Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. USGS இன் படி நியூ ஜேர்சியின் ரியூக்ஸ்பரி நகரில் மையங் கொண்ட 4.8 அளவு பூமியதிர்ச்சி பதிவாகியிருக்கிறது. கீழே மேரிலாந்திலிருந்து, மேலே பொஸ்ரன் வரை அதிர்வு உணரப் பட்டிருக்கிறது. எங்கள் வீட்டில் இருந்து 30 மைல் தூரத்தில் இருக்கிறது இந்த நகரம்😂. சேதங்கள் இல்லை வீட்டுக்கு. https://earthquake.usgs.gov/earthquakes/map/?currentFeatureId=us7000ma74&extent=21.9838,-130.16602&extent=51.78144,-59.85352
  2. இது 2015 இல் ட்ரம்ப் முதன் முதலில் தேர்தல் அரசியலில் நுழைந்த போதே ஆரம்பித்து, தோல்வியடைந்த ஒரு முயற்சியின் தொடர்ச்சி. அந்த நேரம், கலிபோர்னியாவிலும், ஐயோவாவிலும் பதிவு செய்யாத குடியேறிகளால் இரு கொலைகள் நடந்தன (ஆனால் மண்ணின் மைந்தர்களால் பல மடங்கு எண்ணிக்கையான கொலைகள் நடந்தன). ட்ரம்ப் அணி இந்த இரு கொலைகளை மீள மீள நினைவுறுத்திக் கொண்டே இருந்தது. 2016 இல் ட்ரம்ப் வென்ற பின்னர் VICE என்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்தனர். இதன் விரிவு: Victims of Immigrant Crime Engagement. சட்ட விரோத, சட்ட ரீதியான குடியேறிகளால் அமெரிக்க பிரஜைகள் மீது மேற்கொள்ளப் படும் குற்றங்களை தொகுத்து, குடியேறிகளால் அமெரிக்கருக்கு ஆபத்து என்று ஒரு கற்பிதத்தை ஏற்படுத்துவதே நோக்கம். VICE ஆரம்பித்து 2 வருடங்கள் முக்கியும் கூட பெரும் எண்ணிக்கையான பாதிக்கப் பட்டோரைத் திரட்ட இயலவில்லை. இதன் பிரதான காரணம், குடியேறிகளால் அமெரிக்காவில் நிகழும் வன்முறைக் குற்றங்கள் மிக மிகக் குறைவு. ஐயோவாவில் குடியேறியால் கொலை செய்யப் பட்ட பெண்ணின் பெற்றோர் கூட VICE திட்டத்திற்கு ஒத்துழைக்க முன்வரவில்லை. "பலியான என் மகள் இதை ஆதரிக்க மாட்டாள்" என்று தந்தை சொல்லியிருந்தார். இறுதியில் VICE செயலிழந்து மறைந்து போனது. இப்போது மீளவும், மேலே இருக்கும் பிரபலமான ஓரிரு சம்பவங்களை வைத்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
  3. இவை எதுவுமே நடக்கவில்லை என்று சொல்லவில்லை. ஆனால், இப்போது நியூ யோர்க்கில் அதிகரித்து விட்ட பதிவு செய்யாத குடியேறிகளால் தான் இவை நடக்கின்றன என்பது தரவுகளால் நிறுவப் படாத ஒரு கற்பிதம் என்றே சொல்கிறேன். பெரிய நகரங்கள் - சான் பிரான், பிலாடெல்பியா, பொஸ்ரன், LA இவற்றில் எல்லாம் இப்படியான குற்றங்கள் எப்போதும் நடந்தே வந்திருக்கின்றன. உள்ளூர் செய்திகளில் மட்டும் வரும், யாரும் கவனிப்பதில்லை. ஆனால், இப்போது சந்தேக நபர்கள் பதிவு செய்யாத குடியேறிகள் என்றதும், இதை பல யூ ரியூப் வழி செய்தி ஊடகங்களில் நாடு முழுவதும் பகிர்கிறார்கள். இந்தப் பகிர்வின் பின்னால் இருக்கும் எதிர் பார்ப்பு எல்லா வன்முறைக் குற்றங்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டுமென்பதை விட, பதிவு செய்யாத குடியேறி என்றால் கொஞ்சம் அதிகமாகத் தண்டிக்க வேண்டுமென்பதாக இருக்கிறது. இந்த எதிர்ப் பார்ப்பில் உணர்வு ரீதியான நியாயம் இருந்தாலும், சட்ட ரீதியில் அமெரிக்காவில் இது சாத்தியமில்லை- இப்படி குற்றம் சாட்டப் பட்டவரின் குடிவரவு நிலை, இனம் என்பன பார்த்து சட்டம் பாய ஆரம்பித்தால் விரைவில் நியூயோர்க் போர்க்கால கொழும்பு போல மாறி விடும். பிணை (bail) என்பது அமெரிக்காவில் இன்னும் நீதிபதியின் தெரிவாக (discretion) பெரும்பாலும் இருக்கும் ஒரு முடிவு. இப்படியான simple assault கேஸ்களுக்கு பிணையில்லாமல் வெளியே விடும் இளகிய நடைமுறை பெருந் தொற்றுக் காலத்தில் நியூ யோர்க்கில் கொண்டு வரப் பட்டது. பதிவு செய்யாத குடியேறிகளுக்கு இதை இறுக்கமாக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு பலரிடம் இருக்கிறது. ஆனால், இவர்களைப் பிணையில்லாமல் வெளியே விட்ட நீதிபதியின் செயல் இனி மீளாய்வுக்குள்ளாகும். ஏன்? குற்றமொன்றில் சந்தேக நபரான ஒரு குடியேறியை, ஒரு குறிப்பிட்ட காலம் தடுப்புக் காவலில் வைத்து விட்டு, உள்ளூர் ICE இற்கு அறிவித்து குடிவரவுச் சட்டப் படி நடவடிக்கை எடுக்க அனுமதிப்பது தான் வழமையாக நடப்பது. இனி நீதிபதிகள் விழித்துக் கொள்வர் என நினைக்கிறேன்.
  4. இந்த 10 இடங்களில் பெரும்பாலான இடங்களுக்குப் போயிருக்கிறேன், அதிலும் சொந்தக் காசு செலவில்லாமல். இலங்கையில் மிருக வைத்தியராக இருப்பதன் பல அனுகூலங்களில் ஒன்று, இந்த இடங்களுக்கெல்லாம் அரச வாகனத்தில் பணி நிமித்தம் செல்லக் கிடைத்தமை. அம்பேவல, நுவரெலியா தாண்டி இருக்கும் ஒரு அழகிய பிரதேசம். பல தடவைகள் அம்பேவல பால் பண்ணை போய், நாள் முழுவதும் சாணத்தில் குளித்து வேலை செய்த பின்னர், மாலையில் நுவரெலியாவில் இறங்கி பியர் , கொத்து ரொட்டி எடுத்துக் கொண்டு வாகனத்தில் தூங்கியபடியே வந்தால் கண்டியில் வீட்டு வாசலில் இறக்கி விடுவர். ஹோர்ட்டன் சம வெளியும், அதற்கு அண்மையாக இருக்கும் பம்பரகந்த (??) நீர் வீழ்ச்சியும் முழு நாளும் பார்த்து ரசிக்க கூடிய இடங்கள். நுவரெலியா போகும் வழியில் மல்லியப்பூ சந்தியில் இருக்கும் உணவகத்தில் பெரும்பாலும் பஸ்கள் உணவுக்கு நிறுத்துவர். அந்த சந்தியில் இருந்து மலையழகை ரசித்தவாறே சுவையான உணவை அனுபவிக்கலாம். இப்போதும் இருக்கிறதா தெரியவில்லை. அனுராதபுரம் கொஞ்சம் காய்ந்த இடம் தான் என்றாலும், அங்கே பெலிமல் என்ற ஒரு தேனீர் போன்ற பானம் விற்பார்கள். சூடான அந்தப் பானம் குடிக்கும் போது வயிறு குளிர்வதை உணரலாம்.
  5. 😂 எந்த செய்தி ஊடகம் என்பதைப் பொறுத்து கதை மாறு படும். கீழே இருப்பது நியூ யோர்க் போஸ்ற் எனப்படும் "ட்ரம்ப்" ஆதரவு, சிவப்பு கட்சி ஊடகம். https://nypost.com/2024/02/13/opinion/migrant-crime-is-turning-cities-into-war-zones/ இவர்களைப் பொறுத்த வரை, பதிவு செய்யாத குடியேறிகள் நியூ யோர்க் தெருக்களில் போவோர் வருவோரையெல்லாம் துரத்தித் துரத்தி வெட்டுகிறார்கள், கொள்ளையடிக்கிறார்கள் என்று எழுதுவர். சி.என்.என், இதைப் பற்றி எழுதுப் போது கொஞ்சம் புள்ளி விபரங்களோடு சேர்த்து எழுதுகிறது. இவர்கள் சொல்வதின் படி, நியூ யோர்க் மட்டுமல்ல, அமெரிக்கா முழுவதும், பெரும் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுவதில் குடியேறிகளுக்கு பாரிய பங்கு இல்லை. https://www.cnn.com/2024/02/15/us/border-migrants-crime-cec/index.html மேலே நியூ யோர்க்கில் குடியேறிகளின் குற்ற வீதம் பற்றி இணைக்கப் பட்டிருக்கும் செய்திகளைப் பார்த்தீர்களானால், எவையும் ஒழுங்கான ஊடகங்களாக இருக்காது. இவற்றை "குட்டிச் சுவர் ஊடகங்கள் - fringe media" என்று அழைப்பர். ஒரு அல்லது இரு சம்பவங்களை எடுத்து, பந்திகள் எழுதி, அமெரிக்காவில் இருக்கும் 12 மில்லியனுக்கு மேற்பட்ட தென்னமெரிக்கரில் அரை வாசிப்பேர் கிருமினல்கள் எனக் காட்டியிருப்பர். குற்றங்கள் நியூ யோர்க் மட்டுமன்றி சகல பெரிய அமெரிக்க நகரங்களிலும் நடக்கின்றன (உண்மையான தரவுகளின் படி, 90 களில் இருந்து அமெரிக்க நகரங்களில் மோசமான குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தே வந்திருக்கிறது என்கிறது FBI). பதிவு செய்யாத குடியேறிகளின் பங்களிப்பு இந்தக் குற்றங்களில் மிகக் குறைவு. பெரும்பாலானவை இங்கேயே பிறந்து வளர்ந்த "மண்ணின் மைந்தர்களால்" நிகழும் குற்றங்கள். மேலதிகமாக, கீழ் இணைப்பில் நியூ யோர்க்கில் பதிவு செய்யாத குடியேறிகளால் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றனவா என்ற நேரடியான கேள்விக்கு புள்ளி விபரங்களோடு பதில் தந்திருக்கிறார்கள். https://abc7ny.com/us-politics-immigration-study-migrants-not-driving-violent-crime-rates/14618231/
  6. பல உடல் அவயவங்களைப் பொறுத்த வரையில் use it or lose it என்பது உண்மை, முழங்கால் மூட்டைப் பொறுத்த வரை இது மிகப் பொருந்தும். எங்கள் உடலில் இருக்கும் சிக்கலான மூட்டு முழங்கால் மூட்டு. கிட்டத் தட்ட intelligent design என்று சொல்லலாம்😎. அதன் சிக்கல் தன்மையைக் காட்டுவதற்காக மட்டும் படத்தை இணைத்திருக்கிறேன். கேபிள்கள் இலகுவாக குறுக்கோடுவதற்கு வசதியாக முழங்கால் சில்லு (patella) இருக்கிறது. முழங்கால் முக்கியமான இன்னொரு விலங்கு குதிரை. குதிரைகள் நின்ற நிலையில் தான் உறங்கும். அப்படி அதிக தசைகளைப் பாவிக்காமல் நிற்பதற்கு முழங்கால் மூட்டு உட்பட்ட முக்கிய மூட்டுக்களை "லொக்" செய்து விடும் stay apparatus என்ற ஏற்பாடு குதிரையின் கால்களில் இருக்கின்றது. இதற்கு முழங்கால் சில்லும், குறுக்கோடும் கேபிள்களான tendon களும் முக்கியம்.
  7. நுணா, ஒரு அருமையான காணொளி இது. முழங்கால் மூட்டு வலி, மூட்டழற்சி இருப்போர் மிதமான உடற் பயிற்சி மூலம் நிவாரணம் பெறலாம் என்பதை இப்படி சிறப்பாக யாரும் தமிழில் விளக்கி நான் காணவில்லை. இந்த முழங்கால் பிரச்சினை எனக்கும் இருந்தது, என் அனுபவம் இது. 2019 இல் பெருந்தொற்று ஆரம்பித்த நேரம் ஒரு முழங்காலில் சாதுவான அழற்சி (mild arthritis) ஏற்பட்டது. ஒரு நாளைக்கு 6 மைல், வாரத்தில் 30 மைல்கள் ஓடுவதால் வந்திருக்கிறது. ஓட்டத்தைக் கைவிடு என்று மருத்துவர் சொன்னார். 8 வாரங்கள் ஓய்வெடுத்துக் கொண்டு, நீச்சல் பழக ஆரம்பித்தேன். அரைத் தடாகம் மட்டும் மூச்செடுக்காமல் போக முடியும், மூச்செடுக்க தலையைத் திருப்பினால் மரக் குற்றி போல தாழ ஆரம்பிப்பேன். நீச்சல் சரிப் பட்டு வரவில்லை😂. அதன் பிறகு பின் வரும் வழிகளில் நானே எனக்கு மூட்டு சிகிச்சையை ஆரம்பித்தேன். 1. எங்கள் முழங்கால் மூட்டை நோக்கி, தொடையில் இருந்தும், கணுக்காலில் இருந்தும் கேபிள்கள் போல பல tendon கள் வந்து இணைகின்றன. இந்த தொடை, கணுக்கால் தசைகள் பலம் இழந்தால், நடக்கும், ஓடும் போது உருவாகும் விசை பலமாக முழங்காலைத் தாக்கும். இது நடக்காமல் முழங்கால் மூட்டைப் பாதுகாக்க, தொடை, பிருஷ்டம், கணுக்கால் தசைகளை இலக்கு வைத்து தசைப் பயிற்சிகளைச் செய்யலாம். இவை மூன்றையும் ஒரு சேர பலமாக்கும் ஒரு பயிற்சி சுமோ பழு தூக்கல் (Sumo dead weight lifting) என்ற முறை. இதை யூ ரீயூப் வீடியோக்களில் ஆர்வமுள்ளோர் தேடிப் பாருங்கள். 2. சைக்கிளோட்டம்: 8 வார ஓய்வுக்குப் பின்னர், மேலே சொல்லியிருப்பது போல 12 - 24 மணி நேர இடைவெளியில் 30 நிமிடம் சைக்கிளோட்டம் செய்த போது, முழங்காலில் இருந்த சிறிய வலி மறைந்து விட்டது (காரணம் இப்போது தெரிகிறது). 3. ஒரு 6 மாதம் வரை இப்படி சைக்கிளோட்டம், தசைகள் பலமாக்கல் செய்த பின்னர், ஒரு trail shoe வாங்கி trail running ஆரம்பித்தேன். மண் தரையான trail இல் ஓடும் போது, இரு நன்மைகள். 1. உங்கள் காலில் பல தசைகள் ஒரே நேரத்தில் வேலை செய்யும் (balancing) 2. முழங்காலைத் தாக்கும் விசை தார் ரோட்டை, கொங்க்ரீட்டை விட குறைவாக இருக்கும். 4. 8 மாதம் கழித்து, மீண்டும் தார் ரோட், கொங்கிரீட் நடை பாதை, என்பவற்றில் ஓட ஆரம்பித்தேன். ஆனால், வலி இருக்கிறதோ இல்லையோ, ஓடி முடித்தவுடன் முழங்கால் மூட்டிற்கு 10 நிமிடம் ஐஸ் வைக்க வேண்டும். இதைச் செய்தால் ஓட்டத்தினால் அழற்சி ஏற்படுவது கட்டுப் படும். மொத்தமாக , மீண்டும் வாரத்திற்கு 30 மைல்கள் ஓடும் நிலைக்கு நான் வர, 1 வருடம் ஆனது. ஆனால், இப்போது முழங்கால் வலி, அழற்சிக்கான அறிகுறிகள் எவையும் இல்லை.
  8. இன்சுலின் பாவிப்பவர்கள் பெரும்பாலும் குழுக்கோஸ் குறைந்தால் கோமாவிற்குப் போவது பற்றிக் கவலை கொள்ள வேண்டும் (hypoglycemic shock). ஏனையோர், குறைந்த குழூக்கோஸ் பற்றிக் கவலை கொள்ள அதிகம் காரணங்கள் இல்லை. புள்ளி விபரவியலில் சாதாரண பரம்பல் (normal distribution) என்பதை விளக்க இரத்த குழூக்கோஸ் நல்ல உதாரணம். நீரிழிவு இல்லாத ஆட்களில்: சராசரி (mean) 99 mg/dL, நியம விலகல் (standard deviation) 9 mg/dL என்று எடுத்துக் கொண்டால்: 16% ஆனோரில் 90 ஐ விடக் கீழே 2.5% ஆனோரில் 81 ஐ விடக் கீழே 1.25% ஆனோரில் 72 ஐ விடக் கீழே இருக்க வாய்ப்புண்டு. எனவே இது சாதாரணமான நிலை தான்.
  9. நிறையப் பேரை நெளிய வைத்து விட்டது, யாழிணையத்தில் போட்டால் முகநூலில் ரியாக் ஷன் வரும் அளவுக்கு இருக்கிறது. இதில் இருக்கும் எல்லாவற்றையும் கோசானின் கட்டுரை சுட்டிக் காட்டியிருக்கிறது. 50 பைசா புல்டோ ரொபி இன்னும் 50 பைசாவுக்கு கிடைக்காதா என்று ஏங்குவதை nostalgia என்று தான் அழைக்க முடியும்😂.
  10. இலங்கையில் பல சிங்களவர்கள் பெரும்பாலும் 3 நேரமும் சோறு சாப்பிடுவோர் இருக்கிறார்கள். இலங்கையில் நீரிழிவு அதிகரிக்க இதுவும் ஒரு காரணம்.
  11. விளக்கம் நல்லம் தான், ஆனால், வாலை விட்டு விட்டு, வாலில் இருக்கும் உரோமத்தை பற்றிக் கொண்டிருக்கிறீர்கள். 1. திராவிடர் ஒடுக்கப் பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் "சாதியை வளர்க்கிறான்" என்றீர்கள். 2. சிறி லங்காவில் சிங்களவன் தமிழருக்கு விசேட சலுகை கொடுக்க வேண்டுமென முழங்குகிறீர்கள். முதல் கருத்தில் சிங்களவனின் மேலாண்மை வாத பட்ஜ், இரண்டாம் கருத்தில் ஒடுக்க பட்டவனுக்கு உரிமை கேட்கிறேன் என்ற பட்ஜ். இப்படி மாத்தி மாத்தி உங்கள் வசதிக்கேற்ற மாதிரி அணிந்து கொண்டு ஒவ்வொரு திரியிலும் வலம் வருவதால் தான், உங்கள் கருத்துகள் அர்த்தமற்ற விதண்டாவாதம் என்ற வகைக்குள் மட்டும் வருகின்றன😎.
  12. தமிழரை சிங்கள நிர்வாகம் எப்படி நடத்துகின்றது? சாதியில் ஒதுக்கப் பட்டோரை உயர் சாதியினர் (அண்மையில் பாடசாலை அதிபர் பதவி விடயத்தில் செய்தது போல) எப்படி நடத்துகின்றனர்? அமெரிக்காவில் இன்றும் கூட தெற்கில் கறுப்பினத்தவரை ட்ரம்ப் விசுவாசிகள் எப்படி நடத்துகின்றனர்? இந்த எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில் என்பதால், இப்படி "அது வேற, இது வேற" என்று ஒதுங்குவதைத் தவிர வேறு வழிகள் இல்லை😎!
  13. இதையே தான் அமெரிக்காவில் ட்ரம்பின் பின்னால் திரியும் வெள்ளைக் காரர்களும் (சில பிறவுண் தோல் ஆசியர்களும்) கேட்கீனம்: "all men are created equal" என்று இருக்கும் அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு ஏன் affirmative action மூலம் இட ஒதுக்கீடு? இதைக் கொஞ்சம் திருத்தி, இடம் மாற்றிக் கேட்டுப் பாருங்கள்: "சிறிலங்கன் என்ற அடையாளம் இருக்கும் போது ஏன் இலங்கையில் தமிழருக்கு தனியான சுயாட்சி என்ற கோஷம்?"😎 புரிகிறதா?
  14. மிக உறுதியாக இது போன்ற வதந்திகளை நீங்கள் நம்புகிறீர்கள் போல தெரிகிறது😂. அமெரிக்காவில், ஐரோப்பாவில், இவை போன்ற முன்னேறிய நாடுகளில் தரவுகள் (data) என்பவை கணணிக்கு முன்னால் இருந்து ஒருவர் சும்மா ரைப் செய்து விட்டு வெளியே விடுபவை அல்ல. இப்படி தான் விடயம் தெரியாத பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் ஆரோக்கியம், உணவு, மருந்து என்று வரும் போது ஆயிரக் கணக்கானோரின் பல வருட கால உழைப்பினால் வரும் தரவுகள் தான் உங்களுக்கு ஆலோசனைகளாகவும், மருந்துகளாகவும் உருவாக்கப் பட்டுக் கிடைக்கின்றன. இந்த நடைமுறை தெரியாமல் இருப்பது பாரிய குறைபாடல்ல, ஆனால் தெரியாத ஒரு விடயத்தைத் தேடியறியாமல் தவறான கருத்துகளைப் பரப்புவது கொஞ்சம் நெருடலான விடயம். உங்களுக்குப் பொருத்தப் பட்ட ஸ்ரென்ரை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று 10 கம்பனிகள் வரை இந்த ஸ்ரென்ற் தயாரித்து விற்கின்றன, ஆனால் அந்தக் கம்பனிகள் போலித் தரவுகளை வைத்து ஸ்ரென்ற் தயாரிக்கவில்லை. 80 களில் இருந்து, Material Scientists எனப்படும் நிபுணர்களும் , பன்றி இதயத்தில் இவற்றை பொருத்தி ஆராய்ந்த டசின் கணக்கான மிருக வைத்தியர்களும், மனிதர்களில் பரிசோதனைகள் செய்த சில டசின் மருத்துவர்களும் என்று சில ஆயிரம் பேரின் உழைப்பினால் உருவான ஸ்ரென்ற் உங்களுக்குப் பொருத்தப் பட்டது. சும்மா கார்ப்பரேற் உருவாக்கிய கற்பனைத் தரவுகள் அல்ல ஸ்ரென்ரின் ஆரம்பம்.
  15. லித்தியம் மட்டும் கலந்தாலே போதும், மாசு தான், அதில் சந்தேகமில்லை. ஆனால், மேலே இருக்கும் "உசார் புத்தி சாலிகளின்" கருத்து அதுவல்லவே? கழிவுகளை இந்தக் கப்பல் இலங்கைக்கு எடுத்துச் செல்வதாக - அவர்கள் முதலே எதிர்வு கூறியது போல- நடக்கிறது என்பது தான். உண்மையில் இது வரை வெளிவந்த தகவல்களில் அப்படி எதுவும் தரவுகள் இல்லை. மேல் மாநாட்டில் 7 வது நிமிடத்தில் இதைப் பற்றி சொல்லப் படுகிறது. கழிவு என்ற சொல்லே பாவிக்கப் படவில்லை.
  16. NTSB குறிப்பிட்ட hazardous materials இற்கும் hazardous waste இற்கும் வித்தியாசம் தெரியாமல் டெய்லிமிரர் திண்டாடியிருக்கு. ஏற்கனவே "தாய் மொழியில் சிக்கல் இருப்பவர்கள்" வேறு கம்பு, அரிவாள்..அண்டர்வேர் என்று காற்றில் சுழட்டிக் கொண்டிருக்கிறார்கள்😂. தகவல்களில் ஆர்வமுள்ளோருக்கு மட்டும்: இன்னும் 2 முதல் 6 வாரங்களில் கப்பலில் இருக்கும் முழு பொருட்களையும் பட்டியலிட்டு அறிக்கை வரும் வரை பொறுங்கள். மேலும் Class 9 hazmat என்பது, ஒரு தனி வகைக்குள் அடக்க முடியாத miscellaneous ஆபத்தான பொருட்களுக்கான வகை. புதிய லித்தியம் பற்றரி - லித்தியம் கழிவு அல்ல- கூட இந்த வகை தான். மேலும், கப்பலைச் சுற்றியிருக்கும் நீர் உள்ளே விழுந்து கிடக்கும் பால இரும்புத் துண்டுகள் காரணமாகத் தான் சுழியோடிகளுக்கு ஆபத்து என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. கீழேயுள்ள இணைப்புகளைப் பார்த்து தகவல் அறிந்து கொள்ளுங்கள்:
  17. நா.த.கைவையோ, திராவிடக் கட்சிகளையோ பகைக்கத் தேவையில்லை . தலையில் தூக்கி வைக்கவும் தேவையில்லை. (இரு தரப்பும் பாசாங்கில் ஒன்று தான்). இந்த தேவையில்லாத திராவிட தமிழர் ஆணியை யாழ் களம் உட்பட சமூக வலை ஊடகங்களில் தூக்கி வந்து உரையாடலில் புதிய சாக்கடை நிலையை உருவாக்கியது யார் என்று தேடிப் பார்த்தீர்களானால் அது நா.த.க தீவிர விசிறிகள் தான். அதை எப்போவாவது நீங்கள் கண்டித்தீர்களா?
  18. முதலில்: உங்கள் தகவல்கள் தவறு, கொஞ்சம் தேடிப் பார்த்துத் திருத்திக் கொள்ளுங்கள். சீமானை, நா.த.கவைப் பற்றிய செய்திகள், அவரது கருத்துக்கள் தமிழ் நாட்டின் பத்திரிகைகளில் தொடர்ந்து வருகின்றன. அவர்கள் மேடை கொடுக்காமல் இருப்பது, மேலே இருக்கும் சீமானின் ஆங்கில பாவனை எதிர்ப்புப் போன்ற குறளி வித்தை உரைகளுக்கு மட்டும் தான். இது ஊடகங்கள் தங்கள் தரத்தைப் பேண எடுக்கும் நடவடிக்கையே ஒழிய, சீமான், நா. த.க எதிர்ப்பு அல்ல. அப்ப சீமானும், நா.த.கவும் ஏன் சமூகவலை ஊடகங்களை பெருமளவு நாடுகிறார்கள்? ஆங்கில மோக எதிர்ப்புப் போன்ற பாசங்கு அவியலை, மிளகாய்ப் பொடியில் தமிழ் தேடும் வியாபார தமிழ் தேசியத்தை சமூக ஊடகங்களில் அவர்களால் மட்டும் தான் ஏற்றி விற்க முடியும். சீரியசான ஊடகங்கள் மேடை கொடுக்காது. இது உங்களுக்கு நெருடலாகத் தெரியவில்லையென்றால், உங்களுக்கு சீமான் பாசாங்குகள் எதுவும் உறைக்கப் போவதில்லை!
  19. 😂 இந்த இன்ஸ்ரா, யூ ரியூப் இத்தியாதிகள் தான் பிரச்சினையின் ஆரம்பம் என்று தெரியவில்லையா? உதாரணமாக: ஒரேயொரு ஒரு பனங்கொட்டையை நட்டு (1X), அதை 9 கோணங்களில் வீடியோ எடுத்து (9X), அவற்றை IT ரீம் வெவ்வேறு பெயர்களில் நடத்தும் 10 யூ ரியூப் தளங்களில் (10X) போட்டால் ஒரு பனங் கொட்டை நட்டது 90X பனங்கொட்டையாகத் தெரியும் உங்கள் போன்ற எளிய தமிழ் பிள்ளைகளுக்கு😎! ஆனால், கோசான், ஐலண்ட் போன்றோர் பிரின்டில்/இணைய செய்தித் தளத்தில் வந்த ஒரு சம்பவத்தை சொன்னாலும் அதில் இருப்பது திரித்த செய்தியாகத் தெரியும். அவர்கள் இருவரும் சுட்டிக் காட்டிய ஒரு தகவலைக் கூட போலி என்று நிரூபிக்க இயலவில்லையெனும் போது, வாசகர்கள் நிலையைப் புரிந்து கொள்வர் என்று நினைக்கிறேன்.
  20. உறவே, யூ ரியூபில் "கிளிக்கிற்கு 50 பைசா பொறுக்கும் வியாபார தமிழ் தேசியத்தை" உயிர்ப்பாக வைத்திருப்பதற்காக சீமானை ஆதரிக்கிறோம் என்று தெளிவாகச் சொல்லுங்கள்😎!
  21. விசிலடிக்காகப் பேசுகிறார். விசிலடிக்க ஆட்கள் இருக்கும் மட்டும் சீமான், ட்ரம்ப் போன்ற demagogues உருவாகிக் கொண்டு தான் இருப்பர்!
  22. கெனடி இன்னும் உயிரோடிருப்பது "எல்லோருக்கும்" தெரிந்திருப்பது போலவே, இனி மேற்கும் இந்தியாவும் சேர்ந்து குண்டு வைத்ததும் "எல்லோருக்கும்" தெரிந்திருக்கிறது😂! இந்தியாவிடம் இருந்து கிடைத்த எச்சரிக்கை பற்றிய தகவலை மறைத்தமைக்காக, சிறையில் வாட வேண்டிய சந்தேக நபர் சிறிசேன! அவர் இனி வந்து "செவ்வாய்க் கிரக வாசிகள் தான் வைத்தார்கள்" என்று புள்ளி வைத்தால் கோலம் போட முட்டாப் பீசுகள் எங்களிடையே இருக்கிறார்கள்! இந்த லட்சணத்தில் சிங்களவன் முட்டாள் என்று தங்களுக்குத் தாங்களே கிச்சு கிச்சு மூட்டிக் கொள்வோர் இருக்கிறார்கள்!
  23. ஈயம், சூரிய மின் தகட்டிலிருந்து மட்டுமல்ல, printed circuit board-PCB உடைய எல்லா சாதனங்களிலும் இருக்கும் ஒரு ஆரோகியத்திற்குக் கேடான உலோகம். அதனால் தான் e-waste என்பதை தனியாக நகரங்கள் சேகரிக்கின்றன. இந்த e-waste இல் இருந்து ஈயத்தை பிரித்தெடுக்கும் முறைகள் இருக்கின்றன. மேற்கு நாடுகளில் செய்கிறார்கள். கீழைத்தேய நாடுகள் பின்பற்றும் வழிகள் இருக்கின்றன, ஆனாலும் செய்ய மாட்டார்கள். அது அவர்களின் பிரச்சினை. ஆகவே, பசுமைத் தொழில் நுட்பத்தினால் கிடைக்கும் நன்மைகளோடு ஒப்பிடுகையில் e-waste ஒரு பெரிய மறைக்காரணி அல்ல.
  24. நீங்கள் சொல்வது பாதி சரி: தரவுகள் என்று வரும் போது நூற்றுக் கணக்கானோர், ஆயிரக்கணக்கானோரின் மீது objective ஆக எடுக்கப் பட்ட அளவீடுகள் தான் செல்லு படியாகும். இத்தகைய தரவுகளை வைத்துத் தான் நோய்த் தடுப்போ, மருத்துவமோ செய்ய இயலும். மறுபக்கம், பல தடவைகள் மருத்துவ மனைக்கு தனி ஒருவர் போய் வந்து விட்டு, தன்னிடம் இருப்பவை தரவுகள் என்று அவர் நம்பலாம், ஆனால் இவை மருத்துவ விஞ்ஞானத்திற்கு முழுப்பயன் தருபவை அல்ல. நோயுற்றவரின் அனுபவம் நவீன விஞ்ஞானத்திற்கு தேவை, ஆனால் உங்கள் அனுபவம் ஆய்வுத் தரவுகளை விட பலம் குறைந்தவை தான். அதற்காக நீங்கள் பகிராமல் இருக்க வேண்டியதில்லை. அதே நேரம், ஆரோக்கிய நடைமுறைகளை, அனுபவங்களைப் பகிரும் ஆட்களை நையாண்டி செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி நீங்கள் செய்யும் போது, "அம்மணமாய் நிற்பவன் உடுப்புப் போட்டவனை எள்ளல் செய்வது" போன்ற முரண் நகை நிலை ஏற்படுகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.