Everything posted by Justin
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
ட்ரம்ப் ஆதரவாளர்கள் மட்டுமா? புரின், கிம், "ஜேர்மனிக்கு நன்மை செய்த ஹிற்லர்" இப்படி ஒரு பட்டியலில் இருக்கும் சர்வாதிகார கிளப்பிற்கே ஆதரவாளர்கள் அல்லவா😂? இதில் அதிசயம் இல்லை: தீவிர தேசியவாதம் என்பது, தீவிரமில்லாத எதையும் எதிரியாகப் பார்க்கும் வலது சாரி வாதம். பெண்கள் முதற்கொண்டு, ஒருபால் உறவினர், இடைப்பாலினர், தங்கள் மதம் சாராதோர் என எல்லோர் மீதும் வெறுப்பை உமிழும் ஒரு குழு தான் பெரும்பாலான நா.த.க தீவிர விசுவாசிகளாக இருக்கின்றனர்.
-
சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House
செர்னோபில் அணு உலை விபத்து சகல வழிகளிலும் தனித்துவமானது. உலையின் உள்ளே அழுத்தம் அதிகரித்து வெடிப்பு ஏற்பட்டது, யுரேனிய குச்சிகளை மூடி மேலே இருந்த கொங்கிரீட் சிம்னி தூளாகியது. ஓர் வால்வு சரியாக வேலை செய்யாமையால் ஏற்பட்டது. இதோ போன்ற ஒரு நிலை 1979 இல் பென்சில்வேனியாவின் 3-Mile Island என்ற இடத்தில் இருந்த அமெரிக்க அணு உலையிலும் ஏற்பட இருந்து, சரியான தொழில் நுட்ப வழிகாட்டல் இருந்தமையால் பேரனர்த்தம் தவிர்க்கப் பட்டது. பகிடி என்னவென்றால், செர்னோபில் அணு உலை வெடித்து மத்திய ஐரோப்பா வரை காற்றில் கதிர் வீச்சு மூலகங்கள் அதிகரித்ததை ஏனைய நாடுகள் கண்டு கொண்டன. சோவியத் அரசோ, தொழிலாளர் தின பேரணியை செர்னோபிலில் மக்களை வைத்து கட்டாயமாக நடத்தி முடித்த பின்னர் தான் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை ஆரம்பித்தது.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
ஆம். இந்தியப் படையினர் இலங்கையிலிருந்து வெளியேறி தமிழ் நாட்டில் வந்திறங்கிய போது வரவேற்கப் போகாமல் தவிர்த்தார் என்ற மத்திய அரசின் கோபமும் 1990 ஆட்சிக் கலைப்பிற்குக் காரணம். இவை பதிவில் இருக்கும் சரியான தகவல்கள், சம்பவங்கள். நீங்கள் இதை ஏன் பையனுக்குச் சொல்கிறீர்கள் என்பது தான் எனக்கு விளங்கவில்லை😂! அவர் தகவல்களை பெறும் இடம் வேறு, நம்பும் தரவுகள் வேறு. அது வேற உலகம், இல்லை பிரபஞ்சம்! உங்களுக்கு நேரம் பாழ்!
-
மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி, காட்டுயானம் ஆகியவற்றில் எந்த அரிசி உடலுக்கு நல்லது?
"டயற்" என்பது வகேஷன் போல. முடிவுக்கு வந்தே ஆகும். வாழ்க்கை முறை- life style என்பது கல்வி போல, முடிவில்லாமல் தொடர்ந்து வரும். எனவே, இந்த உணவை மட்டும் குறி வைக்கும் ஒரு பரிமாண டயற்றை நான் அவ்வளவு ஊக்குவிப்பதில்லை. ஆனால், அளவான உணவு, உடலுழைப்பு, உறக்கம், மன அமைதி இவை அத்தனையும் இணைந்த (integrated life style) வாழ்க்கை முறை தான் நீண்டகால நோக்கில் பலன் தரும். இந்த திரி உட்பட, என்னுடைய சொந்த ஆக்கங்களிலேயே இதனைத் தான் வலியுறுத்தி வருகிறேன். உற்றுக் கவனித்தீர்களானால், இதை நான் சொல்வதாலேயே எதிர்க்கும் "யாழ் கள டாக்டர்கள்" இருக்கிறார்கள்😎! முக நூலிலும், யூ ரியூபிலும் பரியாரிகளிடம் பயிற்சியும், இன்ரர்ன்ஷிப்பும் செய்த நிபுணர்கள்!
-
மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி, காட்டுயானம் ஆகியவற்றில் எந்த அரிசி உடலுக்கு நல்லது?
காலத்திற்கேற்ற பதிவு. சோறோ, பாணோ, புட்டு, இடியப்பமோ, மாச்சத்தை அளவுக்கு மீறி எடுத்துக் கொள்ளா விட்டால் வாழ்க்கை நலமாகும். மருத்துவர் சொல்லியிருப்பது போல, "எந்த அரிசி நல்ல அரிசி?" என்ற கேள்விக்கு ஒரேயொரு சரியான பதில் என்று இல்லை. இதனால் தான் நவீன மருத்துவ விஞ்ஞானம் செய்ய வேண்டிய விடயங்களை மிக இலகுவாக வடி கட்டிப் பட்டியல் இட்டு வைத்திருக்கிறது: 1. மாச்சத்துக் குறையுங்கள். எடுத்துக் கொள்ளும் மாச்சத்தையும் அதிகம் சுத்திகரித்ததாக (refined) இல்லாமல் எடுத்துக் கொள்ளுங்கள். 2. புரதம் போதியளவு எடுத்துக் கொள்ளுங்கள். 3. கொழுப்பை, ஆரோக்கியமான கொழுப்பு வடிவில் எடுத்துக் கொள்ளுங்கள். 4. ஒரு வாரத்தில், குறைந்தது 5 நாட்கள் மிதமான உடற் பயிற்சியாவது செய்யுங்கள் (இறுக்கக் கழிசான் போட்டுக் கொண்டு ஓடுவது சும்மா பைம்பலுக்கு அல்ல! - மிகச் சிறந்த aerobic உடற்பயிற்சி அது!😎) 5. தூங்க வேண்டிய நேரத்தில் தூங்கி எழுங்கள். இதெல்லாம் செய்தால் 100 வருடம் வாழ்வீர்களா? அதெல்லாம் உங்கள் கையில் இல்லை. அப்ப என்ன தான் நன்மை? வாழும் வருடங்கள் ஆரோக்கியமாக மருந்து மாத்திரையில்லாமல், கையில் ஊசிக் குத்தல் இல்லாமல் வாழலாம்!
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
"புலிகளை, பிரபாகரனை முன்னிறுத்தும் ஒரே கட்சி" என்ற "நொண்டித் தியரி" யை நம்பி நீங்கள் கருத்துரைப்பது வீண். இது கபிதானின் ஒரிஜினல் தியரியும் அல்ல! தற்போது களத்தில் இல்லாத ஒரு உறவு, "தமிழ் நாட்டில் பட்டி தொட்டியெங்கும் பிரபாகரனைக் கொண்டு சேர்த்தது நா.த.க!" என்று ஒரு உருட்டலை காலங்காலமாக செய்து வந்திருக்கிறார். புலிகளுக்கு ஆயுதம், பணம் முதல் படகுக்கு டீசல் வரை கொடுத்தது யார், பயிற்சி முகாம்கள் அமைக்க காணி பூமி யார் கொடுத்தார்கள், அதற்காக எவ்வளவு அல்லல் பட்டார்கள் என்பன போன்ற வரலாறு தெரிந்தோர் இதைக் கேட்டுச் சிரித்துக் கடந்து போக வேண்டியது தான், சீரியசாக எடுக்க வேண்டியதில்லை!
-
சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House
அவர் பல விடயங்களை அறியாமல் தானே வலுவான கருத்துக்களை வைத்திருக்கிறார்😂? மேலே சூரிய மின் தகடுகளின் அலுமினியம் கழிவாகச் சேர்வதையே பெரிய விடயமாகச் சுட்டிக் காட்டுகிறார்கள் (அலுமினியம் போன்ற உலோகங்கள் எண்ணற்ற தடவைகள் மீள் சுழற்சி செய்யக் கூடியவை என்பதையும் மறந்து விட்டார்கள்). அணு சக்தி மின் நிலையத்தில் பயன்படுத்திய யுரேனியம் கழிவை அலுமினியத்தின் இடத்தில் வைத்துப் பாருங்கள். அதை மீள் சுழற்சி செய்யப் பெரிய வழிகள் இல்லை. எங்காவது பூமியின் அடியில் புதைத்துத் தான் வைக்க வேண்டும். இந்த ஆழப் புதை குழிகளை அமைக்க பெரும் செலவாகும் என்பதால், சில நாடுகளில் நிலத்தின் மேலேயே வைத்திருக்கிறார்கள். ஒரு பாரிய இயற்கை அனர்த்தம் வந்தால், இந்த யுரேனியம் கழிவு சூழலில் கலந்து பெரும் அனர்த்தங்களை விளைவிக்கும். இதை விட மிகக் குறைவான வாய்ப்புள்ள ஒரு ஆபத்து, அணு உலையை குளிர்விக்கும் தண்ணீர் சூழலில் கலக்கும் ஆபத்து. பிரான்சில் நடந்திருக்கிறது. இன்னொரு அணு உலை தொடர்பான பேராபத்து ஜப்பானில் பூகம்பத்தினால் நடந்தே விட்டது. Fukushima நகரில் அணு உலையும், அதன் குளிர்விக்கும் பொறிமுறையும் சுனாமியால் சேதமாகி இன்னும் 50 ஆண்டுகளுக்கு சுத்தமாக்கும் வேலைகள் செய்ய வேண்டிய நிலை. இந்த ஆபத்துக்கள் எல்லாம் கணக்கிலெடுத்துத் தான், அணு உலை மின்சாரத்தை நாடுகள் குறைக்க முயல்கின்றன.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இலவச அறிவுரையாக இருந்தாலும் பயனுள்ள இடத்தில் மட்டும் தான் நான் சொல்வது. உங்கள் ஒரிஜினல் கருத்துக்கு நான் பதில் எழுதியது இந்தியாவின் வளரும் நாடு என்ற தகுதி பற்றிய உங்கள் தவறான தரவை ஏனைய வாசகர்கள் சரியென நம்பி விடக் கூடாதென்பதற்காக மட்டும் தான். நீங்கள் தரவுகளை சீரியசாக எடுத்து சீர்தூக்கிப் பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில் அல்ல!
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
மனித அபிவிருத்தி சுட்டெண்-HDI - நாடொன்றின் ஒட்டு மொத்த அபிவிருத்தியைக் காட்டுவது. இந்தியா மிகக் கீழே. இலங்கைக்கும் கீழே. இந்தியா மட்டுமல்ல, ஏற்கனவே நான் சொன்ன பொருளாதார பலம் கொண்ட மத்திய கிழக்கு நாடுகளும் கீழ் நிலை தான். காரணம் சொல்ல வேண்டியதில்லை. Macroeconomics அளவீட்டில், இந்தியாவின் பொருளாதாரம் வளர்கிறது - சொல்லப் போனால் பிரிட்டனின் தேங்கிய பொருளாதாரத்தை விடவும் வளர்கிறது. இதைப் புரிந்து கொள்ள, இலங்கையின் 9 ஆம் ஆண்டு சமூகக் கல்விப் பாடம் போதும். ஆனால் இந்தப் பால பாடத்தைக் கூட மறந்து வாய் பிளந்து தம்மைத் தொடரும் படி, சீமான் விசிறிகளின் மண்டையைக் கழுவி வைத்திருக்கிறார்கள். எனவே, மலம், மலம் அள்ளல் என்று அலட்டிக் கொண்டிருக்காமல் சீமானோ, யாரோ சொல்வதை தரவுகளோடு ஒப்பிட்டு நிராகரிப்பது , ஏற்றுக் கொள்வது தான் உங்களுக்கு அழகு!
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
பையனும் சரி, நீங்களும் சரி, சமூக வலையூடகங்களில் வரும் பின்னோட்டங்களை வாசித்து விட்டு , அந்த துணுக்குகளையே தரவுகள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். Macroeconomics என்று ஒன்று இருப்பதை அறிய மாட்டீர்களா? ஒரு நாட்டை Macroeconomic metrics இனால் அளப்பீர்களா அல்லது யூ ரியூப் பின்னூட்டங்களால் அளப்பீர்களா?
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின் பாசாங்கு (hypocrisy) என்கிறோம்? உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.
-
ஓயாத நிழல் யுத்தங்கள் – 1
ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன. அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை. இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை. வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது. இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. - தொடரும்
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
😂ட்ரம்பின் சிவப்புக் கட்சியிடமிருந்து இவர்கள் கற்றார்களா அல்லது இவர்களிடமிருந்து ட்ரம்ப் அணி கற்றதா எனத் தெரியவில்லை. 2020 பொதுத் தேர்தலின் போது புளோரிடாவில் கார்சியா (Garcia) என்ற பரவலாக காணப்படும் ஸ்பானிய பெயரை வைத்து, ஒரு நீலக் கட்சி வேட்பாளரின் வாக்குகளை திசைமாற்றினார்கள். ஒரிஜினல் வேட்பாளரின் பெயரை ஒத்த பெயரில், யாரென்றே தெரியாத டசின் கார்சியாக்களை ட்ரம்ப் அணி களத்தில் இறக்கி, வாக்காளர்களைக் குழப்ப முயன்றதை ஊடகங்கள் கண்டறிந்து வெளிப்படுத்தின.
-
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
பாலத்தைக் கப்பல் கடந்ததாக ஒரு காணொளியிலும் இல்லையே? எந்த வீடியோவைச் சொல்கிறீர்கள்? கப்பலின் முன்பகுதி (bow) தூணுடன் முட்டுவதை தூரத்தில் இருந்து எடுத்த வீடியோக்கள் காட்டாது, அவற்றின் கோணம் காரணமாக அப்படி இருக்கலாம். ஆனால், பாலம் வீழ முன்னர் கப்பலின் முன்பாகம் பாலத்தின் தூணின் பின்னால் இருப்பது தெளிவாகத் தெரிகிறதே?
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
ஓம், 10 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களைப் பின்னாளில் கொன்ற ஹிற்லர் வந்து கேட்டவுடன் ஒரு நாளில் டென்மார்க் சுருண்டது- பெருமைப் பட வேண்டிய விடயம் தான்😎 மறு பக்கம், முழு ஐரோப்பாவையும் ஹிற்லர் ஆளாமல், இறுதி வரை மரணங்களோடு போராடியது பிரிட்டன் - வெட்கப் பட வேண்டிய முட்டாள்கள் பிரிட்டிஷ் காரர்கள்😂! தாத்தா போலவே இருக்கிறீர்கள் என்று வெளிக்காட்டவே அந்தக் கேள்வியைக் கேட்டேன். "எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை, எனக்கு சுதந்திரம் இருக்கிறது, எனக்கு வருமானம், வாழ்விடம் இருக்கிறது. எனவே எனக்கு வெளியேற வேண்டிய அவசியம் இல்லை"! கேம் எப்பவோ ஓவர், இப்ப முகமூடி-facade மட்டும் தான் மிச்சம்😎!
-
இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துமா? இதன் பக்கவிளைவுகள் என்ன?
20,000 பேரை 8 முதல் 17 வருடங்கள் வரை பின் தொடர்ந்த ஆய்வு, பெரும்பாலும் பலமான ஒரு ஆய்வு தான். ஆய்வின் ஒரு குறைபாடு, பங்கு பற்றியோர் சுயமாக வெளியிட்ட (self-reported) தங்கள் உணவுப் பழக்கங்களை வைத்து ஆராய்ந்திருக்கிறார்கள். இது போன்ற ஆய்வுகளைச் செய்ய வேறு வழிகள் இல்லையென்பதால், self-reporting ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு வழி தான். மேலதிக ஆய்வுகளை, இதய நலனைக் குறிகாட்டும் இரத்தக் கொழுப்பு வகைகளின் அளவுகளை அறிதல், இடையிட்ட விரதத்தினால் ஏதாவது வேறு நோய் நிலைகள் ஏற்படுகின்றனவா என்ற தேடல், என்பன மூலம் தொடர்வார்கள் என நினைக்கிறேன்.
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
உறவே, நீங்கள் - அதாவது டென்மார்க் மக்கள் போல மூளைசலவைக்கு ஆட்படாமல் தப்பியிருக்கும் நீங்கள்- இத்தகைய கீழ் நிலை கொண்ட டென்மார்க்கில் இருந்து பக்கத்தில் இருக்கும் பெலாரஸ், கலினின்கிராட் போன்ற பகுதிகளுக்குப் போய் வாழாமல் எது தடுக்கிறது என்பது தான் கேள்வி. பதிலில் பதில் இல்லையேt🤪?
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
டென்மார்க் பற்றியும் சொல்லுங்கள். நேட்டோவின் ஆரம்ப கால உறுப்பினர், இந்த வருடம் முதல் அமெரிக்காவின் ஆயுதங்களையும், படைகளையும் நிறுத்தி வைக்க அனுமதி கொடுத்திருக்கிறார்கள். இது புரினுக்கு எதிரான ஒரு நடவடிக்கை. இதை எதிர்த்து உங்கள் போன்ற நீதிமான்கள் என்ன செய்வதாக உத்தேசம்? பாஸ்போட்டை பகிரங்கமாக எரித்து விட்டு, கிழக்கே போகும் உத்தேசம் ஏதாவது😎? காத்திருக்கிறேன் பதிலுக்கு!
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
கோராவில் இது போன்ற கேள்விகளுக்குப் பதில்கள் தேடினால் இதை விட "பைம்பலான" பதில்கள் கிடைக்கும். தந்தை செல்வநாயகம், தெலுங்கு அடி என்று கூடப் பதில் கிடைக்கும்😎! (இதைப் பற்றி யாழில் ஒரு சுவிங்கத் திரி ஓடியது, தேடிப் பாருங்கள்). யாரும் வந்து எதையும் எழுதி விட்டுப் போகும் கோராவை விட, கால்ட்வெல் என்ற ஒப்பீட்டு இலக்கணவியலாளர் எழுதியதையே நீங்கள் வாசித்து "திராவிடக் குடும்ப மொழிகள்" என்று அவர் குறிப்பிடுவதைப் புரிந்து கொள்ளலாம். திராவிட கொள்கைகளை அரசியல் அடையாளமாக தமிழ் கட்சிகள் எடுத்துக் கொண்டதும், அதனால் தமிழ் நாட்டு மக்களுக்கும், ஏனைய சில தென் மாநில மக்களுக்கும் நன்மைகள் விளைந்ததும் அந்த மானிலங்களின் பொருளாதார வளர்ச்சியிலும், ஒப்பீட்டு ரீதியில் ஏனைய மத, இனங்களோடு சகிப்புத் தன்மை என்பன நிலவுவதிலும் தெளிவாக வெளிப்படுகிறது (உதாரணமாக, குஜராத்தில் நிகழ்ந்தது போன்ற பாரிய முஸ்லிம் எதிர்ப்பு வன்முறைகள், இந்த மாநிலங்களில் நினைத்துப் பார்க்க இயலாதவை). 2009 இல் கருணாநிதியின் செயற்பாடுகளோடு தான் புலத் தமிழரிடையே இந்த திராவிட காய்ச்சல் தீவிரமானது. இந்தத் திராவிடக் காய்ச்சலும் அரசியல் நோக்கம் கொண்டது தான். நாம் தமிழர் கட்சி இந்த திராவிட வெறுப்பின் அறுவடையாளர். பின்னணியில், பி.ஜே.பி யும் கொஞ்சம் நன்மையடைய முயற்சிக்கிறது. இதைத் தவிர இந்த திராவிட தமிழர் பிரிவு என்பது ஒரு nothing burger.
-
சங்கீத கலாநிதி
👍சாரு அவர்களின் கருத்தைப் பார்த்தேன். வில்லாய் வளைந்து (உள்ளூர் பாசையில் குத்தி முறிந்து"😂) ஒரு தரப்பிற்கு முட்டுக் கொடுப்பது போலவும் இருக்கிறது அவர் கருத்து. "கிருஷ்ணா சங்கீத செயல்களினால் தகுதியானவர் தான்" என்கிறார் (அதற்குத் தான் விருது என்று விருது கொடுத்த அமைப்பும் சொல்லி விட்டது). பின்னர் பல்ரி அடித்து "உவர் கிருஷ்ணா ஏன் இவ்வளவு நல்லவரா இருக்கிறார்? நோபல் பரிசு வாங்கவா? இது மேற்கின் சதிகளில் ஒன்று!" என்று சிறு பிள்ளைத் தனமாக அலம்பியிருக்கிறார். சாரு எல்லாம் எழுத்தாளர் என்ற அடையாளத்தோடு வலம் வருவது தமிழ் எழுத்துலகின் துரதிர்ஷ்டம் என நினைக்கிறேன்.