Everything posted by நிழலி
-
2025 முதல் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைப்பு - வெளிநாட்டு தொழிலாளர்கள் குறித்த விதிமுறைகள் இறுக்கம் - கனடா அறிவிப்பு
மிஸ்ரர் ருடோ பிள்ளைவாள், நீங்கள் தலையை குத்தி என்ன தாளம் போட்டாலும் அடுத்த தேர்தலில் வெல்லவே முடியாது பாரும். செய்ய வேண்டிய அவ்வளவு நாசத்தையும் செய்தாச்சு... இனி நடையை கட்டவும்.
-
வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
இங்கு இரண்டு பேர் நின்றிச்சினம், இப்ப எஸ்கேப் ஆகிட்டினம்.. திருப்பி இந்த திரிக்குள் வராமலா போயிடினம் நம்மட ரகசியமெல்லாம் இப்படி வெளியே தெரிந்து விட்டதே... பயிற்சி காணாது போல..
-
வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
யாரங்கே.... அந்த கத்தரிக்கோலை உடனே எடுத்து வரவும்...
-
திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் பேஜர்கள் - நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்-
எதுக்கும் இரண்டு புறாக்களை பிடிச்சு கடதாசிகளை கொண்டு போய் சேர்க்க training கொடுக்கத்தான் இருக்கு.
- தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
- தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
-
திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் பேஜர்கள் - நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்-
இப்போது walkie talkie களும் வெடிக்கத் தொடங்ககி விட்டன லெபனானில். https://www.bbc.com/news/live/cwyl9048gx8t
-
புதிய வகை கொரோனா தொற்று-27 நாடுகளில் பரவியுள்ளது!
கடந்த சில நாதளாக என் நண்பன் ஒருவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு படுத்தி எடுக்கின்றது. வந்தது புது வகையான கொரோனா எனத் தெரியவில்லை.
-
திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் பேஜர்கள் - நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்-
எதுக்கும் இனி காற்சட்டை / டிரவுசர் பொக்கட்டுக்குள் கைபேசியை வைப்பதை தவிர்க்க வேண்டும். வெடித்தால் உள்ளதும் போய் விடும்.
-
திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் பேஜர்கள் - நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்-
அது தொழில்நுட்ப கோளாறால், இது திட்டமிடப்பட்ட ஒரு செயலால்.
-
கொழும்பிலுள்ள தர்மஜயதன விகாரைக்கு தர்மச்சக்கர முத்திரையுடனான புத்தபெருமானின் சிலை கையளிப்பு
இலங்கை சுதந்திரம் அடைந்த பின் சிங்கள மக்கள் மத்தியில் சிங்கள பெளத்த பேரினவாத சிந்தனையை ஊட்டி வளர்த்த பிதா மகன் அநகாரிக தர்மபால! அவரின் பிறந்த தினத்துக்கு புத்தர் சிலையை வழங்கியிருக்கின்றது இந்தியா! அதை கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்ட பிரதம அதிதி தினேஷ் குணவர்த்தன் - ரணிலின் பிரதமர்!
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
கடவுளான என்னால முடியல...!
-
திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் பேஜர்கள் - நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்-
இஸ்ரேல் ஒரு மோசமான, மக்களை இலக்கு வைத்து கொல்லும் ஒரு நாடு தான். ஆயினும் கூட, இவர்களால் எப்படி இவ்வாறான தாக்குதல்களை செய்யக் கூடியதாக உள்ளது என ஆச்சரியமாக உள்ளது. அதுவும் pager போன்ற device களை வெடிக்க வைத்து. கைபேசிகளையும் இப்படி வெடிக்க செய்ய முடியுமாக இருக்கலாம்.. தூரத்தில் இருந்து இப்படி வெடிக்க செய்யக் கூடிய வழிமுறைகளுடன் இருக்க கூடிய கைபேசிகளுடன் தான் நாம் வாழ்கின்றோமோ தெரியாது..
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
சிங்களவர்கள் வடக்கு கிழக்கில் வாழ்ந்து இருப்பின், இந்திய மீனவர்கள் அந்தப் பக்கம் தலைவைத்தும் படுத்து இருக்க மாட்டார்கள். வடக்கு தமிழன் அரசியல் அநாதை தானே. எவன் அவனுக்கு உதவி செய்வான் எனும் மமதையில் தான் இவர்கள் வருகின்றனர்.
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இந்தியா பலமிக்கது எமக்கு பலம் இல்லை இந்தியாவை பகைக்க கூடாது ஆகவே எம் கடற்பரப்புக்குள் அத்துமீறி வந்து, எம் மீனவர்களுக்கு சொந்தமான மீன் வளத்தை கொள்ளையடிக்கும் மீனவர்களை அப்படியே விட்டுவிட வேண்டும் என்கின்றீர்களா?
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
நீங்கள் சொல்லும் வாதத்துக்கு மறுதலையாக, இலங்கையின் வடக்கில் சிங்களவர்கள் வாழ்ந்து வரின், இந்த தமிழக மீனவ கொள்ளைக் கூட்டம் எல்லை தாண்டுவதை நினைத்தும் பார்த்து இருக்க மாட்டாது என்றும் நாம் கேட்கலாம். ஏனெனில், கேரளாவில் இவர்கள் வாங்கிய அடியின் பின் கேரள கடற்கரை பக்கம் எல்லை தாண்டிப் போவதை நினைக்கவே பயப்படுகின்றனர். ஆனால் நடைமுறையில் இல்லாத ஒன்றை ஊகத்தின் அடிப்படையில் முன்வைத்து பிழைகளை நியாயப்படுத்த முடியாது. உலகில் இந் தியாவை இலங்கைத் தமிழர்கள் நம்பிய அளவுக்கு வேறு எவரும்நம்பியிருப்பினமா எனத் தெரியவில்லை. ஆனால் என்றுமே இந்தியா ஈழத்தமிழர்களின் நலனில் அக்கறை செலுத்தியதும் இல்லை, அவர்களை ஒரு பொருட்டாக மதித்ததும் இல்லை. இந்தியாவை பொறுத்தவரைக்கும் ஈழத்தமிழினம் என்றுமே பலியாடுகள் மட்டும் தான்.
-
ஜனாதிபதி ரணிலுடன் சசிகலா ரவிராஜ், மாவையின் மகன் கலை அமுதல் சந்திப்பு
சுமந்திரன் சஜித்துக்கு ஆதரவு, தன் விருப்பு வாக்குகளை மாற்றிப் போட்டார் என்று கதறிய ரவிராஜின் மனைவி ரணிலுக்கு ஆதரவு!
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
நன்றாக இந்தியாவுக்கு சார்பாக கதைக்கின்றீர்கள். இந்தியா ஒன்றும் அன்பினால் இதனை செய்யவில்லை. சீனா பக்கம் முற்றிலும் சாய்ந்து இருந்த இலங்கையை தன் பக்கம் கொண்டு வர செய்த முயற்சிகளில் ஒன்று. அத்துடன் இது 'கடன்' அல்ல. ஒரு வகையான Credit Line. தன் பொருதளை அங்கு சந்தைப்படுத்தலுக்கும் ஏற்றவாறே வழங்கியிருந்தது. ஆனால் சிங்களம் மீண்டும் இவர்களுக்கு பெப்பே காட்டும் நாள் தொலைவில் இல்லை தன் அண்டை நாடுகளுடன் சுமூக உறவை ஒரு போதும் இந்தியா பேணியதில்லை. பெரிய அண்ணண் போக்கில் அல்ல. பெரிய ரவுடி போக்கில்நடந்து கொள்ளும் நாடு. அதனால் தான் படகுகளை கைப்பற்றும் வகையில் இலங்கையில் சட்டம் கொண்டு வரப்பட்டு, பல கப்பல்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் மீனவர்களின் முதலாளிகளுக்கு பல இலட்சம் இழப்பு ஏற்படுகின்றது.
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இந்தியா அகதிகள் தொடர்பான ஐ.நா சாசனத்தில் / உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட ஒரு நாடு. அப்படி இருக்கும் போது, அக திகளுக்கான அடிப்படி உரிமைகளையும் வசதிகளையும் வழங்க வேண்டியது அதன் பொறுப்பு. ஆனால் கடல் கடந்து, உயிருக்கு பயந்து போன தாயக அகதிகளை குற்றவாளிகள் மாதிரி நடத்திய நாடு இந்தியா. அதுவும் தாயக தமிழர்களின் இன்றைய / அன்றைய நிலைக்கு உண்மையான காரணமாக தானே இருந்து கொண்டு, அதன் விளைவாக உருவான அகதிகளை கீழ்த்தரமா நடத்தியது இந்தியா.
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
ஆனால் நாம் ஏற்கனவே நலிவுற்று இருக்கும் ஒரு சமூகத்தின் வயிற்றில் அடித்து அவர்களின் வளம்களை கொள்ளை அடித்து அதில் கொள்ளை லாபம் சம்பாதிக்கவா அகதிகளாக கடல் கடந்து சென்றோம்? உலகம் முழுதும் தம் உயிருக்கு பயந்தும், பட்டினிச் சாவுக்கு பயந்தும், அக திகளாக செல்லும் மக்களும் கடற்கொள்ளையர்களும் ஒன்றா புத்தன்? தமிழக மீனவர்கள் , தடை செய்யப்பட்ட மீன் பிடிக்கும் முறைகளின் மூலம் கடல் வளத்தை நாசம் செய்த பின் பக்கத்து வீட்டில் இருக்கும் வளம்களை கொள்ளை அடிக்க அதே முறைகளை பயன்படுத்தி எல்லை தாண்டி வருகின்றனர். மொட்டை அடித்ததுடன் கரும் புள்ளி செம்புள்ளி குத்தி, கொள்ளையர்கள் என்று முகத்தில் பச்சை குத்தி அனுப்பியிருக்க வேண்டும்.
-
ஏறேறு சங்கிலி - T. கோபிசங்கர்
ஏறேறு சங்கிலி “என்னவாம்” எண்டு மனிசி கேக்க “இல்லை, மூத்தவளுக்கு நாள் வைச்சிருக்காம் எல்லாரையும் கட்டாயம் வரட்டாம் எண்டு சொல்லக் கந்தன் வந்தவன் , உன்னைக் கேட்டவன் நான் தான் நீ வேலையா இருக்கிறாய் எண்டு சொன்னான்”எண்டு சொல்லி முடிக்க முதல் , “நான் அப்பவும் சொன்னான் எங்கடை மூத்தவனுக்கு கேளுங்கோ எண்டு , நீங்க வாய் பாக்க எவனோ ஒருத்தன் தூக்கீட்டான்” எண்டு என்டை இயலாமையை மனிசி சுட்டிக்காட்ட அதைக்கவனிக்காம சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளிக்கிட்டன். அடுத்த கிழமை மூண்டு நாள் கொண்டாட்டத்தோடு கலியாணம் சிறப்பா நடந்து முடிஞ்சுது. கட்டி முடிச்சு மூண்டு மாசத்தில முழுகாம மகள் இருக்கிறா எண்டு கந்தன் சொல்ல வீட்டில இருந்து கோழிமுட்டை கொண்டேக் குடுக்கப் போனன். போனால் கந்தன்டை மருமோன் “வாங்கோ” எண்டு சொல்லீட்டு விடியவே சீவல் வேலைக்கு வெளிக்கிட்டுப் போனான். திருப்பி வீட்டை வந்து மனிசிக்கு விசயம் சொல்ல “உவன் நடுவிலான் படிப்பும் இல்லை சும்மா பந்தடிச்சுக் கொண்டு திரியிறான், அவனுக்கு தொழிலைப் பழக்குங்கோ உங்களுக்கும் அடிக்கடி நாரிப் பிடிப்பு வரூது” எண்டு சொன்னதைக் கேட்டு அவனைக் கூட்டிக் கொண்டு போனன். எப்பிடியும் கள்ளமா எங்கயாவது ஏறி இருப்பான் எண்டு தெரிஞ்சாலும் தெரியாதது மாதிரி “ ஏறத் தெரியுமோ “ எண்டு கேக்க, “அப்பப்ப இளநி புடுங்க தென்னை ஏறினான் இதுகும் ஏறுவன்” எண்டான் நடுவிலான். “பனை அப்பிடி இல்லை இது பாத்து ஏறோனும்” எண்டு சொன்னதைக் கேக்காமல் எல்லாம் தெரியும் எண்ட மாதிரி அந்தரப்பட்டவனை சரி ஏறிப்பட்டாத்தான் தெரியும் எண்டு போட்டு ஏறி ஓலையை வெட்டு எண்டு விட்டன். சடசடவெண்டு முதல் பத்தடி ஏறினவன் பிறகு அப்பிடியே இறங்கீட்டான் . இறங்கினவன் தோல்வியை ஒத்துக்கொள்ளாமல் கிட்ட வந்தான். ஏறிறது எண்டால் சும்மா இல்லை. ஏற முதல் இறுக்கமா கச்சையைக்கட்டி, இருந்தால் shorts ஐப்போட்டிட்டு சாரத்தை மடிச்சுக் கொடுக்குக் கட்டு கட்டோணும். உனக்கெண்டு சாமாங்கள் எல்லாம் வேணும். ஏறு பட்டி பழசு தான் வெட்டாது அதோட அடிக்கால் சிராய்ப்பு வராது, எண்டாலும் இழுத்துப் பாத்திட்டு அளவு சரி எண்டாத்தான் காலில போடோணும். தளைநாரைப் பாத்து அம்மாட்டைக் கேட்டுப் பின்னி எடுத்து வை. தொழில் இல்லாட்டியும் பாளைக் கத்தியை ஒவ்வொருநாளும் தீட்டி வைக்கோணும், தொழிலுக்கு கொண்டு போறதை வேற ஒண்டுக்கும் பாவிக்கப்படாது, பழைய கருங்காலித் தட்டுப்பொல்லு ஒண்டிருக்கு பாளையைத்தட்டக் கட்டாயம் தேவை. சுத்திச் சுத்தி தட்டோணும், அப்ப தான் நுனி நசிஞ்சு நல்லா கள்ளு வடியும் எண்டு முறை ஒவ்வொண்டாச் சொல்லத் தொடங்கினன். ஏற முதல் மனசுக்கு அம்மனைக் கும்பிட்டிட்டி ஏறோணும். “ஏறு பட்டி வெட்டுதா எண்டு பாத்து , இடுப்புப்பட்டியை இறுக்கிக் கொண்டு பறீக்க சாமான் எல்லாம் இருக்கா எண்டு பாத்து, ஏறேக்க பறிக்கால கீழ விழாம சரியா வைச்சிட்டுத்தான் ஏறத்தொடங்கோணும். பிரதட்டைக்குக் கால் ரெண்டையும் சேத்துக் கீழ்க்கட்டு கட்டிற மாதிரித் தான் கால்ரெண்டையும் சேத்தபடி தளைநாரைப் போடோணும். கட்டிப்பிடிச்சு ரெண்டடி ஏறீட்டுப் கொடுக்கு மாதிரி ரெண்டு காலாலேம் மரத்தைப் பிடிச்சிட்டுக் கையை உயத்தி மரத்தைச் சுத்திப் பிடிச்சபடி உடம்பை நிமித்தி எழும்ப வேணும். எழும்பீட்டு திருப்பியும் காலால மரத்தை கொடுக்குப்பிடி பிடிச்சபடி கையை இன்னும் மேல எடுத்து பிறகு மரத்தைக் ஒரு கையால கட்டிப் பிடிச்சபடி balance பண்ணிக்கொண்டு மற்றக்கையை மரத்தோட கவிட்டுப்பிடிச்சு கையைக்குத்தி கால் ரெண்டையும் சேத்தபடியே எடுத்து மேல எடுத்து வைக்க வேணும் . அப்பிடிக் காலை உயத்தேக்க உடம்பு மரத்தோட சாயாம சரிவாத்தான் இருக்கோணும் இல்லாட்டி காலை உயத்திறது கஸ்டம் . மரத்தைக் கட்டிப்பிடிச்சுக் கொண்டு மரத்தோட சேத்துக் காலை இழுத்தாக் கை கால் நெஞ்செல்லாம் சிராயப்புத் தான் வரும்” எண்டு சொல்லப் பேசாம கேட்டுக் கொண்டு நிண்டான் இந்த முறை சரியாப் பழகோணும் எண்ட விருப்பத்தோட. முதலில வெறும் ஏத்தம் இறக்கம் தான் பயிற்சி. ஓலை வெட்டி, நொங்கு புடுங்கி , சீவின பாளையில பானை மாத்தி இறக்கப் பழகி கடைசீல தான் சீவத் தொடங்கிறது. பிளேன் ஓடிற மாதிரித்தான் இதுகும் ஏற முதலே check list மாதிரி எல்லாம் இருக்கா எண்டு விபரமாய்ப் பாக்கோணும், ஏறீட்டு முட்டீல ஓட்டை, கத்தி மொட்டை எண்டு சொல்லக்கூடாது. “தொடக்கத்தில ஏறினாப்பிறகு பாளை வெட்டி முட்டி கட்டேக்க இடுப்புக்கயித்தைப் போட்டுக் கொண்டு நிக்கோணும், போகப்போக மட்டைக்குள்ள ஏறி நிண்டு வெட்டிலாம்”, எண்டு திருப்பித்தருப்பிச் சொல்லிக் குடுக்க இதிலேம் இவ்வளவு விசயம் இருக்கிறது அவனுக்கு விளங்கத் தொடங்கினது . “அதோட ஏறேக்க நேராப் பாக்கோணும் இல்லாட்டிப் பக்கத்து மரத்தைப் பாக்கலாம். மேல போகேக்க மேகத்தைப் பாத்தாலோ இல்லாட்டி இறங்கேக்க நிலத்தைப் பாத்தாலா சரி தலைசுத்தத் தொடங்கப் பயம் வந்திடும். ஆனால் கொஞ்ச நாளில பழகினாப் பிறகு ஏறி நிண்டபடி கீழ என்ன நடக்குது எண்டு பாக்க நல்லா இருக்கும் எண்டு சொன்னன். காத்துக்க ஏறி இறங்கேக்க பனைசாயிறதுக்கு எதிர்ப் பக்கமா ஏறு மற்றப்பக்கம் நிண்டா மரம் முறிஞ்சு விழப்போற மாதிரி இருக்கும். ஒரு நாளும் பனை ஆக்கள் ஏறேக்க விழாது. ஆளைத் தாங்கிற சத்தில்லாட்டி பனை சோடைபத்தீடும். முதலில ஓலை விழுந்து, நுனி பட்டு பிறகு தான் அடி பழுதாப் போகும் ஆனபடியா நுனி பழுதாப்போன மரங்களில ஏறிரேல்லை. அதோட ஒருநாளும் விக்கிற சாமானை வாயில வைச்சுப் பாக்காத. மரம் ஒருக்காலும் கலப்படம் செய்யாது. அது தன்டை சாறைத்தான் தாறது. சாறு கெட்டதில்லை, இனிப்பும் புளிப்பும் தண்ணிக்கு, மண்ணுக்கு, மழைக்கு எண்டு மாறும்” எண்டு கள்ளுபதேசம் செய்யக் கேட்டுக் கொண்டிருந்தான். ஒலை வெட்டக்கேட்டா கவனம் ஒண்டைவிட்டொரு வருசம் தான் வெட்டிறது, காண்டாவனம் நடக்கேக்க வெட்டிறேல்லை. அப்பிடி ரெண்டு வருசம் வெட்டாத மரம் எண்டால் கவனம் காவோலை வெட்டேக்க குளவி இருக்கும் எண்டு அனுபவத்தை அப்பா சொல்லக் கவனாமாக் கேட்டான் சின்னவன். மூண்டு மாசம் அப்பரோட போனவன் , தனக்கெண்டு மூண்டு மரம் தேடிப்பிடிச்சு தனிச்சுத் தொழில் தொடங்கினான். காலமைத் தொழிலுக்கு நாலு நாலரைக்குப் போறாக்களும் இருக்கினம். இரவல் காணீல பேசிக் காசு குடுத்து ஏறிப் பாளை வெட்டி நுனி கொத்தி , முட்டி கட்டி இறக்கி , எல்லா மரத்தையும் ஒரு can இல ஊத்திக் முழுசா நிரப்பிக் கொண்டு போக வழி மறிச்சுக் கேட்டவனுக்கும் முட்டீல இருக்கிறதை குடுத்திட்டு மிச்சத்தை தவறணைக்கு கொண்டு போக , அவன் சும்மா விலையைக் குறைக்க “ என்ன நேற்றைக்கு கொஞ்சம் புளிச்சிட்டு” எண்டிற புளிச்சல் கதையையும் கேட்டிட்டு , திருப்பி வந்து மனிசி விடிய கட்டித் தந்ததை விழுங்கீட்டு திருப்பி அடுத்த வளவுக்க ஏறி இறக்க பத்து மணி ஆகீடும். வெய்யில் ஏறக் கள்ளுப் புளிச்சிடும் எண்டதால மத்தியானக் கள்ளை ஆரும் கிட்ட இருக்கிற ஆக்களுக்கு வீடு வளிய போய்க்குடுத்தா கொஞ்சம் கூடக்கூறையத் தாறதோட வெறுந்தேத்தண்ணியும் கிடைக்கும். போய்ச் சாப்பிட்டிட்டுப் படுத்தாஅடுத்த இறக்கம் பின்னேரம் நாலு மணிக்குத்தான். “என்ன மாமா வெளீல இருந்து வந்திருக்கிறார் போல, எங்களுக்கு ஏதும் போத்திலைக் கீத்திலைக் கொண்டந்தவரே” எண்டு கேட்ட படி வாறவருக்கு ஓம் ஒரு party ஐப் போடுவம் ஆனால் , “ அவருக்கு நல்ல கூழ்வேணுமாம் அதோடரெண்டு கிடாய்ப் பங்கும் வேணுமாம், பங்கு போட்டிட்டு ரத்தவறை வறுத்து முடிய உடன் கள்ளும் வேணுமாம்” எண்ட சம்பாசணை எல்லா வீட்டையும் கேட்டிருக்கும் . இக்கரைக்கு அக்கரைப் பச்சையாய் எங்கடை சனத்துக்கு அவை கொண்டாற போத்தில தான் நாட்டம் இருக்கும் , ஆனா அவை குடிச்சா ஒரு பனைக்கள்ளுத் தான் குடிப்பன் எண்டு தேடிக் குடிப்பினம். அவையோட ஊருக்குப் புதுசா வாறதுகள் இறக்கிறவனை ஏறவிட்டு நிமிந்து பாத்துப் வீடியோ எடுத்து ஊரெல்லாம் “எங்கள்” புகழைப் பரப்ப வெளிக்கிடுவினம் . வந்தவை இறக்கினதை குனிஞ்ச படி குடிச்சிட்டு “எண்டாலும் பழைய taste இல்லை” எண்டு ஒரு கதை விட்டு ஆனாலும் அடி மண்டி வரை குடிப்பினம். இறக்கினதை மட்டும் பாக்கிறவைக்கு ஒருநாளும் இறக்கிறவனைத் தெரியாது . நெஞ்சு மடிப்போட சேத்தா 8 packs பனங்கட்டி நிறத் தேகம், பிறப்புக்கு முதலே எழுதப்பட்ட விதியால் பிரியோசனமில்லாமல் போய் ஏறிஏறியே அழிக்கப்பட்ட கைரேகை, காலமை குளிச்சாப்பிறகு உடம்பைத் துடைச்சிட்டுத் தலையில கட்டின துவாயத்துண்டு, எப்பவுமே மடிச்சுக்கட்டின சாரம், இடுப்பில கட்டின சாரத்தை இறுக்கிக் கொண்டிருந்த இடுப்புப் பட்டியில இயனக்கூடு, சைடில தொங்கிற தளைநார், அதோட சேந்த முட்டி , சாரத்துக்க செருகின பாளைக்கத்தி, tyre less ரியூப் மாதிரி இருக்கிற வழுவழுப்பான tyreஓட முன்னுக்கும் பின்னுக்கும் பழைய can தொங்கவிட்ட கறள் கட்டின சைக்கிளில வாறவனின்டை கள்ளு மட்டும் எங்களுக்கு இனிக்கும், ஆனாலும் இன்னும் இறக்கிறவனை மட்டும் ஏனோ இனிக்கேல்லை இன்றைக்கும். Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்.
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
சஜித் தோற்றால் அது தமிழ் மக்களாலாக இருக்காது. அவர் தனக்கு வந்த நல்ல வாய்ப்பை தவற விட்டவர் என சிங்கள மக்கள் எண்ணுகின்றனர். ரணிலுக்கு பதிலாக அவரைத் தான் கோத்தா உட்பட பலர் முதலில் தொடர்பு கொண்டனர் என்றும் அவர் அன்றிருந்த இலங்கையின் பொருளாதார நிலையில் சனாதிபதியாக பொறுப்பேற்று மேலும் நாடு மோசமானால் தன் அரசியல் எதிர்காலமே நாசமாகிவிடும் என்று பயந்தமையால் அவர் பொறுப்பேற்கவில்லை என்றும் சிங்கள மக்கள் எண்ணுகின்றனர். அத்துடன் அவருடன் இருப்பவர்கள் பலர் ஏற்கனவே ஊழலில் பழம் தின்ற பெருச்சாளிகள் என்பதால், ஒரு மாற்றை எதிர்பார்க்கின்றனர். ரணில் வரக்கூடாது என்றுதானே பொது வேட்பாளரை களம் இறக்கியுள்ளனர் என்று சனம் பேசிக் கொள்வது அப்ப பொய்யா? மற்றது, இன்னும் தாயகத்தில் உள்ளவர்களுடனான அரசியல் ரீதியிலான இடைவெளி நெருக்கமாக இருக்கு என்றா நினைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள்? கடந்த வருடம் போலிகாவை இறக்கிய போதே, அது பற்றி தாயக மக்கள் கொஞ்சம் கூட அக்கறையற்று இருந்த போதே இது புரியவில்லையா?
-
தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
இல்லை, நீங்கள் எழுதும் காரணங்களுக்காகத் தான் புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு பிரிவினர், பொது வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்கின்றார்கள் என எண்ணவில்லை. அவர்கள் எவரும் நாமல் வருவதை விரும்பக் கூடியவர்கள் அல்ல. அந்தளவுக்கு சுயநலமிகளும் அல்ல. போர், சுனாமி, கொவிட் தொற்று நோய்க்காலம் என்று தாயக மக்களை கடும் துன்பத்தில் ஆழ்த்திய பொழுதுகளில் எல்லாம் புலம்பெயர் மக்களின், அமைப்புகளின், சங்கங்களின் பொருளாதார, தார்மீக உதவிகள் இல்லாமல் விட்டிருந்தால் தாயக மக்கள் இன்னும் கடும் துன்பத்தை எதிர் நோக்கியிருப்பர். அவ்வாறானவர்களை இவ்வாறு குற்றம் சொல்வது ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்துவதாகும். ஆனால், பொதுவாக உணர்ச்சி வசப்பட்ட நிலையில், வெற்றுக் கோசங்களுக்கு மயங்கும் தன்மை புலம்பெயர் தமிழ் மக்களின் அமைப்புகளின் பொதுவான பண்பு. அதன் வழிதான் சீமானை ஆதரிப்பதும், பொது வேட்பாளாரை ஆதரிப்பதும், முன்னர் சைக்கிள் அணியை ஆதரித்ததும். தாம் வாழும் தேசங்களின் முன்னேற்றத்துக்கு வழிசமைக்கும் அரசியல் கட்சிகளையும், அமைப்புகளையும் ஆதரிப்பதில் சரியான முடிவுகளை எடுக்கும் இவர்கள், தாயக அரசியல் என்று வரும் போது, தம் இருப்பை பேணுவதற்கு ஏற்ப, நடைமுறை சாத்தியமற்ற வெற்றுக் கோசங்களுக்கு ஆதரவை வழங்குவது ஒரு முரண் நகை.
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
ரணில் அல்லது சஜித். இருவரில் ஒருவர் சனாதிபதியாக வந்தால், இன்னும் கொஞ்சம் சனம் மூச்சு விடும். அனுர வந்தால், நிலமை மோசமாகும். ஆகவே இருவரில் ஒருவர் வருவதை எதிர்பார்க்கின்றேன். ஆனால் கள நிலவரம், அனுரவுக்கே சாதகமாக உள்ளது. வடக்கு மக்களை இரண்டாம் விருப்பு வாக்கில் இவரை தெரிவு செய்யாமல் விட்டால் நல்லது.
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
வெற்றி தோல்வி முக்கியம் இங்கு. அனுர வருவதை முழு மனத்துடன், வெறுப்பாக பார்க்கின்றேன். என்னைப் பொறுத்தவரைக்கும் அனுர / ஜேவிபி என்பது கடும் இனவாத முகத்தை சமூக நீதி எனும் முக மூடி போட்டுக் மறைக்கும் ஒரு கட்சி. அனுர தனிப்பட்ட ரீதியில் இனவாதமற்றவராக இருக்கலாம் (அப்படி தான் எல்லாரும் சேர்டிபிகேட் கொடுக்கின்றனர்), ஆனால் அவரது கட்சி, மற்ற இனவாதக் கட்சிகளான ஐ.தே.க. மற்றும் சுதந்திரக் கட்சிகள் கூட செய்ய தயங்கிய விடயமான வடக்கு கிழக்கு தற்காலிக இணைப்பை நீதிமன்று போய் இல்லாமல் செய்த கட்சி. சஜித் ,ரணில் எனும் போது, இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், தெரிந்த பிசாசுகள். ஓரளவுக்கேனும் மேற்குலகுடன் அனுசரித்துப் போகக் கூடியவர்கள். இருவரில் ஒருவர் வந்து பொருளாதார விடயத்தில் இப்ப இருப்பதை விட ஒரு படி அதிகம் செய்தாலே, ஊரில் இருந்து வெளி நாட்டுக்கு படையெடுக்கும் இளைய சமூகத்தின் எண்ணிக்கையில் குறைவாவது ஏற்படும். தாயகம் மேலும் ஆட்களற்று சிறுத்துப் போவது குறையும்.