Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by நிழலி

  1. தமிழரசுக் கட்சி / சுமந்திரன் ஆகியோர் மட்டுமல்ல, கூட்டமைப்பில் இருக்கும் எல்லா கட்சிகளும், ஒவ்வொரு முறையும் இந்திய தூதரை மட்டுமல்ல, வேறு நாட்டு தூதுவர்களை சந்திக்கும் போதும் 13 இல் கொடுக்கப்பட்ட அதிகாரங்களையாவது இலங்கை அரசு தமக்கு வழங்க்கச் சொல்லி தொடர்ந்து கேட்டு வருகின்றனர். 13 பிளஸ் பற்றியும் உரையாடுகின்றனர். கஜேந்திரனும் அவரது கட்சியும் மாத்திரமே அதற்கு அப்பால் சென்று தீர்வை கேட்கின்றனர் (ஆனால் அடுத்த மாகாணசபைத் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவார்கள்). மக்களுக்கு முன் மேடைப் பேச்சிலும், ஊடக சந்திப்புகள் மற்றும் அறிக்கைகளிலும் வீராவேசமாக கதைத்து விட்டு, ராஜதந்திர மட்டத்தில் கதைக்கும் போது நடைமுறைக்கு ஓரளவேனும் சாத்தியப்படக் கூடிய விடயங்களையே கோருகின்றனர். இந்த பொலிஸ், காணி அதிகாரங்கள் கூட வழங்க மறுக்கும் இலங்கை பெளத்த பேரினவாதம், ஒற்றையாட்சியை நீக்கி, தமிழ் மக்களுக்கு சுய நிர்ணய உரிமையுடன் கூடிய வடக்கு கிழக்கு இணைந்த நிர்வாக அலகை, எந்தவிதமான அழுத்தங்களும் இல்லாத இன்றைய நிலையில் வாரி வழங்கும் என நினைப்பது கண்கள் இரண்டையும் திறந்து வைத்து இருந்து காணும் பகல் கனவு.
  2. விதி விலக்குகள் உண்டு. என்னுடன் படித்த இருவர், இருவரும் மருத்துவர்கள் முதியோர் காப்பகங்களை கொழும்பில் / தெற்கில் நடாத்தி வருகின்றனர். என் நண்பர்களின் வயதான தந்தைமார்கள் சிலர் அங்கு தான் இருக்கின்றனர். ஊரில் அவர்களது உறவினர்கள், தந்தைமார்களின் சகோதரங்கள் பலர் இருப்பினும், இக் காப்பகங்களில் தான் உள்ளனர். மிகவும் தரமான, சுத்தமான காப்பகங்கள் இவை. வயோதிபர்களை நன்றாக பராமரிக்கின்றனர். இங்குள்ள (கனடா) காப்பங்களை விட நன்றாக உள்ளன. அண்மையில் மாமியார் மருமகள் பிரச்சனைகளால் என் நண்பர் ஒருவரின் அம்மாவை இங்கிருந்து அங்கு தான் கொண்டு போய் விடும் நிலை ஏற்பட்டது. தாயார் பம்பர்ஸ் கட்ட மறுத்து வீடு முழுக்க மலசலம் கழிப்பார். நண்பனும், அவன் மனைவியும் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது அவரின் கழிவுகள் தான் வரவேற்கும். இப்ப அங்கு போய், பம்பர்ஸ் அணிகின்றார்.
  3. அவர் தன் வயதை 25 என்று சொல்லாமல், தன் உண்மையான வயதான 55 என்று சொல்லி இருந்து பழகியிருப்பார் என நம்புகின்றேன், ஏனெனில் அதனால் தான் ஒழித்து இருக்காமல் ஊருக்கு வந்து முறையிட்டு இருக்கின்றார். இவ்வாறு இவர் தன் வயதை 55 என்று சொல்லி பழகியிருப்பின் அதனை தவறு என்பீர்களா? அல்லது 55 வயதான ஆண் 25 வயதான பெண்ணை திருமணம் செய்ய முற்படுவது தவறு என்பீர்களா? எல்லாவற்றையும் விட, ஒருவர் தன் தெரிவை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் உரிமை உங்களுக்கு யார் கொடுத்தது?
  4. தமிழ் தரப்பின் வங்குரோத்து அரசியலின் விளைவு இது. எதை நிராகரித்து, நிராகரித்ததை உறுதி செய்ய ஆயிரக்கணக்கான உயிர்களை தியாகம் செய்து, ஈற்றில் எம்மால் நிராகரிக்கப்பட்ட ஒன்றை எமக்கு தாருங்கள் என 37 வருடங்களின் கேட்கும் வங்குரோத்து நிலையில் நாம் இன்று.
  5. இவருக்காக நான் மிகவும் மனம் வருந்துகின்றேன். இவர் எந்தப் பெண்ணையும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கவில்லை, நம்பி கெடுக்கவில்லை, திருமணம் முடிக்கின்றேன் என்று ஏமாற்றவில்லை. இவர் செய்த பிழை என்னவெனில் நம்பிக்கை தரும் அளவுக்கு தன்னுடன் கதைத்த ஒரு பெண்ணை நம்பியதுதான். புலம்பெயர் சமூகத்தில் இவரைப்போல பல நூற்றுக்கணக்கானவர்களை நாம் காண முடியும். வந்த காலத்தில் இருந்து நரை முடி காலம் வரைக்கும் உறவுகளுக்காக சகோதரர்களுக்காக உழைத்து அழைத்து ஈற்றில் இளமை தொலைந்த பின் திருமணம் முடித்த நிம்மதி இல்லாத பலரை காண முடியும். வெறுமனே உடல் தேவைக்காக இப்படியானவர்கள் இந்த சதிகளுக்குள் மாட்டுப்படுவதில்லை. ஆதரவாக கதைக்கும் ஒருவர் கூட அருகில் இல்லாமல் அவரை வெறுமனே பணம் கறக்கும் இயந்திரமாக பாவிக்கும் நெருங்கிய உறவுகள் இருப்பவர்கள் இப்படியாக ஏமாற்றுகின்ற கூட்டத்திடம் அகப்பட்டு எந்த நிம்மதிக்காக கதைக்க தொடங்கினார்களோ அந்த நிம்மதியை தொலைத்து விடுகின்றார்கள். இந்த வழியான மோசடிக்கு பெயர் sextortion. வயதான எளிதில் இலக்கு வைக்கபடக் கூடிய நபர்களை கண்டறிந்து ஏமாற்றும் ஒரு சைபர் கிரைம். நாம் இந்த குற்றங்களுக்கு இலக்கானவரை திட்டிவிட்டு இந்த குற்றத்தை புரிந்தவரை நியாயப்படுத்துகிறோம், கலாச்சார காவலர்கள் என்ற போர்வையில். குற்றம் செய்யாத எவனோ அவனே முதலில் கல்லை எறியட்டும் என்று இயேசுநாதர் சொன்னது போல் இங்கு திருமணம் முடித்தபின் வேறு எந்த பெண்ணையும் மனசால் கூட ஆசைப்படாத ஒரு ஆண் இங்கிருந்தால் அவர் சொல்லட்டும் இவர் செய்தது தவறு என்று. இங்கு நடப்பதும் victim blaming தான்.
  6. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இந்தக் கடல் பரப்பை வங்கக் கடல் என்று அழைப்பது சரியா? வங்கக் கடல் பகுதி எங்கே அமைந்துள்ளது?
  7. "சூர்ப்பனகை அழகை பாட்டா பாடுவேன்!” எனும் இன்று வெளியான ஆனந்த விகடனில் இருந்து பகிரப்பட்ட கட்டுரை காப்புரிமை தொடர்பான விடயத்தால் நீக்கப்பட்டது. சந்தா கட்டி மட்டுமே வாசிக்கப்படக் கூடிய கட்டுரைகளை யாழில் இணைப்பதை தவிர்க்கவும்.
  8. வெறுமனே கடுமையான தண்டனைகளால் இப்படியான குற்றங்களை 100 வீதம் இல்லாமல் செய்ய முடியாது என்பது நிரூபிக்கட்டது தான். ஆனால் 99% குறைக்க முடியும். இதனால் தான் புலிகள் இருந்த காலங்களில் இவ்வாறான நிகழ்வுகள் மிக மிக குறைவாக இருந்தன. கழுத்து வெட்டுகின்ற தண்டனை இருக்கும் நாடுகள் இஸ்லாமிய நாடுகள் மட்டுமே. இங்கு பெண்களை முழுக்க மூடிக் கொண்டு இரு என்று உத்தரவு போடுவது, கடைந்தெடுத்த அடிப்படைவாத இஸ்லாமிய ஷரியா சட்டங்கள் ஆகும். இது பெண்களை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்ட நடைமுறை அல்ல. இந்த கழுத்தறுக்கும் நாடுகளில் முஸ்லிம் தந்தை தன் மகளை வல்லுறவுக்குள்ளாக்கினால் பெரியளவில் தண்டனை கொடுக்க மாட்டாது. காரணம், திருமணத்துக்கு முன் பெண்ணின் பாதுகாவலன் அவளது தந்தை அல்லது சகோதரன் என்பதால், அவர்களுக்கு அதுக்கான உரிமை இருக்கு என்று நியாயம் பிளப்பர். https://english.alarabiya.net/News/middle-east/2015/08/02/Saudi-court-sentences-man-who-raped-daughter-to-13-years-in-jail- https://www.buzzfeednews.com/article/tasneemnashrulla/saudi-arabian-preacher-who-raped-and-tortured-his-5-year-old
  9. காலையிலேயே இதை பார்த்தனான் சிறி. பார்த்து விட்டு மனசுக்குள் நினைத்தது 'தலைவர் பிஸ்ரல் குறூப்பையாவது இயங்க விட்டுட்டு ஆயுதங்களை மவுனித்து இருக்கலாம்' என.
  10. மலையைக் கொண்டு வருவன், ஆற்றைக் கொண்டு வரவேன் என்று பம்மாத்து விட்டுக் கொண்டு இருக்காமல், 13 ஆம் திருத்தச் சட்டத்தில் உள்ளபடி காணி, பொலிஸ் அதிகாரத்தினை வடக்கு கிழக்கு உட்பட எல்லா மாகாணசபைகளுக்கும் வழங்கி அவற்றை நடைமுறைப்படுத்துவேன் எனச் சொல்வது நடைமுறைச் சாத்தியமாகவாவது இருக்கும்.
  11. யாழ்ப்பாணத்தில் சுதுமலை என்ற பெயரில் மலையிருப்பினும், உண்மையான மலை அங்கு இல்லை. எனவே நான் ஆட்சிக்கு வந்தால் ஒரு புதிய மலையை உருவாக்குவேன் என்று சஜித் சொன்னாலும் சொல்வார். கொழும்பில் இவரை 'பிஸ்ஸக்' என்று கூப்பிடத் தொடங்கியுள்ளனர்.
  12. உறவுகள் தொடர்கதை “அது உன்டை அப்பாவுக்கு முறைக்கு அக்காவும் அத்தானும் கீழ போய் ஆசீர்வாதம் வாங்கு” எண்டு மேடையில சொல்லி மாமி அனுப்ப சிவாவும் மேடையால கீழ இறங்கிப் போய் குனிய, சிவான்டை மனிசி குனியேலாமக் குனிய, “நல்லா இரு அப்பு, நல்லா இரு மோனை“ எண்டு ஆசீர்வதிச்சிட்டு, பொம்பிளையின்டை கையில envelope ஐ திணிச்சிட்டு, இனி எப்பிடி ஏறி சாப்பிடப் போறது எண்டு ரெண்டு பேரும் யோசிக்கத் தொடங்கிச்சினம். ஒரு காலம் இவை இல்லாம நல்லது கெட்டது ஒண்டும் நடக்காது ஆனா இப்ப அவை ரெண்டுபேரும் வேற ஆற்றையும் உதவி இல்லாம வீட்டை விட்டு வெளீல போய் வரக்கூட ஏலாது . “வாருமன் சாப்பிடுவம்” எண்டு அவர் சொல்ல, “கொஞ்சம் பொறுங்கோ என்ன இளந்தாரியே ஏறிப்போக” எண்டு சொல்லி அவ உதவிக்கு ஆரும் இருக்கினமா எண்டு பாக்கத்தொடங்கினா. வயசு போகப் போக அப்பாக்கள் அமைதியாவதும் அம்மாக்களின் புறுபுறுப்பது கூடுவதும் இயற்கை. ஒரு வயதுக்கு (முதிர்ச்சிக்கு) அப்பால் ஆண்களின் தேவைகள் குறைவடையத் தொடங்கி விடும் . அவன் ஞானத்திற்கு முன்னைய பற்றற்ற நிலைக்கு வந்து விடுவான். மனைவிக்கு இன்னும் கூடப் பணிந்து போவான், எங்கயாவது எருமைக் கடா வந்தால் எமனுடன் ஏறிப் போக யோசிக்க மாட்டான் . ஆனால் பெண்கள் அப்படி இல்லை. பெண்கள் சந்தர்ப்பம் பாத்து சாதிப்பதில் வல்லவர்கள் . அப்பாமார் அடங்கத் தொடங்க அம்மாமார் ஆட்சியை கைப்பற்றி அந்தாள் தனக்கு முந்தி செய்த பழி பாவங்களை மறக்காமல் இப்பிறப்பிலேயே தண்டனை வழங்குவார்கள் .அரசன் அன்றும் ,தெய்வம் நின்றும் , மனிசி இருந்தும் செய்வார்கள். “ அவருக்கு இப்ப மறதி வந்திட்டு , மருந்து போட்டது கூட ஞாபகம் இருக்காது“ எண்டுதான் ஆரும் வந்தால் அவரைப்பபத்தி அறிமுகம் தொடங்கும் . பிறந்த நாளில இருந்து அடக்கப்பட்டதன் தாக்கமும் , விரும்பினதை செய்ய முடியாமப் போன ஏக்கமும், வந்த இடத்தில இருக்கிற அடக்குமுறையும் சேந்து பொம்பிளைகளில அப்பப்ப வெளிப்படும். பொம்பிளைகளுக்கு அதிலேம் அம்மாக்களிற்கு அதிகாரம் செய்ய விருப்பம் . பெண்கள் நல்ல நிர்வாகிகள் ஆனால் என்ன தங்களுக்கு தேவையான எல்லாத்தையும் மட்டுமே ,அதுவும் , அதிகார நிர்வாகமே செய்வார்கள். இது எல்லாம் வீட்டுக்குள்ள தான், வெளீல வந்தால் அந்தாளை கவனமாக் கையை பிடிச்சி கூட்டிக்கொண்டு போவினம். என்ன அடிக்கடி தாங்கள் தான் சரி நீர் பிழை எண்ட நச்சரிப்பும் இருக்கும். கடைசிக் காலத்தில பெத்தவைக்கு பெரிய பிரச்சினை சொத்துப் பிரச்சினை. சரி வயசு போட்டுது பிள்ளைகளுக்கு இருக்கிறதை குடுப்பம் எண்டா, சொத்தைப் பிரிச்சுக்குடுக்கிறதுக்கு அம்மாமருக்கு விருப்பம் இருக்காது. கடைசிவரை அதைத் தாங்கள் தான் ஆளோணும் எண்ட ஆசை இருக்கும். அதோட சிலவேளை ஒரு வியாக்கியானம் வைச்சு ஏற்றத்தாழ்வோட பிரிச்சுக் குடுப்பினம், “ஏனப்பா எல்லாத்துக்கும் சமனா இப்பவே குடுமன்” எண்டு அப்பாமார் சொன்னாலும்,“உங்களுக்கு ஒண்டும் விளங்காது சும்மா இருங்கோ” எண்டு அதட்ட அவையும் அடங்கீடுவினம். இன்றி அமையாத எங்கடை கூட்டு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமா இல்லாமல் போக, இப்ப என்னெண்டால் மகள் கலியாணம் கட்டி மாப்பிளையோட வீட்ட வந்து இருக்க , தனிக்குடித்ததனம் போக விரும்புவது அநேகம் பெற்றோர் ஆகத் தான் இருக்கும் . சீதனம் குடுத்திட்டம் எண்டதால , கொஞ்சம் உரிமையில்லாத் தன்மையை உணருவது தான் காரணமோ தெரியேல்லை . எங்கடை சனத்தில கட்டினாப் பிறகு வாற சண்டையில அடிக்கடி வாறது மகள் மாருக்கு அம்மாமாரோட வாற சண்டை தான். மாமி-மருமகள் இப்படித்தான் எண்டு முதலே முடிவெடுக்கிறதால அது பெரிய சண்டையா இருக்காது. அதோட எல்லாரும் வீட்டோட மாப்பிளை எண்டதால மாமியார்-மருமோள் நேரடிச் சண்டை இருக்காது. மாமியார் மருமோள் சண்டை நேர நடக்காட்டியும் நாசூக்கா சொல்லிற கதைகளில மாட்டுப்படிறது மனிசன்மார் தான். கண்டோன்ன ரெண்டு பேரும் கதைக்கிறதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஆனாலும் அடுத்த மாசம் கோல் ஒண்டு வரும்; “ என்ன மாதிரி அரிசி மா அனுப்பவே” “ வேணாம் மாமி” “ஏன் போன கிழமை ரெண்டு கிலோ தானே அனுப்பினான், எங்களுக்கு ரெண்டு பேருக்கே கிழமைக்கு 4 கிலோ வேணும்” “அதே அப்பிடியே கிடக்கு” ஆஆஆஆஆஆ….. “அவன் சரியா மெலிஞ்சு போனான் வடிவாச் சமைச்சுக்குடும்” எண்ட இழுவையோட கோல் முடியும். உடன மகனுக்கு கோல்; “என்னடா வடிவாச் சாப்பிடிறியோ, உடம்பு கவனம், கண்டபடி வெளீல சாப்பிடாத” எல்லாத்துக்கும் ஓமெண்டப் பழகின மகன் இதுக்கும் ஓம் எண்டு போனை வைக்க; மனிசீன்டை கோல்; “என்ன உங்கடை அம்மா உளவு பாக்கிறாவே, நான் எவ்வளவு சமைக்கிறன் எண்டு”, நான் ரெண்டையும் class க்கு ஏத்தி இறக்கவே நேரம் இல்லை இதுக்குள்ள அரிசி மா ஏன் முடியேல்லை, மிளகாய்த்தூள் எவ்வளவு இருக்கு எண்ட கேள்வி வேற, டொக்டர் உம்மை உடம்பைக் குறைக்கச் சொல்லிறார் ஆனா உம்மடை அம்மா என்னெண்டால் நான் சாப்பாடு தராம் நீர் மெலிஞ்சுட்டீராம்”எண்டு சொல்லீட்டு விடை எதிர்பார்க்காமலே கோல் cut ஆகீடும். இதை எல்லாம் கேட்டும் கேக்காத மாதிரி இருக்கிறது தான் அப்பாக்களின் சா(சோ)தனை. வீட்டை பொம்பிளை பிள்ளைகள் இருக்கும் வரை அப்பாக்கள் அதிகாரம் செய்வதே மகள் எண்ட ஐ.நா சபையை நம்பித்தான் . சண்டை வரேக்க அப்பாவின்டை பக்கம் கொஞ்சம் கூட support இருக்கும். மகள்மாரைக் கட்டிக்குடுத்த உடனயே அம்மா மார் மீண்டும் இழந்த ஆட்சியை பிடிச்சிடிவினம் . இதுவரை எல்லாம் தெரிந்திருந்த அப்பா இப்ப அம்மான்டை கணக்குப்படி ஒண்டும் தெரியாதவர். கட்ட முதல் பொம்பிளைப்பிள்ளைகள் அப்பாமாரோடேம் ஆம்பிளைப்பிள்ளைகள் அம்மாமாரோடேம் ஒட்டி இருந்தாலும். கட்டிப் போனாப்பிறகு அப்பாமாருக்கு மகனோட இருக்கிறது தான் comfortable. மகன் மார் கேக்காமலே பாத்துச் செய்வாங்கள், அதோட மருமோள்மாருக்கு மாமாமாரோட ஒத்துப் போகும். மனிசனிட்டைப் போய் ”உங்கடை அப்பா பாவம், அம்மா என்ன சொன்னாலும் பேசாமக் கேப்பார், அம்மா தான் அவரைப் போட்டு பாடுபடுத்திறா” எண்டு சொல்லித் தன்ரை புருசனுக்கு பாடம் எடுப்பினம். மகனோடயோ இல்லாட்டி மகளோடயோ இருக்கப் போகேக்கேம் சம்மந்திமார் இருக்கினமா எண்டு பாத்துத்தான் போறது. சம்மந்திமாரை சபைசந்தீல சந்திக்கேக்க சந்தோசமாக் கதைச்சாலும் ஆனால் ஓரே வீட்டை இருந்தால் சண்டை தான். வளக்கும் வரை மூத்த ஆம்பிளைப் பிள்ளையும் கட்டிக் குடுத்தாப்பிறகு “ அவன் பாவம்” எண்டு கடைசி ஆம்பிளைப்பிள்ளையிலேம் தான் அம்மாமாருக்கு விருப்பம். ஆனாலும் மனிசன் மார் இருக்கும் வரைதான் அம்மாமார் மகனுடன் இருப்பினம் அவருக்கு ஏதும்மெண்டால் அதுக்குப்பிறகு கூப்பிடாமலே மகளிட்டைப் போயிடுவினம். ஊர் தாண்டி, கடல் தாண்டிக் கட்டிக்குடுத்திட்டு “ அய்யோ நான் பிள்ளையோட போய் இருக்கப்போறன்” எண்டு அம்மா தொடங்கி அந்தாள் ஏதும் சொல்லமுதல் ஓடிப்போய் அங்க இருந்து பாத்திட்டு கடைசீல சுடலை ஞானம் வர “கோம்பையன்மணலில தான் வேகவேணும்” எண்டு ஊரோட வந்திடிவினம். பெத்ததெல்லாம் கட்டிப் போய் தாங்கள் பெத்ததைப் பாக்கத் தொடங்க, வீடு வெளிச்சிப் போய் தனிச்சு இருக்கிறாக்களுக்கு வரும் ஒரு பயம் ஏதும் ஆருக்கும் நடந்தா எண்டு. இப்பவும் புறுபுறுக்கிற அம்மா “ எனக்கு ஏதும் நடந்தால் இந்தாள் பாவம் தனிய இருக்காது, என்னை மாதிரி ஒருத்தரும் பாக்க மாட்டினம்” எண்டு கவலை வர திருப்பி ஒருக்காப் பிள்ளைகளிட்டைத் திருப்பிப் போவமோ எண்டு யோசிக்கத் தொடங்குவா ஆனாலும் போமாட்டினம். ஏனெண்டால் இவை இப்பதான் தங்களுக்கு எண்டு வாழுவினம், பிள்ளைகளோட போய் இருந்தா அது இருக்காது. அப்பாவும் அம்மாவும் சண்டை பிடிக்கிறது பெரிசா பிள்ளைகளுக்கு தெரியாது, தெரிஞ்சாலும் கணக்கெடுக்காதுகள். தனிய இருக்கேக்க சண்டைதான் பொழுதுபோக்கா மாறீடும்.ஆனால் அம்மாமாருக்கு மாத்திரம் அந்தக்காலத்தில இருந்து நடந்தது எல்லாம் பொருள், இடம், காலத்தோட ஞாபகம் இருக்கும் . தேவை வரேக்க deep memoryஐ கிண்டி எடுப்பினம். தேவேல்லாத ஒண்டுக்குச் சண்டை பிடிச்சு காகம் இருக்கத்தான் பனம்பழம் விழுந்ததெண்டு தொடங்கி, முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போட்டுக் கதைசொல்ல அந்தாள் அதுக்கு ஒண்டும் சொல்லாமல் இருக்கும். அதுக்கும் “ உங்கடை ஆக்கள் எண்டால் ஒண்டும் சொல்லாதேங்கோ” எண்டு பேசீட்டுக் கொஞ்சம் மூக்கைச் சிந்த , ஆனாலும் மாட்டிறது வீட்டுக்கு எப்போதாவது வாற ஒரு சொந்தம். வந்தவரை இருத்தி வைச்சு “கொஞ்சம் பொறு கோப்பி தாறன்” எண்டு சொல்லிப்போட்டு ,” எனக்கு பொன்னம்பலத்தார்டை மகனை பேசினது நான் தெரியாம இந்தாளைக்கட்டினது” எண்டு தொடங்குவா , இதுவரை சும்மா இருந்த அந்தாள் “நீதான் எண்டு தெரிஞ்சிருந்தா நானும் கட்டி இருக்க மாட்டன், லீவில வந்து நிக்கேக்க குஞ்சிஆச்சி சொன்னதுக்கு ஆரெண்டு பாக்காமல் நான் கட்டீட்டன்” எண்டு விட மாட்டார். வந்த ஆள் தான் பாவம் தலைப்பில்லா விவாதத்தை தனி ஆளா நிண்டு கேக்கவேணும். வந்த ஆள் ஏன் வந்தனான் எண்டதை மறந்து, கடைசீல தீர்ப்பில்லாச் சண்டையின்டை கதையைக்கேட்டுக் கொண்டிருந்திட்டு தாங்கேலாமல் ஒரு போன் கோல் வந்தமாதிரி எழும்பித் தப்பி ஓட வெளிக்கிட “இந்தா” எண்டு ஒரு வாழைப்பழச் சீப்பைக் குடுத்திட்டு, “ சரி போட்டு வா, அடுத்த முறை வரேக்க நாங்கள் இருப்பமோ தெரியாது” எண்டு ஒரு sentiment வசனமும் சொல்லி விடுவினம். அந்தாள் இருக்கேக்க ராங்கியா தனக்கெண்டு ஒண்டும் பிள்ளைகளின்டை இதுவரை கேக்காத அம்மா கடைசிக்காலங்களில “ எனக்கு ஏதும் நடந்தா அப்பாவைக் கவனமாப் பாக்கோணும்”எண்டதை மட்டும் சொல்லுவா. தான் இருக்கும் வரை தனக்கு மட்டும் தான் உரிமை எண்ட அகங்காரம், இல்லாத நேரத்தில தன்னை மாதிரி அவரைப் பாப்பினமோ, அவர் தனியச் சமாளிக்கமாட்டார் பாவம் எண்டு மனிசி கவலைப்படுறதெல்லாம் எல்லாருக்கும் விளங்கத் தொடங்கும். மனிசன்மாருக்கு தங்கடை மனிசிமார் வருத்தம் எண்டு சொன்னால் பயம் அதால வருத்தம் சொல்லாமலே, அடிக்கடி டொக்டிரட்டை கொண்டேக்காட்டுவினம். ரெண்டு பேருக்கும் பிறப்பால் வராமல் பிணைந்ததால் வாழ்க்கையில் வந்த இந்த உறவு தொடரும் கதையாக இருக்கவேண்டும் எண்டதுதான் எல்லாரின்டை ஆசையும். Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்
  13. நான் மேலே எழுதிய மாதிரித்தான் நடந்துள்ளது. ஆனால் இந்த விடயத்திலும் இந்தியா தோற்று விட்டது.
  14. இந்த முடிவிற்கும் இந்திய பாதுகாப்பு செயலாளரது இலங்கை விஜயத்துக்கும் கண்டிப்பாக தொடர்பு இருக்கும். சஜித்தையும் ரணிலையும் ஒற்றுமை ஆக்க இந்தியா முயன்றது. ஆனால் சரிவரவில்லை. எனவே சஜித்தை முன்னிலைக்கு கொண்டு வர முயல்கிறது. எஜமானின் உத்தரவுக்கமை பிரேதசந்திரன் பொது வேட்பாளர் விடயத்தில் ஒதுங்கி இருப்பார் என நினைக்கிறேன். குத்துக்கரணம் அடித்தாலும் ஆச்சரியமில்லை. அரியத்திற்கான ஆதரவான பிரச்சாரம் இனி குறையும். நிலாந்தனும் சோதி மாஸ்ரரும் மூக்குடைபடப் போகின்றனர்.
  15. அது ஒரு நிறுவனம் / அமைப்பு, மக்களால் தெரிவு செய்யப்பட்ட, மக்களின் வாக்குகளால் தெரிவானர்வர்கள் இல்லை, எனவே அந்த அமைப்பில் உள்ளவர்களால் மட்டுமே கேள்வி கேட்க முடியும். கனடா வாழ் தமிழர்களின் ஒட்டு மொத்த பிரதிநிதிகளாக இங்கு எவரும் இல்லை. உதாரணத்துக்கு கரி சங்கரியை, அவரிற்கு வாக்களித்த மக்கள் கேள்வி கேட்க முடியும். ஒரு அமைப்பில் உள்ளவர்களை விமர்சிக்கலாமே தவிர, கண்டிப்பாக அவர்கள் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் கடப்பாடு உடையவர்கள் அல்ல. CTC இற்கும் இது பொருந்தும் இது சீரணிக்க கடினமான, ஆனால் உண்மை.
  16. எப்படியும் சஜித்தையும் ரணிலையும் ஒற்றுமையாக்கி ஒரு உடன்படிக்கையின் கீழ் ரணிலுக்கு சஜித்தை ஆதரவழிக்க வலுயுறுத்துவார் என நினைக்கிறேன். இதன் மூலம் அனுரை வெல்ல முடியாமல் செய்யலாம். அனுர /ஜேவிபி சீன சார்பு என்பதால் இதனை இந்தியா முயற்சிக்கும்.
  17. விளக்கத்துக்கு நன்றி வாதவூரான். கள்ளக் காணி பிடித்ததாக சொல்லப்படும் முஸ்லிம்களும் உள்ளூர் முஸ்லிம்கள் தான். அதாவது வெளியூரில் இருந்து வந்து, தமிழ் மக்களின் எண்ணிக்கை விகிதாசாரத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கிற்காக குடியேற்றப்பட்டவர்கள் இல்லை. புலம்பெயர்ந்த தமிழர்களின் சொத்துகளை ஆட்டையைப் போடும் எம்மவர்கள் போன்றவர்கள் இவர்கள். இந்த கள்ளக் காணி பிடிக்கும் விடயம் கூட பிள்ளையான், கருணாவின் கூட்டம் சொல்கின்ற குற்றச்சாட்டு. எவரும் அதற்கு எதிராக வழக்கு போட்டதாக நான் அறியவில்லை. ஆனால் அறா விலைக்கு தமிழர்களின் காணிகளை வாங்கும் உள்ளூர் முஸ்லிம்கள் பற்றி அறிந்துள்ளோம்.
  18. வாதவூரான், இது மிகவும் தவறான அபிப்பிராயம். வடக்கு கிழக்கு என்பது அங்கு வாழும் முஸ்லிம்களினதும் தாயகம் என்பதனை நாம் மறுப்பது என்பது சிங்களவர்கள் வடக்கு கிழக்கை எம் பூர்வீக பிரதேசம் மற்றும் தாயகம் என்று நாம் உரிமை கோருவதை மறுப்பதற்கு சமம். புலிகளின் தலைமை ஒரு காலத்திலும் இவ்வாறு வடக்கு கிழக்கு என்பது தமிழ் மக்களினது தாயகம் மட்டுமே என்று ஒரு போதும் கோரியதும் இல்லை (வடக்கில் முஸ்லிம்களை வெளியேற்றிய பின்பும் கூட) போர்க்காலத்தில் மட்டுமல்ல இன்றும் கூட வன்னியில் வாழ்ந்து வரும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோருக்கு வடக்கு கிழக்கு தாயகம் அல்ல. 77 களில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான கலவரத்தால் பாதிக்கப்பட்ட்ட மலையக தமிழர்களில் பலர் அங்கு இடம்பெயர்ந்து அந்த மண்ணையே தம் தாயகமாக வரித்துக் கொண்டவர்கள் மற்றும் காந்தீய அமைப்பின் செயலாளர் மருத்துவர் இராஜசுந்தரம் அவர்களின் முயற்சியாலும் மலையக தமிழர்கள் பலர் குடியேறினார்கள். புளொட் இயக்கத்தில் இருந்து தெரிவான பாராளுமன்ற உறுப்பினர் பாலச்சந்திரன் மலையக / இந்திய வம்சாளிகளில் ஒருவர். இதனை ஏன் இங்கு சொல்கின்றேன் என்றால், வடக்கு கிழக்கு என்பது வெறுமனே ஈழத் தமிழர்களின் தாயகம் அல்ல என்பதற்காக. அப்படி நாம் சொல்வோமாயின், எமக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் எந்த வேறுபாடுகளும் இல்லை. ஆனால் சிங்கள குடியேற்றங்கள் என்பது முற்றிலும் வேறு. அது திட்டமிடப்பட்ட தமிழ் இனவழிப்பின் ஒரு கூர்மையான அம்சம். அலுவல்கள் மற்றும் வணிக ரீதியான காரணங்களுக்காக வடக்கு கிழக்கிற்கு தற்காலிகமாக இடம்பெயர்ந்த சிங்கள மக்களை தவிர மிச்ச எல்லோரும் தமிழ் இன அழிப்பிற்காக கொண்டு வந்து குடியேற்றிய குற்றவாளிகளே இவர்களின் வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை ஒப்பிடுவது தமிழின அழிப்பிற்கு மறைமுகமாக அங்கீகாரம் கொடுப்பதாகவே அமையும்.
  19. நாமலின் நேர்மையை பாராட்டுகின்றேன். மற்றவர்களின் மனசிலும் இது தான் உள்ளது. முக்கியமாக சஜித், ரணில், அனுர ஆகிய முன்னனி வேட்பாளர்களின் மனசிலும் இது தான் உள்ளது. ஆனால், தமிழ் வாக்குகளிலும் தம் வெற்றி தங்கியுள்ளதால் வெளிப்படையாக சொல்ல மறுக்கின்றனர். எப்படியும் தான் வெல்லப் போவதில்லை என்பதால், கடும்போக்கு சிங்கள வாக்காளர்களையாவது கவரலாம் என நேர்மையாக கதைக்கின்றார் நாமல்.
  20. கண்கெட்ட பின்னே சூரியனை வணங்குவது என்பது இது தான். ஜஸ்ரின் தன் நாட்டு மக்களையும் ஏமாற்றி, இவர்களை நம்பி கனடாவுக்கு படிக்க வந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்களையும் ஏமாற்றி, அடுத்த தேர்தலில் ஏற்படப் போகும் தோல்வியை தவிர்க்க இந்த முடிவை எடுத்து உள்ளார். அண்மைய மாற்றங்கள் மற்றும், தற்காலிக தொழில் அனுமதி பெறுவதற்கான கட்டுப்பாடுகள், நிரந்தர வதிவிட உரிமை பெறுவதில் ஏற்படுத்தி உள்ள புதிய கடுமையான வழிமுறைகளால் கிட்டத்தட்ட 70,000 சர்வதேச மாணவர்கள் மீண்டும் தம் நாட்டுக்கே திரும்பிப் போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், இதற்கு எதிராக PEI, பிரம்டன் போன்ற பகுதிகளில் சர்வதேச மாணவர்களால், முக்கியமாக இந்திய மாணவர்களால், அதிலும் குறிப்பாக சீக்கிய மாணவர்களால் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதாவது தாம் படிக்க வந்த பின், மீண்டும் தாயகம் போக விருப்பம் இல்லாமல், இங்கேயே தங்கி விட அவர்களில் பெரும்பாலானோர் விரும்புவதால் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. தாம் பல்லாயிரக்கணக்கான டொலர்கள் செலவழித்து இங்கு வந்தமை, வெறுமனே படிக்கமட்டும் அல்ல, இங்கேயே தங்கி தம் எதிர்காலத்தை கனடிய மண்ணில் நிலை நிறுத்தவே என்று இவர்கள் சொல்கின்றனர். இந்த கனவு இனி மெய்ப்படக் கூடிய சாத்தியங்களை இந்த புதிய கட்டுப்பாடுகள் மட்டுப்படுத்த போகின்றன என அஞ்சுகின்றனர். தனிப்பட்ட ரீதியில் நான் இந்த கடுமையான கட்டுப்பாடுகளை வரவேற்கின்றேன். சடுதியாக பல்லாயிரக்கணக்கானோரை உள்வாங்கி, அவர்களுக்கான அடிப்படை வசதிகளை, குடியிருப்பு வசதிகளை, சுகாதார மற்றும் மருத்துவ வசதிகளை வழங்கக் கூடிய கட்டுமானம் (infrastructure) இல்லாமல், இவ்வாறு அனுமதிப்பது, பல பிரச்சனைகளை தோற்றுவித்துள்ளது. முக்கியமாக, வீட்டு வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகளில் கடும் பற்றாக்குறையை தோற்றுவித்தது மட்டுமல்லாமல், கும்பலாய் வந்து இறங்கியவர்களில் பலர் கிரிமினல் குற்றங்களிலும் ஈடுபடுவதால் இவர்களுக்கு எதிரான மனநிலை குடியேற்றவாசிகளுக்கு எதிரான மனநிலையாக மாறி வருகின்றது. இந்த கடுமையான கட்டுப்பாடுகளை வரவேற்கின்ற அதே நேரம், உண்மையான தகமைகளுடன் , பல்லாயிரக்கணகான டொலர்களை செலவழித்து வந்த நேர்மையான, எதிர்காலத்தில் கனடாவுக்கு ஆக்கபூர்வமாக பங்களிப்பு செய்யக் கூடியவர்களும் பாதிப்படையப் போவது வருத்தத்தையும் அளிக்கின்றது. மேலும் தகவல்களை அறிய: https://toronto.citynews.ca/2024/08/26/canada-international-students-deportation-protests/ https://www.cbc.ca/news/politics/trudeau-crackdown-temporary-foreign-workers-1.7304819
  21. கனடிய தமிழ் ஊடகவியளாலர் ரமணனின் பேட்டி இது. இந்த சம்பவங்கள் தொடர்பாக மிக தெளிவாக ஆராய்ந்து, பக்கச்சார்பற்று இந்தப் பேட்டி அமைந்துள்ளது. இது தொடர்பான அக்கறை உள்ளவர்கள், கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு பேட்டி இது. ஒருவர் மீது ஒருவர் சேறு பூசும், எம் இரத்ததில் ஊறிப் போய்க் கிடக்கும் ரவுடித்தனத்தை வெளிப்படுத்தும் கருத்தாடல்களும், உரையாடல்களும் நிறைந்து இருக்கும் தமிழ் சூழலில் இது போன்ற தெளிவான பேட்டிகளை காண்பது மனசுக்கு ஆறுதல் கொடுக்கின்றது.
  22. CTC கனடிய மற்றும் ஏனைய ஈழத்தமிழர்களிற்கு செய்தது மிக மோசமான வஞ்சனை. காலம் பூராவும், இலங்கை அரசு இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது என்று முழங்கி விட்டு, மகிந்தவையும் கோத்தாவையும் போர் குற்றவாளிகள் என்று அறிவித்து விட்டு, பின் இலங்கை சென்று, யுத்த குற்றங்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் புத்த பிக்குகளை மாத்திரம் அல்ல, ரணில் அரசுடன் மட்டுமல்ல, மகிந்தவுடனும் கைகுலுக்கி U turn அடித்தது. இப்படி புலம்பெயர் அமைப்புகள் செய்வது ஒன்றும் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. அப்படி செய்யாமல் விட்டால் தான் ஆச்சரியம். இந்த தமிழர் தி(தெ)ருவிழாவை CTC தான் நடாத்துவதால், சில தமிழ் அமைப்புகள் இதனை புறக்கணிக்க சொல்லிக் கேட்டு இருந்தன. முக்கியமாக ஒன்ராரியோ மாகாண சபையிற்கு தெரிவான Vijay Thanigasalam (இவர் ஒன்ராரியோவின் Associate minister of housing ஆகவும் உள்ளார்) இதனை கடுமையாக எதிர்த்து இருந்தார் (இவரது கட்சியான கொன்சர்வேட்டி தான் புலிகளை கனடாவில் தடை செய்தது என்பது வேறு விடயம்). வழக்கமாக இப்படியான தெருவிழாவுக்கு செல்லும் பல தமிழர்கள் இந்த நிகழ்வை இம்முறை புறக்கணித்தும் இருந்தனர். நான் இவ்வாறான கூத்துகளுக்கு செல்வதில்லை என்பதால் இதற்கு இம்முறையும் செல்லும் எண்ணத்தில் இருக்கவில்லை. நிற்க, தமிழ் மக்கள் நாகரீகமாக புறக்கணிப்பில் மட்டும் ஈடுபட்டிருப்பின் வரவேற்கத்தக்க விடயமாக இது இருந்திருக்கும். ஆனால், நாம் அப்படி இல்லையே. அரசியல் ரீதியில் எதிர்ப்பதற்கும் அப்பால் சென்று, விழாவுக்கு போனவர்களை துரோகிகள் என்றும், விழாவுக்கு வந்திருந்த தென்னிந்திய கலைஞர்களுக்கு முட்டை வீசியும், செய்தி சேகரிக்க சென்று இருந்த தமிழ் வண் தொலைக்காட்சியினரின் வானுக்கு தீவைத்தும் எம் இரத்தத்தில் ஊறிப் போய்க் கிடக்கும் ரவுடித்தனங்களையும் காட்டாமல் விட்டால், இந்த உலகம் எம்மை மதித்துவிடுமல்லவா? அதற்கு எப்படி இடம் கொடுப்பது? ஆகவே இப்படி வன்முறையிலும் நாம் ஈடுபட்டு, எம் எதிர்ப்பை கண்டிப்பாக தொடர்ந்து காட்டிக் கொண்டே இருப்போம் (ஆனால் இலங்கைக்கு சுற்றுலாவும் செல்வோம்)
  23. இது எப்படி என்று விளக்க முடியுமா புலவர்? பதிவு செய்ப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக ( 2023 ஆண்டு கணக்கெடுப்பு படி) யாழ் மாவட்டம்: 583,752 வன்னி மாவட்டம்: 300,675 மட்டக்களப்பு மாவட்டம்: 438,264 திருகோணமலை (தலை நகரம் மட்டும்): 102,298 மொத்தம்: 1,424,989 வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பகுதிகளில் உள்ள மொத்த வாக்களர்கள் அனைவரும், ஒருவர் விடாது தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களித்தால், மொத்த வாக்குகளின் எண்ணிக்கை: 1,424,989 இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை (2023 ஆம் ஆண்டின் படி): 16,263,885 ஆகவே இலங்கையின் மொத்த வாக்களர்களுடன் ஒப்பிடும் போது வடக்கு கிழக்கில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையின் விகிதம்: 8.77 இந்த 8.77 எப்படி கடும் போட்டியைக் கொடுக்கும்? இவ் 8.77 இல் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலையின் தலை நகரம் பகுதிகளில் வாழும் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கையும் அடங்கும். முஸ்லிம் மக்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்குப் போடப் போவதில்லை என்பதால் இவ் 8.77 விகிதமும் குறையும். அத்துடன் அனைத்து தமிழ் மக்களும் பொது வேட்பாளருக்கு போட்டால் மட்டுமே ஆகக் குறைந்தது 7 வீதமாவது பொது வேட்பாளர் பெறுவார். இந்த 7 வீதத்தை வைத்துக் கொண்டு கடும் போட்டியை கொடுக்க முடியுமா? இந்த யதார்த்தத்தை நீங்கள் மறுக்கின்றீர்களா? வாக்காள எண்ணிக்கை தரவுகளின் மூலம் https://elections.gov.lk/en/voters/voters_statistics_E.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.