Everything posted by ரஞ்சித்
-
வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குச் செல்லத் தடை
தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன? ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? - பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும் மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார். இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட். அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன், தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன் ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார். யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால் கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும் பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார். தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார். மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும் வழங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார். ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார். ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார். பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழக்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா. இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில் முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித். அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
முதலாம் கட்டத் திம்புப் பேச்சுக்கள் தோல்வியில் முடிவடையவில்லை என்பதை நிரூபிக்க பகீரதப் பிரயத்தனத்தில் இறங்கிய இந்தியா முதலாம் கட்டத் திம்புப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்த ஆடி 13, 1985 ஆம் திகதிக்கு மறுநாள், கொழும்பு கோட்டை பகுதியில் அன்று அமைந்திருந்த இந்திய உயர்ஸ்த்தானிகராலயத்தில் பத்திரிகை மாநாடொன்று நடைபெற்றது. டெயிலிநியூஸ் பத்திரிக்கை சார்பாக நானும் அங்கு சென்றிருந்தேன். அவ்வருடம் வைகாசி 26 ஆம் திகதி இந்தியாவின் தூதராக ஜே.என்.டிக் ஷிட் பதவியேற்றதன் பின்னர் அவர் நடத்தும் முதலாவது பத்திரிக்கையாளர் சந்திப்பு இது. சில நாட்களாக அவருடன் உரையாடுவதற்கான சந்தர்ப்பங்கள் எனக்குக் கிடைத்தமையினால், அவர் என்னுடன் சகஜமாகவே பேசிவந்தார். பிரபாகரன், ஜே.என். டிக் ஷிட் மற்றும் அமைதிப்படைத் தளபதி ஹர்க்கிரட் சிங் அன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு முன்னர் டிக் ஷிட்டை நான் சந்தித்துப் பேசினேன். இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளிடமிருந்து தனக்கு வந்த அறிவுருத்தலின்படியே தான் பத்திரிக்கையாளர் மாநாட்டினை நடத்துவதாகவும், திம்புப் பேச்சுக்கள் முறிவடையவில்லை, மாறாக தற்போதே ஆரம்பித்திருக்கின்றன என்கிற செய்தியை இலங்கை மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் தெரிவிக்கும்படி தன்னை அமைச்சு கேட்டிருப்பதாகவும் அவர் என்னிடம் கூறினார். "மிகக் கடிணமான பணியைச் செய்யவிருக்கிறேன், உங்களைத்தான் நம்பியிருக்கிறேன்" என்று அவர் என்னிடம் கூறினார். ஊடகங்களைக் கையாளவ்தில் திறமையான இராஜதந்திரி என்று அறியப்பட்டபோதிலும், அன்றைய பத்திரிக்கையாளர் மாநாடு டிக் ஷிட்டைப் பொறுத்தவரை கடிணமானதாகவே காணப்பட்டது. இப்பதவிக்கு வருமுதல் அவர் இந்திய வெளியுறவுத்துறையின் உத்தியோகபூர்வப் பேச்சாளராகக் கடைமையாற்றியவர். திம்பு விலிருந்து வரும் சில செய்திகளில் குறிப்பிடப்படுவது போலல்லாமல், திம்புப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாகவே அமைந்திருந்தன என்று அவர் தனது பேச்சினை ஆரம்பித்தார். சில வருடங்களாகவே இராணுவ மோதல்களில் ஈடுபட்டு வந்த இலங்கை அரசாங்கத்தையும், தமிழ்ப் போராளிகளையும் சமரசப் பேச்சுவார்த்தைகளுக்காக பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவந்தமையே ஒரு வெற்றிதான் என்று அவர் கூறினார். மேலும், தமிழரின் பிரச்சினைகளுக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் சில ஆலோசனைகளை முன்வைத்திருப்பதும், அதனை தமது அடிப்படை நான்கம்சக் கோரிக்கைக்கு ஏற்றவாறு மேம்படுத்தி வருமாறு தமிழர் தரப்புக் கோரிக்கை வைத்திருப்பதும் கூட ஒரு வெற்றிதான் என்றும் அவர் கூறினார். ஆக, இருதரப்பினரும் தமது நிலைப்பாட்டினைத் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதுடன், தொடர்ச்சியான பேரம்பேசலினூடாக இருதரப்பிற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தீர்வொன்றினைக் கண்டடைவதே இனிமேல்ச் செய்யவேண்டியது என்றும் அவர் கூறினார். மேலும், ஆவணி 12 ஆம் திகதி இரு தரப்பினரும் மீண்டும் கூடி பேச இணங்கியிருப்பதானது, பேச்சுக்களில் அவர்கள் கொண்டிருக்கும் அக்கறையினையே காட்டுகிறது என்றும் அவர் கூறினார். இரு தரப்பினரும் இணங்கிக்கொள்ளும் தீர்வொன்று நோக்கிச் செல்வதற்கு இந்தியா தொடர்ந்தும் உதவும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஆனால், அன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பெரும்பாலான சிங்கள ஊடகவியலாளர்கள் முன்வைத்த கேள்விகள், தமிழர்களுடன் இலங்கையரசை நிர்ப்பந்தித்துப் பேச வைத்தமைக்காக இந்தியாவை விமர்சிப்பதாக அமைந்திருந்தனவே அன்றி திம்புப் பேச்சுக்களில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்ததாக அவை அமைந்திருக்கவில்லை. தமிழ்ப் பயங்கரவாதிகளைப் பயிற்றுவித்து, ஆயுதங்களைக் கொடுத்துவருவதாக அவர்கள் இந்தியாவைக் குற்றஞ்சுமத்தினர். அவர்களில் ஒருவர் டிக் ஷிட்டைப் பார்த்து "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு ஆயுதமும், பயிற்சியும் வழங்கியிருக்காவிட்டால் இன்று பேச்சுவார்த்தைகள் நடக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?" என்று கேட்டார். ஆனால், டிக் ஷிட்டோ அக்கேள்விக்குப் பதிலளிப்பதை நாசுக்காகத் தவிர்த்துக்கொண்டார். தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கு இந்தியா ஆயுதங்கள் கொடுப்பதையோ அல்லது பயிற்றுவிப்பதையோ அவர் ஏற்றுக்கொள்ளவுமில்லை, நிராகரிக்கவுமில்லை. கடந்தகாலத்தில் நடந்தவை பற்றி விமர்சித்துக் கொண்டிருக்காது, எதிர்காலம் குறித்தே அனைவரும் சிந்திக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். "பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன, அவை தொடர்ந்து நடைபெறவேண்டும்" என்பதே அவரது நிலைப்பாடாக இருந்தது. தமிழ்ப் பத்திரிக்கையாளர்கள் டிக் ஷிட்டிடம் யுத்த நிறுத்தம் நீடிக்கப்படுவது குறித்து வினவினர். இராணுவத்தினர் தமது தேடியழிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதனால், யுத்தநிறுத்தம் முறிவடையப்போகிறது எனும் தமிழர்களின் கவலை குறித்தே அவர்களின் கேள்விகள் அமைந்திருந்தன. தமிழ் மக்கள் மீது இராணுவத்தினர் கட்டவிழ்த்துவிட்டிருந்த தாக்குதல்கள் குறித்து அங்கே தமிழ்ப் பத்த்ரிக்கையாளர்களால் பிரஸ்த்தாபிக்கப்பட்டது. ஆகவே, யுத்தநிறுத்தம் முறிவடையாது என்கிற நம்பிக்கையினை முன்வைக்கவேண்டிய தேவை டிக்ஷிட்டிற்கு இருந்தது. "யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அது தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படும்" என்று அவர் கூறினார். ஆனால், அன்று மாலை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சென்னையில் கடுந்தொனியில் அமைந்த அறிக்கையொன்றினை வெளியிட்டனர். இராணுவத்தினர் தமிழ் மக்கள் மீதான தமது தாக்குதல்களைத் தொடர்ந்தால், தமது போராளிகளும் பதில்த் தாக்குதல்களில் ஈடுபட வேண்டி வரும் என்று அவர்கள் எச்சரித்தனர். ஆடி 20 ஆம் திகதி புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான துப்பாக்கிச் சமரில் இராணுவத்தினரில் ஒருவர் கொல்லப்பட்டார். ஆடி 25 ஆம் நாள், கறுப்பு ஜூலை இனக்கொலையின் இரண்டாவது நினைவேந்தலினை முன்னிட்டு வடக்குக் கிழக்கில் முற்றான கர்த்தாலைப் போராளிகள் கோரியிருந்தனர். போராளிகளின் வேண்டுகோள் மக்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. வீதிகளில் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டதுடன், வெலிக்கடைச் சிறைச்சாலையில் கொல்லப்பட்ட 52 தமிழ் அரசியல்க் கைதிகளுக்கான நினைவேந்தலும் அனுஸ்ட்டிக்கப்பட்டது. வெலிக்கடையில் கொல்லப்பட்ட தமிழ் அரசியல்த் தலைவர்களுக்கான அஞ்சலியாக யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே போராளிகளால் குண்டுகளும் வெடிக்கவைக்கப்பட்டன. சிறிமாவோ பண்டாரநாயக்க நாட்டில் நிலவும் சூழ்நிலை குறித்தும், மக்களின் மனோநிலை குறித்தும் அறிந்துகொள்ள சிங்கள மற்றும் தமிழ்த் தலைவர்களுடனான பேச்சுக்களை டிக் ஷிட் அந்நாட்களில் ஆரம்பித்திருந்தார். ஆடி 16 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவியான சிறிமாவை அவர் சந்தித்துப் பேசினார். டிக்ஷிட்டுடனான பேச்சுகளின்போது தமிழர்களுடன் இணக்காபாடான தீர்வொன்றிற்கு வருவதற்கு ஜெயார் விரும்பாமையினால் பேச்சுவார்த்தைகள் விரைவில் முறிவடைந்துவிடும் என்று தான் நம்புவதாக சிறிமா கூறினார். மேலும், பழிவாங்கும் உணர்வுகொண்டவரான ஜெயார் வன்முறையில் மிகுந்த நாட்டம் கொண்டவர் என்றும் டிக்ஷிட்டிடம் சிறிமா தெரிவித்தார். "இராணுவ ரீதியில் தமிழர்களுக்குத் தீர்வொன்றை வழங்க அவர் முடிவெடுத்துவிட்டார். எக்காரணத்தைக் கொண்டும் அவர் அதிலிருந்து விலகப் போவதில்லை" என்றும் சிறிமா கூறினார். ஆடி 23 ஆம் திகதி அரசுதரப்புப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவைச் சந்தித்த டிக் ஷிட், அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை மேம்படுத்தும் சாத்தியப்பாடுகள் குறித்து வினவினார். அதற்குப் பதிலளித்த ஹெக்டர், நடப்பிலிருக்கும் அரசியலமைப்பின் வரம்புகளுக்கு உட்பட்டே தன்னால் பேரம்பேசலில் ஈடுபட முடியும் என்று கூறிவிட்டார். மேலும், அரசியலமைப்பிற்கு உட்பட்ட வகையில் சில திருத்தங்களைச் செய்ய தான் எத்தனிப்பதாக ஹெக்டர் டிக் ஷிட்டிடம் உறுதியளித்தார். ஹெக்டரின் பதிலையடுத்து ஆத்திரமடைந்த டிக் ஷிட், தமிழர்களின் போராட்டம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு எதிரானது என்றே பார்க்கப்படுவதாகக் கூறினார். ஒற்றையாட்சி முறையிலிருந்து சமஷ்ட்டி முறைக்கு மாற்றுவதற்காக அரசியலமைப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்று தமிழர்கள் கோருகிறார்கள். ஆகவே, அது நடைபெறாதவிடத்து தனிநாட்டிற்கான தமது போராட்டத்தைத் தொடர்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியிருக்காது என்று ஹெக்டரிடம் அவர் தெரிவித்தார். "ஹெக்டர் ஜெயவர்த்தனவின் பதில் மரமாக இருந்தது. நாட்டின் அரசியலமைப்பிற்கு உட்பட்டே தன்னால் பேச்சுக்களில் பேரம்பேச முடியும் என்று அவர் கூறினார். "நீங்கள் இங்கு பேசுவது அரசியல் சார்ந்த விடயமாகும். இலங்கையரசாங்கமோ, பெளத்த பீடத்தினரோ, சிங்கள மக்களோ பங்குகொள்ளாத பேச்சுவார்த்தையொன்றில் தமிழர்களுடன் இதுகுறித்துப் பேச என்னால் பேசமுடியாது" என்று ஹெக்டர் என்னிடம் கூறினார்" என்று டிக் ஷிட் பின்னாட்களில் எழுதிய கொழும்பு அஸைன்மென்ட் எனும் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
-
இந்தியா வந்த பிரபாகரனிடம் ராஜீவ் காந்தி சொன்னது என்ன? மணி சங்கர் அய்யர் எழுதிய நூலில் புதிய தகவல்
தமிழர்களுக்குத் தனிநாடு உருவாவதை இந்தியா ஒருபோதும் ஆதரிக்கவில்லை. இன்னும் சொல்வதானால், சமஷ்ட்டி முறையிலான தீர்வையோ அல்லது இந்திய மாநிலங்களுக்கு இருக்கும் அதிகாரத்தினை ஒத்த தீர்வையோ ரஜீவ் காந்தி தமிழர்களுக்கு வழங்கத் தயாராக இருக்கவில்லை. இதனை நேரடியாகவே போராளிகள் தலைவர்களான பிரபாகரன், சிறீ, பத்மநாபா மற்றும் பாலக்குமார் ஆகியோரிடம் 1985 ஆம் ஆண்டு ரஜீவ் தெரிவித்திருந்தார். மேலும், ஜெயாரினால் 1984 ஆம் ஆண்டு மார்கழியில் நடத்தி முடிக்கப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்டிருந்த மாவட்ட அபிவிருத்திச் சபையினையே, சற்றுத் திருத்தங்களுடன் அதிகாரப் பரவலாக்க அலகாக ஏற்றுக்கொள்ள ரஜீவ் சம்மதித்தார். . தனது புகழ்ச்சிக்காகவும், இந்தியாவை பிராந்திய வல்லரசு எனும் தரத்திற்கு உயர்த்துவதற்காகவும் ரஜீவினால் நடத்தப்பட்ட திம்புப் பேச்சுவார்த்தைகளில் தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கின்றதோ இல்லையோ, ஆனால் இந்தியா தலைமையில் பேச்சுக்கள் நடந்தன என்று சரித்திரம் எழுதப்படுவது ரஜீவிற்கு முக்கியமானதாக இருந்தது. தமிழருக்கு ஏதாவது கிடைக்கவேண்டும் என்பதில் இந்தியாவிற்குக் கரிசணை இருந்தது உண்மை. ஆனால், அது தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யவேண்டுமா என்பதில் இந்தியாவிற்கு உறுதியான நிலைப்பாடு இருக்கவில்லை. 1987 இல் இந்திய அமைதிப்படை வந்ததே ஜெயாரின் வேண்டுகோளினால் எனும்போது, அது தமிழர்களுக்குச் சார்பாக இயங்கும் என்று எதிர்பார்த்தது எமது மடமை. 2015 அல்லது 2016 ஆக இருக்கலாம், அவுஸ்த்திரேலியாவின் பேர்த்த் நகரில் இந்தியாவின் முன்னாள் புலநாய்வுத்துறையின் இயக்குநரும் இன்னும் சில முக்கியஸ்த்தர்களும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள் சிலரைச் சந்தித்தார்கள். இறுதி யுத்தத்தில் புலிகளை இந்தியா அழிக்க முடிவெடுத்ததன் நோக்கம் அனைவரும் எண்ணியிருந்த ரஜீவின் கொலையினைக் காட்டிலும், 1987 இல் இந்தியப்படையினை புலிகள் எதிர்க்க எடுத்த முடிவுதான் என்று அவர்களிடம் சொல்லப்பட்டது. பிராந்திய வல்லரசும், உலகின் ஐந்தாவது பெரிய இராணுவத்தைக் கொண்டதுமான இந்தியாவை சிறிய ஆயுத அமைப்பான புலிகள் இயக்கம் எதிர்த்துப் போரிட முடிவெடுத்தமை இந்தியாவைப் பொறுத்தவரை பெருத்த அவமானமாகக் கருதப்பட்டது. 1991 இல் ரஜீவ் கொல்லப்பட்டாலென்ன, உயிர் தப்பியிருந்தாலென்ன, இந்தியா புலிகளைப் பழிவாங்க 1987 இலேயே முடிவெடுத்து விட்டது என்று நினைக்கிறேன். 2005 இல் இந்திய காங்கிரஸின் தலைவியாக சோனியா வந்தமையும், இலங்கையில் மகிந்த ஆட்சிக்கு வந்தமையும் இரு நாடுகளுக்கும் சாதகமான சூழ்நிலையினை உருவாக்கிக் கொடுக்க, இந்தியா தனது சபதத்தை நிறைவேற்றிக்கொண்டது.
-
அமெரிக்கா ரூ.5 லட்சம் கோடி ராணுவ உதவி: யுக்ரேன் எத்தகைய ஆயுதங்கள் பெறும்? போரின் போக்கு மாறுமா?
ரஸ்ஸியா அண்மையில் ஆரம்பித்திருக்கும் இராணுவ நடவடிக்கையில் குறைந்தது 60 உக்ரேனியக் கிராமங்களைக் கைப்பற்றியிருக்கிறது. மேற்குலக நாடுகளின் உதவியிருந்தாலும் கூட உக்ரேனினால் ஓரளவு காலத்திற்கு மேல் இந்த யுத்தத்தில் தாக்குப்பிடிக்க முடியாது. களத்தில் நேரடியாக தமது இராணுவத்தினரை இறக்கி ரஸ்ஸியாவுடன் நேரடி மோதல் ஒன்றிற்குச் செல்லும் நோக்கம் மேற்கிற்கு இல்லை. மறுபக்கம், ரஸ்ஸியா என்ன வில கொடுத்தாவது இந்த யுத்தத்தில் தான் தோற்பதைத் தடுத்தே தீரும். ரஸ்ஸிய இராணுவத்தில் இணைந்து போராட இந்தியா, நேபாளம், பெலரஸ், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து முன்னாள் , இந்நாள் இராணுவ வீரர்கள் வந்து குவிகிறார்கள். இவர்களுக்கு ரஸ்ஸிய இராணுவ வீரர் ஒருவருக்கு ஒப்பான மாதச் சம்பளமும் வழங்கப்பட்டு வருகிறது. உக்ரேன் இராணுவத்தில் சம்பளத்திற்குச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் இருப்பதாக நான் அறியவில்லை, சில இலங்கையர்களைத் தவிர. தேவையற்ற, அநியாய, அழிவு யுத்தம். இரு தரப்பும் சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்து முடிவிற்குக் கொண்டுவருவது அவசியம்.
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
President Ebrahim Raisi, Foreign Minister Hossein Amir-Abdollahian, Tabriz Friday Prayers imam Ayatollah Al-e Hashem, East Azarbaijan governor general Malek Rahmati, Raisi's bodyguard and the pilot have all been killed in the chopper crash in northwestern Iran, semi-official Mehr News reported.
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
பெல் - 212 ரக உலங்கு வானூர்தி ஒன்றில்த்தான் ஈரானிய ஜனாதிபதியும் ஏனையவர்களும் பயணித்திருக்கிறார்கள். இந்த உலங்கு வானூர்தி 1960 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. அமெரிக்க இராணுவத்தின் பாவனையில் சுமார் 15 வருடகால சேவைக்குப் பின்னர் 1976 ஆம் ஆண்டு ஈரானிய இஸ்லாமியப் புரட்சிக்குச் சற்று முன்னர் அப்போதைய ஈரானிய அரசாங்கத்தால் கொள்வனவு செய்யப்பட்டது. ஆனால், இஸ்லாமியப் புரட்சியின் பின்னர் அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையே ஏற்பட்ட முறுகலினால் ஈரானிற்கான ஆயுத தளபாட ஏற்றுமதியை அமெரிக்கா முற்றாக நிறுத்திவிட்டது. அந்த நிலையில் இந்த உலங்கு வானூர்திக்கான உதிரிப்பாகங்களை ஈரான் பெறமுடியாத நிலையிலேயே இவற்றினைப் பராமரித்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் பழமையான இந்த உலங்குவானூர்தியில் நாட்டின் மிகவும் முக்கியமான மனிதரை அழைத்துச் செல்லுமளவிற்கு ஈரானிய அரசு இருந்திருக்கிறது. ஈரானிற்குச் சார்பான ரஸ்ஸியா சீனா ஆகிய நாடுகள் மிகப்பலமான உலங்குவானூர்திகளை தற்போது தயாரித்து வருகின்றன. தனது அனைத்து ஆயுதத் தேவைகளுக்கும் ரஸ்ஸியாவிலும், சீனாவிலும் தங்கியிருக்கும் ஈரான், தனது ஜனாதிபதியின் பாதுகாப்பான பயணத்திற்கு இன்னமும் 60 வருடப் பழமையான அமெரிக்க உலங்குவானூர்தியைப் பாவித்தது ஏன்?
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
ஈரானிய ஜனாதிபதியும், அவரின் வெளிநாட்டமைச்சரும் பயணித்த உலங்குவானூர்தியின் சிதைந்த பகுதிகளை மீட்புப்பணியாளர்கள் அடைந்திருக்கின்றனர். முற்றாக எரிந்தநிலையில் உலங்குவானூர்தி காணப்படுகிறது. அவர்கள் உயிர்தப்பியிருப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைவானவையே என்று ஈரானிய மீட்புப்பணியாளரின் அமைப்பு கூறுகிறது. https://www.iranintl.com/en/liveblog/iran president chopper incident
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
இந்தக் கலந்துரையாடலினை முழுவதுமாகக் கேட்டு மொழிபெயர்க்கலாம் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால், நேற்று சிறு வேலை காரணமாக வெளியே செல்ல வேண்டியதாகிவிட்டது. அதனால் தொடரமுடியவில்லை. இவர்கள் பேசுவதுகுறித்து அறிய எவராவது விரும்பினால் மீதியையும் மொழிபெயர்க்கலாம், பார்க்கலாம்.
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
உங்களுக்குத் தெரிந்ததை இங்கே பகிருங்கள் என்றால் உனக்குத் தெரியாமலா கருத்துக் கூறுகிறாய் என்கிறீர்கள்? ஜின்னாவை விடுங்கள், தமிழ்த் தலைவர்கள் விட்ட தவறுகளைப் பட்டியலிடுங்களேன், படிக்கலாம்.
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
தெரியாதவர்களும் இருக்கிறோம், சொல்லுங்கள் அறிந்துகொள்ளலாம்.
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
1976 ஆம் ஆண்டு நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில்த்தான் தமிழர்கள் தனி ஈழமே தீர்வென்று முதன்முதலில் கூறினார்கள். அதனை படிக்கும் ஒருவருக்கு தனிநாட்டிற்கான நிலைப்பாட்டிற்கு தமிழர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான காரணங்களை அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். அவர்களின் பிரதேசத்தில் நடக்கும் அரச ஆதரவிலான நில ஆக்கிரமிப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மொழிப்பிரச்சினை போன்ற விடயங்கள் இன்றும் அவர்களுக்கு இருக்கிறது. இன்று அவர்களின் பிரச்சினைகளை தேசியப் பிரச்சினை என்று மறைத்துவிட்டு, தற்போது அந்தத் தேசியப் பிரச்சினை குறித்தும் நாம் பேசுவதில்லை.
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுகூர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில், சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள். வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முகங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும்.
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
பயங்கரவாதிகள் எனும் சொறப்தத்தை முதன்முதலாகப் பாவித்த அரசு சிறிமாவினது. 1971 ஆம் ஆண்டு தெற்கில் அரசுக்கெதிராகக் கிளர்ச்சிசெய்த சிங்களை இளைஞர்களை அன்று பயங்கரவாதிகள் என்று அரசு அழைத்தது. பின்னர் வடக்கில் அரசுக்கெதிராகப் போராடிய இளைஞர்களைப் பயங்கரவாதிகள் என்று அரசுகள் அழைத்தன. 2009 இற்குப் பின்னர் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கின்றனர். ஆரம்பத்தில் வர்க்கவேறுபாட்டினால் உருவாக்கப்பட்ட ஆளும் பிரபுக்களால் உருவாக்கப்பட்ட அரசிற்கும் மக்களுக்குமிடையிலான போராட்டத்தை இனவாதமாகவும், மதவாதமாகவும் திசைதிருப்ப அரசுகளால் முடிந்தது. தமிழ் மக்கள் தமது மரணித்த உறவுகளை காடுகளுக்குள்ச் சென்று, ஒளித்து மறைத்து நினைவுகூரவில்லை. மாறாக வெளிப்படையாகப் பொதுவெளியில், ஒரு சமூகமாக வந்து நினைவுகூர்கிறார்கள். இதனை நாம் மறுப்பது நியாயமில்லை.
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
புலிகளின் உருவாக்கத்திற்காக நாம் எவ்வளவு காலத்திற்குப் பிரபாகரனைக் குறை கூறிக்கொண்டு இருக்கப்போகிறோம்? ஏன், பிரபாகரனுக்கு நிகரான பொறுப்பினை அன்றிருந்த அரசாங்களும் கொண்டிருக்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்? 1983 இல் தமிழர்களுக்கு அடித்தது அரசாங்கம் மட்டுமில்லையே? சிங்கள மக்களுமாகத்தானே சேர்ந்து அடித்தோம்?
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
இன்று பலஸ்த்தீனத்தில் நடக்கும் அவலங்கள் குறித்தும், ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் குழந்தைகள் குறித்தும், வீடுகளுக்கு அடியில் உயிருடன் புதைக்கப்படும் பெண்கள் குறித்தும் கவலைப்படும் நாங்கள், ஆத்திரத்துடன் கேள்விகேட்கும் நாங்கள், இதையேதானே 15 வருடங்களுக்கு முன்னர் இதே நாட்டில் வடக்கில் செய்தோம்? அப்போது எமக்கு அது ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. இன்று ரஃபாவரை பலஸ்த்தீனர்களை தள்ளிச் சென்று ஒரு இடத்தில் குவித்து வைத்து படுகொலை செய்வதுபோல, நாமும் முள்ளிவாய்க்கால்வரை தமிழர்களைத் தள்ளிச் சென்று கொல்லவில்லையா? கொல்லப்பட்டவர்கள் எல்லாருமே புலிகள்தான் என்றும், அதனால் அதுகுறுத்து நாம் கவலைப்படத் தேவையில்லையென்றும், ஆகவே புலிகளின் மரணத்திற்கு நினைவுகூர்வதைத் தடுப்பது சரியே என்று கூறும் நாம், விமானத்திலிருந்து கொட்டப்பட்ட குண்டுகள் புலிகளை மட்டுமே இலக்குவைத்துத் தாக்கவில்லை, மாறாக அங்கிருந்த 3 மாதக் குழந்தையிலிருந்து அனைவரையுமே கொன்றது என்பதை ஏன் புரிந்துகொள்கிறோம் இல்லை? சரி, கொல்லப்பட்டது எல்லாருமே புலிகள் என்று வைத்துக்கொள்வோமே, ஏன், அவர்களின் உறவுகள் அவர்களை நினைவுகூர்வதில் என்ன தவறு இருக்க முடியும்? 1977 ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்கள் தனிநாடு கோருவது தவறில்லை என்று வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்ட அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி, பதவிக்கு வந்த வெறும் ஆறு மாதத்திலேயே பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் என்று கொண்டுவந்து ஒரு சில போராளிகளை மட்டுமே கொண்டிருந்த புலிகள் இயக்கத்தை பெருவிருட்சமாக வளர்த்துவிடவில்லையா? தமிழர்களுக்கு, ஒரு இனமாக அரசியல் ரீதியில், பொருளாதார ரீதியில், சமூக ரீதியில் இருந்த பிரச்சினைகளுக்கு சிங்கள் அரசுகள் தீர்வொன்றினை வழங்க மறுத்ததனாலேயே புலிகள் உருப்பெற்றார்கள் என்பதை ஏன் நாம் புரிந்துகொள்கிறோம் இல்லை? ஐக்கிய தேசியக் கட்சியின் இனவாதிகளான சிறில் போன்றவர்கள் பாராளுமன்றத்திற்குள்ளேயே அன்று கூறியவை முற்றான பொய்கள் என்று எமக்குத் தெரியும், ஆனாலும் இன்றுவரை நாம் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லையா? தெற்கின் "மக்கள் விடுதலை முன்னணியினர்" ஒரு காலத்தில் பயங்கரவாதிகள். ஆனால், இன்று அவர்கள் தமது உறுப்பினர்களின் மரணத்தை "மாவீரர்கள்" என்று நினைவுகூர்ந்து வருகிறார்கள். நாம் அதனை ஆதரிக்கிறோம், அனுமதிக்கிறோம். அப்படியானால், யுத்தத்தில் கொல்லப்பட்ட புலிகளை அவர்களின் உறவுகள் நினைவுகூர்வதில் என்ன தவறு இருக்கமுடியும்? மே 18 இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தனது மகனை, மகளை, தாயைத், தந்தையை அம்மக்கள் நினைவுகூரும் நாள். அதற்கும் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அம்மக்களை தமது உறவுகளுக்கான வணக்கத்தினைச் செய்வதிலிருந்து தடுப்பதன் மூலம் மேலும் மேலும் இவ்வாறான படுகொலைகளுக்கே நாம் வித்திடுகிறோம்.
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
அரகலய காலத்தில் ராஜபக்ஷேக்கள் சொல்லிவந்தவை எல்லாமே பொய்கள் தான் என்கிற தெளிவை சிங்கள மக்கள் உணர்ந்தபோதிலும், இறுதி யுத்தம் தொடர்பாகவும் ராஜபக்ஷேக்கள் பொய்களையே கூறினார்கள் என்பதையும், இறுதியுத்தம் அரசினால் உருவாக்கப்பட்ட பொய்க்கான களத்திலேயே நடத்தப்பட்டது என்பதையும் சிங்களச் சமூகம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறும் அவர், போர் குறித்து முற்றான பொய்களைப் பரப்பக்கூடிய சில ஊடகவியலாளர்களை முன்னேறிச் சென்ற இராணுவ அணிகளுடன் அரசு அனுப்பியதென்றும், நடுநிலையான செய்தியாளர்களை அரசு ஒருபோது இறுதி யுத்த களத்தில் அனுமதிக்கவில்லை என்றும் கூறுகிறார். நல்ல கலந்துரையாடல். தமிழில் வரவேண்டும். யுத்தத்தின் இறுதிநாட்களின்போது தனது இராணுவம் ஒரு கையில் ஐ நா மனிதவுரிமைகள் சாசனத்தையும், மறு கையில் துப்பாக்கியையும் ஏந்தியே போரிட்டதென்றும், உலகிலேயே மனிதவுரிமைகளை மதிக்கும் ஒரே ராணுவம் சிங்கள இராணுவம் என்றும், ஆகவே யுத்தத்தில் ஒரு தமிழ் மகனும் கொல்லப்படவில்லை என்று அரசு கூறியதை இன்றுவரை சிங்களச் சமூகம் நம்ப விரும்புவதாலேயே தமிழர்களுக்கு நடந்த அவலங்களை, அக்கிரமங்களை அச் சமூகம் ஏற்றுக்கொள்ள மறுத்துவருகிறது என்றும், இதனாலேயே தமிழர்களால் அக்காலத்தில் சேகரிக்கப்பட்ட போர்க்குற்ற சாட்சியங்களைப் பொய்கள் என்று சிங்களச் சமூகத்தால் இலகுவாகத் தட்டிக் கழித்துவிட முடிகிறதென்றும் அவர் கூறுகிறார்.
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
முதன் முதலாக சிங்களக் கல்விமான் ஒருவரால் புலிகள் உருவாக்கப்பட்டதற்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது. சிறப்பு !
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
உங்களுக்குப் புரிந்த இந்த காலம் காலமாக விட்ட தவறுகளை இங்கு பட்டியலிடலாமே? நாமும் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும். சசி, அருமையான காணொளி. இதனை இங்கு எத்தனை பேருக்குப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்குமோ தெரியவில்லை. ஆனால், கல்விகற்ற சிங்கள மக்களில் சிலரிடம் தெரியும் மாற்றம் இது. சிங்களம் தெரிந்தவர்கள் நிச்சயம் இதனைக் கேட்க வேண்டும். தமது இனத்தில் சமூகமாக தாம் செய்யும் விடயங்களைத் தமிழ் மக்கள் செய்யும்போது தடுக்கும் தமது அரசின் கொடூரத்தைக் கேள்விகேட்கும் பெண்மணி. முள்ளிவாய்க்கால் நோக்கிய இறுதி யாத்திரையில் தமிழ் மக்கள் சென்ற வழிகளில் தானும் சென்ற தெற்கின் சகோதரன். இன்னமும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நன்றி !
-
தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் பூர்த்தி
எமது தேசத்தின் விடுதலையினை நோக்கித் தொடர்ந்தும் பயணிப்போம் என்று இந்தநாளில் உறுதியெடுத்துக் கொள்வோம். தமிழினக்கொலையில் இலங்கை, இந்திய சர்வதேசப் பேய்களால் பலியிடப்பட்ட என் மக்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். உங்கள் தியாகங்கள் வீண்போவதில்லை!
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தோல்வியில் முடிவடைந்த முதலாம் கட்டத் திம்பு பேச்சுவார்த்தைகள் இணைந்த அறிக்கை வெளியிடப்படுமுன்னர் இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். தமிழர் தரப்பினர் முன்வைத்த வாதத்தில், தமது தொடர்ச்சியான ஆட்சேபணைகளுக்குப் பின்னர் அரசதரப்பு செய்வதாக உறுதிதந்த ஊரடங்கு உத்தரவை நீக்குதல், அரசியற் கைதிகளை விடுவித்தல் ஆகிய எந்தவிடயங்களையும் அரசு செய்யவில்லை என்று கூறினர். பதிலுக்கு தமிழர் தரப்பு மீது குற்றஞ்சுமத்திய அரசுதரப்பு, தமிழர் தரப்பால் இழைக்கப்பட்டதாகக் கூறி 73 யுத்தநிறுத்த மீறல்ச் சம்பவங்களைப் பட்டியலிட்டனர். அங்கு பேசிய இலங்கை அரச தரப்பின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் ஹெக்டர் ஜயவர்த்தன, தான் முன்வைத்த தீர்வு யோசனையினை தமிழர் தரப்பு படித்து, சாதகமான பதிலுடன் அடுத்த கட்டப் பேச்சுக்களுக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களை ஆவணி 12 ஆம் திகதி நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது. இந்தியாவும், இலங்கையரசும் முதலாம் கட்டப் பேச்சுக்கள் குறித்து மிகுந்த திருப்தி வெளியிட்டிருந்தன. ஆனால், தமிழ்ப் போராளி அமைப்புக்களைப் பொறுத்தவரை பேச்சுக்கள் கடுமையான அதிருப்தியைத் தோற்றுவித்திருந்தன. ஜெயவர்த்தன விரித்த வலையில் இந்தியா விழுந்துவிட்டது என்கிற பிரபாகரனின் நம்பிக்கை மென்மேலும் உறுதியடைந்தது. ஆகவே, ஆயுதப் போராட்டத்தினைத் தொடர்ந்து நடத்துவதென்று தீர்மானித்த அவர், தனது போராளிகளை அதற்கான தீவிர பயிற்சிகளில் ஈடுபடுத்தலானார். ஒரு பிராந்திய வல்லரசு எனும் நிலையிலிருந்து தமிழர்களின் பிரச்சினையில் மத்தியஸ்த்தம் வகிக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தினால் பேச்சுவார்த்தைகள் குறித்து இந்தியா பெருமகிழ்ச்சி அடைந்திருந்தது. தமிழ்ப் போராளி அமைப்புக்களை இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்துவந்ததே இந்தியாவைப் பொறுத்தவரை பெரு வெற்றியாகக் கருதப்பட்டது. சமாதானப் பேச்சுக்களின் தரகர் எனும் நிலையிலிருந்து, பேச்சுக்களில் தீவிரத்துடன் பங்குகொண்ட இன்னொரு தரப்பு என்கிற நிலைக்கு தன்னை உயர்த்தியது குறித்தும் இந்தியா மகிழ்வடைந்திருந்தது. இதனால் இந்தியா சர்வதேச மட்டத்தில் நற்பெயரைச் சம்பாதிக்கத் தொடங்கியது. குறிப்பாக இந்தியாவின் புதிய பிரதமர் ரஜீவ் காந்திக்குப் பாராட்டுதல்கள் வந்து குவியத் தொடங்கின. தென்னாசியாவின் அமைதிக்காக இந்தியா எடுத்துவரும் செயற்பாடுகளை அமெரிக்காவும், இங்கிலாந்தும் வெகுவாகப் புகழ்ந்திருந்தன. பேச்சுவார்த்தைகள் முறிவடையாது, யுத்தநிறுத்தம் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படுவது குறித்து இலங்கையரசாங்கம் மிகுந்த திருப்தியடைந்தது. தனது இராணுவத்தைக் கட்டியெழுப்பும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பது குறித்து திருப்தியடைந்த அரசாங்கம், மன்னாரிலிருந்து முல்லைத்தீவு வரையான பகுதிகளில் முன்னரங்க இடைப்பகுதியினை (Buffer Zone) உருவாக்கி போராளிகளை வடக்கிற்குள் மட்டுப்படுத்தும் காரியங்களில் முழுமூச்சுடன் ஈடுபடத் தொடங்கியது. நாடு திரும்பிய ஹெக்டர் ஜெயவர்த்தன, பேச்சுவார்த்தைகள் குறித்த விடயங்களை மந்திரிசபையில் பகிர்ந்துகொண்டார். அமைச்சர்கள் முன்னிலையில் பேசிய ஹெக்டர், போராளிகள் தொடர்ந்தும் பேச்சுக்களில் ஈடுபட இணங்கியிருப்பது சாதகமான நிலைமை என்று கூறினார். மேலும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் முன்வைக்கப்படும் தீர்வொன்றினைப் பரிசீலினைக்கு ஏற்றுக்கொள்ள போராளிகள் இணங்கியிருப்பதும் முக்கியமான திருப்பம் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், ஹெக்டர் பேச்சுவார்த்தைகள் குறித்துக் கொண்டிருந்த நம்பிக்கைகள் அவரது சகோதரரான ஜெயவர்த்தனவிற்கு உவப்பானதாக இருக்கவில்லை. ஏனென்றால், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை இராணுவப் பலத்தின் மூலம் நசுக்கிவிடுவதே அவரது ஒரே எண்ணமாக இருந்தது. ஆகவே, தனது அரசாங்கம் நேர்மையான, சமாதானத்தை நேசிக்கின்ற அரசு என்றும், ஆனால் தமிழர்களோ விட்டுக்கொடுப்பற்ற, பிடிவாதமான, உறுதியாக முடிவெடுக்கும் திராணியற்ற தரப்பு என்றும் அரச ஊடகங்களினூடாக கடுமையான பிரச்சாரத்தில் இறங்கினார். பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சாரப் பிரிவின் தலைவருடன் பேசிய ஜெயார், இந்தியா மீதும் பிரச்சாரத்தினை முன்னெடுக்க உத்தரவிட்டதுடன், பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின் பாத்திரத்தைக் கேள்விகேட்டதுடன், இந்தியாவை, போராளிகளைக் கட்டுப்படுத்தி, வழிக்குக் கொண்டுவரும் திராணியற்ற "பிராந்திய வல்லரசு" என்று எள்ளிநகையாடும் பிரச்சாரத்திலும் ஈடுபடலானார். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான ரொமேஷ் பண்டாரி இலங்கைத் தமிழரின் பிரச்சினை தொடர்பாக ஆளமான அறிவைக் கொண்டிருக்கவில்லை என்பதுடன் தமிழரின் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டும் என்கிற உண்மையான அக்கறையும் அவருக்கு இருக்கவில்லை. புதிய பிரதமரான ரஜீவ் காந்திக்கு சர்வதேசத்திலிருந்து வந்துகொண்டிருக்கும் மழையில் தனக்கும் சிறுதுளி கிடைக்கவேண்டும் என்பதும், ரஜீவ் காந்தியின் பார்வையில் தான் தொடர்ந்தும் இருக்கவேண்டும் என்பதையும் தவிர ரொமேஷ் பண்டாரிக்கு வேறு சிந்தனைகள் இருக்கவில்லை. ஆகவே, இதனை நன்கு தெரிந்துவைத்திருந்த ஜெயவர்த்தனவும் அவரது ஆலோசகர்களும், பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழர்களுக்கு மிகச் சொற்பமான சலுகைகளைத் தருவதன் மூலம் யுத்தநிறுத்தகாலத்தை நீட்டிக்கவும், தமது இராணுவத்தைக் கட்டியெழுப்பவும் திடசங்கற்பம் பூண்டிருந்தனர். ஆனால், அவர்கள் தமது திட்டத்தில் ஒரு மனிதர் குறித்து கவனமெடுக்க முற்றாகத் தவறியிருந்தனர். அந்த மனிதர்தான் பிரபாகரன். ஆனால், ஜெயவர்த்தனவின் இராணுவ பலத்தினைக் கொண்டு தமிழரின் விடுதலை யாகத்தை முற்றாக அணைத்துவிடலாம் எனும் திட்டத்திற்குச் சவாலாக இருக்கப்போகும் ஒரே மனிதர் பிரபாகரன் தான் என்பதை லலித் அதுலத் முதலி நன்றாக அடையாளம் கண்டிருந்தார். 1984 ஆம் ஆண்டு கார்த்திகை 24 அம் திகதி அவரது பிறந்தநாளுக்கு கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த அவரது வீட்டிற்குச் சென்றிருந்தவேளை அவர் என்னிடம் ஒரு விடயத்தைக் கூறினார். "சபா, உங்களுக்குத் தெரியுமா? பிரபாகரனுக்கும் இன்றைக்குத்தான் பிறந்தநாள். நாம் ஒருவரருக்கொருவர் எதிராகப் போர் புரிகிறோம், ஆனால் எம்மில் எவர் வெல்லப்போகிறோம் என்று எமக்குத் தெரியாது" என்று கூறியிருந்தார். லலித் அதுலத் முதலி குறித்த இன்னும் இரு விடயங்களை நான் பகிர்ந்துகொள்கிறேன். 1984 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் யாழ்ப்பாணத்து மக்களை பிரபாகரனிடத்திலிருந்து அந்நியப்படுத்தும் உளவியற்போரினை லலித் அதுலத் முதலி ஆரம்பித்தார். அதன்படி, யாழ்ப்பாணத்தில் பதுங்கியிருந்து செயற்பட்டு வரும் பயங்கரவாதிகளை இராணுவத்தினர் தேடியழிப்பதை ஏதுவாக்குவதற்காக , அப்பகுதிகளிலிருந்து தமிழர்கள் அனைவரும் சிறிதுகாலத்திற்கு வெளியேறவேண்டும் என்று அறிவித்திருந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறி, ஏனைய இடங்களில் தமது நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ தங்குவதன் மூலம் யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் அரசுடன் நிற்பதாகவும், பயங்கரவதிகளிடமிருந்து தம்மை அந்நியப்படுத்தியிருப்பதாகவும் காட்டமுடியும் என்றும் அவர் கூறியிருந்தார். இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஏனென்றால், எனது தந்தையார் யாழ்ப்பாணத்திலிருந்த எமது பூர்வீக வீட்டில் வாழ்ந்துவந்தார். எனது சகோதரியும் அவரது நான்கு குழந்தைகளும் அவ்வீட்டிலேயே வசித்து வந்தனர். எனது மாமியார், மைத்துனி உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் அவ்வீட்டிலேயே வாழ்ந்துவந்தனர். லலித் அதுலத் முதலியை நான் பின்னாட்களில் சந்தித்தபோது, அவரது அறிவித்தலினால் எனது தந்தையார்ர், மாமியார் போன்ற முதியவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துப் பேசினேன். எனக்குப் பதிலளித்த லலித், "பிரபாகரனை சாதாரண தமிழ்ப்பொதுமக்கள் வெறுக்க வேண்டும் என்பதற்காகவே இதனைச் செய்கிறேன்" என்று அவர் கூறினார். நான் எனது தந்தையாருடன் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டபோது, "நடக்கிறது நடக்கட்டும், நாங்கள் இங்கேயே பொடியங்களுடன் இருக்கப்போகிறோம்" என்று கூறினார். எந்தத் தமிழ் மக்களைப் பிரபாகரனிடமிருந்து அந்நியப்படுத்திவிடலாம் என்கிற எதிர்பார்ப்புடன் லலித் அதுலத் முதலி தனது அறிவித்தலினை மேற்கொண்டாரோ, அந்த அறிவிப்பு அதற்கு நேர்மறையான விளைவினை ஏற்படுத்தியிருந்தது. பிரபாகரனை மக்கள் இன்னும் அதிகமாக நேசிக்கும் நிலையினை அது உருவாக்கியிருந்தது. "அவங்கள் ஆருக்காகப் போராடுறாங்கள்? எங்கட உரிமைகளுக்காகத்தானே போராடுறாங்கள்? அவங்களை விட்டுட்டு எங்களால போக ஏலாது" என்று எனது தந்தை தீர்க்கமாகக் கூறினார். பின்னர் 1985 ஆம் ஆண்டு தை முதலாம் திகதி, ஆயிரம் மீட்டர்கள் கொண்ட, மக்கள் செல்லமுடியாத பாதுகாப்பு வலயங்களை லலித் அறிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கும் இராணுவ முகாம்களில் இருந்து ஆயிரம் மீட்டர்கள் வட்டத்திற்குள் இருக்கும் மக்கள் உடனடியாக வெளியேறிவிட வேண்டும். அப்படி வெளியேறாத பட்சத்தில் உங்களுக்கு நடக்கவிருக்கும் அழிவுகளுக்கு நீங்களே பொறுப்பு என்று வானொலியூடாக அறிவித்தார். ஆனால், மக்கள் அவரது அறிவித்தலை கண்டுகொள்ளவில்லை. ஆகவே, தனது விமானப்படையூடாக தமிழில் அச்சிடப்பட்ட அறிவித்தல்களை பொதுமக்கள் வாழிடங்கள் மீது அவர் கொட்டினார். அதனையும் மக்கள் உதாசீனம் செய்தனர்.ஒருவாரத்தின் பின்னர் மீண்டும் தமிழில் அச்சிடப்பட்ட எச்சரிக்கைகள் வானிலிருந்து அவரது விமானப்படையினரால் கொட்டப்பட்டன. அவ்வாறு அச்சிடப்பட்ட எச்சரிக்கை ஒன்றினை பிரச்சாரப்படுத்துவதற்காக டெயிலி நியூஸ் காரியாலயத்தின் ஆசிரியரான மணிக் டி சில்வாவுக்கும் லலித் அனுப்பி வைத்தார். அது தமிழில் அச்சிடப்பட்டிருந்தமையினால், என்னிடம் தந்து, "லலித் அனுப்பியிருக்கிறார், அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது?" என்று என்னைப்பார்த்துக் கேட்டார் மணிக். அதனைப் படித்துவிட்டு நான் சிரித்துக்கொண்டேன். "ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று என்னிடம் வினவினால் மணிக். "அதில் ஒரு பிழை இருக்கிறது" என்று நான் பதிலளித்தேன். "என்ன பிழை?" என்று மீண்டும் அவர் கேட்டார். "இந்தத் துண்டுப்பிரசுரத்தின் அடியில் பிரபாகரன் ஒப்பமிட்டிருக்கிறார். ஆனால் தனது பெயரை பிரபாகரம் என்று தவறுதலாக எழுதியிருக்கிறார் என்பதனால்ச் சிரித்தேன்" என்று பதிலளித்தேன். "சிங்களவர்கள் மட்டுமே இவ்வாறான தவறுகளை புரியமுடியும். ஒரு தமிழரோ, முஸ்லீமோ "ன்" என்கிற எழுத்திற்குப் பதிலாக "ம்" என்கிற எழுத்தினைப் பாவிக்கும் தவற்றினை ஒருபோதும் செய்யப்போவதில்லை" என்று அவருக்கு விளங்கப்படுத்தினேன். உணர்ந்துகொண்ட சில்வாவும், அத்துண்டுப்பிரசுரத்தில் இருந்த தவற்றினை வெளியே கூற விரும்பவில்லை. தமிழில் எழுதப்பட்டிருந்த துண்டுப்பிரசுரத்தின் செய்தி இதுதான், அரசாங்கம் தனது இராணுவ முகாம்களைச் சுற்றி ஆயிரம் மீட்டர்கள் சூனியப் பகுதியை உருவாக்குவதாக அறிவித்திருப்பதுடன், இப்பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்லுமாறும் அறிவித்திருக்கிறது. ஆனால், அப்படி எவரும் வெளியேறக்கூடாது என்று உங்கள் அனைவரையும் நான் எச்சரிக்கிறேன். அப்படி யாராவது வெளியேறுவார்களாயின், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இப்படிக்குப் "பிரபாகரம்" 1984 ஆம் ஆண்டு பங்குனியில் தேசிய பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்ற காலத்திலிருந்து லலித் அதுலத் முதலி பிரபகாரனை தனது முதலாவது எதிரியாகவே கருதிச் செயற்பட்டுவந்தார் என்பதைக் காட்டவும், பிரபாகரன் குறித்த அவரது கணிப்புச் சரியானது என்பதைக் காட்டவுமே இச்சம்பவங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். பிரபாகரனுடன் அன்டன் பாலசிங்கம் - 80 களின் நடுப்பகுயில் தனது நோக்கமான இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்குதல், வடக்குக் கிழக்கில் அரச கட்டுப்பாட்டிலிருந்து தமிழர் பிரதேசங்களை விடுவித்தல் ஆகியவற்றுக்கு யுத்தநிறுத்தமும், பேச்சுக்களும் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதனால் அவைகுறித்து பிரபாகரன் அதிகம் மகிழ்வடையவில்லை. ஜெயவர்த்தன தமிழர்களுக்கான தீர்வினை இராணுவத்தைக் கொண்டே வழங்குவார் என்பதனைச் சரியாகக் கணித்திருந்த பிரபாகரன், இராணுவத்தை எதிர்கொள்ள தனது போராளிகளை ஆயத்தப்படுத்திவந்தார். ஜெயவர்த்தனவின் உண்மையான நோக்கத்தினை நேர்த்தியாகக் கணித்திருந்தார் பிரபாகரன். பின்னாட்களில் அதுகுறித்து இந்தியாவிலிருந்து வெளிவரும் சில பத்திரிக்கைகளுக்கும் அவர் பேட்டியளித்திருந்தார். கல்கத்தாவிலிருந்து வெளிவரும் "சண்டே" எனும் இதழுக்கு புரட்டாதி 5 ஆம் திகதி வழங்கிய நேர்காணலில் பிரபாகரன் இவ்வாறு கூறியிருந்தார். "பேச்சுவார்த்தை ஒரு நாடகம். இந்தப் போர்வையினைப் பயன்படுத்தி எமது மக்கள் மீது இலங்கை இராணுவம் இன்றுவரை அட்டூழியங்களை நடத்தி வருகிறது. எமது மக்கள் மீதான படுகொலைகள் தற்போதும் அரங்கேற்றப்பட்டு வருவதுடன், தமது வாழ்விடங்களில் இருந்தும் அவர்கள் துரத்தப்பட்டு வருகிறார்கள். இது உண்மையான யுத்தநிறுத்தமாக இருந்தால் எனது தளபதிகள் இதுகுறித்து மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளுக்கு அமைவாக நாம் எமது நடவடிக்கைகளை முற்றாக நிறுத்தி வைத்திருக்கிறோம். ஆனால், எமது மக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை இலங்கை இராணுவம் நடத்திவருவதால், பதில் நடவடிக்கைகளில் நாம் இறங்கவேண்டியதாகியிருக்கிறது. ஆனால், இந்தச் சூழ்நிலையினைக் கவனமாகக் கையாளவேண்டிய தேவையினை நான் அறிவேன். இந்த யுத்தநிறுத்தம் கூட ஒரு சூழ்ச்சிதான் என்பதை எனது தளபதிகள் நன்கு அறிந்தே உள்ளனர். அவர்களை நான் கவனமாக வழிநடத்தவேண்டும். யுத்த நிறுத்தத்தினைப் போர்வையாகப் பாவித்து அரசாங்கம் தமிழின அழிப்பினை கச்சிதமாக அரங்கேற்றி வருகிறது". வீக் எனும் பத்திரிகைக்கு 1986 ஆம் ஆண்டு பங்குனியில் வழங்கிய செவ்வியில் பிரபாகரன் இவ்வாறு தெரிவித்திருந்தார், "யுத்த நிறுத்தம் என்கிற போர்வையில் ஜெயவர்த்தன பாரிய இராணுவமயமாக்கல்த் திட்டத்தினை முடுக்கிவிட்டிருக்கிறார். இராணுவ இயந்திரத்தைக் கட்டியெழுப்ப தனது வரவுசெலவுத் திட்டத்தில் பாரிய தொகையினை அரசு ஒதுக்கியிருக்கிறது. கடுமையான அழிவுகளை ஏற்படுத்தும் பல கனரக ஆயுதங்களைத் தொடர்ச்சியாக அரசு தருவித்து வருகிறது. தனது இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பினை அரசு சட்டமாக்கியிருக்கிறது. மொத்தச் சிங்களத் தேசமும் போரிற்கான தயார்ப்படுத்தல்களில் இறங்கியிருக்கிறது. தமிழர் பகுதிகளில் புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தீவிரவாதத்திற்கெதிரான பயிற்சிகளுக்காக வெளிநாட்டுக் கூலிப்படையினர் வரவழைக்கப்பட்டிருப்பதோடு, பாக்கிஸ்த்தான் அரசும் நேரடியாகவே இலங்கை இராணுவத்திற்கு உதவி வருகிறது. இவ்வாறான இராணுவமயமாக்கலில் ஜெயவர்த்தன இறங்கியிருப்பதானது, அவர் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்குப் பதிலாக, தனது இராணுவத்தின் மூலம் அவர்களை அழிக்கவே கங்கணம் கட்டியிருக்கிறார் என்பதையே காட்டுகிறது". யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுக்கள் குறித்து பிரபாகரன் அதிருப்தி கொண்டிருந்தபோதும், திம்புப் பேச்சுவார்த்தையினூடாக அவருக்கு சில அனுகூலங்களும் கிடைத்திருந்தன. தமிழர் தரப்பில் மிகப்பெரும் சக்தியாக அவர் உருவெடுத்திருந்ததுடன், அவருக்கான அந்த ஸ்த்தானத்தினை வழங்குவதற்கு இந்தியாவும் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது. திம்புப் பேச்சுவார்த்தைகளின் முதலாம் கட்டம் தோல்வியில் முடிவடைந்த 1985 ஆம் ஆண்டு ஆடி 13 ஆம் நாள் நான் எனது வீட்டில் இருந்தேன். செய்தி ஆசிரியர் ஆரன் என்னைத் தொலைபேசியூடாக தொடர்புகொண்டு மறுநாள் கொழும்பு கோட்டைப் பகுதியில் அமைந்திருந்த இந்திய உயர்ஸ்த்தானிகராலயத்தில் நடக்கவிருக்கும் பத்திரிக்கையாளர் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
-
முள்ளிவாய்க்கால் கஞ்சி : திருகோணமலையில் நால்வர் கைது
தமிழ் மக்கள் சிங்களவர்களோடு இணங்கி, அனுசரித்துப் போய், பொருளாதாரத்தையும், வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்த ரணிலுடன் சமரசம் பேச எத்தனிக்கும்போது இப்படி முள்ளிவாய்க்கால்க் கஞ்சி என்று காய்ச்சி எங்களின் எண்ணத்தில் நெருப்பை அள்ளிக் கொட்டுவது தகுமா? இந்த நவடிக்கைகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது எனது இணக்க அரசியலுக்குக் கடுமையான சேததைத்தை விளைவிக்கிறது. ரணில் மாத்தையாட்ட ஜயவேவா !!! ஒஹொம யங், ஒஹொம யங் !!!
-
குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நெடுந்தீவில் அனுஷ்டிப்பு
படகின் இயந்திர அறைக்குள் ஒவ்வொருவராக அழைத்து கோடரிகளாலும், வாட்களாலும் வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். கொல்லப்படுபவர்களின் ஓலம் வெளியே கேட்காதிருக்க, உயிருடன் இயந்திர அறைக்கு வெளியே இருந்தவர்களைத் தமது பெயர்களை உரக்கக் கத்திச் சொல்லுமாறு பணிக்கப்பட்டிருக்கிறார்கள். வெட்டிச் சாய்க்கப்பட்டவர்களிடையே உயிருடன் இருந்த இருவரை 2000 ஆண்டுகளின் ஆரம்பத்தில் தினக்குரல் பேட்டி கண்டிருந்தது. ஆழ்ந்த இரங்கல்கள்! செய்தது ஜெயார் அண்ணை, நவாலி சென்பீட்டர்ஸ் படுகொலை, புதுக்குடியிருப்புப் பாடசாலைப் படுகொலை நினைவுகளை அனுஷ்ட்டிக்கேக்கை அவாவையும் கூப்பிடலாம்.
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
மறு பக்கம், எந்த சிங்கள வேட்பாளரின் வாக்குகளை தமிழ் வேட்பாளர் கவர்வார் என்பதைப் பொறுத்து முழு இலங்கையின் மீதான விளைவு இருக்கலாம். ரணிலின் வாக்குகள் கொஞ்சம் குறைய, சஜித் வென்றால் - நிலைமை தற்போது இருப்பது போலவே தொடரலாம். இவர்கள் இருவரும் வாக்குகளில் நலிந்து அனுர வென்றால், "முதற்பலியாக" சர்வதேச நாணய நிதியம் இருக்கும்😂. "பொருளாதாரத்தை சீர் செய்கிறோம்" என்று மீண்டும் சீனாவின் பக்கம் நாடு சாயும். வேற பெயரில் ராஜபக்சர்கள் கொள்கைகள் ஆட்சியாகும்.