Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. பாத்தி மாற்றி தண்ணி விடுவதுக்கே சம்பளத்துக்கு ஆள் தேடும் நிலையில் நம்மவர் இருக்கையில் ஒரு மரமாவது நடுவது அதிசயம் .
  2. நல்ல விடயம் இங்கிலாந்து மக்களின் வரிப்பணம் அநியாயமாக போகுது என்று இன்ச்டகிறாமில் அலறினாள் காணும் சிங்கனின் பதவி அவ்வளவுதான் .அங்குதான் இங்கிலாந்தின் இளையோர் .
  3. சீக்கிய பிரிவினைவாதி படுகொலையை அடுத்து, கனடாவுடன் உறவில் கடும் விரிசல் ஏற்பட்டிருந்தாலும் பருப்பு இறக்குமதி அளவை இந்தியா இருமடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியாகியுள்ளது. பருப்பு இறக்குமதி உற்பத்தியில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக இந்தியாவை வெளிநாட்டு கொள்முதல்களை அதிகரிக்க தூண்டியதாக கூறுகின்றனர். சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் சஜ்ஜர் படுகொலையில் இந்தியாவின் பங்கு தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றஞ்சாட்டியிருந்தார். @reuters தங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் பதிவு செய்தார். ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் பாதிப்புக்குள்ளானது. இந்த நிலையில், கனடாவில் இருந்து பருப்பு இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அளவை குறைத்துக் கொண்டது. இந்தியா அல்லது கனேடிய நிர்வாகம் தங்கள் வர்த்தகத்தில் தடைகளை விதிக்கலாம் என்ற அச்சமே காரணமாக கூறப்பட்டது. ஆனால் அந்த அச்சமும் நீடிக்கவில்லை. கனடாவில் இருந்து இந்தியாவின் பருப்பு இறக்குமதி முந்தைய ஆண்டை விட 2023ல் 120 சதவிகிதம் அதிகரித்து 851,284 மெட்ரிக் டன்னாக இருந்தது என்று அரசு தரப்பில் இருந்து தகவல் கசிந்துள்ளது. சுமார் 3 மில்லியன் டன் பருப்பு இறக்குமதிக்கு இந்தியா பெருமளவில் கனடாவையே நம்பியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், பருப்பு இறக்குமதிக்கு வணிக நிறுவனங்கள் மாற்று வழியைத் தேடியதாக கூறப்படுகிறது. @reuters 2023ல் அதிக விளைச்சல் காரணமாக அவுஸ்திரேலியாவிலிருந்தும் பருப்பு இறக்குமதி மேம்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவின் பருப்பு இறக்குமதி 2023ல் முந்தைய ஆண்டை விட 162 சதவிகிதம் அதிகரித்து, 1.68 மில்லியன் டன்களை எட்டியது. இதன் மொத்த மதிப்பு 1.25 பில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது. இந்தியாவில் பருப்பு வகைகளின் தேவை சுமார் 3 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது. ஆனால் உற்பத்தி என்பது வெறும் 1.3 மில்லியன் டன் அளவுக்கே இருப்பதாக கூறுகின்றனர். https://news.lankasri.com/article/india-lentil-imports-from-canada-surge-1708556576
  4. பிபிசியின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் குடிமகனும், ஊடகவியலாளருமான டாக்டர் சமீர் ஷா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக, பிரித்தானிய கலாச்சாரத்துறை செயலர் லூசி பிரேசர் வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் எம்.பி.க்கள் அடங்கிய தேர்வுக் குழு அவரது பெயரை இறுதி செய்யும், இது பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸால் அங்கீகரிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது. தொலைக்காட்சி தயாரிப்பு மற்றும் பத்திரிகையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள சமீர் ஷா, முன்பு பிபிசியின் நடப்பு விவகாரங்கள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளின் தலைவராகப் பணியாற்றினார். அவர் மார்ச் 2028 வரை (நான்கு ஆண்டுகள்) பிபிசி தலைவராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிபிசியின் தலைவராக (Chairman) சமீர் ஷா ஆண்டுக்கு 160,000 Pounds (இலங்கை பணமதிப்பில் ரூ.6.3 கோடி) சம்பளம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுடனான (Boris Johnson) திரைமறைவு விவகாரம் வெளியானதை அடுத்து ரிச்சர்ட் ஷார்ப் (Richard Sharp) கடந்த ஆண்டு பிபிசி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. https://news.lankasri.com/article/bbcs-first-indian-origin-chairman-in-dr-samir-shah-1708675470
  5. தமிழரசுக்கட்சிக்கான நீதிமன்ற தடை உத்தரவுகளால் 75, வருட பழைமைவாய்ந்த அரசியல் கட்சியான தந்தைசெல்வாவால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் 17 ஆவது தேசிய மகாநாடு 19ஆம் திகதி , திங்கள் கிழமை நடைபெற இருந்த வேளையில் கடந்த 15 ஆம் திகதி, அன்று ஒரே நாளில் திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய நீதிமன்றங்களில் தாக்கல் செய்த வழக்குகளால் பல இழுபறிகள் போட்டிகள் பொறாமைகள் மத்தியில் இடம்பெற இருந்தமாநாடு இப்போது நடத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. ஏற்கனவே 16, தேசிய மகாநாடுகள் எல்லாமே சிலு சிலுப்புகள் அணிகள் இன்றி இடம்பெற்றன. இதுவரை எட்டுத்தலைவர்களால் 74, வருடங்கள் கட்டிக்காத்த சமஷ்டிக்கொள்கையை வெளிப்படையாக கொண்ட தமிழ்தேசிய மரபு சார்ந்த கட்சி இம்முறைதான் 17 ஆவது தேசிய மகாநாடு புதிய நிர்வாக தெரிவுகளில் போட்டி பொறாமை சண்டை எதிர்ப்பு விட்டுக்கொடுப்பின்மை என பல தடைகளை்தாண்டி புதிய 9 ஆவது தலைவராக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முதல்தடவையாக ஒரு தேர்தல் வாக்கெடுப்பு மூலமாக தெரிவானார். கட்சித் தலைவர்கள் இதுவரை கட்சித் தலைவர்களாக, 1. சாமுவேல் ஜேம்ஷ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் (தந்தை செல்வா) யாழ்ப்பாணம் 2. குமாரசாமி வன்னியசிங்கம், யாழ்ப்பாணம். 3. அராலிங்கம் இராஜவோதயம்,-திருகோணமலை. 4. சின்னமுத்து மூத்ததம்பி இராசமாணிக்கம், மட்டக்களப்பு. 5. டாக்டர் இலங்கை முருகேசு விஜயரெத்தினம் நாகநாதன்,யாழ்ப்பாணம். 6. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். யாழ்ப்பாணம்., 7. இராஜவரோதயம் சம்பந்தன். திருகோணமலை. 8. மாவை சோமசுந்தரம் சேனாதிராசா. யாழ்ப்பாணம் ஆகியோர் இருந்தனர், தற்போது 9.சிவஞானம் சிறிதரன், யாழ்ப்பாணம் தெரிவாகினார். சரித்திரத்தில் கடந்த 74 வருடமும் இடம்பெறாத நிலையில் தலைவர் தெரிவுக்காக பதில் பொதுச்செயலாளராக பதவியில் இருந்த மருத்துவர் சத்தியலிங்கம் வேட்பு மனுக்களை கோரியதன் நிமிர்த்தம் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஷ்வரன் ஆகிய மூவரும் பொதுச்சபையின் ஆறு இயங்கு நிலை உறுப்பினர்களின் முன்மொழிவுடன் விண்ணப்பங்களை பதில் பொதுச்செயலாளர் ஏற்றுக்கொண்டு அவர்களை வடகிழக்கில் உள்ள எட்டுமாவட்டங்களிலும் சென்று பிரசாரங்களை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கியிருந்தார். ஏறக்குறைய 375, பொதுச்சபை உறுப்பினர்கள் மட்டும் தலைவரை தெரிவு செய்யும் இரகசிய வாக்கெடுப்பில் ஏன் மாவட்டங்களில் எல்லாம் சென்று பிரசாரம் செய்யவேண்டும் என்ற கேள்வி பலரின் மத்தியில் இருந்தது. ஜனநாயகமுறையில் வாக்கெடுப்பு அதற்கு ஜனநாயகம் உள்ள ஒரு அரசியல் கட்சியில் ஜனநாயகமுறையில் வாக்கெடுப்பு நடத்தி தலைவரை தெரிவு செய்வது ஏனைய கட்சிகளுக்கு முன்மாதிரியான செயல்பாடு என வியாக்கியானம் தலைவர் தெரிவில் போட்டியிட்ட வேட்பாளர்களால் கூறப்பட்டன. அதேவேளை இவ்வாறான போட்டித்தன்மை பின்னர் பொறாமையாக மாறி இரண்டு அணிகளாக கட்சிக்குள் குழப்பங்களை தோற்றுவிக்கலாம் என்ற கருத்துகளை பல ஊடகவியலாளர்களும் கட்டுரையாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் குறிப்பிட்டிருந்தனர். இந்த சந்தேகங்களுக்கெல்லாம் வேட்பாளராக போட்டியிட்ட சுமந்திரன் அப்படி எதுவும் இடம்பெறாது தேர்தல் முடிவுற்றதும் இருவரும் சேர்ந்து பயனிப்போம் என்பதை வெளிப்படையாக கூறினார். ஆனால் அவரே பின்னர் பொதுச்செயலாளர் பதவி தமக்கு தரப்படவேண்டும் இல்லையேல் தமது அணிக்கு தரவேண்டும் என்று அடம்பிடித்து இரண்டு அணிகளாக தமிழ்சுக்கட்சி உள்ளதை நிருபித்தார். ஏற்கனவே வடகிழக்கில் உள்ள மாவட்டங்கள் அனைத்திலும் தமது பிரசாரத்தை ஆரம்பித்தவர் சுமந்திரன், அவருக்கு ஆதரவாக வெளிப்படையாகவே மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முழுமையாக செயல்பட்டார் அவரின் பிரசாரம் ஆரம்பித்து ஒரு வாரங்களுக்கு பின்னரே இரண்டாவதாக சிறிதரன் மூன்றாவதாக யோகேஷ்வரன் சிறிதரனுடன் இணைந்து பிரசாரத்தை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் மேற்கொண்டனர். சிறிதரனுக்கு ஆதரவாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.ஶ்ரீநேசன், யோகேஷ்வரன். அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஷ்வரன் முழுமையாக பிரசாரங்களை மேற்கொண்டனர். யோகேஷ்வரன் சிறிதரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தபோதும் கடந்த ஜனவரி 21இல் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் வாக்குச்சீட்டில் யோகேஷ்வரனின் பெயரும் இடம்பெற்றிருந்தது இதில் ஆச்சரியம் என்னவெனில் யோகேஷ்வனுக்கு எவருமே வாக்களிக்கவில்லை தப்பித்தவறி்யாராவது ஒவருவர் யோகேஷ்வரனன் பெயருக்கு நேரே புள்ளடி இட்டு இருந்தால் அவர் மீது வீண் சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கும் தாம் சிறிதரனை ஆதரிப்பதாக கூறிவிட்டு தானே தமது வாக்கை அவருக்கே போட்டிருப்பதாக அவர் மீது யாரும் குற்றம் கூறியிருப்பார்கள் நல்லவேளை்அப்படி நடக்கவவில்லை. இதில் இருந்து யோகேஷ்வரன் சிறிதரனை தாம் ஆதரிப்பதாக கூறிய கருத்து முழுமை பெற்றிருந்தது என்பதற்கு மாற்றுக்கருத்துகள் இல்லை. வாக்கெடுப்பில் பொதுச்சபையில் கலந்துகொண்ட 321, உறுப்பினர்களில் சிறிதரன் 184, வாக்குகளையும், சுமந்திரன் 137, வாக்குகளையும் பெற்று சுமந்திரனை விட 47, மேலதிக வாக்குகளால் சிறிதரன் தெரிவானார். சிறிதரன் தமது பிரசாரங்களில் தாம் கூறிய தமிழ்த்தேசிய வாதி என்பதை நிருபித்தார் பொதுச்சபை உறுப்பினர்களில் 184, பேர் தமிழ்தேசிய கொள்கையை ஆதரித்தனர் எனபதும் 137 பேர் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்கள் என்ற தோற்றப்பாட்டையும் இந்த வாக்கெடுப்பு தெரிவு மூலம் நிருபணமானது. ஒருகட்சி தலைவர் தெரிவை மாவட்டங்கள் தோறும் சென்று பிரசாரம் செய்யாமல் தலைவர் தெரிவு இடம்பெற்ற ஜனவரி 21இல் குறிப்பிட்ட மூவரையும் ஒரு ஐந்து நிமிடங்களுக்கு அவர்களின் கருத்துக்களை கூறவிட்டு பின்னர் வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் இரண்டு அணிகள் என்ற கருத்துக்கே இடம்வந்திராது என்பது எனது கருத்து இதை நான் பல இடங்களில் சுட்டிக்காட்டி இருந்தேன். தலைவர் தெரிவு அதைவிட தலைவர் தெரிவு இடம்பெற்ற அன்றே பொதுச்செயலாளர் தெரிவும் இடம்பெற்றிருந்தால் இரண்டு அணிகள் என்ற கதையே எழுந்திராது. வழமையாக கடந்த 16 ஆம் திகதி , தேசிய மகாநாடுகளிலும் தெரிவு ஒருநாளில் தான் இடம்பெற்றது வழமை ஆனால் இந்த முறை ஜனவரி 21 இல் தலைவர் தெரிவும் சரியாக ஒருவாரம் கழித்து ஜனவரி 27இல் பொதுச்செயலாளர் ஏனைய தெரிவுகளுக்கு பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் திகதி ஒதுக்கியதும் ஒரு தவறான அணுகுமுறையாக பார்க்கப்பட்டது. இதுவும் சுமந்திரன் பதில் பொதுச்செயலாளரிடமும், நிர்வாகச்செயலாளரிடமும் கூறியதால் அப்படி செய்ததாக பலரின் மத்தியில் கருத்தும் உண்டு ஒரே நாளில் இடம்பெறாமல் ஒருவாரம் பிற்போடப்பட்டு பொதுச்செயலாளர் தெரிவு இடம்பெற்றதும் குழப்பநிலைக்கு ஒரு காரணமாக அமைந்தது. அந்த குழப்பம் போட்டி குரோதம் இன்று வெட்கம் இல்லாமல் நீதிமன்றத்தடைக்கு சென்றுள்ளது. மத்தியகுழு கூட்டம் கடந்த ஜனவரி 27இல் பொதுச்சபை கூடுவதற்கு முன்னர் மத்தியகுழு கூட்டப்பட்டது மத்திய குழுக்கூட்டம் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கத்தால் அறிவிப்பு(கூட்ட அழைப்பு) விடுக்கப்படவில்லை மகாநாட்டு விழாக்குழு தலைவர் குகதாசனே மத்திய குழு உறுப்பினர்களுக்கு அறிவித்திருந்தார். உண்மையில் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் சுகவீன காரணமாக அவர் தலைவர் தெரிவிலும் அதன்பின்னர் நடந்த மத்தியகுழு பொதுச்சபை கூட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை இதுவும் சில முரண்பாடுகளுகளை தோற்றுவித்தது மகாநாடு நடத்தி முடியும்வரை அதற்கான முழும்பொறும் பொதுச்செயலாளரே கையாளவேண்டும் ஆனால் இது யார் கூட்டத்தை நடத்தினார் என்பதே புரியாத புதிராகவே இருந்தது. இறுதியாக கடந்த ஜனவரி 27 இல் இடம்பெற்ற மத்தியகுழு கூட்டத்திம் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெற்றபோது அவர் மத்தியகுழுவில் பொதுச்செயலாளர் தொடர்பான ஆலோசனைகளை கூறலாம் என கேட்டதற்கு இணங்க நான்(பா.அரியநேத்திரன்) மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீநேசனின் பெயரை முன்மொழிந்திருந்தேன். அதன்பின்னர் ஏற்கனவே நிருவாக செயலாளராக இருந்த குலநாயகம் தான் 1965, தொடக்கம் தமிழரசுகட்சியில் முக்கிய உறுப்பினராக இருப்பதாகவும் கடந்த 2019, மகாநாட்டிலும் தாம் பொதுச்செயலாளர் பதவி கேட்டு தரப்படவில்லை இந்தமுறை தமக்கு தரவேண்டும் என குறிப்பிட்டார். அதன்பின்னர் சுமந்திரன் தம்மை தலைவர் சிறிதரன் சிரேஷ்ட தலைவராக செயல்படுமாறு கேட்டதாகவும் தாம் அந்த பதவியை ஏற்கவில்லை ஆனால் தற்போது இரண்டு அணிகள் உள்ளன சிறிதரன் அணி , சுமந்திரன் அணி என உள்ளது தலைவராக சிறிதரன் உள்ளதால் அவருக்கு எதிராக போட்டியிட்ட தமக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கினால் இரண்டு அணிகளையும் சமாளித்து ஒற்றுமையாக கட்சியை முன்னகர்த்தலாம் என்ற கருத்தை தெரிவித்தார். அடுத்ததாக கொழும்பு கிளை உறுப்பினர் இரத்தினவேல் தமது கருத்தில் வடக்கை சேர்ந்த ஒருவர் தலைவராக இருந்தால் கிழக்கை சேர்ந்தவர் பொதுச்செயலாளராக இருப்பது நல்லது அதனால் குலநாயகமும், சுமந்திரனும் வடக்கை சேர்ந்தவர்கள் விட்டுக்கொடுத்து மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை பொதுச்செயலாளராக தெரிவது நல்லது என்ற கருத்தை கூறினார். இதன் பின்னர் மீண்டும் சுமந்திரன் கிழக்கில் மூன்று மாவட்டங்கள் உள்ளன அதில் திருகோணமலை மாவட்ட தலைவர் குகதாசன். அல்லது மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சாணக்கியன், அல்லது அம்பாறை மாவட்ட தலைவர் கலையரசன் இந்த மூவரில் ஒருவரை நியமித்தால் இரண்டு அணிகள் என்ற பிரச்சனை எழாது என்ற கருத்தை கூறினார். இதன்பின்னரே புதியதலைவர் சிறிதரன் ஶ்ரீநேசனிடம் அவருடைய இருக்கைக்கு சென்று குகதாசனுக்கு ஒருவருடம் விட்டுக்கொடுக்குமாறு கேட்டார் அதை பெரும் தன்மையாக ஶ்ரீநேசனும் சம்மதித்தார் ஆனால் ஒருவருடம் வரையறை செய்த விடயத்தை பொதுச்சபையில் சிறிதரன் கூறவில்லை. பொதுச்சபையில் பெரும்பாலானவர்கள் குகதாசனை பொதுச்செயலாளராக வருவதை விரும்பவில்லை இதனால் சண்டை தகராறு குழு குழப்பம் அடைந்து பின்னர் இரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என கேட்டபோது ஒரு கட்டத்தில் பழைய தலைவர் மாவை சேனாதிராசா வாக்கெடுப்பு மறுநாள் 28ஆம் திகதி இடம்பெறும் என அறிவித்தார். அதனால் சில பொதுச்சபை உறுப்பினர்கள் வெளியேறினர் எஞ்சிய பல உறுப்பினர்கள் இன்று வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என அடம்பிடித்தனர். இதனை ஏற்ற தலைவர் மாவை சேனாதிராசா இப்போது பொதுச்செயலாளருக்கான இரகசிய வாக்கெடுப்பை பதில் செயலாளர் இல்லாத காரணத்தால் உப செயலாளரான சுமந்திரன் நடத்துவார் என கூறினார். சுமந்திரன் பொதுச்செயலாளருக்கான வாக்கெடுப்பை தவிர்த்து மத்தியகுழுவில் எடுத்த தீர்மானத்தை ஏற்பவர், எதிர்பவர்கள் என கூறி கையை உயர்த்தும் வாக்கைடுப்பை நடத்தி மேடையில் நின்று அவரே கணக்கெடுத்தார் அந்த எண்ணிக்கை 112, பேர் ஏற்பதாகவும்,104, பேர் எதிர்கதாகவும் முடிவை அறிவித்துவிட்டு சென்றார் அதன் பின்னர் மீண்டும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட தலைவர் மாவைசேனாதிராசா மகாநாடு ஒத்திவைக்கப்பட்டதாக கூறினார். இந்த சிக்கல் நிலை கடந்த ஜனவரி 27 தொடக்கம் கடந்த பெப்ரவரி 11, வரை தொடர்தன மீண்டும் பொதுச்செயலளர் பதவி இரகசிய வாக்கெடுப்பில் நடத்தவேண்டும் என சிறிதரன் அணியை சேர்ந்தவர்களும், நடத்த கூடாது என சுமந்திரன் அணியை சேர்ந்தவர்களும் வாதப்பிரதிவாதங்களும் சமூகவலைத்தளங்களில் ஏட்டிக்கு போட்டியான கருத்துகளும் தொடர்ந்தன. புதியதலைவராக தெரிவான சிறிதரன் தமது தலைவர் பதவியை முறைப்படி மகாநாட்டில் பதவி ஏற்று கட்சியை இயங்கு நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை உள்ளதாலும் பழைமையான தமிழரசுக்கட்சியை தொடர்ந்தும் ஒற்றுமையாக முன்கொண்டு செல்லவேண்டும் என்பதற்காகவும் கடந்த 11ஆம் திகதி வவுனியாவில் பதில் பொதுச்செயலாளராக பதவியில் இருந்த சத்தியலிங்த்தின் வீட்டில் மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேத்திரன், ஞா.ஶ்ரீநேசன், அம்பாறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஷ்வரன், திருகோணமலை மாவட்ட தலைவர் ச.குகதாசன், மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாளஷ் நிர்மலநாதன், வவுனியா மாவட்ட தலைரும் பதில் பொதுச்செயலாளருமான சத்தியலிங்கம், புதிய தலைவர் சி.சிறிதரன் ஆகிய ஏழுபேரும் பல மணிநேரம் கலந்துரையாடி வாதப்பிரதி வாதங்களின் பின்னர் ஒரு இணக்கபபாடு எட்டப்பட்டது. இந்த இணக்கப்பாட்டு அடிப்படையிலேயே 19ஆம் திகதி மாநாடு நடைபெற இருந்தது. அந்த இணக்கப்பாடானது முதல் ஒருவருடம் திருகோணமலை ச.குகதாசனும், மறு வருடம் மட்டக்களப்பு ஞா.ஶ்ரீநேசனும் பொதுச்செயலாளராக பணிபுரியவது என இணக்கம் காணப்பட்டது. இந்த இணக்கத்தின் அடிப்படையில்தான் கடந்த ஜனவரி 27ஆம் திகதிஒத்திவைக்கப்பட்ட 17ஆவது இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் மகாநாடு 19 ஆம் திகதி மீண்டும் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி சிறிதரனுக்கு எதிரான அணியை சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் இரண்டு மாவட்டங்களில் வழக்கு தாக்கல் செய்து தடை உத்தரவை பெற்றமை கட்சி உறுப்பினர்கள் மத்தியில் வழக்கு தாக்கல் செய்தவர்கள் அதற்கு துணைபோனவர்களுக்கு எதிராக கடும் விமர்சனங்களை கூறுவதை காணலாம். தந்தை செல்வா 1949 இல் தமிழரசுகட்சியை ஆரம்பித்து அவருடைய வழியை தொடர்ந்து பின்னர் தலைவராக செய்பட்ட ஏனைய தலைவர்களான கு.வன்னியசிங்கம், அ.இராஜவோதயம் சி.மூ.இராசமாணிக்கம், இ. வ நாகநாதன், அ.அமிர்தலிங்கம். இரா சம்பந்தன், மாவை சேனாதிராசா. ஆகியோரும் கட்சி உபவிதிகளுக்கு அப்பால் சில விடயங்களை கட்சி நலன் கருதி சம்பிரதாயம், விட்டுக்கொடுப்பு, சமூகநலன், பிரதேசநலன் என்பவற்றை அனுசரித்து தமிழரசுக்கட்சியை பாகுபாடின்றி ஒற்றுமையாக கடந்த 74, வருடங்கள் ஒரு தமிழ்தேசிய விடுதலை அரசியல் கட்சியாக தமிழ் மக்கள்மத்தியில் பிழவு படாமல் கட்டிக்காத்தனர். அவர்கள் தலைவர்களாக இருந்த வேளையில் நீதிமன்றம் தடை சட்டம் என எவருமே கட்சியை மீறி செல்லவில்லை. தமிழர் விடுதலைக்கூட்டணி ஆனால் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி வாக்கெடுப்பு மூலமாக புதிதாக தற்போது தெரிவான தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவாகி அடுத்த கட்ட நடவடிக்கையை ஒற்றுமையாக முன்எடுக்கும் ஆயத்தங்களை இணக்கப்பாடுடன் செய்வதற்கான முயற்சிகளை எடுக்கும்போது அதனை பொறுத்துக்கொள்ளாத சக்திகள் பொறாமையினால் தடை உத்தரவை பெற்றனர். தந்தை செல்வாவின் தீர்க்க தரிசனமானது கடந்த 1976, மே,14 இல் வட்டுக்கோட்டை தீர்மானம் எடுக்கும்போது அவர் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியை கலைத்துவிட்டு அல்லது செயல் இழக்க வைத்துவிட்டு தமிழர் விடுதலை கூட்டணியை ஆரம்பிக்கவில்லை தமிழரசுக்கட்சியை அப்படியே வைத்துவிட்டே தனியாக அடுத்த கட்சியாக தமிழர் விடுதலை கூட்டணியை உதயசூரியன் சின்னத்துடன் உருவாக்கப்பட்டு முதல் முதலாக 1977, பொதுத்தேர்தலை சந்தித்து பின்னர் 2000 ஆம் ஆண்டு வரை அந்த கட்சி தனித்துவமாக்செயல்பட்டது மட்டுமின்றி பல தேர்தலகளை சந்தித்தது. அதனால் தான் 2001இல் தமிழ்ததேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் ஆதரவுடனும் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கியபோது தமிழர் விடுதலை கூட்டணிதான் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் கட்சியாக இருந்தது.2001 தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முதலாவது தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணியில் போட்டியிட்டது. ஆனால் அதன்பின்னர் ஆனந்தசங்கரியின் துரோகத்தால் 2004 இல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழர் விடுதலை கூட்டணியில் தேர்தல் கேட்க முடியாமல் ஆனந்த சங்கரியார் நீதிமன்ற தடை உத்தரவு பெற்றதனால் 2004, பொதுத்தேர்தலில் மீண்டும் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியில் தேர்தலை சந்திக்குமாறு விடுதலைப்புலிகளின் தலைவர் கட்டளை இட்டு இன்று வரை இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழினத்தின் தாய்க்கட்சியாக செயல்படுகிறது. 2004 இல் ஆனந்தசங்கரி செய்த துரோகத்தை இப்போது 2024 இல் தமிழரசுக்கட்சியில் உள்ள கறுப்பாடு ஒன்றின் ஆலோசனையில் செய்யப்பட்டுள்ளது. அந்த கறுப்பாடு யார் என்பது கட்சி உறுப்பினர்களுக்கு நன்கு தெரியும் அதை நான் குறிப்பிடவில்லை தயாரிப்பு, இயக்கம், நெறியாழ்கை, கதாநாயன், வில்லன் என ஒரங்க நாடகமாக இது தயாரிக்கப்பட்டு அரங்கேறியுள்ளது. பவள விழா தந்தை செல்வா 1976 இல் எடுத்த தீர்க்கதரிசன்முடிவு தமிழர் விடுதலை கூட்டணி நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியபோது இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி இருந்ததமையால்த்தான் 2004ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சி கைகொடுத்தது. கடந்த 1949, டிசம்பர்,18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி எதிர்வரும் 2024, டிசம்பர்,18இல் 75 ஆவது பவள விழா நாளாகும். இந்த பவளவிழா ஆண்டில் 17ஆவது தேசிய மகாநாட்டில் ஒன்பதாவது புதிய தலைவராக பதவி ஏற்று தலைமை பேருரையாற்றும் 55, வயதுடைய சிவஞானம் சிறிதரன் அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருந்தது அது இப்போது தடை பட்டாலும் விரைவில் தர்மம் வெல்லும். https://tamilwin.com/article/ilangai-tamil-arasu-party-article-1708512862
  6. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களிடம் வெளிநாட்டு கையிருப்புகளை அனுப்ப வேண்டாம் என எமது நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதனால் நாங்கள் பொருளாதார ரீதியாக உடைந்து போனோம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பொருளாதார வீழ்ச்சி இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் முறைமையின்படி அரசாங்கத்தின் பிரதான மதிப்பீட்டாளரின் பெறுமதி பெறப்பட்டதுடன் அரசாங்கத்தின் மதிப்பீட்டுத் தொகை 8,299 மில்லியன் ரூபாவாகும். சுயாதீன மதிப்பீட்டாளரிடமிருந்து பெறப்பட்ட மதிப்பீட்டின் ஆரம்ப முதலீட்டு அறிக்கையை சம்பந்தப்பட்ட முதலீட்டாளர் சமர்ப்பித்திருந்தார். அதன் மதிப்பீடு 3,256 மில்லியன் ரூபாவாக காட்டப்பட்டது. இந்தத் தொகையில் உள்ள வித்தியாசத்தை விளக்குமாறு முதலீட்டாளர் கேட்டிருந்தார். அரச தலைமை மதிப்பீட்டாளரிடம் கோரிக்கை மனு அளித்து, பின்னர் அவர்கள் மீண்டும் அரசின் மதிப்பீட்டு தொகையை உறுதி செய்துள்ளனர். அதன்படி செயல்படுமாறு முதலீட்டாளருக்கு தெரிவித்துள்ளோம். பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திய அந்நிய கையிருப்பு பற்றாக்குறைதான் நம் நாட்டின் முக்கிய பிரச்சினை. கோவிட் தொற்றுநோய் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருவதை நிறுத்தினர். போராட்டத்தால், முதலீடு வராமல் நின்றது. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களிடம் வெளிநாட்டு கையிருப்புகளை அனுப்ப வேண்டாம் என எமது நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதனால் நாங்கள் பொருளாதார ரீதியாக உடைந்து போனோம். ஆனால் தற்போது இந்த பொருளாதார நெருக்கடி ஏற்படும் போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வருகிறார்கள். அவர்கள் விரும்பும் செயல்முறையை நாம் உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/sri-lanka-government-income-1708783865
  7. இவ கிட்டடியில் ஏதாவது ஒரு விபத்தில காணமால் போக போகிரா ? அல்லது இனம் தெரியாத புற்றுநோயால் இறந்து போவா நாங்களும் எதிர் காலம் பற்றி சொல் வம் .
  8. ஒரே விடயத்தை பத்து இடத்தில் வேறு வேறு வடிவத்தில் எழுதினால் சூப்பர் கருத்தாளர்கள் என்று பெயர் வரும் என்று யாரோ அறிவாளிகள் உங்களுக்கு சொல்லி போட்டார்ங்கள் போல் உள்ளது 😀
  9. அழுது முடிச்சாச்சா இல்லை இன்னும் யாரும் இருந்தால் மேடைக்கு வாருங்கப்பு சீக்கிரம் ......................
  10. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு குழப்பக்காரர் எனவும் தமிழ் அரசியலில் அவரது இருப்பு இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், “சுமந்திரன் எங்கு சென்றாலும் குழப்பத்தை ஏற்படுத்தி மகிழ்வதோடு அதற்கு ஆதாரமாக சில விடயங்களை குறிப்பிடலாம். அவரால் வடக்கு மாகாண சபையில் குழப்பம் ஏற்பட்டதோடு, சீ.வி.கே.சிவஞானத்தை கையாண்டு விக்னேஸ்வரனை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுத்தார். விலகிய கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சமீபத்தில் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய அனைத்து கட்சிகளும் வெளியேறியது. இந்தக் கட்சிகளின் விலகல் தீர்மானத்துக்கு காரணம் சுமந்திரனின் தலையீடே ஆகும். திருகோணமலையில் தமிழரசுக்கட்சியில் ஏற்பட்ட குழப்பநிலைக்கும் அவர் தான் காரணம். அத்துடன், சுமந்திரனின் தலையீட்டினால் 20க்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களைக் கொண்டிருந்த லண்டன் GTF அமைப்பானது மூன்று தனிநபர்களாக குறைக்கப்பட்டது. தமிழர் போராட்டத்தை ஆதரிப்பதற்காக 2009ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கனடிய தமிழ் காங்கிரஸ் சுமந்திரனின் தலையீட்டின் பின்னர் இலங்கைக்கு ஆதரவாக சாய்வடைய ஆரம்பித்தது. ஊழல் விவகாரங்கள் சுமந்திரன் யாழ்ப்பாணக் கல்லூரியில் ஊழல் விவகாரங்களை மறைக்க முற்பட்ட போது அங்கும் அவரால் குழப்பநிலை தோன்றியது. இதனால், அமெரிக்க மிஷனின் நிதி உதவி குறைக்கப்பட்டது. இந்த ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான விரிவான நிர்வாக சீர்திருத்தங்கள் கோரப்பட்ட போதிலும் அவை அனுமதிக்கப்படவில்லை. துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்க மிஷன் அவரது முன்மொழிவுகளை நிராகரித்தது. இவை மட்டுமன்றி அவரால் விளைவிக்கப்பட்ட குழப்பங்களை நாம் இன்னும் பட்டியிலிடலாம். ஏன் தமிழரசுக்கட்சி தமிழ் அரசியலில் சுமந்திரனை விரும்புகிறார்கள் என்று கேட்க விரும்புகிறோம். அவரால் கடந்த 15 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றவர்களின் கருத்துக்களை பொருட்படுத்தாமலே மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழர் இறையாண்மை இதனால், ஜனநாயக அரசியலில் அவரது இருப்பு கேள்விக்குறியாகியுள்ளதோடு தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் அரசியல் அதிகாரம் இல்லாத நிலை தொடர்கிறது. தமிழரசுக் கட்சியில் இருந்து சுமந்திரனை நீக்கினால், உலக அரங்கில் தமிழர்களுக்கு அவர் முன்வைத்துள்ள எதிர்மறையான பிம்பம் இல்லாது அவர் ஏற்படுத்திய குழப்பம் தீரும். தமிழர் இறையாண்மையை அடைவதை இலக்காகக் கொண்ட ஒரே கொள்கையின் கீழ் குழப்பங்கள் இன்றி ஒன்றிணைய முடியும் என கூறியுள்ளனர். https://tamilwin.com/article/sumanthran-s-presence-in-tamil-politics-1708527373?itm_source=parsely-api
  11. Courtesy: Nada. Jathu இரட்டை இலைச் சின்னப் பிரச்சினையில் எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் இழுபறிபட்டு நீதிமன்றத்தினை நாடி கட்சியின் செயல்வலுலை சீர்குலைத்த ஒரு நிலையையே இன்றைய தமிழரசுக்கட்சியும் அடைந்திருக்கின்றது. இருசம்பவங்களினதும் பின்னணிகள் மற்றும் அணுகுமுறைகள் வேறு வேறு விதமாக இருந்தாலும் இரு சம்பவங்களாலும் கட்சிக்கு விளையும் விடயம் ஒன்றாகத்தான் இருக்கும். சுமந்திரனது அரசியல் பிரவேசமானது தேர்தல் வியாபாரத்தில் ஈடுபடாத புத்திசாலிகளை உள்வாங்க என அரசியலமைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு கதவான தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்ற வாழ்க்கைக்குள் நுழைக்கப்படுகின்றார். தமிழ் தேசிய அரசியல் அவர் ஒரு புத்திசாலியாக நிபுணத்துவ மேற்சட்டையுடன் அடையாளப்படுத்தப்பட்டு ஒரு புலமை வளமாக தமிழ் தேசிய அரசியலில் காண்பிக்கப்பட்டார். அடுத்த பொதுத் தேர்தலில் தான் நேரடியாக அரசியல் ஈடுபட்டு வெற்றியீட்ட வேண்டும் என்ற தீர்மானத்தில் தேர்தல் வியாபாரத்தில் உள்நுழைகின்றார். இது ஒரு முரண்நிலை அணுகுமுறை என்பதை அன்றைய கால காட்டத்தில் பெருந்தலைவர் என விளிக்கப்படும் சம்பந்தரோ கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவோ கட்டுப்படுத்தும் தேவை அற்றவர்களாக இருந்திருக்கின்றார்கள். காரணம் அன்றைய காலகட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்னும் பெயரில் வீட்டு சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் பிச்சைக் கோப்பைக்குள் தான் அனைத்து வேட்பாளர்களும் வாக்குக்களை உண்டுகொண்டிருந்தார்கள். வெற்றி என்பது உறுதி என்பதைவிட தமிழ் அரசுக்கட்சிக்காரருக்கு தோல்வி மீதான பயமோ அழுத்தமோ உள்ளூர இருக்கவில்லை. இத்தோல்வி மற்றும் அழுத்தம் என்னவோ அக் கூட்டமைப்பில் இருந்த கஜேந்திரகுமார், சுரேஸ்பிரேமச்சந்திரன் ஆகியோருக்கே இருந்தது. அந்த காலகட்டத்தில் இவ்இருவரைத் தவிரவும் வேறுயாரும் சுமந்திரனது செயற்பாடுகளை விமர்சிக்கவில்லை. காரணம் இவர்கள் இருவருக்கும் மிகத் தெளிவாக தெரியும் வெளியேறவேண்டியவாக்கு நிலை ஒன்று உருவாகுமிடத்து நாடாளுமன்ற உறுப்புரிமையில் தங்களுக்குரிய இடம் அங்கே கிடைக்காது. சுமந்திரன் அரசியல் வியாபாரம் இவ்வாறானதொரு சூத்திரமே அன்றைய களச்சூழல் ஆகும். அதற்காகவே கஜேந்திரகுமாரும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் கூவினார்களே அன்றி தமிழ் மக்களுக்காக கூவவில்லை என்பதை இன்றுவரைக்குமாக அனுபவச் சூழல் புடம்போட்டு நிற்கின்றது. புலமையாளன் என்ற கதவில் உள்வந்து போட்டியாளன் ஆக மாறிய சுமந்திரன் அரசியல் வியாபாரத்தில் நுழைந்ததில் இருந்து இந்த கட்சியின் தலைமைப் பதவி என்பதற்கு மிகத் தெளிவாக அண்ணளவாக 10 வருடங்களுக்கு முன்னரே திட்டமிட்டுவிட்டார். அதற்கு உகந்தவகையில் தமிழ்தேசிய கூட்டமைப்பாக இருந்த காலத்திலும் பிற்காலத்திலும் தனக்கு இடையூறுகள் எனக் கருதியவற்றை மிகவும் சாமர்த்தியமாக சம்மந்தர் என்ற நிழலையும் மாவை சேனாதிராஜா என்ற கழன்ற கத்திப்பிடி போன்ற தலைவரையும் அவ்வப்போது தட்டி தட்டி வெட்டுவதுபோல் பாவித்து தெளிவாக முன்னகர்த்தியிருந்தார். ஒரு கட்டத்தில் சுமந்திரனது நடவடிக்கைகள் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு பாதிப்பு, கட்சிக்கு பாதிப்பு என்பவற்றைக் கடந்து சுமந்திரனது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு வெற்றியாகவே அமைந்திருந்தது. இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் ஒரு உட்கட்சி ஜனநாயகமும், தமிழ் தேசிய உணர்வு ரத்தங்களும் கொதிக்காது அப்பா திரைப்படத்தில் வரும் தம்பிராமையா கதாபாத்திரம் போல என்ன நடந்தாலும் நமக்கு என்ன என கடந்து சென்றவர்களுள்தான் இன்றைய அனைவரும் அடங்குகின்றார்கள். கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் கட்சிகளின் பிரிவு வேட்பாளர்களின் நிலை முதலியவற்றைக் கருத்திற்கொண்டும் தேர்தல் வியாபாரத்தில் தமிழரசுக் கட்சிக்கு தலைவர் ஆகவேண்டும் என்ற தனது தீர்மானத்திற்கு சுருதி சேர்க்க வேண்டும் என்றால் சுமந்திரன் நேரடியாக அதிகூடிய வாக்குக்களை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த முடிவானது என்ன தேவைக்காக தேசியப்பட்டியல் ஆசனத்தில் உள்வாங்கப்பட்டாரோ அப்போது அவரிடம் எதிர்பார்க்கப்பட்ட நிபுணத்துவப் புனிதத்தினை இழந்துவிட்டார். அச்சிந்தனையில்தான் கடந்த இரு தேர்தல்களிலும் வேட்பாளர்களும் வடிவகைப்படுகின்றார்கள். வெற்றி வேட்பாளர்களைவிட தோல்வி வேட்பாளர்கள் மிகத் தெளிவாக உள்ளடக்கப்படுகின்றார்கள். சித்தாந்த அரசியல் மிகவும் கவலைக்கும் வெட்கத்திற்கும் உரியதொரு விடயம் சமபந்தி,போசனம் என சாதியத்தை ஒறுத்த தமிழ் கட்சிகளும் இயக்கங்களுக்கும் இணைந்து தேர்தலை சந்திக்கும் தமிழ்த் தேசியக் கூட்மைப்பிற்குள் இன்றைய நிலையில் மகாசபைக்கு இத்தனை ஆசனங்கள் ஒதுக்க வேண்டும் என சாதிய ஒறுப்பால் கௌரவம் பெற்ற சமூகங்களோ மீளவும் இந்த ஒதுக்கத்தினை கோரிப்பெற்றுக்கொள்கின்றார்கள். இந்த இடத்தினையும் கடந்த தேர்தலில் மிகச் சிறப்பாக வடிவமைத்து வேட்பாளர்களையும் இட்டு நியாயப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே இருவேறு சித்தாந்த அரசியல் தளங்களை அடிப்படையாக கொண்ட இரு நாடாளுமன்ற உறுப்பினர்களாக தான் சுமந்திரனும் சிறீதரனும் செயற்பட்டிருந்தனர். இந்த அடிப்படை வேறுபாட்டுக்கு மூலகாரணம் கட்சியின் யாப்பு, நிலைப்பாடு, செயற்பாட்டு ஒழுக்கம் முதலிய விடயங்கள் எவையும் கிஞ்சித்தேனும் இன்றைய கால ஓட்டத்திற்கு பொருத்தமான வகையில் தமிழரசுக் கட்சியிடம் இல்லை. குறைந்த பட்சம் மரபு ரீதியான செயற்பாடுகளை மதிக்கத் தயாராகவும் இருக்கவில்லை. அடுத்த தலைவருக்கான தகுதி என தமக்குள் தகுதியேற்றம் செய்யவேண்டிய சூழலில் தான் இரு சித்தாந்த தளங்களும் சுமந்திரனும் சிறீதரனும் ஒன்றாக வாக்கு சேகரிக்கின்றார்கள். இருவரும் நேரடியாக வெல்லவைக்கப்படுகின்றார்கள். சுமந்திரன் வென்றாலும் அவரது இறுதி இலக்கு (அல்ரிமேட் கோல்) அடையப்படவில்லை. இந்த சூழ்நிலையிலேயே உட்கட்சி ஜனநாயகம் என்ற விடய வாதப்பொருள் மிகவும் கலவீனமான யாப்பு உடைய தமிழ் அரசுக் கட்சிக்குள் கருத்தரிக்கின்றது. அது நாளடைவில் வெளிவந்து இயன்றவரை கணிசமான பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. தனியே கிளிநொச்சி மண் என்ற பௌதீக பிரிப்பை முழுக்கட்டுப்பாட்டில் அதாவது தமிழரசுக் கட்சிக்குள் மாற்று அணிகள் இன்றி தனக்குரிய தனி அணியாகவே மாத்திரம் சிறீதரன் பேணிவந்திருந்தார். இத் தேர்தல் உத்தியில் ஏற்கனவே கடந்த இரு தேர்தல்களிலும் தக்கவைத்திருந்த தங்களுக்கான பாரம்பரிய வாக்காளர்கள் பலரை மாவை சேனாதிராஜா, சரவணபவன், சித்தார்த்தன், சிறீதரன் ஆகியோர் இழந்திருந்தார்கள். இவற்றில் கணிசமான ஊடுருவல்களும் உடைப்புக்களும் சுமந்திரனால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் அவர் வென்றிருந்தார். அவர் உட்கட்சி தேர்தலில் வாக்கு விகிதாசாரத்தில் ஏனையவர்களை விடவும் முன்னேறியிருந்தார். இதற்காக பல பதவி அமர்த்துகைகள் மற்றும் கட்சிக்குள் முக்கியத்துவங்கள் முதலியன வழங்கப்பட்டிருந்தன. உட்கட்சி ஜனநாயகம் இச்சந்தர்ப்பத்தில் நேரடியாக அரசியல் வியாபாரத்தில் தோற்ற அம்பாறை கலையரசன் தேசியப்பட்டியலால் உள்வாங்கப்படுகின்றார். மக்களால் வெல்ல வைக்கப்பட முடியாத ஒருவர் உட்கட்சி ஜனநாயகத்தால் வெல்லவைக்கபடுகின்றார். இவ்வாறான தீர்மானம் மிக்க முடிவுகள் எடுக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மத்திய குழுவோ பொதுச் சபையின் நியாயமோ அறியப்பட்ட வரலாறு எட்டவில்லை. இதனை சவாலுக்கு உட்படுத்த எந்தவொரு கட்சியின் நியாயத்தினை காக்கும் இன்றைய காவலர்களுக்கும் திராணி இருக்கவில்லை, முக்கியமாக அவர்களுக்கு அவ்வாறான தேவையும் அந்தச் சந்தர்ப்பத்தில் இருக்கவில்லை. மிகச் சிறப்பான நிலை தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு உருவாகின்றது. இதனால் தான் இவரை கழன்ற கத்திப்பிடி என விளிக்கவேண்டியதாயிற்று. தனது இறுதி இலக்கினை சுமந்திரன் அடையமுடியாது விட்டதால் மாவை சேனாதிராஜா நாடாளுமன்றம் வந்துவிட்டால் தொடர்ந்தும் வாழ்நாள் தலைவராக தமிழரசுக் கட்சிக்கு அமர்ந்துவிடுவாரோ என்றதொரு முன்னேற்பாடுதான் அன்றைய செயலாளருடன் சேர்ந்து சம்பந்தரின் நிழலில் சுமந்திரன் கலையரசனுக்கு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் பிச்சை. அதுவரை தமிழ் தேசிய இரத்தம் கொதித்துக்கொண்டிருந்த கலையரசன் மென்வலு மிதவாத அரசியல் மாத்திரைகளை விழுங்கியதும் தமிழ்த் தேசிய அழுத்தத்தினை சீர்செய்துகொண்டார். இறுதி இலக்கில் சுமந்திரன் தெளிவாக பயணித்து அனைத்தினையும் தனக்கு சாதகமாக வடிவமைத்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் புதிய தலைவர் தேர்வு 2024 வருகின்றது. இச் சம்பவங்கள் அனைவரும் அறிந்த விடயங்கள், இதன் தொடர்சியில் தலைவர் பதவி என்பதைத் தாண்டி காத்திரமான நிர்வாக பணிகள் செயலாளருக்கு உரியவை. அந்த பதவியில் இருப்பவர் சுயாதீனமாக செயற்படுவாராயின் அவர் தான் ஏனையவர்களின் குறிப்பாக தலைவரதும் தலையெழுத்தை தீர்மானிக்கவல்லவராவார். இந்த சூழ்நிலையிலேயே குகதாசன் என்ற கதாபாத்திரம் முக்கியத்துவம் பெறுகின்றது. கனேடிய மண்ணில் மிகவும் உன்னத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த குகதாசன் கனேடிய காங்கிரசின் ஒரு முக்கிய பிரமுகராக இருந்தார். கனேடிய காங்கிரஸ் ஆனது விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதத்துடன் 2000ம் ஆண்டளவில் கனடாவில் ஒரு இலாகநோக்கற்ற அறக்கட்டளை அமைப்பாக உருவாக்கப்பட்டாலும் பிற்காலத்தில் அங்கே ஏற்பட்ட விரிசல்கள் விடுதலைப் புலிகளுடைய நிலைப்பாட்டிற்கு இடைவெளியுடையதாக பேணப்பட்டு வந்தது. விடுதலைப் புலிகள் காலத்தில் கனேடிய காங்கிரஸ் கனடா மண்ணை மாத்திரமே கவனம்கொண்டது. விடுதலைப்புலிகளின் நீக்கத்திற்கு பின்னராக இலங்கைத் தமிழ் அரசியலில் வடக்கு கிழக்கை தீர்மானிக்கும் ஒரு சக்தியாக கனடா காங்கிரஸ் உருவெடுக்க ஆரம்பிக்கின்றது. மன்னரதும் மந்திரியினதும் முடிவு இதன் வளர்சியை கடந்த மூன்று பொதுத் தேர்தலிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் விளைந்த விளைவுகளை வைத்துக்கொண்டு எடைபோட்டிட முடியும். ஒரு வாக்காளரது குழப்பத்திற்கும் துப்பாக்கி சுடுவதற்கான அனுமதி வழங்கப்பட்ட ஜனநாயகத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தெரிவு எவ்வித ஜனநாயகமும் அற்ற முறையில் பல வியாக்கியானங்கள் கற்பிக்கபட்டு தேர்தலில் போட்டியிட்டு வெல்வைக்கப்படுவார்கள். ஜனநாயகமான தேர்தல் முறமை, எதேச்சாதிகாரமான வேட்பாளர் தெரிவு இதுதான் கடந்தகால வரலாறு. இது ஒரு செயற்கையான அரசியல் சூழல் உருவாக்கம் ஆகும். அதனை பின்னின்று பணம் என்றதொரு விடயத்தினால் சாதிப்பதில் முன்னிலை வகிப்பது கனடா காங்கிரஸே ஆகும். இப்பணத்தில் கையளைந்த வேட்பாளர்கள் தோற்றாலும் தோற்கடிக்கப்பட்டாலும் வாய்திறக்க மாட்டார்கள். இது கட்சித் தலைவரான கழன்ற கத்திப்பிடி மாவை சேனாதிராஜாவுக்கும் பொருத்தமானதாகும். இவ்வாறு கிடக்கும் நிதிகள் எவையும் சட்டரீதியாக கட்சிக்கு கிடைக்கப்பெறுவதில்லை. அங்கத்துவ கட்டணக் கணக்கினை சீர்செய்வது மாத்திரமே கட்சிப் பொருளாளரது கடமையாக இன்னும் தொடர்கின்றது. மறுபுறத்தில் இச் செயற்பாடுகளுக்காக இதுவரை கிடைத்த நிதியை எவ்வகையில் செலவு செய்வது எவ்வகையில் அறிக்கைப்படுத்துவது தொடர்பான எந்தவொரு நியமமோ நிபந்தனைகளோ கட்சியிடம் இல்லை. இது மன்னர் காலத்து மன்னரதும் மந்திரியினதும் முடிவே ஆகும். இறுதியில் ஐந்து தானத்திற்கு உட்பட்ட நிலுலையை இன்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கணக்கறிக்கைகளாக சமர்ப்பித்து வருகின்றது 72வருட பாரம்பரிய வரலாற்றை தனக்காக கொண்ட தேசிய தமிழ் கட்சி. செயலாளருக்கான முதன்மைத் தெரிவுகளாக முன்னின்ற குகதாசன், சிறீநேசன் இருவரும் நேரடியாக நாடாளுமன்ற தேர்தல் களத்தில் தோற்ற வேட்பாளர்கள். குறிப்பாக இச் சந்தர்ப்பத்தில் கடந்தகால சம்பவம் ஒன்றினை நினைவுபடுத்திக்கொண்டு செல்லது பொருத்தமாக இருக்கும், திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தன் பதவியை விட்டு நீங்க வேண்டும் என்ற சுமந்திரனது பகிரங்க கோரிக்கை சம்பந்தர் பால் இருந்த தேகாரோக்கிய அனுதாபத்தில் இல்லை, அவ்வாறு இருப்பின் அதனை நேரடியாக சம்பந்தரிடமே சொல்லியிருக்கலாம். மாறாக அடுத்த நிலையில் இருக்கும் குகதாசன் பால் இருந்த கரிசனை தான் என்பதை இந்த செயலாளர் முன்மொழிவு மீண்டும் ஒருமுறை இறுதிசெய்துவிட்டது. இவர்கள் இருவருக்கும் தங்களை வெல்லவைக்கவேண்டிய செயற்பாடுகளுக்காக கட்சிக்குள் காத்திரமான பதவிகள் வேண்டும் என்ற கள யதார்த்தம் மாத்திரமே நம்புகின்றார்கள். பின்னர் இவை சமரசம் செய்யப்பட்டு புதிய தலைவரது அறிவித்தலில் தேசிய மாநாட்டிற்கான திகதிகள் வெளிவந்த பின்னர் கட்சியின் இரு அங்கத்தவர்கள் வழக்குகளை தாக்கல் செய்கின்றார்கள். தடையுத்தரவை பெற்றுக்கொள்கின்றார்கள். குகதாசனது தெரிவை முன்னகர்த்துவதில் சுமந்திரனால் அன்று நடைபெற்ற பொதுச் சபைக் கூட்டத்திற்கு மேலதிகமாக குகதாசனுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நேரடியாக காத்திரமாக வெளிப்படையாக எதனையும் செய்ய முடியவில்லை. இணக்கப்பாட்டினை நோக்கிய நகர்வு திட்டம் 02 உடன் சுமந்திரன் முன்னேறியிருக்கலாம், அது குகதாசனுக்கு தெரிந்தும் இருக்கவில்லை, நம்பிக்கையையும் வளர்க்கவில்லை. காரணம் நேரடிப் போட்டியாளராக இருந்த சிறீநேசனை சுமந்திரனால் அணுக முடியவில்லை. சாணக்கியனுக்கும் சிறீநேசனுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி காரணமாகவும், சுமந்திரன் கடந்த காலங்களில் சிறீநேசனை சிறந்த உறவுமுறைக்குள் பேணாத காரணத்தினாலும் இதனைச் செய்ய முடியவில்லை. இச்சந்தர்ப்பத்தில் கட்சித் தலைவராக செயற்பட்ட சிறீதரன் இருவரையும் ஒரு இணக்கப்பாட்டினை நோக்கி நகர்த்தியிருந்தார். இச்சூழலில் குகதாசன் தங்களது கையை மீறி சிறீதரன் பக்கம் சாய்ந்து விட்டாரா? என்பதே இங்கே சுமந்திரன் தரப்பிற்கு இருந்த அழுத்தமாயிற்று. இவ்வாறான சூழ்நிலையிலேயே தமிழரசுக் கட்சியின் உட்கட்சி ஜனநாயக் காலவர்களால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதிவாதிகளாக கட்சியின் கட்டமைப்பு ரீதியாக பெயர்கள்குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சி சார்பாக சுமந்திரனும் முன்னிலையாவதாக அறிவித்திருக்கின்றார். வாதியின் தரப்பில் யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணி குருபரன் முன்னிலையாகியிருக்கின்றார். இரண்டு சட்டவாதிகளினதும் நேரடியாக முன்னிலையாகிய வழக்கு வெற்றி விகிதாசாரத்தில் குருபரனே முன்னிலை வகிக்கின்றார். தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு சட்ட நிபுணத்துவ புலமையாளனாக தேசியப்பட்டியல் ஊடாக அரசியலில் நுழைக்கப்பட்ட சுமந்திரன் தமிழ் மக்களது தேசிய பிரச்சினையை கையாளுவதில் தவறு விட்டிருந்தாலும், குறைந்தபட்சம் தான் சார்ந்த தமிழரசுக் கட்சியின் தீர்மானங்களில் அச்சுறுத்தல் விடுத்திருக்கும் உட்கட்சி ஜனநாயகக் காவலர்களிடம் இருந்து கட்சியைக் காப்பாற்றுவாரா? குறைந்த பட்சம் அதற்கான புலமையேனும் அவரிடம் இருக்கின்றதா? என்பதை எதிர்வரும் நீதிமன்ற நாட்கள்தான் முடிவுசெய்யப்போகின்றன. https://tamilwin.com/article/can-sumanthran-save-the-tamil-rashid-party-1708405107
  12. நம்ம தலை தொடங்கிட்டார் முக்கிய பிரச்சனையே 2௦ கிலோ தான் கொண்டு போகலாம் என்ற அறிவிப்பு @ஈழப்பிரியன் அண்ணா கவனியுங்கள் லண்டனில் இருந்து கொழும்புக்கு 4௦ கிலோ ஒரு ஆளுக்கு மிகுதிய யார் கொண்டு போவது ?
  13. பச்சை முடிந்து விட்டது இந்த திரியில் யார் திசைமாறி கூட்டமாக இருப்பதை பாருங்கள் அவர்கள் எண்ணப்படி நடக்கவில்லை அதனால் புலிகளை இழுத்து தாங்கள்தான் நீதிபதி போல் எப்போதோ அழிந்து போன புலிகள் மீது போர்குற்றம் சொல்கிறார்கள் இவர்கள் யார் புலிகளை குற்றம் சொல்ல ?
  14. இந்த செய்தியை பார்த்து விட்டு கொஞ்சபேர் கிளம்ப போகினம் .
  15. தற்போது புலி எதிர்ப்பு கருத்து வைத்தால் அல்லது சொந்த இனத்தை கெக்கே பிக்கே என்று நக்கல் அடித்தால் குழுவாக வந்து பச்சை போடுகிறார்கள் இந்த திரியே சாட்சி .
  16. இந்த ஒரு வசனத்தை வைத்துதானே புலிகளை யாழ் கருத்து களத்தில் குற்றவாளிகளாக காட்டி கொண்டு இருகிரியல் வேறை ஏதாவது புதுசா கேளுங்க 😆 இனிவரும் தமிழர் தலைவர் சொல்லவேண்டிய வசன்ம்களை .................................
  17. அப்பாடா ஒரு மாதிரி 6௦௦ போலிசை புலிகள் கொன்றார்கள் என்று நிறுவி ஆயிற்று ரஜனி திரனகம நீலன் திருசெல்வம் கூடவே என்ன தண்டனை கொடுக்க்போவதாய் உத்தேசம் 😆? தமிழனாய் பிறந்ததுக்கு நோக வேண்ட்டி உள்ளது . இந்த 14 வருட புலியில்லாத காலத்திலும் புலியின் மீது தவறு காண முன்டியடிக்கினம் என்றால் அவ்வளவுக்கு வேண்டி கட்டி இருக்கினம்.
  18. விளங்குது . என் முதுகில் 32 கத்திகள் 33 ஆவதாக இருக்க கூடாது என்று கடவுளை பிரார்திக்கிறேன் .
  19. இப்ப யார் போர் குற்றம் செய்தது ? விளங்குது தலை .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.