Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. இனி இலங்கை தமிழர் களின் வாழ்வில் தமிழரசு கட்சி என்ற ஒன்றே இருக்காது .
  2. பலாலிக்கு பயணம் செய்பவை சிறிய ரக விமானம்கள் அவற்றில் 2௦கிலோவுக்கு மேல் பயண பொதி கொண்டு போக முடியாது என்று நினைக்கிறேன் .
  3. அம்பாறை (Ampara) - பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக பொதுமக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு சென்ற சுமந்திரன் மற்றும் சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்று (16.02.2025) இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது போராட்டக்காரர்கள் சுமந்திரன் மற்றும் சாணக்கியனை அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்திய நிலையில் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையினை மூடுமாறு வலியுறுத்தி பெரியநீலாவனை பகுதியில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் எதிர்ப்பு இந்நிலையில், இன்று அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் ஆகியோர் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்றுள்ளனர். இதன்போது, அப்பபகுதியில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து திரும்பிச்சென்றுள்ளனர். அதேவேளை, அங்கு உரையாற்றிய சுமந்திரன், பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். Tamilwinபோராட்டத்துக்கு சென்ற சாணக்கியன் - சுமந்திரன் : விரட்டியட...அம்பாறை (Ampara) - பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக பொதுமக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு ச...Tamilwinபோராட்டத்துக்கு சென்ற சாணக்கியன் - சுமந்திரன் : விரட்டியட...அம்பாறை (Ampara) - பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக பொதுமக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு ச...
  4. நன்றி இணைப்புக்கும் பதிவுக்கும் பலரும் மறந்து போன ஒன்று .
  5. இலங்கையில் ஒரு போதும் சிங்கள தமிழ் இனவாத வெறி எந்த காரணம் கொண்டும் அணையாது அந்த இனவாதா வெறி இருக்குமட்டும் ஆயிரம் அனுரா வந்தாலும் இலங்கை தீவில் அமைதியை கொண்டு வர முடியாது என்பது இந்த குள்ள நரிக்கு தெரிந்து இருக்கு அதையே ஆருடம் போல் அடித்து விட்டு இருக்கு அங்கும் இங்கும் தப்பி வந்து கடைசியில் தையிட்டியில் அனுரா அரசு மாட்டு பட்டு இருக்கு அதில் இருந்து எப்படி தப்பி பிழைக்க போகிறார்கள் என்றுதான் பார்க்கணும் .
  6. ரஷ்ய ஜனாதிபதி புடினை நிபந்தனைகளுடன் சந்திக்கத் தயார் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி புடினைத்(Vladimir Putin) தவிர மற்ற ரஷ்ய(Russia)அதிகாரிகளைச் சந்திக்க திட்டமிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஜெலென்ஸ்கியின் திட்டம் இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், "நான் ரஷ்யர்களைச் சந்திக்க மாட்டேன், அது எனது திட்டத்தில் இல்லை. நான் ஒரே ஒரு ரஷ்யரை மட்டுமே-அதாவது புடினை மட்டுமே சந்திப்பேன். அதுவும் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பாவுடன் இரு நாடுகளுக்கான பொதுவான திட்டம் உருவான பிறகே, புடினுடன் அமர்ந்து போரை முடிவுக்கு கொண்டு வருவோம். அத்துடன் இந்த விஷயத்தில் மட்டும் அவரைச் சந்திக்க தயாராக இருக்கிறேன்," என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். முன்னதாக, ரஷ்ய மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் சவுதி அரேபியாவில் சந்திக்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/zelenskyy-ready-to-meet-putin-under-one-condition-1739565283
  7. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீழ்ச்சிக்கு சுமார் ஒரு வருடம் முன்பு, அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க கூறிய அரசியல் மற்றும் பொருளாதார கணிப்புகள் பெரும்பாலானமை உண்மையாகின. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரணில் விக்ரமசிங்க. தனது நெருங்கிய பத்திரிகையாளர்கள் குழுவிடம் இதேபோன்ற பல கணிப்புகளை வெளியிட்டுள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, நாட்டின் எதிர்காலம் மீண்டும் இருளடையும் என்று ரணில் விக்ரமசிங்க அந்த பத்திரிகையாளர்களிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்களுக்கு நன்மை வெளிநாடுகளுக்கு மக்கள் குடிபெயர நான் ஒருபோதும் ஊக்குவித்ததில்லை. ஆனால் தற்போதுள்ள நிலையில் அதனை செய்தால் நாட்டு மக்களுக்கு நன்மை ஏற்படும் என ரணில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் சக்திவாய்ந்த நபரிடமிருந்து சமீபத்தில் வந்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த கணிப்புக்கு வழிவகுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பல்வேறு விமர்சனங்கள் பெரும்பான்மை பலத்துடன் சமகால அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், பொருளார ரீதியான அவர்களின் அணுகுமுறை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அரசியல் அனுபவம் அற்ற புதியவர்களால் நாட்டினை சரியான முறையில் நிர்வகிக்க முடியவில்லை என பல்வேறு தரப்பிலிருந்தும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளன நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்து வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/sri-lanka-will-be-dark-again-ranil-reveal-1739543837
  8. வருடாந்தம் சுமார் 1200 சிறுவர்கள், புற்றுநோயாளர்களாக அடையாளம் காணப்படுவதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர், நிணநீர் சுரப்பி புற்றுநோய், எலும்பு புற்றுநோய் மற்றும் மூளை புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை இதேவேளை இவர்களில் வருடாந்தம் சுமார் 250 சிறார்கள் உயிரிழப்பதாகவும் தேசிய புற்றுநோய் ஒழிப்பு திட்டத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார். குழந்தை பருவத்தில் ஏற்படும் புற்றுநோயை தடுப்பதற்கான இயலுமை குறைவாக உள்ளதாகவும் சமூக வைத்திய நிபுணர் கூறியுள்ளார். குழந்தை பருவ புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விரைவில் அதற்கான சிகிச்சைகளை உரிய முறையில் பெற்றுக்கொள்வதன் மூலம் அதனை இலகுவில் குணப்படுத்தலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/cancer-kills-around-250-children-every-year-1739494673
  9. ராஜபக்ச தரப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை தேர்தல் மேடைகளில் அடுக்கியிருந்தது தற்போது ஆட்சி அமைத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம். குறிப்பாக முன்னைய ஆட்சி காலத்தில் ராஜபக்சர்கள் பல்வேறு நிதி மோசடிகளை செய்திருந்ததாகவும், இதனை தாம் ஆட்சிக்கு வந்தால் பகிரங்கப்படுத்துவோம் எனவும் சூளுரைத்திருந்தது தேசிய மக்கள் சக்தி தரப்பு. ஆனால் தற்போது அவர்களின் ஆட்சி நடவடிக்கைகள் தொடர்பில் சமூக மட்டத்தில் எதிர்மறையான கருத்துக்கள் உருவாக ஆரம்பித்துள்ளன. அநுர அரசு ராஜபக்சர்களை கைது செய்து நீதி வழங்குவோம் என தெரிவித்தவர்கள். எனினும் தற்போது அதனை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதன் காரணம் யாது என எதிர் தரப்புக்கள் கேள்விகளை முன்வைக்கின்றன. இந்நிலையில் இவ்வாறான சர்ச்சைகளுக்கு மத்தியில், தற்போதைய அரசாங்கத்துக்கும் ராஜபக்சர்களுக்கும் காணப்படும் முரண்கள் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பில் ஆராயப்பட்டது. இதன்போது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சமூக செயற்பாட்டாளர் சிராஸ் யூனுஸ், மகிந்த விவகாரத்தில் அநுர தரப்பு அச்ச நிலைகளை வெளிப்படுத்துவதாக கூறியுள்ளார். https://tamilwin.com/article/anura-is-afraid-to-touch-mahinda-1739458881
  10. ஜெர்மனியின் முனீச் நகரில் இடம்பெற்ற போராட்டத்தில் கார் ஒன்று பாய்ந்தமையால் 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். முனீச் நகரில் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், உலகத் தலைவர்கள் பலர் அங்கு பங்குபற்றியுள்ளனர். குறித்த நகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர். பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு இந்நிலையில், போராட்டக் களத்திற்குள் வேகமாக உட்புகுந்த கார், மோதியதில் 28 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, காரினை செலுத்திய 24 வயதுடைய இளைஞன் ஒருவர் ஜெர்மனி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, சர்வதேச மாநாடு நடக்கும் இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி ஜெர்மனியின் மாக்டேபர்க் நகரின் கிறிஸ்துமஸ் சந்தை கூட்டத்திற்குள் வேகமாக நுழைந்த காரில் மோதியதில் 5 பேர் உயிரிழந்ததோடு 200 பேர் வரை காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/car-accidents-germany-1739481321
  11. இந்த கிராமத்தில் அனைத்து ஆண்களும் கட்டாயம் 2 திருமணங்களைச் செய்து கொள்ள வேண்டும். எந்த கிராமம்? இந்திய மாநிலமான ராஜஸ்தான், ஜெய்சால்மரில் உள்ள ராம்தேயோ-கி-பஸ்தி கிராமத்தில் வினோத பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கிராமத்தில் மொத்தம் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களும் கட்டாயம் இரண்டு திருமணங்களை செய்து கொள்வார்களாம். இதனை பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகின்றனர் என்றும் சொல்லப்படுகிறது. இதன் பின்னால் அதிர வைக்கும் காரணம் ஒன்றும் உள்ளது. நமது நாட்டில் இந்து திருமண சட்டத்தின்படி பலதர மணம் என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகிறது. ஆனால், இந்த கிராமத்தில் ஆண்கள் பல திருமணங்களை செய்கின்றனர். அதாவது, தன்னுடைய முதல் மனைவியால் எப்போதும் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க முடியாது என்று கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களும் இந்த காரணத்தினால் தான் இரண்டாவது திருமணத்தை செய்து கொள்கின்றனர். ஆனால், இதற்கு தற்போதுவரை அதிகாரபூர்வமாக அறிவியல் காரணங்கள் இல்லை. மேலும், இரண்டாவது மனைவிக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை என்றாலும் சிலருக்கு பெண் குழந்தைகளும் பிறக்கிறது. இதனால், அங்கு பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் சொல்கின்றனர். தற்போது, இது குறித்து இளைய தலைமுறையினர் பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். இது பெண்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சமத்துவத்தைப் பறிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். https://news.lankasri.com/article/indian-village-men-are-forced-to-have-2-marriage-1739165971?itm_source=article
  12. சிங்களம் வழக்கம் போலவே நினைக்குது எப்பாடு பட்டாவது தமிழரின் அபிலசைகள் வேட்ட்கைகள் எப்பாடு பட்டாவது தணிப்பது அதன்பின் அதே புலம் பெயர் தமிழர்பணத்தின் மூலம் இலங்கையை தன்னிறைவு பெற்ற நாடாக்குவது அதன் பின் ஆதே தமிழரை கொதி தூளில் போடும் தாரில் எரிப்பது இதுதான் அவர்களின் ஒரே நோக்கம் . முடிந்தால் இந்த அனுராவால் பயங்கரவாதஉலகளவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க சொல்லுங்க பார்க்கலாம் .
  13. ஒரு சில இடங்களில் குரங்குகள் பாய்ந்து எரிந்து போவது வழமை அதற்குப் பதிலாக சப் ஜெனரேட்டர்கள் என்ன செய்கின்றன ? சிலவேளை நம்ம வன்னியன் சார் தான் வந்து விளக்க்கம் தரனும் . @வன்னியன்அண்ணா இங்கு அழைக்கபடுகிறார் .
  14. ஊட்டி குளிர் அதிகம், அதிகாலை நேரம் ! போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு ஃபோன் கால்! சேரிங் கிராஸ்ல மூணாவது தெருவில் பத்தாம் வீட்டில் இருப்பவன் ! குளிர் காய வைத்திருக்கும் விறகில் போதை பொருள் வைத்து இருக்கிறான் சார்! போய் உடனே அதை கைப்பற்றுங்க! செய்தியை கேட்டவுடன் போலீஸ் படை போலீஸ் அங்கு சென்றது! அந்த வீட்டில் நிறைய விறகு இருந்துச்சு. போலீஸ் கோடாரியால் எல்லா விறகையையும் வெட்டி போட்டு தேட ஒன்றும் கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் கிளம்பி சென்றனர். அவர்கள் போனவுடன் அவனுக்கு ஃபோன் வந்துச்சு! சார்! நான் குமார் பேசுகிறேன்! உங்க கிட்ட விறகு வெட்ட சொல்லி ஐநூறு ரூபாய் வாங்கிட்டு போனேன் இல்ல. ஆமாம் ! இப்ப போலீஸ் வந்து விறகு எல்லாம் வெட்டி கொடுத்து விட்டு போய் விட்டார்கள் இல்ல! ஆமாம் குமாரு! ஆனா ஏன் போலீஸ் வந்து விறகை வெட்டி ஒன்றும் புரியவில்லை! அதெல்லாம் விடுங்க சார்! வேலை முடிஞ்சு போச்சு இல்ல! இனி எந்த வேலை என்றாலும் குமாரை கூப்பிடுங்க! சரியா!
  15. ஒரு கதை . ஒரு பெரிய மலையின் அடிவாரத்தில் நிறைய விலங்குகள் வாழ்ந்து வந்தன. அதில் சுமத்திரன் என்ற நரி ஒன்று இருந்தது. ஒரு நாள் அந்த நரி இரை தேடி அலைந்து கொண்டிருந்தபோது இறந்து கிடந்த ஒரு யானையின் உடலை பார்த்தது. அதைப் பார்த்ததும் சுமத்திரன் என்ற நரி தலைகால் புரியவில்லை இன்று வசமாக நமக்கு தீனி கிடைத்து விட்டது என்று அந்த யானையை சுற்றி சுற்றி வந்தது. ஆனால் அந்த சுமத்திரன் என்ற நரிக்கு யானையின் தோலை எப்படி உரிப்பது என்று தெரிய வில்லை அதன் கைகளிலும் கால்களிலும் அந்த அளவிற்கு நகங்கள் இல்லை என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தது. யாராவது இந்த வழியில் வந்தால் தந்திரமாக பேசி அவர்களை உதவிக்கு அழைக்கலாம் என்று நினைத்தது. அப்போது அந்த வழியில் ஒரு சிங்கம் வந்தது. சிங்கத்தைப் பார்த்ததும் அந்த சுமத்திரன் என்ற நரிக்கு ஒரு பயம். யானையை சிங்கம் தின்று விடுமோ என்று நினைத்தது. சிங்கம் அருகில் வந்ததும் சுமத்திரன் நரி அந்த சிங்கத்திடம் வாங்கண்ணே எந்த பக்கம் வந்து இருக்கிறீர்கள் என்ற சொல்லி ஒரு வணக்கத்தை வைத்தது. அந்த சிங்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை எதற்காக இது நமக்கு வணக்கம் வைக்கிறது நீ யார் என்று கேட்டது. அதற்கு அந்த நரி அண்ணே நீங்கள் தானே இந்த யானையை வேட்டையாடி இங்கு வைத் திருக்கிறீர்கள் அதை நான் பாதுகாத்துக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னது. அதற்கு அந்த சிங்கம் இதை நான் அடித்துக் கொல்லவில்லை அதுவாய் இறந்திருக்கலாம் அல்லது வேற யாராவது கொன்றிருக்கலாம். இப்போதைக்கு எனக்கு இதன் இறைச்சி வேண்டாம் என்று அது புறப்பட்டது. நல்ல வேலை சிங்கம் போய்விட்டது என்று நரி பெரும் மூச்சுவிட்டுக் கொண் டிருந்தத வேலையில் அந்தப் பக்கம் ஒரு புலி வந்தது. அந்த புலி சுமத்திர நரியை பார்த்து ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்டது. அதற்கு அந்த நரி சிங்கம் இந்த யானையை வேட்டையாடி இங்கு வைத்துள்ளது. என்னை காவலுக்கு இருக்க சொல்லிவிட்டு போய் இருக்கிறது என்று பொய் சொன்னது. இதைக் கேட்ட தும் புலி நமக்கு எதற்கு வம்பு நாம் செ ன்று விடுவோம் என்று திரும்பிச் சென்றது. அதன் பின் அந்த வழியாக ஒரு குரங்கு வந்தது. அந்தக் குரங்கு நண்பா ஏன் இங்கே நிற்கிறாய் என்று கேட்டது. நரிக்கு ஒரு யோசனை வந்தது குரங்கு சைவம் தானே அசைவம் சாப்பிடாதல்லவா அதனால் இதனிடம் உதவி கேட்கலாம் என்று நினைத்தது. குரங்கைப் பார்த்து நண்பா உன்னை பார்க்கவே முடியவில்லை என்று கேட்டது. அதற்கு குரங்கு இப்போது என்னை பார்த்து விட்டாய் அல்லவா என்னவென்று சொல் என்றது. சுமத்திர நரி குரங்கிடம் ஒரு சிங்கம் இந்த யானையை வேட்டையாடி என்னை பாதுகாப்பிற்காக இங்கு இருக்கச் சொல்லிவிட்டு போயிருக்கிறது அது வருவதற்குள் நானும் இந்த யானையின் இறைச்சியை ருசி பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்னால் இதன் தோலை உரிப்பதற்கு என் கை கால்களில் வலு கிடையாது என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கிறேன் நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் உன் கை கால்களில் நகம் நன்றாக உள்ளது எனவே இந்த யானையின் தோலை உரித்து தருவாயா என்று கேட்டது. குரங்கும் சரி என்று செ ால்லி யானையின் தோல்களை நன்றாக உரித்து இதை நீ சாப்பிடு நான் சென்று வருகிறேன் என்று குரங்கு புறப்பட்டது. உடனே இந்த சுமத்திர நரி சந்தோசத்தில் யானையின் இறைச்சியை உண்ண ஆரம்பித்தது. அந்த நரி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சற்று தூரத் தில் நரியின் இனங்கள் எல்லாம் வந்து கொண்டிருந்தது அதைப் பார்த்ததும் இந்த சுமத்திர நரிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் குடுகுடுவென்று அந்த நரிகளை பார்த்து ஓடியது. இந்த நரி ஓடி வருவதை பார்த்து அங்கு வந்து கொண்டிருந்த நரிகள் எல்லாம் அப்படியே நின்று விட்டது. ஏன் இப்படி ஓடி வருகிறாய் என்று கேட்டது. அதற்கு இந்த சுமத்திர நரிஅங்கு செல்ல வேண்டாம் அங்கு நிறைய சிங்கங்கள் ஒரு யானையை அடித்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது நாம் அங்கு சென்றால் நம்மளையும் கொன்று விடும் நானே தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்து விட்டேன் வாருங்கள் ஓடிவிடலாம் என்று மற்ற நரிகளை எல்லாம் திருப்பி அனுப்பி விட்டது. சிறிது தூரம் இந்த சுமத்திர நரியும் ஓடுவது போல் ஓடி பாதியிலேயே ஒரு புதருக்குள் ஒளிந்து கொண்டது. எல்லா நரியும் சென்ற பிறகு இந்த சுமத்திர நரி மட்டும் அந்த யானையின் அருகில் வந்து அதன் இறைச்சியை அளவுக்கு மீறி தின்றது. தின்று முடித்தவுடன் நரியால் கொஞ்சம் கூட அங்கும் இங்கும் நகர முடியவில்லை. அதற்கு தலை சுற்றியது மயக்கம் வருவது போல் இருந்தது உதவிக்கு கூட அருகில் யாரும் இல்லை என்ன செய்வதென்று தெரியாமல் அங்கேயே மயங்கி விழுந்தது. அப்போதுதான் உணர்ந்தது நம் இனம் நம்மோடு இருந்திருந்தால் இப்போது நமக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது நம்மளை காப்பாற்றி இருப்பார்கள் தவறு செய்து விட்டோம் என்று வருந்தியது. வருந்தி என்ன பலன் சிங்களவர்களுடன் வாழ்வதே தனது சந்தோசம் என்றதே அந்த சுமத்திரன் நரி .
  16. 2௦௦5ல் யாழின் சில ஊர்களுக்கு போனபோது அங்குள்ள மக்களை விட இந்த கட்டாகாலி நாய்கள் தான் பல்கி பெருத்து ஊரின் ஒவ்வொரு சந்திகளிலும் கூட்டமாக இருந்தன .
  17. நீதிபதி இளம் செழியனுக்கு விடுப்பு கொடுத்து விட்டு அரசியல்வாதிகள் அரசியல் செய்கிறார்கள் போல் உள்ளது .
  18. முழுமையான காரணம் இந்திய தலைநகரம் டெல்லி போன்ற நகரங்களில் இருந்து எழுப்ப படும் காற்று மாசுக்கள் என்கிறார்கள் உண்மையாக இருக்குமா ?
  19. பாரீஸ் நகரில்...ரயில் நிலையம் அருகில் ஒருமுறை ஒரு பயங்கர வெடிகுண்டு சம்பவம் நடந்த்து..... தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரும் தப்பித்தனர்.... ஆனால் அவர்களுடன்....இந்த செயலுக்கு மிகவும் உறுதுணையாக இருந்த ஒரு பயிற்சி...நாய் மட்டும் போலீசார் வசம் சிக்கி கொண்டது... ஆனால் அந்த நாயை வைத்துக்கொண்டு போலீசாரால் துப்புத்துலக்க முடியவில்லை.... காரணம் அது எந்த முறையில்....எந்த மொழியில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்ற விபரம் அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.....! (உதாரணத்திற்க்கு..... தமிழ் வீட்டில் வளரும் நாய் உட்கார் என்றால் உட்கார்ந்து கொள்ளுமாம்....இதைப்போல...) எப்படியாவது இந்த நாயை வைத்தே குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டறிந்து...அவர்களை கைது செய்ய முடிவெடுத்தனர் எல்லாரும் முயற்சி செய்து ஒரு வழியாக...ஒரு பன்மொழி கலைஞரை அழைத்தனர்.....அவருக்கு...60மொழிகள் வரை அத்துப்படி...... அவர் ஒரு புரஃபெஸரும் கூட... . அவரும் வந்து.... வித விதமான மொழிகளை பேசி முயற்சி செய்தும் பயன் இல்லை...அந்த நாயிக்கும் ஒன்றும் புரியவே இல்லை.... கடைசியில்.... பழம்பெரும் மொழிகளில் ஒன்றான ஹிப்ரு என்ற மொழியில்...அவர் பயிற்சியை துவக்கியதும் ...நாய்க்கு புரிய ஆரம்பித்தது.....உடன் அதை வைத்து குற்றவாளிகளின் இருப்பிடம் கண்டு....உடன் கைது செய்தது பாரீஸ் போலீஸ்...... அந்த புரஃபெஸருக்கு பாராட்டுக்கள் குவிந்தது..... அவருக்கு பாரீஸ் அரசாங்கம் ஏகப்பட்ட விருதுகளை அள்ளித்தர முடிவு செய்தது... பெரிய விருந்து ஒன்றையும் ஏற்பாடு செய்தது விருந்தில் அவரிடம் கேட்க்கப்பட்டது உங்களால் பாரீஸ் பெருமை அடைந்தது... ... உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் வழங்கபடும் என்றனர்.... பணம் வேண்டுமா.....? விலை கூடிய கார்கள் வேண்டுமா..? மாளிகை வேண்டுமா....? அரசாங்க பணிகள் வேண்டுமா...? என்று... அவர் மறுத்துவிட்டார்... எனக்கு உதவியாக இருந்த அந்த...நாயை மட்டும் தயவு செய்து எனக்கு வழங்கிவிடுங்கள்...என்றார்... அதை கேட்டு அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சர்யம்.... சிலர் இவருக்கு பைத்தியம் என்றனர்.... ஒரு அதிகாரி கேட்டார்..... ஏன் அந்த நாயை வைத்து நீங்கள் என்ன செய்ய முடியும்..... என்று ஆச்சரியத்துடன் கேட்டார். ... அதற்க்கு அவர்...சொன்னார்.... இந்த நாயை என் வீட்டிற்க்கு கொண்டு போய்....என் மனைவி முன் நிறுத்தவேண்டும்..... ஏன் என்றால் நான் கஷ்டப்பட்டு இந்த பல மொழிகள் படிக்க முயலும்போதெல்லாம்.... அவள் சொல்வாள்... . ""எந்த நாய் கேட்க்க போகுதுன்னு... இதையெல்லாம் படிக்கிறீங்கன்னு..".".. அதுக்காக தான் இதை கொண்டுபோகணும்னுசொன்னவுடன் அரங்கம் சிரிப்பொலியில் நிறைந்தது..
  20. இது அவரேதான் சுமத்திரன் எனும் குள்ள நரி . இதுவும் அந்த சுமத்திரன் தான் இதுக்கெல்லாம் கேஸ் போட என்று வெளிகிடுவம் என்றும் சொல்வார்கள் போடுங்க அப்ப தெரியும் 😃
  21. தமிழருக்கு எதிராக இனவாதம் கக்கியபடி தங்களுடைய சிங்கள அரசியல்வாதிகள் எப்படி நாட்டை குட்டி சுவராக்கி உள்ளனர் என்று இப்போ சாதாரண சிங்கள மக்களுக்கும் தெரிய வந்துள்ளது . நல்ல காலம் பார் லைசன்ஸ் லிஸ்ட் போல் இதுவும் வாய் பேச்சில் காணாமல் போய்விடும் என்று நினைத்து இருந்தேன் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.