Everything posted by இணையவன்
-
பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
இன்னுமொன்றையும் கவனியுங்கள். இந்த தேசிய வாதிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ நாசிகளுடன் தொடர்புள்ளவர்கள். அதே நேரம் புட்டின் இவர்களுடன் எவ்வாறு நட்புடன் உள்ளார்? 🫢
-
நன்றி கெட்ட உலகமிது 😡
சீமான் ஆதரவை நியாயப்படுத்த ஐரோப்பிய அரசியலை ஒப்பிட்ட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு கதைக்கு உங்களுக்கு ஒரு மகன் இருந்து அவர் பாடசாலையில் சக மாணவரோடு விளையாடும்போது அவர்கள் வந்தேறு குடி என்று விளித்திருந்தால் அதனை உங்கள் மகன் உங்களிடம் முறையிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் மகனிடம், மகனே அவர்கள் திட்டியது நியாயமானது. வந்தேறு குடிகளான நாம் அதைப் பொறுத்துக் கொண்டு அதிகம் படித்து புத்திசாலியாகி பெரிய பதவிகளிலோ அரசியல் பதவிகளிலிருந்தோ ஐரோப்பியரை ஆளாமல் கொஞ்சமாகப் படித்து அவர்களுக்குக் கீழ்படிந்து வாழ்வதே நியாயமானது என்று சமாதானம் செய்வீர்களா ? சீமானின் இனவாதத்தை வரவேற்றால் அடிமையாக வந்து அமெரிக்காவை ஆண்ட கறுப்பினத்தவர் முதல் புலம்பெயர்ந்த தமிழர்களின் அடுத்த சந்ததியின் அரசியல் பிரவேசம் வரை எதிர்ப்பவராக இருக்க வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட பிரெஞ்சுப் புரட்சி இந்தத் தூய ஆட்சியை எதிர்த்து உருவானது. புரட்சி முடிந்து அடுத்த வருடம் 1790 ஆம் ஆண்டு அவர்கள் இயற்றிய சட்ட வரைபில் வெளிநாட்டு நபர் ஒருவர் 5 வருடம் பிரான்சில் இருந்து பிரெஞ்சு ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்திருந்தால் அல்லது பிரான்சில் சொத்து வைத்திருந்தால் அவர் பிரெஞ்சுப் பிரஜையாகக் கணிக்கப்படுவார் என்று எழுதியுள்ளனர். 1804 இல் நெப்போலிய மன்னன் பிரெஞ்சுக் கல்வியறிவு உள்ளவரும் பிரெஞ்சுப் பிரஜையாவார் என்று சில மாற்றங்களைச் செய்திருந்தார். மரின் லுபெனின் தந்தை இரண்டாம் உலகப் போரில் இறந்த இராணுவத்தினர் பொதுமக்களுக்கான நினைவு நாளில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதைக் கூட பிரெஞ்சு மக்கள் விரும்பவிலை. காரணம் ஹிட்லரின் செயல்களை இவர் தொடர்ச்சியாக ஆதரித்து வந்தவர். அண்மையில் இறந்த முன்நாள் அமைச்சர் Robert Badinter இன் அரச மரியாதையோடு நடந்த இறுதிக் கிரியையில் மரின் லுபென் கலந்து கொள்வதை Badinter குடும்பத்தினர் விரும்பவில்லை என்று அறிவித்திருந்தனர். இவர் பிரான்சில் சமத்துவம் தொடர்பான பல சட்டங்களை இயற்றக் காரணமானவர். நாம் பிரெஞ்சுப் புரட்சி முதல் இன்று வரை பல உயிர்களைத் தியாகம் சமத்துவத்திற்காக உழைத்து வந்திருக்கிறோம். ஆனால் இந்த இனவாதிகள் இவற்றையெல்லாம் உதறித் தள்ளக் கூடியவர்கள் என்று இவரது மனைவி தெரிவித்திருந்தார். இனத் துவேசம் அழிவை நோக்கியே செல்லும்.
-
பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
இதே கட்சி சில வருடங்களுக்கு முன் பிறெக்சிட் காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்தது. இங்கிலாந்து போல பிரான்ஸும் ஐரோப்பாவிலிருந்து பிரிய வேண்டும் என்று கூட்டங்களில் பேசினார்கள். பின்னர் இங்கிலாந்து பிரிந்தபின் குத்துக்கறணமடித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் பிரான்சை வலுப்படுத்த வேண்டும் என்று தற்போதைய தேர்தலில் பிரச்சாரம் செய்தார்கள்.
-
பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
பரிஸ் போன்ற பெரிய நகரங்களில் பெரும்பாலும் இந்தக் கட்சி வெற்றி பெறவில்லை. வெளிநாட்டவர்களின் அதிகமான வாக்குகள் மட்டும் காரணமல்ல. பொருளாதாரம் எதிர்காலம் பற்றிய பரந்த அறிவுள்ளவர்கள் இப்படியான நகரங்களில் உள்ளனர். கிராமப் புறங்களில் உள்ளவர்களை வெளிநாட்டவர்களால் பிரான்சின் பணவீக்கமும் பாதுகாப்பும் சீரழிந்து விட்டதாக நம்பவைத்துள்ளனர். பிரான்சின் கலாச்சாரம் இந்த வெற்றிலைத் துப்பல் கூட்டத்தினால் சீரழிந்து விட்டதாகவும் தமது வேலைவாய்ப்பினைப் பறித்து வெற்றிலை துப்பாத கூட்டம் முன்னேறி விட்டதாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டது. எந்த வகையிலும் வெளிநாட்டவர் வேண்டப்படாதவர்கள். ஒழுங்காக இருந்து முன்னேறினாலும் பிரச்சனைதான். ஜேர்மனியிலும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நீங்களும் உங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போக வேண்டி வரலாம். இப்போதே நீங்கள் அனுபவிக்கும் வசதிகளைக் துறக்க ஆயத்தப்படுத்துங்கள். 🤣 எனக்குத் தெரிந்த தமிழர்கள் சிலரும் இந்த இனவாதக் கட்சிக்கு வாக்களித்திருந்தனர். ஏனென்றால் வெளிநாட்டவர்களின் தொல்லை தாங்க முடியவில்லையாம் 😂. இந்தத் தமிழர்கள் யாரென்று பார்த்தால் அரசாங்கத்துக்கு வரி ஏய்ப்புச் செய்பவர்களும் உதவிப் பணத்தை எடுத்துக் கொண்டு களவாக வேலை செய்பவர்களும் மற்றும் வேறு வழிகளில் அரசாங்கத்தை ஏமாற்றுபவர்களுமாவர் இதில் அடங்கும்.
-
நன்றி கெட்ட உலகமிது 😡
மொத்த வாக்குகளில் 16 வீதம் இந்தக் கட்சி பெற்றுள்ளது. மீதி 80 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை இனவாதத்துக்கு எதிரானதாக எடுக்கலாமா ?
-
நன்றி கெட்ட உலகமிது 😡
முக்கியமான ஒன்று இக் கட்டுரையில் விடுபடப்பட்டுள்ளது. ஜேர்மனி இராணுவம் எந்த உரிமையில் 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் காலூன்றியிருந்ததோ அதே உரிமை ஆப்கானிஸ்தானிலிருந்து அகதியாக ஜேர்மனிக்குள் வருவதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு. அது மட்டுமின்றி அகதிகளை உள்வாங்குதல் சர்வதேச/ஐரோப்பிய உடன்படிக்கைகளின்படி கட்டாயமான ஒன்று. பாவம் பரிதாபம் பார்த்து அவர்களை ஜேர்மன் ஆதரிக்கவில்லை. வந்தவர்கள் விதிமுறைகளை மீறுவதை வேறு விதமாக அணுக வேண்டும். இது மதத் தீவிரவாதம். தங்கள் சமுதாயம் மேற்குலகினால் பாதிக்கப்பட்டதால் பழவாங்கும் நோக்கத்தோடு வருபவர்கள், மேற்குலகின் வெறுப்பை உள்மனதில் வைத்துக் கொண்டு வருபவர்கள் மற்றும் மூளைச்சலவை செய்யப்படுபவர்களே பெரும்பாலும் இவ்வாறான தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள். இன்னுமொன்றையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஜேர்மனி இனவாதக் கட்சியான AfD இந்த வருட ஆரம்பத்தில் இரகசிய கூட்டம் ஒன்றில் தாம் ஆட்சிக்கு வந்தால் ஜேர்மனியிலிருந்து வெளிநாட்டவர்கள் அனைவரையும் வெளியேற்றுவது தொடர்பாக ஆலோசித்தது. இதற்கு எதிராக ஜேர்மனி மக்கள் இலட்சக்கணக்கில் (14 இலட்சம் என்று கூறப்படுகிறது) நாடெங்கிலும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பலர் AfD கட்சியினைத் தடை செய்ய வேண்டும் என்றும் கோரினர். https://www.lefigaro.fr/international/deuxieme-jour-de-manifestations-en-allemagne-contre-le-parti-d-extreme-droite-afd-20240121
-
"காலம் கடந்தும் காதல் வாழும்" [மனைவியின் 17 ஆவது நினைவு தினம்: 08/06/2024] / உண்மையும் கற்பனையும் சேர்ந்த கதை
ஈழத் தமிழர் வரலாற்று நிகழ்வுகளோடு இனிமையான தருணங்களையும் உள்வாங்கிக் கடந்து வந்த பாதையை அருமையாக எழுதியுள்ளீர்கள். நாம் திரும்பிப் போக முடியாத மனதில் ஆழமாகப் பதிந்த அந்த நினைவுகளை அசை போடுவது இனிமை.
-
யாழில். பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து பரிமாற்ற நிகழ்வு – சிவில் சமூகம் புறக்கணிப்பு!
மத போதகர்களும் சாமியார்களும் சேரும் அரசியல் கூட்டுகளில் முற்றாக நம்பிக்கையில்லை. பல்வேறுபட்ட மதங்களைப் பிரதிபலிப்பவர்களின் ஒற்றுமை என்பதே பொய்யானது.
-
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் கையளிப்பு!
இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் பற்றிக் கேள்விப்படவில்லை. இது ஏன் பயன்படுத்தப்படுகிறது ?
-
பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
இன்று பிராந்சில் நடந்து முடிந்த ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தேசியவாத தீவிர வலதுசாரி கட்சி (RN) 31.5 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. வெற்றிபெற்ற Rassemblement national கட்சி உறுப்பினர்கள் நாசிகளுடன் தொடர்புடையவர்களாக பல தடவை சர்ச்சைக்குட்பட்டவர்கள். இக் கட்சியின் தலைவர் மரின் லுபென் ரஸ்ய அதிபர் புதினிடம் சட்டவிரோதமகப் பணம் பெற்று ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர். இவர்கள் பிரான்சிலுள்ள அனைத்து வெளிநாட்டவரையும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். ஏனைய தீவிர வலதுசாரிக் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் 40 வீதமான வாக்குகள் தேசியவாதக் கட்சிகளுக்குக் கிடைத்துள்ளது. இத் தேர்தலில் ஆளும் கட்சி பலத்த தோல்வியைத் தழுவியுள்ளது. இதனையடுத்து பிரெஞ்சு அதிபர் மக்ரோன் இன்று இரவு பிரான்சின் பாராளுமன்றம் சட்டவரைபுக்கு உட்பட்ட வகையில் கலைக்கப்படுவதாக தொலைக்காட்சியில் திடீரென அறிவித்தார். இந்த மாத இறுதியில் பிரான்ஸ் சட்டமன்றத் தேர்தல் ஒன்றை நடத்தவிருப்பதாகவும் அறிவித்தார். பல்லின மக்களைக் கொண்ட பிரான்சில் தேசியவாதிகளின் எழுச்சி ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அசாதாரணமானது. அதுவும் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள வேளையில் இது பிரான்சுக்கு அவப்பெயரை உண்டாக்கும். தொடர்புபட்ட பிரெஞ்சுச் செய்தி: https://www.lemonde.fr/politique/live/2024/06/09/en-direct-resultats-europeennes-2024-emmanuel-macron-annonce-la-dissolution-de-l-assemblee-nationale-apres-le-score-historique-du-rn-aux-europeennes_6238193_823448.html
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
நானும் நாதக 8 வீத வாக்குகளைப் பெற்றது பற்றித் தேடிக் கண்டுபிடிக்க முடியவிலை. யாராவது இணைப்பு இருந்தால் தாருங்கள். நன்றி.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
இந்தியாவிலுள்ள ஏனைய அனைத்துக் கட்சிகளும் இதனுள் வரும் என்று நினைக்கிறேன்.
-
சாமி சிறீ பாஞ்
பாஞ்ச், மீண்டும் நலமுடன் உங்களை யாழில் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
என்ன பிழை வருகிறது என்று சரியாகச் சொன்னால் சரி செய்யலாம். கடவுச் சொல்லைக் கீழுள்ள இணைப்பில் 'Forgot your password?' என்பதை அழுத்தி அவரது ஈமெயில் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம். https://yarl.com/forum3/login/
-
சென்று வாருங்கள் அண்ணா!
ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவூரான்.
-
மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம்
இனிமேல் இவ்வாறான இடங்களுக்கு வந்து போராடுவதற்கு அரசியல்வாதிகளுக்குப் பதிலாக மறவன்புலவு சச்சிதானந்தன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 🙂
-
ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களென இந்தியாவில் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தேர்தல் வெற்றியை மையப்படுத்தியதா? - முஷாரப் சந்தேகம்
இந்தச் செய்தியில் பிடித்த விடயம், 4 இலங்கை முஸ்லிம்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டதை ஒரு முஸ்லிம் அரசியல்வாதி பகிரங்கமாக ஆணித்தரமாகத் தனது கண்டனத்தைத் தெரிவிப்பதுதான்.
-
வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குச் செல்லத் தடை
நிகழ்ச்சி நடத்தி காணிகளை விடுவிப்பதாக விளம்பரப் படுத்திவிட்டு உரிமையாளர்களுக்குக் காணியைப் பார்வையிட மட்டுமே அனுமதித்துள்ளனர். இரு போன்ற விடயங்களை அரச பதவிகளில் இருப்பவர்கள் மூலமாகச் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் கவனத்திற்குத் தொடர்ச்சியாகக் கொண்டு வரப்பட வேண்டும். மனித உரிமை அமைப்புகளால் எந்த நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது. ஆனால் தமிழர்களுக்குத் தொடர்ச்சியான பிரச்சனைகள் உண்டு என்பது தொடர்ச்சியாகக் காட்டப்பட்டுக் கொண்டிருக்கும். ஒரு காலத்தில் இவை தமிழர்களின்மேல் இழைக்கப்பட்ட அடக்குமுறைக்கு வலிமையான ஆதாரங்களாகவும் இருக்கும். 55 ஆயிரம் சதுர அடி பகுதிக்குள் மட்டும் பயணிக்கத் தடையா அல்லது இந்தப் பகுதிக்குள் வெடிப்பொருள்கள் இருப்பதால் 234 ஏக்கர் நிலங்கள் முழுவதுக்கும் செல்லத் தடையா என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. 55 ஆயிரம் சதுர அடி என்பது இரண்டு ஏக்கருக்கும் குறைவானது.
-
போர் உலா - நண்பர்களை உருவாக்குவதற்கான போர்…
சில பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள். பிளே வயல்களின் = கோதுமை வயல்களின் அவர்களை புனி செய்தால் = அவர்களைத் தண்டித்தால் எனக்கு அமி ஆவார்கள் = எனக்கு நண்பர் ஆவார்கள் கதை எழுதியுள்ள விதம் மொழிபெயர்ப்பு இல்லாமலே புரியக்கூடியதாக உள்ளது என்று நினைக்கிறேன்.
-
பலஸ்தீன் அரசினை அங்கீகரிக்க ஐரோப்பிய நாடுகள் தயாராகின்றன
இதுவரை 146 நாடுகள் பலஸ்தீனை அங்கிகரித்தபோதும் அது தனிநாடாக்கப்படவில்லை. நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்.
-
பலஸ்தீன் அரசினை அங்கீகரிக்க ஐரோப்பிய நாடுகள் தயாராகின்றன
இலங்கையில் அமைதி இல்லையென்றும் இனவழிப்பு நடக்கிறது என்றும் அங்குள்ள எமது தலைவர்கள் சொல்லவில்லை.
-
பலஸ்தீன் அரசினை அங்கீகரிக்க ஐரோப்பிய நாடுகள் தயாராகின்றன
நோர்வே அயர்லாந்து நாடுகளிலிருந்து இஸ்ரெயில் தனது தூதுவர்களைத் திருப்பியழைத்துள்ளது. 28 ஆம் திகதி நடைபெறும் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் பலஸ்தீனை அங்கிகரிக்கப்படும் என்று ஸ்பெயின் அறிவித்துள்ளது.
-
பலஸ்தீன் அரசினை அங்கீகரிக்க ஐரோப்பிய நாடுகள் தயாராகின்றன
பலஸ்தீன் அரசினை அங்கீகரிக்கும் அறிவிப்பு ஒன்றினை நோர்வே முன்னெடுக்க உள்ளது. இதனை ஏனைய ஐரோப்பிய நாடுகளும் குறிப்பாக ஸ்பெயின் அயர்லாந்து போன்ற நாடுகளும் ஆதரிப்பதாக அறிவிக்க உள்ளன. இஸ்ரெயில் தனது கண்டனத்தை எக்ஸ் இல் தெரிவித்துள்ளது. பிரெஞ்சுச் செய்தி மூலம் : https://www.ouest-france.fr/monde/palestine/guerre-israel-hamas-plusieurs-pays-europeens-vont-reconnaitre-lexistence-dun-etat-palestinien-bd808140-17fc-11ef-89e1-9d0ea397ae43
-
நடுவானில் கடுமையாக குலுங்கிய சிங்கப்பூர் எயர்லைன்ஸ் விமானம் -பயணி ஒருவர் பலி
சென்ற மார்ச் மாதமும் அவுஸ்திரேலியாவிலிருந்து நியூசிலாந்து செந்றுகொண்டிருந்த போயிங் விமானம் ஒன்று குலுங்கியதால் 50 பேர் காயமடைந்தனர். இது தொழில்நுட்பக் கோளாறினால் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. பிரெஞ்சு மூலம் : https://www.lemonde.fr/economie/article/2024/03/11/un-boeing-787-de-latam-airlines-rencontre-un-probleme-technique-cinquante-personnes-blessees_6221350_3234.html
-
வாதவூரானின் அண்ணா 09/05/2024 இல் காலமானார்
வாதவூரானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.