Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. இதில் ரூம் போட்டு யோசிக்க என்ன இருக்கிறது? மேலே நான் சுட்டிய காரணங்களை விட, பலமான இராணுவம், அதனால் வரும் உலக மேலாண்மை (ஐரோப்பாவுக்கு அடிவிழும் போதெல்லாம் ஓடி வந்து காப்பாற்றுவது போல😎), உள்ளூர் பொருளாதாரத்தில் கூட பல்லினத் தன்மை-diversity (எனவே ஒரு கூடையில் எல்லா முட்டைகளையும் வைக்கும் முட்டாள் தனமின்மை) எனப் பல காரணங்கள் உண்டு. ஆனால், இவையெல்லாம் இருந்தாலும், உள்ளக ஆட்சியில் ஸ்திரத் தன்மை இல்லாமல் போனால் அமெரிக்காவும் இன்னொரு பணக்கார Emirate வளைகுடா நாடு போல ஆகும். இதை உங்களால் புரிந்து கொள்ள இயலவில்லையானால், வேறெந்த பொருளியல் அளவீட்டையும் ஆழப் புரிந்தாலும் அமெரிக்க டொலரின் மேலாண்மை குழப்பமாகத் தான் இருக்கும்! இதே போல ஒரு உலக நிதி மேலாண்மை சுயெஸ் கால்வாய் பிரச்சினை வரும் வரை பிரிட்டன் பவுண்ட்சுக்கு இருந்தது, சாம்ராஜ்ஜியம் விழ அதுவும் இல்லாமல் போனது.
  2. ஒற்றைப் படையான, single metric இனை வைத்துக் கொண்டு நீங்கள் செய்யும் எதிர்வு கூறல்களின் குறைபாட்டை முன்னரும் சுட்டிக் காட்டியிருக்கிறேன். இது "அமெரிக்காவில் எல்லாம் திறமாக இருக்கிறது" என்று நான் சொல்வதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஆனால், நீங்கள் எதிர்வு கூறும் பாதிப்புகள் எவையும் இங்கே நிகழவில்லை. டொலரின் ஆதிக்கம் உலகில் குறையவில்லை. டொலரை போட்டு மிதிக்க கிளம்பிய பிரிக்ஸ் நாணயம் ரன்வேயில் இருந்து மேலே எழவேயில்லை😂. இனியும் எழும்பாது என்று தான் பலர் சொல்கிறார்கள். ஏன் என்று நினைக்கிறீர்கள்? டொலரின் பின்புலம் தங்கக் கையிருப்பிலோ, அமெரிக்காவின் மொத்தக் கடனிலோ தங்கியிருக்கவில்லை. இலாபத்தை முன்னிறுத்தும் பொருள்முதல்வாதம், வெளிப்படைத்தன்மையான நிதி நிர்வாகம், பாரபட்சமில்லாத சட்ட ஆட்சி இவை தான் அமெரிக்க டொலர் வைப்பு நாணயமாகவும், பரிமாற்ற நாணயமாகவும் நிலைக்க காரணங்கள். உள்ளூரில் இணையவெளியின் பாவனையைக் கூட வெளிப்படையாக கையாளும் இயல்பில்லாத சீனாவின், ரஷ்யாவின் நாணயங்களை முட்டாள்கள் தான் நம்பிக் கையிருப்பு நாணயமாக ஏற்றுக் கொள்வர். தென்னாபிரிக்கா இன்னும் சமூக ஏற்றத்தாழ்வுகளில் இருந்து வெளிவராமல் தவிக்கிறது. இதையெல்லாம் புறக்கணித்து விட்டு"கடன்முறி, கடன்முறி" என்று நீங்கள் பல்லவி பாடிக் கொண்டிருக்கிறீர்கள்.
  3. மிகவும் துல்லியமாக ஆசிய அமெரிக்கர்களின் ட்ரம்ப் நோக்கிய மனப்பாங்கைப் பிரதிபலித்திருக்கிறீர்கள் எனக் கருதுகிறேன்: வரி குறைய வேண்டும் (பெரும்பாலும் அதிக வருமானம் இருந்தால் இதை நாடுவர்), சமூக நலத்திட்டங்கள் குறைய வேண்டும் (நாம் பத்து டொலரோடு வந்து மில்லியனராகவில்லையா? இங்கே பிறந்தவனுக்கு என்ன கொள்ளை😎?), இவையிரண்டினாலும் நம் வங்கிக் கணக்கில் பணம் சேர வேண்டும்- இந்த குறுகிய "காசு வட்டத்திற்குள்" நின்று யோசிக்கும் ஆசிய அமெரிக்க குடிகளாகவே என்னுடைய பல தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள். ட்ரம்ப் போன்ற ஒருவர் பதவிக்கு வருவதால் அமெரிக்க உள்நாட்டுக் கொள்கைகளிலும், சமூகத்திலும் ஏற்படப் போகும் மாற்றங்களை துல்லியமாக உணராத நிலை இது எனக் கருதுகிறேன். ஏற்கனவே நான் இன்னொரு திரியில் சுட்டிக் காட்டியது போல, ட்ரம்ப் அணியின் நிறவாதமும், இனவாதமும், பெண் எதிர்ப்பு கொள்கைகளும் ஆசிய அமெரிக்கர்களையும் பாதிக்கும் விடயங்கள் - ஏற்கனவே இவ்வாறு ஆசிய அமெரிக்கர்கள் பாதிக்கப் பட்ட உதாரணங்கள் 2017 இல் நிகழ்ந்திருக்கின்றன. சட்டைப் பையில் சேரும் சில்லறை தான் முக்கியமான நன்மையென்றால், மத்திய கிழக்கின் சில நாடுகளில் நீண்டகால விசாவில் எந்த பிரஜைக்குரிய உரிமைகளும் இல்லாமல் வாழ்ந்து விட்டுப் போகலாம், ஆனால் யாரும் அப்படியான வாழ்வை நோக்கி நகர்வதில்லை. அப்படி என்ன தான் அமெரிக்காவில் பிரஜையாக இருப்பதில் இருக்கிறது என்று ஆழ யோசித்தால், ஆசிய அமெரிக்க ட்ரம்ப் ஆதரவாளர்கள் இந்த "காசு வட்டத்தினுள்' இருந்து வெளியே வரக்கூடும் என ஊகிக்கிறேன்.
  4. இவற்றில் இருக்கும் பல விடயங்களை ஒரே இரவில் அல்லது ஒரு வாரத்தில் மாற்ற முடியாது. ஆனால், ஒரு தலைமுறையில் மாற்றலாம். செய்ய வேண்டிய சில விடயங்கள் இவை தான்: 1. "மருத்துவர் தான் கடவுள்" என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும். "உலகத்திலேயே ஒரேயொரு மருத்துவர் தான் எனக்கு இருக்கிறார்" என்ற எண்ணத்தையும் கைவிட வேண்டும். சில இடங்களில் பொருளாதார நிலை இதை அனுமதிக்காது என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனாலும், இதை ஊக்குவிக்கவும் , பரவலாக்கவும் வேண்டும். 2. ஆரோக்கியம் பற்றிய கல்வியும் அறிவும் (health literacy) எல்லோருக்கும் இருக்க வேண்டும். நீரிழிவு என்றால் என்ன, தொண்டையில் புற்று நோய் என்றால் என்ன, என்பது போன்ற ஒவ்வொரு விடயமும் பயனாளருக்குத் தெரிய வேண்டும். எல்லோரும் செல்போனோடு திரியும் காலத்தில் இது சாத்தியம். விடயம் தெரிந்தால் கேள்வி கேட்கலாம். 3. மருத்துவ தேவை சார்ந்து சில சட்டங்களை இயற்றும் முயற்சியை இப்போதே ஆரம்பிக்க வேண்டும். நோயாளியின் உரிமைகள் எவை, நோயாளி பற்றிய தகவல்கள் (medical records) யாருக்குச் சொந்தம், ஆகக் குறைந்த சேவை நியமம் (minimum standard of care) என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்கு சட்டங்கள் மூலம் பதில்கள் வழங்கப் பட வேண்டும். இந்த சட்டப் பதில்களை வைத்துக் கொண்டு மருத்துவ சேவையின் பயனர்கள் நிவாரணம் தேட முடியும். இந்த வழிகளில் முன்செல்லாமல், முகநூல் பதிவுகளில் கோபத்துடன் எழுதுவதால் பயன்கள் இருக்காது. ஆற்று நீரில் போட்ட இலை போல அடிபட்டுப் போய் விடும் இந்தப் பதிவுகளெல்லாம்.
  5. Tamils for Obama முக்கிய புள்ளிகள் (சிலர் தமிழ்சிறியின் உறவினராகவும் இருக்கக் கூடுமென ஊகிக்கிறேன்) 2016 முதல் Tamils for Trump என்ற உத்தியோக பூர்வமற்ற அமைப்பாக மாறி விட்டார்கள். குறைந்த பட்சம் நான் வாழும் மாநிலத்தில் இது நடந்திருக்கிறது. ஏன் இந்த "குத்துக் கரணம்"😎 நடந்தது? என்று தேடினால் காரணம் ஒபாமா தமிழர்களைக் காக்கவில்லையென்பதல்ல: கறுப்பின மக்களைப் பிடிக்காது, இங்கே கையைத் தூக்கி உள்ளே வந்து பிரஜையான தமிழர்களுக்கே தென்னமெரிக்கர்கள் வேலி பாய்ந்து வருவது பிடிக்காது, உழைக்கும் காசுக்கு வரி கட்டப் பஞ்சி (ஆனால், பள்ளிக்கூடம் அமெரிக்கன் ஸ்ராண்டர்ட்டில் இருக்க வேண்டுமென்ற ஆசை😂) இப்படியாகப் பல காரணங்களால் தமிழ்ஸ் fபோர் ஒபாமா இப்போது தமிழ்ஸ் fபோர் ட்ரம்ப்! நிச்சயமாக அமெரிக்காவில் ட்ரம்ப் ஸ்திரமான ஆட்சி தந்தால் தமிழர்களுக்கு ஒரு முடிவு வரும் தான்: ஐ.நாவில் இலங்கை மீதான போர்க்குற்றங்களை நோண்டாமல் விடுவார்கள், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி என்ற ரீதியில் இருந்த கரிசனையும் போய் விடும். எனவே சிங்களத் தரப்பு எல்லாவற்றையும் நினைத்த மாதிரிச் செய்ய, தமிழர்களுக்கு ஒரு முடிவு வரும் என நம்பலாம். பி.கு: எந்த ஒரு சமகால அவதானிப்பும், வரலாற்றுத் தேடலும் இல்லாமல் கருத்துகள், ஊகங்கள் உருவாக்குகிறீர்கள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள்👍.
  6. மன்னிக்கோணும்! பினாயில் இந்திய பிராண்ட், எங்கள் ஊரில் ஹார்பிக் தான், பரவாயில்லையா😂?
  7. எதையும் உங்கள் "தலைக்குள்" மட்டுமே ஊகித்து நம்பிக் கொள்ள எந்த ஊடகத்தையும் நீங்கள் பார்க்க வேண்டியதில்லை😎. ஆனால், எல்லா ஊடகங்களிலும் வந்திருக்கும் தகவல் இது: கொலை முயற்சி செய்தவர் பதிவு செய்யப் பட்ட சிவப்புக் கட்சி வாக்காளர் (வயது 20, எனவே 2020 இல் ட்ரம்ப் தோற்ற பின்னர், ஜனவரி 6 கலவரமெல்லாம் கண்ட பின்னர் தன்னை ட்ரம்ப் கட்சியோடு அடையாளப் படுத்தியிருக்கும் ஒருவர்). இவை தரவுகள். உங்கள் கருத்துக்கள் பலவற்றின் அடிப்படையில், நீங்கள் சமூகவலை ஊடகங்களின் பின்னூட்டங்களில் இருந்து உலக நிகழ்வுகளைப் புரிந்து கொள்ளும் ஒருவர் என நினைக்கிறேன்.
  8. அர்ச்சுனா கதையின் நீதி: பத்துப் பேர் சுற்றி நின்று கரகோஷம் செய்கிறார்கள் என்பதற்காக பப்பா மரத்தில் ஏறக்கூடாது.
  9. யார் இந்த கைப்புள்ள😂? படத்தை அப்படியே தொடக்கம் முதல் முடிவு வரை விமர்சனம் என்ற பெயரில் சொல்லியிருக்கிறார்? Spoiler alert தெரியாமல் இருக்கிறாரா?
  10. இந்த யூரியூபர்களின் தகரடப்பா சத்தங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால், தலைமைத்துவப் பண்பு என்பதைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள், படிப்பினைகள் இந்தச் சம்பவங்களுள் அடங்கியிருக்கின்றன. மேலே இருக்கும் வீடியோவைப் பாருங்கள்: "சுகாதார அமைச்சில் பேசி விட்டு வருகிறேன்" என்று உள்ளே நுழையும் மருத்துவர் அர்ச்சுனாவைக் கண்டதும், மருத்துவர் ராஜிவ் எழுந்து நின்று ஆமிக்காரனிடம் பொலிஸ் பதிவு காட்டுவது போல தன் நியமனக் கடிதங்களைக் காட்டுகிறார்😂. அர்ச்சுனா ஒன்றும் காட்டவோ, அமைச்சு என்ன சொன்னதென்றோ வெளிப்படுத்தாமலே, ராஜிவ் கதிரையை விட்டு அகன்று ஒதுங்கி நிற்கிறார். புரிந்து கொள்ள இயலாத நடைமுறையாக இருக்கிறது. "இங்கே பேச எதுவும் இல்லை, நீங்கள் மாகாணப் பணிப்பாளரைப் பாருங்கள்" என்று இருந்த படியே சொல்லியிருக்கலாம். கூட இருக்கும் பொலிஸ்காரர்களிடம் "இந்த வீடியோக் காரர்களை அகற்றுங்கள்" என்று கூட வேண்டுகோள் விடுக்கும் சந்தர்ப்பம் இருந்தது. என்னைப் பொறுத்தவரை, தலைமைத்துவம் என்பதில் கொஞ்சம் "ரௌத்திரம்" அடங்கியிருக்க வேண்டும். தெளிவாக, வெளியே வரக் கூடிய குரலில் பேசக்கூட இயலாத எதிராளிகளை வைத்துக் கொண்டு அர்ச்சுனா நன்கு எஞ்ஜோய் பண்ணுகிறார் என நினைக்கிறேன்😂.
  11. 🤣😂 சரியாக கண்ணைத் துடைத்து விட்டு ஒரு தடவை பாருங்கோ. இவ்வளவு சீரியசான விடயத்தை இரண்டாவதாகப் போடும் அளவுக்கு எந்த ஊடகமும் முட்டாளாக இல்லை. லைவ் போய்க் கொண்டிருக்கிறது சகல அமெரிக்க ஊடகங்களிலும், பிபிசியிலும்.
  12. இங்கே ஆறு திருமுருகன் அவர்கள் எதுவும் செய்திருக்கிறார் என்று எவரும் எழுதவில்லை. அவர் நிர்வாகத்தின் கீழ் இருந்த நிலையத்தில் சில சீர்கேடான நிலை இருந்திருக்கிறது, அதற்குப் பொறுப்பான அரச நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது நல்ல விடயம் என்று தான் பெண்கள், குழந்தைகள் நலன்களை முன்னிறுத்தும் எவரும் நினைப்பர். ஆனால், நீங்கள் எழுதியிருக்கும் இரண்டாம் பந்தியின் படி, நீங்கள் "வேற குறூப்" 😂, இந்த குறூப்புகளை யாழில் நாம் முன்னரும் கண்டிருக்கிறோம். வைரமுத்து சின்மயி பிரச்சினை, கனடாவில் மனைவியைக் கொன்ற கணவன் பிரச்சினை போன்ற திரிகளில் இந்த குறூப் வந்து இப்ப நீங்கள் எழுதியிருப்பதைப் போலவே எழுதியிருக்கிறார்கள். என் ஆச்சரியம், நீங்களெல்லாம், வயசாளிகள் என்று இங்க திரிகிறீர்கள், ஆனால் வயதுக்கேற்ற நடத்தைகளை , இந்த திரியில் நீங்கள் வெளிப்படுத்தவில்லை. இதை மூப்பு வாதமாக (ageism) எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் போன்ற மூத்தவரிடம் இது போன்ற கருத்துக்களை நான் எதிர்பார்க்கவில்லை.
  13. பிரின்ஸ்ரன் நகரம், பிரின்ஸ்ரன் பல்கலை அமைந்திருக்கும் செல்வச் செழிப்பான நகரம். ஆனால், sanctuary city என்ற அந்தஸ்து காரணமாக உள்ளூர் நகர நிர்வாகம் குடிவரவுத் துறையின் சுற்றி வளைப்புகளை அனுமதிப்பதில்லை. இந்த வசதியைப் பயன்படுத்தி ஏதோ செய்ய முயன்றிருக்கிறார்களென ஊகிக்கிறேன்.
  14. என்ன திரும்பத் திரும்ப இல்லம் நடத்துபவரின் வரலாற்றையே எல்லாக் கருத்துகளுக்கும் பதிலாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? அவர் பரோபகாரியாக இருப்பதால் "அவர் நடத்தும் இல்லத்தில் முறைகேடுகள் இருக்கலாம், அதை பேப்பர்கள் எழுதக் கூடாது, அப்படி எழுதினால் வலம்புரி போன்ற ஓர ஊடகங்களில் இருந்து பொய்ச்செய்தியை மேற்கோள் காட்டி முரட்டு முட்டுக் குடுக்கலாம்" என்கிறீர்களா😂? என் கருத்தின் பின்னணியை அறிய மேலே இருக்கும் கருத்துக்களை வாசியுங்கள். இதை விட உங்கள் போன்ற முரட்டு முட்டு அலட்டல் பேர்வழிகளுக்கு மேலதிகமாக நேரம் செலவழிக்க என்னிடம் நேரமில்லை!
  15. இங்கே உள்ளூர் செய்திகளைப் பார்க்கும் போதும், இதே போன்ற பட்டியல் தான் கிடைக்கிறது. பணக்காரர்களின் வாகனங்களாகக் கருதப் படும், லாண்ட்றோவர், ரேஞ் றோவர், பென்ஸ் ஆகியவை தான் அதிகம் திருடப் படுகின்றன. ஆயுத முனையில் கடத்தினால் ஒழிய இந்த நவீன வாகனங்களைத் திட்டமிட்டுத் தான் திருட முடியும். ஒரு பென்ஸ் காரை, அதனை ஒரு சிறு திருத்த வேலைக்காக விட்ட திருத்தகத்தில் அதனுடைய திறப்பை குளோன் செய்து, பின்னர் வீட்டில் வந்து திருடிப் போயிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், இந்த கார் திருடர்களுக்கு "உடன் நீதி- swift justice" கிடைப்பது போன்ற சம்பவங்களும் நடந்து வருகின்றன. கார் திருட்டுக்கு பெயர் போன வாசிங்ரன் டி.சியில், போன வாரம் ஒரு சம்பவம். ஒரு உயர் நீதி மன்ற நீதிபதியின் வீட்டுக்கு வெளியே காவலுக்காக வாகனத்தில் US Marshals என்ற சமஷ்டிப் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரி காத்திருக்க, ஒரு கார் திருடன் வந்து கைத்துப்பாக்கியால் ஜன்னலில் தட்டியிருக்கிறார். காவல் அதிகாரி ஜன்னலைத் திறந்து சரமாரியாகச் சுட்டதில் வாய் முகமெல்லாம் குண்டு பாய்ந்து கார் திருடன் மருத்துவ மனையில்😂. இதே போன்ற இன்னொரு சம்பவம் சில மாதங்கள் முன்பு பைடனின் பேத்தியின் வீட்டின் அருகிலும் நடந்திருக்கிறது.
  16. இப்ப, வலம்புரியின் போலிச்செய்தியை வட்சப்பில் இருந்து எடுத்துப் போட்டு "உண்மை ஜெயித்தது" என்று டயலாக் விட்ட @சுண்டல் சக நண்பர்கள் "முகத்தை மூடிக்" கொண்டாவது வரிசையாக வரவும்😂! பிகு: தேசம்நெற் ஜெயபாலன் ஆறுதிருமுருகனைப் பற்றி முன்னரும் எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். யாழ் பல்கலையின் மூதவையில் இருந்தபடி சில முன்னேற்றகரமான விடயங்கள் பல்கலையில் நிகழாமல் தடை போடும் ஒருவராக ஆறுதிருமுருகன் அவர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார். உதாரணமாக, வவுனியா வளாகம் (அடுத்து கிளிநொச்சி வளாகம்) தனியான பலக்லைகளாகத் தரமுயர்த்தப் பட்டால், இந்து/சைவர் அல்லாதவர்கள் தலைமைப் பதவிக்கு வந்து விடுவர் என்ற அச்சத்தை மறைமுகமாக ஆறுதிருமுருகன் வெளிப்படுத்தியிருக்கிறார்.
  17. கூர்ப்பியலில் இருக்கும், மெல்ல அவிழ ஆரம்பித்திருக்கும் பல புதிர்களில் பறவைகளின் பேச்சுக் கற்கும் திறனும் (vocal learning) ஒன்று. பேச்சைக் கற்றுக் கொள்ளும் இன்னொரு குடும்பமான மனிதக் குடும்பத்திற்கும், பறவைக் குடும்பத்திற்கும் 150 மில்லியன் ஆண்டுகள் வித்தியாசம் இருந்தாலும், பல பறவையினங்களில் பேச்சுக்குக் காரணமான ஜீன்கள் மனிதக் குடும்பத்திலும் இருக்கின்றன. பேசக் கற்றுக் கொள்ளாத நாய், பூனை போன்றவற்றில் இந்த ஜீன்கள் இருந்தாலும் வேலை செய்யாமல் அடக்கி வைக்கப் பட்டிருக்கின்றன. இதனால், கிளி மட்டுமல்லாமல், பாடும் இயலுமை உடைய பல பறவை இனங்களிலும், மைனா (Starlings), கிளிக் குடும்பங்களிலும் பேச்சு அந்த மாதிரி வரும். கிளிகளின் புத்திக் கூர்மையும் சேர்ந்து கொண்டால், அவையிட பேச்சு அந்த மாதிரி இருக்கும்😂! இதைப் பற்றிய மூலக்கூற்று உயிரியல் ஆய்வுகளை செய்த எரிக் ஜார்விசின் ஒரு ஆய்வுக் கட்டுரை இணைப்பு: https://www.jneurosci.org/content/24/13/3164.long
  18. மருத்துவர் கோபிஷங்கரை நேற்று எட்ட இருந்து பார்த்தேன். அவருடைய பெறாமகளின் நடன அரங்கேற்றத்திற்கு வந்திருந்தார். இவர் வருவார் என்று தெரிந்ததுமே சந்தித்துப் பேச்சுக் கொடுக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டு தான் போயிருந்தேன். பின்னர், நான் ஏதும் அர்த்தமில்லாமல் உளறி வைக்க, என்னையும் தன் பகிர்வுகளில் ஒரு பாத்திரமாக்கி விடுவாரோ😂 என்ற அச்சத்தில் பேசாமல் இருந்து விட்டேன்.
  19. உங்கள் இருவரதும் கருத்துக்களைப் பார்த்தேன். இது வரை நான் எழுதிய எதையும் "ஜஸ்ரின் எழுதியிருக்கிறார்" என்று தான் பார்த்திருக்கிறீர்கள், என்ன எழுதியிருக்கிறார் என்று பார்க்கவில்லை என்று புரிகிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில், என் கருத்துகளின் பயனின்மை - futility புரிகிறது, மேலும் எழுத வேண்டியதன் அவசியமின்மையும் புரிகிறது. இன்னும் ஒரு மாதத்தில் எனக்கு ஐம்பது தாண்டுகிறது (@பெருமாள் நோட் பண்ணிக் கொள்ளுங்கள்😎). ஐம்பது தாண்டினால், பெரும்பாலும் ஆண்கள், ஒரு "நேரக்கணிப்பு குண்டு" போல எந்த நேரமும் return ticket இல் போகலாம். நான் இப்படியே எழுதிக் கொண்டிருந்தால் இப்ப சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும் கிடைக்கும் eulogy போல எனக்கும் சின்ன ஸ்கேலில் கிடைக்கும் என நம்புகிறேன். எனவே, "எனக்கேன் வம்பு" என்கிற மன நிலை கொஞ்சம் என்னிலும் ஏற்பட்டு விட்டது. இன்னொரு பக்கம் "எக்கேடாவது கெட்டுப் போங்கள்" என்ற மனநிலையும் உருவாகி விட்டது. இந்தக் காரணங்களால், தமிழர் அரசியல் திரிகளில் இனி மௌனமாக இருக்க முடிவு செய்திருக்கிறேன். நமக்கு அடைக்கலமாக இருப்பது முடிவில்லாத விஞ்ஞானமும், அறிவியல் தொழில் நுட்பமும்😂.
  20. ஆட்டுக்கு குழை சந்தையில் வாங்கும் நிலை யாழ்ப்பாணத்தில் இருந்ததை இன்று தான் அறிகிறேன். லவ் பேர்ட், பரகீற் (அமெரிக்காவில் budgie என்பார்கள்), பச்சைக் கிளி (parrot) எல்லாம் Psittacine எனப்படும் பறவைக் குடும்பத்தின் உறுப்பினர்கள் தான். இந்தப் பெரிய Psittacine குடும்பத்தின் உப பிரிவாக "சின்னக் கிளிகள்" குடும்பம் இருக்கிறது. சின்னக் கிளிகளில் முக்கியமானவை லவ் பேர்ட்டும், பரகீற்றும். வீட்டுப் பிராணியாக வளர்க்க உகந்தவையாக Psittacine பறவைகள் இருந்தாலும், சுகாதாரமான இடத்தில் இருந்து இவற்றை வாங்கா விட்டால் ஆபத்தான நோயான Psittacosis இனை மனிதர்களுக்குப் பரப்பக் கூடிய ஆபத்து இருக்கிறது. அண்மையில், இலங்கையில் ஒரு பெண் வளர்ப்புக் கிளியில் இருந்து தொற்றிய Psittacosis நோயால் இறந்ததாக ஒரு செய்தி பார்த்தேன்.
  21. இது உண்மையான செய்தியாக இருந்தால், துன்பகரமான ஒரு தகவல். சிகிச்சைகள் பலனளிக்க வேண்டுமென பிராத்திக்கிறேன். அவரது ஆரோக்கியம் சம்பந்தப் பட்ட செய்தியில் ஏன் அவரது சொத்து விபரமெல்லாம் போட்டிருக்கிறார்கள்?
  22. யார் இராதாகிருஷ்ணன்? எனக்கும் இலங்கையின் மலையக அரசியல்வாதி பெ.இராதாகிருஷ்ணனைத் தவிர தமிழ் பரப்பில் வேறொரு இராதாகிருஷ்ணனைத் தெரியாது! இந்த "பிரபலமான" இராதாகிருஷ்ணன் ஈழ அரசியலில், மக்களுக்கு என்ன செய்திருக்கிறார் என்று கொஞ்சம் சொல்லுங்கள்! இனப்படுகொலையில் எல்லாருடைய "பங்கும்" விவரிக்கப் பட்டிருக்கிறது. ஒரு பெரிய பிளேயரின் பங்கு cherry-picking இனால் மிஸ்ஸிங் இந்த கட்டுரையில்😎!
  23. தெல்லிப்பழையில் இருக்கும் இரு இல்லங்களை மூடுவதாக இன்னும் வடமாகாண சபை தளத்தில் செய்தி இருக்கிறதே? குருபரனின் மானநஷ்ட எச்சரிக்கை கடிதத்தில், ஜூலை 4 இற்கு முன் எதுவும் எச்சரிக்கை கிடைக்கவில்லை என்றார்கள். பின்னர், ஜூலை 5 ஆம் திகதி மூன்று பேர் கொண்ட குழு விசாரித்து கிளீன் சேர்டிபிகேட் கொடுக்க வேண்டிய தேவை ஏன் வந்ததாம்😎? இங்கே வலம்புரி பொய்செய்தி போட்டிருக்கிறதா அல்லது மாகாண சபை பொய் செய்தி போட்டிருக்கிறதா? உதயன் மறுப்பு/மன்னிப்பு வெளியிட்டு விட்டதாமா? 48 மணி நேரம் தாண்டி விட்டதென நினைக்கிறேன்.
  24. சமந்தா பிரபு மேல் இருந்த "மரியாதை" போய் விட்டது எனக்கு😎! அரைவைத்தியர்கள்- quacks என்று அழைக்கப் படும் யாரோ இதைச் சமந்தாவிடம் சொல்லியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஒரு "அரை அவியல்" வைத்தியரின் நுனிப்புல் மேய்ந்த அறிவு அப்படியே தெரிகிறது இந்த செய்தியில். உண்மையில் எங்கள் உடலினுள் நடப்பது இது தான்: தொற்று ஏற்படுத்தும் கிருமிகளைக் கொல்ல எங்கள் நோயெதிர்ப்புக் கலங்கள் படையெடுக்கும் போது, அந்தக் கலங்களில் சில ஐதரசன் பேரொக்சைட் , நைட்ரிக் ஒக்சைட் போன்ற கிருமியைக் கொல்லும் நஞ்சுகளை உருவாக்குகின்றன. இந்த நஞ்சுகள் மிகக் குறைந்த அளவில், மிக குறுகிய காலத்திற்கு சுரக்கப் படுவதோடு, அதைச் சுரந்த கலங்களும் அந்த நஞ்சுகளால் இறந்து போகின்றன (ஒரு தற்கொலைத் தாக்குதல் எனலாம்). இதை வாசித்த அரைவைத்தியர் யாரோ, வெளியேயிருந்து ஐதரசன் பேரொக்சைட்டை உடலினுள் செலுத்தினால் என்ன என்று யோசித்திருப்பார் என ஊகிக்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.