Everything posted by பெருமாள்
-
Sri Lanka rejects global report on child malnutrition
Colombo, March 11 (Daily Mirror) - In response to recent findings published in the British medical journal, The Lancet, concerning child malnutrition and underweight girls, Sri Lanka's health authorities have rejected the content referred to the portrayal of Sri Lanka. According to the study, approximately 410,000 girls in Sri Lanka are categorized as underweight, representing a prevalence of 16.4%. Despite efforts and initiatives aimed at improving nutrition and healthcare access, the report claims no detectable change in this distressing statistic since 1990. The Lancet publication, which covers data from 1990 to 2022 and was released on February 29, also ranked Sri Lanka second globally, trailing only behind India, for the highest prevalence of dangerously underweight girls aged 5 to 19 years. The analysis estimates that nearly 880 million adults and 159 million children lived with obesity in 2022. The study, conducted by the NCD Risk Factor Collaboration in conjunction with the World Health Organization (WHO), emphasized that the situation has remained static over the past three decades. Furthermore, the research indicates that unlike in Sri Lanka, the prevalence of underweight individuals has decreased in India over a span of 33 years, starting from 1990. However, Sri Lankan health authorities have vehemently rejected the conclusions drawn by the global report pertaining to the Sri Lankan context. Speaking to Daily Mirror, Secretary of the Ministry of Health Dr. Palitha Mahipala said the findings demarcated in the said study can’t be condoned as they contradict the actual scenario in Sri Lanka. At the same time, Director of the Family Health Bureau Dr. Chithramalee De Silva said they are not satisfied with the data the Lancet used to compile the report. According to the latest report from the health ministry, Sri Lanka has witnessed severe acute malnutrition (SAM) in 15,763 children [1.2%] in 2023 while 2022 saw 18,420 [1.4%] SAM children. The Health Ministry earlier rejected a report from the United Nations Children's Fund (UNICEF) on child malnutrition in Sri Lanka. https://www.dailymirror.lk/top-story/Sri-Lanka-rejects-global-report-on-child-malnutrition/155-278640
-
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
கிரிக் கப்பலா ? ஏனென்றால் ஆனேக யாழ்ப்பான ஆட்கள் கிரிக் கப்பலில் வேலை செய்வதை பெருமையும் கூடவே பணமும் . கனாகாலம் அல்ல பூமியின் சொர்க்கம் .
-
ஆணுக்கு கை கொடுத்த பெண்
நன்றி அண்ணா இணைப்புக்கு பின்னாலே வடிவேலு போல் நானும் ரவுடிதான் ரேஞ்சில் ஒருத்தர் சிலது கருத்துகள் வரபோகுது அவை கருத்துகளா என்று இன்னும் எனக்கு தெரியவில்லை .😃 என்ஜாய் .
-
ஐ.எம்.எப் கூட்டம் : தனிப்பட்ட அழைப்பில் பங்கேற்ற சுமந்திரன்
இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்த, ஜனாதிபதியின் அழைப்பில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முன்மொழிவுகள் தொடர்பிலான கலந்துரையாடலில் பங்கேற்ற, நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், நாணய நிதியத்தின் பகுப்பாய்வு தரவுகளுடன் கூடிய அறிக்கை தனக்கு கிடைக்குமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார். “எதிர்க்கட்சித் தரப்பில் நான் மட்டும்தான் பிரசன்னமாகியிருந்தேன். சரியான தரவுகள் எங்களுக்கு இல்லாத சூழ்நிலையில் இதற்கு ஆதரவு தெரிவிக்க முடியுமா என எங்களால் சொல்ல முடியாது என குறிப்பிட்ட பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் பகுப்பாய்வு தரவு அறிக்கையை எங்களுக்குத் தருவதாக சொல்லியிருக்கின்றார்கள். முதலில் எனக்குத் தருவதாக சொல்லியிருக்கின்றார்கள்.” சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்று (மார்ச் 11) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. சர்வதேச நாணய நிதியத்தினால் தயாரிக்கப்பட்ட பகுப்பாய்வு தரவுகளுடன் கூடிய அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென எம். ஏ. சுமந்திரன் வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிப்பட்ட அழைப்பு இந்தக் கூட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் மாத்திரமே எதிர்க்கட்சிகள் சார்பில் பங்கேற்றிருந்ததோடு, இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான அனுமதியை தமிழரசுக் கட்சியின் தலைமையிடம் அவர் பெற்றிருக்கவில்லை என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் வினவியபோதிலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். எவ்வாறெனினும் இந்த கூட்டத்தில் பங்கேற்றமை குறித்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தனக்கு கிடைத்த தனிப்பட்ட அழைப்பிற்கு அமைய பங்கேற்றதாக குறிப்பிட்டார். ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த அதேநேரத்தில், வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அரங்கேறிய பொலிஸ் அராஜகத்தை கண்டித்து, ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளாரின் அழைப்பில், யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் சிவஞானம் சிறீதரன் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/sumanthiran-attend-imf-meeting-1710268541
-
ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கப்போகும் பாரிய தொகை
பழைய கடன் காசு கொடுத்தாச்சா ?😀
-
மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?
இன்னமும் இந்த திரி இழுபடுதா ? ஒரு முழுமையான ஈ அடிச்சான் திருட்டு கதைக்கு இவ்வளவு அலப்பறையா 2௦2௦ ல் வெளிவந்த த எம்ரி மான் எனும் ஆங்கில ஹோரர்ர் படத்தில் கொஞ்ச நேர கதையை மட்டுமே திருடி எடுத்து முழு படமாக்கி உள்ளார்கள் மலையாளிகள் .ஆனால் the empty man கதை கிடங்கில் இருந்துவெளியே வந்த பின்தான் கதையே சூடு பிடிக்குது ஒரு பேயை வழிபடும் கூட்டம் தாங்கள் பூமியில் வெளிப்படும் காலம் வரும்வரை ஒரு தொடர்பாளரை தொடர் நிகழ்ச்சியாக உருவாக்கி கொள்வதுதான் கதை கொஞ்சம் matrix கதையையும் தெளித்து விட்டு இருக்கினம் . கிறுக்குத் தனமாய் எம்மிடையே நம்பும் சிதம்பரத்துக்கு மேல் சாட்டிலைட் வேலை செய்யாது என்பது போல் ஆங்கில கிறுக்கு கூட்டம் பல உண்டு அந்த கூட்டம்களுக்கு இப்படியான திகில் கதை அல்வா சாப்பிடுவது போல் . ott வாங்க மாட்டர்கள் என்று கொள்ளுபடுகினம் .https://www.republicworld.com/entertainment/malayalam-cinema/manjummel-boys-producers-greed-leads-to-no-ott-deal-for-malayalam-survival-drama/. ஒரிஜினல் கதை போல் இருக்க 2௦௦6 ல் நடந்த உண்மை கதை அனால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் யாருக்குமே சொல்லாமல் அந்த கதையை ஒளித்து வைத்து இருந்தார்களாம் நன்கு சரடு விடுகிறார்கள் குட்டன்ஸ் 😀
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
முதலில் யார் எழுதியது என்பதை பார்க்காமல் என்ன எழுதபட்டு உள்ளதென்று கவனியுங்கள் . ஒன்றரை லட்சம் மனிதர்களை குண்டு போட்டு அழித்துவிட்டு அந்த அழிவை பெரும் எடுப்பில் கொண்டாடிய சிங்களவர்கள் போன்றா நாங்கள் நடந்து கொண்டோம் ?
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
புலி வாந்தி கூட்டத்துக்கு National Post தான் தஞ்சம் . எலி வடையை கவ்வியது போல் எப்போதோ நடந்ததை 2௦1௦ ல் நடந்த செய்தியை காவிக்கொண்டு இந்த செய்தி யாழில் இருமுறை இணைக்கபட்டு உள்ளது . அதுவா உதராணம் ? இரண்டு சம்பவமும் ஒன்றா ? லங்கா ஸ்ரீ சுமத்திரனின் உண்மை முகத்தை எழுதுவதால் இணைக்க வேண்டி உள்ளது மற்றைய செய்திகள் மித்திரன் வகையானது .
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
லங்காஸ்ரீ நீண்ட காலம் யாழில் தடை செய்யபட்ட இணையம்களில் ஒன்று .
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இங்கு தரவுகள்தான் உண்மையானது என்று நிறுவுங்கள் அதை விட்டு சுமத்திரன் போல் அங்கு போய் படி இங்கு போய் இத்தனையாம் பக்கம் படி என்று உதார் விடகூடாது Canadian tamil =என் போல் இங்குள்ள யாழ் வாசகர் படிப்பதில்லை யாழில் உங்களின் உண்மையான கருத்துக்கள் வரவேற்க படுகின்றன ......😀
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் உள்ளவர் என்ன செய்தார்கள் ?
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சும்மா சேட்டை விட வேணாம் உதாரணம் காட்டுங்க அதுக்காக வட்டுகோட்டைக்கு வழி கேட்டால் வேறு வழி காட்டா வேணாம் .
-
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
அது எவை என்று விளக்கமாக சொல்ல முடியுமா ? இந்தமாதம் தான் புதிய ஐடியில் வந்து இருகிரியல் வந்ததுக்கு நன்றி இனி வரும்போது புதிய ip யில் வாருங்க . March 1
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் பூர்வீக குடிகள் அழிக்கப்பட்டதை கிரிபத் எனும் பாரம்பரிய உணவை கொடுத்து வெடி போட்டு கொண்டாடிய இனத்தில் மனிதாபிமானம் இருக்குமா ?
-
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
விளங்கவில்லை உங்கள் கருத்து .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புங்கையூரானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை?
வடகிழக்கு கடல் ஆழம் குறைந்த பகுதி ஆக இருப்பதால் சூரிய ஒளிவெப்பம் இலகுவில் ஊடுருவி மீன்கள் பாரிய அளவில் இனம் பெருக வழிவகுக்கின்றது . இந்த இயற்கை தந்த பாரிய கொடையை அத்து மீறலாக வந்து அள்ளிசெல்வதை என்ன பெயர் கொண்டு அழைப்பது? முடிந்தால் அதிரம் பட்டணம் பக்கம் போய் இந்த இலுவைபடகின் மூலம் மீன் பிடிக்கட்டும் பார்கலாம் நல்ல செத்தல் மிளகாய் அரைத்து பூசி அனுப்பி விடுவார்கள் கேரளா பக்கம் இவர்கள் படகை கண்டாலே காணும் நேரே சிறைதான் ஏன் அதே இலுவைபடகுகளை தமிழ்நாட்டு கடலுக்குள் ஒட்டி மீன்பிடிக்கட்டும் பார்கலாம் சிறு வலை மீன்பிடி ஆட்கள் பட்டா கத்தி கம்பு பொல்லுடன் கலவரமே நடக்கும் . இங்கு ஐரோப்பிய நாடுகளில் சிறிய குஞ்சு மீன்கள் உடன் மீன்பிடி படகுகள் கரை திரும்பினால் தண்டனை பணம் அறவிடும் நடைமுறை உண்டு . கிழே உள்ள கானொளியில் தமிழருக்கு உரித்தான வடகிழக்கு மீன் வளத்தை இழுவை படகு மீனவர்களால் எப்படி சிதைகிறார்கள் என்று பாருங்கள் போரில் கூட சிறுவர்களை விட்டு விடுவார்கள் இந்த இழுவை படகின் வலையின் மூலம் கடலின் கருவறையையே அழித்து தள்ளுகிறார்கள் . இந்த யுடுப்பர் வியாதியால் தங்களுக்கு தாங்களே போட்டி போட்டு வடகிழக்கு கடல் மீன்வள கொள்ளையை ஒப்புதல் வாக்கு மூலம் கொடுகிறார்கள் நேரமுள்ளவர்கள் இன்னும் தேடி பார்க்கலாம் .
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
இங்கு சுமத்தர் ரணிலுடன் விளயாட்ட பார்ப்பது பிரச்சனையல்ல முதலில் அவரின் சுயம் எது ? என்பதை தமிழ் மக்கள் தெரிந்து கொள்ளனும் . தனக்கு குண்டு வைக்க வந்தார்கள் என்று பொய்யான செய்தியை சொல்லி புனர்வாழ்வு அளிக்கபட்ட போரில் அங்கவீனர் ஆகிய முன்னாள் புலி போராளிகளை சிங்கள அரசிடம் சொல்லி சிறையில் இட்டு தனக்கு பாதுகாப்புக்கு அதிரடி படையை பெற்றுகொண்டார் அதே (இன்னமும் அவர்கள் சிறையில் தான் உள்ளார்கள் ) அதிரடி படையுடன் மாவீரர் நாளில் போராளி வீட்டுக்குள் சென்று மாவீரர் தினத்தை கடைபிடிப்பார். உலகிலே பெரிய அதிசயத்தை நிகழ்த்தி காட்டியவர் ஒரே ஒரு நாளில் நெல் விதைத்து அடுத்த சிலமணி நேரம்களில் வளர்ந்த நெல்லில் பொங்கல் செய்து காட்டியவர் இந்த பிழைப்புக்கு யாழ்பாணம் பஸ் ஸ்டாண்டில் துண்டை விரித்து பிச்சை எடுத்து இருக்கலாம் . சிங்களவர்களுடன் வாழ்வதே தனக்கு சந்தோசம் என்பவர் முறையான தேர்தலில் வராமல் பின்கதவால் தமிழர் அரசியலுக்குள் வந்து எண்ணற்ற இழப்புகளையும் இழந்து போயிருந்த தமிழருக்கு கிடைக்கவேண்டிய நியாமான தீர்வுகளை சர்வதேச விசாரணை முடிவுகளை குழப்பியடித்தவர் . இலங்கை தமிழர்களில் தனக்கு மட்டுமே ஆங்கிலமும் சிங்களமும் எழுத வாசிக்க கதைக்க தெரியும் என்று நம்புபவர் அதை தனது விசுவாசிகளுக்கும் சொல்லி வைத்திருப்பார் ஆனால் பொது மேடையில் இலங்கையின் சட்ட புத்தகம் படிக்க தெரியாமல் உளறுவார் . மேலே உள்ள வைக்கு எதிர் வாதம் செய்ய வருவோர் தயவு செய்து சுமத்திரன் தமிழர் அரசியலுக்கு வந்து கடந்த 14 வருடத்தில் தமிழர்கள் பெற்றுக்கொண்ட ஒரு நன்மையை சொல்லிய பின் கருத்துக்களை வைப்பது நல்லது . தமிழர் இன அழிப்பை செய்த சிங்கள ராணுவ அதிகாரிகள் சிங்கள அரசியல்வாதிகள் நிம்மதியாக உறங்க செல்கிறார்கள் என்றால் காரணம் இவர் மட்டுமே .
-
யாழில் விமானப்படையின் கண்காட்சி
- மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?
போதைபொருள் ஜாபர் செய்திகளில் இருந்து இனி விடைபெறுவார் அடுத்து கொஞ்ச நாளைக்கு ஜெயமோகன் தான் இரு மாநில செய்தி ஊடகங்களிலும் கிழித்து தொங்க விடபடுவார் .இனி என்ன ........................ஸ்டார்ட் மியுசிக் .😀- சென்னையில் ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் - ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் பற்றி அதிகாரிகள் கூறுவது என்ன?
இந்த pseudoephedrine பிடிபட்டது சரி அது எங்கிருந்து வந்தது ? தமிழ்நாட்டில் இருந்துதான் அதை யார் உற்பத்தி செய்கிறார்கள் ? என்ற விபரங்களை இந்த மழைக்கு முளைத்த காளான் யுடிப்பர் கூட்டம் கூட ஏன் மறைக்கின்றனர்? தமிழ்நாட்டில் டெண்டர் விட்டார்கள் அதை யார் எடுத்தார்கள் அதை யார் உற்பத்தி செய்கிறார்கள் தற்போது இதைப்பற்றி எல்லாம் ஏன் சொல்ல மறைக்கிறார்கள் ? ஜாபர் கைது பேருக்கு நாலு பேர் கைது அத்துடன் இந்த செய்தியை விட்டு வேறு செய்திக்கு மாறி விடுவார்கள் காரணம் இங்கு எழுதமுடியாது பல ரில்லியன் புழங்கும் அரசியல் சதுரங்கம் . கூகிளில் கிண்டுபவர்களால் உண்மையை கொண்டுவர முடியும் முடிந்தால் கிண்டுங்கள் .- ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சொந்த நாட்டில் அமைதியாக வாழ தெரியாத இனம் உலகில் எங்கு சென்றாலும் நாய் வாலை நிமித்த முடியுமா ?- நாட்டிற்கு 476 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி
டாலர் வந்தது வந்து கொண்டு இருக்குது வரப்போகுது டாலர் மழை இலங்கையில் கொட்டப்போகுது இப்படியே சொல்லி சொல்லி கடன் வாங்கியவர்களுக்கு ஆப்பு கொடுக்கிறாரார்கள் .- பனாமா கால்வாய் வறண்டு போகும் நிலை: 20 லட்சம் டன் சரக்கு தேக்கம் - ஆபத்தில் உலக வர்த்தகம்
போகும் நிலை: 20 லட்சம் டன் சரக்கு தேக்கம் - ஆபத்தில் உலக வர்த்தகம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகத்தின் முக்கிய கடல் வழிகளுள் ஒன்றான பனாமா கால்வாய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர்,மைக்கேல் ஃப்ளூரி பதவி,வட அமெரிக்க வணிக செய்தியாளர், பனாமா 7 மார்ச் 2024 புதுப்பிக்கப்பட்டது 8 மார்ச் 2024 உலகத்தின் மிக முக்கியமான செயற்கை கடல் நீரிணைப்புகளுள் ஒன்றான பனாமா கால்வாய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் இல்லாமல் இந்தக் கால்வாய் வறண்டு போகும் நிலை உருவாகி இருப்பதாக அஞ்சப்படுகிறது. சூயஸ் கால்வாய் போலன்றி, அமெரிக்க கண்டத்தின் பனாமா கால்வாய் காதுன் எனும் நன்னீர் ஏரியின் மூலம் நிரப்பப்பட்டு செயல்பட்டு வரும் கால்வாய் ஆகும். இந்நிலையில் சமீப காலமாக அந்த ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பனாமா கால்வாயின் அதிகாரபூர்வ நீரியல் நிபுணரான நெல்சன் குவேரா, காதுன் ஏரியின் நீர் மட்டம் 5 அடி குறைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஏரியை உருவாக்கும்போது அங்கிருந்த காடுகளின் மரங்கள் பாதியளவு மட்டுமே வெட்டப்பட்டன. ஒவ்வொரு முறை இந்த மாதம் வரும்போதும் அவற்றில் சில தண்ணீருக்கு வெளியே எட்டிப் பார்ப்பதுண்டு. ஆனால், இன்னும் முழுமையாக கோடைக் காலம்கூட தொடங்காத நிலையில் இப்போதே ஒரு காடளவிற்கான மரங்கள் நீர் மட்டத்துக்கு மேலே நீட்டிக் கொண்டிருப்பதாகவும் பனாமா கால்வாயின் அதிகாரபூர்வ நீரியல் நிபுணர் நெல்சன் குவேரா தனது பயணத்தின்போது கண்டறிந்துள்ளார். படக்குறிப்பு, பனாமா கால்வாயின் அதிகாரபூர்வ நீரியல் நிபுணர் நெல்சன் குவேரா பனாமா கால்வாய் குறைந்த வரத்து கொண்ட மழைநீரையே சார்ந்துள்ளது. இந்நிலையில் கால்வாயின் 110 வருட வரலாற்றில் இரண்டாவது முறையாக குறைந்த மழையும், வானிலையும் அதன் வறண்ட ஆண்டுக்கு காரணமாக அமைந்துள்ளன. கடந்த அக்டோபர் தான் அதன் வரலாற்றில் முதல் வறண்ட மாதம். அப்போது இயல்பைவிட 41% குறைவாக மழை பொழிந்தது. இது அமெரிக்க - பசிபிக் வழித்தடம் வாயிலாக பயணிக்கும் 270 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. இதற்காக கால்வாய் நிர்வாகம் ஒரு சில நீர்சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. குறிப்பாக ஒரு சில கப்பல்களே ஒரு நாளில் கால்வாயை கடக்க முடியும் என்று அது விதியை உருவாக்கியது. காரணம் கால்வாயை இயக்க ஏரியின் தண்ணீரே தேவை. இதைத் தொடர்ந்து ஒரு நாளைக்கு கால்வாயை கடக்கும் கப்பல்களின் எண்ணிக்கை 36 இலிருந்து 24ஆக குறைக்கப்பட்டது. அதிலும் எடைக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டதால், ஒவ்வொரு கப்பலும் குறைந்த அளவு சரக்கையே கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இந்த தேக்கம் உலக வர்த்தகத்தில் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பனாமா கால்வாய் என்ன சிக்கல் ஏற்படும்? பொதுவாக 5 சதவீத உலக கடல்சார் வர்த்தகம் மற்றும் 40% அமெரிக்க கண்டைனர்கள் அட்லாண்டிக் - பசிபிக் வழித்தடத்தையே பயன்படுத்துகின்றன. எனவே, இந்த வழித்தடம் வறண்டு விட்டால், கப்பல் நிறுவனங்கள் வேறு வழித்தடத்தை கண்டுபிடிக்க வேண்டிய தேவை வரும். இது நேரச்செலவை ஏற்படுத்துவது மட்டுமின்றி, பண விரயத்தையும் அதிகப்படுத்தும். மேலும் தண்ணீர் வறட்சி உலக வர்த்தகத்திற்கு மட்டும் பாதிப்பல்ல. பனாமா கால்வாய் நிர்வாகம்தான், அந்நாட்டின் பாதி மக்கள்தொகைக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. எனவே, தொடர் தண்ணீர் வறட்சி இதிலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், தற்போதைக்கு கால்வாய் நிர்வாகம் இந்த தண்ணீர் இன்னும் ஒரு நூற்றாண்டு தாக்குபிடிப்பதற்கு தேவையான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. பனாமா கால்வாய் ஆணையத்தின் மூத்த அதிகாரியான இலியா எஸ்பினோ டி மரோட்டா, கால்வாயின் பிரச்னையை தீர்ப்பதற்கான முயற்சியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். படக்குறிப்பு, பனாமா கால்வாய் ஆணையத்தின் மூத்த அதிகாரி இலியா எஸ்பினோ டி மரோட்டா பனாமா கால்வாய் சிக்கலுக்கு என்ன தீர்வு? இதுகுறித்து அவர் பேசுகையில், “இது ஒரு தொடர்ச்சியான பிரச்னையாக இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. போக்குவரத்து குறைப்பு அல்லது எடைக்குறைப்பு ஆகியவற்றையும் நாங்கள் விரும்பவில்லை” என்று கூறியுள்ளார். இந்த நிர்வாகம் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்துவதற்கான 8.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிலையான திட்டங்களை வகுப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பூமியில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட, இந்த திட்டங்கள் இது போன்ற முக்கிய வழித்தடங்களை உயிர்ப்போடு வைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. காலநிலை மாற்றத்தை குறிப்பிட்டு பேசிய இலியா எஸ்பினோ டி மரோட்டா, “பனாமா மிக அதிக மழை பெய்யும் ஒரு நாடு. ஆனால், சமீபத்தில் பல இடங்களை போலவே இங்கும் மழைப் பொழிவு குறைந்துள்ளதை பார்க்க முடிகிறது. எனவே நிச்சயமாக நாம் எதிர்காலத்தை நோக்கி தயாராக வேண்டும்” என்கிறார். அதில் முக்கியமான ஒன்று தண்ணீரை சேமிப்பது. கடல் மட்டத்திற்கு மேலே உள்ள வாயில்கள் வழியாக காதுன் ஏரி மற்றும் சிறிய அலாஜுவேலா ஏரியின் தண்ணீரின் மூலம் படகுகளை கொண்டு செல்வதே பனாமா கால்வாயின் பணியாகும். ஒவ்வொரு படகும் அதை கடப்பதற்கு 5 கோடி கேலன் தண்ணீர் தேவைப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு கால்வாயை புதிப்பித்த போது 60% தண்ணீரை சேமிக்கும் வகையிலான நியோ-பனாமாக்ஸ் பூட்டுகள் மாற்றப்பட்டன. ஆனாலும், பழைய பனாமாக்ஸ் பூட்டுகளும் செயற்பாட்டில் தான் உள்ளன. அவற்றை மாற்றியமைப்பது பெரிய திட்டம். இதற்கிடையில், ஒரு வாயிலில் இருந்து மற்றொரு வாயிலுக்கு அதே நீரை பயன்படுத்துவதற்கான குறுக்கு வழி ஒன்றையும் பனாமா கால்வாய் நிர்வாகம் கண்டுபிடித்தது. குறுக்கு வழியில் நீர் நிரப்பும் இந்த திட்டம் மூலம் தினசரி 6 கப்பல்கள் இந்த வழியை கடக்கும்போது பயன்படுத்தும் அளவிற்கான தண்ணீரை சேமிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. 2016இல் புதிய பூட்டுகள் மாற்றப்பட்டதில் இருந்து, நீர்தேக்கங்களை அமைப்பது குறித்து பனாமா கால்வாய் நிர்வாகம் சிந்தித்து வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பனாமா கால்வாயில் சிறிய கப்பல்கள் நிற்கும் காட்சி மழைப்பொழிவு மாதங்களில் அதிக நீரை சேமிக்கவும், வறட்சி காலங்களில் தண்ணீர் விநியோகத்தை அதிகரிக்கவும் அந்த நிர்வாகம் அருகில் உள்ள இந்தியோ நதியில் அணைக்கட்ட விரும்புகிறது. மேலும் காதுன் ஏரிக்கு பைப் வழியாக நன்னீரை வழங்கவும் அது திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் கப்பல் போக்குவரத்தை ஒரு நாளுக்கு 12 முதல் 15 வரை அதிகரிக்கும். இந்த திட்டத்தை முன்னெடுப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. காரணம் இந்த திட்டத்திற்கு இன்னும் காங்கிரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தாலும் கூட இதன் கட்டுமானம் முடிய சில ஆண்டுகள் ஆகும். இதில் மற்றுமொரு திட்டம் என்னவென்றால் உப்புநீக்கும் ஆலைகளை உருவாக்குவது. தொடர் மழையின்மை ஏரிகள் மற்றும் நதிகளை அதிக உப்புத்தன்மை வாய்ந்ததாக மாற்றியுள்ளது. இதனால், நாட்டின் முக்கியமான குடிநீர் ஆதாரங்களை பராமரிப்பது மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளது. அதே சமயம் இந்த திட்டம் விலை உயர்ந்தது மட்டுமின்றி கடல்நீரில் இருந்து உப்பை நீக்குவதற்கு அதிகளவிலான ஆற்றல் தேவைப்படுகிறது. இவர்களது திட்டப்பட்டியலில் செயற்கை மழையை வர வைப்பதும் கூட உள்ளது. மேகக்கூட்டங்களில் மழை உருவாக்கும் வேதிப்பொருட்களை தூவி மழை வருவிக்கும் மேக விதைப்பு முறையே இந்த செயற்கை மழை. இதை கேட்க அதிநவீன முறையாக தோன்றினாலும், இது 1940ஆம் ஆண்டிலிருந்தே பின்பற்றப்பட்டு வரும் ஒரு முறைதான். இந்த ஆண்டு ஏற்கனவே மோசமடைந்துள்ள உலக வர்த்தகம், மேலும் மோசமாகாமல் இருக்க வேண்டுமானால், இதற்கு உடனே தீர்வு கண்டறிய வேண்டும். தற்போது பனாமா கால்வாய் வழியாக நடக்கும் வர்த்தகத்தின் அளவை அதன் உச்ச அளவோடு ஒப்பிட்டால், 49% குறைந்துள்ளது. இதனால் தங்களின் தினசரி செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் அகுன்சா கப்பல் நிறுவனத்தின் பனாமா கிளை பொது மேலாளர் ஜோஸ் செர்வாண்டஸ் . பனாமா கால்வாயில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக ஜவுளிப் பொருட்களில் இருந்து உணவுகள் உள்ளிட்ட இரண்டு மில்லியன் டன் சரக்குகள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், வேறேதும் நல்ல குறுக்குவழிகள் இல்லாததே பிரச்சனை என்கிறார் அவர். படக்குறிப்பு, அகுன்சா கப்பல் நிறுவனத்தின் பனாமா கிளை பொது மேலாளர் ஜோஸ் செர்வாண்டஸ் பனாமா கால்வாய்க்கு மாற்று இருக்கிறதா? செங்கடல் பிரச்னை எழுவதற்கு முன்பு, ஆசியாவிலிருந்து சில சரக்கு கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாக திருப்பி விடப்பட்டன. அது பாதுகாப்பு குறைந்த தேர்வாக இருப்பதன் காரணமாக, பனாமா முழுவதும் ரயில் மற்றும் சாலை போக்குவரத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆனால், கப்பல்களில் இருந்து ரயில்கள் மற்றும் வாகனங்களில் சரக்குகளை இறக்கி ஏற்றுவதற்கே அதிக செலவுகள் ஆவதாக கூறுகிறார் ஜோஸ் செர்வாண்டஸ். “அந்த செலவுகள் அனைத்தும் வாடிக்கையாளர் மீதுதான் சுமத்தப்படுகிறது" என்றும் கூறுகிறார் அவர். எதிர்பார்த்தபடி மழை மே மாதத்தில் வந்தால், கால்வாயை கடக்கும் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது நிர்வாகம். ஆனால், அது வெறும் தற்காலிக தீர்வு மட்டுமே. மழைபொழிவதில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை உலக வர்த்தகம் மற்றும் பனாமா கால்வாயின் நீண்ட எதிர்காலத்தில் தாக்கம் செலுத்தும் என்பதற்கான ஒரு நினைவூட்டல் இது. https://www.bbc.com/tamil/articles/cnl78krx8xgo- மாலத்தீவை விட்டு வெளியேறும் இந்தியப் படை, காலூன்றும் சீனா - அடுத்து என்ன நடக்கும்?
மாலத்தீவு-சீனா உறவுகள் நெருக்கமாகி வரும் நிலையில், மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களின் ஒரு பகுதியினர் அந்நாட்டை விட்டு நாளை மறுநாள் (மே 10-ஆம்) வெளியேற உள்ளனர். படிப்படியாக நிகழும் இந்த வெளியேற்றம் மார்ச் 10-ஆம் தேதிக்குள் முழுமையடைய வேண்டும் என்று இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக கருதப்படும் மாலத்தீவு அதிபர் முய்சு விதித்துள்ள மே மாதக் காலக்கெடுவை பூர்த்தி செய்யும் வகையில், இந்திய ராணுவ வீரர்கள் படிப்படியாக திரும்பப் பெறப்படுவர். மாலத்தீவில், இந்தியாவைச் சேர்ந்த இரண்டு மீட்பு மற்றும் உளவு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு சிறிய விமானத்தை பராமரிக்கவும், இயக்கவும் தனது ராணுவ வீரர்கள் மாலத்தீவில் உள்ளதாக இந்தியா கூறியுள்ளது. இந்த விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை இந்தியா பல ஆண்டுகளுக்கு முன் மாலத்தீவிற்கு நன்கொடையாக கொடுத்திருந்தது. இந்தியப் படைகளை மாலத்தீவில் இருந்து அகற்றும் நடவடிக்கை என்பது அதிபர் முய்சுவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். மாலத்தீவின் மீது இந்தியா நீண்டகாலமாக தனது செல்வாக்கை செலுத்தி வருகிறது. மாலத்தீவில் இருந்து இந்தியப் பெருங்கடலின் முக்கியமான பகுதிகளை கண்காணிக்க அந்நாடு இந்தியப் படையினரை அனுமதித்தது. ஆனால், முய்சு பதிவியேற்விற்கு பின், கடந்த சில மாதங்களாக இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆசியாவில் உள்ள வல்லரசுகள், இந்தப் பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்த துடித்துக்கொண்டிருக்கும் வேளையில், இந்த சந்தர்பத்தை, சீனா, சுரண்டுவதற்கான ஒரு இடைவெளியாகப் பார்க்கிறது. இருந்தபோதிலும், ராணுவத்தினரைத் தவிர்த்து, இந்தியாவில் உள்ள சிவில் தொழில்நுட்ப ஊழியர்கள் இந்தியா சார்பில் வழங்கப்பட்ட விமானத்தை இயக்க மாலத்தீவு ஒப்புக்கொண்டுள்ளது. இதற்காக, ஏற்கனவே இந்தியாவில் இருந்து ஒரு குழுவினர் மாலத்தீவு சென்றுள்ளனர். "விமானம் மாலத்தீவில் இருக்கும், அவற்றைப் பராமரிக்க இந்திய பணியாளர்கள் இருப்பார்கள். எனவே இரு தரப்பும் சமரசம் செய்து கொண்டதாகத் தெரிகிறது," என்கிறார் முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலர் ஷியாம் சரண். மாலத்தீவில் உள்ள சிலர், ராணுவ வீரர்களுக்கு பதிலாக சிவிலியன்களை நியமிப்பதை முய்சுவின் 'இந்தியா வெளியேறு' பிரச்சாரத்திற்குப் பிறகு கிடைத்த ஒரு முக்கியமான முன்னேற்றமாகப் பார்க்கிறார்கள். இதுகுறித்து கேட்க முய்சுவை தொடர்புகொள்ள பிபிசி முயன்றது. ஆனால், முய்சுவின் அலுவலகம் பதிலளிக்கவில்லை. மாலத்தீவுக்கு சீனா என்ன உதவி செய்கிறது? பட மூலாதாரம்,REUTERS ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட மாலத்தீவு, ஆசிய சக்திகளின் போட்டிக்குள் சிக்கிக்கொள்ளும் அபாயத்தில் உள்ளதாக சில ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். சீனா பல ஆண்டுகளாக மாலத்தீவிற்கு நூறு கோடி டாலர்களுக்கு மேல் கடன் கொடுத்துள்ளது, பெரும்பாலும் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகவே இந்தக் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் மற்றும் மாலே ஆகிய இரு நாடுகளும் தங்கள் உறவுகளை ஒரு விரிவான மூலோபாய கூட்டாண்மைக்கு உயர்த்திக் கொண்டன. முந்தைய மாலத்தீவு தலைவர்களைப்போல அல்லாமல், முய்சு இந்தியாவுக்கு வருவதற்கு முன்னதாகவே, சீனாவிற்கு அரசு முறைப்பயணமாகச் சென்றார். அதனைத் தொடர்ந்து, இந்த வாரத் தொடக்கத்தில், மாலத்தீவு அரசு, சீனாவுடன் ஒரு ராணுவ உதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த முன்னேற்றம், இந்தியாவை சற்று கவலையடையச் செய்தது. கூடுதல் விவரங்களை தர மறுத்த மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம், இந்த ஒப்பந்தம் எந்தவிதப் பணப்பரிமாற்றமும் இல்லாமல் நடந்ததாக் கூறியது. ஆனால், செவ்வாய்கிழமை அன்று ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் முய்சு, சீனா மாலத்தீவு பாதுகாப்பு படைகளுக்கு உயிரைக்கொல்லாத ஆயுதங்களைக் கொடுத்து, அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கும் எனக் கூறினார். "இது முன்னோடியில்லாதது. ராணுவ உதவியை வழங்குவதற்காக மாலத்தீவு பெய்ஜிங்குடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இதுவே முதல் முறை," என்று மாலத்தீவு அரசியல் ஆய்வாளர் அசிம் ஜாஹிர் பிபிசியிடம் தெரிவித்தார். "முதலீடு மற்றும் மூலதனத்தின் அடிப்படையில் முய்சு சீனாவுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவார் என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் அவர் இந்த அளவிற்கு செல்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை," என்றும் அவர் கூறினார். ஆனால் பெய்ஜிங் மாலத்தீவில் நீண்டகால ராணுவத் திட்டங்கள் எதுவும் இல்லை என்று மறுக்கிறது. "இது இரு நாடுகளுக்கிடையேயான இயல்பான உறவு. இந்தியப் பெருங்கடலில் சீனா ராணுவப் இருப்பைக் கொண்டிருக்க விரும்பினால், அதற்காக மாலத்தீவுகளை விட அது சிறந்த தேர்வுகளைக் செய்திருக்கலாம்," என்கிறார் செங்டு இன்ஸ்டிடியூட் ஆப் வேர்ல்ட் அஃபர்ஸ் சிந்தனைக் குழுவின் தலைவர் லாங் சிங்சுன். சீனாவுடன் நெருங்கும் மாலத்தீவு பட மூலாதாரம்,GETTY IMAGES சீனா உறுதியளித்திருந்த போதிலும், பலரும் சீனா இந்த சந்தர்பத்தைத் தனக்குத் சாதகமாகப் பயன்படுத்துவதாக நம்புகின்றனர். ஏனெனில், இதற்கு முன்பு இருந்த அதிபர் இப்ராகிம் மொகமத் சோலிஹ் இந்தியாவுக்கு மிக நெருக்கமாக இருந்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது, முய்சு, முந்தைய நிர்வாகம் டெல்லியுடனான மாலேயின் ஒப்பந்தங்களின் உண்மையை வெளியிடவில்லை என குற்றம் சாட்டியிருந்தார். தற்போது அதேபோன்ற விமர்சனம் அவர் மீதும் வைக்கப்படுகிறது. "பெய்ஜிங்கிற்கு அவர் மேற்கொண்ட பயணத்தின் போது அவர் கையெழுத்திட்ட பெரும்பாலான ஒப்பந்தங்களின் விவரங்கள் எங்களிடம் இல்லை. முய்சு அத்தகைய ஒப்பந்தங்களின் விவரங்களை வெளியிடாத போது முந்தைய அரசாங்கத்தை விட சிறந்தவர் அல்ல," என ஜாஹிர் கூறினார். கடந்த மாதம், டெல்லியின் எதிர்ப்பையும் மீறி, சீன ஆராய்ச்சிக் கப்பலான சியாங் யாங் ஹாங் 3, மாலேயில் நிறுத்த முய்சுவின் நிர்வாகம் அனுமதித்தது. ஆனால், சீன ராணுவம் நீர்மூழ்கிக் கப்பல் நடவடிக்கைகளில் பயன்படுத்தக்கூடிய தரவுகளை சேகரிக்கும் பணியாக இது இருக்கலாம் என்று அஞ்சும் சில இந்திய நிபுணர்களை இது நம்ப வைக்கவில்லை. உறவுகளில் தொடர்ந்து வரும் விரிசல்களுக்கு மத்தியில், டெல்லி மாலத்தீவுக்கு அருகாமையில் உள்ள இந்திய தீவுக்கூட்டமான லட்சத்தீவில் புதிய கடற்படை தளத்தை அமைத்துள்ளது. மினிகாய் தீவில் உள்ள ஐ.என்.எஸ் ஜடாயு 'மேற்கு அரபிக்கடலில் கடற்கொள்ளையர் எதிர்ப்பு மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளில்' தனது முயற்சிகளை மேம்படுத்தும் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. சிலர் இதை மாலத்தீவுக்கு இந்தியா அனுப்பும் செய்தியாகப் பலர் பார்த்தாலும், இது தற்போதைய பதட்டங்களுக்கான பதில் இல்லை என்று இந்திய நிபுணர்கள் கூறுகின்றனர். "இது புதிய விஷயமாக நான் நினைக்கவில்லை. எனக்குத் தெரிந்தவரை, இது சில காலமாக செயல்பாட்டில் உள்ளது," என்று முன்னாள் இந்திய தூதர் சரண் கூறினார். முய்சுவின் இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகள் அவரது நாட்டில் பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் கட்டுமானப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மாலத்தீவு இந்தியாவையே சார்ந்துள்ளது. கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, மாலத்தீவுக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை இந்தியா அனுப்பியது. ஆனால், பிரதமர் நரேந்திர மோதியைப் பற்றி சில அதிகாரிகள் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததை அடுத்து, மாலத்தீவை 'புறக்கணிக்க' இந்தியர்களுக்கு சமூக ஊடக அழைப்புக்கு வழிவகுத்த சமீபத்திய சர்ச்சைக்குப் பிறகு இது மாறிவிட்டது. முய்சு பெய்ஜிங்கில் இருந்தபோது சர்ச்சை வெடித்தது. தொற்றுநோய்க்கு முன்னர் இருந்ததுபோல மீண்டும் முதலிடத்தைப் பெற அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்பத் தொடங்குமாறு சீன அதிகாரிகளை மாலத்தீவு அரசு கேட்டுக்கொண்டது. அப்போதிருந்து, சீன சுற்றுலாப் பயணிகள் கணிசமான எண்ணிக்கையில் செல்லத் தொடங்கினர். சுற்றுலா அமைச்சகத்தின் தரவுகளின்படி, ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மாலத்தீவுக்குச் சென்ற சுமார் 4 லட்சம் சுற்றுலாப் பயணிகளில் 13% பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். இந்தியா ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஏப்ரல் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அவர் அவையில் பெரும்பான்மை பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதால், முய்சுவின் நடவடிக்கை தீவிரமடையும் என்று சிலர் எதிர்பார்க்கின்றனர். https://www.bbc.com/tamil/articles/ce9r017614ko - மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?
Important Information
By using this site, you agree to our Terms of Use.