Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. உலகில் தடை செய்யப்பட ரோலர் மீன் பிடியை கொண்டு வடகிழக்கு கடலில் அடாத்தாக மீன் பிடிப்பவர்களை தமிழக மீனவர்கள் என்று அழைப்பதே பிழையானது. அவர்களை ரோலர் மீன் வள கொள்ளைகாரர்கள் என்று ஊடகங்கள் குறிப்பிட வேணும் . ஏனென்றால் பலருக்கும் புரிவதில்லை தடை செய்யப்பட்ட மீன் பிடி முறையை கொண்டு அவர்களின் சொந்த கடல் பகுதியையும் நாசம் பண்ணி கடைசியில் வடகிழக்கு மீன்கள் உருவாகும் கருவறை கண்ட மேடைகள் மீது ரோலிங் அடிப்பதால் வடகிழக்கு தமிழர்களின் சொத்தை கொள்ளையடிக்கிறார்கள் இப்படி சொத்தை நாசம் பண்ணுபவர்களை எப்படி அழைக்கவேணும் ?
  2. சுமத்திரனும் சரி அவரின் அடிபொடிகளுக்கும் எதிராளி ஒரு கேள்வி கேட்டால் பதில் வராது ஏனென்றால் செய்வதெல்லாம் வடகிழக்கு தமிழருக்கு எதிரான துரோகத்தனம் சிங்களத்துக்கு சார்பான வேலைகள் .
  3. உங்கடை சுமத்திரன் கடந்த 14 வருடமாய் தமிழருக்கு செய்த ஒரு நல்ல விடயத்தை சொல்ல முடியுமா ?
  4. டயானாவுக்கு சொந்தமான 13,000 ஏக்கர் எஸ்டேட் ஒன்று, அவரது மகன்களான இளவரசர்கள் வில்லியமுக்கோ அல்லது ஹரிக்கோ செல்லாமல் வேறு ஒரு நபருக்கு கிடைக்க இருக்கிறது. டயானாவின் எஸ்டேட்டைப் பெறும் நபர் அந்த நபர் வேறு யாருமில்லை, டயானாவின் தம்பியான சார்லஸ் ஸ்பென்சர் (Charles Spencer)இன் மகனான லூயிஸ் ஸ்பென்சர்தான் (Louis Spencer, 30). அதாவது, ஸ்பென்சர் குடும்ப மரபுப்படி, ஒருவரது சொத்துக்கள், அவருக்கு முதலில் பிறந்த பிள்ளைக்குச் செல்லாமல், அந்தக் குடும்பத்தில் பிறந்த முதல் ஆண் பிள்ளைக்குத்தான் செல்லும். ஆக, டயானாவின் குடும்பச் சொத்து, அவரது தம்பியான சார்லஸ் ஸ்பென்சருக்கு (Charles Spencer) மூத்த பெண் பிள்ளைகள் மூன்று பேர் இருந்தும், அவரது முதல் மனைவியான விக்டோரியாவுக்கு (Victoria Lockwood) பிறந்த மகனான லூயிஸ் ஸ்பென்சருக்குத்தான் கிடைக்கும். ஆகவேதான், டயானாவின் குடும்பச் சொத்தான 13,000 ஏக்கர் எஸ்டேட், வில்லியமுக்கோ, ஹரிக்கோ, அல்லது டயானாவின் தம்பி மகள்களுக்கோ செல்லாமல், அவரது மகனான லூயிஸ் ஸ்பென்சருக்குக் கிடைக்க இருக்கிறது. https://news.lankasri.com/article/prince-harry-william-wont-inherit-1737953092
  5. வடகிழக்கு தமிழ் மக்களால் வெறுக்கப்பட்ட செத்து போன கிளிக்கு பாதுகாப்பு கொடுத்து என்ன ஆவ போகுது ?
  6. தமிழரசுக் கட்சியின்(Itak) உட்சண்டை தற்போது இன்னோர் பரிமாணத்தைப் பெற்றுள்ளது என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் குறித்த அறிக்கையில், கட்சியின் தெரிவு செய்யப்பட்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறீதரன் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட பயணத்தடை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் இரட்டை ஊடகப் பேச்சாளரில் ஒருவருமான சுமந்திரனை விசாரணை செய்யுமாறு நாடாளுமன்றத்தினை கேட்டிருக்கின்றார். இவரது இந்த உரையுடன் இதுவரை காலமும் நீதிமன்றத்தினை நோக்கி நகர்ந்த கட்சியின் உட்சண்டை தற்போது நாடாளுமன்றத்தினை நோக்கியும் நகரத் தொடங்கியுள்ளது. நீதிமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் உட்சண்டையைக் கொண்டு சென்றவர்கள் இன்னமும் தங்கள் சொந்த மக்களிடம் அதனை கொண்டு சென்று நியாயம் கேட்கவில்லை. இது துயரம் தான். சிறீதரன் குற்றச்சாட்டுதலுக்கான ஆதாரங்களையும் நாடாளுமன்ற சபா பீடத்தில் சமர்ப்பித்திருக்கின்றார். நாடாளுமன்றம் இது தொடர்பான விசாரணையை முன்னெடுப்பதாகக் கூறியுள்ளது. சுமந்திரன் விரைவில் நாடாளுமன்ற சிறப்புக் குழுவிற்கு அழைக்கப்படலாம். சுமந்திரன் அணி இறுதியாக திருகோணமலையில் இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் உட்சண்டை காரசாரமாக வெளிப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கட்சியின் நாடாளுமன்றக் குழு வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திக்கச் செல்லும்போது சுமந்திரனையும் பதில்தலைவர் சிவஞானத்தையும் அழைத்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை சிறீதரன் நிராகரித்து இருக்கின்றார் சிவஞானத்தை தலைவர் என்ற வகையில் அழைத்துச் செல்லலாம் சுமந்திரனை அழைத்துச் செல்ல முடியாது எனக் கூறியிருக்கின்றார். இதற்கான பழிவாங்கலாகவும் சுமந்திரன் பயணத்தடையை ஏற்படுத்துவதற்கு முயற்சித்திருக்கலாம். சிறீதரன் தமிழக மாநாட்டில் கலந்து கொள்வதை சுமந்திரன் அணி விரும்பியிருக்கவில்லை. சிறீதரனின் செல்வாக்கு அதிகரித்து விடும் என்பதே இதற்குக் காரணம் இதனை ஈடு செய்வதற்காகத்தான் சுமந்திரனும் சாணக்கியனும் அழையா விருந்தாளிகளாக மாநாட்டிற்கு சென்றிருக்கின்றனர். மாநாட்டு மேடையில் சிறிதரனுக்கு இடம் வழங்கப்பட்டதே தவிர சுமந்திரனுக்கோ, சாணக்கியனுக்கோ இடம் வழங்கப்படவில்லை. அவர்கள் இருவரும் பார்வையாளர் பகுதியிலேயே அமர்ந்திருந்தனர். தமிழக முதலமைச்சர் ஸ்ராலின் பார்வையாளர்களிடம் வந்த போதே அவருடன் செல்பி எடுத்துள்ளனர். இவர்கள் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் என அறிந்தவுடன் “புதிய அரசாங்கம் எப்படி செல்கின்றது. " என முதலமைச்சர் கேட்டிருக்கின்றார். அதற்கு சுமந்திரன் “அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்" என பதில் அளித்திருக்கின்றார.; அதற்கு முதலமைச்சர் “தானும் அவதானித்துக் கொண்டிருக்கின்றேன் " என பதில் அளித்துவிட்டு அப்பால் சென்று விட்டார். இவ்வளவும் தான் நடந்தது. இதனை பாரிய சந்திப்பு நடந்ததாக ஊடகங்கள் பெருப்பித்து காட்ட முயற்சித்துள்ளன. தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் கனிமொழியை சுமந்திரனும் சாணக்கியனும் சந்தித்தது உண்மைதான். அதில் “தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈழத்தமிழர்களுக்காக ஒருங்கிணைந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என சுமந்திரன் கேட்டிருக்கின்றார்.” “ஏனைய மாநில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இவ் ஒருங்கிணைப்பில் இணைக்க வேண்டும்” என்றும் கேட்டிருக்கின்றார். இது நல்ல விடயம் தான். ஆனால் தாயகத்தில் தாங்கள் ஒருங்கிணையாமல் தங்களுக்காக மற்றவர்களை ஒருங்கிணைந்து செயல்படும் படி கேட்பதற்கு என்ன தார்மீக உரிமை இருக்கின்றது என்ற கேள்வி இங்கு எழுகின்றது. ஈழத் தமிழர்கள் கனிமொழியை சந்திக்கச் சென்ற போது சிறீதரன் தமிழகத்தில் நின்ற போதும் அவரையும் அழைத்துச் செல்வதற்கு சுமந்திரனோ, சாணக்கியனோ முன் வரவில்லை செல்வம்அடைக்கலநாதனையும் இந்த விடயத்தில் காய் வெட்டியிருக்கின்றார்கள். இதைவிட தமிழகத்தில் அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழர்களை தாயகம் அழைத்துச் செல்வது தொடர்பாக அதனுடன் தொடர்புபட்ட உயர் அதிகாரிகளுடன் பேசியதாக சாணக்கியன் தெரிவித்திருக்கின்றார். அகதிகள் பிரச்சினை ஒரு அரசியல் பிரச்சினை. இதனை அரசியல் தலைவர்களுடன் பேசாமல் அதிகாரிகளுடன் பேசி என்ன பயன் என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது. ஈழ அகதிகள் தொடர்பாக தாயகத்தில் அவர்களை வாழ்வாதாரத்துடன் குடியமர்த்துவதற்கான ஒழுங்குகளை செய்துவிட்டு தமிழக, இந்திய தலைவர்களை அணுகுவது தான் இங்கு பொருத்தமானதாக இருந்திருக்கும். மொத்தத்தில் இவர்களின் அணுகுமுறைகள் நல்ல நோக்கத்திற்காக அமைந்ததாகத் தெரியவில்லை. 'அந்த நல்ல நோக்கம் இருந்திருக்குமானால் முதலில் வீட்டு வேலையை இவர்கள் ஒழுங்காக செய்திருப்பார்கள். இவர்களின் தமிழகப் பயணம் உட்கட்சி சண்டையை தமிழ்நாட்டிற்கு கொண்டு சென்றதைத் தவிர வேறு எதனையும் சாதிக்கவில்லை. சிறீதரனைப் பொறுத்தவரை அவரது பலம் என்பது தாயகத்தில் அவரது வாக்குப்பலமும், தமிழ்த் தேசிய சக்திகளின் ஆதரவும், புலம்பெயர் தரப்பின் ஆதரவும் தான். இதில் புலம்பெயர் தரப்பின் ஆதரவு மிகவும் முக்கியமானது. தாயகத்தில் மோசமான நிலை இருந்த போதும் தமிழ்த் தேசிய அரசியலை தக்க வைப்பதில் புலம்பெயர் தரப்பின் பங்களிப்பு அளப்பரியது. புலம்பெயர் தரப்பின் ஆதரவை இல்லாமல் செய்வதற்காகவே விமான நிலையச் சம்பவம் நடந்திருக்கின்றது. இதைவிட ஒரு பழிவாங்கும் பிடிவாதக் குணமும் சுமந்திரனிடம் உண்டு. தலைமைப் பதவியிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் தன்னை தோற்கடித்தமைக்காக சிறீதரனை பழிவாங்க முற்படுகின்றார். இந்தப் பிடிவாதக் குணம் முன்னர் சம்பந்தனாலும் சுட்டிக்காட்டப்பட்டது. சம்பந்தன் ஒரு மூத்த ஊடகவியலாளரிடம் “சுமந்திரன் ஒரு சுறு சுறுப்பான அரசியல்வாதி தான் ஆனால் சிறந்த அரசியல்வாதி அல்லர்" எனக் கூறியிருக்கின்றார். கஜேந்திரகுமாரின் தற்போதைய ஒருங்கிணைப்பு முயற்சியும் பெரிய வெற்றியைத் தரும் என கூற முடியாது. அரசியல் தீர்வு தொடர்பாக தமிழரசுக் கட்சியின் மத்திய குழு 7 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்திருக்கின்றது. அக்குழுவில் சிறீதரனைத்தவிர ஏனைய அனைவரும் சுமந்திரனின் விசுவாசிகளே! கஜேந்திரகுமார் - சிறீதரன் இணைந்த நகர்வை தடுப்பதற்காகவே இக்குழு உருவாக்கப்பட்டிருக்கின்றது. இது விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்த கூட்டத்தையும் தமிழரசுக் கட்சி நிராகரித்திருக்கின்றது. இந்த ஒருங்கிணைவு முயற்சிகள் சிறீதரனை பலப்படுத்தும் என சுமந்திரன் கருதியிருக்கலாம.; தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு விரைவில் நடைபெற இருக்கின்றது. செல்வம் அடைக்கல நாதன் இதற்கு எவ்வளவு தூரம் ஒத்துழைப்பார் எனக் கூறுவது கடினம். அவர் சுமந்திரனுடன் அதிகளவில் நெருங்கியிருக்கின்றார். தமிழரசுக் கட்சி செல்வம் அடைக்கல நாதனை முன்னணியுடன் ஒருங்கிணைவுக்கு செல்ல வேண்டாம் என சுமந்திரன் கேட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது. செல்வம் அடைக்கலநாதன் முதலில் தமிழரசுக் கட்சியுடன் ஒருங்கிணைவதற்குத் தான் வாய்ப்பைத் தேடுவார். அது சரிவராவிட்டால்தான் மாற்று வழிகளைத் தேடுவார். சந்தர்ப்பம் கிடைத்தால் தனது கூட்டமைப்பை உடைத்து தனித்து தனது கட்சியை மட்டும் தமிழரசுக் கட்சியில் சேர்ப்பதற்கும் அவர் தயாராக இருப்பார். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சொந்தப்பலம் பெரிதாக இல்லை. அதனுடன் இணைந்திருக்கின்ற கட்சிகளுக்கு அமைப்புப்பலம் கிடையாது. அதைக் கட்டியெழுப்புவதற்கான உளரீதியான ஓர்மமும் அவர்களிடம் இல்லை. அது எப்போதும் வேறு எவற்றிலாவது தொங்கிக் கொண்டிருக்கவே முயற்சிக்கும் மறுபக்கத்தில் உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பது உறுதியாகிவிட்டது. முன்னரும் கூறியது போல தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிடாவிட்டால் தேசியமக்கள் சக்தி இலகுவாக பல சபைகளை கைப்பற்றும். தற்போது தமிழ் மக்களிடம் தமிழ்த் தேசிய கட்சிகளை விட தேசிய மக்கள் சக்தி பறவாயில்லை என்ற கருத்து வளரத் தொடங்கியுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் தலைமை கடற்தொழில் அமைச்சர் சந்திர சேகரை சற்று சுதந்திரமாகச் செயல்பட அனுமதி அளித்துள்ளது. தமிழ் மக்களின் அரசியலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுமாறு அறிவுறுத்தியிருக்கின்றது. இது விடயத்தில் சந்திரசேகர் மூன்று வியூகங்களை வகுத்து செயல்படுகின்றார். அதில் முதலாவது தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகள் தொடர்பில் முடிந்தவரை தமிழ் மக்களுக்கு சார்பாக இருப்பதாகும். இன்று தமிழ்த் தேசிய கட்சிகளை விடவே தமிழ் மக்களின் விவகாரங்களில் அவர் அக்கறையைக் குவித்து வருகின்றார். தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் தொடர்பாக தமிழ்நாட்டிலேயே தனது எதிர்ப்பு குரலை பதிவிட்டு இருக்கின்றார். “தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் ஈழக் கடல் வளங்களை நாசம் செய்கின்றனர்”; என அவர் கூறியிருக்கின்றார். அவருக்கு இது விடயத்தில் தமிழ்நாடு, இந்திய மத்திய அரசு தொடர்பான மனத் தடைகள் இதுவும் இல்லை. தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழ் நாட்டு கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் விவகாரத்தை தமிழ் மக்களின் அகமுரண்பாடாகவே பார்க்கின்றனர.; தமிழ்நாட்டு மக்கள் தமிழ்த் தேசிய அரசியலின் முக்கிய சேமிப்பு சக்தியாக உள்ளனர். அவர்களுடனான முரண்பாடு நேச முரண்பாடே ஒழிய பகை முரண்பாடல்ல என்பது அவர்களினது கருத்து நிலையாகும். இதனால் இறுக்கமான வார்த்தைப் பிரயோகங்கள் எவற்றையும் வெளிப்படுத்த அவர்களால் முடியவில்லை. சந்திர சேகருக்கு அந்தத் தடைகள் எதுவும் கிடையாது. அவரைப் பொறுத்தவரை தமிழ்நாட்டு கடற்றொழிலாளர் தொடர்பான முரண்பாடு புற முரண்பாடு தான். இதே போல இந்திய மத்திய அரசினைக் கண்டிக்கும் விவகாரத்திலும் தமிழ்த் தேசியக் கட்சிகள் அமர்த்தியே வாசிக்கின்றன. கடற்றொழிலாளர் விவகாரத்தில் கடும் அழுத்தங்களை மத்திய அரசிற்கு கொடுக்காமைக்கு இதுவே காரணமாகும். தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவஞ்ஞானம் யாழ் கலாச்சார மண்டப பெயர் மாற்றம் தொடர்பாக ஒரு வேண்டுகோளை தான் இந்திய துணைத் தூதரூடாக இந்திய மத்திய அரசிற்கு தெரிவித்திருக்கின்றார். ஆனால் சந்திரசேகர் பெயர் மாற்றத்திற்கு அதிர்ப்;தி தெரிவித்ததுடன் தமிழ் மொழிக்கு மூன்றாவது அந்தஸ்து கொடுத்ததையிட்டு பலத்த கண்டனத்தையும் தெரிவித்திருக்கின்றார். இது விடயத்தில் ஜே.வி.பி.யிடம் மரபு ரீதியாக இருக்கும் இந்திய எதிர்ப்பும் அவரை ஊக்கு வித்திருக்கலாம.; தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர் சந்திரசேகரையும் இந்தியத் தூதுவர் மூடிய அறைக்குள் சந்தித்து பேசியிருக்கின்றார். இந்தச் சந்திப்பில் கடற்றொழிலாளர் விவகாரத்தை சற்று அமத்தி வாசிக்கும்படி தூதுவர் அழுத்தம் கொடுத்திருக்கலாம். இவ்அழுத்தம் தொடர்பான திருப்தியின்மையினால் தான் ஏனையவர்களுடனான சந்திப்பின்போது அமைச்சர் சந்திரசேகர் களத்தில் நிற்கவில்லை. 13வது திருத்த விவகாரம் தமிழ் மக்களிடம் இந்தியா தொடர்பான அதிருப்தி நிறையவே இருக்கின்றது. தமிழக கடற்றொழிலாளர் விவகாரத்திலும், அரசியல் தீர்வு விவகாரத்திலும் இந்த அதிருப்தி உள்ளது. சந்திரசேகரின் நகர்வுகள் தமிழ் மக்களுக்கு சற்று தெம்பூட்டுபவையாக உள்ளன. 13வது திருத்த விவகாரத்திலும் “அது தமிழ் மக்களின் உரிமை அதில் நாம் கை வைக்க மாட்டோம் என தமிழ்நாட்டில் வைத்தே சந்திரசேகர் கூறியிருக்கின்றார். இது தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் மனோகணேசனிடம் 13ஆவது திருத்தம் தமிழ் மக்கள் போராடிப் பெற்றது. அதில் நாங்கள் கை வைக்க மாட்டோம் என கூறியதாக தகவல் உள்ளது. சந்திரசேகர் இன்று முக்கிய அரசியல் பிரமுகராக இருக்கின்றார். தமிழ் அரசியலிலும் அவர் அக்கறை காட்டுவதாலேயே இந்த பிரமுகர்முகம் அவருக்கு கிடைத்துள்ளது. முக்கிய இராஜதந்திரிகள் அவரை சந்திப்பதிலும் அக்கறை செலுத்துகின்றனர். அண்மையில் அமெரிக்க தூதுவரும் அவரைச் சந்தித்திருக்கின்றார் தேசிய மக்கள் சக்திபிரமுகர்களில் ஜனாதிபதி, பிரதமர், வெளிநாட்டமைச்சர் என்போருக்கு அடுத்ததாக சந்திரசேகர் உள்ளார் எனக் கூறலாம். சந்திரசேகரின் இரண்டாவது வியூகம் தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளில் தலையிட்டு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு இடத்தை பிடிப்பதாகும் இதன் அடிப்படையில் தான் தமிழ்நாட்டு கடற்றொழிலாளர் அத்துமீறல் பிரச்சினையையும் சுண்ணாம்புக்கல் அகழ்வுப் பிரச்சினையையும் அவர் கையில் எடுத்திருக்கின்றார். சுண்ணாம்புக்கல் அகழ்வுப் பிரச்சினை ஒரு சூழலியல் பிரச்சினையாக இருப்பதால் தென்மராட்சி மக்களின் ஆதரவை நன்கு பெற்றிருக்கின்றது. அங்கு தமிழ்த் தேசிய கட்சிகள் பலத்த அதிர்ப்தியைப் பெற்றுள்ளன. மூன்றாவது வியூகம் அங்கையன் இராமநாதன், டக்ளஸ் தேவானந்தா, விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின் ஆதரவுத் தளங்களைக் கைப்பற்றிக் கொண்டு தேசிய ஆதரவுத் தளங்களை நோக்கி முன்னோறுவதாகும். கடற்தொழிலாளர்கள், விவசாயிகள் என்போரை அணி திரட்டிக் கொண்டு நடுத்தர வர்க்கத்தை நோக்கி செல்லும் நகர்வு காணப்படுகின்றது. அங்கையன் இராமநாதன், டக்ளஸ் தேவானந்தா, விஜயகலா மகேஸ்வரன் போன்றோருக்கு இனி வரும் காலங்களில் வாய்ப்புக்கள் கிடைப்பது கடினம். அடித்தள மக்கள் மத்தியில் பணியாற்றுவது என்பது ஒரு கலை. அது தேசிய மக்கள் சக்தியிடம் நிறையவே இருக்கின்றது. பெருந்தேசியவாதத்திற்கு எப்போதும் மூன்று முகங்கள் உண்டு. இனவாதமுகம் லிபரல் முகம், இடது சாரி முகம் என்பவையே இவ் மூன்றுமாகும். இதில் இனவாத முகத்தை மகிந்தர், விமல் வீரவன்ச, உதயகம்மன்பல போன்றவர்களும் லிபரல் முகத்தை ரணில், சஜித் போன்றவர்களும் இடது சாரி முகத்தை ஜே,பி.பி யினர் உட்பட மரபு ரீதியான இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பிரதிபலிக்கின்றனர். இவர்களில் லிபரல் முகத்தவர்களுக்கும் இடதுசாரி முகத்தவர்களுக்கும் பெருந்தேசிய வாத சக்திகளுக்குமிடையே வரலாறு முழுவதும் மோதல் இடம்பெற்று வந்துள்ளது. ஜே.வி.பி க்குள்ளும் இந்த மோதல் இடம் பெற்றிருக்கின்றது. லயனல் போபகே முன்னர் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளராக இருந்தவர். அவர் கட்சியில் இருந்து வெளியேறுவதற்கும், நந்தன குணதிலக போன்றவர்கள் வெளியேறுவதற்கும் தேசிய இனபிரச்சினை தொடர்பான நிலைப்பாடே பிரதான காரணமாக இருந்தது. ஆனால் வரலாறு முழுவதும் பெருந்தேசியவாத முகமே வெற்றி பெற்றிருக்கின்றது. சந்திரசேகரின் நகர்வுகள் எவ்வாறு இருந்தாலும் பெருந் தேசிய வாதம் சிங்கள அரசியலில் மேலாதிக்கம் செலுத்தும் வரை தேசிய மக்கள் சக்தியால் அதிலிருந்து விடுபட முடியாது. இதனால் சந்திரசேகரின் செயற்பாட்டிற்கும் ஒரு எல்லை உண்டு. இதனால் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியை நம்பி நீண்ட தூரம் பயணிக்க முடியாது. தமிழ்த் தேசியத் தரப்பை ஒருங்கிணைப்பது தான் தமிழ்த் தேசிய அபிலாசைகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரே வழி தமிழ்த் தேசிய சக்திகள் இதுபற்றி ஆழமாக சிந்திப்பார்களா? https://tamilwin.com/article/tamil-party-leadership-crisis-escalates-1737828984
  7. மேன்முறையீட்டு நீதிபதிக்கான தனது பதவி உயர்வு குறித்து அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அது தொடர்பில் கண்டுகொள்ளாத அரசு நீதிபதி இளஞ்செழியனுக்கு திட்டமிட்டு அநீதி இழைத்துள்ளதாக வடக்கின் சிவில் சமூகங்கள் குற்றம் சுமத்தி வருகின்றன. இலங்கையின் சிறந்த நீதிபதிகளுள் ஒருவரும் தற்துணிவாக அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது தீர்ப்புக்களை வழங்கி நீதியை எதிர்பார்த்த மக்களை ஆற்றுப்படுத்திய நீதிபதி இளஞ்செழியனுக்கு பாரபட்சமான வகையில் இந்த அரசு பதவி உயர்வு வழங்காமல் பழிவாங்கியுள்ளது என்ற குற்றச்சாட்டும் இதன்போது முன்வைக்கப்படுகின்றது. மேலும், உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனத்தில் நீதியரசர் எம்.டி.எம். லபார் புறக்கணிக்கப்பட்டது ஏன் என்றும் சில கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார். மேலும், இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தாமை சிறபான்மையினருக்கு இழைக்கப்பட்ட அநியாயம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், https://tamilwin.com/article/injustice-done-to-the-young-man-by-anura-1737942742
  8. கவனியுங்க தமிழ் விண்ணோ தராரகமோ சொன்னது தானே இலங்கையில் நடக்குது அடுத்த கிழமையில் இருந்து இலங்கை தீவு மீன் இறக்குமதி செய்ய போகுதாம் ? அதுக்கு அடுத்த கிழமை இந்தியாவில் இருந்து அயோடின் இல்லா உப்ப இறக்குமதி செய்ய போகிராரர்கலாம் ? பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணியவர்கக்கு விடயம் புரியும் உங்களுக்கு பேராண்டி ? கொஞ்சம் தமிழை கவனியுங்க பேராண்டி தொடர்ந்தால் பிறகு விராண்டி போடுவேன் ...................
  9. பின்கதவால் பதவி கிடைத்தது முதல் உலக நாடுகளிடம் ஓடி ஓடி தனியே பேசி இனவழிப்பு அங்கு நடைபெறவில்லை என்று காப்பற்றியதுக்கு சிங்களத்துக்கு விசுவாசமாய் நடந்து கொண்டதுக்கு கிடைத்த வெகுமானம் இது .சிலவேளை தங்களின் தனிப்பட்ட பாதுகாவலர்கள் என்று சொறிந்து கொள்ளவும் அவர்களால் முடியும்.இதை மகிந்த தரப்பு ரசிக்காமல் மேலே சொரியவும் செய்யும் .
  10. தேங்காய் நாலயிரம் ஒன்று அரிசி பத்தாயிரம் ஒரு கிலோ வரும்போது சிங்களவர்கள் விழித்து கொள்வார்கள் அது மட்டும் பொறுத்து கொள்ளுங்க அது மட்டும் ப..றை தமிழு என்று சொல்லிக்கொண்டு இனவாதம் கக்கி கொண்டு இருக்கட்டும் . அது வரும் வெகு விரைவில் சிங்களத்தின் முக மூடி மாற்றபட்டு இருக்கே தவிர உண்மை முகம் மாற்றப்படவில்லை .
  11. கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக இணைத்துவிடுமாறு ட்ரம்ப் விடுத்த மிரட்டலையடுத்து, கனேடியர் ஒருவர் பணம் சம்பாதிக்க புதிய வழியை கண்டுபிடித்துள்ளார். டொனால்டு ட்ரம்பிற்கு பதிலடி கொடுக்கும் அதே சமயம், அதனையொரு வியாபாரமாக மாற்றும் வகையில் லியாம் மூனி (Liam Mooney) எனும் கனேடியர் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். "Canada is Not for Sale" என்ற வாசகத்துடன் கூடிய தொப்பிகளை தயாரித்து வெளியிட்டுள்ளார் மூனி. இந்த முயற்சியால் ஈர்க்கப்பட்ட Ontario Premier டக் ஃபோர்ட் (Doug Ford), கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் ஒட்டாவாவில் நடந்த கூட்டத்தில் இந்த தொப்பியை அணிந்தது மிகவும் பிரபலமாகியுள்ளது. இதனால் இத்தொப்பிகளுக்கான ஓன்லைன் ஆர்டர்கள் திடீரென பன்மடங்கு அதிகரித்துள்ளன. டிரம்பின் உள்நாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு கனேடிய பொருட்களுக்கு வரி விதிக்க முயற்சி செய்ததைத் தொடர்ந்து, மூனி இந்த தொப்பிகளை உருவாக்க முடிவு செய்தார். இந்நிலையில், டிரம்ப் கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்ற வேண்டும் என்று கூறியது கனடாவில் கடுமையான எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்த ஃபோர்டு, “கனடா விற்பனைக்கு அல்ல” என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார். https://news.lankasri.com/article/canadian-launches-hats-after-trump-threats-viral-1737803448
  12. சுமந்திரனுக்கு வாகன கதவை திறக்கும் மெய்பாதுகாவலர்கள்: தானே திறந்து கொள்ளும் அநுர. இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அநுர அரசாங்கம் ஆட்சியமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. சலுகை அந்தவகையில், கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பினை பெற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக காணப்படுகின்ற எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடானது அநுர அரசாங்கம் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு முகத்தை காட்டி சலுகைகளை வழங்குகின்றதா அல்லது சுமந்திரனுடன் ஏதாவது ஒப்பந்தம் செய்துகொண்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் வாகன கதவுகளை திறந்து விடுவது என்பது ஜனாதிபதிகளுக்கான ஒரு விசேட செயற்பாடாகும். இருப்பினும் ஜனாதிபதி அநுர ஆட்சிக்கு வந்த பிறகு அந்த சலுகை தனக்கே வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக அநுர அரசின் கீழ் உள்ள அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் யாரும் பாதுகாப்பு சலுகைகள் எடுத்துக் கொள்ளாத நிலையில், சுமந்திரனுக்கு மாத்திரம் அந்த சலுகை வழங்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இது தவறான வகையில் பயன்படுத்தப்படுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். குறிப்பாக மகிந்த ராஜபக்ச தனது மெய்பாதுகாவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தியமைக்கு ஒப்பானதாகவே இது பார்க்கப்படுகின்றது. அத்துடன், இந்த செயலானது, பாதுகாப்பு அதிகாரிகளை மலினபடுத்தும் வகையில் இருப்பதாகவும் சுமந்திரன் விடயத்தில் அநுர அரசு துணை போகின்றதா அல்லது சுமந்திரனோடு பயணிக்கின்றதா என்னும் கேள்வி எழுகின்றது. எனவே, இது தொடர்பில் அநுர அரசு தெளிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர். https://tamilwin.com/article/two-bodyguards-given-to-sumanthiran-been-issued-1737893866
  13. எதிர்வரும் நாட்களில் உலக பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதிக்கப்படும் என உலக பொருளாதார மன்றத்தின்(WEF) கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) ஆண்டு கூட்டம் 25ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றுள்ளது. குறித்த கூட்டத்தில், அமெரிக்காவை சேர்ந்த பிரபல மேலாண்மை ஆலோசனை நிறுவனமான ஆலிவர் வைமனால் (Oliver Wyman) தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. பின்னோக்கி நகரும் பொருளாதாரம் குறித்த அறிக்கையில், உலகம் முன்னர் எப்போதும் இல்லாத வகையில் இனி வரும் நாட்களில் பொருளாதாரத்தில் பின்னோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எந்த அளவுக்கு எனில் ரூ.51 இலட்சம் கோடியில் தொடங்கி, ரூ.419 இலட்சம் கோடி வரை உலக வர்த்தகம் பாதிக்கப்படலாம். உலக நாடுகளின் GDP-ல் இந்த பணம் 5% ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. உலக நாடுகள் மத்தியில் இருக்கும் பிரிவினைகள், தன்னிச்சையாக செயல்படுதல் போன்ற காரணங்களால் இவை ஏற்படும் என்று உலகப் பொருளாதார மன்றம் கணித்துள்ளது. இதனை 'geoeconomic fragmentation' என்றும் குறிப்பிட்டிருக்கிறது. வளர்ந்து வரும் நாடுகள் எதிர்வரும் நாட்களில் ஏற்படும் பாதிப்புகள் கடந்த 2008 பொருளாதார வீழ்ச்சியை விடவும், கோவிட் பெரும் தொற்று காலத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை விடவும் மோசமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அந்த நாடுகளால் அதனை சமாளித்துக்கொள்ள முடியும். ஆனால், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளால் இதை தாங்கிக்கொள்ள முடியாது. இந்தியா மட்டுமல்லாது பிரேசில், துருக்கி, லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வளர்ந்து வரும் நாடுகள் இதனால் கடுமையாக பாதிக்கப்படும். இந்த நாடுகளில் GDP 10 சதவிகிதத்திற்கும் குறைவாக போக வாய்ப்புள்ள நிலையில், இவையெல்லாம் அணிசேரா நாடுகளாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/world-faces-unprecedented-economic-crisis-1737830282
  14. அந்த தமிழரசு கட்சி பெயரை யராவது குரங்கரசு கட்சி என்று பெயரை மாற்றி விடுங்கப்பா . அவங்கள் பெயரை மாற்றும் மட்டும் கண்ணை மூடிக்கொண்டு இருந்து விட்டு கடைசியில் உதார் விடுவது இந்த குரங்கரசு கட்சி.
  15. எல்லாம் சரி ஊரில் ஓட்டுகுந்துவது போல் இங்கு திண்ணை யை இழுத்து மூடி விட்டார்கள் அதனால் இன்னும் கடுப்புடன் சிலர் இருக்கினம் 😀
  16. முக்கியமாய் எழுத்து பிழைகளை கவனிக்கவும் தமிழில் எதிர் கருத்து வைப்பது என்றால் அதற்கு ஒரு தில் வேணும் இப்படி அரைகுறையாய் தமிழை எழுதி தமிழை சிதைக்க வேணாம் .
  17. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பயன்படுத்தும் உத்தியோகபூர்வ இல்லத்தின் மாத வாடகை சுமார் 500 இலட்சமாக மதிப்பிடப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்(Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தங்கியுள்ள வீட்டின் மாத வாடகை தொடர்பில் செய்யப்பட்ட மதிப்பீட்டில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதன்படி, ஜனாதிபதி தனது இல்லத்திற்காக, இந்த நாட்டு மக்களின் வரிப் பணத்தில் இருந்து மாதத்திற்கு சுமார் 500 இலட்சத்தை செலவிடுவதாகவும் சாகர குற்றம் சுமத்தியுள்ளார். அரிசி, தேங்காய் பிரச்சினை மேலும், மக்கள் எதிர்கொள்ளும் அரிசி, தேங்காய் மற்றும் உப்பு பிரச்சினைகளைத் அரசாங்கம் விரைவில் தீர்க்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பூனைகளுக்கும், நாய்களுக்கும் உணவளிப்பதால் அரிசி தீர்ந்துவிட்டதாகவும், தேங்காய் சம்பல் தயாரிக்கப்படுவதால் தேங்காய் தீர்ந்துவிட்டதாகவும் சமூகத்தில் பொய்யான கருத்துக்களை அரசாங்கம் வெளிப்படுத்துவதாகவும், அவ்வாறான கதைகளைப் பரப்புவதைத் தவிர்க்கவும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். https://tamilwin.com/article/monthly-rent-for-anura-s-house-around-500-rupees-1737784526
  18. முதலில் இங்கு என்ன கருத்து சொல்ல வந்தேன் என்பதை கூட புரிந்து கொள்ள திரணி அற்ற ஆள் அந்தளவுக்கு உங்களுக்கு புலிகள் மீதும் தமிழ் தேசியம் மீதும் அவ்வளவு வெறுப்பு கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம் காக்கா எச்சம் போடுவது போல் புலிகளை வசை பாடுவதுதான் உங்களின் முழு நேர தொழில் யாழில் கொஞ்சமாவது மற்றவர் எழுதும் கருத்துக்களை கிரகித்து அதற்க்கு தகுந்த பதில் கருத்து எழுத திரும்பவும் பள்ளி சென்று படித்து அதன்பின் யாழில் கருத்து எழுதுங்க .
  19. முதலில் எங்கடை அரசியலே முழு விசர் கூட்டமாய் திரியுது இதுக்குள் பக்கத்து வீட்டு அரசியல் அதுவும் நாம் அழிந்து கொண்ட நேரம் மானடா மயிலாட பார்த்த கூட்டம் எக்கேடு போனால் நமக்கென்ன . அதுசரி யாழ்பாணத்தில் இந்திய புரியாணி கடைகள் புதுசு புதுசு ஆய் திறக்கினம் ஒரு புரியாணி பாசல் 15௦௦ ரூபா என்கிறார்கள் அங்கிருக்கும் கூலிக்கு வேலை செய்பவரால் அந்த பாசலை வாங்க முடியுமா ?
  20. https://audioboom.com/posts/8640245-hundreds-of-dead-sea-turtles-are-washing-ashore-on-india-s-coast https://www.thetravel.com/why-are-hundreds-of-endangered-sea-turtles-washing-up-on-the-shores-of-east-india-dead/
  21. இயற்கையின் அருமை புரியாதவர்கள் தடை செய்யப்பட்ட trawl boats னால் வரும் இயற்க்கை அழிவை தெரிந்து கொண்டும் செயற்படுகிறார்கள் . ஒரு நாள் மீன் வளம் அற்ற கடலை அந்த கடல் காண்பித்து கையை விரிக்கும் அப்ப தெரியும் ஏண்டாtrawl boats பயன்படுத்திய விளைவு . ஒ அந்த விழிப்பு உணர்வில் தான் இலங்கையின் வடகிழக்கு கடற்கரையோரம்உங்கள் மீனவர்களால் சூறையாடபடுகிறதா? ஆமை இறப்பை சாதரணமாக எடுத்து கொள்ள முடியாது ஆர்வமுள்ளவர்களுக்கு https://www.independent.co.uk/asia/india/sea-turtles-olive-ridley-dead-tamil-nadu-chennai-b2682604.html
  22. சுமத்திரன் என்ற முழு விசரணை அரசியலை விட்டு போக வைக்க அர்சுன்னா என்ற பாதி விசரை வெல்ல வைக்க வேண்டி வந்தது அந்த சுமத்திரன் முழு விசர் அரசியலை விட்டு போகாதமுதல் இந்த அரை விசர்ததான் அதுக்காக எவ்வளவு விலையும் கொடுக்கலாம் .
  23. பாவம் anpu மணி இட்லிக்கு என்ன விலை கொடுக்கப்போகிறாரோ தெரியலை ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.