Jump to content

இணையவன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Posts

    7228
  • Joined

  • Days Won

    24

Everything posted by இணையவன்

  1. இதற்குப் பதில் எழுதினாலும் நீங்கள் வாசிக்கப் போவதில்லை. இன்னொரு திரியில் இதே கேள்வியைக் கேட்பீர்கள். இருந்தாலும் - செய்தி எடுப்பதற்கு நிருபர் வேண்டும். மேற்கு ஊடக நிருபர்கள் யாழ்ப்பாணத்தில் நின்று செய்தி சேகரிப்பதற்கு யார் பணம் கொடுப்பது ? இலங்கைத் தமிழரின் செய்தியை அக்கறையோடு வாசிக்கும் நாலைந்து பேருக்காகப் பணம் செலவிடுவார்களா ? 2009 ற்கு முன்னர் பிரான்சில் இருந்த புலிகளின் அமைப்பினர் அடிக்கடி போர் நிலவரத்தை பிரெஞ்சு ஊடகங்களுக்கு அனுப்புவார்கள். அவர்கள் அதை அப்படியே இலங்கைத் தூதரகத்துக்கு அனுப்பி ஒப்புதல் கேட்பார்கள், செய்தி வெளியே வராது. ஏனென்றால் புலிகள் அங்கீகரிக்கப் படாத அமைப்பு. அதையும் மீறி சில செய்திகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இது தவிர பிரெஞ்சு தொலைக்காட்சியில் 2009 ற்குப் பின்னர் இலங்கை சென்ற நிருபர்கள் தாம் நேரில் கண்டவற்றையும் ஒளிப்படக் கருவியை மறைத்தும் எடுத்து அங்கு தமிழருக்கு நடக்கும் கொடுமைகளைக் காட்டியுள்ளன. குறிப்பாக இராணுவம் ஆக்கிரமித்த பொரதுமக்கள் இருப்பிடங்கள் தொடர்பானவை. இதைவிட முக்கியமானது, இலங்கையிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட தமிழ் அரசியல் கட்சி வெளிநாட்டு ஊடகங்களோடு தொடர்பு வைத்து அடிக்கடி அங்கு நடைபெறும் சீர்கேடுகளை அனுப்ப வேண்டும். ஆனால் இப்படி நடப்பதாகத் தெரியவில்லை. (பிற்குறிப்பு : ரஸ்யா ஆபிரிக்காவிலிருந்து தங்கம் கடடத்துவது பற்றித் தேடிப்பாருங்கள். குறிப்பாக அங்கு வக்னர் என்ன செய்தவர்கள் என்பதை. இதைப் பற்றி விவாதிப்பதற்கான திரி இது இல்லை)
  2. 😂 விடுமுறை காரணமாக நாளைக்கு ரஸ்ய செய்தி ஒன்றும் வராது. மேற்கின் ஊதுகுழல்களைத்தான் வாசிக்க வேண்டும்.
  3. பிரிகோசினுடன் பெலாருஸ் அதிபர் மூலமான பேச்சுவார்த்தையில் பெரும் தொகைப் பணப் பரிமாற்ற ஒப்பந்ததுடந்தான் மொஸ்கோ பயணத்தை அவர் கைவிட்டதாகவும் பேசிக் கொள்கிறார்கள். பிரிகோசின் பணத்தாசை கொண்டவர். கிளறக் கிளற குப்பைகள் வந்துகொண்டே இருக்கிறது. ஷோய்கூவும் தனியாக ஒரு கூலிப்படையை வைத்துள்ளாராம். ஒரு வேளை இவர் புதினைக் கவிழ்க்க நினைத்தாலும் அவரால் முடியும். அணுகுண்டுகளை யார் கையாள்வது என்ற குழப்பம் உள்ளதால் ரஸ்ய இராணுவம் உடைவதைச் சர்வதேசம் விரும்பவில்லை.
  4. வெறுமனே அறிக்கை மட்டுமென்றாலும் தொடர்ச்சியாக வெளியிலிருந்து சிங்கள அரசாங்கத்துக்கெதிரான அறிக்கைகள் வந்துகொண்டே இருக்கவேண்டும். சர்வதேசத்தில் இலங்ககை தொடர்ந்தும் சிறுபான்மை இனத்தவரை மதிக்காத அரசு என்ற விம்பம் வெளிக்காட்டப்பட வேண்டும். இறுதியான் செய்தியில் தமிழ் அரசியல்வாதிகள் ஐநா வின் தீர்மானங்களை வரவேற்கிறோம், இன்னும் அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கூறியுள்ளனர். இவர்களின் கருத்து வீரகேசரியோடு முடிந்ததா அல்லது சர்வதேச ஊடகங்களுக்கு அறிக்கையை அனுப்பியுள்ளனரா ? சிறுபான்மையினர் தரப்பில் அறிக்கையை வரவேற்று மனித உரிமைக்கான பிரதி ஆணையாளருக்கு அனுப்பியுள்ளனரா ?
  5. வீரகேசரியின் இந்த 4 செய்திகளிலும் கடன் மறுசீரமைப்பு என்ற சொல் பல தடவை பாவிக்கப்பட்டுள்ளது. முதலாவது செய்தியில் ஏறத்தாள ஒவ்வொரு வரியிலும் இச் சொல் உள்ளது. சாதாரண வாசகருக்குப் புரியும் வகையில் செய்தியை எழுதினால் என்ன ? கடன் மறுசீரமைப்பு என்றால் என்ன ? ஏற்கவனே பெறப்பட்ட கடனின் வட்டி வீதத்தை அதிகரிப்பதா ?
  6. விரிவான பதில்களுக்கு நன்றி ஜஸ்ரின். இதுவரை காலையில் குளுக்கோசின் அளவு இரத்தத்தில் குறைவாக இருக்கும் என்று எண்ணியிருந்தேன். இந்னுமொரு கேள்வி. எனக்குத் தெரிந்த ஒரு பிரெஞ்சுப் பெண் குழுவாக உணவின்றி நீண்டநேர நடைப்பயிற்சியை ஏற்பாடு செய்பவர். ஒரு வாரம் சாப்பிட மாட்டார்கள். காலையில் ஒரு கரண்டி ஒல்வ் எண்ணையும் தேசிக்காய்ச் சாறுடன் நீர் அல்லது வேறு பழ ஜூஸ் மட்டுமே உண்பார்கள். ஏனைய நேரங்களில் நீர் தவிர வேறெதுவும் சாப்பிடுவதில்லை. அத்துடன் மலை, காட்டுப் பகுதிகளில் தினமும் 3 - 5 மணி நேரம் நடப்பார்கள். இதன் மூலம் முக்கியமாக உடலில் கொழுப்பையும் அவசியமற்ற கலங்களை (புற்றுநோய்க் கலங்கள்) அழிக்கவும் முடியும் என்று கூறுகிறார். நான் 3 நாட்கள் நடைப்பயிற்சி செய்யாமல் ஒரு நாளைக்கு ஒரு அப்பிள் பழம், தேசிக்காய்ச் சாறு மட்டும் சாப்பிட்டு முயற்சி செய்தேன். 3ஆம் நாள் மெல்லிய பசி இருந்தாலும் சாப்பிட வேண்டும் என்ற ஆவல் இல்லாமல் போனது. உங்கள் கட்டுரையை வாசித்தபோது, குளுக்கோஸ் முற்றாக வழங்கப்படாமல் கல்லீரலின் செயற்பாடு பாதிக்கபடும் போலுள்ளது. இந்த 7 நாட்களும் கல்லீரலும் கணையமும் எவ்வாறு இயங்கும் ? நன்றி.
  7. உக்ரெயினில் நின்ற பிறிகோசின் படையணிகள் ரஸ்யாழுக்குள் நுளைந்து ரொஸ்டோவ் நகர்வரை வந்து பாரிய இராணுவ முகாமைக் கைப்பற்றும் வரை புதினுக்கு எதுவும் தெரியவில்லையா ? ரஸ்ய இராணுவம் பெரியளவில் எதிர்ப்புக் காட்டவில்லை. இராணுவத்தின் உள்ளே உயர்நிலையில் பிரிகோசினுக்கு ஆதரவு இல்லாமல் இத்தனையும் செய்திருக்க முடியாது. பிறிகோசின் பக்மூத்தில் சண்டையிட்டவாறே பல தடவைகள் ரஸ்ய இராணுவத்தால் நின்றுபிடிக்க முடியாது என்று கூறியிருந்தார். அவர்களுக்கும் இது தேவையில்லாத போர் என்று கருதியிருக்கலாம். ஒரு வாரத்துக்கு முன்பே இவ்வாறு நிகழப் போவதாக அமெரிக்க உளவுத்துறை அறிந்துவிட்டதாகச் செய்திகள் வருகின்றன. ஆனால் புதினும் களாமுனையில் அருகில் இருந்த அவரது இராணுவமும் அறியவில்லை. எப்படி ?
  8. பிரிகோசினின் கதையை முடிக்க புதின் தீர்மானித்ததை எப்படியோ தெரிந்துகொண்டதால்தான் முந்திக் கொண்டு இந்த மொஸ்கோ மீதான நகர்வு நடத்தப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் கூறுகின்றன. புதினை எதிர்த்துப் பேசியவர்கள் சிறைக்குள் இருப்பார்கள் அல்லது தீர்த்துக் கட்டப் படுவார்கள் என்பதுதான் சரித்திரம். இராணுவத்தையே மொஸ்கோவுக்குத் திருப்பியவர் இன்னும் சேவையில் உள்ளார் என்றால் பிரிகோசினின் தேவையைப் புரிந்து கொள்ளலாம். இனி பிரிகோசினின் ஆபிரிக்காவுக்குச் அனுப்பப்பட்டு வழக்கம்போல் அங்கு குழப்பம் விளைவிக்கவும் அங்குள்ள தங்கத்தைக் கொள்ளையடிக்கவும் பயன்படுத்தப்படுவார்.
  9. ̀̀பேசாமல் குறுகி இருப்பதை விட சர்வதேச அளவவில் தொடர்ச்சியாக இவ்வாறான கோரிக்கைகள் வைக்கப்பட வேண்டும். அரசியல் கைதிகள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி வந்துகொண்டே இருக்க வேண்டும். கோரிக்கையை முன்வைத்தவர் அரசியல்வாதி இல்லை. ஒரு தமிழர். ஏனைய தொழிலதிபர்கள் போல் அல்லாமல் முயற்சியைக் கைவிடாமல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கோரிக்கை வைக்கிறார். அதற்காகவே பாராட்டு.
  10. ஜஸ்ரின், சில கேள்விகள். காலையில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது நல்லது என்று சொல்வார்கள். 40 நிமிடத்துக்கு மேற்பட்ட உடற்பயிற்சியில்தான் குளுக்கோஸின் இருப்புக் குறைவடைய உடலிலுள்ள கொழுப்பு சக்தியாகக் கரைக்கப்படும் என்று சொல்வார்கள். காலையில் உடலில் குளுக்கோசின் அளவு குறைவாக இருப்பதால் இரட்டிப்பு நன்மை என்று நினைக்கிறேன். நீரிழிவு நோய் இல்லாத ஒருவரின் உடலில் இரத்தத்தில் அல்லது தசைகளில் உள்ள குளுக்கோஸின் அளவை மதிப்பிட முடியுமா ? குறிப்பிட்ட அளவு குளுக்கோஸ் கட்டாயம் உடலில் இருக்க வேண்டுமா ? ஒரு மேலோட்டமான கணக்கின்படி ஒரு மணி நேர சாதாரண ஓட்டப் பயிற்சியின்போது 800 கி.கலோரிகள் அளவான சக்தி வெளியேற்றம்படும் என்று வைத்துக் கொண்டால் 4 கி.கலோரிகள் 1கிராம் சீனி என்ற அளவில் 200 கிராம் சீனி வெளியேற்றப்படுகின்றது. நீரிழிவு நோய் உள்ள ஒருவருக்கு இச் சடுதியான சீனி இழப்பு ஆபத்தில்லையா ? தேவையை உணர்ந்த கல்லீரல் இந்த 200 கிராம் சீனியை உற்பத்தி செய்துவிட ஏற்கனவே இரத்தத்தில் இருந்த சீனியும் சேர்ந்து சிறுநீரகத்தைப் பாதித்தால் உடற்பயிற்சியால் ஆபத்தல்லவா ஏற்படும் ? நன்றி.
  11. மோடியின் அமெரிக்க விஜயம் தொடர்பான செய்திகளுக்குள் இன்னொரு செய்தியையும் வாசிக்க நேர்ந்தது. சில வருடங்களாக இந்தியப் பாடப்புத்தகங்களில் இந்துத்துவாவுக்கு எதிரான கூற்றுக்கள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன. இந்தியச் சரித்திரப் பாடங்களில் முகலாயர்களின் படையெடுப்பு மற்றும் அவர்களது சரித்திரம் நீக்கப்பட்டு விட்டது. அதுமட்டுமின்றி விஞ்ஞான பாடத்தில் டார்வினின் கூர்ப்பு விதி நீக்கப்பட்டு அது மருத்துவ மேற்படிப்புக் கல்வியில் மட்டுமே உள்ளது. அதாவது இந்தியா தனது பெரும்பாலான மக்களை இருட்டுக்குள்ளேயே வைக்க முயல்கிறது. https://www.courrierinternational.com/article/la-lettre-de-l-educ-en-inde-le-pouvoir-nationaliste-censure-et-reecrit-les-manuels-scolaires சில விடயங்களில் இதே நிலமைதான் இலங்கையிலும்.
  12. 60 நாடுகள் பணம் கொடுக்காது. ஏன் 60 நாடுகள் கூடின என்பதில்தான் சூட்சுமம் உள்ளது. 🙂
  13. மீண்டும் நல்வரவு கோசன் ! சில குளறுபடிகள் நடந்தாலும் நீங்கள் நினைப்பது நடப்பதற்குச் சான்றுகள் குறைவு. ஏனென்றால் பிரிகோஜின் புதினுக்கு வேண்டப்பட்டவர். பிரிகோஜின் இல்லாமல் புதின் இயங்க முடியாது என்று கேள்விப்பட்டுள்ளேன். இல்லாவிட்டால் பக்மூத் சண்டையின்போதே புதின் இவருக்குத் தேனீர் விருந்து கொடுத்திருப்பார். 🤣
  14. உக்ரெயினை மீண்டும் கட்டி எழுப்புவதற்கான தயார்படுத்தலுக்காகச் சென்ற வியாழன் இங்கிலாந்தில் 60 நாடுகள் கூடியுள்ளன. இதற்கான செலவு 411 பில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த உதவியில் உலக வங்கியும் ஐரோப்பிய ஒன்றியமும் பெரும் பங்கு வகிக்கும். போருக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட உக்ரெயின் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான முயற்சிகள் துரிதப்படுத்தப்படுவதுபோல் தெரிகிறது. இவை யாவும் போர் கட்டுப்பாட்டுக்குள் விரைவில் வரும் என்பதற்கான அறிகுறிகள் போல் தோன்றுகிறது.
  15. உலக அரசியல் அறிவாளிகளோடுதான் கருத்தாடுவேன், ஏனைய அரைவேக்காடுகளுடன் சேர்ந்து அவிய மாட்டேன் என்பவர் ஏன் இன்னும் இங்கு நின்று முக்கி முனகுகிறார் ?
  16. எனக்கு இவர்தான் நினைவுக்கு வருகிறார். முன்நாள் பிரெஞ்சு ஜனாதிபதியுடன். கடாபியும் இப்படித்தான் உலகெல்லாம் ராஜ மரியாதையுடன் உலா வந்தவர்.
  17. மேலுள்ளது நீங்கள் நிதானமாக எழுதியது. நல்லது உங்கள் உலக அரசியல் அறிவிற்காக - ரஸ்யாவிலிருந்து சென்ற ஆண்டு முதல் 6 மாதங்களில் 419000 ரஸ்யர்கள் வெளியேறியுள்ளனர். 369000 ரஸ்யர்கள் சோவியத்திலிருந்து பிரிந்த நாடுகளுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். இதில் 80000 ரஸ்யர்கள் உக்ரெயினுக்குள் புகலிடம் தேடியுள்ளனர். இதே வருடத்தில் ரஸ்யாவுக்குள் குடியேறியவர்களின் எண்ணிக்கை 295000. https://www.rtbf.be/article/guerre-en-ukraine-plus-de-400000-russes-auraient-emigre-au-cours-du-premier-semestre-2022-11061050
  18. நீங்கள் தனிநபர் விமர்சகர் இல்லை என்று நம்ப வேண்டுமா ? ஆரோக்கியமான விவாதங்கள் எதிலும் நீங்கள் பங்குகொள்வதில்லை. மாறாக விதண்டாவாதமே உங்கள் பெரும்பாலான கருத்துகள். தாறுமாறாகக் கேள்விகள் கேட்பது, யாராவது பதில் எழுதினால் வாசிக்காமல் புறக்கணிப்பதைப் பல திரிகளிலும் காணலாம். புதின் வாழ்க என்று கோசம் போட்டது மட்டும்தானா உங்கள் உலக அரசியல் அறிவு ? வீணான குற்றச்சாட்டுகளை நிறுத்துங்கள்.
  19. சென்ற வருடம் பிரான்ஸ் அதிபராலும் பின்னர் துருக்கியாலும் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை முயற்சிகளை ரஸ்யா புறக்கணித்தது தெரிந்ததே. அப்போது பேசப்பட்ட நிபர்ந்தனைகளை விட மோசமான ஆபிரிக்க பிரதிநிதிகளின் 10 கோரிக்கைகளும் புதினால் நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தும் சமாதானம் வேண்டும் என்கிறார். இந்த 10 கோரிக்கைகளில் முக்கியமானது ஐநாவினால் அங்கீகரிக்கப்பட்ட இறையாண்மையை மதிக்க வேண்டும் என்பது. அதாவது ரஸ்யா ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்.🤣 ரஸ்யா முன்னேறித் தாக்கும் பலத்தை இழந்து தற்காப்புப் போர் செய்கிறது. உக்ரெயின் முன்னேறித் தாக்க முனைகிறது. இதுதான் புதின் சிரித்துச் சிரித்து கைகுலுக்கி ஆபிரிக்க பிரதிநிரிகளின் முயற்சியை வரவேற்கும் காரணம் போல் தெரிகிறது. சந்தடி சாக்கில் இன்னுமொன்றையும் அவர்கள் கூறியுள்ளனர். 😄
  20. சாதாரண வேக நடை மணித்தியாலத்துக்கு 8 கிமீ குறுகிய தூர வேக நடை உலக சாதனை 5 கிமீ - சுமார் மணித்தியாலத்துக்கு 16 கிமீ வேகம். 8 கிமீ வேகத்தில் நித்திரை ஓய்வு இன்றி நடந்தால்தான் இலக்கை அடைய முடியும். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வரையான 140 கிமீ தூரத்தை 9 மணித்தியாலத்தில் கடந்துள்ளனர். மணிக்கு 15.5 கிமீ வேகம். 😳 ஏதோ சுற்றுகிறார்கள். 🤣
  21. நன்றி ஜஸ்ரின். அறிவியல் வளர்ச்சியடைந்த உலகில் உடலைப் பாதுகாப்பது என்பது ஒரு கலை. பொதுவாக உருவாகக் கூடிய வியாதிகளைப் பற்றி அறிந்து அதற்கேற்ப உணவுகளையும் பழக்கங்களையும் மாற்றிக் கொள்வது என்பது வாழ்வின் அங்கமாகிறது. உண்ணும்போது சுவையும் எனது உடலுக்கு அவசியமானவற்றை உட்கொள்கிறேன் என்ற உணர்வும் நிறைவைத் தரும். இளைய சந்ததியினரிடம் இதைப் பொதுவாகக் காணக்கூடியதாக இருக்கிறது. ஏனைய நாடுகள் பற்றித் தெரியாது, இங்கு எனக்குத் தெரிந்தவர்களின் பிள்ளைகள் உணவில் மிகுந்த கவனமுள்ளவர்கள்.
  22. கழுவேற்றம் (impalement) என்பது ஒரு மரணதண்டனை முறையாகும். கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றுவர். https://ta.wikipedia.org/wiki/கழுவேற்றம் திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்ற 8000 சமணர்கள் தாமாகக் கழுவேறினார்கள் என்று எங்கள் சைவப் பாடப் புத்தகத்தில் உள்ளதைப் பயபக்தியுடன் சிறு வயதில் படித்தோம். இது பெரிய புராணத்திலும் உள்ளது. திருஞான சம்பந்தரே இந்தக் கழுவேற்றும் நிகழ்வை ஆரம்பித்து வைத்ததாக கோவில்களிலும் சான்றுகள் உள்ளன. வாதத்தில் தோற்ற யாராவது இந்தக் கூரிய மரத்தில் தாங்களாகக் குத்திக் கொண்டு சாகுவார்களா ? ஒன்று இரண்டு அல்ல 8000 பேர். ஆளைக் கதறக் கதற குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்று இந்தக் கூர் மரத்தில் செருகுவார்கள். இப்போது கழுவேற்றம் என்றால் என்னவென்று அறிய முடிகிறபோது சமயத்தைக் காப்பாற்றும் நோக்கில் சிலர் அது இதுவல்ல இது அதுவல்ல என்று குத்தி முறிகிறார்கள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.