தமிழ்க் கடைக் காரர்களிடமிருந்து வாங்கிக் கொண்டனர். திறப்புகள் இல்லாத கடைகளை உடைத்துத் திறந்தனர். அந்தப் பொருட்களுக்கு என்ன ஆனது? யாழ் அரச ஆஸ்பத்திருக்குப் பின் வீதியில், நியூ மாஸ்ரர் ரியூசன் கொட்டிலுக்கு அருகில் "எழிலகம்" என்ற பெரிய கடையொன்றைத் திறந்தனர். அங்கே வைத்து முஸ்லிம் வர்த்தகர்களிடமிருந்து எடுக்கப் பட்ட வீட்டு அழகு சாதனப் பொருட்கள் விற்கப் பட்டன. விற்ற பணத்தை யார் எடுத்துக் கொண்டார்கள் என்பதை ஊகத்திற்கே விட்டு விடுகிறேன். தனிப்பட நான் அறிந்த சில கதைகள் கொடுமையானவை. அந்தக் காலங்களில் ஊரில் துணி லெங்த் எடுத்து ரெய்லரிடம் போய்த் தான் உடைகள் தைப்போம் - கடையில் புத்தாடை வாங்குவதை விட அது தான் மலிவானது. எனக்கும் என் அண்ணருக்கும் உடைகள் தைக்கும் ரெய்லர்கள் இரட்டையர்களான முஸ்லிம் இளைஞர்கள். நவீன சந்தைக்கு வெளியே இருந்த, ஒரு கடை என்று சொல்ல முடியாத ஒரு hole in the wall இல் இரண்டு காலால் இயக்கும் தையல் இயந்திரங்களை வைத்துத் தான் தங்கள் தொழிலைச் செய்து வந்தனர். அவர்கள் தங்கள் தையல் இயந்திரங்களை தம்மோடு எடுத்துச் செல்ல புலிகள் அனுமதிக்கவில்லை என அண்ணர் சொன்னார். எப்படி இருந்திருக்கும் அவர்களுக்கு என்று நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.