-
Posts
7383 -
Joined
-
Days Won
24
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by இணையவன்
-
நித்திலா, உங்கள் மீள்வரவை அன்புடன் வரவேற்கிறோம்.
-
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட கலையரங்கில் யாழ்ப்பாண சட்ட மாநாடு!
இணையவன் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
நல்லது. இவ்வாறான ஆய்வுகள் கலந்துரையாடல்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். மதகுருமாரை படங்களில் காணாமல் இருப்பதில் மகிழ்ச்சி (மேடையில் உள்ளார்களோ தெரியவில்லை 🙂). -
பல வருடங்களுக்கு முன் மொறோக்கோவில் விடுதி ஒன்றில் மதுபானங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. உரிமையாளரிடம் விசாரித்தபோது சொன்னார், மதுபானம் மொத்த விற்பனை செய்யும் இடத்தில் மட்டுமே விடுதி, பார் உரிமையாளர்கள் வாங்க முடியும். ஆனால் இங்கு பலர் வீடுகளில் பதுக்கி வைத்து மது அருந்துகின்றனர். சென்ற வருடம் அல்ஜீரியாவிலிருந்து மாணவ வீசாவில் வேலையும் செய்து படிப்பதற்காக ஒரு இளம் பெண் வந்துள்ளார். நான் வேலை செய்யும் நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை செய்கிறார். வேலை முடிந்ததும் அருகிலுள்ள பார் ஒன்றில் ஒரு கையில் பியரும் மறுகையில் சிகரெட்டுமாகக் இவரைக் காணலாம்.
-
இது மிகவும் ஆழமாக இலக்கண பிரெஞ்சு மொழியைப் படிப்பதற்கு நல்லதொரு திரி. ஆனால் இங்கு சுவி அண்ணா இங்கு குறிப்பிட்டதுபோல் மிக இலகுவாகக் கற்பது கடினம் போல் தோன்றியது
-
🙂 எனக்குத் தெரிந்தவர்கள் சிலர் 30 வருடங்களாக பிரான்ஸில் இருந்தும் ஒரு வசனம்கூட பிரெஞ்சில் சரியாகக் கதைக்க மாட்டார்கள். அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கலாம். இப்போது பிரான்சில் இருப்பிட அனுமதி பெற வேண்டுமாயின் மொழிப் பரீட்சையில் தேற வேண்டும் என்பதால் புதிதாக வந்தவர்களும் மொழி படிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.
-
வாழ்த்துகள். உங்களது நூலை இணையத்தில் வாங்க முடியுமா ?
-
சுவி அண்ணா நீங்கள் தந்த இணைப்பு வேலை செய்யவில்லை.
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
இணையவன் replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
இதுதான் ஹிட்லர் கீழானவர் இல்லை என்று காட்ட முயற்சிக்கும் சமன்பாடு. -
கொஞ்சம் கொஞ்சமாக வாசித்து வருகிறேன். நன்றாக உள்ளது, தொடர்ந்து எழுதுங்கள் ரஞ்சித்.
-
அருமையான கட்டுரை. முன்னர் தலைப்பை மோடி மையவாதம் என்று விளங்கிக் கொண்டு கடந்து சென்ற்விட்டேன். இன்னொரு தடவை ஆறுதலாக வாசிக்கத் தூண்டுகிறது. கிருபன் தனியே வெட்டி ஒட்டாமல் முழுமையாக வாசித்துள்ளீர்கள் என்பதைக் கட்டுரையை வாசிக்கும்போது உணர முடிகிறது😁
-
மனிந நேயத்துக்கு எதிரானது மரண தண்டலை. உலகம் முழுவதும் மரணதண்டனையை ஒழிக்க வேண்டும் என்று போராடி வந்தாலும் சில நாடுகளில் அதனை முற்றாக ஒழிக்க முடியாமல் உள்ளது. பைடன் சென்ற தேர்தலில் 3 மானிலங்களில் இதனை நீக்குவதாக உறுதி அளித்தாலும் அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் போனதாகத் தெரிகிறது. ட்றம்ப் போட்டியிடும் மாநிலங்களில் மரண தண்டனைக்கு ஆதரவு இருப்பதால் அவர் ஆட்சிக்கு வந்தால் மரண தண்டனைகள் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
-
BIO என்பது மருந்து பாவிக்காமல் விளைவிக்கப்படும் மரக்கறிகளா ? 🤣 நான் இவற்றை அதிகம் வாங்குவதில்லை.
-
பிரான்சிலும் இப்படித்தான். அரசியலில் ஒருவர் நுளைந்துவிட்டால் அவரது சொத்துக்கள் அனைத்தையும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அரசியல் வாழ்க்கைக் காலத்தில் சுத்துமார்ருச் செய்து சொத்தைப் பெருக்காமல் இருக்க இந்த ஏற்பாடு.
-
விலை அதிகமான உணவுதான் தரமானதா ?
-
உங்களுக்கான பதில் ஏற்கனவே உள்ளது 😂