Everything posted by இணையவன்
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
ஈரான் ஜனாதிபதி பயணம் செய்த Bell 412 ஹெலிக்கொப்டர் 1980 ஆம் ஆண்டுகளில் வாங்கப்பட்டது. ஈரானிடமுள்ள பெரும்பான்மையான இராணுவ விமனங்களும் ஹெலிகொப்ரர்களும் 80 ஆண்ட்டுக்கு முற்பட்ட தயாரிப்புகளாகும். பொருளாதாரத் தடைகளினால் இவை சரியான முறையில் பராமரிப்புச் செய்யப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கும் தலைவருக்கும் இறுதிப் போரில் இறந்த மக்களுக்கும் வீரவணக்கங்கள்.
-
முள்ளிவாய்க்காலில் வீரச்சாவடைந்த மேதகு வே. பிரபாகரன் அவர்கட்கு வீரவணக்கம்
வீரவணக்கம்.
-
ஆபாச நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் ரூ.1 கோடி கொடுத்த வழக்கை உலகம் உற்றுநோக்குவது ஏன்? - முழு விவரம்
அப்படியா ? மொனிக்கா தன்னைக் கிளிண்டன் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகச் சொல்கிறார். டேனியல்ஸ் தனது முழு இணக்கத்துடன் ட்றம்புடன் உடலுறவு கொண்டதாகச் சொல்கிறார். உங்களுக்கு இரண்டும் ஒன்றாகத் தெரிந்தால் இதற்குமேல் விவாதிக்க முடியாது.
-
ஆபாச நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் ரூ.1 கோடி கொடுத்த வழக்கை உலகம் உற்றுநோக்குவது ஏன்? - முழு விவரம்
🙂 தவிர, நடிகையுடன் தொடர்பு வைத்திருந்ததோ அல்லது அவர் மௌனமாக இருக்கப் பணம் கொடுத்ததோ தவறில்லை. வழக்கின் மையக் பிரச்சனையும் அதுவல்ல. செய்தியை வாசிக்கவும். 🙂 பில் கிளிண்டன் வழக்கும் இந்த வழக்கும் மாறுபட்டவை 😁
-
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
இதுதான் எனது முடிவும்.
-
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
உலகில் அதிகமான உல்லாசப் பயணிகள் செல்லும் பிரான்சுக்கு ஒரு தடவை வாருங்கள். 🙂
-
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
துனிசியாவில் இஸ்லாமிய அடிப்படை வாதம் அதிகரித்து வருகிறது. 2015 இல் இதேபோன்ற கடற்கரை விடுதியில் நுளைந்த ஒருவர் சரமாரியாகச் சுட்டு 39 உல்லாசப் பயணிகளைக் கொன்றிருந்தார். உல்லாசப் பயணிகள் அதிகமுள்ள இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வேறு நாடுகளைப் போல் எல்லா இடங்களுக்கும் பயமின்றிச் செல்ல முடியுமா என்பது சந்தேகம். துனிசியாவுக்கு அருகில் இருக்கும் நாடு மொறோக்கோ வித்தியாசமானது. இங்கு புர்க்கா போட்ட பெண்களைக் காண்பது அரிது. தாவணியால் முட்டாக்குப் போடாத பெண்கள் வீதியில் உலாவுவதைச் சதாரணமாகப் பார்க்கலாம். கடற்கரை, பாலைவனச் சோலை, மலை போன்ற அனைத்தையும் பார்க்கலாம். இரண்டுமே முன்னர் பிரான்சின் ஆட்சியின் கீழ் இருந்த நாடுகள்.
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
அண்மையில் வெளிநாட்டுப் பிரஜாவுரிமையுடன் உள்ள நண்பர் ஒருவர் தனது வீட்டு உறுதியைத் தொலைத்ததால் ஏதோ செய்து அதனைப் புதுப்பித்திருந்தார். அதனைத் தனது வெளிநாட்டில் பிரஜாவுரிமையோடு வழும் தனது பிள்ளையின் பெயருக்கு மாற்றியிருந்தார். இந்த இரு பத்திரங்களையும் பார்த்தபோது ஒரு சந்தேகம் வந்தது. இதில் ஒட்டப்பட்ட முத்திரை தவிர அரசாங்க இலச்சினை எதிலும் இல்லை. நொத்தாரிசின் பெயர் விலாசம் கூட மொட்டைக் கடிதம் போன்று சாதாரண ஒற்றையில் தட்டச்சு செய்யப்பட்டிருந்தது. இது தவிர 4 தானத்தில் ஒரு இலக்கம் போடப்பட்டிருந்தது. கீழ்ப்புறம் அடிக்கப்பட்ட சீல் கூட Land Regisry - Jaffna என்று மட்டுமே இருந்தது. இந்த உறுதிப் பத்திரத்தை எப்படி நம்புவது ? இது என்ன விதத்தில் சட்ட ரீதியான உறுதிப்படுத்தலாக இருக்கும் ?
-
வவுனியா வைரவபுளியங்குளத்தில் மாபெரும் உழவர் சந்தை
வரவேற்கப்பட வேண்டிய முயற்சி.
-
அமெரிக்கா ரூ.5 லட்சம் கோடி ராணுவ உதவி: யுக்ரேன் எத்தகைய ஆயுதங்கள் பெறும்? போரின் போக்கு மாறுமா?
6 அல்ல 61 பில்லியன் என்றுதான் செய்தியில் உள்ளது. 🙂 மனதுக்குள் அடக்கி வைத்திருந்ததை வெளியே கொண்டுவந்துவிட்டார்கள். இந்த உதவிக்கான வாக்கெடுப்பில் பைடன் கட்சியினர் பெரும்பான்மையாக இல்லாதிருந்தும் ட்றம்ப் தரப்பிலிருந்த 101 பேர் உக்ரெய்னுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இவர்களுக்கு ஏதோ புரிந்ததால்தானே எதிர்த்தரப்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 😂
-
ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை
இந்த ஈரானிய விஜயத்தில் ஈரானிய உள்துறை அமைச்சர் Ahmad Vahidi கூட வந்திருப்பதாகத் தெரிகிறது. ஆர்ஜெடீனா இவரைக் கைது செய்யுமாறு இலங்கையைக் கேட்டுள்ளது. இவர் 1994 ஆம் ஆண்டு ஒரு குண்டுத் தாக்குதலில் தேடப்பட்டு வருபவர் என்று கூறப்படுகிறது. https://www.rfi.fr/fr/amériques/20240424-argentine-pakistan-sri-lanka-demande-arrêter-ahmad-vahini-ministre-interieur
-
வடக்கில் போதைப்பொருள் பாவனைகள் அதிகரிப்பு : மூலச்சக்திகள் யார்?
முன்பு ஒரு திரியில் எழுதியது, யாழில் சில தமிழ் அரசியல்வதிகள், வாள் வெட்டுக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் ஆகிய மூன்றும் ஒரு முக்கோணத் தொடர்புடையவை. போதைப்பொருள் பாவனையின் மூல சக்தி பற்றிப் பத்திரிகையில் நேரடியாக எழுத முடியது.
-
என் இந்தியப் பயணம்
கட்டுரைக்கு நன்றி அக்கா. இதிலுள்ள ஒரு பகுதி எனக்கு உபயோகமாக இருக்கலாம். 🙂
-
ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம்: இலங்கையில் பெட்ரோல் நெருக்கடி ஏற்படும் அபாயம்
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
திங்கள் முதல் நானும் கவனித்தேன். எண்ணை விலை வீழ்ந்துகொண்டே போகிறது. பிட்காயின்ஸ் விலை வீழ்ச்சியோடு தொடர்பிருக்குமோ தெரியவில்லை.
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான். 🙂
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
52 வீதமான மக்கள் போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது. 74 வீதமான மக்கள் போரை வீரும்பவில்லை என்று உங்களுக்கும் கபிதானுக்கும் விளங்குகிறது. 🙂
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டாலும் இதனை எவ்வறு விளங்கிக் கொள்கிறீர்கள் ? Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison, 48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict. செய்தியில் இஸ்ரெயில் தனது கூட்டு நாடுகளை மீறி ஈரான் மீது தாக்குவதை 74 வீதமானோர் விரும்பவில்லை என்று உள்ளது. இதற்கு கபிதான் பொதுமக்கள் போரை விரும்பவில்லை என்று கொள்கை விளக்கம் தந்துள்ளார். இஸ்ரெய்லிய மக்களில் அரைவாசிப் பேர் கூட்டு நாடுகள் தடுக்காவிட்டால் போரையே விரும்புகிறார்கள் என்பதுதான் சாரம்.
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
மறுபடியுமா? ஈரான் மீதான பதில் தாக்குதலை விரும்பாதவர்கள் 52 வீதமானோர். செய்தியில் தெளிவாகக் குறிப்புடப்பட்டுள்ளது.
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
அரைகுறையாகச் செய்தியை விளங்கிக் கொண்டு வந்து எழுதுகிறீர்கள். https://www.jpost.com/middle-east/iran-news/three-quarters-of-israeli-public-opposes-an-iran-attack-if-it-undermines-security-alliance-survey-797523
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இதுவரை வந்தவற்றில் பெரும்பாலும் 3 முதல் 7 ற்குள் உள்ளது.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தமிழ்நாடு பற்றி இவ்வளவு தெரிந்துவைத்திருக்கும் நீங்கள், தேர்தல் ஆணைய குளறுபடி, வாக்கு இயந்திர மோசடி, கைப்பொம்மைகள், கையூட்டுகள் எல்லாற்றையும் கணக்கில் எடுத்து நாத கட்சி எத்தனை வீதம் வாக்குகள் பெறும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
கருத்துக் கணிப்பின்படி ஒருசில இடங்களைத் தவிர அதிமுக பிஜேபி யைவிட முன்னணியில் உள்ளது. நாம் தமிழர் கட்சியால் பிஜேபி யின் வாக்குகளைக் கூடக் கவர முடியவில்லை. மொத்தமாக நாதக 4 முதல் 5 வீதமான வாக்குகளையே பெறும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் வாக்கு இயந்திரத்தைக் குறை கூறுவதிலேயே நிற்கிறீர்கள்.
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
ஆம். உக்ரெய்னில் இதனைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காக வழங்கப்படும் என இரண்டு வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.