-
Posts
8743 -
Joined
-
Last visited
-
Days Won
103
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by ரஞ்சித்
-
பஸ்வண்டிப் படுகொலைகள் கடந்த அத்தியாயங்களில் தாக்கிவிட்டு மறையும் தந்திரத்திலிருந்து விடுபட்டு, நின்று சண்டையிடும் கெரில்லாக்கள் எனும் நிலைமைக்கு புலிகள் இயக்கத்தை பிரபாகரன் மாற்றிய சந்தர்ப்பங்கள் குறித்தும் அது எவ்வாறு முதலாவது ஈழப்போராக பரிணமித்தது என்பது குறித்தும் எழுதியிருந்தேன். இந்த மாற்றம் 1984 ஆம் ஆவணி மாதம் 4 ஆம் திகதில் கடலில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பிரபாகரனின் ஊரான வல்வெட்டித்துறை மீது இராணுவமும், கடற்படையும் சேர்ந்து நடத்திய கொடூரமான பழிவாங்கல்த் தாக்குதல்களுடனும் ஏக காலத்தில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களுடனும் ஆரம்பமானது. இராணுவத்தினரின் பழிவாங்கல்த் தாக்குதல்களுக்கான பதிலை ஆவணி 5 ஆம் திகதி நெடியகாடு பகுதியில் பொலீஸ் கொமாண்டோக்கள் மீது தாக்குதல் நடத்தி பொலீஸ் அத்தியட்சகர் ஜயசுந்தர உட்பட 8 பொலீஸாரைக் கொன்றதன் மூலமும், ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலையத்தைத் தாக்கி பொலீஸ் பரிசோதகர் கணேமுல்லை உட்பட இன்னும் ஏழு பொலீஸரைக் கொன்றதன் மூலமும் புலிகள் கொடுத்தார்கள். தமது சகாக்களின் இழப்புகளுக்கான பழிவாங்கல்த் தாக்குதல்களில் இராணுவத்தினர் ஈடுபடத் தொடங்கினர். யாழ்ப்பாணத்தில் பொதுமக்களைக் கண்மூடித்தனமாகச் சுடத் தொடங்கிய இராணுவத்தினர், தனியார் கட்டடங்களுக்கும் தீவைத்தனர். யாழ்ப்பாணத்தில் ரோந்துவந்த இராணுவக் கவச வாகனம் மீது புலிகள் கிர்னேட் தாக்குதலை நடத்தி பெற்றொல்க் குண்டுகளை அதன் மீது வீசியபோது அது சேதமடைந்தது. புலிகளுடன் இணைந்துகொண்ட பொதுமக்கள் வீதிகளை அடைத்து மூடியதன் மூலம் இராணுவத்தினரின் போக்குவரத்தினைத் தடுத்தனர். அதிலிருந்து நிலைமை மோசமாகத் தொடங்கியது. வவுனியாவின் பொலீஸ் அத்தியட்சகர் ஆதர் ஹேரத் புலிகளால் கொல்லப்பட்டபோது பொலீஸார் பல பொதுமக்களை சுட்டுக் கொன்றனர். சுண்ணாகப் பொலீஸ் நிலையப் படுகொலையும், நாவற்குழியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் இராணுவத்தால் இழுத்துச் சென்று சுட்டுக்கொல்லப்பட்டமையும் தமிழ் மக்களைப் பெரிதும் ஆத்திரம் கொள்ள வைத்தது. மேலும் மன்னாரில் இராணுவத்தினரின் ரோந்து அணிமீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலுக்கு பழிவாங்கும் தாக்குதல்களை இராணுவத்தினர் மேற்கொண்டபோது மக்கள் புரட்சியின் பிரதேசம் விரிவடையத் தொடங்கியது. வல்வெட்டித்துறை மற்றும் ஊர்காவற்றுரை பொலீஸ் நிலையங்கள் மீதான புலிகளின் தாக்குதல்கள், கரவெட்டி, நீர்வேலி, பருத்தித்துறை, கொக்கிளாய் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதல்களுக்கு இராணுவத்தினர் மிகவும் மூர்க்கத்தனமான பழிவாங்கல்த் தாக்குதல்களை பொதுமக்கள் மேல் கட்டவிழ்த்து விட்டனர். ஹாட்லீக் கல்லூரி 2008 பருத்தித்துறை நகருக்கு அண்மையாக அமைந்திருக்கும் திக்கம் பகுதியில் பொலீஸார் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 5 பொலீஸார் கொல்லப்பட்டனர். இதற்குப் பழிவாங்க இராணுவம் நடத்திய தாக்குதலில் 16 பொதுமக்கள் அப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர். வடமாராட்சியின் புகழ்பூத்த கல்லூரியான ஹாட்லீக் கல்லூரிக்குள் நுழைந்த இராணுவத்தினர் சுமார் 100 ஆண்டுகள் பழமையான கல்லூரி நூலகத்தையும், இரசாயண ஆய்வுகூடத்தையும் எரித்து நாசமாக்கினர். கல்லூரி மாணவர்களை தூண்டிவிடும் நோக்கில் கல்லூரி வாயிலில் வேண்டுமென்றே பொலீஸ் கொமாண்டோக்களின் சோதனைச் சாவடியொன்று அமைக்கப்பட்டது. இதனையடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்துப் பாடசாலைகளிலுமிருந்த மாணவர்கள் இப்பொலீஸ் நிலையத்தை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு தமிழ் மக்கள் அனைவருமே இராணுவத்திற்கும், பொலீஸாருக்கும் எதிரான நிலைப்பாட்டினை எடுக்க ஆரம்பித்தனர். சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கம் பருத்தித்துறையில் பொதுமக்கள், இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டமையினைக் கண்டித்திருந்தார். அதற்கு ஏளனமாகப் பதிலளித்த லலித் அதுலத் முதலி, "யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது என்று அமிர்தலிங்கத்திற்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டிருந்தார். "தமிழர்கள் அமிர்தலிங்கத்தையும் அவரது சகாக்களையும் முற்றாக நிராகரித்து விட்டார்கள்" என்றும் லலித் கூறினார். தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வந்த தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை கண்டித்து, அதுகுறித்து விளக்கமளிக்குமாறு சர்வதேச அழுத்தம் லலித் அதுலத் முதலி மீது பிரயோகிக்கப்பட்டு வந்தது. தனது வாதத் திறமையினை வைத்து இவ்வகையான சவால்களை அவர் எதிர்கொள்ளத் தொடங்கினார். "சுண்ணாகம் சந்தையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்ணொருவரை விமானப்படையினர் சுட்டுக் கொன்றது எதற்காக?" என்று பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் ஜெரமி கோர்பின் லலித்திடம் வினவியபோது, "சந்தையின் கூரையின் மீதிருந்த பயங்கரவாதிகளை விமானப்படையினர் வானிலிருந்து சுடும்போது சன்னங்கள் கூரையினைத் துளைத்துக்கொண்டு வியாபாரிகள் மேல் பாய்ந்திருக்கலாம்" என்று பதிலளித்தார். ஜெரமி கோர்பின் வல்வெட்டித்துறையில் புலிகளுடனான கடற்சண்டையின் பின்னரும், நெடியகாட்டில் கண்ணிவெடித் தாக்குதலில் பலமான இழப்புக்களைச் சந்தித்ததன் பின்னரும் கடலில் இருந்து வல்வெட்டித்துறை, பருத்தித்துறை ஆகிய பகுதிகள் நோக்கி கடற்படையினர் பீரங்கித் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்திவந்தனர். திக்கம் பகுதியில் மேலும் இழப்புக்களை பொலீஸார் சந்தித்ததையடுத்து இப்பீரங்கித்தாக்குதல்களின் வீரியம் அதிகரித்துக் காணப்பட்டது. கரையோரக் கிராமங்கள் மீது கடலில் இருந்து பீரங்கித் தாக்குதல் நடத்துவதென்பது அன்றாட நிகழ்வாகிப்போனது. புரட்டாதி முதாலம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை பருத்தித்துறையில் கத்தோலிக்க மதகுரு ஒருவர் அன்றைய நாள் திருப்பலியை ஒப்புக்கொடுக்க ஆயத்தமாகிக்கொண்டிருக்கையில், திடீரென்று கடற்படையினர் கடலில் இருந்து பீரங்கித் தாக்குதலை ஆரம்பித்தனர். இத்தாக்குதலில் ஆலயமும், குருவானவரின் தங்கும் அறையும் சேதமடைந்தது. ஆலயத்திற்கு அருகில் இருந்த பல வீடுகளும் சேதமடைந்தன. புரட்டாதி 15 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் செருப்புத் தைக்கும் தொழிலாளியான தங்கத்துரையின் குடிசையின் முன்னால் செல் வீழ்ந்து வெடித்ததில் தலையில் குண்டுச் சிதறல்கள் பட்டு மனைவி அவ்விடத்திலேயே உயிர் துறக்க, தங்கத்துரை நிரந்தரமாகவே அங்கவீனரானார். இராணுவத்தினர் ரோந்து சுற்றும் கவச வாகனங்களில் இருந்தும் பீரங்கித் தாக்குதல்கள் மக்கள் மனைகள் மீது கண்மூடித்தனமாக நடத்தப்பட்டது. இத்தாக்குதல்களில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டபோது பலர் அங்கவீனர்களாயினர். மக்களின் அன்றாட வாழ்வும் முடங்கிப் போனது. 1984 ஆம் ஆண்டு புரட்டாதி 10 ஆம் திகதி கொக்கிளாயில் இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் ஒன்பது இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மறுநாள் சம்பவ இடத்திற்குச் சென்ற இராணுவத்தினர் வீதிகளில் தென்பட்ட நான்கு தமிழர்களைச் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் புலிகள் என்று இராணுவத்தின்னர் அறிவித்தபோது, மறுத்த புலிகள், அவர்கள் அனைவரும் பொதுமக்கள் என்று கூறியிருந்தனர். பஸ் படுகொலையும் கூட்டுப் பாலியல் வன்புணர்வுகளும் - 11, புரட்டாதி 1984 அதேநாள், புரட்டாதி 11 ஆம் திகதி இரவு, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பஸ்வண்டியை 46 பயணிகளுடன் கடத்திச் சென்ற இராணுவத்தினர், 60 வயதுச் சாரதி உட்பட 17 பேரைச் சுட்டுக் கொன்றனர். இப்படுகொலை தொடர்பான விடயங்களை யாழ்ப்பாணத்துப் பத்திரிக்கைகள் விலாவாரியாக செய்தியுடன் விளக்கியிருந்தன. ஈழநாடு பத்திரிக்கை இப்படுகொலையில் உயிர் தப்பிய 29 வயதுடைய கிறிஸ்ட்டோபர் பஸ்டியாம்பிள்ளை ஆனந்தராஜாவை பேட்டி கண்டிருந்தது. அப்பேட்டியின் குறிப்பிடப்பட்ட விடயங்கள் வருமாறு, "நான் எனது சித்தியுடன் கொட்டாஞ்சேனையில் வாழ்ந்து வருகிறேன். யாழ்ப்பாணம் செல்வதற்காக தனியார் கடுகதி பஸ்வண்டியில் இரவு 8 மணிக்கு கொழும்பு, புறக்கோட்டையில் ஏறினேன். அவ்வண்டியில் 46 பயணிகளும், இரு சாரதிகளும் இருந்தனர். அவர்களுள் ஒருவர் தமிழர், மற்றையவர் சிங்களவர். பயணிகளில் 10 இலிருந்து 15 வரையானவர்கள் பெண்கள். அவர்களில் இருவர் இளவயதுப் பெண்கள். அதிகாலை 2 மணிக்கு தேனீர் அருந்துவதற்காக றம்பாவ எனும் இடத்தில் வண்டி நிறுத்தப்பட்டது. அதுவரை வண்டியை சிங்களச் சாரதி ஓட்டிவந்திருக்க, அப்போதுதான் தமிழ்ச் சாரதி ஓட்டும் பொறுப்பினை எடுத்திருந்தார். வவுனியாவிற்கு இன்னும் 10 கிலோமீட்டர்களே இருக்க வீதியோரத்தில் நின்ற ஐந்து இராணுவத்தினர் வண்டியை மறித்தார்கள். அவர்கள் அனைவரும் திடகாத்திரமானவர்களாக இருந்ததுடன், ஒருவர் மட்டுமே சீருடையினை அணிந்திருந்தார். அவர்கள் மறிக்கவே, சாரதியும் வண்டியை நிறுத்தினார்". "பஸ்வண்டியில் ஏறிக்கொண்டதும், சீருடையில் காணப்பட்ட இராணுவத்தினன், "பஸ்வண்டியில் பயங்கரவாதிகள் எவராவது இருக்கிறார்களா என்று தாம் சோதனை செய்யவேண்டும்" என்று கூறினான். அவர்கள் அனைவரும் நிறைபோதையில் இருப்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்த துப்பாக்கிகள் குண்டுகள் ஏற்றப்பட்டுத் தயார் நிலையில் இருந்தன. அவர்களில் ஒருவன் தமிழர்களைக் கேவலமாகத் திட்ட ஆரம்பித்தான். "சிங்கள இராணுவத்தினரைக் கொன்றுவிட்டு விலைமாதர்களுக்குப் பிறந்த தமிழர்கள் சொகுசு பஸ் வண்டிகளில் பயணிக்கிறீர்களா" என்பது போன்ற மிகக் கேவலமான தூஷண வார்த்தைகளை அவன் பாவித்துத் திட்டினான். "முறைதவறிப் பிறந்த தமிழர்கள் எமது பொலீஸ் காரர்களில் எட்டுப் பேரை இன்றிரவு கொன்றிருக்கிறீர்கள், அதற்குப் பழிதீர்க்க உங்கள் அனைவரையும் நாம் இப்போது கொல்லபோகிறோம்" என்று அவன் கர்ஜித்தான்". "எனக்கு நடுங்கத் தொடங்கியது. பதற்றமாகிப் போனது. நான் பிரார்த்திக்கத் தொடங்கினேன். தமிழ்ச் சாரதியை வாகனத்தை விட்டு இறங்குமாறு சீருடையில் நின்ற இராணுவத்தினன் கட்டளையிட்டான். அதற்கு இணங்க மறுத்த சாரதி, "பயணிகளின் பாதுகாப்பு எனக்கு முக்கியமானது" என்று பணிவுடன் பதிலளித்தார். உடனேயே அவரை துவக்கின் பின்புறத்தால் அவன் கடுமையாகத் தாக்கினான். தான் தாக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது அவர் "முருகா, முருகா, இந்த மக்களையெல்லாம் காப்பாற்று" என்று பலத்த குரலில் கத்தத் தொடங்கினார். பஸ்ஸைவிட்டு இறங்கும்படி வற்புறுத்தப்பட்ட அவரை, ஓடும்படி அவர்கள் பணித்தார்கள். அவரும் வீதியின் ஓரத்தில் இருந்த பற்றையொன்றினை நோக்கி ஓடத் தொடங்கினார். அவர் ஓடிக்கொண்டிருக்கும்போதே அவர் மீது ஒருவன் துப்பாக்கியால் சுட்டான், அவர் அவ்விடத்திலேயே இறந்து வீழ்ந்தார்". "அதன்பின்னர் பஸ்ஸிலிருந்த பயணிகளில் இளைஞர்களை அவர்கள் வெளியே இழுத்து எடுத்தார்கள். நான் எனது இருக்கையின் கீழ் பதுங்கிக் கொண்டேன். கீழே இறக்கப்பட்ட இளைஞர்களை ஓடும்படி கட்டளையிட்டு, அவர்கள் ஓடத் தொடங்கியதும் அவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கித்தாக்குதலை நடத்தினார்கள். அந்த இளைஞர்கள் அனைவரும் இறந்து வீழ்ந்தார்கள்". "பின்னர், நான் இருந்த இருக்கைப் பக்கம் வந்த ஒருவன் என்னை பிடித்து வெளியே இழுத்தான். தாம் வைத்திருந்த துப்பாக்கியின் பின்புறத்தால் என்னைச் சரமாரியாகத் தாக்கினார்கள். அவர்களில் ஒருவன் எனது முகத்தில் தான் அணிந்திருந்த பூட்ஸ் காலினால் பலமாக உதைந்தான். பஸ்ஸில் இருந்து வெளியே குதித்த நான் அதன் அடிப்பகுதியில் சென்று பதுங்கிக்கொண்டேன். அப்போதுதான் இன்னும் நான்கு பயணிகள் பஸ்ஸின் கீழ் பதுங்கியிருப்பது எனக்குத் தெரிந்தது". "என்னைக் கைவிட்டு விட்டு பஸ்ஸில் இருந்த இரு இளம் பெண்களிடம் அவர்கள் சென்றார்கள். நாம் மெது மெதுவாக பஸ்ஸின் அடிப்பகுதியில் இருந்து ஊர்ந்து சென்று அருகிலிருந்த காட்டிற்குள் ஒளிந்துகொண்டோம். அங்கிருந்து நீண்ட நேரம் நடந்து தமிழ்க் கிராமம் ஒன்றினை நாம் அடைந்தோம். அங்கிருந்து தப்பி வந்தோம்" என்று ஆனந்தராஜா கூறினார். இப்படுகொலையில் இருந்து உயிர் தப்பிய இன்னொருவர் 64 வயதுடைய கந்தையா பரமநாதன். பஸ்ஸில் நடந்த ஏனைய அநர்த்தம் குறித்து அவரிடம் பேட்டி காணப்பட்டது. கொழும்பில் தமிழர்கள் பெருவாரியாக வாழும் வெள்ளவத்தைப் பகுதியில் இருந்து தான் பஸ்ஸில் ஏறிக்கொண்டதாக அவர் கூறினார். "நான் றம்பாவ பகுதியில் பஸ்ஸை விட்டு இறங்கவில்லை. நான் ஒரு இருதய நோயாளி. இராணுவத்தினர் பஸ்ஸில் ஏறிய வேளை நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேன். யாரோ உரத்த குரலில் பேசுவது கேட்டு நான் விழித்துக்கொண்டேன். அவர்களில் ஐந்து பேர் இருந்தனர். ஒருவன் மட்டுமே சீருடையில் இருந்தான். மற்றைய நால்வரும் கட்டைக் காற்சட்டையும் டீ சேர்ட்டும் அணிந்திருந்தார்கள். அவர்கள் எல்லோருமே இராணுவத்தினர்தான் என்பதை நாம் புரிந்துகொண்டோம்". "அவர்கள் முதலில் சாரதியைச் சுட்டார்கள். பின்னர் இளைஞர்களைக் கொன்றார்கள். இளவயதுப் பெண்களையும், ஏனைய பெண்களையும் வெளியே இழுத்து எடுத்தார்கள். பெண்கள் ஓவென்று கதறியழவே நாம் உரத்த குரலில் சத்தமிடத் தொடங்கினோம். எம்மை அமைதியாக இருக்கும்படி அதட்டிய அவர்கள், இல்லாதுவிடில் அனைவரையும் சுட்டுக் கொன்றுவிடப்போவதாக மிரட்டினார்கள். பின்னர் பெண்கள் அனைவரையும் அவர்கள் பற்றைகளுக்குள் இழுத்துச் செல்ல நான் மயங்கிவிட்டேன்" என்று கந்தையா பரமநாதன் கூறினார். இக்கொடூரமான பஸ் படுகொலைகள் சென்னையில் தங்கியிருந்த முன்னணியின் தலைவர்களை கவலைப்படுத்தியிருந்தது. அனைத்துக் கட்சி மாநாடு புரட்டாதி 21 வரை பிற்போடப்பட்டது. அதன் இறுதிக் கூட்டமான புரட்டதி 3 ஆம் திகதி சந்திப்பில், அதிகாரப் பரவலாக்கலுக்கான அலகு குறித்து நெகிழ்வான தன்மையினை ஜெயார் காண்பித்திருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியினரும், பெளத்த மகா சங்கத்தினரும் மாவட்ட அபிவிருத்திச் சபைக்கு அதிகமாக எதனையும் தமிழர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்று வாதிட்டு வந்த நிலையில், இந்தியா, மாகாணசபை வரை அலகு விஸ்த்தரிக்கப்படலாம் என்று எதிர்ர்வுகூறத் தொடங்கியது. அமிர்தலிங்கம் கடுமையான தொனியில் ஜெயாருக்கு தந்தியொன்றினை அனுப்பினார். "இராணுவம் அப்பாவிப் பஸ் பயணிகளைப் படுகொலை செய்யும்போது அதன் அரசாங்கத்துடன் நாம் எப்படிப் பேசுவது?" என்று அவர் கேள்வியெழுப்பியிருந்தார். முன்னணியினது விமர்சனத்தையடுத்து இந்தியாவும் ஜெயவர்த்தன மீது அழுத்தம் கொடுத்தது. சர்வதேச ஊடகங்களிலும் இச்செய்தி வெளிவந்தபோது வேறு வழியின்றி இப்படுகொலைகளை விசாரிக்க பொலீஸ் குழுவொன்றினை ஜெயார் அமைத்தார். படுகொலை நடைபெற்ற இடத்திற்குச் சென்ற பொலீஸ் குழு, சேதப்படுத்தப்பட்டு, அநாதரவாகக் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பஸ் வண்டியையும், அருகில் இருந்த புதர்களுக்குள் பெண்கள் அணியும் ஆடைகள் ஆங்காங்கே வீசப்பட்டுக் கிடப்பதையும் கண்டனர். புரட்டாதி மாதத்தின் இறுதிப்பகுதியிலும், ஐப்பசி மாதம் முழுவதிலும் தமது கண்ணிவெடித் தாக்குதல்களை புலிகள் தொடர்ச்சியாக நடத்தி வந்தனர். புரட்டாதி மாதத்தின் 3 ஆம் வாரத்தில் நடந்த தாக்குதலில் இரு பொலீஸார் கொல்லப்பட்டனர்.புரட்டாதி 22 ஆம் திகதி கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அரச பேச்சாளர் தமிழ்நாடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயங்கரவாதிகளின் படகைக் கடற்படையினர் தாக்கி அழித்தபோது 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறினார்.
-
வறுமையும், பதின்ம வயதுத் திருமணமும், விபச்சாரமும், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமும் தலைவிரித்தாடிய சிங்களக் குடியேற்றங்கள் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கென்ட் டொலர் பண்ணைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் கொக்கிளாய் நாயாறு குடியேற்றங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து மார்கழியில் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டில் கலந்தாலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் தமிழர் தாயகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிங்களக் குடியேற்றங்களுக்கு பாதுகாப்பினை அதிகரிப்பது என்று முடிவுசெய்யப்பட்டது. இவ்வாறான பாதுகாப்புச் சபை கூட்டமொன்றில் பிரபல சிங்கள இனவாதியும் சிகல உறுமயவின் ஸ்த்தாபகருமாகிய எஸ்.எல்.குணசேகரவினாலும், இன்னொரு பெயர்பெற்ற இனவாதியான தவிந்த சேனநாயக்கவினாலும் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றினை பிரிகேடியர் டெனிஸ் ஹபுகள்ள எனும் அதிகாரி சபையிடம் கையளித்தார். வலி ஓயாவை இராணுவமயப்படுத்தும் ஆலோசனையினை வழங்கிய சிங்களப் பேரினவாதி எஸ் எல் குணசேகர தொடர்ந்துவந்த சில வருடங்களில் வலி ஓயாவின் விரிவாக்கத்திற்கான அரசாங்கத்தின் கொள்கையில் பாரியளவு செல்வாக்குச் செலுத்திய இவ்வறிக்கை இரு முக்கிய விடயங்கள குறித்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்திருந்தது. சிங்களக் குடியேற்றங்களுக்கு நடுவில் இராணுவ நிலைகளை அமைத்தல் மற்றும் குடியேற்றவாசிகளுக்கு இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்குதல் என்பனவே அவையாகும். இக்கூட்டத்தில் பங்குபற்றிய ஜெயாரின் மகனும் ஆலோசகருமாகிய ரவி ஜெயவர்த்தன உடனடியாகவே இந்த ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டதுடன் சிங்களக் குடியேற்றக்காரர்களுக்கான ஆயுதப் பயிற்சியினையும் ஆரம்பித்து வைத்தார். அரசாங்கத்தின் இக்கொள்கையின் அடிப்படியில் வலி ஓயா முற்றான இராணுவமயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றமாக மாறியது. இப்பிரதேசத்தில் அமைக்கப்பட்ட சிங்களக் கிராமங்களுக்கான சிவில் நிர்வாகத்தை இராணுவம் பொறுப்பெடுத்துக்கொண்டது. கென்ட் பண்ணை அமைந்திருந்த இடத்திலிருந்து நான்கு கிலோமீட்டர்கள் தொலைவில் வலி ஓயா படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்பட்டது. இராணுவத்தின் முன்னாள் அதிகாரிகளின் தலைவராகக் கடமையாற்றிய பிரிகேடியர் ஜனக பெரேரா வலி ஓயாப் படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். வலி ஓயாவில் அமைக்கப்பட்ட ஜனகபுர எனும் புதிய சிங்களக் கிராமம் அவரது பெயரை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டது. ஜனக பெரேராவின் மனவியின் பெயரை அடிப்படையாகக் கொண்டு கென்ட் பண்ணைப்பகுதி கல்யாணிபுர என்று அழைக்கப்பட அவரது மகனின் பெயரை அடிப்படையாகக் கொண்டு சம்பத்புர எனும் புதிய கிராமும் அப்பகுதியில் உருவாக்கப்பட்டது. போர்க்குற்றவாளி ஜனக பெரேரா வலி ஓயாவில் குடியேற்றப்பட்ட சிங்கள விவசாயிகளின் வாழ்வு முற்றான இராணுவ மயப்படுத்தலுக்கு உள்ளானது. இங்கு குடியேறிய குடும்பங்களிலிருந்து பல இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்துகொண்டதுடன், இப்பகுதியின் பெண்கள் பலரும் இராணுவ வீரர்களை மணம் முடித்துக்கொண்டனர். மனிதவுரிமைகளுக்கான பயாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு இப்பகுதி மக்களைப் பேட்டி கண்டிருந்தது. அவ்வாறான் பேட்டி ஒன்றில் தென்மாவட்டமான காலியின் பலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த தனபால என்பவரது குடும்பம் இப்பகுதியில் வாழ்ந்து வந்தது. ஆரம்பத்தில் மாதுரு ஓயாவுக்குக் குடியேற, திம்புலாகலை பிக்குவின் தலைமையில் சென்ற இவருக்கு இறுதியில் ஏமாற்றமே எஞ்சியது. பின்னர் மணலாறு வலி ஓயாவாக மாற்றப்பட அப்பகுதியில் உருவாக்கப்பட்ட சின்ஹபுர எனும் கிராமத்தில் அவருக்கு நிலம் ஒன்று வழங்கப்பட்டது. தமது வாழ்க்கை ஆபத்துக்கள் நிறைந்ததாக இருக்கிறது என்று அவர் கூறினார். பொதுமக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் கலந்தபடி இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. இரவு வேளைகளில் கடுமையான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் தொடர்ந்து கேட்டவண்ணம் இருப்பதாக அவர் கூறினார். காலம் செல்லச் செல்ல பல குடியேற்றவாசிகள் அங்கிருந்து வெளியேற ஆரம்பித்ததாக அவர் கூறினார். தொடர்ச்சியான இராணுவ மயப்படுத்தப்பட்ட சூழலில் , போர் அச்சத்திற்கு நடுவே வாழ விரும்பாது, தமது வீடுகளைக் காலி செய்துவிட்டு அவர்கள் வெளியேறியதாக அவர் கூறினார். ஆனால், தனது குடும்பத்தினால் வெளியேற முடியாதவாறு இராணுவத்திற்குள் உள்வாங்கப்பட்டுவிட்டதாக அவர் கூறினார். அவரது மகன் ஒருவர் இராணுவத்தில் இணைந்துகொள்ள, மூன்று புதல்விகளில் ஒருவர் அப்பகுதியில் பணிபுரிந்து வந்த இராணுவ வீரர் ஒருவரை மணம் முடித்துக்கொண்டதாக அவர் மேலும் கூறினார். அப்பகுதியெங்கும் தொடர்ச்சியான அச்சம் சூழ்ந்திருந்தது. புலிகள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தபடி இருந்தனர். இராணுவத்தினர் எதிர்பார்க்கத நேரத்தில் திடீரென்று அப்பகுதி மீது துணிகரமான தாக்குதல்களை அவர்களால் நடத்தக்கூடியதாக இருந்தது. இந்தச் சூழ்நிலையினை மனிதவுரிமைக்கான (யாழ்) பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது, பாடசாலைக்குச் செல்லும் சிறுவர்களிடம், கரும்பலகையினைப் பார்க்க வேண்டாம், அருகேயிருக்கும் காடுகளிலிருந்து வரக்கூடிய ஆபத்துக்களைக் கவனமாகப் பார்த்துக்கொண்டிருங்கள் என்று கூறப்பட்டதாம். யாழ்ப்பாணத்துச் சிறுவர்கள் குண்டுவீச்சு விமானங்களுக்காக வானை அண்ணாந்து பார்ப்பதுபோல இச்சிறுவர்கள் காடுகளைப் பார்த்தபடி இருந்தார்கள். ஆனால், இவை வெறுமனே வெளியில்த் தெரியும் விடயங்கள் மட்டும்தான். ஆனால், இதனை விடவும், ஆளமான, மறைந்துகிடக்கும் விடயங்களும் இங்கு இருக்கின்றன. குறிப்பாக பொதுமக்கள் வாழிடங்களுக்கிடையே பரவிக் கிடக்கும் இராணுவ முகாம்கள்....... இப்பகுதியில் பல ஆண்களுடன் பேசியபோது, "எமக்கு இராணுவம் பாதுகாப்பு அளிக்கின்றதா அல்லது இராணுவ முகாம்களுக்கு நாம் பாதுகாப்புக் கவசங்களாக நிறுத்தப்பட்டிருக்கின்றோமா என்று எமக்குத் தெரியவில்லை" என்று கூறினார்கள். இரவு வேளைகளில் முன்னணிக் காப்பரண்களுக்கு ரைபிள்களுடன் ஆண்கள் அனுப்பிவைக்கப்பட வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை இராணுவ வீரர்கள் பலாத்காரம் செய்துவந்தார்கள். அமந்த பெரேரா இப்பகுதியின் நிலைமை குறித்து விரிவான ஆய்வொன்றினைச் செய்திருந்தார். அவரது கருத்துப்படி வலி ஓயாவில் வாழும் சிங்களவர்கள் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டு விட்டார்கள் என்று கூறுகிறார். இப்பகுதியின் நிர்வாகக் கட்டமைப்பு மிகவும் பலவீனமான நிலையில் இருந்தது. சிறுவர்களுக்கான கல்வி வசதிகள் மிகவும் பின் தங்கிய நிலையில் காணப்பட்டதுடன், மருத்துவ வசதிகளும் சீரற்றுக் காணப்பட்டன. முழுமையாக இயங்கும் மருந்தகமோ அல்லது சீரான போக்குவரத்து வசதிகளோ இப்பகுதியில் இன்னும் அமையப்பெறவில்லை என்று அவர் எழுதியிருந்தார். வலி ஓயாவில் வாழும் சிங்களக் குடியேற்றக்காரர்கள் மிகவும் வறுமையானவர்கள். பணம் தேவைப்படும்போதெல்லாம், குறிப்பாக நீர் இறைக்கும் இயந்திரங்களை வாங்க கடனெடுப்பதைத் தவிர வேறு வழிகள் அவர்களுக்கு இருக்கவில்லை. அரசினதும், அரசு சாரா அமைப்புக்களினதும் உதவியிலேயே அவர்களது வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. சமூகக் கட்டமைப்பும், வாழ்க்கைமுறையும் இப்பிரதேசத்தில் சீர்குலைந்து காணப்பட்டது. பதின்ம வயதுத் திருமணங்களும், சிறுவர் பாலியல் துஸ்பிரயோகமும் இப்பகுதியில் மிகவும் அதிகரித்துக் காணப்பட்டன. அமந்த பெரேராவின் அறிக்கையின்படி இப்பகுதியில் வைத்தியராகக் கடமையாற்றும் சரத் குமார கூறுகையில் 12 வயதுச் சிறுமிகள் கர்ப்பம் தரித்தபடி வைத்தியசாலைக் கொண்டுவரப்படுவது சாதாரண விடயமாகிவிட்டது என்று கூறுகிறார். பிள்ளைகளுக்கான சரியான வசதிகளைச் செய்துகொடுக்க முடியாமையும், அவர்களைப் பாதுகாப்பாக வைத்துப் பராமரிக்க முடியாமையும், பதின்ம வயதுத் திருமணங்கள் நடக்கக் காரணமாகிவிடுகின்றன. மேலும் பெருமளவான இராணுவ வீரர்களின் பாலியல்த் தேவைகளைப் பூர்த்தி செய்ய விபச்சாரத்தைப் இப்பகுதியின் பெண்கள் தொழிலாகச் செய்துவருவதாகவும், பாலியல்ப் பலாத்காரம் என்பது சாதாரணமாக நடக்கு விடயம் என்றும் வைத்தியர் சரத் குமார கூறியிருக்கிறார். வலி ஓயவில் வசிக்கும் பெண்களின் நாளாந்த வாழ்வில் விபச்சாரம் என்பது ஒரு அங்கமாகிவிட்டதாக அமந்த பெரேரா கூறுகிறார். இவ்வாறான பெண்களை இப்பகுதியில் சூழ்நிலைக்கான பாலியல்த் தொழிலாளிகள் என்று அழைக்கிறார்கள். அதாவது பணம் தேவைப்படும்போது மட்டும் விபச்சாரத்தில் ஈடுபட்டுக்கொள்வது. ரஞ்சனி என்கிற பெயரில் இப்பகுதியில் வசிக்கும் பெண்ணொருவரின் வாழ்க்கை குறித்து சில விடயங்கள் கீழே பகிரப்படுகிறது, ரஞ்சனி எனப்படும் 38 வயது பெண்ணொருத்திக்குப் பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். இரு குடும்பங்களை அவர் தனக்கு அரசிடமிருந்து மாதாந்தம் கிடைக்கும் 2200 ரூபாய்களை வைத்துக்கொண்டே சமாளித்து வருகிறார். ஊர்காவல்ப் படையில் பணிபுரிந்த வேளை கஜபாபுர பகுதியில் புலிகளின் மோட்டார் தாக்குதலில் கொல்லப்பட்டதற்காக மாதாந்த பணமாக அரசால் இந்த 2200 ரூபாய்கள் வழங்கப்பட்டு வந்தது. அவருக்கு இரு புதல்விகள். ஒருவருக்கு 19 வயது மற்றையவருக்கு 9 வயது. மூத்த மகள் 14 வயதில் திருமணம் முடித்துக்கொண்டார். அவரும் அவரது கணவரும் வீட்டில் வேலையின்றி வாழ்ந்துவருகிறார்கள். அவர்கள் இருவருக்கும் அவர்களது குழந்தைக்கும் ரஞ்சனியே உணவு வழங்கிப் பராமரித்து வருகிறார். உங்களுடைய மகளை இவ்வளவு சிறிய வயதில், வேலையற்ற ஒருவருக்கு ஏன் திருமணம் முடித்து வைத்தீர்கள்? என்று நாம் அவரைக் கேட்டோம். அவரால் சரியான பதில் ஒன்றினை வழங்க முடியவில்லை. "தன்னால் இனிமேல்ப் பாடசாலைக்குப் போக முடியாது, எனக்குத் திருமணம் முடித்து வையுங்கள் என்று ஒருநாள் என்னிடம் வந்து கூறினாள்", என்று அவர் எம்மிடம் கூறினார். "உங்களை இப்பகுதியில் உள்ள ஆண்கள் தமது இச்சைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக அழைப்பதுண்டா என்று நாம் கேட்டபோது, அவரால் சிரிப்பதைத் தவிர வேறு எதனையும் கூற முடியாது போய்விட்டது. ஆனால், அவரது சிரிப்பு எமக்குப் பல விடயங்களைப் புரியவைத்தது. அவருக்கு வேறு தெரிவுகள் இல்லை. வீட்டில் உள்ளவர்களுக்கு உணவு வழங்க வேண்டுமானால் தனது உடலை விற்றால் மட்டுமே முடியும் என்கிற நிலை, ஆகவே அவரும் அதனை ஏற்றுக்கொண்டு வாழ்கிறார் என்பது புரிந்தது. மகாவலி அமைச்சினால் தீட்டப்பட்ட தந்திரமும், அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் வறுமையில் வாழ்ந்துவரும் இரு இனங்களுக்கும் மிகவும் பாரதூரமான இன்னல்களை ஏற்படுத்தி விட்டிருந்தது. ஆனால், இத்திட்டத்தினை உருவாக்கி, நடத்திய செல்வச் செழிப்புக்கொண்ட சிங்கள மேற்தட்டு தலைமைகள் கொழும்பில் என்றும்போல் இன்றும் ஆடம்பரமாகவே வாழ்ந்து வருகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை வலி ஓயாவுக்கான பயணம் என்பது ஒரு பொழுது போக்கு, உலங்கு வானூர்தியிலிருந்து சுற்றுலா செல்வதுபோல ஓரிரு மணிநேரத்தில் பார்த்துவிட்டுவரும் உல்லாசப் பயணம், அவ்வளவுதான். சிறுபான்மையின மக்களுக்கு சுயகெளரவம், மரியாதை, இனமானம் என்பவை இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ளத் தவறியமையே வறுமைக் கோட்டுக்குக் கீழான இந்நாட்டு மக்களை குடியேற்றங்கள் மூலம் பலியிட அவர்களைத் தூண்டியது. சனத்தொகையில் அதிகம் இருப்பதால் மட்டுமே பெரும்பான்மையினம் தன்னுடன் அதிகாரத்தையும், பலத்தையும் வைத்துக்கொள்ள முயலக் கூடாது. ஒவ்வொரு தனி மனிதனும் அடிப்படை மனிதவுரிமை, சுய கெளரவம், மரியாதை, சொத்து என்று அனைத்தையும் வைத்திருக்கும் உரிமையினைக் கொண்டிருக்கிறான். இந்த உரிமைகள் மறுக்கப்படும்போது அவன் அடக்குமுறைக்கெதிராக புரட்சி செய்வதற்கான சகல உரிமைகளையும் கொண்டிருக்கிறான்.
-
கொக்கிளாய், நாயாறு சிங்கள மீனவக் குடியேற்றங்களும் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட படுகொலைகளும் கொக்கிளாய் சிங்கள மீனவக் குடியேற்றம் ஒன்று மறுநாள், மார்கழி 1 ஆம் திகதி பெண்போராளிகள் அடங்கிய புலிகளின் அணி நாயாறு மற்றும் கொக்கிளாய் பகுதிகளில் அரச ஆதரவுடன் குடியேறியிருந்த சிங்கள மீனவக் கிராமங்கள் மீது தாக்குதல் ஒன்றினை நடத்தினர். சுமார் 15 கிலோமிட்டர்கள் இடையே அமைக்கப்பட்டிருந்த இக்குடியேற்றங்கள் மீதான தாக்குதலில் 59 சிங்கள மீனவக் குடியேற்றக்காரர்கள் கொல்லப்பட்டனர். திருகோணமலை முதல் முல்லைத்தீவு வரை கடற்கரைகளை அண்மித்து தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களின் வடக்கு எல்லையிலேயே கொக்கிளாயும் நாயாறும் அமைந்திருந்தன. இக்குடியேற்றங்களில் வசித்துவந்த பெரும்பாலான சிங்களவர்கள் நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். புலிகளின் தாக்குதலில் காயப்பட்ட சில சிங்களவர்கள் அருகிலிருந்த முல்லைத்தீவு இராணுவ முகாமுக்கு உதவிகேட்டு ஓடியபோதே தாக்குதல் குறித்து இராணுவத்தினர் அறிந்துகொண்டனர். சிங்களக் குடியேற்றம் அமைந்திருந்த பகுதிக்குச் சென்ற இராணுவ வாகனம் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்கானது. அப்பகுதியில் சிங்களவர்களால் உரிமைகோரி நிறுவப்பட்டிருந்த கல்வெட்டுக்களும் புலிகளால் அழிக்கப்பட்டன. புலிகளின் இத்தாக்குதல்கள் எதிர்பாரா விதமாக இன்னும் பல சம்பவங்களுக்கு அடிகோலியிருந்தது. தமிழர் தாயகத்தில் சிங்கள அரசால் உருவாக்கப்பட்டிருந்த இக்குடியேற்றங்களில் வாழ்ந்துவந்த சிங்கள விவசாயிகளும், மீனவர்களும் அங்கிருந்து இடம்பெயரத் தொடங்கினர். சிங்கள மக்களிடையே முதலாவது அகதிகள் பிரச்சினையினை இத்தாக்குதல்கள் தோற்றுவித்தன. புலிகளின் தாக்குதல்களின் பின்னர் டொலர் பண்ணைக்குச் சென்ற நிவாரணப் பணியாளர்கள் அங்கு வாழ்ந்துவந்த சிங்களவர்கள் தமது உடைமைகளையும் எடுத்துக்கொண்டு பதவியா நோக்கித் தப்பிச் செல்வதாகத் தெரிவித்திருந்தார்கள். தாம் வாழ்ந்துவந்த குடியேற்றங்களில் இருந்து இராணுவத்தினர் விலக்கிக்கொள்ளப்பட்டமையினால் தொடர்ந்தும் அப்பகுதிகளில் வாழ அச்சப்படுவதாகவும், அதனாலேயே தாம் அங்கிருந்து தப்பிச் செல்வதாகவும் கூறியிருக்கின்றனர். இதனையடுத்து அப்பகுதிகளுக்கு அண்மையாக அமைக்கப்பட்டிருந்த பெளத்த விகாரைகளிலும் பாடசாலைகளிலும் சிங்கள அகதிகள் அடைக்கலம் புகுந்தனர். வலி ஓயாப் பகுதியில் குடியேற்றப்பட்டிருந்த சிங்கள கைதிகளுக்கு நிவாரணம் வழங்கச் சென்றவர்களில் ஹேர்மன் குணரட்ணவும் ஒருவர். இறையாண்மையுள்ள நாட்டை நோக்கி என்று தான் எழுதிய புத்தகத்தில் புலிகளின் தாக்குதல்களின் பின்னர் தான் கண்ட காட்சிகளை விபரித்திருந்தார். "நூற்றுக்கணக்கானோர் தமது மனைவிகளுடன், கைகளில் பிள்ளைகளையும் ஏனைய அவசியப் பொருட்களையும் ஏந்திக்கொண்டு அகதி முகாம்களுக்கு ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டேன்". இராணுவத்தினரும், சிறைக் கைதிகளும் மணலாற்றில் (தற்போதைய வலி ஓயா) பூர்வீகமாக வாழ்ந்து வந்த தமிழர்களை முற்றாக அங்கிருந்து விரட்டி விடும் நடவடிக்கைகளில் இறங்கினர்.இந்த விரட்டியடிப்பு முன்னெடுக்கப்பட்ட விதத்தினை தமிழ்ச் செய்தியாளர்களும் சரித்திர எழுத்தாளர்களும் விளக்கமாகப் பதிவிட்டிருந்தனர். மிகவும் தந்திரமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. தமிழர்களின் வாழிடங்களுக்குச் சென்ற இராணுவத்தினர் இப்பகுதி மீது தாக்குதல் ஒன்று நடத்தப்படப் போகிறது, ஆகவே உயிரைக் காத்துக்கொள்ள இங்கிருந்து ஓடுங்கள் என்று முதலில் எச்சரிப்பார்கள். தமது எச்சரிக்கையினை ஏற்றுக்கொள்ள மறுத்த தமிழர்கள் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்ட இராணுவத்தினர், அவர்களின் விலைமதிப்பான பொருட்களை சூறையாடியபின்னர் வீடுகளுக்குத் தீமூட்டினர். இளம்பெண்கள் இருந்த வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர் அப்பெண்களை வெளியே இழுத்து வந்து கூட்டுப் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டனர். இவையெல்லாம் நடந்து முடிந்ததன் பின்னர் இப்பகுதி மீது பாரிய நேரடித் தாக்குதல் ஒன்றினை நடத்தி தமிழர்களை அங்கிருந்து முற்றாக விரட்டியடித்தனர். மணலாறு மற்றும் ஒதியாமலை ஆகிய தமிழ்க் கிராமங்களில் சிங்கள இராணுவத்தாலும், சிங்களக் குடியேற்றக்காரர்களாலும் படுகொலைசெய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை பலநூறுகளைத் தாண்டும் என்று வரலாற்று பதிவாளர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும், ஒதியாமலைப் படுகொலையில் 25 பெண்களும் சிறுவர்களும் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டமையும் பதிவாகியிருக்கிறது. பதவியாவில் ஆரம்பித்து சிறிபுரவாக முன்னெடுக்கப்பட்டு ஈற்றில் ஜனகபுர வரை விஸ்த்தரிக்கப்பட்டிருக்கும் சிங்களப் பேரினவாதிகளின் தமிழர் இதயபூமி மீதான வல்வளைப்பு திருகோணமலை மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்திருந்த பாரம்பரியமான தமிழ்க் கிராமம்தான் அமரவயல். இதற்கு அருகிலேயே சிங்களக் குடியேற்றக் கிராமமான பதவியா அமைக்கப்பட்டிருந்தது. அமரவயல் கிராமத்திற்கு நடந்த அனர்த்தமே முல்லைத்தீவு, திருகோணமலை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்த பல பாரம்பரிய தமிழ்க் கிராமங்களுக்கும் நடைபெற்றிருந்தது. இக்கிராமம் அரசாங்கத்தால் முற்றாக கைவிடப்பட்டிருந்ததுடன், வயற்செய்கைக்கு மிகவும் உகந்த இடமான இப்பகுதியைக் கைப்பற்றுவதற்காக அயலில் குடியேறி இருந்த சிங்களக் காடையர்கள் தொடர்ச்சியாக முயன்று வந்தனர். இக்கிராமங்களுக்குள் அடிக்கடி புகுந்து வன்முறைகளில் ஈடுபட்ட காடையர்கள் இங்கு வசித்துவந்த தமிழ் மக்களை எப்படியாவது விரட்டிவிட முயன்று வந்தனர். மணலாறு எனும் புத்தகத்தை எழுதிய திரு விஜயரட்ணம் இக்கிராமத்திற்கு நடந்த அநர்த்தம் பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதல்கள் முடிவடைந்து மூன்று நாட்களின் பின்னர் அமரவயல்க் கிராமத்தில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த தமிழ்க் கிராமங்களுக்கு இராணுவத்தால் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது. உடனடியாக அங்கிருந்து வெளியேறுங்கள், இல்லையேல் கொல்லப்படுவீர்கள் என்பதே அது. இதுகுறித்து விஜயரட்ணம் எழுதிய விபரங்கள் கீழே, "இராணுவத்தினரிடமிருந்து விடுக்கப்பட்ட எச்சரிக்கையினையடுத்து இங்கு வாழ்ந்துவந்த தமிழர்கள் தம்மால் எடுத்துச் செல்லக்கூடிய சில பொருட்களையும் சில உடுபுடவைகளையும் எடுத்துக்கொண்டு அயலில் இருந்த காட்டுப்பகுதிக்குள் தஞ்சம் புகுந்தனர். அந்த இரவு முழுவதும் காட்டிற்குள்ளேயே அவர்கள் மறைந்து இருந்தனர். திடீரென்று தமது கிராமமம் இருந்த திசையிலிருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்க ஆரம்பித்தன. பின்னர் கிராமத்திலிருந்து வானை நோக்கித் தீபிழம்புகள் எழுவதை அவர்கள் கண்டனர். எரிந்துகொண்டிருந்த இதயத்தோடு அங்கிருந்து வெளியேறி முல்லைத்தீவில் அமைக்கப்பட்டிருந்த அகதிமுகாம் நோக்கி அவர்கள் நடக்கத் தொடங்கினர். அகதிமுகாமில் தஞ்சமடைந்த மக்களில் இளவயது ஆண்களும் பெண்களும் புலிகளுடன் இணைந்து தமது கிராமத்தை விடுவிக்க உறுதிபூண்டனர். அவர்களுக்கு வெற்றி இன்னமும் கிட்டவில்லை, ஆனால் அவர்கள் வெல்வார் என்பது நிச்சயம்". சி.குருநாதன் எனும் எழுதாளரும் "அகதிக் கிராமங்கள்" எனும் பெயரில் ஒரு தொடரினை தினக்குரல் பத்திரிக்கையில் 2002 இல் எழுதியிருந்தார்.இத்தொடரில் பல விடயங்களை அவர் குறிப்பிட்டிருந்தார். தமிழரின் பாரம்பரியக் கரையோரக் கிராமமான தென்னைமரவாடியில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து குருநாதன் பின்வருமாறு எழுதுகிறார். "மீனவக் குடியேற்றங்கள் மீதான புலிகளின் தாக்குதல்கள் நடைபெற்ற நாளுக்கு அடுத்தநாள், கொக்கிளாய் மற்றும் நாயாறுக் குடியேற்றங்களில் இருந்து பெருமளவு சிங்களக் குடியேற்றவாசிகளும் இராணுவத்தினரும் தென்னைமரவாடிக் கிராமத்தினுள் நுழைந்தனர். அவர்கள் அனைவரதும் முகங்களில் குரோதமும், தமிழர்களை அழிக்கவேண்டும் என்கிற வெறியும் காணப்பட்டது. தமிழர்கள் மீது பழிதீர்க்க வந்திருக்கிறோம் என்று கத்திக்கொண்டே அப்பகுதிக்குள் அவர்கள் நுழைந்திருந்தார்கள். துப்பாக்கிகள், வாட்கள், கத்திகள், கோடரிகள், இரும்புக் கம்பிகள் போன்ற ஆயுதங்களுடன் அவர்கள் தமிழர்களைத் தாக்க வந்திருந்தனர். சுமார் 200 தமிழ்க் குடும்பங்கள் தென்னைமரவாடி எனப்படும் பாரம்பரிய தமிழ்க் கிராமத்தில் அப்போது வாழ்ந்து வந்திருந்தனர். சிங்களவர்கள் ஆவேசத்துடன் அப்பகுதிநோக்கி வருவதைக் கண்டதும் தமிழர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி அருகிலிருந்த காடுகளுக்குள் ஓடி ஒளித்துக்கொண்டனர். தாம் தேடிவந்த தமிழர்களைக் காணமுடியாததால் அவர்களின் வீடுகளுக்கும் உடைமைகளுக்கும் தீவைத்துவிட்டு அங்கிருந்து சென்றது அந்தக் கும்பல். மறுநாளும் தமிழர்களைத் தேடி அந்தக் கும்பல் தென்னைமரவாடிக் கிராமத்திற்கு வந்தது. வீடுகளுக்குள் தமிழர்களைக் காணாததால் அருகிலிருக்கும் காடுகளுக்குள் அவர்களைத் தேடி நுழைந்தது. சில தமிழர்களைக் கண்டதும் அவர்களை வெளியே இழுத்துவந்து சுட்டுக் கொன்றது சிங்கள இராணுவம். தமிழ் இளைஞர்கள் வரிசையில் நிற்கவைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பெண்களை காடுகளுக்குள் இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வில் இராணுவத்தினரும் சிங்கள மீனவர்களும் ஈடுபட்டார்கள். கொக்கிளாய் வாழ் தமிழர்கள் மீது இரு நாட்களில் இராணுவமும் சிங்கள மீனவர்களும் நடத்திய தாக்குதல்களில் 131 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். மூன்றாவது நாள், மார்கழி 4 ஆம் திகதி தென்னைமரவாடிக் கிராமத்தின் பூர்வ குடிகளான தமிழ் மக்கள் அங்கிருந்து பாதுகாப்புத் தேடி தமது பயணத்தை ஆரம்பித்தார்கள். நான்கு நாட்களாக காடுகளுக்குள் நடந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளைப் பகுதியை அடைந்தார்கள். அப்பகுதியில் தற்காலிகக் கொட்டகைகளை அமைத்துத் தங்கிக் கொண்டார்கள். தமது தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்ட பகுதிக்கு "பொன் நகர்" என்று அவர்கள் பெயரிட்டனர். அவர்கள் 18 வருடங்களுக்கு மேலாக இன்னமும் அங்கே வாழ்ந்து வருகிறார்கள்" (2002 இல் எழுதப்பட்ட தொடரின்படி). அமர வயலும் தென்னமரவாடியும் வலி ஓயாப் பகுதியிலிருந்து தமிழ் மக்கள் முற்றாக வெளியேற்றப்பட்ட பல கிராமங்களுக்குள் இரண்டு கிராமங்கள் ஆகும். புதிதாகக் குடியேற்றப்படும் சிங்களக் குடியேற்றக்காரர்களின் பாதுகாப்பிற்காக சுற்றியிருக்கும் அனைத்துத் தமிழ்க் கிராமங்களிலிருந்து தமிழர்களை விரட்டிவிட்டு அக்கிராமங்களை அழிப்பது என்பது அரசாங்கத்தின் கொள்கை போன்றே அன்று செயற்படுத்தப்பட்டது. 1984 ஆம் ஆண்டு மார்கழி 24 ஆம் திகதி இராணுவத்தினர் மீது கண்ணிவெடித் தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அப்பகுதியெங்கும் ஒலிபெருக்கி அறிவித்தல் ஒன்றினை மேற்கொண்ட இராணுவத்தினர் கொக்கிளாய், கொக்கொத்துடுவாய், கருநாற்றுக் கேணி, காயடிக்குளம், கோட்டைக் கேணி ஆகிய கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் 24 மணி நேரத்திற்குள் அங்கிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று கட்டளையிட்டனர். 1984 ஆம் ஆண்டு மார்கழி மாதத்தின் முடிவில் இப்பகுதிகளிலிருந்து குறைந்தது 2,700 தமிழ்க் குடும்பங்கள் இராணுவத்தினரால் அச்சுருத்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர். இவற்றுள் ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் முல்லைத்தீவு மாவட்டத்திலும், தென்னைமரவாடி கிராம சேவகர் பிரிவு திருகோணமலை மாவட்டத்திலும் அமைந்திருந்தன. 1984 மார்கழி முதல் 1985 தை மாத இறுதிவரை வரை இப்பகுதியில் நடத்தப்பட்ட தமிழ் மக்கள் மீதான படுகொலைகளின் சாராம்சம், ஓதியாமலை - மார்கழி 1, 1984 - 27 தமிழர்கள் குமுழமுனை - மார்கழி 2, 1984 - குறைந்தது 7 தமிழர்கள் செட்டிகுளம் - மார்கழி 2, 1984 - 52 தமிழர்கள் மணலாறு - மார்கழி 3, 1984 - குறைந்தது 100 தமிழர்கள் மன்னார் - மார்கழி 4, 1984 - 59 தமிழர்கள் கொக்கிளாய் - மார்கழி 15, 1984 - 31 பெண்களும், 21 சிறுவர்களும் அடங்கலாக 131 தமிழர்கள் முள்ளியவளை - தை 16, 1985 - 17 தமிழர்கள் வட்டக்கண்டல் - தை 30, 1985 - 52 தமிழர்கள் (மேலதிக வாசிப்பிற்கு : https://tamilgenocidememorial.org/wp-content/uploads/2022/09/Massacres-of-Tamils-1956-2008.pdf) தென்னைமரவாடிப் படுகொலைகளின் பின்னர் உயிர்தப்பி வாழும் தமிழர்கள் (2004) 1988 ஆம் ஆண்டு ஊடகங்களுக்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சம்பந்தன் வழங்கிய தகவலில் மகாவலி "L" வலயத்திலிருந்து 3,100 தமிழ்க் குடும்பங்கள் இராணுவத்தினராலும், சிங்களவர்களாலும் அடித்து விரட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இவர்களுள் 2,910 குடும்பங்கள் வவுனியா மாவட்டத்திலிருந்தும், 290 குடும்பங்கள் வவுனியா மாவட்டத்திலிருந்தும் விரட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தமிழரின் பூர்வீகத் தாயகத்தின் சுமார் 15 கிராமங்களில் இருந்து தமிழ் மக்கள் இவ்வாறு விரட்டப்பட்டிருந்தனர். இந்தக் கிராமங்களில் பெரும்பான்மமையானோர் கொக்குத்தொடுவாய் (861 குடும்பங்கள்), கருநாற்றுக் கேணி (370 குடும்பங்கள்), கொக்கிளாய் (507 குடும்பங்கள்) மற்றும் முகத்துவாரம் (1004 குடும்பங்கள்) ஆகிய கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். சம்பந்தனின் அறிக்கையின்படி தமிழ் மக்கள் முற்றாக வெளியேற்றப்பட்ட கிராமங்களின் பட்டியலொன்று வெளியிடப்பட்டது, கொக்கிளாய், கருநாற்றுக் கேணி, கொக்குத்தொடுவாய், நாயாறு, ஆண்டான்குளம் கணுக்கேணி, உத்தராயன் குளம் மற்றும் உதங்கை என்பனவாகும். மேலும் தமிழர்கள் பகுதியளவில் வெளியேற்றப்பட்ட கிராமங்களாக ஒதியாமலை, பெரியகுளம், தண்டுவன், குமுழமுனை (கிழக்கும் மற்றும் மேற்கு), தண்ணியூற்று, முள்ளியவளை, செம்மலை, தண்ணிமுறிப்பு மற்றும் அளம்பில் ஆகியவை அடையாளம் காணப்பட்டன. இதேவகையான தமிழ் நீக்கச் செயற்பாடுகள் மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் காணப்பட்ட பாரம்பரிய தமிழ்க் கிராமங்களிலும் அரசால், இராணுவத்தினரின் துணைகொண்டு அரங்கேற்றப்பட்டு வந்தது.
-
கென்ட் - டொலர் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதல்கள் இராணுவ இலக்குகளாகவே பார்க்கப்படல் வேண்டும் - சிங்களப் பாதிரியார் கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளில் இருந்து இந்திய வம்சாவளித் தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டதும் பின்னர் வலி ஓயாவில் குடியேறிய சிங்கள் காடையர்கள் அயலில் உள்ள பாரம்பரிய தமிழ்க் கிராமங்களுக்குள் புகுந்து தமிழ் மக்களுக்கு சொல்லொணாத் துன்பங்களைக் கொடுத்து வந்ததும் தமிழ் மக்களுக்கு மிகுந்த வலியினை ஏற்படுத்தியிருந்தது. சிங்களத் தலைவர்களிடமிருந்து நியாயத்தன்மையினை ஒருபோதுமே எதிர்பார்க்க முடியாது என்கிற நிலைக்குத் தமிழ் மக்கள் வந்துவிட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் தொண்டைமான். என்னுடன் தனிப்பட்ட ரீதியில் அவர் பேசும்போது சிங்களத் தலைவர்கள் தூரநோக்கற்றுச் செயற்படுகிறார்கள் என்றும் தமது செயற்பாடுகளால் தமிழ் மக்கள் எவ்வகையான துன்பங்களுக்கு முகம் கொடுக்கிறார்கள் என்றோ அல்லது தமிழ மக்களின் இதுதொடர்பான உணர்வுகள் என்னெவென்றோ அவர்கள் சிறிதும் சிந்திக்கவில்லை என்றும் கூறினார். "இதற்குச் சரியான விலையினை அவர்கள் விரைவில் செலுத்த வேண்டி வரும்" என்று என்னிடம் அவர் மேலும் கூறினார். அவர் கூறியவாறே தமது செயல்களுக்கான விலையினை சிங்களத் தலைவர்கள் 1984 ஆம் ஆண்டு கார்த்திகை 30 ஆம் திகதி செலுத்தினார்கள். மறுநாள்க் காலை தொண்டைமானைச் சந்திப்பதற்காக அவரது அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். நான் உள்ளே நுழையும்போதே என்னைப் பார்த்துப் புன்னகைத்தார் அவர். "செய்தி கேள்விப்பட்டீர்களா?" என்று என்னைக் கேட்டார். அவர் சொல்வதைக் கேட்கவேண்டும் என்பதற்காக எதுவும் தெரியாதவர் போல அவரைப் பார்த்துக்கொண்டு நின்றேன். கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளில் அரசால் குடியேற்றப்பட்டிருந்த காடையர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்துப் பேசிய அவர், "தம்மிடம் அதிகாரப் பலம் இருப்பதால் தாம் எதனையும் செய்துவிடமுடியும் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இவர்களைக் காட்டிலும் பலமான சக்திகளும் இருக்கின்றன" என்று கூறினார். தொண்டைமானிடமிருந்து தமிழ் உணர்வு வெளிப்பட்டது இதுவே முதற்தடவையுமல்ல. அப்பாவிச் சிங்களவர்கள் கொல்லப்பட்டது தனக்கு வருத்தத்தினையளிப்பதாக அவர் கூறினாலும், தமிழர்களுக்கும் சுயகெளரவம், கண்ணியம், தமது மொழி மீதான பற்று, தமது மதம் மீதான பற்று, தமது அடையாளம் குறித்த பெருமை ஆகியன இருப்பதை சிங்களத் தலைமைகள் கண்டுகொள்ளாமைக்கான தண்டனையாக இத்தாக்குதல்களை அவர் பார்த்தார். கென்ட் - டொலர் பண்ணைகள் மீதான தாக்குதல் கார்த்திகை 30 ஆம் திகதி நடைபெற்றது. சென்னையில் தங்கியிருந்த பிரபாகரன் இத்திட்டத்தினை வகுக்க, தாயகத்தில் இருந்த மாத்தையா அதனை செயற்படுத்தினார். சுமார் 50 போராளிகள் கொண்ட குழுவினர் இரவு வேளையில் பஸ் வண்டிகளில் ரைபிள்கள், இயந்திரத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் என்பவற்றைத் தாங்கியவாறு அப்பகுதி நோக்கிச் சென்றனர். ஒரு பஸ் கென்ட் பண்ணை நோக்கிச் செல்ல மற்றையது டொலர் பண்ணை நோக்கிச் சென்றது. அதிகாலை வேளையில் ஒரே நேரத்தில் இந்த பண்ணைகள் மீது தாக்குதல்கள் ஆரம்பமாகின. தாக்குதலில் ஈடுபட்ட புலிகள், காவலாளிகள், ஆண்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன் சிலரை வெட்டியும் கொன்றனர். சில காடையர்கள் அறைகளுக்குள் அடைக்கப்பட்டுக் குண்டுவைத்துக் கொல்லப்பட்டார்கள். டொலர் பண்ணையில் அன்று 62 சிங்களவர்களும் மூன்று சிறைக் காவலர்களும் புலிகளால் கொல்லப்பட்டார்கள். டொலர் பண்ணையில் இருந்து 8 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்த கென்ட் பண்ணைக்குச் சென்ற புலிகள் அங்கும் 20 சிங்களவர்களைக் கொன்றார்கள். மறுநாள்க் காலையில் இராணுவமும் பொலீஸாரும் அவ்விடத்தை அடையுமுன்னர் புலிகளின் அணி அங்கிருந்து வெளியேறியிருந்தது. காலையில் அப்பகுதிக்கு வந்த இராணுவத்தினரும் பொலீஸாரும் அப்பகுதியைச் சுற்றித் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன்போது 30 புலிகளைத் தாம் கொன்றுவிட்டதாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால் அவ்வாறு கொல்லப்பட்டவர்கள் அனைவருமே அயலில் இருந்த தமிழ்க் கிராமங்களில் இருந்து இராணுவத்தால் இழுத்துவரப்பட்ட பொதுமக்கள் தான் என்று கிராமவாசிகள் தெரிவித்தனர். தாக்குதலில் ஈடுபட்ட தமது அணி இழப்புக்கள் எதுவுமின்றி பாதுகாப்பாக தளம் திரும்பியதாக புலிகள் பின்னர் அறிவித்திருந்தனர். பொதுமக்கள் மீது புலிகள் முதன்முதலாக நடத்திய தாக்குதலே கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் மீதான தாக்குதல்களாகும்.இத்தாக்குதல்களை புலிகளுக்கெதிரான தீவிரப் பிரச்சாரப் பொருளாக அரசு பாவித்தது. சிங்களப் பொதுமக்கள் மீதான இத்தாக்குதல்கள் ஏனைய போராளி அமைப்புகளுக்குள்ளும் தமிழ் மக்களுக்குள்ளும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியிருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் பத்மநாபா இத்தாக்குதல்களைக் கண்டித்திருந்தார். தமிழ் மக்களின் போராட்டம் சிங்கள அரசுக்கும் அதன் இராணுவத்திற்கும் எதிரானதேயன்றி சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என்று அவர் கூறினார். பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் மனச் சாட்சிக்கு விரோதமானவை என்று புலிகள் கருதியதால் இத்தாக்குதல்களுக்கு உரிமை கோருவதில் இருந்து விலகிநின்றனர். ஆனால், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் அமைப்பினர் சிலர் பிரபாகரனிடம் தனிப்பட்ட ரீதியில் இத்தாக்குதல்கள் குறித்து வினவியபோது அதனைத் தாமே நடத்தியதாக அவர் ஒத்துக்கொண்டிருந்தார். ஆனால், தம்மால் கொல்லப்பட்டவர்கள் சாதாரண பொதுமக்கள் இல்லையென்பதை ஆணித்தரமாக மறுத்த அவர், தமிழரின் தாயகத்தைக் கூறுபோடுவதற்காக அரசாலும், இராணுவத்தாலும் அப்பகுதியில் அடாத்தாக குடியேற்றப்பட்ட சிங்களக் கிரிமினல்கள் மீதே தாம் தாக்குதல் நடத்தியதாக அவர் வாதிட்டார். மேலும், தாக்குதல்களின்போது பெண்களையும் குழந்தைகளையும் தவிர்த்து விடுமாறு தனது போராளிகளுக்குக் கடுமையான உத்தரவுகள் வழங்கப்பட்டிருந்தன என்றும் அவர் கூறினார். தாக்குதலில் ஒரேயொரு பெண் மட்டுமே கொல்லப்பட்டதாகவும், அவர்கூட தனது கணவரை அணைத்தபடி அறைக்குள் சென்றபோது அவ்வறை மீது குண்டெறியப்பட்ட வேளை கொல்லப்பட்டதாக அவர் கூறினார். இத்தாக்குதல் குறித்து இரு சிங்களக் கத்தோலிக்கப் பாதிரியார்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். அவர்களில் ஒருவரான செலெஸ்ட்டின் பெர்ணான்டோ எனும் பாதிரியார், வலி ஓயா குடியேற்றத் திட்டம் அரசால் வேண்டுமென்றே வலிந்து உருவாக்கப்படதென்றும், தமிழ் மக்களையும் போராளிகளையும் சீண்டும் நோக்கிலேயே இது ஆரம்பிக்கப்பட்டதென்றும் கூறியதோடு, இத்தாகுலை பொதுமக்கள் மீதான தாக்குதல் என்று பார்க்கமுடியாதென்றும் இராணுவ இலக்காகவே பார்க்கப்படல் வேண்டும் என்றும் கூறியிருந்தார். தாக்குதல் நடந்தவேளையில் அங்கிருந்து உயிர்தப்பிய சிங்களப் பெண்ணான ஜெஸி நோனா என்பவர் தானும் தனது மகளும் அயலில் இருந்த இன்னொரு சிங்களக் குடியேற்றக் கிராமமான பதவியாவின் பராக்கிரமபுரவுக்குள் ஓடிச் சென்றதாகவும், தனது மருமகன் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் மனிதவுரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திடம் தெரிவித்திருந்தார். லேக் ஹவுஸ் நிறுவனத்தின் சிங்களப் பத்திரிக்கையான சிலுமினவுக்குப் பேட்டியளித்த ஹேமசிறி பெர்ணாண்டோ சாவிலிருந்து தான் எவ்வாறு தப்பி வந்தேன் என்பதை விளக்கியிருந்தார். "எனது குடும்பத்தினருடன் ஆழ்ந்த உறக்கத்தில் நான் இருந்தேன். திடீரென்று நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. கூடவே துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் கேட்கத் தொடங்கின. என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு வீட்டிற்கு வெளியே வந்தேன். யாரோ ஒருவர் எனது முகத்தை நோக்கி டோர்ச் வெளிச்சத்தைப் பாய்ச்சுவது தெரிந்தது. என் முகத்திற்கு நேரே துப்பாக்கியை ஏந்திப் பிடித்த அவர் எனது கைகளை உயர்த்துமாறு கட்டளையிட்டார். பின்னர் சத்தம் போடாமல் ஓடிவிடு என்று மெதுவான குரலில் என்னைப் பணித்தார், நானும் அதற்குப் பணியச் சம்மதித்தேன்.." "அவர் என்னை அருகிலிருந்த ஒரு குடிசைக்குள் இழுத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து இன்னொரு குடிசைக்கு இழுத்துச் செல்லப்பட்டேன். என்னைப்போல இன்னும் மூன்று ஆண்களை அவர் பிடித்து வைத்திருந்தார். நாங்கள் நடத்திச் செல்லப்படும்போது குண்டு வெடிக்கும் ஓசையொன்று கேட்டது. அவ்வெடிப்பில் 15 கைதிகள் கொல்லப்பட்டனர். அதுவே போராளிகள் தாக்குதலை முடித்துக்கொண்டு திரும்புவதற்கான சமிக்ஞையாக இருந்திருக்கும்" என்றும் அவர் கூறினார்.
-
தமிழ்க் கிராமங்களைச் சூறையாடி, தமிழ்ப் பெண்களை இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட சிங்களக் குடியேற்றக்காரர்கள் தனது குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்ள, தான் அமைத்த இணைந்த தலைமையகம் உதவும் என்று லலித் கருதினார். இத்தலைமையகத்தின் முக்கிய கடமைகளாக மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பினைக் கண்காணிப்பது, சிவில் நிர்வாகத்தைக் கண்காணிப்பது, நில வழங்கலைக் கையாள்வது என்பன காணப்பட்டன. மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் "L" வலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இந்தத் தலைமையகம் தனது கட்டுப்பாட்டினைக் கொண்டிருந்தது. இத்தலைமையகத்திற்கு முப்படைகள், அரச திணைக்களங்கள் மற்றும் ஏனைய அமைப்புக்களின் முற்றான ஆதரவு கிடைக்கப்பெற்று வந்தது. தமிழர்களின் பூர்வீகப் பிரதேசமான மணலாற்றில் தான் விரும்பிய வகையில் இராணுவ மயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை அமைத்துக்கொள்ளும் அதிகாரத்தினை இணைந்த தலைமையகத்தினூடாக லலித் அதுலத் முதலி பெற்றுக்கொண்டார். மணலாறு பிரதேசம் ஏற்கனவே அமைக்கப்பட்டு வந்த இன்னொரு சிங்கள குடியேற்றமான பதவியாவிற்கு வடக்கே அமைந்திருந்தது. மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்கு உட்பட்ட பகுதி எனும் அடிப்படையில், இப்பிரதேசத்தில் இருக்கும் காணிகளில் தனது திட்டத்திற்கென்று எவற்றையும் கையகப்படுத்தும் அதிகாரம் லலித்திற்கு வழங்கப்பட்டிருந்தது. அசோக டி சில்வா மகாவலி அபிவிருத்தித் திட்டத்தினுள் உள்வாங்கப்படுகின்ற பகுதி எனும் போர்வையில் மணலாற்றின் நிர்வாகத்தை பெரும்பான்மைச் சிங்களவர்களைக் கொண்ட அநுராதபுரத்திற்கு லலித் மாற்றினார்.இப்பகுதியை முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததுடன் தமிழர்களை இப்பகுதியிலிருந்து முற்றாக வெளியேற்றினார் லலித்.வவுனியா, திருகோணமலை, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் தமிழ் நிர்வாக அதிகாரிகள் கூட இராணுவத்தினரின் அனுமதியின்றி இப்பகுதிக்குள் செல்வது தடுக்கப்பட்டது. இராணுவத் தேவைக்காக வலி ஓயா (மணலாறு) தனிமாவட்டமாக கணிக்கப்பட்டு இப்பகுதிக்கென்று தனியான ஒருங்கிணைப்பு அதிகாரியொருவரும் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டார். லலித்தின் கூட்டுச் சேவைகள் தலைமையகத்திற்கு முன்னாள் கடற்படைத் தளபதியான அசோக டி சில்வா நியமிக்கப்பட்டார். அவருக்கு உதவியாளராக முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும், மகாவலி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமாகக் கடமையாற்றிய டி.ஜே. பண்டாரகொட நியமிக்கப்பட்டார். பண்டாரகொடவுக்கு வழங்கப்பட்ட ஒரே பணி வலி ஓயா திட்டம் வெற்றிகரமாக நடத்தப்படுவதைக் கண்காணிப்பது மட்டும்தான். பண்டாரகொடவை ஜெயார் தனது சொந்த விருப்பின் பெயரில் முன்னர் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமித்திருந்தார். ஜெயாரின் அபிமானத்தைப் பெற்றிருந்த பண்டாரகொடவும் தனது நிர்வாகத்தின்கீழ் திருகோணமலை மாவட்டத்தில் பெரும் எடுப்பிலான சிங்களக் குடியேற்றங்களை முன்னெடுத்ததுடன், தமிழர்களின் சனத்தொகை வீதாசாரத்தில் பாரிய வீழ்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தார். இவரையே வலி ஓயா திட்டத்திற்கும் அரசாங்கம் நியமித்திருந்தது. லலித்தினால் ஆரம்பிக்கப்பட்ட கூட்டுச் சேவைகள் தலைமையகம் உடனடியாகச் செயற்பாட்டில் இறங்கியது. இதன் செயற்பாடு குறித்து 1984 ஆம் ஆண்டு மார்கழி 2 ஆம் திகதி வீக்கெண்ட் எனும் வார இறுதிப் பத்திரிக்கையில் டொன் மிதுன இவ்வாறு எழுதுகிறார், "கிழக்கு மாகாணத்தில் சர்ச்சைக்குரிய வடமுனையில் சிங்களவர்களைக் குடியேற்ற அரசு முன்னெடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்ததையடுத்து அவர்களை வேறு பகுதியில் குடியமர்த்தவேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டிருந்தது. ஆகவே, பதவியாவின் எல்லையோரமாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் நெடுங்கேணியிலிருந்து பதவியா வரையான பகுதிகளை சிங்களப் பாதுகாப்பு அரணாக மாற்றும் நோக்கத்துடன் சிங்களக் குடியேற்றத்தை உருவாக்க அரசு தீர்மானித்திருக்கிறது". ஆரியகுண்டம், டொலர் பண்ணை மற்றும் அதனையண்டிய பகுதிகளில் இருந்த காடுகளை அரசு அழித்து துப்பரவு செய்ய ஆரம்பித்தது. பதவியா சிங்களக் குடியேற்றத்திலிருந்து டொலர் பண்ணை, கும்பகர்ணன் மலை, ஆரியகுண்டம், கொக்குச்சான்குளம், கொக்குத்தொடுவாய் மற்றும் வெடுக்கன் மலை ஆகிய பகுதிகளை இணைக்க நான்கு சாலைகள் அமைக்கப்பட்டன. வலி ஓயா குடியேற்றத்தை முன்னெடுக்க இராணுவ வாகனங்கள், விவசாயக் கூட்டுத்தாபனத்தின் வாகனங்கள், இல்மனைட் தொழிற்சாலையின் வாகனங்கள், புகையிலைக் கூட்டுத்தாபனத்தின் வாகனங்கள், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வாகனங்கள் என்பன பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. டொலர் பண்ணைப் பகுதியில் உடனடியாகவே சில சிங்களக் குடும்பங்கள் குடியேறத் தொடங்கியிருந்தன. வவுனியா மற்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர்கள், உதவி அரசாங்க அதிபர்கள், காணி அதிகாரிகள் என்று தமிழ் பேசும் எவருமே வலி ஓயாத் திட்டம் குறித்து எதுவித தகவல்களையும் அறிந்துகொள்ளாதபடி இருட்டில் வைக்கப்பட்டிருந்தனர். இப்பகுதியினை இராணுவம் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன் விமானப்படையினருடன் இணைந்து தொடர்ச்சியான ரோந்துகளும் இப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு, வெளியார் இப்பகுதிக்குள் நுழைவதை முற்றாகத் தடுத்து வந்தனர். முல்லைத்தீவில் வசித்துவந்த தமிழர்கள் இரவுவேளைகளில் தொடர்ச்சியாக பாரிய புல்டோசர்கள் காட்டுப்பகுதிகளில் இயங்கிவருவதைக் கேட்டதுடன், பாரிய குழாய்கள் அப்பகுதி நோக்கிக் கொண்டுசெல்லப்படுவதையும் கண்டிருக்கின்றனர். பிரபல சிங்களச் செய்தியாளர் ஒருவரின் அறிக்கை கீழே. "தமிழர்களின் தாயகமான தமிழ் ஈழத்தின் முக்கிய மாகாணங்களான வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் முக்கிய நிலப்பகுதியை உடைத்து சிங்களக் குடியேற்றம் ஒன்றினை ஏற்படுத்து அரச உயர்மட்டத்தின் இரகசியத் திட்டத்தின் ஆரம்பமே இந்தக் குடியேற்றமாகும்". இத்திட்டத்தின்படி 200,000 சிங்களவர்களை வலி ஓயாவில் அரசு குடியேற்றியதாக குணரட்ண பின்னாட்களில் என்னிடம் கூறினார். கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளில் குடியேற்றப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் ஆகும். களவு, கள்ளச்சாரயம் காய்ச்சுதல், வன்முறைகளில் ஈடுபடுதல், பொதுமக்களை அச்சுருத்தல் ஆகிய குற்றங்களுக்காகத் தென்பகுதிச் சிறைகளில் அடைக்கப்பட்டவர்களையே குடும்பங்களுடன் இப்பகுதியில் அரசு குடியேற்றியது. பின்னாட்களில் இப்பண்ணைகளில் அரசால் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதல்களையடுத்து பல தென்பகுதி ஊடகங்களும், அரச ஊடகங்களும் கடுமையான பிரச்சாரத்தை முடுக்கிவிட்டிருந்தன. தாக்குதலில் உயிர்தப்பிய சில சிங்களவர்கள் பேசும்போது சிங்களக் குடியேற்றத்திற்கு அருகில் இருந்த தமிழ்க் கிராமங்களுக்குள் சென்ற இராணுவத்தினரும், சிறைக் காவலர்களும், சிறைக் கைதிகளும் தமிழர்களைத் தொடர்ச்சியாகத் துன்புறுத்தி வந்ததுடன், அப்பகுதிகளில் இருந்து தமிழர்களை விரட்டுவதிலும் ஈடுபட்டு வந்ததை ஒத்துக்கொண்டிருந்தனர். சிங்களக் குடியேற்றத்திற்கு அயலில் இருந்த தமிழ்க் கிராமங்களில் இளைஞர்களைத் தாக்கித் துன்புறுத்தியதுடன், அங்கிருந்து கால்நடைகளையும் விவசாயப் பொருட்களையும் மிரட்டி எடுத்துவந்ததாகவும் அவர்கள் மேலும் கூறினர். மனிதவுரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எனும் அமைப்பினர் புலிகளின் தாக்குதலின் பின்னர் உயிர்தப்பியவர்களுடன் நடத்திய நேர்காணலில் சில விடயங்களைச் சிங்களக் குடியேற்றவாசிகள் தெரிவித்திருந்தனர். சிங்களக் கைதிகளையும், காடையர்களையும் இப்பகுதியில் குடியேற்றியதன் இன்னொரு நோக்கம் அயலில் உள்ள தமிழர்களை விரட்டுவது ஆகும் என்று கூறினர். மேலும் பல தமிழ்ப்பெண்களை இழுத்துவந்து கூட்டாகப் பாலியல் வன்புணர்வில் சிங்களவர்கள் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இராணுவத்தினரால் இழுத்துவரப்படும் தமிழ்ப்பெண்கள் முதலில் இராணுவத்தால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுள்ளாக்கப்பட்டபின்னர் சிறைக் காவலர்களிடம் கொடுக்கப்படுவார்கள் என்றும், சிறைக்காவலர்கள அவர்களைக் கூட்டாக வன்புணர்ந்த பின்னர் இறுதியாக சிங்களக் கைதிகள் அப்பெண்கள் மீது வன்புணர்வில் ஈடுபடுவார்கள் என்றும் உயிர்தப்பிய சிங்களவர்கள் தெரிவித்தனர். Jessi Nona, Hemasiri Fernando and others also spoke of harassment of Tamils living in surrounding villages by soldiers, prison guards and some convicts. Those from the settlement stole poultry, cattle and agricultural produce. They assaulted Tamil youths. The UTHR (J) report quotes a Sinhala activist from a leftwing political group who went to Dollar and Kent Farms for humanitarian work following the LTTE attack thus: Winner of the Young Journalist Award for 2002, Amantha Perera of the Sunday Leader, in his On the Spot Report published in his paper of 19 May 2002, says: "The convicts, in fact, had been used to stealing from Tamil villages from the area and incidents of rape too had been attributed to the convicts".
-
யேசுநாதரின் மூதாதையர் எனும் காரணத்திற்காக யூத ஆக்கிரமிப்பாளர்களை ஆதரிக்கும் ஒரு சிலர் இங்கு உலவுகிறார்கள். ஆனால், 1980 களின் நடுப்பகுதியில் இஸ்ரேலிய மொசாட் ஈழத்தமிழர் விடயத்தின் என்ன செய்துகொண்டிருந்தது என்பதை இந்த அடிவருடிகள் அறிந்துகொள்வது நல்லது. மணலாற்றில் சிங்கள மயமாக்கலினைச் செய்யுமுன் நெடுங்கேணியில் இருந்து தமிழர்களை மொசாட்டின் ஆலோசனனியின்படி எப்படிச் சிங்களப் பேரினவாதம் விரட்டியது என்பதற்கான சிறிய வரலாற்றுக் குறிப்பு ஒன்று, "MOSSAD’s plan was nothing but the classic counterinsurgency program – complete evacuation and destruction of villages supporting the insurgents along with destruction of crops and prevention of cultivation. The British implemented that scheme in Malaya (Malaysia) during the communist insurgency of the ‘fifties and Israel modified it to suit its needs by establishing Jewish border settlements to plug the infiltration and movement of Palestinian guerillas. MOSSAD advised Athulathmudali to do the same: plug the routes and dry up the supplies. Israeli advice suited Athulathmudali’s mission of destroying the territorial base of Tamil Eelam and his ambition of becoming Jayewardene’s successor".
-
இங்கே மேற்கை ஆதரிப்போரும், எதிர்ப்போரும் புரியும் வாதங்களுக்கு நடுவிலே ஒருவர் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கூறிவிட்டுப் போகிறார். அது உங்கள் இருவரினதும் கண்களுக்குத் தெரியவில்லை, நீங்கள் உங்கள் சண்டையில் மும்முரமாக இருக்க, சந்தில் சிந்துபாடிவிட்டு ஒருத்தர் போயிருக்கிறார். முடிந்தால், புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று கூறுங்கள் . அல்லது, அமைதியாக இருந்து அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளுங்கள். கத்தோலிக்கர்களின் இயல்பான மேற்குச் சார்பு நிலையும், வேதாகமத்தின் வழியான யூதச் சார்பு நிலையும் சொந்த மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று கொச்சைப்படுத்திவிட்டுச் செல்ல தூண்டியிருக்கிறது. உங்களுக்கென்ன, அமெரிக்கா ஈரான் சண்டையில் நீங்கள் திளைத்திருங்கள் !
-
அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு, இஸ்ரேலிய பிராந்திய வல்லரசு என்று எத்தனை பலம்பொருந்திய நாடுகள் வந்தாலும் கூட, தாம் இவர்களுக்கெதிரான யுத்தத்தில் ஒருபோதும் வெல்லப்போவது கிடையாது என்று தெரிந்தும், இன்றுவரை தம்மால் முடிந்தளவு இந்தப் பலங்களுக்கு அழிவை ஏற்படுத்த பலஸ்த்தீனர்களும், ஏனைய முஸ்லீம்களும் ஏன் முயல்கிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது. கெஞ்சியும், இரைஞ்சியும், கால்களில் வீழ்ந்தும் கேட்டாயிற்று. பல லட்சக் கணக்கில் உயிர்களைக் கொடுத்தும் அனுதாபத்தையோ நீதியையோ அவர்களால் தேட முடியவில்லை. ஆகவேதான் திருப்பியடிக்கிறார்கள். எடுப்பார் கைப்பிள்ளைகளாகி ஒருநாள் அழிவதைக் காட்டிலும் திருப்பியடித்து அழிந்துபோனாலும் பரவாயில்லை என்கிற நிலைக்கு வந்துவிட்டார்கள். அவர்களில் தவறில்லை.