Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. "குடும்ப நல வழக்கில் எதிர் தரப்பில் இருப்பவரை "பாலியல் தொழிலாளி, சைக்கோ" என்று dehumanize செய்யலாம், கிரிமினல் வழக்கில் அப்படிச் செய்யக் கூடாது" என்கிறீர்களா😂? ஒன்று "வாத்தியார்" என்ற அவதாரப் பெயரை மாற்றுங்கள், அல்லது சீமான் போன்ற மூன்றாந்தர அரசியல்வாதிக்கு நிபந்தனையில்லாத முட்டுக் கொடுப்பதை நிறுத்துங்கள்! இந்த இரு பாத்திரங்களும் ஒத்து வரவில்லை என்பது என் அபிப்பிராயம்😎!
  2. இப்படி மூலைக்குள் மாட்டிக் கொண்ட பிறகு தப்பிக்கொள்ள மன்னிப்புக் கேட்ட உதாரணமாக இருக்கக் கூடிய ஒரு வழக்கு போன வெள்ளிக்கிழமை நியூ யோர்க்கில் முடிந்திருக்கிறது. விபரங்கள் கீழே: Sean 'Diddy' Combs sentenced to over 4 years in prisonCombs apologised to his mother, children, and victims, specifically naming his two ex-girlfriends, Casandra Ventura and "Jane".சுருக்கமாக, டிடி கோம்ப்ஸ் பல ஆண்டுகளாக பல பெண்களை உணர்வு ரீதியாகச் சித்திரவதை செய்து தானும் அனுபவித்து விபச்சாரத்திற்கும் தூண்டியிருக்கிறார். அவர்கள் விலக முடியாத படி அந்தக் காட்சிகளை மிரட்டும் சாட்சியாக (blackmail) சேமித்து வைத்திருக்கிறார். 12 மாதங்கள் முன்பு இதற்காக குற்றம் சாட்டப் பட்டுக் கைதான போது, கோம்ப்ஸ் பேசியது கிட்டத் தட்ட சீமான் விஜயலட்சுமியைப் பற்றிப் பேசியது போலவே இருந்தது😂. கோம்ப்ஸ் தரப்பினர் மிரட்டினார்கள் , பெண்களை விபச்சாரிகள் என்று கதை பரப்பி விட்டார்கள். ஆனால், கோம்ப்சை குற்றவாளியாக ஜூரிகள் தீர்ப்பளித்த பின்னர் ரெக்கோர்ட்டை மாற்றிப் போட்டார்கள் கோம்ப் தரப்பினர். கடந்த வாரம் "11 வருட சிறை வழங்க" வேண்டுமென அரச தரப்பு நீதிபதியைக் கேட்டுக் கொண்ட போது. "நான் திருந்தி விட்டேன், 14 மாத சிறையில் நான் திருந்தி விட்டேன்" என்று கடிதம் எழுதி நிறைய கண்ணீரெல்லாம் விட்டார்கள் கோம்ப்சும் குடும்பத்தினரும். ஆனால், நீதிபதி சுப்ரமணியன் (ஆம், இந்தியப் பெற்றோருக்குப் பிறந்த நியூ யோர்க்கின் முக்கிய மாவட்டத்தில் பெடரல் நீதிபதி, தமிழராக இருக்கக் கூடும்) "நீ திருந்துவதாக இருந்திருந்தால் 2019 இல் ஒரு வீடியோ வெளியே வந்த பின்னரே திருந்தியிருக்க வேண்டும். இது மனம் வருந்திய திருத்தம் அல்ல" என்று 4 ஆண்டுகள் சிறை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறார். பிந்திய செய்திகளின் படி, கோம்ப்ஸ் குற்றவாளியாகத் தீர்ப்புக் கிடைத்தவுடன் ட்ரம்பிடம் பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென்றும் தூது அனுப்பியிருக்கிறாராம். ஒரு ஒப்பீட்டுக்கு, யாழ் கள பெரிசுகளுக்காக, இதைப் பகிர்ந்திருக்கிறேன்.
  3. மன்னிப்புக் கேட்பது உயர்ந்த பண்பு என்பது சரி. ஆனால், வருடக் கணக்காக விட்டுத் துரத்தி, பல இடங்களில் ஒளித்து விளையாடி, இறுதியில் "இனியெங்கும் போய் ஒளிய முடியாது"😎 என்று ஒரு மூலையில் மாட்டிக் கொண்ட பிறகு மன்னிப்புக் கேட்கிற ஒருவர் உண்மையில் தவறுணர்ந்து மன்னிப்புக் கேட்கிறாரா அல்லது தன்னைக் காத்துக் கொள்ள மன்னிப்புக் கேட்கிறாரா? இந்த மன்னிப்பின் பின்னணியை அடையாளம் காண முடியாமல் தவிக்கிறார்களா யாழ் கள "பெரியோர்" அல்லது இதுவும் முரட்டு முட்டின் ஒரு தொடர்ச்சியா?
  4. "இரவில் மட்டும் தானே?" என்று திருப்தியோடு வாழாமல், இதைப் பற்றியெல்லாம் கோர்ட்டுக்குப் போய் கொண்டு!
  5. சுமந்திரனும், அமரர் சம்பந்தரும் அரசியல் அரங்கில் இருந்து விலகியது யாருக்கு இழப்போ தெரியாது, ஆனால் கஜேந்திரகுமார் பா.உ வுக்கு மிகவும் இழப்பு. இருவரும் பா. உவாக இருந்திருந்தால் "ஐயோ இவையள் குறுக்கே நிக்கீனம், இல்லா விட்டால் நாம் எப்பவோ நாட்டைப் பிரிச்சிருப்போம்"😎 என்று பேசிப் பேசி பாரளுமன்றக் கன்ரீனில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் உணவைச் சாப்பிட்டுக் கொண்டு காலம் கடத்தியிருக்கலாம். இப்ப அது முடியாது. அடுத்த தேர்தலில் காஜேந்திரகுமார் பா.உ என்ன செய்தார் என்று மக்கள் கேட்டு, அவரையும் வீட்டுக்கு அனுப்பி விடுவர். அது நடக்காமல் இருக்க "தமிழசுக் கட்சி, சுமந்திரன்" என்று boogeyman காட்டிக் கொண்டிருக்கிறார்!
  6. மதம், இனம் மாறாமல் (கிறிஸ்தவ ஜனநாயக நாட்டில் வந்து) தஞ்சம் கோரியவர்களுக்கு பச்சை மட்டை, உப்புக் கருவாடெல்லாம் இல்லையோ "அண்ணை"😂?
  7. முதல் "மரக் கட்டுரை" வந்திருக்கிறது🤤! கருத்துகளுக்கு "பச்சை சிவப்பு" நிறம் தீட்டுவதில் வீணாக்கும் நேரத்தை இருமல் மருத்துக்கும் சத்து டானிக்கிற்கும் இடையேயான வேறுபாட்டைப் பற்றி வாசிக்கச் செலவழிக்க மாட்டீர்களா? "டாஸ்மாக்" போன்ற அரச கடைகளில் "சத்து ரொனிக்" விற்கா விட்டால் உங்கள் போன்ற "வெள்ளிக் கிழமை விசேஷம்" செய்கிற நுகர்வோர், நுகராமல் விட்டு விடுவீர்கள் என்கிறீர்களா😂?
  8. தமிழ்நாடு மத்திய பிரதேச மாநிலத்தோடு ஓப்பிடும் போது தொடர்ந்து பல ஆண்டுகளாக கல்வி, சுகாதாரம், நிதி, சமவாய்ப்புகள் கொண்ட பொருளாதாரம் என்பவற்றில் முன்னணியில் நிற்கும் மாநிலம். இதற்கு யார் காரணம்? எந்தக் கொள்கை காரணம்? என்று இரு கேள்விகளைக் கேட்டால் "மரத்தைப் பற்றி விளாவாரியாகப் பேசி, மாட்டைப் பற்றி எதுவும் எழுதாமல் பம்மும்" எங்கள் "திராவிட லவ்வர்ஸ்" என்ன சொல்வார்கள் என யோசிக்கிறேன்😎!
  9. அமெரிக்கர்களோடு ஒப்பிடும் போது பிரிட்டிஷ் பிரபலங்கள், நிபுணர்கள் பலரிடம் நான் காணும் ஒரு பண்பு படாடோபம் இல்லாத அமைதி. குடாலின் இயல்பும் இதே போன்றது தான். கீழே, நேச்சர் இதழில் இன்று வெளியான ஜேன் குடாலின் நினைவுக் கட்டுரையை இணைத்திருக்கிறேன். https://www.nature.com/articles/d41586-025-03227-w அவரது 60 ஆண்டு காலப் பணி இன்னும் ஒரு 60 ஆண்டுகளுக்குப் பயன் தரக் கூடிய வகையில் அமைந்திருக்கிறது. "வேர்களும் தளிர்களும் - Roots & Shoots" என்ற ஒரு சிறுவர்/இளையோர் மட்ட அமைப்பை உருவாக்கியதன் மூலம் வனப் பாதுகாப்பு, உயிர்களின் பல்லினத் தன்மையின் (biodiversity) பாதுகாப்பு என்பவற்றை இன்னும் 60 ஆண்டுகளுக்கு முன் கடத்தியிருக்கிறார். ஏன் 60 ஆண்டுகள் என்றால், இனிப் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த அக்கறைகளைப் போதிக்கும் முன்மாதிரியான பெரியவர்கள் அருகி வருகிறார்கள். "தொழிலைத் தேடு, பணத்தை உழை, சேமித்து இளைப்பாறு, அப்படியே சத்தம் சந்தடியில்லாமல் ஒரு நாள் உலகை விட்டு நீங்கு" என்று ஆலோசனை கொடுக்கும் பெரியவர்களும், இணைய பிரபலங்களும், ஜேன் குடால் போன்றோரின் முன்மாதிரிகளை உருவாக்கப் போவதில்லை என அஞ்சுகிறேன்!
  10. Sanae Takaichi: Japan stocks hit record after ruling part...The benchmark Nikkei 225 index closed above 47,000 for the first time as investors welcomed Sanae Takaichi's victory. பங்குச் சந்தை உங்கள் பரிமாற்ற வீதத்தின் போக்கிற்கு எதிர் திசையில் நகர்ந்திருக்கிறது.
  11. Group therapy session நடக்குது போல😂! எல்லோரும் நலம் பெற்றால் சந்தோஷம் தான்.
  12. https://www.newsweek.com/jane-goddall-dead-conservationist-institute-chimpanzees-latest-updates-10813647 கடந்த 60 ஆண்டுகளாக சிம்பன்சிகள் (Chimps) எனப்படும் மனிதக் குரங்குகள் பற்றி நடத்தையியல் ஆய்வுகளை மேற்கொன்டு வந்த ஜேன் குடால் நேற்றுக் காலமானார். ஏராளமான பெண் விஞ்ஞானிகளுக்கு ஊக்கமாக இருந்தவர். சிம்பன்சிகளின் நடத்தையியலைக் கொண்டு பல ஆபிரிக்க நாடுகளில் சிம்பன்சிகளை அழியாமல் பாதுகாக்கும் செயல்திட்டங்களை உருவாக்க உதவியவர். மிகவும் எளிமையான பிரபலம். கொண்டாடப் பட வேண்டிய வாழ்வு இவருடையது!
  13. இந்தத் திரி நடந்த அவலம் பற்றிய தகவல்களைத் தரும் திரியாக அல்லாமல், அவலத்தை வைத்துக் கொண்டு அரசியல் பிரச்சாரம் செய்ய முயலும் சோசியல் மீடியா சேற்றில் புரளும் பன்றிக் கூட்டங்களின் "கூச்சல்" திரியாக மாறி வருகிறது. விசாரணைக்கு என்ன நடக்கிறது என அறிவதற்காக அடிக்கடி வந்து வந்து பார்த்தால், யூ ரியூப் அலட்டல்களும், முகனூல் வசவுகளும் தான் புலவர் முழு நேரமாக இணைத்துக் கொண்டிருக்கிறார்😂. இது ஈழத்தமிழர்களின் வழமையல்ல புலவர்! இந்தக் குப்பைகளைக் கொஞ்சம் குறைத்து ஈழத்தமிழர்களின் கண்ணியமான பரிமாற்றப் பண்பைக் காக்க உதவுங்கள்!
  14. பொய்யான செய்திகளையும், திரிக்கப் பட்ட படங்களையும் இணைப்பதைத் தடுக்கும் விதிகள் யாழ் களத்தில் இருக்கின்றன. இவற்றை மீண்டும் மீண்டும் மீறும் உறுப்பினர்களும் ஒரே உறுப்பினர்கள் தான். யாழ் களம் தற்போது இதனைக் கையாளும் விதம் சிறந்ததாக இருக்கிறது. இந்த உறுப்பினர்களைத் தண்டித்துத் திருத்துவது "நாய்வாலை நிமிர்த்தும் பயனற்ற செயல்"😂 என அறிந்து, நேரடியாகவே சக உறுப்பினர்களோடு சேர்ந்து பொய்ச் செய்திகளைச் சுட்டிக் காட்டுகிறார்கள். இப்படிச் செய்யும் போது குறிப்பிட்ட உறுப்பினர்கள் இணைக்கும் பல தகவல்களை வாசகர்கள் சீரியசாக எடுக்காமல் கடந்து போகும் நிலை உருவாகும் என நினைக்கிறேன். பொய்செய்திகள், படங்கள், வீடியோக்கள் இணைக்கும் உறவுகள் தாங்களாகவே தங்கள் நம்பகத்தன்மைக்கு ஆப்பு வைத்துக் கொள்கிறார்கள். ஆனால், கிழுகிழுப்பிற்காக தொடர்ந்து செய்து கொண்டேயிருப்பர்!
  15. சிவத்தம்பி தமிழ்ப் பேராசிரியர் அல்லவா? வரலாறு என்றால் பேராதனையில் இருந்த பத்மநாதன் அல்லது யாழ் பல்கலை புஷ்பரட்ணம். புஷ்பரட்ணம் இந்த மறைப்பைச் செய்யக் கூடியவராகத் தெரியவில்லை.
  16. உங்களுடைய "விரும்பி ஏற்ற கோமா" வைப் பற்றியா பேசுகிறீர்கள்😎? அவருக்கு அந்த நேரம் ஆயுதங்களுடன் திரிந்த எல்லோருடனும் முரண்பாடு இருந்தது. ஆனால், சாட்சிகள், சந்தர்ப்பங்கள் வைத்து அவர்கள் அன்று முதல் தெரிவித்து வருவது புலிகளின் ஆயுததாரி கொன்றார் என்று தான். இடையில், புலிகளின் பிஸ்ரல் குழுவிடம் இருந்து தான் தப்பிக் கொள்ள அற்புதன் என்ற ஒருவர் மட்டும் இன்னொரு அமைப்பைக் கைகாட்டி விட்டதால், "பெயின்ற் வாளி" ரீம் அதைத் தூக்கிக் கொண்டு திரிய ஆரம்பித்தனர். ஒவ்வொரு செப்ரெம்பரிலும், புலிகள் நினவு கூராமல் தடை செய்த ராஜினியின் நினைவு தினத்திற்கு அண்மையாக இத்தகைய பெயின்ற் வாளிகள் வெளியே வந்து மீண்டும் நித்திரைக்குப் போய் விடுவது வழமை😂!
  17. பெயரைச் சுட்டிக் காட்டாமல் எழுதியிருக்கிறார், வழக்குப் போட்டு விடுவார்கள் என்ற அச்சமோ தெரியவில்லை😂. பேராசிரியர் பத்மநாதனாக இருக்குமென ஊகிக்கிறேன். அவர் தான் பாடநூலாக்கக் குழுவில் இருந்தார். இது தான் கொழும்பு நூதனசாலையில் இருக்கும் அந்த சிவன் பார்வதி சிலை பற்றிய கட்டுரை. https://amazinglanka.com/wp/shiva-kovil-no-1/ இவற்றைப் பாடப் புத்தகத்திலும், பேராசிரியரின் (யாரும் வாசிக்காத) புத்தகத்திலும் மறைத்து என்ன பயன்? பொதுத் தளங்களில் இந்தச் சிலை பற்றிய உண்மையான வரலாறு இருக்கிறது. இதை மறைக்க இயலாது.
  18. ராஜினி திராணகம திடீரென்று "மனித உரிமை ஆர்வலராக" தலையில் சுமக்கப் படுவதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை! அதே நேரம், சிங்களப் பேரினவாத அரசும் உண்மைகளை வெளிக்கொணர முயலும் நல்ல தரப்பாக நம்ப வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறார்கள் "பெயின்ற் அடிக்கும்"😂 குழுவினர். அமரர் ராஜினியைச் சுட்ட ஒற்றை நபர் (கட்டையான, சிவந்த ஒருவர்) யாரென்று யாருக்கும் தெரியாது - அற்புதனுக்கும் அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சுடப் பட்ட அந்த நாளிலும், அதற்கு முந்தைய நாட்களிலும் நிகழ்ந்த சம்பவங்களின், உரையாடல்களின் சாட்சிகளை வைத்துத் தான் முறிந்த பனையின் எழுத்தாளர்கள் புலிகளே சுட்டதாகச் சொல்கிறார்கள். முறிந்த பனையை இங்கே இணைத்து உரையாட இயலாது, ஆனால் அதில் இருக்கும் தகவல்கள் அற்புதனின் தொடரில் இருக்கும் தகவல்களை விட மிக நுணுக்கமாக (granular) இருப்பதாக நான் உணர்கிறேன். அத்தனை நுணுக்கமான சாட்சிகளையும், உரையாடல்களையும் யாரும் கற்பனையில் உருவாக்கி விட முடியாது. மிக முக்கியமான இன்னொரு விடயம், இந்திய இராணுவத்தையும் ஒட்டுக் குழுக்களையும் துகிலுரிந்த முறிந்த பனையை புலிகள் தடை செய்தனர், அமரர் ராஜினியின் உருவப் படத்தைக் கூட பல்கலைக் கழகத்தில் நினைவுச் சுவரில் மாட்ட அனுமதிக்காமல் புலிகள் தடுத்திருந்தனர். 2012 இற்குப் பின்னர் தான் அவரது உருவப் படம் பல்கலை மருத்துவ பீடத்தில் காட்சிப் படுத்தப் பட்டது. கோமாவில் இருப்போர் இன்னும் "ஆழமான" கோமாவிற்குப் போய் ஒளிந்து கொள்ளட்டும்😎!
  19. நிச்சயம் வந்து பதில் தருவார், அப்படியே காத்திருங்கள்😂! தமிழ் சிறி உட்பட தவறான தகவல்களைப் பரப்பும் ஒரிருவர் காலாகாலமாக ஒரே மாதிரித் தான் நடந்து கொள்கின்றனர்: தவறான தகவலை இப்படியாக மெனக்கெட்டு எழுதுவது. சக உறுப்பினர்கள் தகவலை சவாலுக்குட்படுத்தினால், அவர்களை தரங்கெட்ட வார்த்தைகளால் திட்டியபடி "தலையால் கிடங்கு கிண்டுவது" - அதற்கு ஒரிருவர் வந்து ஊக்கமும் கொடுப்பர், குழுவாதம் காரணமாக! மட்டு யாராவது வந்து தகவல் தவறைச் சுட்டிக் காட்டினால், மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்காமல் "நான் இணையத்தில் பார்த்தேன், இணைத்தேன்" என்று விட்டு தெனாவெட்டாக நிற்பது. ஆனால், அந்தத் திரியை விட்டுக் கழன்று விடுவர்! இன்னொரு திரியில், 1-3 ரிபீற். இந்த நடத்தைப் போக்கை - pattern of behavior யாராவது கண்டித்தால்/பரிகசித்தால் இடையில் சில ஜட்ஜ் மார் நித்திரையால் எழும்பி "நீங்க ஏன் எப்பவும் குறை பிடிக்கிறீர்கள்?" என்று உடைந்த நீதித் தராசோடு வருவர்😎!
  20. இது உங்களுடைய tunnel vision பார்வை, இதில் அதிசயம் ஒன்றுமில்லை. "ஈழத்தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும்" என்று இலங்கையிலோ தமிழகத்திலோ வாக்களிக்கக் கூடிய எல்லோரும் பிரபாகரனுக்கே அந்த வாக்கை வழங்குகின்றனர் என்பது உங்களது தவறான பார்வை. ஈழத்தமிழர்களின் சுதந்திரத்திற்கான போரை பிரபாகரன் தலைமை தாங்கி நடத்தினார் என்பது உண்மை, ஆனால் ஈழத்தமிழர்களின் சுதந்திரம் என்ற நோக்கத்தை அவருக்கு முன்னரும் பின்னரும் பலர் ஆதரித்திருக்கின்றனர், இனியும் ஆதரிப்பர்!
  21. எந்த நாட்டிற்குச் செல்ல ஆயத்தமாக இருந்தார் என்று தெரியுமா? ஏற்கனவே இப்படியானவர்கள் விசா அவசியமில்லாத தாய்லாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சட்ட விரோதமாகச் சென்று "ஜோதியில்" கலந்து விட்ட உதாரணங்கள் இருக்கின்றன. வவுனியாவில் பிரபல தெரு றௌடியாக இருந்த ஒரு இளவல் தற்போது பிரான்ஸ் லாசப்பலில் தெருவில் நிற்கிறார் என அறிந்தேன்!
  22. "வங்கியை" குறி வைக்கிறார்கள் சில தமிழக அரசியல் வாதிகள் - இது உண்மை. இதை "பிரபாகரனுக்கு இருக்கும் ஒரு வாக்கு வங்கி" என்று அவசரப் பட்டு நீங்கள் புளகாங்கிதம் அடைவது வழமை தான். இப்படி பிரபாகரன் மேல் இருக்கும் அபிமானத்தை, வாக்காக மாற்ற ஒரு மூன்றாம் தர தமிழக அரசியல்வாதி எத்தனை ஆண்டுகளாக முயல்கிறார், எவ்வளவு முன்னேறியிருக்கிறார் என்று அவதானிப்போருக்கு உங்கள் கருத்து நகைச்சுவையாகத் தெரியும்😎!
  23. அப்படியான ஒரு வாக்கு வங்கி பிரபாகரனுக்கு இருப்பதால் தான் போலும், உண்ணாவிரத நாடகமாடிய கருணாநிதியின் திமுகவும், புலிகளை வெளிப்படையாகவே பயங்கரவாதிகள் என்று கூறிய ஜெ யின் அதிமுகவும் மாறி மாறி வெற்றி பெறுகின்றன என நினைக்கிறேன்😂!
  24. ஓம், பல சமயங்களில் வலி தரும் யதார்த்தத்தில் இருந்து தப்பி ஒரு "குமிழிக்குள்" வாழவும் கற்பனை உதவுகிறது😂!
  25. யாழ் களம் ஏன் இன்னும் கருத்துக் களமாக இருக்கிறது? அக்கினிகுஞ்சு, தமிழ்வின், ஆதவன் போல அர்த்தமேயில்லாத செய்திகளின் உறைந்த தளமாக இல்லாமல் கருத்துக் களமாக இருக்கிறது? பிரதான காரணம், யாரும் பொய்களை, போலிகளை, திரிப்புகளை இணைத்து விட்டு சவாலுக்குட்படாமல் போய் விட முடியாது. சமூக ஸ்திரத்தன்மையை அவாவுவோர் இந்த சவாலுக்குட்படுத்தலை ஆரோக்கியமான விடயமாகவே பார்ப்பர். அப்படி எதிர்பார்ப்பில்லாதோருக்கு குடைச்சல் ஏற்படுவது தவிர்க்க இயலாதது!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.